நல்வரவு_()_


Sunday, 15 April 2018

சிரிச்சது ஒரு குத்தமாஆஆ?:))

நீண்ட நாள் ஆகிட்டுது போஸ்ட் எழுதி.. அதனால எப்பூடி எழுதுவது:).. எங்கின ஆரம்பிப்பது என ஒன்றுமே பிரியுதில்ல:). மனதில பல ட்ராவ்ட் இருக்கு எழுத:).. ஆனா எழுத வரும்போது .. புதியதை எழுதலாமே என மனம் எண்ணுவதால்.. பழையவை இன்னும் ட்ராவ்ட் ஆகவே இருக்கு.. மனதிலதேன்:).
ரி இப்போ சமீபத்தில, எங்கள்புளொக்கில் நடந்த சம்பாசனைகளில்.. என் பழைய புதிய ஞாபகம் கிளறுப்பட்டுது:)).. அதை உங்களோடு பகிரலாமே எனும் முடிவுக்கு வந்தே.. இன்று இந்த விஷூஊஊஊ வருடத்தில் களம் குதிக்கிறேன்:)..
 ==========================================================================
இடைவேளை:)
நிறைய முடி, குட்டித்தாடி[உபயம்: கீதா:), நானில்ல நானில்ல:)].. அருகிலே அனுக்கா:)) அப்போ இவர்தான் ஸ்ரீராமோ?:).. இது கல்யாணமாகாத தேவி அம்மன் கோயிலா இருக்குமோ?:)... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..
=========================================================================
ந்தக் கதையை சோட் அண்ட் சுவீட்டாகச் சொல்ல முடியாது:), ஆனா விரிவாச் சொன்னா உங்களுக்கு சில சமயம் போறிங்காகலாம்:)).. இருந்தாலும் சொல்லாமல் விடமாட்டேன்:).. உண்மைக் கதைகள் எப்பவும் போறிங்காகாது என ஒரு நெம்பிக்கை:) நேக்கு:)..

படிக்கும் காலத்தில் இரு+ :) வருடங்கள், ஒரு பேகர் இன அன்ரி அங்கிள் வீட்டில் போடிங்காக இருந்தோம், நானும் என் பெஸ்ட் ஃபிரெண்ட்டும்..[இங்கு பலருக்கும் தெரியும் என் பால்ய நண்பி:).. இப்போ திருமணமாகி குடும்பத்தோடு அவவும் பிரித்தானியாவில் இருக்கிறா.. இப்பவும் அவர்களும் நாங்களும் குடும்ப நண்பர்களாக இருக்கிறோம் என்பது].. என் நண்பியும் நானும் அன்று முதல் இன்று வரை நமக்குள் பரிமாறாத விசயங்களே இல்லை.. இப்போ கதைக்க நேரம் கிடைப்பது குறைவு.. கிடைத்திட்டால் அவ்ளோதேன்:)).  உடைகள் மாத்திப் போடுவோம்.. ஒன்றாகவே படுத்து உறங்குவோம்.. எனக்கொன்றெனில் அவ துடிப்பா.. அவவுக்கொன்றெனில் நான் துடிப்பேன்.. இப்பவும் அப்படித்தான் பயங்கர சப்போர்ட்.. அவவின் கணவரும் மிக நல்லவர்.. நல்ல பிரெண்டாக நம்மோடு பழகுவார்.

அப்போ அந்த ஆன்ரி அக்கிளுக்கு நம் வயதொத்த இரு மகன்கள், ஆனா அவர்கள் வீட்டில் இல்லை, வேறு இடத்தில் போடிங்காக இருந்து படித்தார்கள். இந்த ஆன்ரி அங்கிளோ மிகவும் தங்கமானவர்கள். அப்படி ஒரு அன்பான கப்பிளை நான் இதுவரை பார்த்ததில்லை, அதாவது நம்மை தம் பிள்ளைகளை விட மேலாக கவனிப்பார்க்கள்.. பாதுகாப்பார்கள்.

ஒரு சிறிய உதாரணம்.. அந்த ஆன்ரியின் தங்கையின் மகளுக்கு சாமத்திய வீடு, அதுக்கு இன்வைட் பண்ண வீட்டுக்கு வந்திருந்தார்கள்.. நாம் எப்பவும் ரூமை விட்டு வெளியே வரமாட்டோம்... அவர்கள் ஆன்ரி அங்கிளை அழைத்து விட்டுப் போய் விட்டனர்.. அதன் பின்பு ஆன்ரிக்கு பயங்கர கோபம்... எங்களிடம் சொன்னா,  “உங்களை அழைக்கவில்லை அவர்கள், அப்போ நாமும் போகப்போவதில்லை என”... இப்படி நம் உறவுகள்கூடச் செய்ய மாட்டார்கள் எல்லோ.

பின்பு இது காதில் கேட்டு, தங்கை குடும்பம் திரும்ப வந்து நம்மையும் அழைத்தார்கள்.. அவர்கள் எப்பவும் உம்பாத்தான்:) சமைப்பார்கள்.. நம் இருவருக்குமாக சிக்கின் ஸ்பெசலா சமைத்து தந்தார்கள். தம் சேர்ஜ் கொண்டாட்டங்கள்.. அனைத்துக்கும் நம்மையும் கூட்டிப் போவினம். அவர்கள் உறவுகளோடு நாமும் ஒன்றிப் பழகி விட்டோம்.

இப்படி இருக்கையில், பக்கத்து வீட்டில் ஒரு இளம் தம்பதிகள், அவர்களும் அதே பேகர் இனம்... வயது குறைந்தவர்கள்.. இரு குழந்தைகள். எனக்குத்தான் குழந்தை தூக்குவது ரொம்பப் பிடிக்கும் என்பதால், ஈவினிங்கில் ஒரு 2 மணி நேரம் குழந்தையை மேக்கப் பண்ணி என்னிடம் தந்துவிட்டு, ஓடி ஓடி வேலைகள் செய்து முடித்திட்டு பின்பு வந்து வாங்கிப் போவா.. எமக்கும் அது ஒரு ஸ்ரெஸ் ரிலீவ்.. அவவுக்கும் அது பெரிய உதவி.

அந்தத் தம்பதிகளோடு அடிக்கடி நம் வீட்டு ஆன்ரி அங்கிள், மதில் மேல்.. எட்டிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்நேரம் நம்மையும் விடமாட்டா ஆன்ரி.. இங்க வாங்கோ எனக் கூப்பிடுவா.. நாமும் போய்ப் பேசுவோம்.. பெரும்பாலான பின்னேரங்களில் இது நடக்கும்..  அந்த பக்கத்து வீட்டுக் கணவருக்கும் சின்ன வயதுதானே, ஆனா அவர்களையும் நாம் ஆன்ரி அங்கிள் என்றே அழைப்போம்... அந்த ஆன்ரியின் பெயர்  “வென்டி”..

நம் ஆன்ரி அங்கிளோடு சேர்ந்துதான் எப்பவும் நாம் அவர்களோடு பேசியிருக்கிறோம், தனித்து  றோட்டில் கண்டால் ஒரு ஸ்மைல், சில நேரம் அதுவுமில்லாமல் போய் விடுவோம். ஆனா அந்த பக்கத்து வீட்டு ஆன்ரிக்கு என்னமோ தன் கணவர் நம்மோடு பேசுவது பிடிக்கவில்லை... கணவரிடம் சொல்ல பயமோ என்னமோ தெரியவில்லை, நம்மிடமும் சொல்லவில்லை, நம் அங்கிளிடம் சொல்லியிருக்கிறா... “அந்தப் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள்தான், குறை சொல்லவில்லை, ஆனா என் கணவர் அவர்களோடு பேசுவது எனக்கு விருப்பமில்லை, இனிமேல் பேச வேண்டாம் எனச் சொல்லுங்கோ” என.

இதை அங்கிள் ஆன்ரி வந்து நம்மிடம், பக்கத்து வீட்டு ஆன்ரி இப்படி சொல்லியிருக்க தேவையில்லை... என அவவுக்கு பேசியபடி, நம்மிடம் சொன்னார்கள்.

இதைக் கேட்டு நாம் ஷாக்ட்ட்ட்ட்:)) ஆகிட்டோம்ம்.. ஏனெனில் நாம் தனியே பேசியது கிடையாது.. வீட்டுக்கு போனது கிடையாது... நமக்கென்ன தேவை இது... என பயங்கர கோபம்தான் வந்தது.  என்னை விட என் நண்பிதான் அதிகம் பொயிங்கினா:).. சரி போகட்டும் விடுங்கோ என்றேன், நண்பி சொன்னா.. இல்லை அதிரா இதை விடக்கூடாது.. இனி அவவின்[ “வென்டி”..] முகத்தைக் கூடப் பார்க்கக்கூடாது, நம்மை தப்பாக நினைத்தமையாலதானே இப்படி சொல்லிட்டா என பொயிங்கினா. அதுவும் நல்ல விசயம் தான் நம்மால் ஆருக்கும் தொந்தரவு வேண்டாம், இனி பார்ப்பதில்லை பேசுவதில்லை சிரிப்பதில்லை என முடிவெடுத்தோம்.

ஆனா அந்த பக்கத்து வீட்டு ஆன்ரிக்கு[ “வென்டி”..] ஒருவேளை அவரில சந்தேகமோ என்னமோ, நம்மோடு கோபம் கொள்ள அவ விரும்பாததுபோல தெரிஞ்சுது,[வேறு வழி தெரியாமல்தான் நம்மிடம் பேச வேண்டாம் என்றாவோ என்னமோ].. ஆனா நாம் மதில் பக்கம் போவதில்லை, நம் ஆன்ரியையும் நம்மைக் கதைக்க கூப்பிட வேண்டாம் அவவோடும்[ “வென்டியோடும்”] என சொல்லிட்டோம்.

