நல்வரவு_()_


Tuesday, 12 February 2013

ஜெல்ப்!!... ஜெல்ப்!!!.. :)


No..No... No Problem :) எனக்கு நோகல்ல:) நீங்க எப்பூடியாவது பிடிச்சிடுங்க:), பாபகியூ மெஷினை ஓன் பண்ணிட்டேன்:). நாங்க எப்பவுமே இப்பூடியான உதவிக்கு, பின் நிற்கமாட்டோம் :)

ன்னாது தலைப்பு பார்த்து என்னமோ ஏதோ ஆகிட்டுது அதிராவுக்கு, என நினைச்சிருப்பீங்களே?:) ஆ.. எண்டாலும்.. ஊ எண்டாலும் அதிராவுக்கு என்னமோ ஆகிட்டுது என நினைப்பதே புழைப்பாப் போச்ச்ச்ச்:)).. சரி சரி அதிகம் பேசினால் சொல்ல வந்த விஷயத்தை மறந்திடுவேன்ன்:).. அதனால சுருக்கமா...  அவ்வைப்பாட்டியின்:) “திருக்குறள்” போல:).. சொல்லிடுறேன்ன்ன்.. அதாவது..
உதவி
ந்த “ஜெல்ப்” பற்றி நிறையச் சொல்லோணும் என நீண்ட நாளா ஒரு கனவு, சமீபத்தில பூஸ் ரேடியோவில போய்ச்சுதா... அதைக் கேட்டு வச்சேன், ஆனா முழுவதும் மைண்டில ஏத்த முடியாமல் போச்ச்ச்:) அதனால சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லிடுறேன்.

லகத்தில எங்கு பார்த்தாலும் எல்லோருமே “உதவி” செய்யோணும் என்றுதான் சொல்கிறார்கள்.அது உண்மைதான், செய்யத்தான் வேண்டும், ஆனால் நான் அறிந்து, வள்ளுவர் காலம் தொடங்கி, கண்ணதாசன் உள்பட, இந்த உதவிக்கு கூட ஒரு “வரையறை” சொல்லியிருக்கிறார்கள்.

ம்மில்(மனிதரில்) பலவகையினர் இருக்கிறார்கள், அதாவது சிலர் உதவியே செய்ய மாட்டார்கள், சிலர் தம் தகுதியைப் பொறுத்துச் செய்வார்கள், சிலர் தம் தகுதியையும் மீறிச் செய்வார்கள், கேளாமலே செய்வோர், கேட்டுச் செய்வோர் இப்படி பலவகையில் உதவி செய்வோர் உண்டு.

தேபோல, தன்னைவிட, தன் குடும்பத்தை விட, அடுத்தவருக்காகவே பாடுபட்டு, அவர்களை முன்னேற்றி விட்டு, பின்னர் தம்மால் படியேறி முன்னேறியோர்... திரும்பியும் பார்க்காமல், ஒரு பேச்சுக்குக்கூட, இவரால்தான் நான் இந் நிலைமைக்கு வந்தேன் என ஒரு வார்த்தை கூறவில்லையே என, மனம் வருந்தி, உதவி செய்யும் எண்ணத்தையே கைவிட்டோரும் உண்டு.

ங்கட “கண்ணதாசன்” என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமோ? “உதவி செய்யவேண்டும் என்பதற்காக, எல்லோருக்கும் செய்யாதீர்கள், யாருக்குச் செய்கிறோம் என்பதும் முக்கியம்”.

து உண்மையேதான், சிலர் இருக்கிறார்கள் எப்பவுமே ஆருக்காவது உதவி செய்யவேணும் என்பதிலேயே தீவிரமாக இருப்பார்கள், ஆனால் அந்த உதவியால், நன்மை நடக்கிறதா? தீமை நடக்கிறதா என்பதைத் தீர்மானிக்கத் தவறிவிடுவர்.

ப்போ ஒரு குடிகாரர் வந்து, “வீட்டிலே மனைவி பிள்ளைகள் உணவில்லாமல் இருக்கிறார்கள், உதவி செய்யுங்கள்” எனப் பணம் கேட்டால்,  உடனே இரக்கப்பட்டுத் தூக்கிக் கொடுத்திட்டால், அவர் அதில் மீண்டும் குடிக்கத்தான் செய்வார். அப்படி உதவ எண்ணினால், அவரின் குடும்பத்தை வரவழைத்து நேரடியாக உதவலாம்.

தேபோல, பாவமே  என உதவி செய்யப்போய், 4 வார்த்தை ஆறுதலாகச் சொன்னால்...  அதைத் தப்பாகப் புரிந்து, லெவல்பட்டு, ஏளனமாகப் பார்ப்போரும் உண்டு. அல்லது உதவப் போனவரே,   “பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுமளவுக்கு”.. அதிக உதவி எதிர்பார்த்துத் தொல்லை கொடுப்போரும் உண்டு.

தைத்தான் அன்று  “வள்ளுவர்”, திருக்குறளில் சொல்லியிருக்கிறார்..
“ஒருவரின் பண்பறிந்தே உதவுங்கள்” என.

ஊசி இணைப்பு:)
ஆனாப் பாருங்கோ ஆர் என்ன சொன்னாலும் சரி, நாம உதவி செய்யுறது செய்யுறதுதான்:).. ஆனா பலனை எதிர்பார்க்கப்பூடா:)..  எம்மிடம் உதவி பெற்றவரேதான் திரும்ப எமக்குச் செய்வார் என எதிர்பார்ப்பது தப்பு. நாம் நல்லது செய்தால் அது என்றைக்குமே வீணாகாது, வேறொருவர் வடிவில் அப்பலன் எமக்கு கிடைத்தே தீரும்... இப்படிக்கு புலாலியூர் பூஸானந்தா :)

பின் இணைப்பு:
என் பக்கம் பார்த்திருப்பீங்களே!! பளபளா என கலர்ஃபுல்லா  “மாத்தி”யாச்செல்லோ:)....  அதை அழகாக வடிவமைத்துத் தந்தவர் வேறு யாருமல்ல “மணி” தான். அதுக்கு நன்றியைப் பப்ளிக்கில் சொன்னால்தான் நல்லதென என் மனம் எண்ணியது, அதுதான் சொல்கிறேன்ன்.. மியாவும் நன்றி மணி. 

இன்னுமொன்று, தமிழ் மணம்பற்றி எனக்கு பெரிசாக ஏதும் தெரியாது, அதிலுள்ள நன்மைகளைச் சொல்லி, எனக்கு அதில் இணையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திய பெருமை அவரையே சாரும். நான் இணைந்ததும், இப்போ எனக்கொரு ஆசை, இங்கு, இதுவரை இணையாமல் இருப்போரும் இணைய வேண்டும் என. அதனால் அதனைக் குறிப்பிட்டேன் போன பதிவின் பின்னூட்டத்தில், அதுக்கு எப்படி இணைவது, அதனால் என்ன நன்மை எண்டெல்லாம் “இளமதிக்கு” டவுட்டுகள் வந்திச்சா:)... அதனால என் கிட்னியில் ஒரு எண்ணம் உதிச்சுது, அதை ஒரு பதிவாகப் போடும்படி மணியிடம் கேட்டால் என்ன என.

