நல்வரவு_()_


Wednesday 24 October 2018

நமக்கு, இறப்பின் பின்னர் சிறப்புத் தேவையோ?

ங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் பகிர்ந்துகொண்ட இந்தக் கதைப் பகுதிதான், என்னை இப்போஸ்ட்  போடத் தூண்டியது. நான் எப்பவும் நினைப்பதுண்டு, உயிரோடிருக்கும் போதுதானே எதுவும் தேவை, இந்த உயிர் உடம்பை விட்டுப் பிரிந்த பின், நம்மை சந்தனத்தால் குளிப்பாட்டி என்ன? வைரத்தால் அலங்கரித்தென்ன? நமக்குத் தெரியவா போகிறது?..

து பற்றிப் பலரோடும் நான் பல தடவை டிஸ்கஸ் பண்ணுவேன், வாதாடுவேன், உயிரோடிருக்கும் போதுதான் எதுவும் பண்ண வேண்டும், உயிர் போனபின் உடம்பை எரித்திட்டால் போதும், எதுவும் செய்து என்ன ஆகப் போகிறது என.

எங்கள் அப்பாவும் அடிக்கடி சொல்லுவார், ஆள் முடிஞ்ச பின்பு ஊருக்கு உலகுக்கு காட்டவோ, நிறையச் செலவழிச்சு செய்கிறார்கள், உயிரோடிருக்கும் வரை கவனிக்காதோரெல்லாம், உயிர் போனபின் நிறைய பணம் செலவழிச்சு ரிக்கெட் போட்டு ஊருக்குப் போய், சிறப்பாக செத்த வீடு கொண்டாடுகிறார்கள், ஆனா அந்த இறந்தவர் காலம் முழுக்க தனிமையில் வாடி நொந்திருப்பார், உணவு சமைக்க ஆளில்லாமல் கஸ்டப்பட்டிருப்பார், இப்போ இறந்த பின் ஆயிரம் பேரைக் கூப்பிட்டு சாப்பாடு கொடுத்து 31 செய்கிறார்கள்.. இதிலென்ன இருக்கு என..

சமய சம்பிரதாயங்கள், என்னென்னமோ ஆத்ம சாந்திக் கிரியைகள் எனச் சொன்னாலும்.. கண்ணை மூடியபின் என்ன நடக்குமோ? நமக்கென்ன தெரியும்.

யாரையும் குறை சொல்லவில்லை, அவரவர் பிரச்சனை அவர்களுக்குத்தான் தெரியும், அடுத்தவர்களுக்குப் புரியாது, ஆனால் என் கேள்வி, இறந்தபின் ஆடம்பரம் தேவையா என்பதே.

நான் நினைப்பேன், இப்போ உடம்புக்கு கிரீம், ஒயில் என என்னென்னமோ பூசிப் பாதுகாக்கிறோம், வெயில் படாமல், மழை படாமல் பாதுகாப்பாக, உணவுக் கட்டுப்பாடாக.. இப்படி எவ்வளவோ பாதுகாக்கிறோம், எல்லாம் இந்த உயிர் உடம்பில் இருக்கும் வரைதானே?. உயிர் போன அடுத்த கணமே நமக்கு எதுவும் தெரிய நியாயமில்லையே.

இப்போ வெளிநாட்டில் வாழும் நம்மவர்களிடையே ஒரு முறை பரவி வருவதை அவதானிக்க முடிகிறது, அதாவது தம் உடம்பை, ரிசேஜ் க்கு என எழுதிக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி எழுதிக் கொடுத்து விட்டால், உயிர் பிரிந்து ஒரு மணித்தியாலத்தில் தூக்கிக் கொண்டு போய் விடுவார்களாம் உடம்பை. இது ஒருவிதத்தில் நல்ல முறைபோலவும் தோணுது. சமீபத்தில் கூட ஒருவர் இறந்தார், நல்ல குடும்பம்- பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் என பெரிய வட்டமே இருந்தும், அவர் அது என் விருப்பம், நீங்கள் கொண்டாடுவதாயின், உங்களுக்குப் பிடிச்ச முறையில ஏதும் பூஜை வையுங்கோ, எனக்கு எந்தக் கிரியையும் வேண்டாம் எனச் சொல்லி எழுதிக் கொடுத்து விட்டார்., கோபம் எல்லாம் இல்லை, அது அவருடைய விருப்பமாம்.

உயிர் போய் ஒரு மணித்தியாலத்தில் வந்து தூக்கிக்கொண்டு போய் விட்டார்களாம்.

பிள்ளைகள் உறவுகள் என இருந்தும், யாராலும் கவனிக்காமல் தனிமையில் வாடுவோர் இப்படிச் செய்தால் அது .. இருப்போருக்கு ஒரு படிப்பினையாக இருக்குமோ என்னமோ... 

இதில் சரி-பிழை சொல்லத் தெரியவில்லை, ஆனா எங்கள் அப்பாவின் இழப்பின்போது, அப்பாவுக்கு 5 ஆண்பேரப்பிள்ளைகளும் 2 பெண் பேரப்பிள்ளைகளும்... அப்போ கிரியைகள் எல்லாம் முடிந்து, முடிவில் காரில் ஏற்றி, எரிக்கும் இடம் கொண்டு செல்ல முன்பு, ஹோலில் இருந்து காருக்குத் தூக்கிச் செல்லும் அந்த குட்டி இடை வெளியில், 7 பேரப்பிள்ளைகளும் வெள்ளை சேட்டும், கறுப்பு ஜீன்ஸ்சும் அணிந்து, பெண் பேரப்பிள்ளைகள் பூச் செண்டுகளை முன்னால் தூக்கிச் செல்ல, 5 ஆண் பேரப்பிள்ளைகளும் அப்பாவைச் சுமந்து சென்றார்கள் கார் வரை.. அதைப் பார்க்க கண்ணுக்கு ஒரு கண்கொள்ளாக் காட்சியாகத்தான் இருந்தது... அப்பா நன்றாக வாழ்ந்து முடித்திருப்பதுபோல உணர்ந்தேன், இப்போதும் அதை நினைக்க, கவலையூடும், ஒரு மன நிறைவாக இருக்கிறது, ஆனா இது அப்பாவுக்கு தெரியுமோ? 

இறந்தபின் சிலை வைப்பது, ஆடம்பரமாக அடக்கம் செய்வது.. இதனால் இறந்தவருக்கு என்ன பயன்? என்னைப் பொறுத்து நான் நினைப்பது, இருக்கும்வரை சந்தோசமாக, நன்கு அனுபவித்து வாழ வேண்டும், இறந்த பின் யாரும் நம்மை நினைக்கோணும், சிலை வைக்கோணும் என்பதெல்லாம் எதுக்கு. எது வேணுமெண்டாலும் உயிரோடிருக்கும்போது பண்ண வேண்டும்... எனக்கு ஆராவது சிலை வைக்க யோசிச்சால் இப்பவே வச்சிடுங்கோ:))

ஆனால் என்னதான் சொன்னாலும், உடம்பை தானம் கொடுப்பது, ரிசேஜ் க்கு கொடுப்பது எதுவும் எனக்கு விருப்பமில்லை, என் உடம்பை யாரும் வெட்டிக் கீறிடக்கூடாது.. அப்படியே எரிச்சிடோணும் எனத்தான் நினைப்பேன், நினைக்கவே உடம்பு கூசுதே... ஆனா இதுவும் ஒருவித சுயநலம்தானே.. ஏனெனில்..

இப்பவே எங்கள் மகன் யுனியில், அனரமியில் படிக்கத் தொடங்கியாச்சாம்,  ஒருவரது தலையை மட்டும் வெட்டி வைத்திருந்தார்களாம், கையில் தூக்கி வைத்துப் பார்த்தார்களாம், தசையை, நரம்புகளை.. நான் நடுங்கி விட்டேன், குழந்தையாகவே வளர்த்து விட்டோம், இப்போ திடீரென இப்படி கேட்க மனம் பதைக்குது, ஆனா அவர் சிரிச்சுக் கொண்டு சொல்கிறார். அது இன்றஸ்ரிங்காக இருக்கு என... இதிலிருந்து ஒன்று புரிந்தது, பிள்ளைகள் விரும்பாமல் எந்தத் துறையிலும் நாமாக வற்புறுத்தி அனுப்ப முடியுமோ?:).. அவர்களாக விரும்பி இறங்கினால் மட்டுமே விரும்பிப் படிப்பார்கள்.

அது யாருடைய முகமெனக் கேட்டேன், ஒரு ஓல்ட் மான் எனச் சொன்னார், இப்படி ஒரு லேடியின் உடம்பும் வைத்துப் படிக்கிறார்களாம்.. ஹையோ இதெல்லாம் நமக்கெதுக்கு.. ஆனா நான் சொல்ல வந்த விசயம் என்னவெனில், ஆரோ எவரோ தம் உடம்பைத் தானம் செய்தமையாலதானே, இன்று எங்கள் பிள்ளை படிக்க முடிகிறது...

எனக்கு ஒரு கதை இங்கு சொல்ல விருப்பமாக இருக்கு, ஒருநாள் என் கணவர், வீட்டுக்கு வந்ததும் நேரே பாத்ரூமுக்குள் போனார் தோய்ந்து விட்டு[முழுகி விட்டு] வருகிறேன் என, வழமையாக ரீ குடிச்ச பின்பே உடுப்பு மாற்றுவார். இது என்ன எனக் கேட்டேன்,....

தான் தன் ரூமில் இருந்தபோது அவசரமாக இன்னொரு டொக்டர் ஃபோன் பண்ணி, உடனே கொஞ்சம் மோட்சறிக்கு வர முடியுமோ பிளீஸ் எனக் கேட்டாராம்[டியூட்டி முடிஞ்ச நேரம் என்பதால், வோட் தவிர வேறெங்கும் ஆட்கள் இருக்க மாட்டினம்], வருகிறேன் எனச் சொல்லிப் போனாராம், அங்கு பார்த்தால் அந்த மற்ற டொக்டரின் பேசண்ட் ஒருவர் இறந்து, மோட்சறி ட்றோயரில் வச்சிருக்கினம், ஏதோ ரிப்போர்ட் எழுதுவதற்காக அவர் தனியே போய், ட்ரோயரை இழுத்திருக்கிறார், அது இழுத்த இழுப்பில் ட்ரோயருடன் சேர்ந்து உடம்பும் அப்படியே வெளியே வந்து, ட்ரோயரால கீழே விழுந்து விட்டதாம், கனமாக இருக்குமெல்லோ அதனால ஹெல்ப்ப்புக்கு கூப்பிட்டிருக்கிறார், பின்பு இருவருமாக கட்டிப்பிடிச்சுத் தூக்கி ட்ரோயரில் வைத்துத் தள்ளிப் பூட்டியிருக்கிறார்கள்... அப்போ அந்தந்த துறைக்கேற்ப மனம் பண்படுத்தப்பட்டு இருப்பதனால்தானே இப்படி முடிகிறது... 

ஒரு வீடியோப் பார்த்தாலே, 4 நாள் நித்திரை கொள்ள முடியாமல் தவிப்பேன் நான்...
===========================================

இனி ஸ்ரீராமின் கதைக்கு வருவோம்.... 

இங்கே தலைப்பைத் தொட்டால் தளம் ஓபின் ஆகும்..


"அம்மா..   வெள்ளரிப்பிஞ்சு..."  மாலதி கையைக் கிள்ளினாள் மஞ்சு.  

"ஒரு கட்டு வாங்குங்களேன்.."  மாலதி சண்முகத்தைப் பார்த்தாள்.

"இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்காவது நிறுத்திச் சாப்பிடவேண்டும்..   இப்பப்போயி இதைச் சாப்பிட்டா..?"  சண்முகம் எரிச்சலுடன் மகளையும் மனைவியையும் பார்த்தான்.  மகன் இதை எதையும் கவனிக்காமல் மொபைலில் மூழ்கி இருந்தான்.

"அது எங்க பிரச்னைப்பா...  இதை வாங்குங்க...  அதையும் பார்த்துக்கலாம்..."  என்றாள் மஞ்சு.

காலை வண்டி வைத்துக்கொண்டு சண்முகம், சண்முத்தின் தம்பி அறிவு, இருவர் மனைவிமார்கள், சண்முகத்தின் மகன் ராஜா, மகள் மஞ்சு ,  எல்லோரும் கிளம்பி  வந்து கொண்டிருந்தனர்.

இன்னும் குறைந்தது ஐந்து மணி நேர பிரயாணம் பாக்கி இருந்தது.

வழியெங்கும் கண்ணில் படுவதை எல்லாம் வாங்கி கொண்டிருந்தனர் குழந்தைகள். 

ஆட்சேபித்த சண்முகத்தை "ஆமாம்..  இப்படி ஒண்ணா சேர்ந்து எப்ப கிளம்பி இருக்கோம்...   சும்மா இருங்க" என்று அடக்கினாள் மனைவி மாலதி.

"ஆபீஸ்ல லீவு சொல்லிட்டியாடா?"  தம்பியிடம் கேட்டான் சண்முகம்.

"ம்ம்ம்..  பின்ன?"

"எத்தனை நாள்?"

"குறிப்பா எதுவும் சொல்லலை"

"மொபைல்ல என்னடா பார்க்கறே?"  சண்முகத்தின் தம்பி மகன் கார்த்தி கேட்டான்.

"போனவாரம் ரிலீஸான படம்டா..."  ராஜா மொபைலிலிருந்து கண்ணெடுக்காமல் பதில் சொன்னான்.

கார் ஸ்டீரியோவில் ஏ ஆர் ரெஹ்மான் ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு மணி நேரம் கழித்து ஓரளவு பெரிய ஊர் ஒன்றில் நல்ல ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு முடிந்தது.

"அக்கா...  அதோ அந்தப் பொண்ணு போட்டிருக்கற ட்ரெஸ்ஸைப் பாருங்க...  இதே மாதிரிதான் எங்க மதினி பொண்ணு கல்யாணத்துல...."

போன வாரம் சென்று வந்த கல்யாணம், ஊரில் பார்த்த மால் என்று இரு பெண்களுக்கிடையே பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.  

மஞ்சு தோழியுடன் போனில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

அண்ணனும் தம்பியும் ஷேர்மார்கெட் பற்றி அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தார்கள். 

ஒருவழியாய் ஊர் வந்து சேர்ந்தது.

ஏ ஆர் ரஹ்மானை அணைத்தான் சண்முகம். 

எல்லோரும் மௌனமானார்கள்.  ஒரு இறுக்கமான அமைதி.

வண்டியை விட்டு இறங்கியபோது சுப்பிரமணி எதிரில் வேகமாக வந்தார்.

"அய்யர் அவசரப்படுத்திக்கிட்டே இருக்காரு...  டயமாச்சு...   உங்களுக்காகததான் எடுக்காம காத்திருக்கோம்...  சீக்கிரம் வாங்க...   முகதரிசனமாவது கிடைக்கட்டுமேன்னுதான்..."

உள்ளே நுழையும் இவர்களை பார்த்ததும் செத்துப்போன சண்முகத்தின் அம்மா உடலுக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களிடமிருந்து  அழுகை வெடித்துக் கிளம்பியது.  


க் கதையில் எனக்குப் பிடிக்காத விசயம், பல பெண்கள், தம் பக்கத்து ஆட்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது, ஃபீலிங்ஸ் ஐக் காட்டுவது.  பல ஆண்களின் குணம், தம் பொறுப்புக்களை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு, அமைதியாக இருந்திடுவார்கள், இதனால மனைவிமாரும், தன் பக்கத்தை மட்டுமே பெரிதாக நினைப்பதுண்டு.

ஒரு மனைவி/தாய் நினைத்தால் மட்டும்தான், தம் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கத்தையோ பண்பாட்டையோ, உண்மையில் சொல்லிப் புரிய வைக்க முடியும், அந்தச் சாதுரியம் அப்பாமார்களிடம் குறைவே, அப்போ இக்கதையிலே பாருங்கள், தந்தை மனதில் கவலையைப் புதைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார், மனைவியோ பேசாமலிருங்கள் பிள்ளைகள் அனுபவிக்கட்டும் என்கிறார்.. ஏனெனில் அது கணவரின் அம்மாதானே, இதுவே தன் அம்மாவாக இருப்பின் இப்படிப் பதில் வந்திருக்குமோ?.

இதில் பல பின்னணிகளை நினைக்கலாம், என்னவெனில் இந்தியாவைப் பொறுத்தமட்டில், திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிட வேணும், அங்கு மாமியார் அந்தக் காலத்தில் என்ன கொடுமைப் பண்ணினாரோ மருமகளை.. அதனால கூட மனம் நொந்திருக்கலாம், எதுவாயினும் ஒருவர் இறந்துவிட்டார் எனில், இப்படி நடப்பது தவறே..

அதையும் விடுங்கள், இறந்தவர்- கணவரின் அம்மா எனும்போது, நமக்கு கணவரில் அதிக பாசம் இருப்பின், நம் மனமும் அந்நேரம் கணவரின் மனமாக மாறி, அவருடைய மனநிலையில் இருந்துதானே துடிக்க வேண்டும்.. அதுதானே ஒரு உண்மையான மனைவிக்கு அழகு.  எப்பவுமே பெற்றோரின் இழப்பு நிகழும்போது, நம் மனம் முதலில் நினைப்பது நம் குழந்தைப் பருவத்தைத்தானே, உடனேயே மனம் தாவி ஓடி விடுகிறதே.. சின்ன வயதில் எனக்கு அப்படி செய்தார், இப்படி செய்தார்.. அது வாங்கித்தந்தார் என, அந்நேரம் அவர்கள் செய்த எதுவும் குறையாகத் தெரியாதெல்லோ... இது குடும்பத்தில் மனைவி பக்கமோ, கணவன் பக்கமோ நிகழும்போது, உடனே நாமும் அவர்களாக மாறி[கணவராக, மனைவியாக] அவர்கள் மன நிலையிலிருந்து எண்ணிப் பார்க்க வேண்டும்.


இது அக்கதையில் நடந்த பின்னூட்ட சம்பாசனை..  தூரப் பிரயாணம் எனில் உணவுண்ணாமல் தண்ணி குடிக்காமல் இருப்பதென்பது முடியாத ஒன்றுதான்[அப்படித்தான் இருக்க வேணும் என ஒன்றும் கட்டாயமில்லை], ஆனா மனம் எங்கும் தாவாமல், ஒரு இழப்பு வீட்டுக்குப் போகும் நினைப்பிலேயே இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. உணவு உண்பதுகூட, நாம் மயங்கிடாமல் இருக்க மட்டுமே தவிர, அந்நேரம் பார்த்தா பெரிய ஹோட்டேலுக்குப் போய், வடிவா மூக்கு முட்டச் சாப்பிடோணும்?, உண்மையில் துக்கம் வரும்போது, தொண்டையில் அடைக்குமெல்லோ? உணவு கீழே இறங்காது.. அது தானாக வருவது, சிலர் பப்ளிக்கில் கத்திப் புரண்டு எனக்கு ஏதும் வேண்டாம் என்பினம், உள்ளே போய் ஃபுல்லாக சாப்பிடுவார்கள்.. இப்படி நடிப்பும் எதுக்கு?..

பிள்ளைகளுக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும், உல்லாசப் பயணம் போகும்போது அனுபவிக்கலாம், இது அப்படிப்பட்ட பயணம் அல்ல, உங்களுக்கு அப்பம்மா என்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமோ.. என்னவெல்லாம் ஆசையா வாங்கித் தந்தவர் தெரியுமோ என அக்கதைகளைச் சொல்ல வேண்டும், இதில் என்ன தப்பிருக்கு.. இப்படித்தான் நான் நினைக்கிறேன். தூரத்து உறவெனில்க்கூட கொஞ்சம் பறவாயில்லை, இது பிள்ளைகளுக்கும் நெருக்கமான உறவெல்லோ.. அப்பேரப் பிள்ளை பிறக்கும்போது- அந்த பேத்தி எவ்வளவு தூரம் சந்தோசத்தில் துள்ளிக் குதித்திருப்பார், அப்போ அதை அக்குழந்தைக்கு உணர்த்தாமல் விடுவது சரியாகுமோ?.. இப்படித்தான் நான் நினைக்கிறேன்.

இன்னொன்று இக்காலக் குழந்தைகள் இப்படி ஏதும் சொன்னால் அமைதியாகி விடுவார்களே தவிர, நாம் சின்ன வயதில் அழுது உருண்டதைப்போல் எல்லாம் நிட்சயம் பண்ண மாட்டார்கள், மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என, சின்ன வயதிலேயே இங்கு சொல்லிக் குடுத்துப் பதப்படுத்தி விடுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

இதை எல்லாம் அங்கு கொமெண்ட்டாகப் போட முடியாமையாலேயே இங்கு காவி வந்தேன்...
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVV_()_VVVVVVVVVVVVVVVVVVVVVVVVV

இந்தப் போஸ்ட்டின் மூலம், பலரது பழைய நினைவுகளை நான் நிட்சயம் கிளறி விட்டிருப்பேன், அதுக்காக மன்னிச்சுக்கொள்ளுங்கள்.. ஆனா இடைக்கிடை இப்படி  நினைத்துப் பார்க்கவும் வேணும்தானே...

தப்பாக ஏதும் பேசி விட்டேனெனில், சுட்டிக் காட்டிவிட்டு, என்னைத்தூக்கிப்போய் இப்பவே தேம்ஸ்ல போட்டு விடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:).

இது நேற்று ஈவினிங் வரும்போது எடுத்தேன், பார்க்க அழகாக இருந்துது அதனால டக்கென எடுத்தேன், இது முழுக்க ரெட் லைட்டாக இருந்தது ஒரு வித அழகைக் கொடுத்துது, ஆனா படத்தில எல்லாம் மஞ்சளாகத் தெரியுது கர்ர்ர்ர்ர்ர்:)

ஊசி இணைப்பு


ஊசிக் குறிப்பு
by புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)
000000000000000000000000000000_()_000000000000000000000000000

225 comments :

  1. உண்மை என்னுடைய கருத்தும் இதுவே உயிரோடு இருக்கும்போது பெற்றோருக்கு கஞ்சி ஊற்றாதவர்கள் இறந்த பிறகு ஊர் பெருமைக்காக செலவு செய்வதை இறைவன் மன்னிக்க மாட்டான்.

