நல்வரவு_()_


Saturday, 23 February 2013

அப்பாவின் அட்வைஸ்....


ம்முறை நான் சிரிக்கப் போறதில்லை:) சீரியசாக எழுதப்போறன்:)... ஏனெண்டால் சிரிச்சால் விஷயத்துக்கு வர நேரமெடுக்குது:).. அதனால ஸ்ஸ்ஸ்ஸ்ரெயிட்டா களமிறங்கிடோணும் எனக் கங்கணம் கட்டிட்டன்:)) அதனால மீற மாட்டன்....:).

நான் குட்டிப் பொண்ணாக:) இருந்த காலத்தில(அதுக்காக இப்ப வளர்ந்திட்டீங்களோ எனக் கேட்கப்புடா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்த்தியாம்ம்:)) சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)), இலங்கையின் வடபகுதி, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருந்த கொஞ்சக் காலத்தை அனுபவித்திருக்கிறேன். அந்தப் பாக்கியம் எல்லோருக்க்கும் கிடைக்காது, அந்நேரம் அங்கிருந்தோருக்கு மட்டுமே கிடைச்சிருக்கும். அது ஒரு அழகிய பொற்காலம்....:).

ஏன் அப்படிச் சொல்கிறேன் எனில், ஊரில் களவு என்ற சொல்லுக்கே அந்நேரம் இடமில்லை. ஒரு பொம்பிளைப் பிள்ளை எத்தனை மணிக்கும் வெளியே போய்வரக்கூடிய சுகந்திரம் இருந்தது. எந்த விதமான ஷேஸ்டைகள், தனகல்களே கிடையாது.. அவ்வளவு ஒரு கட்டுப்பாடான காலமாக அது இருந்தது.

ஆனா எந்தவித வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. தபால் தொடர்பு மட்டுமே இருந்தது. ரெலிபோன் எனில் கச்சேரியில் இருந்தது.. அது ஒன்றுதான் எனக்குத் தெரியும். போக்குவரத்துக்கூட துண்டித்திருந்தது, தரைப்பாதை இல்லை. இடையில் கடல்வழியேதான் தொடுக்கப் பட்டிருந்தது.

வெளி உணவுகள் , இங்கிலீசு மரக்கறி, சோப், இப்படியாக எதுவும் வாங்குவது கஸ்டம். ஆனாலும் கிடைக்கும்.. ஆனை விலை பூனை விலையில்:).. காசு இருப்போருக்கு பிரச்சனை பெரிதாக தெரியாது. கரண்ட் இல்லை ஆனாலும் ஜெனரேட்டர் பிடிச்சு புதுப்படங்கள் எல்லாம் பார்ப்போம். 

சைக்கிள் டைனமோவில் பாட்டுக் கேட்பார்கள், பனம்பழத்தில் சோப் உற்பத்தி நடந்துது... இப்படி பல புதுமைகள். பற்றரி வாங்கலாம் ஆனா விலைதான். மண் எண்ணெயிலயே வாகனங்கள் இயங்கின.

வீடுகளில் தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய் விளக்குகள்தான். ஆனால் ஜெனரேட்டர் பிடிச்சு, கோயில் திருவிளாக்கள், கல்யாணக் கொண்டாட்டம் எல்லாம் கோலாகலமாக நடக்கும்.. அதுக்கெல்லாம் குறையிருக்கவில்லை.

இப்படியான காலத்தில என் அளப்பரிய சொத்தாக ஒரு புது “லுமாலா லேடீஸ் பைக்” எனக்கிருந்தது. 

ஓரம்போங்கோ.. ஓரம்போங்கோ அதிராட லுமாலா
சைக்கிள் வருதூஊஊஊஊ:)
அதுக்கு கரியர், முன்னால குடை எல்லாம் அழகாகப் போட்டு, என்னவெல்லாம் போட்டு அலங்கரிக்கோணுமோ அலங்கரிச்சு:), ஸ்டிக்கர் எல்லாம் அளவா+ அழகா ஒட்டி, எப்பவும் துடைச்சு துடைச்சு பளபளா என வைத்திருப்பேன். அந்நேரம் என்னைப் பார்த்தொருவர் சொன்னார், உங்களின் சைக்கிளைப் பார்த்தாலே தெரியுது, நீங்கள் எவ்வளவு சுத்தமாக இருப்பீங்களென, ஆனா இப்போ என் காரைப் பார்த்தால் அவர் என்ன சொல்லுவாரோ?:) ...ஙேஙேஙே.... சரி சரி அதெல்லாம் இப்ப எதுக்கு:).

கூகிள் கூகிள் பண்ணிப் பார்த்தேன்ன் .. உலகத்தில..
இப்படி ஒரு காரைக் காணவில்ல:)
ஆனாலும் என் வயிற்றெரிச்சலைச் சொல்லியே ஆகணும். அப்படிப்பட்ட என் ஆசைச் சைக்கிளை இடம் பெயர்வின்போது, நாவற்குழி என்னுமிடத்தில் வைத்து களவெடுத்திட்டினம்... பிறகுதானே அறிஞ்சன் அது வேறு ஆருமில்லை.. இப்போ ரேடியோ ஜக்கியாக இருக்கும்.. நி.... வில்:) ஆரம்பிக்கும் பெயர் கொண்டவர்தான் எடுத்ததென:)).. சரி சரி பழசெல்லாம் இப்ப எதுக்கு:)?. விஷயத்துக்கு வாறன்.

இப்படியான காலப்பகுதியில், அப்பா வடபகுதிக்கு வெளியேதான் வேலை பார்த்தவர்... அதனால் அவர் 3,4 மாதங்களுக்கொரு முறைதான் ஊருக்கு வந்து போவார். அப்போ அம்மாவும் நானும்தான். அப்பாவின் ஊர் பக்கத்து ஊர்தான் என் சைக்கிளில் 15, 20 நிமிடத்தில், நான் மாமி வீட்டில் நிற்பேன். அப்பாவின் ஊரில்தான் அந்நேரம் என் வயதொத்த மச்சாள்மார் நிறைய இருந்தவை. எங்களிடத்தில் பெரிதாக எனக்கு குரூப் இல்லை..

அதனால நான் எப்பவும் அங்குதான் ஓடுவேன். அதிலும் ஒரு மாமிக்கு இரு மகள்மார். அவர்களோடுதான் நான் அதிகம் ஒட்டு. தினமும் அவர்களை மீட் பண்ணுவேன், இல்லையெனில் சாப்பிடாததுபோல இருக்கும்.

அம்மாவின் சட்டம், நீ போய்வா, ஆனா 3 மணிக்கு முன் போகக்கூடாது, 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடோணும்... இதை எப்பவும் மீறமாட்டேன் நான், ஆனா எப்படியும் 6 மணிக்கு 10, 15 நிமிடம் தாமதமாகிடும் வந்து சேர.. ஏனெனில் என்னைக் காணவில்லை எனில், இன்னொரு ஆள் அனுப்பித்தான் தேடோணும், ஃபோன் வசதி இல்லையெல்லோ. அதுதான் பிரச்சனையே. அங்கு மாமி வீட்டு Gate இல் 5.45 க்கு சைக்கிளோடு வெளியே வருவேன், ஆனால் விடமாட்டினம், கேட்டில் நின்று கதைக்கவே நேரம் போயிடும்.. கதைச்சு முடியாது, பிறகு மின்னல் வேகத்தில் வீட்டுக்கு வந்திடுவேன்.

மாமி சுகமில்லாமல் இருந்தவ. அதனால் மகள்மாரால் வெளியே பெரிசாக வெளிக்கிட முடியாது. ஆனாலும் நான் 3 மணிக்கு அங்கு போகவில்லையாயின், 3.30 க்கு மாமியின் மகளின் சைக்கிள் எங்கட வீட்டில இருக்கும், ஏன் வரவில்லை எனக் கேட்டபடி.

அதிகமான நாட்கள் திரும்பிவர விடாயினம், நில்லுங்கோ என மறிப்பினம், அப்படியெனில்... ஆரும் தம்பிமாரை கெஞ்சி, ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லிப்போட்டு வரும்படி அனுப்பி வைப்போம்.. இப்படியெல்லாம் செட்டப்புக்கள் நடக்கும்.