அதுதான் மணி, உங்களுக்கு நேரமிருப்பின், அதுபற்றி விரிவான ஒரு பதிவு போட்டுவிடுங்கோவன். ஆர்வம் இருப்போர் எல்லோரும் இணைய அது உதவியாக இருக்கும்.

பொயிங்கல் குறிப்பு:
உங்களுக்கொரு புறுணம் தெரியுமோ?  ஒவ்வொரு நாட்டிலும் எந்த எந்த சைட்ஸ் முன்னுரிமை வகிக்குது எனக் கண்டு பிடிக்கவும் ஒரு வெப்சைட் இருக்கு... அதுக்குப் பெயர். Alexa.

 என் புளொக் புளொக்ஸ்பொட்.com தானே? அஞ்சுவோடதும் அதுதான். அப்போ, உந்த அலெக்ஸ்ஸாவில தேடினேன்.. 

இலங்கையில் புளொக்ஸ்பொட் டொட் கொம் எத்தனையாவது இடத்தில இருக்கென, அது ஐந்தாவது இடத்தில இருக்கு.

Top Sites in Sri Lanka

 இந்தியாவில தேடினேன் அது 6 ஆவது இடத்தில இருக்கு.

Top Sites in India

பிரித்தானியாவில தேடினேன்ன்.. நான் மயங்கி விழாத குறை:) ஏன் தெரியுமோ? 13 ஆவது இடத்தில இருந்திச்சா:))...

Top Sites in United Kingdom 

அதைப் பார்த்ததும், எனக்கு உடனேயே புரிஞ்சுபோச்சு:).. இவ்ளோ பின்னுக்குப் போனதன் காரணம், கொஞ்சக்காலமா நான் ஒழுங்காக பதிவெழுதாததுதான் என:).. ஹையோ ஏன் முறைக்கிறீங்க:).... என்னோடு சேர்ந்து அஞ்சுவும் விட்டிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதனாலதான் கீழ கீழ போயிட்டிருக்கு... அதைப் பார்த்ததும்தான் நான் “பொயிங்கிட்டேன்” சுனாமியா:).. இனி, வாரம் 4 பதிவுகளை என்னிடம் இருந்து எதிர்பாருங்கோ:)) மீக்கும்....  சூடு, சுரணை, ரோஷம், மானம் இருக்காக்கும்..க்கும்..க்கும்:)... புளொக்ஸ்பொட் டொட் கொம்மை மேலே ஏத்தாமல் ஓயமாட்டேன்ன்ன்ன்:)).
நன்றி!! வணக்கம்!!!!.
_____( )____

75 comments :

  1. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.ஜெல்ப் ஜெல்ப் !இதென்ன அதிராவிற்கு ஜல்ப் கிளம்பிவிட்டதோன்னு நினைச்சு ஓடிவந்தால் இங்கு திருவள்ளுவர் கண்ணதாசன் என்று கலங்க வைத்துவிட்டாரே!பூஸார் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக.

    ReplyDelete
  3. இனி, வாரம் 4 பதிவுகளை என்னிடம் இருந்து எதிர்பாருங்கோ:)) //சந்தோஷம்.இப்படி எழுதி விட்டு பினாடி பிரித்தானியாவை சுற்றிகொண்டிருக்க கூடாது மரியாதையா வாரம் நான்கு பதிவை போட்டு விடவேண்டும்.

    மீக்கும்.... சூடு, சுரணை, ரோஷம், மானம் இருக்காக்கும்..க்கும்..க்கும்:)..//இதெல்லாம் சொல்லித்தான் தெரியணுமாக்கும்ம்ம்ம்ம்?

    ReplyDelete
  4. அருமையான பதிவூஊஊஊஊஊ.

    அட்டகாசமான தலைப்பூஊஊஊ

    மேதாவித்தனமான மேற்கோள்கள்.

    >>>>>>

    ReplyDelete
  5. ப்ளாக் சும்மா பளபளபளன்னு கண்ணைப் பறிக்குது அதிராவ். கலக்கறீங்க போங்க! :)
    வாழ்த்துக்கள்!

    உதவி செய்வதைப் பத்திய பதிவுகள் அருமை. எல்லாமே நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி!

    ஒயுங்கா வாரத்துக்கு நாலு பதிவு மட்டும் வரேல்ல...நல்லார்க்காது, சொல்லிப்புட்டேன்! பிரித்தானியாவில என்ன, அகில உலகிலும் முதலிடம் பெறவேண்டும் என்ற முனைப்புடன் பதிவுகளை எழுதுங்கோ.சரியா??

    ReplyDelete
  6. ஜெல்ப்!!... ஜெல்ப்!!!.. :)

    என்றால் ஹெல்ப் ஹெல்ப் என்று அர்த்தமோ?

    முதலில் காட்டியுள்ள பூனைப்படங்கள் இரண்டும் அய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்கூஊ.

    என்னாமா அந்தக்கருப்புப்பூனைக்கு சிவப்புப்பூனை முதுகைக்காட்டி ஹெல்ப் பண்ணுது!!!!!!!

    >>>>>

    ReplyDelete
  7. புதுபோஸ்ட்,புதுதெம்போடு பழையபடி வந்தாச்சு அதிரா.அழகாக இருக்கு உங்க ப்ளாக்.இனி வாரத்துக்கு 4போஸ்டாஆ சந்தோஷம்.எழுதுங்கோ.எழுதி உங்க ரேங்க் உயர்த்துங்கோ அலெக்ஸாவில்.மேலே இருக்கிறவையை பார்க்காதேங்கோ. நாங்க உங்களுக்கு கீழே 22 வது இடம்.ஆவ்வ்வ்.
    நீங்க எழுதிய உதவிக்கு ஹைலைடே ஊசி இணைப்புத்தான். நல்லது செய்தால் நல்லதுதான் நடக்கும்.

    ReplyDelete
  8. புதிய வடிவ ப்ளாக் அருமையாக உள்ளது.

    இரண்டாவது ப்டமும் ஜோராகவே உள்ளது.

    பூனைகள் கூட தன் கூட்டாளிக்கு உதவி செய்து வாழ்க்கையில் முன்னேற்றத் துடிக்குதூஊஊஊ.

    ஆனால் நாம் .... ??????