குழந்தை தருவதை மட்டும் அவ நிறுத்தவில்லை. என் நண்பி என்னைப்போல லூஸ் இல்லை:)).. என் நண்பி ஸ்ரிக்ட்டாச் சொல்லிட்டா, இனிக் குழந்தையையும் நான் தூக்க மாட்டேன் என, நான் அப்படியில்லை... சரி அவவுக்கும் என்ன பிரச்சனையோ.. அவவோடு பெரிதாக கோபித்து என்ன பண்ணுவது என நினைச்சேன்.. குழந்தையைத்தூக்குவேன். எங்கள் வீட்டு ஆன்ரிதான் குழந்தைக்கு தூதுவர்:)..

இனித்தான் மெயின் ஸ்டோரிக்கு வரப்போறேன்:)..

நானும் என் நண்பியும் சைக்கிளில்தான் கிளாஸ் க்குப் போய் வருவோம். ஆன்ரி வீட்டுக் கேட்டை அடுத்து, அந்தப் பக்கத்து வீட்டுக் கேட் வரும் அதைக் கடந்துதான் மெயின் ரோட்டுக்குப் போய் வர வேண்டும். அப்போ பக்கத்து வீட்டுக் கேட்[gate] பக்கமே பார்ப்பதில்லை. கொஞ்சக் காலம் ஓடியது.. இப்படியான ஒரு நாளில், நானும் நண்பியுமாக நம் சைக்கிளில் ஏறி, என் நண்பி முன்னால போக.. நான் பின்னால போனேன்.. அப்போ பக்கத்து  “வென்டி”.. ஆன்ரி கேட்டிலே நின்றா குழந்தையோடு.... நான் வருவது தெரிந்ததும்.. என்னைப் பார்த்து தூரத்தில் தொடங்கியே சிரித்தா... அப்போ என்ன பண்ணுவது.. ஆரும் சிரிச்சால் என்னால சிரிக்காமல் போக முடிவதில்லை:)).. இதனால சில பல பிரச்சனைகளிலும் மாட்டுப் பட்டிருக்கிறேன்:).

நானும் பதிலுக்கு சிரித்து விட்டுப் போய் விட்டேன்.. நான் மனதில் நினைத்தேன்.. என்னைப்போல என் நண்பியும் சிரிச்சுப் போகிறா என.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).... அன்று கிளாஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்தாச்சு.. நைட் படிச்சுக் கொண்டிருக்கும்போது...  ஏதோ கதை வரவே .. நான் என் நண்பியிடம் சொன்னேன்... பார்த்தீங்களோ  “வெண்டி ஆன்ரி சிரிக்கிறா ஒன்றுமே இல்லாததுபோல” என்றேன்.

அவ்ளோதான்.. என் நண்பி அப்படியே பொயிங்கிப் பூகம்பமாகிட்டா... “என்னாது நீங்க சிரிச்சீங்களோ? சிரிச்சீங்களோ? எதுக்குச் சிரிச்சீங்க...? உங்களை ஆர் சிரிக்கச் சொன்னது?”.. இப்படி ஒரே கூச்சல்.... அப்போதான் எனக்குத் தெரிஞ்சுது என் நண்பி, வென்டி ஆன்ரியைப் பார்த்துச்  சிரிக்கவில்லை என:))).. எனக்கு என்ன பண்ணுவதெனத் தெரியவில்லை, நான் பண்ணியது சரியா தப்பா எனவும் தெரியவில்லை.... என் நண்பியை விட்டுவிட்டு நான் மட்டும் சிரிச்சது தப்புத்தானே...

 ஆனா நான் நினைச்சேன் என்னைப்போல நண்பியும் சிரிச்சிருப்பா என:)).. இருப்பினும், ஒருவர் நேருக்கு நேர் பார்த்து சிரிக்கும்போது என்னால முகத்தைத் திருப்ப முடியாமல் போச்ச்ச்ச்ச்:)).

இதுதான் அந்தக் கதை:).

ஊசிக்குறிப்பு:

ஊசி இணைப்பு:)
இங்கின தமனாக்காவை டச்சூஊ பண்ணுங்கோ... ஹையோ வெரி சோரி.. டங்கு ஸ்லிப் ஆச்சே கர்ர்ர்ர்:)) டச்சுப் பண்ணிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்:) பழைய தமிழ்மணப் பழக்க தோசத்தில ஜொள்ளிட்டேன்:)).. ஹையோ இப்போ ரெண்டாம் தடவையாக:) நெல்லைத்தமிழன் டென்ஷன் ஆகிடப்போறாரே:))
*********************_()_***********************

138 comments :

  1. Replies
    1. வாங்கோ அஞ்டு வாங்கோ...
      யெச்ச்ச்ச் நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊ தமனாக்கா உங்களுக்கே:)... ஹையோ மாறிச் சொல்லிட்டேன்ன் தங்கக் கிழி:) உங்களுக்கே:)..

      Delete
    2. நேத்தே போட்டாச்சா பதிவு!! எப்போ போட்டாங்கன்னே தெரியலை. என் ப்ளாகர் சில த காமிக்கமாட்டேங்குது...சுத்து சுத்து சுத்துது...

      கீதா

      Delete
    3. கீதாக்கு நெட் இப்போ சரியாயிடுத்தூஊஊஊ என பிபிசில சொல்லிச்சினமே:) இன்னுமா சுத்துது?:) அப்போ இதை ட்றம்ப் அங்கிளின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன் அடுத்த மீட்டிங்கில்:))

      Delete
  2. இருங்க படிஷிட்டு வரென்

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆங் மீ சோபாலதான் இருக்கிறேன் நீங்க படிஷிட்டு வாண்டோ:).

      Delete
  3. I am posting from my Mobile.எக்கசக்க மிச்தெக் வ்ஸ்ரீது so excuse meeee

    ReplyDelete
    Replies
    1. ஏதோ கொம்பியூட்டர் எனில் மிசுரேக்கே விடாதவ போல என்னா பேச்சுப் பேசுறா கர்ர்ர்ர்ர்:).. முதல்ல ஒழுங்கா என் கதையைப் படிங்கோ:)..

      Delete
    2. ஏஞ்சல் அதிராவை மடக்கற நீங்களே இப்படி எழுதினா பூசார் விட மாட்டாரே!! ஓட்டுவாரே...ஓடுற தெம்பு இருக்கா ஏஞ்சல்!! ஹா ஹா ஹா ஹா உங்க்ள் இருவரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு...

      கீதா

      Delete
    3. கீதா..., அவோக்குத் தெம்பே இல்லை இப்போ எனத் தெரிஞ்சுதான் மீ உஷாரானேன்:))

      [im]http://www.cutecatgifs.com/wp-content/uploads/2013/08/fab.gif[/im]

      Delete
  4. //பேகர்/// friends its Anglo Indian

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆவ்வ்வ்வ்வ்வ் கடமையில கண்ணாவே இருக்கிறா என் செக்:)..

      Delete
    2. ஏஞ்சல் ரொம்ப தாங்க்ஸ் ஹப்பா பேகர் நா என்ன அர்த்தம் என்று குழம்பி...கதி கலங்கி...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா என்னிடம் நிறையத் தமிழ் படிக்கிறீங்க நீங்க எலோரும்:)) ச்சோ எனக்கு பீஸ் தரோணும்ம்ம்ம்ம்ம்ம்:)).. அதையும் என் செக்:) இடம் செக் ஆ குடுங்கோ:))

      Delete
  5. Burgher people, also known simply as Burghers, are a small Eurasian ethnic group in Sri Lanka descended from Portuguese, Dutch, British and other ...//

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மிஸ்டர் எச்சூச்ச்மீஈஈ:)... இங்கின இங்கிலீசில் கொமெண்ட் போட்டால் வெளியிட மாட்டேனாக்கும்:)..

      டமில் எங்கள் மூச்சு:)
      டமில் எங்கள் பேச்சு:)
      நேக்கு டமில்ல டி:)...
      ஹையோ மீ இப்போ கட்டிலுக்குக் கீழே:).

      Delete
    2. பார்த்தால் வெள்ளையர்கள் போலத்தான் இருப்பினம் கலரில் ... உடையில்... ஆங்கிலம்தான் அதிகம்பேர் பேசுவினம்.

      Delete
    3. என்னது என்னது டமில் எங்கள் மூச்சு...பேச்சு ...ஆங்கிலத்தை தமிழில் எழுதினால் தமிழாஅக்குமோ? ஏஞ்சல் எங்க போயிட்டீங்க கேள்வி கேட்காம...சரி நான் கேட்டுட்டேன்..கட்டிலுக்குக் கீழ தான் பூஸார்னு தெரியும்....ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    4. [im]https://media1.tenor.com/images/ab60d23c9ac5400324b41ef943064c68/tenor.gif?itemid=5786413[/im]

      Delete
    5. எல்லா படங்களுமே (மேலே உள்ளதுபோல், இன்னொன்று பூனை இன்னொரு பூனையின்மேல் பாய்வதுபோல்) ரொம்ப பொருத்தமாவும் ரசிக்கக்கூடியதாவும் இருக்கு அதிரா. பாராட்டுகள்.

      Delete
    6. ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்... இந்தக் காலத்தில வாயால பேசிப் பயனில்லை:)) நேரே ஜம்பிங்தேன்ன்ன்ன்ன் ஒரே வழி:)) ஹா ஹா ஹா.

      Delete
  6. மீயாவ் நான் அப்ரம் வரென்

    ReplyDelete
    Replies
    1. யெச்... கொஞ்சம் டமில் பழகிட்டு வாண்டோ:)

      Delete
    2. கர்ர்ர் நேரம்.

      Delete
    3. haa haa haa..

      [im] http://3.bp.blogspot.com/-zClHaFheynk/VrJEGjQTaGI/AAAAAAAAC2E/3CXumdPagQo/s1600/cat%2Bfighting%2Bgif.gif [/im]

      Delete
    4. மீயாவ் நான் அப்ரம் வரென் - இது என்ன மொழி அதிரா? லண்டன்ல இருக்கறவங்களுக்கு தமிழ் எழுதப் படிக்கச் சொல்லித்தரக் கூடாதோ நீங்க?

