இந்த 2019 கோடை விடுமுறையில் சுற்றுலாப் போக முன், எங்கள் வீட்டுத்தோட்டம் பயிரிட்டுள்ளேன் என ஒரு போஸ்ட் போட்டிருந்தேன், அதுக்கு கோமதி அக்கா உள்பட சிலர் கேட்டிருந்தனர், நன்கு வளர்ந்த பின்பும் படம் எடுத்துப் போடுங்கோ என்று.
ஹொலிடே முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் படமெடுத்தேன், ஆனா போட நேரம் அமையவில்லை. இன்று வருடம் முடிவதற்குள் போட்டிடோணும் எனப் போடுகிறேன்.
ஹொலிடே முடிஞ்சு வரும்போது, வெளி முற்றம் இப்படி இருந்தது புல்லெல்லாம் வளர்ந்து...
பின்பு புல்லு வெட்டியதும் இப்படி ஆச்சு:)
சரி அப்படியே கிச்சின் வாசலால் கார்டினுக்குள் இறங்குவோமா?
இது கிச்சின் வாசலில் சாடியில் வைத்திருக்கிறேன், ஒரு கொடியிலேயே பல வர்ணங்களில் மலரும், அவரைக் கொடி போல இருக்கும்.. பூங்கன்று.. இப்படிப் பூக்களோடு வரவேற்றது நம்மை
வாசல் படியால் கீழே இறங்குமிடத்தில் சாடியில் தக்காளி வைத்தேன்.. செரி ரொமாட்டோ.. இவ, மொத்தமாக காய்த்ததே ஒரு 10 காய்கள்தான் ஹா ஹா ஹா..
அவரை..
கரட்கள் பழுதாகியிருக்கும் என நினைச்சேன், ஆனா நன்கு வளர்ந்திருந்ததே.. விட்டு விட்டு மழை பெய்ததாம்..
இவை சிவப்பு இலைக் கோவாக்கள்[கபேஜ் லீவ்ஸ்].. மருந்தில்லாமல் பூச்சிக்கு இரையாகி விட்ட இலைகளோடு...
வாவ்வ் இம்முறை பல நூறு பூக்கள் பூத்து, முடிவில் ரெண்டே ரெண்டு அதிராவின் கண்களோ கண்கள் எனக் காயோடு நின்றா இவ:).. பெயார்ஸ்:))
கரட் அறுவடை, நிலத்தின் சொகுசு போதாமையால நீளமாக வளர்வதற்குப் பதில், உருண்டையாக வள்ர்ந்திட்டார்கள் கரட் குடும்பத்தினர் ஹா ஹா ஹா. இதுவும் ஒரு அழகல்லோ?:).. அதிரா வீட்டில மட்டும்தான் இப்படிக் காண முடியுமாக்கும்:))
வெங்காயமும் உருளைக்கிழங்கில் சிலதும்..
டெய்சிஈஈ... விழப்போறீங்கள் கீழ இறங்குங்கோ..
இந்தப் பிங்கியும் இப்படிப் பூத்துக் குலுங்கி நின்றா...
படம் படமாய்ப் போட்டுக் காட்டிவிட்டேன், படம் பார்த்து மகிழ்ந்திருப்பீங்கள்.
“அழகானவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தோமானால், சந்தோச மானவற்றைக் கேட்டுக் கொண்டிருந் தோமானால், நகைச்சுவையோடு பேசிச்சிரிச்சுக் கொண்டிருந் தோமானால், நம் முகம் மலர்ச்சியாகும், மனம் சந்தோசப்பட்டு, உடலில் பலம் அதிகமாகி, பல வயதுகள் குறைந்துவிட்டதைப்போல உணர்வு வரும்...”
சொன்னவர் கண்ணதாசன் அங்கிள்:))
ட்றுத்தின் மைன்ட் வொயிஸ் ஆக இருக்குமோ:)) நமக்கெதுக்கு
ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)..
ஊசிக்குறிப்பு
“ஒருவரைக் குறை சொல்வதைக் காட்டிலும், தீர்வைச் சொல்லுங்கள்”
இங்ஙனம்..புலாலியூர்ப் பூஸானந்தா
😸😸😸🙏😸😸😸
|
Tweet |
|
|||
அழகு... அழகு...
ReplyDeleteதோட்டத்துக்குள் காலாற நடந்த மாதிரி இருக்கிறது...
ஆஆ துரை அண்ணன் வாங்கோ வாங்கோ.. முதலாவதா வந்திருக்கும் உங்களுக்கு என் கரட் முழுவதையும் மூட்டையாகக் கட்டித்தந்துவிடப் போகிறேன்:).. மிக்க நன்றிகள், தோட்டத்தில் நடந்து இவற்றைப் பார்ப்பது ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியாக இருக்கும்.
Deleteவணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteஅழகான தோட்டப்பதிவு. கலர், கலரான மலர்கள் கண்களை கவர்கின்றது. மெனக்கெட்டு நீங்கள் உழைத்த உழைப்பிற்கு செடி கொடிகள் நல்ல பலனை தந்து தங்களை சந்தோஷப் படுத்தியிருக்கின்றன. நீங்கள் அதை எங்களுக்கும் பகிர்ந்து எங்கள் மனதையும் மகிழ்வாக்கியிருக்கிறீர்கள். அழகான மலர்களை பார்த்ததும் உண்மையிலேயே மனதுக்குள் ஒரு சந்தோஷத்தை உணர்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
பிறவற்றை காண மீண்டும் வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ.. உண்மைதான், ஒரு செடி நட்டால், அது பூத்துக் காய்க்காட்டிலும் நன்கு வளர்ந்து பசுமையாக நின்றாலே பலமடங்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
Deleteமிக்க நன்றிகள்.
பூக்களும், தோட்டமும் அழகாக இருக்கிறது.
