நல்வரவு_()_


Tuesday, 9 October 2018

அப்பிள் பெண்ணே நீ யாரோ?:)

நிலவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூடிட்டே போகுது நமக்கு:).. சரி சரி முறைச்சு ஒண்ணும் ஆகப்போவதில்லை:)) ஸ்மைல் பிளீச்ச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா.

ழமைபோல இம்முறையும், என் தலைப்புக்கும் போஸ்ட்டுக்கும் ஜம்பந்தம் இல்லை:) என்பதனையும்:), அதனால ஆரும் கோபப்பட்டு எங்காவது ஆற்றில ஜம்ப் பண்ணினால்:) அதுக்கு மீ பொறுப்பில்லை என்பதனையும் இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்:).. ஆனாலும் ஒரு சொல்லை ஆவது சம்பத்தப் படுத்துவேனே:)..

நெல்லைத்தமிழனுக்குச் சொல்லியிருந்தேன், எங்கட வீட்டு அப்பிள் பழங்கள் ஆதாரத்தோடு போட்டுக் காட்டுவேன் என:).. அந்த முயற்சியில்.. இது பெயார்ஸ்[pear] மலர்கள்.. இது நட்டு இப்போ பத்து வருடமாகிட்டுது.. ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் பூப்பா:).. ஆனா காய்க்க மாட்டா:)..  “அதிகம் கொக்கரிக்கும் கோழி, சிறிய முட்டைகளை இடுமாமே”:).. போன வருடம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென ஒன்று காய்த்து உங்களுக்கும் காட்டினனான் எல்லோ.. இம்முறை இப்பூடிப் பூத்தும் ஒரு காய்கூட இல்லை. முன் வீட்டில் ஒரு பெயார் மரம் 20 வருடமாகி, இப்போ தறிச்சுப் போட்டினம்.. 2,3 காய்கள் மட்டுமே தருகிறாவாம் என:(.

அந்த அப்பிள், போன வருடம் தான் நட்டோம்,  எவ்ளோ அழகான பிங் அண்ட் வைட் கலந்த கலவை:)..

 இவ்வருடமே 4 பழங்கள்.. சுவாமிக்குக் குடுத்திருக்கலாம் யோசிக்கவில்லை அப்போ.. இப்போதான் திடிரென ஞானம் பிறக்குது எனக்கு கர்ர்:)), நல்ல இனிப்பான பழம், கடையில்கூட சில சமயம் புளிக்கும்



இது போன கிழமை எடுத்தது, இன்னும் எங்கள் வீட்டுப் பூக்கள் பூத்து முடியவில்லை... இவை வேலி ஓரம் நிற்பவை. குளிர் என்பதால பெரிதாக கார்டினுக்குள் இறங்கவில்லை, இது போனகிழமை இறங்கிப் பார்க்கிறேன் இவ்ளோ புதினா பச்சைப் பசேலென இருந்துது.. நல்ல வெயிலில பிடிச்சு எடுத்தால்தானே எல்லாம் பளபளா என இருக்கும்:)

==========================INTERVAL==========================
இந்தாங்கோ கொஞ்சம் பொப்கோன் சாப்பிடுறீங்களோ?:)


2.5 நிமிடத்தில ரெடி, மைக்குறொவேவ் ல பொரிந்து விரியுது தெரியுதெலோ:)
===========================================================
ஹா ஹா ஹா
((((((((((((()))))))))))
இதென்ன தெரியுதோ? ரோட்டால் போகும்போது.. மதிலின் உள்ளே ரோஜாப் பூக்கள்.. யார் வீட்டில் ரோஜா.. பூப்பூத்ததோ?:)..

/\/\/\/\/\//\/\/\/\/\/\/\/\/\/\/\//\/\/\/\/\/\/\/\/\/\/\//\/\/\/\/\/\/\/\/\/\/\//\/\/\/\/\/\
கண்டு பிடிப்பும், கண்டு பிடிக்கப்போவோரும்:)
இது என்ன இது???:) சொல்லுங்கள் பரிசை வெல்லுங்கள்:)
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\//\/\/\/\/\/\

ஊசி இணைப்பு:)

நோஓ அதிரா இனித் தொடவே மாட்டன்ன்ன்:) 40 நாளைக்கு..!

ஊசிக் குறிப்பு:
 ((((((((((((((((நன்றி_()_ ))))))))))))))))))

118 comments :

  1. ஹலோ மியாவ் :) எனக்கு ஆப்பிளும் வேணாம் அந்த பட்டர் கிஸ்ட்டும் வேணாம் :)
    மதில் மேலே தெரிற அந்த றோஸ் கிளையோட தாங்க அது போதும்

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆ அதாரது ஜாமம் எண்டும் பார்க்காமல் ஓடி வந்தது:) ஆங்ங்ங்ங் அஞ்சுவின் கடமை உணர்வுக்கு எல்லையே இல்லை ஹா ஹா ஹா நன்றி நன்றி... என்னாது கிளையோடு ரோஜா வேணுமோ?:) என்னையும் குலையாத்தூக்கி உள்ளே போட்டிடப்போகினம் பிறகு:).

      Delete
  2. சுவாமிக்குக் குடுத்திருக்கலாம் யோசிக்கவில்லை அப்போ.. //
    கர்ர்ர் :) இன்னும் வள்ளிக்கு நேர்த்திக்கடன் பெண்டிங் :)
    அட்லீஸ்ட் பழத்தை கொடுத்து அஜித் செஞ்சிருக்கலாம் :)

    ReplyDelete
    Replies
    1. ஹை பைவ் அஞ்சு. ஹா..ஹா.. நான் வாசிக்கும்போது நினைத்தேன். எவ்வளவு காலமா ஏமாத்துறா.
      அதிரா நீங்க நேர்த்தி கடனை கெதியா முடியுங்கோ பியேர்ஸ் காய்க்கும்.

      Delete
    2. //இன்னும் வள்ளிக்கு நேர்த்திக்கடன் பெண்டிங் :)
      அட்லீஸ்ட் பழத்தை கொடுத்து அஜித் செஞ்சிருக்கலாம் :)///

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு டமில் டமில் எழுத்து ரொம்ப முக்கியம்:)) அது அஜித் இல்லை அஜீஸ்:)) ஆக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))[மீக்கு டமில்ல டி எல்லோ].. ஒரு எழுத்துப் பிழையால, ஷாலினி அக்கா வந்து என்னை லெஃப்ட்டூ ரைட்டென பின்னிடப்போறாவே ஹா ஹா ஹா:)..

      Delete
    3. நீங்க யாரும் அதிரா பதிவை ஒழுங்கா படிக்கறது இல்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சாமிக்கு நேர்த்திக்கடன் வைப்பாங்க. இன்னும் எத்தனை சாமி பாக்கி இருக்கு நேர்த்திக்கடன் வைக்க. அதுக்கு முன்னால ஏதேனும் சாமிக்கு ஏற்கனவே நேர்ந்துக்கிட்டதை கொடுத்துட்டா, இன்னும் நேர்ந்துக்காத சாமியெல்லாம் கோவிச்சுக்காதா? சாமிகளுக்குள்ளேயே சண்டை மூட்டிவிட்ட பாவம், எதுக்கு தனக்கு வரணும்னு நினைக்கறாங்க போலிருக்கு. அதுல தப்பில்லையே.....

      Delete
    4. //அதிரா நீங்க நேர்த்தி கடனை கெதியா முடியுங்கோ பியேர்ஸ் காய்க்கும்.///

      நான் என்ன மாட்டேன் என்றா சொல்றேன் அம்முலு:)) என் ஆச்சிரம உண்டியல் நிரம்புதே இல்லையே:) எல்லோரும் பேய்க்காட்டுறாங்க ஒரு அப்பாவியை..[என்னைச் சொன்னேன்:)] ஹா ஹா ஹா..

      Delete
    5. @நெல்லைத் தமிழன்
      //சாமிகளுக்குள்ளேயே சண்டை மூட்டிவிட்ட பாவம், எதுக்கு தனக்கு வரணும்னு நினைக்கறாங்க போலிருக்கு. அதுல தப்பில்லையே.....//

      ஹையோ இது என் கண்ணில நேற்றுப் படல்லியே:))

      அது நெல்லைத்தமிழன் நேர்த்திக்கடன் வைப்பது நாந்தேன் ஆனா சுவாமியிடம் சொல்லிடுவேன் அப்பப்ப இதை அஞ்சு எனக்காக செய்வா.. அம்முலு செய்வா இப்பூடி இனி இந்த வரிசையில உங்கட பெயரும் வந்தாலும் வரலாம் ஹா ஹா ஹா:))

      Delete
  3. ஆப்பிள் மலர்கள் செம அழகு ..பிங்க் வெள்ளை கலந்து ரொம்ப அழகா இருக்கும் .அந்த பெயர்ஸ் கிட்ட டெயிலி கொஞ்சம் பேசிப்பாருங்க .அதுக்குன்னு சும்மா பொய் நேர்த்திகடன்லாம் பேசாதீங்க :)
    எனக்கொரு ப்ரண்டு இருக்கா அன்பான அழகான பொலிவான மெலிவான இப்படியெல்லாம் சொல்லி பேரு ஏஞ்சல்னு சொல்லுங்க :) மரம் அடுத்த வருஷம் காய்க்கும் :)

    ReplyDelete
    Replies
    1. ///எனக்கொரு ப்ரண்டு இருக்கா அன்பான அழகான பொலிவான மெலிவான இப்படியெல்லாம் சொல்லி பேரு ஏஞ்சல்னு சொல்லுங்க :) ///

      விடுங்கோ விடுங்கோ என்னை விடுங்கோ.. காலையில இருந்து ஒண்ணுமே சாப்பிடல விரதத்தால கை கால் ஓல்ரெடி நடுங்குது:) இப்போ என்னால நிண்டு பிடிக்கவே முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈ:))... இதை எல்லாம் படிக்கவோ இறைவா இந்தப் போஸ்ட்டை என்னைப் போட வச்சாயப்பா:)).. ஹா ஹா ஹா

      Delete
  4. என் கண்டுபிடிப்பு ..நீங்க நடந்து அந்த தரை பிரேக் ஆகி ஆழத்தில் இருந்து தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து ஓடுது .ப்ளீஸ் கொஞ்சம் சென்னை போங்க :) போர்வெல் போடறவங்களுக்கு வசதியா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின் - நல்ல மனசு உள்ளவங்க குண்டா இருப்பாங்க. வஞ்சக எண்ணம் நிறைஞ்சவங்க சாப்பிடற சாப்பாடு உடம்புல ஒட்டாம ஒல்லியா இருப்பாங்கன்னு படிச்சிருக்கேனே......

