நல்வரவு_()_


Tuesday, 19 February 2013

கூகிள்.. கூகிள்.. பண்ணிப்பார்த்தேன்ன்..:)

இந்தப் பிரித்தானியாவில..... 
இவர்போல ஒரு அழகனைக் கண்டதில்லை:)
 இவர்தான் எங்கட வீட்டு புது வரவு.. ஆண்பிள்ளை.. பெயர் ரிமி(Timmy). ஆனா எனக்கு வாயில “நிபி” எண்டுதான் வருது:), (அஞ்சுவின் செல்ல மகனின் பெயர் “நிபி”:)).நிபியைப் பார்க்க இங்க வாங்க..

தன் எக்ஸசைஸ் மெஷினில் ஏறி எக்‌சஷைஸ் செய்கிறார்ர்..:).

கீழே இறங்கத் தெரியாது, ஆனா கடகடவென மேலே ஏறிடுவார்.. ஏறியிருந்து இறங்க முடியாமல் முழிசுறார் பாருங்கோ:).. படியிலும் கடகடவென ஏறிப்போவார், ஆனா கீழே இறங்கி வரமாட்டார்:).

ஹொலிபிளவர் சாப்பிடுகிறார், பக்கத்திலே அவரின் சூப்பி போத்தல்(தண்ணிப்போத்தல்) எக்‌ஷஸைஸ் செய்வார், ஓடிவந்து தண்ணி குடிப்பார், மீண்டும் ஓடிப்போய் செய்வார்.. ஏதோ எக்ஸாமுக்கு ரெயினிங் எடுக்கிறவை மாதிரி:)..
அவருக்கு விடியும் நேரம் .. எங்கட நைட் 8 மணி. அப்பத்தான் எழும்புவார். படுக்கும் நேரம் எங்களி்ன் காலை 7 மணி. இரவிரவாகத்தான் விளையாட்டுக்கள் காட்டுவார். கேஜ்ஜினுள் மெத்தைபோல ஒருவித மரத்தூள் இருக்கு அவருக்கென, அதை அழகாகப் போட்டு பரவி விடுவோம், இரவிரவாக, தும்புத்தடி கொண்டு கூட்டுவதுபோல அழகாகக் கூட்டி, ஒரு மூலையில் மணல்கோபுரம்போல கட்டி, அதில் ஏறிப் புதைந்து கிடந்துதான் நித்திரை கொள்வார்.

இப்படித்தான் எம்மைக் கண்டால், கம்பியில் ஏறி உணவு கேட்பார், கொடுப்பதை எல்லாம், வாயின் அருகில் இருக்கும் பாக் போன்ற பையினுள் கடகடவென போடுவார், அது முட்டியதும், ஓடிப்போய் அவரின் சாப்பிடும் தட்டிலே கொட்டி வைப்பார், மீண்டும் ஓடிவந்து மிகுதியை வாங்குவார்.

ஆனா இவருக்கு வால் இல்லை சிரியன் வகையைச் சேர்ந்த ஹம்ஸ்டர்தான் இவர்:)... குண்டர்:))..

அடுத்து எங்க வீட்டு செல்லங்கள்.. படம் பாருங்கோ.. விளக்கம் தேவைப்படாதென நினைக்கிறேன்ன்..



==============================================
சரி இப்பத்தான் விஷயத்துக்கே வந்திருக்கிறேன்ன்ன்...

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி:).. சுவீட் 16:) ஆட்களும் வோட் பண்ணலாம் என குயின் அம்மம்மா சொல்லிட்டா:),அதனால அதிராவும் எலக்‌ஷனில.. சே..சே... அது டங்கு ஸ்லிப்பாச்சு:).... தமிழ்மணத்தில இணைஞ்சிட்டா.. அல்லோரும் அதிராவுக்கு ஓட்டுப் போட வாங்கோ.. இப்பத்தான் தமிழ்மணம் பற்றியும் வோட் பண்ணுவது பற்றியும் அறிந்துகொண்டு வருகிறேன்ன்... இனி நானும் உங்களிடம் வோட் பண்ணும் அட்டை இருப்பின் உங்களுக்காகவும் வோட் பண்ணுவேன்ன்..என்பதனை இந்த தேம்ஸ்நதித் தண்ணிமீது அடித்து சொல்லிக்கொள்கிறேன்ன்ன்:).

 ஊசிக்குறிப்பு:. என்னிடம் மைனஸ் வோட் பண்ணும் அடையாளம் இல்லையாக்கும்:) அதனால எல்லா வோட்டும் பிளஸ்ஸுக்கே :)..

பின் ஊசி இணைப்பு:
ஓடி வாங்கோ சுவீட் எடுங்கோ...
நோஓஓஓஓ இடிபட்டிடப்பூடா, முதல்ல உங்கட சின்ன விரலைக் காட்டுங்கோ:), சின்னி விரலில் மை இருந்தால்தான் சுவீட் தருவேன்ன்:).. அதாவது வோட்டுப் போட்டால் சின்னி விரலில் மை போடுவினமெல்லோ:)).. அதுதான்.. விரலைக் காட்டிட்டு சுவீட் எடுங்கோ:).
===========================================
வாழ்க்கையின் அழகான பகுதியை நேசிக்கப் பயில வேண்டும். 

எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் கொள்ளல் வேண்டும்.
சுவாமி விவேகானந்தரிடமிருந்து இதனை, புத்திசாலித்தனமாக களவெடுத்து வந்தவர்:):- புலாலியூர் பூஸானந்தா:).
======================================================


94 comments :

  1. வணக்கம் ப்ளொக் ஓனர் அவர்களே! நான் உள்ளே வரலாமா?

    ReplyDelete
  2. மேலே இருக்கும் பழைய ஆதிகால, பாட்டுக்கு என்னுடைய கண்டனங்கள்! எப்ப பார்த்தாலும் பழைய பாட்டுக்கள் போடுகினம்! ஒருவேளை சுவீட் 66 ல இருக்கினம் போல :)

    ReplyDelete
  3. டிமி அழகா இருக்கான் ..ஆனா என் மகன் ரொம்ப அழகாக்கும் :))
    அதீஸ் இவன் சிரியன் வகை ..நிபி ரஷ்யன் ட்வார்ப் வகை ..

