நல்வரவு_()_


Saturday 23 April 2011

யோசிச்சூஊ.. யோசிச்சுத்தான் வாறாங்க... சே..சே.. தாறாங்க..:))

இது ஆசியா தந்த ஸ்ஸ்ஸ்ஸ்:))



இதூஊஊஊஊ அப்ஷரா தந்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))



இதூஊஊஊஊ ஜல்..ஜல்.. ஜலீலாக்கா தந்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))



அவோட்.. தந்த மூவருக்கும் நன்றி... அதுக்காக.. நேற்று உங்களுக்காக ஒரு கொத்து பூக்கள்... பூக்களைப் பறிக்கக்கூடாது:), அதனால மரத்தில வைத்தே...



இதுதான் மரம்...

இப்போ பூக்கள் எல்லாம் வரத் தொடங்கிவிட்டன... போனவருட இதே மலர்கள் பார்க்க.... இங்கே வாங்க..

========================================================

சரி சரி தெரிஞ்சோ தெரியாமலோ உள்ளே வந்திட்டீங்க:)... எனக்குப் பிடித்த இதை, நீங்களும் படிச்சிட்டுப் போய்வாங்கோ..

உன் பழைய கடிதங்கள்...

வீட்டுச் சுவர்கள் வெள்ளை
பூசிக்கொண்டபோது
பரண்மீது தூங்கிக்கொண்டிருந்த
பழைய புத்தக மூட்டை
பார்வைக்கு வந்தது...


வசீகர இளமையின்
வாசல் படிகளில்
அமர்ந்தபடி நீ எழுதிய
காதல் கடிதங்களின் கட்டு
என் கைக்குக் கிடைத்தது...

தானிய மணிகளின் நடுவில்
ஒரு தங்கமணிமாதிரி
எத்தனைமுறை படித்தாலும்
அலுத்துப் போகாத
உன் எழுத்துக்கள்
கண்ணீரில் தொட்டு
நீ போட்ட கை எழுத்துக்கள்...


எனக்கே மறந்துபோகும்
என் பிறந்த நாளிற்கு
மறவாமல் நீ அனுப்பி வைத்த
வாழ்த்து மடல்கள்...


பதினாறும் நிரம்பாத
பருவத்தில், விரல்களையே
மீட்டிவிடும் வீணையாய்
உனக்கு நீயே கட்டிக்கொண்ட
பிரமிட்டுக்கள் - ஓ
உன் கடிதங்கள்...


காதலன் என்கிற கர்வத்தோடு
அவற்றை வாசித்த
காலங்களுண்டு இப்போதோ
குற்றவாளியைப்போல
குறுகுறுத்துப் போகிறேன்...


நீ வரைந்த கடிதங்கள்
நெஞ்சில் அறைந்த கடிதங்கள்!!!!
(இது கவிஞர் வைரமுத்துவின் கவி என நினைக்கிறேன், எப்பவோ படித்தேன், பெரிதாக இருந்தது, சுருக்கி எழுதி வைத்திருந்தேன் பொக்கிசமாக).

 


பின் இணைப்பு:
(பிடிச்சிருந்துது)



அம்மா வயிற்றில் சுமந்தா
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தாள்
நண்பா!!  நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல!!!

===========================================
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை
===========================================
 
 
ஒரு குட்டி இணைப்பூஊஊ
அது டோக் இல்ல ஜீனோ, “ஹப்பி சண்டே”
 
==================================================

41 comments :

  1. அப்பாடா யாரும் வரல
    முதல் கமெண்ட் ஓடோடி வந்தாச்சு

    அதிரா உங்களை போல் நல்ல கதை கவிதை , பூஸார பற்றி வித விதமா ஹி கமெண்ட் எழுதுபவகளுக்கு தான் அவார்டே கொடுக்கனும்

    ReplyDelete
  2. அதீஸ், வாழ்த்துக்கள்.
    வைரமுத்துவின் கவிதை நல்லா இருக்கு. எனக்கு பிடிச்சது நட்பு கவிதை.
    உங்க கையா அது???? கொஞ்சம் குண்டா இருப்பீங்களோ!!!!( கடவுளே! உனக்கு வாய் தான் எதிரி, வாணி!!!!!)

