ஆஹா போன கிழமை சமையல் வாரம் எனக் கலக்கியாச்சு:)) போட்டது என்னமோ ரெண்டே ரெண்டுதேன்:)).. இவ்வாரம் “ஃபீலிங்ஸூ வாரம்” ஆகப் பிரகரணப் படுத்தப் படுகிறது:))..
நிறைய விஷயங்கள் எழுத இருக்குது, ஆனா கால நேரம் அமைவதில்லை.. சரி சரி எனக்குப் பாருங்கோ ஓவரா அலட்டுவது பிடிக்காதாக்கும்:)).. அதனால ஸ்ரெயிட்டா களத்தில குதிக்கிறேன்:))..
நாங்கள் படிக்கும்போது ஹொஸ்டலில் இருந்து படித்தோம், விடுமுறை காலத்தில் ஹொஸ்டலும் மூடப்பட்டுவிடும், சோதனைகள் இருந்தால் மட்டும் திறந்திருப்பார்கள்.
அப்போ விடுமுறையில் ஒருநாள், எங்களுக்கு ரியூசன் வகுப்புக்கள் இருந்தது, அதனால அருகில் இருந்த லேடீஸ் ஹொஸ்டலில் இருந்து போகலாம் என ஐடியாவை உருவாக்கி நானும் என் நண்பியும், எங்கள் அப்பா மூலம், தெரிந்த ஒருவரூடாக அங்கு இடம் கிடைத்தது. அங்கிருப்போர் வேலைக்கு மற்றும் யுனிவசிட்டியில்/கொலீஜ் இல் படிப்போர் மட்டுமே. அங்கு போய் அவர்களோடு சேர்ந்திருப்பது எமக்கு கொஞ்சம் தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது, நாம் தான் அங்கு சின்னவர்கள் அந்நேரம்.
ஒரு றூமில் 4 கட்டில்கள் இருந்தன, அதில் இரு அக்காமார்கள் யூனியில் படிப்போர் இருந்தார்கள், அந்த அறையை நமக்கு தந்தார்கள், அவர்களைப் பார்க்கவே முதலில் கொஞ்சம் பயமாக, பேச தயக்கமாக இருந்தது, பெரியாட்கள் எல்லோ, அவர்களுக்கு நம்மைப் பிடிக்குமோ எனும் தயக்கம்.
அவர்கள் இருவரும் முஸ்லிம் அக்காக்கள். ஒருவரின் பெயர் “நிஷா”, மற்றவ “மரியம் பீவி”. இதில் நிஷா அக்கா கொஞ்சம் அழவோடுதான் பேசினா, ஆனா மரியம் அக்கா நன்கு பேசத் தொடங்கிட்டா.
யூனி முடிஞ்சு ஈவினிங் வரும்போது எமக்கென ஏதும் சுவீட்ஸ் வாங்கி வந்து தருவா மரியம் அக்கா, அவவும் 4ம் நம்பர் என்பதாலோ என்னமோ என்னோடு நன்கு நெருங்கிப் பழகத்தொடங்கிட்டா, மிகவும் அன்பாக ஆசையாக என்னோடு பேசிக்கொண்டிருப்பா. என்னைக் கூப்பிட்டு தன் கட்டிலில் அருகில் இருக்கச் சொல்லிவிட்டுக் கதைத்துக் கொண்டிருப்பா, என் நண்பியும் நிஷா அக்காவைப்போலத்தான், அதாவது அதிகம் பேச மாட்டா[என்னைத்தவிர எவரோடும்], அதனால நானும் மரியம் அக்காவும் நன்கு ஒட்டி விட்டோம்.
நாங்கள் இருந்த அந்த அறை, மேல் மாடியில் இருந்தது, அதற்கொரு பல்கனியும் உண்டு, இரவு நேரத்தில் மரியம் அக்காவும் நானும், அந்த நிலா வெளிச்சம் படும்போது அங்கிருந்து அலட்டிகொண்டே இருப்போம்..
அப்படி ஒருநாள் கதைத்துக் கொண்டிருந்தபோது, இரவு இலங்கை வானொலி நிகழ்ச்சியில் 9 மணி நியூஸ் முடிஞ்சதும் போடும் நிகழ்ச்சி என நினைக்கிறேன், அதில் ஒரு பாடல் எங்கிருந்தோ வான் அலையில் தவழ்ந்து வந்து நம் காதில் விழுந்தது....
“வெண்ணிலா வானத்திலே நீயும் நானும்
மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்”...
இப்படித்தான் என் மனதில் பதிந்திருந்தது இந்த வசனம், எனக்கு அன்று ஒரு மறக்க முடியாத மாலைப்பொழுதாக இருந்தது, சிட்டுவேஷன் சோங்:) நமக்காகவே போட்டதுபோல ஃபீல் பண்ணினேன், பாடல் நினைவிலில்லை, படமும் தெரியாது, ஆனால் இந்த வசனத்தை வைத்து தேடிக் கொண்டே இருந்தேன், சமீபத்தில் எதேச்சையாக ஸ்ரீராம், இப்பாடலை பகிர்ந்திருந்தார்.. அப்படியே ஷாக்ட் ஆகி:)).. பழைய நினைவுக்குள் மூழ்கி விட்டேன்.
பாடலுக்கான லிங்
https://www.youtube.com/watch?v=hKMvzf1b4rA&feature=emb_logo
பாடலுக்கான லிங்
https://www.youtube.com/watch?v=hKMvzf1b4rA&feature=emb_logo
அதன் உண்மையான வரிகள் இவைதான்..
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
தங்கள் கம்பஸ் ஃபிர்ண்ட்ஸ் அண்ணாக்களை எல்லாம் எமக்கும் அறிமுகம் செய்தார்கள்.. மொத்தத்தில் நம்மை ஒரு குழந்தைபோல பார்த்துக் கொண்டார்கள், நாம் இப்படி ஆகுமென எதிர்பார்க்கவே இல்லை.
இத்தனையும் நடந்தது ஒரு இருபது நாள்கள்தான் இருக்குமென நினைக்கிறேன், நம் ரியூசன் முடிஞ்சு வீட்டுக்குப் போகும் நாள் வந்தது, போய் விட்டால் பின்பு இவர்களை நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் இருக்காதெல்லோ, வெளியே வந்து நாம் அவர்களைச் சந்திக்கும் அளவு தைரியம் நமக்கில்லை, எங்கு போவதாயினும் அப்பா அம்மாவோடுதான். மொபைல் இல்லை, கடிதம் மட்டுமே போடலாம்.. மிகவும் கவலையாக இருந்தது...
அன்று பின்னேரம் அப்பா வந்து கூட்டிப் போகப் போகிறார்ர், காலை எழும்பியதிலிருந்து மரியம் அக்கா என்னோடு பேசவே இல்லை, என் முகம் பார்ப்பதையே தவிர்த்தா, எனக்கு ஏன் எனப் புரியவில்லை, மிகவும் கவலையாக இருந்தது..
மத்தியானம் என் பொருட்களை எல்லாம் அடுக்கி விட்டு, என்னிடம் இருந்த ஓட்டோகிராஃபை எடுத்துச் சென்று, “மரியம் அக்கா சைன் பண்ணித்தாங்கோ” என்றேன்.
நான் எதிர்பார்க்கவே இல்லை, என்னை அப்படியே எட்டிக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவென அழத் தொடங்கி விட்டா, எனக்கும் கவலைதானே நானும் சேர்ந்து அழுதேன், ஆனா மரியம் அக்கா அழுத அழுகையை ஆராலும் சமாதானம் பண்ண முடியாமல் போய் விட்டது, விக்கி விக்கி அழத் தொடங்கிட்டா, நிஷா அக்காவும் என் நண்பியும் திகைத்துப் போய் நின்றனர்.
பின்னர் என் முகம் பார்க்கவே இல்லை அவ, பார்த்தால் அழுதிடுவா என்பதைப்போல தலையைக் குனிஞ்சபடி தன் விலாசத்தையும் எழுதி சைன் பண்ணித் தந்தா, நான் வெளிக்கிட்டு வந்தபோதுகூட அவ என் முகம் பார்க்கவுமில்லை என்னோடு ஒரு வார்த்தை பேசவுமில்லை, நான் பிரியாவிடை சொல்லி விட்டு வந்தேன். எனக்கும் நெஞ்செல்லாம் அடைச்சு மிகவும் வேதனையாக இருந்தது.
ஆனா நம் நாட்டுக் காலக் கொடுமை, அந்த விடுமுறை காலத்திலேயே மீண்டும் கலவரம் நிகழ்ந்தமையால், முஸ்லிம் பிள்ளைகள் எல்லாம் தம் ஊருக்கே போய் விட்டனர், இந்த அக்காக்களும் போயிருப்பார்கள்.. நான் மெயில் போட்டேன் ஆனா பதில் வரவே இல்லை:(
|
Tweet |
|
|||
[im]https://media1.giphy.com/media/EsHsAdozNw2jK/giphy.gif[/im]
ReplyDeleteஆஹா ஜெரி எக்ஸசைஸ் பண்ணுதோ?:) குண்டாகிட்டுதோ?:).. வாங்கோ அஞ்சு வாங்கோ.. நீங்களும் இதனைத் தொடரோணும்.. ஃபீலிங்ஸூ வாரம்:))
Deleteபாவம், தலை சுற்றாதோ!