    ரொம்ப இன்ட்ரஸ்டிங் இவற்றோடு விளையாடுவது

    ReplyDelete
  4. சரியா சொன்னீங்க மணி .அதீஸ் ..நிபிக்கு கூகிள் கூகிள் பாட்டு நேயர் விருப்பமா வேணுமாம் :))

    ReplyDelete
  5. இப்ப போயிட்டு மீண்டும் வருவேன் இங்கே ..சப்பாத்தி சுடனும் மகளுக்கு

    ReplyDelete
  6. கூகிள்.. கூகிள்.. பண்ணிப்பார்த்தேன்ன்..:) ////

    யாரை? எதை? எப்போது? எங்குவைத்து? :)

    ReplyDelete
  7. ஆவ்வ்வ்வ்வ்வ் மணி வாங்கோ வாங்கோ.. ஓல்ட் இஸ் கோல்ட் ஆக்கும்:) சரி உது இருக்கட்டும்.. சின்னி விரலைக் காட்டுங்கோ:)). ஆஆஆ கையில மை இல்லையே:)).. என்னமோ ஆகிட்டுது மணி வோட்ட் பெட்டிக்கு.. :(.

    மியாவும் நன்றி முதல் வருகைக்கு.

    ReplyDelete
  8. பூனையார் படம் போட்டே பதிவு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லித்தந்த அதிராவுக்கு ஒரு ஓட்டுப் போடுவம்:))) நல்ல படங்கள்!

    ReplyDelete
  9. அஞ்சு வாங்கோ வாங்கோ


    angelin said...
    டிமி அழகா இருக்கான் ..ஆனா என் மகன் ரொம்ப அழகாக்கும் :))
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அஞ்சு உங்கட மகனோட சேர்த்து எங்கட ரிமிக்கும் பொம்பிளை பாருங்கோ பிளீஸ்ஸ் ஆனா பெண் இங்கிலீசு கதைக்கோணுமாம்:)

    ReplyDelete
  10. Timmy -என ஸ்பெல்லிங் போட்டு "ரிமி" என பேர் போட்டு குயப்புறீங்களே பூஸ்?! பையனுக்கு 3 மாதம் கழிந்தபிறகுதான் படத்தை ப்ளாகில ரிலீஸ் பண்ணுவதுன்னு வேண்டுதலோ?! எப்ப்ப்ப்ப்ப்பவோ சொன்னீங்க, ரிமி அரைவல் பத்தி, ஆனா இப்பத்தான் ஆள் இங்க வெளிக்கிட்டிருக்கிறார். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    உங்களை அப்புறமாத் திட்டிக்கலாம், இப்ப டிமி-க்கு வாழ்த்துக்கள்! இந்த ஹாம்ஸ்டர்ஸ் நான் யு.எஸ். வந்த புதுசில ஒரு அமெரிக்கன் நெய்பர் வீட்டில பாத்தேன். க்யூட்டா இருந்தது. உங்கட ரிமி உங்களைப்போலவே (குண்டரா...ஹிஹ்ஹிஹி) இருக்கிறார். நல்ல கவனிப்பு! :)))

    அழகான இரு சோடி மீன்கள்! :)

    பாட்டு கொஞ்சம் ஓல்டூ..மாத்துங்க.

    விவேகானந்தரிடமும் களவாடும் புலாலியூர் பூஸானந்தாவை அப்புடியே அமுக்கி, தேம்ஸீல ஒரு வாரம் முங்கு நீச்சல் அடிக்க விடவேணும் என அமேரிக்கவாழ்;) ப்ளாகர்கள் சார்பாக உங்கட க்வீன் உத்தரவு போட்டிருக்காக..கோ அன்ட் ஜம்ப் இன் தேம்ஸ்! ;)))))))

    ReplyDelete

  11. angelin said...
    சரியா சொன்னீங்க மணி .அதீஸ் ..நிபிக்கு கூகிள் கூகிள் பாட்டு நேயர் விருப்பமா வேணுமாம் :))

    ஹா.ஹா..ஹா.. உலகம் அழியப்போகுது:).. சுட்டிட்டு வாங்க அஞ்சு.. அப்பாத்தியைத்தான்:)..

    மியாவும் நன்றி.

    ReplyDelete

  12. வாங்கோ நேசன்..ஆவ்வ்வ்வ்வ் ஓட்டுப் போடுங்கோ சினிவிரலைக் காட்டி சுவீட் எடுங்கோ...:)

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  13. /டிமி அழகா இருக்கான் ..ஆனா என் மகன் ரொம்ப அழகாக்கும் :))/ ஹஹஹ! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சாக்கும்! எனக்கென்னமோ இந்த ஹம்ஸ்டர்ஸ் எல்லாம் பார்க்கத்தான் புடிக்குது, எங்க வீட்டு ஆள்;) போல வருமா?!!
    ;)))))))

    /உங்கட மகனோட சேர்த்து எங்கட ரிமிக்கும் பொம்பிளை பாருங்கோ பிளீஸ்ஸ் ஆனா பெண் இங்கிலீசு கதைக்கோணுமாம்:)/ பொம்பிளை பார்க்கப் போகைல சொல்லி விடுங்கோ Mommies..னும் வாரேன், பஜ்ஜி-சொஜ்ஜி எல்லாம் சுவைச்சு பொம்பிளைய செலக்ட் பண்ண! :)

    ReplyDelete
  14. எனக்கின்னும் ஓட் ;) பண்ணும் வயசு வரல்லையாம் அதிராவ்...மீ ரொம்ப நல்ல பொண்ணு, 6 வயசிலருந்தே! இன்னும் ஸ்வீட் 16 கூட ஆகலையாம், அதனால சின்னிவிரல்;) மை எல்லாம் மீ-க்கு கிடையாது. ஆனா சொக்லட் மட்டும் ஒண்ணே ஒண்ணு நைஸா ஒளிச்சுத்தாங்க.

    ReplyDelete
  15. Mahi said...
    Timmy -என ஸ்பெல்லிங் போட்டு "ரிமி" என பேர் போட்டு குயப்புறீங்களே பூஸ்?! பையனுக்கு 3 மாதம் கழிந்தபிறகுதான் படத்தை ப்ளாகில ரிலீஸ் பண்ணுவதுன்னு வேண்டுதலோ?!

    வாங்கோ மகி வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. நல்ல ஞாபக சக்திதான் போங்கோ:).. மறந்திருப்பீங்க என நினைச்சுட்டேன்ன்.. .

    நியூ இயருக்கு முதல்நாள் வாங்கினோம், அப்போ இவருக்கு வயது 14 நாட்கள்...

    நோஓஓஓ T இல ஆரம்பிச்சால்ல் “ரீ” எண்டுதான் சொல்லுவேன்ன்:).. D இல ஆரம்பிச்சால் மட்டும்தான் “டி” எனச் சொல்லுவனாக்கும்:).. இது அந்த தேம்ஸ் தண்ணிமேல சாத்தியம்.. செ..சே டங்கு ஸ்லிப்:).... சத்தியம்:).

    ReplyDelete
  16. அழகான இரு சோடி மீன்கள்! :)

    பாட்டு கொஞ்சம் ஓல்டூ..மாத்துங்க.

