என் யொந்தக் கதை:).. யோகக் கதைகள் பல உள்ளன:).. அப்பூடியாவற்றில் இதுவும் ஒன்று... உங்களுக்கு நேரம் இருக்கும்போது இந்த இரு லிங்குகளிலும் போஸ்ட்டை க் கொஞ்சம் படிச்சுப் பாருங்கோ என் சோகம் புரியும்:))
அந்தநாளும் நானும்:)
அப்படித்தான், இந்த மொச்சைக் கொட்டையும் என்னைப் பல காலமாகப் பாடாய்ப் படுத்தி விட்டது... அதன் வேறு பெயர்களும் தெரியவில்லை, ஆரும் சொல்லவுமில்லை, தேடிப்பார்க்கும் நினைப்பில்லாமல், ஊரெல்லாம் மொச்சைக் கொட்டை கிடைக்குமோ எனத் தேடித் திரிஞ்சேன்.
எங்கள் சூப்பர் மார்கட்டில் ஒருநாள், தேடியபோது பட்டர் பீன்ஸ் என, கிட்டத்தட்ட மொச்சைக் கொட்டைபோலவே ஒன்று கிடைச்சது, அதைக் கொண்டு வந்து பார்த்தால் அது வேறு அத்தோடு சரியான வாய்வாகவும் இருந்தது.
அதையும் விட்டுப்போட்டு சமீபத்தில் தமிழ்க் கடை போனோம், போகும்போது மொச்சைக் கொட்டையின் படத்தை நன்கு உற்றுப் பார்த்துக் கொண்டேன், அப்படியே கண்ணில எடுத்துப் போய் தமிழ்க் கடையில் தேடினேன், ஒரு வேறு மொழிப் பெயரோடு ஒன்று இருந்தது, அதை அங்கு நின்ற தம்பியிடம் கேட்டேன், இதுதான் மொச்சைக் கொட்டை என்றார்ர்... ஆவ்வ்வ்வ் அப்பூடியே பரவசமாகிட்டேன்...
வீட்டுக்கு வந்த பின்னர்தான் அப்பெயரைப் போட்டுத் தேடினால் வைல்ட் பீன்ஸ் என இருந்துது. சரி கொண்டு வந்திட்டோம், என வச்சுப்போட்டு அஞ்சுவிடம் ஐடியாக் கேட்டேன், அஞ்சுதான் பல பல ஐடியாக்கள் தந்தா, ஆனா வாய்வு அதிகம் என்றா, அதனால பயத்திலயே சமைக்காமல் வச்சிருந்து, பின்னர் சமைச்சேன்.. ரெசிப்பி எல்லாம் தேவையில்லைத்தானே, படம் மட்டும் காட்டுகிறேன், ரெசிப்பி தேவை எனில் என் வட்ஸப்புக்கு கோல் பண்ணி பே-பாலில் காசை முதலில் அனுப்பவும்:)..
சமையல் உதவி : அஞ்சு
வாய்வு நீக்க மருந்துதவி : அஞ்சு [ஹா ஹா ஹா]
ஆனா பெரிதாகப் பிடிக்கவில்லை, அதனால மிகுதியில் பாதியை எடுத்து.. முளைக்கட்டிப் பார்ப்போம், ஏதாவது பண்ணலாம் என ஊறவிட்டு, முளைக்கட்ட வைத்தேன், அது டக்கென ஒரு மொச்சை மணம் வரத் தொடங்கிவிட்டதே.. அதனாலதான் இதற்கு மொச்சைக்கொட்டை எனப் பெயர் வந்திருக்குது என நினைச்சேன், ஆனா முளை வரவே இல்லை, அதனால கழுவி காயவிட்டு, உப்பும் தூளும் பிரட்டி, அவணில வச்சு றோஸ்ட் பண்ணி எடுத்திருக்கிறேன், இது கொஞ்சம் ஓகே, சும்மா சாப்பிடலாம். மிகுதி அப்படியே இருக்குது:(.
===============================
இது நான் கோமதி அக்காவுக்குச் சொன்ன கொள்ளு வடை.. முளைக்கட்ட வச்சு அரைச்சுச் சுட்டேன், நல்ல இனிமையான வடையாக இருந்தது..
=======================================
கம்பு - அரைக் கப்
உளுந்து - அரைக் கப்
பச்சை ரவை - ஒன்றரைக் கப்.. அவ்ளோதேன்.. சூப்பர் மொறுமொறு தோசை..
ஆபத்துக்குப் பாவமில்லை:) சட்னி வைக்க நேரமில்லை, அதனால அருகிலிருந்த நெல்லிக்கனிகளை வச்சேன் அது டப்பா?:)) ஹா ஹா ஹா.. இது ஸ்ரீராமுக்கு..
===================================
இன்று ஒரு தகவல்
கனடாவில் ஒருநாள் வோக் போயிருந்தோம், திடீரென இருட்டி, மழையோ மழை, தொப்பென நனைஞ்சு விட்டோம், வீட்டுக்கு வந்து தோய்ந்ததும், உடனே அக்கா, இந்தக் கோப்பியை பிளேனாகப் போட்டு, சுகரும் போட்டுத் தந்தா.. ஸ்ஸ்ஸ்ஸ் என்னா ஒரு சுவை தெரியுமோ.. உடனே கேட்டு வாங்கி வந்தோம்.. உங்களுக்கும் கிடைச்சால் வாங்குங்கோ..
💦💦💦💦💦💦💦💦💦💦
இனிக் காதல் தினத்துக்கு வருவோமா?.. ஹா ஹா ஹா இது ச்சும்மா கிடைச்சதை ஒரு தொகுப்பாகப் போட்டிருக்கிறேன் பாருங்கோ... எப்போதான் என் தலைப்புக்கும் போஸ்ட்டுக்கும் சம்பந்தம் இருந்திருக்கிறது?:))
வாழ்க்கையில் எத்தனை சோதனை வந்தாலும் சோர்ந்திடக்கூடாது.. வீடியோவுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் பாருங்கோ , பிடிக்கும் உங்களுக்கு..
இதுவும் நல்லாத்தான் இருக்குது:)
ஊசி இணைப்பு:
ஊசிக் குறிப்பு:
இந்தத் துள்ளும் குருவிகளை, நான் எங்கிருந்தும் கை நடுங்க கால் வெடவெடக்கக் களவெடுக்கவில்லையாக்கும்:).. இது அந்த, கோபு அண்ணனின் பெட்டிக் கடை மீது ஜத்தியம்:))
💧💧💧💧💧💧
|
Tweet |
|
|||
Firsssssssssssssssssssssssst
ReplyDeleteஆஆஆ அஞ்சுவும் கம்பி மேலயோ?? வாங்கோ வாங்கோ.. நான் இங்கின பிஸியாக இருந்தமையால, இப்போதான் டேவடையைக் கண்டு:)) கொமெண்ட்ஸ் போட்டேன்ன்:))..
Deleteஇனிப் பிரித்தானியாவிலிருந்து டெய்லி ஒரு போஸ்ட் வரும் என, இத்தால் சகலருக்கும் அறிவிக்கிறோம்ம்ம் ஹா ஹா ஹா...
ReplyDelete//சும்மா சும்மா முளைக்குதாமே///
அது சும்மாவே வளர்ந்து சும்மாவே முளைக்குது 4/5 வருஷமா :)) இன்னும் வளருதே
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கஸ்டப்பட்டு எனக்கொரு குட்டிக் கன்று முளைச்சு பூத்துது, அவ்ளோதான்.. பின்பு ஒன்றையும் காணம்....
Delete/சமையல் உதவி : அஞ்சு
ReplyDeleteவாய்வு நீக்க மருந்துதவி : அஞ்சு [ஹா ஹா ஹா]//
ஆனால் fees இன்னும் வரலை சீக்கிரம் அனுப்புங்க வித் VAT
மிச்சமிருக்கும் மொ கொ யும் முடியட்டும் பின்னர் பீஸ் ஐ அனுப்புகிறேன்:)...
