நல்வரவு_()_


Saturday 3 November 2018

தக்காளி “காய்” வெள்ளைக்கறி..

வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ சுடச்சுடச் சுவையான டிஷ்:) உங்களுக்காகவே கனடாவில் இருந்து இறக்குமதி செய்து, சமைச்சுக் காட்டியிருக்கிறேன்.. ஆனா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரும் டச்சூப் பண்ணக்கூடாதூஊஊஊஉ பிக்கோஸ்ஸ்ஸ் இது அதிராவின் கன்னிக் கறீஈஈ:)).
ஸ்ஸ்ஸ்ஸ் ச்சும்மா டிசுரேப்புப் பண்ணினால் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்:)..  “ ............” வைப்போல பின்னால இருந்து பார்த்துக் கொண்டிருக்கோணும் நல்ல பிள்ளையாக:)

நான் உங்களுக்கு எங்கெல்லாமோ சொல்லியிருந்தேன் தானே, தக்காளிக்காயில் அக்கா ஆட்கள் அண்ணன் ஆட்கள் எல்லாம் இப்படி வெள்ளைக்கறி வைத்து, சுவையாக இருக்கு என வெறுப்பேத்தினார்கள் என, அதனாலேயே இந்த சமரில் தக்காளி நட்டேன் அது குட்டிக் குட்டியாக ஏதோ ஆசைக்கு காய்ச்சுதே தவிர, கறி வைக்குமளவுக்கு வரவில்லை.

இந்நேரம் பார்த்து அண்ணன் செப்டெம்பரில் வருகிறேன் என்றார், உடனே நான் சொன்னது உங்கள் வீட்டுத் தக்காளிக்காயில் கொண்டு வாங்கோ என.. அதனால கொண்டு வந்திருந்தார், இது அவர்கள் வீட்டுச் செடி..

அவர்கள் வீட்டில் காய்த்த மிளகாயும் கொண்டு வந்திருந்தார்.

காய் வெட்டினால் உள்ளே இப்படி கட்டியாக இருந்துது, இதுதான் கறி வைக்க நல்ல பதம், இன்னும் முத்தினால் கறி தண்ணியாகிடும்.

இப்படிக் கட் பண்ணி, வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு போட்டு கால் டம்ளர் அளவில் தண்ணி விட்டு அவிக்கோணும். நல்ல பிஞ்சுக்காய் எனில் பெரிதாக நீர்க்காது, முத்தி விட்டால் தண்ணியாகிடும், அப்படி ஒருவேளை முத்தின தண்ணிக் காயாக இருப்பின், ஒரு வாழைக்காயையும் வெட்டிச் சேர்த்து அவிக்கவும்.


கறி அவியும்போது பச்சைப் பழப்புளி வாசம் கமகம என வந்துது, வாயில் சுவையும் அதே பச்சைப்பழப்புளிச் சுவை..
அவிந்ததும் இப்படி மசிக்கவும்...

மசித்த பின், முதல் பால் சேர்க்கவும்.. ஒரு அரை டம்ளர் அளவாவது சேர்க்க வேணும்.. நான் பசுப்பால்தான் சேர்ப்பது வழக்கம்.[தேங்காய்ப்பால் ரின் வாங்கி இடைக்கிடை பாவிப்போம், மற்றும்படி பசுப்பால்தான்]

கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினேன், நீங்கள் இன்னும் கொஞ்சம் சுவையைக் கூட்ட விரும்பினால், கறிக்கு தாளிக்கும் முறையில், கடுகு வெங்காயம் செத்தல் கறிவேப்பிலை “திருவமாறு” பண்ணிக் கொட்டி விடலாம்.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:))
எப்பூடி கறி சுவையாக இருக்குதோ? டக்குப் பக்கெனச் செய்து எனக்குப் படம் போடுங்கோ:) ஹா ஹா ஹா[நினைப்புத்தான் புழைப்பைக் கெடுக்குமாமே.. இன்னும் ஆருமே பூசணி இலை சுண்டல் செய்யவில்லை, நினைவிருக்கட்டும் அதிரா:)]

========================================================
 “இதைப் படிக்கும் நான், உடனேயே செய்து பார்த்து, அதிராவுக்குச் சொல்லுவேன் என, அந்த காசித் தீர்த்த இடது பக்கக் கரையில் இருக்கும் நீலப்பாசி படர்ந்த கல்லின் மேல் அடிச்சு ஜத்தியம் செய்கிறேன்:)”...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எல்லோரும் ஜத்தியம் பண்ணிட்டீங்க இனித் தப்பவே முடியாதாக்கும்.. பூஸோ கொக்கோ:) செய்திடுங்கோ. இல்லை எனில் “காசி” க்குத்தமாகிடும்ம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா.
========================================================

இது என்ன தெரியுதோ? ஊரிலிருந்து மாமா மாமி பார்சல் அனுப்பியிருந்தார்கள், அதில் இவற்றையும் வைத்திருக்கினம், இது என்ன தெரியுதோ?. நடுவில் மேலே இருப்பது, காயவைத்த வேப்பப்ம்பூ,

கீழே வலது பக்கம் இருப்பது.. நன்னாரி வேர்.. தேனிருக்குள் தேயிலையுடன் ஊறப்போட்டுக் குடிப்பது, வாசமோ வாசம், உடம்புக்கும் நல்லதாம். இடது பக்கம் இருப்பது சாறணை வேர் இது ரச வகைகளுக்கு சேர்ப்பதாம்.

நடுவில் கீழே இருப்பது,  வில்வம் பூ இதை தேநீர் போல போட்டுக் குடிப்பதாம், இல்லை எனில் தேயிலையுடன் ஊறவிட்டும் குடிக்கலாமாம், சிங்கள மக்களிடையே இது பேமஸ் ஆம்ம்.. கதிர்காமல் போகும் போது, இத்தேனீர் போட்டு விற்கிறார்களாம்.


இது ஸ்கூலில், ஹலவீனுக்காக பிள்ளைகளுக்குப் படங்கள் பிரிண்ட் பண்ணி கலர் பண்ண வைத்தோம், அப்போ நானும் இதை கலர் பண்ணினேன்.. இது ஹலவீன் கதையில் வரும் witch இன்  cat:) ... ஹா ஹா ஹா பயம்ம்மா இருக்கோ?:)


ஊசி இணைப்பு:-

ஊசிக் குறிப்பு:

()()()()()()***()()()()()()***()()()()()()*_()_*()()()()()()***()()()()()()***()()()()()()

106 comments :

  1. படித்தேன், ரசித்தேன் படங்கள் எதுவுமே திறக்கவில்லை பிறகு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஊசிப்போன ஸாரி ஊசி இணைப்பும், குறிப்பும் ஸூப்பர்.

      Delete
    2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..
      என்னாதூஊஊஊஊஉ எவ்ளோ கஸ்டப்பட்டு யோசிச்சு டத்துவம் போட்டிருக்கிறேன்ன்:) அதை ஊசிப்போன எனச் சொல்லி ஒரு ஞானியின் இமேஜ் ஐயே டமேஜ் பண்ணிட்டாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      ஹா ஹா ஹா மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  2. //? டக்குப் பக்கெனச் செய்து எனக்குப்//

    Nasn erkanave senjitten haahaaaa

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஓ செஞ்சிட்டீங்களோ? எனக்குத்தான் காய் கிடைக்கவே இல்லையே...

