நல்வரவு_()_


Thursday 7 November 2019

என் நெடுநாள் ஆசை:)

அம்சவல்லி:)
நான் பாருங்கோ இப்போ ரொம்ப உஷாராகிட்டேன்:), அதனால பூஸோ கொக்கோ?:), இனி எந்தக் கோயில் எனச் சொல்ல மாட்டேனாக்கும், ஆராவது போக விரும்பினால் வட்சப்பில கேளுங்கோ அட்ரஸ் தருவேன்:))... ஹா ஹா ஹா.

இந்த அம்மன் கோயிலுக்கு ஒரு க்குளூ மட்டும் தருவேன், இது நியூயோர்க்கில், கனடாப் பக்கமாக இருக்கு. கனடாவிலிருந்து போகும் போது போர்டரைத்தாண்டியே போகோணும், அதில் பாஸ்போர்ட் காட்டோணும்.

இக்கோயில் ஆரம்பிச்சு சில வருடங்கள்தான் என நினைக்கிறேன், அப்போ எனக்குப் போகோணும் என சரியான ஆசை, எனக்கு அம்மன் மற்றும் சிவன் கோயில் எனில் ஏனோ ஒரு தனிப்பட்ட லவ்:). ஒவ்வொரு தடவையும் போகக்கிடைக்கவில்லை, இம்முறைதான் தரிசனம் கிடைத்தது.



மேலிருக்கும் வீடியோக்கள், கனடாவில் இருந்து கோயிலை நோக்கிப் போனபோது, எங்கள் குடும்பம் எல்லோரும் போனோம், பிள்ளைகள் எல்லாம் ஒன்றாக ஒரு வாகனத்தில் ஏறினார்கள், நாங்கள்[லேடீஸ்] ஏறியது அண்ணனின் வாகனத்தில்:)).. அப்போ வீடியோ எடுக்கும்போது அண்ணனிடம் சொன்னேன், அஞ்சுவுக்கு இந்த வீடியோக் காட்டுவேன் அவ 60+ இல் இருப்பதனால், பழையபாடல்கள்தான் பிடிக்குமாம் எனச் சொன்னா, அதனால ஏதும் பழைய பாட்டு இருந்தா போடுங்கோ என, உடனே அண்ணன் போட்டார் பாருங்கோ இந்தப் பாட்டை:)).. அஞ்சூஊஊஉ பாட்டுக் கேய்க்குதா?:).




இப்போ அமெரிக்க எல்லைக்குள் நுழையும் இடம் வந்திட்டுது..



இதில் மெதுவாக போய்ப் போய், பாஸ்போர்ட்டைக் காட்டினால், விடுவார்கள் உள்ளே..


===குட்டி இடைவேளை===
என்னிடம் மேத்தாவின் கனவுக்குதிரைகள் கவிதைப் புத்தகம் இருகுதெனச் சொன்னபோது, அதில் சிலதை இடைக்கிடை இங்கு பகிரலாமே என ஸ்ரீராம் சொன்னது மனதில் நினைவாக இருந்தது, ஆனா அதில் பெரும்பாலும் இருப்பவை அரசியல் சம்பந்தமான கவிதைகளாக இருக்கு, இது மட்டும் கொஞ்சம் ஓகே என்பதனால் போடுகிறேன்...
* உன் பெயரைச் சொன்னேன் என்னைக் கவிஞன் என்றார்கள்
உன் ஊரைச் சொன்னேன் என்னைக் காதலன் என்றார்கள்
நம் உறவைச் சொன்னேன்! என்னை நாட்டு வைத்தியரிடம் காட்டச் சொன்னார்கள்!!!.

*என் இதயத்தின் விலாசம் நீ!
என் வீட்டு விலாசத்தையா விசாரித்துக் கொண்டிருக்கிறாய்?

*தீப்பெட்டியைத் தேடி எடுக்கிறாய்
வீட்டில் விளக்கேற்றவா?
என்னை வெளியேற்றவா?

*வெள்ளைத் தாளாய் இருந்தது என் இதயம்
எதை எதையோ நீதான் எழுதினாய்
ஒருநாள் எழுதியதை எல்லாம் நீயே அழித்துவிட்டாய்
அழித்தது சரி! எழுதியது நீ என்பதால் அழித்தது சரி!
இதயத்தைக் கிழித்தது சரியா?
==============================
ஆஆஆ... கோயிலுக்கு வந்தாச்சு, முகப்பிலே வரவேற்கும் பிள்ளையார் இவர், பாருங்கோ சிதறு தேங்காய் அடிச்சு தேடுவாரில்லாமல் இருக்கு, எனக்கு பொறுக்கிச் சாப்பிட விருப்பம், எனக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் சப்ளை செய்து சாப்பிடுவேனாக்கும்:)).. ஒளவையார் என்ன சொல்லியிருக்கிறா?:), ஒரு குட்டித் துண்டென்றாலும் அனைவருக்கும் குடுத்துச் சாப்பிடோணுமாம்:)).. ஓசித் தேங்காயைக் குடுத்துச் சாப்பிடுவதாகத்தானே நினைக்கிறீங்க:)) கர்ர்ர்ர்ர்:))



இப்படித்தான் பாருங்கோ கனடாப் பிள்ளையார் கோயில் வாசல்லயும் தேங்காய் இருந்துது, ஓடிப்போய் எடுத்து வந்தேன், அங்கு நின்ற ஒரு வெள்ளையர், அவர் கோயிலில் தொண்டு செய்பவர்போல இருக்கு, கேட்டார் கான் ஐ காவ் சம் என ஹா ஹா ஹா நான் குடுக்கவில்லை.[அவர் வேணுமெண்டெல்லோ கேட்டவர்].

இக்கோயில் பற்றிச் சொல்லி முடியாது, இன்னும் கோயில் கட்டப்படவில்லை[வெளிப்பகுதி], ஆனால் விக்கிரகங்கள் எல்லாம் அழகழகாக எடுத்து வைத்திருக்கிறார்கள். இதன் காணியோ எத்தனையோ ஏக்கர் போல இருக்கு.. தோட்டம் முழுவதும் பச்சை அப்பிள் மரங்கள், காய்த்துக் குலுங்கின, ஆசைக்கு பிடுங்கி நல்லாச் சாப்பிட்டேன்ன்:))... 

இங்கு படங்கள் அதிகமாக இருப்பதனால் மிகுதி அடுத்த பகுதியில் விரைவில் வெளிவரும்:).
⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⤧⤧⤧⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯

இது இங்கு இப்போ போன மாதம் எடுத்தது, காய்கள் காய்த்துக் குலுங்குது.. இக்காய்கள் வந்தபின்னர் இலையுதிர்காலம் ஆரம்பமாகும்.


ஊசி இணைப்பு

ஊசிக் குறிப்பு..

இதன் அடுத்த பகுதியைக் காண இங்கே
================_()_===============

108 comments :

  1. Replies
    1. ஆஆஆ ட்றுத் வாங்கோ வாங்கோ.. ஹா ஹா ஹா அப்போ ஆயா அஞ்சுவுக்கா?:) ஹா ஹா ஹா சே சே கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போச்சு என்பினம்:) அது அஞ்சுவுக்குக் கரெக்ட்டாப் பொருந்தியிருக்கே:)).. ஹையோ அஞ்சுப்பிள்ளை இப்போ வேலைக் களைப்பில சயனிச்சுக்:) கொண்டிருப்பா:)) அதனால சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டு ஓடிடுவேன்:))

      Delete
  2. This video format is not supported.ன்னு வருது . ஹும்ம்ம்ம்

    ReplyDelete
  3. Replies
    1. அல்லோவ் மிஸ்டர் அஞ்சு வாங்கோ வாங்கோ:) நைட்டூஊ கொசுமெயிலை மட்டும் பார்த்து கொமெண்ட்ஸ் ஐப் பப்ளிஸ் பண்ணினேனா:)) 1ஸ்ட்டா வந்த ட்றுத்தின் கொமெண்ட் மிஸ்ஸாச்சூஊஊஊ.. ச்சோ ஆயா ரெடியாகிட்டா:)).. முகம் முட்டப் பவுண்டேசனை அள்ளி அப்பிக்கொண்டு நிக்கிறா:)), ஓவர் பவுண்டேசன் இந்தக் குளிருக்கு எதுக்கு ஆயா எனக் கேட்டேன் முறைக்கிறா:)).. சரி சரி அஞ்சுவுக்குத்தான் ஆயாவைப் பிடிக்குமே:)) அதனால தைரியமாக அனுப்பி வைக்கிறேன், அந்த ஒரு ஜோடிக் காப்பை அவ கையில போட்டுக் கூட்டுப் போங்கோ அஞ்சு:)).. ஆயா ஒரு நகைப் பிரியை:)) ஹா ஹா ஹா.