    கதையை இன்னும் படிக்கவில்லை பிறகு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      அதேதான், பல இடங்களில் இப்படிப் பெருமைக்காக செத்தவீடு கொண்டாடுவதைப் பார்த்து கொதிச்சிருக்கிறோம் நாங்கள்...

      Delete
  2. ஒரு பெண் தனது தாயையும், மாமியாரையும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பதுபோல...

    ஆண் தனது தந்தையையும், மாமனாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை.

    ஊசிக்குறிப்பு உண்மையே...

    ReplyDelete
    Replies
    1. அது என்னமோ உண்மையைத்தான் சொல்றிங்க கில்லர்ஜி, இதையும் விட மேலாக நான் நேரில் பார்ப்பதைச் சொன்னால், பல ஆண்கள் தன் பெற்றோரைக் காட்டிலும் மாமா மாமியாரை அதிகம் நேசிப்பதைப்போல தோணும், ஆனா பெண்களால் அது முடிவதில்லைத்தான் .. ஏனெனத் தெரியவில்லை.

      எப்படிப்பட்ட உயர்ந்த குணமுடைய பெண்ணாயினும் ஒப்பீட்டளவில் அப்பா அம்மாவுக்குத் துடிப்பதைக் காட்டிலும், கொஞ்சம் குறைச்சுத்தான் மாமா மாமிக்காக மனம் துடிக்கும்..

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
    2. ///பல ஆண்கள் தன் பெற்றோரைக் காட்டிலும் மாமா மாமியாரை அதிகம் நேசிப்பதைப்போல தோணும்//

      இதற்கு காரணம் ஆராய்ந்தால் மாமனாரிடமிருந்து எதையாவது பிடுங்கும் எண்ணமுள்ள மருமகன்களாக இருப்பார்கள்.

      எனது மாமனார் என்னிடம் கேட்டது கடன், ஆனால் நான் கொடுத்தது தானமே... இறுதிவரை நான் திரும்பக் கேட்கவேயில்லை.

      Delete
    3. //இதற்கு காரணம் ஆராய்ந்தால் மாமனாரிடமிருந்து எதையாவது பிடுங்கும் எண்ணமுள்ள மருமகன்களாக இருப்பார்கள்.//

      கில்லர்ஜி ஹா ஹா ஹா நீங்க சொல்வதும் பல இடத்தில உண்மைதான்.. ஆனாலும் நீங்க இந்தியாவை மனதில வச்சுச் சொல்றீங்க, நான் இலங்கையை மனதில் வச்சுச் சொல்லுறேன்:).

      இலங்கையில் பெற்றோர் இருப்பது அதிகம் மகள் மருமகனோடுதானே, அங்கு மருமகனை தம் மகனுக்கும் மேலாக கவனிப்பினம்... அதனாலோ என்னமோ மருமகனும், மனைவியை தங்கை மாரை எல்லாம் தன் தங்கைபோல நினைச்சு, தானே சீதனம் கொடுத்தும் பல இடங்களில் திருமணம் பண்ணி வைப்பார்கள்.. சொல்லப்போனால் அங்கு பெண்ணை மட்ட்டும் எடுப்பதில்லை, குடும்பத்தோடு பொறுப்பெடுப்பதைப்போலதான்.. ஆனா மாமா மாமி வசதியானவர்கள் எனில்.. லக் தான். அதற்காக தன் குடும்பத்தைக் கை விடுவதென்றுமில்லை.. அதையும் கவனிப்பார்கள்.

      //எனது மாமனார் என்னிடம் கேட்டது கடன், ஆனால் நான் கொடுத்தது தானமே... இறுதிவரை நான் திரும்பக் கேட்கவேயில்லை.//

      அது உங்கள் பரந்த மனதைக் காட்டுது.. அதை தானம் எனச் சொல்லாதீங்கோ.. என்ன இருப்பினும் அவர் உங்கள் மாமனார்தானே.. அதனால அன்பால குடுத்ததாக இருக்கட்டுமே... நன்றி கில்லர்ஜி.

      Delete
    4. இன்னொரு உண்மைச் சம்பவம் சொல்ல மறந்திட்டேன், இது தஞ்சாவூரில் நிகழ்ந்ததாம். மருமகளின் அப்பா இறந்திட்டார்.. புது மருமகள் திருமணமாகி 2,3 வருடத்தில். அப்போ எல்லோரும் செத்த வீட்டுக்குப் போய்விட்டு உடனேயே இங்கு மாப்பிள்ளை வீட்டுக்கு கூட்டி வந்திட்டாராம் மாமியார்.

      மருமகள் அழுது கொண்டிருக்கிறாவாம் கவலையில், அந்த மாமியார் பிள்ளைக்கு பசிக்கும் பாவம் என, உடனேயே சிக்கின் வாங்கி சமைச்சு சாப்பிடக் கொடுத்தாவாம்[கூட்டுக்குடும்பம்]. அப்போ அந்த மருமகள் இந்த மாமியாருக்காக அழுவாவோ?:) ஹா ஹா ஹா:).. இது ஓவர்க் கொடுமையான விசயம் தானே...

      Delete
  3. இந்தப்பதிவைப் பொறுத்தவரை நான் உங்களுடைய கருத்துக்களுடன் முரண் படுகிறேன். வாழ்வில் ஒருமுறை மட்டுமே பிறக்கிறோம், இறக்கிறோம்.இந்த இரண்டிற்கும் செலவு செய்வது நாம் அல்ல. மற்றவர்களே. சிலர் வேண்டுமானால் சாவு செலவு என்று சேர்த்து விட்டு சாகலாம். ஆனால் அதையும் செலவு செய்வது மற்றவர்கள்.

    பண்டைக்காலத்தில் இது ஒரு பொருளாதார பரவல் ஆக இருந்தது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் தானம் முதலியவை கொடுக்கும்போது அது வாழ்க்கையின் கடை மட்டத்தில் இருப்பவர்களுக்கு சென்றடைகிறது. சாவு செலவு என்பது அவர் அவர் விருப்பம். மேல்நாட்டில் சாவு செலவு மிக அதிகம் என்று அறிகிறேன். அதனால் தான் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

    அம்மா காத்திருக்கிறாள் கதை உண்மையில் என் வாழ்வில் நிகழ்ந்தது. என் அம்மா சாகும் தருவாயில் இருக்கிறார் என்று அறிந்து நான் நீண்ட பயணம் மேற்கொண்டேன். உணவு தண்ணீர் தவிர்க்க முடியாத நிலை. நான் சென்று மருத்துவ மனையில் பார்த்தபின் தான் உயிர் பிரிந்தது.

    ஊசி இணைப்பு மாமியார் மருமகள் சண்டையில் பிரமாதம்.

    கீசாக்கா ஒரு நீண்ட மாமியார் அறிவுரை சொல்லப்போறார் பாருங்கோ.

    Jayakumar​ ​

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ.. இம்முறை வெள்ளனவே வந்திட்டீங்க.. ஹா ஹா ஹா மகிழ்ச்சி.

      அதேதான் ஒவ்வொருவருக்கும் இதில் ஒவ்வொரு கருத்து இருக்கும்.. அது அவரவர் விருப்பு வெறுப்பைப் பொறுத்ததுதானே...

      செலவு எனச் சொல்லும்போது, நாம் சேர்த்து வைத்துவிட்டுச் செத்தாலென்ன, சேர்க்காமல் விட்டுப்போட்டுச் செத்தால் என்ன, ஆரோ நம்மை அடக்கம் செய்யத்தானே வேண்டும், ஆனா நான் சொல்ல வந்தது, வேண்டாத ஆடம்பரங்களைப் பற்றி, அதிலயும் உயிரோடிருக்கும்போது கவனிக்காமல் ஒரு ஃபோன் கதைக்கவே கஸ்டப்பட்டுப்போட்டு பின்பு, உயிர் போனபின் எதுக்கு ஆடம்பரமாக செய்து ஊருக்குக் காட்ட வேண்டும் என்பதையே...

      Delete
    2. //பண்டைக்காலத்தில் இது ஒரு பொருளாதார பரவல் ஆக இருந்தது.//

      ஓம் அதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      //சாவு செலவு என்பது அவர் அவர் விருப்பம். மேல்நாட்டில் சாவு செலவு மிக அதிகம் என்று அறிகிறேன். அதனால் தான் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார்கள். //

      இதுபற்றி சரியாக சொல்ல தெரியவில்லை, இங்கு செலவு அதிகம்தான் ஆனா அதேநேரம், பிளேனில் கொண்டு வருவதற்கான செலவும் அதிகம்தானே...

      //நான் நீண்ட பயணம் மேற்கொண்டேன். உணவு தண்ணீர் தவிர்க்க முடியாத நிலை///
      இது உண்மைதான், சாப்பிடாமல் தண்ணி குடிக்காமல் போய்ச் சேருவது என்பது கடினம்தானே..

      //ஊசி இணைப்பு மாமியார் மருமகள் சண்டையில் பிரமாதம்.
      ///
      ஹா ஹா ஹா கரெக்ட்டாக் கண்டு பிடிச்சிட்டீங்க:).. நீங்க சொன்னபின்பு நினைச்சுப் பார்க்க சிரிப்பு வருது ...

      கீசாக்கா வருவா.. என்ன சொல்லப்போறா எனப் பார்ப்போம்..

      மிக்க நன்றிகள்.

      Delete
  4. அ முத்துலிங்கம் ஐயா எழுதிய சிறுகதை எலுமிச்சை சுட்டி தந்திருந்தேன். படிக்கவில்லை என்று தோன்றுகிறது. படித்து திருமப பதிலும் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உடனேயே கதை படித்துவிட்டேன், பதில் எழுதத்தான் நேரம் போதாமல் போய், இப்போ எழுதியும் விட்டேன்.. நன்றி.

      Delete
  5. கடைசிப் பொன்மொழியை பசங்களுக்கு சின்ன வயசாக இருக்கும்போதே அடிக்கடி சொல்லுவேன். Never fight in a loosing battle. தோல்வி நிச்சயம் என்றால் சண்டை போடுவதை விட, எனெர்ஜியை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இந்த அறிவுரை ஆபீஸ்சம்பந்தமாக, நான் சொல்லுவேன்.அப்பா, அம்மா கிட்ட எதுனாரும் கேட்கலாம். நிச்சயம் தரமாட்டாங்க என்ற விஷயத்துக்கு வீண் பிடிவாதம் பிடித்து எனெர்ஜியை வேஸ்ட் பண்ணக்கூடாது என்று சொல்லுவேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      //தோல்வி நிச்சயம் என்றால் சண்டை போடுவதை விட, எனெர்ஜியை சேமித்து வைத்துக்கொள்ளலாம்//
      100 வீதம் உண்மைதான் ஆனா பலசமயம் தோற்கவே மாட்டோம் என நினைச்செல்லோ சண்டைபோட்டுத் தோற்றுப் போய் விடுகிறோம் ஹா ஹா ஹா:)..

      இந்தக் குணம் என்னிலும் இருக்கு நெ.தமிழன்.. அதாவது ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காது எனத் தெரிஞ்சால் கேட்க மாட்டேன், அதேபோல ஒருவரிடமிருந்து இதுக்குப் பதில் கிடைக்காது என நிட்சயமாக தெரிஞ்சால் கேட்கமாட்டேன்ன் ஏனெனில் அந்த ஏமாற்றத்தைத் தாங்கும் சக்தி இன்னும் வளரவில்லை என நினைக்கிறேன்:)..

      நீங்க கரெக்ட்டாத்தான் சொல்லிக் குடுத்து வளர்க்கிறீங்க பிள்ளைகளை.

      Delete
  6. செத்தபிறகு செய்வது எல்லாம் தங்கள் பந்தாவைக் காண்பிக்கத்தான் என்பது என் எண்ணமும். இருந்தாலும் இறந்த ஆன்மா உறவினர்கள் தன் சடலத்தைக் கண்டு அழுவதை எண்ணித் திருப்தி அடையும் எனப் படித்திருக்கிறேன். அதுக்காக உயிரோடு இருக்கும்போது ஒன்றும் செய்யாமல், இறந்தபின் அதிர்வேட்டு, மாலை மரியாதை, பல்வேறு படையல்களில் அர்த்தமே இல்லை

    ReplyDelete
    Replies
    1. //இருந்தாலும் இறந்த ஆன்மா உறவினர்கள் தன் சடலத்தைக் கண்டு அழுவதை எண்ணித் திருப்தி அடையும் எனப் படித்திருக்கிறேன்//
      இதுபற்றி நானும் பலது அறிஞ்சிருக்கிறேன்ன் ஆனா பெரிசாகப் பேச விருப்பமில்லை..
      இருப்பினும் இதில் நான் அறிந்தது, அந்த ஆத்மா திருப்தி அடையாமல் பரிதவிக்குமாமே.. அதனாலதானாம் ஊரில் எல்லாம் ஒருவர் இறந்திட்டாரெனில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஏனையோரை அதட்டி அழ விடாமல் தடுப்பார்களாம், உடனே அழக்கூடாது அந்த ஆன்மா அமைதியடையட்டும் இல்லை எனில் துடிக்கும் எனச் சொல்லி.... ஆனா இதெல்லாம் எப்படி நம்புவது.. கண்ணை மூடினால் என்ன தெரியுமோ?... சமய சம்பிரதாயங்களைக் காரணம் காட்டி, நம்மை மிரட்டி வைத்திருக்கிறார்களோ எனத்தான் எண்ணத் தோணும்...

      கண்ணதாசன் அங்கிளின் கவிதைதான் நினைவுக்கு வருது..

      இறப்பின் பின் எப்படி இருக்குமெனில்..
      இறந்துபார் தெரியும்...

      என.. ஹா ஹா ஹா.

      அது நெல்லைத்தமிழன் இப்ப இப்ப வெளிநாடுகளில் ஓவராகிக்கொண்டு போகுது, இங்கும் பெற்றோரை சீனியர் ஹோமில் விட்டு விடுகிறார்கள் பலர்.. பின்னர் செத்தவீடு, 31 என.. தடல் புடலாக, நிறையப்பேர் ஸ்பீச் எல்லாம் கொடுத்து நடக்கும்.. அதை எல்லாம் மனம் ஏற்றுக் கொள்ளுதே இல்லை... இங்கு உங்களுக்கு ஒரு உண்மைக் கதை சொல்லட்டோ.. கேட்டு விட்டு.., ஏன் சொன்னீங்க எனப் பேசக்கூடாது.. பலதையும் பத்தையும் அறிஞ்சிருப்பதில் தப்பில்லைத்தானே...

      Delete
    2. இலங்கைத்தமிழர்கள்தான், வெளிநாட்டில்தான் நடந்தது இச் சம்பவம்.

      மகள் டொக்டர், தாயையும் தந்தையையும் ஒரு வீடு வாங்கி அதில் தனியே இருக்க வைத்து விட்டு, இவ குடும்பத்தோடு பங்களா போல பெரிய வீட்டில் இருந்தவவாம்.

      பின்பு தாய் இறந்துவிட, தந்தையை அழைத்துப் போய் சீனிய ஹோமில் விட்டிருக்கிறா.

      ஒருநாள் பனிக்காலமாம் நல்ல குளிர், காத்து மழை நேரமாம்.. மாலை மங்கி விட்ட நேரமாம்..

      இவ வேலை முடித்து காரிலே வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறா, முன்னலே ஒரு கார் போய்க் கொண்டிருந்திருக்கிறது... அக்கார் ஒருவரை அடித்துவிட்டதாம், இறந்துவிட்டார் அதிலேயே..., கொஞ்சம் லைட் குறைவான ஏரியாவாக இருந்திருக்கும்போல,,

      இவ காரை ஸ்லோப் பண்ணிப்போட்டு, அப்படியே வீட்டுக்கு வந்துவிட்டா.. யாரோ எவரோ பொலீஸ் கேஸாகித்தானே தெரியவரும்..

      பின்னர் நியூஸ் வருகிறதாம் அடிபட்டது இவவின் தந்தை என.. இரவுச் சாப்பாடு வாங்குவதற்காக ரோட்டைக் குரொஸ் பண்ணிய வேளை அடிபட்டு விட்டாராம்..

      அப்போ இவவுக்கு எப்படி இருந்திருக்கும்.. இதுவும் கடவுளின் விளையாட்டில் ஒன்றுபோலத்தானே தெரியுது..:(. கடவுளும் பல சமயங்களில் ஓவராகச் சோதிப்பார் என்றே நான் நினைப்பதுண்டு...

      Delete
  7. பொதுவா நமக்கு நம் சம்பந்தமில்லாதவர்களுக்கு காயம் பட்டாலோ விபத்து நேரிட்டாலோ ரொம்பவும் மனசு பாதிப்படையாததைப்போல மருத்துவர்களும் ப்ரொஃபஷனல் பயிற்சியால் உணர்ச்சிவசப்பட மாட்டாங்க. இல்லைனா நோயாளி, "ஐயோ டாக்டர் எனக்கு நெஞ்சு வலிக்கு" என்று கதறினால், டாக்டரும், "அப்படியா ஐயோ" என்று தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்துவிடுவாரே

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான், மனமும் அதற்கேற்ப பண்பட்டிருக்க வேண்டும். என்னைக் கொண்டுபோய் விட்டால், நோயாளிக்கு மேலால கூக்குரல் போட்டுக் கத்தி விடுவேன் ஹா ஹா ஹா...

      Delete
  8. ஆண் அப்பாவையும் மாமனாரையும் ஒரேமாதிர எண்ணுவான். இருவரும் அவன்மீது அன்பு செலுத்துவதால். மனைவிக்கு மாமியார் எப்போதும் அதிகாரம் செலுத்தி, எங்க கணவனிடம் கோள் சொல்லி வாழ்க்கையில் சிக்கல் கொண்டுவந்திடுவாங்களோ என்ற டென்ஷனில் வைத்திருப்பதால், அவள் மாமியாரிடம் குறைந்த அன்பு கொண்டிருப்பாள். அவளுக்கு, சகோதர்ர், தன் பெற்றோர்கள்மீதுதான் அதிகப் பிரியம் (காரணம்ஒண்ணுமில்லை, யார் தனக்கு நன்மை செய்பவர்கள் என்ற கணக்குதான்)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கரெக்ட்டாச் சொன்னீங்க.

      இதில இன்னொன்றும் இருக்கு, பொதுவா பெண்களுக்கு, தன் கணவர் தனக்குத்தான் முதலிடம் தரோணும், தன்னிடம் தான் எல்லோரையும் விட அதிக பாசம் காட்டோணும் எனும் எண்ணம் இருக்கும்... அந்த எண்ணத்தை அறிஞ்சு கணவன் கரெக்ட்டா நடந்தால், கணவனுக்காகவே மாமியை நன்கு கவனிப்பார்கள்..

      கணவன் அப்படி நடக்காமல், எனக்கு அம்மாதான் முதலாவது.. எனச் சொல்லிப்போட்டால், கோபத்தை கணவரிடம் காட்டமுடியாமல் மாமியார் மீது ஏறிப் பாய்வார்கள் ஹா ஹா ஹா.

      Delete
    2. ஹலோவ் நாடு விட்டு ஊரைவிட்டு கோழி நாய் பூனையை மாட்டை விட்டு போகிறபோக்கில் மனச விட்டு :)கணவனே எல்லாம்னு எத்தனை பேர் ஓடி வந்திருப்பாங்க ..அப்போ அவங்களுக்கு கணவர்தான் முதலிடம் தரணும்னு எதிர் பார்ப்பாங்க .கணவர் முதலிடம் மனைவிக்கு கொடுத்திட்டா பிரச்சினையே இல்லை குடும்பத்தில் ..

      Delete
    3. //போகிற போக்கில். மனசை விட்டு//- அடப்பாவீ.... மனசை எங்கோ விட்டுவிட்டு உடம்பு மட்டும்தான் கணவனோட வருதா? எல்லாப் பெண்களுமா? ஐயோ.... அப்ப எல்லாம் நடிப்புதானா? உங்களை நம்பி அம்மா/அப்பாவைக்கூட விட்டுவிட்டு நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டறோமே..... இப்பத்தானே உண்மை வருது..

      Delete
    4. //கணவன் அப்படி நடக்காமல்// - இதை நான் நிறைய அவதானித்திருக்கிறேன். கணவன் கடுமையாத் திட்டினாலும் ரொம்ப நேரம் மனைவி மனசுல வச்சுக்க மாட்டாங்க. ஆனால் கணவரின் உறவுகள் தவறா என்ன சொல்லியிருந்தாலும் ஆயுசுக்கும் அதை ஞாபகம் வச்சுப்பாங்க. நமக்கு நெருக்கமானவங்க என்று மனசு ஏற்றுக்கொள்ளும் ஒருவர் செய்யும் தவறை மனது பெரிதுபடுத்துவதில்லை. இது மனதின் குற்றம்தான். அதனால்தான் "யாவரும் கேளிர்" என்று எண்ணச் சொல்கிறார்கள் (எனக்கு அப்படி இருக்க முடியாது ஹாஹா)

      Delete
    5. அவ்வ்வ்வ் :) எதோ ஒரு எதுகை மோனைக்கு ஒரு பாட்டை மென்சன் பண்ணிட்டேன்ப்பா :) பாவப்பட்ட அப்பாவி பிள்ளையின் மனைவியை மன்னிச்சி விட்ருங்க :) ..

      Delete
    6. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRTpPkOR5TwpGoVNo-9sccfUw0XfHZNXn2PJhVjf9vckPbKFb7a[/im]

      இனிமே பாட்டே கோட் பண்ண மாட்டேன் அய்யங்

      Delete
    7. ///e

      நெல்லைத் தமிழன்Thursday, October 25, 2018 1:07:00 pm
      //போகிற போக்கில். மனசை விட்டு//- அடப்பாவீ.... மனசை எங்கோ விட்டுவிட்டு உடம்பு மட்டும்தான் கணவனோட வருதா? எல்லாப் பெண்களுமா? ஐயோ.... அப்ப எல்லாம் நடிப்புதானா? ///

      ஹா ஹா ஹா அஞ்சு யூப்பர் மாட்டீஈஈஈஈஈஈஈஈ:))...