    ReplyDelete
  3. இதுக்கு தான் கை காண்பிக்க கூடாது,
    இப்ப பாருங்க, வான்ஸ் நீங்க குண்டான்னு கேட்டுபுட்ட்டாங்க
    பூங்கொத்துஅருமை,அந்த கலரும் ரொம்ப பிடிச்சது.
    கவிதையும் , சூப்பரா எங்கிருந்து சேமித்து வைத்து போடுரீங்க
    இன்று பூஸாரின் ஊசி குறிப்பு கம்மியா இருக்கே

    ReplyDelete
  4. அவாட் பெற்றுக் கொண்டதற்கு வாழ்த்துக்கள், நீங்கள் படித்துச் சுவைத்த வைரமுத்து கவிதை எனக்கும் பிடிக்கும்.
    பகிர்விற்கு நன்றீகள்.

    நட்பு பற்றிய தத்துவார்த்தக் கவிதை- தன்னலம் கருதாத நட்பின் சிறப்பினை விளக்கி நிற்கிறது.

    ReplyDelete
  5. வாங்க ஜலீலாக்கா... வட, வடை... எல்லாமே இம்முறை உங்களுக்குத்தான்... நீங்க இன்று சோ... லக்கி:)).

    //அதிரா உங்களை போல் நல்ல கதை கவிதை , பூஸார பற்றி வித விதமா ஹி கமெண்ட் எழுதுபவகளுக்கு தான் அவார்டே கொடுக்கனும்
    //
    ஹா...ஹா...ஹா... மெதுவா ஜலீலாக்கா... சும்மாவே அமே... எல்லாம் புகைக்குது:), இதைப் பார்த்தால் பெற்றோல் ஊத்தியதுபோலாகிடும்... கடவுளே!!!!....:)).

    மியாவும் நன்றி ஜலீலாக்கா... அடிக்கடி தாங்க.. நான் அவோர்ட்டைச் சொன்னேன்.

    ReplyDelete
  6. வான்ஸ்ஸ்ஸ் வாங்க...
    பிடிச்சிருக்கா... பிடிச்சிருக்கா? நான் கவிதையைக் கேட்டேனாக்கும்:)..

    //உங்க கையா அது???? கொஞ்சம் குண்டா இருப்பீங்களோ!!!!( கடவுளே! உனக்கு வாய் தான் எதிரி, வாணி!!!!!)
    //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பேபியாக இருக்கும்போது நான் குண்டுதானாம்... அம்மா சொன்னவ:).

    வாய் மட்டுமோ எதிரி?:))).

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  7. ஜலீலாக்கா... பிரச்சனை கையில இல்ல, வான்ஸ் ட கண்ணில... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க ஜலீலாக்கா:))).

    ஊசிக்குறிப்பு குறைஞ்சுதான் போச்சு... உடம்பு கொஞ்சம் நலமில்லை.. எழுத ஆரம்பித்தேன்... பதிவை போஸ்ட் பண்ணிட்டால் போதுமென இருந்துது... அதனால் சட்டு புட்டென முடிச்சிட்டேன்...

    மியாவும் நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete
  8. வாங்க நிரூபன், முதல்வரவுக்கு நன்றி, நல்வரவு.

    எனக்கும் அவரின் பேச்சுக்கள் பிடிக்கும், முன்பு ரீவியில் போடுவார்கள்.. கவிதை சொல்லிச் சொல்லி பேசுவார்.. கேட்க நன்றாக இருக்கும். இப்போ அவரது பேட்டி எதுவும் நம் ரீவியில் வருவதில்லை.

    நட்புக் கவிதை... படித்தேன் பிடித்திருந்தது... காஆஆஆஆவி வந்திட்டேன்.

