நல்வரவு_()_


Friday, 5 August 2011

எங்கட செல்லங்கள்:)


ஆஆஆஆஆ... மணி கட்டின பூஸார்ர்ர்ர்... இவரின் பெயர்.. பஸல்(Bassal)


 
ரில் இருந்த காலங்களில், இவற்றின் அருமை பெரிதாகத் தெரியவில்லை, ஆனால் இங்கு, எங்கு இவற்றைக் கண்டாலும், பிள்ளைகளும் நானும் ஒருகணம் பார்வையால் அளக்கத் தவறுவதில்லை.


இங்கு கணவரோடு வேலை பார்த்தவர்(இப்போ ஓய்வு பெற்றிருக்கிறார், கணவன் மனைவி இருவரும் டொக்ரேர்ஸ்தான், ஸ்கொட்டிஸ், எம் குடும்ப நண்பர்கள்). அவர்களுக்கு எம்மைவிட பைத்தியம் பூனை, நாய், கோழியில் .

இப்போ றிரயேட் ஆகிவிட்டமையால் பெரிய காணி(Farm) வாங்க தேடுகிறார்கள். பன்றிகளும் கோழிகளும் வளர்க்கப் போகிறார்களாம்.

இப்போ இருப்பதும் பெரிய, வீடு, பெரிய காணிதான், சமீபத்தில் ஒருநாள் முளுவதும் அவர்கள் வீட்டிலேயே எமது பொழுது கழிந்தது. அப்போ எடுத்த படங்களைப் போடலாமே இங்கு என வெளியிடுகிறேன்.

இங்கு அதிகமாக கவனித்தேன், இங்குள்ளவர்களுக்கு கறுப்புப் பூனைகளே அதிகம் விருப்பம், எங்கு பார்த்தாலும் அதிகமாக கறுப்புப் பூனைகளே உண்டு. ஒருநாள் எங்கட அப்பா இங்கு நின்றபோது, விடிய எழும்பி ஜன்னலால் ரோட்டைப் பார்த்தார், கறுப்புப் பூனை ஒன்று போனது, உடனே “சிக்..சிக்...கறுப்புப் பூனை போகுது பார்:)” என்றார்...

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, “அது தன்பாட்டில போகுதப்பா, நீங்களேன் அதைப் பார்த்து ஏசுறீங்கள்” எனச் சொல்லிச் சிரிச்சேன்.

இவரை ஆசைதீரத் தடவினோம், ஆனால் முறைத்தார், தூக்க முடியவில்லை அத்தோடு சரியான குண்டூஊஊஊஊஊஊ:)).

அவருடைய ஸ்பெஷல், ரின் உணவைச் சாப்பிடுகிறார்(பொல்லாத மணமாக இருந்துது அந்த food:))

இது அவர்களின் அடுத்த செல்லங்கள் ஆணும் பெண்ணும், பெயர் லோலா, ஆணின் பெயர் மனதில் பாடமில்லை. படத்தில் உருவம் விளங்கவில்லை, 4 அடி உயரமிருப்பார்கள், ஓடிவந்த வேகத்தில் என்மேல் ஏறினார்கள்(விளையாட்டுத்தான்:)), ஆனா எனக்கு இதயம் நின்று வந்தது.... உஸ்ஸ் அப்பா... 2012 க்கு முன்பே போயிடுவனோ சாமீஈஈஈ என நினைசுட்டேன்ன்ன்ன்ன்:)).

Give me your paw.. எனச் சொல்லிக் கையை நீட்ட, தம் முன் கையைத் தருவார்கள் போட்டி போட்டு இருவரும், உடனே ஒரு பிஸ்கட் கொடுக்க வேண்டும்.

ஆஆஆஆ.... இவைதான் நான் முன்பே “அங்கு” கூறிய, சேவலில்லாமல் முட்டையிடும் கோழிகள்... இவை இப்போ 3/4 மாதக் குஞ்சுகளாம் இனும் முட்டை இடத் தொடங்கவில்லையாம், தொடங்கினால் நொன் ஸ்ரொப்பாக... தினமும் இடுவார்களாம்.

பெரிதாக , பறந்து ,ஓட மாட்டார்கள்.... ஆமை வேகம்தான்:).
 




 இது அவர்கள் வளர்க்கும் ஒருவித தாவரம், பெயர் கேட்டேன் மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)). 

 இதன் தண்டுகள் சிகப்பாக, பெரிதாக இருந்துது(செலரித் தண்டுகள்போலே), அதை உடைத்து, சீனியோடு தொட்டுச் சாப்பிடத் தந்தார்கள், கரும்பின் சுவைபோல, ஆனா புளிப்பாக இருந்துது. இத் தண்டில் ஜாம் செய்கிறார்களாம், அதுவும் ஒரு போத்தில் எமக்கு தந்தினம், சூப்பர்.
 இதுவும் அவர்கள் வளவில் இருக்கும் ஒருவித மரம், Elder tree என்று பெயர். இந்தப் பூக்களை எடுத்து ஊறவைத்து யூஸ் செய்து தந்தார்கள், லெமன் யூஸ்போல இருந்துது. (இன்னும் பல மரக்கறிகள் போட்டிருந்தார்கள்).

((     http://www.google.co.uk/imgres?q=elder+tree+scotland&hl=en&biw=1440&bih=727&tbm=isch&tbnid=g1-owht-uwyK7M:&imgrefurl=http://dancingbeastie.wordpress.com/2011/06/07/the-tuesday-tree-rowan/&docid=fXScBdmUF-MuBM&w=2576&h=1932&ei=8CQ7ToC1NY_6sgbrqcT4Dw&zoom=1&iact=rc&dur=494&page=7&tbnh=128&tbnw=168&start=183&ndsp=31&ved=1t:429,r:13,s:183&tx=67&ty=73    ).


இப் பூக்களையும் வைட் கிரேப்ஸ் ஐயும் சேர்த்துச் செய்யும் யூஸ், கடைகளில் கிடைக்குது .

======================================================

பின் இணைப்பூஊஊ:)).
இது என்னவெனத் தெரியுதோ? 2009 இல, இமா “அங்கின” சொன்னா, அவக்காடோவை நடுங்கோ அதிரா, அழகான மரம் வரும் என்று. 2009 ஆகஸ்ட்டில் நட்டதாக நினைவு. இது நேற்று எடுத்த படம். அம்மா ஒருநாள் ஏசினா, வீட்டுக்குள் இந்த மரமெல்லாம் வைத்திருக்கலாமோ தெரியேல்லை, வெளியில நடு என்று. மாட்டேன், வெளியில நட்டால் பட்டுவிடும் எனச் சொல்லிட்டேன்:)).
 இதுதான் அவகாடோ பயம்:)))

====================================================
 ஊஸி:))க்குறிப்பு:
இம்முறை நான் ஆரையும் தேடேல்லை:))).

சிட்டுவேஷன் சோங் போகுது பிபிசி ல:
தேடாத இடமெல்லாம் தேடினேன்... பாடாத பாட்டெல்லாம் பாடினேன், போடாத படமெல்லாம் போட்டேன் ஆனாலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
====================================================

126 comments :

  1. உங்கட செல்லங்களைப்பார்த்தேன்.பூஸ் என்ரால் எனக்கு ரொம்ப பயம்.அதிலும் கருப்பு பூஸ் என்றால்..ஐயோ,,,

    ReplyDelete
  2. அதீஸ் கோழிக்கு மேட்ச் ஆக டாப்ஸ் போட்டுக்கொண்டு போனீர்களா உங்கட ஆத்துக்காரர் பிரண்டோடா ஃபார்முக்கு..?

    ReplyDelete
  3. ஐ...வடை எனக்குதான்..அந்த கோழி போட்ட முட்டையை அவித்துத்தாங்க.அப்படியே கோழி பிரியாணியும் எனக்குத்தான்...

    ReplyDelete
  4. அன்னக்கிளியை இன்னுமா தேடிகிட்டு இருக்கீங்க ஹா..ஹா.. :-))

    ReplyDelete
  5. ஒரு தடவை அக்கா வீட்டில இரவில் தங்க நேர்ந்தது.எல்லோரும் ரூமில் தூங்க நான் மட்டும் ஹாலில் தூங்கினேன் . யாரோ என்னையே உற்று பார்ப்பது போல ஒரு ஃபீலிங். விழித்துப்பார்த்தேன் . 5 அடி தூரத்தில் ஒரு கருப்பு பூனை .என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.ஓட்டி விட்டால் போலல .10 அடி தள்ளி போய் திரும்பவும் என்னையே பார்த்து.
    திரும்பவும் ஓட்டி விட அவ்வளவு சீக்கிரம் போகல.எவரெடி பேட்டரியில் போட்டிருக்குமே அதே மாதிரி .கண்கள் மட்டும் ஃபிளாஷ் அடிக்க .ஒரு பக்கம் பயத்தை வெளி காட்டாமல் ஓட்டி விட்டேன் . முற்றத்தின் கம்பி வழியே போய் விட்டது.

    அதுக்கு பிறகு இரவு முழுதும் தூங்காமலேயே பொழுது போனது .நான் விழிக்கும் போது இரவு மணி 1 .அதிலிருந்து யார் கூப்பிட்டாலும் அங்கே தங்கப்போவதில்லை . :-))).
    கருப்பு பூஸ்னா அவ்வ்ளோ பயம் ..அவ்வ்வ்

    ReplyDelete
  6. //இவரின் பெயர்.. பஸல்(Bassal) //


    பஸல்-ன்னா வெங்காயம்தானே ஹி..ஹி.. :-))

    ReplyDelete
  7. //தேடாத இடமெல்லாம் தேடினேன்... பாடாத பாட்டெல்லாம் பாடினேன், போடாத படமெல்லாம் போட்டேன் ஆனாலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

    மேலே இருக்கும்(கிளி ) பாட்டுக்கும் , கடைசியா இதுக்கும் ஏதோஓஓஓஓஓஓ......ஒன்னும் பிரியலையே எனக்கு ..ஹா...ஹா...:-))))

    ReplyDelete
  8. முதலாவதா இது "உங்கட" செல்லங்கள் இல்ல..டைட்டிலே கொஞ்சம் இடிக்கிது! ;)

    கடேசியா,அவகோடா மரத்தையும்-அதில் காய்க்காத அவகோடா பயத்தையும் போட்டிருக்கீங்க,அதுவும் இடிக்கிது. மரம் வளந்து பூப்பூத்து,காயாகி,கனிந்தபின்னர் போட்டிருக்கலாம்!:)

    இடையில் இருப்பதெல்லாம் இன்னும் ஜிலேபிதான். அதனால் மறுபடி நாளைக்கு வருவேன்.

