நல்வரவு_()_


Monday, 10 February 2020

சிக்கின் கோன் சூப்🙎

நான் எசப்பாட்டுப் பாடி கன நாளாச்செல்லோ:), அதனால இம்முறை சமையல் குறிப்புக்குப் பாடுகிறேன்:).. இது எங்கள் புளொக்குக்கான எசப்பாட்டு:).. 

சைவக் குறிப்புக்களைப் படமெடுப்பேன் ஆனா பின்பு போடுவதில்லை, ஒரு கிச்சின் புளொக் ஓபின் பண்ணி, போட்டு வைக்கலாமே என சில வருடங்கள் முன்பு ஓபின் பண்ணி, அதையும் விட்டு விட்டேன். சரி இம்முறை, அங்கு சைவ சூப் என்பதால, இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைச்சு இங்கு போடுகிறேன்..

இதன் சைவ முறை சூப் காண  “இங்கே” வாங்கோ..

எனக்கொரு வாசகி இருக்கிறா, நம்ப மாட்டீங்கள் அவவும் பிரித்தானியாவில்தான் இருக்கிறா, விரைவில் அவவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பேன். அவ என் சமையல் குறிப்புக்களைப் பார்த்து மெயிலும் அப்பப்ப போடுவா.. போன தடவை என் ரெசிப்பியில் ஆங்கிலம் அதிகம் கலந்துவிட்டேன் எனத் திட்டிப்போட்டா கர்ர்ர்ர்ர்:)).. அதனால இம்முறை மீ சுத்த சைவம்:)) சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:) சுத்த டமில்தான் பேசப்போறேன்:).. ஹா ஹா ஹா.

சரி சரி விசயத்துக்கு வருகிறேன், இதுவும் சைனீஸ் சிக்கின் சூப்தான்[ஆனா அதிரா ஸ்டைலில்]... சைனீஸ் ரெஸ்ரோரண்களில் கிடைக்கும், எங்கட சின்னவருக்கு மிக மிகப் பிடிச்ச ஒன்று இந்த சூப்..

தேவையான பொருட்கள்.

முட்டை -2
வெள்ளை சோள மா - 4,5 மே.க

மிகுதி கீழே படிக்கவும்..
முதலில் சூப்பின் அடிப்படையான, மரக்கறி ஸ்ரொக் செய்யோணும்... இதுக்கு வீட்டில் இருக்கும் அனைத்து மரக்கறிகளையும் பயன்படுத்தலாம், முக்கியமாக, சமைக்கும்போது எறியும், புரோகோலி, கொலிஃபிளவர், கபேஜ் போன்றவற்றின் தண்டுகளையும் சேர்த்து வைத்து, இதற்குப் பயன் படுத்தலாம்.
மஸ்றூம் மற்றும் சிவப்பு நிற மரக்கறிகள் சேர்த்து அவிச்சால், சூப்பின் கலர் கறுப்பாகி விடும், எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.

இப்படி கொஞ்சம் கொஞ்சம் வீட்டில் இருக்கும் மரக்கறிகளோடு, ஒரு பெரிய வெங்காயம், கொஞ்சம் உள்ளி[பூண்டு], மிளகுதூள், 2 பச்சை மிளகாய், சேர்த்து, சிக்கின் சூப் என்பதனால், இதனுடன் ஒரு பீஸ் சிக்கினையும் சேர்த்து தண்ணி விட்டு நன்கு நீண்ட நேரம் அவிய வைக்கவும். சிறிது உப்புச் சேர்க்கவும்.

அவிந்ததும், இறக்கி நன்கு வடிகட்டி தண்ணி புறிம்பாக எடுக்கவும். அத்தண்ணியில், அவிந்து வந்த சிக்கினை கையால குட்டி குட்டியாக நார்போல பிய்த்துப் போடவும்.

இப்போது அந்த சிக்கின் போட்ட, வடித்த தண்ணியை அடுப்பில் வைத்து சூடாக்கவும், இதில் சோளன் கொஞ்சம் இப்போது சேர்க்க வேண்டும்[frozen corn], மீ மறந்திட்டேன்:)).

இடையில் 2 முட்டைகளை நன்கு அடிச்சு எடுத்து வைத்திருக்கோணும்.

