உழைத்த களைப்பு:))
இங்கு கட்டப்பட்ட ஒரு மாடிக் கட்டிடம்..
இதற்கு கொஞ்சம் முன்னர் பற்றைகளாக இருந்தது, அதைப் படமெடுக்கத் தவறி விட்டேன்..
==========இடைவேளை==========
சில வருடங்களுக்கு முன்பு நான் செய்த குயிலிங் சன்ரா
============================
இப்போ இப்படி முழுமை அடைந்து, விற்கப்பட்டு, மக்களும் குடியேறி விட்டனர்.
முறுக்கெடுங்கோ கிரிஸ்மஸ் ஐக் கொண்டாடுங்கோ:)
இது நான் செய்த பால் முறுக்கு..
வீட்டில் பால் முறுக்கு சுவீட்டாக இருக்காம், அதனால இது உறைப்பு முறுக்கு:)
இது இம்முறையும் எங்கள் வீட்டுக் கிரிஸ்மஸ் அலங்கரிப்பு...
டெய்சிப் பிள்ளையும் கொண்டாட்டத்துக்கு ரெடி:)
ஊசி இணைப்பு
ஊசிக்குறிப்பு
நீங்கள் எல்லோரும் பிசியாக இருக்கும் காலமிது என எனக்குத் தெரியும், அதனால குறையில்லை, ரெயினில் இருந்து மொபைல் மூலம் போஸ்ட் படிப்போர்:), ஒபிஸில் இருந்து சைட் பார்ல தூக்கி வச்சு போஸ்ட் படிப்போர்:), வீட்டிலிருந்து படிப்போர் அனைவரும் படிப்பீங்கள் என்பது தெரியும், கொமெண்ட் போடாதுவிட்டாலும் குறையில்லை இம்முறை, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கோணும் ஜாமீஈஈஈ.. நானுந்தேன்:) .
😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹
“சந்தோசமாகக் கழித்த தினங்களே..
நீங்கள் வாழ்ந்த தினங்கள்”
இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா
😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹
|
Tweet |
|
|||
இரண்டு வருட உழைப்பு ?
ReplyDeleteஇதை கட்டியது யார் ?
கொத்தனார் என்று சொல்லக்கூடாது...
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..
Deleteகிளவியையே மாத்திப்புட்டீங்களே:)).. இதைப் படமெடுத்தது ஆரு என்றெல்லோ கேட்டிருக்கோணும்:) ஹா ஹா ஹா மிக்க நன்றி.
வணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteமுதல் பாடல் அருமை. மீண்டும் கோகிலாவில் இந்த பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்தமானது. இதில் ஸ்ரீதேவி அவ்வளவு அழகுடன் இருப்பார்.பாடலை மீண்டும் கேட்டு ரசித்தேன்.
ஓய்வெடுக்கும் பூசார் களைப்பிலும் ரொம்ப அழகு.
கட்டிடம் கட்டி முடித்த பின் வெற்றிடத்தின் குறைகள் தெரியாது அம்சமாக உள்ளது.மக்களும் அங்கு குடி வந்ததற்கு மகிழ்ச்சி.
நீங்கள் செய்த முறுக்குகளை (முதலில் வந்ததால், அதுவும் ஒரு அனுமானந்தான்..! ) முறுக்காமல். மறுக்காமல் எடுத்துக் கொண்டு விட்டேன். மிகவும் சுவையாக உள்ளது. பால் விட்டு இனிப்பு முறுக்கா ? விவரங்கள் விலாவாரியாக ஏதும் எழுதவில்லையே! தங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ..
Deleteநன்றி, எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.. உண்மைதான் வெறும் பத்தை மேடாக இருந்ததை, இப்போ எவ்ளோ அழகாக்கி விட்டனர்.. இதிலிருந்து நாமும் பாடம் கற்றுக் கொள்ளலாம், வாழ்வில்...கூப்பை கூழமாக இருப்பதை, நம் முயற்சியால் அழகாக்கிக் கொள்ளலாம் என்பது.
ஹா ஹா ஹா அந்த முறுக்கு வாயில் அப்படியே அருமையாக கரைந்து போகிறது.. இனிப்பு சேர்க்கவில்லை, இடியப்பமா, பொட்டுக்கடலை உளுந்து சேர்த்த முறுக்கு.
இரண்டாவது கடலைமாவும் கோதுமையும் கலந்து, நிறைய மிளகாய்த்தூள் சேர்த்துச் செய்தது.
முறுக்கு என்பது எல்லோருக்குமே தெரிந்த ரெசிப்பிதானே என்பதால் எழுதவில்லை.