    சிந்திக்க வைக்கிறது,

    >>>>>

    ReplyDelete
  9. //என்னாது தலைப்பு பார்த்து என்னமோ ஏதோ ஆகிட்டுது அதிராவுக்கு, என நினைச்சிருப்பீங்களே?:) ஆ.. எண்டாலும்.. ஊ எண்டாலும் அதிராவுக்கு என்னமோ ஆகிட்டுது என நினைப்பதே புழைப்பாப் போச்ச்ச்ச்:))..

    சரி சரி அதிகம் பேசினால் சொல்ல வந்த விஷயத்தை மறந்திடுவேன்ன்:).. அதனால சுருக்கமா... அவ்வைப்பாட்டியின்:) “திருகுறள்” போல:).. சொல்லிடுறேன்ன்ன்.. அதாவது..//

    ஒளவைப்பாட்டியின் திருக்குறளா?

    ஆஹா, இது வரை கேள்விப்பட்டதே இல்லை.

    அதிரா அதிகமாகவே படித்துக் குயம்பியுள்ளார் என்பது எங்களுக்கெல்லாம் தெளிவாகவே தெரிஞ்சு போயிடுத்து. ;)))))

    >>>>

    ReplyDelete
  10. ஊசி இணைப்பு:)

    //ஆனாப் பாருங்கோ ஆர் என்ன சொன்னாலும் சரி, நாம உதவி செய்யுறது செய்யுறதுதான்:).. ஆனா பலனை எதிர்பார்க்கப்பூடா:).. எம்மிடம் உதவி பெற்றவரேதான் திரும்ப எமக்குச் செய்வார் என எதிர்பார்ப்பது தப்பு. நாம் நல்லது செய்தால் அது என்றைக்குமே வீணாகாது, வேறொருவர் வடிவில் அப்பலன் எமக்கு கிடைத்தே தீரும்... இப்படிக்கு புலாலியூர் பூஸானந்தா :)//

    ஊசிக்குறிப்பில் உள்ள செய்தி மனதில் ஊசி தைத்தது போல அப்படியே குத்திவிட்டதாக்கும்.

    இதற்கு மேற்கொண்டும் இந்தப்பதிவுக்கு என் பின்னூட்டங்களை நீங்க்ளும்

    எதிர்பார்க்கப்பூடா:).. ;))))))


    சுவாரஸ்யமான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. //அதைப் பார்த்ததும்தான் நான் “பொயிங்கிட்டேன்” சுனாமியா:).. இனி, வாரம் 4 பதிவுகளை என்னிடம் இருந்து எதிர்பாருங்கோ:)) மீக்கும்.... சூடு, சுரணை, ரோஷம், மானம் இருக்காக்கும்..க்கும்..க்கும்:)... புளொக்ஸ்பொட் டொட் கொம்மை மேலே ஏத்தாமல் ஓயமாட்டேன்ன்ன்ன்:)).//

    கலிகாலம் மு[ற்றி]த்தி விட்டால் இப்படியெல்லாம் ஏதாவது விபரீதங்கள் ஏற்படக்கூடும் என்று, ஓர் பஞ்சாங்கத்தில் படித்த ஞாபகம்.

    ஆண்டவா ...... !!!!!!

    ReplyDelete
  12. எங்கட “கண்ணதாசன்” என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமோ? “உதவி செய்யவேண்டும் என்பதற்காக, எல்லோருக்கும் செய்யாதீர்கள், யாருக்குச் செய்கிறோம் என்பதும் முக்கியம்”.


    பாத்திரமறிந்து பிச்சையிடு

    என்றும் சொல்லியிருக்கிறாரே ..!

    ReplyDelete
  13. அழ்காக அமைத்த

    என் பக்கம்

    கண்களையும் கருத்தையும் கவர்கிறது பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. // அவ்வைப்பாட்டியின்:) “திருகுறள்” போல:).. சொல்லிடுறேன்ன்ன்.. அதாவது..//

    என்னாது ??அவ்வைப்பாட்டி திருக்குறள் எழுதினாங்களா அவ்வவ்..நான் கானா உலகநாதன் என்றல்லவா நினைச்சேன் :))

    ReplyDelete
  15. உதவி பற்றி நீங்க சொன்னது அனைத்துமே அருமையான நெத்தியடி கருத்துக்கள் அதிராவ் :))
    உதவி யாருக்கு செய்கிறோம் அவர்கள் அதற்க்கு தகுதியானவர்கள் தானா என்பதையெல்லாம் யோசித்து செய்வதே நல்லது ..
    பின் குறிப்பு ...நன் புள்ளி வச்சா dam கட்ற அளவுக்கு உதவி செய்வேன் .நீங்க எப்படி ??

    ReplyDelete
  16. திண்டுக்கல் தனபாலன் said...
    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    [co="dark green"] வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.[/co]

    ReplyDelete
  17. [co="dark green"] வாங்கோ மகி வாங்கோ.. நோ இங்கின ஒருவரும் லேட்டா வரப்பூடாது.. இப்பவே வரோணும்:).

    பளபளக்குதா? பளபளக்குதா? அதுக்காக பாம்புச் செட்டையாக்கும் எனச் சொலிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அது 2012 இல உலகம் அழியப்போகுது இனி திருத்தி என்ன அழகாக்கி என்ன என ஓசிச்சிருந்தேன்ன்.. இப்போதான் 2013 வந்திட்டுதே அதேன்:)... எண்ணத்தை மட்டுமல்லாமல் புளொக்கையும் அழகாக்கலாமே என ஓசனை வந்துது:).[/co]

    ReplyDelete
  18. ஒயுங்கா வாரத்துக்கு நாலு பதிவு மட்டும் வரேல்ல...நல்லார்க்காது, சொல்லிப்புட்டேன்! பிரித்தானியாவில என்ன, அகில உலகிலும் முதலிடம் பெறவேண்டும் என்ற முனைப்புடன் பதிவுகளை எழுதுங்கோ.சரியா??

    [co="dark green"]சொல்லிட்டீங்கல்ல பருங்கோ:)).. என் நித்திரை:), என் தூக்கம்:), என் பசி:), என் தாகம்:), எல்லாம் போச்சே:) பூஸ் ஒன்று புறப்படுதேஏஏஏஏஏ பதிவெழுதத்தான்ன்:)..மியாவும் நன்றி மகி[/co]

    ReplyDelete


  19. //நான் // ஸ்பெல்லிங் மிஸ்டேக்

    ReplyDelete
  20. நலமா அதிராக்கா ?

    Peak Winterla BBQ...-:)

    உலகின் டாப் ப்ளாக் உங்களதுன்னு நினைச்சேன்...பூனைக்கும் சாரி...யானைக்கும் அடி சறுக்கும்ல...-:)

    ReplyDelete
  21. [co="dark green"] வாங்கோ ஆசியா வாங்கோ. ”துருவள்ளுவர்”:).. கண்ணதாசனோடு எங்கட ஒளவைப் பாட்டியையும் சொல்லியிருக்கிறனாக்கும்..:).. மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  22. மரியாதையா வாரம் நான்கு பதிவை போட்டு விடவேண்டும்.

