உதுவல்ல தலைப்பு... இதுதான் தலைப்பூஊஊஊ
சொர்க்கம் - நரகம்
சே...சே... யோகாச் செய்யிறதால வர வர ஞாபக சக்தி அதிகமாகிட்டே வருதூஊ:) |
அவர் இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போ அந்த பாதிரியார் சொன்னார்..
“நல்லவர்கள், கடவுளை நம்புவோர் சொர்க்கத்துக்குப் போவார்கள். கெட்டவர்கள், கடவுளை நம்பாதோர், நரகத்துக்குப் போவார்கள்” என.
இதைக் கேட்ட அந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு, சந்தேகம் எழுந்துவிட்டது. உரை ஆற்றிவிட்டு பாதிரியார் போனபோது, அவர் பின்னால் போய்க் கேட்டார்..
ஃபாதர்.... நீங்கள் சொன்னதில் எனக்கொரு சந்தேகம்..
“நல்லவர்கள், கடவுளை நம்பவில்லையாயின் நரகத்துக்குப் போவார்களோ?, அதேபோல கெட்டவர்கள் கடவுளை நம்பினால், அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்குமோ” எனக் கேட்டார்.
இதற்கான பதிலை உடனடியாக அப் பாதிரியார் சொல்லவில்லை. அவர் , இன்னொருநாள் பதில் சொல்கிறேன் என்றுவிட்டுப் போய் விட்டார்.
அவரின் மனதில் இக் கேள்வி குடைந்துகொண்டிருந்தது, நியாயமான கேள்விதானே, இதற்கு என்ன பதில் சொல்லலாம் என.
இரவு, பாதிரியாருக்குக் கனவு வருகிறது. கனவிலே ஒரு ரெயினில் ஏறி, சொர்க்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார், அங்கு போனதும் பார்க்கிறார். சொர்க்கம் என நினைத்த இடம் காய்ந்து வரண்டு காடுபோல காட்சி தருகிறது.
திரும்பி நரகத்துக்குப் போகிறார்.. அங்கே, நாட்டில் நல்லவர்கள் எனப் போற்றப்பட்ட, பாதிரியாருக்குத் தெரிந்த சிலர் நின்று தோட்ட வேலைகள் செய்கிறார்கள், பூமி குளிர்மையாக பச்சைப் பசேலெனக் காட்சி தருகிறது.
அப்போ, இப் பாதிரியார் அந்த தோட்டவேலை செய்யும் நல்லவர்களைப் பார்த்துக் கேட்கிறார்,
“நீங்கள் எப்படி இங்கு நரகத்திலிருக்கிறீர்கள், நரகம் குளிர்ச்சியாக இருக்கிறது, ஆனால் சொர்க்கம் ஏன் காய்ந்துபோய் இருக்கிறது?” என.
அதற்கு அவர்கள் சொன்னார்களாம்,
“நல்லவர்கள் எங்கிருக்கிறார்களோ, அதுதான் சொர்க்கம், கெட்டவர்கள் எங்கிருக்கிறார்களோ அதுதான் நரகம்” என்று.
முடிவு என்னவென்றால்....
“நாம் எங்கே, ஆருடன் இருக்கும்போது அதிக மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருக்கிறோமோ அதுதான் சொர்க்கம்”
அதேபோல
“நாம் எங்கே, ஆருடன் இருக்கும்போது, மன வேதனையோடும், துன்பத்தோடும், சந்தோஷமின்றிக் கஸ்டப்படுகிறோமோ அதுதான் நரகம்”
இது பூஸ் ரேடியோவில் சொன்னார்கள், ஞாபகமாக்கி வைத்து இங்கே எழுதிட்டேன்.
=================================இடைவேளை================================
இந்த இடைவேளையிலயாவது, ஆராவது நம்மளத் தேடீனமோ பார்ப்பம்:)))
=================ஸ்ஸ்ஸ் முடிஞ்சு போச்ச்ச்ச்ச் இடைவேளை==================
பூஊஊஊஊ இணைப்பூஊஊ:)):
எங்கட ஆற்றங்கரையும் செவ்வந்திப்பூக்களும்...
படம் எடுக்க நினைத்துக்கொண்டே இருந்தேன், அதற்குள், இடையில் மழை நாட்கள் வந்து, பூக்கள் கொஞ்சம் பழுதாகிவிட்டன... அஜீஸ் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).