நன்கு கொதிக்கும்போது, முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டே, மற்றக் கையால் கலக்க வேண்டும்.. அப்போதுதான் முட்டை திரளாமல் குட்டிக் குட்டி நார்போல வரும்.

முட்டை சேர்த்ததும், வெள்ளை சோளன் மாவை அரைக் கப் தண்ணீரில் நன்கு கரைத்து எடுக்கவும்.. அதனை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். உங்கள் மரக்கறி ஸ்ரொக் இன் அளவுக்கு ஏற்ப சோளன் மாவை சேர்க்கவும், கொஞ்சமாக சேர்த்து, போதாவிட்டால் மீண்டும் கொஞ்சம் சேர்க்கலாம், மா அதிகமானால் சூப் தடிப்பாகிவிடும்.

இந்த சூப் இப்படி கஞ்சித்தண்ணிபோல பதமாக இருந்தால்தான் சுவை. இதற்கு உங்கள் விருப்பம்போல மரக்கறி போட்டு சோடித்துக் கொள்ளலாம், ஸ்பிரிங் அனியன் வெட்டிப் போடலாம்.

இதோ குளிருக்கு இதமான சிக்கின் கோன் சூப் ரெடி..

இதனோடு சாப்பிட சில்லி சிக்கின்
[இதுவும் சைனீஸ் ரெசிப்பிதான், பின்பு தருகிறேன் இதன் செய்முறையை]

இன்று ஒரு தகவல்:)
இப்பொழுது நான் ஆதி காலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன்:)[உலகமே அப்படித்தான் போவதுபோல ஃபீலிங்காக இருக்கே:)].. இப்பொழுது இப்படி மர அகப்பை, மண்சட்டி, இரும்புச் சட்டி என வீட்டில் இருக்கும்போதுதான் எனக்கு சமைக்க  சந்தோசம் ஓவராகுது:), அதனால வெளிநாட்டில் கிடைக்காததால், ஊரில் சொல்லி மாமா அனுப்பியிருந்தார், இரு குட்டி அகப்பைகள், மற்றும் பெரிய அகப்பை, நான் அவர் பார்சல் அனுப்பும் போது, லாஸ்ட் மினிட்டில சொல்ல, அவசரமாக பக்கத்துக் கடையில் இருந்ததை வாங்கி வைத்து அனுப்பினார்..

இது என்ன தெரியுதோ? உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை, அம்முலுவுக்குத் தெரியவரும். இது பாண்[பிரெட்] ரஸ்க்.., ரஸ்க் தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு ஆனா இதனை நாங்கள் “ஆட்டுக்கால் ரஸ்க்” எனத்தான் சொல்வோம், அதன் வடிவம் அப்படி. இது யாழ்ப்பாணத்து பேக்கரிகளில் பேமஸ், சுடச்சுட வாங்கும்போது ஒரு வாசமாக இருக்கும், பிளேன் ரீயுடன் சாப்பிட ஆகா... இதனை ஒருநாள் நினைவு படுடத்தியதும், ஊருக்குப் போயிருந்த போது சமீபத்தில் அம்மா வாங்கி அனுப்பி விட்டா, பாதி உடைஞ்சு போச்சுப் பார்சலில்:(.

ஊசி இணைப்பு
நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)..

ஊசிக்குறிப்பு:
================_()_================

49 comments :

  1. இந்த சூப்  பார்க்க நன்றாக இருக்கிறது. Poached egg chicken corn soup என்று சொல்ல வேண்டும். இதில் கொஞ்சம் கிரீம் அல்லது வெண்ணை சேர்த்தீர்களானால் இன்னும் சுவை கூடும். Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் இம்முறை ஜேகே ஐயாதான் 1ஸ்ட்டூஊஊ.. வாங்கோ வாங்கோ..

      உண்மைதான் சிலர் கிரீம் சேர்ப்பார்கள், கடைகளிலும் சேர்ப்பினம் என நினைக்கிறேன் ஆனா எனக்கு அது விருப்பமில்லை. கொஞ்சம் கிறீம் ஐக் கப்பில் ஊற்றி 2 நாட்களால் பாருங்கோ அப்படியே கொழுப்புக் கட்டியாக இருக்குது.

      மிக்க நன்றிகள்.. அந்த சூப் டிஸ் உங்களுக்கே:))

      Delete
  2. சூப் படங்கள் சூப்பர்.