2 வது முறுக்கு இங்கு முழு ரெசிப்பியாக போட்டிருக்கிறேன், வேணுமெனில் லிங் தேடித் தரலாம். கிரிஸ்மஸ் க்குச் செய்து அசத்தலாமே வீட்டில்:)) என் பெயர் சொல்லி:)) ஹா ஹா ஹா ..
வணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteதாங்கள் செய்த கிறிஸ்துமஸ் மரம் அலங்காரம் குயிலிங் வேலைப்பாடு, அனைத்துமே மிக அழகாக உள்ளது.
கொண்டாட்டத்திற்கு ரெடியாகும் டெய்ஸி பிள்ளைக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவியுங்கள்.
கண்ணனை பார்த்ததும், அவர் உபதேசத்தில் மயங்கி தியாகி பட்டத்தை தியாகம் செய்து விட்டு, கர்ண பரம்பரைக்குள் சென்று விட்டீர்களோ? வாழ்க உங்கள் பட்டங்கள்.
ஊசி இணைப்பு மிக அருமை. ஊசிக்குறிப்பின் தத்துவம் மனதுள் இருக்க வேண்டியவை.பு. பூஸானந்தாவின் தத்துவமும் மனதில் பதிந்தன. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க நானும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அழபகானப் பதிவை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
குயிலிங் கார்ட் முன்பு செய்தது,
Deleteஓமோம் கொடைவள்ளல் பரம்பரை:)) ஆக்கும் மீ:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கமலாக்கா.
ஹலோ லஞ்ச் டையத்துல வேன் இருந்து மடிக்கணனி மூலம் கருத்துகள் இடுகிறேன் என் ஆபிஸ் கணணி மூலம் வலைத்தளத்திற்கு வர முடியாது ஆனால் ரெளடி பேபி பாடலை ஆபிஸ் கணணி மூலம் பார்க்க ரசிக்க முடியும்
ReplyDeleteவாங்கோ ட்றுத் வாங்கோ..
Deleteஓ இனி பஸ், ரெயினோடு, வான் ல இருந்து லப்ரொப் மூலம் என் போஸ்ட் படிப்போர்:).. எனவும் சேர்த்துக்கொள்ளோணும் அடுத்த முறைக்கு:)).
//ஆனால் ரெளடி பேபி பாடலை ஆபிஸ் கணணி மூலம் பார்க்க ரசிக்க முடியும்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
ஏதையோ செஞ்சு வைச்சிட்டு அதை முறுக்கு என்று பெயர் சொல்லி அழைப்பது சரியா?
ReplyDeleteகோழி குருடானாலும்... பயமொயி தெரியுமெல்லோ ட்றுத்?:))
Deleteபுதுசா கட்டின வீட்டுக்கு எல்லாம் நீங்கதான் ஒனர் என்று ஒருத்தங்க வாட்ஸப்பில் சொல்லுறாங்களே அது உண்மையா?
ReplyDelete//நீங்கதான் ஒனர் என்று//
Deleteஆஆஆஆஆஆ இந்தப் புது வருடத்தில உங்கட நாக்கில கரி இருப்பின்:)) இது அப்பூடியே பலிக்கட்டும்:).. பலிச்சால் மேல் மாடி மொத்தமா ட்றுத்துக்கேதான்:))..
... ச்சும்மா இல்லை, வாடகைக்கு தருவேனாக்கும் ஹா ஹா ஹா..
ReplyDeleteகிறிஸ்துமஸ்க்கு நீங்க களி கிண்டலையா அதானுங்க உங்க பாசையில் கேக்குங்க
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
Deletehttps://i.ytimg.com/vi/p759fOyk2cw/maxresdefault.jpg
ட்ரூத் அது களி இல்லை :) செங்கல் சுடல்லியானு கேட்கணும்
Deleteஅஞ்சூஊஊஊஊஊ நீங்க ஃபுல் ரைம் வேர்க்கே பண்ணோனும் என நான் பிரே பண்ணுறேன்ன்:))
Deleteஇங்கு வருகை தருபவர்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கு என் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteம்ிக்க நன்றிகள் ட்றுத்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Deleteநீங்க கிரிஸ்மஸ் உம் கொண்டாடுங்கோ.. பின்பு மோடி அங்கிளைத் திட்டித்திட்டி டீவாஆஆஆஆலியையும் கொண்டாடுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ..
Hi dear.sorry I'm toooooo busy.will come later.
ReplyDeleteSanta looks nice. Also those noodles looks delicious 😀😀😀😀😀😀
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ஏஞ்சல்
Deleteஉங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாங்கோ அஞ்சு... முழுநேர உழைப்பாளி ஆனதால உங்களை எங்கும் பார்க்க முடியுதில்லையே ஹா ஹா ஹா இது தேவையோ...:))..