      Delete
    2. ///
      AngelTuesday, October 09, 2018 11:15:00 pm
      என் கண்டுபிடிப்பு ..நீங்க நடந்து அந்த தரை பிரேக் ஆகி ஆழத்தில் இருந்து தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து ஓடுது///

      ஆஹா என்னா ஒரு கற்பனை:) புல்லாஆஆஆஆ அரிச்சுப் போயிட்டேன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா:).. இதுக்குத்தான் சொன்னேன் அன்றே.. அந்த கறுப்புக் கண்ணாடியைக் கழட்டுங்கோ, இப்போ இருட்டாகிட்டுது நாடு எண்டு கர்ர்:))) ஹா ஹா ஹா:).

      Delete
    3. ///நெல்லைத் தமிழன்Wednesday, October 10, 2018 8:31:00 am
      ஏஞ்சலின் - நல்ல மனசு உள்ளவங்க குண்டா இருப்பாங்க. வஞ்சக எண்ணம் நிறைஞ்சவங்க சாப்பிடற சாப்பாடு உடம்புல ஒட்டாம ஒல்லியா இருப்பாங்கன்னு படிச்சிருக்கேனே......///

      ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னால சிரிச்சு முடியுதில்ல:)) ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் எப்போ ஆருடைய காலைப் பிடிச்சு இழுப்பார் என, மை போட்டுப் பார்த்தாலும் கண்டு பிடிக்கவே முடியாது ஹா ஹா ஹா:))..

      சே..சே.. பேசாமல் அலர்ஜி எனச் சொல்லிப்போட்டு குல்ட்டுக்குள்ளேயே இருந்திருக்கலாம்:) எல்லாம் இந்த அதிராவால வந்தது:) --இது அஞ்சுவின் மைண்ட் வொயிஸ் ஆக்கும் ஹா ஹா ஹா:))

      Delete
    4. நெல்லைத்தமிழன் மீ சொன்னா அதை நம்போணும்.. சில வருடங்களுக்கு முன்பு
      நான் கொஞ்சம் குண்டாத்தான் இருந்தேன்[ ஆனா உயரம் இருப்பதனால் பார்க்க தெரியாதெல்லோ].. இப்போ அப்படி இல்லை. குண்டா இருந்ததுக்குக் காரணம் என் கணவர்தான் எனச் சொல்லுவேன்:)).. ஏனெனில் ஒன்று கேட்டால் 3 வாங்கித்தருவார்ர்:) அவருக்கு ஒன்று வாங்க கை வராது.. அப்போ வாங்கியாச்சே வீணாக்கக்கூடாதே என முக்கி முக்கிச் சாப்பிடுவேன்:)).. இதனாலேயே நான் குண்டாவதற்கு அவர்தான் காரணம் எனச் சொல்லுவேன்... நாம ஆரு.. வாங்கித்தந்தாலும் திட்டுவோம் தராட்டிலும் திட்டுவோம் ஹா ஹா ஹா:)..

      அப்போ தான் தப்புவதற்காக அவர் சொல்லும் தெக்கினிக்கி என்னவெனில்:).. மனைவி குண்டா இருந்தால், அதுக்கு அர்த்தமாம் கணவன் ஹப்பியாக வச்சிருக்கிறார் என.. அதனால குண்டா இருந்தால்தான் நல்லது எனச் சாமாளிப்பார் கர்ர்:). ஹா ஹா ஹா.

      Delete
    5. //இதனாலேயே நான் குண்டாவதற்கு அவர்தான் காரணம் எனச் சொல்லுவேன்.//
      ஹலோ..ஹலோ அவர் 3 தான் வாங்கி தருவார். ஏனென்றா அவர் பிள்ளைகளுக்கும் சேர்த்து வாங்கி தர, பிள்ளைகளுக்கு கொடுக்காம நீங்க அவங்க பங்கை சேர்த்து சாப்பிட்டுபோட்டு, இப்ப அவரை குறை சொல்லுறீங்க..... கர்ர்ர்ர்ர்ர்

      Delete
    6. கர்ர்ர்ர் :) நெல்லைத்தமிழன் இதுக்கே விறுவிறுன்னு கிச்சன்போய் ஏதாச்சும் சமைச்சி பதிவா போடணும்னு கை காலெல்லாம் துடிக்குது :)

      Delete
    7. இதனாலதான் எனக்கும் பிரச்சினை என் கணவர் ஒல்லி வாகு :) தொப்பையுமில்லை எல்லாம் என்னைத்தான் சாப்பாடு சரியா கொடுக்காத மாதிரி சொன்னாங்க :) அப்புறம் விதவிதமா செஞ்சி சிஸ்டரின்லங்களுக்கு படமனுப்பவும் ஒத்துக்கிட்டாங்க இவர் எவ்ளோ சாப்பிட்டாலும் அதே அளவுதான்னு :)

      Delete
    8. @அம்முலு

      /ஹலோ..ஹலோ அவர் 3 தான் வாங்கி தருவார். ஏனென்றா அவர் பிள்ளைகளுக்கும் சேர்த்து வாங்கி தர,//

      சே..சே.. ஆருமே நம் கட்சியில வந்து சேர மாட்டினமாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதூஊஊஊஊஉ அம்முலு எனக்குப் பிடிச்சது எங்கட பிள்ளைகளுக்குப் பிடிக்காது ஹா ஹா ஹா அதனால மீ ச்சோ லக்கி:)) ஹா ஹா ஹா:)

      Delete
    9. //AngelThursday, October 11, 2018 5:54:00 pm
      கர்ர்ர்ர் :) நெல்லைத்தமிழன் இதுக்கே விறுவிறுன்னு கிச்சன்போய் ஏதாச்சும் சமைச்சி பதிவா போடணும்னு கை காலெல்லாம் துடிக்குது :)///

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ் ஐயா ஜாமீஈஈஈஈஈ என்னை விடுங்கோ என்னை விடுங்கோ:)) எங்காவது தலையை ஒளிக்கிறேன்:).ஹா ஹா ஹா

      [im] https://media.giphy.com/media/XUdEJ9v5I446Y/giphy.gif [/im]

      Delete
    10. @அஞ்சு
      ///எல்லாம் என்னைத்தான் சாப்பாடு சரியா கொடுக்காத மாதிரி சொன்னாங்க :)///

      ஆஆஆஆஆஆஆ அப்போ எங்கட ஹெஸ்ஸிங் கரீட்டூஊஊஊஊஊ:)) கிச்சின் எப்பவும் குளோஸ்ட்:).. குல்க்குள்ள போர்த்துக் கொண்டு இருந்துபோட்டு அவரைக்கொண்டே சமைக்கப்பண்ணி படம் புடிச்சு அனுப்பி நல்ல பெயர் வாங்கிறா ஹா ஹா ஹா எங்கிட்டயேவா கண்டு பிடிச்சிட்டேன்:)..

      உண்மைதான் அஞ்சு, சிலர் லக்கி பீப்பிள்.. ஒழுங்காக நல்லா சாப்பிடுவாங்க ஆனா பார்த்தா சாப்பிடாத ஆட்கள்போல இருக்கும்.. எங்கள் சொந்தத்திலும் ஒரு அங்கிள் இருந்தார் அப்படித்தான்.

      Delete
    11. //இதுக்கே விறுவிறுன்னு கிச்சன்போய் ஏதாச்சும் சமைச்சி பதிவா போடணும்னு // - ஏஞ்சலின் ... நான் எழுதினதை வாபஸ் வாங்கிக்கறேன். இங்கவே திட்டிட்டீங்க. எதுக்கு ஒரு குற்றத்துக்கு ரெண்டு தண்டனை கொடுக்க நினைக்கிறீங்க.