    குண்டூசிக்குறிப்பு- உங்க டெம்ப்ளேட், ப்ளாக் எல்லாம் சரியாத்தான் இருக்கும் அதிரா,எங்க லேப்டாப்லே இருக்க ஆபரேடிங் ஸிஸ்டத்தாலதான் இந்த ஜிலேபி பிரச்சனை,அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்ல,அதுக்காக குழம்பி மண்டையில் இருக்கும் கொஞ்சநஞ்சத்தையும் பிடுங்கிராதீங்க. :)

    இன்னிக்கென்ன பேக்ரவுண்டிலே பிங்க் பூவிருக்கு,பூஸாரைக் காணம்? அப்புடி கன்டினியஸா ஒரே பூஸைப் பார்க்க பயம்ம்ம்ம்மா இருக்கு[நோட் திஸ் பொயின்ட் யுவர் ஹானர்!]..ஹிஹிஹி!

    ReplyDelete
  9. அந்த சிவப்புத் தண்டுத் தாவரம் ரூபார்ப் (rubarb) அதீஸ். தண்டு மட்டும் சாப்பிடலாம். நான் வளர்த்தேன். (இலை நஞ்சு.)

    ReplyDelete
  10. ஸாதிகா அக்கா வாங்க...
    நீங்கதான் பூஸுக்கு அக்காவாச்சே:)), எப்பூடிப் பயப்புடலாம்:))?.

    அதுதான் ஸாதிகா அக்கா பொருத்தம் என்கிறது.... நினைச்சு செய்யுறேல்லை, அது தானா அமைவது:)).

    //அந்த கோழி போட்ட முட்டையை அவித்துத்தாங்க.அப்படியே கோழி பிரியாணியும் எனக்குத்தான்... //

    கோழி முட்டை தரலாம் வாங்க, எமக்கு இடைக்கிடை த்ந்திருக்கிறார்கள். ஆனா பிரியாணி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    இப்போ எனக்கு வேகம் வந்திருக்கு ஸாதிகா அக்கா:)))... லெச்ட்டு ரைட்டூ எனப் பதிவுகள் வரப்போகுது பாருங்கோ அவ்வ்வ்வ்வ்:)).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  11. வாங்க ஜெய்...

    //ஜெய்லானி said...

    //தேடாத இடமெல்லாம் தேடினேன்... பாடாத பாட்டெல்லாம் பாடினேன், போடாத படமெல்லாம் போட்டேன் ஆனாலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

    மேலே இருக்கும்(கிளி ) பாட்டுக்கும் , கடைசியா இதுக்கும் ஏதோஓஓஓஓஓஓ......ஒன்னும் பிரியலையே எனக்கு ..ஹா...ஹா...:-))))
    //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நேரமில்லாமல் மாத்தாமல் விட்டேன் இப்போ ஓடிப்போய் மாத்திட்டேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))), ஆசைக்கு ஒரு பாட்டுக் கேட்கவும் விடமாட்டினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  12. //அதுக்கு பிறகு இரவு முழுதும் தூங்காமலேயே பொழுது போனது .நான் விழிக்கும் போது இரவு மணி 1 .அதிலிருந்து யார் கூப்பிட்டாலும் அங்கே தங்கப்போவதில்லை . :-))).
    கருப்பு பூஸ்னா அவ்வ்ளோ பயம் ..அவ்வ்வ் //

    இப்பத்தானே உண்மையெல்லாம் வெளில வருது, இண்டைக்கே ஒரு கறுப்புப் பூஸ் குட்டிக்கு ஓடர் கொடுத்து வாங்கி என் புளொக்கிலயே கட்டிவிடப் போறேன் ஹா...ஹா...ஹா....

    //பஸல்-ன்னா வெங்காயம்தானே ஹி..ஹி.. :-)) //
    இங்கிருக்கும் பெயர்களெல்லாம் விசித்திரமாகவே இருக்கும், புதிதில் சிரிப்பாக இருந்துது இப்போ பழகிவிட்டது...
    எலி,
    கம்மிங்,
    ஹில்மான்,
    டயர், இப்படியே நிறையச் சொல்லலாம்.

    மியாவும் நன்றி ஜெய்...

    ReplyDelete
  13. வாங்க மகி...
    இல்ல அது இமாட செல்லங்கள்:)).

    //அவகோடா மரத்தையும்-அதில் காய்க்காத அவகோடா பயத்தையும் போட்டிருக்கீங்க//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒண்ணே ஒண்ணுதான் காய்ச்சது, உடனே படமெடுத்துப் போட்டிட்டேன்:))).

    //உங்க டெம்ப்ளேட், ப்ளாக் எல்லாம் சரியாத்தான் இருக்கும் அதிரா,எங்க லேப்டாப்லே இருக்க ஆபரேடிங் ஸிஸ்டத்தாலதான் இந்த ஜிலேபி பிரச்சனை,அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்ல,//

    எப்பவுமே பிரச்சனையை தங்கட பக்கம் வச்சுக்கொண்டுதான் எல்லோரும் அதிராவோட தனகீனம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  14. //அதுக்காக குழம்பி மண்டையில் இருக்கும் கொஞ்சநஞ்சத்தையும் பிடுங்கிராதீங்க. :)
    //

    கிக்....கிக்...கிக்... அதை முதல்லயே தேம்ஸ்ல எறிஞ்சிட்டேன்:))).

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  15. //அதை முதல்லயே தேம்ஸ்ல எறிஞ்சிட்டேன்// அது எங்களுக்கு எப்பவோ தெரியும். ;)))

    ReplyDelete
  16. வாங்க இமா..
    கரெக்ட்டாச் சொன்னீங்க அதேதான். அவர் பிரபல்யமான டாக்டர், நிறைய ரிஷேஜ் எல்லாம் செய்து, மருந்துகள், பல விஷயங்கள் கண்டுபிடித்திருக்கிறார்... ஆனா சரியான சிம்பிளானவர்..

    எம் ஸ்பைசி உணவுகள் நல்லா பிடிக்கும், ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்தபோது, சிக்கின் பொரியலும் செய்திருந்தேன், அவர் சாப்பிடும்போது தவறி கீழே விழுந்துவிட்டது, நான் ஓடினேன் எடுக்க:), அதுக்குள் படக்கென எடுத்து வாய்க்குள் போட்டுவிட்டார்...:), நான் பறிக்கமுன்:)), போட்டுவிட்டுச் சொன்னார் வூட் ஃபுளோர்தானே இட்ஸ் ஓக்கை:) என.

    அந்த ”ரூபா” மரத்தைக் காட்டினார், உடனேயே ஒரு தண்டை உடைத்து, அதன் இலையை லபக்கெனப் பிய்த்து எறிந்தார், நான் கேட்டேன் சமைக்க முடியாதோ என... இலை எடுப்பதில்லை என்றிட்டார்(நான் மனதில் நினைத்தேன், இவர்களுக்கு சலாட் போட மட்டும்தானே தெரியும், அதனால இந்த இலை பாவிப்பதில்லை, நாம் என்றால் சுண்டலாமே என:)), நல்ல வேளை நான் முயற்சிக்கவில்லை.

    இங்கு சுண்டலுக்கு கபேஜ் இலை தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை:(((.

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  17. இமா said...

    //அதை முதல்லயே தேம்ஸ்ல எறிஞ்சிட்டேன்// அது எங்களுக்கு எப்பவோ தெரியும். ;)))
    ////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு ஃபுளோல சொன்னா... அதை ஆமோதிப்பதோ? இதைக் கேட்க ஆருமே இல்லையா.... கடவுளே இப்போ எனக்கொரு பிளேன் அவசரமாகத் தேவைப்படுதூஊஊஊஊஊ நியூப் பக்கம் போக... பாதிச் செட்டை இல்லாட்டிலும் பறவாயில்லை, நான் அஜீஸ் பண்ணிடுவேன், ஆனா இப்ப...இப்ப.. வேணும் ஒரு பிலேன்... சே..சே.. என்னப்பா இது பிளேன்ன்ன்ன்ன்ன்:))).

    ReplyDelete
  18. //இலை// நஞ்சு. இதை அவித்து, அந்தத் தண்ணீரை... ஊரில வேப்பிலை, வேப்பம் விதை அவித்த தண்ணீர் கிருமிநாசினியாக செடிகளுக்குத் தெளிப்பினமெல்லோ... அப்பிடித் தெளிக்கலாம்.

    //இங்கு சுண்டலுக்கு கபேஜ் இலை தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை// !! கரட்! பீட்ரூட்!
    சில்வர்பீட் சுண்டிப் பாருங்கோ. மாசி போட்டால் சுப்பராக இருக்கும். வேற... பொறுங்கோ நான் நினைப்பு வர, வந்து சொல்லுறன்.

    ReplyDelete
  19. //வாங்க இமா..
    கரெக்ட்டாச் சொன்னீங்க அதேதான். // கிக் கிக் கிக்

    அதுக்கு மேல என்ன சொல்லி இருக்கிறன் எண்டு பாருங்கோ. ஆமோதிக்கிறதுக்கு நல்ல இடம் பார்த்தீங்கள். அதுதான் 'ஃப்ளோல' வந்து இருக்கு. ;))))

    ReplyDelete
  20. கொஞ்சம் லேட்
    இருந்தாலும் வடை எனக்குதான்

    வளர்ப்பு பிராணிகள் பிடித்து இருந்தாலும்
    வளர்ப்பது இல்லை

    தூர நின்று ரசித்து விட்டு சென்று விடுவேன்.

    ReplyDelete
  21. அட! சிவாவா இது!! என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லையே!! ;)

    ReplyDelete
  22. //!! கரட்! பீட்ரூட்!
    சில்வர்பீட் சுண்டிப் பாருங்கோ//

    இவை இங்கத்தைய சூப்பமார்கட்டில் இலையில்லாமல்தான் இமா கிடைக்குது. எனக்கு பீட்ரூட் இலை சரியான விருப்பம், ஆனா நாம் வளர்த்துத்தான் ஒருமுறை சுண்டினேன்.

