08.12.2019
உச்சிப்பிள்ளையார்
உச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்கென ஒரு தனி அறையில், பெரிய கட்டில் போட்டு, அதைச் சுற்றிவர ஒரு ஸ்நக்ஸ் ஷொப் அமைத்து, அதிலிருந்து, தானே வாங்கிச் சாப்பிட்டு, உச்சிப்பிள்ளையாரைப்போல குண்டானாலும்:), சுறுசுறுப்புக் குறையாமல், 2009 திலிருந்து தன் பெயரையே புளொக்குக்கும் சூட்டி, இன்றுவரை புளொக் எழுதிக் கொண்டும், அனைவரோடும் அன்போடு உறவாடிக்கொண்டும் இருக்கும் கோபு அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், மகிழ்வோடும் பல பல ஆண்டுகள், கோபு அண்ணன் நீடூழி வாழவேண்டுமென ஆண்டவனைக் கேட்டுக்கொண்டு....
எங்களை ஆசீவதியுங்கோ கோபு அண்ணன்...
கோபு அண்ணன் பற்றிச் சொல்வதற்கு, ஒரு புத்தகம் வெளியிடும் அளவுக்கு விசயங்கள் இருக்குது, ஆனா என்னால அனைத்தையும் திரட்டி எடுக்க முடியவில்லை, நேரம் போதவில்லை, இன்னொன்று, அவர் புளொக்கில், “லேபல்”.. என சைட் பார் இல் இல்லாமையாலும், தேடுதல் வசதி ஏதும் இல்லாமையாலும் எதையும் ஈசியாக தேட முடியவில்லை, என் நினைவுக்கு எட்டியதை வைத்து, வருடம் மாதம் ஓரளவு ஊகித்துத்தான் இவற்றைக் கண்டுபிடிச்சு எடுத்து வந்தேன்.
புஸ்தகா மின்னூல் நிறுவனத்தின் ஊடாகப் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் சிலது.....
இது கோபு அண்ணனின் இரண்டாம் கல்யாணம்.. ஆஆஆ இல்ல இல்ல டங்கு ஸ்லிப்பாகுதே கர்ர்ர்ர்ர்:)).. 2ம் தடவையாக 2009 இல் நடந்த 60 ஆம் கல்யாணம்....
2016 இலிருந்து ஒரே பேனாவாலயே எழுதிக்கொண்டிருக்கிறார் இப்போதைய போஸ்ட் வரையில்:), இடையிலே கும்பிடத் தொடங்கினார் அதற்கு நெல்லைத்தமிழனும் நானும் விடவில்லை:), திருச்சி மலைக் கோட்டை எம் எல் ஏ ஆகிட்டாரோ என சந்தேகப்பட்டதும்:)))..
அதனால... மீண்டும் ஓடிச்சென்று அதே பழைய பேனாவைத் தூக்கிவிட்டார் ஹா ஹா ஹா...
கல்கி இதழில் கொமெண்ட்ஸ் எழுதிப்போட்டு செலக்ட் பண்ணப் பட்டிருக்கிறார்.. லிங் பார்க்க இங்கு..
புளொக் எழுதுவோரை அழைத்து, கொமெண்ட்ஸ் எழுதப்பண்ணி அதுக்கு பரிசுகளும் வழங்கியிருக்கிறார்.
எழுத்தில் மட்டுமல்ல சமையலிலும் கலக்கியிருக்கிறார்ர்.. அடை சுட்டுக் காட்டியிருக்கிறார்[சுட்டதோ மூன்று அடை:) ஆனா அதற்கான விளக்கமோ மூவாயிரம் வரிகளாக்கும்:)) ஹா ஹா ஹா]. ஆனால் முந்நூறு கொமெண்ட்ஸ்களும் வந்திருக்கின்றன!... அவ்ளோ வரவேற்பு..:).
இதுவரை 44 பதிவர்களை வீட்டிலும் வெளியிலுமாக நேரில் சந்தித்து, மொட்டை மாடியில் நின்று செல்பி எடுத்ததோடில்லாமல்:), வருவோருக்குப் பரிசில்களும் வழங்கியிருக்கிறார்.. அதிரா வந்தால், ஒரு ஜோடி வைரக் காப்புத்தருவேன்:) எனவும் ஜத்தியம் பண்ணியிருக்கிறார்:)
இதோ சாம்பிளுக்கு கொஞ்சம் எடுத்து வந்தேன் இட்லிப்பொடி
இந்தாங்கோ இந்தாங்கோ.. இவற்றை எல்லாம் என் கையாலயே வேர்க்க விறுவிறுக்க எடுத்துக்கொண்டு ஓடிவந்தேன்.. சே..சே டங்கு ஸ்லிப்பாச்சுதே.. காசு குடுத்து வாங்கி வந்தேன், பேர்த்டே கொண்டாட்டத்துக்கு:))👧
இது ஸ்கொட்டிஸ் குண்டா ஸுவீட்ஸ்:)).. சாப்பிட்டுப் பார்த்திட்டுச் சொல்லுங்கோ எப்பூடி இருக்குதென:))
எல்லோரும் கேக் கட் பண்ண ரெடியாகிட்டீங்களோ?:)
பார்ட்டிக்கு வருவதற்கு, முதலில் உங்கள் மொபைலில் கூகிள் மப் ஐ ஃபுளோரில் இறக்கவும்:)), பின்பு கீழே படத்தில் ஒரு கட்டிடம் தெரிகிறதே சாப்பலும் வெள்ளையும் கலந்து, அதில் 3ம் மாடிதான் கோபு அண்ணன் வீடு,, அந்த அடையாளத்தை கூகிள் அங்கிளிடம் சொன்னால் உங்களைக் கூட்டி வருவார்:)..