Deleteஜெரிக்கா :) இல்லை அது 4 பேருக்கு தலை சுத்தி வைக்கும் :)
Deleteதலை சுற்றுவதாலதான் அடிக்கடி ஹைபனேற் ஆகிவிடுகிறார் போலும்.. நான் ஜெரிக்குச் சொன்னேன்:))
Delete//அழவோடுதான் பேசினா, //
ReplyDeleteஅளவோடு
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா:))
Delete//பிரகரணப் படுத்தப் படுகிறது:))..//
Deleteபிரகடனப்படுத்தப்படுகிறது
நானும் முன்னால தவறுகளைச் சுட்டிக்காட்டுவேன். அப்புறம் இதுவும் ஒருவகை பேசும் மொழியைத் தமிழில் எழுதும் முயற்சிதானே, அதைக் குறை சொல்லக்கூடாது என்று இருந்திடுவேன்.
Deleteஆனால், டமிள்ல டி அல்லோ என்று அலட்டினாங்கன்னா அந்த இடுகைல உள்ள தவறுகளை எழுதுவேன் ஹா ஹா ஹா
ஹாஹா :) அது ரொம்ப நாள் கழிச்சி இன்னிக்கு வரிக்கு வரி படிச்சதில் மாட்டிக்கிச்சு டீ குடிச்ச பூஸ் :)பிரகரணம் ..கொஞ்சம் ரணமா இருந்ததால் சுட்டி காட்டினேன்
Delete//பிரகடனப்படுத்தப்படுகிறது//
Deleteஆவ்வ்வ் அஞ்சு இந்தச் சொல் உண்மையில் எனக்கு நாக்குத் தடக்கியது, சத்தமாகக் கூடச் சொல்லிப்பார்த்த பின்பே எழுதினேன் ஹா ஹா ஹா.. இப்பகூட சொல்ல வருகுதில்லை கர்ர்ர்ர்:))..
//மாட்டிக்கிச்சு டீ குடிச்ச பூஸ் :)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்போதெல்லாம் தேம்ஸ் கரையில டீக் குளிப்பதில்லை:)) காசிக்குத்தான் ஓடுறேனாக்கும்:))
//நெல்லைத்தமிழன்Wednesday, February 19, 2020 3:09:00 pm
Deleteநானும் முன்னால தவறுகளைச் சுட்டிக்காட்டுவேன். அப்புறம் இதுவும் ஒருவகை பேசும் மொழியைத் தமிழில் எழுதும் முயற்சிதானே, அதைக் குறை சொல்லக்கூடாது என்று இருந்திடுவேன்.//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நெல்லைத்தமிழன் உங்கள் முடிவு டப்பானது:)).. அதாவது தமிழில் பிழை மற்றும் எழுத்துப் பிழை எனில் அது பிழைதானே.. அதைச் சுட்டிக் காட்ட்டினால்தானே என் போன்ற சுவீட் 16 பிள்ளைகள் திருந்துவினம்:)) பாருங்கோ இப்போ நான் ள ழ வில எவ்ளோ முன்னேறிட்டேன் எல்லாம் உங்கள் எல்லோரின் இருட்டடிதான் காரணம் ஹா ஹா ஹா:))..
ஆனாப் பாருங்கோ.. நீங்கள் அடிச்சுச் சொன்னாலும் கட்டி அடிச்சாலும் நான் ஆங்கிலத்தை மட்டும் என் பாசையிலதான் எழுதுவேனாக்கும்:)) அதில மட்டும் அடங்கவே மாட்டேன் ஹா ஹா ஹா ஏன் தெரியுமோ.. அது அப்படி ஒரு மொழியாக்கம் இல்லை என்பதனால.. coffee எனில் நான் கொஃபி எனச் சொல்லுவேன் நீங்க இல்லை காபி எனத்தான் சொல்லோணும் எனில் .. எனக்கது வராது.. இதுபோல சொற்களில் நான் ஜண்டைதான் பிடிப்பேன் அது டப்போ?:))..
//ஆனால், டமிள்ல டி அல்லோ என்று அலட்டினாங்கன்னா அந்த இடுகைல உள்ள தவறுகளை எழுதுவேன் ஹா ஹா ஹா//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீ ஆரு?:) மண்ணுண்ணி அதிராவாக்கும்:)) எவ்ளோ அடிச்சாலும் எழும்பி வருவேன்:)) அதனால பயந்திடாதீங்கோ:))
என் அலுவலகத்தில் ஒருவர் 'ள' எல்லாம் 'ழ' என்றே பேசுவார். கரைக்குடிக்காரர். அவர் ஞாபகம் வருகிறது.
DeleteAngel Wednesday, February 19, 2020 2:51:00 pm
Delete//பிரகரணப் படுத்தப் படுகிறது:))..//
பிரகடனப்படுத்தப்படுகிறது
-=-=-=-=-=-=-
தவறைத்
தவறெனத்
தவறாமல்
இங்கு பொதுவெளியில்
பிரகடனப் ப-டு-த்-தி-யுள்ள
தேவதைக்கு
என் மனமார்ந்த பாராட்டுகள். :)
//ஸ்ரீராம்.Wednesday, February 19, 2020 11:40:00 pm
Deleteஎன் அலுவலகத்தில் ஒருவர் 'ள' எல்லாம் 'ழ' என்றே பேசுவார். கரைக்குடிக்காரர். அவர் ஞாபகம் வருகிறது.//
அதெப்படி ஸ்ரீராம், இந்த ள ழ வில் பேசும்போது வித்தியாசம் தெரிகிறது? எனக்கு சத்தியமாக இரண்டும் ஒன்றாகவே கேட்கும் காதில் ஹா ஹா ஹா, ஆனா ழ/ள வரவேண்டிய இடத்தில் ஆராவது ல போட்டால் மட்டும் சகிக்கவே முடியாமலிருக்கும்.. அது நிறைய வித்தியாசமெல்லோ:)).. முக்கியமாக இப்போதைய சில சினிமாப் பாடல்களில் இது தெரிகிறது..
வை.கோபாலகிருஷ்ணன்
Delete//தவறைத்
தவறெனத்
தவறாமல்
இங்கு பொதுவெளியில்
பிரகடனப் ப-டு-த்-தி-யுள்ள
தேவதைக்கு
என் மனமார்ந்த பாராட்டுகள். :)//
ஆஆஆஆஆஆஆ இதென்ன இது இருந்தாற்போல காற்று கிழக்காலே வீசுதே:)) இது நல்லதுக்கில்லை.. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே:)).. அஞ்சூஊஊஊஊஊ கொமெண்ட் பார்த்து மயங்கிடாதீங்கோ:)) சொன்னாக் கேளுங்கோ.. எதுக்கோ ஐஸூ வைக்கிறார் கோபு அண்ணன்:))..
----------------------------------
ம்ஹூம்ம்ம் இப்பூடி எதையாவது ஜொள்ளி முளையிலேயே கிள்ளி விட்டிடோணும்:)) இல்லை எனில் கூட்டுச் சேர்ந்திட்டால் எனக்கெல்லோ ஆப்பு:)).. ஹா ஹா ஹா பூஸோ கொக்கோ:))
ஹாஹா :) தேங்க்ஸ் கோபு அண்ணா .
Deleteஊசிகுறிப்பில் ஒன்றும் இணைக்கலாம் சிலர் நம்மிடம் பாடம் கற்கவும் வந்திருப்பார்கள்
ReplyDeleteஅது உண்மைதான் அஞ்சு, ஆனா அப்பூடி நம்மிடம் என்னதான் இருக்கிறது மற்றவர்கள் கற்றுக்கொள்ள:)) ஹா ஹா ஹா..
Deleteநம்மிடம் என்னதான் இருக்கு கற்றுக்கொள்ள? - சரியா பொரிக்கத் தெரியலைனா, நீமே சமையலறைக்குள் சென்று சிவப்பா கறுத்துவிடாமல் பொரித்துத் தருவது, எப்படி எல்லாம் சமையல் செய்யக்கூடாது என கற்றுக்கொள்வது என்று நிறைய இருக்கல்லோ
Deleteஹாயையோ :) அதாவது மியாவ் எங்காச்சும் நீங்க வாய் //உங்க மொழில பொல்லு குடுத்து மாட்டியிருப்பிங்க அதை பார்த்து நான் ஆஹா தப்பிச்சோம் இது ஒரு பாடம்னு கத்துக்கறதும் கூட சொல்லலாமே :))
Delete//எப்படி எல்லாம் சமையல் செய்யக்கூடாது என கற்றுக்கொள்வது என்று நிறைய இருக்கல்லோ//
Deleteஆவ்வ்வ்வ் நெ.தமிழன் இதை நான் மறந்திட்டனே:)) நல்லவேளை சுட்டிக் காட்டிப்போட்டீங்க:) உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு:)) ஹா ஹா ஹா நன்றி நன்றி:))... எனக்கொரு நேயர்கூட இருக்கிறா பிரித்தானியாவில்.. அவவின் நேயர் விருப்ப ரெசிப்பி விரைவில் வெளிவருமாக்கும்:)).. அப்போ நீங்கள் எல்லோரும் மூக்கில விரல் வச்சு நிற்கப்போறீங்கள்:))
//உங்க மொழில பொல்லு குடுத்து மாட்டியிருப்பிங்க அதை பார்த்து நான் ஆஹா தப்பிச்சோம் இது ஒரு பாடம்னு கத்துக்கறதும் கூட சொல்லலாமே :))//
Deleteஆஹா இது வேற நடக்குதோ?:))..இது தெரியாமல் போச்சே.. இனிமேல் உங்களுக்கும் அடி விழும்வரை நான் வலிக்காதமாதிரியே நடிக்கப் போறேன் ஹா ஹா ஹா பூஸோ கொக்கோ:)))
நம்மிடம் பாடம் கற்றுக்கொண்டவர்கள் இருப்பர்கள்தான். ஆனால் அதை நமக்குத் தெரியாமல் வைத்துக்கொள்வார்கள்!
