எல்லாருமே நம்மளமாதிரி இருந்திட்டால் சோகம் வருமா சொல்லுங்க:)).. ஆனா அடுத்தவங்க நம்மளவிட சூப்பராச் செய்யும்போது சோகம் வராமல் இருக்குமோ என்ன சொல்லுங்க?:)).. ஹா..ஹா..ஹா...இதை நம்பிடாதீங்கோ பிளீஸ்ஸ்:)) நாமதான் எல்லாத்தையும் டக்குப் பக்கென வெளிப்படையாச் சொல்லிடுவமே:).. மனதில் எதையுமே புதைச்சு வச்சிட்டுப் பேசும் பழக்கமே இல்லை.. சரி அதை விடுங்க:))..
“நாகபாம்பு படமெடுக்குதென, நாக்குழிப்புழுவும் படமெடுக்க வெளிக்கிட்டதாம்ம்”:))) ...... அப்பூடி ஆச்சு என் நிலைமை:))
சோகத்துக்கு காரணம் என்னவெனத் தெரிஞ்சு கொள்ள ஆசையா இருப்பீங்க தானே:)... இதோ பாருங்க.. இத்தனை வகை அகர் அகர் தானுங்கோ:) காரணம்:).
என் சோகத்தின் காரணம் நம்பர் வன்:).
இது மகி செய்த தேங்காய்ப்பால் கடல்பாசி:).
நானும் செய்யலாமே என முடிவெடுத்து, அனைத்தையும் ஆயத்தப் படுத்திப்போட்டுத்தான், மகியின் குறிப்பைப் படிச்சேன்ன்.. 8 மணி நேரம், கடல்பாசியை ஊறவிடுங்க என இருந்துது... ஆனா இதுக்கு முன் செய்த ஜலீலாக்கா, ஆசியா ஆருமே ஊறவிடச் சொல்லல்ல அதனால....
சரி எங்கிட்டயேவா என நினைச்சுக்கொண்டே எடுத்தேன் கடல்பாசியை, வெயிட் பண்ணிச் செய்ய மனம் கேட்காதெனக்கு, நினைச்சால் உடனே செய்து முடிக்கோணும், அப்படி ஒரு கெட்ட பழக்கம் என்னில இருக்கு:)....
காந்தித் தாத்தா என்ன சொன்னார்?:: என்ன சொன்னார்.... “செய் அல்லது செத்துமடி” எனச் சொன்னார்... சின்ன வயதில் இருந்தே அது மனதில பதிஞ்சிட்டுது...
சரி என் கடல்பாசியை எடுத்தேன்ன்... இது கனடாவில சைனீஷ் கடையில வாங்கினது, ஒரு எழுத்தும் புரியுதில்ல, .. படம் பார்த்து, சரி.. இதுதான் கடல்பாசி என முடிவு பண்ணி வாங்கினேன்..
எட்டு மணி நேரத்துக்கு எங்கின போவேன் நான்:), அதனால மைக்குறோ வேவில வச்சு நன்கு அவிச்சேன் .. அதுவும் குளுகுளு என வந்துது... சரியாகிட்டுது என நினைச்சு அடுப்பில போட்டால்ல்ல்.. அவியுது அவியுது ஒண்டரை மணித்தியாலத்துக்கும் மேல ஹாஸ் ல அவிச்சும் கரையவே இல்லை... சரி இதுக்கு மேல வாணாம் என இறக்கினேன்.. இப்பூடி வந்துது...
பிரிஜ்ஜில் வைத்தேன்... ஆனா கட்டியாகவில்லை, சுவை பறவாயில்லை... பிரமிக்குமளவுக்கு ஒன்றுமில்லை. அடுத்த நாள் எடுத்து வெட்டிப்பார்த்தேன்.. இப்பூடி ஆச்சு.. முழுமையாகக் கரைந்திருக்கவில்லை...
அதுக்குள் இந்திய சுகந்திர தினம் வந்துது... அப்போதான் அடுத்த சோகம்..:))சோகம் நம்பர் ரூ:)
இது ஜலீலாக்கா மீண்டும் செய்து போட்டா...
அதே நேரம் நிகழ்ந்த அடுத்த சோகம்...
சோகம் நம்பர் த்ரீ:)
இது ஆசியாவுடையது...
சரி இதெல்லாம் தாங்கக் கூடிய சோகம் தான்:) என நினைச்சுக்கொண்டிருக்க... எனக்கொரு மெயில் வந்துது... அப்பூடியே பொயிங்கிப் போயிட்டேன்ன்ன்:).. பூஸ் இந்தாங்க இது உங்களுக்கு..:)) என்று ஒரு வசனம் வேற இருந்துது:)...
சோகம் நம்பர் ஃபோர்:)
இது அஞ்சுவுடையது...
இத்தனை சோகத்தையும் சுமந்து கொண்டு நெஞ்செல்லாம் அடைக்க... நான் இனி இருந்துதான் என்னத்தை சாதிக்கப் போகிறேன்ன்ன்ன்:)... “செய் அல்லது செத்து மடி”:) இதில முதலாவது சரி வரல்ல:)... அப்போ இரண்டாவது.. “செத்துமடி” யையாவது கடைப்பிடிப்போமே என எண்ணி:)... உசிரைக் கையில பிடிச்சுக் கொண்டு:).. தேம்ஸ்க்குப் போனேன்ன்... :) பிளாஸ் பக்கில எல்லாமே ஓடிச்சுது...
அடிக்கடி நான் சொல்லுவேனே குதிக்கிறேன்ன்.. குதிக்கிறேன் என.. அது இன்று நிறைவடையப்போகுது:).... நாளைக்கு வலையுலகம் எங்கும் ஒரு கூட்டம் நடக்கும்:) பின்பு .. ஒரு பூனைப்படம் போட்டு அஞ்சலி நடக்கும்:) அடுத்த நாளே மறந்திடுவினம்:)..
நாளைக்கும் காத்து வீசும்...
நாளைக்கும் பூ மலரும் - ஆனால்
நான் இருக்க மாட்டேன்ன்...:)
எண்டெல்லாம் எண்ணிக் கொண்டே, கண்ணைப் பிங் கலர் டிஷூவால துடைச்சபடி:).. ... தண்ணியில வலது காலை:) எடுத்து வச்சேனா:)...
ஒரு குரல்... “பூஸ் ஓடிவாங்க”.. “இது உங்க பங்கு” என ஒலிச்சுது:)..
டக்கென ஆர்வக் கோளாறாகி:) ஆர் கூப்பிட்டவை என பார்க்கும் ஆவலில்.. “மாத்தி ஓசிச்சேன்”:) சரி எதுக்கு கூப்பிட்டாங்க என முதல்ல பார்ப்பம்.. தேம்ஸ் இங்கினதானே இருக்கும், பிறகும் குதிக்கலாம் என வந்தேன்:).... அடுத்த சோகம் ... கொசு மயில்ல வந்திருந்துது:)..
இது சோகம் நம்பர் ஃபைஃவ்:)
கீரி எனும் என் சமையல் கிரிஜா அனுப்பியிருந்தா:)
இதையும் பார்த்ததும்.. எனக்குள் இருந்த மிருகம்.. வெளில வந்துது...:))..
“அதிரா பொறுத்தது போதும் பொயிங்கி எழு”:).. என ஒரு உற்சாகக் குரல் கொடுத்துது:))..
ஓடிப்போய் ரேடியோவைப் போட்டேன்ன்(சந்தோசம் வந்தால் டக்கெனப் பாட்டைப் பலமாப் போட்டுக் கேட்பது வழமைதானே:)) அது பிபிசில எனக்காகவே சிட்டுவேஷன் சோங்:) சொறி சிட்டு:) வேஷன்:) சோங் போய்ச்சுது:)....
உன்னால் முடியும் டம்பி டம்பிஈஈஈ...:))..
உடனே ஓடிப்போய் மீண்டும் தூக்கினேன்....... கடல் பாசியைத்தான்:).. எங்கிட்டயேவா?:) இம்முறை முதலில் ஊறப்போட்டேன்ன்.. கிட்டத்தட்ட 24 மணித்தியாலங்கள் ஊறவிட்டேன்ன்ன்.. கரையல்ல.. 20 நிமிடம் மைக்குறோ வேவ்ல வச்சேன்.. அப்பவும் கரையல்ல... சரி போனால் போகட்டும்.. பூஸே.... எனப் பாடிக்கொண்டே பத்திரமாச் செய்தேன்...
முந்தியதை விட பறவாயில்லை... ஆனாலும் சோகம் சோகம்தானுங்கோ:))
ஊசி இணைப்பூ:)
வாழும் வரை போஓஓஓராஆஆடூஊஊஊஊஊ.. வழி உண்டு என்றே பாடூஊஊஊஊ:)..
========================================================
புள்ளிகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் கோலங்கள் ஆகின்றன, எண்ணங்கள் பூர்த்தி அடையும்போது அதற்கு நிம்மதி எனப் பெயர் வருகின்றது, நமக்கு எது தேவையோ, அதைப் பெற முயற்சி செய்வோம், இல்லையேல் விட்டுவிடத் தயாராவோம், ஏனெனில் நமக்குத் தேவை “நிம்மதி” ........கவியரசு வைரமுத்து..
========================================================
|
Tweet |
|
|||
Mee the first !!!!!!!!!!!!
ReplyDeleteநான் தான் செகண்ட் !! இருங்க படிச்ச்சிட்டு வரேன்
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ் கீரி வாங்கோ.. இம்முறை என் “அகரகர்” உங்களுக்கே:)) டிஷ் ஓட எடுத்துக்கொண்டு போயிடோணும் சொல்லிட்டேன்ன்ன்:))
ReplyDelete//ஒரு குரல்... “பூஸ் ஓடிவாங்க”.. “இது உங்க பங்கு” என ஒலிச்சுது:)..//
ReplyDeleteஅட டா அவசரப்பட்டு அனுப்பிட்டேனோ ஒரு ரெண்டு நாள் பொறுத்து இருக்கலாமோ ? ச்சே ஜஸ்ட் மிஸ்ட் :))
//டிஷ் ஓட எடுத்துக்கொண்டு போயிடோணும் சொல்லிட்டேன்ன்ன்:))//
ReplyDeleteஎன்ன தாராள மனசு உங்களுக்கு இந்த மாதிரி போட்டிக்கு ஆஆஆருமே வராத ஒரு டிஷ் எ டிஷ்ஷோட கொடுக்குறீங்களே இது நியாயமா இது தர்மமா ? இதுக்கும் சேர்த்து நாளைக்கு டவுனிங் ஸ்ட்ரீட் இல் உண்ணாவிரதம் confirm :))
//நாளைக்கும் காத்து வீசும்...