ஜீப்பைப் பார்க் பண்ணிவிட்டு, டெண்டிஸ்ட் இடம் போய் “ஈ” க்காட்டி வந்தேன், அப்ப பார்த்து ஒரு கறுப்புப் பூஸார் என் ஜீப்பின் கீழே நுழைகிறார்:) உடனே ஒரு ஷொட்:))
கீழே போனவருக்கு என்னா தைரியம், போய்ப் படுத்துவிட்டார் கீழே:)), நான் எப்படியாம் ஜீப்பை எடுப்பது அவ்வ்வ்வ்வ்வ்:)), ரோட் என்றாலும் பறவாயில்லை என, நானும் கீழே சரிஞ்சு படுத்து படமெடுத்தேன்... கண் மட்டும் நல்ல அயகாத் தெரியுது:)).
|
Tweet |
|
|||
முதல் மழை என அழைத்தேஏ ....
ReplyDeleteஆஆஆஆ மாயா.... அப்போ இது நீங்கதானே? உஸ் அப்பாடா இப்பத்தான் நெஞ்சில தண்ணி வந்தமாதிரி இருக்கூஊஊஊஊ:))..
ReplyDeleteமுதல் ஆரியபவான் ஓடர் வடை உங்களுக்கே:))
ஆஹா பாட்ட மாத்தி பாடிட்டனா .... நான் தேடும் செவந்தி பூவிது... நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ReplyDeleteஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே
பொன் மானே உன் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி...அ அ அ
பெண் மலரோடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமெனத் தவம்கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு
???
என் தேவா...அ அ அ
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை
அப்பா பாடிட்டேன்..... அது சரி மூணு நாளா உங்க ப்ளாக் ஓப்பன் ஆகாமா மக்கர் பன்னுச்சே... ப்லாக்கையே ஆறாவது களவாடிட்டாகளா
athira said... 2
ReplyDeleteஆஆஆஆ மாயா.... அப்போ இது நீங்கதானே? உஸ் அப்பாடா இப்பத்தான் நெஞ்சில தண்ணி வந்தமாதிரி இருக்கூஊஊஊஊ:))..
முதல் ஆரியபவான் ஓடர் வடை உங்களுக்கே:))//
ஆரியபவன் ஓடர் வடை எனக்கே எனக்கா
ரெயினில் ஏறி, சொர்க்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்//
ReplyDeleteஎந்த ஊரு ரெயின் சொர்க்கத்துக்கு போகுது... சொல்லுங்க நான் கூட டிக்கெட் வாங்கணும்
நான் சிரிக்கவில்லை இப்போ:))))) மாயாவின் எழுத்துப் பார்த்துச் சிரித்தால் பிறகு நித்திரை குலைஞ்சுபோகும்:))))).
ReplyDelete“நாம் எங்கே, ஆருடன் இருக்கும்போது அதிக மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருக்கிறோமோ அதுதான் சொர்க்கம்”//
ReplyDeleteஅஹா அப்பா இது தான் சொர்க்கம் அவ்வ்வ்வ்வ்
அங்கே இப்போ டைம் என்ன மியாவ் ?
ReplyDeleteமியாவ் ரைம்... 1:15
ReplyDeleteஇங்க விடிஞ்ச்சிடுச்ச்சே
ReplyDeleteதூங்க போயாச்சா கனவுல காஞ்சனா வருவாஆஆஆ ஆஆஆஅ
ReplyDeleteகணவன் : உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் இதுமேலெல்லாம் நம்பிக்கை இல்லாம இருந்துச்சு!
ReplyDeleteமனைவி : இப்ப?
கணவன் : நரகத்தை முழுக்கப்பார்த்துட்டேன், இனிமேதான் சொர்க்கத்தைப் பார்க்கனும் (நன்மை செய்வதின் மூலம்)
பயபுள்ளைக எப்படியெல்லாம் கோமெடி எழுதுதுக பார்த்தியளா?
பூஸாரின் யோகா சூப்பர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
த்துவம்...சூப்பர்
ReplyDeleteகருகிய தீக்குச்சி...//
ReplyDeleteம் கலக்கல் கவிதை
வருங்கால வைரமுத்து பேபி அதிரா
புதிய தாமரை பேபி அதிரா
வாழ்க வாழ்க
//“நாம் எங்கே, ஆருடன் இருக்கும்போது அதிக மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருக்கிறோமோ அதுதான் சொர்க்கம்”// அப்ப இமாவின்ர உலகம்தான் கெ.கி-களின் சொர்க்கம்.