Deleteநாங்க பாட்டனி க்ளாசில் மொச்சக்கொட்டை வளர்த்து GROWTH பண்ணியிருக்கோம் :) வெளிநாட்டுக்கு வர சீட்ஸும் நான் நினைக்கிறன் எதோ வளராதபடி செய்து அனுப்பறாங்களோன்னு .எதுக்கும் விதைச்சு பாருங்க ஒன்றிரண்டை .அருந்ததி அதிரா அவரைக்கொடி அதிரான்னு பெயரை மாத்திக்கலாம் சீக்கிரமே :))
ReplyDeleteஇல்ல அஞ்சு, பயறு கடலை எனில் ஒரு வாசத்துடன் முளை வரும்... இது முளைக்கவில்லை, மணக்கத் தொடங்கிவிட்டது, நல்லவேளை திறந்து பார்த்ததால் கண்டுபிடிச்சேன்....
Delete///அவரைக்கொடி/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... மிகுதிக்கு நாளைக்கு வாறேன்..
நான் இந்த பருப்பு வகைகள் சமைக்கிறதில்ல :) சும்மா கண்ணால் பார்ப்பதோடு சரி :) இதை இன்னும் கிரேவியா செய்யணும்
ReplyDeleteஎனக்கஞ்சு அவரைக்காய் வகைகளும் பிடிக்கும், முற்றிய அவரை விதைகளோடு சேர்த்து பிரட்டல் கறி வைக்கவும் பிடிக்கும்.. அவற்றில் பெரிதாக வாய்வுக் குணம் இருப்பதில்லை, ஆனா இதில் இருக்கிறதுபோலவே தெரியுது எனக்கு..
Deleteஉண்மைதான் இன்னும் கிரேவி ஆக்கியிருக்கோணும், எனக்குப் பயம் என்னவெனில், இப்படி வச்சாலே கறி முடியாது, இதில இன்னும் கிரேவி ஆக்கினால் என்னாவது:))
அஞ்சு அவரைக்காய் வகைகளா? ஓ... அவரை, கொத்தவரை, பீன்ஸ், நீள் அவரை போன்றவற்றைச் சொல்கிறாரோ?
Delete//நெல்லைத் தமிழன்Monday, February 17, 2020 2:20:00 am
Deleteஅஞ்சு அவரைக்காய் வகைகளா?//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
/நல்ல இனிமையான வடையாக இருந்தது..//
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ் ஹாப்பா இது வடயா இல்லை சுசியமா :)) இனிப்புன்னு சொன்னா கொழந்தை பிள்ளைங்க கன்பியூஸ் ஆகாதா அ .அ :)அருந்தவால் அதிரா
//இனிப்புன்னு சொன்னா கொழந்தை பிள்ளைங்க கன்பியூஸ் ஆகாதா //
Deleteஹா ஹா ஹா பொயிண்டைப் பிடிச்சிட்டீங்க:) கொன்ஃபியூஸ் ஆக்கிச் சாப்பிட வைப்பதே என் தக்கினிக்கி:))
//அருந்தவால் அதிரா//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லோரும் சாட்சியாக வைக்கும் அருந்ததியைப் பார்த்துப் பேஸுற பேச்சா இது:))..
@நெல்லைத்தமிழன் மைண்ட் வாய்ஸ் :))///யப்பாடி நான் தப்பிச்சேன் அந்த டோஸைலருந்து //
ReplyDeleteஹஆஹாஆ
ஹா ஹா ஹா அவருக்கு அங்கின கொள்ளுக் குடுத்திட்டேன்:))
Deleteஇல்லை ஏஞ்சலின். தோசை அழகாக வந்திருக்கு. அதோட தேங்காய் சட்னி இல்லை வெங்காய சாம்பார் (ஹோட்டல் சாம்பார்) நல்ல காம்பினேஷனாக இருக்கும். தோசை ரொம்ப நல்லா வந்திருக்கு. அதிராவுக்கு பாராட்டுகள் (தோசை வார்க்கும் எனக்குத்தானே தெரியும் எத்தனை முறை இவ்வளவு அழகா தோசை வரும் என்று. சும்மா ஹஸ்பண்டை தோசை வார்க்கச் சொல்பவர்களுக்கு இதெல்லாம் எங்க தெரியும் ஹா ஹா)
Deleteஆவ்வ்வ்வ் நெ தமிழன் அதிராவை வாழ்த்திட்டார்ர் ஹா ஹா ஹா.. எனக்கு வடையும் நல்ல வட்டமாக சுட வரும் எனும் மேலதிக தகவலையும் இங்கு ஜொள்ளிக்கொள்கிறேன்:))..
Deleteஆவ்வ் தோசை குடுக்காமையால நெ தமிழன் வராமல் விட்டிட்டார்ர்ர் என அஞ்சு என்னை மிரட்டிக் கொண்டே இருந்தா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), வந்திட்டீங்க ஹா ஹா ஹா.
ஹாஹா டிக்ட்டோக் காணொளி நல்லா இருக்கு மான் மான்குட்டி ஸ்டோரியும் சூப்பர் ஆனா அந்த மேடம் அவங்களை தனியா சந்திக்கணும் :) எதுக்குன்னு சொல்ல மாட்டேன்
ReplyDelete//ஆனா அந்த மேடம் அவங்களை தனியா சந்திக்கணும்//
Deleteஆஅரு பாரதி பாஸ்கரையோ? எதுக்கு? மகளதிகாரம் சொல்லவில்லை என்றோ?:)) ஹா ஹா ஹா சொல்லுவா சொல்லுவா.. அவவுக்கு இரு மகள்களாம்.
துள்ளும் குருவிகளும் ஊசி இணைப்பும் குறிப்பும் நல்லா இருக்கு .ஊசி இணைப்பால் யாம் அறிவதென்னவென்றால் :) உங்களுக்கு அடுத்த மண்டே ஸ்கூல் ஸ்டார்டிங் :) டங்கணக்கா
ReplyDelete//உங்களுக்கு அடுத்த மண்டே ஸ்கூல் ஸ்டார்டிங் //
Deleteசிட்டுவேஷன் சோங்கைப் போல், சிட்டுவேஷன் மீம்ஸ் உம் எனக்கு வந்திடுதே அப்பப்ப.. ஆனாலும்..
இப்போ விடுமுறையில் இருப்பது எவ்ளோ நல்லதாகிவிட்டது தெரியுமோ.
ஹொலிடே விட்டதிலிருந்து கடும் காத்து மழை, நேற்றிலிருந்து விட்டு விட்டு கெவி ஹேல் ஸ்ரோன்ஸ் கொட்டுது.. இப்ப கூட, அதிலும் இருட்டுடன் முழங்கத்தொடங்கியிருக்குது இன்று.. வேர்க் போவோர்தான் பாவம்ஸ்ஸ்:))
//கெவி ஹேல் ஸ்ரோன்ஸ் கொட்டுது..// - இலங்கைத் தமிழர்களிலேயே, ஆங்கிலம் கலந்து எழுதுவது இந்த அதிரா மட்டும்தான். மற்ற எல்லா இலங்கைத் தமிழர்களும் எதற்கும் அழகிய தமிழ்ப்பெயர் வைத்திருப்பார்கள், உபயோகிப்பார்கள் (பாவிப்பார்கள்). ஹையோ ஹையோ.. இதுக்கு என்ன அர்த்தம் என்று எழுதினவங்களுக்குக்கூடத் தெரியாது.
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் அழகான தமிழைக் குழப்பி விட்டு இப்போ வேடிக்கை பார்ப்பதே நீங்கள் எல்லோரும்தான் கர்ர்ர்ர்:)).. அதாவது நான் நல்ல தமிழ்ல தான் பேசிக்கொண்டிருந்தேன், அது புரியுதில்லை எனச் சொன்னதும்தான், சரி புரியும்படி ஆங்கிலத்தையும் கலப்போமே என மாறிட்டேன்:)
Deleteகொரோனா என்னெல்லாம் பாடுபடுத்துது :) அந்த காபி இங்கே கிடைக்குதுனு நினைக்கிறன் வாங்கி பார்த்து சொல்றேன்
ReplyDeleteதமிழ்க் கடையில் கிடைக்கும்.. நன்றிகள் அஞ்சு.
Delete//வாங்கி பார்த்து சொல்றேன் // - வாங்கிப் பார்ப்பதற்குப் பதில் இந்தப் படத்தையே பெரிதாக்கிப் பார்த்துவிடலாமே.
Deleteஉபயோகித்து, சுவைத்துப் பாருங்கள். என்ன தமிழோ ம்ஹும்.