      Delete
  3. வா....வ் அதிரா. சூப்பரா இருக்கு....உங்க கைவண்ணம். அழகா வரைந்திருக்கிறீங்க.
    தக்காளிக்காயில் நானும் செய்வதுண்டு. ஆனா உறைப்பு கறி. இங்கு துருக்கி கடையில் விற்பார்கள். இப்படிதானே கத்தரிக்காய் பால்கறியும் செய்வது? நான் ஒருநாளும் செய்யவில்லை கத்தரிக்காயில். உங்க கறி பார்க்கவே நல்லாயிருக்கு. அனுப்பிவிடுங்கோ இங்கு..
    உங்க அண்ணா வீட்டு தக்காளி,மிளகாய் செம.. அங்கு இப்படி நல்லா வருகிறதா?. பூசணி இலை எனக்கு ஞாபகம் இருக்கு. கிடைத்தால் செய்யாமல் விடுவனோ.
    பாட்டு எனக்கும் பிடிக்கும் அனேகமா நீங்க போடும் பாட்டுக்கள் பிடித்தமானவையே. சில எப்போதோ கேட்டதா இருக்கும்.

    ஓ.. ஊரிலிருந்து வந்ததா. நன்னாரியில் சர்பத் செய்யவும் நல்லாயிருக்கும். ஆனா இப்ப குளிர் பார்த்து. பிறகு செய்து குடித்துவிட்டு ,தடிமன் ,காய்ச்சல் என்றால் என்னை குற்றம் சொல்றேலை...
    அனுப்பிய அத்தனையும் நல்ல ஹெல்தியானவை. வேப்பம்பூ ரசம் செய்யலாம். நல்லா குளிர்டைம் பார்த்து அனுப்பியிருக்காங்க. Enjoy....!!!
    //“திருவமாறு” பண்ணிக் கொட்டி விடலாம்.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:))// ???

    பார்சலில் வந்தவையை என்ன செய்தனீங்கள் என இங்கே சொல்லுங்கோ...
    ஊசி இணைப்பு அருமை. ,ஊசிகுறிப்பில் வலிக்கச்செய்வது வார்த்தைகள் மட்டுமே என்றால், அன்பான ஆறுதலும் வார்த்தைகள்தானே.

    ReplyDelete
    Replies
    1. //அப்போ நானும் இதை கலர் பண்ணினேன்//

      ஹலோவ் ப்ரியா :)பூனை வரையல ஜஸ்ட் வாட்டர் கலரை மிதிச்சிட்டு அந்த பிரிண்ட் எடுத்த படத்து மேலே அங்குமிங்கும் நடந்திருக்கு :) ஹாஹா

      Delete
    2. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //வா....வ் அதிரா. சூப்பரா இருக்கு....உங்க கைவண்ணம். அழகா வரைந்திருக்கிறீங்க.//
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா:).. இது நமக்குள் இருக்கட்டும்:).. சனம் விளக்கெண்ணெய் கண்ணுக்குள் விட்டுக் கொண்டு திரிகிறார்கள் அதிராவை எங்கு பிடிச்சு அடிக்கலாம் என:))..

      //தக்காளிக்காயில் நானும் செய்வதுண்டு. ஆனா உறைப்பு கறி//

      ஓ எங்கள் வீட்டில் இதுவரை வெள்ளைகறிதான் சமைச்சோம் என புகழ்ந்தார்கள்.. உறைப்பாக வச்சதாக தெரியவில்லை.

      //இப்படிதானே கத்தரிக்காய் பால்கறியும் செய்வது? //

      அதே அதே.. கத்தரிகாய், சகக்ரைப்பூசணி, வாழைக்காய் இவற்றில் எல்லாம், ஆனா அதுக்கு தேசிக்காய் விடுவோம்.

      //உங்க கறி பார்க்கவே நல்லாயிருக்கு. அனுப்பிவிடுங்கோ இங்கு..//
      தங்கூ தங்கூ..

      //பாட்டு எனக்கும் பிடிக்கும் அனேகமா நீங்க போடும் பாட்டுக்கள் பிடித்தமானவையே. சில எப்போதோ கேட்டதா இருக்கும். //

      பெரும்பாலும் வசனங்களைத்தான் நான் ரசிப்பேன்.. அதனாலேயே பழைய பாடல்கள் எங்கு கேட்டாலும் மனதில் பதிந்து போய் விடுது.

      Delete
    3. ///நன்னாரியில் சர்பத் செய்யவும் நல்லாயிருக்கும்//
      நனும் கேள்விப்பட்டேன் ஆனா குடிச்சதில்லை சர்பத்.

      //இப்ப குளிர் பார்த்து. பிறகு செய்து குடித்துவிட்டு ,தடிமன் ,காய்ச்சல் என்றால் என்னை குற்றம் சொல்றேலை..//
      இல்ல சர்பத் இப்போ செய்ய மாட்டேன்ன் அது சமரிலதான்..

      எனக்கு நன்னாரியில் ரீ குடிப்பதுதான் நன்கு பிடிச்சிருக்கு.

      //வேப்பம்பூ ரசம் செய்யலாம்//
      அதுதான் செய்து பார்க்க ஆசை, ஆனா கைக்குமோ என பயம்.. வேப்பம்பூ வடகம் முன்பு நிறைய அனுப்பி விட்டார்கள்.. இன்னும் இருக்கு.

      ////“திருவமாறு” பண்ணிக் கொட்டி விடலாம்.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:))// ???//

      ஆஆஆஆஆஆ நீங்களும் அதே வம்சத்தில் இருந்துகொண்டு தெரியல்ல எனச் சொல்லலாமோ கர்ர்ர் ஹா ஹா ஹா:).. அது தாளிச்சுக் கொட்டுவதை சமஸ்கிரதத்தில் அப்படிச் சொல்வார்கள் போல, நெல்லைத்தமிழன் அப்படித்தான் பேசுவார்:).

      //பார்சலில் வந்தவையை என்ன செய்தனீங்கள் என இங்கே சொல்லுங்கோ..//
      நன்னாரி வேர் மட்டுமே, காலையிலேயே போட்டு விட்டால் ஒவ்வொரு தடவையும் ரீ குடிக்கும்போது சேர்த்துக் குடிக்கிறோம்.. நல்ல வாசமாக இருக்கும். மற்றது எதுவும் இன்னும் தொடவில்லை. மஸ்கட்டும் அனுப்பியிருக்கிறார்கள் அதுவும் ஒரு கிலோ அவ்வ்வ்வ்.. இங்கு வீட்டில் யாரும் பெரிதாக மஸ்கட் ஐ விரும்ப மாட்டார்கள் எனச் சொன்னேன், மாமாவுக்கு மனம் கேட்காமல் அனுப்பி இருக்கிறார், ஏனெனில் வெளிநாட்டுக்காரர் போய் வரும்போது ஆசைப்பட்டு வாங்கி வருகிறார்களாம்.

      //ஊசிகுறிப்பில் வலிக்கச்செய்வது வார்த்தைகள் மட்டுமே என்றால், அன்பான ஆறுதலும் வார்த்தைகள்தானே.//

      அது வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏற..:) இது வேஏஏஏஏஏஏஏஏஏஏஏற மாறி:) வார்த்தைகள் அம்முலு.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete

    4. Angel
      //ஹலோவ் ப்ரியா :)பூனை வரையல ஜஸ்ட் வாட்டர் கலரை மிதிச்சிட்டு அந்த பிரிண்ட் எடுத்த படத்து மேலே அங்குமிங்கும் நடந்திருக்கு :) ஹாஹா//

      நான் ஜொன்னனே நான் ஜொன்னனே:) விளாக்கெண்ணயோடு திரிகிறார்கள் என:) அதிராவை ஆசைக்குப் புகழ்ந்து எழுத முடியுதா ஒருவரால:)).. நானும் அப்பூடியே அம்முலு சொன்னதை வச்சே.. நான் தான் கீறினேன் என மெயிண்டைன் பண்ணிடுவோம் என ஓசிச்சேன்ன் கர்ர்ர்ர்ர்:)) விடமாட்டாவாமே:) ஹா ஹா ஹா.