ReplyDeleteபூஸ் போட்டோஸ் அழகு.
இமாவின் உலகில்.. புகைப்பட அருவியில்... !!!! ;)))
ReplyDelete//நான் மும்பையில் இருக்கும் போது எப்பிடிய்யா அங்கே இடியும் மழையும்...???///
ReplyDeleteசீ நீங்க ரொம்ப கெட்ட புள்ள.... நான் சேர மாட்டேன்.. ஙே....ஐய்யே..........
படங்களும் பதிவும் அருமை ,குறிப்பாக சொன்ன தத்துவம் அருமை .சாக்கடை இருக்கும் இடம் நாறத்தான் செய்யும்,பூக்கள் இருக்கும் இடம் மணக்கத்தான் செய்யும் .பகிர்வுக்கு நன்றி சகோ..
ReplyDeleteவாங்க மாயா... அதுக்குள்ள உங்களுக்கு விடிஞ்சுபோச்சாஆஆஆ?:))
ReplyDeleteஅதாரது ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சனா?:) என் பிரெண்ட் பெயரும் அதுதான்...
மியாவும் நன்றி மாயா.
ஊசிக்குறிப்பு: முதலையின் வயிற்றில இருந்து என் பக்கம் ஓபின் பண்ண ட்ரை பண்ணியிருக்கிறீங்க... அப்போ எப்பூடித் திறக்கும் அவ்வ்வ்வ்:)))
வாங்க அந்நியன்...
ReplyDeleteஎல்லா எதிர்ப்பாலாரும் சொல்லிவச்சதுபோல...... ஒரே அலைவரிசையில கொமெடி சொல்றீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).
யோகா சூப்பர் எனச் சொன்ன முதேல் ஆள் நீங்கதான் அந்நியன்... மியாவும் நன்றி.
வாங்க சிவா வாங்க....
ReplyDeleteஎன்ன இன்று சோர்வாக இருப்பதுபோல இருக்கே... அகத்தின் அழகு எழுத்திலே தெரியும்... உஷாராகிடுங்க.. ஹப்பியாக இருங்க.
//வருங்கால வைரமுத்து பேபி அதிரா
புதிய தாமரை பேபி அதிரா
வாழ்க வாழ்க //
கடவுளே அவர் காதில விழுந்தால் அவ்ளோதான்... கவிதையாலேயே பின்னிப் பெடல் எடுத்திடுவார்... அவரின் பேட்டி, கவிதை, உரை அனைத்தும் எனக்குப் புய்க்கும்.
அது பேபி அதிரா எல்லோ எப்பூடி எழுதுவா..:)), ஒரு பழைய புத்தகத்தில் ஓர் ஓரத்தில பேர் ஊர் இல்லாமல் இருந்துது, பார்த்ததும் சுட்டிட்டேன்... படிச்சதும் கிழிச்சிடுங்க...:))).
மியாவும் நன்றி சிவா... மீ த 1ஸ்டூஊஊ:).
Hems pearppi vinusupla haivayusu!!!!!!:)
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் பேபி அதிரா போல பதினாரிலே இருக்க வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
என்ன இன்று சோர்வாக இருப்பதுபோல இருக்கே... அகத்தின் அழகு எழுத்திலே தெரியும்... உஷாராகிடுங்க.. ஹப்பியாக இருங்க.//
ReplyDeleteநோ நோ am ஹாப்பி ஹாப்பி ஹாப்பி
:)
25....vadai enakey enakkaa..
ReplyDeleteHerzlichen Glückwunsch zum Geburtstag lieber Ammulu. ;)
ReplyDeleteVielen Dank Athira. ;)
//இமாவின் உலகில்.. புகைப்பட அருவியில்... !!!! ;))) // அதிரா பாக்கேல்ல இன்னும். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதல போய்ப் பாருங்க.
ReplyDeleteநன்றி,நன்றி அதிரா.thank you, Danke, Merci, gracias,teşekkür ederim, شكرا
ReplyDeleteநான் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. ரெம்ப நன்றி அதிரா திரும்பவும்.
ReplyDeleteஅங்கே நான் சொன்னதை வாபஸ் வாங்கி, தோப்புக்கரணமும் போட்டாச்சு அதிரா.கோபிக்ககூடாது அதிரா.நீங்க நல்ல பிள்ளையெல்லோ 6வயசிலிருந்து.