அப்படியான காலநேரத்தில் ஒரு தடவை, அப்பா லீவில் வந்து நிண்டவர். ஒருநாள் இரவு, என் ரூமில் நான் படுத்திருக்கிறேன், வெளியே ஹோலில் அப்பாவும் அம்மாவும் கதைச்சுக் கொண்டிருக்கினம், நான் நித்திரையாகவில்லை, அது அவர்களுக்கும் தெரியும் என்பது அப்போ எனக்கு புரியவில்லை:).

அப்போ அம்மா சொல்கிறா அப்பாவுக்கு.... “இஞ்ச பாருங்கோ, என்னால அதிராவைப் பார்க்க முடியாது, 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடும்படி சொன்னால், நேரத்துக்கு வருவதில்லை, நானும் எத்தனை நாளைக்குத்தான் இப்படிப் பயப்பிடுவது தனியே, நீங்கள் நிண்டு கவனியுங்கோ” என. இதைக் கேட்டதும் எனக்கோ அப்பா ஏசுவாரோ என நெஞ்சு திக்கு திக்கு எண்ணுது...

ஆனா பாருங்கோ உடனே அப்பா என்ன சொன்னார் தெரியுமோ?:).. “அதிராவைப் பற்றியா சொல்றீங்க? என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியாதோ? சும்மா எல்லாம் சொல்லாதீங்க, அதிரா சொன்ன சொல் மீறாத பிள்ளை, அவள் நேரத்துக்குத்தான் வந்திருப்பாள், நீங்கதான் சும்மா சொல்றீங்க” என்றார்....

இதைக் கேட்ட எனக்கு நெஞ்செல்லாம் அடைக்கத் தொடங்கிட்டுது, கடவுளே அப்பா என்னில எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறார், இந்த நம்பிக்கையை எண்டைக்கும் நான் வீணடிச்சிடக்கூடாது, என மனதில் சபதம் எடுத்தேன். ஏனெனில் அப்போதிருந்த வயது சபலமான வயது, பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நேரம்:).. நாட்டிலும் பிரச்சனையான நேரம்..ஆனால் அப்பாவின் அந்த ஒரு வசனம், என்னை உறுதியான ஒரு பெண்ணாக வளர வழிவகுத்தது.

பின்னர்தான் நான் ஓசிச்சுக் கண்டு பிடிச்சேன், எனக்குக் கேட்கட்டும் என்றுதான் அப்பா அப்படிச் சொல்லியிருப்பார் என. ஏனெனில் எப்பவுமே பிள்ளைகளை ஏசுவதை விட, இப்படிச் சொன்னால் அவர்கள் நல்லபடி வளர இதுவும் ஒரு முறையாம்.

சின்ன வயதிலிருந்தே ஒரே அட்வைஸ் நடக்கும், அப்போ சொல்லித் தருவார், ஆரும் ஏதும் சொன்னாலோ, கிண்டல் பண்ணினாலோ பயந்திடாதே.. உன்னைப் பார்த்து குரங்குபோல இருக்கே என ஒருவர் சொன்னால்கூட... கலங்கிடாதே.. நீ சொன்னால் சொல்லிட்டுப்போ எனக்குத் தெரியும் என்னைப்பற்றி என மனதில நினை... இப்படியான பிரச்சனைகள் வரும்போது மனதில் போட்டுக் குழம்பிடாதே, தூசுபோல தட்டிப்போட்டு உன் வேலையைக் கவனிக்கப்பழகு...

இப்படி அட்வைஸ்கள் நீளும். அப்போ எழுந்து போக முடியாமல் பல்லைக் கடித்தபடி கேட்டுக்கொண்டிருப்போம், ஆனால் அவைகள்தான் எனக்கு மனதில் பல உறுதியையும் எல்லோரோடும் தயங்காமல் பழகும் தன்மையையும் கொடுத்ததெனலாம். ஆண்பிள்ளைகளோடு எப்படிப் பழகுவது என்றெல்லாம் கூச்சப்படாதே, ஆரோடும், பேசினால் பேசு, ஆனா பழகும்போது உனக்கு தெரியவரும், எப்படிப் பட்டவர்கள் என, உன் மனதுக்கு ஏதும் வித்தியாசமாகத் தோன்றினால் உடனேயே கட் பண்ணிடு தொடர்பை, அப்படிக் கற்றுக்கொள், அதை விடுத்து கதைக்காமல் ஒதுங்கிப் போகாதே என்றெல்லாம் சொல்லுவார்ர்...

இப்பவும் தொடருது அட்வைஸ் எனில் பாருங்களன்:)).. இப்போ பிள்ளை வளர்ப்பு பற்றியும், உணவுமுறை பற்றியும் நடக்கும்:).. இன்று கூட சொன்னார், தினமும் 3 மிளகு சப்பிச் சாப்பி்ட்டு தண்ணி குடிச்சால், இருமல், தடிமன் போன்ற வருத்தங்கள் வராதாம், எல்லோரும் அப்படி செய்யுங்கோ என்றார்:).

ஊசிக்குறிப்பு:
தனிப் பதிவுகள் போட்டும், எனக்காக நேரம் ஒதுக்கி கார்ட்ஸ்கள் செய்தும், “எண்ணம் அழகானால்..” குரூப்பிலும் தனிப்பதிவுகள் போட்டும், மற்றும் மனதார என் பிறந்தநாளுக்கு(ஹையோ மீக்கு ஷை ஷையா வருதே:)).. வாழ்த்துக்கள் சொல்லிய அனிவருக்கும்... இதயத்திலிருந்து நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன்ன்ன்...
=============================================
நிழல் பிரிவதில்லைத் தன் உடலை விட்டு, 
அது அழிவதில்லைக் கால் அடிகள் பட்டு...
நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால், 
இங்கு நடப்பது நலமாய் நடந்துவிடும்... 
உருக்கத்தோடு சொல்பவர்:) புலாலியூர்ப் பூஸானந்தா:)
=============================================
எனக்கு இன்னும் தமிழ்மணத்தில் வோட் பண்ணக் “கை” வருகுதில்லை, அதனால அதிராவுக்கு வோட் பண்ணோனும் என  “பெரியமனசு” பண்ணி முன் வந்தீங்கன்னா:).. இந்த லிங்கில் போய் வோட் பண்ணுங்கோ.. வோட் பண்ணினால்..  “அகரகர்” கலர்கலரா செய்து தருவனாக்கும்:)
இங்கே கிளிக் செய்யுங்கோ மக்கள்ஸ்
==============================================

106 comments :

  1. நல்ல சுவாரசியம்,எல்லாம் கண் முன்னால் கொண்டு வந்திட்டீங்க அதிரா.

    ReplyDelete
  2. ஓடுகிற சைக்கிள், கார் என படங்கள் போட்டு அசத்தியிருக்கிறீர்கள். கட்டுரை நடையும் அருமை.

    ReplyDelete
  3. வணக்கம் வணக்கம்! பூஸாருக்கு இனிய ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! இப்பதான் இமயமலையில் இருந்து, இமயமலை தரிசனம் முடிச்சுக் கொண்டுவாறன்! பொறுங்கோ ஒரு கப் மோர் குடிச்சிட்டு வாறன்!

    ReplyDelete
  4. அப்பாவின் அட்வைஸை தப்பாமல் கேட்ட பூஸாருக்கு இந்த நாய்க் குஞ்சு பரிசாக வழங்கப்படுகிறது!

    குறிப்பு - 3 வேளை நல்லா சாப்பாடு போட்டு வளர்க்கவும்!


    ReplyDelete
  5. இம்முறை நான் சிரிக்கப் போறதில்லை:) சீரியசாக எழுதப்போறன்:). ///

    ஹா ஹா நாங்கள் சிரிக்கலாம் தானே! அதான் சிரிச்சேன்! ஆனாலும் பூஸார் அவர்களே உங்கள் தனித்துவமே அந்த அப்பாவிச் சிரிப்புத்தான்! தயவு செய்து கைவிட்டிடாதேங்கோ - நான் சிரிப்பைச் சொன்னேன் :)

    ReplyDelete
  6. நான் குட்டிப் பொண்ணாக:) இருந்த காலத்தில(அதுக்காக இப்ப வளர்ந்திட்டீங்களோ எனக் கேட்கப்புடா:)) ///

    இல்லை நான் கேட்பன்! இப்ப வளர்ந்தீட்டீங்களோ? :)

    ReplyDelete
  7. அந்தப் பாக்கியம் எல்லோருக்க்கும் கிடைக்காது, அந்நேரம் அங்கிருந்தோருக்கு மட்டுமே கிடைச்சிருக்கும். ////

    நோஓஓஓஓ நோஓஓஓ இது அநியாயம்! அக்கிரமம்! அட்டூழியம்! அழிச்சாட்டியம்! ம்ம்ம் வேற என்ன சொல்லலாம்?? கொடுமை! கொடுமை!