      Delete
    5. [im]https://i.pinimg.com/236x/bb/9c/4f/bb9c4f8b05dbb2332697a4f59477fb1e--tom-and-jerry-jerry-oconnell.jpg[/im]

      Delete
    6. //நெ.த.Tuesday, April 17, 2018 2:58:00 pm
      மீயாவ் நான் அப்ரம் வரென் - இது என்ன மொழி அதிரா?//

      ஹா ஹா ஹா நான் ஜொன்னனே:) இங்கின எனக்கு மட்டும்தேன் டமில்ல டி:)).. ஏனையோர் எல்லாம் பேய்க்காட்டீனம்ம்ம்ம்ம்ம்:))... ஹா ஹா ஹா..

      Delete
    7. @அஞ்சு

      https://i.pinimg.com/236x/bb/9c/4f/bb9c4f8b05dbb2332697a4f59477fb1e--tom-and-jerry-jerry-oconnell.jpg

      ஹா ஹா ஹா என்னா முறைப்பூ?:) இதே நிலைமைதான் உந்த ஜெரியாருக்கும்:))

      [im] https://media.tenor.co/images/f08044f22ad777a5bec31bb546ba9d29/tenor.gif [/im]

      Delete
  7. அதிராவின் பதிவு பாதி தமிழிலும் மீதி வேறு எந்த மொழியிலோ இருக்கே? ஆமாம் அது என்ன மொழியாக இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ... நீங்க ஸ்கொட்லாந்துக்கு வரோணும் ஒரியினல் டமில்:) படிக்க:) இது அம்பேரிக்காவில உங்களுக்கு தமிழ் மறக்குது:))

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  8. /அருகிலே அனுக்கா:)) அப்போ இவர்தான் ஸ்ரீராமோ?:)..////
    ஹாஹாஆ :) இவரை அனுக்கா பக்கத்தில் நிக்க வச்சதுக்கு அமலாக்கா வராங்க பைரவ படையோடு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கரீக்டா சொன்னீங்க ஏஞ்சல்!! பைரவ படையே வந்துரும்...பூசார் ஓடிடப் போறார்..

      கீதா

      Delete
    2. Angel
      ///ஹாஹாஆ :) இவரை அனுக்கா பக்கத்தில் நிக்க வச்சதுக்கு அமலாக்கா வராங்க பைரவ படையோடு///

      ஹா ஹா ஹா அப்போ ஸ்ரீராமின் பொஸ்:) வரமாட்டாவோ?:) அப்பாடா மீ சேஃப்ஃப்ஃப்ஃப்ஃப்:)) இப்போதான் நெஞ்சில மோர் வார்த்த மாதிரி இருக்கு.. என் செக் எண்டால் செக்:) தான்:)).. என்னோடு சண்டைப் பிடிச்சாலும் என்னைக் காப்பாத்தாமல் விடவே மாய்ட்டா:))

      Delete
    3. கீதா அதுதான் வைரவருக்கு வைரம் பதிச்ச வேல் வாங்கித் தருவதா நேர்த்தி வச்சிட்டேனெல்லோ:))..

      போற வழியில புண்ணியம் கிடைக்கும் கீதா:)) ஆடித்தள்ளுபடியில வைரம் கிடைச்சால் எனக்கொரு மிஸ் கோல் தாங்கோ:))

      Delete
  9. //.. பழையவை இன்னும் ட்ராவ்ட் ஆகவே இருக்கு.. மனதிலதேன்:).//

    பிபிசில சொன்னாங்க
    இப்போ எழுத வேணாம்னு நினைக்கிறவங்க ...20 வயசு அதாவது மீஈஈ
    //புதியதை எழுதலாமே என மனம் எண்ணுவதால்// இது 66 வயசுக்காரங்க :) yoooo

    ReplyDelete
    Replies
    1. [im]http://3.bp.blogspot.com/-zClHaFheynk/VrJEGjQTaGI/AAAAAAAAC2E/3CXumdPagQo/s1600/cat%2Bfighting%2Bgif.gif[/im]

      Delete
  10. //எனக்குத்தான் குழந்தை தூக்குவது ரொம்பப் பிடிக்கும் என்பதால்,//
    ம்க்கும் :) அந்த குழந்தை pampers போட்ருக்கும் அதான் தூக்கிட்டிங்க :)


    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அந்தக் குட்டியின் பெயர் ரொஷான்... அவருக்கு ஒரு அக்கா அவட பெயர் ரொஷானி. 3 வயசு.

      குட்டிக்கு ஒரு 6 மாதம். ஆனா அது ஒரு பெரிய சோகக் கதை அஞ்சு.. இந்த வெண்டி ஆன்ரிக்கு பெண்குழந்தையைக் கண்ணிலேயே காட்டக்கூடாது... 18 வயசுப் பிள்ளைபோல ட்ரீட் பண்ணுவா.. தூக்க மாட்டா.. நாங்க தூக்கித் திரிவோம்.. அதுவும் நல்ல ஒழுக்கமான குட்டி. நல்ல வடிவு.. இங்கிலிஸ் மட்டும்தான் பேசுவா தமிழ் புரியும்.... நல்ல பழக்க வழக்கம். தகப்பந்தான் இக்குழந்தையைத் தூக்கித் திரிவார்.

      2வது மகன் கிடைச்சபோது.. டொக்டர் கேட்டாராம் என்ன குழந்தை வேணும் என.. வெண்டி ஆன்ரியிடம்.. அவ சொன்னாவாம் எனக்கு ஆண்குழந்தைதான் வேணும் என்று... அப்போ பெண்குழந்தை எனில் என்ன பண்ணுவது எனக் கேட்டாராம் டொக்டர்.. எனக்கு வேணாம் எனச் சொன்னாவாம்.. பின்பு இந்தாங்கோ ஆண்குழந்தை எனக் குடுத்தார்களாம் எனச் சொல்லிச் சிரிச்சா கர்ர்ர்ர்ர்:)).

      Delete
  11. ஹாஹா :) அவரை அங்கிள் என்றதில் தப்பில்ல வெண்டிய அக்கானு கூப்பிட்டிருக்கணும் .
    மறைக்காம சொல்லுங்க வெண்டி அங்கிளை சைட் அடிச்சீங்களா ?:)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்ல அங்கு திருமணமாகிட்டால் அக்கா போட மாட்டோம் ஆன்ரிதான்:)).

      //மறைக்காம சொல்லுங்க வெண்டி அங்கிளை சைட் அடிச்சீங்களா ?:)//
      ஹா ஹா ஹா ஹையோ ஹையோ... அந்தாளை எப்பூடி சைட் அடிக்கிறது:)..

      அவரும் பாவம் அஞ்சு.. ஏனெனில் அப்போ ஒரு 28,29 வயதுதான் இருக்கும் அவருக்கு... அதுக்குள் திருமணம் 2 குழந்தை என்பதால், அவர் தன் வாலிப வயதை என்சோய் பண்ணவில்லை என நினைக்கிறேன்.. அதனால வேர்க் முடிஞ்சதும் நண்பர்களோடு கூட்டமா ரோட்டில் நின்று பேசிச் சிரிப்பார்... வெண்டி ஆன்ரி கத்திக் கத்தி கூப்பிட்டு எடுத்து பேசுவா...

      சிலசமயம் பிளீஸ் பிளீஸ் என பெர்மிஷன் கேட்டபடி போவார்.

      அவவிலும் குறை சொல்ல முடியாது.. அவவுக்கும் வேலைக் கஸ்டம்.. பெரிய வீடு வளவு.. 2 குழந்தைகள்.. பகல் முழுக்க தனிய இருப்பா.. உதவிக்கு ஆருமில்லை... அப்போ இவர் வீட்டுக்கு வந்ததும் ஃபிரெண்ட்ஸ் உடன் புறப்பட்டால் அவ என்ன பண்ணுவா...

      Delete
  12. /என் நண்பி என்னைப்போல லூஸ் இல்லை:)).. //

    அதுதான் உலகுக்கே தெரியுமே :)
    நான்கூட உங்களை போலில்லை

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

      அவவுக்கு குழந்தைகள் தூக்குவதும் பெரிசாப் பிடிக்காது. ஆனா அவ அனைத்திலும் ஸ்ரிக்ட்டா இருப்பா.. முகத்துக்கு நேரேயே எதையும் சொல்லிடுவா.. இதனால சிலருக்கு அவவைப் பிடிக்காமலும் போயிருக்கு.. ஆனாலும் என்னை மாதிரி லூஸ் இல்லைத்தான்.. இப்போகூட சில விசயங்களுக்கு என்னைத் திட்டுவா:)) ஹா ஹா ஹா.

      Delete
  13. நீங்க சிரிச்சதில் தப்பில்லை ஆனா இன்னொசெண்டா சொல்லி மாட்டிகிட்டீங்க :)உங்க நண்பி செஞ்சதும் மிக சரி .தன்மானத்துக்கு ஒரு இழுக்குன்னா எந்த சூழலிலும் விட்டு தரக்கூடாது .

    ReplyDelete
    Replies
    1. அது அஞ்சு.. ஒன்றுமே செய்ய முடியாத சிட்டுவேசன்:).. என் நண்பி முன்னால போயிட்டா.. அப்போ நான் சந்தேகம்கூடப் படவில்லை.. அவவும் சிரிச்சிருப்பா என்றே நினைத்தேன்.. அதனாலேயே உடனே கேட்கவில்லை.. நைட் ஏதோ கதையில வாயில வந்திட்டுது:)).. இருவரும் பேசுவதில்லை சிரிப்பதில்லை என முடிவெடுத்தபின்.. நான் சிரிச்சது தப்புத்தானே.. ஆனா ஒன்றாகப் போயிருந்தால்.. சிரிப்பதா வேணாமா என ஒன்றாக முடிவெடுத்திருப்போம்.. இது எதிர்பாராமல் வந்த சோதனை.. ஹா ஹா ஹா .. மிக்க நன்றி அஞ்சு அனைத்துக்கும்.

      Delete
  14. என்னடா நீண்ட நாட்களாக இங்கு பதிவே வரவில்லையே என்று பார்த்தேன். அதிரா பேக் டு ஃபார்ம்! ஆனால் உங்களுக்கு ஐடியா கொடுத்தது நான்தானே?!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...