ReplyDeleteஇவைகளை பராபரிப்பதற்கும் பொறுமை வேண்டும்.
கேரட் உருண்டையாக இருப்பது அதிசயம்தான்.
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. எல்லோருக்கும் இப்படித் தோட்டம் பயிர்ச்செய்கை பிடிக்காது:), ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் நாட்டம், மனம் விரும்பினால் மட்டுமே எதுவும் பொறுமையாகச் செய்ய வரும்.
Deleteமிக்க நன்றி கில்லர்ஜி.
படங்கள் நன்றாக உள்ளன. அது எப்படி விண்ட்டரில் விளைவு எடுத்தீர்களோ? சாதாரணமாக ஒக்டோபரில் அறுவடை முடிந்திருக்கும். காரட் டர்னிப் போன்று உள்ளது. குடைமிளகாயைக் காணோம்.
ReplyDeleteJayakumar
வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ.. கீழே பெயரெழுதுவதற்குப் பதில், மேலேயே பெயரை மாற்றலாமெல்லோ..
Deleteமேலே சொல்லியிருக்கிறேன் நீங்கள் கவனிக்கவில்லை. இது யூலை ஓகஸ்ட்டில் நடந்த பயிர்ச்செய்கையாக்கும்:)).. இப்போதான் போடுவதற்கு இடைவேளை கிடைச்சது ஹா ஹா ஹா , குடை மிளகாய் எனக்கு வளருதில்லை, முன்பு வைத்துப் பார்த்து இப்போ கைவிட்டு விட்டேன்.. மிக்க நன்றிகள். உங்கள் மைதா முறுக்கு ரெடியாகிறது:).
மைதா மாவை ஆவியில் நன்றாக வேகவைத்து எடுத்து சலித்து பின்தான் அதில் முறுக்கு செய்யவேண்டும் முக்கியம். Jayakumar
Deleteமுடிச்சிட்டேன் ஜேகே ஐயா, விரைவில் வெளி வரும் வெயிட் அண்ட் சீ:)) மிக்க நன்றி.
Deleteஆகா...! என்னே அழகு...
ReplyDeleteவாழ்த்துகள்... பாராட்டுகள்...
வாங்கோ டிடி வாங்கோ..மிக்க நன்றி.
Deleteபடங்கள் அனைத்தையும் ரசித்தேன். டெய்சியின் சாகஸம் புன்னகைக்க வைக்கிறது.
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. டெய்சியால நல்ல பொழுதுபோக்கு எங்களுக்கு..
Deleteஎனக்கு ஏற்கெனவே வயது குறைவு. கண்ணதாசன் சொன்னதைக் கேட்டால் குழந்தையாகி விடுவேனே...!
ReplyDeleteஓ உண்மையை உளறிவிட்டீங்களே:)) நீங்கள் இப்போ குழந்தை எண்டெல்லோ ஸ்ரீராம் நினைச்சுக் கொண்டிருக்கிறோம் நாம்:)) ஹா ஹா ஹா..
Deleteவடிவேலுவின் புலம்பல் இன்றைய நிறைய இளைஞர்களின் புலம்பல்! ஊசிக்குறிப்பு டாப்.
ReplyDeleteஹா ஹா ஹா நன்றி ஸ்ரீராம்.
Deleteபுபூவின் தத்துவம் சரி. ஆனால் நாம் அப்படி இருக்க முடிவதில்லையே...!
ReplyDeleteஅதற்குத்தான் தேம்ஸ் கரை ஆச்சிரமம் வாங்கோ ஞானி ஆகலாம் என்றால் கேய்க்க மாட்டேன் என்கிறீங்களே ஹா ஹா ஹா..
Deleteநன்றி ஸ்ரீராம்.
அழகான தோட்டம்.
ReplyDeleteஉருண்டையான கேரட் - வித்தியாசமாகத் தான் இருக்கிறது :)
தோட்டம் பராமரிப்பு மிகவும் நல்லது - மனதுக்கு அமைதி தரும் விஷயம் அது. தில்லியின் அடுக்கு மாடிக் குடியிருப்பில் நான் இழக்கும் ஒரு மிக முக்கிய விஷயம் இந்தத் தோட்டப் பராமரிப்பு.
தொடரட்டும் பதிவுகள்.
வாங்கோ வெங்கட் வாங்கோ..
Deleteஹா ஹா ஹா முயற்சி செய்தாலும் விளையாது, இது தன்பாட்டில் உருண்டைகளாக வந்துவிட்டது கரட்.
உண்மைதான், பல்கனி இருப்பினும் சாடியில் வைப்பதை விட நிலத்தில் வைக்கும்போதுதான் அதிக மகிழ்ச்சி.
மிக்க நன்றி வெங்கட்.
தோட்டம் அழகு.
ReplyDeleteபாடல் இனிமை.
பூக்கள் பூத்து அதைராவை வரவேற்று விட்டது.
புல் வெட்டுமுன் மிகுந்த அழகு தோட்டம். புல் வெட்டியாக வேண்டும் இல்லையா?
அதிராவை
Deleteதோட்டம் படம் பார்த்து மகிழ்ந்துவிட்டேன், நான் கேட்டேன் என் பெயரை குறிப்பிட்டது மகிழ்ச்சி .
Deleteஜிமிக்கி பூக்கள் அழகு.
Delete“அழகானவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தோமானால், சந்தோச மானவற்றைக் கேட்டுக் கொண்டிருந் தோமானால், நகைச்சுவையோடு பேசிச்சிரிச்சுக் கொண்டிருந் தோமானால், நம் முகம் மலர்ச்சியாகும், மனம் சந்தோசப்பட்டு, உடலில் பலம் அதிகமாகி, பல வயதுகள் குறைந்துவிட்டதைப்போல உணர்வு வரும்...”
கண்ணதாசன் பகிர்வு மிக அருமை.