    நானும் அந்தப் பகுதியில இருந்திருக்கிறன்! ஆனா பாக்கியம் எண்ட ஒராளை நான் கண்டதே இல்லை! என்ர கண்ணில மட்டும் அந்தப் பாக்கியம் எப்படிச் சிக்காமல் போனா? ச்சே.... இந்த உலகத்தில நல்லதுக்கே காலம் இல்லைப்போல!

    ReplyDelete
  8. தபால் தொடர்பு மட்டுமே இருந்தது. ரெலிபோன் எனில் கச்சேரியில் இருந்தது..///

    எந்தக் கச்சேரியில? பாட்டுக் கச்சேரியிலையோ? அல்லது சாவக் கச்சேரியிலோ?

    ReplyDelete
  9. காசு இருப்போருக்கு பிரச்சனை பெரிதாக தெரியாது. கரண்ட் இல்லை ஆனாலும் ஜெனரேட்டர் பிடிச்சு புதுப்படங்கள் எல்லாம் பார்ப்போம்.  ////

    அப்ப ஊரில வசதியா இருந்தனிங்கள் எண்டு சொல்றீங்க? சே எனக்கு இது அப்ப தெரியாமல் போய்ச்சே...........!!

    இல்ல, அங்கையும் வந்து எதையாவது சுட்டுக் கொண்டு போயிருக்கலாம் எண்டு நினைச்சன்!!! ஹா ஹா

    ReplyDelete
  10. அதுக்கு கரியர், முன்னால குடை எல்லாம் அழகாகப் போட்டு, என்னவெல்லாம் போட்டு அலங்கரிக்கோணுமோ அலங்கரிச்சு:),/////

    நாங்கள்லாம் சைக்கிளுக்கு முன் பகுதியில் கூடைதான் பூட்டி வைத்திருந்தோம்! நீங்கள் குடை பூட்டி வைச்சிருந்திருக்கிறியள்! என்ன கொடுமை முருகா

    ReplyDelete
  11. உங்களின் சைக்கிளைப் பார்த்தாலே தெரியுது, நீங்கள் எவ்வளவு சுத்தமாக இருப்பீங்களென, ஆனா இப்போ என் காரைப் பார்த்தால் அவர் என்ன சொல்லுவாரோ?:) ////

    பாருங்கோ, பாருங்கோ எங்களை ராணி சந்தன சோப் போடு, ராஜா சந்தன சோப் போடு எண்டு நச்சரிச்சுப் போட்டு, இப்ப தாங்கள் சுத்தம் இல்லையாம்! ஹையோ முருகா! நீ ஏன் தமிழரின் பாரம்பரிய உடையுடன் ஆண்டியனாய்ய்??

    குறிப்பு - 4 ம் நம்பர்காரர் நோர்மலாவே சுத்தம் குறைவாம்! ஐயோ நான் சொல்லல! அது தீபம் தொலைக்காட்சியில ராஜி பலன் போகுது :)

    ReplyDelete
  12. மாமி சுகமில்லாமல் இருந்தவ. அதனால் மகள்மாரால் வெளியே பெரிசாக வெளிக்கிட முடியாது. ஆனாலும் நான் 3 மணிக்கு அங்கு போகவில்லையாயின், 3.30 க்கு மாமியின் மகளின் சைக்கிள் எங்கட வீட்டில இருக்கும், ஏன் வரவில்லை எனக் கேட்டபடி. ////

    பின்னேரங்களில டியூசனுக்குப் போய் படிப்பம் எண்டில்லை! உலாத்திக் கொண்டு திரிஞ்சிருக்கினம்! அப்ப பாருங்கோவன்!

    ReplyDelete
  13. இதைக் கேட்டதும் எனக்கோ அப்பா ஏசுவாரோ என நெஞ்சு திக்கு திக்கு எண்ணுது... ///

    என்னுது என்றுதான் வரும்! கவனம் தமிழ் :)

    ReplyDelete
  14. ஏனெனில் அப்போதிருந்த வயது சபலமான வயது, பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நேரம்:).. ////

    ஹி ஹி ஹி அது என்ன சபலமான வயசு? எனக்குப் புரியவே இல்லை! ஒருக்கா விளங்கப்படுத்துங்கோ! நாங்களும் தெரிஞ்சு கொள்ளுவோம்ல!

    ReplyDelete
  15. உன்னைப் பார்த்து குரங்குபோல இருக்கே என ஒருவர் சொன்னால்கூட... கலங்கிடாதே.. நீ சொன்னால் சொல்லிட்டுப்போ எனக்குத் தெரியும் என்னைப்பற்றி என மனதில நினை... ////

    ஹா ஹா அப்பா விஷயம் தெரிஞ்சு தான் சொல்லியிருக்கிறார் போல! ஐயோ பகிடிக்குச் சொன்னன்! கோவிச்சிடாதேங்கோ :)

    ReplyDelete
  16. அதை விடுத்து கதைக்காமல் ஒதுங்கிப் போகாதே என்றெல்லாம் சொல்லுவார்ர்...///

    ஓஒ ஓஒ அதான் எங்களோட எல்லாம் பயப்பிடாமல் கதைக்கிறீங்கள் போல! நல்லது நல்லது!

    ஆனா சிலர் இருக்கினம்! சும்மா ஹலோ சொன்னாலே போதும் “ ஐயோ அவருக்கு என்னில ஒரு நோக்கம் இருக்கு போல! ஒரே டிஸ்டர்ப் பண்ணுறார்” எண்டு எல்லோருக்கும் கதை சொல்லிக்கொண்டு திரிவினம்!

    ஹல்லோ சொல்லுறது ஒரு குற்றமாய்ய்ய்ய்யா? :)

    ReplyDelete
  17. உண்மையில் அந்தக்காலம் பொற்காலம் தான் அதிரா என்னிடமும் ரல்லி சைக்கிள் இருந்து அதுக்கும் பூச்சூடி :))) ஆடிய ஆட்டம் சந்தோஸமான காலம்!
    அப்பா நல்ல அட்வைஸ் சொல்லி இருக்கின்றார்!

    ReplyDelete
  18. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் விடிஞ்சுபோச்சாஆஆஆஆஆஆஆ.. இன்று சண்டே ஆச்சே:) இது வேற சண்டே.:) அதான் கொஞ்சம் அசந்திட்டேன்:))...

    ஆவ்வ்வ் ஆசியா வந்திருக்கிறாக....

    புதுசா... அவநாயகன் வந்திருக்கிறாக...

    ஆங்கிலக் கால்வாயில் குளிச்சதால எப்பவுமே ஃபிரெஷ்சா இருக்கும்:).. (இது வேற ஃபிரெஷ்:)) மணியம் கஃபே ஓனர் வந்திருக்கிறாக.....

    தோப்பாகிட்ட நேசன் வந்திருக்கிறாக.... வாங்கோ வாங்கோ.. மீ.. கொஞ்சத்தால வருகிறேன்ன்ன்ன்ன்:))...


    ReplyDelete
  19. அன்றில் இருந்து...... அதாவது மச்சாளவையை மீட் பண்ணப் போறதில் இருந்து, இன்றுவரை...... அதாவது காரை துடைக்காமல் வைத்திருப்பது வரை அப்பாவின் சொல் கேட்டு, அச்சா பிள்ளையாக இருக்கும், பூஸாரைப் பாராட்டி, நானும் அக்காவும் இந்த அன்பளிப்பை வழங்குகிறோம்!

    க்ளாப்! க்ளாப்!!