    ரஸ்க் ஆட்டுக்கால் போலவே இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      அதே அதே அதனால்தான் ஆட்டுக்கால் ரஸ்க்... இந்த ரஸ்க் ஐ நெல்லைத்தமிழன் ஸ்ரீராம் எல்லாம் சாப்பிடக்கூடாதாக்கும் ஹா ஹா ஹா:))..

      மிக்க நன்றி.

      Delete
  3. ஆ...இந்த சமையல் குறிப்புக்கு நோ....comments...அடுத்து சில்லிசிக்கனோ அப்ப கொஞ்சநாளைக்கு இந்தபக்கம் வரவேண்டாம் போல....அஞ்சூஊஊஊ
    ஆவ்வ்வ்வ்... ரஸ்க், ரஸ்க் நான் ஊருக்கு போனால் பாண்,ரஸ்க் சாப்பிடாமல் விட்டதில்லை. எனக்கு இவை பார்க்க ஊர் ஞாபகம் வருது.(பழைய)
    அப்பாதான் விடிகாலையில் ரோட்டால் போகும் வானை(அப்ப வானில் கடைகளுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்வார்கள்) மறித்து எனக்கு இவைகளை வாங்கி தருவார். நீங்க சொன்ன மாதிரி ரீ யோடு சாப்பிட நல்லாயிருக்கும். நான் ஹொட் மில்க் விட்டு கொஞ்சம் சுகர் அட் பண்ணி கோன் ப்ளேக்ஸ் மாதிரி சாப்பிடுவேன். (இங்கு இப்பவும்) படத்தில பார்க்க எலும்பு போல இருக்கு.அவ்வ்வ்வ்வ்வ்.
    அகப்பை நான் வாங்கி வந்தேன் சமையல் தாரகையே...
    ஊர் வம்பு வேண்டாம் என்று நல்ல குறட்டை விட்டு தூங்குறாவோ டெய்ஸி. ஊசிகுறிப்பு அருமை.
    பாட்டு எனக்கு மிகமிக பிடித்தபாடல். சீர்காழியின் குரலுக்கு அப்படி ஒரு வசீகர சக்தி. all time favorit song.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. இம்முறை ஏழியா வந்திட்டீங்க.. சூப் மணத்திருக்கிறது அப்பூடித்தானே ஹா ஹா ஹா...

      //இந்த சமையல் குறிப்புக்கு நோ....comments//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா தெரியும் எனக்கு கொமெண்ட்ஸ் வராது என, ஆனா இது இங்கு படிக்கும் பலருக்குப் பயன் படும் எனப் போட்டேன்.

      கனடா பேக்கரியில், ஊர் ரோஸ் பாண் கிடைக்குது அம்முலு.. உங்களிடத்தில் உண்டோ?

      //படத்தில பார்க்க எலும்பு போல இருக்கு.அவ்வ்வ்வ்வ்வ்.//
      நீங்கள் இதைக் காணவில்லையோ? முன்பு அம்மம்மாவின் டின்னர் இதுவும் சனஸ்ரேஜன் மில்க் உம்தான்.. ஃபிரேக்பெஸ்ட் க்கு நெஸ்டமோல்ட்டும் இதுவும் ஹா ஹா ஹா.. வேறு எதுவும் செமிக்காது அவவுக்கு.

      //அகப்பை நான் வாங்கி வந்தேன் சமையல் தாரகையே...//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது நல்ல அகப்பை கிடைக்கவில்லையாம்...

      மிக்க நன்றி அம்முலு...

      ஓடாதீங்கோ அடுத்து வர இருப்பது.. மொ.கொ:)

      Delete
  4. நான் வரலை இந்த விளையாட்டுக்கு. மீ எஸ்கேப்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெ.தமிழன் வாங்கோ... ஹா ஹா ஹா சரி சரி சென்று வாங்கோ.. அவசரமாக ஓடி விழுந்திடாதீங்கோ...:)) நன்றி வருகைக்கு.

      Delete
  5. எக்குத்தப்பான எசப்பாட்டாக இருக்கிறதே...!   ஹா...ஹா...ஹா...  சிக்கன் எடுங்க...   சிரிச்சு கொண்டாடுங்க...    ஆட்டுக்கால் எடுங்க அலப்பறை பண்ணுங்க!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஹா ஹா ஹா எசப்பாட்டு எப்பவும் எக்குத்தப்பாகத்தான் இருக்கும்.. உங்கள் கதைக்கு, அது உங்கள் கதை எனத் தெரியாமல் எழுதினேனே எசப்பாட்டு அதை விடவோ இது எக்குத்தப்பு ஹா ஹா ஹா...