“மகிழ்ச்சி என்பது-நமக்குள்ளேயே இருப்பது”
சொன்னவர் புபூ:)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
===============================
|
Tweet |
|
|||
ஆஹா ..... அசத்திப்புட்டீங்க அதிரா ! :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
ReplyDeleteமிக்க நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,நன்றி, நன்றி, நன்றி, நன்றி, *1234567890
வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.... உங்களுக்கு மட்டுமேதான் அந்த குண்டா சுவீட்:)... சாப்ட்டுப் பார்த்துச் சொல்லுங்கோ எப்பூடி ரேஸ்ட் என்பதை...
Deleteநல்லதெனில் இன்னும் வாங்கி நெல்லைத்தமிழன் ஸ்வாமி( உங்கள் முறையில் சொன்னேன்:)) யிடம் குடுத்தனுப்புகிறேன்...:).
பெயர் மாற்றம்:)
Deleteதிலோத்தமை பெயர் பார்த்ததும் மயங்காத குறைதான். இது ஏதோ பரபரப்பான படத்தின் கதாநாயகியின் பெயரல்லவா?
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இல்லை நெல்லைத்தமிழன், தேவலோக ரம்பைகளில் ஒருவராம், வைரம் மாணிக்கத்தாலானவர் போன்ற அழகாம்:)) அதனால போட்டேன்ன் ஆனா அதில் ஏதோ ஒரு குழப்பம் இருந்துது.. அதனால மாற்றி விட்டேன்:)). ஹா ஹா ஹா..
Delete//எங்களை ஆசீவதியுங்கோ கோபு அண்ணன்...//
ReplyDeleteஇதிர் ‘ர்’ ஐக் காணோம் ......... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சரி அது போகட்டும்.
இதில் யார் அதிரா ஆஆஆஆஆஆஆஆ ? யார் அஞ்சூஊஊஊஊஊஊஊ ?
இருவருக்கும் என் ஆசீர்வாதங்கள்
அதில... வெள்ளையா... கியூட்டாஆஆ இருப்பதூஊ நானூஊஊஊ:)..
Delete//புஸ்தகா மின்னூல் நிறுவனத்தின் ஊடாகப் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் சிலது.....//
ReplyDeleteஎங்கட அதிராகூட அவற்றில் சிலவற்றிற்கு விமர்சனம் எழுதியுள்ளார்கள். இதோ அதற்கான இணைப்பு:
http://gokisha.blogspot.com/2017/04/blog-post_23.html
ஹா ஹா ஹா அர்த்த ஜாமத்திலும் பொறுமையாகத் தேடி லிங் எடுத்து வந்து போட்டிருக்கிறீங்க... நன்றி.
Delete//உச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்கென ஒரு தனி அறையில்,//
ReplyDelete3ம் மாடி அல்ல. 2ம் மாடி என்பதே சரி.
//அந்த அடையாளத்தை கூகிள் அங்கிளிடம் சொன்னால் உங்களைக் கூட்டி வருவார்:)..//
வீட்டுக்கு வரும் வழி, இதோ இந்தக்கீழ்க்கண்ட பதிவில், கூகுளாரைவிட மிகத் தெளிவாக படங்களுடன் கொடுக்கப் பட்டுள்ளன.
http://gopu1949.blogspot.com/2013/02/blog-post.html
லிங்கைப் பிடிச்சுப்போய் மீண்டும் ஆறுதலாக உங்கள் வீட்டைப் பார்த்துவிட்டு, என் பழைய கொமெண்ட்ஸ் எல்லாம் படிச்சு வந்தேன், இப்படி மீண்டும் பழையதைப் படிக்கும்போது ஒரு மகிழ்ச்சி வருகிறது.
Deleteஅதுசரி உப்பூடிப் பப்புளிக்காக:) அனைத்தையும் போட்டுக் காட்டுறீங்களே.. ஆராவது வந்து உங்களைத் தூக்கிட்ட்க்கொண்டு போயிடப்போகினம் எதுக்கும் எப்பவும் கதவைப்பூட்டி வச்சிருங்கோ ஹா ஹா ஹா.
//அதில் 3ம் மாடிதான் கோபு அண்ணன் வீடு,,//
Delete//3ம் மாடி அல்ல. 2ம் மாடி என்பதே சரி.// - கோபு சார்... அதிரா சொல்லியிருப்பது சரிதானே... உங்க வீடு 2ம் மாடிதான். ஆனா, பஜ்ஜிக் கடையை ஏக்கமா 3ம் மாடியிலிருந்துதான், நன்றாகத் தெரிகிறது என்று பார்ப்பீர்கள், என அவர் நினைத்திருக்கிறார். அது சரியாத்தானே எனக்குத் தோணுது..
ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன், அவரின் பஜ்ஜிக் கடை, அவர் றூமுக்குள் இல்லையோ?:)..
Delete//இதோ சாம்பிளுக்கு கொஞ்சம் எடுத்து வந்தேன் இட்லிப்பொடி...//
ReplyDeleteஇதில் க்ளிக்கினால் அந்த லிங்க் ஓபன் ஆகவில்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
http://gopu1949.blogspot.com/2013/03/blog-post_10.html
திருத்திவிட்டேனே இப்போ:))
Delete//புளொக் எழுதுவோரை அழைத்து, கொமெண்ட்ஸ் எழுதப்பண்ணி அதுக்கு பரிசுகளும் வழங்கியிருக்கிறார்.//
ReplyDeleteபரிசு மழையைக் கண்டு களிக்க http://gopu1949.blogspot.com/2015/12/100-2015.html
ஆஹா எனக்கு இது தெரியும் ஆனா லிங் தேட முடியாமல் விட்டிருந்தேன்...
Delete//எழுத்தில் மட்டுமல்ல சமையலிலும் கலக்கியிருக்கிறார்ர்.. அடை சுட்டுக் காட்டியிருக்கிறார்[சுட்டதோ மூன்று அடை:) ஆனா அதற்கான விளக்கமோ மூவாயிரம் வரிகளாக்கும்:)) ஹா ஹா ஹா]. ஆனால் முந்நூறு கொமெண்ட்ஸ்களும் வந்திருக்கின்றன!... அவ்ளோ வரவேற்பு..:).//
ReplyDeleteஅதிராவுடன் சேர்ந்து ஜாலியாகப் போய், விழா மேடையில் பரிசும் வாங்கியிருக்கிறார் என்பதை இப்படி அநியாயமாக இருட்டடிப்பு செய்துட்டீங்களே, அதிரா.
http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html - 297 Comments
http://gopu1949.blogspot.com/2013/01/blog-post.html - 152 Comments
இங்கு வருகை தந்து வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.