வடிவேல் சொல்வது சிரிப்பு.
Deleteஅழகான பெண்கள் தங்களை ஏன் அழகில்லை என்று சொல்லவேண்டும்?
புன்னகை அழகு.
குறை சொல்வதை விட தீர்வு நல்லதுதான்.
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. பதிலில் திருத்தம் செய்ய வந்து அதிலேயே கொமெண்ட்ஸ் போட்டு விட்டீங்கள் ஹா ஹா ஹா.
Delete//புல் வெட்டுமுன் மிகுந்த அழகு தோட்டம். புல் வெட்டியாக வேண்டும் இல்லையா?//
கலரைப் பார்த்துச் சொல்றீங்கள் போலும், இல்லைக் கோமதி அக்கா.. வெட்டாது விட்டால் நடக்க முடியாது அசிங்கமாகவும் இருக்கும்... வெட்டினால்தான் சேஃப் எடுத்ததைப்போல நீட்டாக இருக்கும், பூங் கன்றுகளும் நன்கு தெரியும்.
எங்கள் கார்டின் தானே.. வெட்டுவதும் வெட்டாததும் எங்கள் விருப்பம், ஆனா வெட்டாமல் இருந்தால், பக்கத்து வீட்டுக்காரர் எல்லாம் தப்பாக நினைச்சிடுவினம்:)).. ஏதோ குப்பைச் சனம்போல இருக்கே என்பதைப்போல:)) ஹா ஹா ஹா.
//
Deleteகோமதி அரசுSaturday, December 28, 2019 7:49:00 am
தோட்டம் படம் பார்த்து மகிழ்ந்துவிட்டேன், நான் கேட்டேன் என் பெயரை குறிப்பிட்டது மகிழ்ச்சி .//
நீங்கள் முன்பு போடச்சொல்லிக் கேட்டது, என் மனதில் பதிந்து நிறது, அதனாலதான் எப்படியும் போட்டிட வேண்டும் என நினைச்சிருந்தேன்.
உண்மைதான், நடந்து முடிந்துவிட்ட விசயங்களுக்கு குறைசொல்லித் திட்ட்டுவதை விட, தீர்வைச் சொன்னால் நன்றாக இருக்கும், ஆனா நமக்கு முதலில் வருவது குறைதானே ஹா ஹா ஹா... மிக்க நன்றி கோமதி அக்கா.
Deleteஏதோ நினைவில் உங்கள் பேர் திருத்தம் செய்த பகுதியில் பதில்களை கொடுத்து விட்டேன்.
Delete//எங்கள் கார்டின் தானே.. வெட்டுவதும் வெட்டாததும் எங்கள் விருப்பம், ஆனா வெட்டாமல் இருந்தால், பக்கத்து வீட்டுக்காரர் எல்லாம் தப்பாக நினைச்சிடுவினம்:)).. ஏதோ குப்பைச் சனம்போல இருக்கே என்பதைப்போல:)) ஹா ஹா ஹா.//
Deleteமகன் நியூஜெர்சியில் இருக்கும் நம் வீட்டு பகுதியில் உள்ள புற்களை வளரவிடக்கூடாது. சுத்தபடுத்தி விட வேண்டும் அளவாய்.
அது தான் கேட்டேன் புல் வெட்டியாக வேண்டும் இல்லையா? என்று.
//பகுதியில் பதில்களை கொடுத்து விட்டேன்.//
Deleteஅதனாலென்ன கோமதி அக்கா பறவாயில்லை, பதில் போடுவதுதான் கஸ்டம், கொப்பி பேஸ்ட் பண்ண வேண்டும், இல்லை எனில் தெரியாது.
ஓ இங்கு அப்படி சட்டம் இல்லை, ஹொலிடே போனால் சிலசமயம் பெரிதாக வளர்ந்திடும் புல்லு, திரும்பி வந்தால் தொடர் மழை எனில் வெட்ட முடியாது, பெரிய ஒரு அடிபுல்லுக்கூட சிலசமயம் வளர்ந்திருக்குது ஹா ஹா ஹா.
மரம் வெட்டக்கூடாது பெர்மிசன் இல்லாமல், கட்டிடம் கட்ட முடியாது, இப்போதைக்கு இவைதான் இங்கிருக்கு.
ஆனா மரம் பெரிதாக வளர்ந்துவிட்டால், நாமாக நினைச்சு வேடி விட்டிடொணும், ஏனெனில் இங்குள்ள வீடுகளுக்கு இந்த ஆற்று வியூதான் முக்கியம், எனவே மரம் வளர்ந்திட்டால், பின்னாலே இருக்கும் வீட்டினருக்கு வியூ மறைக்கும், அதனால ஆரும் பெரிதாக மரம் வளர விடுவதில்லை.
மிக்க நன்றி கோமதி அக்கா.
உருண்டை கேரட் பார்த்ததும் வித்தியாசமான விவசாயி அதிரா என்ற வியப்பு!
ReplyDeleteஉருளை , வெங்காயம் எல்லாம் அருமை.
ஹா ஹா ஹா எனக்கு எப்பவும் கொஞ்சம் ஏனையோரைவிட வித்தியாசமாக இருப்பதே பிடிக்கும்.. அது என் கரட்டுக்கும் தெரிஞ்சுவிட்டதே ஹா ஹா ஹா..
Deletehydrangeas,fuchsia அழகா இருக்கு. காரட் ...ஹா..ஹா. . உங்கள் வீட்டில்தான் இப்படி அதிசயமெல்லாம் நடக்கும்.
ReplyDeleteஅஞ்சு இல்லை. இருந்திருந்திருந்தா நல்ல பதில் வந்திருக்கும். ஐ மிஸ் அஞ்சூஊஊ
பாட்டு அருமையான பாட்டு,. கேட்டால் அந்த ஹம்மிங் மனதில் கொஞ்ச நேரம் இருக்கும்.
