பேபி அதிரா!!! உப்பூடி டான்ஸ் ஆடிக்கொண்டு நிக்கப்படா... நேரா நிக்கோணும்:)) |
எங்கட நாட்டில், பொம்பிளை பார்த்தல், பொம்பிளை வீடு... மாப்பிள்ளை வீடு இப்படித்தான் கதைப்பது வழக்கம். பெண் பார்க்கிறது என்று கதைப்பதில்லை. சரி இப்போ எதுக்கு இதைச் சொல்ல வருகிறேன் என்றால், எங்கட இளையதளபதி பக்கத்தில:), பேச்சு அடிபட்டுது, கல்யாண வயசு வந்திட்டுதாம் அவருக்கு:),(அது எத்தனை வயது என, ஆரும் குறுக்க கேள்வி கேட்கப்பிடா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
அதே நேரம் டெய்லி பதிவிடுபவர், இடையில் சில நாட்கள் டமால்:) எனக் காணாமல் போய் விடுகிறார், அந் நேரங்களில் எனக்கொரு ஐடியா கிட்னியில் வரும், ஓஓஓ ஒருவேளை பொம்பிளை பார்க்கும் படலம் ஆரம்பமாகிட்டுதோ எண்டு:).(இது நமக்குள்ள இருக்கட்டும்:)).
அதை நினைச்சதும், பழைய ஒரு உண்மைச் சம்பவம் நினைவுக்கு வந்துது.. அதனாலே இப்பதிவூஊஊஊஊஊ:).
எங்கட ஊரில்... அடுத்தடுத்த ஊர்களிலும் நான் கேள்விப்பட்டிருக்கும் பழக்கவழக்கங்களை கொஞ்சம் முதலில் சொல்கிறேன். பெரியோர்களால் நிட்சயிக்கப்படும் திருமணங்களில், குடும்பம்... etc..etc.. எல்லாம் பொருந்தி வருகின்ற, மனதுக்குப் பிடித்த இடமாக இருப்பின், முதலில் குறிப்புப் பொருத்தம் பார்ப்பார்கள், பொருந்திவிட்டால்,....
பொம்பிளை, மாப்பிள்ளையின் படங்கள் பரிமாறப்படும், படம் இருவருக்கும் பிடித்துக் கொண்டால், மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடக்கும்.. அனைத்தும் ஓக்கேயாக வருவதுபோல கிட்டத்தட்ட பாதிக்கு மேல், திருமணம் பொருந்தி வருவதுபோல இருப்பின், பெண்ணை நேரில் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் புறப்படுவார்கள், இந்தப் புறப்படுதலில் மாப்பிள்ளையைச் சேர்க்க மாட்டார்கள்.
ஊரில் ஒரு வழக்கம் இருக்கிறது, பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை போய், நேரிலே பெண் பார்த்துவிட்டால், 95 வீதமும், திருமணத்தைக் குழம்ப விடமாட்டார்கள்/ விரும்ப மாட்டார்கள். அதனால் கிட்டத்தட்ட திருமணம் பொருந்தியே விட்டது என்ற நிலையிலேயே... பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை போவார். அதுவரை, நேரில் பார்ப்பதாயின்,....
எங்காவது பொது இடங்களில் வைத்தேதான்(பெரும்பாலும் கோயில்கள்தான்). இதெல்லாம் இப்போ நிறையவே மலை ஏறிவிட்டது... இவை இப்போதைய கதைகளல்ல, ஆனால் குடும்பமுறை என்று ஒன்று, பரம்பரை பரம்பரையாக இருக்குதுதானே.. அது தொடருது ஊர்களில்.
எங்கள் அக்காவின் மகன்.. 18 வயது, அவர் கேட்கிறாராம் “வட் இஸ் பொம்பிளை பார்க்கிறது?”:)).. என்று, அப்படி இருக்கு இப்போதைய தலைமுறை.
ஒரே ஊர் அல்லது அடுத்த ஊராயின் பிரச்சினை இல்லை, எப்படியாவது(பெண்ணைப்) பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்துவிடும், இல்லையெனில் கொஞ்சம் கஸ்டம்தான்:). அதே நேரம் எல்லாம் சரியாகி, பெண்ணை, மாப்பிள்ளை நேரில் பார்த்துப் பேசிவிட்டால்... 99 வீதமும் குழம்புவதில்லை, ஆனால் உடனே திருமணம் வைப்பதில்லை, எப்படியும் 6 மாத இடைவெளியாவது இருக்கும், அதுக்குள் இருவரும் பேசிப் பழகிடுவார்கள், பிடிக்காதுபோனாலும் சொல்லலாம் திருமணத்துக்கு முன்பே.
............. குட்டி பிரேக்க்க்க்க் இல், வேறு ஒரு குட்டிச் சம்பவம்............
என்னதான் இருந்தாலும், எல்லா முறையிலும், எல்லா ஊரிலும், எல்லா நாட்டிலும், எல்லாமும் நடக்கிறது. இது சரி, இது பிழை எனச் சொல்ல முடியாதுதானே.
இப்படியான ஒரு முறையில் பொருந்திய திருமணம், எல்லாமே முற்றான பின்னர், பெண்ணையும், மாப்பிள்ளையையும் நேரில் சந்திக்க வைத்து, பெண் வீட்டிலேயே, அறையில் தனியே கதைக்க அனுமதித்தனராம். உள்ளே போய்க் கதைக்கத் தொடங்கியவர்கள் இரவு 2 மணிவரை கதைத்து முடியவில்லையாம், அவ்வளவுதூரம் இருவருக்கும் பிடித்து விட்டதாம், அப்போ அவர்களோடு சேர்ந்து எல்லோருமாக, உடனேயே நாள் குறித்து திருமணத்தை முடித்து வைத்தார்கள்.
திருமணமாகி ஒரு வருடத்தில் இருவரும் பிரிந்து விவாகரத்தும் நடந்துவிட்டது. கணவர் பிஸ்னஸ்மான், அதனால் பல நாடுகளுக்குச் சென்று வருபவர். அதிக நேரம் நெட்டிலே இருப்பாராம். ஒருநாள் கஸ்டகாலம்:), சைன் அவுட் பண்ண மறந்து, எழுந்து போய் விட்டார், ஏற்கனவே பெண்ணுக்கு சந்தேகம் தொடங்கியிருந்தது, அதனால் ஓடிச் சென்று மெயில் செக் பண்ணியிருக்கிறார்.