Deleteநேரம் கிடைக்கையில் வந்து போங்கோ மிக்க நன்றி.
//முழுநேர உழைப்பாளி ஆனதால உங்களை எங்கும் பார்க்க முடியுதில்லையே ஹா ஹா ஹா இது தேவையோ...:)).///
Delete[im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRIVD4YxNen4XlXI5yV8gZS7KeXg0sEfOz-OYZdsz8_KuReSICy&s[/im]
[im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ1apuzfA7C2VhzVrzZv0sLWyNiS5BvuIBu_p_HuKbXtZHyFwMimg&s[/im]
Deleteமிக்க நன்றி கோமதி அக்கா
Deleteஇரண்டு வருட உழைப்புக்குத் தேவை ரொம்பப் பொறுமை. புதராகக் கிடந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக வசிப்பிடமாக மாறியிருப்பது அழகு.
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. இப்போ புரியுதோ மீ ரொம்ம்ம்ம்ம்பப் பொறுமைஜாலியாக்கும் ஹா ஹா ஹா.. அதிலயும் ஆரம்பப் படங்கள் கொம்பியூட்டரில் எங்கோ ஒளிச்சிருந்து, தேடி எடுத்தேன், இடைப்பட்ட காலங்களும் எடுத்தேன் நிறையப் படங்கள், ஆனா தேடி எலுக்கப் பஞ்சியாக இருந்துது விட்டு விட்டேன்.
Deleteஉண்மைதான், நாம் நினைத்தால், குப்பையைக்கூட கோபுரமாக்கலாம் எனும் தத்துவம் சொல்லி நிற்குதெல்லோ இந்தப் போஸ்ட்:))
பாடல் நான் மிகவும் ரசிக்கும் பாடல். இளையராஜாவின் இனிமைகளில் ஒன்று.
ReplyDeleteநன்றி, உண்மைதான் மிக இனிமையான பாடல், யூ ரியூப்பில் சிலர் கொமெண்ட்ஸ் போட்டிருக்கினம், அந்தக் காலத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி தவழ்ந்த பாடல் என...
Deleteநான் இதே மாதிரி சென்னையில் ஒரு பெரிய நான்முனைச் சந்திப்பு சாதாரண ரோடாக இருந்தது பெரிய பாலமாக மாறுவதைப்படமெடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். நிறைவேற்ற முடியவில்லை!
ReplyDelete//பெரிய பாலமாக மாறுவதைப்படமெடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். //
Deleteபின்பு, எண்ணியிருந்ததை மறந்திருப்பீங்கபோல ஹா ஹா ஹா.. உண்மைதான் நாம் பயணமாகப் போகும்போது, நிறுத்திப் படமெடுப்பதென்பது கஸ்டம்தானே. நானும் கஸ்டப்பட்டுத்தான் எடுத்தேன்.
//புதராகக் கிடந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக வசிப்பிடமாக மாறியிருப்பது அழகு.//
Deleteகர்ர்ர்ர் ஸ்ரீராம்
[im]https://media1.tenor.com/images/9aad30dd62c75fcb93721ed598b97114/tenor.gif?itemid=12374477[/im]
டெய்சியும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு தயாராய் இருப்பது அழகு. அது அறியுமா கொண்டாட்டங்களை!
ReplyDeleteஅனைவருக்கும், குறிப்பாக அஞ்சுவுக்கும், டி பி ஆர் ஜோசப் ஸாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
டெய்சிக்கு நாம் குதூகலமாக அமளிப்பட்டாலோ, இல்லை சோகமாக இருந்தாலோ, பயணம் வெளிக்கிட்டாலோ அனைத்துமே புரியும் ஸ்ரீராம்.. என்ன ஏதெனத் தெரியாதுதானே..
Deleteவீட்டுக்குள் நின்று, கார்க் கீயை எடுத்தபடி, டெய்சி பாய்.. என்றால் உடனே கடகடவென ஸ்ரெப்ஸில் ஏறுவா றூமில் போய்ப் படுக்க... நாம் வெளியே போகப்போகிறோம் எனில் தனியே நிற்கப் பயம்.
மிக்க நன்றிகள்.
// டெய்சி பாய்//
Deleteஇல்லை அது ஒரு பெண்ணை BOY னு சொன்னா :) அதான் கோவிச்சிருக்கு
தாங்க்ஸ் ஸ்ரீராம் :)
Deleteபுலாலியூர் அதிராயோட சொந்த ஊரா?