      //சிக்கன் எடுங்க... சிரிச்சு கொண்டாடுங்க...
      ஆட்டுக்கால் எடுங்க அலப்பறை பண்ணுங்க!//

      ஆஆஆ கவித கவித:))

      Delete
  6. அதை அப்படியே சைவமாக்கி எங்களுக்கு அனுப்பி விட்டீர்கள் போல!  செய்முறை பற்றி பேச எனக்கு ஒன்றும் இல்லை!  எனவே நான் ஊசிக்குறிப்பையும் ஊசி இணைப்பையும் ரசித்துகைதட்டிவிட்டு விடை பெறுகிறேன்!   ஹிஹிஹி....

    ReplyDelete
    Replies
    1. சைவ சூப் அப்படித்தான் ஸ்ரீராம், ..

      மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
  7. ஆஆவ் !!! என் மைண்டில் அடிக்கடி ஓடும் பாடல் :)  உள்ளத்தில் நல்ல உள்ளம் 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      யேஸ் கர்ணன் படப்பாடல்.. கர்ணன் படம் என்றாலே அப்பாவின் நினைவு வந்து விடுகிறது எனக்கு.

      Delete
  8. எப்பவும் போல் ரிவர்ஸ் ஆர்டரில் வரேன் :))கர்ர்ர்ர் எங்க ஊரில் இதை பொரை / வர்க்கி /ரஸ்க் இப்படித்தான் சொல்வாங்க (  ...பாலோடு தக்காளி சட்னியோடு காரக்குழம்போடு காம்பினேஷன் சூப்பரா இருக்குமே :))

    ReplyDelete
    Replies
    1. அது எல்லோரும் ரஸ்க் எனத்தான் சொல்லுவோம்ம்.. ஆனா இந்த ஆட்டுக்கால் எனும் பெயரும் சேப் உம் யாழ்ப்பாணத்தில மட்டும்தான் பேமஸ்.. அதைச் சொன்னேன்.

      // ...பாலோடு தக்காளி சட்னியோடு காரக்குழம்போடு காம்பினேஷன் சூப்பரா இருக்குமே :))//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவிச்ச மிளகாய்ப்பொரியலை விட்டு விட்டீங்க ஹா ஹா ஹா..

      Delete
  9. ஊசி இணைப்பு :) ஹாஹா டெய்சி மாதிரி இருந்தா பிரச்சினையே இல்லை :)ஊசிகுறிப்பு நறுக் :) 

    ReplyDelete
    Replies
    1. அதேதான் என்ன ஒரு சுகமான உறக்கம்.. எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள்.. டெய்ஷிபோல இருந்தால் பிரச்சனை இல்லை என ஆனா டெய்ஷியிடம் கேட்டால்தான் தேரியும் டெய்ஷியின் பிரச்சனையும் கவலையும் ஹா ஹா ஹா...

      Delete
  10. அகப்பை இது மாதிரி vti  அண்ணா சாலை ஷாப்பில் வாங்கி கொண்டாந்தேன் எங்க ஊரில் இதில் தான் கஞ்சி கூழ் கிளறுவாங்க ..சூப்பர் ஷேப் .

    ReplyDelete
    Replies
    1. இதில் பெரியதுதான் அஞ்சு அகப்பை, சின்னது கரண்டிபோல பாவிக்க மட்டும்.

      அதில் சின்னது ஆணி போட்டிருப்பார்கள், கடின வேலைக்குப் பாவிச்சால் ஆணி கழண்டுபோகும். ஆனா பெரியது, சிரட்டையில் துவாரமிட்டு காம்பை துளைச்சிருப்பதால் , பொங்கல், கஞ்சி கூழ் போன்றவற்றுக்குப் பயன் படும்... நான் பெரிசு வேண்டாம் சின்னன் தான் வேண்டுமெனக் கேட்டிருந்தேன்..

      Delete
  11. சைனீஸ் சிக்கன் ,,,நீங்களே சாப்பிடுங்க :)) மிக்க நன்றீஸ் .அப்பாடி கலர் கிறுகிறுக்குது 

    ReplyDelete
    Replies
    1. அது சோயா சோஸ் சேர்த்துச் செய்வதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு இதில் அவ்வளவு நாட்டமில்லை, ஆனா வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.