அப்போ
வேறு நாட்டில் இருக்கும் பெண்ணுடன் மெயிலில் பல கதைகள் நடந்திருக்கு,
அதுவும் இவர் போய் அங்கு தங்கி வந்ததாக. இப் பெண் கேட்ட இடத்தில்,
அப்படியேதுமில்லை என மறுத்துவிட்டார். ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகச்
சொல்லியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கலாம்?,
ஆனால் அவர் எதுவுமில்லை, எல்லாம் பிஸ்னஸ் மெயில்களே என்றிட்டாராம்.... இப்படிப் பலநாள் பிரச்சனைப்பட்டு, அத்தோடு பொறுக்க மாட்டாமல் பெண், வீட்டால் வெளியேறிப் பெற்றோரிடம் வந்திட்டார்.
கணவருக்கு கோபமாம், போனனீ போ எனச் சொல்லிப்போட்டு வேறு திருமணம் முடிச்சிட்டார், இப்போ பெண்ணும் வேறு முடித்து நன்றாக இருக்கிறா. . சரி அது போகட்டும்.
ஆனால் அவர் எதுவுமில்லை, எல்லாம் பிஸ்னஸ் மெயில்களே என்றிட்டாராம்.... இப்படிப் பலநாள் பிரச்சனைப்பட்டு, அத்தோடு பொறுக்க மாட்டாமல் பெண், வீட்டால் வெளியேறிப் பெற்றோரிடம் வந்திட்டார்.
கணவருக்கு கோபமாம், போனனீ போ எனச் சொல்லிப்போட்டு வேறு திருமணம் முடிச்சிட்டார், இப்போ பெண்ணும் வேறு முடித்து நன்றாக இருக்கிறா. . சரி அது போகட்டும்.
¬¬¬¬¬¬ இடைவேளை முடிஞ்சு, லைட் ஓவ் பண்ணாச்சூஊஊஊஊஉ¬¬¬¬¬
ஆஆஆஆஆ எங்கின விட்டேன்?:)), ஓக்கே!!! சொல்ல வந்ததை மறந்திடுவேன்போல இருக்கே அவ்வ்வ்:).
இப்படித்தான் எங்கட மாமியின் மகனுக்கும்(அவரின் பெயரை ஏ, பீ, சீ, டீ வாணாம், “மைக்” என வைப்போம்) கல்யாணப் பேச்சு நடந்தது, அவரைப் பார்த்தால், கிட்டத்தட்ட மம்முட்டியைப் பார்ப்பதுபோல, கமலைப் பார்ப்பதுபோல இருப்பார்.
அவருக்கு புரோக்கர்(நன்கு தெரிந்தவர்) மூலம் ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்தி வந்துவிட்டது. பக்கத்து ஊருமல்ல கொஞ்சம் தூர இடம். நான் அப்போ சின்னப்பிள்ளை (இப்பவும்தேன்ன்ன்) என்பதால் எனக்கு முளுக்கதையும் தெரியாது:(, தெரிந்ததைப் பகிர்கிறேன்.
அப்போ படங்கள் பரிமாறப்பட்டன. மைக் க்கு பெரிதாக படத்தில் பெண்ணைப் பிடிக்கவில்லை, அவர் கடுமையாக அழகை எதிர்பார்க்கவில்லை, ஆனா என்னவோ அவருக்கு ஹப்பி இல்லை. ஆனால் ஏனைய எல்லாம் நல்ல பொருத்தமாகி வந்துவிட்டது. அதே நேரம் பொம்பிளை வீட்டுக்கும் இவரை நன்கு பிடித்துவிட்டது.
மைக் வீட்டினர் சொன்னார்கள் மைக்குக்கு, நாம் போய், பெண்ணை நேரிலே பார்த்துவிட்டு வந்தபின்பு ஒரு முடிவுக்கு வரலாம் என. எங்காவது படிக்க அல்லது வேலைக்குப் போகும் பெண்ணாக இருப்பின், நண்பர்களோடு போய் வழியிலே ஒளித்து நின்று பார்த்திடலாம், இவ எங்கும் போவதில்லை. அதே நேரம் தூரம் என்பதால், மைக் க்கு ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.
மைக் வீட்டினருக்கும் பெண் குடும்பத்தை நன்கு பிடித்துக்கொண்டது, மனதில், இது நிறைவேறிவிடும் என எண்ணிவிட்டார்கள். ஆனாலும் மைக் வீட்டினர், பெண் வீட்டுக்குப் போக விரும்பவில்லை, மைக் குழப்பத்தில் இருக்கிறார், ஒரு முற்றுக்கு வராமல் எப்படி வீட்டுக்குப் போவது, போய் வந்து பிடிக்கவில்லை எனச் சொன்னால் பெண் பாவமெல்லோ, அதனால வேறு எங்காவது இடத்தில்வைத்துப் பெண்ணைப் பார்ப்போம் எனக் கேட்ட இடத்தில், பெண்ணின் பெற்றோர் சொன்னார்கள், பிரச்சனை இல்லை வீட்டுக்கே வாங்கோ என.
ஓக்கே என இவர்களும் 2 கார்களில், மைக் கின் அம்மம்மா தொடங்கி, அப்பா, அம்மா.. பெரியம்மா .. இப்படி பெரியாட்களாக எல்லோரும் புறப்பட ஆயத்தமானார்கள். மைக்கின் தங்கைமார் சிறியவர்கள். அதனால் அவருக்கு அப்போதைய நிலைமையில், நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆளாக இருந்தவர் எங்கள் அண்ணன்:). அண்ணனுக்கு அப்போ 15,16 வயதாக இருக்கோணும்.
மைக், அண்ணனைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார், உன் வேலை, இவர்களோடு போய், பெண்ணை நன்கு பார்த்து வந்து எனக்குச் சொல் என. பெரியவர்களுக்கும் சொல்லியாச்சு, இவரும் வரப்போகிறாராம் அழைத்துப் போங்கோ என்று. அனைவரும் போய் பெண்பார்த்து, கதைச்சு, ரீ குடித்து வந்தாச்சு.
பெரியோருக்கு நன்கு பிடித்துவிட்டது, அது பெண் அழகுதான் பிரச்சனை இல்லை, எனக் கதைத்தார்கள். மைக், அண்ணனை அழைத்துப்போய்க் கேட்டிருக்கிறார், பார்த்தியா? பெண் எப்படி என.