    கரட் போனதடவை கார்டினில் வந்தது, ஆனா ஒரு பயமாக இருந்தமையால் சுண்டவில்லை.

    தூரபோனால் ஏசியன் கடைகள் இருக்கு, அங்கு வெந்தயம், கடுகு இலைகள் கிடைக்கும், போற நேரம் வாங்கி வருவோம்.

    மற்றும்படி, சலாட் இலைகள்தான் விதம்விதமாக இருக்கும் இங்கு.

    அதென்ன இமா சில்வபீட்??

    ReplyDelete
  23. வாங்கோ சிவா...

    அதுதானே சிவா...வா இதூஊஊஉ?:)) ரொம்ப அடக்க ஒடுக்கமாக...:).

    //தூர நின்று ரசித்து விட்டு சென்று விடுவேன். //
    உண்மைதான் சிவா, சிலர் தொடவே மாட்டார்கள், சிலருக்கு பூஸ் என்றாலே அலர்ஜி:)) நான் என்னைச் சொல்லல்லேஏஏஏஏ:)).

    தூர நின்று ரசிப்பது ஓக்கே.

    சில வீடுகளில் எம் நாட்டில், காலால் தூக்கி முற்றத்திலே எறிவார்கள் கோபத்தில் பூனையை. நாயைக் கல்லால் அடிப்பார்கள், அதையெல்லாம் பார்க்க கண் கலங்கிவிடும் எனக்கு.

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  24. ////இங்கு சுண்டலுக்கு கபேஜ் இலை தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை// !!
    ஏன் அங்கே வேப்பிலை கிடைக்காதா..ஹி...ஹி..

    ReplyDelete
  25. அதிரா இப்போதான் படிச்சேன் உங்க செல்லங்கள பத்தி. வூட்டுக்கு போய் கமெண்ட் போடுறேன். என் லஞ்ச் டைம் முடிஞ்சு போச்ச் . உங்க வீட்டு காரர் & என் வீட்டு காரர் ஒரே profession . நெருங்கிட்டோம் போல இருக்கு யம்மா

    ReplyDelete
  26. ஹி...ஹி... கடைசியில் ஈ-ஐ அடிச்சி அவர் வாயிலே போட்டது ..இது சொந்த அனுபவமா..ஹா..ஹா.

    ReplyDelete
  27. //கருப்பு பூஸ்னா அவ்வ்ளோ பயம் ..அவ்வ்வ் ///

    அப்படின்னு இல்ல திடீர்ன்னு தூக்கத்துல இருந்து எழும்பி பார்க்கும் போது அது என்னையே முறச்சி பார்த்துகிட்டு இருந்துச்சி
    ஓட்டி விட்டும் போகாம திரும்பி திரும்பி என்னையே பார்தது.
    அதன் கண்கள் வித்தியாசமா ரெட் கலரில் இருந்துச்சி.
    எதிர்பார்க்காத நேரத்துல வந்ததால கொஞ்சம் பயம் ஹி..ஹி...

    ReplyDelete
  28. அழகாய் சமைக்குதே..!!அழகாய்ய்ய்ய்.....பார்க்குதே!!!!!!!


    http://www.youtube.com/watch?v=Ds589rwZFAA&feature=related

    ReplyDelete
  29. வாங்க ஜெய்...

    வேப்பிலையில சுண்டல் அவ்வ்வ்வ்:).
    எங்கட ஆன்ரியின் கலியாண வீடு முடிந்து பின்னொருநாள் கொஞ்சப் பேருக்குப் பார்ட்டி, வைத்தோம், அதில் ஆட்டிறைச்சிக்கறி ஒரே கைச்சல்:), ஸ்பெஷலாக ஆடு அடிக்கும் இடத்தில் சொல்லி வச்சு எடுத்த இறைச்சி, அப்போ ஆட்டிறைச்சி வாங்கியோர் சொன்னார்கள் ,வேப்பங்குழை கொடுத்து வளர்த்த ஆடாக்கும் அதுதான் இப்பூடிக் கைக்குதென:), சரி எல்லாம் முடிஞ்சு போச்ச்ச்ச்... திட்டித் திட்டி சாப்பிட்டாச்சு:), பின்பு பார்த்தால் கல்யாண ஆராத்திக்கு பாவித்த வேப்பம் இலைகளை, கறிவேப்பிலை, மரக்கறிகளோடு ஆரோ மாறி போட்டிருக்கிறார்கள், சமைக்கும் அவசரத்தில் வேப்பம் இலையை கறிவேப்பிலை என போட்டாச்சூஊஊஊஊஊ:)).

    இப்பூடி ஈ கத்தக் கத்த, நித்திரைக் குளிசைபோட்டதுபோல நித்திரை கொண்டால் என்னதான் செய்வதாம்:))))).

    ReplyDelete
  30. வாங்க கிரிஜா...
    ///வூட்டுக்கு போய் கமெண்ட் போடுறேன்.//

    இன்னுமா போய்ச் சேரேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).


    //நெருங்கிட்டோம் போல இருக்கு யம்மா//

    என்னாதூஊஊஊ நெருங்கிட்டோமா? ஆஆஆஆஆ ஆராவது என்னைக் காப்பாத்துங்கோஓஓஓஓ பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).

    மியாவும் நன்றி கிரிஜா.

    ReplyDelete
  31. //ஓட்டி விட்டும் போகாம திரும்பி திரும்பி என்னையே பார்தது.//
    வடிவா பார்த்தீங்களா ஜெய்? அது கேர்ள் பூனையா? போய் பூனையா? கடவுளே மீஎஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆபத்துக்குக்கூட ஒரு பிளேன் இல்லையே இங்க...:)))

    ReplyDelete
  32. //http://www.youtube.com/watch?v=Ds589rwZFAA&feature=related//

    ஜெய், லிங்கில ஏதோ பிழை இருக்குபோல, எதுவும் வருகுதில்லை, செக் பண்ணுங்கோ.

    ReplyDelete
  33. லிங்க் வேலை செய்யலையா..? தப்பிச்சீங்க ஹா..ஹா... இங்கே ஓக்கே..!! வேற யாராவது வந்து சொல்வதுக்குள் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-)))

    ReplyDelete
  34. //லிங்க் வேலை செய்யலையா..? தப்பிச்சீங்க ஹா..ஹா..//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. எனக்கு வருகுதில்லை... அதுக்குப் பதிலா கிரிஸ்மஸ் சோங்போல ஒன்று வருது, அதாக இருக்காது.... எனக்கு மண்டை வெடிக்குதே... எங்கே தேடிப் புடிப்பேன் இப்பாட்டை அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  35. அச்சோஓஓஓஓஓஓஓஓ கடவுளே, பார்த்தேன், நான் ஏதோ பாட்டாக்கும் என ஆசையாக போட்டால்.... டமால் என மூடிட்டேன்.... இதென்ன இது பாம்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ கடவுளே... ஒண்டுமே இல்லாமல் சத்தி சத்தியா வருதே எனக்கூஊஊஊ.... :)))). கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  36. //இடையில் இருப்பதெல்லாம் இன்னும் ஜிலேபிதான். அதனால் மறுபடி நாளைக்கு வருவேன். // மகி என்ன கமெண்ட் போடுறதில இருந்து தப்பிக்கிரதுக்கே ஜிலேபி ஜாங்கிரி ன்னு சொல்லுறாங்களோ? அப்பா நாரதர் வேலை பார்த்தாச்சூஉ ஹீ ஹீ


    //
    இன்னிக்கென்ன பேக்ரவுண்டிலே பிங்க் பூவிருக்கு,பூஸாரைக் காணம்? அப்புடி கன்டினியஸா ஒரே பூஸைப் பார்க்க பயம்ம்ம்ம்மா இருக்கு[நோட் திஸ் பொயின்ட் யுவர் ஹானர்!]..ஹிஹிஹி! // குசும்பு வேற என்ன? பூ எல்லாம் அழகா இருக்கு அதிரா இப்படியே வச்சுக்கோங்க. பாவம் மகி அப்புறம் கமெண்ட் போட வராமலே இருந்திட போறாங்க

    ReplyDelete
  37. //இன்னுமா போய்ச் சேரேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))). // இப்புடி எல்லாம் அதட்டினா பாவம் குழந்தை பயப்படாது? எங்கே குழந்தை ன்னு தேடாதீங்க. இன்னிக்கி தான் பொறந்திருக்கு ஆனாலும் கருமமே கண்ணா கமெண்ட் போட்டு கிட்டு இருக்கு பாருங்க ??


    // என்னாதூஊஊஊ நெருங்கிட்டோமா? ஆஆஆஆஆ ஆராவது என்னைக் காப்பாத்துங்கோஓஓஓஓ பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).// விட மாட்டேனே ?? ஹீ ஹீ ஹு ஹு

    ReplyDelete
  38. //ஆசையாக போட்டால்.... டமால் என மூடிட்டேன்.... இதென்ன இது பாம்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ கடவுளே... ஒண்டுமே இல்லாமல் சத்தி சத்தியா வருதே எனக்கூஊஊஊ.... :)))). கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).// ஜெய் அண்ணா போடுற பாட்டில பாம்பூ வராம உன்னி கிருஷ்ணன் லதா மங்கேஷ்கரா வருவாங்க.

    கொஞ்சம் இருங்க லைம் ஜூஸ் எடுத்துகிட்டு வரேன் .