      Delete
  12. /மஸ்றூம் மற்றும் சிவப்பு நிற மரக்கறிகள் சேர்த்து அவிச்சால், சூப்பின் கலர் கறுப்பாகி விடும், எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது///
    ஆத்தீ :) பூனை மேய்க்குற பெரிய பூனைக்குத்தான் எவ்ளோ அறிவு :)))))))))))மஷ்ரூம் தான் கறுப்பாகும் சூப் கறுப்பாகாது மேடம் :) 

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மஸ்றூம் அவிச்சு தண்ணியை எடுத்துப் பாருங்கோ என்ன கலராக வருகிறது என.... குட்டிக் குட்டிக் குளோஸ் கப் மஸ்றூம் எனில் வெள்ளையாக வரும், ஏனைய வகைகள் எல்லாம் கறுக்கும் தண்ணி.

      Delete
  13. எனக்கென்னமோ உங்களுக்குனு சீக்கிரமே கவுரவ சீன ப்ரஜை குடுக்கபோறாங்ஙன் தோணுது :) அதிகமா சீன ரெசிப்பீஸ் செய்து அசத்துவதாலே :) ஒரு ட்ரிப் போயிட்டு வந்து  சீன பயண அனுபங்களை விலா :) வாரியா எழுதுங்களேன் :)

    ReplyDelete
    Replies
    1. //ஒரு ட்ரிப் போயிட்டு வந்து சீன பயண அனுபங்களை விலா :) வாரியா எழுதுங்களேன் :)//

      போய் யெல்ப் பண்ணலாமே என ஒரு நலெண்ணத்துடன் விசாரிச்சேன்.. இப்போ சைனாவுக்குள் நுழைய முடியாதாமே...

      முன்பு எனக்குக் கனடாவுக்குப் போகோணும் முக்கியமாக அங்கு ரோய்ஸ் கொம்பனி எல்லாம் பார்க்கோணும் எனப் பயங்கர ஆசை, கணவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன், அதனாலென்ன போகலாம் என்றார், பின்பு ஒருநாள் ஒரு டொகியூமெண்டரி பார்த்தோம்.. அதில் குழந்தைகளை விற்கிறார்கள், சில குழந்தைகளைக் கடத்தியும் விற்கிறார்கள் என இருந்தது.. அத்தோடு நான் வரமாட்டேன்ன் சைனா ட்றிப் கான்சல்ட் என்றிட்டேன் தெரியுமோ.

      விரைவில “லயொகன்மா” ரெசிப்பி வெளிவரும்:)) ஹா ஹா ஹா.

      Delete
  14. சூப் நல்லா இருக்கு வீட்ல இருக்குற ரெண்டு பேருக்கு செய்றேன் :)
    நான் எப்பவும் சூப்பில் quinoa சேர்ப்பேன் அது நல்ல இருக்கும் 

    ReplyDelete
    Replies
    1. அக்கா வீட்டிலும் கினோவா, நுடில்ஸ் எனவும் சேர்ப்பினம், ஆனா இப்படி பிளேன் சூப்ப்பும் ஒரு ரேஸ்ட்...

      Delete
  15. //எனக்கொரு வாசகி இருக்கிறா, நம்ப மாட்டீங்கள் அவவும் பிரித்தானியாவில்தான் இருக்கிறா,//
    அப்படியா யாரந்த வாசகி :) 

    ReplyDelete
    Replies
    1. அவவுக்கு சமையல் புளொக்கும் இருக்குது அஞ்சு.. பாருங்கொ நமக்குத் தெரியாதே இத்தனை காலம்.. நேயர் விருப்ப ரெசிப்பி ஒன்று கேட்டிருக்கிறா, ரெசிப்பியுடன் விபரம் வெளியிடுகிறேன் அதுவரை வெயிட்ட்....

      Delete
  16. சரி இப்போ அங்கே போகணும் :)))))))))))))))) ciara storm அதிராமியாவ் அவர்களே 

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது அடிச்சுக் கிடிச்சு கூரையை கிளப்பி, கொரொனா வை வீட்டுக்குள் அனுப்பினால்தான் உங்கள் எல்லோருக்கும் திருப்தி வரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அஞ்சு.