அண்ணனுக்கு அப்போ அழகை மட்டும் பார்க்கும் வயசு:) தானே... அண்ணன் சொல்லியிருக்கிறார், எனக்கு பெண்ணைப் பிடிக்கவில்லை, நிறமும் குறைவாக இருக்கிறார், உங்களுக்கும் பிடிக்காது என்றுதான் நினைக்கிறேன் என.
இதைக் கேட்டதும் மைக், முற்றிலும் குழப்பமாகிவிட்டார். மைக்குக்கு பெண் பிடிக்கவில்லைப்போலும் என்ற கதை, பொம்பிளை வீட்டுக்கு புரோக்கர்மூலம் போய்விட்டது.
அவர்களுக்கு இந்த மாப்பிள்ளையை கைவிட மனமில்லைப்போலும். அதனால் அவர்கள் சொன்னார்கள், படத்தில் சரியாக தெரியாதுதானே, எதுக்கும் மாப்பிள்ளையை நேரில் வந்து, ஒரு கோயிலில் வைத்துப் பெண்ணைப் பார்க்கும்படி. அதற்கு உடன்பட்டு, மைக், இன்னொருவரோடு மட்டும்(வேறு யாரும் போகவில்லை) போய், கோயிலில் கும்பிடுவதுபோல பெண்ணைப் பார்த்திட்டு வந்தாச்சு. வந்ததும் மைக் இன்னும் அதிகம் குழம்பிட்டார்.
காரணம், பெண் அழகாகவும் நிறமாகவும் இருந்திருக்கிறார். அப்போ மைக்குக்கு குழப்பம் வந்துவிட்டது, எங்கள் அண்ணன் பொய் சொல்லியிருக்க மாட்டாரே, ஆனா பெண் அழகாகத்தானே இருக்கிறார் என. அண்ணனை அழைத்து மீண்டும் கேட்டிருக்கிறார், அண்ணன் சொல்லியிருக்கிறார், இல்லை பெண் நிறம் குறைவுதான் என்று.
இதை வைத்தே கலவரம் தொடங்கி, ஆர் ஆரையோ பிடித்து விசாரித்துக் கொண்டு போனால்.... அவர்கள் இரட்டையர்களாம். படம் கொடுத்ததும், வீட்டில் காட்டியதும் நிறம் குறைவான பெண்ணாம், பின்பு மாப்பிள்ளை குழம்பி கைவிடப்போகிறார் என நினைத்து, மற்றப் பெண்ணை கோயிலில் காட்டியிருக்கிறார்கள். இதன்பின்பும் அந்தத் திருமணம் தொடருமோ? அத்தோடு ஸ்ரொப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.... கிட்டத்தட்ட திருமணம் முக்கால்வாசியும் முற்றுக்கு வந்து, நின்றுபோனமையால் இரு பகுதியினருக்கும் மனப் பாதிப்பு இருக்கும்தானே.
நான் சொல்ல வருவதென்ன வென்றால், எந்த விஷயமாகட்டும், எழிதில் நம்பிடாதீங்கோ.. தீர விசாரியுங்கோ.
கோடியின் குரல் என ஒரு ரீவி புரோகிராம் நடக்கிறது தமிழ்நாட்டில். அதில் வருவோர் பொய் சொல்லக்கூடாது, உண்மை சொன்னால் மட்டுமே தொடர்ந்து விளையாட அனுமதி உண்டு. அதில் வந்த ஒருவர், 25 வயதாம் திருமணமாகி குழந்தையும் கிடைத்திருக்காம். ஆனா அவரது பொழுதுபோக்கு, ஆர்குட், பேஸ்புக், புளொக் இவற்றில் புகுந்து, பெண்களை வசியப்படுத்தி ஏமாத்துவதாம். இது திருமணத்தின் பின்பும் தொடருதாம்.
புரோகிராம் முடிவிலே, நடத்தியவர் சொன்னார்...”தயவுசெய்து, இனிமேல், இன்ரநெட் மூலம் பெண்களை ஏமாத்தும் வேலை செய்யவேண்டாம்” என, செய்யமாட்டேன் இனி... என்று சொல்லிப்போனார்..???.
.....==================================================.....
ஊசிக்குறிப்பு:
அதற்கு கணவன், “என்னையும் சேர்த்தா நாய் என்கிறாய்?” எனக் கேட்டு சண்டைக்குப் போகக்கூடாது, அதாவது மனைவி சொன்னதைக் கவனிக்கப்படாது, சொல்ல வந்ததைத்தான்(கருத்தை) கவனிக்க வேண்டும்.
இதைக் கேட்டதும், இலங்கையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது எனக்கு.
ஒரு மினிவானில் யாழ்ப்பாணம் போய்க்கொண்டிருந்தோம், இடையில் ஆனையிறவு ஆமி காம்ப். அங்கு வாகனங்கள் போனதும், றைவரின் உதவியாளர் ஓடிப்போய் பெயர் விபரம்(van) பதிவார். ரைவர் , அங்கு நிற்கும் ஆமி என்ன சொல்கிறாரோ, அதன்படி வானை நகர்த்த வேண்டும்.
முன்னாலே உயர்ந்த கறுத்த ஒரு ஆமி நின்றுகொண்டிருந்தார், சைகை ஏதும் செய்யவில்லை, அதனால் ரைவர் மெதுவாக வானை நகர்த்தினார்.... ஆமிக்குக் கோபம் வந்துவிட்டது, கையைக் காட்டி நிறுத்தச் சொல்லிவிட்டு, வந்த வேகத்தில், ரைவரின் வலது கையைப் பிடித்து இறுக்கி முறுக்கிவிட்டுப் போய் விட்டார். நான் நடுங்கியபடி ரைவர் சீட்டின் பின் சீட்டில் இருந்தேன்.
கை முறுக்கும்போது, பதியப்போன உதவியாளர் வந்து கண்டுவிட்டார்... அவருக்கு மிகவும் மன வருத்தமாகிவிட்டது, உடனே ரைவரைப் பார்த்துக் கேட்டார் மிகவும் கவலையாக....
“அவன் மலைபோல முன்னால நிண்டானேடா, நீ ஏண்டா அவனைக் கவனிக்காமல் “எருமைபோல” வானைக் கொண்டு வந்தாய்?” என்று.