    [co="dark green"] வாங்கோ ஸாதிகா அக்கா... வாங்கோ.. என்னாது? :)மரியாதை பற்றி வாரம் 4 பதிவு போடவேணுமோ?:) தொடராவோ?:) அவ்வ்வ்வ்வ்வ் சே..சே.. அப்பூடிப் போட்டால் அஞ்சுவுக்கு போரிங் வந்திடும்:)).. ஹா..ஹா..ஹா..:).

    என்.. சூடு சுரணை பற்றி உங்களுக்கும் தெரிஞ்சு போச்சோ?:)) மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  23. என்னாது தலைப்பு பார்த்து என்னமோ ஏதோ ஆகிட்டுது அதிராவுக்கு, என நினைச்சிருப்பீங்களே?:) ///

    ஓம் சந்தோசப்பட்டம் :)

    ReplyDelete
  24. சரி சரி அதிகம் பேசினால் சொல்ல வந்த விஷயத்தை மறந்திடுவேன்ன்:)..////

    [co="green"]நாங்க அழுதுடுவம்[/co]

    ReplyDelete
  25. ஜெல்ப்!!... ஜெல்ப்!!!.. :)

    என்றால் ஹெல்ப் ஹெல்ப் என்று அர்த்தமோ?
    [co="dark green"] வாங்கோ கோபு அண்ணன்... வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. இப்பவெல்லாம் நீங்களும் கிட்னியையே ஊஸ் பண்ணுறீங்க எனத் தெரியுது, இல்லாட்டில் எப்பூடி இவ்ளோ கரெக்ட்டாக் கண்டு பிடிப்பீங்க!!:)) [/co]

    ReplyDelete
  26. [co="dark green"] ஆவ்வ்வ்வ்வ் அதாரது இப்போ கம்பிமேல நிக்கிறதாம்ம்?:))[/co]

    ReplyDelete
  27. இது உண்மையேதான், சிலர் இருக்கிறார்கள் எப்பவுமே ஆருக்காவது உதவி செய்யவேணும் என்பதிலேயே தீவிரமாக இருப்பார்கள்,///

    [co="red"]என்னை இவ்வளவு புரிஞ்சு வைச்சிருக்கிறீங்களே? அதை நினைக்க கண்கள் பனிக்குது :) :)[/co]

    ReplyDelete
  28. மாத்தியோசி மணி மணி said..

    [co="dark green"] ஆவ்வ்வ்வ்வ் அதாரது இப்போ கம்பிமேல நிக்கிறதாம்ம்?:)) வாங்கோ வாங்கோ வலதுகாலை எடுத்து வச்சு வாங்கோ.. புது புளொக் ஆச்சே அதேன்ன்:))[/co]

    ReplyDelete
  29. மாத்தியோசி மணி மணி said...
    என்னாது தலைப்பு பார்த்து என்னமோ ஏதோ ஆகிட்டுது அதிராவுக்கு, என நினைச்சிருப்பீங்களே?:) ///

    ஓம் சந்தோசப்பட்டம் :)

    [co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விடுங்கோ.. விடுங்கோ.. எனக்கு புது புளொக்கும் வாணாம்ம்.. ”டமில் மனமும்” வாணாம்ம்.. நான் (இப்பவே) போகிறேன்ன் காசிக்கு காசிக்கு:)!!![/co]

    ReplyDelete

  30. மாத்தியோசி மணி மணி said...
    சரி சரி அதிகம் பேசினால் சொல்ல வந்த விஷயத்தை மறந்திடுவேன்ன்:)..////

    [co="green"]நாங்க அழுதுடுவம்[/co]

    [co="dark green"] ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)) அப்பூடியெல்லாம் அழப்பூடா:) பிறகு நானெல்லே டிஷ்யூ தரவேண்டி வந்திடும்:) அதிலயும் என்னிடம் இருப்பதெல்லாம் “பிங்” கலரே:) அது நல்லதில்ல:))[/co]

    ReplyDelete
  31. @athira

    வாங்கோ வாங்கோ வலதுகாலை எடுத்து வச்சு வாங்கோ.. புது புளொக் ஆச்சே அதேன்ன்:))////

    [co="green"]ஆஆஆஆஆஆ மெர்சி மெர்சி! வலது கால் எடுத்து வைக்கிறது ஓகே ஆனா, ஷூஷ் ஓடதான் வருவன்ப் பரவாயில்லையோ? :) :)[/co]

    ReplyDelete
  32. மாத்தியோசி மணி மணி said..
    [co="red"]என்னை இவ்வளவு புரிஞ்சு வைச்சிருக்கிறீங்களே? அதை நினைக்க கண்கள் பனிக்குது :) :)[/co]

    [co="dark green"] முருகா ஆஆஆஆஆஆஅ இன்னும் ஏன் உலகம் அழியாமல் இருக்கப்பனே... ஓ 2012 முடிஞ்சிடிச்சா?:)[/co]

    ReplyDelete
  33. @athira

    அதிலயும் என்னிடம் இருப்பதெல்லாம் “பிங்” கலரே:) அது நல்லதில்ல:)) ///

    [co="green"]அப்ப உங்கள் வீட்டில் இருக்கும் பால், முட்டை, கோதுமை மா, எல்லாமே பிங் கலரில் தான் இருக்குமோ?[/co]

    ReplyDelete
  34. @athira

    . ”டமில் மனமும்” வாணாம்ம்.. நான் (இப்பவே) போகிறேன்ன் காசிக்கு காசிக்கு:)!!! ///

    [co="green"]ஹா ஹா தமிழ்மணத்தை உருவாக்கியவரும் காசி என்ற பெரியவர்தான்! அப்ப அவரைச் சந்திக்கவோ போறியள்? ஒராள் செம மாட்டி[/co]

    ReplyDelete

  35. மாத்தியோசி மணி மணி said...
    @athira

    வாங்கோ வாங்கோ வலதுகாலை எடுத்து வச்சு வாங்கோ.. புது புளொக் ஆச்சே அதேன்ன்:))////

    [co="green"]ஆஆஆஆஆஆ மெர்சி மெர்சி! வலது கால் எடுத்து வைக்கிறது ஓகே ஆனா, ஷூஷ் ஓடதான் வருவன்ப் பரவாயில்லையோ? :) :)[/co]

    [co="dark green"] அது எனக்குப் பிரச்சனை இல்லை:) ஆனா அம்மம்மாதான் உங்களைத் தப்பாப் பார்ப்பா:) உங்களுக்கெதுக்கு வீண்பெயர்:).. ஏன் கழட்டினால் போடக் கஸ்டமோ? இல்ல ஒரு டவுட்டு:)[/co]