ReplyDeleteஇந்த லிங்கை பார்க்கவும் உங்கள் ஊர்க்காரர் எழுதியுள்ள நூல்.
https://hainalama.wordpress.com/2019/08/02/
இந்த அடுக்கு மாடி கட்டிடம் அதிராவோடதா? கிறிஸ்துமஸ் கேக் இல்லியா?
Jayakumar
லிங்கில் போய்ப் பார்த்தேன் அவர் புலோலியைச் சேர்ந்தவர் அவ்வ்வ்வ்வ்:)) எங்கள் ஊர் அல்ல:).. யாழ்ப்பாணத்தில் இருந்து புலோலி கிட்டத்தட்ட 20-25 மைல்கள் தொலைவில் உள்ளது. எங்கள் ஊர், யாழ்ப்பாணம் மற்றப்பக்கம் 4-5 மைல்கள் தூரத்தில் இருக்கு.
Delete//இந்த அடுக்கு மாடி கட்டிடம் அதிராவோடதா?////
ஓம் எண்டு சொன்னால் நம்பவோ போறீங்க?:))..
// கிறிஸ்துமஸ் கேக் இல்லியா? //
டேட்ஸ் கேக் செய்ய பொருட்கள் வாங்கினேன், ஆனா இம்முறை கிரிஸ்மஸ் விரதமில்லாத புதன் கிழமையில எல்லோ வருது.. அதனால அசைவக் கொண்டாட்டமெல்லோ:)).. கேக் எடுபடாது:).. கொஞ்சம் தாமதிச்சு நியூ இயருக்கு கிட்ட செய்ய இருக்கிறேன்.
மிக்க நன்றிகள் ஜேகே ஐயா.
வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ..
Delete//புலாலியூர் அதிராயோட சொந்த ஊரா?//
ஹா ஹா ஹா இல்லை அதிரா உருவாக்கியிருக்கும் ஊர் இது. ஆனா யாழ்ப்பாணத்தில்.. புலோலி என ஒரு ஊர் இருக்கு, பலாலி எனவும் இருக்குது. ஆனா புலோலி இல்லை:)).. எனக்கு எப்படி வந்ததெனத் தெரியாது சும்மா வாயில வந்துது ஒருநாள்.. அப்படியே சூடிக்கொண்டேன் ஹா ஹா ஹா..
detention camp ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது...!
ReplyDeleteகிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்...
வாங்கோ டிடி, மிக்க நன்றிகள்.
Deleteகிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாடல் பகிர்வு அருமை.
பலகாரங்கள் செய்த களைப்பா? பூனையாருக்கு.
டெய்சி பிள்ளை தொப்பி அழகு.
ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் அருமை.
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
Deleteரசிப்புக்கு மிக்க நன்றிகள்.
//“சந்தோசமாகக் கழித்த தினங்களே..
ReplyDeleteநீங்கள் வாழ்ந்த தினங்கள்”//
உண்மை.
நன்றி.
Deleteகுயிலிங் சன்ரா மிக அழகு.
ReplyDeleteஇரண்டு வருட உழைப்பில் வீடுகள் நன்றாக இருக்கிறது.
நானும் மகன் ஊருக்கு போன போது இப்படி கட்டும் வீடுகள் படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.
ஓ போஸ்ட்டாகப் போடுங்கோ கோமதி அக்கா.
Deleteஅந்த வீடுகளில் எது உங்கள் வீடு? டெய்சியின் அலங்காரம் அழகு.இந்த முறை ஊசிக்குறிப்புகள் எல்லாம் ஏற்கனவே படித்ததுதான். Merry Christmas!
ReplyDeleteவாங்கோ பானுமதி அக்கா...
Delete//அந்த வீடுகளில் எது உங்கள் வீடு?//
இது என்ன கேள்வி இது?:) எங்களோட வீடே அதுதான்:)) ஹா ஹா ஹா.
//இந்த முறை ஊசிக்குறிப்புகள் எல்லாம் ஏற்கனவே படித்ததுதான்.//
நோஓஓஓஓஓஒ உப்பூடிச் சொல்லக்கூடாதாக்கும் ஹா ஹா ஹா.. சூப்பரா இருக்கு:), அருமையா இருக்கு.. இப்போ இப்போதான் கேள்விப்படுறேன்.. இப்பூடிச் சொல்லோணுமாக்கும் ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் பானுமதி அக்கா.
உங்கள் வீட்டுக் கிரிஸ்மஸ் அலங்கரிப்பு பலகாரங்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteஅனைத்துக்கும் மிக்க நன்றிகள் கோமதி அக்கா.