      Delete
    12. // ஏஞ்சலின் ... நான் எழுதினதை வாபஸ் வாங்கிக்கறேன். இங்கவே திட்டிட்டீங்க. எதுக்கு ஒரு குற்றத்துக்கு ரெண்டு தண்டனை கொடுக்க நினைக்கிறீங்க.///

      ஹா ஹா ஹா நெ.தமிழன் ஓடிப்போய் எங்காவது ஒளிச்சிடுங்கோ என்னைப்போல:)

      Delete
  5. ஹலோ விரதம் முடிஞ்சதும் எப்படியும் டபுளா சாப்பிடப்போறீங்க முட்டைகளை இதுக்கு இப்போ இவ்ளோ பில்டப்பா

    அன்பு ,,....கொடுத்தாச்சு :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின் - அதிரா என்ன சொல்லியிருக்காங்க? தொடமாட்டேன், அப்படியே முழுங்குவேன் என்றுதான் சொல்லியிருக்காங்க. இதுல விரதம் அது இதுன்னு ஏன் கற்பனை பண்ணறீங்க? முட்டை பவுடர் போடாத பொருட்களும் அவங்க ஊர்ல மிகவும் குறைவு. இதுல என்ன விரதம் பில்டப்? ஹாஹாஹா

      Delete
    2. //ஹலோ விரதம் முடிஞ்சதும் எப்படியும் டபுளா சாப்பிடப்போறீங்க முட்டைகளை //

      விரதம் வரப்போகுதே என்றும் டபிள் ட்றிபிளாத்தான் சாப்பிடுவேனாக்கும் ஹா ஹா ஹா:))..

      //அன்பு ,,....கொடுத்தாச்சு :)
      //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
    3. ///முட்டை பவுடர் போடாத பொருட்களும் அவங்க ஊர்ல மிகவும் குறைவு. இதுல என்ன விரதம் பில்டப்? ஹாஹாஹா//

      ஹா ஹா ஹா பிட்ஷா, பன்வகை, சுவீட்ஸ்.. சொக்கலேட்.. அனைத்துக்கும் முட்டை சேர்க்கிறார்கள் இப்போ...

      ஆனா உங்களுக்கு ஒன்று சொல்லியே ஆகோணும் நெல்லைத்தமிழன்... நான் அடிச்சா மொட்டை வளர்த்தா குடும்பிபோல இருப்பேன் இந்த விசயத்தில்.. சாதாரண விரத நாட்களில் பெரிசா பார்க்க மாட்டேன்ன்.. ஆனா இந்த கேதார கெளரி, கந்த சஷ்டி நாட்கள் மட்டும்.. வீட்டில் செய்யும் புட்டு + கறி[ஒரு நேரச் சாப்பாடு [21+ 6 நாட்களுக்கு] தவிர வேறு எதுவுமே தொட மாட்டேன்ன்.. நட்ஸ் வகை மட்டும் சில சமயம் சாப்பிடுவேன்.. அனைத்தும் ஒரு நேரமாக நைட் மட்டுமே சாப்பிட்டு விரதம் பிடிச்சேன்.. அடுத்த வீட்டுச் சாப்பாடு.. அவர்கள் சைவமாக இருந்தால்கூட சாப்பிட மாட்டேன்.. அப்படித்தான் பிடிச்சு வந்தேன், ஆனா திருமணத்தின் பின்பும் தொடர்ந்தேன் அப்படியே.. இருப்பினும் அது கஸ்டமாகிட்டுது.. அத்தோடு என்னில இன்னொரு குணம், இப்படி பகல் முழுக்க விரதமாக இருந்து போட்டு நல்ல அவிச்ச மிளகாய்ப்பொரியல், இடிச்ச உறைப்புச் சம்பல் இப்படித்தான் சாப்பிடுவேன்.. தண்ணிக்கறிகள் பிடிக்காது... இதனால வயிற்ரில கொஞ்சம் அல்சர் குணமாக்கிட்டுது.. நல்லவேளை அல்சர் வரவில்லை ஆனா காஸ்ரிக் எனச் சொல்வார்கள்.. உறைப்பு புளிப்பைக் கண்டால் உடனே வயிற்ரில் வாய்வு வைக்கும்.. அதனால என் கணவர் விரதம் வேண்டாம் சைவமாக இருங்கோ எனச் சொல்லத் தொடங்கிட்டார்.. அதனால பின்பு விரத்தத்தைக் கை விடவில்லை ஆனா குறைச்சிட்டேன்.

      இப்பவும் முடிஞ்சவரைக்கும் கடை உணவோ இல்லை சுவீட் வகைகளோ, பிஸ்கட், பன் பிரெட் எதுவும் சாப்பிட மாட்டேன்[தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் ஒழிய]. ஆனா பாருங்கோ இப்போ பார்த்து ஓட்டம்[autumn] ஹொலிடே விடுவார்கள் இங்கு.... இதனால ஹொலிடே நேரம் எங்கும் போகவும் முடியாமல் இருக்கும்.

      Delete
  6. ​பாடல் எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல். என்னுடைய வெள்ளி லிஸ்ட்டில் இருக்கும் (இருந்த) பாடல்! ஒரு விஷயம் தெரியுமோ... ஜெயலலிதாவின் கடைசித் தமிழ்ப்படம் இது. ஜெயலலிதா நடிப்பில் இந்த ஒரு படத்துக்குத்தான் இளையராஜா இசை என்று நினைக்கிறேன்.

    எஸ் பி பி குரலும் இழையும் சுசீலாம்மா குரலும்... எங்கேயோ இழுத்துச் செல்லும். "சொர்க்கத்தைக் கண்டேனம்மா..."

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      //பாடல் எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல்.//

      ஹா ஹா ஹா போனதடவை பாட்டுக் கேட்டு ரொம்பவும் கூச்சப்பட்டு பேசாமல் போயிட்டீங்க ஹா ஹா ஹா:).

      //ஜெயலலிதாவின் கடைசித் தமிழ்ப்படம் இது. ஜெயலலிதா நடிப்பில் இந்த ஒரு படத்துக்குத்தான் இளையராஜா இசை என்று நினைக்கிறேன்.//

      ஓ.. நான் இன்னும் வீடியோ சோங் ஆக பார்க்கவில்லை..

      //எஸ் பி பி குரலும் இழையும் சுசீலாம்மா குரலும்... எங்கேயோ இழுத்துச் செல்லும். "சொர்க்கத்தைக் கண்டேனம்மா..."///
      உண்மைதான்.. மிக அருமையாக இருக்கு கேட்க. நன்றி நன்றி.

      Delete
    2. //போனதடவை பாட்டுக் கேட்டு ரொம்பவும் கூச்சப்பட்டு பேசாமல் போயிட்டீங்க //

      ஆமாம்... ஆமாம்... பிடிக்காத பாட்டு. என்ன பாட்டுன்னு கூட நினைவில்லை.

      Delete
    3. கர்ர்ர்ர் இப்போ உங்களால பேரை டைப் பண்ணி பார்த்து ஓடிப்போனேன் :)
      https://www.youtube.com/watch?v=tZksXopWWuE
      யாம் பெற்ற யாவும் பெறுக நீவிரும் :))

      Delete
    4. ஹா ஹா ஹா அல்லோ மிஸ்டர் அதுதான் ஸ்ரீராமுக்குப் பிடிக்காது எனச் சொல்லிட்ட்டார் இப்போ லிங் குடுத்து:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).. ஆனா எனக்கென்னமோ நல்லா பிடிச்சிருக்கு நகைச்சுவை என்பதால்..

      Delete
  7. காய்க்காத மரங்களின் வேரில் ஆணி அடிப்பார்கள். பெருங்காயம் கரைத்து ஊற்றுவார்கள். அப்படிச் செய்தால் காய்க்குமாம்.

    ReplyDelete
    Replies
    1. ஊரில் இப்படி சில கை வைத்தியங்கள் செய்வார்கள்தான் ஸ்ரீராம், ஆனா இங்கு எங்கு பார்த்தாலும் அப்பிள் மரங்கள் இருக்கும் பெயார் மரம் இல்லை.. அதனால தான் காய்க்கக் கஸ்டப்படுதோ என்னமோ தெரியவில்லை. நாம் 3,4 மரங்கள் நட்டால் ஒருவேளை காய்க்கும் வாய்ப்பு வரலாம்.

      Delete
    2. ஸ்ரீராம்... இதில் என்ன லாஜிக் இருக்கு? பையனை கன்னா பின்னா என்று திட்டினால் அவனுக்கு ரோஷம் வந்து படிப்பான் என்ற நம் நம்பிக்கையைப் போலவா? கோபப்பட்டுக்கொண்டு மரம் மண்டையைப் போட்டுட்டதுனா?

      Delete
    3. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனைக் கூட்டிப்போய் ஜி எம் பி ஐயாவுடன் இருக்க விடுங்கோ:))

      Delete
  8. ​உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உங்கள் மேற்பார்வையில் ஏகப்பட்ட செடி கொடி மரங்கள் வளர்க்கிறீர்கள் போலவே.... புதினா பசேலென்று இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் கார்டின் பெரிசு ஆனா மரங்கள் குட்டி குட்டியாகத்தான் இருக்கு. இங்கு வெதர், நம் நாடுபோல இருப்பின் எவ்ளோ வளர்க்கலாம், இது அவசரமா 4,5 மாதத்தில அனைத்தையும் பார்த்து ரசிச்சு அனுபவிச்சுப் போட்டுப் பேசாமல் வீட்டுக்குள் இருக்க வேண்டிய நிலைமையா இருக்கே:). புதினா நல்ல அடர்த்தியா நல்லா வளருது.