    ReplyDelete
  36. மாத்தியோசி மணி மணி said...
    @athira

    அதிலயும் என்னிடம் இருப்பதெல்லாம் “பிங்” கலரே:) அது நல்லதில்ல:)) ///

    [co="green"]அப்ப உங்கள் வீட்டில் இருக்கும் பால், முட்டை, கோதுமை மா, எல்லாமே பிங் கலரில் தான் இருக்குமோ?[/co]

    [co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) குறைமாதத்தில பிறந்திருப்பாரோ?:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்.. மீதான் ரொம்ப நல்ல பொண்ணாச்செ 6 வயசில இருந்து:).[/co]

    ReplyDelete
  37. மாத்தியோசி மணி மணி said...
    @athira

    . ”டமில் மனமும்” வாணாம்ம்.. நான் (இப்பவே) போகிறேன்ன் காசிக்கு காசிக்கு:)!!! ///

    [co="green"]ஹா ஹா தமிழ்மணத்தை உருவாக்கியவரும் காசி என்ற பெரியவர்தான்! அப்ப அவரைச் சந்திக்கவோ போறியள்? ஒராள் செம மாட்டி[/co]

    [co="dark green"]ஹையோ முருகா உதென்ன புதுக் கதையாக் கிடக்கு:) அப்ப காசிக்கு மீ போகல்ல:)) இமயமலைக்குப் போறேன்ன்ன்.. அதுவும் உச்சியில ஏறப்போறேன்ன்ன்... :).[/co]

    ReplyDelete
  38. [co="green"]நான் செய்த இத்துனூண்டு குட்டி உதவிக்கு நன்றியெல்லாம் சொல்லியிருக்கீங்க! நன்றி மறக்காத உங்கள் நன்றியுணர்வுக்கு நன்றி சொல்லி, இப்போதைக்கு விடை பெறுகிறேன்! நீங்கள் கேட்ட அந்தப் பதிவையும் எழுதுகிறேன்! - எங்கள் முதலாளிக்கு உளுக்கு எடுத்த பின்னர் மீண்டும் சந்திப்போம்! அதுவரை நன்றி, வணக்கம் அக்கா ( நிரூபனின் முறையில் )[/co]

    ReplyDelete
  39. வை.கோபாலகிருஷ்ணன் said... 9
    புதிய வடிவ ப்ளாக் அருமையாக உள்ளது.

    இரண்டாவது ப்டமும் ஜோராகவே உள்ளது.
    [co="dark green"]மியாவும் மியாவும் நன்றி கோபு அண்ணன்... புளொக்கை அழகுபடுத்திய பெருமை மாத்தியோசி மணி அவர்களையே சேரும்... .[/co]

    பூனைகள் கூட தன் கூட்டாளிக்கு உதவி செய்து வாழ்க்கையில் முன்னேற்றத் துடிக்குதூஊஊஊ.

    ஆனால் நாம் .... ??????

    சிந்திக்க வைக்கிறது,
    [co="dark green"]ஓம்... உண்மைதான் வெளியில் உதவ முடியாவிட்டாலும், கிடைக்கும்பொழுதில் வீட்டுக்குள்ளும் உதவி பண்ணி வீட்டிலுள்ளோரை மகிழ்விக்கலாம்தானே... சில ஆண்/பெண்கள்.. வெளியாட்களுக்கு மட்டும் விழுந்து விழுந்து உதவுவினம்.. வீட்டிலுள்ளோருக்கு உதவாயினம்.

    சிலர் வீட்டில் மட்டும் உதவி செய்வினம், வெளியே ஒரு சிறு உதவிகூட செய்யாயினம்.. செல்ஃபிஸ்:))..

    மனிதர்கள் பலவிதம். [/co]

    ReplyDelete
  40. மாத்தியோசி மணி மணி said...

    [co="dark green"]ஆவ்வ்வ்வ் என்னாது ? நான் கேட்டபடி பதிவு எழுதுறீங்களோ?:)).. சந்தோஷம் பொயிங்குதே.. சந்தோஷம் பொயிங்குதே... மியாவும் நன்றி...

    என்னாது நிரூபனைப் பற்றி ஏதும் கதைச்சனீங்களோ? உஸ்ஸ்ஸ்ஸ் அவர் இப்போ எவ்ளோ பெரிய ஆள்.. அவரைப் பற்றி அப்பூடியெல்லாம் கதைக்கப்பூடா:))..

    சரி சரி உளுக்கு எடுங்கோ.. நீங்கள் எக் ஐ கவுண்ட் பண்ணுறவராம் எண்டெல்லோ கேள்விப்பட்டனான்.. எப்போ பிசியோதெறப்பிஸ்ட் ஆ மாறினனீங்கள்?:))..

    மியாவும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.. மற்றும் புளொக்கை வடிவமைத்த அனைத்து உதவிகளுக்கும்..[/co]

    ReplyDelete
  41. priyasaki said...
    [co="dark green"]வாங்கோ அம்முலு வாங்கோ.. உங்களுக்கும் புளொக் டிஷைன் பிடிச்சிருக்குப்போல மியாவும் நன்றி .

    ஓ ஜேர்மனியில் புளொக்ஸ்பொட்டுக்கு 22ம் இடமோ ஹா..ஹா..ஹா.. அதுக்கு முழுக்காரணமும் நீங்களும் இளமதியும்தான் சொல்லிட்டேன்ன்ன்:))

    மியாவும் நன்றி அம்முலு.[/co]

    ReplyDelete
  42. வை.கோபாலகிருஷ்ணன் said... 10
    //
    ஒளவைப்பாட்டியின் திருக்குறளா?

    ஆஹா, இது வரை கேள்விப்பட்டதே இல்லை.
    [co="dark green"]உஸ்ஸ்ஸ்ஸ் கோபு அண்ணன் மெதுவாக் கதையுங்கோ:).. ஆரும் உங்களை, திருக்குறளை எழுதியவர் ஆரெனத் தெரியாமல் இருக்கிறார் எனத் தப்பா நினைச்சிடப்போகினமே:)).. அப்போ அதை ஒளவைப் பாட்டி எழுதல்லியோ?:)) ஸ்ஸ்ஸ் தாய்க்குலமே பெருமைப்பட்டோம் நேற்று:)), அவதான் அதை எழுதினவ என நினைச்சு:))சரி அதை விடுங்கோ.. [/co]

    அதிரா அதிகமாகவே படித்துக் குயம்பியுள்ளார் என்பது எங்களுக்கெல்லாம் தெளிவாகவே தெரிஞ்சு போயிடுத்து. ;)))))..