      Delete
  17. பாடல் மிகவும் பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன் அதிரா.
    சிரட்டை கரண்டி கோவிலுக்கு போகும் வழியில் ஒரு குடும்பம் செய்வார்கள். சிரட்டையில் நாரை கத்தியால் சுரண்டி கொண்டு இருப்பார்கள் மரக்கட்டையில் வைத்துக் கொண்டு. கைபிடி மூங்கில் குச்சியை வழு வழு என்று செய்ய ஒரு பக்கம் தேய்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் படும் கஷ்டம் சொல்லி முடியாது.

    பொங்கலுக்கு நல்ல விற்பனை ஆகி இருக்கும். மண்பானை பொங்கலுக்கு வாங்கி இருப்பார்கள்.
    கோவில்களில் கூழ் காய்ச்ச இந்த கரண்டியை பயன்படுத்துவார்கள்.



    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. பாடல் கேட்டு மகிழ்ந்தமை மகிழ்ச்சி.

      நானும் சிரட்டையில் அகப்பை செய்வதை யூரியூப்பில் பார்த்தேன்.. உண்மைதான் எவ்வளவு கஸ்டம், அதிலும் ஓட்டை போடும்பொது சிரட்டை உடைஞ்சிட்டால் உழைப்பு வீணாகிவிடும்.

      பெரிய அகப்பை, பானை வேலைகளுக்கு உகந்தது. சின்னது கரண்டிபோல ஸ்டைலாகப் பாவிக்கலாம்.. இப்படி அகப்பை தடிகளுக்குப் பெயிண்ட் பண்ணி பொலிஸ் பண்ணி எல்லாம் கிடைக்கும் ஊரில், இப்போ அவசரத்துக்கு கிடைக்கவில்லைபோலும்.. அத்தோடு இதில் லாபமில்லை என்பதால், உற்பத்தி இல்லாமலும் இருக்கலாம்.

      Delete
  18. ஆட்டுக்கால் ரஸ்க்” ஆட்டுக்கால் போலவே இருக்கு . ஆட்டுக்கால் உடைந்து விட்டதே!

    ஊசிக்குறிப்பும், ஊசி இணைப்பும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான் பிளைட்டில கால் உடைஞ்சு போச்ச்ச்ச்ச்:)... மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  19. வணக்கம் அதிரா சகோதரி

    மறுபடியும் சூப்பா? காலையில் எ. பியில் உங்களின் சைவ சூப் படித்தேன். இன்றைய தினம் உடனே கருத்துக்கள் இட முடியாமல் நிறைய வேலைகள் ஒரு குறுக்கீடு.. மன்னிக்கவும்..

    அதனால் இப்போதுதான் அங்கு கருத்துக்கள் போட மொபைலை எடுத்தேன். அதற்குள் என் தளத்தில் தங்கள் பதிவை காட்டியதால், இங்கு வந்து விட்டேன். இங்கே வந்தால் ஒத்துக்காத சூப் படங்களுடன், போட்டுள்ளீர்கள். எதையுமே திறமையுடன் செய்து முடிக்கும் தங்களுக்கு பாராட்டுக்கள். (அறிந்திராத இதைப்பற்றி வேறு எதுவும் கூறத் தெரியவில்லை. ஹா. ஹா. ஹா.)

    மரகரண்டிகள் மிகவும் நன்றாக உள்ளது. ரொம்ப பெரிதாக உள்ளதோ. . இல்லை என்னைப் போல் நீங்களும் அதன் அருகே சென்று படமெடுத்திருப்பதாலா? எங்கள் அம்மா வீட்டிலும் முன்பெல்லாம் இது போல், பெரிய வெண்கல கரண்டிகள், மர கரண்டிகள், இரும்பு கரண்டிகள்தான் பெரும்பாலும் உபயோகமாக இருந்தது. எவர்சில்வர் மோகம் வராத நாட்கள் அவை. இப்போது காலம் மறுபடி சுழன்று வருகிறது என நினைக்கிறேன்.