Deleteஉண்மைதான் ஸ்ரீராம் :)
Deleteஆங்ங்ங் இதுவும் உண்மைதான் ஸ்ரீராம்ம்ம்.. இப்பொழுது சொல்லட்டோ, என்னில ஒரு குணம் இருக்குது, நான் ஆருடன் அதிகம் சேர்ந்து பழகுகிறேனோ.. அவர்கள் குணம் எனக்கு வந்திடும்:))) அல்லது என்னை அப்படி மாற்றிக் கொள்வேன் என்றுகூடச் சொல்லலாம்:))...
Deleteஸ்ரீராம் சில விசயங்களுக்குப் பதில் போட மாட்டார், கேள்விகேட்டால்கூட அமைதியாகப் போயிடுவார், அதுவும் சிலசமயம் நல்லவிசயம்தான் என, இப்போ நானும் அப்படி இருக்கப் பழகுகிறேன்:)).
அஞ்சுவைப் பார்த்தும் ஒரு விஷயம் கற்றுக் கொண்டேன் ஆனா அதை அஞ்சுவிடம் சொல்லியிருக்கிறேன், பப்பூஊளிக்கில் சொன்னால் என்னை தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவா:)) எனக்கு உசிறு முக்கியம்:)) ஹா ஹா ஹா.
நெல்லைத்தமிழனைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவில்லை, ஆனா அவர் சொன்ன ஒரு விசயம் எனக்கு டெய்லி மனதில வந்து போகும்... அது உண்மைதான் என நினைச்சு இப்போ நிறையக் கிளீன் பண்ணுகிறேன்:))..
“ஒரு பொருள் ஒரு வருடமாக உபயோகிக்காமல் வீட்டில் இருந்தால், அதை வீசிடுங்கோ”...
ஹா ஹா ஹா என்னிடம் 10 வருடங்களாகக்கூட சிலது உபயோகிக்காமல் வைத்திருக்கிறேன்... ஆனா இந்தப் பழக்கம் எங்கள் வீட்டில் எல்லோரிடமும் இருக்கு.. ஆஆஆஆஅ அதை எறிஞ்சிடாதீங்கோ.. ஆஆஆஆஅ இதை எறிஞ்சிடாதீங்கோ பின்னர் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்பார்கள்.. பின்பு அப்படியே இருக்கும்.. ஹா ஹா ஹா..
//பப்பூஊளிக்கில் சொன்னால் என்னை தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவா:)) எனக்கு உசிறு முக்கியம்:)) ஹா ஹா ஹா.//
Deleteஅந்த பயம் எப்பவும் இருக்கணும் :))))))))))))))))))))) சொல்லிட்டேன்
அதிரா.... சொல்வது எளிது. கடைபிடிப்பது கடினம். எதையும் நான் சட் எனத் தூரப்போட மாட்டேன். என் பசங்க சின்ன வயது யூனிபார்ம், என்று எத்தனையோ. சில பொருட்கள் என்னிடம் பலப்பல வருடங்களா இருக்கு.
Deleteஆனா நாம் அதன் மீது வைத்திருக்கும் மதிப்பு பிறருக்கு அவற்றின்மீது இருக்காது.
தமிழில் எழுதும் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன் —
Deleteறவ்வை - ரவை,
றூம் - ரூம்
அழகு, பழகு.. ழ தமிழின் சிறப்பு. அளவு- measurement அளவோடு பழகினார்கள்
நீங்க கவலை என்பதை நாங்க worries என்ற அர்த்தத்தில் உபயோகிப்போம். சோதனை - கஷ்டங்கள் என்ற அர்த்தம் எங்களுக்கு. சோதனைமேல் சோதனை போதுமடா சாமீ பாடல். Exam பரீட்சை. அதனை சோதனை என்று சொல்றீங்க. Laboratory ஐ நாங்க பரிசோதனைச் சாலை என்போம்.
//நெல்லைத்தமிழன்Saturday, February 22, 2020 12:52:00 pm
Deleteஅதிரா.... சொல்வது எளிது. கடைபிடிப்பது கடினம்.//
100 வீதம் உண்மை, ஆனாலும் இப்போ நான் சிலதை உடனுக்குடனேயே எறிஞ்சு போடுவேன், கொஞ்ச நாள் வைத்திருந்தால் எறிய மனம் வருகுதில்லை.. இவ்ளோ நாள் வச்சிருந்திட்டோமாம்ம் இப்போ போய் எதுக்கு சும்மா எறியோணும்.. இருக்கட்டுமே என மனம் சொல்லுது ஹா ஹா ஹா...
//அழகு, பழகு.. ழ தமிழின் சிறப்பு. அளவு- measurement அளவோடு பழகினார்கள்//
Deleteஓ நன்றி நெ தமிழன்.. இதனை இனி மனதில் பதிச்சு வைக்கிறேன், அது சின்ன வயசிலிருந்தே இப்படியே பழகி விட்டேன் என்பதால, எழுதும்பொது கடகடவென ரைப் பண்ணி விடுகிறேன்.. சந்தேகமே வராமல்.. நான் கார் ஓடும்போது, கண் சரியாக பார்க்கும், ரெட் லைட் இல் எல்லாம் கால் தானாக பிரேக் பிடிக்கும், போகுமிடத்துக்கு கை சிக்னல் போட்டு திரும்பும்.. எல்லாம் பேஃபெக்ட் ஆக நடக்கும், ஆனா மனம் எங்கோ நிற்கும், சத்தியமாக காரைப் பார்க் பண்ணும்போது பலதடவைகள் திடுக்கிட்டிருக்கிறேன் எப்படி வந்தேன் என, ஏனெனில் மனம் எங்கெங்கோ சுத்திக் கொண்டிருந்திருக்கும் கற்பனையில் ஹா ஹா ஹா..
அப்படித்தான் எழுதும்போதும், மூளை சொல்வதை கை ஸ்பீட்டா ரைப் பண்ணுது, அப்போது எழுத்தையும் தான் பழகியபடி அடிச்சுவிடுகிறது, அருமையாகத்தான் டவுட் வந்து திருத்துகிறேன் ஹா ஹா ஹா
//றவ்வை - ரவை,
Deleteறூம் - ரூம்//
ஹா ஹா ஹா இது என்ன தெரியுமோ நெ தமிழன், இதுபற்றி போஸ்ட்டில் எழுதினால் நல்லது என நினைக்கிறேன்ன்.. அதனால போஸ்ட்டில் எழுதிச் சொல்கிறேன் இதுபற்றி:)
//நீங்க கவலை என்பதை நாங்க worries என்ற அர்த்தத்தில் உபயோகிப்போம். ///
Deleteஅதே அர்த்தம் தான் நெல்லைத்தமிழன் நாங்களும் சொல்வது.. கவலையாக இருக்கிறது என்போம்... கஸ்டமாக இருக்கிறது என்றும் சொல்வோம், இரு வார்த்தைகளையும் உபயோகிப்போம்.
///சோதனை - கஷ்டங்கள் என்ற அர்த்தம் எங்களுக்கு. சோதனைமேல் சோதனை போதுமடா சாமீ பாடல். Exam பரீட்சை. அதனை சோதனை என்று சொல்றீங்க. ///
ஆஆஆ ஓம் இது எங்கட பேச்சு வார்த்தை நெ.தமிழன், அதாவது இப்போ ஒரு எக்ஸாம் எழுதுகிறோம் எனில் சரியான வார்த்தையை உபயோகிப்போம், ஆனா பேசும்போது எக்ஸாம் வருகிறது எனில், சோதனை வருகிறது.. எப்போ பிள்ளைக்கு சோதனை தொடங்குகிறது? இப்படிப் பேசுவோம்ம்.. ஒருவேளை எக்ஸாம் என்பது கஸ்டமானது என்பதனால சோதனை என்போமோ ஹா ஹா ஹா ஆனா அது பேச்சு வார்த்தைதான்... பரீட்சை என்ற சொல்லை உபயோகப்படுத்துவது குறைவு என்றே நினைக்கிறேன், ஏனெனில் அது சரியான தமிழில் உச்சரிப்பதைப்போல ஃபீல் ஆகுமோ என்னமோ.. அதாவது பஸ் எனக் கேட்காமல் பேரூந்து எப்போ வரும் எனக் கேட்டால் உறவுக்குள் சிரிப்பினமெல்லோ? அப்படி...
///Laboratory ஐ நாங்க பரிசோதனைச் சாலை என்போம்.//
அதேதான் நாங்களும்.. விபரமாக கொஞ்சம் சொற்கள் யோசிச்சு போஸ்ட்டாக போடுகிறேன்.. நன்றி நெ தமிழன் .
அருமையாகத்தான் - இதுக்கு உங்க அர்த்தம் rare ஆக. ஆனா நாங்க அருமை என்பதை excellent என்ற அர்த்தத்தில் உபயோகிப்போம். அரிது - rare இன்னொரு வார்த்தை.. எப்பவாச்சும்
Delete20 நாளில் இத்தனை அட்டாச்மண்ட் உருவாகிடுச்சே .எனக்கும் பீலிங்ஸ் ஆஅ இருக்கு .அந்த மரியம் அக்கா படித்த கல்லூரி க்ரூப் fb யில் இருக்கானு பாருங்க சிலவேளை கிடைக்கலாம்
ReplyDeleteநான் எல்லோரோடும் எடுத்தேன் கவிழ்த்தேன் என ஒட்டமாட்டேன் அஞ்சு, ஆனா ஒட்டிவிட்டால் பயங்கர ஃபீலிங்ஸ்சோடும் அன்பாகவும் இருப்பேன்.. அப்படித்தான் இந்த மரியம் அக்கா, அன்பைத் தந்து அன்பைப் பெற்றுக் கொண்டா.. பயந்து பயந்து போனோம் ஆனா எவ்ளோ அன்பு கிடைத்தது திரும்பி வரும்போது.