      Delete
  4. /இதில் மெதுவாக போய்ப் போய், பாஸ்போர்ட்டைக் காட்டினால், விடுவார்கள் உள்ளே..//ஏனாம் வேகமா பொய்  காட்டினா விடமாட்டங்களா :))

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வேகமாக எங்கே போவதாம்:)), அதிலயும் அவர்கள் கையைக் காட்டினால்தான் காரை மெதுவா உருட்டோணும்:)) ஹா ஹா ஹா.. கள்ளரைப் பிடிக்கப் போகினமாமாம்ம்:)) ஹையோ ஹையோ.

      Delete
  5. இந்த நேயர் விருப்பம் தெரியுமோ :) அதில் பலர் தனக்கு விருப்பமான பாடலை போடறதுக்கு தன நண்பர் பேரை சொல்லி டாடிகேட் மம்மிக்கெட் என்பார்களாம் :) அப்படி உங்க ஏஜுக்கு ஏற்ற பாட்டை என் பேர் சொல்லி கேட்டுக்கிட்டேங்களா  அம்ச எலி சேசே சமோசாவாலி ஹையோ ரிப்பீட்டடா டங் ஸ்லீப்பிங் /ஸ்லிப்பிங் அம்சவல்லி அதிராவ் 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இது டாடிகேட் இல்ல நண்பிகேட்:)).

      //அம்ச எலி சேசே சமோசாவாலி ஹையோ ரிப்பீட்டடா டங் ஸ்லீப்பிங் /ஸ்லிப்பிங் அம்சவல்லி அதிராவ் //
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) அது அம்ச எலி இல்ல அம்சவல்லியாக்கும்:)) அம்சவல்லி எனில் அமுதசுரபிமாதிரி அதிரா என அர்த்தம்:))

      Delete
    2. //அம்சவல்லி எனில் அமுதசுரபிமாதிரி // - டமிள் டி ன்னு சொல்றீங்க. அர்த்தம் மாத்திரம் சொல்லத் தெரியலை. அம்சம் என்பது சமஸ்கிருத ஹம்சத்தின் தமிழாக்கம். வல்லி என்றால் வேகமான, விரைவான என்று பொருள் கொண்டால், அன்னத்தைப் போன்று வேகமானவள் என்று அர்த்தம் வருமோ? (அம்சம் என்ற தனி வார்த்தைக்கு, பகுதி என்றும் அர்த்தம் உண்டு. அவ அம்சமா இருக்கா என்பதை நாம் 'அழகா இருக்கா' என்று புரிந்துகொள்கிறோம். ஆனா உண்மையில், 'அவ அன்னத்தைப் போன்று அழகா இருக்கா' என்றமாதிரிதான் அர்த்தம் வரும். ஆண்பிள்ளைகள், அம்சமா இருக்கான்னு யாரும் சொல்ல மாட்டாங்க.

      புரிந்ததா?

      Delete
    3. //டமிள் டி ன்னு சொல்றீங்க.//

      யா யா நெல்லைத்தமிழன் அதே அதே:)) ஹா ஹா ஹா ஒரு கல்லில 2 பலாப்பழங்கள்:).

      //வல்லி என்றால் வேகமான, விரைவான என்று பொருள் கொண்டால்,//
      ஓ இதன் அர்த்தம் இப்போதான் தெரியுது நன்றி நன்றி, அம்சம் எனில் அழகு எனத்தெரியும். யேஸ் ஒவ்வொரு அம்சமாக பார்த்தால் எனவும் சொல்லுவினம் அதாவது பகுதி, நீறு பூத்த நெருப்பாக இருந்தது இதெல்லாம் எனக்கு இப்போ நீங்க நீறைத்தட்டியதும் எல்லாம் புரியுது:)) ஹா ஹா ஹா.

      //'அவ அன்னத்தைப் போன்று அழகா இருக்கா///
      ஆவ்வ்வ்வ்வ் நான் சும்மாதான் மனம் போனபோக்கிலே அமுதசுரபி எனக் கோர்த்து விட்டேன், ஆனா அது கரெக்ட்டாப் பொருந்துதே:))..

      இதனாலதான் என் ஆத்துக்காரர்:) அடிக்கடி சொல்லுவார், அதிரா நீங்க சொல்வதெல்லாம் பலிக்குது.. அதனால எது சொன்னாலும் கவனமாச் சொல்லுங்கோ என ஹா ஹா ஹா:))..

      Delete
  6. ஹாஹாஹா ஊசி இணைப்பில் அந்த பூனையின் பெயர் என்னவா இருக்கும்னு ஒரு க்ளூ ப்ளீச் :)) எங்காத்துக்கார் பேர் மட்டும் வரப்படாதது :) ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன் 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நாங்க சேஃப் ஆ இருக்கோணுமெனில்.. இப்போதைக்கு மாட்டி விட முடிஞ்சது ட்றுத் நெ.தமிழன் ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா.

      Delete
  7. ஹாஹா :) ஆமா டீச்சர் மட்டுமா இல்லத்தரசிகள் டாக்டர்ஸும் தானே .
    //.[அவர் வேணுமெண்டெல்லோ கேட்டவர்].//
    ஹையோ ஹையோ நீங்க உருண்டு புரண்டு தேங்கா சில்லு எடுக்கறதை பார்த்து அவருக்கே சிப்பா வந்திருக்கும் அதான் வேணும்னே கேட்டிருக்கார் ஆனாலும் குடுத்து சாப்பிட்டிருக்கலாம் கர்ர்ர்ர் 

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆ அதுவும்தான் அஞ்சு.. டொக்டருக்கே மீ மருந்து சொல்லுவேன்:)), அடுத்து லோயரும் நாம்தான் ஹா ஹா ஹா...

      இல்ல அஞ்சு அவர் அந்தக் கோயில் தொண்டர் போல தெரிஞ்சார், வேஷ்டி கட்டிக்கொண்டு போனார் தெரியுமோ.. நான் காரில் ஏற முன் ஓடிப்போய்க் குனிஞ்சு எடுத்து வருவதைப் பார்த்ததும் அப்படிக் கேட்டுவிட்டுப் பலமாகச் சிரிச்சுக் கொண்டு போனார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  8. கர்ர்ர் அந்த கவிதைகளை டைப்பி போட்டிருக்கலாம் .ஆமா ஒரு டவுட் உங்களுக்கு நானே சொன்னாகூட அரசியல் புரியாதது அப்போ எப்படி மு மேத்தா எழுதினது அரசியல்னு புரிஞ்சது ???  

    ReplyDelete
    Replies
    1. என்ன எல்லோருக்கும் கண் பிரச்சனையோ? எனக்கு மொபைல்ல கூட படிக்க முடியுதே.. ரைப் பண்ணிப்போட்டால், என் எழுத்துப் போலாகிடுமோ என்றுதான் அப்படியே போட்டேன்.

      அரசியல்... புவஹா புவஹா:)) கேளுங்கோ.. ஒபாமா அங்கிள் பற்றிக் கேளுங்கோ... ட்றம்ப் அங்கிள் பற்றிக் கேளுங்கோ.. ஏன் என் பேவரிட் கிளிங்டன் அங்கிள் பற்றியும் கேளுங்கோ ஜொள்ளுவேன்:)) ஆனா பிரித்தானியா பற்றியோ இலங்கை பற்றியோ கேட்டிடக்குடா கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
  9. இங்கிருந்து அமேரிக்கா போய் தேங்காய் சாப்பிட்டதால் இனிமேல் நீங்க அம்சவல்லி அதிரா இல்லை தேங்காவல்லி அதிரா ஹ்ஹ்ஹா 

    ReplyDelete
    Replies
    1. அஞ்சூஊஊ ... 🤣 🤣 🤣 🤣 🤣

      Delete
    2. ஹா ஹா ஹா இங்கு கிடைக்கவில்லையே:) கிடைச்சிருந்தால் விட்டிருப்பேனோ:)).. மிக்க நன்றிகள் அஞ்சு.

      Delete
    3. @அம்முலு

      [im]https://i2.wp.com/www.jillbeck.net/wp-content/uploads/2016/01/angry-cat.jpg [/im]

      Delete
  10. ம்ம்ம், நான் தான் ஃபர்ஷ்டு வரப் போறேன்னு பார்த்தா அஞ்சு முந்தியாச்சு வழக்கம் போல! அம்சவல்லிஅதிரா முன்னாடியே இன்னிக்குப் பதிவுப் போடப்போறேன்னு சொல்லி இருப்பாங்களோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ...
      அஞ்சுவுக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை ஹா ஹா ஹா.