    //கடவுளே மீஎஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆபத்துக்குக்கூட ஒரு பிளேன் இல்லையே இங்க...:))) // அத அமெரிக்க உளவுத்துறை எடுத்துகிட்டு போய் இருக்கும்ம்

    ReplyDelete
  39. //அழகாய் சமைக்குதே..!!அழகாய்ய்ய்ய்.....பார்க்குதே!!!!!!!// நான் நெனைச்சேன் ஜெய் அண்ணா வாய்ஸ் கொடுத்திட்டாங்க!!
    //அதுதானே சிவா...வா இதூஊஊஉ?:)) ரொம்ப அடக்க ஒடுக்கமாக...:).// அகையின் நான் நெனைச்சேன் அதீஸ் அண்ட் டீச்சர் வாய்ஸ் இங் ஹீ ஹீ
    //4 அடி உயரமிருப்பார்கள், ஓடிவந்த வேகத்தில் என்மேல் ஏறினார்கள்(விளையாட்டுத்தான்:)), ஆனா எனக்கு இதயம் நின்று வந்தது.... உஸ்ஸ் அப்பா... 2012 க்கு முன்பே போயிடுவனோ சாமீஈஈஈ என நினைசுட்டேன்ன்ன்ன்ன்// ஐயோ நான் அந்த இடத்தில் இருந்து இருந்தால் மறு நாள் பால் தான்! அப்பவே போய் சேர்ந்து இருப்பேன் !!

    ReplyDelete
  40. பெயர் லோலா, /// உங்கட ஊரின் பிரபலமான பெயர் இது.
    அதெப்படி அதீஸ் நீங்களும் கோழியும் மாட்ஸிங்கா ட்ரெஸ் பண்ணி இருக்கிறீங்க சுப்பரோ சூப்பர்.
    I hate black cats toooooo.

    ReplyDelete
  41. அருமையாக புகைப் படம் எடுத்து,அதற்கு இவ்வளவு விளக்கத்தையும் கொடுத்து,பார்ப்பவர்கள் கண்கள் எல்லாம் பட படத்து,பக்கத்தை பார்த்தால்...

    கருப்பு பூனை என்னை முறைத்துப் பார்க்கிறது.

    சொல்லி வைய்யுங்கள் அந்த பூனையிடம் சுட்டு சூப்பு வைத்து விடுவேன் என்று.

    ReplyDelete
  42. என்ன அதிரா நீங்க போகுறவேகத்தைப்பார்த்தால் 2012க்குள்ளார எல்லாம் முடித்துவிடுவீர்கள் போல. நான் பதிவுகளைச்சொன்னேன்.

    வீட்டுச்செல்லங்கள் பற்றிக்கதைத்தாலே எனக்கு கவலைதான் வரும்.ஏன் என்றால் நாங்கள் வளர்த்த செல்லங்கள்தான் ஞாபகம் வரும். சரி அதைவிடுங்க.
    உங்க ப்ரென்ட்ஸோட செல்லங்கள் அழகாக இருக்கிறார்கள்.

    என் பக்கத்துவீட்டுக்காரர் நிறைய பறவைகள்(பலவிதம்)வளர்க்கிறார்.கிட்டத்தட்ட350 வரும்.அதைவிட 4 dogs,3 cats,4 குதிரைகள்,6,முயல்கள். எல்லாமே என் கிச்சனில் நின்று பார்த்தால் தெரியும்.

    இங்கும் அதன் தண்டுதான் எடுப்பார்கள்.நான் அதில் செய்யும் யோகர்ட் விரும்பி சாப்பிடுவேன்.

    என்ன அதிரா நீங்க!! நல்ல ஸ்ரெடியெல்லோ பயப்பிடக்கூடாது.இன்னும் ஸ்ரெடியா இருக்கோனும். நிறைய அ.கோ.மு சாப்பிடுங்கோ.
    உங்கட பின்புலம் நல்லாஇருக்கு. நான் டெம்ப்ளேட் ஐ சொன்னேன் அதிராஆஆ. எனக்கு உங்க பக்கம் ஒரு பிரச்சனையும் இல்லாமல் வருது. ஸ்பேசும்,வேல்ட்டும் மட்டும் சில நேரம் பிரச்சனை;))நான் இணையத்தைச்சொன்னேன்.
    ஊசி:முளுவதும் (ஒருநாள் முளுவதும்);; முழுவதும்

    ReplyDelete
  43. வாங்க கிரிஜா...
    //மகி என்ன கமெண்ட் போடுறதில இருந்து தப்பிக்கிரதுக்கே ஜிலேபி ஜாங்கிரி ன்னு சொல்லுறாங்களோ? //
    கரீட்டாச் சொன்னீங்க... வரவர எங்கட ஆட்கள் சிலர் “உள்ளேன் ஐயா” சொல்றதிலேயே குறியாக இருக்கினம்... அதுதான் பெயர் வச்சிட்டேனே “கெட்ட கிருமிகள்”...அவ்வ்வ்வ்வ்:)).

    பத்த வச்சது நல்லாவே பத்திவிட்டது கிரிசாஆஆஆஆஆ:))).

    //பூ எல்லாம் அழகா இருக்கு அதிரா இப்படியே வச்சுக்கோங்க.//

    ஆகா இனி நான் மாத்த மாட்டனே...:)).

    //ஜெய் அண்ணா போடுற பாட்டில பாம்பூ வராம உன்னி கிருஷ்ணன் லதா மங்கேஷ்கரா வருவாங்க. //
    ஹா..ஹா...ஹா... எப்பூடி இப்பூடி?:)).

    //கொஞ்சம் இருங்க லைம் ஜூஸ் எடுத்துகிட்டு வரேன் .// என்னாது லைம் ஜூசா? சத்தியமா எனக்கு வாணாம்ம்ம், பெயரைக் கேட்டாலே வயிற்றைக் கலக்குதெனக்கு... மீஈஈஈஈ எஸ்ஸ்ஸ்:))).

    ReplyDelete
  44. அமெரிக்க உளவுத் துறையோ?:)), இதென்ன புதுக்கதை?:)).

    //ஐயோ நான் அந்த இடத்தில் இருந்து இருந்தால் மறு நாள் பால் தான்! அப்பவே போய் சேர்ந்து இருப்பேன் !! //

    ஹா...ஹா...ஹா...... சத்தமாச் சிரிச்சிட்டேன்...
    உண்மைதான் இங்கு இருப்போருக்கு அதிகம் பெரிய பெரிய நாய்களே வளர்க்கப் பிடிக்குது, இன்னொரு வீட்டுக்குப் போனோம், அவர்களுடையது 2, சுத்தக் கறுப்பு கரடிக்குட்டிகள்போல.... 65 கிலோ எடை எண்டு சொன்னதாக நினைவு...

    நாமும் ஒன்று வளர்த்து என் புளொக்ல கட்டப்போறேன்... களவு நடக்குதாமே:))).

    மியாவும் நன்றி கிரிசா... சே..என்னப்பா இது கிரிஜா.

    ReplyDelete
  45. //ஸ்பேசும்,வேல்ட்டும் மட்டும் சில நேரம் பிரச்சனை// பரவாயில்லை அம்முலு, முடியும்போது வாங்கோ போதும்.

    அதிரா.. http://www.google.com/search?q=silverbeet+images&hl=en&prmd=ivnse&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=-kw8TtGVDMzMrQeFvf0Q&ved=0CBcQsAQ&biw=1280&bih=681 சில்வர்பீட் படங்களுக்கான லிங்க்.

    ReplyDelete
  46. வாங்க வான்ஸ்ஸ்ஸ்..
    //உங்கட ஊரின் பிரபலமான பெயர் இது.// எந்த ஊரைச் சொல்றீங்க?:))).

    கோழியார்தான் சொன்னார் மச்சிங் ட்ரெஸ் போட்டால்தான் தூக்க விடுவேன் என்று நான் என்ன பண்ணட்டும்ம்ம்?:)).

    எனக்கும் முன்பெல்லாம் கறுப்புப் பூஸாரைப் பிடிக்காது... இப்பவெல்லாம் பழகிப்போச்சு.... கலரில என்ன இருக்கு பூஸ்..பூஸ்தானே..

    மியாவும் நன்றி வான்ஸ்.

    ReplyDelete
  47. 'பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுத்துண்டு நமக்கு.' என்பார்கள். ஜெய் செய்வது அநியாயம். பாவம் இந்தக் கூட்டம்.

    வாணி... மகி.. பார்க்காதைங்கோ. மீ சீரியஸ்லி வார்னிங்.

    ReplyDelete
  48. //வாணி... மகி.. பார்க்காதைங்கோ. மீ சீரியஸ்லி வார்னிங்.//
    மாமீஈஈஈஈ...சேம் சைட் கோல் போடக்கூடாது அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  49. //கோழியார்தான் சொன்னார் மச்சிங் ட்ரெஸ் போட்டால்தான் தூக்க விடுவேன் என்று நான் என்ன பண்ணட்டும்ம்ம்?:)) //

    ???????...!!!!!!! :-))))))

    ReplyDelete
  50. //நாமும் ஒன்று வளர்த்து என் புளொக்ல கட்டப்போறேன்... களவு நடக்குதாமே:))). //

    ஏன் ஒரு முதலை வாங்கி கட்டுங்களேன் ஹி..ஹி... :-)))பிளாகுக்குள் யாருமே காலை எடுத்து வைக்க மாட்டார்கள் :-)))))

    ReplyDelete
  51. என்ன ஜெய்??? முதலையா? ஆஆஆஆ? முதல்ல அதைக் கட ஆள் தேடோணும் நான் அவ்வ்வ்வ்:)), நீங்க வந்து கட்டி விடுவீங்களோ? நீங்கதான் பாம்பையே(செத்த:)) ஒத்த விரலால நசுக்குற வீரனாச்சே:))))).

    ReplyDelete
  52. //வாணி... மகி.. பார்க்காதைங்கோ. மீ சீரியஸ்லி வார்னிங்.//

    இல்ல இமா, வாணிக்குத்தான் பாம்பூஊஊஊஊஉ அண்ட் காப்பூஊஊஊஊஊஊஊ பிடிக்குமாமே:))).

    நான் ஏதோ பாட்டென்று தேட, உண்மையிலயே அப்படிப் பாட்டை அம்முலு அனுப்பிட்டா எனக்கு, அது சூப்பராக இருந்துதூஊஊஊஉ...

    ReplyDelete
  53. யாரெல்லாம் இருக்கீங்க இங்கே? அன்பைவிடஆயுதம் இல்லை-யில் போய் அதிராமா-வுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்தா இங்ஙன என்னையும் "கெட்ட கிருமிகள்" லிஸ்டில சேர்த்து வச்சிருக்காங்களே? கிரிசா அம்முணி பத்தவச்ச வதந்தீ நெருப்பில்லாமலே இப்பூடி புகையுதே? எ.கொ.அ.இ??