    அது ஒரு ஜோடி 2009 இல வாங்கியது ஏனைய சோடி 12 இல வாங்கியது அவை ஸ்லோ ஃபிஸ் வகை.

    அவ்வ்வ்வ் எனக்கு உந்தப் பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.. படம் பார்க்காமல் கண்ணை மூடிட்டுக் கேட்டுப் பாருங்கோ மகி.. சூப்பர்.. அதிலயும் அதன் கருத்து விளங்கிக் கேட்டால் இன்னும் சூப்பர்... அம்மமாதான் கருத்துச் சொல்லித் தந்தவ:)

    ReplyDelete
  17. //இது அந்த தேம்ஸ் தண்ணிமேல சாத்தியம்.. செ..சே டங்கு ஸ்லிப்:).... சத்தியம்:).// ஹ்ம்ம்..டங்கு ஸ்லிப்?! இருக்கட்டும்,இருக்கட்டும்! இன்னுங் கொஞ்ச நேரத்திலை லெக்கு ஸ்லிப்:) ஆகி தேம்ஸில பாஞ்சு முங்கு நீச்சல் அடிக்கோணும், be prepared அதிராவ்! ;)

    /நல்ல ஞாபக சக்திதான் போங்கோ:).. மறந்திருப்பீங்க என நினைச்சுட்டேன்ன்.. ./ ஹஹ! அதெப்பூடி? அதெப்பூடி மறப்போம்? கர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  18. விவேகானந்தரிடமும் களவாடும் புலாலியூர் பூஸானந்தாவை அப்புடியே அமுக்கி, தேம்ஸீல ஒரு வாரம் முங்கு நீச்சல் அடிக்க விடவேணும் என அமேரிக்கவாழ்;) ப்ளாகர்கள் சார்பாக உங்கட க்வீன் உத்தரவு போட்டிருக்காக..கோ அன்ட் ஜம்ப் இன் தேம்ஸ்! ;)))))))//

    நோஓஓஓஓஒ:) குதிக்கிறது பிரசனை இல்லை..:) ஆனா ஒபாமா அங்கிள் உதுக்கு ஒத்துக்க மாட்டார்ர்:)

    அவர் தான் பதவியில் இருக்கும்வரை என்னை பேஷனல் செக்கரட்றி ஆக இருக்கோணும் என சத்தியம் வங்கிட்டார்ர்:)).. மீ சத்தியம் பண்ணினால் மீற மாட்டனாக்கும்:).. கர்ணன் பரம்பரை:)) நேக்குத் தெரிஞ்சதெல்லாம் கடமை நேர்மை,எருமை, கண்ணியம் கட்டுப்பாடு:)

    ReplyDelete
  19. பொம்பிளை பார்க்கப் போகைல சொல்லி விடுங்கோ Mommies..னும் வாரேன், பஜ்ஜி-சொஜ்ஜி எல்லாம் சுவைச்சு பொம்பிளைய செலக்ட் பண்ண! :)

    ஹா..ஹா..ஹா... பொம்பிளாஇ வீட்டில சோளன், எள்ளுப்பொரி.. சீரியல் இப்பூடித்தான் தருவினம் ஓகேயோ மகி?:)

    ReplyDelete
  20. பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக ஓட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
    நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
    உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்..

    .....ஹ்ம்ம்!! :)))

    /அதிலயும் அதன் கருத்து விளங்கிக் கேட்டால் இன்னும் சூப்பர்... அம்மமாதான் கருத்துச் சொல்லித் தந்தவ:)/ சூப்பர் அம்மம்மா! சூப்பர் பேத்தி! ;)))

    ReplyDelete
  21. Mahi said...
    எனக்கின்னும் ஓட் ;) பண்ணும் வயசு வரல்லையாம் அதிராவ்...மீ ரொம்ப நல்ல பொண்ணு, 6 வயசிலருந்தே! இன்னும் ஸ்வீட் 16 கூட ஆகலையாம், அதனால சின்னிவிரல்;) மை எல்லாம் மீ-க்கு கிடையாது. ஆனா சொக்லட் மட்டும் ஒண்ணே ஒண்ணு நைஸா ஒளிச்சுத்தாங்க.///

    ஹா..ஹா..ஹா... நோஓஓஓ:).. நேக்குத்தான் வயசு பார்த்தவை:) எனக்கு வோட் பண்ணும் உங்களுக்கெல்லாம் வயசெல்லை இல்லை:) 90 ஆனாலும் கை நடுங்கினாலும் பிடிச்சு வச்சுக் குத்திடுவோம்:) வோட்டைத்தான்:)).. பயப்பூடாமல் பண்ணுங்க:)..

    ஆனா மை இருந்தால்தான் சுவீட் கிடைக்குமாக்கும்:).. சரி சரி ரொம்பப் பாவமாக் கிடக்கு ஒரு சுவீட் எடுங்க:) அஞ்சுவுக்குக் காட்டிட வாணாம்ம்:)) ஆனா நாளைக்கு கையில மை இருக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:).

    ReplyDelete
  22. /நான் வளைகொண்ட கையாலே மெதுவாக ஓட/ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..எ.பிழை ஆகிட்டு!!! "மெதுவாக மூட" என்று திருத்திப் படியுங்க, நன்றி! :)

    ReplyDelete
  23. /பொம்பிளாஇ வீட்டில சோளன், எள்ளுப்பொரி.. சீரியல் இப்பூடித்தான் தருவினம் ஓகேயோ மகி?:)/ ஓஓஓ...நோ! எனக்கு சொஜ்ஜி-பஜ்ஜி தான் வேணும். ஸ்பெஷல் ஆர்டர் குடுத்து வையுங்கோ, அப்பதான் நான் ப்ளேன் ஏறுவேன். :)

    சப்பாத்தி சுடப்போன அக்காவை இன்னுங் காணேல்ல..என்ன ஆனாவோ!?!! ;))))

    ReplyDelete
  24. யாரையுமே இந்தப் பக்கம் காணாத காரணத்தால் நானும் மூட்டை முடிச்சுக்களுடன்;) மகி'ஸ் ஸ்பேஸுக்குக் கிளம்புகிறேன், நன்றி வணக்கம்!

    bye bye ரிமி.. bye bye நிபி..bye bye mommies! :)

    ReplyDelete
  25. Mahi said... 18

    /அதிலயும் அதன் கருத்து விளங்கிக் கேட்டால் இன்னும் சூப்பர்... அம்மமாதான் கருத்துச் சொல்லித் தந்தவ:)/ சூப்பர் அம்மம்மா! சூப்பர் பேத்தி! ;)))//

    ஆவ்வ்வ் தங்கூ.. தங்கூ...:)) அம்மம்மாவும் என்னைப்பார்த்து “சூப்பர் பேத்தி” எண்டுதான் சொல்றவ...:).