இதைத்தான் நான் யோசிக்கிறேன், என்னை எருமை என்கிறாயா என சண்டைக்குப் போகலாமோ?.... அதாவது அவர் சொன்னதைக் கவனிக்கப்படாது, அவர் சொல்ல வந்ததைத்தான் கவனிக்க வேண்டும்....
இதை நாமும் கடைப்பிடிக்கலாமே... உஸ் அப்பாடா... பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊ, இனிமேல் மக்கள்ஸ்ஸ், அதிரா திட்டினால்:), திட்டினதைப் பொறுக்கப்படா, ஏன் திட்டினா என்பதையே யோசிகோணும் ஓக்கை?:).
பின் இணைப்பு:
இது
“நியூ” விலிருந்து எனக்கு வந்த படம், இதைப் பார்த்ததும் எனக்குப்
புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்.... தம்பி காணாமல் போனதன் ரகசியம் இதுதான்ன்ன்...
ஆனாலும் அக்காவை எப்பூடி மறக்கலாம்ம்ம்ம்ம்ம்?:). தம்பியின் முகத்தில
தெரிவது, மகிழ்ச்சியா? மாட்டிவிட்டோமே என்கிற கவலையோ? அவ்வ்வ்வ்:)).
உஸ் அப்பாடா, இம்முறை பதிவு நீண்டதால, ஸாதிகா அக்காவின் ஆசையை நிறைவேத்திட்டேன்... பூஸ் படமேதுமில்லை:(((.
00000000000============000000000000
|
Tweet |
|
|||
ஆஆஆஆஆஆஅ.... உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆ... ஹை கோர்ட்டுக்குப் போய் மீட்டு வந்தேன் என் கொமெண்ட் பொக்ஸ் ஐ:)))).
ReplyDeleteஹையா ..வந்திட்டுதூ :-)
ReplyDeleteஎ"ழி" தில் நம்பிடாதீங்கோ.. தீர விசாரியுங்கோ.////ஐயோ! டீச்சர் எங்கை ஓடியாங்கோ, ஓடியாங்கோ..... ( அப்பாடா போட்டுக் குடுத்தாச்சு. பிறகு ஆறுதலா வாறன் மைக் டைசன் கதை படிக்க )
ReplyDeleteபோட்டோவில் இருக்கிற பொம்பிளை ரொம்ப க்யூட்ட்ட்ட்ட்ட்!:)
ReplyDeleteநான் ரீடர்லே போய் தெளிவாப் படிச்சிட்டு வாரேன், இங்கே தமிழ் கொஞ்சம் ஜிலேபி மாதிரி தெரியுது.;)
வான்ஸ்.. நேற்றே பார்த்து 'சிரித்தேன்'. ஆனால் கமண்ட் போட ஏலாததால "சூப்பர்" என்று ரியாக்ட் பண்ணிட்டுப் போனேன். இப்ப அதைக் காணோம்.
ReplyDelete//வருது... வருதாம்.. ரெடியாகுங்கோ..:))//வுக்கும் "சிரித்தேன்" இப்ப காணேல்ல. ;)))
அதிரமாவோட பேபியா அது
ReplyDeletemeeeeeeee the fistu...but today 7th.:((
ReplyDeleteஉஸ் மியவு மியவு மியவு மியவு சிவா எஸ்கேப்
ReplyDeleteபோஸ்ட் எம்புட்டு பெருசு
நான் ரீடர்லே போய் தெளிவாப் படிச்சிட்டு வாரேன், இங்கே தமிழ் கொஞ்சம் ஜிலேபி மாதிரி தெரியுது.;)
ReplyDelete///இதை நான் வழிமொழிகிறேன்
இதை நாமும் கடைப்பிடிக்கலாமே... உஸ் அப்பாடா... பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊ, இனிமேல் மக்கள்ஸ்ஸ், அதிரா திட்டினால்:), திட்டினதைப் பொறுக்கப்படா, ஏன் திட்டினா என்பதையே யோசிகோணும் ஓக்கை?:).
ReplyDelete//
அதாவது நீங்க இப்பதிவில் சொல்ல வரும் கருத்து யாது ?
அதீஸ் எங்கள் ஊர் பக்கமெல்லாம் பொண்ணா இருக்கும் பொழுதே பொண்ணு பார்த்து திருமணம் செய்து விடுவார்கள்.ஆனால் உங்கள் பக்கம் பொம்பிளை ஆனப்பிறகுதான் பார்த்து திருமணம் செய்து வைப்பார்களா?அப்ப,மணமகள் எல்லாம் ரொம்ப வயசாளிகளா இருக்க மாட்டாங்க..?
ReplyDelete//உஸ் அப்பாடா, இம்முறை பதிவு நீண்டதால, ஸாதிகா அக்காவின் ஆசையை நிறைவேத்திட்டேன்... பூஸ் படமேதுமில்லை:(((.// அதுதான் பூஸோட அண்ணன்கள் படத்தை போட்டுட்டீர்களே!!!:-(
ReplyDelete//அதீஸ் எங்கள் ஊர் பக்கமெல்லாம் பொண்ணா இருக்கும் பொழுதே பொண்ணு பார்த்து திருமணம் செய்து விடுவார்கள்.ஆனால் உங்கள் பக்கம் பொம்பிளை ஆனப்பிறகுதான் பார்த்து திருமணம் செய்து வைப்பார்களா?அப்ப,மணமகள் எல்லாம் ரொம்ப வயசாளிகளா இருக்க மாட்டாங்க..? //
ReplyDeleteஸாதிகா.... என்ன சொல்றது எண்டே... தெரியேல்ல. ;)))
அதீஸ்... சிவாவுக்கும் விளக்கமில்லாமல் கிடக்காம் உ(எ)ங்கட தமிழ். ;)
பொண்ணு = இருபது,முப்பது வயதுகளில்
ReplyDeleteபொம்பிளை = முப்பதுக்கு மேலுள்ள வயதுகளில்
புரிந்ததோ இமா?
// அவர்கள் இரட்டையர்களாம். படம் கொடுத்ததும், வீட்டில் காட்டியதும் நிறம் குறைவான பெண்ணாம், பின்பு மாப்பிள்ளை குழம்பி கைவிடப்போகிறார் என நினைத்து, மற்றப் பெண்ணை கோயிலில் காட்டியிருக்கிறார்கள். // ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணு என்பார்கள் ஆனால் உங்கள் மைக்கு நடந்தது அடித்தளத்துக்கே ஆபத்தாச்சே
ReplyDeleteபுரியாமல் இல்லை ஸாதிகா. ;)
ReplyDeleteஎங்கள் பக்கம் இப்படித்தான்; //பொண்ணு// என்னும் வார்த்தை பயன்பாட்டில் இல்லை.