      Delete
    5. பூனைப் படம் ரொம்ப நல்லா இருக்கு. அழகா இருக்கு. வகுப்பில் யாரோ வரைந்ததில் உங்க பேரைப் போட்டுக்கிட்டீங்களோ?

      Delete
    6. //ஹலோவ் ப்ரியா :)பூனை வரையல ஜஸ்ட் வாட்டர் கலரை மிதிச்சிட்டு அந்த பிரிண்ட் எடுத்த படத்து மேலே அங்குமிங்கும் நடந்திருக்கு :) ஹாஹா// ... அஞ்சூஊஊஊ நான் தக்காளிகாய் கறியை பார்த்திட்டு இதை பார்த்தனா அதுதான் மியாவே மியாவை வரைஞ்சிட்டதா எழுதிட்டேன். சரி சந்தோஷபட்டுட்டு போகட்டுமே என விட்டிட்டேன்.. ,,,

      Delete
    7. //நெல்லைத் தமிழன்Sunday, November 04, 2018 2:08:00 pm
      பூனைப் படம் ரொம்ப நல்லா இருக்கு. அழகா இருக்கு. வகுப்பில் யாரோ வரைந்ததில் உங்க பேரைப் போட்டுக்கிட்டீங்களோ?//

      [im] http://farm1.static.flickr.com/139/370646317_0e992d02f3_m.jpg [/im]

      Delete
    8. priyasaki
      //சரி சந்தோஷபட்டுட்டு போகட்டுமே என விட்டிட்டேன்.. ,,,//

      ஆஆஆஆஆஆஆ அம்முலுவுக்கு என்னாஆஆஆஆ பெரிய மனசூஊஊஊஊஊஉ.. புல்லாஆஆஆஆஆஆஆஆஅரிச்சுட்டேன் மீ.. ஹா ஹா ஹா.

      அனைவருக்கும் மீள் வருகைக்கு நன்றி நன்றி.. மிக்க மகிழ்ச்சி.

      Delete
  4. https://kaagidhapookal.blogspot.com/2015/10/blog-post_10.html

    நான் ஏற்கனவே செய்து இந்த ரெசிப்பியை எம்பிளாக்கிலே போட்டதால் சத்தியம் செய்யமாட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. நான் முன்பு பார்த்திருக்கிறேன் ஆனா மனதுக்கு எடுத்துப் போகாமையால நினைவில்லை.. நீங்க தேங்காய் அரைச்சு குருமாக் கறிபோல செய்கிறீங்க போலும், கீழே நெ.தமிழனும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்.

      Delete
    2. அவியலை, 'குருமாக் கறி'யா? அட ஆண்டவா... சோம்பு, பட்டை என்று ஒன்றும் போடாமல், அருமையான சைவ உணவு அதிராவுக்குச் சொல்லிக்கொடுத்தால் வரும் வினையைப் பாருங்கள்.....

      Delete
    3. @நெல்லைத்தமிழன் ..யெஸ் யெஸ் ..அதானே பாருங்க குருமான்னு ஈஸியா சொல்லிட்டாங்க இந்த பூஸார் ..

      Delete
    4. //நெல்லைத் தமிழன்Sunday, November 04, 2018 11:50:00 am
      அவியலை, 'குருமாக் கறி'யா? //

      ஹா ஹா ஹா தேங்காய் அரைச்சுப் போட்டால் அது குருமாகறிபோலத்தானே வரும்:).. அதனால ஜொன்னேன் அது டப்பா?:)..

      அஞ்சு உங்களுக்கு குருமாக் கறி செய்யத் தெரியுமோ?:) ஆவ்வ்வ்வ் அஞ்சு இப்போ யூப்பர் மாட்டீஈஈஈஈ:))

      Delete
  5. //திருவமாறு” பண்ணிக் கொட்டி விடலாம்.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:))//

    ஹையோ சாமீ :) அதிராக்கு நெல்லைத்தமிழனின் பேச்சுவழக்கு வந்தமாதிரி நெல்லைத்தமிழனுக்கும் அதிராவின் ஸ்லெங் வந்திடுமா ??? ..தெரிஞ்சிருந்தா இத கௌதமன் சார் கிட்ட புதன் கேள்வியா கேட்டிருக்கலாம் :)

    ReplyDelete
    Replies
    1. //நெல்லைத்தமிழனுக்கும் அதிராவின் ஸ்லெங் வந்திடுமா ???//

      ஹா ஹா ஹா அவருக்கும் வருதூஊஊஊஊஊஊஉ ஆனா வராதூஊஊஊஊ:) ஏனெனில் சமையலில் ஒரு குட்டி மாற்றம் ஆசைக்கு கொண்டுவரவே அண்ணி விடமாடேன் என்கிறா:)).. இதில இவர் போய் இலங்கை ஸ்லாஆஆஆஆஆஆங்கில பேசினால் அவ்ளோதான்:) திரும்பி பாறைன்ல போயிருக்க வேண்டி வந்தாலும் வந்திடும் ஹா ஹா ஹா:)).

      //தெரிஞ்சிருந்தா இத கௌதமன் சார் கிட்ட புதன் கேள்வியா கேட்டிருக்கலாம் :)//

      ஹா ஹா ஹா இல்ல போன புதன், கீசாக்கா நெ.தமிழன் எல்லோரும் கூடை கூடையாக் கேள்வி கேட்டிருக்கினம்:) ச்சோ அடுத்த புதனுக்கு ஒத்தி வையுங்கோ இதை:) ஹா ஹா ஹா.

      Delete
  6. /
    ஸ்ஸ்ஸ்ஸ் ச்சும்மா டிசுரேப்புப் பண்ணினால் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்:).. “ ............” வைப்போல பின்னால இருந்து பார்த்துக் கொண்டிருக்கோணும் நல்ல பிள்ளையாக:)//

    வைப்போல என்று வருவதால் அது அஞ்சு என்ற அர்த்தம் ..அவ்வ் அம்முலுவும் வருதே கீதாக்காவும்/கோமதியக்காவும் வருதே ! கீதாவும் வ்ருதே :)
    அப்போ யாரை தள்ளி விட்டீங்க ?? :)

    ReplyDelete
    Replies
    1. //வைப்போல என்று வருவதால் அது அஞ்சு என்ற அர்த்தம்// ஹா ஹா ஹா அப்போ அடுத்த முறைக்கு.. .....வைப்போல எனப் போட்டு ஒரு வசனத்தை எழுதிடுறேன்ன்:)) பிறகு அடிக்க வரக்கூடாது அது நானில்லை என:)..

      //அவ்வ் அம்முலுவும் வருதே கீதாக்காவும்/கோமதியக்காவும் வருதே ! கீதாவும் வ்ருதே :)
      அப்போ யாரை தள்ளி விட்டீங்க ?? :)//

      ஹா ஹா ஹா அது எண்ணிப் போடவில்லையாக்கும்:)) ச்சும்மா தட்டி விட்டேன்:).. யாராவது கை வலி கால் வலி என அடுத்து வரும் நாட்களில் சொன்னா ஈசியாக் கண்டு பிடிச்சிடலாம்:).. புவஹாஆஆஆஅ.. புவஹா... ஜல் அக்காவின் சிரிப்பு நினைவுக்கு வந்திடுச்சூஊஊஊ:).