    மிக்க நன்றி நிரூபன்.

    ReplyDelete
  9. இப்படி அழகா கவிதை தந்து அட என்று வியப்பதற்கு முன் இது கண்ணதாசனுடையது,வைரமுத்துவுடையது என்று போட்டு ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
  10. அதீஸ்,முகப்பில் அழகிய தத்துவப்பாடல்களை அடிக்கடி தந்து பரவசப்படுத்துகின்றீர்கள்.good job..

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அதிரா.அழகிய கைப் பூங்கொத்திற்கு மிக்க நன்றி. பூங்கொத்து படத்தை எடுத்து செல்கிறேன்,நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு, பாடல் பகிர்வுக்கு நன்றி.கவிதையும் அருமை.ஒரு பதிவில் இத்தனை அசத்தல்களா?

    ReplyDelete
  12. வாங்க ஸாதிகா அக்கா...

    அதூஊஊ நான் சந்திரன் மாஆஆஆஆதிரி... அவங்க.. அதாவது எங்கட கண்ண..தாசன், வைரமுத்து அவர்களெல்லாம் சூஊஊஊரியன் மாதிரி...

    அப்போ சந்திரன் என்ன செய்யும்? சூரியனிடமிருந்து வெளிச்சத்தைக் கடன் வாங்கித்தானே... தான் பெரிய ஒளி:) பரப்பாளர்போல மின்னுறவர்... :)... நானும் அப்பூடித்தேன்ன்ன்ன்ன்:))).

    பாட்டைப் பற்றிய கருத்துக்கு மிக்க நன்றி. எனக்கு தத்துவப்பாடல்கள் காதில் ஒலித்தால் கொஞ்சநேரம் நகராமல் நின்று கேட்பேன்.... அவற்றைப் போட இப்பூடி ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி. அதிலும் நீங்க கவனித்ததையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி.

    சரி ஸாதிகா அக்கா... நான் அவோர்ட் பெற்றிருக்கிறேனே.... அதுக்கு ஊக்குவிப்பாக பரிசேதும் இல்லையோ? சரி சரி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிடாதீங்க...:).

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  13. வாங்க ஆசியா...

    நீங்க அவோர்ட் தந்து எவ்ளோ காலமாகிட்டுது, இன்னும் போடவில்லையே என மனம் உறுத்திட்டே இருந்துது, இப்பத்தான் நிம்மதி.

    பூங்கொத்தை உடனடியாக தண்ணிக்குள்ள வையுங்க அப்பத்தான் வாடாது:).

    நீங்களும் பாடலை ரசித்திருக்கிறீங்க மிக்க நன்றி.

    //ஒரு பதிவில் இத்தனை அசத்தல்களா?//

    ஒவ்வொரு முறை பதிவிடும்போதும், என் மனதில ஒருவித கூச்ச உணர்வு இருந்துகொண்டே இருக்கு:).... பெரிதாக விஷயமேதுமில்லையே... இதெல்லாம் ஒரு பதிவா என... ஆனா, நீங்க எல்லாம் உண்மையாகவோ அல்லது விளையாட்டாகவோ என்றாலும் இப்பூடிச் சொல்லும்போது மனதில ஒரு திருப்தி சந்தோஷம் கிடைக்குது... மியாவ்...மியாவ்..:).

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அதிரா.கவிதை அழகா இருக்கு.

    ReplyDelete
  15. ”மூன்” று அவார்ட்டுகளுக்கும் வாழ்த்துக்கள். இது வேற மூஊஊஊன்!

    நல்லவர்களுக்கு எல்லாம் ரண்டு சாட்சி இலை ஒரே ஒரு சாட்சிதான் அதுவே தெய்வமும், மனசும் ஆகும் ஏன் என்றால் அதனிடம் பொய்சொல்லமுடியாதே :)

    இரண்டு பின்னுமே நல்லா குத்துது :) சூப்பரா இருக்கு

    //உங்க கையா அது???? கொஞ்சம் குண்டா இருப்பீங்களோ!!!!( கடவுளே!// என்ன ஆச்சு கால்வச்ச வனிக்கு பூஸ் காலுக்கும் பக்கத்து வீட்டுக்கு நியூவா வந்த பாட்டி கைக்கும் வித்தியாசமே தெரியலை :))))) (பி.கு) பூஸ் என்ன அவ்வளவு ஈஸியாவா கைய காட்டும்???