    அப்போத மகி அவசரமா ஓடவேண்டி வந்திட்டுது, அதனால உங்களிடம் சொல்லாமல் ஓடிட்டேன் மன்னிச்சிடுங்க..

    ReplyDelete

  26. Mahi said...
    /பொம்பிளாஇ வீட்டில சோளன், எள்ளுப்பொரி.. சீரியல் இப்பூடித்தான் தருவினம் ஓகேயோ மகி?:)/ ஓஓஓ...நோ! எனக்கு சொஜ்ஜி-பஜ்ஜி தான் வேணும். ஸ்பெஷல் ஆர்டர் குடுத்து வையுங்கோ, அப்பதான் நான் ப்ளேன் ஏறுவேன். :)

    சப்பாத்தி சுடப்போன அக்காவை இன்னுங் காணேல்ல..என்ன ஆனாவோ!?!! ;))))

    அப்பூடியெண்டால் வேறு வழியில்லை:) அஞ்சுவிடம் சொல்லிட வேண்டியதுதான், வீட்டில இருந்து சொஜ்ஜி பஜ்ஜி செய்து கான்பாக்கில எடுத்து வந்து மகிக்கு கொடுத்து:) , மருமகள்வீட்டு மானத்தைக் காப்பாத்திடுங்க என:)...

    சப்பாத்தி சுடப் போன அஞ்சு.... கால் ஸ்லிப்பாகி:))... சே.. சே... அப்பூடி ஏதும் இருக்காது தெகிரியமா:) இருப்பம் வந்திடுவா மகி:).

    ReplyDelete
  27. Mahi said...
    யாரையுமே இந்தப் பக்கம் காணாத காரணத்தால் நானும் மூட்டை முடிச்சுக்களுடன்;) மகி'ஸ் ஸ்பேஸுக்குக் கிளம்புகிறேன், நன்றி வணக்கம்!

    bye bye ரிமி.. bye bye நிபி..bye bye mommies! :)
    போயிட்டு வாங்க மகி.. மொம்மீஸுக்கு சொன்னா டட்டீஸ் கோச்சிடமாட்டினம்?:).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  28. ஆஆ :)) வாங்க மகி நாம போலாம் ..வரும்போது அந்த யெல்லோflower ஒரு கொத்து கொண்டாங்க
    நிபி லைக்ஸ் யெல்லோ கலர் :))

    ReplyDelete
  29. சப்பாத்தி சுட்டு முடிச்சிட்டு சாப்பீட்டும் வந்தாச்சு :))
    அப்புறம் மகி முதலில் நிபிக்கு பெண் பார்த்திட்டு அப்புறம் டிமிக்கு ::)) சரியா
    நானே குழப்பத்தில் இருக்கேன் மணி பிரெஞ்சு பெண் என்கிறார் ,ஹேமா ஸ்விஸ் பெண்ண என்கிறார்
    இதில்லாம அம்முலு ஜெர்மன் பக்கம் பாக்கிரான்கலாம் .ஸ்பெயினில் இருந்து குட்டி எலி வேற கிரீன் மாக்சி போட்டு hiசொல்லுது :)) i need your help mahi :))

    ReplyDelete
  30. சப்பாத்தி சுடப் போன அஞ்சு.... கால் ஸ்லிப்பாகி:))... சே.. சே... அப்பூடி ஏதும் இருக்காது தெகிரியமா:) இருப்பம் வந்திடுவா மகி://அவ்வா அவ்வ்வவ்வா ..கர்ர்ர்ர்ர்ர்ர் ..

    ReplyDelete
  31. Angel Akka, you don't exactly need a single daughter-in-law, right? ;) country-ku onnaa valaichu potturunga..so that we can go n enjoy all the countries with Nibi couple! Hihihihi....:)

    ReplyDelete
  32. அடடா நம்ம ரிமி...:) வாவ்வ்...... அழகா இருக்கிறாரே. வாங்கினவுடனே காட்டினதுக்கு இப்ப வளர்ந்திட்டார். வெள்ளைவெளேர்ன்னு அழகுக்குட்டி...:)

    பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவைகளின்ர விளையாட்டை... ஆள் நல்ல சுட்டி, சுறுசுறுப்பென தெரியுது.

    நாங்கள் முந்தி அணில் வளர்த்தனாங்கள். அவை படுக்கிறதுக்கு கொஞ்சம் குகைமாதிரி இருட்டா இருக்கிற பெட்டி மரத்தூள் போட்டு கொழுவியிருந்தம். அதுக்குள்ளதான் போய்ப் படுப்பினம். வின்ரர் காலத்தில 4,5 நாளைக்கும் தங்களின் படுக்கை இடத்தில இருந்து வெளியாலை வாரவே மாட்டினம். சாப்பாடு தண்ணிகூட இரவிரவா வந்து சாப்பிட்டு ஓடிப்போய் படுத்திடுவினம். வின்ரர் ஸ்லீப் எண்டு சொல்லுவினம். உவரும் அப்பிடித்தானோ...

    ReplyDelete
  33. கண்ணாடிப்பெட்டிச் செல்லங்களும் அழகோஅழகுதான். பெரியவர் ஒருத்தரும் இருக்கிறாரோ... மற்றைவையை அனுசரிச்சுப்போவாரோ.. இல்லை தானே ராஜா அப்பிடித்தானோ... அழகுதான்...

    வீட்டிலை இவைகள் இருந்தாலே அவைகளைப் பார்க்கிறதிலையே எங்களுக்கும் பொழுதும் போகும். மனதிற்கும் நல்ல மாறுதல்...:)

    ReplyDelete
  34. //தமிழ்மணத்தில இணைஞ்சிட்டா.. அல்லோரும் அதிராவுக்கு ஓட்டுப் போட வாங்கோ.. //
    அதுசரி வோட்டுப்போடலாம் எங்கை போடுறது. எப்புடிப்போடுறது. எனக்கு படங்கீறி விளங்கப்படுத்தினாத்தான் உண்டு...:)
    அதுக்கும் நாங்களும் தமிழ்மணத்தில உறுப்பினராப் பதியோணுமெல்லோ... இல்லாம எப்புடிப்போடுறது... கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.....:)))

    ReplyDelete
  35. பூஸானந்தா மொழி சூப்பர்.
    எல்லாம் நன்மைக்கேதான்.. ஆனால் சிலநேரம் சிலவிசயம் இதுக்கு ஒத்துவருகுதில்லை எனக்கு....:)

    நல்ல பதிவு, எல்லாம் சூப்பர். உங்களுக்கும் உங்கள் செல்லங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

    ஹாஆ..வோட் எப்படி போடுறது எண்டு சொல்லிப்போடுங்கோ மறந்திடாமல்...:)

    ReplyDelete
  36. ஹ்ம்ம்.. ஒரு வழியா 35 ல வந்திட்டன்... அட..கொமெட்ண்ட்ஸ் கணக்கை சொல்லுறன்..
    ரிமி...வாவ்...வாவ்.. அழகு குட்டி தான்...மேல ஏறத்தெரியுது.. இறங்கத் தெரியாதாம்.. உப்பிடி தான் ஒரு நாள் சின்ன வயசில என்ர அண்ணாவோட சேர்ந்து கொய்யா மரத்தில ஏறிட்டன்.. அப்பா வந்ததும் அவன் இறங்கி ஓடிட்டான்... எனக்கு... ரிமியின் நிலை தான் .. இறங்கத் தெரியாதே.. மாட்டிக் கொண்டது நினைவுக்கு வந்துச்சு...ரிமி குட்டிக்கு வாழ்த்துக்கள் சொன்னேன் எண்டு மறந்திடாமல் சொல்லிடுங்கோ..அதிரா...