      அது கீசாக்கா பொதுவா நைட்டில நாங்க கொஞ்சம் றிலாக்ஸ் ஆ இருப்போம் அப்போ போஸ்ட் வரும்போது எப்படியும் தெரிஞ்சுவிடும், பாருங்கோ அஞ்சு எவ்ளோ ஸ்பீட்டாக வந்தும் ட்றுத் முந்திட்டார் ஹா ஹா ஹா.

      Delete
  11. கோயில் நல்லா இருக்கு. கோயில் இருப்பது கனடா பக்கமா? யு.எஸ். பக்கமா? இல்லை இரண்டுக்கும் நடுவிலேயா? பாஸ்போர்ட் காட்டி உள்ளே நுழைஞ்சிருப்பதால் யு.எஸ். பக்கம் தான் எனத் தெரியுது. மெல்ல மெல்லக் கட்டிட்டு இருப்பாங்க போல! நம்மாளு வழக்கம்போல் எங்கே போனாலும் ஜம்ம்னு உட்கார்ந்துடுவார். தேங்காய்களுக்குக் கேட்கணுமா?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கோயில் படங்கள் போடவில்லை கீசாக்கா, இவர் வெளிவீதியில் முகப்பில் வரவேற்புக்கு இருக்கும் குண்டு வண்டிப்பிள்ளையார் ஹா ஹா ஹா.

      //பாஸ்போர்ட் காட்டி உள்ளே நுழைஞ்சிருப்பதால் யு.எஸ். பக்கம் தான் எனத் தெரியுது//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தெளிவாத்தானே சொல்லியிருக்கிறேன்.. நியூயோர்க்கில் இருக்குதென:))... நம் நாடுகளில் இப்படித் தேங்காய் இருக்காதெல்லோ..

      Delete
  12. இஃகி,இஃகி,இஃகி, சிதறு தேங்காயைப் பொறுக்கினதைப் பார்த்து அந்த அமெரிக்கர் சிரிச்சிருப்பார். நீங்க என்னமோ உங்க கிட்டே தேங்காய் கேட்டதா நினைச்சிருக்கீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிதறு தேங்காயைக் கூடக் கொடுக்காமல் வந்த அதிரா என உங்களுக்குப் பட்டம் சூட்டிடலாம்னு நினைக்கிறேன். அல்லது சிதறு தேங்காய் அதிரானு சொல்லலாம், எது பிடிச்சிருக்கு?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது நடந்தது இங்கில்லை கீசாக்கா கனடாக்கோயிலில்:).

      //நீங்க என்னமோ உங்க கிட்டே தேங்காய் கேட்டதா நினைச்சிருக்கீங்க!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கான் ஐ காவ் சம் எனக் கேட்டுக்கொண்டே சிரிச்சார்ர்:)) ஹா ஹா ஹா..

      //அல்லது சிதறு தேங்காய் அதிரானு சொல்லலாம், எது பிடிச்சிருக்கு?//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் தான் பொறுக்கி நம்மவர்கள் எல்லோருக்கும் சப்ளை பண்ணினேனே:))..இப்போ தெரியுதோ அமுதசுரபி அதிராதான் என்பது:)) ஹா ஹா ஹா

      Delete
  13. ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு இரண்டுமே நல்லா இருக்கு. அஞ்சு கேட்டமாதிரி அந்தப் பூனையோட பெயர் என்ன? எனக்கும் கேட்க ஆவலா இருக்கு.

    காணொளிப் பாடல்கள் அருமை. உங்க வயசுக்கேற்ற பாடல் கேட்டிருக்கீங்க! :)))))) முடிஞ்சா அப்புறமா வரேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எல்லோரும் பூனையோட பெயரை அறியும் ஆவலில் இருக்கிறீங்க:)).. போனமுறை நான் போட்ட படத்தில இருப்பவராக இருக்குமோ:)) தண்ணிக்குள் புலியாகத்தெரியும் பூஸார்ப்படம்:).

      //உங்க வயசுக்கேற்ற பாடல் கேட்டிருக்கீங்க! :)//

      எல்லோரும் விசயத்தில முந்திப் பேச பழகிட்டீங்க:)) கர்ர்ர்ர்ர்:)).. அப்புறமா வாங்கோ கீசாக்கா மிக்க நன்றி... கொம்பியூட்டர் இப்போ ஓகேயா?..

      Delete
  14. இன்னொண்ணு சொல்ல மறந்துட்டேன். இங்கே நீங்க தாண்டும் எல்லைகள் போலத்தான் கயிலை யாத்திரையின் போது நேபாளுக்கும், சீனாவுக்கும் இடையே இருக்கும். வரிசையில் நின்னு பாஸ்போர்ட்டைக் காட்டணும். நம் கூடவே ஓர் மொழி பெயர்ப்பு அதிகாரியும் வருவார். குழுவாகப் போனதால் மொத்தப் பாஸ்போர்ட்டையும் வாங்கிக் கொண்டு பயண ஒருங்கிணைப்பாளரே காட்டி அனுமதிச் சீட்டு வாங்கிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. கயிலை யாத்திரை போக ஆசை எனக்கும் உண்டு கீதா அக்கா...    ம்ம்ம்ம்ம்ம்.....

      Delete
    2. எனக்கும் ஒரு காலத்துல அந்த ஆசை இருந்தது. எங்க ஊர்ல இருந்து 35 வயசுல ஒருத்தர் போயிட்டு வந்துட்டார். நான் முக்திநாத் வரையில்தான் போயிருக்கேன்.

      கயிலை யாத்திரைக்கு 1 லட்சத்துக்கு மேல் ஆகும்னு நினைக்கறேன். 6 நாட்கள் பெர்சனல் ஹைஜீன் கொஞ்சம் கஷ்டம்னு கேள்விப்பட்டிருக்கேன் (நான்லாம் இரயில் பயணத்திலேயே குளித்துவிடுபவன்)

      Delete
    3. இப்போக் கொஞ்சம் பயண நாட்களைக் குறைச்சிருக்காங்க என்பதோடு வீடியோக்களில் பார்க்கையில் சாலைகளும் மேம்பட்டிருக்கின்றன. எங்களுக்குப் போக ஏழு நாட்கள், திரும்பி வர ஏழு நாட்கள், மானசரோவரில் ஒரு நாள், கயிலை பரிக்ரமாவுக்கு 3 நாட்கள், அதைத் தவிர்த்து அங்கே தங்கியது அக்கம்பக்கம் பார்த்தவை சேர்த்துக் கிளம்பும்வரை ஆறு நாட்கள், மொத்தம் 21 நாட்கள். இதில் அஷ்டபத் யாத்திரையும் அடங்கியது. அந்த 21 நாட்களும் எல்லாவிதமான அசௌகரியங்களையும் சகிச்சுக்கணும். இப்போ ஆறு நாட்கள் எனக் குறைந்துள்ளதே என சந்தோஷப்படணும். கயிலை யாத்திரைக்கு நாங்க போகும்போது 2006 ஆம் ஆண்டில் இருவருக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 2 லட்சம் ஆனது. இப்போ இன்னமும் கூட ஆகும். அதோடு கூட ஜீப் பயணத்தைச் சுருக்கி ஹெலிகாப்டர் மூலம் தார்சன் வரை அழைத்துச் செல்வதாகவும் கேள்விப் பட்டேன். இப்போக் கயிலைப் பயணம் எளிதாக ஆகி விட்டது.

      Delete
    4. ஓ காசி யாத்திரை முடிஞ்சு கயிலை யாத்திரையோ?:). வெளிநாட்டில் இருந்தும் குரூப்பாக ஆட்கள் போகிறார்கள். எங்கள் அண்ணனுக்கும் ஒரு ஆசை வரவே , தானும் போய்வரப்போறேன் என வெளிக்கிட்டார், அதில் ஏனோ எங்கள் ஆருக்கும் இஸ்டமில்லை, அப்போ அப்பாவும் இருந்தார், அப்பாவுக்கும் விருப்பமில்லை.

      ஆனா அண்ணனுக்கு என்னமோ போகோணும் எனும் ஆவல் அதிகமாக, அந்த போகவிருந்த குரூப்பில் பெயர் குடுத்து பாதியோ என்னமோ காசும் கட்டிவிட்டார். போக 2 மாதங்கள் இருக்கும்போதுதான், திடீரென அப்பா இரு வாரத்தில் போய் விட்டார்.

      அப்போதான் ஆரோ அண்ணனிடம் சொன்னார்களாம், “பார் நீ கயிலை போக இருந்தாய், உன்னைத்தடுப்பதற்காகத்தான் அப்பா கைலாயம் போயிட்டார்” என... அன்றோடு அக்கதையையே விட்டுவிட்டார் அண்ணன்.

      பொதுவாக கைலாயம் போய்விட்டார் என்றால், கடவுளிடம் போய்விட்டார் எனத்தான் சொல்வார்கள்.