இவ்ளோ பெரிய பதிவ போட்டா நான் எப்படி படிப்பது கொஞ்ச கொஞ்சமாதான் படிப்ப்பேன்
ReplyDeleteபேபி அதிரா போட்டோ சூப்பர்
சொல்ல வந்த விழியங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteஎல்லாம் பாயிண்ட் பாயிண்டா கதைகதையா சொல்லீட்டீங்க.
அந்த இரட்டையர்களை குழப்பம் , நானும் சற்று குழம்பினேன்...
எப்படி இப்படி டைம் எடுத்து கதை எழுதினீங்க,
ReplyDeleteநானும் நிறை கதைகள் வைத்துள்ளேன் ஆனால் எழுத சோம்ப்ப்றி தனமாக இருக்கு ....
//ஜெய்லானி said...
ReplyDeleteஹையா ..வந்திட்டுதூ :-)
//
ஓம் ஜெய்..., அது இருந்தபோது அருமை தெரியேல்லை, ஒருநேரம் இல்லாமல் போனபோதுதான் அதன் அருமையே புரிஞ்சுது... காதைக் கொண்டுவாங்கோ.. அதிராவும் அப்புடித்தான், இல்லாட்டில்தானே அருமை தெரியும் எல்லோருக்கும்... ஆஆஆஆஆ ஆசைக்குச் சொல்ல விடோணும் முறைக்கப்பிடா ஓக்கை?:)).
வான்ஸ்ஸ்ஸ் ஓடாதீங்க வாங்க...
ReplyDelete//vanathy said...
எ"ழி" தில் நம்பிடாதீங்கோ.. தீர விசாரியுங்கோ//
அழகு = எழில்.... இது தெரியும் ஆனா அ”ழி”தில்.. அவ்வ்வ்வ்வ் கொயம்பிட்டேன்... இனி மறக்கமாட்டேன்...
வாங்க மகி....
ReplyDelete//Mahi said...
போட்டோவில் இருக்கிற பொம்பிளை ரொம்ப க்யூட்ட்ட்ட்ட்ட்!:)//
கீழ எழுதியிருக்கே.. அது பேபி அதிரா:), எழுத்துத் தெரியேல்லையோஓஓஓஓஓஓ?:)).
//இங்கே தமிழ் கொஞ்சம் ஜிலேபி மாதிரி தெரியுது.;) //
ஏன் மகி எழுத்து விளங்கேல்லையோ? நான் புளொக் டிசைன் மாத்தோணும் என மாத்தேல்லை, ஆனா உள்ளே போய் கொஞ்சம் விளையாடினேன்:), பின்பு அது கேட்டுது, “விளையாடினதை சேவ் பண்ணப்போறியோ”? எண்டு.. போனாப்போகுதெனெ யேச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் எண்டிட்டேன்(நாமதான் நோஓஓஓஓ சொல்ல மாட்டமே).... அது என்னவோ போலாச்சு.... பிறகு மெல்ல மெல்ல ஓரளவு பழைய நிலைமைக்கு கொண்டு வந்தேன்.
என் com.... இல பார்க்க எல்லாம் அழகாக இருக்கு, அதனால எனக்குப் புரியேல்லை, பார்ப்போம் பக்ரவுண்ட் கலரை மாத்துறேன், அப்போ தெளிவாகலாம்.
மியாவ் மகி.
ஆருக்குப் பொண்ணு பார்க்கப் போறீங்க? நானும்... நானும்... நானு:) வும் வரட்டோ எண்டெல்லாம் அவதிப்படப்புடா.. கொஞ்சம் பொறுமையாகப் படிங்க //
ReplyDeleteஏனுங்க, என்ன சுயம்வரத் தேவா வைக்கிறாங்க. நாங்களும் வருவதற்கு,
எங்காவது பொது இடங்களில் வைத்தேதான்(பெரும்பாலும் கோயில்கள்தான்). இதெல்லாம் இப்போ நிறையவே மலை ஏறிவிட்டது... இவை இப்போதைய கதைகளல்ல, ஆனால் குடும்பமுறை என்று ஒன்று, பரம்பரை பரம்பரையாக இருக்குதுதானே.. அது தொடருது ஊர்களில்.//
ReplyDeleteஓமோம்...இப்பவும் இங்கே கோயில்களில் பொம்பிளை பார்க்கிற விடயம் இருக்கு,
இதில் பெரிய முசுப்பாத்தி என்னவென்றால், பொம்பிளை பார்க்க வாற மாப்பிளைக்கு,
அந்தப் பெண்ணை விடப் பெண்ணின் தங்கை அழகாக இருந்தால்,
அவளையே கட்டி வைக்க வேண்டும் எனும் சம்பவங்களும் விதி விலக்காக எங்காவது நடப்பதுண்டு;_)))
இமா வாங்க..
ReplyDelete////வருது... வருதாம்.. ரெடியாகுங்கோ..:))//வுக்கும் "சிரித்தேன்" இப்ப காணேல்ல. ;))) //
அதனாலதானே பிரச்சனையே வந்தது இமா:), அது சும்மா ஒரு எனவுன்ஸ்மெண்ட் போல போட்டு, பின்னூட்டத்தை தடை பண்ணி விட்டேன், இதைப் போடும்போது அதை டிலீட் பண்ணி விட்டுவிட்டேன்.பின்பு பின்னூட்டம் ஏதோ குழம்பிப்போச்சு, வரமாட்டேன் என ஒரே அடம்.... குருவி முட்டாய், குச்சி ரொட்டியெல்லாம் கொடுத்து.... மசாஜ் எல்லாம் பண்ணி விட்டுத்தான் கூட்டி வந்தேன்.... கிக்..கிக்..கிக்.. என்னைப்போலவேதான் அதுவும்:))))).
ஆனா இந்த reactions போட்டு வைத்திருக்கிறேன், ஆனா அதை எங்க எப்பூடி செக் பண்ணோனும் எண்டெல்லாம் இன்னும் தேடிப் பார்க்கேல்லை இமா:)). நேரம் கிடைக்கும்போது தேடிக் கண்டு பிடிக்கிறேன்.
வாங்க சிவா....
ReplyDelete//siva said...