    ReplyDelete
  37. ///அடுத்து எங்க வீட்டு செல்லங்கள்.. படம் பாருங்கோ.. விளக்கம் தேவைப்படாதென நினைக்கிறேன்ன்../// கர்ர்ர்ர் யார் சொன்னது.. நாங்கள் விளக்கம் கேட்போம்ல.... எனக்கு அதுக்குள்ள அஞ்சு அக்காவும் நிண்ட மாதிரி தெரியுதே,, உண்மையோ???

    இன்னும் கனக்க விளக்கம் இருக்கு... ரிமி படுக்கிற, எழும்புறா நேரமெல்லாம் சொன்னனீங்கள் எல்லோ..உவை எப்ப படுக்கிறவை எண்டும் சொல்ல வேணும்.. :p

    ReplyDelete
  38. ///சரி இப்பத்தான் விஷயத்துக்கே வந்திருக்கிறேன்ன்ன்...//// மீயும் இப்பதேன்ன்ன் விசயத்துக்கு வாறன்...
    முதல்ல பூஸார் தேசியக் கொடியைக் கிழிச்சு அதுக்குள்ளால எட்டிப் பார்த்ததுக்கு குயின் அம்மம்மாட்ட சொல்லிக் குடுக்கப் போறன்... என் கிட்டயேவே...

    அடுத்தது... ஓட்டுப் போடுங்கோ எண்டு சொல்லிறது சரி.. அதை எதுக்குள்ள போடுறதாம்... அந்தக் கை அடையாளாத்தையே காணேல்லயே.. என்ன செய்றது??? ஒருக்கால் சொல்லி தாங்கோ...

    ReplyDelete
  39. ///வாழ்க்கையின் அழகான பகுதியை நேசிக்கப் பயில வேண்டும்.
    எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் கொள்ளல் வேண்டும்.////
    ஆமா..விவேகானந்தரிட்டயே சுடுகிறது கூட வாழ்க்கையின் அழகான பகுதி தான்.... நன்மைக்கே... பூஸானந்தாவின் விளையாட்டு தெரிந்து தான் முதல்லயே சுவாமி விவேகானந்தர் சொலி வைச்சிருக்கிறார்...

    ReplyDelete
  40. உங்கட அழகுச்செல்லம் ரிம்மி(பிரித்தானியாவில மட்டுமில்லை) அழகாக இருக்கிறார். வீட்டில் வளர்ப்புச்செல்லங்கள் நல்லா இருந்தால் பொழுது போகும்.ஊரில ஒன்றா,இரண்டா வளர்த்த நாங்கள்.
    அக்குவாரியம் வைத்தால் வீட்டுக்கு நல்லதாம்.என்று இங்கு எனக்கு தெரிந்து 2,3 வைத்திருக்கினம். அழகாக இருக்கிறார் உங்கட வீட்டுச்செல்லம்.

    ReplyDelete
  41. ஓல்ட் இஸ் கோல்ட் என ஏன் சொன்னவை.நீங்க அதை சரியா விளங்கி
    யிருக்கிறீங்க.நல்ல பாடல் அதிரா. சில நேரங்களில் பழைய பாடல் கேட்க
    நல்லாயிருக்கும். பொன்மொழி,பாடல் நன்றாக இருக்கின்றது. நன்றி

    ReplyDelete
  42. அழகான செல்லங்கள்..


    வாழ்த்துகள்..

    ReplyDelete
  43. angelin said... 26
    ஆஆ :)) வாங்க மகி நாம போலாம் ..வரும்போது அந்த யெல்லோflower ஒரு கொத்து கொண்டாங்க
    நிபி லைக்ஸ் யெல்லோ கலர் :))//

    எதுக்கூஊஊஊஊ?:) இங்கின ஒருத்தரும் தேம்ஸ்ல குதிச்சு சூஊஊஊஊஊ சைட்டு பண்ணல்ல:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தள்ளினாலும் தள்ளிப்போட்டு தற்கொலை எனக் கேஸைக் குளோஸ் பண்ணி பூங்கொத்தையும் வச்சிடுவினம் போல இருக்கே முருகா:)...

    ReplyDelete
  44. வாங்கோ இளமதி வாங்கோ.. உண்மைதான் இப்படியன செல்லப் பிராணிகளைப் பார்த்தால் உடனே எங்களின் வீட்டில் வளர்ந்த பிராணிகள் நினைவுக்கு வந்துவிடும்.

    ரிமி இப்போ நல்ல நித்திரை எழுப்பினால் கண் திறக்க மாட்டார்ர்..:) சுருண்டு சுருண்டு படுப்பார்ர்..:))..


    ReplyDelete
  45. @athiraஅதிரா... உங்களுக்கு நான் எங்கை வோட் பண்ணுறது... வோட்பட்டை எங்கை... விளக்கம் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்....:)))

    ReplyDelete
  46. ஆவ்வ்வ்வ்.... அதிராஆ.... உங்களுக்கு ஓட்டுப்போட்டிட்டேன்ன்ன்ன்ன்....:)))

    Submit to Tamilmanam இதிலை கிளிக் பண்ணிப் போடுட்டேன்...:)))

    ReplyDelete


  47. அட, தமிழ்மணத்துக்கு வந்தாச்சா? வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  48. http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1227679

    இங்கே கிளிக் செய்து பூஸாருக்கு வாக்களிக்கலாம்! :)

    ReplyDelete
  49. மாத்தியோசி மணி மணி said...
    அட, தமிழ்மணத்துக்கு வந்தாச்சா? வாழ்த்துக்கள்!!!

    ஆவ்வ்வ்வ் மீக்கு கையும் ஓடல்ல லெக்கும் ஆடல்ல.... தமிழ்மணத்தில என் புளொக் நேம் தெரியுதூஊஊஊஊஊஊ.. நான் ஃபெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்ன்ன்:) எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோஓஓஓஒ:))...