Deleteநல்ல உழைப்பு. நீங்க எப்போ வீடெல்லாம் கட்ட ஆரம்பிச்சீங்க? நல்லாவே கட்டி இருக்கீங்க! ரொம்பப் பொறுமைதான் போங்க! உழைத்த களைப்பில் பூசாரும் நல்லா ஓய்வு எடுக்குது போல. கிறிஸ்துமஸ் மர அலங்காரமும் அருமை. இன்னிக்கு விளக்கு அலங்காரங்கள் பார்க்கப் போகணும்னு பையர் சொல்லிட்டு இருக்கார். மத்தியானமாக் கிளம்பணும்.
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ..
Delete//நீங்க எப்போ வீடெல்லாம் கட்ட ஆரம்பிச்சீங்க? நல்லாவே கட்டி இருக்கீங்க! //
இப்போ 2 வருசமாகத்தான் கீசாக்கா:)..
//ரொம்பப் பொறுமைதான் போங்க!//
நன்றி நன்றி... மீ ஒரு அப்பாவிப் பொறுமைசாலியாக்கும்:)) ஹா ஹா ஹா.
//இன்னிக்கு விளக்கு அலங்காரங்கள் பார்க்கப் போகணும்னு பையர் சொல்லிட்டு இருக்கார். மத்தியானமாக் கிளம்பணும்.//
காரிலேயே ஒரு சுற்றுச் சுற்றி வாங்கோ.. இருட்டினால்தானே அழகு. ஆனா கீசாக்கா கெதியா வீட்டுக்கு வந்து, கண்ணை மூடிக்கொண்டு படுத்திடுங்கோ:), அப்போதான் சன்ரா, சிம்னியால இறங்கி வந்து கிஃப்ட் வைப்பார் உங்களுக்கு ஹா ஹா ஹா.
பால்முறுக்கு தேங்காய்ப் பாலில் செய்ததா? அல்லது பாலே விட்டீங்களா? நாங்க அரிசிமாவு, உளுத்தமாவு, பொட்டுக்கடலை மாவில் தேங்காய்ப் பால் விட்டுச் செய்வோம். கார முறுக்கிலேயும் அதே மாவுகளோடு மிளகாய் வற்றல், தேங்காய், பெருங்காயம் அரைத்துக் கலந்து செய்வோம்.
ReplyDelete//பால்முறுக்கு தேங்காய்ப் பாலில் செய்ததா?//
Deleteதேங்காய்ப்பால் தான் கீசாக்கா. ஆனா இதில எனக்கு பல டவுட்ஸ் இருக்குது. இது முதல் தடவை செய்தேன், பல விதங்கள் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து செய்தேன், ஆனா நான் பாலை மெல்லிய சூடாக்கி மாவைக் குழைச்சேன். அதனாலோ என்னமொ, கொஞ்சம் உடையத் தொடங்கிவிட்டது பிழியும்போது, வட்ட முறுக்காக எடுக்க முடியவில்லை.
என் கேள்விகளுக்கு கொஞ்சம் ரைம் கிடைக்கும்பொது பதில் சொல்லுங்கோ பிளீஸ்.
1.அரிசிமா, பச்சை மாவோ இல்லை வறுத்ததோ?[நான் செய்தது ரெடிமேட் இடியப்ப மாவில்.. அப்போ வறுத்தமாவில்], உளுந்தையும் மெல்லிசாக வறுத்தே அரைச்சேன்.
2. கொதி தண்ணி ஊற்றி, இடியப்பம் குழைப்பதுபோல செய்யோணுமோ? அல்லது வாம் வோட்டர் ஓகேயா?..
ஏன் எனக்கு ஒட்டாமல் உடைஞ்சது எனத் தெரியவில்லை:(
//ஏன் எனக்கு ஒட்டாமல் உடைஞ்சது எனத் தெரியவில்லை:(//
Deleteஅது ஒட்டலைன்னு தெரிஞ்சு எதுக்கு சுட்டீங்க ஹாஆஹீஈஈ
//அது ஒட்டலைன்னு தெரிஞ்சு எதுக்கு சுட்டீங்க ஹாஆஹீஈஈ //
Deleteசுடும்போது ஒட்டுமென நினைச்சுச் சுட்டேன் அஞ்சு அது டப்போ?:) ஹா ஹா ஹா..
அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துகள். ஏஞ்சல் போடும் கருத்துகள் இல்லாமல் கொஞ்சம் ஒரு மாதிரித்தான் இருக்கு! அவங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். ஊசிக்குறிப்பும் ஊசி இணைப்பும் வழக்கம் போல் அருமை!