      வெளிநாட்டில் வாழும் ஆண்களும்.. அப்படி அனைத்தையும் விட்டு விட்டுத்தானே வந்திருக்கிறார்கள்:))

      Delete
  9. //ஒருத்தர் மீது கோபம்...//- அப்படியில்லை. வேண்டாதவர்கள் செய்த கெடுதல்களை மனம் என்றைக்கும் மறக்காது. அப்பா அம்மா கொடுத்த அடிகளை குழந்தைகள் எப்போதும் மறந்துவிடும் (பெரியவனா ஆனபின்பும், நாம் வம்பு செய்திருப்போம் என்று புரிந்துகொள்ளும்). வேண்டாதவர் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அந்த ஊசி இணைப்பு சில வேளைகளில் உண்மை, ஆனா கொமெடிபோல இருந்தமையால இணைச்சேன்.

      நமக்கு நெருக்கமான ஒருவர் ஒரு தவறு செய்தால், மனம் மேலோட்டமாக விட்டுக் கொடுக்கும்.. 2ம் தடவை செய்யும்போது கொஞ்சம் யோசிச்சு ஓகே ஏதோ மாறி நடந்திட்டுதுபோல என நினைக்கத்தோணும்.. ஆனா 3ம் தடவையாகவும் நடக்கும்போது.. அப்போதான் மனம் ஓவர்டைம் பண்ணி அனலைஸ் பண்ண வெளிக்கிட்டு பழசை எல்லாம் ஜாட்சிக்கு அழைச்சு வந்து அனைத்தையும் போட்டுக் குழப்பி சிந்திக்கத் தொடங்கும் ஹா ஹா ஹா...

      Delete
    2. உங்களுக்கே தெரியும்... என் செய்முறைல தவறு இருந்தாலோ இல்லை குழை சாதம் குழையடிக்கற சாதமா இருந்தாலோ நாம் இருவரும் ஒருவரை ஒருவர் ரொம்ப விமர்சிக்கறதில்லை. ஆனால் டேவடை ஜமையலறைக் காரங்க சின்ன மிஸ்டேக் விட்டாலும் நாம இரண்டுபேரும் அவரை உண்டு இல்லைனு பண்ணிடறோம் இல்லையா?

      உதாரணம் சரிதானே அதிரா?

      Delete
    3. ///உதாரணம் சரிதானே அதிரா?//

      ஹையோ இதுக்கு ஓகே சரிதான் எனச் சொல்லோணுமோ? இல்லை தவறு எனச் சொல்லோணுமோ?:)) எனக்குப் புரியவே இல்லை:) பதில் சொல்ல எனக்கு ரைம் வேணும் யுவர் ஆனர்ர்:)) ஹா ஹா ஹா சந்தடி சாக்கில் அதிராவை வஞ்சகப்புகழ்ச்சி செய்வது போலவும் இருக்கே வைரவா ஹா ஹா ஹா:)..

      //ஆனால் டேவடை ஜமையலறைக் காரங்க சின்ன மிஸ்டேக் விட்டாலும் நாம இரண்டுபேரும் அவரை உண்டு இல்லைனு பண்ணிடறோம் இல்லையா?////

      ஹா ஹா ஹா எங்களாலதானே இன்னமும் டேவடைக்:) க் கிச்சின் ஹா ஹா ஹா மூடியே இருக்கு:)) ஹா ஹா ஹா

      Delete
  10. கதை ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது போல... சாவுகளில் சாதாரணமாக ஒப்பாரி வைக்க என்றே ஆள் வைப்பார்கள். அதற்கு காரணம் தாள முடியாத மனஇறுக்கத்தில் சிலபேர் அழ மாட்டார்கள். அது அவர்கள் மனநிலையை பாதிக்கும். அதை ரிலீஸ் செய்யவேண்டி இப்படி ஏற்பாடு செய்வதுண்டு. வீட்டில் சில பெரிய தலைகள் இப்படி அழுகையை முன்னேற்பாடுத்திக் கொடுப்பதுண்டு. எல்லோருக்கும் அந்த இறுக்கம் இல்லாவிட்டாலும், நெருக்கமான அந்த உறவு சூழ்நிலையிலிருந்து அழுது விட்டால் வெளிவந்துவிட முடியும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      //சாவுகளில் சாதாரணமாக ஒப்பாரி வைக்க என்றே ஆள் வைப்பார்கள்//

      உண்மைதான், நானும் கேள்விப்பட்டேன், அந்தக் காலத்தில் ஊரில் அப்படி இருந்ததாம்.. அது உண்மைதான் அழுது சத்தம்போட்டுக் கத்துவதாலதான் நம்மவர்களுக்கு தாங்கும் சக்தி வந்து விடுகிறது.

      வெள்ளையர்கள் அப்படி அழுவதில்லை, ரிஷூவை வைத்துக் கண்ணைத்துடைத்தபடி விம்முவார்கள்.. அதனாலதான் இவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக உடனேயே ஹொஸ்பிட்டலுக்கு ஓடுவார்கள்.. அத்தோடு நமக்கு ஒரு மாதம் வரையாவது ஆட்கள் வந்து தங்குவார்கள், இவர்களுக்கு அப்படி இல்லையே...

      Delete
    2. உங்களுக்கு ஒன்று சொல்றேன். சாவு வீட்டுக்கு அழுவதற்கென ஒரு குழு மதுரைப் பக்கம் உண்டு (பல குழுக்கள்). காசு கொடுத்து இவங்களை புக் பண்ணினா அவங்க வந்து மைக் போட்டு அழுவாங்க. இது மதுரைல ரொம்ப சாதாரணம்.

      இந்திரா காந்தி இறந்தபோது காங்கிரஸ் காரங்க மதுரைல இந்த மாதிரி பல இடங்கள்ல ஏற்பாடு பண்ணியருந்தாங்க.

      Delete
    3. ஓ இப்பவும் இருக்கோ? இல்லாமல் போய் விட்டது என நினைச்சேன்.

      Delete
  11. பதிவின் கனத்தால் பாடல் எதுவும் ஷேர் செய்யவில்லையே? இந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமாகவே பாடல்கள் கிடைத்திருக்குமே...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதை ஏன் கேட்கிறீங்க ஸ்ரீராம்,.. நிறையப் பாடல் மனதில வந்துது ஆனா எல்லாம் சோகமயம் என்பதால விட்டுப்போட்டு, “இறந்தவரைச் சுமந்தவரும் இறந்திட்டார்.. பாட்டை அவசரமா எடுத்து வந்து இங்கு போட்டும் விட்டேன், ஆனா அப்பாடலில் முதலிரண்டு வரிகள் மட்டுமே எனக்குத் தெரியும்... மிகுதியையும் கேட்கலாமே என முழுசாக் கேட்டால்.. ஒரே சோகம்.. எனக்கே கஸ்டமாப் போச்சு அதனால அது வேண்டாம் என பறந்தடிச்சு நீக்கிப் போட்டு படம் போட்டு விட்டேன் ஹா ஹா ஹா..

      Delete
  12. செய்யவில்லையோ என்று டைப் செய்தால் செய்யவில்லையே என்று வருகிறது!

    மாற்ற முடியாத இடங்களில் குரு, தலைமை அதிகாரி, நெருங்கிய நட்பு போன்றவர்களும் வருவார்கள். விவாதத்தில் ஜெயித்தாலும் உறவில், நட்பில் தோற்றுவிடும் அபாயம்!

    ReplyDelete
    Replies
    1. //செய்யவில்லையோ என்று டைப் செய்தால் செய்யவில்லையே என்று வருகிறது! //
      மொபைல் கொமெண்ட்டோ? ஓட்டோக் கரெக்‌ஷனை ஓஃப் பண்ணி விடுங்கோவன். கொம்பியூட்டரில் அந்த வசதி இல்லைத்தானே..

      //விவாதத்தில் ஜெயித்தாலும் உறவில், நட்பில் தோற்றுவிடும் அபாயம்!//
      உண்மைதான், நம் வீட்டுக்குள் எனில் தோற்றாலும் கவலை இருக்காது..

      Delete
  13. இது மாதிரி சந்தர்ப்பங்களில் சிலபேருக்கு அதிகம் பசியுணர்வு ஏற்படும் என்றும் சொல்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சாப்பிடுவது தப்பே இல்லை ஸ்ரீராம், சாப்பிடாமல் இருந்துதான் துக்கத்தைக் காட்டோணுமா என்ன? அது சிலருக்கு பசிக்கும் சிலருக்கு பசிக்கவே பசிக்காது.. பொதுவ டென்சன், டிப்பிரெஷன் எனில் ஓவரா பசிக்கும்தான்.. அதை நான் பேச வரவில்லை...

      எனக்கு கெட்ட கோபம் வந்ததுக்கு காரணம்.. ////ஓரளவு பெரிய ஊர் ஒன்றில் நல்ல ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு முடிந்தது.///

      இதுதான் ஹா ஹா ஹா... அஞ்சு கரெக்ட்டாக் கண்டுபிடிச்சுக் கீழே சொல்லிட்டா:)..

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  14. அதிரா.... சாவு வீட்டிற்குச் செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் சம்பந்தமில்லை. யோசித்துப் பாருங்கள்.. வருபவர்களுக்கு உணவு காரியம் முடிந்தபின்புதான் உண்டு. பசங்க சத்தம்போட்டு பசிக்குது என்றால்? இல்லை நமக்கே பசி அதிகமாகி, இலையைப் போட்ட உடனேயே முதல் ஆளாக ஓடினால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? துக்கம் வேறு, இயற்கை நியதிகள் வேறு. அதற்காக அவசியம் இல்லாத ருசிக்காக உணவு வேட்டை நடத்துவது தவறு.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதுதான் என் கருத்தும் நெ.தமிழன்... எப்பவும் சாப்பிடாமலும் எப்பவும் அழுது கொண்டிருப்பதில்லை ஆஅரும்.. அது அப்பப்ப வந்து போகும் சம்பவத்தின்போது....

      //அதற்காக அவசியம் இல்லாத ருசிக்காக உணவு வேட்டை நடத்துவது தவறு.///

      இதைத்தான் சொல்ல வந்தேன், ஹோட்டல் தேடிப்போய்ச் சாப்பிட்டார்கள் எனக் கதையில வந்ததை என்னால தாங்க முடியவில்லை.. ஒரு பன் அல்லது சான்விச் ஒரு ரோட்டோரக் கடையில வாங்கிச் சாப்பிட்டுப் போனார்கள் என எழுதியிருந்தால்... என் மனம் கொதிச்சிருக்காதெல்லோ ஹா ஹா ஹா:))

      Delete
    2. இனிமே ஸ்ரீராம் அந்த //மூக்கு பிடிக்க // என்ற வார்த்தையை பார்த்தாலே ஓடுவார் :) இவ்ளோ ஏன் மூக்கை பத்தி கூட யோசிக்க மாட்டார் ஹையோ ஹையோ

      Delete
    3. ஹலோவ் மியாவ் எங்கூர் ரோட்டோர கடைல பேக்கரி ஐட்டம்ஸ்லாம் இருக்காது :)

      Delete
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ரோட்டோரக் கடைகளில்தான் விதம் விதமாகச் செய்து விற்கிறார்கள் உணவுகள்... நான் யூ ரியூப்பில பார்த்தே வாய் ஊறிக்கொண்டிருக்கிறென்ன். பஜ்ஜி.. வடை என விதம் விதமாக:).

      Delete
  15. இந்தப்பதிவினை இன்று நான் தற்செயலாக படிக்க நேர்ந்தது. அதிரா நேரில் அமர்ந்து, சீரியஸ் ஆன மேட்டர்களைப்பற்றி, அழகாக ஜாலியாகப் பேசுவது போல உணர்ந்து மகிழ்ந்தேன். அதிராவின் எழுத்துக்களில் ஓர் நல்ல மெச்சூரிடியையும் உணர முடிந்தது.
    பாராட்டுகள் + நல்வாழ்த்துகள் அதிரா.

    அன்புடன் கோபு அண்ணன்

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ் கோபு அண்ணன் வாங்கோ வாங்கோ..

      //அதிரா நேரில் அமர்ந்து, சீரியஸ் ஆன மேட்டர்களைப்பற்றி, அழகாக ஜாலியாகப் பேசுவது போல உணர்ந்து மகிழ்ந்தேன். ///

      ஹா ஹா ஹா மியாவும் நன்றி.

      //அதிராவின் எழுத்துக்களில் ஓர் நல்ல மெச்சூரிடியையும் உணர முடிந்தது. //

      இப்போ நான் “அஞ்ஞானி” ஆகிட்டேன்:)) வெளியே ஆருக்கும் சொல்லிடாதீங்கோ:) அடிக்க வருவினம்:)).. ஹா ஹா ஹா உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி கோபு அண்ணன்...

      இப்படி ஒரு போஸ்ட் போட்டு அலசுவது எனக்குப் பிடித்தமான ஒன்று, ஸ்ரீராமின் கதை அதை தட்டி எழுப்பி விட்டது... காரணம் இல்லாமல் போஸ்ட் போட்டால்.. இப்போ எதுக்கு இந்தக் கதை எல்லாம் எனக் கேட்டு ஒரு அஞ்ஞானியை அடிக்க வந்திடுவினம்:)) ஹா ஹா ஹா

      Delete
    2. இது என்ன புதுதெக்கினிக்கு அதிரா... கோபு சாருக்கு நீங்கள் "இப்படி என்னைப் பற்றி பாராட்டி எழுதுங்கோ" என்று எழுதியதை அப்படியே வெளியிட்டிருக்கிறாரே...

      பரவாயில்லை.... எப்படியோ தவத்தில் இருப்பவரை எழுப்பிவிட்டீர்களே... பாராட்டுகள்.

      Delete
    3. ///நெல்லைத் தமிழன்Thursday, October 25, 2018 1:24:00 pm
      இது என்ன புதுதெக்கினிக்கு அதிரா... கோபு சாருக்கு நீங்கள் "இப்படி என்னைப் பற்றி பாராட்டி எழுதுங்கோ" என்று எழுதியதை அப்படியே வெளியிட்டிருக்கிறாரே...///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கோபு அண்ணனை எல்லாம் ஆரும் விலை கொடுத்து வாங்க முடியாது:)) அது அவரா விரும்பி வந்தால் மட்டுமே உண்டு..:)..

      ஆனாலும் பாருங்கோ நெ.தமிழன், இப்போ ஒரு தடவைதான் கோபு அண்ணன் வருவாராம்...:) எப்படித்தான் சீண்டினாலும் 2ம் தடவை வருகிறாரில்லைப் பருங்கோ:)) ஹா ஹா ஹா..

      Delete
    4. ஒருவன் அல்லது ஒருத்தி தன்னைத்தானே ’ஞானி’ என்று சொல்லித்திரிந்தால் அவன் அல்லது அவள் ’ஞானி’யே அல்ல.

      [ஓர் பிரபல உபன்யாசகர் சொல்லி அடியேன் கேட்டது]

      உண்மையான ஞானம் என்றால் என்ன?
      உண்மையான ஞானி என்பவர் யார்?

      என்பதைப்பற்றி சொல்லத்தான் நினைக்கிறேன். அவையெல்லாம் மிகப்பெரிய விஷயங்கள். அவற்றைப் பற்றி இங்கு ஓரிரு வரிகளில் பின்னூட்டங்கள் மூலம் சொல்லிவிட இயலாது.

      அதனால் நான் இப்போது இங்கிருந்து எஸ்கேப் ......

      -=-=-=-=-=-=-

      இருப்பினும் மிகச் சுருக்கமாக ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கோ .....
      அது என்ன? தொடரும் >>>>>

      Delete
    5. இந்த சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. நாம் அப்படிச் செய்துகொள்ள வேண்டும்.

      கட்டுப்பாடு, ஒழுங்கு, பரமகருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான்.

      இந்த ஜன்மா முடிகிறபோது, "அப்பாடா பிறவி எடுத்ததன் பலனை அடைந்துவிட்டோம், இனி பயமில்லாமல் போய் சேரலாம்" என்ற உறுதியும், திருப்தியும் பெறுகிற அளவுக்கு நல்ல மாா்க்கத்தில் நாம் செல்ல வேண்டும்.

      காமம் (ஆசை), கோபம், பொறாமை என்பவை இருக்கிற வரைக்கும் உடம்பு (மறுபிறப்பும்) வந்து கொண்டேதான் இருக்கும். ஆகவே உடம்பு கூடாது என்றால் காமம், கோபம், பொறாமை எல்லாம் போக வேண்டும்.

      நாம் பண்ணுகிற பாபம்தான் உடம்புக்கு (பிறப்புக்கு) காரணம். இனிமேல் பாபம் பண்ணாமல் இருந்தால் உடம்பு வராது.

      "பாபம் பண்ணக்கூடாது" என்ற நினைவு தினமும் இருக்கவேண்டும்.

      நம்முடைய கா்மா, ஜன்மா எல்லா வற்றுக்கும் காரணம் மனசின் சேஷ்டைதான்.

      இந்த மனசை வைத்துக்கொண்டு அதனுடைய இச்சைகளைப் பூா்த்திப்பண்ணப் பாடுபடுவதில்தான் பாபங்கள் ஸம்பவிக்கின்றன. ஜன்மாக்கள் ஏற்படுகின்றன.

      மனசை நிறுத்திவிட்டால் கா்மா இல்லை, ஜன்மா இல்லை, மோஷம்தான்.

      "ஒரு ஜன்மாவில் இவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவில் தீா்த்துக் கொள்ளட்டும்" என்கிற மகா கருணையால்தான் ஈசுவரன் மறுபடி ஜன்மா தருகிறாா்.

      ooooooooooooooooooooooooooooooooooooooo

      - இதைச் சொல்லியுள்ளவர், நடமாடும் தெய்வமாக வாழ்ந்த + முக்காலமும் உணர்ந்த ஓர் மஹா ஞானியாகும்.

      oooooooooooooooooooooooooooooooooooooooo

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
    6. அடிக்கடி பதிவிடத் துடிக்கும் பதிவர்களுக்கும்,

      அவற்றை விரும்பியோ விரும்பாமலோ, ’பிராரப்தம்’ (முற்பிறவி வினைப் பயன்) காரணமாக படிக்க ’ப்ராப்தம்’ நேரிடும் வாசகர்களுக்கும்,

      சற்றேனும் ஞானம் என்பதே இல்லாமல், போட்டி பொறாமைகளால் தனது வருகையை கோபத்துடன் பின்னூட்டமாகப் பதியத் துடிக்கும் சில பல பேர்வழிகளுக்கும் ....

      இதுபோன்ற காமத்தினாலும் (அல்ப ஆசைகளினாலும்), கோபம், பொறாமை என்ற இதர காரணிகளாகும் மறுபிறவி உண்டு என்பது நிச்சயமே.

      அதனால் எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கோ ...... அதிரா !

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !!

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
    7. @ கோபு சார் - //உண்மையான ஞானம் என்றால் என்ன? // - உண்மையான ஞானம் என்பது, 'நமக்கு ஒன்றுமே தெரியாது. நம்மால் எதுவும் நடப்பதில்லை. ஆட்டுவிக்கிறவன் எவனோ அவனைச் சரண் புகவேண்டியதுதான்' என்று புரிந்துகொள்வது. இது எப்படி இருக்கு?

      Delete
    8. //"ஒரு ஜன்மாவில் இவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவில் தீா்த்துக் கொள்ளட்டும்" என்கிற மகா கருணையால்தான் // - அவருக்கென்ன... சொல்லிவிட்டுப் போயிட்டார். ஆனால், 'ஏலேய்.. அதுனாலதாண்டா நீ இப்போ இந்த நிலையில பொறந்திருக்க.. இப்பவாவது புத்தி வந்து பொழைச்சுக்கோ. இன்னமும் பாபம் செஞ்சா அடுத்த பிறவி இதைவிட மோசமாயிடும்' என்று புரிந்துகொள்கிற ஞானத்தைத் தராமல், பிறவி மட்டும் கொடுத்தால் போதுமா? அதை 'மஹா கருணை' என்று நினைக்கமுடியுமா?

      Delete
    9. ஆஆஆஆ கோபு அண்ணனை 2ம் தடவையாக வர வச்டிட்டோம்ம்ம் வெற்றி வெற்றீஈஈ... :).. இப்போ என்னால அனைத்துக்கும் பதில் போட முடியல்ல நைட்தான் போடுவேன்...

      ஆனா ஒண்டு மட்டும் புரியுது:).. இந்த சின்ன சுவீட் 16 வயசிலயே அதிரா ஞானியாகிட்டா எண்டு எல்லோருக்கும் பொறாமை ஹா ஹா ஹா என்னைக் கல்லில கட்டி நடுத் தேம்ஸ்ல போட்டாலும் இதை ஜொள்ளுவேன்ன்ன்ன் :).. ஹையோ ஒரு வார்த்தைக்குச் சொன்னா கல்லோட கலைக்கினமே கர்ர்ர்ர்ர்ர்ர்:). மீ ரன்னிங்:)

      Delete
    10. நெ தமிழன் விடாதீங்கோ உப்பூடித்தான் லெவ்ட்டூ ரைட்டூ ஊஊ என புரட்டிப் புரட்டிக் கிளவி ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே.. கேள்வி கேழுங்கோ... மிகுதிக் கேள்விக்கு பின்பு வாறேன்ன்ன்... எனக்கும் நிறைய டவுட்ஸ் இருக்கூ:)...

      Delete
    11. ///வை.கோபாலகிருஷ்ணன்Friday, October 26, 2018 7:12:00 am
      ஒருவன் அல்லது ஒருத்தி தன்னைத்தானே ’ஞானி’ என்று சொல்லித்திரிந்தால் அவன் அல்லது அவள் ’ஞானி’யே அல்ல. //

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கோபு அண்ணன்.. ஞானிகளை ..ன், ...ள் போட்டுப் பேசப்புடாதாம்:)) சாமிக்குக் கோபம் வந்திடுமாம்:)) ஹா ஹா ஹா:).. எதுக்கு இவ்ளோ கோபம் ஞானீஸ் மீது?:)

      //என்பதைப்பற்றி சொல்லத்தான் நினைக்கிறேன். அவையெல்லாம் மிகப்பெரிய விஷயங்கள். அவற்றைப் பற்றி இங்கு ஓரிரு வரிகளில் பின்னூட்டங்கள் மூலம் சொல்லிவிட இயலாது. //

      இது சத்தியமாக உண்மைதான், இனிமேல் காலத்தில் ஆராலும் ஞானி ஆகிடமுடியாது[எக்செப்ட் அதிரா:) ஹையோ கல்லைக்க் கீழ போடுங்கோ:))]..