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... மீ ரொம்பத் தெளிவா இருக்கிறனாக்கும்:)) ஆனா என் பதிவு படிச்சு அல்லோரும் கொயம்பியிருக்கினம்:) என்பது மட்டும் தெரியுது:))..

    அதாவது கோபு அண்ணன், நேரடியாக எல்லாம் சரியான பதில்கள் கொடுத்தால் கண்ணை மூடியபடி படிச்சிட்டு மறந்திடுவினம்:), ஆனா இப்பூடிக் குழம்பிப் பதில் எழுதினா.. சிலருக்கு டவுட் வரும்.. அட உண்மையிலயே ஒளவைதான் திருக்குறளை எழுதியிருப்பாவோ.. என ஓடிப்போய் அதைக் கன்ஃபோம் பண்ணுவினம்.. அப்போ பின்பு வாழ்க்கையில் திருக்குறளை எழுதினவர் ஆரென்பதை மறக்கமாட்டினம்.. இது ஒரு சிறு உதாரணம்... இப்பூடிப் பெரிய சம்பவங்களும் நடக்கலாம் எல்லோ:)[/co]

    ReplyDelete
  43. வை.கோபாலகிருஷ்ணன் said... 12
    //

    கலிகாலம் மு[ற்றி]த்தி விட்டால் இப்படியெல்லாம் ஏதாவது விபரீதங்கள் ஏற்படக்கூடும் என்று, ஓர் பஞ்சாங்கத்தில் படித்த ஞாபகம்.

    ஆண்டவா ...... !!!!!!////

    [co="dark green"]உஸ்ஸ்ஸ் இப்போ எதுக்கு ச்ச்சும்மா இருக்கும் ஆண்டவனை டிசுரேப்பு பண்ணுறீங்க?:)..

    அதுசரி காய் முத்தும், கனி முத்தும் கேள்விப்பட்டிருக்கிறேன்ன்:)).. அதென்ன காலம் முத்தும் என புதுக்கவிதை சொல்றீங்க?:)) எங்கிட்டயேவா?:)) ஆவ்வ்வ்வ் திருச்சிமலைக்கோட்டைப் பிள்ளையாரே என்னைக் காப்பாத்த்த்த்த்த்..:)[/co]

    ReplyDelete

  44. வை.கோபாலகிருஷ்ணன் said... 11

    சுவாரஸ்யமான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.///


    [co="dark green"]மியாவும் மியாவும் நன்றி கோபு அண்ணன்.. வரவுக்கும் சபை நாகரீகமான பின்னூட்டங்களுக்கும்.[/co]

    ReplyDelete
  45. இராஜராஜேஸ்வரி said... 13
    எங்கட “கண்ணதாசன்” என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமோ? “உதவி செய்யவேண்டும் என்பதற்காக, எல்லோருக்கும் செய்யாதீர்கள், யாருக்குச் செய்கிறோம் என்பதும் முக்கியம்”.


    பாத்திரமறிந்து பிச்சையிடு

    என்றும் சொல்லியிருக்கிறாரே ..![co="dark green"] வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ.. ஓமென்ன.. பாத்திரமறிஞ்சு பிச்சையிடு.. உண்மைதான் அழகான வாசகம்..

    ஆஹா என் புளொக்கையும் பாராட்டியிருக்கிறீங்க, எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு மியாவும் நன்றி..[/co]

    ReplyDelete

  46. angelin said... 15
    // அவ்வைப்பாட்டியின்:) “திருகுறள்” போல:).. சொல்லிடுறேன்ன்ன்.. அதாவது..//

    என்னாது ??அவ்வைப்பாட்டி திருக்குறள் எழுதினாங்களா அவ்வவ்..நான் கானா உலகநாதன் என்றல்லவா நினைச்சேன் :))//

    [co="dark green"]வாங்கோ அஞ்சு வாங்கோ...

    ஹா..ஹா..ஹா.. இப்போதான் மேலே கோபு அண்ணனுக்குச் சொன்னேன், நான் தெளிவாத்தான் இருக்கிறேன்ன்:)) படிக்கிறவங்கதான் கொயம்பியிருப்பினம் என:))...

    ஆவ்வ்வ்வ்வ் அஞ்சுவுக்கு என்னமோ ஆச்சூஊஊஊஊஊஊஊ:)) கானா உலகநாதன்... ”கண்ணா லட்டுத் தின்ன ஆசையா”:) வில வரும் ... “நலம் நலமறிய ஆவல்ல்ல்”:) எண்ட பாட்டுக்கு இசை அமைத்தவரெல்லோ:))) இது தெரியாமல் பிரித்தானியாவில இருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).[/co]

    ReplyDelete
  47. angelin said... 16
    உதவி பற்றி நீங்க சொன்னது அனைத்துமே அருமையான நெத்தியடி கருத்துக்கள் அதிராவ் :))
    உதவி யாருக்கு செய்கிறோம் அவர்கள் அதற்க்கு தகுதியானவர்கள் தானா என்பதையெல்லாம் யோசித்து செய்வதே நல்லது ..
    பின் குறிப்பு ...நன் புள்ளி வச்சா dam கட்ற அளவுக்கு உதவி செய்வேன் .நீங்க எப்படி ??///

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. நான் புள்ளியே போட விடமாட்டனே:))) அவ்வ்வ்வ்வ்வ்.. ஏன் முறைக்கிறீங்க?:))..

    உது இருக்கட்டும் அஞ்சு.. தினம் ஒரு பதிவு போட்டு எங்கட நாட்டிலயும் புளொக்ஸ்பொட்டை மேலே கொண்டுவாங்கோ ஜொள்ளிட்டேன்ன்ன்:))

    டமில் மனத்திலயும் ஜொயின் ஆகிடுங்கோ... ஆனா நான் ஓட்டுப் போடமாட்டன்:)) எனக்கு அரசியல் எண்டால் அலர்ஜியாக்கும்:)) ஹையோ இது வேற ஓட்டு என உங்கட அம்பி சொல்லித்தந்தவர் மறந்திட்டேன்ன்:)) பழக்கதோஷம்.. மியாவும் நன்றி அஞ்சு..

    வாங்கோவன் பாபகியூ சாப்பிடுவம்?:))[/co]

    ReplyDelete
  48. ரெவெரி said... 21
    நலமா அதிராக்கா ?

    Peak Winterla BBQ...-:)

    உலகின் டாப் ப்ளாக் உங்களதுன்னு நினைச்சேன்...பூனைக்கும் சாரி...யானைக்கும் அடி சறுக்கும்ல...-:)

    [co="dark green"]வாங்கோ ரெவெரி... மீ நலம்.. நீங்களும் நலம்தானே?...

    ஸ்ஸ்ஸ் விண்டர் எண்டாலும்..ஃபிஸ் அகப்பட்டால் பாபகியூதான்ன்.. :)) எங்கிட்டயேவா?:)..