ReplyDeleteநாளைக்கும் பூ மலரும் - ஆனால்
நான் இருக்க மாட்டேன்ன்...:)//
பூஸ் இந்த மாதிரி விளையாட்டுக்கு கூட எழுதாதீங்க கஷ்டமா இருக்கு :((
அடடா அதிரா இந்த அகர் அகர் உன்கையில படாதபாடு பட்டிருக்கே. எப்ப சரியா வந்துச்சு
ReplyDelete//En Samaiyal said... 4
ReplyDelete//ஒரு குரல்... “பூஸ் ஓடிவாங்க”.. “இது உங்க பங்கு” என ஒலிச்சுது:)..//
அட டா அவசரப்பட்டு அனுப்பிட்டேனோ ஒரு ரெண்டு நாள் பொறுத்து இருக்கலாமோ ? ச்சே ஜஸ்ட் மிஸ்ட் :))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பூஸ் எப்ப குதிக்கும், பேப்பரில எப்ப படம் வரும் என எல்லோரும் ஆவலாத்தான் இருகினம்:)) அதுதான் உலகம் அழியப்போகுதாமே:)) ஹையோ டிஷம்பர் வருதா?:)
En Samaiyal said... 5
ReplyDelete//டிஷ் ஓட எடுத்துக்கொண்டு போயிடோணும் சொல்லிட்டேன்ன்ன்:))//
என்ன தாராள மனசு உங்களுக்கு இந்த மாதிரி போட்டிக்கு ஆஆஆருமே வராத ஒரு டிஷ் எ டிஷ்ஷோட கொடுக்குறீங்களே இது நியாயமா இது தர்மமா //
ஹா..ஹா..ஹா... அவசரப்பட்டு வார்த்தைகளை விடப்பூடா:)) அந்த அகர் அகரை உண்ணவும் முடியாமல் கொட்டவும் விரும்பாமல் நான் பட்ட அவஸ்தை அந்த வள்ளிமலைக் கந்தனுக்குத்தான் தெரியும்:)).. அதேன்ன்ன் டிஷ் ஓட கீரிக்கு:))
பூஸ் கழுத்தில் போட்டு இருக்கும் நெக்லஸ் டால் அடிக்குதே? லண்டன் போலிஸ் ஏஷியன் லேடிஸ் கோல்ட் செயின் எல்லாம் போடுறதை அவாயிட் பண்ண சொல்லி இருக்காங்க. உங்களுக்கு தெஹிரியம் தான் :))
ReplyDelete//எல்லாருமே நம்மளமாதிரி இருந்திட்டால் சோகம் வருமா சொல்லுங்க:)).. //
உங்கள மாதிரி இருந்தால் அதுவே பெரீஈஈய ஜோகம் ஹி ஹி ;)) அஞ்சு பூஸ் வெரட்டிகிட்டு வராங்க ப்ளீஸ் எல்ப் :))
En Samaiyal said... 6
ReplyDelete//நாளைக்கும் காத்து வீசும்...
நாளைக்கும் பூ மலரும் - ஆனால்
நான் இருக்க மாட்டேன்ன்...:)//
பூஸ் இந்த மாதிரி விளையாட்டுக்கு கூட எழுதாதீங்க கஷ்டமா இருக்கு :((///
ம்ம்ம்ம் எனக்கும்தேன்ன்:((...
//நான் பட்ட அவஸ்தை அந்த வள்ளிமலைக் கந்தனுக்குத்தான் தெரியும்:)).. //
ReplyDeleteஎனக்கு இப்ப பிரிஞ்சிடிச்சு வள்ளிக்கு இன்னும் நெக்லஸ் போடாததால் தான் அகர் அகர் இப்புடி படாத பாடா போச்ச்சு சீக்கிரம் நேர்த்திய முடிச்சிட்டு செஞ்சு பாருங்க :)
//அதுதான் உலகம் அழியப்போகுதாமே:)) ஹையோ டிஷம்பர் வருதா?:)[///
ReplyDeleteஅதுதான் இப்ப 2032 அப்படின்னு சொல்லி இருக்காங்களே ? அப்பவும் உங்களுக்கு சுவீட் சிக்ஸ்டீன் தானே ????
Lakshmi said... 7
ReplyDeleteஅடடா அதிரா இந்த அகர் அகர் உன்கையில படாதபாடு பட்டிருக்கே. எப்ப சரியா வந்துச்சு//
வாங்கோ லக்ஸ்மி அக்கா வாங்கோ...
சரி வந்திருந்தா இப்பூடி ஒரு தலைப்பு போட்டிருப்பனோ?:).. அது சரி வரல... எனக்கு டவுட் உண்மையிலயே நான் வாங்கி வந்தது கடல்பாசிதானா இல்ல வேறேதுமோ தெரியவில்லை, ஏனெனில் பாயாச செய்முறை போட்டிருந்துது அதில..
இது கரையவே மாட்டுதாம், இனி இளநியில ட்ரை பண்ணப்போறேன்ன்ன்..
கீரியிட மாதிரி கலர்கலரா கட்டியா வேணுமெனக்கூஊஊஊஉ:))
மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.
En Samaiyal said... 10
ReplyDeleteபூஸ் கழுத்தில் போட்டு இருக்கும் நெக்லஸ் டால் அடிக்குதே? லண்டன் போலிஸ் ஏஷியன் லேடிஸ் கோல்ட் செயின் எல்லாம் போடுறதை அவாயிட் பண்ண சொல்லி இருக்காங்க. உங்களுக்கு தெஹிரியம் தான் :)) //
நான் போலீஸைக் கண்டால் வாலால சே..சே... என்னப்பா இது:), சோலால மறைச்சிடுவேனே:))
//
உங்கள மாதிரி இருந்தால் அதுவே பெரீஈஈய ஜோகம் ஹி ஹி ;)) அஞ்சு பூஸ் வெரட்டிகிட்டு வராங்க ப்ளீஸ் எல்ப் :))//
அஞ்சூஊஊஊஊஊஉ ஓடிவாங்க.. ஓடிவந்து கீரியை தேம்ஸ்ல............
தள்ளிடாதீங்க என்றேன்ன்ன்:)).. அடுத்தமுறை எனக்குக் கமெண்ட்ஸ் போட ஆள் வேணுமெல்லோ:)).. எங்கிட்டயேவா?:)
//நான் வாங்கி வந்தது கடல்பாசிதானா இல்ல வேறேதுமோ தெரியவில்லை//
ReplyDeleteஎனக்கும் இதே டவுட்டு தான் அதீஸ்.நான் இது தான் முதல் தடவை பண்ணினேன். பொதுவா முதல் தடவையில் எனக்கு ஒழுங்கா வரவே வராது. எனக்கே சரியா வருதுன்னா உங்களுக்கு எல்லாம் இது ஒரு மாட்டேர் ஏ இல்லே. ஸோ அகர் அகர் இல்லே போல தெரியுது. நான் வாங்கினது இப்புடி வெள்ளையா இல்லே. டிஷு போல இருந்தது. கொசு மெயில் இல் படம் அனுப்புறேன். இங்கயே இந்தியன் ஷாப் இல் ட்ரை பண்ணி பாருங்க
//நமக்கு எது தேவையோ, அதைப் பெற முயற்சி செய்வோம், இல்லையேல் விட்டுவிடத் தயாராவோம், ஏனெனில் நமக்குத் தேவை “நிம்மதி” .//
ReplyDeleteஇந்த மாதிரி அகர் அகர் ஆல உங்க நிம்மதி எல்லாம் கெட கூடாது பூஸ். சீர் அப் யா !! எப்படியும் அஞ்சு மகி டீச்சர் எல்லாம் வந்தது நெறைய வசனம் :)) சொல்லுவாங்க.
எங்க வான்ஸ் எ ரொம்ம்ம்ப நாளா காணோம்? ரொம்ம்ம்மம்ப மெரண்டு போய் இருக்காங்களோ ?
கீழே இருக்கும் மயில் அழகா இருக்கு. இப்போதான் கவனிச்சேன்
ReplyDelete//En Samaiyal said... 12
ReplyDelete//நான் பட்ட அவஸ்தை அந்த வள்ளிமலைக் கந்தனுக்குத்தான் தெரியும்:)).. //
எனக்கு இப்ப பிரிஞ்சிடிச்சு வள்ளிக்கு இன்னும் நெக்லஸ் போடாததால் தான் அகர் அகர் இப்புடி படாத பாடா போச்ச்சு சீக்கிரம் நேர்த்திய முடிச்சிட்டு செஞ்சு பாருங்க :)///
ஹா..ஹா..ஹா.. நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்ன்:)) என் நிலைமை அந்த திருப்பரங் குன்றத்து முருகனுக்குத்தேன் தெரியும்:)) அதேன் அவரும் பொறுத்துப் போறார்ர்:))..
இப்பவெல்லாம் நான் நடக்கும்போது குனிஞ்ச தலை நிமிருறேல்லைத் தெரியுமோ?:)) ஏனெண்டால் ஏதும் வைரம், வைடூரியம் கீழ கிடந்தால் எடுத்து, நேர்த்தியை நிறைவேத்திடலாம் என்றுதான்ன்:).
ஒரு அக்கா ஒரு அண்ணாவை விரும்பினாவாம்ம்.. அந்தக்கா குடும்பம் பெரிய பணக்காரராம், அந்தண்ணா சாதாரண குடும்பம்.. ஆனா இருவரும் பயங்கரமா லஃப் பண்ணினவையாம்ம்..
அந்தண்ணா பெரிசாப் படிக்கேல்லை, இதெல்லாம் சேர்த்துப் பார்த்து வீட்டில விருப்பமில்லையாம், அப்போ அந்த அக்காவுக்கு பிறந்தநாள் வந்ததாம், அதுக்கு அந்தண்ணா ஒரு கோல்ட் செயின் பிரசண்ட் பண்ண வெளிக்கிட, அந்தக்கா வேண்டாம் வீட்டில அடிப்பினம் மறைச்சு வைக்கேலாது என்றிட்டா.
அதுக்கு அண்ணா சொன்னாராம் பேர்த்டேய்க்கு கோயிலுக்குப் போவாய் எல்லோ, அப்போ ரோட்டோரம் நான் செயினைப் போடுவன், நீ பொறுக்குவதுபோல எடு, அப்போ போட விடுவினம்தானே என, அதுபோல...
அந்தக்கா, அவட அம்மாவோட கோயிலுக்குப் போக, செயின் இருந்து அந்தக்கா எடுக்க, இந்த ட்ராமா அம்மாவுக்குப் புரிஞ்சுபோச்சு, அம்மா சொன்னாவாம் ரோட்டில பொறுக்கின நகை உனக்கு வாணாம்ம்ம்.. நீ புதுநகை போடு என்று அம்மா வாங்கி வச்சிட்டாவாம்.
அந்தக்கா சரியான கெட்டிக்காரி மெடிஷின் கிடைக்கும் என எல்லோரும் நம்ப, அவ டொக்டரானால் இக்கல்யாணம் நிட்சயம் நடக்காது அதனால தான் டொக்டராகக் கூடாதென படிப்பை விட்டவவாம், பின்பு ஒற்றுமை ஆகி, அவர் வெளிநாடு போய் பெற்றோரும் ஒத்துக் கொண்டு, காதலித்தார்களாம்....
ஆனா சில வருடங்களுக்குப் பின் தற்செயலாக் அந்தக்காவை கொழும்பு “ஒடலில்” சந்திக்க நேர்ந்துது, திருமணமாகியிருந்தா, அவர்தான் ஆளோ எனக் கேட்க, இல்லை அது பிரச்சனையாகிட்டுது இவர் ஒரு பிஸ்னஸ்மான் எனச் சொல்லி... அவசரமாக ஓடிட்டா வடிவாக் கதைக்க முடியவில்லை... அவ எங்கட அண்ணியின் பெஸ்ட் ஃபிரெண்ட்:)..
அப்பூடித்தான் ஏதும் ஷெயின் ரோட்டில கிடந்தால் நான் என் நேர்த்தியை நிறைவேத்திடுவேன் முருகா:)).
En Samaiyal said... 13
ReplyDelete//அதுதான் உலகம் அழியப்போகுதாமே:)) ஹையோ டிஷம்பர் வருதா?:)[///
அதுதான் இப்ப 2032 அப்படின்னு சொல்லி இருக்காங்களே ? அப்பவும் உங்களுக்கு சுவீட் சிக்ஸ்டீன் தானே ???
அடக் கடவுளே!! ஏதோ டெக்னிகல் புறொப்பிளமாம் அது உண்மைதானக்கும்:))..
போங்கோ மீக்கு ரொம்ப ஷையா வருது:)) அப்பவும் நான் சுவீட் 16 தான், ஆனா அப்போ எனக்கு அகர் அகர் நல்ல வடிவாச் செய்யத் தெரிஞ்சிருக்கும்:).
//En Samaiyal said... 17
ReplyDelete//நமக்கு எது தேவையோ, அதைப் பெற முயற்சி செய்வோம், இல்லையேல் விட்டுவிடத் தயாராவோம், ஏனெனில் நமக்குத் தேவை “நிம்மதி” .//
இந்த மாதிரி அகர் அகர் ஆல உங்க நிம்மதி எல்லாம் கெட கூடாது பூஸ். சீர் அப் யா !! எப்படியும் அஞ்சு மகி டீச்சர் எல்லாம் வந்தது நெறைய வசனம் :)) சொல்லுவாங்க.