Deleteபேஸ் புக்கில் சரியான பெயர் இல்லாமல் தேடுவது கஸ்டமெல்லோ அஞ்சு.. நான் இதுவரை முயற்சித்திருக்கிறேனோ நினைவில்லை.
நானும் சில நண்பர்களை பேஸ்புக்கில் தேடி ஏமாந்திருக்கிறேன். பள்ளிக்கால நண்பர்களாயிருப்பார்கள். அவர்கள் முகம் இப்போது மாறியுமிருக்கும்!
Delete//அவர்கள் முகம் இப்போது மாறியுமிருக்கும்!//
Deleteஸ்ரீராம், நான் ஊரில் தூக்காத குழந்தைகளே இல்லை எனலாம்:)) அயலட்டையில் அனைத்துக் குழந்தைகளையும், விடுமுறையில் ஊருக்குப் போவோம்.. அப்போ நான் தான் பகலில் வளர்ப்பேன்ன்.. தூக்குவது மட்டுமில்லை, காலையில் கொண்டு வந்து உடுப்புக்களோடு தருவார்கள், குழந்தையும் என்னைக் கண்டால் தாவிப்பாய்ந்து வரும்.. நான் முகம் கழுவி மேக்கப் பண்ணி[எனக்கு எப்பவும் நீற்றா மேக்கப்பண்ணி வைத்திருப்பதே பிடிக்கும்], தூக்கித் திரிஞ்சு நித்திரையாக்கி, கனநேரம் விடாமல் தட்டி எழுப்பிடுவேன் ஏனெனில் எனக்கு போரடிக்கும்:)) ஹா ஹா ஹா சத்தியமாக இவை உண்மை, பின்பு சாப்பாடு தீத்தி துக்கியபடி திரிவேன்... நானே அப்போ குழந்தைதான்[10,12 வயசுக்காலம்]
அப்படி வளர்ந்த ஒரு குழந்தை, திருமணமாகி ஜேர்மனி போய் விட்டா, போனதடவை நாங்கள் கனடாவில் நின்றபோது அவவும் அங்கு வந்திருக்கிறா, நாம் போன அன்றோ என்னவோ திரும்பி விட்டனர் ஜேர்மனிக்கு, [ஊரில் பக்கத்து வீட்டுக்காரர், தூரத்துச் சொந்தமாக வரும் என நினைக்கிறேன், அதனால - கதை போன் பேச்சுத் தொடர்பில்லை]... அவர்களை எங்கோ ஒரு மோலில் சந்தித்த இடத்தில் எங்கட அண்ணி படமெடுத்து வந்து, எனக்கு காட்டிக் கேட்டா, “இதாரது.. சொல்லுங்கோ சொல்லுங்கோ உங்களுக்கு நன்கு தெரிஞ்சவ, நல்லா யோசியுங்கோ” என.. என்னால கண்டு பிடிக்கவே முடியவில்லை, அப்படியே மாறியிருந்தா:))..
சில பாடல்கள் நினைவுகளை எங்கோ கொண்டுபோயிடும் அப்படி உங்களுக்கு இந்த பாடல்எ வந்திருக்கு .நான் பெரிசா பாடல் ரசிகையில்லை :) மூசிக் கேட்பேன்
ReplyDeleteஇப்படிப் பல பாடல்களில் பல கதைகள்[சம்பவங்கள் இருக்குதஞ்சு என்னிடம்] ஒரு நாளைக்கு தொகுப்பாகப் பொடோணும் என பல வருடமாக நினைச்சுக் கொண்டே இருக்கிறேஎன்.
Deleteநான் மியூசிக்குகோ அல்லது குரலுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை, வரிகளுக்கே கொடுப்பேன்... அதனாலேயே கண்ணதாசன் அங்கிள் எனக்கு காவியமாகிட்டார்ர்:)).. ஆனால் தேடிப் பார்த்தால், சிலரது குரல்கள் எனக்குப் பிடிச்ச பாடல்களில் வந்திருக்குது.
ஆம், சில பாடல்கள் என்ன, நிறைய பாடல்கள் என்னை அந்தப் பாடலை முதலில் அல்லது அடிக்கடி கேட்ட இடத்துக்கே கொண்டுசென்று விடும். நான் அடிக்கடி உதாரணமாகச் சொல்லும் பாடல் "மாமரத் தோப்புல பூமழை தூவுது... அலையோரம்... சில்லுனு காத்தடிச்சா..." என்ன பாடல் சொல்லுங்க பார்ப்போம்!
Delete//மாமரத் தோப்புல பூமழை தூவுது... அலையோரம்... சில்லுனு காத்தடிச்சா...
Deleteஎன்ன பாடல் சொல்லுங்க பார்ப்போம்!//
தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லையே:))
பொதுவா 4 ஆம் எண் இல் பிறந்தவர்கள் ரொம்ப அட்டாச்ட் இமோஷனல் டைப் :) நெருங்கி பழகினா பிரிய கஷ்டம் இது 90% பொருந்திய உண்மை .
ReplyDeleteஅனுபவம் பேசுது:)..
Deleteநன்றி அஞ்சு அனைத்துக்கும்.
நான் இப்படி எல்லாம் பிறந்த எண் பார்த்து யோசித்ததே இல்லை!
Deleteநாங்க கூடத்தான் பழகி பார்த்த பிறகே நம்பர் 4 என்பதை அறிந்தோம் :)
Deleteஎனக்கு சின்ன வயதிலிருந்தே கொஞ்சம் இப்படி நம்பர் சாஸ்திரம் பார்க்கும் பழக்கம் இருக்குது ஸ்ரீராம்..
Deleteபழகியபின் பார்த்தால் புரியும்.. ஆகா நம்பர் பொருத்தம் தான் இப்படி நெருங்கிப் பழக வைக்குது என... சிலபேர் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் நமக்கு ஒட்ட மனம் வராது, பிடிக்காததுபோல இருக்கும்,,,
அப்போ நம்பரைக் கேட்டுப் பாருங்கோ.. பொருந்தாத நம்பராக இருக்கும் வாய்ப்பு அதிகம்...
சிவர் சட்டென நம் மனதில் ஒட்டி விடுவார்கள். இதற்கு காரணம் சொல்ல இயலாது.
ReplyDeleteவாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. மிகவும் அடக்க ஒடுக்கமாக சொல்லிட்டுப் போயிட்டீங்க ஹா ஹா ஹா.. உண்மைதான். நன்றி.
Deleteமரியம் மற்றும் அந்த அன்பு - மனதைக் கவர்ந்தது. ஆயிரம் பேர்களைக் கடந்து வந்தாலும் ஒருசிலர்தாம் நம் மனதைக் கவர்ந்த நண்பர்களாக இருப்பார்கள். அது முன் ஜென்மத் தொடர்பாக இருக்கலாம்.
ReplyDeleteவாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ... இருக்கும் எத்தனையோ பேர்களை வாழ்க்கையில் சந்திக்கிறோம் ஆன சிலபேர் மட்டும் மனதில பதிந்து விடுகிறார்கள்.. ஆனா என்னைப்போல மரியம் அக்காவும், இப்பவும் என்னை நினைவில் வைத்திருக்கிறாவோ என்னவோ தெரியவில்லையே...
Deleteநெல்லைத்தமிழன்
Delete//ஆயிரம் பேர்களைக் கடந்து வந்தாலும் ஒருசிலர்தாம் நம் மனதைக் கவர்ந்த நண்பர்களாக இருப்பார்கள். அது முன் ஜென்மத் தொடர்பாக இருக்கலாம்.//
ஆஹா .... நான் சொல்லவந்த இந்தப் பேருண்மையைத் தங்கள் எழுத்துக்களில் படித்ததும் அப்படியே நான் மெல்ட் ஆகி விட்டேன், ஸ்வாமீ. !!!!
ஆஆஆஆஆஆஆஆ நெலைத்தமிழன் ஸ்வாமீஈஈஈஈ[கோபு அண்ணன் முறையில ஜொன்னேன்:)] ஒடி வந்து கோபு அண்ணனைத்தூக்கி ஃபிரிஜ்ஜில வையுங்கோ மெல்ட் ஆகிறாராமே:))..
Deleteஹா ஹா ஹா வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. நன்றி.
கோபு சார்... அதிரா தளத்துல அவங்க பாஷைல, ஷொக்ட் தானே ஆகணும். அதுக்கு பதிலா உருகியதன் காரணமென்ன?
Deleteஹா ஹா ஹா கோபு அண்ணனுக்கும் ஃபீலிங்ஸ்ஸு வந்திட்டுதாம் அதுதான் உருகிட்டார்ர்:))
Deleteமதம் பார்க்காத தன்மை, பிறகு அரசியலில் மதம் கலந்தது.... இவை மனதை என்னவோ செய்கின்றன
ReplyDeleteமண்டே இப்படி ஒரு சம்பவம் எனக்கு நடந்தது விரைவில் வரும் மனநல தொடரில் ..