    பி.கு: இவக வேற அவக வேற :)

    //உனக்கு வாய் தான் எதிரி, வாணி!!!!!)// என்னாஆது இது வாய் எப்படி எதிரியாக முடியும் கையும் கீ கீக் கீஇ சேஎ கீ போர்ட் தானே :)))

    //சரி ஸாதிகா அக்கா... நான் அவோர்ட் பெற்றிருக்கிறேனே.... அதுக்கு ஊக்குவிப்பாக பரிசேதும் இல்லையோ? சரி சரி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிடாதீங்க...:).// என்னா இது ஸாதிகா அக்கா good ”JO பூஊஊஊஊ” கொடுத்து இருக்காங்க அதுக்கு தேங்க்சூஊ சொல்லாமல் கர் சொல்லு பூஸூ

    பி.கு: ஊர் சுத்தும் போது மயில் கிட்ட மாட்டிக்கிட்டேன் :)))

    ReplyDelete
  16. ஆ... ஹைஷ் அண்ணன் நீங்களோ? பெயரை ஒரு தடவை மீண்டும் செக் பண்ணிப்பார்த்திட்டேன்... கால் தலை எல்லாம் இருக்கு:) நீங்களேதான்... வாங்க வாங்கோ.

    என்னாது “மூன்” அவோர்ட்டா....? கடவுளே வருமுன்பே கிட்னிக்கெல்லாம்:) வேலை வைச்சிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //நல்லவர்களுக்கு எல்லாம் ரண்டு சாட்சி இலை ஒரே ஒரு சாட்சிதான் // இதென்ன இது புதுசு புதுசாக் கண்டுபிடிக்கிறீங்க... தலைசுத்துதூஊஊஊஊஊ:)).

    //இரண்டு பின்னுமே நல்லா குத்துது :) சூப்பரா இருக்கு
    // ஹா..ஹா..ஹா.. அது குத்தாத ஊசி:).. மியாவும் நன்றி.

    //என்ன ஆச்சு கால்வச்ச வனிக்கு பூஸ் காலுக்கும் பக்கத்து வீட்டுக்கு நியூவா வந்த பாட்டி கைக்கும் வித்தியாசமே தெரியலை //

    கடவுளே விடிய எழும்பி சிரிச்சு முடியேல்லை....:))).

    ஹைஷ் அண்ணன்! பாட்டிக்கு மணி பார்க்கத் தெரியுமோ? கையில கட்டிக்கிடக்கே:)).

    //(பி.கு) பூஸ் என்ன அவ்வளவு ஈஸியாவா கைய காட்டும்???//

    கரெக்ட்டாப் புரிஞ்சிருக்கிற ஒரே ஆள் நீங்கதான்:)), இலகுவில கையைக் காட்டி “Bye” யாருக்கும் சொல்லாது... வெல்கம்தான் கிக் கிக் கிக்......:))).

    //பி.கு: இவக வேற அவக வேற :)//

    அடக் கடவுளே!!! நல்ல தெளிவாத் தானே நித்திரையால எழும்பினேன், இப்போ கொயம்பிட்டனே:)))).

    ReplyDelete
  17. ///என்னா இது ஸாதிகா அக்கா good ”JO பூஊஊஊஊ” கொடுத்து இருக்காங்க அதுக்கு தேங்க்சூஊ சொல்லாமல் கர் சொல்லு பூஸூ///

    ஹைஷ் அண்ணன் இப்ப உங்கட பற்றரி ஃபுல் சார்ஜ்ல இருக்குதுபோல:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இப்பூடியெல்லாம் மாட்டிவிடுறீங்க... கடவுளே நான் இன்னும் ரீ கூடக் குடிக்கேல்லை, என்னாது “ஜோ பூ” ஆ? எனக்கு வாணாம்:)). அது வேற ஜோப்பூஊஊஊ இது வேற ஜோப்பூஊஊஉ நீங்க மயில்லை மாட்டுப்பட்டுக் கொயம்பிட்டீங்கபோல ஹா.....ஹா...ஹா...:)))).