எங்க வான்ஸ் எ ரொம்ம்ம்ப நாளா காணோம்? ரொம்ம்ம்மம்ப மெரண்டு போய் இருக்காங்களோ ?///
ஓம் வந்து சொல்லுவினம் பார்ப்பம் என்ன சொல்லப் போகினம் என:)..
வான்ஸ் கனடா போனதாகவும் ஏதோ பல்க்பான் கடைக் கதையும் பின்னூட்டத்தில அடிபட்ட்டுது, இப்போ ஸ்கூல் தொடங்கிட்டுதுதானே சோ வீட்டில தேன் இருப்பா... ஏதும் கதை எழுதுவா... வெளியீட்டன்று ஆளும் வெளில வருவா.. வெயிட் அண்ட் சீ:)).
//En Samaiyal said... 18
ReplyDeleteகீழே இருக்கும் மயில் அழகா இருக்கு. இப்போதான் கவனிச்சேன்//
அவரையும் இப்போதான் இணைத்தேன், பார்த்ததும் பிடிச்சுப் போச்சு காவி வந்திட்டேன்ன், இடம் மாத்திப் போடோணும்... இப்போ டெம்பரரி:))
மியாவும் நன்னி கீரி.
athira said...
ReplyDeleteEn Samaiyal said... 16
//நான் வாங்கி வந்தது கடல்பாசிதானா இல்ல வேறேதுமோ தெரியவில்லை//
எனக்கும் இதே டவுட்டு தான் அதீஸ்.நான் இது தான் முதல் தடவை பண்ணினேன். பொதுவா முதல் தடவையில் எனக்கு ஒழுங்கா வரவே வராது. எனக்கே சரியா வருதுன்னா உங்களுக்கு எல்லாம் இது ஒரு மாட்டேர் ஏ இல்லே. ஸோ அகர் அகர் இல்லே போல தெரியுது. நான் வாங்கினது இப்புடி வெள்ளையா இல்லே. டிஷு போல இருந்தது. கொசு மெயில் இல் படம் அனுப்புறேன். இங்கயே இந்தியன் ஷாப் இல் ட்ரை பண்ணி பாருங்க//
பார்க்கிறேன் கீரீ.... இது கண்ணாடிபோல ஆனா வைரமாக இருக்க்கு. சாப்பிட வாய்க்கு சொஃப்ட்டா இருக்கு ஆனா வழுவழு எனக் கரைய மாட்டுதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). உங்களுடையது தொதல் மாதிரி சூப்பராக எல்லோ இருக்கு, அதை செய்முறையோடு பதிவு போடுங்களன் பிளீஸ்ஸ்ஸ்..
எப்படி 3 கலரில ஒட்டினமாதிரி எடுத்தீங்க.. சூப்பர்.
புள்ளிகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் கோலங்கள் ஆகின்றன, எண்ணங்கள் பூர்த்தி அடையும்போது அதற்கு நிம்மதி எனப் பெயர் வருகின்றது, நமக்கு எது தேவையோ, அதைப் பெற முயற்சி செய்வோம், இல்லையேல் விட்டுவிடத் தயாராவோம், ஏனெனில் நமக்குத் தேவை “நிம்மதி” ........கவியரசு வைரமுத்து.
ReplyDeletenice ...
நான் உந்த அகர் அகர் செய்ய என்று நினைச்சு, மகியிடம் கேட்க, அவர் சொன்னார் அமேஸான்.காம் இல் வாங்கலாம் என்று. அங்கே என்ன கதை என்றால் சுண்டங்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் கதையா இருக்கு. அகர் அகர் $3.99 அதை வீட்டுக்கு அனுப்ப $7.99 ( ஷிப்பிங் etc ...செலவு ). சும்மா காத்துப்போல இருக்குற வஸ்துக்கு அவ்வளவு காசா என்று கோபம் வந்தது. எனவே வாங்கவில்லை. இப்படி இவ்வளவு ரிஸ்க் என்று தெரிஞ்ச பிறகு வாங்கும் ஆசையும் போய்விட்டது.
ReplyDeleteஅதிரா இது என்னடா வம்பாய்ப் போச்சு,இந்தியாவிலும் யு.ஏ.இ யிலும் கிடைக்கும் அகார் அகார் சும்மா காய்ச்சினாலே போதுமே,ஃப்ரிட்ஜி கூட வைக்க வேண்டாம் ஆறினாலே உறைந்து விடும்.உங்க ஊரில் சைனா கிராஸ் பதில் சைனா கிளாஸ் தராங்களோ! முயற்சி முயற்சி முயற்சி என்றால் இது தானோ! இப்ப எனக்கு தேம்ஸில் குதிக்கலாம் போலத்தான் நிஜாமாக்வே இருக்கு.
ReplyDelete// எனக்கொரு மெயில் வந்துது... அப்பூடியே பொயிங்கிப் போயிட்டேன்ன்ன்:).. பூஸ் இந்தாங்க இது உங்களுக்கு..:)) என்று ஒரு வசனம் வேற இருந்துது:)..//
ReplyDeleteஅஆங் அப்புறம் அந்த எவர்சில்வர் தட்டுல ஊத்தி தட்டை தலைகீழ பிடிச்சி சர்க்கஸ் காட்டினேனே ..நான் செஞ்ச ஜெல்லி அழகா தட்டோட இருந்ததே
அந்த படத்தை பத்தியும் சொல்ல்லுங்க மியாவ் :)))))))
Asiya Omar said...
ReplyDeleteஅதிரா இது என்னடா வம்பாய்ப் போச்சு,இந்தியாவிலும் யு.ஏ.இ யிலும் கிடைக்கும் அகார் அகார் சும்மா காய்ச்சினாலே போதுமே,//
ஆசியா !!:)) பூசார் வாங்கி வந்தது glass noodles க்ளாஸ் நூடில்ஸ் என்று நினைக்கிறேன்
ஹாஆஆஆஆஆஅ :))))))))))))))))
பூஸ் வேணும்னா பாலடை பிரதமன் ட்ரை பண்ணுங்க அதில :)))))))))
ReplyDeletegiri saved me thanks dear God .
போஸ்ட போட்டா நேரம் நான் வீட்டில இல்ல ..அம்மாடியோவ் ...முதல் ஆளா வந்திருந்தா என் நிலைமை என்னாறது
//நாளைக்கும் காத்து வீசும்...
ReplyDeleteநாளைக்கும் பூ மலரும் - ஆனால்
நான் இருக்க மாட்டேன்ன்...:)//
பூஸ் இந்த மாதிரி விளையாட்டுக்கு கூட எழுதாதீங்க கஷ்டமா இருக்கு :((//
Repeat 99.12456879336 times
மியாவ் என்கிட்டே சொன்னா நான் உடனே அனுப்பி வைப்பேன்
நீங்க பணத்தை பே பாலில் அனுப்பிடுங்க ..ஒரிஜினல் சைனா கிராஸ்
உங்க வீட்டு வந்து சேரும்
china grass ..try this from Chinese
or Vietnamese shops
உங்க தலைல சுத்தியல் வச்சு அடிச்சு சொல்றேன் நீங்க வச்சிருக்கது அகர் அகர் இல்லை :))
ReplyDeleteடேஸ்டி யம்மி அகர் அகர் ட்ரீம்ஸ் ஹா ஆஆஆஆஆஆஆஆஆஆ
ReplyDelete:)))))))
ஜெய் இவ்விடம் வந்து பூசாரின் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் ..
ReplyDeleteஏற்க்கனவே மணத்தக்காளி மேட்டரில் டவுட் கிளியர் ஆகலை :)))
நாளைக்கு மீண்டும் அகர் அகர் ஜெல்லி செய்னும்
ReplyDeleteபூஸ் நேத்து தூங்கிநீன்களா :))))))))
GLITTERING MIYAAV AND PEACOCK BOTH ARE LOVELY !!!
ReplyDeleteதூக்கத்தில உங்களுக்கு AGAR AGAR கனவு வரணும்னே இதையும் சொல்லிட்டு போறேன் ..நீங்க வாங்கி வந்தது
ReplyDeleteவெள்ளை நிற அரிசி PASTA:))))))))))))
gOOD NIGHT
//இராஜராஜேஸ்வரி said... 24
ReplyDeleteபுள்ளிகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் கோலங்கள் ஆகின்றன, எண்ணங்கள் பூர்த்தி அடையும்போது அதற்கு நிம்மதி எனப் பெயர் வருகின்றது, நமக்கு எது தேவையோ, அதைப் பெற முயற்சி செய்வோம், இல்லையேல் விட்டுவிடத் தயாராவோம், ஏனெனில் நமக்குத் தேவை “நிம்மதி” ........கவியரசு வைரமுத்து.
nice ...//
வாங்கோ ராஜேஸ்வரி வாங்கோ..
என் பதிவு நைசோ:) வசனம் நைசோ:).. இல்ல கவிஞர் நைசோ:))... ஹா..ஹா..ஹா.. எல்லாமே நல்லதெனச் சொன்னதாக எடுக்கிறேன்ன் மிக்க நன்றி.
அமேஸான்.காம் இல் வாங்கலாம் என்று. அங்கே என்ன கதை என்றால் சுண்டங்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் கதையா இருக்கு.
ReplyDeleteஆஆஆஆ... வாங்கோ வான்ஸ்ஸ் வாங்கோ..
எங்க ஆளையே காணக் கிடைக்கவில்லையே... இதுக்குத்தான் சொல்றது கனடாப் பக்கம் போய் மட்டின் ரோல்ஸ் சாப்பிடாதீங்க என.. ஆர்தான் என் சொல்லைக் கேட்கினம்:))
அமேஷன்.கொம்ல உள்நாட்டுக்கு டெலிவரி இலவசம்.. இங்கு அப்படித்தான்... ஆனா வேறு நாடுகளில் இருந்தெனில் நட்டம்தான்ன்ன்... ஆசைக்கு ஒருமுறை ட்ரை பண்ணலாம்ம்... நான் இனி இளநியில செய்யப்போறேன்ன்ன்ன்ன்ன் டும்..டும்....டும்...
//இப்படி இவ்வளவு ரிஸ்க் என்று தெரிஞ்ச பிறகு வாங்கும் ஆசையும் போய்விட்டது.//
சே..சே.. இல்ல வான்ஸ்.. பயந்திடாதீங்க.. எனக்கு சரியான சைனா கிராஸ் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்(இது எனக்கு:)):)).
மியாவும் நன்றி.. வான்ஸ்.
Asiya Omar said... 26
ReplyDeleteஇப்ப எனக்கு தேம்ஸில் குதிக்கலாம் போலத்தான் நிஜாமாக்வே இருக்கு///
வாங்கோ ஆசியா வாங்கோ.... ஹா..ஹா..ஹா.. பார்த்தீங்களோ... இதைப்படிச்சே குதிக்கலம்போல இருக்கெனில் செய்த எனக்கு எப்பூடி இருக்கும்?:))).. இப்போ புரியுதோ அதிரா எவ்ளோ ஸ்ரோங் என:))).. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்ன்ன்:)).
மியாவும் நன்றி ஆசியா....
“சோகங்கள் எனக்கும்... நெஞ்சோடு இருக்கும்... சிரிக்காத நாளில்லையே:)”... அது பிபிசில சிட்டு:) வேஷன்:) சோங் போடீனம்ம்:))..
angelin said... 27
ReplyDelete//
அஆங் அப்புறம் அந்த எவர்சில்வர் தட்டுல ஊத்தி தட்டை தலைகீழ பிடிச்சி சர்க்கஸ் காட்டினேனே ..நான் செஞ்ச ஜெல்லி அழகா தட்டோட இருந்ததே
அந்த படத்தை பத்தியும் சொல்ல்லுங்க மியாவ் :)))))))//
அவ்வ்வ்வ் ரொம்ப தூரத்தில இருந்து ஒரு குரல் ஒலிக்க்குதே:)) ஓஒ அஞ்சூஊஊ வாங்கோ அஞ்சு வாங்கோ....