ReplyDeleteஅன்பு கோபு அண்ணாவுக்கு இனிய மனமார்ந்த நல்வாழ்த்துகள் :)
ReplyDeleteஅந்த ஸ்நாக்ஸ் படங்கள் எங்கே :))) ஒரு மினி tuck ஷாப் ஆச்சே :))
ReplyDeleteவாங்கோ அஞ்சு.. என்ன வெறுங் கையோடயா வந்தீங்க கர்ர்ர்ர்ர்ர்?:) கையில ஒரு வைர வோச், அல்லது பவுண்ட்ஸ் வச்ச என்வலப் எதையும் காணம்:))
Deleteஹலோ இன்னது இது தியாக உலோகம் :) குலோத்துமை
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா:) அவசரப்பட்டு பின்பு தியாகத்திலகம் ஆகிட்டேன் ஹா ஹா ஹா..
Delete/அதிரா வந்தால், ஒரு ஜோடி வைரக் காப்புத்தருவேன்:) எனவும் ஜத்தியம் பண்ணியிருக்கிறார்:)//
ReplyDeleteஹப்பாடா நல்லவேளை எனக்கு வைர கம்மல் நெக்லஸ் மோதிரம்லாம் தரப்போறார் அது பூனைக்கு தெரியாது :)
நீங்கள் என்னோடு காசிக்கு வராமல் திருச்சிக்கெல்லாம் போக விடமாட்டேன் என்பது அஞ்சுக்குத் தெரியாதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:).
Deleteஅந்த ரெட்டை பிள்ளைகளில் கையை தோளில் போட்டு அமுக்கி என்னை அசையாம வச்சிருப்பது தியாகஉலோகம் :)அதிரா அமைதியா இல்லல்ல அமேதியா :) கள்ளமில்லாம சிரிக்கும் குழந்தை மீயாக்கும் :)
ReplyDelete//கையை தோளில் போட்டு அமுக்கி என்னை அசையாம வச்சிருப்பது தியாகஉலோகம் //
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))
அஞ்சு. 😂😂😂😂
Deleteஅழகிய தொகுப்பு மியாவ் ..நேரமெடுத்து ஒவ்வொன்றையும் கலெக்ட் செய்து இணைத்திருக்கிறிங்க ..பாராட்டுக்கள் இந்தாங்க :)
ReplyDelete[im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTRVwXHQFqcWmk_ofXT6SBekL_4kLggD2VLPhtmxEOZ2-HIwwwkpQ&s[/im]
நன்றி நன்றி... என்னால நிறைய தொகுப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை, இருப்பினும் உங்களுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுவேன்.. ஏனெண்டு கீழே ஸ்ரீராமுக்கு சொல்றேன் படிச்சுக்கோங்க:))
Deleteவைகோ ஸாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என் நமஸ்காரங்கள்.
ReplyDeleteஅதிரா... அவர் வீட்டின் கீழே தெருமுக்கில் இருக்கும் வடைக்கடையைக் குறிப்பிட மறந்தமைக்கு என் வன்மையான கண்டனங்கள்!
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம், வடைக்கடை எனக்கும் நினைவுக்கு வந்தது, ஆனா ஆதாரம் இல்லாமல் போச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா.
Deleteஅவர் கற்பனை வளம் மிகுந்தவர். கைவண்ணத்தில் சிறந்தவர். வித்தியாசமான பரிசுகள் கொடுத்து அசத்தி இருக்கிறார். சிறந்த ஓவியர். அவர் வரைந்த ஓவியம் மஹாபெரியவராலேயே அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்பட்டிருக்கிறது. அதையும் சொல்ல விட்டு விட்டீர்கள்.
ReplyDelete//அவர் வரைந்த ஓவியம் மஹாபெரியவராலேயே அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்பட்டிருக்கிறது.//
Deleteஇதுதான் இதுதான்.. நில்லுங்கோ முதல்ல ஓடிப்போய் அஞ்சுவைத்தேம்ஸ்ல தள்ளிப்போட்டு வந்து மிகுதியைச் சொல்றேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
அது என்னண்டா.. அஞ்சுவைக் கேட்டேன், கோபு அண்ணன் பற்றி தெரிஞ்சது ஏதும் சொல்லுங்கோ என, ஓவியமும் வரைஞ்சிருக்கிறார் என்றா... அப்போ நான் 2 மணி நேரமாக அவரின் புளொக்கில், ஜே மாமி பக்கம் எல்லாம் போய்த் தேடுறேன் தேடுறேன் எதுவும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.. அஞ்சுவுக்கும் நேரம் வரவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதனால அதுபற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை/நினைவுக்கு வரவில்லை என்பதால் விட்டு விட்டேன் ஸ்ரீராம்.
Sorry dear I am extremely worn out these days 😂😂😂😂
Delete//அது என்னண்டா.. அஞ்சுவைக் கேட்டேன், கோபு அண்ணன் பற்றி தெரிஞ்சது ஏதும் சொல்லுங்கோ என, ஓவியமும் வரைஞ்சிருக்கிறார் என்றா... அப்போ நான் 2 மணி நேரமாக அவரின் புளொக்கில், ஜே மாமி பக்கம் எல்லாம் போய்த் தேடுறேன் தேடுறேன் எதுவும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.. அஞ்சுவுக்கும் நேரம் வரவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதனால அதுபற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை/நினைவுக்கு வரவில்லை என்பதால் விட்டு விட்டேன் ஸ்ரீராம்.//
Deleteஇதில் வேடிக்கை என்னவென்றால் http://gopu1949.blogspot.com/2013/03/1.html ’பொக்கிஷம்’ தொடர் பதிவு அஞ்சுவின் வேண்டுகோளுக்காகவே என்னால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. 12 சின்னஞ்சிறு பகுதிகளாகப் பிரித்துப்பிரித்து எழுதியிருந்தேன்
.