    ReplyDelete
  20. அதிரா.. அப்பா அட்வைஸ் சூப்பர்... நீங்க தான் 6 வயசுல இருந்தே நல்ல பொண்ணாச்சே உங்களுக்கு எதுக்கு அட்வைஸ் சொல்லிட்டே இருந்தார் அப்பா???... அப்படின்னு நான் கேட்கல.. யாரோ என்னைக் கேட்கச் சொல்லுறாங்க...ஹீ...ஹீ..ஹீ...

    ReplyDelete
  21. ஆமா... அந்தப் படத்துல பூஸார் குறு குறு எண்டு எதுக்கு அ... அக்காவைப் பார்க்கிறார்??? :) ஏதும் சாப்பிட செய்து தாறன் எண்டு சொல்லிட்டு போத்தலுக்குள்ள இறங்கிட்டா எண்டோ??? :)

    ReplyDelete
  22. ஹையோ அதிரா... எதுக்கு உப்பிடி வேகமா சைக்கிள் ஓடுறீங்கள்...உதால தான் அங்க ரோட்டு முழுக்க பள்ளம் பிட்டியா இருந்தது போல... அது சரி .. உப்பிடி வேகமா சைக்கிள் ஓட வேண்டாம் எண்டு அப்பா அட்வைஸ் சொல்லலையோ... நீங்க தான் 6 ல இருந்தே நல்ல பொண்ணாச்சே.. :)

    ReplyDelete
  23. ///நாவற்குழி என்னுமிடத்தில் வைத்து களவெடுத்திட்டினம்... பிறகுதானே அறிஞ்சன் அது வேறு ஆருமில்லை.. /// ஆவ்வ்வ்.. உது கூட்டு முயற்சியாக் கூட இருக்கலாம் அதிரா.. எதுக்கும் தீர விசாரியுங்கோ...

    ReplyDelete
  24. //Asiya Omar said...
    நல்ல சுவாரசியம்,எல்லாம் கண் முன்னால் கொண்டு வந்திட்டீங்க அதிரா.//

    வாங்கோ ஆசியா வாங்கோ.. முதலாவதா வந்திருக்கிறீங்க.. இந்தாங்கோ ஒரு ஸ்ரோங் ஜிஞ்சர் ரீ.. அதனோடு ஆரியபவானில் இப்பத்தான் சுட்ட கீரைவடை.. இந்தாங்கோ ஒண்டு எடுங்கோ:))....

    என் பதிவு பெரும்பாலும் எல்லோருக்கும் பழைய நினைவுகளாஇக் கிளறும்:)..

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  25. avainaayagan said...
    ஓடுகிற சைக்கிள், கார் என படங்கள் போட்டு அசத்தியிருக்கிறீர்கள். கட்டுரை நடையும் அருமை.

    வாங்கோ அவைநாயகன் வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.

    ReplyDelete

  26. ஆவ்வ்வ் வாங்கோ மணி வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு மிக்க மகிழ்ச்சி.. ஹையோ பழக்கதோஷத்தில டங்கு ஸ்லிப்பாகி சொல்லிட்டேன்ன்.. நீங்கதான் பழசாச்சே:)) ஐ மீன்.. பழகத்தொடங்கி கனகாலமாச்சே எனச் சொல்ல வந்தேன்ன்:) பிறகு வயசு போட்டுதெண்டு சொல்லிட்டனோ எண்டெல்லாம் தப்பா புரிஞ்சுகொள்ளப்பூடா:).. மீ அப்பூடி எல்லாம் சொல்ல மாட்டேன்:) ஏனெண்டால்ல் 6 வயசிலிருந்தே... சரி சரி காதைப் பொத்தாதீங்க மீ டெல்..லேல்லை:))

    ReplyDelete

  27. மாத்தியோசி மணி மணி said...
    வணக்கம் வணக்கம்! பூஸாருக்கு இனிய ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! இப்பதான் இமயமலையில் இருந்து, இமயமலை தரிசனம் முடிச்சுக் கொண்டுவாறன்! பொறுங்கோ ஒரு கப் மோர் குடிச்சிட்டு வாறன்!

    //ஹா..ஹா..ஹா.. ஹையோ ஏன் இமயமலையிலிருந்து இறங்கி வந்தனீங்கள்..:) இது நல்லதுக்கில்ல:))... சாமியார் எண்டால் முப்பதயிரம் வருஷமானாலும் இமயமலையிலேயே இருக்கோணுமாம்ம் சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..).. ஏன் இப்ப மோர் இந்தாங்கோ அவகாடோ யூஸ் குடியுங்கோ:)

    ReplyDelete
  28. வணக்கம்,அதிரா!நல்ல பதிவு/பகிர்வு!ஊருக்குப் போயிருந்ததால லேட்டா வாழ்த்து சொல்லியிருந்தேன்.மீண்டும்..........!

    ReplyDelete
  29. நல்ல பதிவு அதிரா...உங்க தமிழ் படிக்க எனக்கு ஆசையா நல்லா இருக்கு..

    ReplyDelete
  30. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! யாரது கமெண்ட்ஸுகளுக்குப் பதில் போடாமல், பியானோ வாசிச்சுக்கொண்டு இருக்கிறது?

    ReplyDelete
  31. ஆஆஆஆஆஆ கண்டுபிடிச்சிட்டன் கண்டு பிடிச்சிட்டன்! சாமத்தில, இருட்டுக்குள்ளால பதுங்கிப் பதுங்கி சிலர் போகினம்! என்னமோ வசமா களவு எடுக்கப் போயினம் போல! அடியுங்கோ பொலிசுக்குப் ஃபோன்!

    ReplyDelete
  32. வணக்கம் அதிரா... நலமோ...:)
    அப்பா நல்லாய்த்தான் அட்வைஸ் பண்ணி இருக்கிறார். வாழ்க்கையில் நல்ல பழக்க வழக்கங்களை தகுந்த நேரத்தில் உகந்தமாதிரி புத்திமதி தாறது உண்மையிலும் மிக மிக முக்கியமானது.

    உங்க அப்பாவை நினைக்கும் பொது மிகச் சந்தோஷமாக இருக்கு...:)

    ReplyDelete
  33. உங்களின் ஊர் அனுபவம் நான் அனுபவிக்கவில்லை. ஆனால் நான் அனுபவித்தது வேறைமாதிரி.
    எந்த நேரமும் மேலாலை கொட்டுண்ணுமோ, சோதினை எண்டு வந்து பெருஞ்சோதனை ஆகிப்போகுமோ இரவிரவா வாணவேடிக்கை இப்படி...


    ReplyDelete
  34. இம்முறை பூஸானந்தா ஏன் உருக்கத்தோடு மொழிகளை உதிர விட்டிருக்கிரார்... கடும் பனிப்பொழிவு, குளிர் காரணமோ...:)))

    என்ன சொன்னாலும் அருமையான அனுபவப்பகிர்வு அதிரா... வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  35. அப்பாவின் அட்வைஸ் அட்டகாசம்.பதிவு சுவாரஸ்யம் அதிரா.

    ReplyDelete
  36. //அப்போ சொல்லித் தருவார், ஆரும் ஏதும் சொன்னாலோ, கிண்டல் பண்ணினாலோ பயந்திடாதே.. உன்னைப் பார்த்து குரங்குபோல இருக்கே என ஒருவர் சொன்னால்கூட... கலங்கிடாதே..//

    அப்பாககளுக்கு அதுவும் பெண் குழந்தைகள் மேல் பாசம் அதிகம்.


    உங்கள் அப்பாசொல்வது போல் தான் நான் என் பையன்களிடம்.

    அவன் இப்ப்டி பேசிட்டான் , கிண்டல் பன்றான் , ஒழுங்கு காட்டுகிறான் என்பார்கள்

    நான் ஒரே வார்த்தை தான் சொல்வேன், முன்பு என் பெரிய பையன் கிட்ட, இப்ப என் சின்ன பையன் கிட்ட //

    யாராவது உன்னை கிண்டல் பண்ணாலோ ஒழுங்கு காண்பித்தாலோ. வேற என்ன உன்னை பேசினாலும்.//

    அவர்கள் அவர்களை பார்த்தே அப்படி பேசி கொள்கிறார்கள் என்று நினைத்து கொள் என்பேன்.