இந்த அநியாயத்தைக் கேட்க ஆருமே இல்லையோ?:)).. ஒரு பிள்ளை, அதுவும் சுவீட் 16 இல இருக்கிறவ:)), வாழ்க்கையில முதேஏஏஏல் தடவையா அகர் அகர் செய்து, நொந்து நூடில்ஸான நிலைமையில் இருக்கிறேன்ன்ன்... ஓடிவந்து தடவி 2 வார்த்தை ஆறுதல் படுத்தாமல்ல்.. தன் பெருமைகளைப் பாடட்டாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...
ஆசியா சொன்னதுபோல இப்போ எனக்கு தேம்ஸ்ல குதிக்கலாம்போல வருதூஊஊஊஊஊ:))..
நீதிக்கு இது ஒரு போராட்டம்... இதை நிட்சயம் உலகம் பாராட்டும்ம்ம்... ஹையோ இப்பவும் போகுதே பிபிசில சோங்:))
angelin said... 29
ReplyDeleteபூஸ் வேணும்னா பாலடை பிரதமன் ட்ரை பண்ணுங்க அதில :)))))))))//
என்னாது அகர் அகர் முடிஞ்சு பிரதமனோ:).. முடியல்ல முருகா என்னால சத்தியமா முடியல்ல..:)) என்னைத் தீக்குளிக்க வைக்காமல் விடமாட்டினம்போல இருக்கே வைரவா...:)))
ஃபயர் எஞ்சினுக்கு அடியுங்கோ.. நாளைக்கு காலை 8 மணிக்கு (பிரித்தானிய நேரப்படி.... நேரம் எங்களுக்கு முக்கியம்:)) தேம்ஸ் கரையில.. பெளர்ணமி ஒன்று அமாவாசையாகப் போகிறது:)))... இனியும் நான் தீக்குளிக்காட்டில் என்னைப் பூஸ் எனக் கூப்பிடுங்க:))))..
அதிரா உங்கட முடிவைக் கொஞ்சம் “மாத்தி ஓசிக்கப்பூடாதோ” என நீங்க எல்லோரும் சொல்வது காதில கேட்குது:)).. சரி சரி இன்னும் 10 மணித்தியாலம் ரைம் இருக்குத்தானே:)) நீங்க எல்லோரும் ஸ்ரெடியா இருங்கோ:))
போஸ்ட போட்டா நேரம் நான் வீட்டில இல்ல ..அம்மாடியோவ் ...முதல் ஆளா வந்திருந்தா என் நிலைமை என்னாறது//
ReplyDeleteரொம்ப ஃபீல் பண்ணக்கூடாது:)) எனக்குத் தெரியும், அஞ்சு வீட்டில இல்லை:) லேட்ட்டாத்தான் வருவா என:) அதனால ரெண்டாவது அகர் அகர் தட்டை எடுத்து, அஞ்சுவுக்காக கட்டிலுக்குக் கீழ பத்திரமா ஒளிச்சு வச்சிருக்கிறேன்ன்:))... ஆட்டாமல் அசைக்காமல் எடுத்துப் போயிடுங்க:))
Repeat 99.12456879336 times//
ReplyDeleteநோஓஓஓஓ யுவர் ஆனர்.. 100 வீதம் என அஞ்சு சொல்லேல்லை:))
china grass ..try this from Chinese
or Vietnamese shops
ஆஆஆ... கடவுளே!!! அதன் ஆங்கிலச் சொல் China cross எண்டெல்லோ நினைச்சுக்கொண்டிருக்கிறேன்ன்ன்.. இதென்ன கொடுமை முருகா?:))...
கானமயில் ஆடக்.. கண்ட வான் கோழி தானும்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆட.... ஸ்ரொப் இட்:)) நான் பிபிசிக்குச் சொன்னேன்ன்:))..
சிட்டு:) வேஷன்:) சோங்காப் போட்டே என்னைக் கொண்டிடுவாங்க போலிருக்கே முருகா:)... கெதியா நாடு மாறோணும்:)... என் கணவர் அடிக்கடி கேட்பார் நியூஷிலாண்ட்டுப் போய் இருப்பமோ என... சே.... மறுத்தது தப்பு:)).. அங்கின போயிட்டா.. இந்த சிட்டு வேசன் சோங்கிலிருந்தாவது விடுதலை கிடைக்கும்:))
angelin said... 31
ReplyDeleteஉங்க தலைல சுத்தியல் வச்சு அடிச்சு சொல்றேன் நீங்க வச்சிருக்கது அகர் அகர் இல்லை :))////
அவ்வ்வ்வ்வ்:)) அதில பாயாசம் செய்யும் படம் போட்டிருக்கினம்:))... நானும் இப்போ ஒத்துக் கொள்றேன்ன்ன்ன்....
“தான் அறியாச் சிங்களம், தன் பிடரிக்குச் சேதமாமே” அம்மமா சொல்றவ....:))
angelin said... 33
ReplyDeleteஜெய் இவ்விடம் வந்து பூசாரின் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் ..
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்ப எதுக்கு தலைகீழ் தியானத்தில இருப்பவரைக் கூப்பிடுறீங்க:)) சத்தம் கேட்ட்டு சடாரெனக் காலை விட்டிட்டால்..:) அவரின் தலை என்னாகும்:)).. பிறகு பாலைவனப்பூச்சிகளின் கதி:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க அஞ்:)
ஏற்க்கனவே மணத்தக்காளி மேட்டரில் டவுட் கிளியர் ஆகலை :)))//
அஞ்சூஊஊ நீங்க சொன்ன வத்தல் சொல்லி, அந்த அங்கிளை தேடச் சொன்னேன்ன் அவர் தேடிப்போட்டுச் சொன்னார், கடையின் பெயரைக் கேட்டுச் சொல்லுவீங்களோ என... நான் அவரை அலைக்கழிக்கப்படாதென பேசாமல் விட்டிட்டேன்ன்ன்:)).
angelin said... 34
ReplyDeleteநாளைக்கு மீண்டும் அகர் அகர் ஜெல்லி செய்னும்
பூஸ் நேத்து தூங்கிநீன்களா :))))))))
என்னதூ நேற்றுத் தூங்கினீங்களாவா?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) யும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையா.. 11 மணிவரை என்னை முழிச்சிருக்க்க வச்சு... பிறகு பார்த்தால்ல்ல்ல்.. வடை போயிடுச்சாம்ம்ம்.. நாள் இருக்காம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இருங்க இருங்க... அதையும் சொல்லுவேன்ன் இப்ப இல்ல... கார்ர்ட்டுடன்:)) எங்கிட்டயேவா:))
angelin said... 35
GLITTERING MIYAAV AND PEACOCK BOTH ARE LOVELY !!!
மெர்ஷி அஞ்சு:)
angelin said... 36

ReplyDeleteதூக்கத்தில உங்களுக்கு AGAR AGAR கனவு வரணும்னே இதையும் சொல்லிட்டு போறேன் ..நீங்க வாங்கி வந்தது
வெள்ளை நிற அரிசி PASTA:))))))))))))
gOOD NIGHT
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
அனைத்துக்கும் மியாவும் நன்றி அஞ்சு...
அனைவருக்கும் நல்லிரவு.. பொன் நுய்ய்ய்ய்ய்....

ReplyDeleteஇனிய இனிய சுவீட்டான..கற்கண்டுக் கனவுகள்...
:)

ReplyDeleteஅதிராவ், மனசைத் தளர விட்டுட்டாதீங்க, யு கேன் டூ இட்! :)))
கடல்பாசி சரியாக் கரையேல்லை,அதுவே உங்கள் தோல்விக்கு காரணம். சிறு துண்டுகளா நறுக்கி ஊறவிட்டு, கேஸ் அடுப்பிலேயே கரைய விடுங்க. மைக்ரோவேவ் எல்லாம் வேணாம். மிதமான தீயில் அரை மணி நேரத்தில் கரைஞ்சுரும். மீண்டும் முயற்சியுங்கோ..:)
அறுசுவை-யில் இலா-விண்ட ஒரு வசனம் உண்டே.."ஒன்பது முறை விழுந்தவனைப் பார்த்து.... " வசனம் மறந்து போச்..அதை நினையுங்கோ! ;) ;)
இந்த ரோஸ்மில்க் கடல் பாசியைச் சாப்டுட்டு, ட்ரை அகய்ன், குட் லக்!
:) :) :)
:) :)
:)
ஆஃப்டர் ஆல் ஒரு அகர் அகர் செய்ய இத்தனை பில்ட் அப்பா?உலகத்திலேயே மிக மிக சுலபமான ரெசிப்பி இந்த அகர் அகர்தான்.அதை செய்வதற்கு இத்தனை மெனகெட்டு இருக்கீங்களே பூஸ்.எங்கள் வீட்டு ஆமிர் கூட சூப்பரா செய்து விடுவான்.:)அகர் அகரை ஊற் வைக்கவும் தேவை இல்லை.இப்போ அதீஸ் மாதிரி ஆட்களுகாகவேண்டியே பவுடர் வடிவில் வருகின்றது.கொதிக்கும் பாலில் அல்லது தண்ணீரில் சர்க்கரையை கலக்குவது போல் கலக்கி விட்டால் உடனே அகர் அகர் ரெடி.
ReplyDeleteஹ்ம்ம்...என்னிடம் இருக்கும் கடல் பாசி அதிராட்ட இருப்பது போல இல்லையே?! வைக்கோல் போல, வெயிட் இல்லாமல்தான் இருக்கும். ஊறவிடும் தண்ணீரிலையே கொதிக்க வைப்பேன், கரைஞ்சு விடும். அதிரா, நீங்க வாங்கியது கடல் பாசி இல்லைதானோ?! ;) ;)
ReplyDeleteஇளநீர் வைச்செல்லாம் ட்ரை பண்ணிப் போட்டு இன்னொரு "முராரி" பாடிடாதீங்கோ..தாங்காது!(எங்க மனசு!:) ). ஏஞ்சல் அக்கா சொன்னது போல China grass / Agar agar என்று பெயர் போட்டிருக்கும் பக்கட் பாத்து வாங்கி மீண்டும் முயலுங்கோ. நன்றி, வணக்கம்! :)
அவ்வவ்...என்னட்ட மயில் முட்டை எடுத்து வரச் சொல்லிப் போட்டு, அதுக்குள்ளே மயிலைப் புடிச்சு காலை ஒடிச்சு பிளாகில கட்டி வைச்சிட்டாங்க பூஸம்மா! எ.கொ.ச.இ?
ReplyDeleteஇனிய காலை வணக்கம் அதிரா...வேலைக்கு வெளிக்கிட்டாச்சு...வந்து பாக்கிறன் !
ReplyDelete“நாகபாம்பு படமெடுக்குதென, நாக்குழிப்புழுவும் படமெடுக்க வெளிக்கிட்டதாம்”....இப்ப இது பிடிச்சிருக்கு....ஹிஹிஹி !
பூஸாரே
ReplyDeleteஏன் 24 மணீ நேரம் ஊறவைக்கஓனும்
மிக்சியில் பொடித்து கொள்ளலாலே,
இதுக்கேல்லாம் கலங்ககூடாது.
நானும் எவ்வளவு சிரமமான சமையலும் எனக்கு ஈசி ஆனால் இந்த் இடியாப்பட்ம் மட்டும் சரியா வராம. 15 வருடம் முன்
இத எப்படியும் செய்தே ஆகனும் என்றூ தினம் ஆபிஸிலிருந்து சாப்பிடவரும் நேரமெல்லாம்
முயற்சி செய்து ஓவ்வொரு முறையும் முதல் சுற்று சூப்பராக வரும் ஆஹா என்று அடுத்து அடுத்து நல்ல்லவரதோடு செய்துடுவோமுன்னு நிறைய மாவை போட்டு கிண்டி நான் பட்ட பாடு இருக்கே
இருந்தாலும் விடல அந்த மாவை ஒரு நாள் ரொட்டியாகவும்
மறுநாள் இனிப்பு கொழுக்கட்டையாகவும். பூரன கொழுக்கட்டையாக வும் செய்து சாப்பிட்டோம்
கடைசியாக ஒரு வழியாக கஜினிமுகம்மது 18 முறை படை எடுத்தாராம் அதை நினைவில் வைத்துகொண்டு நானும் 15 முறை படைஎடுத்து 16 வது முறை நலல் வந்து விட்டது.