      Delete
  9. பாக்கெட்டுடன் அப்படியே அவனுக்குள் வைத்து விடலாமா? அட... பின்சீட் நாலுகால் செல்லம் ஹெல்மெட்டை உதிர்க்காமல் செல்வது அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஓம் ஸ்ரீராம், அவண் இல்ல, மைகுரோவேவ்.. உணவைச் சூடாக்கப் பாவிப்பதில்.. அப்படியே பக்கெட்டோடு வைத்தால் 2 1/2 நிமிடத்தில் பூத்து வரும்... அவசரத்துக்கு சூப்பர்.

      //பின்சீட் நாலுகால் செல்லம் ஹெல்மெட்டை உதிர்க்காமல் செல்வது அழகு.///

      ஹா ஹா ஹா அதேதான் பார்க்க நல்லா இருக்குதெல்லோ, எப்படி அப்படி பயமில்லாமல் இருக்கிறாரோ.. எங்கட டெய்சி காருக்குள்ளேயே இருக்க மாட்டா.. பாய்ந்தடிச்சு ஓடுவா.

      Delete
    2. ஸ்ரீராம் நம்மூரிலும் கிடைக்குதே ஸ்ரீராம்....எங்கோ அமெரிக்க பாப்கார்ன் பேக் பார்த்த நினைவு. நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸ் இல்லைனா அம்மா நானி கடையிலோ...இல்லை சிங்கப்பூர் ஷாப்பி கடைய்லோ...

      கீதா

      Delete
  10. அடடே... அங்கேயும் சுவர்கள் அழுக்காக இருக்கினம்!!!

    ReplyDelete
    Replies
    1. அழுக்கு இல்லை ஸ்ரீராம், பாசம் பிடித்து இருக்கிறது மதில்.
      குளிர், மழையில் பாசிபிடித்து சுவரில் புற்களும் வளர்ந்து இருக்கு

      Delete
    2. ///அடடே... அங்கேயும் சுவர்கள் அழுக்காக//// இருக்கினம்!!!////

      ஹா ஹா ஹா. இங்கு நிறைய பழைய சுவர்கள் உண்டு ஸ்ரீராம்.. 300, 400 வருடப் பழைமை வாய்ந்தது... பழைமையைப் பேணுவதற்காக அதனை பெயிண்ட் பண்ணியோ வேறு எதுவும் செய்யாமல் பாதுகாக்கிறார்கள்.

      சில கட்டிடங்கள்கூட வெளியே பழசுபோல இருக்கும், உள்ளே போனால் பெரிய ஹொட்டேல் பொல சூப்பரா இருக்கும்..

      கோமதி அக்கா சொல்வதைப்போல, ஊத்தை இல்லை, பாசி .. அதை சிலர் கவனிப்பார்கள் சிலர் அப்படியே விட்டுவிடுவினம்... ஆனா இப்போ சில இடங்களில் இடிச்சு புதுசு கட்டி வருகிறார்கள்.

      Delete
  11. பின்சீட்டில் அமர்ந்து போன நாலுகால் செல்லம் மூச்சா போயிருக்கு.. அதுதான் அது... பரிசு எனக்குதானே?

    கோழிக்குஞ்சு சிரிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. //பின்சீட்டில் அமர்ந்து போன நாலுகால் செல்லம் மூச்சா போயிருக்கு.. அதுதான் அது... பரிசு எனக்குதானே?///

      ஹா ஹா ஹா நான் கண்ணால காணவில்லை, ஆனா ஆற்றங்கரை நடைபாதையில் இதனைக் கண்டேன், ஒருவித பற்றனாக இருக்கே எனப் படம் எடுத்தேன்ன் ஹா ஹா ஹா.. நீங்க நினைச்சதைத்தான் நானும் நினைக்கிறேன்:)).. ஹா ஹா ஹா பரிசு அடுத்த புதன் கிழமை கெள அண்ணன் தருவாராக்கும்:).

      Delete
  12. விரதமா? இப்போ என்ன விரதம்? அதுவும் 40 நாளைக்கு?

    ReplyDelete
    Replies
    1. அது நவராத்திரியின் ஆரம்பிச்சால் ஸ்ரீராம் ஒன்றின் முடிவில் மற்றது.. பாரணைகூட முடிக்க முடியாமல் தொடரும்.. கந்த சஷ்டி வரை.. அதைச் சொன்னேன்.

      265 நாட்கள் இருக்கே.. இடைவெளி விட்டு விட்டு விரதங்களை உருவாக்கியிருக்கலாமே.. எதுக்கு தொடராக வைத்திருக்க்கினமோ என அடிக்கடி நினைப்பதுண்டு:).

      Delete
  13. ஒருவகையில் நானும் புத்தர்தான். ஏன்னா என் மகன் பெயர் ராகுல்!!!!!

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை... ஸ்ரீராம், சோனியா காந்தியைச் சொந்தம் கொண்டாடலை.. ஹாஹா.

      Delete
    2. ஹா... ஹா... ஹா... எங்கேயோ போயிட்டீங்க நெல்லை!

      Delete
    3. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் எங்கே போயிடப்போறார்:) தமானாக்கா எல்லையை விட்டு:))

      Delete
    4. அனைத்துக்கும் மிக்க நன்றிகள் ஸ்ரீராம், புத்தருக்கு ராகுல் என மகன் இருப்பது நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும் ஹா ஹா ஹா அந்த மனிசன் பிரமச்சாரி எண்டெலோ நானே முடிவு கட்டியிருந்தேன் ஹா ஹா ஹா:).

      Delete
    5. இருங்க... யசோதரா கிட்ட சொல்லித்தாரேன்!

      Delete
    6. அதிரா... பிரம்மச்சாரியா இருக்கறவங்க 99.99% ஏன் சாமியாராப் போகப் போறாங்க? திருமணம் ஆனபிறகு (பள்ளையார் பிடிக்க குரங்கா ஆனமாதிரி), அவ்வையார் சொன்ன கூறாமல் சன்னியாசம் கொள் என்று சொன்னமாதிரி, துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு, சாமியாராக ஆயிடறாங்க. புத்தரும் (சித்தார்த்தரும்) ராத்திரிலதான் வீட்டைவிட்டு வெளியேறினார்.

      அது சரி.. அவ்வையார் "கூறாமல் சன்யாசம் கொள்" அப்படீன்னு ஆண்களுக்குத்தானே சொல்லியிருக்கார். இதை பாம்பின் கால் பாம்பறியும்னு புரிஞ்சுக்கலாமா?

      Delete
    7. ஶ்ரீராம்... தயவு செய்து தேவையில்லாமல் இந்த தகவல்களைச் சொல்லாதீங்க. அடுத்து அதிரா, அந்த யசோதராதானே கிருஷ்ணனை வளர்த்தது, தேவகிதானே கிருஷ்ணனைப் பெற்றாலும் சிறையிலேயே இருந்தது என, புத்த மதத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் முடிச்சுப் போடப் போறாங்க... ஏற்கனவே இராமாயணமும் மகாபாரதமும் எனக்கு சுத்தமா குழம்பிட்டது, அதிராவின் முந்தைய ஒரு இடுகையைப் படித்து.

      Delete
    8. கூறாமல் சன்யாசம் கொள் என்றால் யாரிடமும் கூறாமல் ஆலோசனை கேட்காமல் சன்யாசம் போய்விடு என்று அர்த்தமா? அல்லது நீ சன்யாசம் வாங்கி விட்டாய் என்று யாரிடமும் சொல்லாமல் அப்படிப்பட்ட வாழ்க்கை வாழு என்று அர்த்தமா?

      பத்தினிக்கேற்ற பர்த்தா இல்லாமல் சற்றே ஏறுமாறாக இருந்தால் பத்தினியும் கூறாமல் சன்யாசம் கொள்ளலாமே!

      Delete
    9. //புத்த மதத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் முடிச்சுப் போடப் போறாங்க...//

      ஹா... ஹா... ஹா... ராமபாரதம் மஹாராமாயணம் போல தம்மகிருஷ்ணா!

      Delete
    10. //ஸ்ரீராம்.Wednesday, October 10, 2018 3:18:00 pm
      இருங்க... யசோதரா கிட்ட சொல்லித்தாரேன்!//

      ஆஆஆஆஆஅ எங்கோ கேள்விப்பட்ட பெயர்:) நான் யசோதரா பற்றிப் படிச்சிருக்கிறேனே:).. ஆனா நெ.தமிழன் சொன்னபின்பு கொயம்பிட்டேன்ன் அது எந்தச் சரித்திரத்தில் வரும் யசோ என ஹையோ ஆண்டவா:)) ஹா ஹா ஹா.

      Delete
    11. //நெல்லைத் தமிழன்
      அதிரா... பிரம்மச்சாரியா இருக்கறவங்க 99.99% ஏன் சாமியாராப் போகப் போறாங்க? திருமணம் ஆனபிறகு (பள்ளையார் பிடிக்க குரங்கா ஆனமாதிரி),///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது அப்படி அர்த்தமில்லையாக்கும்:)) ஆசை ஆரை விட்டது அதுதான் அர்த்தம் ஹா ஹா ஹா..
      மூக்கை நேராகவும் தொடலாம் சுத்தி வந்தும் தொடலாமெல்லோ அதைப்போலத்தான்:))..