வாவ் உருளை,அவரை கறி வைக்க நல்லாயிருக்கும்.
ஊசிக்குறிப்பு,புலோலியூர் பூசானந்தா கருத்து அருமை.
சேம் பின்ச் எங்க ள் வீட்டிலயும் இதேதான் பியர்ஸ் நிறைய்ய்ய்ய பூ. ஆனா 2 காய்தான். அப்பிள் இல்லவே இல்லை.
//அஞ்சு இல்லை. இருந்திருந்திருந்தா நல்ல பதில் வந்திருக்கும். ஐ மிஸ் அஞ்சூஊஊ//
Deleteவந்துட்டேன் ப்ரியா :) ஜனவரில இருந்து மீ free :))) ட்ரெயினிங் முடியுது ..பூஸால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
ஆவ் தக்காளி ஹாஹாஆ கேரட் :)தக்காளி கேரட்டலாம் இந்த வருஷம் கட்டாயம் நானும் போடணும் ..உங்க ஏரியாவில் நத்தை இல்லையா ?? அததான் நான் தோட்டத்தை விட்டேன் :) இந்த வருஷம் மணத்தக்காளி உருளை கீரை மட்டுமே போட்டேன் அப்புறம் எப்பவும்போலே ரெட் கரென்ட்ஸ் அண்ட் பிளாக் பெரி இவ்ளோத்தோட முடிஞ்சு நம்ம தோட்டம் :)
Deleteஆஆஆ வாங்கோ அம்முலு வாங்கோ.. ஊருக்குத்திரும்பும் நாள் இன்னும் வரவில்லையோ:)).. நீங்கள் நாட்டில் இல்லாததாலோ என்னமோ இங்கெல்லாம் இம்முறை குளிர் குறைஞ்சு ஒரே மழையாக இருக்கே:)).
Delete//ஐ மிஸ் அஞ்சூஊஊ//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:))
//சேம் பின்ச் எங்க ள் வீட்டிலயும் இதேதான் பியர்ஸ் நிறைய்ய்ய்ய பூ. ஆனா 2 காய்தான். அப்பிள் இல்லவே இல்லை.//
Deleteஅதேதான் அம்முலு இம்முறை எங்களுக்கும் அப்பிள் பிள்ளை பூத்தா, ஆனா காய்க்கவில்லை கர்ர்ர்ர்ர்:)).. மிக்க நன்றிகள் அம்முலு.
//வந்துட்டேன் ப்ரியா :) ஜனவரில இருந்து மீ free :))) ட்ரெயினிங் முடியுது ..பூஸால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது //
Deleteஆஆஆஆஆஆஆஆ எங்கேயோ கேட்ட குரல்ல்... அதே குரல்ல்... ஆஆஆ அஞ்சு.. என்னாது ரெயினிங் முடியுதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இன்னும் 6 மாசம் கேட்டுச் செய்யுங்கோ அஞ்சு பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))
//உங்க ஏரியாவில் நத்தை இல்லையா ??//
Deleteநத்தை அத்தை எல்லோரும் இருக்கினம் அஞ்சு, கடுமையாகப் பாடுபடோணும்.. ஆனாலும் வெங்காயம் உருளை கரட்டை நத்தை ஒண்ணும் பண்ணாது.. பீன்ஸ் ஐ சாப்பிடுவினம் என்பதாலதான், பீன்ஸ் ஐ நிலத்தில் வைக்காமல் சாடியில் வச்சோம். போன வருடம் நான் விதை போட்டு வளர்க்கப் பிந்திவிட்டேன்.
இம்முறை பொங்கலோடு, வீட்டுக்குள் விதை போட்டு கன்றுகள் ரெடியாக்கப் போகிறேன்.
ஆமா :) முதல் படத்து பூஸ் எதுக்கு கவலையோடு இருக்கு :)) ஹலோஊஊ மேடம் இந்த வருஷக்கடைசியோட என்னோட ட்ரெயினிங் முடியுது .அதுவரைக்கும்தான் நீங்க இப்படி சொல்லமைகொள்ளாம போஸ்ட் போட முடியும் ஜனவரில இருந்து ஓடி ஓடி அடிப்பேன் :)))))))))))))
ReplyDeleteவாங்கோ அஞ்சு வாங்கோ..
Delete//இந்த வருஷக்கடைசியோட என்னோட ட்ரெயினிங் முடியுது .//
தாத்தா பாட்டிக்கு தமிழ் சொல்லிக் குடுத்தனீங்களோ?.. இல்ல இது அலாப்பியாட்டம்:)) இன்னும் 6 மாசம் நீங்க அங்கு போகோணும் ஜொள்ளிட்டேன்ன்:))..
//ஜனவரில இருந்து ஓடி ஓடி அடிப்பேன்//
ஜாமீஈஈ.. கடகடவென கனடாப் புதினமெல்லாம் போஸ்ட் போட்டு முடிச்சிடோணும், அஞ்சுட ரெயினிங் முடியமுன் என நினைச்சேனே கர்:)) .. பகவானே இது என்ன சோதனை:))
வெளி முற்றம் படம் அழகோ அழகா இருக்கு ..வரவர படங்கள் மிக அழகா எடுக்கறீங்க ,கேலண்டர்க்கு யாரும் சூட்டுடப்போறாங்க எல்லாத்தையும் வாட்டர் மார்க் பண்ணுங்க
ReplyDelete//எல்லாத்தையும் வாட்டர் மார்க் பண்ணுங்க //
Deleteஹா ஹா ஹா நீங்களும் அடிக்கடி சொல்லுவீங்க அஞ்சு, எனக்குப் பஞ்சி:)) ஒவ்வொன்றாக பெயர் போடுவது கஸ்டமாக இருக்கும்:).