      Delete
  7. வேப்பம்பூவில் ரசம் செய்யுங்க ..உடம்புக்கு நல்லது ..நிறைய இருந்தா பருப்பு கடைசல் செய்யும்போது தாளிக்கும்போது அதான் திருவமாறும்போது :)) தாளிச்சு (தீயாம )சேருங்க நல்லா இருக்கும்
    நன்னாரி வேரை அப்புறம் வெட்டி வேரை சம்மரில் பானை நீரில் போட்டுவைத்து குடிப்போம்
    ,நன்னாரி ஷர்பத் செம டேஸ்டி ..கான்சன்ட்ரேட் விற்பாங்க அதில் ஒரு டீஸ்பூன் சாத்துக்குடி /லைம் /ஆரஞ்சு ஜூஸில் கலந்த என்ன னா டேஸ்ட் தெரியுமா ..

    ReplyDelete
    Replies
    1. //வேப்பம்பூவில் ரசம் செய்யுங்க ..உடம்புக்கு நல்லது//

      அதைத்தான் நினைச்சுக் கொண்டிருக்கிறேன் அஞ்சு..

      //நிறைய இருந்தா பருப்பு கடைசல் செய்யும்போது தாளிக்கும்போது அதான் திருவமாறும்போது :)) தாளிச்சு (தீயாம )சேருங்க நல்லா இருக்கும் //

      ஓ கைக்காதோ?.. பிறகு நானே சாப்பிட்டு முடிக்க வேண்டி வந்திடும்.. ஒரு 500 கிராமுக்கு கிட்ட இருக்கும் அஞ்சு பூ.

      //நன்னாரி வேரை அப்புறம் வெட்டி வேரை சம்மரில் பானை நீரில் போட்டுவைத்து குடிப்போம் //

      நாங்க சினப்பிள்ளையாக இருந்தபோது வளாவில் முளைக்கும் நன்னாரி, அப்பம்மா அந்த பச்சை வேரை எடுத்து கேற்றிலில் போட்டு விடுவா.. கமகம என இருக்கும்..

      Delete
    2. அதிரா... உங்க ஊர் வாழ்க்கை, ஊர் எப்படி இருக்கும், எப்படி எல்லோரும் பழகுவீங்க, உணவுப் பழக்கம், கலாச்சாரப் பழக்கம்லாம் உங்கட மகன்கள்ட சொல்லியிருக்கீங்களா? அவங்கதான் அதனை நம்பமுடியாது, ஊரை நேர்ல பார்க்கிற வரை

      Delete
    3. //கேற்றிலில் // KETTLE

      Delete
    4. //அதிரா... உங்க ஊர் வாழ்க்கை, ஊர் எப்படி இருக்கும், எப்படி எல்லோரும் பழகுவீங்க, உணவுப் பழக்கம், கலாச்சாரப் பழக்கம்லாம் உங்கட மகன்கள்ட சொல்லியிருக்கீங்களா?//

      இங்கு எங்களிடத்திலதான் எதுவும் இல்லையே தவிர, கனடா போனால் நம்மூர் போலத்தானே அனைத்தும் உண்டு.. அதனால அவர்களுக்குத் தெரியும்.. ஆனா நாங்களும் ஹப் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி விட்டிடுவோம்.. எப்பவும் சொல்லி அலுப்புக் குடுப்பதில்லை... லவ் பண்ணுவதுகூட சொல்லிக் குடுத்திருக்கிறேன், எங்கட கலாச்சாரத்துக்கு இங்கத்தைய கேள்ஸ்[ஸ்கொட்டிஸ்] ஒத்து வர மாட்டாங்க, தமிழ் கேள்ஸ் தான் எங்களுக்கு சரி, அதனால அது காலநேரம் வரும்போது பார்க்கலாம் இப்போ எல்லோரோடும் பழகுங்கோ ஆனா எல்லை மீறிடக்கூடாது.. கவனம் என.. அதை மீறி ஏதும் எனில் என்ன பண்ணுவது... காலம் இப்போ எங்கேயோ போய்க் கொண்டிருக்கு.. இப்போ தமிழ்க்குடும்பமாக இருந்திட்டாலே போதும் எனத்தான் மனம் சொல்லுது:)..ஹா ஹா ஹா.

      ஆனா ஒன்று, ஒருநாள் எங்கள் மூத்தவர் என்னிடம் சொன்னார், அம்மா அந்த அக்கா[எங்கள் உறவுக்காரப் பெண் ஒருவர்] ஒரு வைட் போயை விரும்பினாவாம், ஆனா அது அவட அம்மாவுக்கு விருப்பமில்லையாம் அதனால இவ அவரை விட்டு விட்டாவாம்.. இதை ஆருக்கும் சொல்லிடாதீங்கோ.. எனச் சொல்லிப் போட்டுச் சொல்கிறார்.. அது நொட் நைஸ் அம்மா.. அப்படி செய்திருக்கக்கூடாது என்றார்.. எனக்கு பக்கென ஆச்சு நெஞ்சு.. இருப்பினும் ஒருவரை விரும்பினால் கைவிடக்கூடாது எனும் நல்ல எண்ணத்தோடு இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி, ஆனா ஆரை விரும்பினால் என்பதிலதானே இருக்குது.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
  8. ஆமா :) ஹலோவீன் பூனை என்ன கிறிஸ்த்மஸ் கலரில் இருக்கு )

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ் பயப்பிடுங்கோ கற்:) ஐப் பார்த்து:)) அதன் பல்லைப் பார்த்து:).. கையில் இருப்பதை வச்சே குடும்பத்தை ஜந்தோசமாக நடத்தோணும் என அம்மம்மா சொல்லித்தந்தவ:).. ச்சோ அப்போ கையில் இருந்த கல்ரை வச்சு பூஸாரை ரெடியாக்கிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா:)..

      Delete
  9. இந்த முறை தக்காளி போட்டேன் லேட்டா போட்டேன் பூவோடு நின்னுடுச்சி .ஆனா உருளை மணத்தக்காளி செம அறுவடை .
    பிரென்ச் பீன்சும் இன்னும் பூ விடுது :)
    எங்க வீட்ல ரெண்டு முறைதான் நல்ல பழ அறுவடை மற்ற நேரமெல்லாம் பச்சை காய் தான் :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மணத்தக்காழி வருதே இல்லை அஞ்சு.. ஆனா நான் முன்பு சொன்னேனே அக்கா வீட்டு வளாவெல்லாம் கொத்துக் கொத்தா மணத்தக்காளி என, இவ்வருடம் இல்லையாமே.. ஒன்றிரண்டு மட்டுமே வந்துதாம்.. அங்கு மண்ணோடு வருவது, இவர்கள் ஒருபோதும் விதைக்கவில்லையாம்.

      Delete
  10. /தக்காளி “காய்” வெள்ளைக்கறி..//

    அமைச்சரே இதில் மாபெரும் பொருட்பிழை உள்ளது ..
    தக்காளி காய் பச்சை நிறம் அது எப்படி வெள்ளைக்கறி கொடுக்கும் ???

    சே சே .புதன்கிழமை நம்மை இப்படி பாடாய்படுத்துதே :) இப்போல்லாம் எதை பார்த்தாலும் கேள்விகேட்க தோணுது .. question asking disorder வந்துடுச்சா எனக்கு :)

    ReplyDelete
    Replies
    1. ///தக்காளி காய் பச்சை நிறம் அது எப்படி வெள்ளைக்கறி கொடுக்கும் ???//

      தேவதைக் கிச்சினையே “டேவடைக் கிச்சின்” ஆக்கிட்டோமா?:) இதனை மாற்ற மாட்டமோ என்ன?:)..