      Delete
    5. என்னைப்பொறுத்து இப்படியான இடங்களுக்கு குடும்பமாகப் போய்வருவது நல்லது, எதுவாயினும் குடும்பத்தோடு போனால் மனதுக்கு நிம்மதியாவது இருக்கும், ஆனா அதுக்குக் குழந்தைகள் வளர்ந்திருக்க வேண்டும்.

      Delete
    6. கயிலை யாத்திரை முன்னரே சென்று வந்துவிட வேண்டும்.  அப்போதுதான் முடியும்!  அப்புறம் அப்பறம் கடமைகள் ஒருபுறம், கட்டுப்பாடுகள் ஒருபுறம் உடல்நிலை ஒருபுறம்....

      Delete
    7. கயிலை மலையைத் சுற்றி வரலாம்.   மலைமேல் ஏறமுடியாது இல்லையா?!!  அந்த மலை பற்றி நிறைய நம்பமுடியாத அதிசயச் செய்திகள் இருக்கிறதே...

      Delete
    8. நான் காசி பற்றிய ஆராட்சியிலும் ஆசையிலும்தான் இருந்தேனே தவிர கயிலை பற்றி பெரிசா எதுவும் நினைப்பதில்லை, ஆராட்சியும் பண்ணியதில்லை.. அதுக்கு முக்கிய காரணம்.. சின்னனிலேயே கயிலை யாத்திரை எனில் அது கடசி யாத்திரை என்பதுபோல மிரட்டிப்போட்டினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதனாலதான் நம் ஊர்களில் ஒருவர் இறந்திட்டாலோ கைலாசம் போயிட்டார் என்பினம், அல்லது ஓவரா மரம் ஏறிக் குதிக்கும் குழப்படிப் பிள்ளைகளைப்பார்த்துக் கேட்பார்கள்.. “என்ன நீ கைலாயம் போகப்போறியோ”என.. இதனாலேயே கயிலை யாத்திரை எனில் மனதில ஒரு பயம்...

      இப்படித்தான் இலங்கை வானொலியில் காலை பக்திப் பாடலில்[குழந்தையாக இருந்தபோது].. ஒரு இஸ்லாமிய பாடல் வரி வரும்... சரியாக சொல்கிறேனோ தெரியவில்லை.. “கடசிப்பயணம் ஹஜ்ஜி.. அது இறுதிப்பயணம் ஆச்சே”.. என்பதுபோல.. அதை அப்பவே மனதில நினைப்பேன்.. அப்போ சாகப்போகிறவர்கள் அல்லது சாக விரும்புவோர்தான் ஹஜ்ஜிக்குப் போவினம்போல என, அதன் பின்னர் ஆராவது ஹஜ் யாத்திரை போகிறோம் எனச் சொன்னால் உடம்பு நடுங்கும் எனக்கு.. சாகப்போகிறார்களோ என..

      Delete
  15. இந்தக் கோவில் என்று நீங்கள் சொன்னாலுமே நான் போகப் போவதில்லை!  அப்புறம் என்ன?  இருந்தாலும் வாட்ஸாப்பில்  கேட்டிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. //இருந்தாலும் வாட்ஸாப்பில் கேட்டிருக்கிறேன்!//

      ஹா ஹா ஹா அம்சவல்லி நம்பருக்குத்தானே:))

      Delete
  16. அந்த முதல் பூனைப் படம் அழகு. என்ன ஒரு போஸ்?!  பாடல் பிடித்த பாடல்.  இந்தப் பாடலை வெள்ளி வீடியோவில் பகிர்ந்தநினைவு!  அதுவும் சமீபத்தில்!

    ReplyDelete
    Replies
    1. யேஸ் அம்சவல்லிப்பூஸார் அழகாகத்தான் போஸ் குடுக்கிறார்.

      ஓ நீங்க என் வானவில் படத்தில் வேறு இருபாடல்கள் சொன்னீங்க இதைச் சொல்லவே இல்லையே ...

      //வெள்ளி வீடியோவில் பகிர்ந்தநினைவு! அதுவும் சமீபத்தில்!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சான்சே இல்லை:)) விஜய் பாட்டெல்லாம் நீங்க சரித்திரத்திலயே போட்டு நான் பார்த்ததில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  17. கனடா அமெரிக்கா சாலையா அது?  சென்னை மாதிரி இருக்கிறது!  மீனம்பாக்கம் சாலையில் சென்று OMR சாலையில் செல்வது போல இருக்கிறது!  ஒரே ஒரு வித்தியாசம்...  வலதுபுறம் சாலையில் வாகனங்கள் எதிர்திசையில் வருவதற்கு பதில் கூடவே வருகின்றன!

    ReplyDelete
    Replies
    1. குறைஞ்சது பத்து வித்தியாசம் இல்லையோ ஸ்ரீராம் ஹா ஹா ஹா... இப்போ பெரும்பாலும் உலகம் எல்லாம் ஒரே மாதிரி ஆகி வருகிறது. ஒரு மோல் போனால்கூட எல்லா நாட்டிலும் ஒரே மாதிரித்தான் தெரியுது..

      Delete
  18. "ஆஹா...   இன்ப நிலாவினிலே...."  பட்டப்பக மட்ட மதியான வெயிலில் சென்றுகொண்டு இன்பநிலாவா...  ஆ!  

    ஓ...    அது அஞ்சுவுக்கான பாட்டா?  பாட்டை ரசிக்க வயது வேண்டுமா என்ன?  நானே ரஸிப்பேனே...

    ReplyDelete
    Replies
    1. //பாட்டை ரசிக்க வயது வேண்டுமா என்ன? நானே ரஸிப்பேனே...//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).

      சிலருக்கு எப்பவும் எல்லாம் பிடிக்கும், ஆனா சிலருக்கு வயசுக்கேற்பத்தான் பிடிக்கும்.

      எங்கள் அம்மாவில் நான் நேரில் காணும் மாறுதல்கள் இவை.. அதாவது அவவின் சின்ன வயசு விருப்பத்துக்கும், பின்பு நகைச்சுவை படம் என மாறி, பட்டிமன்றம் என வந்து.. இப்போ ஆன்மீகம்.. கோயில்கள் என அதிகமாக விரும்பிப் பார்ப்பதைக் காண முடியுது..

      Delete
  19. வானில் கருமேகங்கள் சூழ, காணொளியும் சரி, போட்டோக்களும் சரி...   நன்றாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நான் அர்ச்சுனன் மாதிரி, இதுவரை ரோட்டை மட்டுமே பார்த்தேன், இப்போ நீங்க சொன்னபின்புதான் திரும்பப்பார்க்கிறேன்ன் ஆஆஆ மேகத்தையும் படமெடுத்திருக்கிறேனே ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  20. மேத்தா கவிதை...     இதற்கு நீங்கள் பகிராமலேயே இருந்திருக்கலாம்.  இறக்கி வைத்து ஜூம் செய்தால்தான் தெரியும் போல...    அதுவும் அலங்கலாக...     அப்புறம் பார்க்கிறேன். நன்றி..  நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எல்லோரும் சொல்றீங்கள் என, காலையில் என் கையாலயே மேலே எழுதி இருக்கிறேன், திரும்பப் போஸ்ட் படியுங்கோ... ஏன் அப்படி கலங்கியிருக்கெனத் தெரியவில்லை.

      Delete
    2. படிச்சாச்.....     கருத்தும் போட்டாச்!

      Delete
  21. பரவாயில்லை...   அங்கும் சிதறு தேங்காய்க்கு இடம் ஒதுக்கி இருக்கிறார்கள்!  கணவனுக்கு மட்டும் அல்ல, பிள்ளைகளுக்கும் (அவர்களுக்கு கல்யாணம் ஆகும்வரை!) டீச்சராகிறார்! 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான்.. திருமணமான பின்னும் ட்றை பண்ணும்போதுதான், மருமகள் ரீச்சருக்கும் மாமியார் ரீச்சருக்கும் இடையில் சண்டை வெடிக்கிறது போலும் ஹா ஹா ஹா.

      Delete
  22. புலி ஜோக் ஏற்கெனவே படித்தது என்றாலும் மறுபடி உபுசி .

    ஊசிக்குறிப்பு நேற்றுதான் எனக்கு வாட்ஸாப்பில் வந்தது.  அதற்குள் இங்கு பதிவில்...   அட!  கடைசி படம்...   அஞ்சுவும் நீங்களும் மனநோய் பற்றி அலசுகிறீர்கள்.   ஜீவி ஸார் மனதையே அலசுகிறார்!

    ReplyDelete
    Replies
    1. உபுசி = உருண்டு புரண்டு சிரித்தேன் 

      Delete
    2. ///உபுசி = உருண்டு புரண்டு சிரித்தேன் //

      ஆவ்வ்வ் அஞ்சு நன்றி நன்றி.. உண்மையில் நான் புலி.. சிங்கம் என்றெல்லாம் யோசித்தேன் ஹா ஹா ஹா..