இப்ப கடைகளிலேயே ப்ரெஷ் இடியாப்பம் கிடைக்குது ஆகையால் விட்டு விட்டேன்
இதுக்கில்லாம கலங்கப்படாது
நீஙக் தண்ணீர் அதிகம் ஊற்றி இருப்ப்பீங்க.
கலங்கமா மறு படி பொங்கி எழுங்கள்
வானதி அகர் அகர் பவுடரே விற்கிறது
ReplyDeleteஇல்லன்னா ஊரிலிருந்து வரும், போது நிறைய வாஞ்கி வந்து மிக்சி யில் பொடித்து பிரீஜரில் போட்டு வைத்து கொள்ளுஙக்ள்

ReplyDelete
ReplyDeleteMahi said... 49
ReplyDelete:)
அதிராவ், மனசைத் தளர விட்டுட்டாதீங்க, யு கேன் டூ இட்! :)))
///
அவ்வ்வ்வ்வ்வ் வாங்கோ மகி வாங்கோ... உப்பூடிச் சொல்லிச் சொல்லியே என்னை எப்பவும் உச்சிக் கொப்பிலயே இருக்க வச்சிடுவினம்போல இருக்கே முருகா...:))
எல்லாத்துக்கும் கால நேரம் வரோணுமாக்கும், முன்பு படிக்கும்போது கேசரி செய்ய வெளிக்கிட்டு... அது கழிப்போல வரும். 2,3 தடவைகள் முயற்சித்து கை விட்டாச்சு.
பின்பு இடம்பெயர்வுகளின்போது ஒரு புது நண்பி சொன்னா தனக்குத் தெரியும் செய்து காட்டுகிறேன் என... சரி எனப் பொருட்கள் வாங்கினால் அவவும் கழிப்போல கிண்டி விட்டா... கேசரியே வெறுத்து கைவிட்டு விட்டேன்....
பின்பு வேர்க் பண்ணிய இடத்தில ஒரு கேர்ள் வலிய வந்து கேட்டா “அதிராவுக்கு கேசரி செய்யத் தெரியுமோ என”.. அந்த சோகக் கதைகளை நினைவுபடுத்தாதீங்கோ என்றேன்ன்... சே..சே... கேசரி சோ சிம்பிள், நான் சொல்லுகிறபடி செய்யுங்கோ என, அளவுகளோடு செய்முறையும் எழுதித்தந்தா...
எனக்கு நம்பிக்கை குறைவாகத்தான் இருந்துது, இருப்பினும் செய்தேன் சூப்பரா வந்துது.. அன்றிலிருந்து எங்கள் வீட்டிலயே “கேசரி புகழ் அதிரா” தான்:))...
அப்பூடித்தான்.. இதுக்கும் ரைம் வரோணுமாக்கும்:).
அறுசுவை-யில் இலா-விண்ட ஒரு வசனம் உண்டே.."ஒன்பது முறை விழுந்தவனைப் பார்த்து.... " வசனம் மறந்து போச்..அதை நினையுங்கோ! ;) ;)

ReplyDeleteநான் மறப்பனோ அதை:) பத்தாவது தடவை விழுந்தவரைப் பார்த்துப் பூஸ் சொன்னது “9 தடவை எழுந்தவரல்லவா நீங்க:)))...
இந்த ரோஸ்மில்க் கடல் பாசியைச் சாப்டுட்டு, ட்ரை அகய்ன், குட் லக்!
//ஸாதிகா said... 50
ReplyDeleteஆஃப்டர் ஆல் ஒரு அகர் அகர் செய்ய இத்தனை பில்ட் அப்பா?உலகத்திலேயே மிக மிக சுலபமான ரெசிப்பி இந்த அகர் அகர்தான்.அதை செய்வதற்கு இத்தனை மெனகெட்டு இருக்கீங்களே பூஸ்.எங்கள் வீட்டு ஆமிர் கூட சூப்பரா செய்து விடுவான்.:///
வாங்கோ ஸாதிகா அக்கா வாங்கோ... இந்தக் கஸ்டமானத்தை எல்லாம் நான் ஈசியா மடக்கிடுவேன்:)) ஆனா ஈசியானதைத்தன் செய்ய முடியுதில்லை:))..
என்னாது... நேசறி போகும் ஆமீர் குட்டியையா சொல்றீங்க?:)) முடியல்ல சாமீஈஈஈஈஈஈ... இனியும் என் உடம்பில உசிர்:) இருப்பது நீதியோ?:))..
இப்போ அதீஸ் மாதிரி ஆட்களுகாகவேண்டியே பவுடர் வடிவில் வருகின்றது.கொதிக்கும் பாலில் அல்லது தண்ணீரில் சர்க்கரையை கலக்குவது போல் கலக்கி விட்டால் உடனே அகர் அகர் ரெடி.
ReplyDeleteஎல்லோரும் சொல்லுறீங்க இனி ஓய மாட்டேன்ன்ன்ன்... அயகாச் செய்து படம் போட்டே தீருவேன்ன்:).. சரியான “அகர் அகர்” கிடைக்கும் பட்சத்தில்:)).
கார் ட்ரைவிங் ரெஸ்ட்டுக்கு முதல் முறை தைரியமாகப் போய், பெயிலாகி வந்து மனம் சோர்ந்து... ஹையோ இனி நான் லைசென்ச்சே எடுக்க மாட்டனோ.. எண்டெல்லாம் புலம்பியபோது:)...
என் கணவர் சொன்னார்... என்ன இதுக்கு சோரலாமோ... என்னோடு வேர்க் பண்ணும் இங்கு பிறந்து வளர்ந்த வெள்ளையர்களே... 20,25 தரமாக மனம் களக்காமல் எடுக்கினம், ஒருவருக்கு வயது 50, அவ கிட்டத்தட்ட 10 வருடமாக முயற்சி செய்து இந்த வருடம்தான் எடுத்திருக்கிறா.... இப்படியெல்லாம் பார்க்கும்போது, நீங்கள் எவ்வளவு திறமாக ஓடுறீங்கள்.. அடுத்தமுறை கொஞ்சம் கவனமாச் செய்யுங்கோ பாஸாகலாம் என்றார்..
அப்படியே தைரியமாகிப் போய் பாஸானேன்ன்... அப்பூடித்தான் இதுவும்.
மியாவும் நன்றி
ஸாதிகா அக்கா.
Mahi said... 51
ReplyDeleteஇளநீர் வைச்செல்லாம் ட்ரை பண்ணிப் போட்டு இன்னொரு "முராரி" பாடிடாதீங்கோ..தாங்காது!(எங்க மனசு!:) ). ஏஞ்சல் அக்கா சொன்னது போல China grass / Agar agar என்று பெயர் போட்டிருக்கும் பக்கட் பாத்து வாங்கி மீண்டும் முயலுங்கோ. நன்றி, வணக்கம்! :)///
ஹா...ஹா...ஹா... இளநி எனில் இங்கு இப்போ கிடைக்குது, அதனால்தான் அதை ஓசிச்சேன்ன்ன்:)) ஏன் இதைவிட அது கஸ்டமோ:))
என் அகர் அகரைச் செய்திட்டு, உடம்புக்கு குளிர்ச்சியாம் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ என கையில கறண்டியோட எல்லோருக்கும் தீத்தக் கலைச்சேன்ன்ன்... ஓடி ஒளிச்சிட்டினம்:))).. செய்த பாவத்துக்காக கொஞ்சம் கொஞ்சமா நானே சாப்பிட்டதாக நினைவு:)).
நீங்க மயில் முட்டை கொண்டு வாங்கோ மகி..... இது பெரிய மயிலெல்லோ.. எனக்கு குட்டி மயில் வேணும்:))..
மியாவும் நன்றி மகி.
வாங்கோ ஹேமா வாங்கோ....
ReplyDeleteவேலைக்கு நேரமாச்சோ... நல்லபடி வேர்க்கை முடிச்சிட்டு இரவைக்கு வாங்கோ ஆறுதலாகப் பேசலாம்ம்..
மியாவும் நன்றி ஹேமா....
//Jaleela Kamal said... 54
ReplyDeleteபூஸாரே
ஏன் 24 மணீ நேரம் ஊறவைக்கஓனும்
மிக்சியில் பொடித்து கொள்ளலாலே,
இதுக்கேல்லாம் கலங்ககூடாது.
அவ்வ்வ்வ்வ்வ் வாங்கோ ஜலீலாக்கா வாங்கோ.. இதுக்குத்தான் உங்களை மாதிரி ஆட்கள் பக்கத்தில இருக்கோணும் என்பது....
மிக்ஸியில் தூளாக்கும் நினைவே வரவில்லை எனக்கு... ஆனாலும் ஜலீலாக்காஅது கொஞ்சம் வழுவழு எனவும் ஆனா கரையாத தன்மையாகவும் இருந்துது... மரவள்ளிக்கிழங்கு/கசாவாவில் செய்யப்பட்டதோ தெரியவில்லை..
இருந்தாலும் விடல அந்த மாவை ஒரு நாள் ரொட்டியாகவும்
ReplyDeleteமறுநாள் இனிப்பு கொழுக்கட்டையாகவும். பூரன கொழுக்கட்டையாக வும் செய்து சாப்பிட்டோம்////
இந்த இடியப்பக் கதை ஆரம்ப காலத்தில எல்லோரும் அப்படித்தான் போல... எங்க வீட்டிலும் அதேதான்ன்.. நான் ஒரு பக்கம் கணவர் ஒரு பக்கமாக உரலைப் பிடித்து பிழிஞ்சு... தாங்க மாட்டாமல்.. எனக்கு இடியப்பம் விருப்பமில்லை அதிரா... நீங்க புட்டவியுங்கோ என.. இரக்கப்பட்டுக் கணவர் சொல்லியும்:))..
காதில ஃபோனை வச்சபடி... அம்மா, அக்கா, அண்ணியோடு கேட்டுக் கேட்டு குழைத்து.. இப்போ தேறிட்டேன்ன்ன்:)))
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல... தொடர்வேன்ன் அகர் அகர் செய்வதை:)..
//நீஙக் தண்ணீர் அதிகம் ஊற்றி இருப்ப்பீங்க.
//
அதை ஏன் கேட்கிறீங்க... :)) அவிய மாட்டேன் என அடம் புடிச்ச்சு கடகடவென தண்ணி வத்தத் தொடங்கிட்டுது... கரையட்டும் கரையட்டும் என அடிக்கடி தண்ணி சேர்த்தேன்ன்ன்:)))..
ஸ்ஸ்ஸ்ஸ்சப்பாஆஆஆஆ முடியல்ல:))
மியாவும் நன்றி ஜலீலாக்கா....
அஞ்சு உங்கள் படம் பார்க்க ரைஸ் நூடில்ஸ் போல இருக்கே.. ஒருவேளை ரெஸ்கோவில் இருக்குமோ இது? பார்த்தேன் இப்படி, நூடில்ஸ் என விட்டுவிட்டேன்ன்ன் படிச்சுப் பார்க்கவில்லை... நாளை போவேன் பார்க்கிறேன்ன்..
ReplyDeleteமியாவும் நன்றி அஞ்சு.
//அஞ்சு உங்கள் படம் பார்க்க ரைஸ் நூடில்ஸ் போல இருக்கே.. ஒருவேளை ரெஸ்கோவில் இருக்குமோ இது? //
ReplyDeleteahhhh noooo
வணக்கம் அதிராக்கா..
ReplyDeleteஎப்படி இருக்கீங்கள்???
பூஸார் நலமா??
நானும் ஒரு பூஸார் வைத்து இருக்கேன் இல்ல.... :)) ரெம்ப கிட்டடியிலதான் எங்க வீட்டுக்கு கொண்டு வந்தேன், வெள்ளையில் கருப்பு புள்ளி புள்ளி உடுப்போட வந்து இருக்கார் :))
அப்புறம் மேலே இருக்கிற பாடல் ரெம்ப சூப்பர் , எனக்கு ரெம்ப பிடிச்ச பாட்டு.
angelin said... 67
ReplyDelete//அஞ்சு உங்கள் படம் பார்க்க ரைஸ் நூடில்ஸ் போல இருக்கே.. ஒருவேளை ரெஸ்கோவில் இருக்குமோ இது? //
ahhhh noooo
//////////karrrrrrrrrrrrrrrr:))
துஷ்யந்தன் said...