ஸ்ரீராம் சொல்லும் முக்கிய விஷயம் அதன் 9வது பகுதியில் உள்ளது.
http://gopu1949.blogspot.com/2013/04/9.html ’நானும் என் அம்பாளும்’
//இதுதான் இதுதான்.. நில்லுங்கோ முதல்ல ஓடிப்போய் அஞ்சுவைத்தேம்ஸ்ல தள்ளிப்போட்டு வந்து மிகுதியைச் சொல்றேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..//
Deleteநம் அஞ்சூஊஊஊஊ பாவம் ..... அதுபோலெல்லாம் செய்யாதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.
Angel Sunday, December 08, 2019 1:18:00 pm
Delete//Sorry dear I am extremely worn out these days 😂😂😂😂//
பரவாயில்லை அஞ்சூஊஊஊ. நீங்கள் உங்கள் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த சமயம் ஒரு பொக்கிஷத்தை (COSTLY EATABLE SWEETS) பீரோவுக்குள் வைக்க, பிறகு ஒரு வாரம் கழித்து அதை எடுக்க, பீரோ பூராவும் ஒரே எறும்பு என என்னிடம் தனியாகப் பகிர்ந்துகொண்டுச் சொல்லியது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. :))))))
ஹையோ ஆண்டவரே உச்சிப்பிள்ளையாரே:)) அது அஞ்சுவின் ஆவி:) தேம்ஸ்ல இருந்து சொறி சொல்வது தெரியாமல், கோபு அண்ணன் வியக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறாரே:)) ஓடுங்கோ கோபு அண்ணன் ஓடிப்போய் உச்சிப்பிள்ளையார் தீர்த்தத்துள் ஒளிச்சிருங்கோ:)) கடவுளே வைரவா பிறந்தநாளும் அதுவுமா இப்பூடி ஓட வேண்டியதாப்போச்சே:)) ஹா ஹா ஹா...
Deleteஹாஹாஆ :) கோபு அண்ணா ..உண்மையில் எனக்கு நாளும் கிழமையும்தெரியாத அளவு பிசி புது வருஷத்தில் இருந்து பிசி குறையும் ..அது ஒரு வலையுலக நட்புக்கு படம் வரைந்து பிரசண்ட் பண்ணீங்க அது நினைவிருந்துச்சி அதை சொன்னதும் தியாகவடகம் :) திலகம் உலோகம் வலை உலகமெல்லாம் தேடி இப்போ என்னை தேம்ஸில் தள்ள ரன்னிங் :)
Deleteஎமது வாழ்த்துகளும் கூடி...
ReplyDeleteவாங்கோ கில்லர்ஜி நன்றி.
Deleteதியாகத் திலகம் அதிரா, மிக அருமையான பிறந்த நாள் பதிவு.
ReplyDeleteநட்பை மதிக்கும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உச்சி பிள்ளையார் அருளால் அவர் வணங்கும் குருவின் அருளால் எப்போதும் நலமாக மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் ! வாழ்க நலமுடன்.
வாங்கோ கோமதி அக்கா நன்றி.
Deleteபடங்கள் நல்ல தேர்வு அதிரா.
ReplyDeleteநீங்கள் போட்ட படங்கள் எல்லாம் அந்த பதிவுகளை நினைவு படுத்தின.
ஹா ஹா ஹா கோபு அண்ணன் பக்கம் ஒழுங்காகப் பொன எல்லோருக்கும் படங்களைப் பார்த்ததும் புரிஞ்சுவிடும்:) எங்கு களவெடுட்த்ஹுக் காவி வந்தேன் என்பது ஹா ஹா ஹா..
Deleteபாடல் நல்ல தேர்வு. அவர் மிகவும் அன்னையை நேசிப்பவர், போற்றி பாதுகாத்தவர் அன்னையை.
ReplyDeleteஅவருக்கு அவர் அன்னையின் ஆசிகள் எப்போதும் இருக்கும்.
நல்ல பாடல் தேர்வுக்கு நன்றி, பாராட்டுக்கள் அதிரா.
பாடலை ரசிச்சீங்களோ மிக்க நன்றிகள் கோமதி அக்கா.
Deleteவணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteநம் மதிப்பிற்குரிய பதிவர் சகோதரர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் வைபவம் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.நானும் பணிவுடன் அவரை வணங்கி என்னுடைய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் படம் பிள்ளையார் படம் மிகவும் அழகாக உள்ளது.
படங்கள், செய்திகள் என மிகவும் பிரமாதமாக அவரின் பிறந்தநாளை கொண்டாடச் செய்து எங்களையும் அதில் கலந்து கொள்ளச் செய்த தங்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்.
பூசானந்தாவின் வரிகள் உண்மையிலும் உண்மையே.!
கடைசிப்பட நகைச்சுவையை ரசித்தேன். எங்கிருந்தாலும் சனிபகவானின் பார்வைக்கு தப்ப முடியாது. விதித்தது நடந்தேதான் தீரும். ஆனால் சனிபகவான் அனைவருக்கும் நல்லதையே பண்ணுவார்.
முதலில் விக்னேஷ்வரனையும், இறுதியில் சனிபகவானையும் பதிவில் இணைத்ததே ஒரு சிறப்புத்தான்..சனிபகவானை இன்று வரை தன்னருகில் வர விடாமல் தடுப்பவரல்லவா விநாயக பெருமான்... முதலில் இருப்பவரின் அருள் நமக்கு பரிபூரணமாக இருந்தால், சனிபகவான் நம்முடன் இருக்கும் காலகட்டங்களில், நம் விதிப்பயனால் நமக்கு தொல்லைகள் தர நினைத்தால் கூட அதையெல்லாம் நல்லவையாக மாற்றி விட்டுச் செல்வார்.
அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//ஆனால் சனிபகவான் அனைவருக்கும் நல்லதையே பண்ணுவார்.//
Delete//சனிபகவானை இன்று வரை தன்னருகில் வர விடாமல் தடுப்பவரல்லவா விநாயக பெருமான்//
என்ன... கமலா ஹரிஹரன் மேடம்... ரொம்பக் குழம்பிட்டீங்க..... நல்லது செய்யும் சனி பகவானை, விநாயகப் பெருமான் தன்னருகில் வரவிடாமல் தடுக்கிறாரா?
ஏற்கனவே 7 1/2 சனில 'சனி பகவான்' செய்யும் நல்லதுகளால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன். இதுல நீங்க வேற ஜோக் பண்ணறீங்களே
வாங்கோ கமலாக்கா வாங்கோ... முதல் படம் உச்சிப்பிள்ளையார் மூலஸ்தானம் கமலாக்கா.
Delete//எங்கிருந்தாலும் சனிபகவானின் பார்வைக்கு தப்ப முடியாது. விதித்தது நடந்தேதான் தீரும்.//
அதேதான் எங்கின ஒளிச்சாலும் கண்டுபிடிச்சிடுறார் கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
//ஆனால் சனிபகவான் அனைவருக்கும் நல்லதையே பண்ணுவார்.//
எண்டுதான் நானும் அறிஞ்சேன், முடியும்போது நல்லதைக் கொடுத்திட்டே போவாராமே...
நன்றி கமலாக்கா.
//ஏற்கனவே 7 1/2 சனில 'சனி பகவான்' செய்யும் நல்லதுகளால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன். இதுல நீங்க வேற ஜோக் பண்ணறீங்களே//
Deleteஹா ஹா ஹா நெ.தமிழன் நீங்க எந்தக் கூறில் இருக்கிறீங்க எனச் சொன்னால் நான் உங்கட ராசிக்கு சாஸ்திரம் சொல்லுவேனெல்லோ:) ஹா ஹா ஹா..
சனிபகவானின் தாக்கம் குறைய, டெய்லி கொஞ்சம் எள்ளு சாப்ப்பிடட்டாம்.. காசா பணமா?:)) எள்ளுத்தானே அள்ளி வாயில போடுங்கோ டெய்லி:), நானும் போத்தலில் போட்டு வச்சிருக்கிறேன்.. அள்ளி வாயில் போட:).. ஹா ஹா ஹா
//சனிபகவானின் தாக்கம் குறைய, டெய்லி கொஞ்சம் எள்ளு சாப்ப்பிடட்டாம்.. காசா பணமா?:)) எள்ளுத்தானே அள்ளி வாயில போடுங்கோ டெய்லி:), நானும் போத்தலில் போட்டு வச்சிருக்கிறேன்.. அள்ளி வாயில் போட:).. ஹா ஹா ஹா//
Deleteநெ.த. ஸ்வாமீ,
மேற்படி வாக்கியத்தில், ‘போத்தலில்’ என்ற வார்த்தை ‘பொத்தலில்’ என இருக்க வேண்டுமோ என குழம்பிப்போயிடாதீங்கோ. பொத்தலுக்குள் தர்ப்பையாமின்னு சொல்லிப் போட்டுவிட்ட எள்ளை எடுத்து அள்ளி, எப்பூடி வாயில் போட முடியும்????? :)
நானும் இந்த ’போத்தல்’ என்பது சுத்தப் ’பேத்தல்’ ஆக உள்ளதே, ஒருவேளை
அதிராவின் அது ’பொத்தல்’ ஆகத்தான் இருக்கும் என, அதிராவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த, அந்த நாட்களில், ஒருநாள் நினைத்தும் விட்டேன். :))
அப்போது, அந்தக்காலத்தில், அதிராவுக்கும் எனக்கும் இடையே, நிர்மலா என்ற பெயரில் ஒரு மொழிபெயர்ப்பாளர் உண்டு. அவங்க, [நம்ப அதிரா போலில்லாமல்] ரொம்ப ரொம்ப நல்லவங்க. தங்கமானவங்க. என் மீது தனி பிரியத்துடன் இருந்தாங்கோ. அதிராவே அவங்களை கோல்ட்-பிஷ் என சமயத்தில் பாராட்டிப் பெருமைப் படுத்துவாங்கோ. அந்த அளவுக்கு தங்கமானவங்க.
அந்த நிர்மலா மூலம் [ இது வேறு மூலம் :) ] அதிராவின் வார்த்தைகள் சிலவற்றிற்கு, நம் தமிழ் மொழியில், மொழியாக்கம் செய்யப்பட்ட வார்த்தைகளை ஒரு டைரியில் குறித்து வர ஆரம்பித்திருந்தேன். அதன்படி இந்தப் ’போத்தல்’ என்பது நமது வீடுகளில் சமையல் அறையில் மிளகுப்பொடி, ஜீரகப்பொடி, உப்புத்தூள் போன்றவற்றை சிறுசிறு சீசாக்களில் (பாட்டில்களில்) போட்டு வைப்போமே ..... அதுதான் இந்த அதிரா சொல்லும் ’போத்தல்’ என்பதாகும். அதுபோல அதிராவின் ‘கச்சான்’ என்பது ’கடலை’ அல்லது ‘நிலக் கடலை’ என்பதைக்குறிக்கும் சொல்லாகும். :))
என்னவோ போங்கோ .... அந்த ஒரு சின்ன பொத்தல் / போத்தல் / பேத்தலுக்கு, இப்போ நான் இத்தனை விளக்கம் கொடுத்து, என் எனெர்ஜியை வேஸ்ட் செய்ய வேண்டியுள்ளது ..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))
எல்லாம் ஏழரைச் சனியின் வேலையாக இருக்கும் என நினைக்கிறேன். :)
எங்க ஊரில் ஒரு பழமொழி உண்டு.
Deleteஇளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு
உடம்பு ஒல்லியா இருந்தால் எள்ளு சாப்பிட்டா குண்டாவாங்க.
சிலர் ஜிம்முக்குப் போய் கஷடப்படறாங்க. அப்புறம் எள்ளு சாப்பிட்டு வெயிட்டை மீண்டும் கெயின் பண்ணிடறாங்க.
அதிரா... எங்க ஓடறீங்க? ஜிம் மெம்பர்ஷிப் கேன்சல செய்யறதுக்கா... இல்லை எள் போத்தலை தூக்கி வீசறதுக்கா?
ஹாஹா
நெல்லைத் தமிழன், பிள்ளையாரையும், அனுமனையும் கும்பிடும் போது சனியின் பாதிப்பு குறையும் என்பார்கள்.
Deleteநன்றி கோமதி அரசு மேடம். ஒருவரை சனிதோறும் சென்று வணங்குவேன் (இரு வாரங்கள் விட்டுப்போய்விட்டது). இன்னொருவரையும் சேவிக்கிறேன்.
Delete@ நெ.தமிழன்
Delete///அதிரா... எங்க ஓடறீங்க? ஜிம் மெம்பர்ஷிப் கேன்சல செய்யறதுக்கா... இல்லை எள் போத்தலை தூக்கி வீசறதுக்கா?///
ஸ்ஸ்ஸ்ஸ் நெ.தமிழன் உங்களுக்கு செவின் பொயிண்ட் ஃபைவ் நடக்குது எனச் சொல்லிக்கொண்டு உப்பூடி எள்ளை வீசுங்கோ எனச் சொல்லலாமோ:)).. முதல்ல ஓடிப்போய்க் குண்டு வண்டிப் பிள்ளையார் முன்னிலையில் நின்று 3 தோப்புக்கரணம் போட்டு, சனி அங்கிளிடம் இருந்து சேஃப் ஆகிடுங்கோ ஹா ஹா ஹா:))
வணக்கம் நெ. தமிழர் சகோதரரே
Delete/என்ன... கமலா ஹரிஹரன் மேடம்... ரொம்பக் குழம்பிட்டீங்க..... நல்லது செய்யும் சனி பகவானை, விநாயகப் பெருமான் தன்னருகில் வரவிடாமல் தடுக்கிறாரா?
ஏற்கனவே 7 1/2 சனில 'சனி பகவான்' செய்யும் நல்லதுகளால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன். இதுல நீங்க வேற ஜோக் பண்ணறீங்களே/
ஹா.ஹா.ஹா. மனிதர்களாகிய நமக்குத்தான் நல்வினை, தீவினை என்ற வினைகளுக்கேற்ப சனிபகவான் "நல்லதுகளை" நிகழ்த்துவார். அவர் (விநாயக பெருமான்) நல்ல செயல்களின் மொத்த அம்சம். அவருக்கு எதற்காக சனியின் பலாபலன்கள் என்ற எண்ணத்தில்தான் அவர் "நாளைக்கு வா" என்பதாக இன்று வரை நாளைக் கடத்தி வருகிறார் என்பது தாங்கள் அறியாததா?
சகோதரி கோமதி அரசு அவர்கள் கூறுவது போல் பிள்ளையாரையும், அனுமனையும் பிரார்த்தித்து வந்தால் சனியின் பலாபலன்களின் வீரியத்தை குறைத்து கொடுப்பார்கள். தாங்களும் அவர்களை சேவித்தது வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. சனிபகவான் தங்களுக்கு நல்ல பலன்களை தர நானும் பிரார்த்திக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா... இன்றைக்கு வை.கோ. அவர்களின் பிறந்த நாளா? மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் வை.கோ. ஜி. இன்று போல் என்றும் இனிதாக அமைந்திடட்டும்.
ReplyDeleteவாங்கோ வெங்கட் நன்றி.
Deleteஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteவாங்கோ டிடி நன்றி.
Deleteஎனது வாழ்த்துகளும்
ReplyDeleteவாங்கோ நன்றி.
Deleteகோபு சாரின் பிறந்த நாளை மறக்காமல் நினைவில் வைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்கள். அந்த அன்புக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteகோபு சார் என்றழைக்கப்படும் திருச்சி வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றைவிட சுறுசுறுப்பாக, இணையத்தில் ஆக்டிவ் ஆக, புதிய கதைகளை உற்சாகத்துடன் எழுதிக்கொண்டு நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
வாங்கோ நெல்லைத்தமிழன் நன்றி நன்றி....
Deleteஅது கடந்த சில வருடங்களாக, அஞ்சுவின் பேர்த்டே போஸ்ட்டிலேயே கோபு அண்ணனுக்கும் வாழ்த்துச் சொல்லுவேன், இம்முறை அவர் போஸ்ட் எழுதுவும் எழுதாமல் இருப்பதனால், இப்படி போஸ்ட் போட்டு வெளியே கொண்டு வரலாம் என நினைச்சேன்:), ஆனா நான் நினைச்சதே அவருக்குக் கேட்டுவிட்டது போலும் டெய்லி ஒரு போஸ்ட் போடுறார் ஹா ஹா ஹா:).
//2009 இல் நடந்த 60 ஆம் கல்யாணம்....// அந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்கு, கோபுசார் மனதில் நினைப்பது பளிச் என்று தோன்றியது.
ReplyDelete"ஏண்டாப்பா... இன்னும் பூஜை புனஸ்காரம்னு நேரத்தைக் கடத்தறீங்க. டக்குனு இலையைப் போட்டு விருந்தைப் போடாமல், எவ்வளவு நேரம்தான் மணையிலேயே உட்கார்ந்திருப்பது. தட்டைக் கொண்டுவந்த வேகத்தைப் பார்த்தால், ஏதோ சாப்பிட இருக்கும் என்று நினைத்தால், பூ, புஸ்பம், ஃப்ளவர் என்று நேரத்தைக் கடத்தறீங்களே"
ஹா ஹா ஹா இத்தனைக்கும் காலை உணவாக வெறும் பட்த்ஹு இட்லியும் ஒரு எழெட்டு உழுந்து வடையுமே சாப்பிட்டாராம்:)..
Deleteஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊ.. மேலே படத்தில பார்த்தால் தெரியல்ல?:)) ஹா ஹா ஹா..
//இன்றுவரை புளொக் எழுதிக் கொண்டும், அனைவரோடும் அன்போடு உறவாடிக்கொண்டும் இருக்கும் கோபு அண்ணனுக்கு //
ReplyDeleteசும்மா வெறும்ன பாராட்டுக்காக எழுதாதீங்க அதிரா. கடந்த 2 வருஷத்தில் எத்தனை இடுகைகள் கோபு சார் எழுதியிருக்கிறார்? இல்லை..எத்தனை பின்னூட்டங்கள் போட்டிருக்கிறார்?
தொடர்ந்து பிளாக்கில் புதிதாக எழுதிக்கொண்டே இருக்கணும், பின்னூட்டம், மறுமொழி என்று எல்லோருடனும் தொடர்பில் இருக்கணும் என அவருக்கு யார்தான் சொல்வது?
ஹா ஹா ஹா அவர் டச்சூ/ரச்சூஉ விட்டுப்போயிடாமல் அப்பப்ப எட்டிப் பார்ப்பதும் பெரிய விசயம்தானே.. ஆனா முதல்ல அவரின் கையிலிருந்து அந்த வட்சப்பைப் பிடுங்கினால்:) பின்பு ஒழுங்கா புளொக் எழுதுவார் என நினைக்கிறேன் ஹா ஹா ஹா:)..
Deleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கோபு அண்ணா . நோய்நொடியின்றி, நல்லாரோக்கியத்துடன், இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க உச்சிப்பிள்ளையார் அருள்பாலிக்கட்டும்.
ReplyDeleteகோபு சார் பல திறமைகள் கொண்டவர். ஓவியம் வரைவார். நிறைய நகைச்சுவையாக எழுதுவார். அவருடைய இடுகைக்கு பின்னூட்டம் போட்டால், அதற்கு மறுமொழி கொடுக்காமல் இருக்க மாட்டார். நல்ல பண்பாளர். பிறரைப் பாராட்டுவதில் கஞ்சத்தனம் காட்டமாட்டார். பிறருக்கு பரிசு அல்லது ஊக்கம் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவதில் அவர் தனித்துவம் மிக்கவர். அவருடைய கதைகளில் இழையோடும் நகைச்சுவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
ReplyDeleteகொஞ்சம் சென்சிடிவ். ஆனால் மிக நல்ல மனிதர்.
ஆனால், தேவையில்லாமல் எழுத்திற்கு ரிட்டைர்மெண்ட் வாங்கிக்கொண்டவர்போல எழுதுவதை நிறுத்தியது, எங்கேயும் தென்படாமல், பின்னூட்டமிடாமல், வாட்சப்போ இல்லை முகநூலோ கதி என்று இருப்பது பிடிக்காத குணம். இதற்கு அவர் என்ன காரணம் சொன்னாலும், அதை ஏற்க முடியாது. இயங்கத் தெரிந்தவர்கள் இயங்கிக்கொண்டே இருக்கணும். எழுதத் தெரிந்தவர்கள் எழுதிக்கொண்டே இருக்கணும்.
இந்த நல்ல நாளில் அவருக்கு மீண்டும் என் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
//அவருடைய இடுகைக்கு பின்னூட்டம் போட்டால், அதற்கு மறுமொழி கொடுக்காமல் இருக்க மாட்டார். //
Deleteஇதுதான் எனக்கும் அவரில அதிகம் பிடிச்ச விசயம்.
//வாட்சப்போ இல்லை முகநூலோ கதி என்று இருப்பது பிடிக்காத குணம்.//
இதேதான் ஹா ஹா ஹா ஸ்கூல் பிள்ளைகளைப் போல ஹா ஹா ஹா.. இனி நாம் ஆராவது மாறுவேடத்தில போய் வெருட்டோணும் வட்சப் பார்க்கக்கூடாது எண்டு:))
//மொட்டை மாடியில் நின்று செல்பி எடுத்ததோடில்லாமல்:), // - இதுக்கு வேலை வைக்கக்கூடாது என்று அவரை இரவு 9 1/2 மணிக்கு மேல் சந்தித்தேன். இல்லைனா, மொட்டை மாடியில் உச்சிப் பிள்ளையார் கோவில் பின்னணில ஒரு படம் எடுத்திருப்பார்.
ReplyDelete//இதுக்கு வேலை வைக்கக்கூடாது என்று அவரை இரவு 9 1/2 மணிக்கு மேல் சந்தித்தேன்.//
Deleteம்ஹூம்ம் நல்லாத்தான் சாட்டுச் சொல்றீங்க.. ஊரெல்லாம் சுத்திப்போட்டு, பாவம் அவர் நித்திரை கொள்ளும் நேரம் போய் டிசுரேப்புப் பண்ணினதோடு இல்லாமல்:)) குண்டாவை வேறு குடுத்தமையால, இரவிரவா குண்டா சாப்பிட்டு விடிஞ்சபிந்தானாமே நித்திரையானார் ஹா ஹா ஹா:))..
அவர் கற்புடை பத்தினிப் பெண்டிர் மாதிரி
Deleteபின் தூங்கி பின் எழும் குணம்.
இரவு 12 மணி - பகல் 12 மணி வரை தூக்கம். ஹா ஹா ஹா
அவர் கும்பகர்ணன் பரம்பரை:) எனத்தான் சொல்லியிருக்கிறார்:).. அப்பூடிப்பார்த்தால் அதிரா.. வெரி சோரி.. தியாகச்செம்மல் அதிரா எவ்ளோ பெட்டர்.. மீ லீவு நாட்களில், 9 மணிக்கெல்லாம் டாண் எண்டு எழுந்திடுவேனே:)) ஹா ஹா ஹா..