    மயில் தோகையில சிக்குப்பட்டிட்டீங்களோ? அல்லது அது வேற மயில் இது வேற மயிலோ?:)). இதுக்குத்தான் ஊர் சுத்தாதீங்க எனச் சொல்றது...
    நீங்க எல்லாம் இப்பூடி ஊர் சுத்த வெளிக்கிட்டதால, இப்பூடி சுவீட் சிக்ஸ் ரீனில இருக்கிற எங்களால ஒரு சுதந்திரமா ஊர் சுத்திவரவே முடியேல்லை:))))).

    எங்கட மயிலையும் காணேல்லை:((((

    // ஹைஷ்126 said... 17
    பக்கத்து வீட்டு பூனை வந்தால் பணம் வருமா?//

    சூப்பராக இருந்துது பதிவு படித்தேன். கொஞ்சக்காலம் அப்பக்கம் போகமறந்திட்டேன்.

    ஹைஷ் அண்ணன், நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தாப்பெரிய உங்களின் பதிவு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.... மியாவும் மியாவும் நன்றி. ஜெய்யும் இல்ல, ஜீனோ வையும் காணேல்லையே:(((.

    குட்டி ஊசிக் கு:
    //எனவே பூனைகள் செல்வத்தை கொண்டு வரும் என்பதில் தவறும் இல்லை///

    இதை திரும்ப திரும்ப படியுங்க மக்கள்ஸ்ஸ்ஸ் அங்கின இருந்துது..., இனி உங்கட பக்கம் பூஸூ வந்தால், வரவேற்று, மரியாதை கொடுத்து, பாலும்(நல்லா அடுப்பில காய்ச்சினது), லெமன் பஃப் பிஸ்கட்டும் கொடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:))) முறைக்காதீங்க:)))).

    இல்ஸ்ஸையும் காணேல்லை, தனியா இருக்கப் பயம்மாக் கிடக்கே... 2,3 நாளாக கட்டிலுக்கு மேல எலி ஓடுற மாதிரி சத்தம் கேட்குது எட்டிப்பார்த்தால் கடிச்சுப் போடுமோ எனப் பயமாக்கிடக்கூஊஊஊஊ:))

    மியாவும் நன்றி.. மியாவ்..மியாவ்.

    ReplyDelete
  18. பூஸ் என்ற அதீஸ் என்ற அதிரா வென்ற ......க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இதுபோல் இன்னும் பற்பல அவார்டுகள் பெற்று,பதிவுலகிலும் சிறக்க என் அன்பு வாழ்த்துக்கள்.

    அதுசரி.அதென்ன ஜல்..ஜல் ஜலீலாக்கா..ஜலீலா அக்கா கொலுசு போட்ட ஞாபகம் இல்லையே?

    ReplyDelete
  19. வாங்க ஸாதிகா அக்கா, அது! அது!! அதூஊ!!... உதெல்லோ வாழ்த்து... மிக்க மிக்க நன்றி ஸாதிகா அக்கா...

    நான் நன்றி சொல்லேல்லையாம்... என்னைப்பார்த்தே கர்ர்ர்ர்ர்ர் சொல்லீனம்:(((( டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்... இப்போ என்ன கலர் தந்தாலும் ஓக்கே... ஏனெண்டால் கண் ரெண்டும் மங்கலாக இருக்கூஊஊஊஊ:)).