      // ஆனால் உங்களுக்கு ஐடியா கொடுத்தது நான்தானே?!!!//

      அதேதான்.. உங்கள் ஐடியாவாலதான் பழைய நினைவுகள் கிளறுப்பட்டு விட்டது:).. ஆனா அதுக்காக வைர நெக்லெஸ்:).. வைரத்தோடு எனும் ரேஞ்சுக்குப் போயிடாதீங்கோ:))).. என் வள்ளியின் நேர்த்தியே இன்னும் நிறைவேத்தவில்லை நான்:).

      Delete
  15. அழகான அந்த அனுஷ்ஷைப் பார்த்தால் 'ஆமாம், அது நானேதான்' என்று சொல்ல ஆசை வருகிறது!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஹலோவ் ஸ்ரீராம் :) நல்லா உத்து பாருங்க படத்தை ரெண்டுபேருக்கும் நடுவில் மின்னல் மாதிரி ஸ்ப்ளிட் வருது :) இது ப்ரேக்கப் சைன் :)
      இப்போ சொல்லுங்க அது நீங்களா ?? :)

      Delete
    2. ///அழகான அந்த அனுஷ்ஷைப் பார்த்தால்///

      ஹையோ ஹையோ ஹையோ அனுஷ் ஆமேஏஏஏஏஏஏ:)).. அஞ்சு இதைப் பார்த்த பின்பும் நீங்க தேம்ஸ்ல குதிக்காமல் எப்பூடி இருக்கிறீங்களோ?:)).. அஞ்சுவே குதிக்கல்லயாம் அப்போ மீ எதுக்குக் குதிக்கோணும் என நானும் குதிக்கல்ல. சரி அது போகட்டும்:)).

      ///'ஆமாம், அது நானேதான்' என்று சொல்ல ஆசை வருகிறது!!!!!///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது ரொம்ப ஓவரூஊஊஊஊஊ சொல்லிட்டேன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா:).

      Delete
    3. ///இது ப்ரேக்கப் சைன் :)
      இப்போ சொல்லுங்க அது நீங்களா ?? :)///

      அஞ்சூஊஊஊஊ முதல் கோணல் முற்றும் கோணல் என்பினம்:))) அப்பூடி ஆகிடப்போகுதோ ஸ்ரீராமின் நிலைமை... ஒன்றுசேர முன்பே டிவோஸ் எடுக்க வேண்டி வரப்போகுதே:)).. ஹையோ நான் எல்லாம் ஜாட்சிக்கு வரமாட்டேன் ஜாமீஈஈஈஈஈ:))

      Delete
  16. //ஒரு பேகர் இன//

    ??????

    ஓ... எங்கள் கஷ்டம், சிரமம், குழப்பம் புரிந்து ஏஞ்சல் விளக்கி இருக்கிறார்... வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. என் செக்:) ஆச்சே:)) எள் எண்ண முன்.. எண்ணெயாகி நிற்பா:))

      Delete
  17. //[இங்கு பலருக்கும் தெரியும் என் பால்ய நண்பி:)..//

    எனக்குத் தெரியாதே.... அவவும் பதிவுலகில் கீறாங்களா?

    ReplyDelete
    Replies
    1. அது ஐ மீன்:)) இது வேற மீன்:)).. அவ பற்றிப் பல இடங்களில் பேசியிருக்கிறேன் கவிதைகூட எழுதியிருக்கிறேன்.. அதைத்தான் பலருக்கும் தெரியும் என்றேன்... புளொக்கில் அவ இல்லை:)) அந்த தெகிரியம்தேன் எனக்கு:).

      Delete
  18. //உம்பாத்தான்:) சமைப்பார்கள்..//

    அப்படீன்னா? நான்-வெஜ்ஜா? ஐயோ.. ஏஞ்சல்... எங்கே போயிட்டீங்க மொழி பெயர்க்காமல்? முழி பிதுங்கி நிற்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு முதல்ல பதில் சொல்லிடோணும் என வந்தேன்... ஏஞ்சலுக்கு தெரியாது:)) ஹா ஹா ஹா தெரிஞ்சிருந்தா இப்போ களம் குதிச்சிருப்பா:)).. ஆனா தெரியாததை தெரியாதெனச் சொல்ல மாட்டா:)) ஹையோ இதைப் படிச்சதும் கிழிச்சு கூவத்தில தாட்டிடுங்கோ[தண்ணி இல்லையாமே அதில்:))]

      Delete
    2. ஹலோவ் நானா ஏற்கனவே சொல்லிட்டேன் கர்ர்ர்

      Delete
    3. நம் ஊரில் ஒரு பயக்கம்:)) எதையும் நேரடியாக குழந்தைகளுக்குச் சொல்லிக் குடுக்காமல் கொஞ்சம் மரியாதையான பாசையில சொல்லிக் குடுப்போம்:)).. அதாவது..
      மனிசரை மனிதன் எனச் சொல்ல மாட்டோம் தானே.. இது மாமா மாமி.. சித்தி சித்தப்பா இப்படித்தானே சொல்வோம்.. அப்படித்தான்.

      மாடு எனில்..
      “உம்பா” வருது இடிக்கும் என்போம்.

      ஆடு எனில்.. மஞ்ஞா:).. க்கு குழை குடுங்கோ சாப்பிடட்டும் என்போம்.

      நாய் எனில்..,
      “உஞ்சு”:) வருது கடிக்கப்போகுது குட்டியை என்போம்:))

      பூனை எனில் பூஸ்:) இது உலகத்துக்கே தெரியுமே:)).. அதாவது வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளின் நிக் நேம்ஸ்:))

      ஹா ஹா ஹா மிகுதிக்குப் பின்பு வாறேன்:))

      Delete
    4. ///AngelMonday, April 16, 2018 1:06:00 pm
      ஹலோவ் நானா ஏற்கனவே சொல்லிட்டேன் கர்ர்ர்//

      என்னாதூஊஊஊஊஊ ஜொள்ளிட்டீங்களோ ..ங்ங்ங்ங்ங்ங்ங்கே?:)) ஒருவேளை கொசு?:).. சரி சரி இருக்கட்டும் இருக்கட்டும்:)))

      Delete
  19. அவ்வளவுதானா? கதை முடிஞ்சு போச்சா? இதில் என்ன இருக்கிறது? என்னடா இது? அனுஷ்காவுக்கு வந்த சோதனை!! இதில் யார் எதிரியானாவர்? அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி பற்றிச் சொல்கிறீர்களா, தோழி பற்றிச் சொல்கிறீர்களா? இல்லை, இதற்குமேல் பொதுவில் சொல்லவேண்டாம் என்று விட்டு விட்டீர்களா???

    ReplyDelete
    Replies
    1. ///என்னடா இது? அனுஷ்காவுக்கு வந்த சோதனை!!//

      ஹா ஹா ஹா கர்ர்:) இந்த வம்புக்குள் எதுக்கு அனுக்காவை:) இழுக்கிறீங்க:).

      //இதில் யார் எதிரியானாவர்? அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி பற்றிச் சொல்கிறீர்களா,//

      அவதானே எங்களைப் பேச வேண்டாம் என்றா.. அவ உண்மையில் தன் கணவரிடம்தானே சொல்லியிருக்கோணும்.. நம்மைக் கொன்றொல் பண்ண அவவுக்கு ரைட்ஸ் இல்லையே... நாம் என்ன தப்பு பண்ணினோம்?:)..

      //இல்லை, இதற்குமேல் பொதுவில் சொல்லவேண்டாம் என்று விட்டு விட்டீர்களா???//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தெளிவாத்தான் எழுதியிருக்கிறேன் என நினைச்சேன் நீங்க அனுஷ்[உங்க முறையில்:)] நினைப்பில் இருந்து இன்னும் வெளியே வராமையால்:) என் கதையும் புரியல்ல:)) என் பாட்டையும் கேட்கும் மூட் இல் நிங்க இல்லை:)) ஹா ஹா ஹா.

      என் நண்பியும் நானும் இப்பவும் வலு ஒட்டு எனத்தானே எழுதியிருக்கிறேன்.. அன்று என்னை நல்லா திட்டினா:))[இப்போ அஞ்சு திட்டுவதைப்போல:))] அவ்ளோதேன்:))..

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  20. நல்லா இருக்கு கதை! ஹிஹிஹி, நிகழ்வு. ஆனால் இப்படி எல்லாம் எனக்கும் நடந்திருக்கு! நான் அப்புறமாத் திரும்பியே பார்க்க மாட்டேன். யாரோ மாதிரிப் போயிடுவேன். நம்முடைய மனதின் நுணுக்கமான பாகத்தில் ஊசியால் குத்தி உடைச்சாப்போல் தோணும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. உங்களோடு சண்டைபோட்டு:) நீண்ட நாளாகிட்டுது:)).

      //நம்முடைய மனதின் நுணுக்கமான பாகத்தில் ஊசியால் குத்தி உடைச்சாப்போல் தோணும்.//
      இது 100 வீதமும் உண்மைதான்.. கனவிலகூட நினைத்திடாத ஒன்றைக் கூறும்போது நாமும் அன்று மிக மனம் வருந்தினோம்... ஆனா அவவுக்கு வேறு வழி தெரியவில்லைப்போலும்.. நம்மைப்பற்றி தப்பாக நினைக்காமையாலதானே தொடர்ந்து குழந்தையைத் தர முடிஞ்சுது..

      மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
  21. Burgher என்று இலங்கையில் சொல்லவதை தமிழகத்தில் ஆங்கிலோ இந்தியன் என்பார்கள் .இப்படி நிறைய உச்சரிப்புக்கள் இருக்கு .நிறைய போர்த்துகேய ,ஒல்லாந்தருடைய சொற்கள் இலங்கை தமிழில் இருக்குது.நல்லதொரு சம்பவம் ,பொதுவாக பெண்களுக்கு இடையே நடைபெறும் சம்பங்கள் இப்படிதான் இருக்கும் .
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. முதல்வருகை என நினைக்கிறேன்.. மிக்க நன்றி.

      Delete
  22. பெரியவர்கள் செய்யும் தவறுகளுக்காக குழந்தைகளை ஒதுக்கி வைத்து அவர்கள் மனம் வாடவிடக்கூடாது.