ReplyDeleteவணக்கம் அதிராக்கா..
எப்படி இருக்கீங்கள்???
பூஸார் நலமா??
நானும் ஒரு பூஸார் வைத்து இருக்கேன் இல்ல.... :)) ரெம்ப கிட்டடியிலதான் எங்க வீட்டுக்கு கொண்டு வந்தேன், வெள்ளையில் கருப்பு புள்ளி புள்ளி உடுப்போட வந்து இருக்கார் :))
வாங்கோ துஷியந்தன்... முதன்முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு... மிக்க மகிழ்ச்சி... முதல் வரவிலேயே நன்கு பழகியவர்போல கதைக்கிறீங்க... என்னை முன்னப்பின்ன தெரிஞ்சிருக்கிறீங்கபோல:)).
என்னாது நீங்களும் பூஸார் வளர்க்கிறீங்களோ?:) வெள்ளையில் கருப்புப் புள்ளி போட்ட பூஸோ?:)) ரொம்ப டேஞ்சரான பேர்வழியாச்சே:).. ஜாக்கிர்தையா இருங்க..:).
பாட்டுப் பிடிச்சிருக்கோ? மிக்க நன்றி..... வரவுக்கும் கருத்துக்கும்.
தேம்ஸில் குதிக்கப்போன உங்களைத்திரும்பவும் அழைத்த அந்த ஆள் யாரு? நிச்சயம் ஆயுள் தண்டனைதான் அவருக்கு.
ReplyDeleteஇப்படி பாட்டைக்கேட்டே திருந்தும் கூட்டம் இன்னும் இருக்கிறதா?
ReplyDeleteஉன்னால் முடியும் டம்பி டம்பிஈஈஈ...:))..
இது டம்பிக்குதான! உங்களுக்கென்ன வந்துச்சு. திரும்பவும் தேம்ஸ்க்கு போங்க.
//நாளைக்கும் காத்து வீசும்...
ReplyDeleteநாளைக்கும் பூ மலரும் - ஆனால்
நான் இருக்க மாட்டேன்ன்...:)//
நாளைக்கும் கடல்பாசி இருக்கும். அதைச் செஞ்சு போட்டோ எடுத்து போட நான் இருக்க மாட்டேன். இதையும் சேர்த்திருக்கலாம்.
கவிதை நல்லாத்தான் இருக்கு.
ஊசி இணைப்பூ:)
ReplyDeleteவாழும் வரை போஓஓஓராஆஆடூஊஊஊஊஊ.. வழி உண்டு என்றே பாடூஊஊஊஊ:)..//
திரும்பவும் போட்டோ எடுத்து போடுவீங்களா...
எல்லோரும் ஓடிடுங்க.
யாரை நம்பி நான் பொறந்தேன்... ஏன் ஏன்.. இந்தக்கொலைவெறி. பூஸாரைப்பற்றி சொன்னதுக்காக இப்படி ஒரு பாட்டைபோட்டு சோகத்துக்குமேல் சோகம் வேண்டாம்.
ReplyDeleteஅதிரா மனம் தளராமல் இன்னுமொரு முறை கடையில பார்த்து வாங்குங்கோ.நானும் முதல் மாறி வாங்கி செய்ததால் கரையவில்லை.பின்பு வாங்கியதில் செய்து சரியா வந்தது.நல்ல காலம் நானும் படம் போட்டிருந்தால் பூஸ் என்னாவதூஊஊ.
ReplyDeleteஎனக்கும்தான் இடியப்பம் சரியா வராமல் கஷ்டப்பட்டேன்.இப்ப சரிசெய்தாச்சு. ஆனா உழுந்து வடை இன்னமும் சரியாகவில்லை.ஆனாலும் முயற்சிக்கிறேன்.
நல்ல பாட்டு,அழகாயிருக்கு மயில்.கிட்டார் பூஸார் சூப்பர்.
ReplyDelete// நமக்கு எது தேவையோ, அதைப் பெற முயற்சி செய்வோம், இல்லையேல் விட்டுவிடத் தயாராவோம், ஏனெனில் நமக்குத் தேவை “நிம்மதி”//
ReplyDeleteஅப்போ அகர் அகர் செய்யமாட்டீங்களா??
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ குருவே எப்படி இக்குரிங்க ....
ReplyDeleteஅஞ்சு அக்கா ,கிரி அக்கா ,ஜெய் அக்கா எல்லாரும் எப்புரி இக்குரிங்க ,,,உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுறேன் ......
குருவே என்ன இது சோகமா லாம் இருக்கீங்க ,,,,னானாம் ,,,,நானும் ரொம்ப... சரி .......
ReplyDeleteஅக்கா ஆருமே பார்சல் கேக்கலையா ...அஞ்சு அக்கக்கும் கிரி அக்கக்கும் பார்சல் ... ,,,
குருவே அப்புறியே ஜெய் அண்ணாக்கு பிறந்த நாளுக்கு பரிசா கொடுப்பும் ,,,
Ha ha ha... I cant control my laughter... :))
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
கொட்டும் மழைக்காலம்.. உப்பு விற்கப் போனேன்ன்ன்ன்..

ReplyDeleteகாத்தடிக்கும் நேரம்... மாவு விற்கப்போனேன்ன்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நடந்தவை யாவும் நடந்தவை தானே:))... சொந்தக் கதை சோகக் கதை என்னோட போகட்டும்...:)).
சரி ஆரு வந்திருக்கிறாக எனப் பார்ப்பம்:)...
விச்சு said... 71
ReplyDeleteதேம்ஸில் குதிக்கப்போன உங்களைத்திரும்பவும் அழைத்த அந்த ஆள் யாரு? நிச்சயம் ஆயுள் தண்டனைதான் அவருக்கு.///
வாங்கோ விச்சு வாங்கோ...
அவ்வ்வ்வ்வ்... என்ன ஒரு அக்கறை:)).. இந்த எதிர்ப்பாலாரே இப்பூடித்தான்:)..
ஆஆஆ.. அதானே அவருக்கு ஆயுள் தண்டனை இல்ல:)) தேம்ஸ்ல தள்ளப்போறேன்ன் நான்:)).. என்னைக் கூப்பிட்டிருக்காட்டில்.. இப்பூடியெல்லாம் நான் புலம்பியிருப்பேனோ:)).. சே....
உங்கட பதிவை இப்ப வந்து இன்னொருக்கா வாசிச்சன் அதிரா.சிரிப்புத்தா வருது.’செய்...அல்லது செத்துமடி’நல்லாவே காந்தித்தாத்தா சொன்ன வார்த்தை உங்கட முயற்சிக்கு உறுதுணையா இருந்திருக்கு.ஒவ்வொரு சோகத்திலயும் விடாம அடுத்த கலர்ல முழுகி எழும்பி....அப்பாடி...இதுதான் அதிரா !
ReplyDeleteஅதுசரி உந்த ’விச்சு’க்கிழவருக்கு வர வர வால் வளருதுபோல அதிரா...அவரின்ர ஊர்ல என்ன ஆறு ஃபேமஸ் எண்டு கேட்டு வையுங்கோ !
மாலை வணக்கம் அதிரா!இதெல்லாம் தேவையா?நீங்களும் டென்ஷனாகி எங்களையும்................சரி விடுங்கோ.ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி எண்டிறது சும்மா பஞ்ச் டயலாக்!கடையில வாங்குங்கோ!நான் தான் இப்புடிச் செய்தனான் எண்டு சும்மா,செய்முறைய மட்டும்(ஆற்றையும் பதிவில) கடன் வாங்கி உங்கட "உரை"நடையில எழுதுங்கோ!(கொப்பி பேஸ்ட் பதிவு மாதிரி)ஹ!ஹ!ஹா!!!!!!(இந்தச் சாதனைக்கு சப்போட் வேற,ஹி!ஹி!ஹீ!!!)///// தண்ணியில வலது காலை:) எடுத்து வச்சேனா:)...////அதுக்கும் வலது கால் தான்!!!!!!!!!!
ReplyDeleteஹேமா said...அதுசரி உந்த ’விச்சு’க்கிழவருக்கு வர வர வால் வளருதுபோல அதிரா...அவரின்ர ஊர்ல என்ன ஆறு ஃபேமஸ் எண்டு கேட்டு வையுங்கோ !// எங்க ஊர்ல ஆறு ,ஏழு, எட்டு எல்லாம் ஓடுது. தண்ணிதான் இல்லை.
ReplyDeleteவிச்சு said... 72
ReplyDeleteஇப்படி பாட்டைக்கேட்டே திருந்தும் கூட்டம் இன்னும் இருக்கிறதா?//
எங்கட மக்கள்ஸ் எல்லோரும் ஓல்ரெடி திருந்தித்தானே இருக்கினம்:)).
//உன்னால் முடியும் டம்பி டம்பிஈஈஈ...:))..
இது டம்பிக்குதான! உங்களுக்கென்ன வந்துச்சு. திரும்பவும் தேம்ஸ்க்கு போங்க.///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
விச்சு said... 73
ReplyDelete///
நாளைக்கும் கடல்பாசி இருக்கும். அதைச் செஞ்சு போட்டோ எடுத்து போட நான் இருக்க மாட்டேன். இதையும் சேர்த்திருக்கலாம்.////
இதில வரும் நான் என்பது நிங்களோ? இல்ல நானோ?:)) அவ்வ்வ்வ்வ்:).
விச்சு said... 74
ReplyDeleteதிரும்பவும் போட்டோ எடுத்து போடுவீங்களா...
எல்லோரும் ஓடிடுங்க.///
விரைவில் வர இருக்கிறது.. அதிராவின் அகர் அகர்.. புதிய வடிவம்:)).
மியாவும் நன்றி விச்சு.
///ammulu said... 76
ReplyDeleteஅதிரா மனம் தளராமல் இன்னுமொரு முறை கடையில பார்த்து வாங்குங்கோ//
வாங்கோ அம்முலு வாங்கோ..
வாங்கிட்டேனெல்லோ:)).. விரைவில் வெளிவரும் கொஞ்சம் பொறுங்கோ...
என் இப்போதைய:)சோகம் மாறட்டும்:)).
ammulu said... 78
// நமக்கு எது தேவையோ, அதைப் பெற முயற்சி செய்வோம், இல்லையேல் விட்டுவிடத் தயாராவோம், ஏனெனில் நமக்குத் தேவை “நிம்மதி”//
அப்போ அகர் அகர் செய்யமாட்டீங்களா??///
தலைக்கு மேல வெள்ளம் சாண் ஏறி என்ன முழம் ஏறியென்ன?:)).
மியாவும் நன்றி அம்முலு.
//கலை said... 79
ReplyDeleteஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ குருவே எப்படி இக்குரிங்க ....//
ஆஆஆஆ.... எங்கயோ கேட்ட குரல்.. என் ”காணாமல் போன”:) சிஷ்யையின் குரல் போல இருக்கே:))...
ஆஅ கலை வாங்கோ வாங்கோ.. ஏன் ஜெயண்ணாவை வாழ்த்த வரவில்லை:)) அவர் ரொம்பக் கோபமாக இருந்தார்:)... பிங் கலர் சுடிதார் கான்சல்ட்..:).
இப்போ நலமோ கலை?.. இனி அடிக்கடி வாங்கோ... மியாவும் நன்றி.
Sangeetha Nambi said... 81

ReplyDeleteHa ha ha... I cant control my laughter... :))//
வாங்கோ சங்கீதா.. வாங்கோ... மியாவும் நன்றி.
ஹேமா said... 84
ReplyDelete.ஒவ்வொரு சோகத்திலயும் விடாம அடுத்த கலர்ல முழுகி எழும்பி....அப்பாடி...இதுதான் அதிரா !///
நான் அழுத கண்ணீரும்.. என் கண்:) அழுத கண்ணீரும்.. ஆங்கிலக் கால்வாய் வழியோடி... அதில ... பலர் குளிக்க உதவியதாம்ம்:)).