Deleteஉண்மைதான் அதுவும் பள்ளிக் காலத்தில் மதப்பிரிவு என்றாலே என்னவென்று தெரியாமல் பழகுவோம்.. அப்படி இருக்கையில் பிரச்சனை வரும்போது எவ்வளவு கஸ்டமாக இருக்கும்.
Deleteஇந்த சிச்சுவேஷனுக்கு எனக்கு "அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா?" பாடல் நினைவுக்கு வருகிறது!
Deleteஆட்டோகிராப் வாங்கினீங்களே... பத்திரமா இருக்கா?
ReplyDeleteஇன்று ஐபேடில் இண்ட்லி விளம்பரம் வராத்தால் அதிலிருந்து பின்னூட்டம் இடுகிறேன்.
வாங்கினேன் நெ தமிழன், ஆனா கொடுமை என்னவெனில் நன் சொன்னேனே எங்கள் வீட்டில் எதையும் நாம் எடுக்காமலேயே வெளியேறி விட்ட்டோம் என அதில் தொலைந்து விட்டது, அதன் பின்னர் பாவித்த ஓட்டோகிராஃப் மட்டும் இருக்க்குது.
Deleteஓ விக்கிரமாதித்தன் போல விடா முயற்சி பண்ணி வெற்றி கண்டிருக்கிறீங்க நன்றி நன்றி... அதாவது ஐபாட்டில் கொமெண்ட் போட முடியாது எனும் முடிவோடயே இருக்காமல், ட்றை பண்ணியிருக்கிறீங்கள் எனச் சொன்னேன்.
விடுமுறை காலத்தில் ஹாஸ்டல் மேடிடுவாங்க. - அதிரா போன்ற சோதனைகள் வந்தா மீண்டும் திறப்பாங்க. - இதோட அர்த்தம் புரியுதில்ல
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இடையில அதிரா எங்கின வந்தா?:)) அதிராவைப்போட்டதால குழம்பிட்டீங்க:)).. விடுமுறையில் ஹொஸ்டல் மூடப்படும், ஆனா விடுமுறையிலதானே ஓ லெவல், ஏ லெவல் பரீட்சைகள் வரும்.. அப்படியான நேரம் மட்டும் திறந்திருப்பினம் எனச் சொல்ல வந்தேனாக்கும்:))..
Deleteஎக்ஸாம்= பரீட்சை= சோதனை:)) ஹா ஹா ஹா..
நன்றி நெல்லைத்தமிழன் இன்று சுடச்சுட வந்து கொமெண்ட்ஸ் போட்டிட்டீங்கள்.
// அதிரா போன்ற சோதனைகள் வந்தா மீண்டும் திறப்பாங்க. - இதோட அர்த்தம் புரியுதில்ல//
Deleteஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... ”சோதனை மேல் சோதனை .... போதுமடா ஸ்வாமீ .... வேதனைதான் வாழ்க்கையென்றால் .... தாங்காது பூமி ....”
எனக்குப் புரிந்து விட்டது, ’அதிரா போன்ற சோதனைகள்’ என்பதற்கான உண்மையான அர்த்தம். :)
@வை.கோபாலகிருஷ்ணன்
Delete//ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா..
எனக்குப் புரிந்து விட்டது, ’அதிரா போன்ற சோதனைகள்’ என்பதற்கான உண்மையான அர்த்தம். :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
[im] https://66.media.tumblr.com/e355f31173c4f6e9a46c7ce5255d1b39/tumblr_nib5mjO8Ej1rtbmh0o1_500.gif [/im]
வணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteசுவையான பதிவு. படிக்க படிக்க என் கண்களும் குளமாகின. நம் மனதிற்கு ஒருவர் நெருக்கமாகி விட்டால் அவர் பிரிவை எந்நேரமும் நினைத்தபடி இருப்போம். அவருடன் பழகிய சம்பவங்கள் ஏதேனும் இப்போது நினைவுக்கு வந்தாலும் அவரைப் பற்றியும், அந்த சம்பவங்களும் மனதிலே படம் மாதிரி வந்து போகும்.
தாங்களும் அந்த அக்காவிடத்தில் அவ்வளவு அன்போடு பழகியுள்ளீர்கள். பதிவை படிக்கும் போதே என் கண்களும் கலங்கின.
எனக்கும் பழைய பள்ளி சினேகிதிகளின் நினைவுகள் வரும். பின் திருமணமான பின்பு பழகிய தோழிகளின் நினைவகம், இப்போது வீட்டிலுள்ள பொருட்களை பார்க்கும் போது வரும். அவர்களுடன் சென்று இது வாங்கியது என அடிக்கடிச் சொல்லிக் கொள்வேன். அவர்களும் இப்போது எங்கு உள்ளார்கள் எனத் தெரியவில்லை. ஆங்கில படங்களில் காண்பிப்பது போல் பின்னோக்கி திருப்பும் காலச் சுழற்சி கடிகாரங்கள் இருந்தால் நாமும் பின்னோக்கிச் சென்று அவர்களைப் பற்றி அறியலாம்.
ஊசி இணைப்பின் படம் நன்றாக உள்ளது. ஊசிக்குறிப்பின் தத்துவம் மனதை தொட்டது./சில பேர் பாடமாக வந்தவர்கள்./
அருமை... அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ...
Delete//படிக்க படிக்க என் கண்களும் குளமாகின//
ஆஹா நீங்களும் நம்மில் ஒருவர்போல இருக்கே.. எனக்கும் சிலதை படிக்க கண் தானாக கலங்கிவிடும், அதுபோல ஆராவது அழுவதைப்பார்க்க எனக்கு கண்ணால தண்ணி வழியும்... ஆராவது என்னையோ இல்லை என் குடும்பத்தவர்களையோ புகழ்ந்து பேசும்போதும் கண் முட்டிவிடும், இப்படி நேரில் நடக்கும்போது, பல தடவை அதை மறைக்க முடியாமல் எவ்ளோ சங்கடப்படுகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும்.
எனக்குப் பள்ளித்தோழி என ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென ஒரு நண்பிதான், [ஏனைய பலர் இருக்கிறார்கள் ஆனால் தொடர்பில் இல்லை.] நாம் சகோதரம் போல அனைத்தையும் பரிமாறுவோம், அவவும் இங்குதான் இருக்கிறா குடும்பமாக, குடும்ப நண்பர்களாக இருக்கிறோம் இப்போ.
நினைத்துப் பார்க்கையில் இனிமையான காலங்கள் அவை. அவற்றை நினைத்தே நான் இப்போ நம் பிள்ளைகளுக்கு நண்பர்களோடு சேர விரும்பும்போது பெரிதாக தடுப்பதில்லை, மக்ஸிமம் விட்டுப் பிடிப்போம்.. ஏனெனில் இவை போனால் திரும்ப வராத காலங்கள்..
வணக்கம் சகோதரி
ReplyDeleteநாம் (வலைத்தள உறவுகள்) அனைவரும் முகந்தெரியாத நட்பாக இருப்பினும், இப்போது பழகிய கொஞ்ச வருடங்களில், பதிவர்களாகிய நம்மில் ஒருவரை நம் பதிவிலோ, வேறு யாருடைய பதிவிலோ தொடர்ந்து காணவில்லையென்றால், அவரைப் பற்றி நலம் விசாரித்து பின் அவர் நலமாக உள்ளார் என தெரிந்து கொண்ட பிறகுதான் நமக்கு ஒரு நிம்மதி வருகிறது. (இன்று என் பதிவுக்கு வந்து நீங்கள் நலம் விசாரித்தது ஒரு மன ஆறுதலை தந்தது.) இதுதான் உண்மையான நடபென்பது...
அப்படியிருக்கும் போது நேரில் கூடவே இருந்து நட்பாக பழகிய பின் பிரிவென்றால் கஷ்டமாகத்தான் இருக்கும். பாட்டு அதற்கேற்ற மாதிரி பொருத்தமான பாட்டு. இந்த இனிமையான பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமானது. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மைதான் , ஒருவரைக் காணவில்லை எனில் வெளியே சொல்லாவிட்டாலும் மனம் தேடும்...
Deleteபாட்டு உண்மையில், இன்றே பல தடவைகள் கேட்டுவிட்டேன் நான், இதில் எனக்கு சம்பவம் எதுவும் இல்லை எனில் இப்பாட்டை ரசித்திருப்பேனோ தெரியாது ஆனால் இப்போ கேட்கும்போது மனதுக்கு மிக இனிமையாக இருகுது.. நாகேஷ் அங்கிள் இதில மட்டும்தான் அவர் வாய் திறக்காமல் இருந்து பார்க்கிறேன் ஹா ஹா ஹா... வீடியோவாகவும் நன்றாக இருக்குது.
நான் தற்செயலாகத்தான் ஸ்ரீராம் பக்கம் அன்று எட்டிப் பார்த்தேன்.. ஏதோ ஒரு பிஸியில் இருந்தேன் அந்த வாரம்...
மிக்க நன்றிகள் கமலாக்கா.
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
ReplyDeleteஇதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது “மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்” பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
வாங்கோ சிகரம் பாரதி, மிக்க நன்றி, நாம் என்ன செய்யோணும் என்பதைச் சொன்னால் செய்யலாம்.
Deleteஆ... கேட்ட பாட்டுன்னு வந்தா... என்னையே சொல்லியிருப்பது சந்தோஷம். சுசீலாம்மாவின் குரல் இந்தப் பாடலில் அப்படி இழையும்.
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. உண்மைதான், நான் தேடிய பாடலை, வெளியிட்டு விட்டீங்கள் கேட்காமலேயே ஹா ஹா ஹா.