    ReplyDelete
  54. வாங்க அந்நியன்ன்ன்..

    //கருப்பு பூனை என்னை முறைத்துப் பார்க்கிறது.

    சொல்லி வைய்யுங்கள் அந்த பூனையிடம் சுட்டு சூப்பு வைத்து விடுவேன் என்று. ///

    கிக்..கிக்..கீஈஈஈஈஈ சிரிச்சிட்டேன் நல்லா...

    அப் பூனையின் பார்வைக்கே பயப்புடுறீங்க, அந்த அழகில சூப்போ?:)), கவனம் பூனை முந்திடப்போகுது, பிறகு அது ரின் ஃபூட்டை விட்டுப்போட்டு, அந்நியன் ஃபூட் சாப்பிட்டிடும்ம்ம்ம்:)))... எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))).

    மியாவும் நன்னி அந்நியன்.

    ReplyDelete
  55. 'கெ.கி' நல்லவங்கள். உங்களைச் சேர்த்துக் கொண்டதைப் பற்றிப் பெருமைப்பட வேணும் நீங்கள். ;)))

    ReplyDelete
  56. குட்கர்ள் கோழி இருக்க படத்துக்குப் பக்கத்தில் நிறைய்ய்ய்ய்ய்ய்ய ஸ்பேஸ் இருக்குதே..எதாச்சும் மறைபொருள் இருக்குமோன்னு ஹைஐஐஐஐஐஐஐ லைட் பண்ணிப் பார்க்கிறன்..ஒண்டுமே காணோமே?

    செல்லங்களை கொஞ்சினமாதிரியும் ஆச்சு,வீட்டுல வைச்சு வளக்கற தொல்லை(!)யும் இல்ல, ப்ளாகுக்கு ஒரு போஸ்டும் ரெடி! ஒரே கல்லில் பலமாங்கா அடிச்சிட்டீங்க அதிரா! குட் ஜாப்! :))))

    ReplyDelete
  57. //எ.கொ.அ.இ?? //
    சொல்லிட்டேன் மகி:))).... இப்பூடியெல்லாம் எழுதி என் தவத்தைக் கலைச்சிடப்பூடா:))... நான் 2012 வரைக்கும் குதிப்பதில்லை தேம்ஸ்ல என ஸ்ரோங்காக இருக்கிறேன்....:)).(புரியாட்டில் புரியாதெண்டு சொன்னா, மருவாதை இல்ல நமக்கு, இப்பூடியெல்லாம் சொல்லியே சமாளிக்க வாண்டிக்கிடக்கே):).

    ReplyDelete
  58. //'கெ.கி' நல்லவங்கள். உங்களைச் சேர்த்துக் கொண்டதைப் பற்றிப் பெருமைப்பட வேணும் நீங்கள். ;))) //அவ்வ்வ்வ்வ்வ்! லைஸோல் போட்டு கிளீன் பண்ணாதவரைக்கும் சேஃப்தான் இமா! நல்லவேளை எச்சரிச்சீங்க,இல்லன்னா நானும் வீடியோ பார்த்து வீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்-னு கத்திருப்பேன்,டாங்ஸூ!

    அப்புறம் எனக்கு சில்வர் பீட் வாணாம், கோல்ட் பீட் (அ) ப்ளாட்டினம் பீட் இருந்தா ஒரு பன்ச் அனுப்பறீங்களா? ;)

    ReplyDelete
  59. இமா said...

    'கெ.கி' நல்லவங்கள். உங்களைச் சேர்த்துக் கொண்டதைப் பற்றிப் பெருமைப்பட வேணும் நீங்கள். ;)))
    //

    இமா கையைக் கொடுங்கோ.. ரீச்சருக்குப் புரியுது... மகிக்கு எப்ப புரியப்போகுதோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  60. ///எ.கொ.அ.இ?? /// = ன்ன கொடுமை திரா து????

    கதவைத்திறந்து பாருங்கோ,பத்துகிலோ மரியாதையும் அனுப்பிருக்கேன்,இந்நேரம் வந்து சேந்திருக்கும்! :)

    ReplyDelete
  61. மகி..
    //எதாச்சும் மறைபொருள் இருக்குமோன்னு ஹைஐஐஐஐஐஐஐ லைட் பண்ணிப் பார்க்கிறன்..ஒண்டுமே காணோமே? //

    கிக்..கிக்..கீஈஈஈ அது மபொர தெரிஞ்சவங்களுக்கு மட்டும் ஒருவேளை தெரியலாம்ம்ம்ம்:))).

    எப்பூடி இப்பூடியெல்லாம் குப்புறக் கிடந்து கிட்னியை யூஸ் பண்ணிக் கண்டு பிடிக்கிறீங்க?:)).

    ReplyDelete
  62. /இமா கையைக் கொடுங்கோ../அட,பூஸ் கையெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சாச்சா? சிவப்புரோஜாக்கள்ல வர அதே கருப்புப்பூனைப் படம் ப்ளொக்லே வந்தப்பவே நினைச்சேன்! ஒரு கை போதுமா,இல்ல இன்னொரு கையும் வாணுமா அதிரா? பக்கத்தாலை இருக்க கி..சா அம்முணி கை நல்லா ருசியா இருக்கும்னு கேள்வி! ட்ரை பண்ணுங்களேன்! ஹாஹாஆ!

    ReplyDelete
  63. Mahi said...

    ///எ.கொ.அ.இ?? /// = என்ன கொடுமை அதிரா இது????//

    ஓஓஓஓஓ இதுதானோ?:).

    ///கதவைத்திறந்து பாருங்கோ,பத்துகிலோ மரியாதையும் அனுப்பிருக்கேன்,இந்நேரம் வந்து சேந்திருக்கும்! :)
    //
    ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஏஏஏஏஏஏஏஏஎ?:))... வாணாம் நான் எந்தக் கதவையும் இப்போ திறக்க மாட்டேன் விடியட்டும்ம்ம்ம்ம்:))))).

    ReplyDelete
  64. /எப்பூடி இப்பூடியெல்லாம் குப்புறக் கிடந்து கிட்னியை யூஸ் பண்ணிக் கண்டு பிடிக்கிறீங்க?:)). /எல்லாம் ரீச்சர் குடுத்த ரெய்னிங்தான் அதிரா! ஸாதிகா அக்கா ப்ளொக்லே ரீச்சர் சொன்னப்புறம்தான் அவிங்களுக்கே தெரிஞ்சிருக்கு,வான்ஸும் அப்புடியே! நான் ரெம்ப ஸ்மார்ட்...அப்பவேஏஏஏஏஏ ஐஐஐஐஐஐலைட் பண்ணிப் பாத்துட்டுத்தான் நீங்க கட்டிலடியில் வால் மாட்டி கத்துறதா கமென்ட் போட்டனான்! ஹிஹி!

    ReplyDelete
  65. ஹா...ஹா...ஹா....அடக் கடவுளே...:)) கையைக் கொடுக்கச் சொன்னது சாப்பிட இல்ல, பூஸ் சைவம்ம்ம்ம்ம்:)), அது இமாவுக்கு பச்சைக் கல்லு மோதிரம் போட:)))).

    ReplyDelete
  66. //அப்பவேஏஏஏஏஏ ஐஐஐஐஐஐலைட் பண்ணிப் பாத்துட்டுத்தான் நீங்க கட்டிலடியில் வால் மாட்டி கத்துறதா கமென்ட் போட்டனான்! ஹிஹி! //

    ஆ... அப்போ தெரிஞ்சவங்க/புரிஞ்சவங்க லிஸ்ட்ல மகியும் அடக்கம்ம்ம்ம்:)))).

    அங்கபாருங்கோ... கியூ வரிசையில, ஜெய், மாமி(ஜெய் ட முறைல)... எல்லோரும் நிண்டு வடிவாப் பார்க்கினம்.... அவ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  67. ஓ... இதுவோ இமா சில்வபீட்... இது வெள்ளைக் கலர் இங்கு இருக்கு, வேறு பெயரில , சூப்பமார்கட்டில் வாங்கலாம். ஆனா இது சுண்ட முடியாது, நீங்க சொன்னதுபோல றால் அல்லது முட்டைபோட்டுச் சமைப்பதுண்டு. ஆனா எனக்கு அதிகம் பிடிப்பது சுண்டல் அல்லது எம் ஊர்க் கீரைவகை.

    ReplyDelete
  68. /மகியும் அடக்கம்ம்ம்ம்:))))./அவ்வ்வ்வ்வ்வ்! ஆடிவெள்ளிகிழமையும் அதுவுமா அடக்கம் பண்ணிப்போட்டீங்களே என்னைய??! நான் மஞ்சக்கலர் ஸாரி அனுப்பி ஐஸ் வைச்சப்பவே இது தெரிந்திருக்க வாணாமா உங்களுக்கு? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;)

    ReplyDelete
  69. வாங்கோ அம்முலு..
    உண்மைதான் 2012க்குள் எல்லாம் முடிச்சிடோணும் பிறகு “அங்க” போய் கெட்டுகெதர் வைக்கலாம்.... மேல:)).

    பறவைகள், குதிரைகள் இருப்பின் மணம் வராதோ?.

    இப்போ எங்கட வீட்டுக் கார்டினுக்குள் ஒரு முயல்பிள்ளை வந்து போகிறார், எங்கோ வழிமாறி வந்திட்டார்போல, எங்கேயோ ஒளித்திருக்கிறார், பகலில் புல் சாப்பிட வருகிறார்.

    //இங்கும் அதன் தண்டுதான் எடுப்பார்கள்.நான் அதில் செய்யும் யோகர்ட் விரும்பி சாப்பிடுவேன்//

    ஓ... அப்ப உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு... எனக்கு தெரியாது இதுவரை.