ReplyDeleteஏஞ்சல் உழைச்சுக் களைச்சிட்டா ஹா ஹா ஹா ஜனவரியுடன் வழமைக்குத் திரும்புவா என எதிர்பார்க்கலாம்:).
Deleteமிக்க நன்றிகள் கீசாக்கா.
கீதாக்கா :) இப்போதைக்கு மீ வடிவேலு மாதிரி :)) போதும் போதும்னு ஆகிடுச்சு எப்போ ஜனவரி வரும்னு வெயிட்டிங்
Deleteஆவ்வவ்வ.. நான் நீங்கதான் புதுசாக கட்டியிருக்குறீங்களோஎனநுனைத்தேன். பாட்டு கேட்க முடியல.
ReplyDeleteஆ... முறுக்கு.. நானும் இடியப்பதட்டில் பிழிந்து விட்டுதான்போட்டேன். ஆனா அதைவிட கண்கரண்டியின் பின்பக்கம் பிழிந்து போட ஈசியா இருக்கு. இந்த தட்டை பாவிக்காதீங்க கர்ரர்ர்ண பரம்பரை அதிரா.
டெய்சி அழகா இருக்கா. க்ரிஸ்மஸ் ட்ரீ அழகா இருக்கு. ஊசிஇணைப்பு சூப்பர். இங்கனயும் பேசாம இருந்தா இப்படித்தான் கேள்வி வரும்.
அதென்றா உண்மைதான் ...நான் பூசானந்தா சொன்னதை சொன்னேன்.
உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ந த்தார்தின வாழ்த்துக்கள்.
வாங்கோ அம்முலு வாங்கோ.. எங்கே இருக்கிறீங்க எனத் தெரியுதே இல்லையே ஹா ஹா ஹா.. ஹொலிடேயிலும் எட்டிப்பார்ப்பதற்கு நன்றி.
Delete//நான் நீங்கதான் புதுசாக கட்டியிருக்குறீங்களோஎனநுனைத்தேன்//
நான் தான் என உண்மையைச் சொன்னால் நம்பவோ போறீங்க?:)).
//ஆனா அதைவிட கண்கரண்டியின் பின்பக்கம் பிழிந்து போட ஈசியா இருக்கு//
அது ஒவ்வொன்றாக எல்லோ பிளியோணும் அம்முலு. இது மொத்தமாகப் பிழிஞ்சுபோட்டு, பின்பு மொத்தமாகப் பொரித்து எடுத்திடலாம்.
//இந்த தட்டை பாவிக்காதீங்க கர்ரர்ர்ண பரம்பரை அதிரா.//
ஆஆஆஆஆஆஆஆ பிளாஸ்ரிக் என்பதால சொல்றீங்களோ? அது உண்மைதான், ஆனா இது ஈசியாக இருக்குது. இடியப்பம் அடிக்கடி செய்வதில்லை இப்போ. இன்னொன்று, விதி வந்தால் போக வேண்டியதுதானே:).. எல்லாத்துக்கும் பயந்து என்னதான் பண்ணுவது.. இப்போ எதைப்பார்த்தாலும்.. உதைச் சாப்பிடாதே... உதைப் பாவிக்காதே என்கிறார்கள்.. நிலவுக்குப் பயந்து பரதேசம் போன கதையாகக் கிடக்கு:) ஹா ஹா ஹா.
//இங்கனயும் பேசாம இருந்தா இப்படித்தான் கேள்வி வரும்.//
ஹா ஹா ஹா உண்மைதானே, கொஞ்ச நேரம் மெடிரேஷன் பண்ணுவதுபோல:) அமைதியாக இருந்தாலே ஆ யூ ஓகே என்கினம் கர்ர்ர்ர்ர்:))..ஹா ஹா ஹா.
மிக்க நன்றிகள் அம்முலு. எஞ் ஜோய் பண்ணுங்கோ.
ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு இரண்டும் மிக அருமை அதிரா! இன்றைக்கு போட்டிருக்கும் பாடலும் மிக இனிமையான பாடல்!
ReplyDeleteகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
வாங்கோ மனோ அக்கா வாங்கோ..
Deleteநன்றி நன்றி.. அனைத்துக்கும் நன்றி.