      ஸ்ரீராம் தமிழைச் சுருக்கக்கூடாதாம் தெரியுமோ?:)).. உங்களுக்காக ஒரு கோட் போடுறேன் இதுபற்றி விரைவில்:))..

      மனம் என்ற ஒன்று இருப்போருக்குத்தான் மனநோயும் வருகிறது ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
    3. //ஸ்ரீராம் தமிழைச் சுருக்கக்கூடாதாம் தெரியுமோ?:))..//

      விவிசி...

      Delete
    4. //விவிசி...//
      ஹையோ எனக்கு தலை வெடிக்குது:)) அஞ்சூஊஊஊஉ ஓடிக்கமோன் பிளீஸ்:)

      ஒரு உண்மை சொல்லட்டோ ஸ்ரீராம், சத்தியமாக இன்றுவரை நீங்கள் சொல்லும் “அபுரி” க்கு எனக்கு விளக்கம் தெரியாது:)), ஆனா அதன் பொருள்,- புரியவில்லை என அர்த்தம் என்று மட்டும் தெரியுமாக்கும் ஹா ஹா ஹா... இந்த டமில் சோட் காண்ட்டில மீ வீக்கு:)) ஹா ஹா ஹா ஆனா இங்கிலிஸ் ரைப்பிங் சோட்காண்ட்டில லெவல் வன் பாஸ் பண்ணியிருக்கிறேன் தெரியுமோ ...

      Delete
  23. இணைப்புகள் அனைத்தும் அருமை... முக்கியமாக ஊசிக் குறிப்பு...

    ReplyDelete
  24. பதிவு போட்ட 2 செகண்டில் பார்த்து கருத்து சொன்னால் அதை இன்னும் வெளியிடக் காணும் ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது என்னமோ தெரியேல்லை ட்றுத், உங்களை மட்டும் என் கொசுமெயில் தணிக்கை செய்து வச்சிருக்கிறது, நான் அதை எடுத்தும் பார்த்திட்டேன் இருப்பினும் உங்களை மட்டும் அனுமதிக்குதில்லை மெயிலுக்குள்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  25. படங்கள் அருமை

    காணொளியும் கண்டேன் தேவகோட்டை சாலை போலவே இருக்கிறது.

    அம்சவள்ளி அசைவ (பிரியாணி) ஹோட்டல் மதுரையில் பிரபலம் ஹோட்டல்காரர்கள் அதிராவுக்கு பிராபலம் கொடுக்காமல் இருந்தால் சரிதான்....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி..

      தேவகோட்டை நியூயோர்க் தானே பிறகென்ன இதில டவுட் உங்களுக்கு?:).

      என்னாது பிர்ர்ர்ர்ர்ர்ராணி ஹோட்டலோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
  26. பாட்டுக் கேய்க்குதா?:)

    கேட்குதே! சிவாஜி பாடல் "மெல்லநட மெல்ல நட "

    ReplyDelete
    Replies
    1. பானுமதி பாடல் ஆசை நிறைவேறுமா
      ஆஹா இன்ப நிலாவினிலே' பாடல்களும் கேட்டேன்

      Delete
    2. வாங்கோ கோமதி அக்கா.. ஆஆஆ வீடியோப் பார்த்திட்டீங்க ஹா ஹா ஹா நன்றி.

      Delete
  27. மேத்தாவின் கனவுக்குதிரைகள் பகிர்வு தெளிவு இல்லை.
    இரண்டு கவிதையை பெரிது செய்து படித்தேன், இதயத்தை கிழித்த கவிதை, தீக்குச்சி கவிதை.

    ReplyDelete
    Replies
    1. இப்போ எழுத்தில் தந்திருக்கிறேன், திரும்பப் படியுங்கோ போஸ்ட்டைக் கோமதி அக்கா.

      Delete
  28. //தோட்டம் முழுவதும் பச்சை அப்பிள் மரங்கள், காய்த்துக் குலுங்கின, ஆசைக்கு பிடுங்கி நல்லாச் சாப்பிட்டேன்ன்:))..//

    ப்றித்து சாப்பிட அனுமதி உண்டா?

    ReplyDelete
    Replies
    1. அது ஒன்றிரண்டு மரங்களல்ல, சிறிய மரங்களுமல்ல.. அத்தோடு இலைபோல காய்களும் காய்த்துக் குலுங்குகின்றன கோமதி அக்கா, பச்சை அப்பிள்கள் மட்டுமே... அங்கு கோயிலுக்குப் போவோர் மட்டும்தானே ஆய்வார்கள்.. எல்லோரும் என்னைப்போல இல்லையே:) எங்கள் குடும்பத்திலும் 16-17 பேர் வரை போயிருப்போம் ஆனா நான் மட்டும்தானே ஓடி ஓடிச் சாப்பிட்டு.. இதனையும் சப்ளை பண்ணினேன் சாப்பிட்டுப் பாருங்கோ என.. ஹா ஹா ஹா அந்நேரம் பிஞ்சு அப்பிள்.. மாங்காய்போல இருக்கும்.. எனக்கு அந்த சுவை பிடிக்கும், ஆனா வாயில் கயராக வரும்.

      Delete
  29. இப்போது எந்த கோவில்களிலும் சிதறு காயை பொறுக்க முடியாது.கோவில் நிர்வாகம் எடுத்து காய வைத்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். தேங்காய் எண்ணெய் எடுக்கிறார்கள். பக்கத்து ஐயனார் கோவிலில் அங்கு பணிசெய்யும் அம்மா சிறு குழந்தைகளை கூட எடுக்க விட மாட்டார்கள்.பெரிய தொட்டியில் உடைக்கிறார்கள். அதை குனிந்து குனிந்து எடுத்து பைகளில் சேகரம் செய்வார்கள் , சதுர்த்தி சமயம் நிறைய் தேங்காய் வரும்.

    ReplyDelete
    Replies
    1. ஓ எங்கள் நாட்டில், விட்டால் சனம் எடுத்துப்போய் கறிக்கெல்லாம் பாவிக்கத் தொடங்கிடுவார்களெல்லோ:)) இங்கு வெளிநாடுகளில் யாரும் எடுக்க மாட்டார்களே.. அது அப்படியே கிடக்கும், கோயில்காரர்தான் எடுப்பினம் என நினைக்கிறேன்.

      தேர்த்திருவிழாவின்போது, 1000 தேங்காய் அல்லது அதுக்கும்மேலே உடைப்பார்கள் கோயில்களில்.

      //பக்கத்து ஐயனார் கோவிலில் அங்கு பணிசெய்யும் அம்மா சிறு குழந்தைகளை கூட எடுக்க விட மாட்டார்கள்.//
      ஓ இது தப்பெல்லோ, குழந்தைகளுக்கு குடுபதில் என்ன இருக்கிறது..

      Delete
    2. அதிரா... உண்மையில் வேண்டுதலுக்காக தேங்காய் உடைக்கப்படுகிறது. அதை நாம எடுத்து பாவித்தால் அந்தப் பாவம் நமக்கு வந்து சேருமல்லோ?

      இந்த ஊர்ல, ரோட்ல ஆயுத பூசை சமயம், ஏகப்பட்ட வெண் பூசனியை உடைப்பார்கள் (அது ரோடை பாவிக்கிறவர்களுக்கு கஷ்டம்). அதில் இருக்கும் காசை சிலர் பொறுக்கிக்கொள்வார்கள். உணவுக்கான பூசனி ரோட்டில் விசிறியடிக்கப்படுவதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருக்கும்.

      Delete
    3. ///உண்மையில் வேண்டுதலுக்காக தேங்காய் உடைக்கப்படுகிறது. அதை நாம எடுத்து பாவித்தால் அந்தப் பாவம் நமக்கு வந்து சேருமல்லோ?
      //
      இது உண்மையோ நெ தமிழன்? இந்தப் பயம் எனக்கும் வருவதுண்டு, ஆனா நான் நினைப்பது கோயிலில் உடைச்சபின்னர் அது கடவுளின் ஆசி பெற்றுவிடுகிறது.. பிரசாதம் ஆகிவிடுகிறது ..அதாவது தீர்த்தம் திருநீறு போல என, அப்படிப்பார்த்தால் பொங்கல் செய்வது பஞ்சாமிர்தம் எல்லாம் நேர்த்திக்கடனுக்காகத்தானே செய்து அங்கு மக்களுக்குக் குடுக்கினம்.

      ஆனா முச்சந்திகளில் உடைப்பதை, பார்த்தாலும் கூடாது என்பினம், அது கழிப்புக்காகச் செய்வதெல்லோ..