    சிரித்த முகத்துக்கு பதில் சிரிப்பு கொடுப்பதே...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      உண்மைதான் குழந்தைகள் நம்மோடு நன்கு ஒட்டிபோய் இருந்தார்கள். அதுதான் சிரித்தமைக்காக சிரித்தேன் அவ்ளோதேன்:).

      மிக்க நன்றி.

      Delete
  23. சிரிச்சா குத்தமா? நண்பியை விட்டு நீங்கள் சிரிக்கலாமா?

    //ஆனா நான் நினைச்சேன் என்னைப்போல நண்பியும் சிரிச்சிருப்பா என:)).. இருப்பினும், ஒருவர் நேருக்கு நேர் பார்த்து சிரிக்கும்போது என்னால முகத்தைத் திருப்ப முடியாமல் போச்ச்ச்ச்ச்:)).//

    நேருக்கு நேருக்கு பார்த்து சிரிக்கும் போது எப்படி சிரிக்காமல் இருக்க முடியும்?
    நன்கு பழகிய நட்பு பிரிவது கஷ்டம்.

    ஊசிக்குறிப்பு நன்றாக இருக்கிறது.


    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      //சிரிச்சா குத்தமா? நண்பியை விட்டு நீங்கள் சிரிக்கலாமா?//

      ஹா ஹா ஹா அது தப்புத்தான்... ஆனா அவ சிரிச்சிருப்பா என்று நினைச்சே நான் சிரித்திட்டேன்:))..

      //நன்கு பழகிய நட்பு பிரிவது கஷ்டம்.//

      ஹையோ உங்களுக்கும் என் கதை புரியவில்லை.. நாம் நட்புக்குள் பிரிவேதும் வரவில்லை.. என் நண்பியிடம் நல்ல திட்டு நைட் நைட்டா வாங்கினேன்:)).. என்னை விட்டு எப்படிச் சிரிச்சீங்க என:)) ஹா ஹா ஹா.. நான் கோழி திருடிய கள்ளன் மாதிரி முழிச்சேன்:)) பதில் சொல்ல முடியாமல்:)).. ஹா ஹா ஹா.

      Delete
  24. யாழ்பாண பாடல் நன்றாக இருக்கிறது.தேவா இசை போல் இருக்கிறது.
    சந்தோஷ்த்தில் குடி, கவலையில் இன்னும் பல பழக்கங்கள். பாடல் நிறைய விஷ்யங்களை சொல்லுது.
    இரட்டை சடை இப்போது விரிந்த கூந்தலாக போய் விட்டது என்று கவலை படுகிறான்.

    ReplyDelete
    Replies
    1. ஓ நீங்க பாட்டை ரச்சிருக்கிறீங்க.. எனக்கும் அது நன்கு பிடித்திருந்தது... வளர்ந்துவரும் சினிமா.. நன்றாக எடுத்திருக்கினம் பாடல்... அது இலங்கைப் பாடல்.. இசையமைத்தவர் ஆரெனத் தெரியவில்லை.

      மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  25. Replies
    1. வாங்கோ சகோ டிடி...

      ஹா ஹா ஹா நீங்க எரியுற நெருப்பில எண்ணெயை ஊத்துறீங்க:)).. தமனாக்காவைக் கவனிக்கேல்லையோ:)).

      மிக்க நன்றிகள்.

      Delete
  26. ஹையோ அதிரா என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே!!! ஹிஹிஹிஹி

    //நிறைய முடி, குட்டித்தாடி[உபயம்: கீதா:), நானில்ல நானில்ல:)].. அருகிலே அனுக்கா:)) அப்போ இவர்தான் ஸ்ரீராமோ?:)..// மாட்டி விட்டுட்டு நீங்க மீ நல்ல பொனண்ணுனு போயிட்டீங்க ஹா ஹா ஹா ஹா...ஸ்ரீராமேதான்...ஆனா பாருங்கோ அனுஷ் பக்கத்தில இப்படியா ஸ்ரீராம் இருப்பார்!!அதுதான் கொஞ்சம் உறுத்தல் ஹிஹிஹிஹிஹிஹி (அப்போ ஸ்ரீராம் இது தான் இல்லைனு சொல்லிருப்பாரே!!!ஹா ஹா ஹா ஹா இப்படி சாமியார் போஸில் இருப்பது!!)

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ:))..

      //ஹையோ அதிரா என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே//

      ஹா ஹா ஹா நீங்க மாட்டுப்படவில்லை:)) ஸ்ரீராம் ரொம்பக் குஷி யில் இருக்கிறார்:))..

      ///ஸ்ரீராமேதான்...ஆனா பாருங்கோ அனுஷ் பக்கத்தில இப்படியா ஸ்ரீராம் இருப்பார்!!//

      ஹையோ அப்போ வேறு எப்பூடி இருப்பார்?:)) ஹா ஹா ஹா என்னால முடியல்ல கீதா:).

      Delete
  27. ஏதோ எழுதப்போறீங்க என்று நினைத்து முழுவதும் படித்துப்பார்த்தால், விஷயம் ஒண்ணுமே இல்லையே.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      என்னாது விசயமே இல்லையா ...ங்ங்ங்ங்ஙேஏஏஏஏஏஏ:))..... அந்தப் பக்கத்து வீட்டு அன்ரி எங்களை மனம் நோகப் பண்ணிட்டாவெல்லோ:) நான் அந்த வேதனையிலும் அவவைப் பார்த்துச் சிரிச்சு.. சிரிச்சதுக்காக ஏச்சும் வாங்கினேன் என் நண்பியிடம்:)) இவ்ளோ விசயம் இருக்கே இங்கு:))

      Delete
  28. முதலில் பேகர் யாராயிருக்கும் என்று யோசித்தேன். அப்புறம் ஆங்கிலோ இந்தியனாக (ஸ்ரீலன்கனாக) இருக்கும் என்று நினைத்தேன் (ஏற்கனவே உங்க இடுகைல எழுதியிருக்கீங்க)

    மற்ற புது வார்த்தைகளும் அர்த்தம் கண்டுபிடிக்கறமாதிரிதான் எழுதியிருக்கீங்க.

    ஏஞ்சலின் எழுதுவதைப் படித்து நாங்கள் பர்கர் என்று சொல்வோம். நீங்க பேகர் என்று சொல்றீங்க. அந்தப் பிரச்சனைதான்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நாம் பேகர் எனத்தானே சொல்லுவோம் அப்படியே எழுதினேன். நான் நினைத்தேன் இவர்கள் இலங்கையில் மட்டும்தான் இருக்கிறார்கள் என.. ஆனா பின்புதான் அஞ்சு சொன்னா தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள் என.

      Delete
    2. தமிழ்நாட்டில அவங்களுக்கு ஆங்கிலோ இந்தியன் என்று பெயர். நீங்க ஆடுகளம் படம் பார்த்தீங்களா? அதுல வெள்ளாவில வச்சு வெளுத்த பெண் ஆங்கிலோ இந்தியன் என்று காட்டியிருப்பார்கள்.

      Delete
    3. ஓ படம் பார்க்கவில்லை.. பாட்டுப் பார்த்திருக்கிறேன்.. அப்படித்தான் இருப்பினம் நல்ல பால்போல வெள்ளையா.. சிவப்புச் சொண்டோடு:)).. ஆனா இப்போ கலப்புத்திருமணங்களால் அவர்களிலும் நல்ல கறுப்பானவர்களும் உண்டு..

      நெல்லைத்தமிழன் இந்த லிங் கோமதி அக்காவுக்குக் குடுத்திருந்தேன்.. நீங்க படிச்சிருக்க மாட்டீங்க.. இப்போ ஒரு தடவை ச்ச்சும்மா படிச்சுப் பாருங்கோ இதே பேகர் ஆன்ரிக் கதை:))..

      http://gokisha.blogspot.co.uk/2010/07/blog-post_26.html

      Delete
  29. மனிதர்கள் எல்லோரும் ஒன்றுபோல் இல்லையே. நீங்கள் தங்கிய வீட்டுக்காரர்கள் சக மனிதர்களை மிகவும் மதிப்பவர்கள் போல்தான் தெரிகிறது.

    வெண்டி வீட்டுக்காரர், உங்களைப் பற்றி அவரிடம் (வெண்டியிடம்) எப்படிப் பேசினார் என்று எப்படித் தெரியும்? விளையாட்டுக்காவது தவறாகப் பேசியிருந்தால். அதனால்தான் அந்த ஆன்'டி உங்களைப் பேச வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. //நீங்கள் தங்கிய வீட்டுக்காரர்கள் சக மனிதர்களை மிகவும் மதிப்பவர்கள் போல்தான் தெரிகிறது.//

      மிகவும் வித்தியாசமானவர்கள் நெல்லைத்தமிழன். தன் பிள்ளைகளுக்கு என்ன உணவு வாங்குகிறார்களோ அதே உணவு நமக்கும் வாங்கி வருவார் அங்கிள். நம்மை வேறு பிள்ளைகள்போல பிரித்துப் பார்த்ததே இல்லை.

      ///வெண்டி வீட்டுக்காரர், உங்களைப் பற்றி அவரிடம் (வெண்டியிடம்) எப்படிப் பேசினார் என்று எப்படித் தெரியும்? விளையாட்டுக்காவது தவறாகப் பேசியிருந்தால். //

      இருக்கலாம்.. தவறாக அல்ல.. நம்மைப் பற்றி நல்லவிதமாகப் பேசியிருந்தால்கூட மனைவிக்குப் பிடிக்காமல் போயிருக்க வாய்ப்பிருக்கு... எதுவாயினும்.. அவரைத்தானே திருத்தி இருக்கோணும்... அதாவது நீங்க அந்த மதில் பக்கம் போக வேண்டாம் எனச் சொல்லியிருக்கலாம்.. நாம் வேறு எங்கும் அவரைப் பார்ப்பதில்லையே...

      என்னமோ அவரிடம் சொல்லிப் பலனில்லை என நினைச்சாவோ என்னவோ.