    இது வரை இருவரும் அதற்கு பிறகு வந்து யாரையும் பற்றி கம்ப்ளெயிண்ட் செய்வதில்லை.

    யார் கிண்டல் பண்ணும் போதும் ஏசும் போதும் நான் சொன்னதை நினைவு படுத்தி கொண்டு கண்டுக்காமல் இருந்து விடுவார்கள்

    அதிரா நிறைய பதிவுகள் போட்டு விட்டீர்கள் என்னால் தொடர்ந்து கமெண்ட் போட வரமுடியவில்லை

    உஙக்ள் 4 வருட பிளாக் பிற்ந்தநாளுக்கும், உங்கள் பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள் பல/...

    ReplyDelete

  37. அல்லோருக்கும் இனிய காலை வணக்கம்....

    மக்கள்ஸ்ஸ்ஸ் மீ மகுடம் சூடிட்டேன்ன்ன்ன்ன்:)) ஹையோ ஏனிந்த முறைப்பூ... உப்பூடி முறைக்காதீங்கோ.. அப்பூடி என்ன சொல்லிட்டேன்ன்.. அது டங்கு ஸ்லிப்பாகி... ஒரு வார்த்தை மாறிச்சொன்னது தப்பா?:)))..

    ஹையோ சூடான இடுகைக்குள் அதிரா வந்திட்டேன்ன் தமிழ் மணத்தில:))

    http://www.tamilmanam.net/

    உந்த லிங்கில இடப்பக்கம் பாருங்கோவன்.. ஷாக்ட் ஆகிடுவீங்க:))..... ஆஆஆஆஆஆஆ அதெங்க இருந்து புகைப்புகையா வருதூஊஊஊஊஊஊஊஉ:) உந்தப் புகை விடுற எஞ்சினை எல்லாம் ஓஃப் பண்ணிட்டு ஓடிவந்து அதிராவை வாழ்த்தோணும் சொல்லிட்டேன்ன்ன்ன்:)))


    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ வாழ்த்துறதுக்குக்கூட எதையாவது சொல்லி மிரட்ட வேண்டியிருக்கே கபால வைரவா:))..


    ஊசிக்குறிப்பு:
    ஹையோ பயந்திடாதீங்கோ மக்கள்ஸ்ஸ்.. அது அதிரா உப்பூடித்தான்ன்.. ச்சும்மா ச்சும்மா சவுண்டு விடுவேன்ன்ன்.. கண்டுக்காதீங்க...

    அம்மம்மா சொல்லுறவ...
    “அதிகம் கொக்கரிக்கும் கோழி சிறிய முட்டைகளை இடுமாம்”...
    “குரைக்கிற நாய் கடிக்காதாம்ம்”:)).. கொஞ்சம் வோக் போயிட்டு வந்து உங்களை எல்லாம் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுபவர்.. புலாலியூர் பூஸானந்தா:))..

    நன்றி வணக்கம்.. மன்னிச்சுக்கொள்ளுங்கோ:).

    ReplyDelete
  38. மாத்தியோசி மணி மணி said...
    அப்பாவின் அட்வைஸை தப்பாமல் கேட்ட பூஸாருக்கு இந்த நாய்க் குஞ்சு பரிசாக வழங்கப்படுகிறது!

    குறிப்பு - 3 வேளை நல்லா சாப்பாடு போட்டு வளர்க்கவும்!

    என்னாது நாய்க் குஞ்சோ? என்ன கொடுமை இது.. வல்லிபுர முருகா:). அதுவும் டேஞ்சர் கலரில இருக்குதே.. மரத்தில வேற ஏறியிருக்குது பறக்குமோ?:)... கடிக்க வந்தால் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்ன்.. பிறகு என்னைச் சாட்சிக்கெல்லாம் கூப்பிடப்பூடா இப்பவே சொல்லிட்டேன்ன்:))..

    3 வேளை சாப்பாடு:).. ஹா..ஹா..ஹா.. அதானே பார்த்தேன்ன்.. என்னடா விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே இன்னும் சாப்பாட்டுக் கதையைக் காணல்லியே என:))...

    ஸ்ஸாப்பா என்னைக் காப்பாத்துங்கோ வைரவா.

    ReplyDelete
  39. மாத்தியோசி மணி மணி said...
    இம்முறை நான் சிரிக்கப் போறதில்லை:) சீரியசாக எழுதப்போறன்:). ///

    ஹா ஹா நாங்கள் சிரிக்கலாம் தானே! அதான் சிரிச்சேன்! ஆனாலும் பூஸார் அவர்களே உங்கள் தனித்துவமே அந்த அப்பாவிச் சிரிப்புத்தான்! தயவு செய்து கைவிட்டிடாதேங்கோ - நான் சிரிப்பைச் சொன்னேன் :)//

    ஹையோ அவசரப்பட்டு.. பதிவிலயும், பின்னூட்டத்திலயும் சிரிக்கும் சிரிப்பை வச்சு ஒரு முடிவுக்கு வந்திடாதீங்கோ:)).. நேரில கேட்டால் ஒருவேளை ஓடிப்போய் நீங்களும் முருங்கில ஏறிடுவீங்கள்...:))

    ReplyDelete
  40. மாத்தியோசி மணி மணி said...
    நான் குட்டிப் பொண்ணாக:) இருந்த காலத்தில(அதுக்காக இப்ப வளர்ந்திட்டீங்களோ எனக் கேட்கப்புடா:)) ///

    இல்லை நான் கேட்பன்! இப்ப வளர்ந்தீட்டீங்களோ? :)

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு சுவீட் 16 ல இருக்கும் பிள்ளையைப் பார்த்து உப்பூடிப் பப்பூளிக்குல கேட்கலாமோ?:)) ஷையா வருமெல்லோ:))...


    ReplyDelete
  41. மாத்தியோசி மணி மணி said...
    அதுக்கு கரியர், முன்னால குடை எல்லாம் அழகாகப் போட்டு, என்னவெல்லாம் போட்டு அலங்கரிக்கோணுமோ அலங்கரிச்சு:),/////

    நாங்கள்லாம் சைக்கிளுக்கு முன் பகுதியில் கூடைதான் பூட்டி வைத்திருந்தோம்! நீங்கள் குடை பூட்டி வைச்சிருந்திருக்கிறியள்! என்ன கொடுமை முருகா

    கிக்..கிக்..கீஈஈஈஈஈ:) அது விண்டோஸ் 8.. புதுக் கொம்பியூட்டர் வாங்கினமா.. கீ போர்ட் எல்லாம் கைக்குள் பழகுதில்லை.... கால் எல்லாம் வருதில்லை போட... :).. சாட்டு சொல்றன் என்ன?:))... இருக்கட்டும் இருக்கட்டும்:)).. அது கூடைதான்ன் டங்கு ஸ்லிப்பு:)

    ReplyDelete
  42. பதிவில் நிறைய அருமையான விஷயங்களை பகிர்ந்திருக்கீங்க அதீஸ் .
    உங்கள் தந்தையின் வளர்ப்பு முறை சிறந்தது .நாம் பிள்ளைகள் மேல் நம்பிக்கை வைத்தால் போதும் அவர்கள் வழி தவறவே மாட்டார்கள் .
    உங்க அப்பா மாதிரிதான் எங்கப்பாவும் ஒரே அட்வைஸ் :))

    ReplyDelete
  43. அதீஸ் :))எனக்கும் மலரும் நினைவுகள் வந்திடுச்சி நான் சைக்கிள் ஒட்டினது ..ரெட் கலர் லேடிஸ் பைக் :))எங்க பகுதில அவ்ளோ ஃபாஸ்டா யாரும் ஒட்டினது கிடையாது :))(எதிர்பதம் படிங்க )

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. பழைய நினைவுகள் என்றும் இனிமைதான்! மனதோடு உறைந்த நினைவுகளை அவ்வப்போது இப்படி பகிர்ந்துகொள்ளுங்கள் என புலாலியூர்ப் பூஸானந்தா:)-வை உருக்கத்தோடு:) கேட்டுக் கொல்:)கிறேன்! :)

    நானும் +2 படிக்கும்வரை பள்ளிக்கு சைக்கிளில்தான் போவேன் அதிராவ். இன்னும் அந்த சைக்கிள் வீட்டில் இருக்கிறது. லேடீஸ் சைக்கிள் என்பதால் என் (அக்கா)மகன்கள் சைக்கிள் ஓட்டிப் பழக மட்டும் அதைப் பயன்படுத்திகிட்டு புது சைக்கிள் வாங்கிட்டாங்க! ;)

    அப்பாவின் அறிவுரை அருமை. அனுபவம் பேசுகையில் நமக்கு எவ்வளவு வயசானாலும் கேட்டுக்கணும், ஒயுங்கா மிளகச் சாப்புடுங்க, சரியா?