இது என்ன அதிசயமா ஏஞ்சலின் ரொம்ப ஜால்ரா போடறாங்க. இது நல்லதுக்கில்லையே. படங்கள் அழகா இருக்கு உண்மைதான். மிக மிக அழகுன்னு சொல்றது ஜால்ரா சத்தமான்னா எனக்குக் கேட்குது
Deleteஅப்படியோ நெல்லைத்தமிழன், நான் அவசரப்பட்டு நம்பிட்டனோ?:).. பார்த்தீங்களோ மீ ஒரு அப்பாவி:))
Deleteபூச்சி வராம தடுக்க மஞ்சள் சாமந்தியை சுத்தி நடணும் அது ப்ரொட்டட் பண்ணும் .அவரைப்பூ எப்பவும் அழகுதான் .அது மட்டுமில்லை உருளை கத்திரி குடும்ப மலர்கள் தனி அழகு
ReplyDelete//மஞ்சள் சாமந்தியை சுத்தி நடணும் //
Deleteஹையோ வைரவா.. சாமந்தியைக் குறுக்க தறிச்சு விழுத்துதே ஸ்லக் கர்ர்ர்:)).. அதனாலதானே இப்போதெல்லாம் செவ்வந்தியை சாடியில வைக்கிறோம்.. அந்த தண்டில் ஒருவித இனிப்பு இருக்குதென நினைக்கிறேன்.
இல்லை அஞ்சு நாம் உரில் இல்லாமையால காப்பாற்ற முடியவில்லை, இல்லை எனில், மஞ்சள் சோப் தண்ணி ஊத்திப் பாதுகாத்திருப்பேன்.
இந்த அவனியில் மட்டுமில்லை எந்த பிளானட்டிலும் யாரும் இப்படி ஒரு குண்டு கேரட்டை பார்த்திருக்கவும் முடியாது பார்க்கவும் முடியாது :)ஜப்பான்காரனுக்கு போட்டியா ஸ்கொட்டிஷ் பூனை உருண்ட கேரட்டை உருவாகியிருக்கு :)ஜப்பானில் சதுர வாட்டர் மெலன் செய்ய என்னென்னமோ செஞ்சான் ஆனா பாருங்க உங்க கைத்திறமை தானாவே உருண்டை குண்டூஸ் கேரட் வளர்ந்திருக்கே :))))))))))))))))ஹையோ ஹய்யாயோ .அது நீங்க potting soil கூம்பு வடிவில் குமிச்சா வேர் கீழே போய் காரட் நீளமா வளர்ந்திருக்கும் .ஒரு ஜீவனின் வளர்ச்சியை தடை செஞ்சதுக்கு உங்களை க்ரெட்டா துன்பெர்க் அடிக்கப்போறா :)))
ReplyDelete///இந்த அவனியில் மட்டுமில்லை எந்த பிளானட்டிலும் யாரும் இப்படி ஒரு குண்டு கேரட்டை பார்த்திருக்கவும் முடியாது பார்க்கவும் முடியாது//
Deleteதங்கூ தங்கூ:)) அதிரா மடுமில்லை:)) அதிரா வீட்டுக் கரட்டும் வித்தியாசமானது:))) ஹா ஹா ஹா.
//ஆனா பாருங்க உங்க கைத்திறமை தானாவே உருண்டை குண்டூஸ் கேரட் வளர்ந்திருக்கே //
நன்றி நன்றி அஞ்சு.. ஒரே ஷை ஷையா வருது:).
//ஒரு ஜீவனின் வளர்ச்சியை தடை செஞ்சதுக்கு உங்களை க்ரெட்டா துன்பெர்க் அடிக்கப்போறா :)))//
இதென்ன இது புயு வம்பாக்கிடக்கூஊஊஊ:)) இப்போதானே வாழ்த்தோ வாழ்த்தென வாழ்த்தினவ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.
சதுர வாட்டர்மிலன் நான் நிறைய பார்த்திருக்கிறேன். (பேக்கிங்குக்கு எளிது என்று அதனை டப்பாவில் வைத்து வளர்க்கிறார்கள் போலிருக்கு. சைனாவிலும் அதனை முயற்சித்திருக்கிறார்கள்). இருந்தாலும் அதைப் பார்க்க ஒரு மாதிரியாத்தான் இருந்தது.
Delete/ பல வயதுகள் குறைந்துவிட்டதைப்போல உணர்வு வரும்...”
ReplyDeleteசொன்னவர் கண்ணதாசன் அங்கிள்:))//
உண்மைதான் மியாவ் .
[im]https://titirangistoryteller.files.wordpress.com/2010/01/hugging_kittens.jpg [/im]
Deleteஹஆஹாஆ :) ட்ரூத் எல்லா பொண்ணுங்களை அவருக்கு சிஸ்டர்ஸ் ஆக்கினா அவரும் என்னதான் செய்வார்
ReplyDeleteஅதிரா சிஸ்டர்ஸ் என்று சொல்லுறது எல்லாம் இந்திய பெண்களை மட்டும் அதனால பிரச்சனை இல்லை ஸ்பானிஷ் பிலிப்பைன்ஸ் சைனிஸ் ஜெர்மன்ஸ் பெண்களை சிஸ்டர் ஆக்காத வரை கொண்டாட்டம்தான் நயந்தாரா சிஸ்டர் இப்ப பாட்டி நயந்தாரா பாட்டி மாதிரி ஆகிவிட்டார்கள் கடசியாக் வந்த சில படங்களை பார்த்த பின் அவரின் அழகு எங்கே சென்றது என்பதே தெரியவில்லை
Delete//ஹஆஹாஆ :) ட்ரூத் எல்லா பொண்ணுங்களை அவருக்கு சிஸ்டர்ஸ் ஆக்கினா அவரும் என்னதான் செய்வார் //
Deletedowry குடுத்து திருமணம் முடிச்சு வச்சு மணமக்களை வாழ்த்துவார் ஹா ஹா ஹா..