      இல்ல கோபு அண்ணன் உண்மையில் அதெல்லாம் அக்காலத்தோஒடு முடிந்து போச்ச்சு.. இப்போ கொஞ்சக் காசு கையில வந்தாலே அதை தன் குடும்பத்துகே செலவு செய்யோணும் எனும் மனப்பான்மையே மக்களிடம் இருக்கும்போது எப்படி ஞானி ஆக முடியும்.. ஞானி ஆவதாயின் முதலில் துறவி ஆகோணுமெல்லோ.. யாரால இப்போ துறவி ஆக முடியும்? இன்னும் இன்னும் என்ன என்னென்னெல்லாம் அனுபவிக்கலாம் எனத் தேடித்தேடி அனுபவிக்கவே விரும்புகிறார்கள் மக்கள்.. இதில போய் எப்போ டுறவி:) ஆகி.. எப்போ ஞானி ஆவது.. அந்தக் காலம் எல்லாம் மலையேறி விட்டது:(.

      //இருப்பினும் மிகச் சுருக்கமாக ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கோ .....
      அது என்ன? தொடரும் >>>>>//

      அதானே அது என்ன?:).

      Delete
    12. @கோபு அண்ணன்..
      ///காமம் (ஆசை), கோபம், பொறாமை என்பவை இருக்கிற வரைக்கும் உடம்பு (மறுபிறப்பும்) வந்து கொண்டேதான் இருக்கும். ஆகவே உடம்பு கூடாது என்றால் காமம், கோபம், பொறாமை எல்லாம் போக வேண்டும்.//

      கோபு அண்ணன் என்னைக் கோபிச்சிடாதீங்க.. இப்படித்தான் நிறையப் பல விசயங்கள் நானும் பல பக்கத்தாலும் அறிகிறேன்.. ஆனா எனக்கென்னமோ இதில் நம்பிக்கை இல்லை, ஏன் தெரியுமோ.. மக்களை நல்வழிப்படுத்தவே மதங்கள் தோன்றின என 9ம் வகுப்பு சமயப் புத்தகத்தில படிச்சேன்.. அப்போதிருந்து இப்படியானவற்றைக் கேள்விப்பட்டாலே என் மனதில் தோன்றும் எண்ணம்... மக்கள் தீய பழக்கங்கள் பழகிடாமல், தீய வழியில் போயிடாமல் பாதுகாக்கவே இப்படி எல்லாம் சொல்லி மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்பதே...

      இதை எப்படி நிரூபிக்க முடியும்?.. போன ஜென்பம் நமக்கு தெரியுமோ? அப்போ மறு ஜென்மம் என ஒன்று இருப்பதை எப்படி நம்புவது?

      ஆனா அதுக்காக நான் ஒன்றும் பயப்பிடாமல் இல்லை, யாரும் எதுவும் சொல்லாமல் இருக்கும்வரை பயமில்லை, சொல்லி விட்டால் பயம் தானாக வந்திடுது.. கடவுளை நம்புறேன் கும்ம்பிடுறேன்.. மனதுக்கு ஆறுதலாக இருக்கு.. ஆனா இப்படியானவற்றை என் மனம் ஏற்குதில்லை.. மறு ஜென்மம் பற்றிப் பேசுவோரோடு நான் நிறைய சண்டை போட்டிருக்கிறேன்.. சரியான பதில் இன்னமும் கிடைக்குதில்லை..

      என்னைப் பொறுத்து கண்ணை மூடிக்கொண்டால்.. அதன் பின் நமக்கு என்ன நடக்குமோ? யாரறிவர்?.. ஆனாலும் அந்நியன் படத்தில சொன்னதுபோல எல்லாம் வெருட்டுவதால நம்பிக்கை இல்லை எனினும்.. பயத்தில நாம் எல்லோரும் ஒழுங்காக இருக்கிறோம் .. இருக்க முயற்சிக்கிறோம்..என்பதுதான் உண்மை என்பேன்:)... ஹா ஹா ஹா.

      இன்னொன்று... “ஆசை” யும் இல்லாட்டில்தான் அடுத்த ஜென்மம் இல்லை எனில்.. புளொக் எழுதும் எல்லோருக்குமே அடுத்த ஜென்மம் நிட்சயம் உண்டூஊஊஊஊஊ ஹா ஹா ஹா:)).. எல்லோரும் இந்த ஜென்மப் பெயரை இப்பவே கையில பச்சை குத்திடுங்கோ:))

      Delete
    13. ///"பாபம் பண்ணக்கூடாது" என்ற நினைவு தினமும் இருக்கவேண்டும்.//

      கோபு அண்ணன் இது உண்மைதான், அடுத்த ஜென்மம் இருக்கோ இல்லையோ, நாம் பாபம் செய்தால் கொடுமை செய்தால் இந்த ஜென்மம் முடிவதுக்குள்ளும் காட்டிவிடலாம் எனவும் சொல்கிறார்கள் எல்லோ.. ஆனா இந்த பாவம் கொடுமை என்பது தீய செயல்தானே? அப்போ நாம் இதைச் செய்யக் கூடாதுதானே?

      .. இப்போ எங்களால சூஸ், செருப்பு இல்லாமல் நடக்க முடியுதில்லை... ஆனா சூஸ் .செருப்பு போட்டு நடக்கும்போது நம்மை அறியாமல் நிலத்தில் இருக்கும் எத்தனையோ உயிரினங்களைக் கொல்லுவோம் தானே? அதேபோல வாகனத்தில் போகிறோம்.. ரோட்டில் கண்ணுக்கு தெரியாத குட்டிப் பூச்சிகள்.. புழுக்கள்.. எறும்புகள் நிட்சயம் சாகும் தானே? அப்போ இதெல்லாம் பாவம் தானே? தெரியாமல் என்றாலும்.. நம் கிட்னிக்குத் தெரியுதுதானே நிலத்திலேலே இவை எல்லாம் ஊரும் என.. அப்போ தெரிந்து கொண்டுதானே பாவம் செய்கிறோம்? இந்தப் பாவம் எல்லாம் கணக்கில சேராதோ?...

      உயிரைக் கொல்லாமல், சைவம் உண்டாலும்.. அதுவும் ஒரு உயிர்தானே? தாவரத்துக்கும் வளர்ச்சி உண்டுதானெ?.. அத்தோடு இப்போதெல்லாம் எவ்ளோ பூச்சி மருந்தடிச்சு பூச்சிகளைக் கொன்றுதானே நமக்கு மரக்கறி கிடைக்குது.. இவை எமக்கு தெரியாத விசயமில்லையே.. அப்போ இந்தப் பாவம் எல்லாம் தெரிஞ்சுதானே செய்கிறோம்.. நுளம்புக்கு மருந்து வாங்கி வச்ச்சுக் கொல்கிறோம்.. கிவை எல்லாம் தெரிஞ்சுதானே பாவம் செய்கிறோம்ம்.. ஆனா வேறு வழியில்லாமல்தான் செய்கிறோம்ம்.. அப்போ பாவம் செய்வதை நம்மால் கொன்றோல் பண்ண முடிகிறதோ?

      அக்காலத்திலே வெறும் காலுடன் நடந்தார்கள் பலகாலம் பட்டினி கிடந்தார்கள்.. பழங்களை மட்டுமே உண்டார்கள்.... வாகனத்தில் போவதில்லை. அவர்கள்தானே மகான்கள் ஞானிகள் ஆனார்கள்.. நான் பேசுவது முட்டாள்தனமான கேள்விகளாகக்கூட இருக்கலாம்.. ஆனா எனக்குள் இப்படி நிறையக் கேள்விகள் இருக்கு.. நமக்கு ஒன்றில் நம்பிக்கை வரவேண்டுமெனில்.. நம் வினாக்களுக்கு நம் மனம் ஏற்கும்படி பதில்கள் கிடைக்க வேண்டும்தானே.. அப்படிக் கிடைக்குதில்லையே...

      Delete
  16. ஞானி அதிரா என்ற பட்டம் பொருத்தமாக உள்ளது. உங்க எண்ணங்கள் சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆ நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கெள அண்ணனும் கால் வச்சிருக்கிறார் அஞ்ஞானப் போஸ்ட் என்றதும்.... வாங்கோ வாங்கோ... நான் அஞ்ஞானி ஆகி:)), போட்ட முதல் போஸ்ட்:))

      //ஞானி அதிரா என்ற பட்டம் பொருத்தமாக உள்ளது. உங்க எண்ணங்கள் சரிதான்.//

      மிக்க நன்றி மிக்க நன்றி.. இப்போ மீ அஞ்ஞானி ஆக்கும்:) ஹையோ இது உங்களுக்குள் இருக்கட்டும்:))

      Delete
  17. ஹலோ அஜ்ஞானி இப்போதான் போஸ்ட் கண்ணுக்கு பட்டது .இருங்க வரேன் .

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ.. என்னடா விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே இன்னும் காணல்லியே என ஓசிச்சேன்:)) வந்திட்டீங்க:)..

      //அஜ்ஞானி///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) டமில் டமில்.. டமில்ல எழுத்துப் பிழை விட்டால் மீக்குப் பிடிக்காது:) என் பட்டம் தந்த குருவும் திட்டப் போறாரே இதைப் பார்த்து:)) ஹா ஹா ஹா..

      Delete
  18. முதல் ஊசி பிடிக்கலை
    ஒருத்தர் மேலே கோபம்னா அந்த ஒருத்தர் நெருங்கினவரா இருக்கும்பட்சத்தில் கோபம் பழசை கிளறி கொடுத்தா அது கேவலமான குணமுள்ள கோபம் .அப்படிப்பட்ட குணமுள்ளவர்களை நெருங்க விட மாட்டேன் தவறி நெருங்கிட்டா மெதுவா விலகிடுவேன் .
    ஆனா முதல் ஊசிக்கு பொருத்தமா ரெண்டாவது ஊசி இருக்கு சூப்பர் :)
    சிலர் குணமே இப்டித்தான்னு விட்டு போறதே மேல் ..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா முதலாவது நகைச்சுவைக்காக எனத்தான் போட்டேன்.. சிலசமயம் உண்மையும் இருக்கலாம்..

      //சிலர் குணமே இப்டித்தான்னு விட்டு போறதே மேல் ..//

      அது உண்மைதான் அஞ்சு, பல விசயங்களில் பாராமுகமாக இருப்பதே மேல் எனத்தான் எனக்கும் படும்.

      Delete
    2. [im]https://steemitimages.com/DQmRMFJuJPMtwrBivy58GPmk631KDePN8teZSMfFeu8Lv36/sp-024976800s1475674154.jpg[/im]

      இந்த படத்தை பாருங்க நாம் எப்படி பார்க்கிறோமோ அப்படிதான் தெரியும் அதுக்காக நாம் பார்த்ததுதான் சரினு அடம் பிடிச்சா அது அறியாமை .அடுத்தவர் இடத்தில இருந்தும் பார்க்கணும்னு யாரையோ எங்கியோ சொன்ன நினைவு :)
      சரி உங்க மாமியாரை மருமகள் மேட்டருக்கு இன்னும் நிறைய விஷயங்களுடன் வரேன் கொஞ்ச நேரத்தில்

      Delete
    3. ///சரி உங்க மாமியாரை மருமகள் மேட்டருக்கு இன்னும் நிறைய விஷயங்களுடன் வரேன் கொஞ்ச நேரத்தில்///

      ஹா ஹா ஹா அல்லோ மிஸ்டர்.. நீங்க இப்போ எந்தக் கட்சியில பேசப்போறீங்க? மாமியாராகவோ?:)).. நான் எப்பவும் மருமகள்தான்:)) பிக்கோஸ் மீக்கு சுவீட் 16 எல்லோ நடக்குது:)..

      Delete
  19. //இது முழுக்க ரெட் லைட்டாக இருந்தது ஒரு வித அழகைக் கொடுத்துது, ஆனா படத்தில எல்லாம் மஞ்சளாகத் தெரியுது கர்ர்ர்ர்ர்ர்:)//
    பார்த்திங்களா நேரில் பார்த்த ஒன்றே படத்தில் வேறயா மாற்றி காட்டுது இதெல்லாம் புரியாம என்ன அஞ்ஞ்ஆ னீ :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அனுபவப்பட்டபின்புதானே குழந்தாய் அஞ்ஞானமே புரியுது:)).

      //அஞ்ஞ்ஆ னீ :)///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் குரு:) ரெண்டாம் தடவையாக கோச்சுக்கப்போறாரே:) ஹா ஹா ஹா:)..

      Delete
  20. ஹலோ எப்போலருந்து இது :) ஸ்ரீராம் போஸ்டுக்கு எதிர்பதிவா :))))) ஹாஹ்ஹா ஸ்டார்ட் தி மூசிக் இப்படித்தான் இருக்கணும் .
    ஆனால் இது ஒரு கதை எல்லாத்தையும் ஆராய்ச்சி செய்யப்போனா என்னாறது அஞ்சானி ..ஹையோ எனக்காரவது எப்படி அஞ்சானி எழுதறதுனு சொல்லித்தாங்களேன்

    ReplyDelete
    Replies
    1. //ஸ்ரீராம் போஸ்டுக்கு எதிர்பதிவா :))//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எதையாவது சொல்லிக் கோர்த்து விடுவதே வேலையாப்போச்சு:)) இப்போ ஸ்ரீராமின் கிட்னி ஓவர்டைம் செய்து அதிரா முன்பும் எதிர்ப்போஸ்ட் ஏதும் போட்டாவா என ஓசிக்காது?:) ஹா ஹா ஹா:).. நானே எடுத்து எடுத்துக் குடுக்கிறேனோ:))..

      ச்சும்மா எல்லாத்துக்கும் தலை ஆட்டாமல் இடைக்கிடை இப்படி அலசி அடிச்சு விளாசிப் பேசுவதிலும் ஒரு சுகம் இருக்கெல்லோ:))... ஹா ஹா ஹா:)..

      //ஹையோ எனக்காரவது எப்படி அஞ்சானி எழுதறதுனு சொல்லித்தாங்களேன்///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்ஞானியே எழுதத் தெரியல்ல:) உங்களை எல்லாம் எப்பூடித்தான் நான் ஞானி ஆக்கப்போறேனோ கடவுளே அந்தப் பரம்பொருளுக்கே வெளிச்சம்:))

      Delete
  21. /இது அப்படிப்பட்ட பயணம் அல்ல, உங்களுக்கு அப்பம்மா என்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமோ.. என்னவெல்லாம் ஆசையா வாங்கித் தந்தவர் தெரியுமோ என அக்கதைகளைச் சொல்ல வேண்டும், //
    இதெல்லாம் ஆரம்பத்திலேயே சொல்லி தந்து வளர்க்கிறது நல்லது .அதை அந்த நேரத்தில் சொல்லக்கூடிய மனா நிலையில் அம்மாவை இழந்தவர் இருப்பாரோ என்னவோ ....அந்த மூக்கு முட்ட வசனம் தான் உங்களுக்கு வெறுப்பூட்டியிருக்குன்னு தோணுது ஆனால் அது உண்மைதான் .சிலநேரம் அதிக துக்கத்தில் ரொம்ப பசி எடுக்கும் அதிக டென்சன் மற்றும் கோபமாயிருக்கும்போதும் பசிக்கும் .
    எங்கம்ம்மா மறைந்தப்ப ஏர்போர்ட்டில் 8 மணிநேரம் டிரான்சிட்டில் மாட்டி ஒரு வாய் கூட சாப்பிடாம முழுசா 20 மணிநேரம் இருந்து ஊரில் இறங்கி அழக்கூட திராணியில்லாம இருந்தப்போ ஒரு ஜென்மம் சொல்லுது பாரின்லருந்து வந்துட்டா பாரு கண்ல ஒரு சொட்டு கண்ணீர் இல்லைனு .அந்த ஜென்மத்துக்கு நான் மனசால் அழுதது தெரியுமா இல்லை அதுக்கப்புறம் ஊரில் காரியம் முடிந்து இங்கே வந்து இரண்டு வீக்ஸ் கழிச்சு தொடர்ந்து திடீரென ஆரம்பித்த துக்கம் 3 மணிநேரம் விடாம ஜுரம் வருமளவு அழுதது ?
    அதோடா ட்ராவல் பண்ணும்போது மனசு அசைபோடும் பல நினைவுகளை அப்படித்தான் அந்த கதையில் செஞ்சிருப்பாய்ங்க ..பொதுவா மனுஷங்க மனசில் ஒன்று யோசிச்சிட்டு வெளிக்காட்டாம பேசுவாங்க .

    ReplyDelete
    Replies
    1. //இதெல்லாம் ஆரம்பத்திலேயே சொல்லி தந்து வளர்க்கிறது நல்லது//

      அது உண்மைதான்.. ஆனா அப்போ தவற விட்டிருந்தாலும் இப்பவாவது கொஞ்சம் சொல்லி அடக்கலாமெல்லோ பிள்ளைகளை..

      //.அதை அந்த நேரத்தில் சொல்லக்கூடிய மனா நிலையில் அம்மாவை இழந்தவர் இருப்பாரோ என்னவோ//

      நான் பேசுவது அந்த மனைவிக்குத்தான் .. அத் தந்தையின் தாய் தானே காலமாகியிருக்கிறா.. அப்ப்போ அந்த அம்மாதானே குழந்தைகளுக்குப் புரிய வைக்கோணும்.. இது அம்மாவும் சேர்ந்தெல்லோ கணவரை அடக்குறா.. பிள்ளை கேட்குது வாங்கிக் கொடுங்கோ என.. ஒரு கைக்குழந்தை எனில்கூட ஒத்துக் கொள்ளலாம்...

      //அந்த மூக்கு முட்ட வசனம் தான் உங்களுக்கு வெறுப்பூட்டியிருக்குன்னு தோணுது//
      ஹா ஹா ஹா அதேதான்.. சாப்பிடுவதில் தப்பில்லை.. பசிக்கப் பசிக்க சாப்பிடாமல் இருந்தாலும் அதுவும் நடிப்பாகிடுமெல்லோ.. பசிக்காமலிருப்பது என்பது வேறு.. இது அந்த ஹோட்டேல்:)) ஹா ஹா ஹா..

      //ஊரில் இறங்கி அழக்கூட திராணியில்லாம இருந்தப்போ ஒரு ஜென்மம் சொல்லுது பாரின்லருந்து வந்துட்டா பாரு கண்ல ஒரு சொட்டு கண்ணீர் இல்லைனு ///

      ஹா ஹா ஹா இதுக்கு சிரிப்பதா அழுவதா என்றெ தெரியுதில்லை, இப்படி மனிசர் பலருண்டு அஞ்சு.. ஊரில எல்லோரும் எதிர்பார்ப்பது கட்டிப்புரண்டு விழுந்து உருண்டு அழுதால்தான் துக்கம் என:).. அத்தோடு நம் சனத்துக்கு இப்படியான விடுப்ஸ் பார்க்கவும் விருப்பம்:)..

      Delete
    2. நமக்கு துக்கம் எப்போ வருமெனில் நம் வீட்டில் தனியே இருக்கும்போதுதான், பரபரப்பான நேரம், புது இடங்களில் துக்கம் வெளியே தெரியாது... நானும் எப்பவும் அடுத்தவர்களுக்காகப் பயப்பிடுவது குறைவு அஞ்சு.. என்ன வேணுமெண்டாலும் நினைச்சிட்டுப் போங்கோ.. எங்கள் துக்கத்தை சொல்லியோ அழுது காட்டியோ புரிய வைக்கோணும் என ஒன்றும் கட்டாயம் இல்லையே.. அது நமக்கு நமக்குத்தான் தெரியும்.. இல்ல புரிஞ்சுதான் என்ன பண்ணப்போகினம்:)..

      எங்கள் ஒரு மாமாவின் மகன்[25/26 வயசென நினைக்கிறேன் அப்போ], இங்கு வந்திருந்தார் பி எச் டி செய்ய, அப்போ படிப்பு முடிஞ்சு கொன்வெகேசனுக்கு அப்பா அம்மாவைக்கூப்பிட விசாவுக்கு அப்ளை பண்ணி, அவர்கள் வர ரெடியானபோது, ஒரு மோட்டபைக் அடிச்சு மாமா இறந்திட்டார்... அப்போ அது ஒரு அவலமான மரணம் தானே..

      செத்தவீட்டில் எல்லோரும் ரெடியாக இருந்தார்களாம்.. மகன் வந்து கொண்டிருக்கிறார் வீட்டுக்கு வந்ததும் அழுது புரள:).. இங்கிருந்து போன மகன், நேரே அம்மாவிடம் போனாராம்... முதல் சொன்ன வசனம் “அம்மா .. இனி அழக்கூடாது” என்பதுதானாம்[அவர்களுக்கு ஒரே ஒரு பிள்ளைதான்].. அடுத்து தந்தையிடம் போய் கையைப் பிடிச்சு தன் பாஸ்போர்ட்டைக் கையில் கொடுத்து நீண்ட நேரம் மெளனமாக இருந்து விட்டு அமைதியாகிட்டாராம்.. அழவில்லையாம்.. அது ஊர்ச் சனத்துக்கு ஏமாற்றமாகிப்போச்சு:)) கூத்துப் பார்க்க முடியவில்லையே என ஹையோ ஹையோ:).. ஹா ஹா ஹா..

      Delete
    3. ஹலோ... ஆம்பிளைங்க துக்கத்தை மனதில் பூட்டி வச்சிப்பாங்க. அநியாய இறப்பின்போதுதான் (மகன் வயதில் உள்ளவர் மறைவது, ஆக்சிடன்ட் இறப்பு போன்று) கண்ணில் கண்ணீர் வரும்.