    ReplyDelete
  46. உந்த மகுடம் சூட்டிய பூஸார் ரொம்ப க்யூட்டா இருக்கிறா அதிரா! :)

    ReplyDelete
  47. //இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருந்த கொஞ்சக் காலத்தை அனுபவித்திருக்கிறேன். அந்தப் பாக்கியம் எல்லோருக்க்கும் கிடைக்காது, அந்நேரம் அங்கிருந்தோருக்கு மட்டுமே கிடைச்சிருக்கும். அது ஒரு அழகிய பொற்காலம்....:).// 100% வீதம் உண்மை அதிரா. அந்நேரம் பயப்பாடு இருந்தாலும்,நன்றாகவே திரிந்தோம்.சந்தோஷமும் இருந்தது.
    அப்போ நடந்த கம்பன்விழாதான் ஞாபகம் வருகிறது.போய்விட்டு இரவு
    சைக்கிளில் வருவோம்.ம்..ம்.. அது ஒரு கனவாகிப்போனகாலம்.
    //அந்தப் பாக்கியம் எல்லோருக்க்கும் கிடைக்காது.//நான் நல்லா அனுபவித்தேனே.

    ReplyDelete
  48. //என் பதிவு பெரும்பாலும் எல்லோருக்கும் பழைய நினைவுகளாஇக் கிளறும்:)..// நீங்க சொல்லாவிட்டாலும் உண்மையில் நினைவுகள் பின்னோக்கிவிட்டது.நீங்க எழுதிய அத்தனை விடயமும் திரும்ப என் மனக்கண்களில் வந்துவிட்டது. என்னிடமும் லுமாலாதான் இருந்தது. கூடை,ஸ்ரிக்கர்பளபளப்பு .(அதுதான் ஒவ்வொருநாளும் க்ளீனிங்.) பிரச்சனை,இடப்பெயர்வுஎல்லாமே கொண்டுபோய்விட்டது.அதன் நினைவுகள் மட்டுமே எம் நெஞ்சினில்.

    ReplyDelete
  49. //இப்படி அட்வைஸ்கள் நீளும். அப்போ எழுந்து போக முடியாமல் பல்லைக் கடித்தபடி கேட்டுக்கொண்டி ருப்போம்,//நீங்களும் இப்படி இருந்த னீகளே.நானும் இப்படித்தான்.ஆனா அதன் அருமை இப்ப நல்லா தெரியுது.

    ReplyDelete
  50. இந்த சைக்கிள் ஓட்டும் விதத்தைப்பார்த்தாலே தெரியுது எப்படி நீங்க அங்கே ஓடியிருப்பீங்க என்று. படங்களும் அருமை.பூஸானந்தாவின்
    உரு(க்)கிய மொழி உருக்குது என் மனதை.
    மகி கூறியபடி அடிக்கடி பழையஞாபகங்களை மீட்டுக்கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்க. மிகவும் நல்லதொரு பகிர்விற்கு ரெம்ப நன்றி அதிரா.

    ReplyDelete
  51. மாத்தியோசி மணி மணி said...
    பாருங்கோ, பாருங்கோ எங்களை ராணி சந்தன சோப் போடு, ராஜா சந்தன சோப் போடு எண்டு நச்சரிச்சுப் போட்டு, இப்ப தாங்கள் சுத்தம் இல்லையாம்! ஹையோ முருகா! நீ ஏன் தமிழரின் பாரம்பரிய உடையுடன் ஆண்டியனாய்ய்??

    குறிப்பு - 4 ம் நம்பர்காரர் நோர்மலாவே சுத்தம் குறைவாம்! ஐயோ நான் சொல்லல! அது தீபம் தொலைக்காட்சியில ராஜி பலன் போகுது :)
    ஹா..ஹா..ஹா.. இதென்ன புயுக்கதை:) நாலாம் நம்பர்காரர் குளிக்காயினம் எண்டெல்லோ கேள்விப்பட்டனான்..:) ஆனா சுத்தமா இருப்பினமாம்:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

    அதுசரி விஜய் ரீவியில றாஜி எங்க வந்தவ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... காதில என்ன பெயர் விழுந்தாலும்.. அது உப்பூடிப்பெயராவே விழுதே?:) .. ஏன் கணபதி, செல்லப்பூ இப்பூடிப் பெயர்களே விழுறேல்லையாம்ம்ம்:))..

    ReplyDelete
  52. மாத்தியோசி மணி மணி said...

    பின்னேரங்களில டியூசனுக்குப் போய் படிப்பம் எண்டில்லை! உலாத்திக் கொண்டு திரிஞ்சிருக்கினம்! அப்ப பாருங்கோவன்!

    பார்த்திங்களோ அவதிப்பட்டு தப்பான முடிவுக்கு வந்திட்டிங்கள்:)) மீ ரியூஷனுக்குப் போறேல்லை:)) வீட்டிலயே படிச்சுத்தான் பாஸ் ஆனனான்:)).. இப்ப புரியுதோ மீ ரொம்ப நல்ல பொண்ணு மட்டுமில்ல:) ரொம்ப நல்ல கெட்டிக்காரியும்கூட:))..

    ஹையோஓஓஓஓஓ கல்லுவிழும் சத்தமெல்லாம் கேட்குதே.. வைரவா வடமாலை போடுவேன்ன்ன்ன் என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்:)).

    ReplyDelete
  53. மாத்தியோசி மணி மணி said...
    இதைக் கேட்டதும் எனக்கோ அப்பா ஏசுவாரோ என நெஞ்சு திக்கு திக்கு எண்ணுது... ///

    என்னுது என்றுதான் வரும்! கவனம் தமிழ் :)

    ஆஆஆஆஆஆஆ நிஜமா?.. நான் ரெண்ணுசுழி இன்னன்னா சிலர் போட்டு எழுதியதைப் பார்த்திருக்கிறேன், அப்பவெல்லாம் நினைச்சேன்ன்.. எழுத்துப்பிழை விடுகினமே என...:) ஹையோ முருகா.. நன்றி மணி.

    ReplyDelete
  54. மாத்தியோசி மணி மணி said...
    ஹி ஹி ஹி அது என்ன சபலமான வயசு? எனக்குப் புரியவே இல்லை! ஒருக்கா விளங்கப்படுத்துங்கோ! நாங்களும் தெரிஞ்சு கொள்ளுவோம்ல!

    இனித் தெரிஞ்சுதான் என்ன பண்ணப்போறீங்க?:) அந்த வயசையெல்லாம் வெற்றிகரமாத் தாண்டி வந்திட்டீங்க என நினைக்கிறேன்ன்:))..

    ReplyDelete
  55. மாத்தியோசி மணி மணி said...
    உன்னைப் பார்த்து குரங்குபோல இருக்கே என ஒருவர் சொன்னால்கூட... கலங்கிடாதே.. நீ சொன்னால் சொல்லிட்டுப்போ எனக்குத் தெரியும் என்னைப்பற்றி என மனதில நினை... ////

    ஹா ஹா அப்பா விஷயம் தெரிஞ்சு தான் சொல்லியிருக்கிறார் போல! ஐயோ பகிடிக்குச் சொன்னன்! கோவிச்சிடாதேங்கோ :)//



    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) யாரங்கே எடுத்து வாங்கோ அந்த.....
    ...............
    ...............
    .............
    கே எஃப் சி சிக்கினை என்றேன்ன்:) சாப்பிடக்கொடுத்தால் வாயடைச்சிடுவாரெல்லோ:))..

    ReplyDelete
  56. மாத்தியோசி மணி மணி said...
    அதை விடுத்து கதைக்காமல் ஒதுங்கிப் போகாதே என்றெல்லாம் சொல்லுவார்ர்...///

    ஓஒ ஓஒ அதான் எங்களோட எல்லாம் பயப்பிடாமல் கதைக்கிறீங்கள் போல! நல்லது நல்லது!