//ஸ்பானிஷ் பிலிப்பைன்ஸ் சைனிஸ்//
Deleteம்ஹூம்ம்.. ட்றுத் உங்கட வொலட் காலி ஆகும்வரை சிஸ்டர் இல்லாமல் இருப்பார்களாக்கும் ஹா ஹா ஹா..
//கடசியாக் வந்த சில படங்களை பார்த்த பின் அவரின் அழகு எங்கே சென்றது என்பதே தெரியவில்லை//
அப்படியில்லையாக்கும்:)), உங்களுக்கு, நயனுக்கு சிவன் அண்ணா பொடிகார்ட் ஆக வந்துவிட்டார் எனும் பொறாமை ஹா ஹா ஹா:)) எதுக்கும் பொறுமை அவசியம் ட்றுத்:) வெயிட் பண்ணுங்கோ.. அங்கின ஏதும் கலகம் பிறந்தால் நயன் உங்களுக்கே:)) ஹா ஹா ஹா.
//அங்கின ஏதும் கலகம் பிறந்தால் நயன் உங்களுக்கே// - மதுரைத் தமிழன் உங்களுக்கு நல்ல நண்பர், நீங்களும் அவர் மீது நல்லெண்ணம் வைத்திருக்கிறீர்கள் என்று நினைத்திருந்தேன்.
Deleteஅவர் மீது இவ்வளவு வெறுப்பா? பழசாகிப்போன நயனைத் தள்ளிவிடப் பார்க்கிறீர்கள்.
///பழசாகிப்போன நயனைத் தள்ளிவிடப் பார்க்கிறீர்கள்.//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. பொறுங்கோ இப்பவே கூட்டம் போட்டு சினமயியை தலைமை தாங்க வச்சு இதனை சைபர் கிரைம்முக்கு எடுத்துப் போகப்போகிறேன்ன்:)) மீ பொயிங்குறேன்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா.
ஹலோ இந்த மீன்கொடி பாட்டு பெண் குரலில் மட்டும்தானே இருக்கு ? இதுமட்டுமே ரேடியோவில் கேட்ட நினைவு
ReplyDeleteஇதைக் கேட்டுப் பாருங்கோ அஞ்சு, ஜேசுதாஸ் அங்கிளின் குரலில்.. இதுதான் நான் பலநூறு தடவைகள் கேட்டுவிட்ட பாடல், இங்கும் முன்பு போட்டிருக்கிறேன்.
Deletehttps://www.youtube.com/watch?v=TWi5Sil-7Qg
அதுசரி அந்த வீட்டு கேரட் சமைசிங்களா ? அதன் ருசி பற்றி சொல்லுங்க .டெய்சி :)) காகா எப்பவும் உப்பரிகையே இடம் டெய்சியும் ஜெஸி போலத்தான்
ReplyDelete///காகா// thats haaaaaahaaa :))
Delete//அதுசரி அந்த வீட்டு கேரட் சமைசிங்களா ? அதன் ருசி பற்றி சொல்லுங்க//Good question. adhuthane mukiyam.
Delete//அதுசரி அந்த வீட்டு கேரட் சமைசிங்களா ? அதன் ருசி பற்றி சொல்லுங்க //
Delete//Bhanumathy VenkateswaranSaturday, December 28, 2019 1:49:00 pm
//அதுசரி அந்த வீட்டு கேரட் சமைசிங்களா ? அதன் ருசி பற்றி சொல்லுங்க//Good question. adhuthane mukiyam//
ஹா ஹா ஹா சுவை நல்ல இனிப்பாக இருந்தது அஞ்சு.. ரெசிப்பி ஸ்ரீராமுக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்:))[நீங்கதான் இப்போ ரெசிப்பி ஏதும் அனுப்புவதில்லையாமே அங்கு:), ஆல் இந்தியா ரேடியோவில் சொன்னார்கள்:)].. எந்த ஆண்டில்.. அந்த மாதம்.. எப்போ வெளிவருமோ?:)) ஹா ஹா ஹா... மிக்க நன்றிகள் அஞ்சு.
பானுமதி அக்கா சுவை பற்றி நான் சொல்றதை நீங்க நம்போணும்:)) வேறு வழி?:))
//AngelSaturday, December 28, 2019 11:18:00 am
Delete///காகா// thats haaaaaahaaa :))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நெல்லைத்தமிழன் எங்கே போயிட்டார்.. சே..சே.. :)
உருளைக்கிழங்கு, வெங்காயம், காரட், செரி தக்காளி, அவரைனு எல்லாம் போட்டு என்ன சமைச்சீங்க? உருளைக்கிழங்கு வறுவல், வெங்காயம் போட்டு சாம்பார், காரட், தக்காளி போட்டு சாலடா? நம்ம தோட்டத்துக் காய்கள் எனில் நமக்கு அருமைதான்! மனசே மகிழ்ச்சியில் ஆழ்ந்து போயிடும்.
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா சாம்பார் சமைப்பதில்லை நான்.. வருடத்தில் ஒரு தடவை சாம்பாறு செய்வதே அதிசயம் ஹா ஹா ஹா., கறிகள் தான் சமைப்போம் கீசாக்கா.
Deleteஉருளைக்கிழங்கில் குழம்பு,.. கரட்டில் சுண்டல்.., தக்காளி அவரை கிழங்கு போட்டு வெள்ளைக்கறி...
நேத்து மத்தியானம் கணினியில் உட்காரவில்லை. அந்த நேரம் பார்த்துப் பதிவு போட்டிருக்கீங்க போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பார்த்திருந்தா முதல்லே வந்திருப்பேன்.
ReplyDeleteநீங்கள்தான் 1ஸ்ட்டாக வருவீங்கள் என எதிர்பார்த்தேன்....