      Delete
  30. டீச்சர் விளையாட்டு விளையாடாத குழந்தை இல்லைதான்.
    ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அனைத்தும் அருமை.
    அம்பேத்கர் சொன்னதும் அருமை.

    பாடல் பகிர்வும் அருமை. பயணத்தில் பார்த்த வான்மேகம் எல்லாம் இந்த பாடலை நினைவு ஊட்டி விட்ட்தோ!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அக்கா.. நீங்களும் வானத்தையும் கவனிச்சிருக்கிறீங்க..

      Delete
  31. அம்சவல்லி ஏன் அப்படி நிற்கிறாள் அம்மாவிடம் தண்டனை பெற்ற குழந்தை போல் பயம் கண்ணில் தெரிய.

    ReplyDelete
  32. ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  33. ஆப்பிள் மரத்தை பழங்களோட போட்டிருக்கலாம். எனக்குப் பார்க்க ஆசை.

    மரத்திலிருந்து நேரடியாக பறித்துச் சாப்பிடுவது போல வருமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெதமிழன் வாங்கோ..

      “பூஜை ஆகுமுன்னம் சன்னதம் கொள்ளப்படாது” என அம்மம்மா சொல்லுவா:)) ஹா ஹா ஹா .. இன்னும் இதன் மிகுதிப்பகுதி இருக்குதெல்லோ:)) அப்பிள் மரங்களும் வரும், அதிரா அப்பிள் பிடுங்குவதும் வருமாக்கும் ஹா ஹா ஹா ஹையோ ஒரு ஃபுளோல சொல்லிப்போட்டேன்ன் படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)))..

      உண்மைதான், ஊரில மாங்காய் கொய்யாப்பழம் பிடுங்குவதைப்போலத்தான் இதுவும்,. ஆனா நாங்கள் போன சமயம் பிஞ்சு அப்பிள்கள்.. அதிலும் வெறும் பச்சை அப்பிள் மரங்கள் மட்டுமே இருந்தன. கனடாவிலும் அதிகமாக இந்தப் பச்சை அப்பிள் மரங்கள் தேடுவாரில்லாமல் இருப்பதைக் காணலாம்.

      Delete
  34. ஊசிக்குறிப்பு - மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் என்பது போன்றவை... மிக அருமை. நல்ல தேர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி..உண்மைதான்.. கண்ணதாசன் அங்கிள் சொன்னதைத்தான் நானும் எப்பவும் பின்பற்றுவேன்ன்ன்.. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது...

      Delete
  35. இங்கெல்லாம் சிதறு தேங்காயைப் பொறுக்க ஏகப்பட்ட ஆட்கள் உண்டு. கோவிலில் தொட்டியில் உடைக்கும் தேங்காயை விலைக்கு எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு சட்னிக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள் (அதுக்கு காண்டிராக்ட் உண்டு). திருப்பதியில் கோவிலின் நேர் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் சிதறு தேங்காய்கள் அன்ன தானத்திற்காகச் செல்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம்மூர் நிலைமைகள் ரோட்டலி மாறுபட்டவைதானே. வெளிநாட்டில் ஆரும் தொடமாட்டார்கள்.. என்னைத்தவிர ஹா ஹா ஹா.

      Delete
  36. கோயிலுக்குப் போன பதிவு என்று நினைத்து கோவிலைப் பற்றி ஏதேனும் சொல்வீர்கள் என்று பார்த்தால் இடுகையில் முக்கால்வாசி உங்க கார் போனதைப் பற்றித்தான் இருக்கு. நல்லவேளை ஸ்காட்லாந்து ரோடுலேர்ந்து படங்கள் எடுத்துப் போட ஆரம்பிச்சிருந்தீங்கன்னா, 20 இடுகைகள் போட்டிருந்தாலும் கோவில் படம் வந்திருக்காது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மூலஸ்தானக் கடவுளைக் காணுவதெனில் லேசுப்பட்ட விசயமோ:)) இப்பூடி பல தடைகளைத்தாண்டித்தானே காண முடியும்:))..

      ஹா ஹா ஹா இவ்ளோ கஸ்டப்பட்டு 3.5 மணித்தியாலம் ஹைவேயில் பயணம் செய்து போயிருப்பதைக் காட்டாமல் எப்படி கோயிலை மட்டும் காட்டுவேன்ன்:)).. சிலசயம் ரிவேர்ஸ்ல ஸ்கொட்லாந்துப் படங்களும் வரக்கூடும்:)) எதுக்கும் உங்களை நீங்கதான் பாதுகாத்துக் கொள்ளோணும்:))

      Delete
  37. அம்பேத்கார் சொன்னது சரியான வார்த்தைகள்தாம். பிறப்பினால் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

    இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்பதுதான் சரி. இங்கு 'இட்டார்' என்பது பணம் அல்லது கல்வி தானமாக இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு இதெல்லாம் பிடிப்பதில்லை, ஆனா அப்பா அம்மா ஜெனரேஷன் இல் அதெல்லாம் பெரிய விசயம், அதுதானே இந்த சாதிப்பிரச்சனை என ஒன்று இருப்பதுக்குப் பயந்துதானே அதிராவும் அந்நாளில் லவ் பண்ணாமலே இருந்திட்டேன் :)) ஹா ஹா ஹா... முன்பு ஜாதி பொருந்தாவிட்டால் வீட்டில சேர்க்க மாட்டினம் எனும் பயம், ஆனா இப்போ பிள்ளைகளுக்குச் சொல்லுவது.. இவர்களுக்கு ஜாதி பற்றி எதுவும் தெரியாதெல்லோ அதனால நான் சொல்லுவது.... தம்பி.. ராசா.. அப்பு.. செல்லம்.. நீங்க லவ் பண்ணுங்கோ தப்பில்லை ஆனா தமிழாகப் பார்த்து லவ் பண்ணுங்கோ என ஹா ஹா ஹா.. ஏனெனில் இங்கு தமிழர்கள் இல்லை எல்லோ ஹா ஹா ஹா ஆனா யுனியில் இருக்கிறார்களாம்:)). வெளிநாட்டில் வாழும் நம்மவர்களின் இப்போதைய நிலைமை, பிள்ளைகள் தமிழ்ப்பிள்ளைகளை[தமிழ் பேசும்] விரும்போணும் என்பது மட்டுமே...

      //இங்கு 'இட்டார்' என்பது பணம் அல்லது கல்வி தானமாக இருக்கலாம்.///

      அப்போ நான் குடுத்த தேங்காய்ச் சொட்டு, அப்பிள் காய்கள் எல்லாம் இதில சேர்ப்பில்லையோ?:) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன், மிகுதிப் படங்கள் விரைவில் போட முயற்சிக்கிறேன்..

      Delete
    2. இப்போதும் இங்கு நிலைமை அவ்வளவாக மாறவில்லை. மாறியிருக்கும் வீடுகளிலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

      இந்த, அடுத்த ஜெனெரேஷன்ல 'தமிழாப் பார்த்து லவ் பண்ணுங்கோ' என்பீங்க. அதுக்கு அப்புறம் ஏசியனாகப் பார்த்து லவ் பண்ணுங்கோ என்பீங்க. அப்புறம் ஆஃப்ரிகர், மிடில் ஈஸ்ட் ஆட்களைத் தவிர லவ் பண்ணுங்கோம்பீங்க... நம்ம ஆசைக்கு அளவேது?

      Delete
    3. //அதுக்கு அப்புறம் ஏசியனாகப் பார்த்து லவ் பண்ணுங்கோ என்பீங்க//

      இல்ல இப்போ எங்கட பிள்ளைகள் தம் பிள்ளைகளுக்கு எதுவும் தடை சொல்ல மாட்டினம் என்றே நினைக்கிறேன், ஏனெனில் அவர்களின் பிள்ளைகள் வெள்ளைக்காரப்பிள்ளைபோலத்தான் வளரப்போகிறது.. 18 வயதுடன் தன் முடிவை தானே எடுக்கும் நிலை வந்திடும்.

      இப்போதே எங்கட பிள்ளைகளுக்கு வித்தியாசம் தெரிவதில்லை, ஸ்கொட்டிஸ் க்கும் தமிழுக்கும் எந்த வித்தியாசமும் இவர்களுக்கு தெரியுதில்லை பாசையைத்தவிர... நான் தான் அப்பப்ப எதையாவது சொல்லி வைக்கிறேன், அவர்களின் உணவுமுறை சமய சம்பிரதாயம் இதெல்லாம் வேறாக இருக்கும் எம்மோடு ஒத்துப்போவது கஸ்டமாக இருக்கும் என்றெல்லாம், அப்போ மகன் கேட்டார் பஞ்சாமி ஆட்கள் ஓகேயா என ஹையோ ஹையோ.. நீங்க குடும்பி வச்ச தொபியுடந்தான் திரியவேண்டிவரும் என மிரட்டிட்டேன்ன் ஹா ஹா ஹா.