      //அவ்வையார் சொன்ன கூறாமல் சன்னியாசம் கொள் என்று சொன்னமாதிரி, துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு, சாமியாராக ஆயிடறாங்க.////

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அந்த ஆச்சிக்கு வேற வேலையே இல்லைப்போலும்:)) பெண்கள் சொல் கேளாதே எனச் சொன்னார்:) இப்போ இது வேறையோ?:).. அதாவது மனைவிக்குச் சொன்னால் விட்டிட மாட்டா அதனால சொல்லாமல் கொள்ளாமல் தப்பி ஓடு எனச் சொல்லியிருக்கிறாபோல ஹா ஹா ஹா:)..

      பின்ன, கல்யாணம் கட்டாமல் சந்நியாசி ஆகியிருக்கலாம்.. இது கட்டிப்போட்டு இடையில விட்டிட்டு ஓட வெளிக்கிட்டால் விட்டிடுவமோ?:) ஹா ஹா ஹா:)..

      //இதை பாம்பின் கால் பாம்பறியும்னு புரிஞ்சுக்கலாமா?///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கூட்டிக் கழிச்சுப் பிரிச்சுப் பார்க்கையில் அவவுக்கு பெண்கள்மேல கடும் கோபம் இருக்கு:) ஏனெண்டுதான் புரியுதில்லை:) இப்போ போய் ஆரிடம் கேட்பது?:) ஹா ஹா ஹா..

      Delete
    12. @நெ.த
      புத்த மதத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் முடிச்சுப் போடப் போறாங்க... ஏற்கனவே இராமாயணமும் மகாபாரதமும் எனக்கு சுத்தமா குழம்பிட்டது, அதிராவின் முந்தைய ஒரு இடுகையைப் படித்து.///

      ஹா ஹா ஹா நான் குழப்புவேன் நீங்க எல்லோரும் ஸ்ரெடியா நிக்கோணுமாக்கும்:).. அதுசரி கிருஸ்ணரும், புத்தரும்.. கிட்டத்தட்ட இருவரும் பிரமச்சாரிகள் தானே அப்போ முடிச்சுப் போட்டால் என்ன தப்புங்கிறேன்ன்:)).. ஹையோ நல்லவேளை புத்த சமயத்தவர் என் புளொக் படிக்க மாட்டினம் ஜாமீஈஈஈ :).. இல்லை எனில் மதச்சண்டை வந்திடப்போகுது:)).. நான் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருந்து புறுணம்:) பார்ப்பேன்ன் ஹா ஹா ஹா:)..

      Delete
    13. @ஸ்ரீராம்
      பத்தினியும் கூறாமல் சன்யாசம் கொள்ளலாமே!///

      அல்லோ ஸ்ரீராம்ம்ம்:).. நாங்க-பெண்கள் எப்பவும் வெளிப்படையானவங்க:) நாங்க ஒளிச்செல்லாம் ஓட மாட்டோம்ம்.. கூப்பிட்டுச் சொல்லிப்போட்டு, கொஞ்ச நகை காசெல்லாம் எடுத்துக் கொண்டு நிதானமாகவே சந்நியாசம் புறப்படுவோம்:)) ஹா ஹா ஹா ...

      ஒரு பாட்டு வசனம் நினைவுக்கு வருது இப்போ..

      யாருக்கும் தெரியாமலே உன்னோடு நான் வாழ்வேன் -ஆண் குரல்...,

      ஊருக்கே தெரிஞ்சாலும் உன்னோடுதான் நான் வாழ்வேன்.. -பெண் குரல்:)).. ஹா ஹா ஹா இப்போ எல்லாமே பிரிஞ்சிருக்குமே:)..

      //தம்மகிருஷ்ணா!///
      அது தம்ம இல்ல:) தமனாக்கா நினைவோ உங்களுக்கும் கர்ர்:)) அது
      “புத்தகிருஸ்ணா”.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்..

      Delete
    14. @ஸ்ரீராம் @நெல்லைத்தமிழன் இப்போ உங்களால் மேடம் புது பட்டப்பெயர் தயார் பண்ணிட்டாங்கனு பிபிசில பிளாஷ் நியூஸ் போகுது :)
      //போதி கிருஷ்ண// ஞானி :)
      சித்தார்த்தகிருஷ்ணபோதி ஞானி .
      இரண்டில் ஒன்றாம்

      Delete
    15. போங்கோ அஞ்சு மீக்கு ரொம்ப ஷை ஷையா வருதாக்கும்:))

      [im] http://nicolebasaraba.com/wp-content/uploads/2013/03/so-shy.jpg [/im]

      Delete
    16. //யாரிடமும் கூறாமல் ஆலோசனை கேட்காமல் சன்யாசம் போய்விடு // - அப்படிப்பட்ட பெண்களைத் திருத்தவும் முடியாது, மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதும் வீண். அதனால் யாரிடமும் இதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல், சன்யாசம் போய்விடு என்றுதான் அர்த்தம்.

      //பத்தினிக்கேற்ற பர்த்தா இல்லாமல் சற்றே ஏறுமாறாக இருந்தால் பத்தினியும் கூறாமல் சன்யாசம் கொள்ளலாமே!// - பத்தினி இதனைச் செய்யவேண்டாம், செய்யவும் முடியாது. (வெளியில் தனியாக உருப்படியாக இருக்கணும்னா அவ்வையார், காரைக்காலம்மையார் போன்று உடனடியாக 'கிழவி' உரு எடுக்கும் வரம் தேவையிருக்குமே. இல்லைனா வம்பை வரவழைப்பது போலாகுமே. அதற்குப் பதிலாக, கிச்சன் பொறுப்புகள் பத்தினியிடம்தான் இருப்பதால், உணவில் உப்புக்குப் பதில்...........

      Delete
    17. ///அதற்குப் பதிலாக, கிச்சன் பொறுப்புகள் பத்தினியிடம்தான் இருப்பதால், உணவில் உப்புக்குப் பதில்...........///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கமோன் கமோன் வசனத்தைப் பாதியில விட்டிட்டீங்களே:))

      Delete
    18. பத்தினிக்கேற்ற பர்த்தா இல்லாமல் சற்றே ஏறுமாறாக இருந்தால் பத்தினியும் கூறாமல் சன்யாசம் கொள்ளலாமே!//

      ஹையோ ஹையோ அதானே ஸ்ரீராம் சரியா சொன்னீங்களே ஸ்ரீராம்....அன்னிக்கு வர முடியாம போய்ருச்சே...

      கீதா

      Delete
  14. அந்த "உள்ளே இருந்தாலும் சாப்பிடறான், வெளியே வந்தாலும் சாப்பிடறான்" சூப்பர் குறிப்பு/இணைப்பு. வழமை போல மொக்கையை வைச்சு ஒப்பேத்திட்டீங்க. ஊசிக்குறிப்பும் இணைப்பும் தவிர்த்து! இஃகி, இஃகி, இஃகி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.

      //வழமை போல மொக்கையை வைச்சு ஒப்பேத்திட்டீங்க. //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு பிள்ளை சொந்த நாட்டை விட்டு 7,8 கடல் தாண்டிப்போய் தோட்டம் செய்யுதாம்:) அதை என்கரேஜ் பண்ணாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஹா ஹா ஹா இஸ்கி இஸ்கி இஸ்கி..

      இல்ல கீசாக்கா தலைக்குள் நிறைய பந்தி பந்தியா விசயம் ஓடுது, அதைப் பொறுமையா ரைப்பண்ண முடியுதில்ல.. அதனால சம்திங் இஸ் பெட்டர் தான் நத்திங்:) என படம் போட்டுப் போஸ்ட் போட்டிடுறேன்:)) மிக்க நன்றிகள்.

      Delete
  15. //வழமைபோல இம்முறையும், என் தலைப்புக்கும் போஸ்ட்டுக்கும் ஜம்பந்தம் இல்லை//

    ரசித்தேன் உண்மையை உளறி விட்டீர்களே...

    ஊசிக்குறிப்புகள் ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. vஆங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //ரசித்தேன் உண்மையை உளறி விட்டீர்களே...//

      ஹா ஹா ஹா நான் பொய் சொல்ல மாட்டனே:)..

      மிக்க நன்றிகள்.

      Delete
  16. வீட்டுத் தோட்டம் அழகு அருமை
    வாழ்த்துகள் சகோதரியாரே

    ReplyDelete
  17. ஆப்பிள் பெண்ணே.. ந்னு பாடிப்புட்டு
    அதுக்கு மேல ஐஸ்க்ரீம் சிலையே.. ந்டு சொன்னாங்களே...

    என்னா ஒரு வறட்டு கற்பனை!...

    அது தொலையட்டும்..

    சரி.. வெளஞ்சதுல நல்ல பழமா பாத்து எடுத்து துண்டு துண்டா நறுக்கிப் போட்டு
    அது மேல உப்பு மிளகு தூவி கூரியர்..ல அனுப்பி வைங்கோ... பார்ப்போம்!...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..

      //ஆப்பிள் பெண்ணே.. ந்னு பாடிப்புட்டு
      அதுக்கு மேல ஐஸ்க்ரீம் சிலையே.. ந்டு சொன்னாங்களே...//

      ஹா ஹா ஹா அதூஊஊஊஉ ஐஸ்கிரீம் போல சொவ்ட்டாம்ம்.. அப்பூடி இனிப்பானவர்களாம்ம் ஐ மீன் பெண்கள்.. அதாவது நம்பாலார்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:))..

      //அது தொலையட்டும்..//

      இல்ல அது உருகட்டும்:) என வரோணும் ஹா ஹா ஹா:).