      காரணம் என்னன்னா... எங்களுக்கு. ந. டி. க். க. த். தெரியாது (பெண்களைப் போல். ஹா ஹா)

      Delete
    4. ஒரு சம்பவம். எனக்குத் தெரிந்த பெண் ஒருவர். அவரின் அப்பா மிகவும் சிறிய பணியில் இருந்தாலும் பெண்ணை நன்றாகக் படிக்க வைத்தார். காலக்கிரமத்தில் அவர் திருமணம் ஆகி வெளிநாடு சென்று விட்டார். சில வருடங்கள் கழித்து இந்தியாவில் அவர் அப்பா இறந்து விட்டார். ஆனால் பெண் அவர் இறப்புக்கு வரவில்லை. ஆறு மாதத்துக்கு முன்னால்தான் அங்கு வந்து திரும்பினேன், எப்படியும் அடுத்த வருஷம் வருவேன், அப்போ வந்து அம்மாவைப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டார். :(

      Delete
    5. எத்தனை வேதனை :( அந்த தகப்பன் முகத்தை பார்க்க முடியுமா மறுபடியும் மகளால் .வெளிநாட்டில் பணப்பிரச்சினை இல்லியே பிளைட்டும் எப்பையானும் புக் பண்ணலாம்

      Delete
    6. ஸ்ரீராம் - இது ஒரு சம்பவம் மட்டுமல்ல. இதுபோல் ஒரு லட்சத்திற்கும் மேலான சம்பவங்கள் உண்டு. நான் என் சொந்த அண்ணன் திருமணத்துக்கு வரமுடியவில்லை என்று சொன்னால் நம்பமுடியுமா? எத்தனையோ நல்ல நிகழ்வுகள், கெட்ட நிகழ்வுகள் எல்லாவற்றிலும் பங்கெடுத்துக்கொள்ள, வெளிநாடுகளுக்குச் சென்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. மனதில் ஆசை இருக்கும், ஆனால் வாய்ப்பு கிடைக்காது.

      என் தந்தையார் மறைந்த செய்தி எனக்கு இரவு 10 மணிக்குத் தெரிந்தது. கம்பெனி உதவியால் இரவு 1 மணி விமானத்தில் கிளம்பி, மறு நாள் காலை 11:30க்கு வந்துசேர்ந்தேன் (இரண்டு விமாங்களில். அதாவது மும்பைவரை, அங்கிருந்து இன்னொரு விமானத்தில் சென்னை). அவர், அன்றைக்கு மறையாமல், மறுநாள் அதே நேரத்துக்கு மறைந்திருந்தால், நான் அப்போது பிலிப்பைன்ஸுக்கு விமானத்தில் புறப்பட்டிருப்பேன். அவர் உடலைக் கண்டிருக்க வாய்ப்பே கிடையாது. (எப்போ சென்னை வந்திருப்பேன் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. நான் நேர்காணல் நடத்த 2 நாட்களுக்கும் 25-40 கேண்டிடேட்களுக்கு நேரம் கொடுத்திருப்பார்கள்) அதனால் எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். 'மனசு இருந்தால் மார்க்கம் உண்டு' என்று சொல்லிட முடியாது. ப்ராக்டிகலா நிறைய சமயத்தில் இது சாத்தியமாவதில்லை.

      Delete
    7. அப்படி ஒன்றும் Feel பண்ணவில்லை அந்தப் பெண். ஒரு ரகசியம்... இப்போது அந்தப் பெண் உங்கள் ஊரில்தான் இருக்கிறார்.

      Delete
    8. ஒருவகையில் சந்தர்ப்பமும் சூழலும் கூட நம்மை இக்கட்டான நிலைக்கு தள்ளும் ..

      Delete
    9. @நெ.த
      ///காரணம் என்னன்னா... எங்களுக்கு. ந. டி. க். க. த். தெரியாது (பெண்களைப் போல். ஹா ஹா)////

      [im] https://media.giphy.com/media/KQwZNdsEtMecg/giphy.gif [/im]

      Delete
    10. //ஸ்ரீராம்.Thursday, October 25, 2018 3:36:00 pm
      அப்படி ஒன்றும் Feel பண்ணவில்லை அந்தப் பெண். ஒரு ரகசியம்... இப்போது அந்தப் பெண் உங்கள் ஊரில்தான் இருக்கிறார்.///

      ஆஆஆஆஆஆஅ என்னாது நெ.தமிழன் ஊரிலாஆஆஆஆஆ ஹா ஹா ஹா உண்மை ஸ்ரீராம், மனமிருந்தும் வரமுடியாதோரும் உண்ட்டு, வர முடிந்தும் மனமில்லாதோரும் உண்டு... சிலர் பணத்தைக் கணக்குப் பார்ப்பார்கள்...

      எனக்குத்தெரிந்த ஒருவர் ஊரில்போய் ஒரு மாதம் நின்று, தந்தைக்கு சுகமில்லை என, பின்பு நாடு திரும்பி எயார்போர்ட்டில் வந்து இறங்க செய்தி வருகிறதாம் தந்தை போய் விட்டார் என, உடனே அடுத்த பிளைட்டில் ஓடினார் திரும்பி.

      ஏன் எங்கள் அப்பாவும் அப்படித்தானே, நாங்கள் இங்கு வந்து நைட் இறங்கிறோம் மோனிங் நியூஸ் வருகிறது, உடனே நேரடி ரிக்கெட் கிடைக்காமல் அமெரிக்கா போய் கனடா போனோம்...

      மனமுண்டால் இடமுண்டு...

      Delete
    11. //AngelThursday, October 25, 2018 3:32:00 pm
      எத்தனை வேதனை :( அந்த தகப்பன் முகத்தை பார்க்க முடியுமா மறுபடியும் மகளால் .வெளிநாட்டில் பணப்பிரச்சினை இல்லியே பிளைட்டும் எப்பையானும் புக் பண்ணலாம்//

      அதுதானே .. வேர்க் பிளேசில கூட இங்கு வெள்ளையர்கள் இப்படியான தேவைக்கு உடனே லீவு கொடுப்பார்கள்.. அழுதாலே விட்டு விடுவார்களே... பணம் தான் கையில் இல்லை எனினும் தாராளமாக கிரடிட் கார் எல்லோரிடமும் இருக்கும்... எதுக்கும் மனமிருக்கோணும் எனத்தான் நானும் நினைக்கிறேன்.

      Delete
    12. நெல்லைத்தமிழன் எங்கள் ஊர்... நான் சொல்லி இருப்பது உங்கள் ஊர்... ஆனால் இது விஷயமாக நான் சொல்லி இருப்பதை எல்லாம் அழித்து விடுங்கள். கிழித்து தேம்ஸில் வீசி விடுங்கள்...

      Delete
    13. @ஸ்ரீராம்
      ஓ எங்கள் நாடோ? எனக்குப் புரிஞ்சுபோச்ச்ச்ச் இது அஞ்சுதான் ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா எனக்கு ..னிச வந்து நாக்கு நுனியில குடியிருக்குதே:)) ஹா ஹா ஹா..

      ///ஆனால் இது விஷயமாக நான் சொல்லி இருப்பதை எல்லாம் அழித்து விடுங்கள். கிழித்து தேம்ஸில் வீசி விடுங்கள்...//

      ஹா ஹா ஹா அது, புதுப் போஸ்ட் வந்ததும் தானாக தேம்ஸ்ல மூழ்கிடும்:))

      Delete
    14. ஸ்ரீராம் இதுல இன்னொரு கோணமும் இருக்கு. ஹஸ்பண்ட், நீ இப்போ அங்க போனா, உனக்கென்ன வரவா வரப்போகுது... கடனெல்லாம் நீ அடைக்கறயா என்று கேட்டு யாராவது வந்தால் என்ன பதில் சொல்லுவ, அதனால் போகவேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் (இல்லை அந்தப் பெண்ணே அப்படி யோசித்து முடிவு எடுத்திருக்கலாம்). பெரும்பாலும் பெண்கள் பணத்தின் மீது அதிகப் பற்று வைத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். அது, அவர்கள் வாழ்க்கை கடைசி வரை நன்றாக ஓட வேண்டுமே என்ற கவலையினாலும் இருக்கலாம்.

      மிகவும் க்ளோஸ் நண்பன் இறந்தபிறகு, அவனைப் பார்க்கச் செல்லாமல் இருந்தவர்களையும் எனக்குத் தெரியும். அவனே போய்ட்டான்... இப்போ போய் என்ன ஆகப்போகிறது என்ற எண்ணம்தான்.

      Delete
    15. ///
      நெல்லைத் தமிழன்Friday, October 26, 2018 5:50:00 am
      ஸ்ரீராம் இதுல இன்னொரு கோணமும் இருக்கு. ஹஸ்பண்ட், நீ இப்போ அங்க போனா, உனக்கென்ன வரவா வரப்போகுது... கடனெல்லாம் நீ அடைக்கறயா என்று கேட்டு யாராவது வந்தால் என்ன பதில் சொல்லுவ, அதனால் போகவேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்///

      எனக்கென்னமோ வரவர ஜந்தேகம்:) அதிகமாகிட்டே வருது:)) இவர் எதுக்கு ஓவரா அந்தக்காவுக்குச் சப்போர்ட் பண்றார்ர்:)), .. ஹையோ நெ.தமிழன் ஓடாதீங்கோ.. ச்சும்மா ஒரு ஃபுளோல வந்திட்டுதாக்கும் ஹா ஹா ஹா:)..

      //மிகவும் க்ளோஸ் நண்பன் இறந்தபிறகு, அவனைப் பார்க்கச் செல்லாமல் இருந்தவர்களையும் எனக்குத் தெரியும்.//

      ஆளே போயிட்டுதாம் இனிப்போய் என்ன ஆகப்போகுது என நினைச்சிருப்பாரோ என்னமோ...

      Delete
  22. மாமியார் மருமகள் மேட்டர் .இன்னிக்கு மருமகள் விட்டேத்தியா இருந்த அதே நிலை அவருக்கு பின்னாளில் ஏற்படக்கூடும் என்பதை அறியாதவர்களில்லை இக்காலத்து மருமகள்கள் .
    //ஏனெனில் அது கணவரின் அம்மாதானே, இதுவே தன் அம்மாவாக இருப்பின் இப்படிப் பதில் வந்திருக்குமோ?.//
    ஸ்ஸ்ஸ் நம்ம பசியை கட்டுப்படுத்தலாம் உணர்வுகளை ஸ்டாப் பண்ணலாம் ஆனால் இக்கால பிள்ளைங்க விஷயத்துல நாம் ஒன்னும் சொல்ல முடியாதது ..எதை இந்த மாதிரி சமையத்தில் செஞ்சாலும் அது வெறுப்பை தான் அதிகப்படுத்தும் .
    வரும்காலத்தில் நமக்கு என்ன நிலையோ :)

    ReplyDelete
    Replies
    1. //இன்னிக்கு மருமகள் விட்டேத்தியா இருந்த அதே நிலை அவருக்கு பின்னாளில் ஏற்படக்கூடும் என்பதை அறியாதவர்களில்லை இக்காலத்து மருமகள்கள் .//

      அது அஞ்சு.. இன்றை மட்டும் நினை, போனதையும் நினைக்காதே.. வருங்காலத்தையும் நினைக்காதே எனத்தானெ சொல்கிறார்கள் இப்போ.. அதனால வருங்காலத்தைப் பலர் எண்ணுவதில்லை என்றே நினைக்கிறேன்.. அதை அப்போ பார்த்துக் கொள்ளலாம் என சொய்ஸ்ல விட்டிடுறாங்க:)..

      //இக்கால பிள்ளைங்க விஷயத்துல நாம் ஒன்னும் சொல்ல முடியாதது ..எதை இந்த மாதிரி சமையத்தில் செஞ்சாலும் அது வெறுப்பை தான் அதிகப்படுத்தும் .
      வரும்காலத்தில் நமக்கு என்ன நிலையோ :) ///

      இது உண்மைதான் அஞ்சு, நாம் இப்போ பேசுவதெல்லாம் நம் ஜெனரேசனோடு முடிஞ்சு விடும், ஆனாலும் எங்களால முடிஞ்சதை சொல்லிக் குடுப்பது நம் கடமைதானே.. வருங்காலத்தில் கடைப்பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் அவர்கள் விருப்பம்..

      இப்போ விரதம் இருப்பது, சுவாமி கும்பிடுவதெல்லாம் சொல்லிக் குடுக்கிறோம்ம் ஆனா அவர்கள் காலத்தில் கடைப்ப்பிடிப்பார்களோ தெரியாதெல்லோ.. அப்படித்தான்...

      Delete
    2. அதேதான் அதிரா இப்போ பயபக்தியா சண்டேகூட தவறாம ஆலயம் வாரா மகள் இங்குள்ள வெளிநாட்டுப்பிள்ளைகள் ஐ மீன் வெள்ளையர் பேரன்சுடன் வெளியே செல்வதே அபூர்வம் .ஆனா நம் நாட்டுப்பிள்ளைங்க பெற்றோருடன் கோவில் ஆலயம்னு ஒழுங்கா போறாங்க .இனிவரும்நாளிலும் அதை தொடரனும் என்பதே எனது பிரார்த்தனை

      Delete
    3. மருமகளோ, மருமகனோ... மாமியாரோ, மாமனாரோ... பழகும் வகையில் இருக்கிறது.

      Delete
    4. //மருமகளோ, மருமகனோ... மாமியாரோ, மாமனாரோ... பழகும் வகையில் இருக்கிறது///

      உண்மை ஸ்ரீராம், மரியாதையைக் கொடுத்தால் மரியாதையை வாங்கலாம், கொடுக்காமல் எதிர்பார்ப்பதும் தப்பு... அன்புகூட ஒருவிதத்தில் இதில் அடங்கும்..

      Delete
  23. ஒருவர் விருப்பப்பட்டு ஒரு துறையை எடுத்தால் அவர்கள் மனம் முழுக்க கவனம் எல்லாம் அத்தத்துறையில் ஈடுபட்டுடும் மகனும் அப்பாவைப்போல டெடிகேட்டட் மருத்துவரா வருவார் .
    கண்களை தானம் செய்யவே வீட்டில் எனக்கு எதிர்ப்பு அனால் எப்படியாவது வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கு எனக்கு :)
    வருங்கால பிள்ளைங்களுக்கு உதவட்டுமே

    ReplyDelete
    Replies
    1. ///கண்களை தானம் செய்யவே வீட்டில் எனக்கு எதிர்ப்பு அனால் எப்படியாவது வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கு எனக்கு :)//

      ஓ நிஜமா? எனக்கும் உதவி செய்வது விருப்பம்தான் அஞ்சு, ஆனா என்னமோ என் உடம்பை வெட்டி எடுப்பார்கள் என்பதைத்தான் நினைச்சுப் பார்க்கவே முடியுதில்லை... காலப்போக்கில் பார்க்கலாம் மனநிலை எப்படி இருக்குமென...

      Delete
    2. ஹையோ அந்த பட்டத்தை திருப்பி கொடுங்க :)ஒரு அஞ்ஞானி பேசற பேச்சா இது :)

      Delete
    3. [im] http://cf.ltkcdn.net/cats/images/std/160383-425x283-cat-hiding.jpg [/im]

      Delete
    4. //நம்மை சந்தனத்தால் குளிப்பாட்டி என்ன? வைரத்தால் அலங்கரித்தென்ன? நமக்குத் தெரியவா போகிறது?..//

      //ஆனா என்னமோ என் உடம்பை வெட்டி எடுப்பார்கள் என்பதைத்தான் நினைச்சுப் பார்க்கவே முடியுதில்லை..//

      அதிரா - நீங்கள் எழுதியுள்ள இரண்டு வாக்கியங்களுக்கும் உள்ள கருத்து வேறுபாடு புரிகிறதா?

      தூக்குக் கயிற்றை நோக்கிச் செல்லும்போது, கைதி ஒருவன், வழியில் தண்ணீர் சிந்திக்கிடந்ததைக் கண்டு, அது தன் காலில் படாமல் தாண்டிச் சென்றான் என்று படித்திருக்கிறேன். பலர், குளித்து முடித்து அலங்காரம் பண்ணிக்கொண்டு தூக்குக் கயிற்றை நோக்கிச் செல்வார்கள் என்றும் படித்திருக்கிறேன். இதுதான் மனித மனம்.

      நம்மிடம் நம் சொந்தங்கள், 'நீ செத்தால், ஆளு போயாச்சு என்று தூக்கிப் போட்டுவிடுவோம், செலவெல்லாம் செய்யமாட்டோம்' என்று சொல்வதை விரும்புவோமா இல்லை, 'பத்திரிகையில் விளம்பரம் கொடுப்போம், மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்து ஊரார், இவ்வளவு அருமையாக அந்திமக் கிரியைகள் செய்கிறார்களே' என்று வியக்கும்படிச் செய்வோம் என்று சொல்வதை விரும்புவோமா? யோசியுங்கள்.

      Delete
    5. நெ.தமிழன்
      //அதிரா - நீங்கள் எழுதியுள்ள இரண்டு வாக்கியங்களுக்கும் உள்ள கருத்து வேறுபாடு புரிகிறதா?///

      ////நம்மை சந்தனத்தால் குளிப்பாட்டி என்ன? வைரத்தால் அலங்கரித்தென்ன? நமக்குத் தெரியவா போகிறது?..////
      இது இருக்கும்போது செய்யுங்கோ, கண்ணை மூடிய பின் செய்து என்ன பலன் என்கிறேன்??:).

      ////ஆனா என்னமோ என் உடம்பை வெட்டி எடுப்பார்கள் என்பதைத்தான் நினைச்சுப் பார்க்கவே முடியுதில்லை..////
      இது நெ.தமிழன், இறந்தபின் நமக்கு உணர்வு எப்படி இருக்குமெனத் தெரியாதெல்லோ? இறந்து பார்த்தால்தானே தெரியும், அப்போ இப்போ இதை நினைக்கையில் உடம்பு நடுங்குதே.. அதனால உயிர்போனபின்பும் நடுங்கலாம்.. என் ஆத்மா அழலாம் எனப் பயம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ ஹா ஹா ஹா:)..

      Delete
    6. @நெ.தமிழன்
      ///நம்மிடம் நம் சொந்தங்கள், 'நீ செத்தால், ஆளு போயாச்சு என்று தூக்கிப் போட்டுவிடுவோம், செலவெல்லாம் செய்யமாட்டோம்' என்று சொல்வதை விரும்புவோமா இல்லை, ....................? யோசியுங்கள்.///

      நெல்லைத்தமிழன் சத்தியமாக இதில் முதல் வரியைத்தான் நான் விரும்புகிறேன், உண்மையில் இந்த உயிர் போன பின்பு சிலை வைத்தல், ஆடம்பரமாக செய்தல் எனக்கு பிடிக்கவில்லை, இல்லை எனில் இப்போஸ்ட் போட்டிருக்கவே மாட்டேனே.... பொய்க்காகப் போடவில்லை, உண்மையில் பல சம்பவங்களைப் பார்த்தும் கேட்டும் மனம் கொதிச்சுப் போயிருந்துதான் இப்போஸ்ட் எழுதினேன்.

      இப்படி விரும்பாமையினாலேதானே பலர் இப்போ தன் உடம்பை ரிசேஜ் செய்ய தருகிறோம் எனக் எழுதிக் கொடுக்கிறார்கள்.. அதுவும் வெளி நாட்டில் இருந்து.. சும்மாவே வெளி நாட்டில் செத்த வீடென்பது கோலாகலமாகத்தான் நடக்குது.. அப்போ அதை நேரில் பார்த்தும் விரும்பாமையினாலேதானே உடம்பை எழுதிக் கொடுக்கிறார்கள்.

      இல்லை நெ.தமிழன் நன்கு யோசிக்கும்போது, இருக்கும்போது நல்லா வாழ்ந்தால் அந்த திருப்தியே போதுமே... பின்பு எதுக்கு ஆடம்பரம்? நமக்கு என்ன தெரியப் போகிறது... நாம் விரும்பி விட்டோம் என்பதற்காக நம் பிள்ளைகளும் விழுந்தடிச்சு செலவு செய்து சிறப்பாகச் செய்வார்கள்.. அதுவும் பாவம்தானே..

      நமக்காக, நம் இழப்பைக் கேள்விப்பட்டு, எந்த மூலையில் இருப்பினும் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால் போதுமே அதுதான் தேவை என்னைப்பொறுத்து....

      Delete
    7. அதென்னமோ தெரியவில்லை, நான் இல்லாமல் போனால், இவர்கள் எல்லாம் கவலைப்படுவார்கள் என்னை நினைத்து, என எண்ணும்போதுதான் ஒரு மகிழ்ச்சி வருதே தவிர, ஆடம்பரத்தைக் கொஞ்சம் கூட மனம் விரும்பவில்லை.

      Delete
    8. இதில இன்னொன்றும் இருக்குது நெல்லைத்தமிழன்.. உயிரோடிருக்கும்வரை நல்ல அன்பா பாசமா அணைச்சு வச்சிருந்து அவர்கள் இறந்தால்.. சிறப்பாக செய்து வழி அனுப்பினால் அதை கொஞ்சம் ஏற்றுக் கொள்ளலாம்...

      ஆனா ஒருவர் உயிரோடிருக்கும்வரை திரும்பிப் பார்க்காமல் இருந்துவிட்டு, பின்பு கோலாகலமாக செலவு செய்து வழி அனுப்புகிறார்களே.. அதைக் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது!.

      Delete
    9. //இறந்து பார்த்தால்தானே தெரியும், அப்போ இப்போ இதை நினைக்கையில் உடம்பு நடுங்குதே.. அதனால உயிர்போனபின்பும் நடுங்கலாம்..// - சரி... இந்த சப்ஜெக்ட்ல எழுதி உங்களைக் கலவரப்படுத்திவிட வேண்டியதுதான்.

      நான் படித்தது, (பல புத்தகங்களில்-ஆவிகள் பற்றியது, மற்றும் ஆன்மீக சம்பந்தமானது). இறந்தபிறகு அந்த ஆன்மாவுக்கு அதிர்ச்சி தாளமுடியாது. எப்படி என் கூட்டைவிட்டுப் போனேன் என்று. திகைத்து நிற்கும் ஆன்மாவை ஆவியுலக் பெரியவர்கள் வந்து வழிநடத்துவார்களாம். அதற்கு முன்பாக அந்த ஆவி, தன் உடலையே சுற்றிச் சுற்றி வருமாம். அதனால்தான் உடலை எரித்துவிட்டு (அப்போது அதற்கு மிகுந்த துக்கம், வருத்தம் ஏற்படும்), ஆவியைச் சாந்தப்படுத்த அதற்குண்டான சடங்குகள் செய்து 13ம் நாள் (இது வேறுபடும்) சடங்குகள் முடிவுக்கு வரும்.

      இது உண்மைனா...... மார்ச்சுவரில எல்லாம் சுத்திக்கிட்டிருக்குமா? இல்லை, மருத்துவ மாணவர்கள் ஒரு உடலை எடுத்துப் பார்க்கும்போது, 'இவன் என்ன நம்மை இப்படி உற்றுப் பார்க்கிறான்' என்று அந்த மாணவனுக்குப் பின்னால் இருக்கும் ஆவி நினைக்குமா?