    ReplyDelete
  70. ///மகியும் அடக்கம்ம்ம்ம்:))))./அவ்வ்வ்வ்வ்வ்! ஆடிவெள்ளிகிழமையும் அதுவுமா அடக்கம் பண்ணிப்போட்டீங்களே என்னைய??! நான் மஞ்சக்கலர் ஸாரி அனுப்பி ஐஸ் வைச்சப்பவே இது தெரிந்திருக்க வாணாமா உங்களுக்கு? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;) //

    ஆஹா...இது வேற நடக்குதா..? மஞ்ச ஸாரிக்கு பதிலா ஸ்டஃப் இட்லிக்குள்ள அ கோ மு வச்சிஅனுப்பியிருந்தா ஒரு வேளை நடந்திருக்கலாம் .இப்படி கோட்டை விட்டுட்டீங்களே மஹி

    ReplyDelete
  71. ஆடி வெள்ளி தேடி உன்னை.... நான் அடைந்த யோகம்ம்ம்ம்ம்...
    மகி நான் என் முடிவை மத்திட்டேன்ன்ன்ன்ன்...:))). அப்போ அந்த பச்சைக்கல்லு உங்களுக்குத்தான்:)))... எந்த விரல்ல போடப்போறீங்க?:))).

    ReplyDelete
  72. /மஞ்ச ஸாரிக்கு பதிலா ஸ்டஃப் இட்லிக்குள்ள அ கோ மு வச்சிஅனுப்பியிருந்தா /ம்ஹும்! காலங்கடந்த ஞானோதயம் ஜெய் அண்ணா!! ;) சரி விடுங்...ஆல் இஸ்zzzzzzzzzz வெல்!

    ReplyDelete
  73. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    இனியவை இருக்க இன்னாது கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று.

    நல்ல பிள்ளைகளா இருங்கோ மக்கள்ஸ்.

    ReplyDelete
  74. /பறவைகள், குதிரைகள் இருப்பின் மணம் வராதோ?./ஆஆஆஆஆஆ!!அவ்வ்வ்வ்வ்வ்வ்! மணமோ? நாத்தம்னு இல்ல சொல்லுவாங்க? ஏதோ நறுமணம் ரேஞ்சுக்கு பேசுறீங்களே பூஸ்?!

    ReplyDelete
  75. ஆஆஆ.... முதலைக்குப் பயத்தில ஜெய் இன்னும் படுக்கவேயில்லை... இதைவிட அந்த அக்கா வீட்டில வந்த கறுப்புப் பூஸ்ஸ்ஸ் எவ்ளோ பெட்டர்:)) இல்லையா ஜெய்?:))..

    வந்ததுதான் வந்தீங்க.... இந்த முதலையைக் கொஞ்சம் கட்டிப்போட்டுப் போகப்பிடாதோ? அது நான் பார்த்தாலே வாலால அடிக்குதேஏஏஏ:))))).

    ReplyDelete
  76. //ஆல் இஸ்zzzzzzzzzz வெல்! // என்னாதூஊஊ பிடிச்சி கினத்துக்குள்ளே தள்ள ப்போறீங்களா நான் வரல..நான் வரல.... :-))))

    ReplyDelete
  77. இமா...

    //இனியவை இருக்க இன்னாது கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று.

    நல்ல பிள்ளைகளா இருங்கோ மக்கள்ஸ். //

    இமா, நானும் ஒரு காலத்தில உப்பூடிப் பயப்புடுவேன்... இப்போ மறைபொருள்:)), யோகா:)), தியானம் எல்லாம் செய்து:)))), ஸ்ரோங் ஆகிட்டேன்:))))... நெருப்பென்றால் வாய் வெந்திடுமோ என எண்ணும் பக்குவம் வந்திட்டுது:)))).

    ஆங்ங்ங்ங்ங்ங்.... ஆரெல்லாம் கொயப்படி? அதிரா மாதிரி நல்ல பிள்ளைகளா இருக்கோணும் ஓக்கை....(சரி..சரீஈஈஈஈ ஒரு ஃபுளோல சொன்னா முறைக்கப்பிடா:)).

    ReplyDelete
  78. / என்னாதூஊஊ பிடிச்சி கினத்துக்குள்ளே தள்ள ப்போறீங்களா நான் வரல..நான் வரல.... :-))))/ஆங்..அந்த கிணத்துக்குள்ள இருக்க முதலைதான் அதிராவைப் பார்த்துப் பார்த்து /வாலால அடிக்குதேஏஏஏ:)))))./ அந்த முதலையக் கொஞ்சம் கட்டிவைச்சுட்டு வந்திருங்க,அதுக்குத்தான்......ரீச்சர் ஸ்டைல்லே பின்னாலே நின்னு யெல்ப்:) பண்ணலாம்னு பார்த்தா...!!!!!!!!!

    ReplyDelete
  79. மகீஈஈஈஈஈஈஈ....:)))),
    நாங்க நல்ல மணமெனில் பெரும்பாலும் “வாசம்” என்போம், மற்றும்படி மணக்குது என்றால்... அது கொஞ்சம் நல்ல மணமில்லை என அர்த்தம்ம்ம்ம்ம்ம்:)). இல்லாவிட்டால் நல்ல மணமாக இருக்கே என்றும் சொல்வதுண்டு...

    நாத்தம் என பாவிப்பது குறைவு.

    ReplyDelete
  80. /சரி..சரீஈஈஈஈ ஒரு ஃபுளோல சொன்னா முறைக்கப்பிடா:)). /பாத்து அதிரா! ஃபுளோ ஓவர் ஃப்ளோ ஆகி நீங்களும் கிணத்துக்குள்ள கால்தவறி வியுந்துகியுந்துவைச்சுராதீங்க. முதலை காட் பச்சைகலர் ரோஸ் ஆல்ரெடி! அதை சாப்பிட்டு முடிக்கட்டும் அது!!;)

    ReplyDelete
  81. //அது கொஞ்சம் நல்ல மணமில்லை என அர்த்தம்ம்ம்ம்ம்ம்:)).//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..ஓக்கே!! கொஞ்சநாள் முன்பு ஒரு பார்க் போனபோது போனி ரைட் போவதற்கு கொஞ்சம் குதிரைகள் நின்றிருந்தன, அந்த இடத்தைக் கடக்கும்போது மணம்ம்ம்ம்ம்ம்ம்மா இருந்துதா,அது நினைவு வந்துருச்சு! :)

    ReplyDelete
  82. மகீஈஈஈஈஈஈஈஈஈஈ:))
    //அதுக்குத்தான்......ரீச்சர் ஸ்டைல்லே பின்னாலே நின்னு யெல்ப்:) பண்ணலாம்னு பார்த்தா...!!!!!!!!! ///

    என்னாது யெல்ப்பா? ஆருக்கு ஜெய்க்கோ? ஹா..ஹா...ஹா... அவர்தான் பாம்பையே(செத்ததோ எனக் கேட்கப்பிடா:)) ஒத்த விரலால நசிச்சவராச்சே... அவருக்கு எதுக்கு யெல்ப்....:))

    சரி வந்ததுதான் வந்தீங்க, முதலையின் வாயைக் கொஞ்சம் பிடிங்க... சத்தமாக் கத்துது:)) எனக்கு காதடைக்குது:))).

    ReplyDelete
  83. /முதலையின் வாயைக் கொஞ்சம் பிடிங்க... சத்தமாக் கத்துது:)) எனக்கு காதடைக்குது:))). /நாங்க கொஞ்சம் உஷாருங்கோ!! இந்தாங்கோ ஒரு கிலோ பஞ்சு! ரெண்டு காதிலயும் தலா அரைக்கிலோ வீதம் வைச்சிகிட்டா எந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்த சத்தமுமே கேக்காதூஊஊஊஊ!

    ReplyDelete
  84. ///முதலை காட் பச்சைகலர் ரோஸ் ஆல்ரெடி! அதை சாப்பிட்டு முடிக்கட்டும் அது!!;) ///

    ஐயா... சாமீஈஈஈஈஈஈஈஈ அதுதானா எலும்பு முறிக்கிற சத்தம் மாதிரிக் கேட்குதூஊஊஊஊஊஉ?:)), நான் ஏதோ முதலையை மடக்கிப் பிடிச்சு, ஜெய் கட்டுறாராக்கும் எண்டெல்லோ நினைச்சுக்கொண்டிருக்கிறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்:)).

    என்னை விடுங்க நானில்லை... நானில்லை... நான் ரொம்ப நல்ல பொணூஊஊஊஊ:)) 6 வயசிலிருந்தேஏஏஏஏஏஎ:))).

    ReplyDelete
  85. //நான் ஏதோ முதலையை மடக்கிப் பிடிச்சு, ஜெய் கட்டுறாராக்கும் எண்டெல்லோ நினைச்சுக்கொண்டிருக்கிறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்:)).//

    அடுத்த யூ டியூப் வீடியோ போடவா ஹி...ஹி...

    ReplyDelete
  86. //நாங்க கொஞ்சம் உஷாருங்கோ!! இந்தாங்கோ ஒரு கிலோ பஞ்சு! ரெண்டு காதிலயும் தலா அரைக்கிலோ வீதம் வைச்சிகிட்டா எந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்த சத்தமுமே கேக்காதூஊஊஊஊ! ///

    ஹா...ஹா...ஹா.... மகி:)))). பஞ்செல்லாம் வாணாம்.... நான் எப்பவோ மர உச்சில ஏறிட்டேன்:))... நீங்கதான் பார்த்து பத்திரமா எங்காவது முதலைபிடி.... ஐ மீன்... இறுக்கிப்பிடிச்சுக்கொண்டு இருங்கோ எனச் சொன்னேன்ன்ன்ன்ன்:)))).

    ReplyDelete
  87. ///அடுத்த யூ டியூப் வீடியோ போடவா ஹி...ஹி...//

    :))))))கடவுளே!!! உந்த யூ ரியூப்பைக் கண்டுபிடிச்சவரை முதல்ல(நோ முதளை:)) பிடிச்சுக் கட்டோணும்ம்ம்ம்..
    இண்டைக்காவது நான் நிம்மதியாப் படுக்கோணும் என வயிரவரிட்டை ஆல்/ரெடி வாண்டிட்டேன்ன்ன்ன்

    ReplyDelete
  88. /அடுத்த யூ டியூப் வீடியோ போடவா/ நீங்களே பாடி வீடியோ போட்டாலும் பாக்கமாட்டமே இனிமேல்! :)

    /நீங்கதான் பார்த்து பத்திரமா எங்காவது முதலைபிடி.... ஐ மீன்... இறுக்கிப்பிடிச்சுக்கொண்டு இருங்கோ எனச் சொன்னேன்ன்ன்ன்ன்:)))). / எனக்கு மஞ்சக்கலர் பூ போதும் அதிரா..கருப்புப் பூனை,65கேஜி தாஜ்மஹால்(!?!),முதலை இப்பூடி பொருட்கள் எல்லாம் வேண்டாம்!