    ஆனா சிலர் இருக்கினம்! சும்மா ஹலோ சொன்னாலே போதும் “ ஐயோ அவருக்கு என்னில ஒரு நோக்கம் இருக்கு போல! ஒரே டிஸ்டர்ப் பண்ணுறார்” எண்டு எல்லோருக்கும் கதை சொல்லிக்கொண்டு திரிவினம்!

    ஹல்லோ சொல்லுறது ஒரு குற்றமாய்ய்ய்ய்யா? :)

    ஹா..ஹா..ஹா... உதுக்குத்தான் சொல்றது ஆளம் அறிஞ்சு காலை விடுங்கோ என:)...

    இதுபற்றி எனக்கும் நிறைய விஷயம் எழுத இருக்கு மணி, ஆனா எழுதினால் தப்பாகிடுமோ எனப் பயம்.

    சிலருக்கு(girls) பேசிக்காவே பயம், வீட்டிலயும் வெருட்டி வளர்ப்பதாலோ என்னவோ... ஆராவது ஒரு நட்போடு சிரிச்சால்கூட தப்பாக எடை போட்டுவிடுகினம்(பெண்களைத்தான் சொல்கிறேன்)...

    என் நண்பிகளே... சிலருக்கு படிக்கும்போது, சில boys, விருப்பமாக இருக்கு எனக் கேட்டாலே, அதுக்கு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கிப்போகாமல்... ஏதோ தாங்கள் பெரிய தியாகிகள்போல, வீட்டுக்கு ஓடிச்சென்று, அப்பாவிடம், அண்ணாவிடம் போட்டுக்கொடுத்து அவ் boy க்கு அடி, ஏச்சு வாங்கிக் கொடுத்திருக்கினம், எனக்கு அதெல்லாம் பிடிப்பதேயில்லை.

    ஒருவர் ஒரு பெண்ணைப் பிடிச்சிருக்கு உனக்கு விருப்பமோ எனக் கேட்பது தப்பா?.. பிடிச்சால் ஓகே சொல்லுங்கோ இல்லையெனில் ஒதுங்க வேண்டியதுதானே, அதை விடுத்து... ஏதோ கொலைக் குற்றம் புரிஞ்சிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பது, வீட்டில் சொல்லி அடிவாங்கிக்கொடுப்பது.... இப்படியும் சில நண்பிகள் இருந்தார்கள்..

    இன்னும் ஒரு வகையினர்.. ஒரு நட்பில் கதைச்சால், தன்னை விரும்புகிறார் என கதைபரப்புவது, பின்பு நம்பிப் பழகினேன்ன்... ஏமாற்றிவிட்டார் எனப் புலம்புவது.. இந்தத் தெளிவில்லா நிலை மாறவேண்டும்.. ஆனா இப்போதைய சமுதாயம் நிறைய மாறிவருகிறது என நம்புகிறேன்ன்..

    சரி சரி இதுபற்றி அதிகம் கதைச்சால் எனக்கும் கல்லுகள் விழும்:))..

    மியாவும் நன்றி மணி.

    ReplyDelete
  57. தனிமரம் said...
    உண்மையில் அந்தக்காலம் பொற்காலம் தான் அதிரா என்னிடமும் ரல்லி சைக்கிள் இருந்து அதுக்கும் பூச்சூடி :))) ஆடிய ஆட்டம் சந்தோஸமான காலம்!
    அப்பா நல்ல அட்வைஸ் சொல்லி இருக்கின்றார்!

    வாங்கோ நேசன் வாங்கோ மியாவும் நன்றி. சைக்கிள் ஓடித்திரிஞ்சதும் ஒரு அழகிய காலம்தான். இக்காலத்தில் வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு அந்த இனிமையான அனுபவங்கள் கிடைக்காமல் போகுது...

    ReplyDelete
  58. மாத்தியோசி மணி மணி said...
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! யாரது கமெண்ட்ஸுகளுக்குப் பதில் போடாமல், பியானோ வாசிச்சுக்கொண்டு இருக்கிறது?


    பியானோ வாசிக்கும் சுவீட் 16 ரொம்ப கியூட்ட்... மீயைப் போலவே:)

    ஆஆஆஆஆஆ கண்டுபிடிச்சிட்டன் கண்டு பிடிச்சிட்டன்! சாமத்தில, இருட்டுக்குள்ளால பதுங்கிப் பதுங்கி சிலர் போகினம்! என்னமோ வசமா களவு எடுக்கப் போயினம் போல! அடியுங்கோ பொலிசுக்குப் ஃபோன்!///

    karrrrrrrrrr:)) ஒரு பஎளர்ணமி நிலவைப் போய்க் கறுப்புப் பூஸுடன் ஒப்பிட்ட குற்றத்துக்காக:)... குயின் அம்மம்மா அழைக்கிறா மணியை:)).. டேபிளில் தன்னோடிருந்து டின்னர் சாப்பிட அல்ல:))..

    ReplyDelete

  59. மாத்தியோசி மணி மணி said...
    அன்றில் இருந்து...... அதாவது மச்சாளவையை மீட் பண்ணப் போறதில் இருந்து, இன்றுவரை...... அதாவது காரை துடைக்காமல் வைத்திருப்பது வரை அப்பாவின் சொல் கேட்டு, அச்சா பிள்ளையாக இருக்கும், பூஸாரைப் பாராட்டி, நானும் அக்காவும் இந்த அன்பளிப்பை வழங்குகிறோம்!

    க்ளாப்! க்ளாப்!!

    ஆஆ திருத்தணி முருகா... கபால தேசத்து முருகா..நான் கும்பிட்ட வைரவர் என்னைக் காப்பாற்றிப்போட்டார்ர்...:) எனக்குப் படம் தெரியவில்லை இங்கு:) ஹா..ஹா..ஹா.. குட்டிப் பெட்டிதான் தெரியுது.. ஆருக்காவது இப்படம் தெரியுதோ?

    ReplyDelete
  60. பூங்கோதை said...
    அதிரா.. அப்பா அட்வைஸ் சூப்பர்... நீங்க தான் 6 வயசுல இருந்தே நல்ல பொண்ணாச்சே உங்களுக்கு எதுக்கு அட்வைஸ் சொல்லிட்டே இருந்தார் அப்பா???... அப்படின்னு நான் கேட்கல.. யாரோ என்னைக் கேட்கச் சொல்லுறாங்க...ஹீ...ஹீ..ஹீ...

    வாங்கோ கோதை வாங்கோ.. ஹக்..ஹக்..ஹக்.. கிட்னியை ஓசிச்சு பொயிண்ட்டைப் பிடிச்சிட்டீங்க:)).. அது வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏற.. இது வேஏஏஏஏஏஏஏஏஏற கோதை:)

    ReplyDelete
  61. பூங்கோதை said...
    ஆமா... அந்தப் படத்துல பூஸார் குறு குறு எண்டு எதுக்கு அ... அக்காவைப் பார்க்கிறார்??? :) ஏதும் சாப்பிட செய்து தாறன் எண்டு சொல்லிட்டு போத்தலுக்குள்ள இறங்கிட்டா எண்டோ??? :)

    அவ்வ்வ் அது அஞ்சுவுக்கு பூஸ் சொல்றார்ர்.. தனியே உள்ளே இருக்க போறிங்கா இருந்தா வெளில வாங்கோ வெளாடலாம் எண்டு:) அஞ்சு பயத்தில வாறாவில்ல:)..

    ReplyDelete
  62. பூங்கோதை said...
    ///நாவற்குழி என்னுமிடத்தில் வைத்து களவெடுத்திட்டினம்... பிறகுதானே அறிஞ்சன் அது வேறு ஆருமில்லை.. /// ஆவ்வ்வ்.. உது கூட்டு முயற்சியாக் கூட இருக்கலாம் அதிரா.. எதுக்கும் தீர விசாரியுங்கோ...