Delete//சுட்டதோ மூன்று அடை:) ஆனா அதற்கான விளக்கமோ மூவாயிரம் வரிகளாக்கும்:)) //
ReplyDelete//தானே வாங்கிச் சாப்பிட்டு, உச்சிப்பிள்ளையாரைப்போல குண்டானாலும்:),//
//கோபு அண்ணனின் இரண்டாம் கல்யாணம்.. ஆஆஆ இல்ல இல்ல//
நல்லா எழுதியிருக்கீங்க அதிரா.... உங்களுக்குப் பாராட்டுகள்
ஹா ஹா ஹா கோபு அண்ணன் ஒனறும் நினைக்க மாட்டார் எனும் தைரியத்தில்தான் பயப்பூடாமல் எழுதினேன் நன்றி...
Deleteமுடிந்தளவு முயற்சித்து பதிவு செய்தமைக்கு பாராட்டலாம் தியாகசெம்மல் அதிராவை.. மொபைலில் பாட்டு வரவில்லை. அதனால் கேட்க முடியவில்லை sorry.
ReplyDeleteபாட்டு அம்முலு:)... எங்க ஊர் ரேடியோ நினைவு வருதோ?:)
Deletehttps://youtu.be/i-jlk4dEFLY
வாங்கோ அம்முலு வாங்கோ.. ஆலமரம் படமெடுத்திட்டீங்களோ?:) நன்றி நன்றி.. சுற்றுலாவிலும் எட்டிப்பார்க்கிறீங்க.
Deleteசகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாங்கோ மனோ அக்கா வாங்கோ.. நன்றி.
Deleteகோபு அண்ணன், வரப்போகும் அனைவருக்கும் நன்றி என மொத்தமாக மேலே சொல்லிட்டார்ர்.. விழாவுக்கு வந்து சிறப்பித்து என்வலப்புக்களை அதிராவிடம் ரகசியமாக ஒபடைத்த அனைவருக்கும் நன்றியோ நன்றி..
ReplyDelete[im]http://www.indiansweets.co.nz/product_images/s/422/Sweets$30__640x480___40385_zoom.jpg [/im]
ஹலோ தியாகஉலகம் :) சேசே தியாககலகம் :) அது எல்லா என்வலப்பிலும் //நன்றி //னு துண்டுசீட்டு மட்டுமே இருக்கு :) பெரிசா சந்தோஷப்படாதிங்க :)
Delete[im] http://img.youtube.com/vi/vEvvRfuVk30/0.jpg[/im]
Deleteவை கோ சாருக்கு 70 ஆண்டு நிறைவு வாழ்த்துக்கள். நானும் கடந்த october இல் 70 ஆண்டினை கடந்தேன். எனக்கு திருச்சி தந்தையின் ஊர். 1954 முதல் 1960 வரை தையல்கார தெருவில் வாசம். படிப்பு ஆர்யன் செகண்டரி ஸ்கூல். பின்னர் கடலூர், தற்போது திருவனந்தபுரம்.
ReplyDeleteவாங்கோ ஜே கே ஐயா..
Delete//நானும் கடந்த october இல் 70 ஆண்டினை கடந்தேன்.//
ஆஆஆஆஆஆஅ நீங்க ரொம்ப வயசானவர் என்றெல்லோ நினைச்சுக்கொண்டிருக்கிறேன்ன்.. அனைத்துக்கும் காரணம் நம்மட கீசாக்காவேதேன்ன்ன் கர்ர்ர்ர்ர்:))...
//வை கோ சாருக்கு 70 ஆண்டு நிறைவு வாழ்த்துக்கள்//
அவருக்கு 70 ஆண்டு நிறைஞ்சிட்டுது ஏற்கனவே:)) ஹா ஹா ஹா
மிக்க நன்றிகள்.
வைகோ சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இறையருளால் ஆரோக்கியமாக நீடூழி வாழ்ந்துகொண்டு, நண்ப, நண்பிகளுக்கு மேலும் மேலும் பரிசுகள் பல வழங்கி மகிழ்வாராக!
ReplyDeleteசீனியர் சாரின் பிறந்த நாளை திருவிழா மேடைக்குக் கொண்டு வந்து, தோரணமிட்டுக் கலக்கிய அதிராவுக்கு ’நன்றி’ எனச் சொல்லாவிட்டால் நாள் நகராது!
வாங்கோ ஏ அண்ணன், மிக்க நன்றிகள். என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
Deleteஅசத்தல் பதிவு. நல்லா நிறையச் சாப்பிடக் கொடுத்திருக்கீங்க. இதெல்லாம் நீங்க வைகோ அவர்களுக்குக் கொடுத்ததா? இல்லைனா அவர் வீட்டிலேருந்து எடுத்து வந்ததா? இஃகி,இஃகி,இஃகி! ஒவ்வொருத்தர் பிறந்த நாளையும் நினைவு வைத்துக்கொண்டு கொண்டாடிக் கொண்டு இருப்பதற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். இந்தப் பதிவையே இப்போத் தான் பார்க்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கண்ணில் படவே இல்லை.
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ.. எல்லாமே நானே, என் கையாலயே அதுவும் ரெண்டு கையாலயும் செய்ததுதேன்:).
Deleteஎங்கே ஒவ்வொருத்தரையும்.. பலர் திகதியைச் சொல்லவே பயப்பிடுகினமெல்லோ:))..ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் கீசாக்கா.
என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
அன்பு கோபு சாருக்கு,
ReplyDeleteசிறப்பான பதிவு! - இனிப்பான
வாழ்த்துகள்!!
வாங்கோ நிஜாமுத்தீன் மிக்க நன்றிகள்.
Deleteஎன் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
இனிமையான பதிவு அதிரா ...
ReplyDeleteஅன்பு கோபு சாருக்கு எனது வணக்கங்களும் ...
வாங்கோ அனு.. மிக்க நன்றிகள்.
Deleteதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.