    ஹைஷ் அண்ணன்... ஹைஷ் அண்ணன்!!! கேக்குதோ? இப்ப ஓஓஒடிவந்து பாருங்கோ... இப்பூடி ஒரு அழகான வாழ்த்தை, இந்த புளொக் உலகில எங்காவது கண்டனீங்களோ?:)))..

    ம்ம்ம்ம்ம் அதெல்லாம் என்னைப்போல, நியூக் கைப்படமும், சூப்பர்க் கவிதைகளும் எழுதினால் மட்டுமே கிடைக்கும்:))). ஆஆஆரும் முறைக்கப்பிடாது:)).

    ReplyDelete
  20. ///அதுசரி.அதென்ன ஜல்..ஜல் ஜலீலாக்கா..ஜலீலா அக்கா கொலுசு போட்ட ஞாபகம் இல்லையே?///
    ஸாதிகா அக்கா!! ஒரு கவிதையில டவுட்டு வரலாம்... ஒரு படத்தில டவுட்டு வரலாம்... ஏன் ஒரு பூஸ் சம்பந்தமான டவுட்கூட வரலாம்... இதென்ன இது பெயரில டவுட்ட் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    அதூ...., ஜலீலாக்கா எப்பவும் கூலாவே இருப்பா... கோபிக்க மாட்டா எதுக்கும்.. கிட்டத்தட்ட என்னைப்போலவே:))).... ஆ.. கலைக்காதீங்க... வெயிலைக் கண்டதும் ஹீல்ஸ்ஸ்ஸ் ஐத் தூக்கிப் போட்டிருக்கிறேன்:)))... ஆபத்துக்கு ஓடமுடியாது:))..

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் அதிரா!!

    ReplyDelete
  22. ரொம்ப அழகான இருக்கிண்றது..நட்பு ஒரு சுமையில்லை என்ற கவிதை..


    வாழ்த்துகள் அதிரா..

    அக்‌ஷ்தாவிற்காக Easter கொண்டாடினேனோம்...மற்றபடி வேறு எதுவும் இல்லை...

    ReplyDelete
  23. "புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
    புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை"

    அருமையான வரிகள்!

    விருதுகளுக்கு அன்பான பாராட்டுக்கள் அதிரா!
    அந்த அமைதியான சாலையும் பூக்களைத்தாங்கி அமைதியாக நிற்கும் அந்த மரமும் ரொம்பவே அழகு!

    ReplyDelete
  24. வாங்க மேனகா, மிக்க நன்றி.

    ReplyDelete
  25. வாங்க கீதா, மிக்க நன்றி.

    //அக்‌ஷ்தாவிற்காக Easter கொண்டாடினேனோம்...மற்றபடி வேறு எதுவும் இல்லை...
    // ஓ... நாங்களும் எக்ஸ் ஒளிச்சு வைப்போம்... விடிய எழும்பிக் கண்டுபிடிப்பார்கள்(இது வேற எக்ஸ்ஸ்:))

    ReplyDelete
  26. வாங்க மனோ அக்கா. நீங்க இப்போ எங்கிருக்கிறீங்க? உங்களை முன்புபோல காணக் கிடைக்குதில்லையே!!.

    இப்போ இளவேனிற்காலம் ஆரம்பமாகிவிட்டதால்... திரும்பும் பக்கமெல்லாம் பூக்களாகவே இருக்கு, காட்டுப்பக்கம்கூட ஏதேதோ எல்லாம் பூத்திருக்கு.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  27. அவார்ட் கிடைத்ததற்கு என் வாழ்த்துக்கள் அதிரா.
    இந்தப்பூக்கள் மிக அழகாக இருக்கும். மரம் முழுக்க, இலையை மறைத்துப்பூக்கும்.
    இப்போ நீங்க நல்ல கருத்தாழமிக்க பாடல்களை போடுகிறீகள். நன்றி அதிரா. எனக்கும் பிடித்தபாடல்.

    ReplyDelete
  28. வாங்க அம்முலு..

    அனித்துக்கும் மிக்க நன்றி.