Nice post athira! Photos azhaka irukku! :)
ReplyDeleteவாங்க சிவா...
ReplyDeleteநீங்க ஹப்பியாகிட்டீங்க அதால உங்களுக்கு 25 ஆவது வடை இல்லை:)).. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..:)).
//Hems pearppi vinusupla haivayusu!!!!!!:)//
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாஷையில கதைக்கினம்.. அதிராவோ கொக்கோ...:)) நானும் ஒரு பூனைப் பாஷை ரெடி பண்ணிட்டேன்... 5 நாளில் பூஸ் லங்குவேஜ்... புக் வாணுமெண்டால் பவுண்டில செக் எழுதி இப்பவே அனுப்பிடுங்க...
முடிஞ்சிட்டா பிறகு அடுத்த பதிப்பு வரை காஆஆஆஆத்திருக்கோணும்(இது வேற காத்தூஊ:)).
மியாவ் மியாவ் சிவா.
//இமா said... 26
ReplyDeleteHerzlichen Glückwunsch zum Geburtstag lieber Ammulu. ;)//
பிறந்தநாள் அதுவுமா உப்பூடியெல்லாம் ஏசப்பூடாது இமா:)))).... ஹையோ சொன்னது நானில்ல, இளைய மருமகன் ஜெய் ஆக்கும்.... ஓடுறார். கலையுங்கோ..கலையுங்கோ...:))).
Vielen Dank Athira. ;)//
டாங்ஸ்ஸ்ஸ்ஸ்:)).
இமா நான் காலை எழும்பியதிலிருந்து 3 தரம் வந்து பார்த்தேன், ரீஈஈஈஈ பிரெஸ்ஸ்சூஊஊஊஊஊஊஊ பண்ணியெல்லாம் பார்த்தாச்சு எந்தப் புதுசும் தெரியேல்லையே அவ்வ்வ்வ்வ்:)).. ஒருவேளை அல்பத்திலயோ?????.
மியாவ் மியாவ்...
வாங்க அம்முலு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இன்றுபோல் என்றும் இனிதே மகிழ்வாக நோய் நொடியின்றி, தீர்க்க சுமங்கலியாக இருக்க வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஇன்று எங்கள் அம்மாவின் பிறந்தநாள்....
நாளை மாமியின்(கணவரின் அம்மா) பிறந்தநாள்....
//mmulu said... 28
நன்றி,நன்றி அதிரா.thank you, Danke, Merci, gracias,teşekkür ederim, //
புரியுது புரியுது:)), நீங்க திட்டுவதிலயும் ஒரு ஞாயம் இருக்கு:))))... நேற்றே ஏன் வாழ்த்துச் சொல்லி, பூத்தரேல்லை எனத் திட்டுறீங்க... தெரிஞ்சிருந்தால் இன்னும் கொண்டாடியிருக்கலாம் ஜஸ்ட்டு மிஸ்டூஊஊ...
நான் இ.உ இல ஜெய்ட வாழ்த்தைப் பார்த்ததும், இமாவுக்காக்கும் என குவைத்வரை பிளேனில பறந்துபோய் விசாரிச்சுத்தான் கண்டுபிடித்தேன் அம்முலுவுக்கென அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).
மியாவ் மியாவ் அம்முலு.
வாங்கோ மஞ்சள் பூ மகீஈஈஈஈஈ
ReplyDeleteநீங்க எங்க இருக்கிறீங்க?:)))... ஹொலிடே கொண்டாடினது போதும் வாங்கோ....
சிக்குப் புக்கு...சிக்குப் புக்கு.....(இது புகையில்லாத ரெயின்ன்ன்ன்ன்ன்ன்:)))).
மியாவ் மியாவ் மகி.
உங்கட வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள் அதிரா.உங்கள் அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனக்கு ரோஜாவுக்கு அடுத்து செவ்வந்திபூ விருப்பம் அதிரா.ஆனால் இங்கு ஒரு செடியும் வைக்கவில்லை.ஏனென்றால் நத்தை வரும்.எனக்கு நத்தை எழுதவே என்னவோ செய்கிறது. அங்கு நிறைய மரங்கள் வைத்திருந்தேன்.
செவ்வந்திப்பூ பாடலை ஏன் எடுத்துவிட்டீங்க அதிரா? நல்ல பாட்டு. பொருத்தமான
பாட்டு திரும்பவும் போட்டுவிடுங்க.