      ///சரி.. வெளஞ்சதுல நல்ல பழமா பாத்து எடுத்து துண்டு துண்டா நறுக்கிப் போட்டு
      அது மேல உப்பு மிளகு தூவி//

      ஹா ஹா ஹா இது என்ன புதுவித சுவை:)... இங்கு துரை அண்ணன் பச்சை நிறத்தில பெரிய சைஸ்ல “குக்கிங் அப்பிள்” எனக் கிடைக்குது, மாங்காய் போல புளிப்பு.. அதை வாங்கி இப்படி நீங்க சொன்னதுபோல சாப்பிடுவேன் மாங்காய் இங்கு கிடைக்காதென்பதால், ஆனா அதில கொடிச் சுரக்காய் போல குளிர்த்தன்மை அதிகம்.. ஓவரா சாப்பிட்டால் மூச்சு அடைப்பதுபோல வரும்:).

      மிக்க நன்றிகள் துரை அண்ணன்.

      Delete
  18. கொடுக்க எதுவும் இல்லை என நினைக்காதே...அருமையான நிறைவு மொழியுடன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. மிக்க நன்றிகள்.. உண்மைதான் இக்காலத்தில மக்கள் காசு நகையை விட அதிகம் எதிர்ப்பார்ப்பது அன்பைத்தான்.

      Delete
  19. பெண்களை ஏன் ஆப்பிளுக்கு ஒப்பிடறாங்க என்பதற்கு எனக்கு ஒரு காரணம் தோணுது.

    கல்ஃப்ல விற்கற ஆப்பிள் (உலகெங்கிலும் விற்பனையாவதைப் பற்றியும்தான்) பற்றி செய்தித்தாளில் ஒரு கட்டுரை சில வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். விற்பனை செய்யப்படும் ஆப்பிள்கள் 1 1/2 வருடத்துக்கு முன்பு பறிக்கப்பட்டவையும் அடங்குமாம். தோல் மேல் பள பள மெழுகுப்பூச்சு கெமிக்கல்லாம் தடவி, குளிர் நிலையில் வைத்துவிடுவதால் புதிதுபோல் தோன்றுமாம். ஆனால் காலம் கடந்த ஆப்பிள்கள் உடல்நலத்துக்கு நல்லது இல்லையாம் (நாளாக ஆக, மேலே உள்ள கெமிக்கல் பூச்சு பழத்துக்குள் இறங்கிவிட்டிருக்குமாம்).

    ஆப்பிள்னா, வெளியே அழகா பளபளப்பா இருக்குன்னு மயங்காதே.... உள்ள (இதயம்) எப்படி இருக்குமோ? அதனால் குணம் எப்படீன்னு பாரு, வெளிப்பூச்சை எண்ணி பல்லைக் காட்டினால் வாழ்க்கையில் கஷ்டப்படுவாய் என்று சொல்ல எண்ணித்தான் ஆப்பிளைப் பெண்களுக்கு உவமையாக்குகின்றார்களோ?

    ReplyDelete
    Replies
    1. @ நெல்லைத் தமிழன் Said...

      >>> ஆப்பிள்னா, வெளியே அழகா பளபளப்பா இருக்குன்னு மயங்காதே.... உள்ள (இதயம்) எப்படி இருக்குமோ? அதனால் குணம் எப்படீன்னு பாரு, வெளிப்பூச்சை
      எண்ணி பல்லைக் காட்டினால் வாழ்க்கையில் கஷ்டப்படுவாய் என்று சொல்ல எண்ணித்தான் ஆப்பிளைப் பெண்களுக்கு உவமையாக்குகின்றார்களோ?..<<<

      எண்ட ஈஸ்வரா...

      இதையேத் தான் நானும் காலைல ஜொல்ல நெனச்சன்...

      அது ஏடாகூடமாப் போயி
      அதிரா அவுங்கோ ஜலங்கை கட்டி ஆடிட்டா -
      என்ன பண்றது?... ன்னு தான் வெளிய ஜொல்லலை...

      ஆனாலும், நெ.த. அவுங்களுக்கு ரொம்பவும் தகிரியந்தேங்!...

      Delete
    2. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      பெண்களை அப்பிளுக்கு ஒபிட்டதைப் பொறுக்க முடியல்லியே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உங்களை ஆரு தேடித்தேடி இப்பூடி நியூஸ் எல்லாம் படிக்கச் சொன்னது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா... ஒரு மனிசரைப் புழுகவே விடமாட்டாராமே:) சரி அது போகட்டும் அப்போ ஐஸ்கிரீம் சிலையாமே:) இதுக்கு விளாக்கம் ஜொள்ளுங்கோ ஹா ஹா ஹா நிலையில்லாதது டக்கெனக் கரைஞ்சிடும் எனச் சொல்லப்பிடா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
    3. நம் நாடுகளில்தான் நெ.தமிழன் அப்பிளுக்கு மெழுகு போடும் பழக்கம், இங்கு அப்படி காணவில்லை.. இங்கு மரவள்ளிக் கிழங்குக்குத்தான் ஏசியன் கடையில் மெழுகு பூசி வருது... அமத்தினாலும் தெரியாது நல்லாவே இருக்கும்.. வெட்டினால் உள்ளே அப்படியே நீலமாக இருக்கும் பல சமயம்.

      அதனால நான் ஃபுரோசின் கிழங்கே வாங்குவேன்.. சமைப்பது குறைவு. ஃபிரீசரில் போட்டு விட்டால் சூப்பரா இருக்கும்.. ஒரு கொஞ்சம் கூட பழுதிருக்காது.. ஒரு கொதியில் கரைஞ்சிடுது.. பொரியலும் சூப்பரா வரும்.

      Delete
    4. @துரை அண்ணன்
      //எண்ட ஈஸ்வரா...

      இதையேத் தான் நானும் காலைல ஜொல்ல நெனச்சன்...

      அது ஏடாகூடமாப் போயி
      அதிரா அவுங்கோ ஜலங்கை கட்டி ஆடிட்டா -
      என்ன பண்றது?... ன்னு தான் வெளிய ஜொல்லலை...

      ஆனாலும், நெ.த. அவுங்களுக்கு ரொம்பவும் தகிரியந்தேங்!...///

      ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஆஆஆ சிரிப்பை அடக்க முடியுதில்ல:)).. உந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும் எல்லாம் நமக்கொரு சேஃப்டிக்குத்தான்:)) ஹா ஹா ஹா இல்லை எனில் ஒரு பப்புளிக்குப் பிளேசில வச்சு எங்கட இமேஜை டமேஜ் பண்ணிடுவினம் எல்லோரும்:)).. இப்போ யாரும் துணைக்கும் வருகினம் இல்ல:) தனியெ நிண்டெல்லோ ஜமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊ ஹா ஹா ஹா:)..

      Delete
  20. ஆப்பிள் செடியும் பழங்களும் மிக அருமை. லண்டல்ன ஹோட்டல் ரிசெப்ஷனில் ஆப்பிள்கள் கூடையில் வைத்திருப்பார்கள் (ரூம் புக்கிங்கிற்கு காத்திருக்கும்போது எடுத்துச் சாப்பிடலாம். ஒன்றும் சொல்லமாட்டார்கள்-8 வருடத்துக்கு முந்தைய கதை). எனக்கு ஃப்ரெஷ் ஆப்பிள்ல (பழங்கள்ல) அவ்வளவு இஷ்டம்.

    அது மரமாகி, ஆப்பிள் விளைந்து குலுங்கும்போது படத்தை வெளியிட மறக்காதீங்க

    ReplyDelete
    Replies
    1. இங்கும் ஸ்கூல்களில் அப்பிள் பெயார்ஸ் வாழைப்பழம் கிரேப்ஸ் ஒரேஞ்.. கன்ரீன் ஏரியாவிலும் மற்றும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகுப்புக்கும் என ஃபிரீயாக் குடுக்கிறார்கள் ஏனெனில் பழம் சாப்பிடுதல் அவசியம் என அரசாங்கம் வலியுறுத்துது.

      //அது மரமாகி, ஆப்பிள் விளைந்து குலுங்கும்போது படத்தை வெளியிட மறக்காதீங்க//
      அதுதான் பழங்கள் காய்த்திருக்கும் படமும் போட்டிருக்கிறேனே.. மாறி ரைப் பண்ணிட்டீங்களோ??

      Delete
    2. 2 ஆப்பிள் இருக்குது ஒரு கிளைல. மேலே இரண்டு ஆப்பிள்கள் தனித்தனியா இருக்கு. ஆப்பிள்கள் கொத்துக் கொத்தாகத்தானே காய்க்கும். அப்படி அடுத்த வருடம் அல்லது அதற்கு அடுத்த வருடம் வரும்போது படம் எடுத்துப் போடுங்கள்.

      Delete
  21. யார் வீட்டு ரோஜா பூப்பூத்ததோ - ம்ம்ம்ம்ம்... கவிஞர் என்னவோ நினைத்து எழுதியிருக்கிறார். நீங்க நிஜ ரோஜாவுக்கு இந்தப் பாட்டைப் போட்டுட்டீங்களே.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர்கள் எப்பவும் இருபொருள்படத்தானே வசனம் அமைக்கின்றனர் ஹா ஹா ஹா.. இதைக் கண்டு பிடிக்கவே எனக்குப் பல வருடம் ஆச்சு ஹா ஹா ஹா.