Deleteபோன போஸ்ட்டில் உங்களிடம் சில டவுட்ஸ் கேட்டிருந்தேன்.. பதில் சொல்லாமல் விட்டிட்டிங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).... ஜே கே ஐயாதான் கொஞ்சம் ரிப்ஸ் தந்தார்.
மிக்க நன்றிகள் கீசாக்கா. நீங்கள் மர்கழித் தொடரில் இருப்பதால், அங்கு வந்து எதுவும் பேச முடியவில்லை.. மார்கழி எப்போ முடியும் எனக் காத்திருக்கிறேன்.
Deleteதோட்டம் அழகு! எங்கள் வீட்டிலும் தக்காளியை தொட்டியில் வளர்த்தோம், குட்டி,குட்டியாக இரண்டே இரண்டு காய்த்தது. பின்னர் செடி காய்ந்து விட்டது:(((ஊசிக்குறிப்பு ஏற்கனவே படித்ததுதான், இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. உருண்டை வடிவ காரட்!!! ஹாஹா! அதிராவுக்கு எல்லாமே அலாதிதான்!
ReplyDeleteவாங்கோ பா.அக்கா வாங்கோ..
Deleteஹா ஹா ஹா அது தக்காழி வாங்கும்போது நல்ல வகையாகப் பார்த்து வாங்க வேண்டுபோல, எனக்கு எப்பவுமே இந்த செரிதான் அகப்படுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது ஒன்று ஒன்றாகத்தான் காய்க்குது:)...
இம்முறை பீற்றூட் ஐ உருண்டையாக வளர்க்கப்போகிறேன் ஹா ஹா ஹா.
மிக்க நன்றிகள் பானுமதி அக்கா.
ட்றுத்தின் மைன்ட் வொயிஸ் ::இந்தியாவின் மக்கள் தொகை பல கோடி அதில் நமக்கு கிடைக்கவில்லையே ஒரு கேடிப் பொண்ணு
ReplyDeleteவாங்கோ ட்றுத் வாங்கோ... கேடியை வச்சு என்ன பண்ணப்போறீங்க?:)) மாமியிடம் வாங்கும் உருட்டுக்கட்டை அடி போதாதோ?:) ஹா ஹா ஹா .. நன்றி ட்றுத்.
Deleteவணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteமுகப்பு பாடல் அருமை.. எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். கேட்டு ரசித்தேன். "காய்கறிகளும் பிரமாதம்..! அந்த ஊரின் பிரசாதம்." என படங்களை பார்த்ததும் "கல்யாண சமையல் சாதம்" பாட்டு பாட தோன்றியது. உருண்டை காரட் வித்தியாசமாக வளர்ந்துள்ளது.ருசியில் மாற்றம் இல்லாமல் இருந்தால் சரிதான்..!
டெய்சி பிள்ளை "பறித்த வெங்காயம் உ. கி, காரட் ஆகியவற்றை முகர்ந்து பார்த்த பின், இவற்றையெல்லாம் இன்னமும் சமையலாக்கி சாப்பிட வைத்து விடுவார்களோ" என்ற பயத்தில் மேலேறி அமர்ந்து கொண்டதோ என்னவோ? அனேகமாக காய்களை ஒளித்து வைத்த பின்தான் கீழே இறங்கியிருப்பார்...ஹா. ஹா. ஹா
ஊசிக்குறிப்பு பு. பூ பொன்மொழி இரண்டும் அருமை.
கோடியில் ஜோடி தேடும் வடிவேலுவின் நிலைமை பாவம்..! அனைத்தும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மீண்டும் கமலாக்கா வாங்கோ.. இப்போ மீண்டும் கோகிலா படம் பார்க்கிறோம் அதனால வந்த எபெக்ட்:)..
Delete//உருண்டை காரட் வித்தியாசமாக வளர்ந்துள்ளது.ருசியில் மாற்றம் இல்லாமல் இருந்தால் சரிதான்..!//
சே..சே.. சுவை எப்படி மாறும்?.. நான் கலப்படம் ஏதும் செய்யவில்லையே ஹா ஹா ஹா.
//அனேகமாக காய்களை ஒளித்து வைத்த பின்தான் கீழே இறங்கியிருப்பார்...ஹா. ஹா. ஹா//
ஹா ஹா ஹா நல்ல கற்பனை...:)
மிக்க நன்றிகள் கமலாக்கா மீள் வருகைக்கு.
ரொம்ப அழகழகான படங்கள்... இவற்றைப் பார்த்துக்கொண்டே இருந்ததால் வயது குறைந்து குறைந்து 4 வயதாகிவிட்டதுபோல் உணர்ந்ததால், பின்னூட்டம் இட முடியவில்லை (அப்போ தமிழ் நன்றாக எழுதத் தெரியாதல்லோ). பிறகு மற்ற தளங்களுக்குப் போய் வந்த பிறகு வயது நார்மலாச்சு. அதனால் இப்போ பின்னூட்டம் போடறேன்.
ReplyDeleteவாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. நீங்க இங்கின இல்லாமையால அஞ்சு கண்டபாட்டுக்கு டமில் பேசத் தொடங்கிட்டா கர்ர்ர்ர்ர்:)) நான் மிரட்டி வச்சிருக்கிறேன்:).
Delete//இவற்றைப் பார்த்துக்கொண்டே இருந்ததால் வயது குறைந்து குறைந்து 4 வயதாகிவிட்டதுபோல் உணர்ந்ததால்,//
இப்படித்தான் ஸ்ரீராமும் சொனனர்ர்:)) வயசானால் குழந்தையாகிவிடுவது நோர்மல் தானே ஹா ஹா ஹா ஹையோ வந்த வேகத்தில ஓடிடாதீங்கோ..