      உங்கள் தூக்கத்தைக் கெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஹாஹாஹா

      Delete
    10. இதில் ஒன்று சொல்ல விட்டுப்போய்விட்டது.

      விபத்தினால் இறந்தால் ஆன்மாவுக்கு கடுமையான அதிர்ச்சி இருக்குமாம். ஆனால் எதனால் எப்படி நடந்தது (யார் செஞ்சாங்க என்று கற்பனைக் கதைகளில் எழுதுவது போல) தெரியாதாம்.

      நோயினால் அல்லல்பட்டு இறப்பவர், இறந்தவுடன் மிக்க மகிழ்ச்சியும் சாந்தமும் அடைவாராம், தன் உடல் ரீதியான கஷ்டங்கள் முடிவுக்கு வந்தது என்று...

      நள்ளிரவுதான் பதிலெழுதுவீங்க. இன்னும் எழுதி பயமுறுத்த விரும்பவில்லை..

      Delete
    11. ///உங்கள் தூக்கத்தைக் கெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஹாஹாஹா//

      நெல்லைத்தமிழன் அண்ணாஆஆஆஆ:)) வை திஸ் கொல வெறீஈஈஈஈஈ?:)).. ஹா ஹா ஹா கோபம் வந்தாலே ஓட்டமெட்டிக்கா அண்ணா எனக் கூப்பிட வருது ஹா ஹா ஹா:))..

      //நள்ளிரவுதான் பதிலெழுதுவீங்க. இன்னும் எழுதி பயமுறுத்த விரும்பவில்லை..///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ச்சும்மாவே தலை முழுக்க குல்ட்டுக்குள் ஒளிப்பேன்.. இனி?:)).. கர்ர்ர்ர்:)).. அஞ்சூஊஊஊஊ நீங்களும் இதைப் படிச்சிட்டீங்கதானே?:)).. தனியாப் பயப்பிடாமல் ஒரு சப்போர்ட்டுக்கு ஆள் தேவை எல்லோ:)).. அந்த நல்ல எண்ணத்திலதான்:)) ஹா ஹா ஹா.

      Delete
  24. இறந்தபின் பிள்ளைகள் சென்ட் off செய்தது தாத்தாவுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் .எல்லா பெரியவர்களுக்கும் ஒரு உணர்வு இருக்கும் அது முன்னே காட்டியிருக்கும்.அதோட என் மகள் வரம் ஒரு கடிதம் எழுதுவா தாத்தா பாட்டி உயிருடன் இருக்கும் வரை .இதெல்லாம் வயசானவங்களுக்கு சந்தோஷம் தரக்கூடியவை .அம்மாவுக்கு தன சேவிங்சில் சிறிய சூப் பாகெட்ஸ்லாம் வாங்கி பார்சல் அனுப்பியிருக்கா .அதனால் இப்படி ஆரம்பத்திலேயே தாத்தா பாட்டியுடன் நெருங்கி பழக விடுவது நல்லது .
    கணவருக்கு பெற்றோர் இல்லை எங்க மகள் 1 வயது இருக்கும்போதே கணவர் தந்தை இறந்துவிட்டார் அவர் அம்மா அதுக்கும் முன்னேயே ..ஆனால் அவரது மியூசிக்ல புக்செல்லாம் பேத்தி பத்திரப்படுத்தி வச்சிருக்கா பார்க்காத தாத்தா நினைவா .
    எதுவும் நாம வளர்க்கும் விதத்தில் இருக்கு நல்லதை விதைச்சா நல்லது வளரும் பாய்சன் வீட்ஸ் கூட வளர இடம் கொடுத்தா விஷச்செடி தான் வளரும் .

    ReplyDelete
    Replies
    1. ஆராட்சியின்படி என்ன சொல்கிறார்கள் எனில், ஒவ்வொரு மனிதருக்குமாம், தன் பிள்ளைகளை விடப் பேரப்பிள்ளைகளில்தானாம் பாசம் அதிகமாக இருக்கும்.. ஆனா எத்தனை குடும்பங்களில்.. பெற்றோரிடம் சேரவோ பேசவோ பேரப்பிள்ளைகளை விடாமல் தடுக்கிறார்கள்.. தமக்கு அவர்கள் மேல் இருக்கும் கோபத்தால்..

      //எதுவும் நாம வளர்க்கும் விதத்தில் இருக்கு//
      இது என்னமோ உண்மைதான்...

      Delete
  25. /பிள்ளைகள் விரும்பாமல் எந்தத் துறையிலும் நாமாக வற்புறுத்தி அனுப்ப முடியுமோ?:).. அவர்களாக விரும்பி இறங்கினால் மட்டுமே விரும்பிப் படிப்பார்கள்.//

    ஹாஹாஹா உண்மைதான் மகளுக்கு மருத்துவத்தில் விருப்பமில்லை துளிகூட .நாங்க விட்டுட்டோம் அவ ஆசைக்கு

    ReplyDelete
    Replies
    1. இது உண்மைதானே அஞ்சு, அவர்களின் விருப்பத்துக்குத்தான் விடவேணும்.. சில பெற்றோர் அடம் பிடிச்செல்லோ தாம் விரும்பும் துறையில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்... இப்போ எங்கட மகன் சொல்லும் கதைகளைக் கேட்டபின்பு எனக்கு இன்னும் பயமாக இருக்கு.. எந்தப் பிள்ளையையும் நாம் வற்புறுத்தவே கூடாது..

      Delete
  26. /இருக்கும்போதே நாலு வார்த்தை //
    சரி விடுங்க அப்போ செய்யாத விஷயத்தை குற்ற உணர்வில் பின்னாளில் அழுது தீர்க்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இது ஓகேதான் விட்டு விடலாம்..:)) ஆனா ஷோக் காட்ட விடக்கூடாது:))

      Delete
  27. இப்போ இறந்த பின் ஆயிரம் பேரைக் கூப்பிட்டு சாப்பாடு கொடுத்து 31 செய்கிறார்கள்.. இதிலென்ன இருக்கு என//
    ஹ்ம்ம் இதெல்லாம் குற்ற உணர்வில் செய்றாங்களோனு தோணுது
    பதிவர் ஒருவர் ஜாக்கி சேகர் ,ஒருமுறை சொன்னார் பதிவில் அவங்கம்மா நினைவு நாளில் இல்லாத 10 பேருக்கு தேடி உணவளிப்பராம் .
    அதுபோலத்தான் நானும் இங்கே ஹோம்லெசுக்கு பணமா கொடுத்துடுவேன் கிச்சனில் அவர்களே ஆங்கில உணவு சமைத்து கொடுப்பங்க ,தங்கச்சி அப்பா அம்மாவுக்கு பிடித்த நாலு கால் ஜீவன்களை தேடிப்பிடித்து உணவு கொடுத்திடுவாஅதுக்கு ஸ்பெஷலா பணம் அனுப்பிருவேன் .இதனால எங்களுக்கு குடுமப வட்டத்தில் கெட்ட பேர் கூட்டம் கூட்டி பிரியாணி போட்லன்னு பட் ..ஐ டோன்ட் கேர் ..
    ..

    ReplyDelete
    Replies
    1. //ஹ்ம்ம் இதெல்லாம் குற்ற உணர்வில் செய்றாங்களோனு தோணுது //

      அது குற்ற உணர்வோ.. இல்லை நாங்க இத்தனை பேரிவ்ளோ வசதியோடு இருக்கிறோம் எனும் ஹெத்துக் காட்டவோ என்னமோ..

      நீங்க செய்வதுதான் நிட்சயம் அவர்கள் மனதை அமைதிப்படுத்தும்...

      //குடுமப வட்டத்தில் கெட்ட பேர் கூட்டம் கூட்டி பிரியாணி போட்லன்னு//

      ஹா ஹா ஹா இதுவும் உண்மைதான். அதனாலென்ன இப்படிக் கெட்டபெயர் எடுப்பதில் தப்பில்லை:))

      Delete
    2. 'இருக்கும்போது கோபப்பட்டியே.. இப்போ மட்டும் என்ன?' என்று கேட்பதில் அவ்வளவு பொருளிருப்பதாகத் தோன்றவில்லை. எல்லாக் கோபமும் போல. அது சம்பந்தப்பட்டவர்களுக்கே புரியும். இதை என் சொந்த அனுபவத்தினால் இப்படிச் சொல்கிறேன். உதாரணமாய் ஒரு கணவன் மனைவி விஷயத்தில் வெளியிலிருந்து பார்ப்பவர்களால் அவர்களிடையே இருந்த அன்னியோன்னியம் அறியப்படாமல் போகலாம்.

      Delete
    3. //ஸ்ரீராம்.Thursday, October 25, 2018 3:26:00 pm
      'இருக்கும்போது கோபப்பட்டியே.. இப்போ மட்டும் என்ன?' என்று கேட்பதில் அவ்வளவு பொருளிருப்பதாகத் தோன்றவில்லை.//

      சில இடங்களில் ஈகோவாலகூட தாய் தந்தையைக் கவனிக்காமல் இருந்துவிட்டு, உள்ளே அன்பு இருக்கும் ஆனா எல்லை மீறிப்போய்க் கதைக்க மனம் இடம் கொடுக்காது.. அப்படியானவர்கள்கூட திடீரென தாய் தந்தை இறந்திட்டால்.. மனக் கவலையால அதிகம் சிறப்பாக செய்ய வெளிக்கிடுவார்கள்...

      ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணத்தில் கருத்துச் சொல்லும்போதும் அது சரி என்றே படுது...

      Delete
  28. [im]https://i.pinimg.com/originals/37/9d/db/379ddb7d46abc6faba1a6e81ea2619c7.jpg[/im]

    ஒவ்வொருத்தருக்கும் மாறுபட்ட கோணங்கள் உண்டு என் பார்வையில் பட்டதை சொல்லிட்டேன் :) இதை ஏற்றுக்கொண்டே ஆகணும்னு அடம் பிடிக்கும் குணம் எனக்கில்லை. .ஆனால் ஒன்று புரியுது நீங்க ஞானி ஆகிட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. //https://i.pinimg.com/originals/37/9d/db/379ddb7d46abc6faba1a6e81ea2619c7.jpg//

      ரெண்டு ஆட்கள் வரைக்கும்கூடப் போகத்தேவையில்லை அஞ்சு, நம் கண்களே ஒன்றின் பார்வைபோல மற்றையது இருக்காதே ஹா ஹா ஹா..

      //ஒவ்வொருத்தருக்கும் மாறுபட்ட கோணங்கள் உண்டு என் பார்வையில் பட்டதை சொல்லிட்டேன் :)///

      அப்படித்தான் இருக்கோணும், நம் மனதில் தோன்றுவதைத்தானே சொல்லோணும், இல்லை எனில் அது நடிப்பாகிடுமெல்லோ... அதனால்தான் நானும் பல சமயங்களில் என்னைப்பற்றி ஆரும் தப்பாக நினைச்சாலும் பறவாயில்லை என, மனதில் தோன்றுவதை ஜொள்ளிடுவேனாக்கும்:))[தப்பா நினைக்காயினம் எனவும் ஒரு நம்பிக்கை இருக்கு.. ஹையோ இது மைண்ட் வொயிஸ்ஸ்:)) ஹா ஹா ஹா].

      //ஆனால் ஒன்று புரியுது நீங்க ஞானி ஆகிட்டீங்க///

      ஆஆஆஆஆஆஆஆஆ நன்னாரே நன்னாரே நன்னாரேஏஏஏஏஏஏ ஹா ஹா ஹா..

      https://www.youtube.com/watch?v=pL8auNjocFA

      Delete
    2. ஏஞ்சலின் - இப்போ எனக்குப் புரிந்துவிட்டது.

      நான் 'குழை சாதம்' ரெசிப்பியைப் பார்த்துச் செய்ததை என் வீட்டில், இது என்ன தயிர் சாதமா என்று கேட்டார்கள். அதே சமயம், கீதா ரங்கன் அதே ரெசிப்பியைப் பார்த்துச் செய்ததை அவர்கள் வீட்டில் சாம்பார் சாதமா என்று கேட்டார்களாம். ஒரே செய்முறையைப் பார்க்கும் இருவருக்கும் ஒரே மாதிரி அது காட்சி தருவதில்லை என்பது உண்மைதான். ஹாஹாஹா

      Delete
    3. ஹையோ ஹேய்யொ நெல்லைத்தமிழன் சாம்பார் சாதம் தயிர் சாதம்லாம் பரவால்ல ..என் கணவர் இது என்ன porridge னு கேட்டார் :)
      ஆனா அவர் செம இன்டெலிஜெண்ட் அதிரா ரெசிப்பி படத்தை மட்டும் காட்டினாலே போதும் இது அதிராவின் ரெசிப்பிதானே னு கண்டுபிடிக்கிறார் :))

      Delete
    4. ///நெல்லைத் தமிழன்Thursday, October 25, 2018 3:42:00 pm
      ஏஞ்சலின் - இப்போ எனக்குப் புரிந்துவிட்டது.

      நான் 'குழை சாதம்' ரெசிப்பியைப் பார்த்துச் செய்ததை///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      [im] https://media.giphy.com/media/mBN6nnFaVz9kc/giphy.gif [/im]

      Delete
    5. "Angel
      //ஆனா அவர் செம இன்டெலிஜெண்ட் அதிரா ரெசிப்பி படத்தை மட்டும் காட்டினாலே போதும் இது அதிராவின் ரெசிப்பிதானே னு கண்டுபிடிக்கிறார் :))///

      இதென்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊ ஹா ஹா ஹா ஹையோ வால் போனாலும் பறவாயில்லை தலை தப்பிடோணும் வைரவா:))

      [im] https://media.giphy.com/media/iZTbI2v4ollzq/giphy.gif [/im]

      Delete
  29. இறப்புக்கு பின் சிறப்பு என்பது தேவையே இல்லை மனுஷங்களை மனுஷங்களா மதிக்க தெரிஞ்சா போதும் எல்லாத்துக்கும் சண்டை குணத்தை கோபத்தை விதண்டாவாதத்தை தூக்கி திரியாமல் :)
    ஹையோ தெய்வமே என்னை மூச்சடைக்க வச்ச த்துக்கு உங்க மேலே கோர்ட் கேஸ் போடப்போறேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஆஆஆஆஆஆஆஆ அஞ்சுவுக்கும் இப்போ டத்துவமா வருதேஏஏஏஏஏ:)) நீங்க அஞ்ஞானி இல்ல அரைஞானி ஆகிட்டீங்க அஞ்சூ ஹா ஹா ஹா:))

      Delete
  30. [im]https://66.media.tumblr.com/c572f942d0e18c45680decc55b8d174e/tumblr_oqkjef89Ih1vfbqwco1_400.gif[/im]

    ஹலோவ் அஞ்ஞானி :) ஆனா நமது கருத்துக்களை இப்படி பதிவா போடறதும் நல்லதே ..எல்லாருக்கும் நம் கருத்துக்கள் சென்றடையும் அது சரி லேட்டஸ்ட் ட்ரெண்டிங் டாப்பிக் பத்தி அதான் மீஈ 2 ஊஊ பத்தி எப்போ பதிவு போடப்போறீங்க :)

    ReplyDelete
    Replies
    1. //அது சரி லேட்டஸ்ட் ட்ரெண்டிங் டாப்பிக் பத்தி அதான் மீஈ 2 ஊஊ பத்தி எப்போ பதிவு போடப்போறீங்க :) ///

      ஹா ஹா ஹா அதில் என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்க... அது பெண்களுக்கு சப்போர்ட் பண்ணும் ஒரு அமைப்புத்தான் ஆனா அதுக்காக கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்கள் கண்டபடி வரும்போது எரிச்சலாக இருக்கு... எதிலையும் ஒரு நீதி நிஜாயம் வேணுமெல்லோ...

      இப்போ கொஞ்சக் காலமாக, பெண்களுக்காக பொலீஸ் ஸ்டேசன் திறந்து வச்சமையால, தொட்டதுக்கெல்லாம் ஓடிப்போய்ப் புகார் கொடுத்து கணவன்மாரை அடிவாங்க வைத்தார்களாம், இது பொறுக்க முடியாமல்தான்.. கள்ளத் தொடர்பில் தப்பில்லை என ஒரு சட்டம் தூசு தட்டி விடப்பட்டுள்ளதாக கேள்விப்படுகிறேன்.

      ஆனா கள்ளக்காதல் எனும்போது அதில் பெண்களுக்கும்தானே அடங்குவர்... இது எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம், நம் நாடுகளில் விவாகரத்து எடுக்க முடியாமையே எனத்தான் நான் நினைக்கிறேன், மனம் ஒத்துப் போகாவிட்டால், வீட்டில் ஆறுதல் கிடைக்காத பட்சத்தில்.. வெளியே இன்னொருவரின் ஆறுதலில் மயங்கி விழுவது சகஜம்தானே.. இப்படித்தான் நான் நினைக்கிறேன்.

      சமீபத்தில் ஒரு ஷோ பார்த்தேன், அதில் ஒரு வசனம் எனக்கு ரொம்பவே நிஜமானதாகப் பட்டுது...
      “இரு மனங்கள் ஒத்துப் போகாவிட்டால் பிரிந்திடோணும், இல்லை எனில் அது அங்காங்கு பண்டேஜ் போட்டு வாழ்வதைப்போலதான் இருக்கும்”..

      Delete
    2. //இரு மனங்கள் ஒத்துப் போகாவிட்டால் பிரிந்திடோணும்// - இது தவறு. காலம் எல்லாவற்றையும் மாற்றும். அதிலும் கணவன் மனைவிக்கிடையிலான மனஸ்தாபங்கள் எப்போதும் மாறிவிடும். அதனால் தேவை பொறுமை மட்டுமே. அதனால்தான் இந்தியாவில், குழந்தைகளுக்காகவாது பொறுமையாக வாழ்க்கையைத் தொடருகிறார்கள், மனம் ஒத்துப்போகாத பெற்றோர்.

      Delete
    3. @நெ.தமிழன்
      // இது தவறு. காலம் எல்லாவற்றையும் மாற்றும்.///

      நீங்க இன்னமும் அந்தக் காலத்திலேயே இருக்கிறீங்க... கல்யாணம் கட்டியாச்சு.. இனி நீ விட்டுப் பிரியக்கூடாது அடிச்சாலும் உதைச்சாலும் அஜஸ்ட் பண்ணிப்போ எனச் சொல்லும் சில பெற்றோர்களைப்போல..

      நான் வெளிநாட்டை இதில் சொல்ல வில்லை, ஏனெனில் வெளிநாட்டிலதான், குறட்டைச் சத்தம், வியர்வை மணம், கை கால் ஓவரா குளிருது கணவருக்கு/மனைவிக்கு... இப்படியான “சில்லுன்டி”[அவ்வ்வ்வ் கில்லர்ஜி துரை அண்ணன் மூலம் பொறுக்கி எடுத்தேன்:)] தனமான விசயங்களுக்கெல்லாம் பிரிந்து போவோரைப் பற்றிச் சொல்லவில்லை.. இப்படியான விசய்ங்களுக்கெல்லாம் நம் நாடுகளில் பொறுத்துப் போ.. என்பினம்.. அது உண்மை.. காலப்போக்கில் மனங்கள் பிடித்திட்டால் இதெல்லாம் பெரிய விசயமாகாது பழகிடும்.


      ஆனா நான் சொல்ல வந்தது, மனங்கள் கடசிவரை ஒத்துப் போகாமலேயே வாழ்வதை.. அப்படி ஒத்துப் போகாமல் காலம் மாற்றும் எனப் பொறுமை காத்து வாழ்வை அழிப்பதில் என்ன இருக்கு... “சண்டைப்பிடித்து, அடிபட்டு 60 வருடம் சேர்ந்து வாழ்வதை விட, அன்பா ஆசையா மனமொத்து சில வருடங்கள் வாழ்வதாலும் அதுதானே மேலானது”.

      பொறுத்துப் போவதற்கும் ஒரு எல்லை உண்டெல்லோ.. ஊரில உலகில எவ்வளவு கொடுமை நடக்குது, சில வீடுகளில் வெளியே எதுவும் தெரியாமல் வீட்டுக்குள்ளே எவ்ளோ கொடுமைகள் நடக்குதாமே.. அவற்றை அப்பெண்ணாலோ ஆணாலோ பெற்றோரிடம்கூடக் கூற முடியாது, ஆனா பிடிக்கவில்லை எனப் பொதுப்படையா சொன்னால் பொறுத்துப்போ காலம் சீராக்கும் என்பினம்.. இதில என்ன இருக்கு.. சாகும்வரை என்ன கொடுமை அனுபவிச்சவை என அவர்களுக்குத்தானே தெரியும்?.

      எனக்குத்தெரிந்து, ஒரு குடும்பம் ஊரில்.. கணவன் மனைவிக்குள் ஒத்துப் போகவில்லை, அதனால வேறு வழியில்லாமல் கணவன் வீட்டுக்குள் போவதில்லையாம், உழைச்சுக் குடுப்பார், உணவு கொடுப்பார்களாக்கும் பிள்ளைகள், வீட்டுக்கு எதிரே ஒரு கடையாம், அதில்தான் நித்திரை கொள்வாராம்.. இப்படியே வாழ்ந்து இறந்தவராம்.. இது ஒரு உதாரணம்தான்.. இப்படி எத்தனை ஆயிரம் இருக்கலாம்.. பிடிக்கவில்லை எனில் பிடிக்கவில்லைத்தானே... தினமும் செத்துப் பிழைப்பதை விட, தனியே நிம்மதியாக இருக்கலாமே... அதைத்தான் மேலே சொன்னேன்ன்:)) இப்போ சொல்லுங்கோ என் கருத்தில் தப்பிருக்கோ?:)

      Delete
  31. /நமக்கு, இறப்பின் பின்னர் சிறப்புத் தேவையோ?//
    தலைப்பு ஓகே ஆனா எதுக்கு என் செல்ல குட்டிங்க படத்தை அதுக்கு போட்டீங்க கர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. அது எல்லோரும் ஒண்ணாக்கூடி தலைப்புப் பற்றி யோசிக்கினம் ஹா ஹா ஹா..

      Delete
  32. வணக்கம் பூசாரே ! அனைவரும் நலம்தானே !