ஹேமா said... 84
ReplyDeleteஅதுசரி உந்த ’விச்சு’க்கிழவருக்கு வர வர வால் வளருதுபோல அதிரா...அவரின்ர ஊர்ல என்ன ஆறு ஃபேமஸ் எண்டு கேட்டு வையுங்கோ !///
உஸ்ஸ்ஸ்ஸ் ஹேமா... “ஒரு யூத்” ஐப் பார்த்து... கி....:) எனச் சொல்லலாமோ?:)) அதுவும் இப்பூடி என் பக்கத்தில?:)) அவரின் இமேஜ் டமேஜ் ஆகிடாது?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
காதைக் கொண்டுவாங்கோ ஹேமா... உண்மையாவே வால் வளருதோ? பார்த்தனீங்களோ?:)) ஒருவேளை அவருக்குள் இருக்கும் மிருகத்தின் வாலா இருக்குமோ?:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்.. நானே என் சோகத்தில இருந்து நிமிர முடியாமல்.... அகர் அகர் எனப் புலம்பிக்கொண்டிருக்கிறன்...:))...
வாங்கோ யோகா அண்ணன்...
ReplyDelete//
Yoga.S. said... 85
மாலை வணக்கம் அதிரா!இதெல்லாம் தேவையா?நீங்களும் டென்ஷனாகி எங்களையும்................சரி விடுங்கோ.ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி எண்டிறது சும்மா பஞ்ச் டயலாக்!கடையில வாங்குங்கோ!நான் தான் இப்புடிச் செய்தனான் எண்டு சும்மா,செய்முறைய மட்டும்(ஆற்றையும் பதிவில) கடன் வாங்கி உங்கட "உரை"நடையில எழுதுங்கோ!(கொப்பி பேஸ்ட் பதிவு மாதிரி///
ஹா..ஹா..ஹா.. உந்த ஐடியாவை வேளைக்குச் சொல்லியிருக்கலாமெல்லோ யோகா அண்ணன்:)).. ச்சும்மா வெளுத்து வாங்கியிருப்பன்... சரி விடுங்கோ... முடிஞ்சது முடிஞ்சதுதானே:)) இனி எப்பவவது பயன்படும்:)).
//தண்ணியில வலது காலை:) எடுத்து வச்சேனா:)...////அதுக்கும் வலது கால் தான்!!!!!!!!!!///
தற்கொலை பண்ணப் போகேக்கை தமனா.. மேக்கப் போட்டவ எல்லோ?:) அப்பூடித்தான் பழக்க தோஷம்:)) நானும் வலது காலை எடுத்து வச்சேன்ன்.. :))... போகிற காரியம் நல்லபடி முடியட்டும் என:)) ஆனா அது பிழைச்சுப்போச்ச்ச்ச்ச்ச்ச்:)).
மிக்க நன்றி யோகா அண்ணன்.
விச்சு said... 86
ReplyDeleteஹேமா said...அதுசரி உந்த ’விச்சு’க்கிழவருக்கு வர வர வால் வளருதுபோல அதிரா...அவரின்ர ஊர்ல என்ன ஆறு ஃபேமஸ் எண்டு கேட்டு வையுங்கோ !// எங்க ஊர்ல ஆறு ,ஏழு, எட்டு எல்லாம் ஓடுது. தண்ணிதான் இல்லை.
////
என்னாது தண்ணி இல்லையோ?:)) அவ்வ்வ்வ்:)) ஓடவேண்டியது ஓடாமல்... என்னவோ எல்லாம் ஓடுதே:))...
வணக்கம் அக்கா! கும்புடுறேனுங்கோ! பதிவைப் படிச்சு, சிரி சிரி எண்டு சிரிச்சேன்! அவ்வளவு நகைச்சுவை! ஆவ்வ்வ்வ்வ்வ்!
ReplyDelete“என்னோட சோகம் உங்களுக்கு சிரிப்பா இருக்கோ?” எண்டு சொல்லப் போயினமாக்கும்??:)))
குறிப்பு - நிரூபன் தான் சொன்னவன் - பெண் பதிவர்களின் ப்ளாக்கில் கொமெண்ட்ஸ் போடும் போது, அடக்க ஒடுக்கமா அக்கா எண்டு சொல்லட்டாம்!:))
பானையிலே சோறிருந்தால் பூனைகளும்
ReplyDeleteசொந்தமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..//////
அச்சோ, இந்தப் பாட்டில சிவாஜி மாமாவைப் பார்க்க பயமா இருக்கு! நிறைய எக்ஸ்பிரஷன் காட்டுறார்! இதையெல்லாம் எப்படித்தான் ரசிக்கினமோ தெரியேலை!
அம்மம்மாஆஆஆஆஆஆஆஅ பாருங்கோ சுவீட் 16 ல இருக்கிற ஆக்கள் ஹாரிஸ் ஜெயராஜை ரசிக்க மாட்டினமாம்!
ஆனா அடுத்தவங்க நம்மளவிட சூப்பராச் செய்யும்போது சோகம் வராமல் இருக்குமோ என்ன சொல்லுங்க?:)).. ////////
ReplyDeleteமுருகா, இது உனக்கே அடுக்குமா? உன்னுடைய பக்தை சொல்ற பொய்யைப் பாருங்கோ! நம்மை விட இன்னொருவர் சிறப்பாகச் செய்யும் போது, சோகம் வருமாம்!
நோஓஓஓஓஓ, பொறா ஆமை எல்லோ வரும்? நாட்டாமை தீர்ப்பை மாத்து :))
அட 100 வதை தொட்டுடோம்ல! - நான் கமெண்ட்டைச் சொன்னேன் :))))
ReplyDeleteஎப்புடீ, உடனேயே செய்தோம்ல?

ReplyDelete“நாகபாம்பு படமெடுக்குதென, நாக்குழிப்புழுவும் படமெடுக்க வெளிக்கிட்டதாம்ம்”:))) . //////
ReplyDeleteஹா ஹா ஹா இதென்ன புதுஷாக்கிடக்கு? பூஸானந்தா சொன்னதோ?
காந்தித் தாத்தா என்ன சொன்னார்?:: என்ன சொன்னார்.... “செய் அல்லது செத்துமடி” எனச் சொன்னார்... /////
ReplyDeleteஸப்பாஆஆஆஆஆஆ முடியல! அஹிம்சையைப் போதித்த காந்தித்தாத்தா எப்படி இதனைச் சொல்லியிருக்க முடியும்?
இதைச் சொன்னவர் ஹிட்லர் என்று நினைக்கிறேன்!!!!
ஒரு பூனைப்படம் போட்டு அஞ்சலி நடக்கும்:) அடுத்த நாளே மறந்திடுவினம்:)..///////////

ReplyDeleteமக்களே பாருங்கள் எங்கள் அபிமான நடிகை, அஞ்சலியை அது இது எண்டு ஏகவசனத்தில் சொல்லிப்போட்டினம், லண்டன் ஆக்கள்!
அஞ்சலி நடப்பா என்றெல்லோ சொல்லோணும்??
பாருங்கோ, எவ்வளவு ஸ்வீட்டா, நைஸா சிரிக்கிறா எண்டு! உவாவைப் போய், நடக்கும் எண்டு சொல்லலாமோ? :)))
நாந்தான் கடைசியா இருக்கோனும்....
ReplyDeleteநாளைக்கு வலையுலகம் எங்கும் ஒரு கூட்டம் நடக்கும்:) பின்பு .. ஒரு பூனைப்படம் போட்டு அஞ்சலி நடக்கும்:) அடுத்த நாளே மறந்திடுவினம்:)..
/////////////////////////////
யாரு சொன்னா வலையுலகத்துல கூட்டமா ? அப்பிடி ஒண்டு என்ன மீறி நடந்திடுமா என்ன... பிச்சுபுடுவன் பிச்சு
ஆமா சோகம் சோகம் என்னு படம் படமா காட்டினீங்களே அது என்னா ஐட்டம்.... ஏதாவது காக்கா இல்லட்டி எலிக சாகிறத்துக்கு வைக்கிறதா
ReplyDelete:::)))))
கடைசியா சொன்ன புள்ளி மேட்டர் எனக்கும் ஓK
ReplyDeleteஅவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்திடாதீங்கோ...அப்புறமா பீல் பன்னுவீங்க
//மாத்தியோசி - மணி said... 97
ReplyDelete//
ஆஆ ஒரு காலத்தில எங்கேயோ கேட்ட குரலா இருக்கே..:)).. வாங்கோ.. வாங்கோ..
//வணக்கம் அக்கா! கும்புடுறேனுங்கோ!//
“நான் எதையும் தாங்குவேன் அன்புக்காக...
நான் இதையும் தாங்குவேன்ன் என் பக்கம் பின்னூட்டம் போடுவோருக்காக”...
சே.. பிபிசிதான் சிட்டு.. வேஷன் சோங் போட்டுக் கொல்லீனம் எனப் பார்த்தால் இப்போ புரட்சி எஃப் எம்முமோ:))... கொஞ்சம் நில்லுங்க சைலண்ட் மோட்ல போட்டிட்டு வாறேன்ன்:).
//“என்னோட சோகம் உங்களுக்கு சிரிப்பா இருக்கோ?” எண்டு சொல்லப் போயினமாக்கும்??:)))//
இல்ல நாங்க “இப்படி..” மாத்தி யோசிப்பமில்ல:))...
“என்னோட சோகம்.. உங்களுக்கெல்லாம் புரியவா போகுது”:))
//குறிப்பு - நிரூபன் தான் சொன்னவன் - பெண் பதிவர்களின் ப்ளாக்கில் கொமெண்ட்ஸ் போடும் போது, அடக்க ஒடுக்கமா அக்கா எண்டு சொல்லட்டாம்!:))//
ஏன் நிரூபனுக்குத் “தன்னம்பிக்கையே” இல்லையாமோ?:)).. அக்கா எனச் சொல்லிட்டால் பாதுகாப்பென நினைக்கிறாரோ அவர்:))... எங்கிட்டயேவா?:).
//மாத்தியோசி - மணி said... 98
ReplyDeleteஅச்சோ, இந்தப் பாட்டில சிவாஜி மாமாவைப் பார்க்க பயமா இருக்கு! நிறைய எக்ஸ்பிரஷன் காட்டுறார்! இதையெல்லாம் எப்படித்தான் ரசிக்கினமோ தெரியேலை!//
சிலை என்றால் அது சிலைதான்..
வெறும் கல் என்றால் அது கல்தான்..
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”:).
//அம்மம்மாஆஆஆஆஆஆஆஅ பாருங்கோ சுவீட் 16 ல இருக்கிற ஆக்கள் ஹாரிஸ் ஜெயராஜை ரசிக்க மாட்டினமாம்!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆர் சொன்னது ரசிக்க மாட்டமென:)).. குப்பை மேட்டினிலே கொன்றெம்மைப் புதைத்தாலும் குரல் கொடுப்போம்ம்.............. க்கே:))
மாத்தியோசி - மணி said... 99
ReplyDelete//! நம்மை விட இன்னொருவர் சிறப்பாகச் செய்யும் போது, சோகம் வருமாம்!
நோஓஓஓஓஓ, பொறா ஆமை எல்லோ வரும்? நாட்டாமை தீர்ப்பை மாத்து :))
நோஓஓஓஒ.. தீர்ப்பை எல்லாம் மாத்த வேண்டாம்ம்.. எந்தத் தீர்ப்பாயினும்.. எடுத்தபின் மாத்துறது அழகல்ல:) ஐ மீன் நாட்டாமைக்கு:)... அதனால பொறாமையைப் பிரிச்சுப் பாருங்கோ.. ஆருக்கு வருமென:))
பொர்ர்ர்ர்ர்ர் + ஆண்மை = பொறாமை:))
ஹையோ கதிரமலைக் கந்தா என்னைக் காப்பாத்தூஊஊஊஊஊங்கோஓஓஓஓஓஓஓ...:))
மாத்தியோசி - மணி said... 100
ReplyDeleteஅட 100 வதை தொட்டுடோம்ல! - நான் கமெண்ட்டைச் சொன்னேன் :))))
வாழ்த்துக்கள்!!! 100 என்ன?:) நீங்க நூறுக்கு மேலயும் தொடுவீங்க:)) ஹையோ... நானும் கமெண்ட்டைத்தான் சொன்னேனாக்கும்..க்கும்..க்கும்:).. இது எக்க்கோ:):))
மாத்தியோசி - மணி said... 101
எப்புடீ, உடனேயே செய்தோம்ல?