    ReplyDelete
  89. //நீங்களே பாடி வீடியோ போட்டாலும் பாக்கமாட்டமே இனிமேல்! :) // கடவுளே!!! இதுதான் சொந்த செலவிலயே சூனியம் வைக்கிறதென்பதோ?:)))...(ஜெய் தனக்கே வச்சிட்டாரோ:))) ஜெய்யிட பாட்டு அடுத்தமாதம் வெளிவரபோகுதாம் மகி, அடம் பிடிக்காம பாருங்கோ:)).

    மகி நான் சொன்னது, கிணற்றுக்குள் இருக்கும் முதளையிடமிருந்து தப்புறதுக்கு:))).

    ReplyDelete
  90. அம்முலூஊஊஊ தொடருது பதில்ல்ல்..

    //என்ன அதிரா நீங்க!! நல்ல ஸ்ரெடியெல்லோ பயப்பிடக்கூடாது.இன்னும் ஸ்ரெடியா இருக்கோனும். நிறைய அ.கோ.மு சாப்பிடுங்கோ.//

    தங்கூஊஊஉ தங்கூஊஊஊஉ... நான் நல்ல ஸ்ரெடியாஆஆஆஆஆஆஆ இருக்கிறேன் அம்முலு, அதிலயும் ஒரு முதலை வாங்கிவந்து, ஜெய் இன் உதவியோடு கட்டிவைத்துவிட்டேனெண்டால்... பிறகு பயமே இல்லை:))).

    ஊசி:முளுவதும் (ஒருநாள் முளுவதும்);; முழுவதும் ///

    என்ன அம்முலு என்னைக் கொயப்பிட்டீங்க....:(, நான் காலகாலமாய் “முழு” எனத்தான் எழுதி வந்தேன்... 2009 இல “அங்கின”, முழுப்பெயர் என எழுத.... எனைக் குழப்பி விட்டுவிட்டினம் முளுப்பெயர் என்பதுதான் சரி என, அன்றிலிருந்துதான் நான் இப்படி எழுதுறேன்.... அப்போ முழுதான் சரியோ?அவ்வ்வ்வ்வ்:))).

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  91. /மகி நான் சொன்னது, கிணற்றுக்குள் இருக்கும் முதளையிடமிருந்து தப்புறதுக்கு:)))./உங்கள மாதிரி மரமேறத்தெரிஞ்சா நானும் தப்பியிருப்பேன், இப்ப என்ன பண்ணுவது? வான்ஸ் இருந்தாலாவது யெல்ப் பண்ணுவாங்க,அதுவும் இல்லை!

    இட்ஸ் ஓக்கே..தேம்ஸ் கரையோரம் யோகா செய்யாமலே நான் கொஞ்சம் ஸ்ராங் அன் ஸ்ரெந்தாத்தான் இருக்கேன்,முதலையாவது இன்னொண்ணாவது! ;)

    [குளிர்க்காய்ச்சலும் ஜன்னியும் வந்த மாதிரி இருக்குதே..அவ்வ்வ்வ்!]

    ReplyDelete
  92. ஓக்கை மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்... நேரமாகிட்டுது எனக்கூஊஊஊஊஊ:))... மியவும் நன்றி மகி, இமா, ஜெய்.... கனவில முதலையைக் கண்டு கத்திடாமல், வாயில பஞ்சு வச்சுப் படுங்கோ:)).... எப்பூடி என் கிட்னியின் ஐடியா?:))).

    மீண்டும் சந்திக்கலாம்.

    ReplyDelete
  93. /முழுப்பெயர் என எழுத.... எனைக் குழப்பி விட்டுவிட்டினம் முளுப்பெயர் என்பதுதான் சரி என, / மு"ளு"ப்பூசணிக்காவ சோத்துல மறைக்கிற கதையா இருக்குதே..அதாரு அதிரா உங்களுக்கு தப்புத்தப்பா சொல்லிக்குடுத்தது? முழு-தான் சரி! முளு-ன்ற வார்த்தைக்கு அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரில! :)

    ReplyDelete
  94. //முதலையாவது இன்னொண்ணாவது! ;) //

    ஹா...ஹா...ஹா.... வாய்தான் சொல்லுது ஆனா கை ரைப் அடிக்குதே:))))).... பயப்பூடாதீங்க, முதலை முட்டை அவிச்சுச் சப்பிட்டா குளிர்காச்சல், ஜன்னி எல்லாம் பறந்ந்ந்ந்ந்து போயிடுமாம்ம்ம்ம்ம்ம்:)))).

    ReplyDelete
  95. /எப்பூடி என் கிட்னியின் ஐடியா?:)))./ஜூஊஊஊப்பர்!
    நான் கமென்ட் சொல்லறது மட்டும்தான்,இம்ப்ளிமென்டேஷன் நீங்களெ செய்துபார்த்து நாளைக்கு சொல்லுங்கோ! நல்லிரவு! :)

    ReplyDelete
  96. //கனவில முதலையைக் கண்டு கத்திடாமல், வாயில பஞ்சு வச்சுப் படுங்கோ:)).... //

    கருப்பு பூஸ் படத்தை காட்டிட்டு தூங்க சொன்னால் எப்பூடி ? மணி இப்பதான் 2 ஆகுது அவ்வ்வ்வ் ..இப்பவே கைகால் இந்த நடுக்கம் நடுங்குது :-)))

    ReplyDelete
  97. ஹையோஓஓஒ ஹையோஓஓஓ... அது எங்கட “அங்கின” தான், அவிக வேணுமெண்டு என்னை ஏத்திவிட்டாரோ?:)))), நான் அதை உண்மை என நம்பிட்டேன்போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ஆனாலும் எனக்கு டவுட் இருந்துது.... நல்லவேளை அம்முலு சுட்டிக்காடியது:))). நன்றி மகி.

    ReplyDelete
  98. மகி நான் நல்ல ஸ்ரோங்கா.... காலையும் கதிரைக்கு மேல வச்சுக்கொண்டுதான் டைப்பிங்:))(எல்லாம் ஒரு சேஃப்ரிக்காகத்தேன்:)).

    ஜெய்... ஒரு நாக பாம்பை அடிச்சா, அதிண்ட துணை அடிச்சாளைத் தேடி வருமாம்...

    ஆனா, முதலை பற்றிக் கதைச்சாலே.... குடும்பத்தோடு தேடி வருமாமே:))))... கடவுளே... நான் முதலையைக் கதைக்கல்ல:)))))...

    ReplyDelete
  99. //ஆனா, முதலை பற்றிக் கதைச்சாலே.... குடும்பத்தோடு தேடி வருமாமே:))))... கடவுளே... நான் முதலையைக் கதைக்கல்ல:))))).//

    பரவாயில்லை இதுக்குதான் ஆத்தோரத்தில் வீடு இருப்பது டேஞ்சர்ன்னு வவ்வாலடி சித்தர் சொல்லி இருக்கார் . வவ்வாலடி சித்தர் யாருன்னு கேட்கப்பிடாது கர்ர்ர்ர்ர்ர்ர் :-))

    ReplyDelete
  100. அதிரா சுவாரசியமான பதிவு. ஆமா ஏன் எல்லாரும் கருப்பு பூஸைபாத்து இப்படி பயப்படுராங்க. எவ்வளவு
    க்யூட்டா இருக்கு.

    ReplyDelete
  101. //வவ்வாலடி சித்தர் சொல்லி இருக்கார் . வவ்வாலடி சித்தர் யாருன்னு கேட்கப்பிடாது கர்ர்ர்ர்ர்ர்ர் :-)) //

    என்ன ஜெய்?...வவ்வாலடியில சித்தரா????:))))))).... அதுதானா தலைகீழாகத் தொங்கிற ஆசை வந்தது?:))).. ஹா..ஹா..ஹா...

    ஒருக்கால் அந்த “வவ்வாலடி” சித்தரிட்டைச் சொல்லுங்கோ.... எதுக்கும் ஹெல்மெட் போட்டுக்கொண்டு தொங்கட்டாம் எண்டு:)))).

    ReplyDelete
  102. ஐஐஐஐ... நான் நேற்றுப் போட நினைச்சுட்டு ஆகவும் ரயேட்டாக இருந்ததால, போடாமல் போனன்.... அது சிவாவுக்கு கிடைச்சிட்டுது அதுதான் 100 ஆவது அவித்த கோழி முட்டைஐஐஐஐஐஐஐஐஐ....

    நன்றி சிவா....

    ReplyDelete
  103. வாங்க லக்ஸ்மி அக்கா....

    //ஆமா ஏன் எல்லாரும் கருப்பு பூஸைபாத்து இப்படி பயப்படுராங்க. எவ்வளவு
    க்யூட்டா இருக்கு. //

    அதுதானே... இவிங்களுக்கு கியூட் பற்றித் தெரியாது லக்ஸ்மி அக்கா..... பூனைக்கே இப்பூடிப் பயந்தால்.... என்ன பண்ணப்போயினமோ?:).

    மிக்க நன்றி லக்ஸ்மியக்கா.

    ReplyDelete
  104. //நாமும் ஒன்று வளர்த்து என் புளொக்ல கட்டப்போறேன்... களவு நடக்குதாமே:))).// உங்க பச்சை கல் மோதிரத்த திருட வராங்களோ ?? வேற ஒண்ணும் valuables இல்லையே ??

    //ஏன் ஒரு முதலை வாங்கி கட்டுங்களேன் ஹி..ஹி... :-)))பிளாகுக்குள் யாருமே காலை எடுத்து வைக்க மாட்டார்கள் :-))))) // சித்த வைத்தியரின் ஆலோசனைய தட்ட கூடாது சோ.. முதலைய கட்டிடுங்க

    //கிரிசா அம்முணி பத்தவச்ச வதந்தீ நெருப்பில்லாமலே இப்பூடி புகையுதே? எ.கொ.அ.இ?? // வாட் டிட் ஐ டூ?? கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் ஓகே மகி ?