ஹா ஹா ஹா அப்பூடிக் கேளுங்கோ நெ தமிழன்:)).. இனிமேல் மீயும் எல்லோரிலும் டமில்ப் பிலை:) பிடிக்கப்போறேன்ன்:))
Deleteபாட்டு போடவில்லைபோல... புறா ஒன்று தலை ஆட்டுகிறது! மொச்சை பொட்டுசுண்டல் போல செய்வார் என் பாஸ். என் இளையவனுக்கு மிகவும் பிடிக்கும் அது. இறுதியாக கொஞ்சம் மிளகு தூவிக் கொண்டு வாய்வை வெல்வோம்!
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
Deleteயேஸ் இம்முறை பாட்டு வாணாமே என விட்டுவிட்டேன்...
//மொச்சை பொட்டுசுண்டல் போல செய்வார் என் பாஸ்.//
மிகுதி இருக்குது செய்து பார்க்கிறேன்.. கறி வைக்கும்போது எலக்றிக் பிரசர் குக்கரில்தான் அவிச்செடுத்தேன், அது நேரம் கூட வைத்தால் கரைச்சுவிடும் எந்தப் பருப்பையும் எனும் பயத்தில் 5 நிமிடம் தான் வைத்தேன்..
அது கனியவில்லை ஆனா நன்கு அவிஞ்சிருந்தது.. அப்படியே கறி வச்சுவிட்டேன்.. அஞ்சு ஒழுங்காக சொல்லித்தரவில்லை அவிப்பது பற்றி கர்ர்:))
கொள்ளு வடை நன்றாய் இருக்கிறது. யாராவது செய்து தந்தால் சாப்பிடலாம்! சூடாய்ச் சாப்பிட்டால் சுகம்.
ReplyDeleteஇதில் என்ன கஸ்டம் ஸ்ரீராம், நீங்கள் செய்த சப்பாத்தியை விட ஈசி:))... பொரிக்கும்போதுதான் கொஞ்சம் ஸ்லோ ஃபயரில அதிக நேரம் விட வேண்டும்.. இல்லை எனில் வெளியே கருகிவிடும், உள்ளே அவியாது.
Delete'எனக்கான தோசை' அழகாய் இருக்கிறது. நெல்லிக்காயை எடுத்துக் கடித்துக் கொள்ள வேண்டுமா? அங்கேயும் இதே நிலைதானா? சட்னி, கிட்னி கிடையாதா?!!
ReplyDeleteஹா ஹா ஹா தண்ணி விட்டு அரைச்ச சடினி மற்றும் பொரிச்சிடித்த மாசி சம்பல் இரண்டும் செய்திருந்தேன், ஆனா சின்னவருக்கு சீனிதான் பிடிக்கும் என்பதால , சுட்டவுடன் படமெடுத்துவிட்டேன், பிளேட்டில் சட்னி போடவில்லை என்றேன்ன்:))....
Deleteஹா ஹா ஹா நெல்லிக்காய் தமிழ்க் கடையில் வாங்கி வந்தது.. அதியமான் சாப்பிட்டவராமே அதனால தான் தோசையில் வச்சேன் ஹா ஹா ஹா..
அந்த கோப்பித்தூள் என்னென்ன பொருள்களை உள்ளடக்கியது என்று சொல்லியிருக்கலாம். இங்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஅதில் குட்டி எழுத்தில் இருக்குது ஸ்ரீராம், அது தெரியும் என விட்டுவிட்டேன் ஆனா படத்தில் வாசிக்க முடியவில்லை..
Deleteசேர்த்திருப்பது, கோப்பி, மல்லி, வேர்க்கொம்பு,கராம்பு ..
நிரு பிராண்ட் அங்கு கிடைக்காதோ..
சுக்கு மல்லிகாபினு நினைக்கிறேன். அதிலேயே காஃபித்தூளும் சேர்த்து வருதோ? இருக்காதே!
Deleteஅதன் பொருளடக்கத்தில, கோப்பி எனவும் இருக்குது கீசாக்கா. நாங்களும் மல்லிக்கோப்பி எனில் மல்லி சேர்க்காமலேதான் அரைப்போம்.. இதில் கொஞ்சம் போல கோப்பியும் சேர்த்திருக்கிறார்கள்.
Deleteகாணொளிகள்... சிரித்தேன், நெகிழ்ந்தேன், ரசித்தேன். மாஸ்க் அணிந்து முத்தம் தரும் புகைப்படம் நேற்று எனக்கு வந்த நெகிழ்ச்சியான ஒரு வாட்ஸாப்ப்பை நினைவு படுத்துகிறது.
ReplyDeleteஹா ஹா ஹா எனக்கு வருவனவற்றில், மனதுக்கு பிடித்ததை, ரசித்ததை எடுத்து இங்கு பகிர்வேன்.
Delete//நேற்று எனக்கு வந்த நெகிழ்ச்சியான ஒரு வாட்ஸாப்ப்பை நினைவு படுத்துகிறது.//
ஓ அது என்னவாக இருக்குமோ?:))
கொடியது எது கேள்விக்கு நானும் அதே ஃபீலிங் கொள்ளும் தூரத்துக்கு வந்து விட்டேன்! ஊசிக்குறிப்பு அருமை.
ReplyDeleteஆஹா அப்போ நீங்களும் இன்னும் ஹொலிடேயில்தான் இருக்கிறீங்களோ என்..சோய்ய்ய்ய்ய்ய்:))..
Deleteமிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
உங்கள் கண்டு பிடிப்புகள் தொடரட்டும்.
ReplyDeleteகாணொளி விடிந்த பிறகு காண்பேன்.
வாங்கோ கில்லர்ஜி மிக்க நன்றி.
Deleteஅனைத்தும் அருமை... ரசித்தேன்...
ReplyDeleteவாங்கோ டிடி மிக்க நன்றி.
Deleteவெள்ளைப்புறாவை நாளை போடலாம் என்று இருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு வந்தது, அங்கும் வந்து விட்டதா அழகு புறா. இரண்டு நாள் முன்பு முகநூலில் போட்டு இருந்தேன்.
ReplyDeleteமொச்சை சாப்பிட்டால் படுத்தும் என்று சினிமாக்களில் அதை நகைச்சுவைக் காட்சியாக காட்டுவார்கள்.
உங்களுக்கு கிடைக்காமல் படுத்தி இருக்கே!
நிறைய உணவு சமைத்த படங்கள் என்னிடம் இருக்கு இப்படி போடலாம் போலவே!
குழந்தைகளுக்கு அனுப்ப எடுப்பேன்.
கொள்ளுவடை நன்றாக இருக்கே! குட்டி குட்டியாக பார்க்க வாழைப்பூ வடை போலவே இருக்கிறது. எனக்கு எங்கள் ப்ளாக்கில் சொன்னீர்களா? மீண்டும் போய் படிக்கிறேன்.
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
Delete//வெள்ளைப்புறாவை நாளை போடலாம் என்று இருக்கிறேன்//
ஓ காதலர்களோ.. காதலர் தினத்தில் பகிருங்கோ.
//உங்களுக்கு கிடைக்காமல் படுத்தி இருக்கே!//
அதேதான், ஆனால் அரைக்கிலோ பக்கட்டில் இருந்தமையால் தப்பி விட்டேன், சின்ன பக்கட் இல்லை 2 கிலோப் பக்கெட்தான் இருக்குது எனச் சொல்லி இருந்தாலும் தூக்கி வந்திருப்பேன்ன்.. அவ்ளோ ஆர்வட்த்ஹில் இருந்தேன்.. ஆனா இது ஒருவகை அவரை என்பது தெரியாமல் போச்சு.. இது ஒருவித மொச்சை மரக் கொட்டை என்றே நினைச்சிருந்தேன்..
பால்கோவாதான் திரட்டுப்பால் எனத் தெரியாமல் இருந்ததைப்போல ஹா ஹா ஹா..
//நிறைய உணவு சமைத்த படங்கள் என்னிடம் இருக்கு இப்படி போடலாம் போலவே!//
ஹா ஹா ஹா ஐடியாக் கேளுங்கோ இன்னும் தாறேன்ன்:)).. அன்றே சொன்னேன் அங்கு கோமதி அக்கா.
கம்பு தோசையுடன் அது என்ன பச்சை ரவை ? வெள்ளை ரவை, பட்டண ரவை, பாம்பே ரவை என்று தான் கேள்வி பட்டு இருக்கிறேன்.