பூஸ் ரேடியோவை அடிக்கடி ஓன் பண்ணுங்கோ அதிரா.நல்ல நல்ல தத்துவமா ஒலிபரப்புது.யோகா பூஸ் படம் நன்றாக இருக்கிறது.பேபி அதிராவின் கவிதை நன்றாக இருக்கு.
இமா,சிவாக்கு நன்றிகள்.
இனி குவைத் வரை போகமாட்டீர்கள் என நினைக்கிறேன்.
மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் “றீச்சரும் முதலையும்” மெட்னி, 1ஸ்ட் ஷோ, ஏன் செகண்ட் ஷோ, மிட் நைட்டூஊ ஷோவும் உண்டு ஓடிப்போய்ப் பாருங்கோ...
ReplyDeletehttps://picasaweb.google.com/106111488443617015705/OzaZGL#5644966871485418626
அம்முலு பிறகு வாறேன் பதிலுக்கு.
அடடா தப்பு நடந்துபோச்சு இப்போதான் கண்டேன்... வாங்கோ ஆமினா.... மன்னிச்சுக்கொள்ளுங்கோ ஓடர்ல பிழை விட்டுவிட்டேன்.
ReplyDeleteஅப்போ நீங்களும் கடலூரா? அவ்வ்வ்வ்வ் வரவர கட்சி பெருத்திடும்போல இருக்கே அவ்வ்வ்வ்வ்.
மிக்க நன்றி.
M.R said... 19
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை ,குறிப்பாக சொன்ன தத்துவம் அருமை .சாக்கடை இருக்கும் இடம் நாறத்தான் செய்யும்,பூக்கள் இருக்கும் இடம் மணக்கத்தான் செய்யும் .பகிர்வுக்கு நன்றி சகோ.//
வாங்கோ ரமேஸ்...
முதலில் மன்னிச்சுக் கொள்ளுங்கோ... எப்பவுமே அவசரமாக ஓடிவந்து அவசரமாக பதிலிட்டுவிட்டு ஓடுவதால், சிலநேரங்களில் தவறு நடந்து விடுகிறது.
மிக்க நன்றி. இங்கு ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொருவிதமான மலர்கள் மலர்ந்துகொண்டே இருக்கும்... ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு பூங்காபோல பூக்களால் அலங்கரித்திருப்பார்கள்.... முக்கியமாக ரோஜா இங்கு ஒரு காட்டுச் செடிபோல எங்கு பார்த்தாலும் ரோசாப்பூ மயம்.
இளையராஜா பாட்ட ஆரோ களவாடிட்டாக
ReplyDeleteஹேப்பி பர்த்டே... சொலிட்டேன் எங்கே கேக்கு... ஏ தள்ளாதீங்கப்பா லைன்ல நில்லுங்க
ReplyDeleteகாருக்கு கீழே பூனை ரெஸ்ட் எடுக்க போச்சே பாத்திங்களா ,கார எடுக்கும் முன்னே பூனைய எழுப்பி விட்டு அனுப்பி விட்டு அப்புறமா கார் ஓட்டிட்டு போங்க .
ReplyDeleteஏன்னா மீ.....பாவம்
பைனல் டச் அருமை
ReplyDeleteஹைலி ஹைக்கூ ரசித்தேன் .
நாளைய கனவிர்காக
இன்றைய நிஜத்தை இழக்காதே .
ஆம் ஐ கரக்ட் சகோ
வாங்கோஅம்முலூ...
ReplyDeleteஇம்முறை இங்கும் செவ்வந்தி பெரிதாக வீடுகளில் இல்லை, மழை அதிகமானதால். ஆனா ரோட் சைட்டில் இருக்கூ..
பாட்டை அவசரமாக எடுத்துப் போட்டு வாழ்த்தைப் போட்டேன், பதிவிலே பாட்டை இணைக்க நினைத்து விட்டுவிட்டேன்.. நேரம் போதாமல் இருக்கு பொறுமையாக இருந்து செய்ய.
கீழ ஆரோ சவுண்டு விடுகினம் கேஏஏஏஏஏஏஏக்காம் பொறுங்க வாறன்.
மியாவும் நன்றி அம்முலு.
வாங்க மாயா....
ReplyDeleteமாயாவைக் கண்டாலே எனக்கு சிரிப்பு வந்திடுதே...
// இளையராஜா பாட்ட ஆரோ களவாடிட்டாக///
ஹா..ஹா...ஹா... முதலைக் கிட்னியையே களவாடின ஆட்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன?:))).