    மியாவும் மியாவும் நன்றி மணி... ஹையோ இன்னும் நான் வோட் பண்ணல்லியே எனக்கு....


    ReplyDelete
  50. இளமதி said... 45
    ஆவ்வ்வ்வ்.... அதிராஆ.... உங்களுக்கு ஓட்டுப்போட்டிட்டேன்ன்ன்ன்ன்....:)))

    Submit to Tamilmanam இதிலை கிளிக் பண்ணிப் போடுட்டேன்...:)))//

    ஆஆஆஆஆஆஆஅ மியாவும் மியாவும் நன்றி இளமதி... அது ஏதோ சிக்கல் இருக்கு அதுதான் வோட் பண்ணும் கை மேலே வருகுதில்லை.. அடுத்தமுறை வந்திடும் என நினைக்கிறேன்ன்ன்..

    ReplyDelete
  51. இளமதி said... 31
    கண்ணாடிப்பெட்டிச் செல்லங்களும் அழகோஅழகுதான். பெரியவர் ஒருத்தரும் இருக்கிறாரோ... மற்றைவையை அனுசரிச்சுப்போவாரோ.. இல்லை தானே ராஜா அப்பிடித்தானோ... அழகுதான்...//

    //வீட்டிலை இவைகள் இருந்தாலே அவைகளைப் பார்க்கிறதிலையே எங்களுக்கும் பொழுதும் போகும். மனதிற்கும் நல்ல மாறுதல்...:)//

    இல்ல இளமதி, பெரியாட்கள் இருவர், சின்னாட்கள் இருவர்.. இவை கோல் ஃபிஸ் இனம் என்பதால் சண்டைப்பிடிக்காயினமாம். வேறு இனம் மிக்ஸ் ஆனால் சண்டை வருமாம், அதனாலதான் வேறு மீன்கள் வாங்க ஆசையாயிருந்தும் வாங்கவில்லை...

    அது மட்டுமில்ல.. மீன் வளர்த்தால் எங்கட கண்ணுக்கு நல்ல எக்‌ஷசைஸ் ஆம்ம்ம்.. ஏனெனில் அவை அங்கிங்கென ஓடித்திரிவினமெல்லோ அப்போ எங்கள் கண்ணும் மூஃப் பண்ணும்.. அது நல்லதாம்ம்ம்.. பாருங்கோ ஒன்றுக்குள் ஒன்றென எல்லாம் நன்மையே...

    ReplyDelete
  52. இளமதி உங்கட வாக்கு சரியாக அளிக்கப்படவில்லை... என் லிஸ்ட்டில் அது சேரவில்லை...கொஞ்சம் இருங்க சொல்கிறேன்ன் ...

    ReplyDelete
  53. இளமதி said... 33
    பூஸானந்தா மொழி சூப்பர்.
    எல்லாம் நன்மைக்கேதான்.. ஆனால் சிலநேரம் சிலவிசயம் இதுக்கு ஒத்துவருகுதில்லை எனக்கு....:)////

    அது உண்மைதான், சில விஷயங்களாஇ நன்மைக்குத்தான் என எடுக்க முடியாதுதான்ன், ஆனா முடிந்தவரை எடுக்கோணும் அப்பத்தான் கவலையில்லாமல் வாழ முடியும். ...

    மற்றது இப்போ வோட் பண்ணும் முறை அறிஞ்சிருப்பீங்களென நினைக்கிறேன்ன்..

    அனைத்துக்கும் மியாவும் நன்றி.

    ReplyDelete
  54. பூங்கோதை said... 34
    ஹ்ம்ம்.. ஒரு வழியா 35 ல வந்திட்டன்... ..//

    வாங்கோ கோதை வாங்கோ... ஆஆஆ உப்பூடி பப்ளிக்கில வயசை எல்லாம் சொல்லப்பூடா எண்டு அம்மம்மா சொல்றவ:).

    அப்போ கொய்யா மரம் எல்லாம் ஏறிப் பார்த்திருக்கிறீங்க:)..

    ரிமியாருக்கு சொல்லிட்டேன் கோதை உங்கட வாழ்த்தை.. அவர் தனக்கு கச்சான் வேணுமாம்ம்:).


    ReplyDelete
  55. பூங்கோதை said... 35
    ///அடுத்து எங்க வீட்டு செல்லங்கள்.. படம் பாருங்கோ.. விளக்கம் தேவைப்படாதென நினைக்கிறேன்ன்../// கர்ர்ர்ர் யார் சொன்னது.. நாங்கள் விளக்கம் கேட்போம்ல.... எனக்கு அதுக்குள்ள அஞ்சு அக்காவும் நிண்ட மாதிரி தெரியுதே,, உண்மையோ???ஹா..ஹா..ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா கோதை, கேட்டிடப்போகுதூஊஊஊஊ:) பா..........புக் காதாக்கும்:).. எனக்கல்ல:)) .

    இன்னும் கனக்க விளக்கம் இருக்கு... ரிமி படுக்கிற, எழும்புறா நேரமெல்லாம் சொன்னனீங்கள் எல்லோ..உவை எப்ப படுக்கிறவை எண்டும் சொல்ல வேணும்.. :p

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    ReplyDelete
  56. //அடுத்தது... ஓட்டுப் போடுங்கோ எண்டு சொல்லிறது சரி.. அதை எதுக்குள்ள போடுறதாம்... அந்தக் கை அடையாளாத்தையே காணேல்லயே.. என்ன செய்றது??? ஒருக்கால் சொல்லி தாங்கோ...///

    ஹா..ஹா..ஹா.. இதிலயிருந்து உங்களுக்கு என்ன புரியுது?:) அதிரா எப்பவுமே டிபரெண்ட் ஆன ஆள்:)).. எல்லோரும் கையைக் குலுக்கித்தான் வோட் பண்ணுவினம்:).. எனக்கு மட்டும், இங்கு மேலே, மணி ஒரு லிங் போட்டிருக்கிறார் பாருங்கோ.. அந்த லிங்கில் போய்த்தான் வோட் பண்ணோனும்:)).. குயினிண்ட பேத்தியாச்சே:) அதேன் செக்க்கூறிட்டி அதிகமாம்:)).

    ஹையோ ஏன் கலைக்கிறீங்க?:) அப்பூடி என்ன சொல்லிட்டேன்ன்:) அடுத்த பதிவோடு கை தெரியுமாக்கும்..:)) மேல:).

    மியாவும் நன்றி கோதை.


    ReplyDelete
  57. திண்டுக்கல் தனபாலன் said... 38
    அழகான படங்கள்...///

    வாங்கோ வாங்கோ மியாவும் நன்றி. ஏன் நீங்கள் நீண்டகாலமாக பதிவேதும் போடவில்லையே...