    பின் குறிப்பு:
    நல்ல வேளை என் பக்கத்தில தமிழாலதான் எழுதியிருக்கிறீங்க:).. வேறு எங்கோ போய்.. திட்டியிருக்கிறீங்கபோல தெரியுது புரியாத பாஷையில:))))... கடவுளே எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்:))).

    ReplyDelete
  29. ஆமையாரை ஏமாற்றினாலும் பூஸாரை ஏமாற்றமுடியாதெல்லோ. அதுதான் நான் கவனமாய் இருக்கிறன்.
    லேட்டானாலும் சைன் பண்ணுறன்‍.

    ReplyDelete
  30. ஆஹா. ரோஜா கையிலே ரோஜா...

    பாட்டு வழக்கம் போல நல்லாயிருக்கு அதீஸ்.. என்னோட கலெக்ஷன்ல சேத்திக்கிறேன்..

    ReplyDelete
  31. அவார்டுக்கு வாழ்த்துக்கள் அதிரா! 2 கவிதைகளும் அருமையா இருக்கு. உங்க ஊர் பூக்களும் அழகா இருக்கு.

    ReplyDelete
  32. //ammulu said... 32
    ஆமையாரை ஏமாற்றினாலும் பூஸாரை ஏமாற்றமுடியாதெல்லோ.
    //

    உஸ்ஸ் அம்முலு மெதுவா!!!:), நித்திரைபோல இருந்தாலும் காது வலு கிளியராம்:))).

    ReplyDelete
  33. வாங்க சந்து... அடிக்கடி பொந்தில ஒளியிறீங்க.. அது நல்லாவேயில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), மயிலைக் கண்டனீங்களோ?:).. எங்க நிண்டு நனடமாடுறாவோ:))).

    சேருங்கோ சேருங்கோ... இன்னும் வரும். நான் இப்போ பாட்டுக் கேட்பதை நிறுத்திட்டேன்/விட்டிட்டேன்:((. ஆனா ரேடியோ மட்டும் கேட்கிறேன்.

    மியாவும் நன்றி சந்து.

    ReplyDelete
  34. வாங்க மஹி.

    அழகான மக்கள் இருக்கிற நாட்டில பூக்கிற பூக்களும் அழகுதானாம்:)... கடவுளே திடீரென எங்கேயோ புகைவாறமாதிரி இருக்கே...:))).

    மியாவும் நன்றி மஹி.

    ReplyDelete
  35. அவார்டுக்கு வாழ்த்து சொல்லலாமெண்டு வந்தா கவிதைகளும், பூக்களும் மனசை தொட்டுவிட்டு போகின்றன. பறித்த கவிதையை ஃபிரேமிட்டது போல், படித்த பூக்களை பறிக்காதீர்கள்!! கர்ர்ர்ர் :-))

    ReplyDelete
  36. Adhira,,andha kothup pookkalum kaiyyum bracelet um azhagaa irukku;-)

    ReplyDelete
  37. வாங்க அப்துல் காதர்...

    எங்கட ஊர்ப் பாஷையிலயே பேசுறீங்களே.... கேக்க ஆசையாக இருக்கு... உண்மையிலயே இப்படித்தான் பேசுவீங்களோ? அல்லது இடத்துக்கு தக்கமாதிரிப் பேசுவீங்களோ?..

    //பறித்த கவிதையை ஃபிரேமிட்டது போல், படித்த பூக்களை பறிக்காதீர்கள்!! கர்ர்ர்ர் :-)) //
    உஸ்ஸ்ஸ் இப்பூடியெல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லப்பிடாது, கர்ர்ர் சொன்னால் பூக்கொத்து வாடிடும்..:))).

    மியாவும் நன்றி... உங்க ஃபிரெண்ட் எப்பத்தான் வரப்போறாரோ தெரியேல்லையே....

    ReplyDelete
  38. வாங்க தளிகா...
    முதல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏன் தெரியுமோ? சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவானமைக்கு:)).

    மியாவும் நன்றி தளிகா... அது கை மணிக்கூடு..

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.