//ஹேப்பி பர்த்டே... சொலிட்டேன் எங்கே கேக்கு... ஏ தள்ளாதீங்கப்பா லைன்ல நில்லுங்க//
ஹா..ஹா...ஹா.... கொஞ்சம் பொறுங்கோ சிரிச்சு முடியேல்லை:))... அதாரது மாயாவைத் தள்ளுறது, கியூ வரிசையில:) முதலாவதாக நிற்க விடுங்கோ மாயாவை:), மாயா!!! கேக்தான் வேணுமோ? முதல பிரியாணி வாணாமோ?:))).
வாங்கோ ரமேஸ்...
ReplyDelete//கார எடுக்கும் முன்னே பூனைய எழுப்பி விட்டு அனுப்பி விட்டு அப்புறமா கார் ஓட்டிட்டு போங்க .
//
அடடா உங்களுக்கு என்னா ஒரு அக்கறை பூனையில:)). தாராக் குஞ்சு கலைச்சுதே என்னாச்சூ?:)).
//ஆம் ஐ கரக்ட் சகோ //
யூ ... எப்பவும் கரெக்ட் தான் ரமேஸ்:)).... மியாவும் நன்றி.
, மாயா!!! கேக்தான் வேணுமோ? முதல பிரியாணி வாணாமோ?:))).//
ReplyDeleteஎன் சமையல் கி வரும் பொது ஸ்பெசலா பிரியாணி செஞ்சி கொண்டு வாருவாங்கோ... ஆறும் பங்கு கேக்கப்படாது
//ஆறும் பங்கு கேக்கப்படாது // பயப்பூடாதீங்க மாயா... ஆறு, குளம் எல்லாம் பங்கு கேட்காது:))(தொபுக்கடீர் எனக் குதிச்சுக் குதிச்சு, எப்பவும் ஆறு நினைவாகவே இருங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:::))
ReplyDeleteஆனா மீ... கேட்பேன்... அதெப்பூடி... நீங்க தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுக்க குத்தும் எல்லோ:)) அந்த நல்லெண்ணத்தாலதான்:)).
ஆனா மீ... கேட்பேன்... அதெப்பூடி... நீங்க தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுக்க குத்தும் எல்லோ:)) அந்த நல்லெண்ணத்தாலதான்:)).//
ReplyDeleteபெக் எடுத்துச்சாம் மாயா... அத புடுங்கி துன்னுச்சா மியா
நான் பார்த்திட்டேனே அதீஸ்!!!!!
ReplyDeleteதாங்க்ஸ் மாயா.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஅதிரா!
இன்று திருமணநாள் காணும் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்
எனது இதயம் நிறைந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!!
நீங்கள் நோய் நொடி துன்பங்கள் இன்றி நிறைந்த ஆயுள் ஆரோக்கியமுடன்
பல்லாண்டு வாழ வேண்டும் என்று அன்போடு வாழ்த்துகின்றேன்.
வாழ்க வளமுடன்!
அவ்வப்போது உங்கள் பக்கம் வந்து போவேன் ஆனால் நேரக்குறைபாட்டினால் பின்னூட்டமிட முடிவதில்லை. பொறுத்தருள்வீர்கள்தானே;)
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அதிரா.
ReplyDeleteசூப்பர் கலக்கல் பதிவு ...
ReplyDeleteஆஹா.... இன்னைக்கு திருமண நாளா வாழ்த்துக்கள்....
ReplyDeleteஉங்களுக்கும் உங்க கணவருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்...... நூறாண்டுகள் நீங்கள் வாழ்கவே.....
அட வாழ்த்து சொல்லிமுடிக்குரதுக்குள்ள கியுவா... நான் தான் முதல்ல..... தள்ளி நில்லுங்கப்பா மூச்சுமுட்டுது .... எல்லாருக்கும் இன்னைக்கு வடை பாயாசாத்தோட சாப்பாடு.... அட யார்ராவன் சாம்பார சட்டையில ஊத்துனது... சரி தேம்ஸ்ல த்துவச்சிக்கலாம்... அப்பாடா பாயாசத்த தம்ளர்ல கொடுத்திட்டாங்க.. குடிசர்ரா மாயா...ஆஹா தட்டிவுட்டுடுச்சே ஒரு ஆயா
ReplyDeleteA happy wedding anniversary Mr. & Mrs. Athira.