ReplyDeleteவறுக்காத ரவைக்கு இந்த பேரா?
ர்வை கலந்து செய்தது இல்லை. ரவை கலந்து செய்து பார்த்து விடுகிறேன்.
ரவ்வையில் இவ்ளோ வகை இருக்கோ? ஹா ஹா ஹா இங்கு எனக்கு தெரிஞ்சதெல்லாம், கோர்ஸ் ரவை மற்றும் ஃபைன் ரவை.. இதில் கோர்ஸ் தான் நல்லது.. அதாவது பெரிய பெரிய உருண்டையாக இருக்கும்.. தோசை இட்லிக்கு நல்ல பூவாக வருது..
Deleteஅவிக்காமல், வறுக்காமல் போடுவதை பச்சை ரவை என்றேன்:))..
அரிசி நாம் பொதுவாக சேர்ப்பதில்லை, தோசை இட்லி எனில் ரவ்வைதான், அரிசி சேர்த்தால் இன்னொன்று, சூட்டோடு சாப்பிடோணும் கொஞ்சம் ஆறிவிட்டாலும் காய்ஞ்சுபோகுது ஆனா இது அப்படி இல்லை.. என் அனுபவம்தான் எல்லாம்:))
நீங்கள் விரும்பினால், பாதி அரிசி பாதி ரவையாகவும் சேர்க்கலாம்.
அரிசி, அதுவும் இட்லிப் புழுங்கல் அரிசி சேர்த்து இட்லி செய்தால் காய்ஞ்சா போகும்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! மல்லிகைப்பூ இட்லிக்கு நான் உத்தரவாதம்! கம்பு தோசைக்கும் நான் கொஞ்சம் அரிசி சேர்த்தேன். பின்னர் சுட்டி தரேன். கொள்ளு ரசம், வடை, உசிலினு பண்ணி இருக்கேன். அடைக்கு ஊற வைக்கும் பொருட்களோடு கொள்ளையும் சேர்த்து ஊற வைத்து அரைப்பாள் மருமகள்.
Deleteமல்லிகைப் பூ இட்லி ன்னு எல்லாரும் சொல்றாங்களே... வேற உதாரணம் கிடைக்கலையா? ஒருவேளை வாசனையா இருக்குமோ?
Deleteரொம்ப சாஃப்ட் இட்லி சாப்பிட்டு எத்தனை வாரங்க(மாதங்க)ளாகிவிட்டன. அதுவும் மிகச் சூடாக, நல்லெண்ணெய் மிளகாய்ப்பொடியோடு... எப்போது அமையப்போகிறதோ..
நான் அரிசி சேர்த்துப் பலமுறை முயற்சி செய்தேன்ன் கீசாக்கா பூ வரவில்லை:)).. ஆனா ரவ்வையில் செய்தால் வருது..
Deleteஉண்மைதான் நெல்லைத்தமிழன், பூப்போல இட்லியும், மெத்துமெத்தெனத் தோசையும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. என்னதான் வீட்டில சமைச்சாலும், இடையில கடையில் சாப்பிடும்பொது ஒரு வித்தியாசமான சுவை கிடைக்கும்.
திருமணத்தால் நொந்த கதை. கர்ணன் பாட்டு அருமை.
ReplyDeleteஅடுத்த காணொளி அப்பாவின் நமட்டு சிரிப்பு (பாரதி பாஸ்கர்) அருமை.
வடிவேலுக்கு அடுத்து வரும் காணொளி வரவில்லை எனக்கு.
கொடிது கொடிது விடுமுறையை கொண்டாடும் மக்கள் பாடும் பாட்டு அருமை.
ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு இரண்டும் நன்றாக இருக்கிறது.
துள்ளும் குருவி அழகு.
ஆஹா பொறுமையாக அனைத்தையும் ரசிச்சிருக்கிறீங்க.. இம்முறை வந்தோர் எல்லாம் பொறுமையாக எல்லாம் பார்த்திருக்கிறீங்க மகிழ்ச்சி... யான் பெற்ற இன்பம் பெறுக எல்லோரும்:)).. நன்றி கோமதி அக்கா.
Delete//திருமணத்தால் நொந்த கதை//
Deleteஹா ஹா ஹா சிலருடன் குடும்பம் நடத்தவே முடியாதெல்லோ.. இப்படி ஏடாகூடமாகவே பேசுவார்கள், ஆனா அவர்களைப் புரிஞ்சவர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்...
//வடிவேலுக்கு அடுத்து வரும் காணொளி வரவில்லை எனக்கு//
திரும்ப பாருங்கோ கோமதி அக்கா.. அது மனதுக்கு நிம்மதி தரும் ஒரு பேச்சு:))..
துள்ளும் குருவிகள் அது கோபு அண்ணன் வீட்டில் இருந்து களவெடுத்தது ஹா ஹா ஹா..
//தானியங்களோடு விளையாடி சுண்டல், வடை செய்வதென்பது ஒரு அலாதி பிரியம்.. கொள்ளு வடை என் அடுத்த போஸ்ட்டில் போடுறேன் பாருங்கோ.. எதுக்கும் நேரம் போதாமல் போயிடுது.//
ReplyDeleteஎங்கள் ப்ளாக்கில் கொடுத்த பதிலை படித்து விட்டேன். கொள்ளு வடைக்கு நன்றி.
ஆஹா அங்கு ஓடிச்சென்று, இதனை இங்கு காவி வந்திட்டீங்கள்.. பல தடவைகள் அங்கு உங்களுக்கு ஏதும் சொல்லுவேன், பதிலிருக்காது, பார்த்திருப்பீங்கள் என நினைப்பேன்ன்.. ஆனா இப்படிப் பார்க்காமல் விட்டுப்போகிறதோ சிலது... எல்லொரும் பிசிதானே..
Deleteநன்றி..
மொச்சை கொட்டை வாய்வு. ஆனால் புரதம் அதிகம். முளை கட்டுவது கடினம். ஆனால் ஊறவைத்து குக்கரில் வேக வைக்கவேண்டும். எவ்வளவு வெந்தாலும் குழையாது. மொச்சை கொட்டை மாதிரி முழிக்கிறதைப் பார் என்பது ஒரு சொலவடை. இரண்டு வகை மொச்சை உண்டு வெள்ளை மற்றும் கருப்பு. கத்தரிக்காய் மொச்சை கொட்டை புளிக் குழம்பு செய்வார்கள். நவராத்திரியில் சுண்டல் செய்வார்கள். சப்பாத்திக்கு மொச்சை மசாலா செய்வார்கள். உருளை மொச்சை வறுவல் செய்வார்கள்.
ReplyDeleteகாப்பி இது என்ன பிரமாதம். இங்க கிடைக்கிற சுக்கு மல்லி திப்பிலி மிளகு காபி பொடி யை விடவா? காபியில் இஞ்சி தட்டி சேர்த்து குடித்து பாருங்கள். Jayakumar
வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..
Delete//மொச்சை கொட்டை வாய்வு. ஆனால் புரதம் அதிகம். முளை கட்டுவது கடினம். ஆனால் ஊறவைத்து குக்கரில் வேக வைக்கவேண்டும். எவ்வளவு வெந்தாலும் குழையாது.//
ஆஹா மிக அருமையான மெயின் தகவல்கள் தந்திருக்கிறீங்க... இப்படித்தெரிஞ்சிருந்தால் பயப்பிடாமல் அவித்திருப்பேன்.. மிகுதியை அவிக்கப் போகிறேன்.
ஓ கருப்பிலும் உண்டோ? வெள்ளையைக் கண்டுபிடிக்கவே 7 வருஷமாச்செனக்கு ஹா ஹா ஹா..
கத்தரிக்காய்..மொ.கொ.. ப் குழம்புதான் நான் செய்ததும், வற்ற விட்டு விட்டேன், வீட்டில் தண்ணி[குழம்பு] தேவைப்படுவதில்லை ஆருக்கும்.
//காப்பி இது என்ன பிரமாதம்.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா இதுவரை குடிச்சதில் இது நன்றாக இருந்தது. ஆனா நாங்கள் ரீ க்குத்தான் அடிமை, கோப்பி எப்போதாவதுதான், இருந்தும் எப்படியோ பிள்ளைகள் இருவரும் கோப்பிக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.. அது பேரன் பேத்தியால வந்த சந்ததியாக இருக்கோணும்:).