      //question asking disorder வந்துடுச்சா எனக்கு :)//
      உங்களுக்கு வந்திடுச்சி:) இப்போ எனக்கும் வரவைக்கப் பார்க்கிறீங்க கர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
  11. அந்த ஊசி இணைப்பு படத்தை எடுத்த ஐந்து என் கையில் கிடைச்சா அவ்ளோதான் ..
    பாவம் செல்லம் அது வாயில் ரோஜா கொத்து அந்த முள்ளு குத்ததா
    ??

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ் அது தன் கேள் ஃபிரெண்ட்டுக்கு எடுத்துப் போறாராம்:) இப்பூடி சிம்பதி காட்டினால் கடிச்சிடப்போறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்பினம்:) அந்த மிடுக்குப்போல ஹா ஹா ஹா.. மிக்க நன்றி அஞ்சு அனைத்துக்கும்.

      Delete
  12. ஆஹா கன்னிக் கறியா…..ஹையோ டங்கு ஸ்லிப்பு…தக்காளிக் காய் வெள்ளைக் கறி?!! இதோ வரேன்…

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. பின்ன வாழ்க்கையில எப்பவும் தக்காளியில் கறி வச்சதே இல்லை நான். பச்சைச் சம்பல்தான் போட்டிருக்கிறேன்.. போட்டிருக்கிறோம்.

      Delete
  13. உங்கள் அண்ணன் வீட்டுச் செடியும், காய் பார்க்கவே செழுமையா இருக்கு….முழுவதும் படித்துவிட்டு வரேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கனடாவில் இப்படி வீட்டுத்தோட்டம் செய்யோரின் கார்டினில் பார்க்க ஆசையாக இருக்கும் கீதா, பீன்ஸ் பயத்தங்காய், பிசுக்கு.. கீரை எல்லாம் அளவுக்கு மிஞ்சி வந்திடும்.. யாருக்கு கொடுப்பதெனத் தெரியாமல் ஃபிரீசரில் போடுவார்களாம்.. எல்லோரும் நட்டால் ஆருக்கு கொடுப்பது:)

      Delete
  14. இப்படி க்ரின் கலரில் இருக்குக் காய் தக்காளியை வாங்கி அதில் பாசிபருப்பை வைத்து கூட்டு செய்து.இதற்கு மிளகு ரசம் வைத்து சாப்பிடுங்கள் மிக அருமையாக இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதாரிது ட்றுத்தா? சத்தியமாக கொமெண்ட்ஸ் பப்ளிஸ் பண்ணும்ப்பொது காணவே இல்லை நான், அப்படியே ஒட்டு மொத்தமாக பண்ணி விட்டேன் ஹா ஹா ஹா.. வாங்கோ ட்றுத் வாங்கோ.. ஏதோ மறுபிறவி எடுத்த ஒருவரைப் பார்ப்பது போலவே இருக்கு ஹா ஹா ஹா.

      ஓ பருப்புப் போட்டு கூட்டோ.. இனி அடுத்த சமரில அக்கா அண்ணனிடம் தான் வாங்கிச் செய்து பார்க்கிறேன்..

      மிக்க நன்றிகள் ட்றுத்.. இப்படி இடைக்கிடையாவது வந்து போங்கோ.

      Delete
  15. ஊசி இணைப்பு செம செம செம ரொம்பவெ ரசித்தேன்... நாங்க பணம் கொடுத்து பைரவர்/வி வாங்குவதில்லை....இங்குதான் நிறைய செல்லங்கள் இருக்கே ஆதரவற்று...அவங்களைத்தான் வளர்க்கிறோம்...ரெஸ்க்யூ செய்து என்று...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //இங்குதான் நிறைய செல்லங்கள் இருக்கே ஆதரவற்று...அவங்களைத்தான் வளர்க்கிறோம்...ரெஸ்க்யூ செய்து என்று...
      //

      இஞ்கும் அப்படி நிறைய இருக்கிறார்கள் கீதா, ஆனா அவர்கள் எல்லாம் பெரும்பாலும் வயது கூடியவர்களாக இருப்பினம், அதனால குட்டி தேடினால் கிடைக்காது. குட்டி வந்தாலும் நம் மக்கள் உடனேயே எடுத்திட்டுப் போயிடுனம் உள்ளுக்குள்ளால.

      Delete
  16. நான் இணையத்திற்கு அதிகம் வர நேரமில்லை என்றாலும் எனக்கு வாயும் வயிறும் மிக ஆரோக்கியமாக இருக்கிறது.. அதனால் அதிரா மட்டுமல்ல இங்கு வரும் நண்பர்கள் அனைவரும் மறக்காமல் தீபாவளி பட்சணங்களை அனுப்பி வைக்கவும்.. இல்லையென்றால் உங்களுக்கு நிச்சயமாக வயிறு வலிக்கும்...


    அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. ///அதனால் அதிரா மட்டுமல்ல இங்கு வரும் நண்பர்கள் அனைவரும் மறக்காமல் தீபாவளி பட்சணங்களை அனுப்பி வைக்கவும்.. இல்லையென்றால் உங்களுக்கு நிச்சயமாக வயிறு வலிக்கும்...//
      அட்றஸ் குடுங்கோ:) இல்லாட்டில் தேம்ஸ் கரைக்கு வரவும் பார்சல் கட்டி வந்து தருகிறோம்:)..

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  17. ஊசிக் குறிப்பும் செம...ரொம்ப நல்லாருக்கு....உண்மையான வார்த்தைகள்

    என்னாது பூஸாருக்குள் விச்சோ? எப்போ புகுந்தது? அப்போ கண்டிப்பா கறிய டச்சு பண்ணக் கூடாதூஊஊஊஊஊஊஊஊஉ....ஹா ஹா ஹா ஹா சும்ம சும்மா தான் சொன்னேன்...

    படம் ரொம்பவே அழகு நல்லா இருக்கு! நல்ல கலரிங்க்...அது சரி பூஸார் தன்னைத் தானே கலரிங்க் அடித்து மேக்கப் எல்லாம் போட்டிருக்கார்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //என்னாது பூஸாருக்குள் விச்சோ? எப்போ புகுந்தது? அப்போ கண்டிப்பா கறிய டச்சு பண்ணக் கூடாதூஊஊஊஊஊஊஊஊஉ....ஹா ///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பிராண்டிப்போடுவேன் ஹா ஹா ஹா:)..

      //படம் ரொம்பவே அழகு நல்லா இருக்கு! நல்ல கலரிங்க்.//
      ஆவ்வ் தங்கூ தங்கூ கீதா:).. பாருங்கோ அஞ்சுவுக்கு ரசிக்கவே தெரியல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) புவஹா.. புவஹா....:)

      Delete
  18. வேப்பம் பூ ரசம் வைக்கலாம்...இல்லை நெய்யில் வறுத்து உப்பு போட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்...மாங்கா பச்சடியில் வறுத்துப் போடலாம்...நல்லாருக்கும்...அதே போல நன்னாரி வேர். நன்னாரி வேரும் உடலுக்கு நல்லது. சர்பத் எல்லாம் செய்யலாம். தண்ணீரில் போட்டு வைத்துக் குடிக்கலாம். டீயிலும். பானைத் தண்ணீரில் போட்டு வைப்பது வழக்கம் எங்கள் வீட்டில். ரொம்பவே மணமா இருக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்னாரி வேர், தேயிஅலியில் போட்டு, திரும்ப திரும்ப 2,3 நாட்களுக்கு, புது தேயிலையிலும் அதையே போட்டு ரீ செய்வேன் கீதா. ஒரு வனிலா ஃபிளேவராக வரும் ரீ. வேறேதுக்கும் பாவித்ததில்லை.