    ReplyDelete
  58. priyasaki said... 39
    உங்கட அழகுச்செல்லம் ரிம்மி(பிரித்தானியாவில மட்டுமில்லை) அழகாக இருக்கிறார்.

    வாங்கோ அம்முலு வாங்கோ...

    ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாச் சொல்லுங்கோ:) அஞ்சுட காதில கேட்டிடப்போகுது:), தன்ர மகந்தன் அழகாம் என பிபிசில சொல்லிக்கொண்டு திரிகிறா:) ஹையோ ஆள் இண்டைக்கு வலையுலகில் லீவு:) அதுதான் தைரியமாச் சொல்லிட்டேன்ன்.. படிச்சதும் கிழிச்சு.. சென் நதிப் பக்கமாப் போடிடுங்கோ:). .


    அக்குவாரியம் வைத்தால் வீட்டுக்கு நல்லதாம்//

    உண்மையாவோ? இப்படி இப்பத்தான் அறிகிறேன்ன்..

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  59. வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ மியாவும் நன்றி..

    ReplyDelete
  60. அதிரா... தமிழ்மணத்தில உங்கள் பதிவு...:)



    சூப்பர்... வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  61. இவர்தான் எங்கட வீட்டு புது வரவு.. ஆண்பிள்ளை.. பெயர் ரிமி(Timmy). ஆனா எனக்கு வாயில “நிபி” எண்டுதான் வருது:), ////

    ஹா ஹா இது என்ன கொடுமையா கிடக்கு? அப்ப எல்லாமே மாறித்தான் வருமோ? சரி என் பேர் மணி! அப்போ நீங்கள் என்னை எப்படிக் கூப்புடுவீங்க?

    ReplyDelete
  62. அட, இப்பதான் கவனிக்குறேன்! தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவு வந்திருக்கு! 8 ஓட்டுக்களும் கிடைச்சிருக்கு! வாழ்த்துக்கள் மேடம்!

    ReplyDelete
  63. நன்றாகப் பொழுது போகும்!

    ReplyDelete
  64. அதிராக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  65. ஓட்டுக்களும் ஓட்டைகளும்....
    10 ஆவது ஓட்டு என்னதுதான் என்பதை இங்கு ஸ்பீக்கர் போட்டுச் சொல்லிக்கிறேன்.....

    ReplyDelete
  66. What were you doing Athirav?? Your blog was missing for 5-10 minutes....I was shocked! Grrrrrrrrrr Errrrrrrrrr grrrrrrrrr

    ReplyDelete
  67. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி .எல்லாப் பேறுகளும்
    பெற்று இறைவன் அருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.....

    ReplyDelete
  68. என்றும்
    பதினாறாவது
    பிறந்த நாள் கொண்டாடும்
    பேபி அதிராவுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    நேற்று உலக தலைவர்கள்
    பேசி முடிவெடுத்து
    உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு
    நாளையும் நாளை மறுதினமும்
    விடுமுறை அறிவித்து இருக்கிறோம்

    என்றும் சந்தோசமாய்
    சிரித்துக்கொண்டு
    பிறரையும்
    சிரிக்க வைக்கும்
    புலியூர் பூசனந்த
    தத்துவ மேதை
    பேபி அதிராவுக்கு
    மீண்டும் எங்கள்
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  69. அடடா எங்கின விட்டேன்ன் சாமீஈஈஈஈஈஈஈஈ.. கல்யாணக் கொண்டாட்டத்தோடு..... ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே..:) பேர்த்டே கொண்டாட்டத்தோடு எல்லாமே மறந்துபோச்ச்ச்ச்....

    இளமதி said... 59
    அதிரா... தமிழ்மணத்தில உங்கள் பதிவு...:)

    ஆவ்வ்வ்வ்வ் காவி வந்து போட்டிருக்கிறீங்க இளமதி... மிக்க நன்றி. அதுசரி எனக்கு மஞ்சள் பெயிண்ட் அடிச்சிருக்கிறீங்க அது ஓகே... அதெதுக்கு மணிக்கும் மஞ்சள் பெயிண்ட் அடிச்சுக் காட்டுறீங்க.. அவருக்கு இதெல்லாம் புதுசில்லை.. அவருடையது எப்பவுமே அதில இருக்கிறதுதான்ன்ன்....

    ReplyDelete

  70. மாத்தியோசி மணி மணி said... 60
    இவர்தான் எங்கட வீட்டு புது வரவு.. ஆண்பிள்ளை.. பெயர் ரிமி(Timmy). ஆனா எனக்கு வாயில “நிபி” எண்டுதான் வருது:), ////

    ஹா ஹா இது என்ன கொடுமையா கிடக்கு? அப்ப எல்லாமே மாறித்தான் வருமோ? சரி என் பேர் மணி! அப்போ நீங்கள் என்னை எப்படிக் கூப்புடுவீங்க?

    சே..சே.. சே.. ஒரு சுவீட் 16 பிள்ளையின் பிறந்தநாள் அதுவுமா உப்பூடியெல்லாம் கேள்வி கேட்கப்பூடாதாக்கும்:))... ஹையோ பழநியாண்டவா.. எப்பூடியெல்லாம் கிட்னியை ஊஸ் பண்ணிக் கேள்வி கேட்கினம்:)...

    ReplyDelete

  71. மாத்தியோசி மணி மணி said... 61
    அட, இப்பதான் கவனிக்குறேன்! தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவு வந்திருக்கு! 8 ஓட்டுக்களும் கிடைச்சிருக்கு! வாழ்த்துக்கள் மேடம்!

    ஓ எனக்கும் மிக்க மகிழ்ச்சியா இருக்கு மணி.. நான் இப்போ கோபுர உச்சியில் நிற்கிறேன்ன்:).. குதிக்க அல்ல.. மகிழ்ச்சியில:)).. மாறிக்கீறி ஆரும் தள்ளி விட்டிடப்பூடா...:) நன்றி மணி....


    ReplyDelete
  72. குட்டன் said... 62
    நன்றாகப் பொழுது போகும்!

    வாங்கோ குட்டன் வாங்கோ.. நீங்க ஏற்கனவே வந்திருக்கிறீங்க ... நான் தான் உங்கள் பக்கம் வந்ததில்லை..வருகிறேன்... மியாவும் நன்றி.

    ReplyDelete
  73. ரெவெரி said... 63
    அதிராக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    வாங்கோ ரெவெரி அனைத்துக்கும் மியாவும் நன்றி.

    ReplyDelete
  74. ஆத்மா said... 64
    ஓட்டுக்களும் ஓட்டைகளும்....
    10 ஆவது ஓட்டு என்னதுதான் என்பதை இங்கு ஸ்பீக்கர் போட்டுச் சொல்லிக்கிறேன்.....