      Delete
  22. ரோடு (சாலை)யில் வெடிப்பு ஏற்பட்டு முந்தைய தார் ரோடு கண்ணுக்குத் தெரியுது. அதுதானே...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்ல ஸ்ரீராம் சொனதைப்போல அது 4 கால் வைரவரின் வேலையாகத்தான் இருக்கோணும்.. தெரியல்ல.. நடுப்பாதையில் அப்படி செய்ய மாட்டினம் .. எப்பவும் கரைகளில் மர அடியில் தான் அவர்கள் இடம் தேடுவார்கள்..

      இது என்ன என சரியாக தெரியவில்லை.. நடக்கும்போது கண்ணில பட்டது எடுத்து வச்சேன் உபயோகமாகுமே என ஹா ஹா ஹா... மிக்க நன்றிகள்.

      Delete
  23. எனக்கும் பிடித்த பாடல். நாங்க பாடல்களை செலக்ட் செய்து எழுதி நியூவிக்ரேஸ்,ரேடியோஸ்பதி என கசட் ல பாட்டை ரெக்கோர்ட் செய்யும் இடம் போய் அவங்களை கரைச்சல் கொடுத்து ரெகோர்ட் செய்து வீட்டில வாக்மென் ல கேட்டது மெமரில வருது., .இப்பாட்டை 2 பக்கமும் (ஏ,பி) ரெக்கோர்ட் செய்து கொடுத்தது இன்னும் ஞாபகம் இருக்கு.
    எங்க பியேர்ஸ்ம் 4 வருடமா காய்க்காமல் இம்முறை நல்ல காய் காய்த்தது. சில மரங்கள் இடம் ஏதுவாக கொஞ்சகாலம் பிடிக்குமென நர்சரியில் செடி வாங்கும்போது சொன்னாங்க.
    /அந்த பெயர்ஸ் கிட்ட டெயிலி கொஞ்சம் பேசிப்பாருங்க .அதுக்குன்னு சும்மா பொய் நேர்த்திகடன்லாம் பேசாதீங்க // அஞ்சு சொன்ன மாதிரி அவங்க கிட்ட போய் பேசுங்க. நான் டெயிலிபேசிதான் இம்முறை எங்க ஆப்பிள் நிறைய காய்த்திருக்கு. ஹா..ஹா..ஹா..கூடவே மார்ச் மாதம் வரும்பொழுது மண்,வீட்டு கொம்போஸ் போடுங்க.
    ஆனா உங்க பியேர்ஸ் மர இலை என்ன மாவிலை மாதிரி பெரிதா இருக்கு. எங்களுக்கு சின்ன இலையா இருக்கு. சத்து முழுக்க இலைக்குதான் போகுதுபோல..

    //எவ்ளோ அழகான பிங் அண்ட் வைட் கலந்த கலவை:)// ஓ...உங்களுக்கு பிங்க் பிடிக்குமென்று தெரிஞ்சிட்டுது போல...
    ஒக்ரோபர் ல நல்ல வெயில் வந்தவுடன் அவையள் பூக்கினம். அவ்வளவு குளிர் இல்லை. இங்கு இரவில் 13,14 டிகிரி.. புதினா நல்லாயிருக்கு.
    ரோட்ரோரம் பூக்கும் பூக்கள் அழகா இருக்கும். பார்ரா அதுவும் பிங்க்.
    கோவில்ல கச்சானோடு வறுத்து தாற பொப்கோர்ன் தான் டேஸ்ட்,...
    கார் ஒயில் ஊத்தின மாதிரி இருக்கு..
    நல்ல தத்துவம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //ரெகோர்ட் செய்து வீட்டில வாக்மென் ல கேட்டது / ஹா ஹா ஹா நானும் வொக்மென் வைத்திருந்தேனே.. அதிலதான் இரவில சிங்கப்பூர் தமிழ் ஒலிபரப்பு போகும் சூப்பரா இருக்கும்..[ரேடியோவும் அதில் இருந்தது என்னுடையதில்]

      //எங்க பியேர்ஸ்ம் 4 வருடமா காய்க்காமல் இம்முறை நல்ல காய் காய்த்தது//
      எங்களுடையது இவ்வருடம் 10 ஆவது வருடம்.. மரம் முத்தி இருக்கு.. பெரிதாக கொப்பு வரவில்லை.. அடி வேர் ஏதும் முறுகிப்போயிருக்கோ தெரியாது. இம்முறைதான் கொம்போஸ் போட்டோம்ம்.

      //சத்து முழுக்க இலைக்குதான் போகுதுபோல..
      // அதேதான், அதேபோல கொத்துக்கொத்தாப் பூக்கிறா கர்ர்:))

      //ஒக்ரோபர் ல நல்ல வெயில் வந்தவுடன் அவையள் பூக்கினம்// பழம்தான் இப்போ பிடுங்கினேன் அம்முலு.. பூ வந்தது யூலையில என நினைக்கிறேன்.

      //கார் ஒயில் ஊத்தின மாதிரி இருக்கு..//
      இல்ல ஒயில் இல்லை.. தண்ணி போலத்தான் இருந்துது.

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
  24. //எவ்ளோ அழகான பிங் அண்ட் வைட் கலந்த கலவை:).//.

    ஆப்பிள் பூக்கள் அழகான கலவைதான்.
    நானும் மகன் ஊரில் ஆப்பிள் மரங்களை கனிகளுடம் படம் எடுத்து வைத்து இருக்கிறேன், உங்கள் வீட்டு ஆப்பிள் மரத்தில் ஆப்பிள்பழத்தை கண்டவுடன் நானும் பதிவில் அந்த படங்களை போட வேண்டும் என்ற நினைப்பு வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      போடுங்கோ பார்ப்போம்ம், இவற்றைப் பார்ப்பதில் எப்பவும் அலுக்காதே.

      Delete
  25. புதினா பார்க்கவே அழகு.
    பூக்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. இம்முறை வேலியோர சிவப்புப் பூக்கள் குறைவாகப் பூத்திருக்குது காரணம், வேலி காற்றுக்கு விழுந்து புது வேலிபோட்டோம், அப்போ அனைத்தையும் வெட்டிப் போட்டினம், அதனால அவை திரும்ப முளைத்துவர லேட்டாகி விட்டது.

      Delete
  26. ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது பாடல் பகிர்வும் இனிமை.

    தார் ரோட்டில் தண்ணீரோ அல்லது எண்ணையோ கொட்டி ஒரு உருவம் உண்டாகி இருக்கிறது. அதை சிறு வயதில் முகமூடி வாங்க்கி அணிந்து பயமுறுத்துவோம் அந்த முகமூடி போல் இருக்கிறது இரண்டு பக்கமும் காதில் கட்டிக் கோளும் நூல் போலவும் நடுவில் முகமூடி போல் இருக்கிறது.
    நம் கற்பனைக்கு ஏற்றமாதிரி அதில் உருவத்தைப் பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அதேதான் கோமதி அக்கா.. தண்ணி விளையாட்டோ இல்ல 4 கால் செல்லத்தின் விளையாட்டோ தெரியவில்லை ஆனா பார்க்க ஒரு வித்தியாசமாக கவர்ந்துது அதனால படமெடுத்தேன்.

      Delete
  27. //இந்தாங்கோ கொஞ்சம் பொப்கோன் சாப்பிடுறீங்களோ?:)//
    குளிருக்கு நன்றாக இருக்கும் சாப்பிட. சாப்பிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான். அனைத்துக்கும் மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  28. யாரும் சொல்லாதது.... நாங்கள் ஆப்பிள் என்றுதான் எழுதுவோம். பறிக்கும்போதே கடித்துவிடுவதுபோல் "அப்பிள்" என்று நறுக்கமாட்டோம்..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இதுபற்றி போனதடவை பேசப்பட்டு விட்டதே[முன்பு] நீங்களும் இருந்தீங்க:).
      apple - அப்பிள்
      aapple - ஆப்பிள்:))

      ஸ்பெல்லிங்கை மாத்தினால்தான் நான் ஆஆஆஆஆஆஅ போடுவேன் ஹா ஹா ஹா:).. மிக்க நன்றி நெ.தமிழன்.

      Delete
  29. ரொம்பநாளுக்கப்புறம் இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தன்.
    ஆப்பிள்ளை தொடங்கி எங்கெல்லாமோ சுற்றி
    கடைசியில புத்தர்வரை ஒரு கதம்பமாலை பார்த்திட்டன்.
    புத்தர் சொன்னதுபோல கொடுக்க எதுவுமில்லையே என நினைக்காமல் …………………… சொல்லுறன்
    அசத்தலா இருக்கு பத்து வருசத்துக்கு முன்னம்
    உங்க எழுத்தில இருந்த உயிர்ப்பு இன்னும் மாறாமல்
    அதே புதுப்பொலிவோட இருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆ வாங்கோ அம்பலத்தார் வாங்கோ வாங்கோ.. எவ்ளோ காலமாச்சூ.. எங்கே காணாமல் போயிருந்தீங்க... மீண்டும் இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி.. புளொக்கை தூசு தட்டிவிட்டீங்களோ ..போய்ப் பார்க்கிறேன்...

      உங்கள் செல்லம்மாவின்:) தேங்காப்பூச் சாதம் அந்தக் காலம் படிச்சதிலிருந்து இடைக்கிடை செய்ய நினைப்பேன் இன்னும் செய்த பாடில்லை:)) பல வருடங்களாச்சு:)).