      ஆனா நான் இதிலிருந்து ஒரு அனுபவம் கற்றுக் கொண்டேன்.. அதாவது, எனக்குத் திருமணமாகி இப்படி என் கணவர் ஆரோடு பழகினாலும் சந்தேகமே பட்டிடக்கூடாது என முடிவெடுத்தேன்..

      Delete
    2. கூட இருக்கிற துணையை சந்தேகப் பட்டால், அப்புறம் யாரைத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியும்? சண்டை போடலாம் (சும்மா ஏதாவது விஷயத்துக்கோ அல்லது நம்ம மூடு மோசமாக இருந்தாலோ). சந்தேகப் படுவதா?

      Delete
    3. உங்களுக்குத் தெரியாததோ நெல்லைத்தமிழன்.. உலகில் எவ்வளவு பிரச்சனை நடக்குது...

      சந்தேகத்துக்கு காரணம்.
      1.தாழ்வுமனப்பான்மை
      2.இயலாமை..

      இதைவிட உண்மையிலேயே ஒருவரின் நடத்தையில் மாறுதல் வரும்போதும் சந்தேகம் எழத் தொடங்கும்... ஆனா நல்ல புரிதல்.. நல்ல சம்பாசனை இருவருக்குள்ளும் இருக்குமாயின் அனைத்தையும் பேசியே தீர்த்திடலாம்... பேச்சுக் குறையும்போதுதானே பிரச்சனைகள் ஆரம்பமாகுது..

      “சந்தேகக்கோடு அது சந்தோசக்கேடு”..

      Delete
  30. எனக்கு மட்டும்தான் 'பொம்பளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு' என்ற எம்ஜியார் (?) படப் பாடல் நினைவுக்கு வருகிறதா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... வாழ்ந்தாலும் பேசும்.. தாழ்ந்தாலும் பேசும் பாடல்தான் நினைவுக்கு வருது:)). சிரிச்சாலும்... பொம்பிளை சிரிச்சாப்போச்சு என்பினம்:)) சிரிக்காட்டிலும்... பெண்ணுக்கு அழகு பொன்னகை அல்ல புன்னகையே என்பினம் ஹையோ ஹையோ:))

      Delete
  31. ஒன்று நடந்தே தீருமென்றால் அதில் கவலைப்பட என்ன இருக்கிறது? - அது எப்படி நமக்கு 'அது நடந்தே தீரும்' என்று தெரியும்? வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனை வருகிறது. அதைத் தீர்க்க நம்மாலான முயற்சியை எடுக்கத்தான் வேண்டும். அப்படியும் அது தீர்க்கப்படாமல் போனால் அது 'விதி' என்றுதான் எண்ணிக்கொள்ளவேண்டும். எதுவும் 'நடந்தே தீரும்' என்று விட்டுவிடமுடியாதல்லோ?

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் மாத்தி யோசிக்கோணும் நெல்லைத்தமிழன்:)) பிரச்சனை வந்த பின்புதானே கவலைப்படுகிறோம்... வரப்போகுது எனத் தெரிஞ்சால்... பல முயற்சிகள் எடுப்போம்.. எடுத்த பின்னரும் பிரச்சனை ஆகிட்டால்:)).. கவலைப்படாதீங்கோ என்கிறார் மை அங்கிள்:)... விதியைத்தான் சற்று மாற்றிச் சொல்கிறார்.. இதைத்தானே விதி என்கிறோம் கரெக்ட்:).

      Delete
  32. எப்படியோ இடுகையை சுபமாக முடித்திருக்கிறீர்கள் (தமன்னா படத்தோடு ஹி ஹி. அந்தப் பெண் பொட்டு வைத்திருக்கும் படம் கிடைக்கவில்லையா?)

    ReplyDelete
    Replies
    1. ///(தமன்னா படத்தோடு ஹி ஹி//

      ஹா ஹா ஹா நீங்கதான் சொல்லியிருக்கிறீங்களே:) கொமெண்ட் பண்ணாட்டிலும் கண்ணால ரசிச்சிடுவேன் என:).

      ///அந்தப் பெண் பொட்டு வைத்திருக்கும் படம் கிடைக்கவில்லையா?)//

      ஹையோ என்னால முடியல்ல ஜாமீஈஈஈஈஈ:) அஞ்சூஊஊஊஊஊ ஓடிவாங்கோ:) ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாவெல்லோ இருக்கு:)).. ஒருவேளை பொட்டு இல்லாமல் மதம் மாறிட்டாவோ எனக் கவலைப்படுறாரோ:))...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). பொட்டில்லாமையால் இன்னும் திருமணமாகவில்லை என சந்தோசப்படுங்கோ:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. பொட்டு இல்லாமல் மதம் மாறிட்டாவோ எனக் கவலைப்படுறாரோ - அடக் கடவுளே... நான் நினைக்காததை நீங்க நினைக்கிறீர்களே. என் ஆபீசில் ஒரு ரோமன் கேத்தலிக் பெண் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடமும் பொட்டை மறந்துவிட்டால் இந்தக் கேள்வி கேட்பேன்.

      Delete
    3. ///அவரிடமும் பொட்டை மறந்துவிட்டால் இந்தக் கேள்வி கேட்பேன்.///

      ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம்:))) ஹா ஹா ஹா... ஆபீசில வேர்க் பண்ணுபவவும்.. தமனாவும் ஒன்றுதான் என எங்களுக்கு நிரூபிக்க நினைக்கிறீங்க?:) அப்பூடித்தானே?:) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:))

      Delete
  33. எனக்கு ஆன்'டி சொன்னது தவறாகத் தெரியவில்லை. அவர் உங்கள் இருவரையும் தவறாக எண்ணியிருந்தால், மீண்டும் உங்களைப் பார்த்துச் சிரித்திருக்க மாட்டார்.

    ஆமாம்.. உங்கள் நண்பி பதிவுலகில் இருக்கிறாரா?

    சிறிய விஷயத்தையும் சுவையாக எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. //எனக்கு ஆன்'டி சொன்னது தவறாகத் தெரியவில்லை.//

      தெரியல்ல.. அந்நேரம் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் படிக்கும் காலத்தில் , திருமணமானோரைப் பார்த்தால்.. ஏதோ மிகப் பெரியவர்கள்போலவே நமக்கு தோணும்... அபோ நம்மை எப்படித்தவறாக நினைக்கலாம் என கோபம் வந்துது.

      //அவர் உங்கள் இருவரையும் தவறாக எண்ணியிருந்தால், மீண்டும் உங்களைப் பார்த்துச் சிரித்திருக்க மாட்டார்//

      அதேதான்.. அவவுக்கு கொஞ்சம் ஹில்டி ஃபீலிங் ஆகியிருக்கும்.... நாம் அவ்விடத்தை விட்டு வரும்போது, அன்பளிப்பாக ஒரு குடை வாங்கித் தந்தா.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.. தமனாக்காவை ரசித்தமைக்கும்:).

      Delete
    2. //ஆமாம்.. உங்கள் நண்பி பதிவுலகில் இருக்கிறாரா?//

      சொல்ல மறந்திட்டேன்.. இல்லை:) புளொக் பக்கம் அவ இல்லை:))

      Delete
    3. அதானே பார்த்தேன். நீங்க எழுதினதை வச்சு, தவறுதலா இரிட்டேட் செய்வதுபோல் பின்னூட்டம் அவருக்கு எழுதியிருந்தால் ரொம்பக் கோபப்பட்டிருப்பார். நீங்க அப்படிப்பட்ட பின்னூட்டங்களை நகைச்சுவையா கடந்துவிடுகிறீர்கள். இது இரு வேறு குணம்.

      Delete
    4. இல்ல.. அப்படி எனில் எல்லோரையும் கொஞ்சம் எச்சரிச்சு விட்டிருப்பேன்:)).. மாட்டுப்பட விட்டிருக்க மாட்டேன்:)) ஹா ஹா ஹா.

      Delete
  34. மீனிங்க் ப்ளீஸ் உம்பா என்றால் உப்புமா தானே??!! ஹ்ஹிஹி

    சரி நிகழ்வு சரிதான் ஆனால் நீங்கள் சிரிச்சதுல தப்பில்லை என்றே தோன்றுது. யார் நம்மைப் பார்த்துச் சிரித்தாலும் சிரிக்கலாமே. சிரிப்பதில் என்ன இருக்கு. உங்கள் தோழி தான் தனித்துவிடப்பட்டதாக அவருக்குத் தோன்றியதால் சொல்லியிருக்கலாம். ஒரு வேளை நீங்கள் பழகி அவரால் மீண்டும் பழக முடியாமல் போனால் தர்மசங்கடம் என்பதால்...

    இப்படிச் சிலர் உண்டு. தான் என்ன முடிவெடுக்கிறார்களோ தான் என்ன செய்கிறார்களோ அதையே கூட இருப்பவரும் எடுக்க வேண்டும் செய்ய வேண்டும் என்று...சரி அப்புறம் என்ன ஆச்சு? அவர்தான் முதலில் நீங்கள் சொன்ன தோழியோ?

    எனக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கு. நான் கண்டுகொள்ளாமல் போய்விடுவதுண்டு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //மீனிங்க் ப்ளீஸ் உம்பா என்றால் உப்புமா தானே??!! ஹ்ஹிஹி//

      ஹா ஹா ஹா இம்முறை கீதாவுக்கும் என் பாஷை புரியவில்லையே:) மேலே ஸ்ரீராமுக்குச் சொல்லியிருக்கிறேன் கீதா பதில்:)).

      //யார் நம்மைப் பார்த்துச் சிரித்தாலும் சிரிக்கலாமே. சிரிப்பதில் என்ன இருக்கு.//

      அதேதான் கீதா, ஆனா இங்கு நாமிருவரும் சிரிப்பதில்லை என ஒப்பந்தம் கைச்சாத்திட்டு விட்டோமெல்லோ:)) அதை முறியடிச்சு நான் சிரிச்சதே தப்பு:)).. அதாவது நான் மட்டும் சிரிச்சமையால.. நான் நல்ல பிள்ளை எனவும் என் நண்பி கோபக்காரி என்பதுபோலவும் அவ கருத்தெடுக்க வாய்ப்பிருக்கெல்லோ:))..