    ReplyDelete
  105. //பக்கத்தாலை இருக்க கி..சா அம்முணி கை நல்லா ருசியா இருக்கும்னு கேள்வி! ட்ரை பண்ணுங்களேன்! ஹாஹாஆ!// பூஸ் வதந்திகளை நம்பாதீர் !! நீங்க உங்க ப்ளைட்ட புடிச்சு அமெரிக்கா வுக்கோ இல்லே நியூ சிலாந்து பக்கமாவோ போய் ட்ரை பண்ணுங்கோ. நாரதர் வேல பார்த்ததுக்கு ஆளையே தீர்த்து கட்டிடுவாங்க போல இருக்கே ஆகா திரிஷா ச்சே கிரிசா அட ச்சே கிரிஜா ரெம்ப ரெம்ப சாக்கிரதை : )

    ReplyDelete
  106. //நியூ சிலாந்து பக்கமாவோ போய் ட்ரை பண்ணுங்கோ.// !!!!!! விரலையா? முதல் நாள் சொல்லிக்கொண்டு வந்தால் 'மாரினேட்' செய்து வைக்க உதவியாக இருக்கும். ;))
    0+ ஓகேயா?

    ReplyDelete
  107. நேத்திக்கு எல்லாம் இங்க கூடி இருக்கீங்க போல இருக்கு ச்சே ஐ missed இட் போல இருக்கு.. போன வாரம் கும்மி அடிச்சது நல்ல இருந்தது. பார்க்கலாம் அடுத்த தடவை சந்தர்ப்பம் அமையுதான்னு

    ReplyDelete
  108. //போன வாரம் கும்மி// தப்பு தப்பு. ;( அதுக்குப் பேர் 'தீபாவளி' ;)))))

    "உன்னைக் கண்டு நான் ஆட
    என்னைக் கண்டு நீ ஆட
    உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி" ;)))))

    ReplyDelete
  109. அடடா.... நேற்று நானும் மிஸ்டூஊஊஊஉ ஆ?...அவ்வ்வ்வ்வ்:)))).

    உன்னைக் கண்டு நான் வாட....
    என்னைக்கண்டு நீ வாட...
    கண்ணீரில் கதை சொல்லும் தீஈஈஈஈஈபாவலி:))....

    ஒவ்வொரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறுதாக்கமும் உண்டாம்... நியூட்டன் அங்கிள் சொல்லியிருக்கிறார்...:)))).

    ஆரும் கொயம்பிடாதீங்க மக்கள்ஸ்ஸ்ஸ்... அதிரா இப்பூடித்தான்... அப்போ நான் போட்டுப் பேந்து வாறன் ஓக்கை?.. எங்கயொ? முதலை பிடிக்கத்தேன்ன்ன்ன்... அதுதே....ன் கிரிசா சொல்லிட்டால்ல?:))))..

    ReplyDelete
  110. ஆஹா அந்த ஈயை பிடித்து யார் வாயில போட்டீங்க.. காணொளி சிரிப்பூஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  111. அஹா..டெம்ப்ளேட் எல்லாம் மாறிபோயிருச்சு... மிஸ்டர் மியாவ் மியாவ் எல்லாம் காணோம்...விரட்டீங்களா... நல்லாருக்குன்னு சொல்லி வைப்போம்... டெம்ப்ளேட் சூப்பருங்க

    ReplyDelete
  112. கறுப்பு பூனையைப்பாத்தா கலவர பீதியாயிருமே... நிறைய படத்தில் திகில் காட்சியில எல்லாம் mr. கருப்பு பூனை தான் வர்ராரு... ஆனா அங்க செல்லாம வளக்குறாய்ங்கிளா...

    ReplyDelete
  113. குட் கேர்ள்க்கு பேர் வைக்கலையா.... காந்திமதி or கோவை சரளான்னு வைங்க.... வெரி ஹியுமரஸ் கேர்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்

    ReplyDelete
  114. மன்னிக்கவும் எனது தளத்தில் நீங்கள் இணைந்திருந்த google frind connect... follower gadget remove ஆகிவிட்டது.. மறுபடியும் இணையவும்..நன்றி

    ReplyDelete
  115. //பூஸ் வதந்திகளை நம்பாதீர் !! நீங்க உங்க ப்ளைட்ட புடிச்சு அமெரிக்கா வுக்கோ இல்லே நியூ சிலாந்து பக்கமாவோ போய் ட்ரை பண்ணுங்கோ.//

    கிறஷா... சே..சே கிரிஜா... நான் இருக்கிறதை விட்டுப்போட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படவே மாட்டன்:))))).. பிரித்தானியாவிலயே(கிரிஜாவை:)) வச்சுக்கொண்டு வெளிநாட்டுக்கெல்லாம் போவேனோ? நோ சான்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

    //விரலையா? முதல் நாள் சொல்லிக்கொண்டு வந்தால் 'மாரினேட்' செய்து வைக்க உதவியாக இருக்கும். ;))
    0+ ஓகேயா? // இல்ல இமா இல்ல.. எனக்கு கிறஷா சே..சே.. பிறஷ்ஷாத்தான் வேணும்ம்:)).

    ReplyDelete
  116. வாங்க மாயா...
    நாங்க அர்ச்சுனன் மாதிரியாக்கும்...:)), ஷோபா கிழிஞ்சால் என்ன, லைட் உடைஞ்சாலென்ன.... பூச்சியை பிடிச்சாச்செல்லோ?:)))).

    மியாவ் அப்பப்ப வரும்ம்ம்ம்ம்.

    ஓம்... கறுப்புப் பூஸுக்குத்தான் இங்கு செல்லம் அதிகம்:)).

    ReplyDelete
  117. //காந்திமதி or கோவை சரளான்னு வைங்க..///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))), வீட்டில இருக்கிறவங்க தான் கோ.ச போல இருக்கே என்று சொல்கிறார்களெனப் பார்த்தால் நீங்களுமா?:)).. ஏன் தமனா, கிரிஷா... சே..சே திரிஷா... அப்பூடிச் சொல்லப்பூடாதோ?:)).

    //remove ஆகிவிட்டது.. மறுபடியும் இணையவும்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), எவ்ளோ கஸ்டப்படு.. குப்புறக்கிடந்து கிட்னியை பூஸ் பண்ணி.. சே..சே என்னப்பா இது இண்டைக்கு நாளே சரியில்லை, கிட்னியை யூஸ் பண்ணி ஃபலோவராக இணைஞ்சேன்:)), இனி திருப்பியுமா?:))... ஓக்கை அதனாலென்னா, இணைஞ்சால் போச்சு.

    மிக்க நன்றி மாயா.

    ReplyDelete
  118. என்ன இது கமெண்ட் டே 6 பதிவ தாண்டும் போல இருக்கே

    உங்கட செல்லங்கள் ஜூப்பரு
    நானும் பூஸார பற்றி கடந்த கால கதை கதைக்க நிறைய இருக்கு ஆனால் ரைப் பண்ன தான் இன்னும் மனம் வரல

    ReplyDelete
  119. ////போன வாரம் கும்மி// தப்பு தப்பு. ;( அதுக்குப் பேர் 'தீபாவளி' ;)))))

    "உன்னைக் கண்டு நான் ஆட
    என்னைக் கண்டு நீ ஆட
    உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி" ;))))) // ஒரு அப்பாவிய தூங்க வெச்சுட்டு கொண்டாடின தீபாவளி தானே ?? ஹும்ம்ம் நல்லா ஆஆ இருங்க .. அப்படியே விரல தந்தூரி மசாலா போட்டு மரிநெட் (marinade) பண்ணுங்க

    ReplyDelete
  120. //முதலை பிடிக்கத்தேன்ன்ன்ன்... அதுதே....ன் கிரிசா சொல்லிட்டால்ல?:)))).. // புடிச்ச உடனே ஜொள்ளுங்கோ ச்சே சொல்லுங்கோ நான் நீங்க இருக்கும் திசைக்கே ஒரு பெரிஈய கும்பிடு போட்டு ஓடிர்றேன் ...என்ன ஆனா பதிவு போடறத விட மாட்டேன் எப்பூடி ஹா ஹா

    ReplyDelete
  121. ////விரலையா? முதல் நாள் சொல்லிக்கொண்டு வந்தால் 'மாரினேட்' செய்து வைக்க உதவியாக இருக்கும். ;))
    0+ ஓகேயா? // இல்ல இமா இல்ல.. எனக்கு கிறஷா சே..சே.. பிறஷ்ஷாத்தான் வேணும்ம்:)). // நான் ஊருக்கு போயிட்டேன் .. இமாதான் தந்தூரி மசாலா போட்டு marinade பண்ணுறாங்களாம். மகி & வான்ஸ் சிக்கன் 65 போட்டு ஊற வைக்கிறாங்களாம். அதுதான் ரெம்ப பிரெஷ்ஷா இருக்கும். கஷ்டத்த பார்க்காம flight புடிச்சு போயிட்டு வந்திடுங்க :))

    ReplyDelete
  122. வாங்க ஜலிலாக்கா... நெடுகவும் சொல்றீங்க, ஆனா இன்னும் எழுதுறீங்க இல்ல, 2012 க்கு முன் எழுதிடுங்க.

    மியாவும் நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  123. வாங்க கிரிஜா(ஐ கரெக்ட்டாச் சொல்லிட்டேன் பெயரை, மகிமாதிரி தப்பாவெல்லாம் சொல்ல மாட்டேன்:), அதிரா ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))..

    சரி சரி... முதலை வாணாம், ஜெய்யும் பிடிச்சுக் கட்டப் பயம்மாக்கிடக்காம்.. மகிக்கும் கை கால் நடுங்குதாம்... சோ... வாணாம்...

    //கஷ்டத்த பார்க்காம flight புடிச்சு போயிட்டு வந்திடுங்க :)) // அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))). எந்தப் பிளேனும் என்னை ஏத்த மாட்டுதாம்:))).

    ReplyDelete
  124. அதிரா நீங்கள் சொன்ன இந்த மரம் அல்ல நான் எங்கள் தளத்தில் கொடுத்திருக்கும் அந்த மரம். அதன் பெயரை அறிய முற்படுகிறேன். தெரிந்ததும் சொல்லுகிறேன்...

    படங்கள் எல்லாம் அழகு! அதுவும் செல்லங்கள், செடிகள் எல்லாம்...

    கீதா

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.