//காபியில் இஞ்சி தட்டி சேர்த்து குடித்து பாருங்கள்//
இது என்ன புதுக் கதை? காப்பியில் இஞ்சி? ரீயில் தான் எப்பவும் போடுவோம்ம்.. கோப்பிய்ல் வேர்க்கொம்பு[சுக்கு] தான் சேர்ப்பார்கள்.. புதுமுறை சொல்றீங்கள் பார்ப்போம்.
ஆனா நீங்கள் ஒவ்வொரு தடவையும் சொல்லுவதைப்பார்க்க, சமையல் வல்லுனர்போல தெரிகிறீங்கள்.. சமைப்பீங்களோ ???
மிக்க நன்றி ஜே கே ஐயா.
ஆதமாராமின் காணொளியும் கேட்டேன் , பதட்டபாடமல் நம் வேலையை செய்து கொண்டு இருத்தல் நலம் தான்.
ReplyDeleteஇறைவன் கையில் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு நானும் சில காலமாய் நானும் அமைதியாக தியானம் செய்து கொண்டு இருக்கிறேன். சில நேரம் பதட்டம் வரும் தான், மீண்டும் மீண்டும் இறைவன் காலை பற்றிக் கொள்கிறேன்.
நல்ல காணொளி. நல்ல வழியை இறைவன் காட்டுவான்.
ஓ கேட்டு விட்டீங்களோ.. இதைக் கவனிக்கவில்லை நான்.
Deleteஉண்மைதான் “பதறிய காரியம் சிதறிடும்” என ஒரு பழமொழொ உண்டெல்லோ.
நான் எப்பவும் நினைப்பது கோமதி அக்கா, எதுவும் நம் கையில் இல்லை, நடக்க இருப்பதை ஆராலும் தடுக்க முடியாது, எனவே நாம் அமைதியாகவே இருக்கோணும், நல்லதே நடக்கும், நடக்கோணும் என நினைச்சுக் கொண்டிருப்பது நல்லது, அதுதான் நம்மாலும் முடிஞ்சது..
மிக்க நன்றி கோமதி அக்கா.
அபார விருந்து அதிரா ஸாரி அருந்ததி அதிரா பக்கத்தில்.
ReplyDeleteமொச்சை வாய்வு தான்.
கூடவே இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
இரண்டு தடவையாக வேக வைக்கலாம்.
வாசனை கொஞ்சம் சகிக்க முடியாதுதான்.
கணவன் மனைவி வாக்கிங்க் ஹாஹாஹா. ஸொ ஒரிஜினல்.
பாரதி பாஸ்கர் எப்பவும் பிடிக்கும்,.
மான் கதை குழந்தைகளுக்குச் சொல்கிறேன்
மிக அருமை அதிரா. நன்றி.
வாங்கோ வல்லிம்மா வாங்கோ..
Deleteஹா ஹா ஹா பெயரை கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க..
நான் உள்ளிதான் அதிகம் சேர்ப்பேன்ன்.. ஓ உள்ளி=பூண்டு:).. இஞ்சி சேர்த்தால் சுவை கசப்ப்பாகிடுது.
//வாசனை கொஞ்சம் சகிக்க முடியாதுதான்.//
அது சும்மா ஊறவிட்டு எடுத்தபோது மணம் வரவில்லை வல்லிம்மா, ஆனா முளைக்கட்டுமே என தண்ணியை வடிச்சுப் போட்டு ஒரு நைட் வைத்து மறுநாள் காலையில் நல்லவேளை செக் பண்ணுவோமே என பார்த்தால், ஒருவித நாற்றம் ஹையோ ஹையோ.. உண்மையில் ஊரில “மொச்சை மணம்” என சில இலைகள் பூக்களைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. அதனை அன்றுதான் அனுபவித்தேன்.. என்னா மணம் அது:)) ஹா ஹா ஹா.
நன்றி வல்லிம்மா அனைத்துக்கும்.
/அவணில வச்சு றோஸ்ட் பண்ணி எடுத்திருக்கிறேன்,// இதுதான் பார்க்க நல்லாயிருக்கு. நீங்கதான் இந்தமாதிரி விபரீத விளையாட்டெல்லாம் செய்வீங்க. இப்ப இங்கு எல்லா தானியங்களும் சேர்த்து பாக்கெட் விற்கிறாங்க. அதை பார்த்ததும் உங்க ஞாபகம் வந்தது. ஆனா நான் வாங்கி வந்து ஊறவைத்து அடை செய்தேன் சூப்பரா இருந்தது. பருப்பு வகைகளுக்கு பெருங்காயத்தூள் போட்டால் நல்லது.
ReplyDeleteஇப்ப நெல்லிக்காய் சீசன் போல என்னிடம் இருக்கு. ஒவ்வொருநாளும் ஒன்று சாப்பிடுவது. தோசை இன்று எங்க வீட்டில். கம்பு எவ்வளவு நேரம் ஊறவிட்டீங்க.?
அடுத்தமுறை ஏசியன் கடைக்கு போனால் கோப்பித்தூள் வாங்குறேன்.
கொள்ளுவடை பார்க்க நல்லாதானிருக்கு. செய்துபார்த்தால்தான் தெரியும். இங்கு உறைப்பு எனில் ஓகே.
சும்மா தொகுப்புகள் அருமை. டிக்டாக் சூப்பர்..மான் ஸ்டோரியும் அருமை.
வாங்கோ அம்முலு வாங்கோ..
Delete//இதுதான் பார்க்க நல்லாயிருக்கு. நீங்கதான் இந்தமாதிரி விபரீத விளையாட்டெல்லாம் செய்வீங்க.///
ஹா ஹா ஹா எனக்கு சாப்பாட்டை விட கொறிப்பது அதாவது தானியங்கள் கொறிப்பதுதான் பிடிச்ச பொழுதுபோக்கு... அதனால பயறு, கொ. கடலை எல்லாம் வறுத்து ஸ்ரொக் வச்சிருப்பேன்ன்ன்..
//இப்ப இங்கு எல்லா தானியங்களும் சேர்த்து பாக்கெட் விற்கிறாங்க.//
றோஸ்ட் பண்ணியும் அப்படிக் கிடைக்குது அம்ம்முலு லிடிலில் பார்த்த நினைவு.. அது உங்கள் நாட்டு சூப்பமார்கட்தானே.. ஆனா அந்த சுவை எனக்குப் பிடிக்கவில்லை, செமிபாடில்லாதமாதிரி நெஞ்சுக்குள் பிரட்டுவது போல இருந்தது, பின்னர் விட்டு விட்டேன்.. இப்படி நானாக செய்வது நல்லா இருக்குது. இப்பவும், பக்கத்தில் பயறு அவணில் போட்டது கொறிச்சுக் கொண்டே ரைப்பிங்:))
//பருப்பு வகைகளுக்கு பெருங்காயத்தூள் போட்டால் நல்லது//
Deleteஓம் நானும் பெருங்காயம் உள்ளி எல்லாம் நிறையப் போடுவேன், எனகு மட்டும்தான் இந்தப் பிரச்சனை வீட்டில் கர்ர்ர்ர்:))..
எங்கள் தமிழ்க்கடையில் எப்பவுமே நெல்லிக்காய் கிடைக்குது அம்முலு.
இப்போ பனங்கிழங்குதான் சீசனாம்.. கடைக்கு வந்ததாம் முடிஞ்சு போச்சாம்ம் கர்:)).. அஞ்சு வாங்கினாவாமே எனக்காக வாங்கி அவ சாப்பிட்டவவாம்.. தேம்ஸ்ல தள்ளிடுவேன் என மிரட்டி வச்சிருக்கிறேன் கர்ர்ர்ர்:)).
//கம்பு எவ்வளவு நேரம் ஊறவிட்டீங்க.?//
உளுந்துடன் சேர்த்தே ஊறவிட்டேன், காலையில் போட்டு ஈவினிங் அரைச்சு கொஞ்சம் சுட்டேன், பின்பு அடுத்தநாள் சுடும்போதுதான் இன்னும் நன்றாக வந்தது.. படத்தில் இருப்பது... கம்பு போட்டால், மா ஒருவித பச்சைக் கலராக வரும்... சில சமயம் கொள்ளும் சேர்ப்பேன் அது கறுப்பாகும்.