    விடுமுறை தினங்களில் காலையில் எப்போதாவது இரண்டாவது காப்பியோடு பிரெட், பிஸ்கட் போன்றவைகள், சமயத்தில் எனக்கு ஒத்துக்காத போது ஒன்றிரண்டு ரஸ்க் எடுத்துக் கொள்வேன். இனி ரஸ்க்கை பார்த்தாலே "மே, மே" சத்தம் வந்து "வேண்டாம் இந்த ரி(ர)ஸ்க்" என சொல்லி (கத்தி) விடும் என்றுதான் தோன்றுகிறது. ஹா. ஹா. ஹா.

    ஊசி இணைப்பு. ஊசிக் குறிப்பு இரண்டையும் ரசித்தேன். எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் மனதையும் ஆண்டவன்தான் அருள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா.. இன்று அங்கு வெளிவரும் எனத் தெரியும், அதிலும் எங்களுக்கு விடுமுறை என்பதாலும், இங்கும் ஒரே நேரம் போட்டால் நல்லதென ரெடியாகி இருந்தேன்.

      நீங்கள் கார்ட் பெட்டியிலேயே இங்கும் வந்திருப்பதால்ல்.. அகப்பை கூட மிஞ்சவில்லையாக்கும் இங்கு:))

      //(அறிந்திராத இதைப்பற்றி வேறு எதுவும் கூறத் தெரியவில்லை. ஹா. ஹா. ஹா.)//

      ஆஹா அப்போ இப்பூடி அசைவ ரெசிப்பிகள் போட்டால்.. பாராட்டுக்கள் குவியும்போல இருக்கே:)) ஹா ஹா ஹா..

      //ரொம்ப பெரிதாக உள்ளதோ.//

      அதுதான் அகப்பை, பானைக்கு பாவிப்பதால் காம்பு பெரிதாக இருக்கும், மற்றது கரண்டி வகை, கறிகளுக்கு நல்லது... பாவிக்கவும் ஈசி...

      உண்மை ஊரிலும் பித்தளைக் கரண்டி இருந்தது, பாரமாக இருக்கும்..

      //இனி ரஸ்க்கை பார்த்தாலே "மே, மே" சத்தம் வந்து//

      ஹா ஹா ஹா அதேதான்.. ரஸ்க்கும் இனிக் கத்தப் போகிறது:)).

      மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  20. அடிச்சி தூள் கிளப்புங்க...!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..

      ஹா ஹா ஹா எதை அடிப்பது முட்டையையோ சிக்கினையோ?:) கரெக்ட்டாச் சொல்லுங்கோ, இல்லை எனில், மாறிக்கீறி அஞ்சுவை அடிச்சிடப் போறேன்ன் ஹா ஹா ஹா நன்றி டிடி.

      Delete
  21. செஃப் அதிரா வாழ்க

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் நன்றி... செஃப் என்றுதான் வைக்க இருந்து தாரகை ஆக்கிட்டேன்:))

      Delete
  22. சமையலெல்லாம் வீட்டம்மாவிடம் கோரிக்கை வைத்துதான் பார்க்கணும். ஆனா இதோ ஆட்டுக்கால் வாங்க கிளம்பிட்டேன் அதிரா....

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    ReplyDelete
  23. ஒரு பெட்டி ஆட்டுக்கால் ரஸ்க் பார்சல் பாரிஸ் பக்கமும் முதலில் அனுப்புங்கோ![[[[

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ வாங்கோ நேசன் வாங்கோ.. சபரிமலை நியூஸில் பார்த்தபோது உங்களை நினைச்சுக் கொண்டேன்.. நீண்ட காலம் காணாமல் போயிட்டீங்களே...

      Delete
  24. சூப் செய்ய ஆசைதான் ஆனால் இவ்வருடம் அடிகம் குளிர் வவில்லை.

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கும் இதுவரை இல்லை, இப்போ பெப்ரவரியிலதான் தொடங்கியிருக்கு. அதிலும் இந்தக்கிழமை ஒரே கல்மழைதான்:).. நன்றி நேசன்... மறக்காமல் அப்பப்ப எட்டிப்பார்க்கிறீங்க.. மகிழ்ச்சி.

      Delete
  25. இந்த சூப் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அதிரா...

    ஆனா நான் செஞ்சது இல்ல..

    ஹோட்டல் ல சாப்பிட்டு இருக்காங்க...

    வாய்ப்பு கிடைச்சா முயற்சிக்கலாம்...☺️☺️..

    உங்க படங்களும் , செய்முறையும் ரொம்ப நல்லா இருக்கு💐💐💐💐

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.