      //உங்கள் தோழி தான் தனித்துவிடப்பட்டதாக அவருக்குத் தோன்றியதால் சொல்லியிருக்கலாம். //

      அதேதான்.. அது ஒன்றாகப் போயிருந்தால்.. இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருப்போம் இது எதிர்பாராத நிலைமையில் என்னால ஒண்ணும் பண்ண முடியல்ல ஒப்பந்தட்த்ஹை மறந்திட்டேன் அந்நேரம் ஹா ஹா ஹா:).


      //தான் என்ன முடிவெடுக்கிறார்களோ தான் என்ன செய்கிறார்களோ அதையே கூட இருப்பவரும் எடுக்க வேண்டும் செய்ய வேண்டும் என்று.//

      இல்ல கீதா.. அவ மட்டும் எடுத்த முடிவல்ல.. இருவரும் சேர்ந்தே எடுத்த முடிவு... ஆனா நான் எப்பவும் எதையும் பெரிசாக்காமல் அஜஸ்ட் ஆகிப்போவேன்.. என் நண்பி அப்படியில்லை... படு கோபமாகிட்டா:).

      //சரி அப்புறம் என்ன ஆச்சு? அவர்தான் முதலில் நீங்கள் சொன்ன தோழியோ? //
      ஹா ஹா ஹா அன்று நைட் முழுக்க அவவும் படிக்கவில்லை நானும் படிக்கவில்லை:)) எதுக்குச் சிரிச்சீங்க .. என திரும்பத் திரும்பக் கேட்டு கோபமகிட்டா.. என்னால சமாதானப் படுத்த முடியவில்லை.. தன்னைக் கூடாத பிள்ளைபோலாக்கிட்டேன் எனக் கோபம் வந்தது அவவுக்கு.

      அடுத்தநாள் காலை.. வீட்டு ஆன்ரி கேட்டா என்னிடம்.. என்ன அதிரா இரவிரவா எதுக்கு சிரிச்சீங்க என உங்களுக்குள் என்ன பிரச்சனை என:)) ஹா ஹா ஹா...

      என் நண்பி ஒருநாள் முழுக்க பேச மாட்டா[சண்டை வந்தால் எப்பவும் அப்படித்தான்:)] நான் ஓரிரு தடவை வலியபோய்ப் போய்ப் பேசுவேன் பின்பு நானும் அமைதியாகிடுவேன்.. பின்பு அவவுக்கு தாங்க முடியாது.. ஓடி வந்து கட்டிப்பிடிச்சு சமாதானமாகிடுவா.. ஹா ஹா ஹா...

      இப்பவும் நாம் நல்ல நண்பிகள். இச்சம்பவத்தை இப்போ கேட்டால்.. என்னாது அப்படி ஒரு சம்பவம் நடந்துதோ? எனக்கு நினைவில்லையே என்பா கர்ர்ர்:) அவ்ளோ மறதி அவவுக்கு:)

      Delete
  35. ஊசிக்குறிப்பு நன்றாக இருக்கு...

    தமனாவை நான் டச்சு பண்ணினேன் ஹிஹிஹிஹி....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னாது தமனாக்காவை டச்சுப் பண்ணிட்டீங்களோ:) ஹையோ ஓடுங்கோ ஓடுங்கோ நெ.தமிழன் கலைக்கிறார்:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி கீதா.

      Delete
  36. உங்கள் தோழி செய்ததும் தவறு இல்லை...அது அவரது நிலைப்பாடு. வென்ட்ரி ஆண்டி இன்னும் பெட்டராக ஹேண்டில் செய்திருக்கலாம் ஒரு வேளை அவருக்கு அவர் கணவர் மேல் ஏதேனும் பிரச்சனை இருந்திருந்தால்...என்றும் தோன்றியது...பட் அதெல்லாம் அப்படியே இக்னோர் செய்துட்டுப் போயிடனும். ஆனால் உங்கள் வயது அப்போது சிறியது என்பதால்....நீங்கள் சொல்லி மாட்டிக் கொண்ட்டீர்கள். நானும் இப்படி மாட்டியதுண்டு.

    கீதா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //வென்ட்ரி ஆண்டி இன்னும் பெட்டராக ஹேண்டில் செய்திருக்கலாம்//
      அதேதான் கீதா.

      //ஒரு வேளை அவருக்கு அவர் கணவர் மேல் ஏதேனும் பிரச்சனை இருந்திருந்தால்...என்றும் தோன்றியது//
      அப்படித்தான் நானும் சமாதானமானேன்.. நமக்கு அவரைப்பற்றித் தெரியாதெல்லோ எப்படிப்பட்டவர் என. ஆனா அவவுக்கு தெரிஞ்சிருக்கும் அதனால அவரிடம் சொல்லப் பயத்தில் நம்மிடம் சொல்லியிருக்கலாம்.

      மனப்பக்குவம் அப்போ இல்லை.. நம்மை இப்படிச் சொல்லியாச்சே என மனம் கொதித்தது.

      ஹா ஹா ஹா மிக்க நன்றி கீதா.

      Delete
  37. எந்தவொரு கசப்பான அனுபவமும் உவப்பானதாக மாறுகிறது அதிராவின் ஒளிவு மறைவு இல்லாத கொஞ்சும் மழலைத் தமிழ் நடையில்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசி ஜி வாங்கோ.. எவ்ளோ காலமாச்சு உங்களை இங்கு பார்த்து.. கொமெண்ட் போடாவிட்டாலும் தமனா வோட் போடுவீங்க.. இப்போ அதுவும் இல்லையே.

      மிக்க நன்றி.

      Delete
  38. அதிரா ஊசிக் குறிப்பு நன்றாக இருக்கு. உங்கள் அனுபவம் முதலில் புரியவில்லை. அப்புறம் புரிந்தது. தோழிகள் இருவரும் பக்கத்து வீட்டு ஆன்டியுடன் பேசக் கூடாது சிரிக்கக் கூடாது என்றுவிட்டு நீங்கள் மட்டும் சிரித்தது தோழிக்குச் சங்கடமானது. யாராவது நம்மைப் பார்த்து முன்பின் தெரியாதவர் சிரித்தால் கூட நாம் சிரிப்போம் தானே...அப்படி எடுத்துக் கொண்டால் ஆச்சு. தவறில்லையே.

    தோழி தன்மானம் சுயமரியாதை காப்பவர் போலும். அதனால் அவரது கேள்வியும் சரியாகத்தான் படுது. அது சரி அவர் அப்புறம் உங்களுடன் பேசினார் தானே? அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...இல்லை கோபித்துக் கொண்டுவிட்டாரா?

    அந்தப் படத்தில் இருப்பவர் நாகார்ஜுனா இல்லையா? ஸ்ரீராம் அவரைப் போலத்தான் இருப்பாரா?!! அப்போ அழகாக இருப்பார்னு சொல்லுங்க!!!

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. நீண்ட இடைவெளியின் பின்பு வந்திருக்கிறீங்க.

      //உங்கள் அனுபவம் முதலில் புரியவில்லை//

      ஹா ஹா ஹா இங்கின நிறையப் பேருக்குப் புரியவில்லை என நினைக்கிறேன்.

      //தோழிகள் இருவரும் பக்கத்து வீட்டு ஆன்டியுடன் பேசக் கூடாது சிரிக்கக் கூடாது என்றுவிட்டு நீங்கள் மட்டும் சிரித்தது தோழிக்குச் சங்கடமானது//
      அதேதான்.. அது என் தப்புத்தானே.

      //யாராவது நம்மைப் பார்த்து முன்பின் தெரியாதவர் சிரித்தால் கூட நாம் சிரிப்போம் தானே...அப்படி எடுத்துக் கொண்டால் ஆச்சு. தவறில்லையே.//

      அப்போ குட்டிப் பெண்கள் எல்லோ நாம்.. அந்நேரம் சிறிய விசயம்கூட மிகப் பெரிதாக தெரியும்:).

      //அது சரி அவர் அப்புறம் உங்களுடன் பேசினார் தானே? அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...இல்லை கோபித்துக் கொண்டுவிட்டாரா?//

      இல்லையே மேலே விபரமாக போஸ்ட்டில் எழுதியிருக்கிறேனே.. அவவும் திருமணமாகி இங்குதான் இருக்கிறா. நாம் இப்பவும் நல்ல குடும்ப நண்பர்களாக இருக்கிறோம். நம் வீட்டுக்கு வந்து தங்கிப் போவினம். நாமும் எங்கள் வீடுபோல அவர்கள் வீட்டுக்குப் போய் வருவோம்....

      //அந்தப் படத்தில் இருப்பவர் நாகார்ஜுனா இல்லையா? ஸ்ரீராம் அவரைப் போலத்தான் இருப்பாரா?!!//

      ஹா ஹா ஹா ஹையோ இது கீதாவுக்கே:) வெளிச்சம்:)) நானில்ல நானில்ல:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி துளசி அண்ணன்...

      Delete
  39. முதலில் பாட்டு நன்றாக இருக்கு. கானா டைப் ல எடுத்திருக்கிறாங்க. எல்லாமே நம்மவர்கள் தான்போல. பாடியவர் தான் யார் என தெரியல. முன்பு ஈழத்துப்பாடல்கள் என ரேடியோவில கேட்டனாங்கள் எல்லோ. இப்ப நம்மவர்கள் வீடியோவா இந்த மாதிரி நிறைய யூட்யூப் ல வருகிறது.
    எங்க அக்கா வீட்டுக்கு அருகிலும் பேகர் பாமிலி இருந்தாங்க. ரெம்பவும் நல்லவங்க.லீவில அக்காவிடம் போனால் இங்கிலிஷ் படிக்க அங்கு போவேன். அவங்க நிறைய்ய சொக்லேட்,பிஸ்கட் தருவாங்க. படிக்கிறேனோ,இல்லையோ இது வாங்கவே போறது.
    உங்க நண்பிக்கு வென்டி ஆன்ரியிடம் செம கோபம் போல. அதுதான் நீங்க சிரிச்சதும் அப்படி பொயிங்கிட்டா. நீங்க சிரிச்சதிலும் தப்பில்லை. ஆன்ரிக்கு பயமா,அல்லது முன்னெச்சரிக்கையா,நல்லுணர்வா அவாவுக்குதான் தெரியும். ஒவ்வொருத்தரின் நிலமையிலும் ஒவ்வொரு நியாயம்.
    ஊசிக்குறிப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..’
      அதேதான் அம்முலு.. எனக்கும் பாட்டும் நடிப்பும் பிடிச்சிருந்துது.. பகிர்ந்தேன்.