கொள்ளு அரைக்கும்போதே கொஞ்சம் ப மிளகாய் சேர்த்தரைச்சேன், பின்பு செத்தல் மிளகாய் வெட்டிப் போட்டேன்...
மிக்க நன்றிகள் அம்முலு.
//இந்தத் துள்ளும் குருவிகளை, நான் எங்கிருந்தும் கை நடுங்க கால் வெடவெடக்கக் களவெடுக்கவில்லையாக்கும்:).. இது அந்த, கோபு அண்ணனின் பெட்டிக் கடை மீது ஜத்தியம்:))//
ReplyDeleteஆஹா .... என்னருமை லவ் பேர்ட்ஸ் இரண்டையும் காணுமே எனக் கலங்கிவிட்டேன். :(
காதலர் தினத்திற்குள், அவசரமாக லண்டன் போகணும் எனக் கிளம்பி விட்டார்களோ, அல்லது யாரேனும் அவர்களைக் களவாடி விட்டார்களோ !!
அதிராவிடம் இருப்பதில் நிம்மதியே, மகிழ்ச்சியே. அனைவருக்கும் அந்த நாள் நல்வாழ்த்துகள். எ ஞ் ஜா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ய் ! :)
வாங்கோ கோபு அண்ணன் வாங்கொ..
Deleteஆஹா இரு குருவிகளும் உங்களை இங்கே அழைச்சு வந்து விட்டனவே... ஹா ஹா ஹா..
//காதலர் தினத்திற்குள், அவசரமாக லண்டன் போகணும் எனக் கிளம்பி விட்டார்களோ, அல்லது யாரேனும் அவர்களைக் களவாடி விட்டார்களோ !!//
இல்ல இல்ல காதலர் தினத்தைக் கொண்டாடத்தான் விசா எடுத்து வந்திருக்கினம்:))..
மிக்க நன்றி கோபு அண்ணன்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteமுதல் படம் ரொம்ப நன்றாக உள்ளது. சமர்த்தாக அமர்ந்திருக்கும் பூசார் முகத்தில் அப்படி ஒரு அழகு.
மொச்சை பயங்கர வாய்வு. அதனால் இதை நான் உணவில் சேர்ப்பதில்லை. இங்கு பச்சை மொச்சையை "அவரைக்காய்" என்கிறார்கள். வந்த புதிதில் அவரைக்காய் போலவே இருந்ததில், ஒரு தடவை தெரியாமல் நம்மூர் அவரைக்காய் என நினைத்து வாங்கி விட்டோம். நறுக்கவே வரவில்லை. உரித்துக் பார்த்தால் நம்மூர் மொச்சை. ஆனால் பச்சை மொச்சை. ரோட்டோர கடைகளில் இதை உரித்து வைத்து விற்பனையும் செய்கிறார்கள். இதை வைத்து "அவரைக்காய் மேளா" என ஸ்டால் வைத்து கண்காட்சி மாதிரி நடந்தது. அதில் இதில் தோசை போன்ற டிபன் ஐயிட்டங்கள் மட்டுமின்றி, அவரை அல்வா, பர்பி என இனிப்பு வகைகளும் இடம் பெற்றன. நமக்குத்தான் ஒத்துக் கொள்ளுமா என தெரியவில்லை.
கொள்ளு வடை நன்றாக உள்ளது. கம்பு தோசையும் அழகாக உள்ளது (அது அதியமானின் நெல்லி என்பதினால், தோசை உட்பட எதையும் எடுக்காமல் வெறுமனே பார்த்துக் கொண்டேன்.ஹா. ஹா. ஹா. )
காப்பியும் இங்கு பல வருடங்களாகவே "காப்பி டே"தான். தாங்கள் குடித்த காப்பியம் ருசியாக இருந்தமைக்கு ரொம்ப மகிழ்ச்சியடைந்தேன்.
காணொளிகள் அருமை. வாக்கிங் பிரச்சனை எங்கு பார்த்தாலும் அதே மாதிரிதான் போலும். (வீட்டுக்கு வீடு வாசல் படி..அந்த "கிங்"கும் ஒரு வழியாக படி தாண்டினால்தானே வாக் "கிங்"...ஐயோ எனக்கென்னமோ உங்களை மாதிரி ஆயிடுத்தே இன்னைக்கு. ஹா. ஹா.ஹா.)
பாரதி பாஸ்கர் பேச்சு எனக்கும் ரொம்ப பிடிக்கும். நிதர்சனமாக பேசியுள்ளார்.
ஊசி இணைப்பு கொடியதை விளக்கியது. ஊசிக்குறிப்பு, மிகவும் அருமை. முற்றுப்புள்ளிகளின் அருமையை உணர்த்தியது. இரண்டுமே எப்போதும் போல் நன்றாக இருந்தது. ரசித்தேன்.
படங்கலெல்லாம் அருமை. பதிவை ரொம்பவே ரசித்தேன். அதற்கு அந்த துள்ளும் குருவிகளே சாட்சி.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ..
Deleteஇம்முறை எல்லோரையும் ஓட வைத்திருக்கிறேன்:)).. கொஞ்சக்காலம் அமைதியாக இருக்க விட்டனானெல்லோ அதனாலதான்:)).
//மொச்சை பயங்கர வாய்வு//
அதை நானும் உணர்ந்தேன், வாய்வுகூடப் பறவாயில்லை, வெளியேறிட்டால் ஓகே, என் பிரச்சனை வயிற்றில் நின்றுவிடுகிறது வாய்வு.. பின்னர் கஸ்டப்படுவேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
//ஆனால் பச்சை மொச்சை. //
அது அதிகம் சுவையாக இருக்குமென நினைக்கிறேன், கனடாத்தமிழ்க் கடையில் ஒருவித முத்தல் அவரை விற்பார்கள்.. பாலவரை போல இருக்கும், அதனை வாங்கினால், கொஞ்சம் பிஞ்சாகவும் இருக்கும் முக்கால்வாசியும் உடைச்சு பருப்பு எடுக்க வேண்டி வரும், அதை பிரட்டல் கறி வச்சால் சுவையோ சுவை...
நான் இம்முறை சிறகவரை வாங்கி வந்திருக்கிறேன், ரெசிப்பி வரும்:)).
//"அவரைக்காய் மேளா" //
ஓ அவரைக்கு இவ்ளோ மரியாதை..
எங்கள் ஊர் வீட்டில் “குரங்கு அவரை” என ஒரு கொடி தானாக முளைச்சு, காய் என்றால் கொத்துக் கொத்தாக காய்த்தது... எல்லோருக்கும் சப்ளை பண்ணுவோம்.. அந்த அவரையை எங்கள் தமிழ்க் கடையில் பார்த்தேன்.
இதேபோல பின்னர் கொழும்பு வீட்டில் ஒரு பனி அவரைக் கொடி அதுவும் தானாக முளைச்சு.. காய் என்றால் சொல்லி வேலை இல்லை....அவ்ளோ காய் காய்த்தது.
//(அது அதியமானின் நெல்லி என்பதினால்,//
Deleteஹா ஹா ஹா அதேதான் அதியமானுக்கு ஒளவைப்பாட்டி நெல்லிக்கனி கொடுத்தாவாமே.. அந்தக் கதையைப் படிக்கோணும் நான்.
//அந்த "கிங்"கும் ஒரு வழியாக படி தாண்டினால்தானே வாக் "கிங்"...ஐயோ எனக்கென்னமோ உங்களை மாதிரி ஆயிடுத்தே இன்னைக்கு//
ஹா ஹா ஹா நல்லா எதுகை மோனை... இதுவேற மோனை:)) யில பேசப் பழகிட்டீங்கள்.
//அதற்கு அந்த துள்ளும் குருவிகளே சாட்சி..//
ஹா ஹா ஹா மாட்டிட்டீங்க.. மாட்டிட்டீங்கள்.. துள்ளும் குருவிகளுக்கு சொந்தக்காரர் கோபு அண்ணன்.. லிங் வேணுமோ?:)) ஹா ஹா ஹா ஓகே ஓகே ஓடாதீங்கோ..
அனைத்துக்கும் மிக்க நன்றி.