Deleteசில சினேகங்கள் ரயில் சிநேகம் மாதிரி. எவ்வளவு நெருக்கமாகப் பழகினாலும் அப்புறம் பார்க்க முடியுமா என்பது கஷ்டமே. சில நண்பர்கள் என் மனதில் இருப்பது போலவே நான் யார் மனதில் நின்று கொண்டிருக்கிறேனோ என்கிற பொருள்பட முன்பு கவிதை முயற்சியொன்று செய்திருந்தேன். அது நினைவுக்கு வருகிறது. இன்றைய எங்கள். பதிவு பாருங்கள்!
ReplyDeleteஉண்மைதான் என் மனதிலும் பலர் இருக்கிறார்கள், சிலருடன் பேசியதுகூட இல்லை, ஆனால் அடிக்கடி பார்த்தமுகம்.. அப்படியே பசுமையாக இருக்குது..
Deleteஓம் சொல்லி வைட்த்ஹதுபோல நீங்களும் இன்று நட்பைப்பற்றிப் பகிர்ந்திருக்கிறீங்க.
Deleteநல்லவேளை, ஹாஸ்டல் வாழ்க்கை எனக்கு வாய்த்ததில்லை. வீட்டிலிருந்துதான் படிப்பு எல்லாம். அது அதிருஷ்டம் என்றுதான் நினைக்கிறேன். அல்லது நான் வெளியிடங்களில்பழகும், பழகக் கற்கும் வாய்ப்பை இழந்தேனோ என்னவோ!
ReplyDeleteஆனா வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஹொஸ்டலில் இருந்திருக்கோணும் ஸ்ரீராம்.. அதுவும் ஒருவித சுகமே:))... எங்கள் ஹொஸ்டலில் நடந்த பல மறக்க முடியாத சம்பவங்கள் உண்டு.. பார்ப்போம் முடியும்போது எழுதுகிறேன்.
Deleteஹாஸ்டல்ல இல்லாத்து அதிர்ஷ்டமா? நான் நான்கு ஹாஸ்டல்களில் இருந்து படித்திருக்கிறேன். கெட்டவனாக ஆவதும், படிக்காமல் பொழுதைக் கழிப்பதும் சுலபம். ஆனால் நிறைய நல்ல நட்புகள், உலகை உணரும் வாய்ப்பு எல்லாம் ஹாஸ்டலில் அதிகம். That life will shape up our personality
Deleteஊசிக்குறிப்பு : அநேகமாக எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவம் என்றுநினைக்கிறேன். எனக்கு சமீபத்தில் கூட!
ReplyDeleteமிக்க நன்றிகள் அனைத்துக்கும் ஸ்ரீராம்.
Deleteபிடித்த பாடல், கேட்டேன்.
ReplyDeleteஎனக்கும் மரியம் குட்டி என்று தோழி இருந்தாள்.
9 ம் வகுப்பு படிக்கும் போது. மிக அழகான அமைதியான முகம். நினைவுக்கு வந்து விட்டது.
நட்பை சொல்லும் மலரும் நினைவுகள் பதிவு மிக அருமை.
என் நட்புகளின் முகங்களை நினைவுக்கு கொண்டும், பழைய நினைவுகளை அசைபோட வைத்து விட்டது உங்கள் பதிவு அதிரா.
ஊசீணைப்பு அருமை.
ஊசுக்குறிப்பு மிக அருமை.
நிறைய பேருக்கு நன்றிகள் சொல்லவேண்டும் தான். வாழ்க்கையில் ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவர் வந்து நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அருமையான அதிராவின் நட்பை, வலைத்தளத்தில் எவ்வளவு நல்ல நட்புகளை கொடுத்த இறைவனுக்கு நன்றி நன்றி.
ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு
Deleteவாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. உங்கள் பிஸி நேரத்திலும், உங்களை நான் ஓடி ஓடிக் கொமெண்ட்ஸ் போட வைக்கிறேன் போலும்...
Deleteசிலசமயத்தில் எனக்கு இப்படி ஒரு ஹில்ட்டியான உணர்வு வரும், பலர் பிசியாக இருக்கிறார்களே... இந்நேரம் நான் போஸ்ட் போட்டால், எனக்காக தவிர்க்க முடியாமல் கொமெண்ட்ஸ் போட ஓடி வருவார்களே என நினைத்தும் பல சமயம் போஸ்ட்ட் போடாமல் விட்டதும் உண்டு.
ஆஆஆ கோமதி அக்காவுக்கு “மரியம் குட்டியோ” ஹா ஹா ஹா.. எனக்கும் நிறைய முஸ்லின் தோழிகள் இருந்தனர், முகங்கள் இப்பவும் நினைவில் இருக்கு, எல்லோரும் என்னுடன் மிக அன்பாகப் பழகுவார்கள், என் கொமெடியான பேச்சு அவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.
//பழைய நினைவுகளை அசைபோட வைத்து விட்டது உங்கள் பதிவு அதிரா.//
Deleteஅதனாலதான் ஃபீலிங்ஸ் வாரமாக பி..ர..க..ட..னப் படுத்தப்பட்டுள்ளது [அப்பாடா கரீட்டா எழுதிட்டேன்... ஹா ஹா ஹா] கோமதி அக்கா .. உடனே எழுதுங்கோ..
//அருமையான அதிராவின் நட்பை//
மிக்க மிக்க நன்றிகள் கோமதி அக்கா.. என்னதான் இருப்பினும் நம்மை ஆரும் நல்லாஆஆஆவன்[வடிவேல் அங்கிள் நினைவுக்கு வந்தார் அதனால ..ன்)] எனச் சொல்லிட்டால் ஏதோ பல உணர்வுகள் வந்திடுது நன்றி கோமதி அக்கா.. ஹா ஹா ஹா..
நாளை முதல் ஆட்டோகிராப் அதிரா? தற்போது தான் இலங்கை தமிழர்கள் பட்ட பாடு புரிகிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடிதான். எனது மனைவியின் தந்தை (மாமனார்) கொழும்புவில் இருந்து சிறீமாவோ சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியா வந்த தமிழர்.
ReplyDeleteவாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..
Delete//நாளை முதல் ஆட்டோகிராப் அதிரா?//
ஹா ஹா ஹா என்னுள் பல ஓட்டொகிராப் புதைஞ்சு கிடக்கிறது.. என்னவெனில் எனக்கு கிட்டத்தட்ட 5..6 வயசிலிருந்து நடந்த சம்பவங்கள் .. முக்கால்வாசியும் நினைவில இருக்குது.. இது பல சமயம் கவலைக்கிடமாகியும் விடுது...
//தற்போது தான் இலங்கை தமிழர்கள் பட்ட பாடு புரிகிறது.//
இதில் நான் எதுவுமே சொல்லவில்லையே.. அது ஒரு புத்தகமே எழுதலாம்...
//(மாமனார்) கொழும்புவில் இருந்து சிறீமாவோ சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியா வந்த தமிழர்.//
ஓ..
மிக்க நன்றிகள்.
பீலிங்ஸு வாரமா.... ஆஆ 🤔
ReplyDeleteபாட்டு கேட்கவில்லை. ஆனா படம் கேள்விபட்டிருக்கேன். நாகேஷை இந்த மாதிரி நடிப்பில் பார்க்கவிலை. வித்தியாசமா இருக்கு. நல்ல பாட்டு. நிலா என்றதும் எனக்கு எங்க வீட்டு மல்லிபந்தல் ஞாபகம் வருது. பெளர்ணமி நாள் என்றால் எல்லாரும் அதன் கீழிருந்து கூடியிருந்து கதைப்பது நினைவுக்கு வருகிறது.
எனக்கு ஹாஸ்டலில் தங்கி படிக்க ஆசை. ஆனா அப்பா விடவேயில்லை. எங்க வீட்டில் 4 அக்காமார் தங்கி, யூனியில் படித்தார்கள். அப்ப ஹாஸ்டல்,வீடு என தங்கி படித்த காலம். வீட்டில் ஓரே அக்காமார்கள்தான். கலகலப்புக்கு பஞ்சமில்லை. ஒருவருடன் 2000 ம் ஆண்டு மட்டும் தொடர்பு இருந்தது. பின் இல்லாமல் போய்விட்டது. "அது ஒரு அழகிய கனாகாலம்" என பாடவேண்டியதுதான்.
உங்க பீலிங்ஸ் வாசிக்க மனசுக்கு கஷ்டமா இருக்கு.20 நாள் என்றால் எவ்வளவு அட்டாச் ஆக இருந்திருப்பீங்க. மரியம் அக்காவை தேடிபிடிங்க. கில்லர்ஜி அவர்கள் சொன்னமாதிரி ஒரு சிலர்தான் மனதில் இடம்பிடித்துவிடுவார்கள்.
நானும் நிறைய picture postcards, stamps, autograph என வைத்திருந்தேன். எல்லாமே பிரச்சனையால் போய்விட்டது.
ஊசி இணைப்பு பூஸாரோட சத்தம் இந்தவாரம் கூடதான் இருக்கபோகுது.
ஊசிகுறிப்பு சூப்பர். நானும் கற்றிருக்கிறேன் அருந்ததி அதிரா.. உங்களிடமிருந்தான்...ஹா..ஹா..ஹா....
வாங்கோ அம்முலு வாங்கோ...
Deleteபாட்டு நன்றாக இருக்குதெல்லோ.. நான் அன்று மரியம் அக்காவோடு சேர்ந்து கேட்டபின், சமீபத்தில் ஸ்ரீராம் பக்கத்திலதான் கேட்டேன்ன் அப்பூடியே ஃபிரீஸ் ஆகிவிட்டேன்..