    ஹா..ஹா..ஹா.. ஸ்ஸ்ஸ் மெதுவாக் கதையுங்கோ:).. உலகின் பெஸ்ட் புளொக் என்ரதான் என ஷோ பண்ணி:), ஒருமாதிரி என் புளொக்கை ஓட்டிக்கொண்டிருக்கிறன்:) நீங்க வேற சந்தியில போட்டு உடைக்கப்பார்க்கிறீங்க கர்ர்ர்ர்ர்:))..

    பாருங்கோ 2 வருடத்தால:) சொறி டங்கு ஸ்லிப்பாச்ச்ச்ச்:) 2 நாளால.. புளொக்ஸ்பொட் டொட் கொம் தான் பிரித்தானியாவில முதலாவதா இருக்கும்:) அதுக்காகவே இப்போ ஓன்லைன்ல வெள்ளையர்களுக்கு டமில் படிப்பிக்கிறனாக்கும்:) அப்பத்தானே எல்லோரும் என் புளொக் படிப்பினம்:)..

    .. அதுசரி உங்களோடதும் அதுதானோ?:).. ஓயமாட்டேன்ன் ஓயமாட்டேன்ன்ன்ன்:)).. மியாவும் மியாவும் நன்றி [/co]

    ReplyDelete
  49. Mahi said...
    Me the 50? :)

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTgvJLe45AX0ZwqUMFAt8M80wGMMBBpTRhi5unrKul7ErQoDb2Alw[/im]

    ReplyDelete
  50. தமிழ் மணத்தில் எப்படி ஓட்டு போடணும்னு சொல்லுங்க அதிஸ்

    ReplyDelete
  51. புது பிளாக்.. அசத்தல்... வடிவமைத்த மணிக்கு என் பாராட்டுக்கள்....
    /// வாரம் 4 பதிவுகளை என்னிடம் இருந்து எதிர்பாருங்கோ:)) /// வாரம் நாலு முறையாவது என் நெற் வேக்கை ஒழுங்கா வேலை செய்யப்பண்ணுக ஆண்டவா....

    ReplyDelete
  52. //// சரி சரி அதிகம் பேசினால் சொல்ல வந்த விஷயத்தை மறந்திடுவேன்ன்:).////
    என்னாச்சு ... மெமரி லாஸ்ட்டா?? இதென்ன கொடுமை.. பூஸுக்கு வைத்தியம் பார்க்க ஒரு டொக்டர் இல்லையா????

    ReplyDelete
  53. எங்கட “கண்ணதாசன்” என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமோ? “உதவி செய்யவேண்டும் என்பதற்காக, எல்லோருக்கும் செய்யாதீர்கள், யாருக்குச் செய்கிறோம் என்பதும் முக்கியம்”./////
    இதனால் தானோ என்னவோ.. நான் யார்கிட்டயாவது உதவி கேட்டால் திரும்பி பார்க்காமல் ஓடுகினம்...ஒரு வேளை
    ///அதேபோல, பாவமே என உதவி செய்யப்போய், 4 வார்த்தை ஆறுதலாகச் சொன்னால்... அதைத் தப்பாகப் புரிந்து, லெவல்பட்டு, ஏளனமாகப் பார்ப்போரும் உண்டு. அல்லது உதவப் போனவரே, “பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுமளவுக்கு”.. அதிக உதவி எதிர்பார்த்துத் தொல்லை கொடுப்போரும் உண்டு.//// இந்த லிஸ்ட்ல நான் இருக்குறதா நினைச்சிட்டாங்களோ??? :(

    ReplyDelete
  54. அடடா.... பப்ளிக்கிலயும் நன்றி சொல்லி அவங்களை மகிழ்விக்கலாம் எண்ட விசயத்தை எனக்கு ஞாபகப் படுத்திய அதிராவுக்கு நன்றி.. ஏனென்றால் என்னுடைய ப்ளாக்கும் இப்ப சில நாட்களுக்கு முன்னரே திரும்ப வடிவமைத்தேன்.. நானும் அந்த நல்ல உள்ளத்துக்கு ஒரு நல்ல பதிவில் நன்றி சொல்லப்போறேன்ன்ன்ன்
    மியாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. தொடர்ந்து வாரம் நாலு முறை அசத்துங்க.. காத்திருக்கிறேன்...

    ReplyDelete

  55. angelin said...
    தமிழ் மணத்தில் எப்படி ஓட்டு போடணும்னு சொல்லுங்க அதிஸ்//

    [co="dark green"]ஆங்ங்ங்... அஞ்சு எண்டால் அஞ்சுதான் குட் கேள்:).. கொஞ்சம் இருங்க அஞ்சு, இப்பத்தான் ஜொயின் ஆகப்போகிறேன் என றிகுவெஸ்ட் அனுப்பியிருக்கிறேன்ன்ன்:)(அதுக்கே இவ்ளோ சவுண்டெண்டால்ல்ல்.. :))) இனித்தான் அவர்கள் ஆக்‌ஷெப் பண்ணுவினம் அதன் பின்புதான் வோட் பண்ணலாம்ம்.. அதுவரை ச்ச்சும்மா பெயர் மட்டும்தான் மேலே இருக்கும்..[/co]

    ReplyDelete
  56. [co="dark green"]வாங்கோ பூங்கோதை வாங்கோ..[/co]

    //வாரம் நாலு முறையாவது என் நெற் வேக்கை ஒழுங்கா வேலை செய்யப்பண்ணுக ஆண்டவா....//

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... அப்படியே 4 முறை பண்ணினால் போதுமோ?:) ஆண்டவா கோதைக்கு 24 *7 நெட்டை இயங்கச் செய் அப்பனே...[/co]

    ReplyDelete

  57. பூங்கோதை said...
    //// சரி சரி அதிகம் பேசினால் சொல்ல வந்த விஷயத்தை மறந்திடுவேன்ன்:).////
    என்னாச்சு ... மெமரி லாஸ்ட்டா?? இதென்ன கொடுமை.. பூஸுக்கு வைத்தியம் பார்க்க ஒரு டொக்டர் இல்லையா????