//அதனால் இப்போ பின்னூட்டம் போடறேன்.// நன்றி நன்றி இம்முறைதான் நீங்க மொத்தமாகக் காணாமல் போய் வந்திருக்கிறீங்க , மற்றும்படி எங்காவது ஒரு கொமெண்ட்டாவது போடுவீங்கள்.
பத்து நாட்கள் ஆன்மீகப் பயணம். செல்லும் கோவில்களில் படங்கள் எடுத்ததால், பேட்டரி இருக்கவேணும் என்பதால் இணையத்துக்கு வரவில்லை. இப்போதுதான் வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் இன்னொரு இரண்டு நாள் ஆன்மீகப் பயணம், பிறகு சொந்த வேலையாக பெங்களூர் பயணம் என்று வரிசைகட்டி பயணங்கள் உள்ளன.
Delete//நமக்கு இல்லையே ஒரு ஜோடி// - ஒரு பெண் இருந்தால் போதாதா? இவருக்கு எதுக்கு இரண்டு பேர்கள்? அதனால்தான் திருமணம் தாமதமாகுதோ
ReplyDeleteஹா ஹா ஹா கர்ர்ர்:)) இது வேற ஜோடியாக்கும்:)) ஹையோ ஒரு டமில்ப் புரொபிஸருக்கே, என்னைத் டமில் சொல்லிக்குடுக்க வைக்கிறியே வைரவா:))
Delete//அதனால்தான் திருமணம் தாமதமாகுதோ//
நீங்க, ட்றுத்திட அன்பு ஜிஸ்டர்:) நயந்தாரா பற்றியோ பேசுறீங்க?:)
நல்ல வடிவான பெண்கள் படம் போட்டுவிட்டு, அவர்களை 'மொக்கை' என்று அழைப்பது சரியா?
ReplyDeleteடப்புத்தேன்ன்:)) ஒருவேளை அவர்கள் பேசும் மொக்கைகளைச் சொல்லுகிறார்களோ என்னமோ நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா.
Deleteஎதையோ விளைவித்துவிட்டு, கூசாமல், அதை கேரட் என்று சொல்லும் தைரியம் அதிராவுக்கு மட்டும்தான் உண்டு. எதைச் சொன்னாலும் நாங்கள் மன்னித்து ஏற்றுக்கொள்வோம் என்ற நினைப்பு போல.
ReplyDeleteஅது உருளையா இல்லை நூல்கோலா அல்லது, கேரட் இலையையும், நூல் கோலையும் ஒட்டி வச்சிருக்காங்களா என்றே புரியலை
//எதையோ விளைவித்துவிட்டு//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுக்கு மேலயும் மீ பேசாமல் இருந்தால் ஏதோ போதை வஸ்து எனச் சொல்லிக் கம்பி எண்ண வைச்சிடப்போகினம் எல்லோரும்:)) இப்பூடி ஒரு கரட்டை இந்த உருண்டையான உலகத்தில எங்காவது பார்த்திருக்கிறீங்களோ?:)).. அதிசயங்கள் எப்பவும் நிகழ்வது அதிராவீட்டில மட்டும்தேன் ஹா ஹா ஹா.
//நூல்கோலா//
நோக்கிள்:)) அது வெள்ளை நிற மல்லிகை போலவெல்லோ கலர்:))..
///கேரட் இலையையும், நூல் கோலையும் ஒட்டி வச்சிருக்காங்களா என்றே புரியலை//
உங்களுக்காக சுண்டல் சுண்டி இருக்கிறேன் இன்னும் அனுப்பவில்லை ஸ்ரீராமுக்கு.. எப்படியும் அடுத்த சமருக்குள் வெளிவந்திடும்:)) அதிராவைப்போல பொறுமை தேவை:)) ஹா ஹா ஹா..
மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.
இந்த மாதிரி புல்லு, செடிகள்லாம் இருக்கே... பாம்புகள் வராதா? இந்தச் சந்தேகம் எனக்கு ரொம்ப நாளாகவே இருக்கு
ReplyDeleteஆஆ நீங்க மறந்திட்டீங்க நெல்லைத்தமிழன், இது நீங்க ஏற்கனவே கேட்டு நானும் சொல்லிட்டேன் பதில்:)) சரி அது போகட்டும்:).
Deleteஇல்லை ஸ்கொட்லாந்தில் இதுவரை பாம்பு, மற்றும் விஷப்பூச்சிகள் கண்டுபிடிக்கப் படவில்லை என்கினம்.. அதனால பூச்சி பாம்பு எல்லாம் இல்லை. ஆனா அதிக புல், மரங்கள் எனில் பின்னேரம் ஒரு 6 மணிக்கு மேல் வெளியே நிற்க முடியாது, ஒருவித குட்டி நுளம்புகள்.. மிச்சீஸ் எனக் கேள்விப்பட்டிருப்பீங்க.. அவை குத்தித்தள்ளும்.
மற்றும்படி குட்டி எலியும் வரலாம் புல்லில்.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ என்ன எல்லோரும் நித்திரையாகிட்டீங்களோ.. நோஓஓஓஓஒ புதுவருடம் பிறக்கும்வரை எல்லோரும் முழிச்சிருக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:))..
//மிச்சீஸ் எனக் கேள்விப்பட்டிருப்பீங்க..////
Delete///midge fly
//
//எலியும் வரலாம் புல்லில்.//
Deleteசரியாதான் சொன்னீங்க வரபோறது எலி வருஷம் மேடம்
அழகிய தோட்டம. மகிழ்சி.வீட்டு மரக்கறிகள் தனி சுவை.
ReplyDeleteநானும் மிளகாய்.கத்தரி போட்டேன். மிளகாய் பலன் கொடுக்கிறது. கத்தரி இனிமேல்தான் தரும். மழைக்கு முசு முசுக்கை கீரை கொடிகள் வளர்ந்து பலன் கொடுக்கின்றது.