      எங்கட பொலிசி நெ தமிழன், நாம் என்ன சொன்னாலும் என்ன நினைச்சாலும் விதி என்றும் ஒன்றிருக்கு, அதனால கடவுளைத்தான் வேண்ட முடியும், நல்லபடி அவர்கள் வாழ்க்கை அமையோணும் என, மற்றும்படி நம் கையில் என்ன இருக்குது சொல்லுங்கோ..

      Delete
    4. //இப்போதும் இங்கு நிலைமை அவ்வளவாக மாறவில்லை. மாறியிருக்கும் வீடுகளிலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்//
      வெளிநாடென்பதால நமக்கு கொஞ்சம் ஈசியாக ஏற்கும் மனநிலை இருக்கு, ஆனால் ஊர்களில் எனில் அக்கம் பக்கம் சொந்தபந்தம் என்ன சொல்லுவினமோ எனும் பயமும் இருக்குதெல்லோ.. டெய்லி பேஸ் பண்ணுவது கஸ்டமாகத்தானே இருக்கும், அதனால யோசிப்பார்கள்.

      Delete
  38. அம்சவல்லி அதிரா....!!!! நல்லாதாஆஆ இருக்கு பட்டப்பெயர்.
    // எல்லா பெண்களும் ஏதோ ஒரு தருணத்தில் டீச்சராக கனவு காண்கிறார்கள்.// கர்ர்ர்ர் எனக்கும் படிக்கும்ப்போது இப்படியான நோக்கம்தான் இருந்தது. சித்தப்பாவை பார்த்து எனக்குமாசை. ம்க்கும் எங்கே பிரச்சனையால் ஓடுவதா,ஒளிவதா,படிப்பதா என இருக்கும்.ஏதோ படித்து முடிதாச்சு. ஆனாலும் முழு டீச்சரா இல்லையெனிலும் முன்பள்ளி ஆசிரியையாக பயிற்சி எடுத்து பாஸ் பண்ணி 4 வருடம் குட்டீஸுக்கு படிப்பித்தாயிற்று. ஊருக்கு போனால் 2வர் கண்டிப்பா வந்து என்னை பார்ப்பினம். நல்லநிலையில் இருக்கினம். அதில் ஒரு சந்தோஷம். இப்ப அதில் சொன்னமாதிரிதான். டீச்சர்,லோயர்,டொக்டர் எல்லாமே.....
    ஊசி இணைப்பு,ஊசிகுறிப்பு அருமை.
    உங்களுக்கு உந்தகாய்கள் லேட்டா காய்க்குது போல. இங்கு இந்த காய் காய்த்து, இலைகள் கொட்டி முடிந்திருக்கு. பார்க்கும்போது அழகா இருக்கும்.
    ஆவ்வ்வ்வ் திரும்ப பிள்ளையாரப்பா. அழகா இருக்கார். இவரில்லாமல் இருக்குமோ கோயில். நாங்க இப்ப அடிக்கடி போகும் கோவில் சிவன். அங்கிருக்கும் சிவலிங்கம் எனக்கு பிடிக்கும். அத்தோடு கிட்ட இருக்கு. அம்மன் கோவில்தான் போய்வருவோம். போய் விட்டு வர 1நாள் ஆகும் ட்ராபிக் அதிகம். அதனால் இப்ப அங்கு தேருக்கு மட்டும் போவோம்.
    // தோட்டம் முழுவதும் பச்சை அப்பிள் மரங்கள், காய்த்துக் குலுங்கின, ஆசைக்கு பிடுங்கி நல்லாச் சாப்பிட்டேன்ன்:))... எங்க வீட்டில போனவருடம் காய்ச்சது பிடுங்கி சாப்பிட்டது. இவ்வருடம் ஒன்னுமே இல்லை.
    ஹைவேயை போட்டோக்கள் போட்டு ஒரு பதிவேத்தியாச்சு..கர்ர்ர்ர்ர்ர்ர் அம்சவல்லி அதிரா..

    ReplyDelete
    Replies
    1. //அம்சவல்லி அதிரா....!!!! நல்லாதாஆஆ இருக்கு பட்டப்பெயர்.//
      வாங்கோ அம்முலு வாங்கோ.. டங்கூ டங்கூ...:)

      நான் சின்னனில், குட்டீசுக்கு[என்னைவிடக்குட்டீசுக்கு] கணக்குச் சொல்லிக் குடுத்திருக்கிறேனே:) அதில ஒருவர் இப்போ எஞ்சினியர் ஹா ஹா ஹா.

      அது இந்தப்படம் எடுத்து இப்போ கிட்டத்தட்ட ஒருமாதமாகுது அம்முலு, ஆனா இலைகள் கொட்டினாலும் இக்காய்கள் மட்டும் தனியே நிண்டகாலம் மரத்தில இருக்கும்.

      //அங்கிருக்கும் சிவலிங்கம் எனக்கு பிடிக்கும். //
      இங்கு பெரீய சிவலிங்கம் இருக்கிறார், அடுத்த பகுதியில் போடுகிறேன்.

      ஆஆ எங்கள் வீட்டு அப்பிளிலும் இவ்வருடம் பூக்கள் மட்டுமே காய்கள் இல்லை, ஆனா பக்கத்து வீட்டில் நிறையக் காச்சுதே அவர்கள் பிடுங்குவதில்லை அப்படியே காய்த்து கொட்டி விழும் சிவப்பு அப்பிள்கள்.

      //ஹைவேயை போட்டோக்கள் போட்டு ஒரு பதிவேத்தியாச்சு..கர்ர்ர்ர்ர்ர்ர் அம்சவல்லி அதிரா..//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஊரைக்காட்டியிருக்கிறேனெல்லோ?:) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
    2. /அவர்கள் பிடுங்குவதில்லை அப்படியே காய்த்து கொட்டி விழும் சிவப்பு அப்பிள்கள்// - அதை நீங்க அவங்க அனுமதி பெற்று பறிக்க முடியாதா? அல்லது அவங்க ஒத்துக்க மாட்டாங்களா?

      இங்கயும் நிறையபேர் வீட்டுல மாமரங்கள் உண்டு. நிறைய காய்கள் காய்த்து வீணே கிடக்கும், கீழே விழும். நான் நினைத்துக்கொள்வேன், அவங்களுக்கு மரம் இருந்தாலும் மனசு இல்லை. யாராவது கேட்டால் பறித்துக்கொள்ள அனுமதிக்கவேண்டியதுதானே என்று. யாருக்கும் உபயோகமில்லாமல் வீணாவதில் என்ன பெருமை?

      அதுபோல, பழ மரங்கள், மாமரம்,கொய்யா, சப்போட்டா போன்றவைகளை வெட்டிவிடுபவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. ஒருத்தர் அந்த மாதிரி மரம் வச்சா, அவங்க ஆயுளுக்குள் சாப்பிடும் வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். அதை மதிக்காமல் மரங்களை வெட்டுவது எனக்குப் பிடிப்பதில்லை.

      Delete
    3. //அதை நீங்க அவங்க அனுமதி பெற்று பறிக்க முடியாதா? அல்லது அவங்க ஒத்துக்க மாட்டாங்களா?//
      எடுக்கலாம் நெ.தமிழன், சிலர் கேட்டு வாங்கிப்போய் அப்படியே ஜாம் செய்வார்களாம். இது நாங்கள் கேட்டதில்லை, மரம் இருப்பதோ மற்றப்பக்கம், எங்கள் வேலிப்பக்கம் இல்லை. ஒருக்கால் கேட்கலாம் அடிக்கடி கேட்டுக் கேட்டு பிடுங்குவது அழகில்லை எல்லோ அதனால கேட்கப்போவதில்லை.. அது எங்கள் வீட்டில் இருந்தால்தான் அருகில் போய் நின்று பார்த்து ரசிச்சு பிஞ்சிலே முத்தலிலே பழுத்தபின் என ஆயலாம்.

      எங்கட மரப்பிள்ளை போனவருடம் 4 காய்கள் இந்த வருடம் வெறும் பூக்கள் மட்டுமே.. அதுக்கு காரணம் மழை என நினைக்கிறேன்.

      கனடாவில் எங்கள் அக்கா வீட்டில் பிளம்ஸ் 2 மரங்கள், குட்டிக் குட்டியாக மரம் முட்டக் காய்கள், ஆனா கடவுளின் லீலையைப் பாருங்கோ.. ஆருக்கு எது தேவையில்லை.. விருப்பமில்லையோ அங்குதான் இப்படி கொடுப்பார்ர், அதே மரம் அதிரா வீட்டில் எனில், நான் அதை படுத்தாத பாடு படுத்தி விடுவேன் ஹா ஹா ஹா.