அதிரமாவோட பேபியா அது///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆராவது சிவாவைப் பிடிச்சுத் தாங்கோஓஓஒ..., அது பேபி அதிரா ஓக்கை?:)))).
//siva said...
meeeeeeee the fistu...but today 7th.:(//
இல்லயே இம்முறையும் சிவாதான் firstuuuuuuu:))).
//போஸ்ட் எம்புட்டு பெருசு//
உண்மைதான், ஆனா ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் விஷயமாக இருப்பதனால், போனாப்போகுதெனப் போட்டிட்டேன்.
////இதை நான் வழிமொழிகிறேன் //
நேரம் கிடைக்கையில் மீண்டும் டிசைன் கலர் மாத்திப்பார்க்கிறேன், வீட்டில... டெஸ்க்ரொப் தொடங்கி.... ஐ பாட் வரை 4,5(com..) இருக்கு... சிலதில போய் செக் பண்ணினேன், நன்றாகத்தான் இருக்கு.
//அதாவது நீங்க இப்பதிவில் சொல்ல வரும் கருத்து யாது ? //
இன்னும் கொஞ்சம் வளர்ந்திட்டு வாங்க சொல்றேன் ஓக்கை?:)))).
மியாவும் நன்றி சிவா.
அதிரா...இது உங்களுக்கே கொஞ்சம் ஒவராக தெரியவில்லை...படத்தில் இருப்பது...பேபி...ஆனா....
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கின்றது...நேற்றே படித்துவிட்டேன்...ஆனால் கமெண்ட் option இல்லையே ஏன்...என்னாச்சு...அதனால் முந்திய பதிவுகளில் கமெண்ட் போட்டு இருந்தேன்...
இடைவெளியிலும் எங்களை போகவிடாமல் ...நடுவிலும் ஒரு கதை...கலக்குறிங்க...
இவ்வளவு பெரிசா சொல்லி கடைசியில் கல்யாணம் ஆகவில்லையே...
//கோடியின் குரல்//இந்தியாவிலும் அந்த நிகழ்ச்சி நடக்குதா...
வாங்க ஸாதிகா அக்கா....
ReplyDeleteடவுட் வந்தால் உப்பூடித்தான் கேட்டுத் தெளிவாகிடோணும்..:).
ஸாதிகா அக்கா.. சின்னவர்களை நாங்க “பொண்ணு”.. அப்படிச் சொல்ல மாட்டோம்... “பொம்பிளைப்பிள்ளை” அப்பூடித்தான் சொல்வோம்.
இது யாருடைய மகள்? (அல்லது) பொம்பிளைப்பிள்ளை.. ? இப்படித்தான் கேட்போம்..
சிலர் நாகரிகமில்லாமல், மரியாதையில்லாமல் கதைப்பதாயின் இது யாருடைய “பெட்டை”? இப்படியும் சொல்வார்கள்...
திருமணத்தின்போதுதான் பொம்பிளை என்ற சொல் ஆரம்பமாகும்....
அதன்மேல் பெரியாட்களை(தெரியாதவர்களை)... பெண், பொம்பிளை என்போம்.
//அண்ணன்கள்// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... தம்பி அழப்போறார்:))))).
பாக்கிங் செஞ்சுகிட்டே கமேன்டறேன் .
ReplyDeleteசமையல் ராணிக்கு எழுத்து கூட ஜிலேபியா மாதிரி தெரியுதா !!!!!!
அதாவது பரவாயில்லை கோடியின் குரல் என் கண்ணுக்கு கேடியின் குரலா
தெரியுது ......awwwwwww
.// தம்பியின் முகத்தில தெரிவது, மகிழ்ச்சியா? மாட்டிவிட்டோமே என்கிற கவலையோ? அவ்வ்வ்வ்:)).//
ReplyDeleteஸ்பீச் பபிள் உள்ள (அடடே வசம்ம்மா மாட்டிகிட்டேனேஅவ்வவ் )
இன்னிக்கு வெயில் ரொம்ப சோ எனக்கு முப்பதாவது falooda !!!!
ReplyDeleteஆருக்குப் பொண்ணு பார்க்கப் போறீங்க?
ReplyDeleteயாருக்கு என்பதுதானே பொருத்தமாக இருக்கும்.
எண்டெல்லாம்....
என்றெல்லாம்.....என்பதுதானே சரி.
படிங்க ஓக்கை?:)
படியுங்கள் ஓக்கே...சரி.
தமிழ் பிறந்த இலங்கையில் தத்துவ ராணியாக திகழும் நீங்கள் தரமான வாக்கியங்களை எழுதுவதுதானே சரி.
என்று சொல்வதற்கு மனம் ஏங்குகிறது சிஸ்டர்....பட் நீங்கள் அடிக்க வந்து விடுவிர்கள் என்பதால் "சூப்பர்" என்று ஜொள்ளிவிட்டுப் போகிறேன்...
இது எப்பூடி?(எப்படி)
//அதீஸ்... சிவாவுக்கும் விளக்கமில்லாமல் கிடக்காம் உ(எ)ங்கட தமிழ். ;) //
ReplyDeleteசிவாவுக்கு இதுவரை என்னதான் புரிஞ்சிருக்கு? இது புரிய?:)))))). சோஓஓஒ நாங்க காக்கா போவோம் இமா:)).
மியாவும் நன்றி இமா.. அனைத்துக்கும்.
//ஸாதிகா said...
ReplyDeleteபொண்ணு = இருபது,முப்பது வயதுகளில்
பொம்பிளை = முப்பதுக்கு மேலுள்ள வயதுகளில்
புரிந்ததோ இமா?
//
அதிரா ரொம்ப நல்ல “”பொண்ணு””” ஸாதிகா அக்கா:))).
மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.
வாங்கோ ஜலீலாக்கா...
ReplyDelete//பேபி அதிரா போட்டோ சூப்பர் // தங்கியூஊஊஊஊஊ:)).
சாட்டெல்லாம் சொல்லப்பிடா... ஒயுங்காப் படிக்கோணும்...:)), நீங்களே படிக்காதுவிட்டால் ? அவ்வ்வ்வ்வ்வ்?:)).
எழுதுங்க ஜலீலாக்கா. என்னிடமும் இப்படித்தான், அப்பப்ப கிட்னியில் தட்டுப்படும், உடனே எழுதி உடனே போஸ்ட் பண்ணிடுவேன்..
மியாவும் நன்றி ஜல் அக்கா.