அதிர உங்களுக்கு ஒரு ஈஸி முறுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். ஆல் பர்பஸ் பிளவர் (மைதா) எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் தெளித்து (ரொம்ப கூடாது சும்மா ஒரு டேபிள் ஸ்பூன்) பிசறி இட்டிலி கொப்பரையில் வேக வையுங்கள். பின்னர் எடுத்து கட்டியில்லாமல் சலித்து எடுத்து கொள்ளுங்கள். இந்த மாவில் வேண்டும் என்றால் கொஞ்சம் வறுத்த உளுந்து மாவு சேர்த்து (சேர்க்காமலும் செய்யலாம்) ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் உப்பு சேர்த்து பிசைந்து அச்சில் பிழிந்து பொரித்து எடுத்து பாருங்கள். இந்த முறுக்கு கலர் வெள்ளையாக கிடைக்கும். வாசனை பொருட்கள் (காயம் போன்றவை) சேர்ப்பதில்லை. வெண்ணை சேர்ப்பதால் நெய் வாசம் கிடைக்கும்.
ReplyDeleteJayakumar
ஓ பிளேன் பிளவரை அவிச்சு, கடலை மா சேர்த்து செய்வேன். இது ஓல் பேர்பெஸ் என்கிறீங்க, அந்த மா, பிரெட் , பன் கள் செய்யத்தானே பாவிப்போம், மொறுமொறுப்பாக வருமோ? ஏனெனில் அதில் சோடாக் கலந்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஓகே இந்த ஹொலிடேக்குள் செய்து பார்க்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
ஹலோவ் ஆல் purpose தான் ப்ளெயின் மாவு ,சோடா சேர்த்தா அது ஸெல்ப் rising flour
Deleteஜே கே சார் சொல்வது மைதா முறுக்கு கேரளா ஸ்பெஷல்
Deleteஇதுக்கு மட்டும் இப்போ பதில் போட்டிடுறேன்...
Deleteஓம் அஞ்சு, ஜேகே ஐயாவுக்குப் பதில் போட்ட பின்னர் செக் பண்ணினேன், இங்கு ஓல் பேர்பெஸ் ஐத்தான் பிளேன் பிளவர் என்கின்றனர்...
அதுதானே செல்வ் ரைசிங்ல செய்ய முடியாதே என ஓசிச்சேன்:)...
பிக்க்கோஸ்ஸ்.ஸ் மீ செய்திருக்கிறேனே:)... நசுக்கூஉ நசுக்கூ என வந்துதே கர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா
ஓகே நியூ இயருக்கு மை......தா.... முறுக்கு ரெடியாகுதூஊஉ:)
self raising flour :)
Deleteஸெல்ப் ரைசிங் பிளவரில் செய்யும் கேரள பதார்த்தம். உண்ணியப்பம். செல்ப் ரைசிங் பிளவரில் நல்ல பழுத்த பழுத்த வாழைப் பழங்கள், கொஞ்சம் வெல்லம் அல்லது கருப்பட்டி அல்லது பிரவுன் சுகர் ஏலக்காய் பொடி சேர்த்து வடை மாவு பருவத்தில் குழைத்துக்கொள்ளுங்கள். இதை எண்ணையில் போண்டா மாதிரி பொறித்து எடுக்கலாம். அல்லது பணியார சட்டி இருந்தால் அதில் ஊற்றி எடுக்கலாம். மாவில் ரெட் ஒயின் கொஞ்சம் சேர்த்தால் சும்மா கிறுகிறுக்கும்.
DeleteJayakumar
//AngelWednesday, December 25, 2019 9:53:00 pm
Deleteself raising flour :)//
ஆங்ங்ங் இப்போதெல்லாம் டிக்ஷனறி இல்லாமலேயே ஸ்ரீராமுக்குப் புரியுமாக்கும் என் பாஷை:)) ஹா ஹா ஹா ஹையோ இனி எதில பிரச்சனை வருமோ:)..
//jk22384Thursday, December 26, 2019 2:06:00 am
Deleteஸெல்ப் ரைசிங் பிளவரில் செய்யும் கேரள பதார்த்தம். உண்ணியப்பம். செல்ப் ரைசிங் பிளவரில் நல்ல பழுத்த பழுத்த வாழைப் பழங்கள்,//
இது நாம் பொதுவா விரத நாட்களில் செய்வோம்.. இதில் இருக்கிறது, சமையலை விட இந்த லிங்கில் அடிச்ச கும்மிதான் அதிகம் 454 கொமெண்ட்ஸ் ஹா ஹா ஹா.
https://gokisha.blogspot.com/2012/05/blog-post_28.html
//“சந்தோசமாகக் கழித்த தினங்களே..
ReplyDeleteநீங்கள் வாழ்ந்த தினங்கள்”//
எதிலிருந்து கழித்த தினங்கள் ? தெளிவா சொல்லாட்டி கேஸ் போடுவேன் எங்களை கன்பியூஸ் பண்ணினத்துக்கு
அல்லோஒ 79 இலிருந்து அதாவது உங்கட கரண்ட்:) வயசிலிருந்து:).. அழுதழுது வேர்க் பண்ணிய நாட்களைக் கழிக்கோணுமாக்கும்:)... ஹையோ ஹையோ:)..