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. அதுதான் வீட்டில எனக்கேதும் வருத்தமென வாய் திறக்கேலாது, உடனே கணவர் சொல்லுவார் வாங்கோ vet.. இடம் போவோம் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).[/co]

    ReplyDelete
  58. [co="dark green"]என்னாச்சு கோதை? ஏதோ சொல்ல வாறீங்க என்பது மட்டும் புரியுது ஆனா புரியேல்லை:).[/co]

    அடடா.... பப்ளிக்கிலயும் நன்றி சொல்லி அவங்களை மகிழ்விக்கலாம் எண்ட விசயத்தை எனக்கு ஞாபகப் படுத்திய அதிராவுக்கு நன்றி.. ஏனென்றால் என்னுடைய ப்ளாக்கும் இப்ப சில நாட்களுக்கு முன்னரே திரும்ப வடிவமைத்தேன்.. நானும் அந்த நல்ல உள்ளத்துக்கு ஒரு நல்ல பதிவில் நன்றி சொல்லப்போறேன்ன்ன்ன்//

    [co="dark green"]தபேயில்லை சொல்லுங்கோ.. எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு..... ஹையோ டங்குஸ்லிப்பாகாமல் எழுதிட்டேன் என நினைக்கிறேன்ன்ன்:)) [/co]

    ReplyDelete
  59. தொடர்ந்து வாரம் நாலு முறை அசத்துங்க.. காத்திருக்கிறேன்...

    [co="dark green"]அவ்வ்வ்வ்வ் மீ சொல்வதெல்லாத்தையும் நம்புறதே இவிங்களுக்குத் தொழிலாப்போச்ச்ச்:))..

    கோதை பூஸ் ஒன்று புறப்படுதே...:)) இதோ வந்திட்டே இருக்கு:) பதிவுகள் தான்ன்:).

    மியாவும் நன்றி கோதை, உங்கட பக்கம் இன்னும் எட்டிப்பார்க்கேல்லை இதோ வந்திடுறேன்ன்..[/co]

    ReplyDelete
  60. [co="dark green"]எங்கே யங்மதியைக் காணேல்லை?:)).. அஞ்சூஊஊஊஊஊஊஊஊ... எங்க போயிட்டா யங்மூன்ன்?..[/co]

    ReplyDelete
  61. ஹையோ....நான் இங்கை மோணு நாளா இல்லாம போயிட்டேன்... அதுக்குள்ள இவ்வளவு போயிடிச்சோ... அவ்வ்வ்.....

    ReplyDelete
  62. இப்பதான் வந்தேன். நல்லா இருக்கு. எல்லாப் பூஸும். உதவியைப்பற்றி நல்ல விளக்கம்...:)

    எல்லாமே கலக்கல். இன்னும் மறவங்களின் பின்னூட்டம் வாசிக்கேலை. அதுவும் முக்கியம். எல்லாரும் நல்ல நல்ல கருத்துக்கள் பரிமாறுவாங்களே...

    ReplyDelete
  63. பாருங்கோ அதிரா.. உங்களின் அன்பை நீங்க என்னை காணோம்னு தேடிக்கிறப்போ நானும் இங்கை வந்திருக்கிறேனே..:)
    ரொம்ம்ம்ப நன்றி அதிரா... உங்க அன்பைகண்டு கண்கலங்ங்கீ.... ;’(

    என்னோட பேரும் பதிவில இருக்கு. ஆனா அதுகுரிய விளக்கம் ஒண்ணும் காணமே...

    ReplyDelete
  64. @athira//கொண்டார்க்கும் //

    அது கொன்றார்க்கும் ....நான் உங்களை கண்கொத்தி பாஆ ....ஆஆ பாத்துக்கிட்டு இருக்கேன் மியாவ்

    ReplyDelete
  65. angelin said...
    தமிழ் மணத்தில் எப்படி ஓட்டு போடணும்னு சொல்லுங்க அதிஸ்//
    நான் கேட்டது மைனஸ் ஓட்டு போடறதை பற்றி ஹ ஹா ஹாஆ .சொன்ன சொல் மாறக்கூடாது குட் கேர்ள் ..குட் கேர்ள்தான் நான்

    ReplyDelete
  66. [co="dark green"]வாங்கோ இளமதி வாங்கோ.. கரெக்ட்டா நான் பதிவு போடும்போது காணாமல் போயிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

    டமில் மனம்பற்றித்தானே? விரைவில் பதில் பதிவு மணி போடுவார்ர்... போடுவேன் என வாக்குக் கொடுத்திட்டார் இல்ல. மீறமாட்டார்ர்...

    மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  67. angelin said...
    @athira//கொண்டார்க்கும் //

    அது கொன்றார்க்கும் ....நான் உங்களை கண்கொத்தி பாஆ ....ஆஆ பாத்துக்கிட்டு இருக்கேன் மியாவ்

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உதுக்காகத்தான் மேலே படத்தில ட்ரைபண்றமாக்கும் பாபகியூ போட:).. பிடிச்சிட்டால் புரொம்ளம் சோல்வ்ட்:).

    எழுதும்போது நான் நினைச்சேன்ன் ஏதோ தப்பா இருக்கே என:) ஐ மீன் டங்கு ஸ்லிப்பாகுதே என:)[/co]

    ReplyDelete
  68. 67
    angelin said...
    தமிழ் மணத்தில் எப்படி ஓட்டு போடணும்னு சொல்லுங்க அதிஸ்//
    நான் கேட்டது மைனஸ் ஓட்டு போடறதை பற்றி ஹ ஹா ஹாஆ .சொன்ன சொல் மாறக்கூடாது குட் கேர்ள் ..குட் கேர்ள்தான் நான்

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதுதான் நடக்காது.. விடமாட்டேன்ன் எங்கிட்டயேவா.. மைனஸ் ஓட்டுப் போடும் கை இருக்காது மேல:) பிளஸ் வோட்டுக்கு மட்டும்தான் குறியீடு வைப்பனாக்கும்.. இது அந்த அஞ்சு செய்த டுவிட்டர் மேல சத்தியம்:).[/co]

    ReplyDelete
  69. என் போன்றவர்கள் எல்லாம் எங்கே என்று இன்னும் தேடுகின்றோம் !ஹீ பூசாரா கொக்கா நல்லா பதிவு போடுங்கோ வாழ்த்துக்கள்! மணிசார் வலையை அழகாய் வடிவமைத்து தந்து இருக்கின்றார்!

    ReplyDelete
  70. எங்கே ஓட்டுப்பட்டை அதிரா?????

    ReplyDelete
  71. [co="dark green"]வாங்கோ நேசன் வாங்கோ.. புளொக் அழகாக இருக்கோ? மியாவும் நன்றி.

    அது இப்போதான் அனுமதி கேட்டிருக்கிறேன் நேசன், இன்னும் அவர்கள் இணைக்கவில்லை.. இணைத்தவுடந்தான் வோட் பண்ண முடியும்:)..

    மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  72. ஆத்தி மேட்டர் இங்க நடந்திருக்கா..... சரியான சபதம் எடுத்திருக்கிறீங்களே....
    வாழ்த்துக்கள் ...
    உங்களோட ப்ளாக் ரேங்கை உயர்த்துரதுல எங்கட பங்களிப்பும் கட்டாயம் இருக்கும் :)

    ReplyDelete
  73. //வாரம் 4 பதிவுகளை// சொன்ன மாதிரி ஒழுங்காப் போடவேணும்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.