      வேப்பம்பூ.. இங்கு எல்லோரும் ரசத்துக்குப் பாவிக்கலாம் எனச் சொன்னமையாலேயே என்ன வேணும் எனக் கேட்க சொல்லி விட்டேன், இதுவரை அதில் வடகம் தவிர வேறேதும் செய்து சாப்பிட்டதில்லை.

      Delete
  19. வெள்ளைக் கறி என்றதுமே நினைத்தேன் பால் கூட்டாகத்தான் இருக்கும் என்று...இதே இதே தான்...நானும் பால் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்வதுண்டு...

    பெரியவர்கள் இருந்தால் வெங்காயம் சேர்ப்பதில்லை. இல்லை என்றால் சேர்ப்பதுண்டு. இடியாப்பத்திற்கும் நலலருக்கும் சைட் டிஷ். நானும் சில சமயம் தாளிப்பேன் இல்லை என்றால் தாளிப்பது இல்லை. புளிப்புச் சுவையுடன் நல்லாருக்கும்.

    இதில் நாங்கள் வேறு வித கூட்டுகளும் விதம் விதமாகச் செய்வதுண்டு...இதை மட்டும் போட்டு சாம்பாரும் செய்யலாம் நல்லாருக்கும்...அதிரா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பார்த்தீங்களோ நீங்க கால்ஃப் ஸ்ரீ.. ஐ மீன் ஸ்ரீலங்கன் என்பதனால் எம்மைப்போலவும் சமைக்கிறீங்க:) ஹா ஹா ஹா.. ஓ புளிக்குப் பதில் இதை சாம்பாருக்குப் பாவிக்கலாமோ..

      Delete
  20. அதே போல சாரணை, வில்வம் எல்லாம் மிக மிக நல்லது.

    நானும் இப்படிச் சில மூலிகைப் பொடிகள், வேர்கள் என்று வைத்திருக்கிறேன்...பயன்படுத்துவதுண்டு...எங்கள் குடும்ப ஆயுர்வேத மருத்துவர் சொல்லுவார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இவை இரண்டும் இதுவரை பயன்படுத்தியதில்லை கீதா.. இனித்தான் பாவிக்கப்போகிறேன்.

      மிக்க நன்றிகள் கீதா. துளசி அண்ணன் நலமாகிட்டாரோ? சுகம் விசாரித்ததாக சொல்லிவிடுங்கோ முடிந்தால்.

      Delete
  21. இந்தப் பாடல் ஏற்கெனவே நீங்கள் பகிர்ந்து நானும் ரசித்துப் பின்னூட்டங்கள் இட்டிருந்தேனே... ஏன் மறுபடியும் அதே பாடல்?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. அப்படியா? போட்டு விட்டேனோ.. வழமையாக காதில் விழுவதை என் குட்டி நோட் புக்கில் எழுதி வைத்து, இங்கு போட்டதும் கட் பண்ணி விடுவேன், இது கட் பண்ணாமல் இருந்தமையால் போட்டு விட்டேன்.. வர வர உங்களுக்கு நியாஆஆஆஆஆஆஆபக சக்தியும் கூடிக் கொண்டே வருதே ஹா ஹா ஹா:)..

      Delete
  22. விஷமக்காரப் பூனை மேலேயிருந்து பாவனையில் எடுக்கும் பொருள் என்னவாக இருக்கும் என்று மற்ற இரண்டும் மேலே பார்ப்பது சிறப்பு! ரசனை!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சூப்பரா அக்ட் பண்ணுதெல்லோ.. மற்றதை இரிரேட் பண்ணுதாம் ஹா ஹா ஹா அதுதான் எரிச்சலில் தள்ளி விடுது மற்றது...

      Delete
  23. கறி கறி என சொல்லிக்கொண்டு கூட்டு செய்திருக்கிறீர்களே ...

    பார்க்க நன்றாயிருக்கிறது. எனினும் நீங்களே சொல்லியிருப்பதுபோல பழம்புளி வாசனை, டேஸ்ட் என்றால் தக்காளிக்காய்க்கு எந்தச் சுவையும் இருக்காதே...

    ReplyDelete
    Replies
    1. //
      கறி கறி என சொல்லிக்கொண்டு கூட்டு செய்திருக்கிறீர்களே ... //

      ஆவ்வ்வ்வ் எங்கள் சமையலில் கூட்டு எனும் சொல் கிடையாதே.. தண்ணிக் குழம்பு, பிரட்டல் கறி, வெளாளிக்கறி.. சொதி..., சாம்பாறு இப்படித்தான் சொல்லுவோம்.

      தக்காளி எனக் கண்டு பிடிப்பது கொஞ்சம் கஸ்டம்தான், ஆனா சுவை நன்று.. அதுதானே எங்களுக்கு வேணும் ஹா ஹா ஹா.. வைட் ரைஸ் க்கு சூப்பர்.

      Delete
  24. வேப்பம்பூ ஓகே, ரசம் வைத்தோ, பொறித்து ம.த வற்றலுடன் சாதம் கலந்தோ சாப்பிடலாம். நன்னாரி தெரியும். குடிக்கும் தண்ணீரில் போட்டு வைத்துக் குடிப்போம். தேநீரில் போட்டதில்லை. மற்ற இரண்டும் கேள்விப்பட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஸ்ரீராம் வில்வம்பூ.. வில்வம் பழம் தெரியும்தானே.. ஸ்பெஷலா சிவனுக்கு அர்ச்சனைக்குப் பாவிப்பார்கள் என நினைக்கிறேன்.. நான் பழம் சாப்பிட்டிருக்கிறேன் ஆனா அதன் சுவை பிடிக்கவே இல்லை அச்சச்சோ சாப்பிட முடியாது:).

      இது அப்பூவைக் காய வைத்து ரீ யாக பாவிக்கிறார்கள். கீதாவுக்கும் தெரிஞ்சிருக்குதே.

      தேனீர், மில்க் ரீ அனைத்துக்கும் போட்டுப் பாருங்கோ.. வனிலா வாசம் போல சூப்பரா இருக்கும்.

      Delete
  25. நாய்கள் மனிதர்களைக் கண்டு எதிரிகளாக பாவிப்பது வெகு குறைவு. சீக்கிரம் நட்பாகி வாலை ஆட்டத்தொடங்கிவிடும்!

    ஊசிக்குறிப்பு சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. யாருமே நம்மை எடுத்த எடுப்பில் எதிரியாகப் பார்ப்பதில்லைத்தானே.. தம் பயத்தினாலேயே மிருகங்கள் எதிரியாகுது:).. மனிதர்கள் நம்மைப் பிடிக்காட்டில் எதிரியாகி விடுகின்றனர் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  26. தக்காளிக்காய் எனக்கு மிகவும் பிடித்தமானது. அங்க இருந்தபோது வெகு அதிசயமாகத்தான் பார்க்கமுடியும்.