Delete7+9= 16 :)))))))))))))))))))))))))))))))))
Deleteஐ முறுக்கு :) ஆமா அதென்ன அத்தினி ஷேப்ஸ் :))
ReplyDeleteஅல்லோ மிஸ்டர் அஞ்சு... அது ஐ... முற்க்கில்லை சேக்கிள் முறுக்காக்கும் கர்ர்ர்ர்ர்ர்:)..
Deleteஅப்போ எதுக்கு அந்த மற்றது முறுக்கோட வந்தது ? எனக்கு அலர்ஜி வந்தா அவ்ளோதான் யூ சொல்லிட்டேன்
Deleteஅச்சச்சோ என்னதிது அஞ்சு கெட்ட வார்த்தை எல்லாம் பேசுறா:).... அம்முலு ஓடிவாங்கோ ஜெல்ப் மீ பிளீஸ் யெல்ப் மீ:)
Deletequilling சாண்டா அங்கேயும் பார்த்த ஞாபகம் .எனக்கு இந்தமாதிரி வீடுகள் பிடிப்பதேயில்லை .கோவமா வரும் .இன்னிக்கு ஒரு வீடியோ பிரண்ட் அனுப்பினார் galle பீச் கொலோம்போ பக்கம் மினி போர்ட் கட்டி உங்க கன்ட்ரியின் ஷேப்பையே மாத்தி இருக்காங்க .சரி விடுங்க என்ன செய்ய இனிமே மரமும் இல்லை தனி வீடுகளும் தோட்டமுமில்லை
ReplyDeleteஅப்போ ரெண்டு வருஷமா இதுதான் வேலையோ ?? ஸ்கூல் டீச்சர்னு சொன்னீங்க :))))))))))
சன்ராவை இங்குதான் எங்கோ போட்டிருக்கிறேன் அஞ்சு.
Deleteஆனா இன்னமும் ஸ்கொட்லாண்ட் பழமையைத்தான் பேணுது அஞ்சு, சில சமயம் கோபமாகவும் வருது ஏன் தெரியுமோ, கட்டிடட்த்ஹின் வெளிப்பக்கம் அப்படியே 200, 300 வருட பழைமையிலேயே இருக்கும், இதென்ன இப்படி பழசு என நினைச்சு உள்ளே போனால் பளிங்குபோல மின்னும்,.. அப்போ வெளிப்பக்கத்தையும் கொஞ்சம் பெயிண்ட் அடிக்க்கலாமெல்லோ.. அது பழைமை போய்விடுமாம்...
//அப்போ ரெண்டு வருஷமா இதுதான் வேலையோ ?? ஸ்கூல் டீச்சர்னு சொன்னீங்க :))))))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸ்கூல் புரிஜக்ட் க்கு யெல்ப் பண்ணுறேனாம்ம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா.
ஹை கமல் அங்கிள் எவ்ளோ ஸ்மார்ட் அண்ட் ஹேண்ட்ஸம் :))))))))))எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு கூடவே கியூட் மயிலும்
ReplyDeleteநன்றி அஞ்சு, அவர்கள் இருவரும் அப்போ எவ்ளோ அழகு.. இருவரும் வாழ்க்கையில் சேர்ந்திருந்தால் எவ்வளவு அழகாக இருந்திருக்கும், சேரோணும் என விரும்பினேன் ஆனா அதுகடசிவரை நடக்கலியே:)) ஹா ஹா ஹா..
Deleteஉலக நாயகரை புரிய அறிய இன்னோர் உலக நாயகிக்கே இயலும் மயில் எல்லாம் சாமானிய பெண் .நல்லது இருவரும் இணையாதது :) அதுவும் அங்கிள் கொள்கையே வேற :)நாங்கூடத்தான் ஷாருக்கானும் கஜோலும் இணையணும்னு நினசேன் அதுவும் கௌரிகான் இருப்பது தெரியாம :)))))))))))))))))))இன்னாருக்கு இன்னாரென்று பாட்டு தான் நினைவுக்கு வருது
Deleteஇங்கு கட்டப்பட்ட ஒரு மாடிக் கட்டிடம்..
ReplyDeleteஆஹா எப்படி இருந்த இடம் எப்படி ஆகிட்டது ..சூப்பர்
குயிலிங் சன்ரா..cute
முறுக்கு...wow
வாங்கோ அனு, மிக்க நன்றி.
Delete