      என் சம்பவம் உங்களையும் பழைய நினைவுகளை மீட்ட உதவியதில்:) மிக்க மகிழ்ச்சி..

      //ஒவ்வொருத்தரின் நிலமையிலும் ஒவ்வொரு நியாயம்.//

      அதேதான்.. இதுவும் கடந்து பொகும் என எண்ணிட்டால் பிரச்சனை இருந்திருக்காது.. ஆனா அந்தளவு மனப்பக்குவம் அப்போ இல்லையே:))

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
  40. Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ..

      ஆஆஆஆ 100 ஆவதா வந்த உங்களுக்கு.. ஏதாவது தரோணுமே:)).. ஆங்ங்ங்ங் பொட்டு வைக்காத தமனாக்கா உங்களுக்கே:)).. ஹையோ தம்பி ஏதோ டங்கு ச்லிப்பாகிச் சொல்லிட்டேன்:).. இதுதான் சாட்டென கூட்டிட்டுப் போயிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).. பிறகு என்னால கம்பி எல்லாம் எண்ண முடியாது:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
    2. என்னாது 100 வது வந்த தமன்னா வா எனக்கு கையும் ஒடள்ளே காளும் ஒடள்ளே

      Delete
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கை கால் ஓடாட்டில் எப்பூடித் தூக்கிப் போகப்போறீங்க?:)

      Delete
  41. பாவம் அந்த வென்டி அன்ரி !))) குழந்தை எப்படி மூக்கும் முழியுமாக இருக்குமோ?)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் ... கர்ர்ர்ர்ர்ர்:).. எங்களைப்பற்றிக் கவலைப்படாமல் வெண்டி அன்ரி பற்றியே கவலைப்படுறீங்க கர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
  42. அட தமிழ்மணம் இன்னும் நாட்டில் இருக்கோ?)))

    ReplyDelete
  43. பதிவு தொடர்ந்து எழுதாமல் விட்டால் கை நடுக்கம் வருவது இயல்பு)))

    ReplyDelete
  44. எனக்கு இந்தப் பக்கத்தை வாசிக்க ஏலாமல் கிடக்கு அதீஸ். ;( எத்தின தரம் திரறந்தாலும்... வலது பக்கம் ஃபோட்டோ பக்கட்டை அப்க்ரேட் பண்ணு,' எண்டு சொல்லுது. ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கிறன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ றீச்சர் வாங்கோ... வர வர என் புளொக் திறக்க கஸ்டப்படுது.. இனி ஒரு புதிசு திறக்கோணும் போல இருக்கே:)

      Delete
  45. //வெளிநாட்டு நாகரீகம் வளருது; யாழ்ப்பாண நாகரீகம் தளருது.// அது பாடல் வரிகளிலேயே தெரியுது. ;) யாழ்ப்பாணம் என்று இல்ல. ஒட்டுமொத்த இலங்கைத் தமிழும். இனி இப்படிக் கலந்து போய்... ஒரேயொரு பேச்சுவழக்கு மட்டும் தான் மிஞ்சும் எண்டு நினைக்கிறன். ;)

    இடப்பக்கப் பாதி ஸ்க்ரீன்ல மட்டும்தான் படம் பார்த்தன். நான் தட்டுறதில பாதி எனக்கே தெரியேல்ல. கனக்கப் பிழைகள் தெரிஞ்சால் பப்ளிஷ் பண்ணாதைங்கோ அதிரா.

    ReplyDelete
    Replies
    1. பாட்டு மட்டும்தான் கேட்டிருக்கிறீங்க போல இமா.. இப்படி என்பக்கம் முன்பு நீங்க கஸ்டப்பட்டதில்லையெல்லோ... ஆரோ சூனியக் கிளவியை அனுப்பிப் போட்டினம் அதிரா பக்கம்:)... முன்பு மாயா சொல்லுவார்.. இருங்கோ ஜிங்சான் ஐ சைனாவிலிருந்து கூட்டி வாறேன் சூனியம் எடுக்க என ஹா ஹா ஹா நினைவிருக்கோ இமா?..

      இடைக்கிடையாவது மறக்காமல் வந்திடுறீங்க மியாவும் நன்றி இமா.

      Delete
  46. பதில் போடாமல், ஆளு எங்க காணாமல் போய்விட்டீர்கள்? பனிக்காலம் முடிந்ததும் ரொம்ப பிசியாயிட்டீங்களா? கவிஞர்களையும் காணோம். (சீராளன், இளமதி)

    ReplyDelete
    Replies
    1. ஓ இளமதிக்கு மெயில் போட்டேன் பதில் இன்னும் இல்லை. சீராளன் தொடர்பு எல்லைக்குள் இல்லை என்னோடு. ... அடிக்கடி அவரும் காணாமல் போய் வருபவர்தான்... அடுத்த தடவை எதிர்பார்ப்போம்:).

      Delete
    2. //சீராளன் தொடர்பு எல்லைக்குள் இல்லை என்னோடு. ... அடிக்கடி அவரும் காணாமல் போய் வருபவர்தான்... அடுத்த தடவை எதிர்பார்ப்போம்:).// ஹர்ர்ரர்ர்ர்ர் தொடர்பு எல்லைக்குள் இல்லையா ஆமா அந்தாட்டிக்கா போனேன் வர வழி தெரியல்ல பூசாரே புதிய பதிவோடு வாங்க கண்டிப்பா வருகிறேன் நம்ம வாக்கி டாக்கி இலக்கத்திற்கு ட்ரை பண்ணிப்பாருங்க ஹா ஹா ஹா

      //கவிஞர்களையும் காணோம். (சீராளன், இளமதி)//
      எம்மையும் ஒரு ஆளா நினைத்துத் தேடியமைக்கு நன்றி நெல்லைத்தமிழன்

      Delete
    3. ஆஆஆ நெல்லைத்தமிழன் நீங்க தேடிய கவிஞர்.. மேஜர்.. சீராளன் வந்திருக்கிறார்.. வாங்கோ வாங்கோ..

      // நம்ம வாக்கி டாக்கி இலக்கத்திற்கு ட்ரை பண்ணிப்பாருங்க ஹா ஹா ஹா // நான் ட்றம்ப் அங்கிளின் பேசனல் செக்கரட்டரி எல்லோ..:), அதனால வாக்கி டோக்கியில பேசினால் என்னைத்தூக்கி உள்ளே போட்டிடுவார் ட்றம்ப் அங்கிள்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி சீராளன்.. முடியும்போது மறந்திடாமல் எட்டிப் பாருங்கோ.

      Delete
  47. ஹா ஹா ஹா மன்னிச்சுக் கொள்ளுங்கோ நெல்லைத்தமிழன்... பிசி எனச் சொல்வது எனக்குப் பிடிப்பதில்லை:).. இருப்பினும் அதேதான்:).. அதையும் தாண்டி , கொஞ்சம் புளொக்கிலிருந்து ஓவ் எடுத்தாலே திரும்பி உள்ளே வருவது கஸ்டமா இருக்கு:)... விரைவில் பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிக்கிறேன்.. வந்திடுவோம்... நன்றி நன்றி..

    ReplyDelete
  48. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete
  49. உறவின் நுணுக்கங்கள் அருமை

    ReplyDelete
  50. கோகிஷாவில் என்னதான் நடக்கிறது என்று தலைகாட்டினேன். பூனைகளைத் தாண்டி வேறேதும் ஓடுகிறதா என்று பார்க்கவேண்டாமா.. பால்யகால ஆண்டி-அங்கிள் நட்பு, தோழியின் மீது தீராத பாசம் என சுயசரிதத்தின் ஒரு சுவாரஸ்யமான பகுதியைப் படிக்க நேர்ந்தது. இன்னும் அவ்வப்போது எடுத்துவிடுங்கள்..

    உங்கள் ஏழரைக்கணக்குக்கு ஒரு சிறிய பதில் என் பக்கத்தில் கொடுத்திருக்கிறேன். எபி-யைத் தாண்டி டயமிருந்தால்(!) போய்ப்படியுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஏகாந்தன் அண்ணன் வாங்கோ..

      // பூனைகளைத் தாண்டி வேறேதும் ஓடுகிறதா என்று பார்க்கவேண்டாமா.. //
      என்ன இப்பூடிப் பொசுக்கெண்டு சொல்லிட்டீங்க:))... கண்ணதாசன் அங்கிள் என்ன சொன்னார் தெரியுமோ?:).. “கடவுளை வணங்க வைப்பதற்குக்கூட, எதையாவது காட்டித்தானே மக்களை அழைக்க வேண்டி இருக்கிறது”.. என.. அதாவது கோயிலில் வில்லுப்பாட்டு.. பாட்டுக்கச்சேரி இப்படி:)..

      அதுபோல பூஸ் ஐக் காட்டித்தானே எல்லோரையும் அழைச்சூஊஊஊ அழைச்சு ஞானியாக்கிக்கொண்டிருக்கிறேன்ன்ன்ன்:))..

      //எபி-யைத் தாண்டி டயமிருந்தால்(!) போய்ப்படியுங்கள்!//

      ஹா ஹா ஹா:)).. உங்கள் வீட்டுக்கு வரும்போது எபி வழியில எல்லோ இருக்குது:) அதனால அங்கு உள்ளே நுழைஞ்சால் அவ்ளோதேன்ன்ன்:)) பின்பு சுவரேறிக் குதிச்சு தப்பித்தான் வரோணும் ஹா ஹா ஹா.. மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணன்.

      Delete
  51. பழங்கதை என்றதும் அண்ணாக்கள் பற்றி ஏதும் ஸ்பெஷல் கதை இருக்கும் என்று நினைச்சன், காணம். ;-)

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.