    ஹா.ஹா..ஹா...வாங்கோ சிட்டு.. பார்த்தேன் மியாவும் நன்றி... வோட் பண்ணினால் ஸ்பீக்கர் போட்டுச் சொல்லலாம்.. அனுமதி கிராண்டட்:))).. அனைத்துக்கும் மியாவும் நன்றி.

    ReplyDelete
  75. Mahi said... 65
    What were you doing Athirav?? Your blog was missing for 5-10 minutes....I was shocked! Grrrrrrrrrr Errrrrrrrrr grrrrrrrrr//

    ஹா.ஹா..ஹா...நோ மகி.. நோ ஓஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது வருடம் தோறும் நடக்கும் விளையாட்டுத்தானே:))... தேம்ஸ் நதித் தண்ணிமீது சத்தியமா மீ ஒண்ணும் பண்ணல்ல சாமி இம்முறை:))

    ReplyDelete

  76. மாத்தியோசி மணி மணி said... 66//

    அவ்வ்வ்வ்வ்வ் பிறந்தநாள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதே.. வலையுலகில்.. நன்றி மணி மியாவும் நன்றி.)

    ReplyDelete

  77. அம்பாளடியாள் said... 69
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி .எல்லாப் பேறுகளும்
    பெற்று இறைவன் அருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.....

    மியாவும் மியாவும் நன்றி அம்பாள் அடியாள்...

    ReplyDelete
  78. Siva sankar said... 70
    என்றும்
    பதினாறாவது
    பிறந்த நாள் கொண்டாடும்
    பேபி அதிராவுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    அது..அது..அது.. :) வாங்கோ சிவா வாங்கோ.... அதுதானே சிவாவுக்குத்தான் தெரியும் என் கரெக்ட் வயசு:).

    நேற்று உலக தலைவர்கள்
    பேசி முடிவெடுத்து
    உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு
    நாளையும் நாளை மறுதினமும்
    விடுமுறை அறிவித்து இருக்கிறோம்

    ஆவ்வ்வ்வ் உண்மையவோ?:) ஒபாமா அங்கிள் என்னைக் கேட்டவர் நான் சே..சே.. எனக்காக எதுவும் வாணாம் எனச் சொன்னனான்:)) இப்போ அறிவிச்சிட்டினமோ ஆஆஆஆஆ புல்லா அரிக்குதெனக்கு:)).. அப்போ எல்லோரும் பார்ட்டிக்கு பிரசண்ட்டோட வருவினம் என்ன சிவா?:)).. எங்கட டீச்சரைக் காணல்ல இன்னும்.

    ReplyDelete
  79. என்றும் சந்தோசமாய்
    சிரித்துக்கொண்டு
    பிறரையும்
    சிரிக்க வைக்கும்
    புலியூர் பூசனந்த
    தத்துவ மேதை
    பேபி அதிராவுக்கு
    மீண்டும் எங்கள்
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ஆவ் மிக்க நன்றி மிக்க நன்றி.. ஒரு குட்டித் திருத்தம்.. அது புலாலியூராக்கும்:)) என் கொப்பிரைட் ஊர் அது:)).. ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி சிவா.. விரைவில் பில்லா 3 ஐ எதிர்பார்க்கிறேன்ன்..:).

    ReplyDelete
  80. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    என்ன எலியும் வளர்க்கிறீங்களா????

    ReplyDelete
  81. பூஸார் கேக் உண்டு விட்டு அதே கதிரையில் குறட்டை விடுவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்திருக்கிறது! :))))))



    ஹஹஹ!:D

    ReplyDelete

  82. *Chennai Plaza - சென்னை ப்ளாசா* said... 82
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    என்ன எலியும் வளர்க்கிறீங்களா????

    வாங்கோ ஜலீலாக்கா வாங்கோ.. மியாவும் நன்றி.. எலியாரும் நானும் பெஸ்ட் ஃபிரெண்டாக்கும் இப்போ:).

    ஹையோ உங்கட பக்கம் இன்னும் எட்டிப் பார்க்கல்ல கோச்சிடாதிங்க பிளீஸ்ஸ்:).

    ReplyDelete
  83. ஹா..ஹா..ஹா.. மகி.. கேக் வெட்டின களைப்பிலயும் வைர நெக்லெஸ், முத்துச் சங்கிலி எல்லாம் தூக்கிப் போட்டாச்சு:).. அது ஒபாமா அங்கிள் அனுப்பிவிட்டவர் காலையில்:)



    ReplyDelete
  84. டிமி அழகு,பகிர்வும் வழக்கம் போல் அருமை.த.ம - 13..

    ReplyDelete
  85. //வாழ்க்கையின் அழகான பகுதியை நேசிக்கப் பயில வேண்டும்.

    எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் கொள்ளல் வேண்டும்.//

    ;))))) கிளி கொஞ்சும் ஸாரி எலி கொஞ்சும் அழகான பதிவு.

    22 02 2013 க்கு இனிய நல்வாழ்த்துகள்.


    ReplyDelete
  86. Timmy c...ute அதீஸ். கலரும் வடிவா இருக்கு. இப்பிடி சின்னதாக ஒருவர் வீட்டில இருந்தால் சந்தோஷம்தான், என்ன!
    இன்னொரு மொப்ஸிக்குப் போகாமல் ஹம்ஸ்டருக்குப் போனதுக்கு ஏதாவது காரணம் இருக்குதோ!

    ReplyDelete
  87. வாங்கோ ஆசியா வாங்கோ... நான் இதைப் படிக்க லேட்டாயிடுத்து:) மியாவும் நன்றி.

    ReplyDelete
  88. ;))))) கிளி கொஞ்சும் ஸாரி எலி கொஞ்சும் அழகான பதிவு.
    வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.ஹா..ஹா..ஹா.. இது கிளியுமல்ல எலியுமல்ல பூஸூ:))..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  89. வாங்கோ இமா வாங்க.. எங்க போயிருந்தீங்க இவ்ளோ நாளும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    மொப்பி பெரிசெல்லோ வேலை அதிகம், அத்தோடு வீட்டில் பெரீய இடம் பிடிக்கும் கேஜ். அத்தோடு மயிர் கொட்டுவார்ர்.. இது சோ ஈசியெல்லோ..

    அதிலயும் பிள்ளைகளுக்கு ஆரம்பம் முதலே ஹம்ஸ்டர்தான் பிடிக்கும்.... எனக்காகத்தான் மொப்பி வாங்கினோம்ம்..

    இம்முறை மீ பெரீஈஈஈஈஈஈஈய மனசு பண்ணி விட்டுக்கொடுத்திட்டேன்ன்ன்:)).. எப்பூடி மீ ரொம்ப நல்ல பொண்ணல்லோ?:)

    மியாவும் நன்றி.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.