ReplyDeleteAlso.. happy birthday to Mum & Aunty.
//தட்டிவுட்டுடுச்சே ஒரு ஆயா // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஅதீஸ்.. மெய்ல் செக் பண்ணவும். ;)
ReplyDelete//“நாம் எங்கே, ஆருடன் இருக்கும்போது அதிக மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருக்கிறோமோ அதுதான் சொர்க்கம்”
ReplyDelete//
இதுவும் சரிதான்
அம்முலுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பூஸாரின் யோகா சூப்ப்ரப்பு..
ReplyDeleteஅப்துல் கலாம் தத்துவம்
ReplyDeleteபேபி அதிராவின் பொன்வார்த்தைகள் எல்லாம் அருமை
//பெக் எடுத்துச்சாம் மாயா... அத புடுங்கி துன்னுச்சா மியா//
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ் ஜஸ்ட்டூஊஉ மிஸ்டோஓ மாயா?:)). கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே அவ்வ்வ்வ்வ்:))).
//அவ்வப்போது உங்கள் பக்கம் வந்து போவேன் ஆனால் நேரக்குறைபாட்டினால் பின்னூட்டமிட முடிவதில்லை. பொறுத்தருள்வீர்கள்தானே;) //
ReplyDeleteஆஆஆஆஆ யங்மூன்.... எவ்ளோ காலத்துக்குப் பிறகு.. வாங்கோ வாங்கோ... சாட்டுச் சொல்லாமல் இனித் தொடர்ந்து வாங்கோ... ரெண்டு நாள் வராது விட்டாலே, பின்பு வர மனமிருக்காது.. வரத் தொடங்கிட்டால், விட மனம் வராது.
சிலவேளைகளில் விட்டால் விட்டுவிடுவேனோ என நினைத்து, நான் என்னைப் ஃபோஸ் பண்ணி வருவதும் உண்டு புளொக்குகளுக்கு.
மியாவும் நன்றி.
வாங்கோ தினேஸ்குமார்....
ReplyDeleteமுதல்வரவு... நல்ல்வரவு. மிக்க நன்றி.
இளமதி, அம்முலு, இமா, மாயா.... உங்கள் வாழ்த்துக்கு..... நான் என்ன பதிலைச் சொல்வது?..
ReplyDelete.......
நன்றி சொன்னால் போதுமோ?.
மாயா கதைக்கும்போது நேரில பார்த்தால் எப்பூடியிருக்கும்... சும்மா ஒரு கற்பனை பண்ணினேன்..:)).
ReplyDelete//அட யார்ராவன் சாம்பார சட்டையில ஊத்துனது... சரி தேம்ஸ்ல த்துவச்சிக்கலாம்...//
இல்ல இல்ல “லேடி முதலை” ரெடியா இருக்கிறாவாம்... வெகு விரைவில எதிர்பாருங்க மாயா .... என் பக்கத்தில:)).
இமா.. மெயில்ல காதைக் கொண்டுவாங்கோ ரகசியம் சொல்றன் என்றீங்க, நானும் நம்பியெல்லோ கொண்டுவந்தனான்..... இப்பூடிக் காதைக் கடிச்சுப்போட்டீங்களே!!!, கேட்டிருந்தால் நான் கழட்டித் தந்திருப்பேனே என் 2 பவுண் வைரத் தோட்டை:))))..
ReplyDelete....ர்ர்ர்ர்ர்ர்ர்த்தாச்சூஊஊஊஊ மயிலை:))).
வாங்க ஜலீலாக்கா...
ReplyDeleteநோன்பு வந்ததுதான் எல்லோரும் பிஸியாகிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
மே இஸ் வகத் பஹுத க்குஸ்ஸாமே ஹும்:)......
மியாவும் நன்றி ஜலீலாக்கா.
இமா.. மெயில்ல காதைக் கொண்டுவாங்கோ ரகசியம் சொல்றன் என்றீங்க, நானும் நம்பியெல்லோ கொண்டுவந்தனான்..... இப்பூடிக் காதைக் கடிச்சுப்போட்டீங்களே!!!,//
ReplyDeleteஏங்க அவங்க காதை கடிக்கீறிங்க... நம்ம மாய உலகத்துக்கு போனீங்கன்னா நாம சொந்த காரங்க எல்லாம் உங்க காத காட்டுங்க கொஞ்சம் கடிக்க ரெடியா இருக்காங்க...