அளவாகச் சேர்த்தால் எதுவும் வாய்வு இல்லை, வாழைக்காய், உருளைக்கிழங்கு உள்பட. நான் அடிக்கடி சமையலில் மொச்சைக்கொட்டை சேர்ப்பேன். ஆனால் இரண்டு டீஸ்பூன் தான் தாளிதத்தில்! மொச்சை போட்டுக் குழம்பு வைக்கையிலும் அதே இரண்டு டீஸ்பூன் தான். நவராத்திரிச் சுண்டலுக்குக் கொஞ்சம் பெருங்காயம் அதிகம் சேர்த்து நன்கு குழைய வைத்துவிடுவேன். மதுரையில் தோல் உரிக்கப்பட்ட மொச்சை உரிச்ச மொச்சை என்னும் பெயரில் மொச்சைப்பருப்பு என்றும் சொல்வார்கள். அது கிடைக்கும். அது எனக்கு ரொம்பப் பிடித்தமானது. கர்நாடகத்தில் இந்த மொச்சையை வைத்துச் சமையல் செய்தால் அது விருந்தாளிக்குச் செய்யும் மரியாதை!
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ..
Delete//நான் அடிக்கடி சமையலில் மொச்சைக்கொட்டை சேர்ப்பேன். ஆனால் இரண்டு டீஸ்பூன் தான் தாளிதத்தில்!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ மொ.கொ யின் சுவையே தெரியாதே கீசாக்கா.. எதையும் தனியாக சாப்பிடும்போதுதானே சுவை தெரியும்.., ஆனா நீங்கள் சேர்ப்பதைப்போல சேர்த்தால் வாய்வுப் பிரச்சனை இருக்காதுதான்.
மொச்சையில் இவ்ளோ விசயமிருக்கோ.. பச்சை மொச்சைக் குழம்பு என ஒரு வீடியோப் பார்த்தேன்.
இங்கு அவரை, மொச்சை இரண்டையும் ரொம்ப ஸ்பெஷலாக நினைக்கிறார்கள். அவரைக்காய் தோசை என்பது மிகவும் பிரபலம் (எனக்கு அதெல்லாம் பிடிக்காது. எனக்குப் பிடித்தது தமிழக தோசை, ஹோட்டல் சாம்பார்). ஆனா பசங்க இவற்றை விரும்புகிறார்கள் (நல்லவேளை..என்னைப் போல் உணவு மாற்றம் சகிக்கமுடியாதவர்களாக அவர்கள் இல்லை)
Deleteஎனக்கு தோசை இட்லியில் காய்கறி சேர்ப்பது பெரிதாக பிடிப்பதில்லை நெ தமிழன், அது சும்மா பெயருக்காகத்தான் சேர்க்கிறார்கள்.. சாப்பிட்டால் உடம்பில அதன் சத்து கொஞ்சமாவது ஒட்ட வேண்டாமோ?.. அவரைக்காய் கறி வைத்து 2 கரண்டி சாப்பிட்டாலும் உடம்பில சேரும் என நினைகும் ரகம் நான்:).
Deleteகாணொளி எல்லாம் அப்புறமா வந்து தான் பார்க்கணும். ஊசிக்குறிப்பும், ஊசி இணைப்பும் அருமை என்றாலும் ஔவையாரை ஐயனார் ஆக்கிட்டீங்களே!
ReplyDeleteஒளவைப்பாட்டி அப்பப்ப எத்தனிஅயோ வடிவம் எடுக்கிறார் ஹா ஹா ஹா..
Deleteநீங்க போட்டுக்குடிச்ச அந்தக் காஃபிக்கு நாங்க பால் சேர்க்க மாட்டோம். அதே போல் சர்க்கரை(வெள்ளை)யும் சேர்க்க மாட்டோம். வெல்லத்தூள் அல்லது கருப்பட்டி அல்லது பனங்கல்கண்டு தான். எங்க வீட்டில் எப்போவுமே பனங்கல்கண்டு இருக்கும். ஆகவே அநேகமா அதான்.
ReplyDeleteஅந்தக் கோப்பிக்கு நாங்களும் பால் சேர்க்காமல்தான் குடிக்கிறோம் கீசாக்கா, பால் சேர்த்தால் சுவை இல்லாமல் இருக்குது.
Delete//சர்க்கரை(வெள்ளை)யும் சேர்க்க மாட்டோம்//
ஓ நான் பிரவுண் சுகர்தான்[சீனி] இப்போ வீட்டில் பாவிப்பது, அது போட்டால்தான் நல்லாயிருப்பதுபோல ஒரு ஃபீலிங்..
ஜக்கெரியுடன் இடைக்கிடை குடிப்பேன்[இதைத்தான் நாங்க சக்கரை என்போம்:)]
//ஜக்கெரியுடன் இடைக்கிடை குடிப்பேன்[இதைத்தான் நாங்க சக்கரை என்போம்:)]//
Deleteஅப்போ பஞ்சார அல்லது பஞ்சசார என்பது என்ன ? Jayakumar
//அப்போ பஞ்சார அல்லது பஞ்சசார என்பது என்ன ? Jayakumar//
Deleteஎனக்கு இதுபற்றி எதுவும் தெரியாதே ஜே கே ஐயா!!...
https://geetha-sambasivam.blogspot.com/2018/09/2.html கம்பு அடை, தோசை இரண்டும் காணக்கிடைக்கும்.
ReplyDeleteஆஆஆஆஆஆஅ வந்து பார்த்திட்டேன் கீசாக்கா.. உங்கள் முறையில் அடை செய்து பார்க்கிறேன்.
Deleteமிக்க நன்றிகள் கீசாக்கா அனைத்துக்கும்.
எத எதோட கோத்து விட்டுருக்கீங்க? இருந்தாலும் எனக்குப் பிடிக்காத மொச்சைக் கொட்டையோடு காதலர் தினத்தை கோர்த்து விட்டமைக்கு மென்மையான கண்டனங்கள் உரித்தாகட்டும்.
ReplyDeleteநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
வாங்கோ சிகரம் பாரதி, நீண்ட இடைவெளியின் பின்பு வந்திருக்கிறீங்க.. மிக்க நன்றி.
Deleteஉறைப்பான கோப்பித்தூள் கடந்த வருடம் இந்தியாவில் வாங்கியந்து நான் மட்டுமே குடித்து முடித்தேன்![[[[
ReplyDeleteவாங்கோ நேசன் நலம்தானே..
Deleteயேஸ் உந்த உறைப்புக் கோப்பி எல்லா நேரத்திலும் குடிக்க முடியாது, முக்கியமாக தோய்ந்தாஅல் அல்லது முழுகினால் உடனே பிளேனாக சீனி மட்டும் போட்டுக் குடிக்க சுப்பராக இருக்கும்.
மொச்சைக்கொட்டை இனித்தான் தேடிப்பார்க்க வேண்டும்.
ReplyDeleteஎப்போவாச்சும் சாம்பார் செய்யலாம். வேறு எதற்கும் அது தோதுப்படாது. பேசாம தேடுவதை விட்டுடுங்க. ஹா ஹா
Deleteஹா ஹா ஹா நானும் நெல்லைத்தமிழனை வழிமொழிகிறேன்ன்.. தேடுவதை விட்டிடுங்கோ அதில ஸ்பெஷலாக ஒன்றுமில்லையாக்கும்:))..
Deleteஇன்னும் முற்றுப்புள்ளி வைக்கத்தெரியாமல் தான் வாழ்க்கை தடுமாறுகிறது.ஊசிக்குறிப்பு அருமை.
ReplyDeleteஹா ஹா ஹா உண்மைதானே நேசன்.. மிக்க நன்றி மறக்காமல் வருகை தருவதற்கு.. அப்பப்ப இப்படி நேரமுள்ளபோது எட்டிப்பாருங்கோ.. பழையவர்களில் நீங்கள் மட்டும்தான் மறக்காமல் வந்து சைன் வைக்கிறீங்கள்.. நன்றி நேசன்.
Delete//உங்களுக்கும் கிடைச்சால் வாங்குங்கோ.. // - அதுக்கு மழை பெய்யணும். நாங்க நனையணும். குளிர் அதிகமா இருக்கணும். அப்ப்றம்தானே இதைச் சூடா சாப்பிட்டால் நல்லா இருக்கும்? சாப்பிட நான் ரெடி. மற்றவற்றை யார் அனுப்புவார்கள்? மழை, குளிர்...