    நீண்ட நாட்களின் பின்னர் வருகிறேன் கல்லை எடுக்காதீங்கோ !
    இப்போதுதான் விடுமுறை எடுத்து இருக்கிறேன் மூன்று வாரங்கள் மட்டும் அதனால் அடித்துத் துரத்தாதீங்கோ மீ பாவம் !

    ஆமா இறக்கப் போயினும் சிறக்கப் போ என்று சொல்வாங்களே அது தப்பா இருக்குமோ ! இருப்பினும் இறந்தபின் செய்யும் ஆடம்பரங்களை நான் வெறுக்கிறேன் இருக்கும் போதே உதவி செய்வோம் தங்களின் எண்ணம் போலே சரிதானே !

    கடமையும் பொறுப்பும் வேறாய்க்
    ....கல்வியில் கற்ற போதும்
    மடமையில் ஊறிப் போன
    ....மனிதரின் வாழ்க்கை தன்னில்
    நடைமுறைப் புகழைத் தேடி
    ....நவீனமாய்ச் சிந்திக் கின்றார்
    உடமையும் உயிரும் ஓர்நாள்
    ....உதிர்ந்திடும் உண்மை அற்று !

    பற்றுடல் விட்டு ஆன்மா
    ...பறந்ததும் பாசம் கொண்டோர்
    வெற்றுடல் தழுவிக் கொண்டே
    ...விம்மிடும் கோலம் கண்டால்
    பெற்றவர் பெற்ற பேற்றின்
    ...பெருமைகள் உலகம் சொல்லும்
    மற்றவர் நடிப்பும் இந்த
    ....மன்பதைக் குணம்தான் போலும் !

    நேர்வழிப் பயணம் யாவும்
    ....நெருந்தியாய் இருந்த போதும்
    தேர்வழித் தூய்மை யாகும்
    ....தெரிந்தவர் கட்டை வேகும்
    நீர்வழி நிலத்தில் வித்தாய்
    ....நினைவுகள் சுமப்போர் வாழ்வில்
    சீர்வழிச் செம்மை காணார்
    ....சிதையிலும் சிறப்பைக் காணார் !

    பிறந்தபின் பெற்ற செல்வம்
    ....பிரியமாய்ப் பெற்ற பிள்ளை
    இறந்தபின் என்னே யாகும்
    ....எவருமே அறிந்த தில்லை
    மறந்தபின் மனத்தின் காயம்
    ....மறைதலைப் போல மாந்தர்
    சிறந்ததைச் செய்தால் போதும்
    ....செந்நெறி ஆகும் வாழ்க்கை

    நீறணிந் துவகை பூண்டு
    ....நினைவிறை யாகப் போகும்
    மாறனார் வரவைக் கண்டு
    ....மதியிலாக் கேழல் முன்னே
    சேறழைந் துடலை ஆட்டும்
    ....செருக்கினைப் போல இன்னும்
    கூறிலா மாந்தர் செய்யும்
    ....குறைகளைக் கடந்து போவோம் !

    கண்களிரண்டும் கபடி ஆடுது பூசாரே ( இப்போ நேரம் அதிகாலை மூன்று இருபத்தி இரண்டு ) தூக்கக் கலக்கத்தில் கிறுக்குகிறேன் கண்டிப்பாக சாமி சத்தியமாக நாளை வருவேன் மீண்டும் ( ஊசிக்குறிப்புகளுக்கும் ஏதாவது கிறுக்கணுமல்லோ )

    காலத்துக் கேற்ற பதிவு வாழ்க நலம் பூசாரே !

    ReplyDelete
    Replies
    1. சீராளன்... வருக. கவிதையைப் படித்துக்கொண்டிருக்கின்றேன்.

      /உதிர்ந்திடும் உண்மை அற்று !/ - இது, 'உதிர்ந்திடும் உண்மை அன்றோ' என்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

      //மற்றவர் நடிப்பும் இந்த
      ....மன்பதைக் குணம்தான் போலும் !// - அருமை. ஆனால் உயிரோடு இருக்கும்போது கவனிக்காமல், அலட்சியமாக இருந்துவிட்டு, இறந்த பிறகு இப்படிச் செய்தால், ஊரார் காறி உமிழமாட்டார்களா?

      //நெருந்தியாய் இருந்த போதும் // - அர்த்தம் புரியவில்லை

      // நீறணிந் துவகை பூண்டு
      ....நினைவிறை யாகப் போகும்
      மாறனார் வரவைக் கண்டு
      ....மதியிலாக் கேழல் முன்னே
      சேறழைந் துடலை ஆட்டும்
      ....செருக்கினைப் போல இன்னும்
      கூறிலா மாந்தர் செய்யும்
      ....குறைகளைக் கடந்து போவோம் //

      இதுதான் மற்ற எல்லா கவிதையிலும் அருமை. (உங்களுக்கு எல்லாம் நன்றாகத்தான் தோன்றும் என்றாலும்). மாறன் - இங்கு எமன் என்ற பொருளில் வந்துள்ளது. கேழல் என்பதன் அர்த்தம் என்ன?

      Delete
    2. வாங்கோ மேஜரே வாங்கோ.. போனதடவை கவிதையுடன் வருகிறேன் எனச் சொல்லிப் போனீங்க.. இம்முறை கவிதையோடு வந்திருக்கிறீங்க மகிழ்ச்சி..

      //நீண்ட நாட்களின் பின்னர் வருகிறேன் கல்லை எடுக்காதீங்கோ !
      இப்போதுதான் விடுமுறை எடுத்து இருக்கிறேன் மூன்று வாரங்கள் மட்டும் அதனால் அடித்துத் துரத்தாதீங்கோ மீ பாவம் ! ///

      அப்போ ஊருக்குப் போயிருக்கிறீங்களோ விடுமுறையில்?.. கவிதையுடனேயே வந்து விட்டமையால்.. நோ கல்லு:)) ஹா ஹா ஹா.

      கவிதை வழமைபோல அழகு.. அதில் பல சொற்கள் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் மீனிங்கை..

      Delete
    3. @நெ.தமிழன்...
      ////உதிர்ந்திடும் உண்மை அற்று !/ - இது, 'உதிர்ந்திடும் உண்மை அன்றோ' என்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.///

      இல்லை இது தப்பு என்றே எனக்குப் படுது.. இரு வரிகளையும் சேர்த்துப் படிச்சுப் பாருங்கோ..

      //உடமையும் உயிரும் ஓர்நாள்
      ....உதிர்ந்திடும் உண்மை அற்று !//

      அதாவது கவிஞர் என்ன சொல்ல வருகிறார் எனில்... இந்த உயிரும், நம் உடைமைகளும்... ஒரு நாள் இல்லாமல் போயிடும்.. நாம் இப்போ இவை எல்லாம் உண்மை என நினைச்சுக் கொண்டிருக்கிறோம்.. அது உண்மை அற்று உதிரும் என்கிறார்:)).. ஹா ஹா ஹா எப்பூடி?:))

      Delete
    4. ///கண்களிரண்டும் கபடி ஆடுது பூசாரே ( இப்போ நேரம் அதிகாலை மூன்று இருபத்தி இரண்டு ) தூக்கக் கலக்கத்தில் கிறுக்குகிறேன் கண்டிப்பாக சாமி சத்தியமாக நாளை வருவேன் மீண்டும்///

      ஹா ஹா ஹா சாமி கண்ணைக் குத்திடப் போறாரே:)) ஹையோ கெதியா வந்து ஒரு சைன் ஆவது பண்ணிட்டுப் போங்கோ ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் மறவாமல் தேடி வந்து கொமெண்ட் போடுவதற்கு.

      Delete
    5. வணக்கம் நெல்லைத் தமிழன் ஐயா !
      /உதிர்ந்திடும் உண்மை அற்று !/ - இது, 'உதிர்ந்திடும் உண்மை அன்றோ' என்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//

      தாங்கள் கூறுவதும் பொருந்தும் ஆனால் நம்ம அதிஞானி அதிரா மிகவும் சரியாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் அதனை அவர்கள் கருத்தில் காணலாம் !

      /////நெருந்தியாய் இருந்த போதும் // - அர்த்தம் புரியவில்லை

      நெருந்தி முள்ளைச் சொன்னேன் ,......நேர்வழிப்பயணங்களில் பாதையெங்கும் நெருந்தி முள்ளாய் இருந்தாலும் அது கோவிலின் தேர்போன இடங்கள் போல சிறப்பாக இருக்கும் ஏனெனில் நமது வழி என்றும் நேர்வழியே !

      மாறனார் என்பது ஒரு இறையடியார் அவர் திருநீறு அணிந்து இறைவனை நினைத்துப் போகும்போது சேற்று நீரில் குளித்துவிட்டுப் பன்றி (கேழல் ) அவர் முன்னே உடலை அசைத்தால் அவர் இறையடியாராய் இருந்தாலும் ஒதுங்கித்தான் போக வேண்டும் அது அந்தப் பன்றிக்குப் பயந்து அல்ல தூய்மையாகத் திருநீறு அணிந்து இறைவனைத் தரிசிக்கப் போகும் போது தன்மேல் அழுக்குப் படிந்திடக் கூடாது என்பதற்காக அதுபோலத்தான் அறிவில்லாத மக்களும் சில செயல்களைச் செய்வார்கள் நாமும் அவர்களோடு வாக்குவாதம் செய்யாமல் ஒதுங்கிப் போதல் நலம் !

      Delete
    6. நீங்க பிரில்லியண்ட் சீராளன். அதிரா சொன்னதைக் காலையில் படித்தேன். அதுவும் சரி என்றுதான் தோன்றியது. நேற்று இரவு,

      "உடமையை உயிரும் ஓர்நாள்
      ....உதிர்த்திடும் உண்மை அன்றோ"

      இப்படி இருந்திருக்குமோ என்று யோசித்துக்கொண்டிருந்தேன். உயிர் இருக்கும் வரைதான் நாம் 'இது என்னுடையது' என்று உடமைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதால்.

      நீங்க பெரிய அளவுல காப்பியம் எழுதவேண்டியது. அதற்கான திறமை இருக்கிறது. உங்களை அந்த வழியில் செலுத்த தகுந்தவர் உங்கள் வாழ்வில் குறுக்கிடவேண்டும், உங்கள் பாதையை மாற்றவேண்டும் என்று நான் ப்ரார்த்திக்கிறேன்.

      உங்கள் வம்சத்தில் தமிழ் அறிஞர்கள் இருந்திருக்கிறார்களா? உங்கள் பின்னணி அறிய எனக்கு மிகுந்த ஆசை. இது மாதிரி தமிழ் வார்த்தைகள், 'கவிதை இலக்கணம் கற்றுக்கொண்டு செய்யுள் இயற்றி வருவதல்ல'. இதற்கான வித்து எங்கோ இருந்திருக்கவேண்டும்.

      'ஞ்' என்பதற்கு 'ந்' உபயோகப்படுத்தி ஏதாவது இலக்கிய உதாரணம் தர முடியுமா? தேஜஸ் என்பதற்கு 'தேசு' என்று இலக்கியத்தில் இருக்கிறது. வைஷ்ணவர் என்பதற்கு 'வைட்டிணவர்' என்று இருக்கிறது. பங்கஜம் என்பதற்கு பங்கயம் என்று இருக்கிறது. லக்‌ஷ்மி - லக்குமி. ஜோதி - சோதி . எனக்கு 'ஞ்' என்பது தமிழில் அனுமதிக்கப்பட்ட தமிழுக்கே உரித்தான எழுத்து என்றுதான் தோன்றுகிறது. இது வடமொழியிலிருந்து வந்திருக்காது என்பது என் எண்ணம். 'கம்சனை' என்பதை 'கஞ்சனை' என்று தமிழ் இலக்கியத்தில் கண்டிருக்கிறேன். 'நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி அல்லாதன செய்தும்' என்பது ப்ரபந்த வரிகள்.

      Delete
    7. சீராளன் - நான் சொல்ல வந்தது, நெருஞ்சி முள் என்பது தமிழ். அதனை நெருந்தி முள் என்று எழுதமுடியாது என்பதை.

      Delete
    8. @ சீராளன்
      //அதிஞானி அதிரா///

      அவ்வ்வ்வ் இப்பூடி எழுதாமல் அஞ்ஞானி என எழுத வச்சிட்டாரே கடவுள் என்னை:).. கர்ர்ர்ர் 4 கடவுள்:)).

      நாங்களும் ஊரில் நெருஞ்சி முள்ளு எனத்தான் சொல்லுவெஓம் நெல்லைத்தமிழன், ஏன் சீராளன் நெருந்தி எனச் சொன்னாரோ தெரியவில்லை.. அப்படியும் சொல்லலாமோ ஒருவேளை.. அல்லது அது இன்னொருவகை முள்ளாக இருக்குமோ.. தெரியல்ல:)..

      Delete
  33. தாய் இறந்து எலும்புக்கூடாக ஆனவரைக்கும் தாயைப் பற்றிய கவலை இல்லாமல் இருந்த மனிதரும், தாயைத் தன்னோடு வெளிநாடு அழைத்துப் போவதாகச் சொல்லி அவர் இருந்த ஒரே குடியிருப்பையும் விற்றுக்காசாக்கிக் கொண்டு பெற்ற தாயை விமானநிலையத்திலேயே விட்டுவிட்டு விமானம் ஏறிய பிள்ளையும் இந்தியாவில் பிறந்தவர்கள் தான்! இங்கே தான் அப்படி எல்லாம் நடக்கிறது. தாய் என்னும் பாசம் இல்லாட்டியும் மனிதாபிமானம் கூட இல்லாமல் போகிறது. ஆகவே ஸ்ரீராம் கதையில் சொல்லி இருப்பதும் நடக்கக் கூடிய ஒன்றே. :(

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ...

      ஓம் வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன் என மெரினா பீச்சில விட்டு விட்டுப் போன கதையும் அறிஞ்சு வேதனைப்பட்டேன்.

      //ஆகவே ஸ்ரீராம் கதையில் சொல்லி இருப்பதும் நடக்கக் கூடிய ஒன்றே. :(///

      ஹா ஹா ஹா உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு அது ஸ்ரீராம் எழுதிய கதை என:).. எனக்குத்தான் தெரியாமல் போச்சு:))

      Delete
  34. மாமியாராக இருந்தாலுமே கணவரின் அம்மா என்னும் முறையில் மனதில் கலக்கமும் வருத்தமும் இருக்கத்தான் செய்யும், அவங்க கொடுமைப் படுத்தினது தனி! அதுக்கும் இறப்புக்கும் சம்பந்தம் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. அதேதான் கீதாக்கா.. ஒருவர் நலமே இருக்கும்போது சண்டைப்பிடிச்சுக் கோபிக்கலாம் ஆனா இல்லை என்றானபின் அவர் செய்த நன்மைகளை மட்டும்தானே நினைக்கோணும்... அல்லது அமைதியாக என்றாலும் இருக்கோணும்.

      மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
  35. அம்மா காத்திருக்கிறாள்..

    அந்தக் கதைக்கு அந்த நிமிடமே மறு கதை எழுதி விட்டேன்.. - மனதிற்குள்..

    ஸ்ரீராம் அவர்களுடைய பதிவுகள் அப்படி..
    ஒன்றுக்குள் ஒன்றை ஒளித்து வைத்திருப்பார் - சில சமயங்களில்!...

    அடுத்தடுத்து விசேஷங்கள் வந்தபடியால் - அதனை தட்டச்சு செய்யவில்லை...
    இனி செய்து விடுவேன்...

    ReplyDelete
    Replies
    1. //ஸ்ரீராம் அவர்களுடைய பதிவுகள் அப்படி..
      ஒன்றுக்குள் ஒன்றை ஒளித்து வைத்திருப்பார் - சில சமயங்களில்!...//

      தன்யனானேன். ஆனால் ஒரு கோடிழுத்து சில சமயங்களில் என்று விட்டாரே... என்ன காரணமாக இருக்கும்?!!! ஹா... ஹா... ஹா..

      Delete
    2. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..

      ஓ அதுக்குக் கதை எழுதி விட்டீங்களோ..

      //அடுத்தடுத்து விசேஷங்கள் வந்தபடியால் - அதனை தட்டச்சு செய்யவில்லை...
      இனி செய்து விடுவேன்...//

      இது எங்கே வெளிவரும் எங்கள் புளொக்கிலயோ இல்லை உங்கள் தளத்திலோ?

      Delete
    3. ///ஆனால் ஒரு கோடிழுத்து சில சமயங்களில் என்று விட்டாரே... என்ன காரணமாக இருக்கும்?!!! ஹா... ஹா... ஹா..//

      அது ஸ்ரீராம்.. சில சமயங்களில் ஒன்றுக்குள் ஒன்றை... என்பதுபோல படிக்க்கோணும்:)).. கோடிழுத்திருப்பது ஸ்டைலா எழுதுறாராம் துரை அண்ணன்:)) இல்லையா துரை அண்ணன்?:)

      Delete
    4. >>> இது எங்கே வெளிவரும் எங்கள் புளொக்கிலயோ இல்லை...
      உங்கள் தளத்திலோ?... <<<

      அப்படி எழுதிய கதையை ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி விட்டேன்...
      எப்போது வெளியிடுவாரோ - இன்னும் சொல்லவில்லை...

      ஏனென்றால் அந்த கதைக்கு மூன்றாம் பாகமும் தயாராகிக் கொண்டிருக்கிறது..

      எல்லாம் தாங்கள் அனைவரும் அளிக்கும் உற்சாகத்தினால் தான்!...

      >>> ஆனால் ஒரு கோடிழுத்து சில சமயங்களில் என்று விட்டாரே..<<<

      பொதுவாக கடலில் முத்துக்களும் பவளங்களும் கிடைக்கின்றன.. சரி...

      எல்லாக் கடலிலும் அல்லவே!..

      அதுபோல
      ஸ்ரீராம் அவர்களுடைய சில பதிவுகள் எனக்குள் ஒன்றைத் தோற்றுவிக்கின்றன..

      மகிழ்ச்சி.. நன்றி..

      Delete
  36. மற்றபடிக்கு -

    அதிராநந்தை என்றால் சும்மாவா!...

    இந்தப் பதிவினைப் பற்றி நிறைய சொல்லலாம்...
    அதற்கெல்லாம் நேரம் வேண்டும்..

    சொல்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. //அதிராநந்தை//

      ஓ அதிரானந்தாவுக்கு எதிர்ப்பார் நந்தை ஆக இருக்குமோ?:) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி துரை அண்ணன், உண்மைதான் பலருக்கு இதுதான் பிரச்சனையே.. மனதில் நிறைய வரும் எழுத, ஆனா நேரமும்... கொம்பியூட்டரும் இடங் குடுப்பது குறைவு.

      மிக்க நன்றி.

      Delete
  37. ஞானி அதிரா அவர்களுக்கு வணக்கங்கள்...!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..

      //அவர்களுக்கு வணக்கங்கள்...!//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) இது த்றீ மச்சூஊஊஊஊஊஊ:))

      மிக்க நன்றி.

      Delete
  38. நேத்து என் தூக்கத்தை கெடுத்து விட்டீங்க அஞ்சானி ...இருங்க மாமியார்கள் /அம்மாங்க பற்றிய எல்லா டீடெயில்சும் கலெக்ட் பண்ணி கொண்டுவந்து கொட்டறேன்

    ReplyDelete
    Replies
    1. அல்லோ மிஸ்டர் நேற்றுத்தான் நான் அஞ்ஞானி:)
      இன்று நான் ஞானீஈஈஈஈஈஈஈஈஈ ஹா ஹா ஹா:))

      Delete
  39. ஒருவர் இறந்தபின் செய்யும்சடங்குகள் அவருக்காக அல்ல இருப்பவர்களின் திருப்திக்காக உற்வுகளைப்பேணி வள்ர்ப்பதிலும் பேதம்ய்ண்டு தன் உறவுகளுக்கு எறால் ஒரு மாதிரி கணாஅவனின் உறவுகளுக்கென்றால் வேறு மாதிரி பெண்களே உங்களை தெரிந்தவகள் / புரிந்தவர் இவ்வையகத்தில் உண்டோ

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..

      ///பெண்களே உங்களை தெரிந்தவகள் / புரிந்தவர் இவ்வையகத்தில் உண்டோ///

      ஹா ஹா ஹா இந்த வயதிலும் இப்படி நீங்கள் சொன்னால்.. இப்போ இருக்கும் இளையோரின் நிலைமை?:) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  40. நேற்று கோவில், காலவலிக்கு மருத்துவரை பார்த்தல் என்று இருந்து விட்டேன் பதிவை இப்போது தான் பார்த்தேன். எத்தனை பின்னூட்டங்கள் எல்லாம் படிக்க வேண்டும் நிதானமாய்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. நினைச்சேன் ஏதோ பிசியாக இருக்கிறீங்கபோல அதனாலதான் போஸ்ட் பார்க்கவில்லைப்போலும் என.

      Delete
  41. யாரையும் குறை சொல்லவில்லை, அவரவர் பிரச்சனை அவர்களுக்குத்தான் தெரியும், அடுத்தவர்களுக்குப் புரியாது, ஆனால் என் கேள்வி, இறந்தபின் ஆடம்பரம் தேவையா என்பதே.//

    நல்ல கேள்வி அதிரா.
    இறந்த பின் ஆடம்பரம் கூடாது தான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோபதி அக்கா.. கண்ணை மூடியபின் என்ன செய்தும் என்ன பலன்... அதை இருக்கும்போது செலவு செய்தால் எவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கும்..

      Delete
  42. இருக்கும் போது அன்பாய் பேதாவர்களுக்கு அழ தகுதி இல்லைதான்.

    ReplyDelete
  43. // என்னைப் பொறுத்து நான் நினைப்பது, இருக்கும்வரை சந்தோசமாக, நன்கு அனுபவித்து வாழ வேண்டும், இறந்த பின் யாரும் நம்மை நினைக்கோணும், சிலை வைக்கோணும் என்பதெல்லாம் எதுக்கு. எது வேணுமெண்டாலும் உயிரோடிருக்கும்போது பண்ண வேண்டும்... எனக்கு ஆராவது சிலை வைக்க யோசிச்சால்//

    உயிரோடு இருக்கும் போது நினைக்க மாட்டார்கள். இறந்த பின் சிலை வைத்து அன்று மட்டும் மாலை போட்டு மரியாதை செய்வார்கள் அப்புறம் எட்டியும் பார்க்க மாட்டார்கள்.
    த்லைவர்கள் சிலைகள் பரிதாபமாக கேட்பாரற்று கிடக்கும். பறவைகள்தான் சிலைகளை பயன்படுத்தும்.