      //பத்து வருசத்துக்கு முன்னம்
      உங்க எழுத்தில இருந்த உயிர்ப்பு இன்னும் மாறாமல்
      அதே புதுப்பொலிவோட இருக்கு வாழ்த்துக்கள்//

      நன்றி _()_ நன்றி.. மீக்கு இப்பவும் சுவீட் 16 தானே நடக்குது:) அதனாலதான்:))..

      மிக்க நன்றி அம்பலத்தார்.. இனி தொடர்ந்து புளொக்குகளில் கலக்குங்கோ பழையபடி.

      Delete
  30. உங்க வீட்டு பியர்ஸ் காய்க்காததற்கு micronutrients என்று சொல்லப்படும் கிரியா ஊக்கிகள் கரணம் ஆக இருக்கலாம். வீட்டில் கிடைக்கும் expiry ஆனா சில மல்டி விட்டமின், zinc, கால்சியம் மாத்திரைகளை மரத்தை சுற்றி போட்டு தண்ணீர் ஊற்றுங்கள். சும்மா சொல்லவில்லை. இது உண்மையே.மேலும் காய் உண்டாவதற்கு உதவும் தேணீ போன்றவை உதவாமல் இருக்கலாம். வனிலா செடிக்கு செயற்கை மகரந்த சேர்க்கை செய்வது போன்று செய்தும் பார்க்கலாம்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ.. கையை விட்டிட்டீங்களாக்கும் என நினைச்சேன்ன்:).. விடவில்லை வந்திட்டீங்க ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      நீங்கள் சொல்வதுபோல நல்ல வகைப் பசளைபோட்டுப்பார்க்கோணும்.. முயற்சிக்கிறேன். தேனீக்கள் இங்கு தாராளமாகவே உண்டு.

      மிக்க நன்றிகள்.

      Delete

  31. படித்துப்பாருங்கள்

    http://www.sirukathaigal.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/

    ReplyDelete
    Replies
    1. உடனேயே ஓபின் பண்ணிப் படிச்சேன், பொதுவாக நல்ல, மனதுக்குப் பிடித்த கதையாக இருப்பின் எனக்காகவும், இல்லை பிடிக்கவில்லை எனினும் அதை எனக்கு அறிமுகப்படுத்தியவருக்காகவும் என இரு முறையில் கதை படிப்பது என் வழக்கம்:).

      ஆனா இது ஆரம்பமே மனதைக் கவர்ந்தது, மிக அழகாக மிக்க நகைச்சுவை உணர்வுடன் எழுதியிருக்கிறார், இடைவெளி விடாமல் படிச்சேன். இது எங்கள் யாழ்ப்பாணப் பாசை என்பது ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது.

      இது கதையா இல்லை, சொந்த அனுபவமேதானா என்பதுபோலத்தான் இருக்கு, அப்படியே நம்மை அதுக்குள் லயிக்கப்பண்ணி விட்ட எழுத்தாக இருக்கு. மரம் காய்ப்பதற்கான மருத்துவமும் அங்கங்கு சொல்லி இருக்கிறார்..

      இவ்ளோ அழகாக எழுதியவர் இடையிலே கொஞ்சம் முகம் சுழிக்க வைத்து, கதையின் தராதரத்தைக் கொஞ்சம் குறைச்சுப்போட்டாரோ என எண்ணுகிறேன்ன்.. எந்தக் கட்டமெனில்,

      அவ்ளோ ஆசையாக அன்பாக செல்லமாக வீரனை. வளர்த்துப் போட்டு.. பின்பு அதுக்குக் கொடுத்த முடிவு கொடுமையிலும் கொடுமை, நான் அப்படியே அப்பந்தியைப் படிக்காததுபோல எட்டித்தாவி அடுத்த பந்திக்கு ஓடினேன்.. அதை மட்டும் தவிர்த்திருந்தால்.. நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. உண்மையில் மிக அழகிய எழுத்து.. ரசிச்சேன்.

      உங்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  32. அ முத்துலிங்கம் ஐயா எழுதிய சிறுகதை எலுமிச்சை சுட்டி தந்திருந்தேன். படிக்கவில்லை என்று தோன்றுகிறது. படித்து திருமப பதிலும் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஜேகே ஐயா மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. அப்படி இல்லை, நீங்கள் இவ்ளோ மினக்கெட்டு எனக்காக எடுத்து வந்து தரும்போது படிக்காமல் விட்டிடுவேனோ.. படிச்சிட்டேன், ஆனா உடனே இங்கு கொமெண்ட் போட முடியாமல் போயிட்டுது. கிடைக்கும் சைக்கிள் ஹப்பில் பல சமயம் ஓடி ஓடிக் கொமெண்ட் போடுவது என் வழக்கம், சில நேரம் என்ன எழுதினேன் என்றுகூட திரும்பப் படிக்காமல் போட்டு விடுவதும் உண்டு.. அதனாலதான் இதுக்கும் உடன் பதில் போட முடியவில்லை.. இப்போ போடப்போகிறேன்.

      Delete
  33. அட அட ...

    இதான் ஆப்பிள் செடியா...பள பள ன்னு பிங்க் கலர் ல அழகா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு.. அதேதான்.. அப்பிள் பூக்களும் அழகோ அழகு.

      மிக்க நன்றி.

      Delete
  34. அதிரா உங்க வீட்டு ஆப்பிள் பழம் ரொம்ப அழகா இருக்கு ஹப்பா கெமிக்கல் கலக்காத ஆப்பிள்.

    ஷிம்லா போயிருந்தப்ப ஆப்பிள் மரம் பார்த்து பறித்தும் இருக்கோம்...ரோட்டில் இருந்தே நிறைய காய்த்து தொங்கும்....பார்கவே அழகா இருக்கும்

    ஆப்பிள் செடி பூக்கள் என்ன அழகு கலர் வாவ் !! பிங்கோ பிங்கு...

    அந்த செல்லம் செம எப்படி அழகா உக்காந்திருக்கு...அந்தப் படம் உச்சாதானே ஏதோ ஒரு செலம் அடித்திருக்கும்...அதுவும் ஃப்ரெஷ்ஷா...ஹா ஹா ஹா ஹா

    உங்க கார்டன் அழகா இருக்கு. புதினா ஃப்ரெஷ்ஷோ ஃப்ரெஷ்...பாப்கார்ன் மைக்ரோ வேவில் வைத்து நிறைய சாப்பிட்டாச்சு...முன்பு...செம டேஸ்டியா இருக்கும் அதுல பட்டர் ஃப்ளேவர், ஸ்வீட் ...பெப்பர் ஃப்ளேவர் சில்லி ஃப்ளேவர் என்று நிறைய...

    ஊசிக்குறிப்பு, இணைப்பு புத்தர் எல்லாம் நல்லாருக்கு...நிறைஅய் காவி காவி அடிக்க முடியல அதிரா...பெண்டிங்க் ப்ளாக்ஸ் இருக்கே...இத்தனை நாள் வராம...இன்னும் வீடும் செட்டிலாகி முடியல...வேலைகள் தொடருது....

    படங்கள் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. அப்பிள் பூ அழகுதான் பெயார் பூவும் வெள்ளையில் அழகு.

      நீங்க பிசி எனத் தெரியும், பிசியிலும் வந்தமைக்கு மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  35. உங்க மகனுக்கு மெடிக்கல் கிடைத்தது ரொம்ப சந்தோஷம் அதிரா...நல்லா படித்து நல்ல மனித நேயமுள்ள டாக்டரா வர இறைவனிடம் பிரார்த்தனைகள் அவருக்கு வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்க அந்த போஸ்ட்டுக்கு வந்து வாழ்த்தியும் இருக்கிறீங்க கீதா. மிக்க நன்றிகள்.

      Delete
  36. அதிரா உங்கள் மகனுக்கு மெடிக்கஸ் சீட் கிடைத்தமைக்கு வாழ்த்துகள். உங்கள் மகன் மேலும் மேலும் வளர்ந்து நல்ல டாக்டராக உருவாக வாழ்த்துகள் பிரார்த்தனைகள்!

    என் பெரிய மகனும் ரஷ்யாவில் மெடிக்கல் படிக்கிறார்.இது இரண்டாவது வருஷம். இரண்டாவது மகன் அடுத்த வருடம் முயற்சி செய்யணும்...அவரும் டாக்டருக்குத்தான் படிக்க விரும்புகிறார். மகளும் அப்படியே....இறைவனின் அருள்..

    துளசிதரன்.

    (அதிரா இங்கேயே அப்பதிவுக்கான கமென்டைக் கொடுத்துட்டேன்...துளசியின் கமெண்டையும் கொடுத்திட்டேன் - கீதா)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..

      //என் பெரிய மகனும் ரஷ்யாவில் மெடிக்கல் படிக்கிறார்.இது இரண்டாவது வருஷம். இரண்டாவது மகன் அடுத்த வருடம் முயற்சி செய்யணும்...அவரும் டாக்டருக்குத்தான் படிக்க விரும்புகிறார். மகளும் அப்படியே....இறைவனின் அருள்.//

      ஓ வாவ்வ்வ்வ் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் துளசி அண்ணன். மூத்தவர்கள் இறங்கும் பாதையைத்தான் சின்னவர்களும் விரும்புவர்.. ரஷ்யாவில் அவர்கள் பாஷை படிச்சுத்தானே பின்பு மெடிகல் படிக்கோணும்.

      மிக்க நன்றிகள்..

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.