வாங்க நிரூபன்....
ReplyDelete//ஏனுங்க, என்ன சுயம்வரத் தேவா வைக்கிறாங்க. நாங்களும் வருவதற்கு, //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இரும்பு வில்லை:), வந்து வளையுங்க என சுயம்வரம் வைத்தால் நீங்களெல்லோரும் வருவீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்:)))).
இல்ல நிரூபன்... உங்களுக்குத் தெரியாது, எங்கட கூட்டம்:)
நானும்... நானு..வும் என அடம் பிடிப்பினம் எல்லாத்துக்கும், அதுதான் அப்படி எழுதினேன் ஓக்கை:). எதுவென்றாலும்...
(எங்கட கூட்டம் = அதுதாங்க “கெட்ட கிருமிகள்”:)),பெயர்தான் அப்படி, ஆனா ரொம்ப நல்லவிங்க:), நானும்தேன்ன்ன்ன்:)).
நிரூபன்.... கொமிக் கதைகளில்தான் அப்படிப் படித்திருக்கிறேன், ஆனா சொந்த பந்தம், நட்பு... அப்படி எங்கேயும் , தங்கையைக் கேட்டு நான் அறியவில்லை,,, இருக்கலாம்:)).
ReplyDeleteஆனா நீங்க ரொம்ப நல்ல தம்பி என நம்புகிறேன்:)), அர்ச்சுனன் மாதிரி.... குருவித் தலையை மட்டும் பாருங்கோ ஓக்கை?:))).
மியாவும் நன்றி நிரூபன்.
வாங்க கீதா....
ReplyDelete//படத்தில் இருப்பது...பேபி...”ஆ”னா..// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ”ஆ” வன்னா இல்ல அது “அ”னா. அதிராவுக்கு “அ” னாத்தானே வரும்ம்ம்ம்ம்?:))). எப்பூடி.. எப்பூடி???:)).
//அதனால் முந்திய பதிவுகளில் கமெண்ட் போட்டு இருந்தேன்..//
பார்த்தேன் கீதா, மிக்க நன்றி... அதன் விளக்கம் மேலே இமாவின் பதிலில் சொல்லியிருக்கிறேன்.
//இவ்வளவு பெரிசா சொல்லி கடைசியில் கல்யாணம் ஆகவில்லையே...//
உண்மைதான் சில விஷயங்களில் பக்குவமாக புத்தி சொல்லி மனதைத் திடமாக்கி, நல்லபடி திருமணத்தை முடித்து வைப்பார்கள், பெரியோர். ஆனா இது.... என்னவென்று நடாத்தி முடிப்பது?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
koodiyin kural.. Chennai...
http://www.srivideo.net/jaya-tv-shows/9409-koodiyin-kural-27-06-2011-jaya-tv-kodiyin-kural-27th-june-2011.html
மியாவும் நன்றி கீதா.
வாங்க அஞ்சலின்... பயண அலுவல்களுக்கு மத்தியிலும் பின்னூட்டம் போட்டமைக்கு முதலில் மியாவ்(நன்றி).
ReplyDeleteஅவிங்களுக்குத் தமிழ் பிரியாதாம்:), டமில்தான் பிரியுமாம்:)... அதுதான் ஜிலேபி:).
//ஸ்பீச் பபிள் உள்ள // ஏதோ சொல்ல வாறீங்க எனப் புரியுது:), ஆனா புரியேல்லை:).
உஸ்ஸ்ஸ் வெயில்தான்..
மியாவும் நன்றி அஞ்சலின்.. போயிட்டு கெதியாத் திரும்பி வாங்கோ....
வாங்க அந்நியன்...
ReplyDeleteபெயருக்கேற்ற புரட்சியோடுதான் வந்திருக்கிறீங்க...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
// தரமான வாக்கியங்களை எழுதுவதுதானே சரி.// நீங்க சொல்வது 100 வீதம் கரீட்டு, ஆனா இது என்ன புத்தகமா? புளொக்தானே... நான் எழுதுவது பேச்சுவழக்கு..., கிட்டத்தட்ட.. நாம் பலரும் இப்படித்தான் கதைக்கிறோம் இங்கே.. அதனால நேரில் பேசுவதுபோல ஒரு பீலிங்ஸ்ஸாக இருக்கூஊஊஊஊஊஊ:)).
இது பிழை அல்ல, தெரிந்தேதான் எழுதுகிறேன். எழுத்துப்பிழைகள் இருப்பின்தான் படிக்க கஸ்டமாக இருக்கும், அதனால் முடிந்தவரை எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருப்பின் நல்லதே(அதை திருத்தி சுட்டிக் காட்டுவதாலும், நிறையவே திருந்துகிறோம்).
அப்பூடியெல்லாம் சொல்ல வந்தேன் ஆனா... அந்..ந்...ந்...ந்...நியனைக் காணேல்லையே... ஓ... ஓடுறார் ஓடுறார் பிடிச்சுவாங்க.. அடிக்கிறதுக்கில:) பிராண்டுறதுக்கூஊஊஊஊஊ:)).
//இது எப்பூடி?(எப்படி) //
சூஊஊஊஊஊஊஉப்பர்..:))
மியாவும் நன்றி அந்நியன்.
மீ 41....ஹீ ஹீ எனக்கு 4+1 = 5 லக்கி நம்பர் அதுதான் இவ்ளோ நேரம் waiting கமெண்ட் போட ஹீ ஹீ
ReplyDelete//அதாவது பரவாயில்லை கோடியின் குரல் என் கண்ணுக்கு கேடியின் குரலா
ReplyDeleteதெரியுது ......awwwwwww // தேவதைக்கு பாக்கிங் போதும் குசும்பு .....ஆனா கம்மெண்ட கரீக்டா போட்டிருக்காங்க
//அப்ப,மணமகள் எல்லாம் ரொம்ப வயசாளிகளா இருக்க மாட்டாங்க..? // ஆகா எப்புடி எல்லாம் சந்தேகம் வருது?? ஹும்
ReplyDelete////இங்கே தமிழ் கொஞ்சம் ஜிலேபி மாதிரி தெரியுது.;) //
ஏன் மகி எழுத்து விளங்கேல்லையோ? நான் புளொக் டிசைன் மாத்தோணும் என மாத்தேல்லை, ஆனா உள்ளே போய் கொஞ்சம் விளையாடினேன்// இந்த குழப்பம் எல்லாம் இருக்குமுன்னு தான் நான் இவ்ளோ நாள் வரலே கமெண்ட் போட ஹீ ஹீ (உஸ் உஸ் ஸ்ஸ்ஸ் வந்து எல்லார் கிட்டேயும் லீவு லெட்டர் சொல்லறதுலையே நேரம் போகுது.