//பெளர்ணமி நாள் என்றால் எல்லாரும் அதன் கீழிருந்து கூடியிருந்து கதைப்பது நினைவுக்கு வருகிறது.//
ஆவ்வ்வ்வ் எனக்கும் வருது, எங்கள் ஒரு மாமாவுக்கு 4 மகள்கள்.. சில விடுமுறை தினத்தில் எல்லோரும் வந்து எங்களோடு தங்குவினம், நிலாவில் பாய் விரித்து, வானம் பார்த்தபடி மிட்நைட் வரை பேசிக்கொண்டிருப்போம்ம்.. அதை அடிக்கடி நினைச்சுப் பார்ப்பேன் நான்... ஆனா இன்றுவரை அது அவர்களுக்கும் நினைவிருக்கோ எனக் கேட்டதில்லை இம்முறை கேட்டுப் பார்க்கோணும்:)).
//எனக்கு ஹாஸ்டலில் தங்கி படிக்க ஆசை. ஆனா அப்பா விடவேயில்லை//
ஹா ஹா ஹா ஓ அப்படியோ.. எங்களுக்கு நாட்டுப்பிரச்சனை காரணமாக அடிக்கடி ஸ்ரைக், கர்த்தால் நடக்கும் அதனால பஸ் ஒழுங்காக இருக்காது, செக்கிங் பயம் வேறு.. இதனாலேயே ஹொஸ்டல் போக வேண்டி வந்தது.. ஆனால் சொல்வார்களே துன்பத்திலும் ஒரு இன்பம் என.. அப்பூடித்தான் நமக்கு அமைந்தது ஹொஸ்டல் வாழ்க்கை என்னைப்பொறுத்து இன்பமே... ஆனா என் நண்பிக்கு பெரிசாக பிடிக்கவில்லை, காரணம் அவ எல்லோருடனும் ஈசியாக சேர மாட்டா.., நான் வீட்டுக்குப் போனால் அவவும் போய் விடுவா.....
இதிலிருந்து நான் ஜொள்ள வருவது என்னவெனப் புரியுதோ?:)) மீஈஈஈஈஈஈ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பாஆஆஆஆஆஆ நல பொண்ணு:)) ஹா ஹா ஹா சரி சரி இப்போ எதுக்கு கல்லெடுக்கிறீங்க கர்ர்ர்:)).. ஒரு ஆசைக்குச் சொல்ல விடோணும்.. இன்னும் 4 நாட்களுக்கு என்னை ஆரும் திட்டக்கூடாது:)).. அஞ்சூஊஊஊஊஊஊஉ நீங்களும் நோட் திஸ் பொயிண்ட்டூஊஊஊஊ:))
//"அது ஒரு அழகிய கனாகாலம்" என பாடவேண்டியதுதான்.//
Deleteஹா ஹா ஹா அதுதான் என மனதிலும் வருது.. வேறு பாடல் இல்லைப்போலும்:)).. இந்தப் பாடலும் அடிக்கடி வரும்...
“பசுமை நிறைந்த நினைவுகளே..
..........
எந்த ஊரில்.. எந்த நாட்டில்.. என்று காண்போமோ..”
//20 நாள் என்றால் எவ்வளவு அட்டாச் ஆக இருந்திருப்பீங்க.//
உண்மைதான் அம்முலு, என்னைத் தன் குழந்தைப்போல நினைச்சுப் பார்த்ததுபோல இருக்கெனக்கு.. ஆர் இப்படி டெய்லி சுவீட்ஸ், அதுவும் அவர்களும் படிக்கிறார்கள் எல்லோ.. வேலைக்குப் போகவில்லையே.. அப்படி இருந்தும் வாங்கி வந்து என்னிடம் தருவா, நான் நால்வருக்கும் புறிப்பேன்..
//பூஸாரோட சத்தம் இந்தவாரம் கூடதான் இருக்கபோகுது///
டபிள் மீனிங்கில எல்லாம் பேசக்கூடாது ஜொள்ளிட்டேன் ஹா ஹா ஹா:))..
//நானும் கற்றிருக்கிறேன் அருந்ததி அதிரா.. உங்களிடமிருந்தான்.///
ஹா ஹா ஹா அது என்னவெனச் சொல்லவே இல்லையே...
மிக்க நன்றிகள் அம்முலு.
இது என்ன நட்பு நாளா! ஸ்ரீராமும் நண்பர்களைப் பற்றி பகிர்ந்திருக்கிறார், நீங்களும்,.. நெகிழ்வதென்னவோ நாங்கள்.
ReplyDeleteவாங்கோ பனுமதி அக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா அது ஃபீலிங்ஸூ வாரம்:)).. மிக்க நன்றிகள்.
Deleteஅருமை அதிரா,
ReplyDeleteநட்பு சமமாகப் பேணிக்காத்தலில் வளர்கிறது.
உங்களுக்கு அறியா வயதில் கிடைத்த நட்பை
நினைத்து மனம் சிலிர்க்கிறது.
பலப்பல காரணங்களுக்காக நட்பை இழக்க நேரிடுகிறது.
நம் வாழ்வின் நிகழ்வுகளும் சோர்வடையச் செய்கின்றன.
என் தந்தைக்கும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை
மாற்றல் வரும்.
கடிதங்களில் தொடரும் உறவு பிறகு நின்று போகும்.
ஒருத்தியே ஒருத்தி உயிராக இருந்தாள்.
இப்போது அவளும் இல்லை.
அன்பும் நட்பும் கிடைத்த நாட்களை பொக்கிஷமாக
வைப்போம்.
இனியும் மனக்கலக்கம் இல்லாமல் இப்போது இருக்கிற உறவுகள்
நல்ல படியாகத் தொடர இறை அருள் வேண்டும்.
நான் உங்கள் எல்லோரிடமிருந்தும் இன்று பாடம் கற்கிறேன்.
ம்க நன்றி மா.
வாங்கோ வல்லிம்மா வாங்கோ..
Delete//நம் வாழ்வின் நிகழ்வுகளும் சோர்வடையச் செய்கின்றன.//
இதுவும் 100 வீதம் உண்மை வல்லிம்மா, சிலசமயம் நாமே ஒதுங்கிப்போய்விடும்படியும் நிகழ்வுகள் அமைந்து விடுகிறது.
//கடிதங்களில் தொடரும் உறவு//
ஒரு மாத விடுமுறையில்கூட நண்பிகளுக்குக் கடிதம் போட்டிருக்கிறேன், எனக்குக் கடிதம் ஸ்ரைல் ஸ்ரைலாக எழுதப் பிடிக்கும்...
//நான் உங்கள் எல்லோரிடமிருந்தும் இன்று பாடம் கற்கிறேன்///
உங்களிடமிருந்தும் நிறையக் கற்கிறோம் வல்லிம்மா, நீங்கள் பேச்சில் காட்டும் அன்பு, அனைவரையும் அழைக்கும் விதம், வயதுக்கேற்ப அன்பை வழங்குகிறீங்கள்.. நானும் இப்படி இருக்கோணும் என பல தடவைகள் நினைப்பதுண்டு..
மிக்க நன்றிகள் வல்லிம்மா.
ஏதோ மாடித் தோட்டத்தைப் பற்றி எழுதி இருப்பதாகச் சொன்னாங்களேனு ஓட்டமா ஓடி வந்தா இங்கேயும் மலரும் நினைவுகள். நமக்கும் இப்படி இருக்கு. எழுதி மாளாது! உங்க பீலிங்க்ஸ் எல்லாம் அருமையாக இருக்கு. இப்படி நம்முடன் பழகிய பலர் இப்போ எப்படி இருக்காங்களோனு நினைச்சால்! மனதுக்கு வேதனையாகத் தான் இருக்கும்.
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ..
Delete//ஏதோ மாடித் தோட்டத்தைப் பற்றி எழுதி இருப்பதாகச் சொன்னாங்களேனு ஓட்டமா ஓடி வந்தா//
ஹா ஹா ஹா ஃபீலிங்ஸாப் போச்சா:))..
/// நமக்கும் இப்படி இருக்கு. எழுதி மாளாது!//
ஒருசிலதை எழுதலாமே கீசாக்கா...
உண்மைதான் பலர் அருகில்கூட இருக்கலாம் தொடர்பில்லாமல்/நமக்குத் தெரியாமல்..
ஊசிக்குறிப்பும் ஊசி இணைப்பும் நன்றாக இருக்கிறது எப்போதும் போல். மரியத்தின் அன்பு மாசற்றது. அதை நினைத்துப் பார்க்கையில் இப்போவும் மனம் கனக்கிறது.
ReplyDeleteஉண்மைதான் கீசாக்கா அது நெ.தமிழன் சொன்னதைப்போல முன் ஜென்ம பந்தமாக இருக்கலாம்.
Deleteமுன்பு ஒரு கதை வந்ததெல்லோ.. 2 வருடம் முன்பு.. இந்தியாவில் ஒரு பெண்பிள்ளை, ஒரு ரீச்சரோடு அதிகம் விருப்பமாக இருந்து, தந்தையின் வேலை காரணமாக வேறு மாநில ஊர் போகும்போது, அழுதழுது அந்த ரீச்சரிடம் ஒரு படம் வாங்கிப் பிரேமில் போட்டு தன்னுடனே வச்சிருந்து, பின்பு ஏதோ கொடிய வருத்தம் வந்துவிட்ட்டது, தான் ரீச்சரைப் பார்க்கோணும் கூட்டிப் போங்கோ எனக் கேட்டு, பெற்றோர் அழைத்துப் போனார்களாம்,
அன்றே, ஒரு பக்கம் கட்டிலில் தன் அம்மா மறுபக்கம் அந்த ரீச்சர் இருந்தபோது, ரீச்சரின் மடியில் தலை வைத்துப் படுத்த பிள்ளை அப்படியே போய் விட்டாவாம்.. இதை எல்லாம் முன் ஜென்மம் எனச் சொல்வதை விட வேறென்ன சொல்ல முடியும்.