      ஆனா அவர்களுக்கு அது பிடிப்பதில்லை, முற்றத்தில் பெரிய அப்பிள் மரம் நின்றது அதை தறிச்சுப் போட்டினம், பின்பு அம்மா சொன்னா பக்கத்து வீட்டுக்காரர் வந்து கேட்டு ஜாம் செய்யவென பிளம்ஸ் முழுவதையும் பிடுங்கிப்போயிட்டார், இப்போ அத்தான் அந்த மரத்தையும் வெட்டப்போகிறேன் என்கிறார் என கர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கும் இதைக் கேட்க வேதனைதான், மரங்கள் அதுவும் பழ மரங்கள் தறிப்பது பிடிக்கவே பிடிக்காது.

      அங்கு ஆன்ரி வீட்டில் பின்னாலே இரண்டு பெரிய விருட்ச மாமரம்போல பெயார்ஸ் மரங்கள்.. காய்த்துக் கொட்டுது.. படமெடுத்தேன் தேடிப் போடுகிறேன், அவர்களும் அப்படித்தான் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை, யாரும் வந்தும் ஆய மாட்டார்கள்.. கடையில் வாங்கிடுவார்கள்.

      நாங்கள் சின்னனாக இருந்தபோது எங்கள் வீட்டில் பலபல பழ மரங்கள்.. அதில் ஸ்பெசலாம் ஒரு ஆனைக்கொய்யா என ஒன்று[யானைக்கொய்யா] அதன் பழமோ தேங்காய் சைஸ்சில் வரும், மஞ்சள் கட்டியாக இருக்கும் பழம். நாங்கள் காலை விடுமுறை நாளில் போய் அந்தக் கீழ்க் கொப்பில் ஏறி இருந்து பார்த்தால், மஞ்சள் பல்ப் பூட்டியதைப்போல பழங்கள் தெரியும், சிலதை அணில்ப்பிள்ளை சாப்பிட்டிருபாஅர், வெளவாலும்... அவை எல்லாம் என்ன ஒரு அழகிய காலங்கள்.. இப்படித்தான் மாமரத்திலும் பழங்கள் தெரியும்...

      Delete
  39. இரண்டு காணொளியும் தொடர்ந்து வீடியோவா எடுத்திருக்கீங்க. முதல் காணொளில, ஆஹா என் ஆசை நிறைவேறுமோ பாடல், அதைத் தொடர்ந்து ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும். இந்தப் பாடலின் முடிவு இரண்டாவது காணொளில இருக்கு. அதைத் தொடர்ந்து, 'ஆஹா இன்ப நிலாவினிலே' பாடல்.

    இடைல வரும் ஆண் குரலுக்குச் சொந்தக் காரர் (காரில் இருந்தவர்) யார்? :-)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. மெதுவா நிதானமாக:))விடியோப் பார்த்திருகிறார் நெ.தமிழன்.. முதலில் அதுக்கு நன்றி_()_.

      கடசி லைன்:)) கேள்விக்கு, நான் முன்பு சொல்லியிருப்பதைபோல எங்கள் உறவுக்காரப் பெண்மாதிரி பலமாக சிரித்து விட்டிட வேண்டும் ஹா ஹா ஹா புவஹா புவஹா:)).. வீடியோ எடிட்டிங் வசதி என்னிடம் இல்லை:)).. அதில் பல வீடியோக்கள் எடுத்தேன் நெ.தமிழன்., ஆனா அனைத்திலும் பலரின் கதைகள் கேட்குது, முக்கியமா எவ்ளோ சொல்லிப்போட்டு வீடியோ எடுத்தாலும், மறந்துபோய் அம்மா கதைச்சுப்போடுவா ஹா ஹா ஹா:).

      நன்றிகள். அடுத்த பகுதி விரைவில் போடோணும் என்பதனால்.. இந்த ரெயின் புறப்படப்போகிறது மெதுவாக:))

      Delete
  40. மேத்தா கவிதைகளை படித்தேன், ரசித்தேன்.   ஆனாலும் அந்தப் புத்தக கவிதைகள் போல இல்லையோ!

    ReplyDelete
    Replies
    1. ///ஆனாலும் அந்தப் புத்தக கவிதைகள் போல இல்லையோ!//

      ஹா ஹா ஹா ஸ்ரீராம், நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லபிள்ளையாகவே நடிக்கிறது:)) அதனால சொல்லிடுறேன்.. உங்களைப்பார்த்தால் எனக்கு வருங்கால ஜிஎம்பி ஐயா -நீங்கதான் என நினைப்பேன் ஹா ஹா ஹா.. .

      அது, வந்து அவர்கள் கவிதையில் 2, 2 வரியில் எழுதியதை, இடப்பிரச்சனை, போஸ்ட் பெருத்திடுமே என ஒரு வரியாக்கி எழுதியிருக்கிறேன் அதுதான் வித்தியாசமாகத் தெரியுது:)).. மிக்க நன்றிகள் மீண்டும் வந்து படிச்சு ரசிச்சமைக்கு...

      Delete
  41. வணக்கம் அதிரா சகோதரி

    முதலில் என் தாமதமான வருகைக்கு என்னை மன்னிக்கவும்.

    இந்த தடவை பட்டப் பெயர் தங்களுக்கு பொருத்தமாக நல்ல அம்சமாக உள்ளது.

    கார் பயணங்கள் நன்றாக இருந்தன. காணொளி பார்க்கும் போது நாங்களே பயணிப்பது போன்ற உணர்வு வந்தது. பழைய பாடல்களும் அதற்குத் துணையாக..."இன்ப நிலா மெள்ள மெள்ள நடந்து நம் கூடவே பயணித்த மாதிரி," கண்களுக்கு தூய்மையான சாலைகளும் உடன் வர இன்பமாகவே இருந்தது. பயணத்தை வெகுவாகவே ரசித்தேன்.

    மு. மேத்தாவின் கவிதைகள் அருமை.

    கோவில் நன்றாக உள்ளது.முன்பெல்லாம் மரத்தடி விநாயகருக்கு நாம் போடும் சிதறு தேங்காய் நம் செய்வினைப் பயன்கள் சிதற வேண்டும் என்பதற்காக போடப்படுவது. முன்பு பிராணிகள் வந்து கொத்தி எடுத்துக் கொண்டு போய் தின்று விடும்."கடைத்தேங்காய் வழிப் பிள்ளையார்" என்ற பழமொழியே உண்டே... ஆனால் இப்போதெல்லாம் கோவில்களுக்குள் அமர்ந்திருக்கும் அவருக்கு போடுவதால், சிதறவொட்டால் தடுப்புக்கள் அமைத்து தடுத்து வைக்கிறார்கள். (வரும் அப்பிராணி பக்தர்கள் காலில் சிரட்டைகள் குத்தி விடும் என்ற அபாயத்தில்) கருத்துரையில் சொல்வது போல் அத்தேங்காய்கள் பயனுள்ளதாக செய்கிறார்கள். நல்லதுதான்.

    ஊசி இணைப்பும். ஊசிக் குறிப்பும் படிக்க நன்றாக இருந்தது. ஆக கால்கட்டு போட்டால் புலி கூட பூனையாய் ஆகி விடுகிறது. அப்போ மனிதர்கள் எம்மாத்திரம்? ஹா. ஹா. ஹா. அத்தனையும் நன்றாக வந்துள்ளது.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. இன்னும் ரெயின்ஸ்பீட் எடுக்கவில்லை அதனால நீங்க தாமதம் இல்லை:)).. உங்களுக்காகவே பச்சைக்கொடி காட்டாமல் இருக்கிறார் ஸ்டேசன் மாஸ்டர்:).

      //இந்த தடவை பட்டப் பெயர் தங்களுக்கு பொருத்தமாக நல்ல அம்சமாக உள்ளது.//
      தங்கூ தங்கு.. உங்களுக்கு இது புரியுது:) சிலருக்குப் புரியமாட்டுதாமே:).

      அனைத்தையும் நன்கு ரசிச்சிருக்கிறீங்க நன்றி.

      ஓ.. இங்கு பறவைகள் இருக்கிறதுதான் ஆனா கோயில்களில் வந்து தேங்காயைக் கொத்துவதை எங்கும் காணக்கிடைக்கவில்லை... ஒருவேளை டயட்டில் இருக்கினமோ என்னமோ:)).

      மிக்க நன்றிகள் வரவுக்கு.. இத்துடன் ரெயின் ஸ்பீட் எடுக்கிறது.. அதோ அடுத்த ரெயின் வந்துகொண்டிருக்கிறதே:))

      Delete
  42. கனடாப் பிள்ளையார் ...அழகா இருக்கார் ...


    ரோடும் ஊரும் வழமை போல பளிச் பளிச் ....

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.