//போட்டோவில் இருக்கிற பொம்பிளை ரொம்ப க்யூட்ட்ட்ட்ட்ட்!:)//
கீழ எழுதியிருக்கே.. அது பேபி அதிரா:), எழுத்துத் தெரியேல்லையோஓஓஓஓஓஓ?:)).// சொல்லவே இல்லே நான் பேபி அதிரா பூனை குட்டி ன்னு இல்லே நெனைச்சேன் ஐயோ குழப்பமா இருக்கே. சரி அப்புறம் வரேன்
அதீஸ் உங்க தொடர் பதிவு அழைப்பை ஏற்று ஏதோ எனக்கு தெரிஞ்ச வரை எழுதி இருக்கேன். ரொம்ப நன்றி என்னையும் அழைத்ததற்கு
ReplyDeleteஉஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா. அன்டாலியா வெப்பத்தைத்தாங்கமுடியாமல் "என்பக்கம்" வந்தால், பக்கமே மாறிட்டுது. கூலாஆஆ இருக்கு. கண்ணைப்பறிக்குது.நான் பக்ரவுண்ட் ஐ சொன்னேன்.(ஆனால் ஓல்ட் இஸ்ட் கோல்ட்)
ReplyDeleteபொம்பிளை பார்க்கிற கதை சூப்பர்.உங்க எழுத்துநடை நீங்க கூறியவாறு (பேச்சுமாதிரியேதான்).நேரில் பேசுவதுபோல ஒரு பீலிங்ஸ்ஸாக இருக்கு.
பேபி அதிரா சூஊஊஊஊஊஊஉப்பர்ஆஆ இருக்கா.
"அன்னக்கிளி உன்னைத்தேடுதே" நீங்களும் தான் தேடுறீயள்,அகப்படீனம் இல்லை.பாட்டு செலக்ஷன் நல்லாயிருக்கு.
வாங்க கிரிஜா...
ReplyDeleteநல்லவேளை 50 வரட்டும் என வெயிட் பண்ணேலை நீங்க:)))). பிந்தி வந்திட்டு.. சாட்டு வேற கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்பூடியெண்டெல்லாம் சொல்ல மாட்டேன், ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொணு(இதை நான் சொல்லல்ல... சிலபேர் சொல்லிட்டுப் பறந்து போயிட்டாங்க..:().
// சொல்லவே இல்லே நான் பேபி அதிரா பூனை குட்டி ன்னு இல்லே நெனைச்சேன் ஐயோ குழப்பமா இருக்கே. சரி அப்புறம் வரேன்
//
நீங்க சொல்ற மாதிரியும் வச்சுக்கொள்ளலாம்... அப்புறம்ம்ம்ம்ம்ம்... நான் சொல்கிற மாதிரியும் வச்சுக்கொள்ளலாம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
மியாவும் நன்றி கிரிஜா.
“டாக்ஷி”யில வந்து அழைப்பு விடுத்தமைக்கும் நன்றி.
வாங்க அம்முலு... மத்தியானம் யோசிச்சேன் அம்முலுவை...
ReplyDeleteவந்த வேகத்திலயே என்னை பப்பாவின் உச்சிக்கே ஏத்திட்டீங்க அவ்வ்வ்வ்வ்:)))). எனக்கு இன்னும் மனதுக்கு திருப்தியாகவில்லை பின்பக்க அழகு:). பொறுமையாக இருந்து மினக்கெட.. டிசுரேப்பாக இருக்கூஊஊஊஊ:))).
//பேபி அதிரா சூஊஊஊஊஊஊஉப்பர்ஆஆ இருக்கா//
தங்கூஊஊஊ தங்கூஊஊஊஊ வெய்க்கம் வருதாம் அவவுக்கு:))).
அன்னக்கிளி. மச்சனைப் பார்த்தீங்களா.. அதில் வரும் இரு பாடல்களுமே சூப்பர்.... பலதடவை கேட்டாலும் அலுக்காது எனக்கு... மியாவும் நன்றி அம்முலு.....
யப்பா.. எம்மாம்பெரிய பதிவு.. எப்படியோ படிச்சு முடிச்சுட்டேன்...ஸ்ஸ்ஸ்
ReplyDeleteபொம்பளை பாக்க போலாமான்னவுடனே..., என்னடா விவகாரமான டைட்டிலா இருக்கேன்னு பாத்தா அனுபவ பகிர்வுகளுடன்.. அருமையான உபயோக பதிவா இருக்கு.... ரொம்ப பெருமையா இருக்குங்க....
ReplyDeleteமுன்னே பின்னே தெரியாதவங்களை அரேஞ்ச் பண்ணி கல்யாணம் ஆகி பிரிஞ்சு... யாரோ ஒருவர் அதில் பாதிக்கப்பட்டு வாழ்க்கைபூரா அவிங்க்ய சாபத்த வாங்கறத விட பாவத்த சம்பாதிக்கமலே போயிரலாம்... ஹி ஹி ஹி
ReplyDelete//கணவருக்கு கோபமாம், போனனீ போ எனச் சொல்லிப்போட்டு வேறு திருமணம் முடிச்சிட்டார், இப்போ பெண்ணும் வேறு முடித்து நன்றாக இருக்கிறா. . சரி அது போகட்டும்.//
ReplyDeleteஇடைவேளை கதை சிரிச்சுபுட்டேங்கோஓஓஓஒ
இரண்டு பேரும் பிரிஞ்சு...இரண்டு பேரும் வேற கல்யாணம் பண்ணி ...இரண்டு பேரும் சந்தோசமா இருக்காங்கிளா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னங்க காமெடி ப்ண்றீங்க....
உண்மையில் இந்த பதிவுலகம் உற்று நோக்க வேண்டிய பகிர்வு... அழகான அனுபவங்களை நல்ல நடையில் தொகுத்துள்ளீர்கள்... இதில் பிடித்த விசயம் யாரையும் எளிதில் நம்பி விடவேண்டாம் என்ற பாடம் இந்த பதிவில் அமைந்துள்ளது.. நன்றியுடன் பாராட்டுக்கள்.. வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆஅ
ReplyDelete