வணக்கம்,
ReplyDeleteசமீப நாட்களாக வலைப் பதிவிற்கு வர முடியவில்லை, காரணம் டுவிட்டர் பேஸ்புக்கில் தூக்குத் தண்டனையை நிறுத்தச் சொல்லிய பிரச்சாரங்களோடு ஐக்கியமாகி விட்டேன்.
கிடைத்த குறுகிய நேரத்திலும் ஒரு சில பதிவுகளைத் தான் படிக்க முடிந்தது.
மன்னிக்கவும்,
நான் தேடும் செவ்வந்திப் பூவிதூஊ:)
ReplyDeleteஉதுவல்ல தலைப்பு... இதுதான் தலைப்பூஊஊஊ
சொர்க்கம் - நரகம்//
ஆரம்பமே செம டெரராக இருக்கிறது,.
சொர்க்கம், நரகம் பற்றிய விளக்கமான தத்துவக் கதை அருமை.
ReplyDeleteஜீப்பின் கீழ் பூசார் படமும்...இடைவேளைப் பூனைப் படமும் கலக்கல்.
ReplyDeleteபேபி அதிராவின் ஹைக்கூ கவிதையும் சூப்பரா இருக்கிறது.
இந்த பாட்டு பொருத்தமா இருக்குமுன்னு நினைக்கிறேன்
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=pbte64aTKPA&feature=related
ஹம் ஆப்ஸே ஃபிர்மிலேங்கே ...!! :-)
மிகவும் நன்றி ஜலீலாக்கா.
ReplyDeleteஅதிராவுக்கும் மீண்டும் நன்றி.
//நம்ம மாய உலகத்துக்கு போனீங்கன்னா நாம சொந்த காரங்க எல்லாம் உங்க காத காட்டுங்க கொஞ்சம் கடிக்க ரெடியா இருக்காங்க... //
ReplyDeleteகொஞ்சம் பொறுங்க மாயா... விரைவில எல்லோரும் கடிக்கப்போகினம்.... காதைத்தான்:))).
அட சைக்கிள் ஹப்பில அம்முலூஊஊஊஊஉவா?:))
ReplyDeleteவாங்க நிரூபன் வாங்க... உங்களைத்தான் தேடிட்டே இருந்தேன், ஏன் எதுக்கெண்டெல்லாம் கேட்கப்பிடா...:)).
ReplyDeleteசரி சரி நீங்க பிசி என்று நான் கோபிக்க மாட்டேன், ஏனெண்டால்.. நிரூபன் அரசியல்வாதியானால் எனக்கும் பெருமைதானே... அதனால பொறுத்துப் போகிறேன்.
அக்காச்சி எனச் சொன்னால் பத்தாது, அடிக்கடி எட்டியும் பார்க்கோணும் ஓக்கை:)).
மியாவும் நன்றி நிரூபன்.
ஜெய்....ஜெய்...ஜெய்... வாங்க.. லேட்டா வந்தாலும் லேட்டஸா வந்திருக்கிறேனெல்லோ எனச் சொல்வது கேட்குது...
ReplyDeleteசூப்பர் பாட்டு, பாட்டிலே சொர்க்கத்துக்கு விடை இருக்கு.
இருப்பினும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ...மே இஸ் வகத் பஹுத க்குஸ்ஸாமே ஹும்:)......
....
ஹா..ஹா...ஹா... என்கிட்டயேவா? எனக் கேட்பது கேட்குது:))... இதெல்லாம் சகிக்கப் பழகோணும்..
கடவுளே மீ எஸ்ஸ்ஸ்.
மியாவும் நன்றி ஜெய்.
பி.கு:
//ஹம் ஆப்ஸே ஃபிர்மிலேங்கே ...!! :-) //
தமிழ்ல திட்டினாலே எனக்குப் புரியாது:)), ஹிந்தியில திட்டினால் மட்டும் புரிஞ்சிடப்போகுதா அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).
மக்கள்ஸ்ஸ்ஸ் எனக்காரும் திட்டுவதாயின் தெரியாத பாஷையில திட்டுங்கோ:))), அப்பத்தான் நான் கவலைப்படமாட்டனே:))).
மனைவி : ஏங்க , நமக்கு கல்யாணம் செஞ்சி வச்சாரே அய்யர் திடீர்ன்னு செத்துப்போய்ட்டாராம் ...!!
ReplyDeleteகணவன் : போகட்டும் விடு , செஞ்ச பாவம் சும்மா விடுமா என்ன ...!!