மிக்க நன்றிகள் கீசாக்கா.
ஹாய் அக்கா.
ReplyDeleteஇப்போதெல்லாம் எனக்கு நேற்று நடந்த நிகழ்வையே ஞாப்அகம் வெச்சுக்க முடியுரதில்ல
சிறூ வயதில் நடந்ததை நினைவில் இருந்து மீட்டு எழுதியது சூப்பர்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.
நலம்தானே.
வாங்கோ தம்பி மகேஷ் வாங்கோ..
Deleteநீஈஈஈஈண்ட நாட்களின் பின்பும், அக்காவை மறக்காமல் வந்திருக்கிறீங்க.. நலம்தானே..
//எனக்கு நேற்று நடந்த நிகழ்வையே ஞாபகம் வெச்சுக்க முடியுரதில்ல//
சிங்கப்பூர்த் தொடரை அக்கு வேறு ஆணி வேறாக எழுதிய பின்பும் நீங்க உப்பூடிப் பேசலாமோ?:)..
//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.//
ஆவ்வ்வ்வ் மெய்சிலிர்த்துப் போயிட்டேன்.. எப்படி இப்பூடி நினைவில் வச்சிருக்கிறீங்க.. நீங்களும் நானும் ஒரே மாதம் என நினைவிருக்குது ஆனா திகதியை மறந்திருந்தேன், இப்போ கண்டு பிடிச்சு விட்டேன்.. 11.02.. உங்களுக்கும் தாமதமானாலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகேஷ்.. வாழ்க வளமோடு.
மிக்க நன்றிகள், மிக்க மகிழ்ச்சி...
மரியம் அக்கா அதிராவின் மேல் அதிகபடியான பாசம் வைத்து விட்டார்.
ReplyDeleteஅன்பு அதிகமானால் பிரிவு துயரம் தரும் தானே!
அதிரவின் நட்பு இனி கிடைக்காது நம் ஊருக்கு போக போகிறோம் என்று மரியம் அக்காவிற்கு தெரிந்து விட்டதோ?
//அதிரவின் நட்பு இனி கிடைக்காது நம் ஊருக்கு போக போகிறோம் என்று மரியம் அக்காவிற்கு தெரிந்து விட்டதோ?//
Deleteஓ கோமதி அக்கா, நீங்கள் சொன்னதும்தான் நினைச்சுப் பார்க்கிறேன்.. அது அவவுக்கு உள்ளுணர்வு அதிகமாகக் கூட இருந்திருக்கலாம்...
வலைத்தளம் மூலம் ஆறு பெண்மணிகள், 2015 முதல் 2018 வரை, என்னுடன் மிகவும் நட்பாகப் பழகி வந்தனர். அவர்களில் யாரையும் அடியேன் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை.
ReplyDeleteஅவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரிலும், பிற மாநிலங்களிலும் இருப்பினும், என் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகி, நேரில் சந்தித்து மகிழ்ந்துகொண்டனர். அனைவருக்கும் அடியேன் ஓர் இணைப்புப்பாலமாக மட்டுமே இருந்து வந்தேன்.
இவர்களில் நால்வருக்கு (இருவர் முஸ்லீம் + இருவர் ஹிந்து) என்னுடைய ஸ்பெஷல் பிரார்த்தனைகளாலும், ஆலோசனைகளாலும், மிகவும் நல்ல இடங்களில் மிகச் சிறப்பாக திருமணம் நடைபெற்றன.
மீதி இருவரும் (ஒருவர் கிறிஸ்டியன் மற்றொருவர் ஹிந்து) ஏற்கனவே திருமணம் ஆனவர்கள்.
மின்னஞ்சல், தொலைபேசி, வாட்ஸ்-அப், பதிவின் பின்னூட்டங்கள், அடியேன் அறிவித்திருந்த போட்டிகளில் கலந்து கொள்ளுதல் என என்னிடம் அளவுகடந்த பிரியத்துடன், தினமும் என் தொடர்பு எல்லைக்குள் இருந்த இவர்கள் 01.01.2019 முதல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக என் தொடர்பினில் இல்லாமல் உள்ளனர். என்னாலும் அவர்களை எந்தவிதத்திலும் தொடர்புகொள்ள இயலவில்லை. ரயில் சிநேகிதம் போன்ற இவர்களை நினைத்தால், மனதுக்கு மிகவும் வேதனையாகத்தான் உள்ளது.
அவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் வாழ்க ! என இப்போதும் நான் அவர்களை நினைத்துக்கொண்டுதான் + அவர்களுக்காகப் பிரார்த்தித்துக்கொண்டுதான் உள்ளேன்.
இவர்கள் ஆறு பேர்களும், கடைசியாக வருகை தந்து, பின்னூட்டமிட்ட என்னுடைய பதிவு: http://gopu1949.blogspot.com/2018/12/blog-post.html dated 01.12.2018.
தாங்கள் மூன்று வாரங்கள் மட்டுமே பழகிவிட்டு, பின் பிரிய நேர்ந்த, மரியம் அக்காவைப்பற்றிச் சொன்னதும், என்னுடன் 3-4 வருடங்கள் தொடர்ந்து, தினமும் மெயில் மூலம் அன்புடன் பழகிவந்த இந்த ஆறு தோழிகள் பற்றிய நினைவுகள் வந்தன. அதனால் அதுபற்றி இங்கு சொல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
ஓ கோபு அண்ணன், பழகியவர்கள் திடீரெனக் காணாமல் போனால் மனதுக்குக் கஸ்டம்தான்... அதுவும் 6 பேரும் ஒரேயடியாக என்கிறீங்கள் அதெப்படி எனத்தான் புரியவில்லை.... திடீரென வருவார்கள்.. எதுக்கும் பொறுமையாக இருங்கோ.
Delete// அதனால் அதுபற்றி இங்கு சொல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.//
அதனாலென்ன.. இப்படியான நிகழ்வுகளைப் பகிரும் போஸ்ட்தானே இது.
உங்களுக்கு நினைவிருக்குதோ முன்பு கிரிஜா என ஒருவர் நம்முடன் மிக நல்ல நெருக்கமான உறவில் இங்கு தினமும் என்னுடன் கும்மி போடுவா வந்து கொமெண்ட்ஸ் இல், நான் அவவைக் “கீரி” என அழைப்பேன்.. அவ திடீரெனக் காணாமல் போயிட்டா.. மெயிலுக்கும் பதிலில்லை... அவவை நானும் அஞ்சுவும் மனதால இன்றுவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
நன்றி கோபு அண்ணன்..
கிரிஜா என்றாவது வந்து ஒரு பின்னூட்டம் கொடுத்தாலும் சந்தோஷமே .நல்லா இருக்கார்னு நிம்மதி இருக்கும்
Deleteஅருமையான பாடல்...
ReplyDeleteஇனிமையான பாடல்...
ரசிக்கும் பாடல்...
வாங்கோ டிடி நன்றி.
Deleteபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அதிரா!
ReplyDeleteவாங்கோ மனோ அக்கா மிக்க நன்றிகள்.
Deleteமிகவும் அருமையான பாடலை நினைவுக்குக்கொண்டு வந்திருக்கிறீர்கள்! சுசீலாவின் குரல் மிகவும் இனிமையாக இருக்கும் இந்தப்பாடலில்!
ReplyDeleteஓம் மனோ அக்கா, ஸ்ரீராம் பகிர்ந்திருந்தார், அதனாலதான் எனக்கும் பழைய சம்பவம் நினைவுக்கு வந்து, இங்கு பாடலையும் போட்டு எழுதிவிட்டேன். நன்றி.
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அதிரா
ReplyDeleteவாழ்க வளமுடன்
ஆஆஆஆஆஆஆ கோமதி அக்கா, இன்று களைக்காமல் பல இடங்களிலும் எனக்கு வாழ்த்துச் சொல்லிட்டீங்கள்.. நன்றியோ நன்றி கோமதி அக்கா...
Deleteநினைவுகள் - மறக்க முடியாத நினைவுகள்.
ReplyDeleteபாடலையும் கேட்டு ரசித்தேன்.
ஆஹா... உங்கள் பிறந்த நாளா இன்று. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வாங்கோ வெங்கட் வாங்கோ.. 22ம் திகதி என் பிறந்தநாள்.. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.
Deleteமரியம் அக்காவின் நினைவுகள்...இனிமை...பிரிவு கஷ்டமே...
ReplyDeleteஎல்லாருக்கும் இது போல இருக்கும் அதிரா...
எனக்கு ஐந்தாம் வகுப்பில் கல்பனா என்னும் தோழி மிக பிடிக்கும் ..மீண்டும் காணும் வாய்ப்பு வரவே இல்லை...
12 ம் வகுப்பில் பத்மப்ரியா...அவள் அத்துணை நெருக்கம் இல்லை என்றாலும் 6 வகுப்பில் நான் அப்பள்ளியில் சேர்ந்த போது உறுதுணை யாக இருந்தது அவள் வார்த்தைகள்...
மரியம் அக்கா எங்கள் மனதிலும்....
ReplyDelete