    இதில் வெங்காயம் சேர்க்காமல், தேங்காய் எண்ணெய், கடுகு 'தி ரு வ மா றி', அதில் கட் பண்ணிய தக்காளியைச் சேர்த்து வதக்கி (அதாவது அவிய விட்டு, நன்றாக மசிந்தபின்), உப்பு சேர்த்து, அதனுடன், ப.மிளகாய், தாராளமாக தேங்காய் சேர்த்து அரைத்த கலவையை (இத்துடன் கொஞ்சம் ஜீரகமும் சேர்த்து அரைக்கலாம்) கடைசியில் கலந்து தேவைனா தயிரைக் கலந்தால் அட்டஹாசமான அவியல் ரெடி. எனக்கு மிகவும் பிடித்தமானது. இங்கு வந்து இரண்டுமுறை செய்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      ஓ நான் எங்கும் பார்த்ததுமில்லை சாப்பிட்டதுமில்லை காய் .. ஊரில் சிலசமயம் பழங்களோடு காயும் வரும் கடையில்.. ஆனா அது முத்திய காயாகவெல்லோ இருக்கும், இப்படிப் பிஞ்சாக இருக்காது.

      ஓ இதுக்கும் தயிர் சேர்க்கலாமோ.. இனிமேல் சான்ஸ் கிடைச்சால் செய்யோணும்.

      நாங்கள் பொதுவா கறிகளுக்கு எப்பவுமே தேங்காய் அரைத்துச் சேர்க்க மாட்டோம், பத்தியக்கறி அல்லது சரக்குக் கறி எனச் சொல்லப்படும் கறிக்கு மட்டுமே தேங்காய் அரைப்போம்.. மற்றும்படி பால்தான்.

      மிக்ஸியை எடுத்து அரைச்சூஊஊஊ கழுவி.. திரும்ப வச்சூஊஊஊஊ ஆவ்வ்வ்வ்வ் வாணாம் ஜாமீஈஈஈஈ ஹா ஹா ஹா.

      Delete
  27. இப்போ நேரம் இல்லை. பிறகு வருகிறேன். மாமி அனுப்பியிருந்த பார்சல் - மிகவும் ரசித்தேன், அவர்களது அன்பையும் பாரம்பரிய பொருட்களை அனுப்பியிருந்ததையும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நெல்லைத்தமிழன், நாங்க வேண்டாம் வேண்டாம் எனச் சொல்லச் சொல்ல என்ன வேணும் எனச் சொல்லாட்டில் நாங்களே அனுப்பிடுவோம் எனச் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்... இது வித்தியாசமானவை என்பதால் படமெடுத்துப் போட்டேன்.. இதைவிட மஸ்கட், முறுக்கு, கோப்பி, கறிப்பவுடர்... இப்படி நீளுது...:) நன்றி. இவர் அம்மாவின் தம்பி.. அம்மாவுக்கு ஒரே ஒரு ஆண் சகோதரம்தான்... அதனாலோ என்னவோ எங்களில் பாசம் அதிகம்... அதேபோல மாமியும் நல்ல ஜாடிக்கேத்த மூடி:) என ஒத்துபோவா ஹா ஹா ஹா..

      Delete
  28. //பணத்தால் நாயை வாங்கலாம்... பாசத்தால்தான் அதன் வாலை ஆட்டவைக்கமுடியும்'//

    நீங்க சொல்லவந்தது, 'யாரும் செய்முறையைப் போட்டு பின்னூட்டம் வாங்கிடலாம். ஆனால் அது நல்லா இருக்குன்னு படிக்கறவங்க நினைத்தால்தான் செய்துபார்ப்பாங்க' என்பதுதானே.

    எதுக்கு ஏஞ்சலினை வம்புக்கு இழுக்கறீங்க. அது தவறு இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. @நெல்லைத்தமிழன்

      [im]https://pbs.twimg.com/profile_images/2656660159/30310b778564307d346c148f747051ea.jpeg[/im]

      Delete
    2. ///எதுக்கு ஏஞ்சலினை வம்புக்கு இழுக்கறீங்க. அது தவறு இல்லையா?///

      ஆவ்வ்வ்வ்வ் கரெக்ட்டா ஜிந்திக்கிறீங்க:)) ஹா ஹா ஹா நான் எங்கே இழுத்தேன்.. ஜெரி முறைக்குது:)..

      Delete
  29. தக்காளி காயில் ஒரு சப்ஜி.... பார்க்க நன்றாக இருக்கிறது.

    இங்கே கிடைத்தால் செய்து பார்க்கலாம்....

    ஊசிக் குறிப்புகள் வழமை போல சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. இடைக்கிடையாவது வந்து சும்மா இருக்க்கும் சங்கை ஊதிவிட்டுப் போயிடுறீங்க ஹா ஹா ஹா.... கறியை ஹிந்தியில் சப்ஜி என்பார்களோ...

      மிக்க நன்றி.

      Delete
  30. தக்காளி காய் கறி அருமை.

    படமும் அழகாய் இருக்கிறது.

    //இது ஹலவீன் கதையில் வரும் witch இன் cat:) ... ஹா ஹா ஹா பயம்ம்மா இருக்கோ?:)//
    பயமுறுத்தவில்லை, அழகாய் இருக்கிறது அதைராவின் கை வண்ணத்தில்.
    ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு இரண்ரும் நன்றாக இருக்கிறது.



    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. நீங்க எப்போ செய்யப் போறீங்க இதை?:) ஹா ஹா ஹா.. ஓ பூஸார் அழகோ மியாவும் நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  31. குழந்தை உண்டாகி இருக்கும் சமயம் சாறணை வேர் போட்டு அரிசி கஞ்சி வைத்துக் கொடுப்பார்கள். மருந்து கிண்டி போடும் போது அதில் இந்த சாறணை வேர் இருக்கும்
    இதற்கு இன்னொரு பேரும் இருக்கும் மூக்கட்டை என்று நினைக்கிறேன்.
    சுக்கு, மிள்கு, திப்பிலியுடன் உந்த வேரையும் இடித்து போட்டு காய்ச்சல், சளி பிடித்து இருந்தால் அம்மா கசாயம் வைத்து தருவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ எங்களூரில், கறிக்கு பச்சையாக மல்லி மிளகு தேங்காய் எல்லாம் அரைப்பினமெல்லோ பத்தியக்கறி என.. அதுக்கு சாரணையையும் சேர்த்து அரைப்பார்களாம்..

      //திப்பிலியுடன் உந்த வேரையும்//

      ஆவ்வ்வ்வ் உந்த என கோமதி அக்காவும் யாழ்ப்பாணப்பாசை பாவிக்கிறா அவ்வ்வ்வ்வ்:))..

      ஓ அப்போ சளி வராமல் இருக்கவும் இது நல்லதோ. இன்று முதல் தடவையாக ரசம் செய்தேன், சூப்பராக இருந்தது சுவை.

      Delete
  32. சாரணை கீரையும் நல்லது. அதிரா....

    சரி சரி நீங்க மாமி அனுப்பினதை வைத்து என்ன செஞ்சீங்கனு சொல்லுங்க...ஒயிங்கா ரீ போட்டு குடிச்சு வேப்பம்பூ ரசம் செய்து சொல்லோனுமாக்கும்...சும்மா ஃபோட்டோ போடப்பிடாது...ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சாரணை கொடிபோல இருக்குமாக்கும் என நினைக்கிறேன் கீதா.. ஓ இலையும் சமைக்க பாவிக்கலாமோ.. நான் இதுவரை பார்த்ததில்லை, பிரண்டைதான் யூ ரியூப்பில் பார்த்தேன்.

      நன்னாரி ரீ குடிக்கிறோம், சாரணை போட்டு இன்று ரசம் வச்சாச்சு.. இந்தக்கிழமைதானே பார்சல் வந்துது.. இனித்தான் வில்வம்பூவும் வேப்பம்பூவும் பாவிக்கோணும்..

      மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  33. சாரணவேருக்கு இன்னொரு பேர் மூக்கிரட்டை. மூக்கு இரட்டையாக இருப்பதால் இந்த பேர்
    சாரணவேர் நுரையீரலுக்கு காற்று உண்டாக்ககூடியது.
    நல்ல காற்றை ஆக்ஸிஜனை அதிகபடுத்த கூடியது.
    நோய்களை எதிர்க்க கூடியது, வெயிலில் காயவைத்து இதன் விஷத்தை நீக்கி பயன்படுத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஓ இவ்ளோ விசயம் இருக்கோ கோமதி அக்கா இதில்.. நன்றி தகவலுக்கு. ஆனா சும்மா சுடுநீரில் ஊறப்போட்டுக் குடிக்கக்கூடாதோ? எனக்கு ரசம் பெரிதாக ஒத்துக் கொள்ளாது, குடிக்க ஆசை, ஆனா குடிச்சால் வயிற்றில் உடனே வாய்வு வந்துவிடும்.

      Delete
  34. பாட்டு நன்றாக இருக்கிறது. பல காலம் ஆச்சு இந்த பாட்டை கேட்டு.

    ReplyDelete
    Replies
    1. ஓம் கோமதி அக்கா சூப்பர் எல்லோ.. ஆனா இதை இங்கு ஏற்கனவே போட்டு விட்டேன் எனச் ஸ்ரீராம் சொல்கிறார்.. அவரின் ஞாபக சக்தி பார்த்து மீ வியக்கேன்ன்:).. ஹா ஹா ஹா.. எனக்கு பழைய பாட்டுப் போடும்போது கொன்பியூஸ் ஆவேன்ன்.. இது எங்கள்புளொக்கில் வந்ததோ என ஹா ஹா ஹா..

      Delete
  35. இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அக்கா, மேலே ட்றுத்தும் இப்போ நீங்களும் சொன்னபோதுதான் திடுக்கிட்டேன் ஓ தீபாவளி நெருங்கி விட்டது என.. தீபாவளி அன்று அல்லது அடுத்தநாள் தான் கெளரி விரதம் முடிஞ்சு காப்புக் கட்டுவோம்.. இம்முறை புதன் கிழமை வருது.. அப்படியே கந்த சஷ்டி தொடருது.
      மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  36. ஊசிக் குறிப்புகளை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா மிக்க நன்றி.

      Delete
  37. முதல்ல சிவப்பு கலர்ல எழுதியிருந்ததை சரியா வாசிக்கலை. பூனைப் படம் கீழே visit.. என்று பிரின்ட் பார்த்த உடனே வெறுமன கலர்தான் தீட்டியிருக்கீங்க என்பதைப் பார்த்தேன்... நல்லவேளை உண்மையை ஒத்துக்கிட்டிருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்கதான் யூஊஊஊஊஊஊஊம் பண்ணிப் பார்ப்பீங்க எனத் தெரியுமே எனக்கு:) அதனால பீஈஈ கெயார்ஃபுல்லாத்தான் இருக்கிறேன் ஹா ஹா ஹா.

      Delete
  38. அருமையாக செய்துள்ளீர்கள் சகோதரி...

    ReplyDelete
  39. ஆகா...

    பச்சைத் தக்காளிக் கறி!...
    பார்க்கவே பயங்கரமாயிருக்கு...

    சின்ன வயதில் வீட்டைச் சுற்றித் தோட்டம் போட்டிருந்த போது
    பச்சைத் தக்காளித் திருவிழாவே நடக்கும்...

    அடடா... செடியில் காய்த்திருக்கும்போது அதன் வாசனையே தனி!..

    எப்படியோ செஞ்சிட்டீங்க!..

    அப்புறமாத்தான் தெரியும் போல இருக்கு!..

    டொக்டர் கிட்ட போவணுமா... வேணாமா...ன்னு!...

    ReplyDelete
    Replies
    1. //டொக்டர் கிட்ட போவணுமா... வேணாமா...ன்னு!...//

      அதிரடிக்கு என்ன! வீட்டிலேயே ரெண்டு டாக்டர்! செலவில்லாமல் வைத்தியம் பார்த்துப்பாங்க! :)))))

      Delete
    2. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. இதை மிஸ் பண்ணிட்டனே பார்க்க:)..

      //அப்புறமாத்தான் தெரியும் போல இருக்கு!..

      டொக்டர் கிட்ட போவணுமா... வேணாமா...ன்னு!...//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)..
      மிக்க நன்றி துரை அண்ணான்:))

      Delete
    3. கீசாக்கா.. எனக்கு வருத்தம் வந்தால். வெட்:)[vet:)]இடம் போய்க் காட்டுங்கோ எண்டெல்லோ சொல்லீனம் கர்ர்ர்ர்:))

      Delete
  40. அனைவருக்கும்
    அன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் அப்படியே ஆகட்டும் துரை அண்ணன்.

      Delete
  41. தக்காளி காய்யில் பால் விட்டா ரொம்ப புதுசா இருக்கு ..

    அம்மா பாசிபருப்பு போட்டு கூட்டு வைப்பாங்க இந்த பச்சை தக்காளியில் ..

    நல்லா இருக்கு பார்க்க ...நல்லா வெந்து இருக்க படத்தில் எனக்கு பச்சை கத்தரி போல் இருந்துச்சு அதில் புளி தண்ணி விட்டா கடைச்சல் ஆகிடும்..

    மீண்டும் ஒரு புது ரெசிப்பி..(உங்க புளிச்ச கீரை தொக்கு செஞ்சு பார்த்தேன் ..சொதப்பிட்டேன் அதான் படம் போடலை )

    படமும், பார்சலும் ...ம்ம் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ... நான் தக்காழியில் என்ன கறியும் வைத்ததே இல்லை என்பதனால் இது எனக்குப் புதிசு:)..

      ஓம் கத்தரிக்காய்க்கு புளி/தேசிக்காய் விட்டு இப்படி வெள்ளைக்கறி வைப்போம் அதுவும் சுவைதான்.

      ஓ கொங்குறா தொக்கு செய்தீங்களோ? ஏன் சொதப்பியது ? ஹா ஹா ஹா திரும்ப செய்யுங்கோ. நான் கடையில் தொக்கு வாங்கினேன், ஆனா அதில் நான் செய்தளவு சுவை கிடைக்கவே இல்லை.

      மிக்க நன்றிகள் அனு.

      Delete
  42. தக்காளிக்காயெல்லாம் மதுரையில் இருக்கிறச்சே சாப்பிட்டது. என் அம்மா சப்பாத்திக்குக் கூட்டுப் பண்ணுவா! இதைத் தவிரவும் புளி சேர்க்காமல் கொஞ்சமாய்த் துவரம்பருப்பு வேக வைத்துச் சேர்த்து மி.வத்தல், கொ.ம.வி. க.ப. உ.ப. பெருங்காயம், தேங்காய் எல்லாம் வறுத்து அரைத்துச் சாதத்தோடு சாப்பிடக் குழம்பு மாதிரியும் வைப்பா!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ... காய் கிடைப்பது கஸ்டம்தான். மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
  43. பூஸாரே ரொம்ப நாள் ஆச்சு பிளாக் சிலர் பிலாக் கமென்ட் செய்து , எப்படி இருக்கீங்கள்> ஒரு டிபரெண்டான பச்ச தக்காளி கறி, செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.