வெரி நைஸ்!! இந்தக் காலத்தில, இப்பூடி நம்மளுக்கு நாங்களே செய்து போட்டால்தான் உண்டு.... காலம் ரொம்பக் கெட்டுப் போச்சுப் பாருங்கோ:)).
//மாத்தியோசி - மணி said... 102
“நாகபாம்பு படமெடுக்குதென, நாக்குழிப்புழுவும் படமெடுக்க வெளிக்கிட்டதாம்ம்”:))) . //////
ஹா ஹா ஹா இதென்ன புதுஷாக்கிடக்கு? பூஸானந்தா சொன்னதோ?//
ஓம்ம்ம்.. புலாலியூர் பூஸானந்தா:)).
மாத்தியோசி - மணி said... 103
ReplyDeleteகாந்தித் தாத்தா என்ன சொன்னார்?:: என்ன சொன்னார்.... “செய் அல்லது செத்துமடி” எனச் சொன்னார்... /////
இதைச் சொன்னவர் ஹிட்லர் என்று நினைக்கிறேன்!!!!
ஆஆஆஅ.. ஒருவேளை அது(ஹிட்லர்:))காந்தித் தாத்தாவின் இளமைப் பெயராக இருக்கலாம்:)):)).
மாத்தியோசி - மணி said... 104
ReplyDeleteமக்களே பாருங்கள் எங்கள் அபிமான நடிகை, அஞ்சலியை அது இது எண்டு ஏகவசனத்தில் சொல்லிப்போட்டினம், லண்டன் ஆக்கள்!
இது எப்ப தொடக்கமாக்கும்:)).. அஞ்சலி “அபிமான நடிகையாக” மாறினவ?:)):))..... அடிக்கடி ஆட்களை மாத்துவினமோ?:)).. நிரூபனின் பெயரைப்போல:))..
ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்பு:)).. படிச்சதும் கிழிச்சு மணியம் கஃபே சாம்பிராணித்தட்டில போட்டுக் கொழுத்திடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. மோட்சம் கிடைக்கும்:)..
//பாருங்கோ, எவ்வளவு ஸ்வீட்டா, நைஸா சிரிக்கிறா எண்டு!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் ஹை ஸ்கூல் படத்தை எப்பூடி நீங்க பப்ளிக்கில போடலாம்ம்ம்ம்:)))).... இதைப் பார்த்தால் அம்மம்மா இனி புளொக் எழுதவும் விடமாட்டா:))...
மியாவும் நன்றி அனைத்துக்கும்...
//சிட்டுக்குருவி said... 105
ReplyDeleteநாந்தான் கடைசியா இருக்கோனும்....//
வாங்கோ ஜிட்டு வாங்கோ....
ஓமோம் நீங்கதான் கடேசிப் பெட்டியில ஏறியிருக்கிறீங்க:)) அதாவது கார்ட்:) பெட்டில(கொம்பார்ட்மெண்ட்:))
//யாரு சொன்னா வலையுலகத்துல கூட்டமா ? அப்பிடி ஒண்டு என்ன மீறி நடந்திடுமா என்ன... பிச்சுபுடுவன் பிச்சு
//
அமைதி.. அமைதி:)) இன்னும் நான் குதிக்கவே இல்லை:)) குதிக்கும்போது உங்களுக்கு எஸ் எம் எஸ் அனுப்பிடுறேன்ன்:))..
சிட்டுக்குருவி said... 106
ReplyDeleteஆமா சோகம் சோகம் என்னு படம் படமா காட்டினீங்களே அது என்னா ஐட்டம்.... ஏதாவது காக்கா இல்லட்டி எலிக சாகிறத்துக்கு வைக்கிறதா///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அவ்ளோ சீப்பா நினைச்சிட்டீங்களோ?:) நாங்க இலக்கு வச்சால்ல்.. காகம், எலிக்கெல்லாம் வைக்க மாட்டோம்ம். பெரிய புள்ளிகளுக்குத்தான் வைப்போமாக்கும்:)..க்கும்..க்கும்:))).. ஓடாதீங்க ஜிட்டு:)), இன்னும் பின்னூட்டம் இருக்கில்ல:))
சிட்டுக்குருவி said... 107
ReplyDeleteகடைசியா சொன்ன புள்ளி மேட்டர் எனக்கும் ஓK
அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்திடாதீங்கோ...அப்புறமா பீல் பன்னுவீங்க
அது 100 வீதமும் உண்மைதான் ஜிட்டு..., ஆனாலும் அனைத்தையும் தாண்டி விதி என்றும் ஒன்றிருக்குதெல்லோ... எழுதிய எழுத்தை மாற்றிட முடியுமோ?:).
மியாவும் நன்றி ஜிட்டு... கார்ட் பெட்டி வசதியா இருக்கோ?:).
அப்பனே விநாயகா... ஆனைமுகத்தானே!! திருப்பரங் குன்றத்து முருகப்பெருமானுக்கு முன் பிறந்தவரே... கதிரமலைக் கந்தனின் வன் அண்ட் ஒன்லி ப்பிரதரே.... நாளைக்கு உங்களுக்காக நன் நாளில்...


ReplyDeleteஎன் பக்கம் வருகைதரும் அனைவருக்கும், நல்லாசி வழங்கி... காத்தருளுங்கோ.... என்னையும்....தேன்ன்ன்ன்ன்.....
உங்களுக்கும்,உங்க குடும்பத்தவர்களுக்கும் விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள் அதிரா.
ReplyDeleteவிநாயகர் அருள் கிடைக்கப்பிரார்த்திக்கிறேன்.
வினை தீர்க்கும் விநாயகன் தாள் பணிந்து அருள் பெறுவோம்!
ReplyDeleteஇது.. சைனா க்ராஸ் இல்லையே அதீஸ்!! கர்ர் கடைக்காரரிட்ட கேட்டு இருக்கலாம்.
ReplyDeleteஇது.. சைனா க்ராஸ் இல்லையே அதீஸ்!! கர்ர் கடைக்காரரிட்ட கேட்டு இருக்கலாம்.
ReplyDeleteஅதீஸ் நீங்க கணேஷ் ஜிக்கு செய்த கொழுக்கட்டை எல்லாம் போடுங்க
ReplyDeleteநான் பார்க்கணும் .இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்
ஆஆஆஆ... அம்முலு.. மிக்க நன்றி. உங்கள் குடும்பத்துக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்...
ReplyDeleteரீவியில ஸ்பெஷல் பட்டிமன்றம் போகுது பார்க்க நேரமில்லாமல் இருக்கு:)) ஏதோ ஒருநாளுமே வீடு கூட்டாமல், குளிக்காமல் இருப்பதைபோல:)) இண்டைக்குத்தான் பெரிசா அடிச்சுப் பிடிச்சு செய்வதைப்போல:) ஒரு பீலிங்ஸ்ஸ் வரப்பார்க்குது எனக்கு:))
யோகா அண்ணன்... உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய வாழ்த்துக்கள்... இன்று விநாயகரின் பிறந்ததினமெல்லோ?:)).. ஆகஸ்ட் செப்டெம்பரில நிறையப்பேர் பிறந்திருக்கினம்போல:)
ReplyDeleteஇமா said... 120
ReplyDeleteஇது.. சைனா க்ராஸ் இல்லையே அதீஸ்!! கர்ர் கடைக்காரரிட்ட கேட்டு இருக்கலாம்.
வாங்கோ இமா வாங்கோ..
“இருக்குமிடத்தை விட்டு, இல்லா இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாரே... ஞானத் தங்கமே...”
என்றாகிப்போச்சு என் நிலைமை.
இங்கு பக்கத்திலயே அகரகர் இருந்திருக்கு, நான் கனடாவரை தேடிப்போய் வாங்கினேனே.. அது ஏதோ பாஸ்ட்டா வகைதான் போல, அஞ்சு சொன்னதைப்போல.
இப்போ ஒரிஜினல் வாங்கிட்டேன்ன்ன்.. தும்பு முட்டாய்போல பஞ்சுமாதிரி பாரமே இல்லாமல் இருக்கு... நான் முன்பு வாங்கியது பாரம்...
இது சரி வந்தால்ல்ல்.
இனி எங்கள் வீட்டில் எல்லா நாளும் அகரகர்....
சே..சே..
பிபிசியால என் நிம்மதி போச்சேஏஏ:)).
மிக்க நன்றி இமா.
angelin said... 122
ReplyDeleteஅதீஸ் நீங்க கணேஷ் ஜிக்கு செய்த கொழுக்கட்டை எல்லாம் போடுங்க
நான் பார்க்கணும் .இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்
அவ்வ்வ்வ்வ்வ்:)) அஜ்சு இப்பூடி என்னைச் சோதிக்கப்பூடா:)).. ஏற்கனவே நொந்து நூடில்ஸாகிப்போய் இருக்கிறேன்:)).. இப்போ கொழுக்கட்டையா?:))...
அவருக்கு ஐ மீன் விநாயகருக்கு அதுதான் பிடிக்குமாம், ஆனா நான் அது செய்யவில்லை, வடை அண்ட் சக்கரை அமுதுதேன்ன்ன்ன்:))..
படம் போடுறேன்ன். சிரிக்கப்பூடா:))..
சரி நேரமாசூஊஊஊஊ.. சீயா மீயாவ்வ்வ்வ்வ்வ்:)).
ஆஆஆஆ யோகா அண்ணா இங்கிருக்காரா ..
ReplyDeleteஎங்கே என் பங்கு கொழுக்கட்டை மற்றும் இதர பலகாரமெல்லாம் ??
படம் போடுறேன்ன். சிரிக்கப்பூடா:))..//
ReplyDeleteok ..sirikka matten :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 4 .....5:).
ReplyDeleteம்.. இப்ப வாங்கினதுதான் சரி. சரியா வரும்.
ReplyDeleteமுதல் வாங்கினதை கொஞ்சம் ஸ்பைசியாக பாஸ்தா செய்து சாப்பிடுங்க, யம்ம்ம்.
நன்றி இமா, பின்பு செய்ததாக நினைவில்லை:(.
Deleteமிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ
ReplyDeleteவாங்கோ வாங்கோ மிக்க நன்றி.
Deleteஇதனை முன்னமேயே படித்திருக்கிறேன் (சென்ற வருடத்தில்). எனக்கு அகர் அகர் பிடிக்காது. நான் டிரெடிஷனன் ஐட்டங்களைத் தவிர எதையும் சாப்பிடமாட்டேன். நீங்கள் அகர் அகர் செய்வதற்குப் பதில், சேமியா பாயசம் செய்து சாப்பிட்டிருக்கலாம்.
ReplyDeleteஆஆஆஆஆஆ கண்டுபிடிச்சிட்டேன் நெ.தமிழன் வாங்கோ வாங்கோ... நாம் நினைப்பது போலத்தான் அனைத்தும் நடக்கும் என்றில்லை.. கோடு போட்டு வாழ்வதென்பது மிக மிகக் கஸ்டமெல்லோ:).. பாருங்கோ இன்று நீங்களே ஒரு டிஸ் ஐ அப்படியே சாப்பிட்டு விட்டீங்க ஹா ஹா ஹா...
Deleteசேமியாப் பாயாசம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ஆனா அடுத்தவர்கள் செய்து தருவது மட்டுமே:).. ஏனெனில் நான் அதிக சீனி, அதிக பால் விட மாட்டேன் உடம்புக்கு கெடுதி என, அதனாலேயே சுவை குறைவாகிடும்:)..
மிக்க நன்றிகள்.