    ReplyDelete
    Replies
    1. இதுவும் உண்மைதான் கோமதி அக்கா... சிலை வைப்பதோடு வேலை முடிந்ததெனப் போய் விட்டால்.. அது இன்னும் கொடுமையிலும் கொடுமை.. பறவைகள் எச்சம் போட்டு அசிங்கப் படுத்தும்.. உயிரோடிருக்கும்போதும் அசிங்கப்படுத்தினார்கள்.. இறந்த பின்னும் விட்டார்களா . சிலை வைக்கிறேன் பேர்வழி என வெளிக்கிட்டுச் சிலை வைத்தும் அசிங்கப் படுத்துகிறார்கள் என ஆகிடும் ஹா ஹா ஹா...

      Delete
  44. ஆழமான பதிவு மீண்டும் வருகிறேன்.
    வர வர ஞானியாக ஆகி வருகிறீர்கள்.
    பிறப்புக்குமுன், இறப்புக்கு பின் என்று எங்களுக்கு பாடம் உண்டு மனவளக்கலையில் அது நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. வரவரவா? அவர் ஞானிதான் அக்கா. நான் சும்மா சொல்லவில்லை. ஏற்கெனவே சிலமுறை சொல்லி இருக்கிறேன்.

      Delete
    2. ஹா ஹா ஹா நன்றி நன்றி... கோமதி அக்கா.. நன்றி ஸ்ரீராம்.. ரொம்ப ஷையா வருது ஹா ஹா ஹா.

      Delete
  45. ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  46. சுப்பிரமணிய ராஜூ கதையை ஸ்ரீராம் பகிர்ந்து இருந்தார்.
    உறவினர் ஒருவர் இறப்புக்கு(வருபவரின் உடன்பிறந்த தம்பி இறந்தற்கு வரும் போது) அவர் அண்ணன் வரும் போது ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நிதானமாய் வந்தார் வந்து அவசரத்தில் வந்து விட்டேன் நான் போடும் வெற்றிலை, துணிமணி ஒன்றும் எடுத்து வரவில்லை, எனக்கு, பெரியம்மாவிற்கு எல்லாம் துணிமணி, வெர்றிலை வாங்க்கி வா என்று இறந்தவரின் மகனிடம் கேட்டு வாங்கி கொண்ட உறவை என்ன சொல்வது அதிரா?
    உடன் பிறப்பு சிறு வயது மரணம் அப்படியும் துடிக்கவில்லை , தன் நலன் பேணுதல் நடக்கிறது.
    தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது வெறும் பழமொழிதானோ என்று தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. //சுப்பிரமணிய ராஜூ கதையை ஸ்ரீராம் பகிர்ந்து இருந்தார்.//

      அநியாயம் அக்கா.. அது நான் எழுதிய கதை. இன்றைய பின்னூட்டங்களில் கூடச் சொல்லியிருக்கிறேனே...

      Delete
    2. நீங்கள் சுப்பிரமணிய ராஜூவின் பாதிப்பை என்னுள் ஏற்படுத்தி விட்டீர்கள் ஸ்ரீராம் அதனால் சுப்பிரமணிய ராஜூ என்று எழுதி விட்டேன்.
      மன்னித்துக் கொள்ளுங்கள் ஸ்ரீராம்.
      தவறுக்கு மன்னிக்கவும் ஸ்ரீராம்.
      தெரியாமல் செய்த பிழை பொருத்தருளுங்கள்.

      Delete
    3. கோமதி அக்கா, எனக்கே இன்று .. அதுவும் எங்கள் புளொக்கில் வல்லிம்மாவுக்கு ஸ்ரீராம் குடுத்த கொமெண்ட்டை வச்சேதான் தெரியும், நான் இங்கு கொப்பி பண்ணிப்போட்டு பின்னிப் பெடல் எடுப்பது ஸ்ரீராம் எழுதிய சொந்தக் கதை என்பது ஹா ஹா ஹா..

      இது பலருக்கு தெரிஞ்சமையாலதான் கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள் போலும்:)) ஹா ஹா ஹா நானும் உங்களைப்போல தான் சு ராஜூ அவர்கள் எழுதியது என நினைச்சேன்...

      இனிமேல் ஸ்ரீராம் கதாசிரியர் பெயர் போடோணும்:)),.. பாருங்கோ பெயர் போடாமையால கதை பேமஸ் ஆச்சு ஹா ஹா ஹா:))

      Delete
    4. கோமதி அக்கா... என்ன பயங்கரமா மன்னிப்பெல்லாம் கேட்டுக்கொண்டு... டேக் இட் ஈஸி!

      அதிரா... என்ன, பின்னி பெடலெடுத்து விட்டீர்களா? அந்த உணர்வு அந்தக் கதையினால் வந்திருப்பது எனக்கு சந்தோஷம்தானே? தலைப்புதான் உங்களை இந்தப் பாடு படுத்தி இருக்கும். அதுவும் கடைசி வரி படித்ததும் தலைப்பின் கனம் கூடியிருக்கும்! இது என் அனுமானம்!

      Delete
    5. @ஸ்ரீராம்
      ///அதிரா... என்ன, பின்னி பெடலெடுத்து விட்டீர்களா? அந்த உணர்வு அந்தக் கதையினால் வந்திருப்பது எனக்கு சந்தோஷம்தானே?///

      இதை.. இதைத்தான் நீங்க உணர வேண்டும்.. இதிலிருந்து என்ன தெரியுது .. அவ்ளோ ஆழமாக நம்மைப் பாதிக்கும் அளவுக்கு கதை எழுதியிருக்கிறீங்க.. உண்மையில் பாராட்ட வேண்டிய கதை...

      ஆனா நீங்க எழுதியது எனத் தெரிஞ்சிருந்தால்.. இவ்ளோ தூரம் அலசி இருக்க மாட்டேன்.. ஸ்ரீராம் ஏதும் நினைச்சுப்போடுவாரோ என தயங்கியிருப்பேன்ன்:)) ஹா ஹா ஹா பெயர் தெரியாமல் இருந்ததும் ஒரு விதத்தில் நன்மையே.. கதையின் எழுத்தின் ஆழத்தைப் புரிய முடிஞ்சிருக்குதெல்லோ.. அதுதானே தேவை.

      Delete
  47. கூறிலா மாந்தர் செய்யும்
    ....குறைகளைக் கடந்து போவோம் !//

    சீராளன் சொல்வது போல் குறைகளை கடந்து போவோம்.
    நம்வழி மறக்காமல் இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. குறைகளைக் கண்டு நாம் கோபிப்பதுதானே தப்பு கோமதி அக்கா.. குறைகளைச் சுட்டிக் காட்டுவது தப்பில்லைத்தானே...

      Delete
  48. மதுரையில் சில வீடுகளில் இறப்பை தெரிவிக்க சோக பாடல்கள் வைப்பார்கள், அப்புறம் ஒப்பாரி வைத்து அழ 9 பெண்களை காசு கொடுத்து அழ வைப்பார்கள்.
    வீட்டுக்குள் இருக்க முடியாது. நெஞ்சை பிழியும்.
    முன்பு செத்தவீட்டில் அழாமல் இருந்தால் அழுகையை அடக்கினால் உடம்புக்கு கெடுதல் என்று இப்படி அழுவார்கள் என்று சொல்வார்கள். ஒப்பாரி சொல்லி அழுவதை கேட்டால் சாவுக்கு வந்த அனைவரும் அழுது விடுவார்கள்.
    இப்போது காசு கொடுத்து அழ வைக்கிறார்கள்.

    மாயவரத்தில் சில வீடுகளில் கொட்டு வைப்பார்கள் , ஷெனாயில் சோக சினிமா பாடல்கள் வைப்பார்கள்.
    சில வீடுகளில் தேவாரம், திருவாசகம் படிப்பார்கள், சங்கு, சேகண்டி வைப்பார்கள்
    எல்லாமே ஒரு பழக்க வழக்கம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஊருக்கு ஊர் மாறுபடும் முறைகள். நம் ஊரில் அந்தப் பறை மேளம்தான் காது கொடுக்க முடியாது.. மேளமும் பெரிசூ.. அதை அடிச்சால் சத்தம் வானைப் பிளக்கும்..ஆனா அதனால பலருக்கு மனநிலை பாதிப்படையு என இப்போ அப்படி அடிப்பதைக் குறைத்து வருகிறார்களாம்.

      ஊரில் இருந்தபோது எங்கள் உறவினர் ஒருவர், சின்ன வயதில் காலமாகிவிட்டார்..40 வயதுகளில்.. அப்போ ஒரு அப்பம்மா ஒருவர் ஒப்பாரி சொல்லி அழுதார்.. அந்த வசனம் எனக்கு இன்னும் நினைவில இருக்குது...

      “முற்றத்தில் நிற்கும் முருங்க மரம் சாயாமல்
      வேலியில் நின்ற வேப்பமரம் சாய்ந்ததென்ன?:(”

      Delete
    2. என் அக்கா 25 வயதில் இறந்த போது துக்கம் விசாரிக்க வந்த ஒரு அம்மா கல்யாணம் ஆகாத பெண் என்று நினைத்து ராஜாத்தி ராஜாத்தி என்று என்ன அவசரம் மணம் முடிக்கும் முன் போனது என்ன என்று அழுதார்கள் அவள் அழகை சொல்லி சொல்லி.

      இறந்தவரின் பெருமைகளை சொல்லி அழுவாரும் உண்டு.
      மார்தட்டி அழுவதும் ஒரு வித மருத்துவம் தான்.
      துக்கத்தால் நெஞ்சு அடைக்காமல் இருக்க.
      கூட்டமாய் சேர்ந்து சுற்றி வந்து அழுவார்கள்.
      எல்லாவற்றிக்கும் காரண காரியம் உண்டு அதிரா.

      கோவில், ஆஸ்பத்திரிக்கு அருகில் வரும் போது பறை ஒலியை அடிக்க மாட்டார்கள். அதை தாண்டி போனவுடன் ஓலிக்கவைப்பார்கள்.(அடிப்பார்கள்)
      வெடி எல்லாம் போடுகிறார்கள். ம்துரையில் சாவு முறை செய்பவர்கள் மாலை மரியாதை செய்ய வரும் போது அவர்கள் வசதி படி வெடிகள் அதிகமாய் வெடிக்க படுகிறது. துணிமணி மோதிரம் போடுதல் என்று முறை செய்வதில் சண்டை சச்சரவு வேறு நடக்கிறது. கொள்ளிபோட்ட கைகளுக்கு மோதிரம், உறுமா கட்டுவது என்று போகிறவர் போனாலும் இருப்பவர்கள் சடக்கு முறைகளை வைத்துக் கொண்டு சண்டை போடுகிறார்கள்.

      Delete
  49. அதிரா... அஞ்ஞானி என்கிற பட்டத்தை எடுத்து விட்டு அதிரா என்றோ, அல்லது முன்னம் மாதிரி ஞானி அதிரா என்றேயோ வைக்கவும். இது வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. மாத்திட்டேன் ஸ்ரீராம் ஏன் என்ன ஆச்சு?.. உங்கள் கொமெண்ட் பார்த்து என் ஆராய்ச்சி அம்புஜம் குடுகுடுவென ஓடித்தேடிய இடத்தில் காட்டிச்சுதாம் “அறிவிலி” என:)) ஹா ஹா ஹா அதுதான் காரணமோ இல்ல வேறு இருக்கோ?..

      உண்மையில இந்த அஞ்ஞானி என்பதை நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும் . முன்பு எங்கள்புளொக்கில் ஆருக்கோ நீங்க பதில் குடுத்தீங்க.. நான் விஞ்ஞானி மெஞ்ஞானி அஞ்ஞானி என்று:)) ஹா ஹா ஹா உடனே என் கிட்னி கடுமையா ஓவர்டைம் பண்ணி யோசிச்சுது .. ஓ அஞ்ஞானி எனில் அப்போ ஞானியை விடப் பெரிசூ என:)) ஹா ஹா ஹா அதனாலயே அப்படி மாத்தினேன்.

      Delete
    2. ஹீஹீ :) எனக்கும் அதோட அர்த்தம் இப்பதானே தெளிவா அதெரிஞ்சது ..நானா நினைச்சேன் அஞ்சானி என்றால் எல்லாம் தெரிந்த ஞானி அவ்வ்வ்

      Delete
    3. நாம் எருமை பெருமை பொறுமை கருமைனு சொல்ற மாதிரி அவரும் எழுதியிருக்கார் :) ரைமிங்கா இருக்கட்டுமேன்னு :) இனிமே பேர் மாத்துமுன்னே என் கிட்ட அட்வைஸ் கேளுங்க அதுக்கு முன்னாடி 500 பவுண்ட்ஸ் டெபாசிட் பண்ணுங்க என் அக்கவுண்டில்

      Delete
    4. AngelThursday, October 25, 2018 3:35:00 pm
      ஹீஹீ :) எனக்கும் அதோட அர்த்தம் இப்பதானே தெளிவா அதெரிஞ்சது ..நானா நினைச்சேன் அஞ்சானி என்றால் எல்லாம் தெரிந்த ஞானி அவ்வ்வ்

      //இந்த ஆராட்சியை நேற்றே பண்ணியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்போ தலைக்கு மேல வெள்ளம் ஜாண் ஏறியென்ன முழம் ஏறியென்ன:)) ஹா ஹா ஹா:))...

      Delete
    5. ஸ்ரீராம் இதுக்குப் பதில் சொல்லவில்லையே இன்னும்:)..

      Delete
    6. பெயரை உடனே மாற்றி விட்டீர்கள் என்று அப்போதே அங்கு வந்த பதிலிலேயே தெரிந்து மகிழ்ந்தேன் அதிரா.. அர்த்தம் எப்படி உங்களுக்குத் தெரியாமல் இருந்தது என்பது ஆச்சரியம்.

      Delete
    7. 'அ' சேர்த்தால் வார்த்தை ஆப்போசிட்டாக அர்த்தமாகும். ஞானம் - அஞ்ஞானம் = அ + ஞானம், சக்தி, அசக்தி (இதுதான் அசதி என்று மருவிவிட்டது), கிரமம் (ஒழுங்கான முறை), அக்கிரமம் (அநியாயம், ஒழுங்கீனமான முறை), திருப்தி, அதிருப்தி, யோக்கியன், அயோக்கியன், லட்சியம், அலட்சியம்

      Delete
    8. ஓஒ நன்றி நெல்லைத் தமிழன்... அப்போ அ எல்லாம் டேஞ்சர் என்கிறீங்க?:) ஹா ஹ்ஹா ஹா...
      அஞ்ஞாத வாசம் என கேள்விப்பட்டிருக்கிறேன்.. அது ஞானத்தைத் தேடிப் போவதுதானே? அதனாலதான் அஞ்ஞானி என்பதையும் தப்பா புரிஞ்சிட்டேன்:)...

      மிகுதிக் கொமெண்ட்ஸ் பதில்கள் லேஏஏஏஏஏஏஏட்டாத்தான் போட முடியும் ... அதுவரை எல்லோரும் மன்னிச்சுக்கோங்க:)..

      Delete
    9. அக்ஞாதவாசம் என்றால் யார் கண்களிலும் படாமல் மறைந்திருந்து வாழ்தல். மகாபாரதத்தில் பாண்டவர்கள் அப்படித் தான் மறைந்து வாழணும் என துரியோதனன் நிபந்தனை. அவங்க எங்கே சென்று வாழ்கிறார்களோ அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு அவங்க பாண்டவர்கள்னோ, கூட வந்திருப்பது திரௌபதினோ தெரியக்கூடாது.

      இன்னும் சில பொருளில் முழுக்க முழுக்க மறைந்து இருந்து யாருடனும் தொடர்புகூட இல்லாமல் இருப்பதையும் சொல்லலாம்.

      Delete
    10. ஞானத்தைத் தேடிக் காட்டுக்குச் செல்வது அக்ஞாத வாசம் இல்லை. அது வானப்ரஸ்தம்.

      Delete
    11. கீசா மேடம்.... அஞ்ஞாதவாச விளக்கம் சரிதான். வானப்ரஸ்தம் என்பதை 'ஞானம் தேடி' என்று நீங்கள் சொன்னாலும், அதில் மிகப் பெரிய செய்தி இருக்கு.

      தன் சக்தி இருக்கும்போது ஆண்டபிறகு, அடுத்த தலைமுறைக்கு பொறுப்பை 60 வயதில் ஒப்படைத்து, அங்கேயே இருக்காமல், தன் குறுகிய நெருங்கிய சுற்றத்தோடு காட்டுக்குச் சென்றுவிடவேண்டும். அதாவது Day to Day Operationsல் பிக்சர்லயே இருக்கக்கூடாது. காட்டுக்குப் போனபிறகு, வேறு பொறுப்புகள் இல்லாததால் தன்னைப் பற்றிச் சிந்திக்கும் நேரம் வாய்க்கும். அது மெதுவாக 'ஞானத்தை நோக்கி நம்மை' வழிப்படுத்தும்.

      இதுல நம்மைப் போன்ற சாதாரணர்கள் புரிஞ்சுக்கவேண்டியது, 'மகனுக்குத் திருமணம் ஆகி அடுத்த தலைமுறை' வந்துவிட்டால், நமக்கு அங்கு அதிகாரம் சுத்தமாகக் கிடையாது. எதிர்பார்க்கவே கூடாது. முடிந்தால் முழுவதுமாக ஒதுங்கி தனியாகச் சென்றுவிடவேண்டும், இல்லைனா, அங்கு நாம் சாதாரண குடிமகனாகத்தான் வாழவேண்டும். இந்தப் புரிதல் சரிதானே?

      Delete
    12. //அப்போ அ எல்லாம் டேஞ்சர் என்கிறீர்கள்?// - திரை என்பதற்கு தோல் சுருங்கிய (அதாவது கிழப் பருவம்) என்று பொருள். "அதிரை" என்பது அப்படி அல்லாத இளமை என்று சொல்லலாம். அதிலிருந்து அதிரா வந்திருக்கலாம். இதற்கு வேறு என்ன அர்த்தம் என்று சட்டுனு தோணமாட்டேங்குது. (நரைதிரை ஒன்றில்லா நான் முகன்- மூப்பும் உடல் சுருக்கமும் இல்லாத என்று பொருள்.)

      Delete
  50. ஆமாம் அதிரா, ஸ்ரீராம் சொல்வது போல் நீங்கள் அஞ்ஞானி இல்லை ஞானி அதிராதான்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா .. பாருங்கோ இதைத்தான் சொல்வது கடவுள் காலை வாரியும் விடுவார் என:)) நான் பெரிய பந்தாக் காட்டியெல்லோ அஞ்ஞானி எனப் பெயர் போட்டேன்... ஹா ஹா ஹா மறைமுகமாக நீ அஞ்ஞானி அல்ல.. அறிவிலி:).. எனக்கூறி என் நெற்றிக் கண்ணைத் திறக்கப் பண்ணிட்டார்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))..

      இப்போ நான் “நெற்றிக் கண் திறந்த அதிரா” ஆகிட்டேன் ஹா ஹா ஹா:)).. ஹையோ ஏன் எல்லோரும் ஓடுறீங்க.. இப்போ டக்குப் பக்கெனப் பெயர் மாற்ற மாட்டேன்ன்ன்.. முதல்ல இந்த அஞ்ஞானியை எல்லோரும் மறக்குற வரம் கேட்கோணும் வைரவரிடம்:)).. சே..சே. இன்னொரு வைர அட்டியலுக்கு ஆயத்தம் பண்ணுறார் போல வைரவர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. எங்கள் நினைவுகளில் எப்போதும் இருப்பது ஞானி அதிராதான்.
      கவலை வேண்டாம் அதிரா.வைவரிடம் வேறு வரம் கேளுங்கள்.

      Delete
    3. நன்றி கோமதி அக்கா நன்றி _()_

      Delete
  51. இருக்கும்போது கவனிக்காமல்
    இறந்தபின் ஊர்போற்றவேண்டுமென்பதற்காக ஆடம்பரம்
    செய்வது தேவையற்றது.

    ReplyDelete
  52. உங்கள் ப்ளாகுக்கு வந்து ஏஞ்சல், சூரியனுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறாரே.. 164-ல் யாரும் கவனிக்கவில்லையா!

    ReplyDelete
  53. ஶ்ரீராம் எழுதிய கதை உங்களை இவ்வளவு யோசிக்க வைத்து விட்டதா? சாவுக்கு செல்கிறோம் என்றால் அழுதுகொண்டே துக்கமாகத்தான் செல்ல வேண்டுமா? வித்தியாசமாக யோசிக்கலாமே என்று ஶ்ரீராம் நினைத்து எழுதியிருக்கிறார் என்று நினைத்தக் கொண்டேன்.


    ReplyDelete
  54. இருக்கும் பொழுது சரியாக கவனிக்காமல் இறந்து பிறகு ஆடம்பரமான சடங்குகள் தேவையா? என்பது உங்கள் கேள்வி.
    உயிரோடு இருக்கும் வரைதான் ஆசை,நிராசை, கோபம், வருத்தம் எல்லாம் இருக்குமாம். இறந்த பிறகு இவை எதுவும் இருக்காதாம். இறந்த ஆன்மா மறுபிறவி எடுக்கும் வரை வாழும் பிதுர்லோகம் மன்னிக்கக்கூடியவர்கள் வாழும் இடமாம். தீராத பகை, கடும் கோபம் கொண்டவர்களுக்குத்தான் அந்த பகையுணர்வு தொடருமாம்.
    உடலை விட்டு பிரிந்த உயிர் தன்னைப் பார்க்க வந்திருப்பவர்களைக்கண்டு மகிழ்ச்சி அடைந்து அவர்களை வாழ்த்துமாம். இதனால்தான் உறவினர்கள், நண்பர்கள் சாவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்கிறார்கள்.
    அதனால் தான் அவர்களை இறந்த பிறகாவது சந்தோஷப்படுத்தலாம் என்று விமரிசையாக செய்கிறார்கள் போல. சின்சியராக செய்தால் போதும், ஆடம்பரம் தேவை இல்லை.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.