ReplyDeleteவாங்கோ நெ தமிழன் வாங்கோ.... பதில் தர நீண்ட நாளாகிட்டுது.. எனக்கு இம்முறை பயங்கர தலையிடி வந்து போவதும் வருவதுமாகி இருந்தது, அதனால என் பக்கத்தை கொஞ்சம் ஓஃப் ல விட்டிட்டேன்:)..
Deleteமழை குளிருகு ஆசைப்படாதீங்கோ.. சென்னை நிலவரம் தெரியும்தானே.. கொட்டினால் வெள்ளம்.. விட்டால் வரட்சி:)) எனும் பெயரெடுத்துவிட்டதெல்லோ சென்னை:).
//உனக்கு எல்லா இடத்திலும் ப்ராப்ளமா இருக்கலாம் - காணொளி// - தொடர்ந்து அதிரா சமையல் குறிப்புகளைப் போடுவதைச் சொல்கிறாரோ? இருக்கும் இருக்கும். எதற்கும் பொறுமையா இருப்போம். வேற டாபிக்கோட இடுகை போட மாட்டாரா என்ன? ஒன்றும் இல்லைனாலும் அவருடைய தோட்டம், அதற்குப் பின்னால் அந்தக் கப்பல் வருவது போன்ற படங்களையாவது போட்டு, சமையல் குறிப்பிலிருந்து மாறுபட்டு வேறு இடுகை போடுவார்... மனமே தளராதே
ReplyDeleteஹா ஹா ஹா சமையல் வாரம் முடிஞ்சு போச்சு:)) இனி ஃபீலிங்ஸூ வாரம் ஆரம்பிக்கலாம் எனும் யோசனையில் இருக்கிறேன்:))
Deleteஆனாலும் ஒரு மகிழ்ச்சி.. என்ன தெரியுமோ நெ தமிழன், ஒருவர் ஆரம்பித்து வைத்தால், கொஞ்சமாவது நாமும் போடோணும் எனும் ஆசை வந்திடும்.. என்னைத்தொடர்ந்து அஞ்சு, கோமதி அக்கா வல்லிம்மா எல்லோரும் சமையல் போட்டிருந்தார்கள்.. இனி ஃபீலிங்ஸூ போடுவினம் பாருங்கோ:)) ஹா ஹா ஹா..
Deleteகொடியது எது? -- திங்கக் கிழமை ஒரு செய்முறை வந்தது போய்.... எல்லோரும் எழுதும் செய்முறைகளைப் படிக்கவேண்டியிருக்கிறதே... வெறும் படங்களைப் பார்த்து இது நல்லா இருக்கும், இது சொதப்பல், இது படத்தில்தான் அழகாக இருக்கும் என்றெல்லாம் அனலைஸ் பண்ணவும் வேண்டியிருக்கிறதே.. இதைவிடக் கொடுமை உண்டா?
ReplyDelete//நெல்லைத் தமிழன்Monday, February 17, 2020 2:18:00 am
Deleteகொடியது எது? -- திங்கக் கிழமை ஒரு செய்முறை வந்தது போய்.... எல்லோரும் எழுதும் செய்முறைகளைப் படிக்கவேண்டியிருக்கிறதே..//
ஹா ஹா ஹா புரியுது புரியுது.. அண்ணி இப்போ கிச்சினை உங்களுக்குத் தருவதில்லை எனும் கோபத்தை எங்கள் மேல காட்டுறீங்க ஹா ஹா ஹா பொறுத்திருங்கோ வாற வருசம், சைட்டில உங்களுக்கு என தனியா ஒரு குட்டிக் கிச்சின் செட் பண்ணிடுங்கோ புதுவீட்டில நெ தமிழன்:))..
ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.
மொச்சை - எனக்கும் பிடிக்காது! பொங்கல் சமயத்தில் தான் தமிழகத்தில் நிறைய கிடைக்கும் என்பதால் அப்போது சமைப்பார்கள் வீட்டில். தில்லியில் கிடைப்பதில்லை என்பதால் சமைப்பதே இல்லை.
ReplyDeleteபதிவில் பகிர்ந்து கொண்ட காணொளிகள் அனைத்தும் நன்று.
வாங்கோ வெங்கட் வாங்கோ.. இங்கு மொச்சை பிடிக்காதோர் எனில் நீங்களும் நெ தமிழனும் தான் போல இருக்கே... மிக்க நன்றிகள்.
Deleteமொச்சைக் கொட்டைக்கு...வந்த சோதனை..☹️☹️...
ReplyDeleteஎங்க வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்..அது போட்டு குழம்பு வச்சா ராகி களி க்கு அட்டகாசமா இருக்கும்...
வெங்கட் சார் சொன்னது போல பொங்கல் நேரம் தான் இதற்கு சீசன் ...அப்போ எல்ல காயையும் சேர்த்து இந்த மொச்சையோட புளி கூட்டு செய்வாங்க பொங்கல் அன்னிக்கி... அதான் பொங்கலுக்கு துணை அன்று.....
இங்க கர்நாடக ல...அதில் இருக்க தோலை ஊற வச்சு பிதுக்கி எடுத்துட்டு குழம்பு வைப்பார்கள்.. அதுக்கு பிதுக்கம் பருப்பு ன்னு சொல்லுவாங்க...😊😊😊..
தோசை wow💪💪💪💪...
வாங்கோ அனு வாங்கோ.. ஓ பொங்கல் நேரம் சீசன் என்பதாலதான் போல என் கண்ணில இது கிடைச்சது... இதுவரை காணவில்லை...
Deleteசுவை நன்றாகத்தான் இருக்குது அனு, ஆனா வாய்வுக்குணம் அதிகமாக இருக்கே கர்ர்ர்ர்:)).
//இங்க கர்நாடக ல...அதில் இருக்க தோலை ஊற வச்சு பிதுக்கி எடுத்துட்டு குழம்பு வைப்பார்கள்.. அதுக்கு பிதுக்கம் பருப்பு ன்னு சொல்லுவாங்க//
ஓ இப்படியும் செய்து பார்க்கலாமோ...
மிக்க நன்றிகள் அனு.
ஒரு இடுகையைப் போட்டுவிட்டு, ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கும் திறமை ஒரே ஒருவருக்குத்தான் உண்டு. அது யார் என்று அவரவருக்கே தெரியும். ஹா ஹா
ReplyDeleteஹா ஹா ஹா நெ தமிழன், வளர்த்தால் குடும்பி அடிச்சால் மொட்டை எனும் நிலைமையாகிடுது.
Deleteஉண்மையைச் சொல்லப்போனால் எனக்கு டக்குப் பக்கென, பார்த்தவர் பாருங்கோ பார்க்காதோர் விடுங்கோ என்பதைப்போல போஸ்ட்டை சும்மா சும்மா போட்டுக்கொண்டிருப்பது பிடிப்பதில்லை, ஒன்றைப்போட்டு, ஆற அமர எல்லோரும் இருந்து ரீ குடிச்சு வடை பஜ்ஜி பக்கோடா எல்லாம் சாப்பிட்டு முடித்த பின்னர் மற்றதை போடுவதே பிடிக்குது.. அதனாலதானே நான் ஆரம்பிச்சது 2009 இல் ஆனா இன்னும் 400 போஸ்ட் கூடப் போடவிலை ஹா ஹா ஹா..
மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்., விரைவில எதிர்பாருங்கோ புதுவரவை:))
மிகவும் லேட்டாக பதில் போடுகிறேன். நீங்கள் படிப்பீர்களோ மாட்டீர்களோ? அதனால் சுருக்கமாக நன்று என்று நிறுத்திக் கொள்கிறேன். 'மொச்சை திங்காதே அது புறம் பேசும்' என்னும் சுஹாசினியின் புதுக்கவிதை படித்ததில்லையா?
ReplyDeleteபானுமதி அக்கா வாங்கோ வாங்கோ.. இல்லை புதுப் போஸ்ட் போட முன்பு பழையதுக்கு கொமெண்ட்ஸ் போட்டு முடிச்சிடுவேன், கவனிக்காமல் விட மாட்டேன் அதனால கவலை வேண்டாம்.
Deleteஓ சுஹாசினி அவர்கள் இப்போ கவிதையும் எழுதுறாவோ...
மிக்க நன்றிகள்.
துள்ளும் குருவிகள் அழகு. மொச்சை சாப்பிட வந்துவிட்டன.
ReplyDelete