    ஹா..ஹா..ஹா.. சைக்கிள் மட்டுமில்ல கோதை ஸ்கூட்டரும் வேகமா ஓட்டியிருக்கிறன்.. ஒரு தடவை மச்சாளைப் பின்னால ஏத்திக்கொண்டு, முறுக்கி விட்டன் ஸ்கூட்டரை.. அது பின் ரயர் ஒருக்கால் மேல எழும்புவதுபோல பாய்ஞ்சுது, கோயில் வாசல்ல சிலர் கதைச்சுக்கொண்டிருந்தவை எங்களைப் பார்த்து எழும்பி நிண்டினம்:)..

    ஆனா மச்சாள் கெட்டிக்காரி, குரங்குப் பிடியா என்னைப் பிடிச்சுக்கொண்டிருந்ததால விழேல்லை அவ:)...!

    இருக்கலாம் இருக்கலாம்.. கூட்டு முயற்சியாகவும் இருக்கலாம். அதுதான் மெளனம் காக்கினமாக்கும்:) எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்:)

    மியாவும் நன்றி கோதை இனி நேரமாச்சே.. மிகுதி பதில் பின்புதான் எழுதலாம்போல:(..

    ReplyDelete
  63. Yoga.S. said...
    வணக்கம்,அதிரா!நல்ல பதிவு/பகிர்வு!ஊருக்குப் போயிருந்ததால லேட்டா வாழ்த்து சொல்லியிருந்தேன்.மீண்டும்..........!

    வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ.. ஓ ஊருக்குப் போனனீங்களோ? கிட்டடியிலதானே ஆரோ காலமாகிட்டினம் எனப் போய் வந்தனீங்க....

    மியாவும் நன்றி. காலதாமதமானாலும் நீங்கள் வந்தது சந்தோசம்.

    ReplyDelete
  64. ஆதிரா said...
    நல்ல பதிவு அதிரா...உங்க தமிழ் படிக்க எனக்கு ஆசையா நல்லா இருக்கு..

    வாங்கோ ஆதிரா.. ஹையோ கிட்டத்தட்ட என்பெயரிலயே உர்ங்கள் பெயரும் வருதே... சந்தோசம்.

    முன்னமுன்னம் வந்திருக்கிறீங்க நல்வரவு. உங்கள் பக்கம் ஓடிப்போய்ப் பார்த்தேன்ன்ன் ஹைக்கூவில் கலக்குறீங்க.. வருகிறேன்ன்ன் எனக்கும் ஹைக்கூ +கவிதைகள் ரொம்ப பிடிக்கும். மியாவும் நன்றி.

    ReplyDelete
  65. இளமதி said...
    வணக்கம் அதிரா... நலமோ...:)

    வாங்கோ இளமதி வாங்கோ.. நலம் நலமறிய ஆவல்.. மியாவும் நன்றி.

    உண்மைதான், சின்ன வயதில் அட்வைஸ் என்பது கேட்கப் பிடிக்கவே பிடிக்காது, ஆனாலும் அப்போ கேட்டது இன்றுவரை பயன்படுது(ஆனா இப்பவும் கேட்கப் பிடிக்குதில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  66. இளமதி said...
    உங்களின் ஊர் அனுபவம் நான் அனுபவிக்கவில்லை. ஆனால் நான் அனுபவித்தது வேறைமாதிரி.
    எந்த நேரமும் மேலாலை கொட்டுண்ணுமோ, சோதினை எண்டு வந்து பெருஞ்சோதனை ஆகிப்போகுமோ இரவிரவா வாணவேடிக்கை இப்படி...

    ஹையோ உது கொடுமையிலும் கொடுமை.. தாங்கமுடியாத அனுபவம்... விடுமுறையில் ஒருக்கா போயிருந்தபோது நானும் அனுபவித்திருக்கிறேன்ன்..

    இருந்தாப்போல.. ஊஊஊஊஊஊஊ எண்டொரு சத்தம்.. பொம்பர் வருதூஊஊஊஊஊஊ என கத்திச்சினம் எல்லோரும்.. அப்படியே நிண்ட இடத்தில விழுந்து படுத்திட்டன், குரோட்டன் செடிகளோடு வாய்க்காலுக்குள் தலை மட்டும், உடம்பெல்லாம் வெளில:))..

    ஹையோ அது போனபின் எல்லோரும் உருண்டு பிரண்டு சிரிச்சது இப்பவும் நினைவிருக்கு:)).. தலையை மறைச்சால் போதுமெண்டுதான் மனம் உடன எண்ணும்:)).

    ReplyDelete
  67. பூஸானந்தா எப்பவும் புதுசுபுதுசா மாத்தி ஓசிக்கிறார்:)).. மியாவும் நன்றி இளமதி.

    ReplyDelete
  68. சரி சரி இதுபற்றி அதிகம் கதைச்சால் எனக்கும் கல்லுகள் விழும்:))..///

    Please :))) i would like to collect those precious stones :))

    ReplyDelete
  69. குரோட்டன் செடிகளோடு வாய்க்காலுக்குள் தலை மட்டும், உடம்பெல்லாம் வெளில:))..//

    ஹையோ ஹையோ :)) பூஸ்கள் அப்படிதான் ஒளியும் எங்க வீட்டில

    ReplyDelete
  70. angelin said...
    சரி சரி இதுபற்றி அதிகம் கதைச்சால் எனக்கும் கல்லுகள் விழும்:))..///

    Please :))) i would like to collect those precious stones :))//

    karrrrrrrrrr:) I am going to make.. சிக்கின் பிர்ராஆஆஆஆஆஆஆஆஆஆஆணி :)

    ReplyDelete
  71. angelin said...
    குரோட்டன் செடிகளோடு வாய்க்காலுக்குள் தலை மட்டும், உடம்பெல்லாம் வெளில:))..//

    ஹையோ ஹையோ :)) பூஸ்கள் அப்படிதான் ஒளியும் எங்க வீட்டில///

    karrrrrrrrrrrrrr:))

    ReplyDelete
  72. வாழ்க்கையின் அழகான பகுதியை நேசிக்கப் பயில வேண்டும்....//

    Well said...Can I get the copyright for it....-:)

    ReplyDelete
  73. இனிய பிற்ந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ஓடும் சைக்கிளும் காரும் அதில் பூனையும் அழகோ அழகு.

    அப்பா வைத்த நம்பிக்கையும், அம்மாவின் கண்டிப்புகளும் மிகவும் சுவையாக பகிர்ந்து கொண்டுள்ள்து நல்லா இருக்கு. பாராட்டுக்கள்>

    ReplyDelete
  74. கொஞ்சநாள் வராமல் இருந்து, இப்ப வந்து பார்த்தால்... நிறைய மாற்றங்கள் தெரியுதே! வடிவா இருக்கு.
    அதிரா பழங்கதைகள் சொல்லுற விதம், வாசிக்க விருப்பம். ரசிச்சு வாசிச்சன்.

    ReplyDelete
  75. Athira is missing....Athira-vai kaanavillai...

    Athira is missing....Athira-vai kaanavillai...

    Athira is missing....Athira-vai kaanavillai...

    Athira is missing....Athira-vai kaanavillai...

    :)))))

    ReplyDelete
  76. இனிய மலரும் நினைவுகளுக்கும் அருமையான படங்களுக்கும் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  77. படம் எல்லாம் போட்டு ரொம்ப மெனக்கிட்டிருக்கீங்க. அழகா இருக்கு.

    தங்களது இலங்கை வாழ்க்கையில் கஷ்டங்களுக்கிடையே தங்களது அனுபவங்கள் படிக்க சுவாரசியமாகத் தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  78. மீ வந்துகொண்டிருக்கிறேஎன் ரொக்கட் ஸ்பீட்டில:).. ஆரும் கோபிச்சிடாதீங்க விரைவில் பதில் தருவேன்ன்.. காசிக்குப் போக வெளிக்கிட்டு:)), ஃபிளைட் கான்சலாகிட்டுது அதுதான் தாமதம்:))

    ReplyDelete


  79. உஸ்ஸ்ஸ்..ஸ் அதிரா... பாவம் பிள்ளை பயந்து கொஞ்சத்தில கத்தப்போகுது. மெதுவா பாடுங்கோ...:))).

    எங்கை போயிட்டீங்க... கனநாளா காணேலை...கர்ர்ர்ர்ர்....:)..

    ReplyDelete
  80. வழி விடுங்கோ வழிவிடுங்கோ... அடாது ஸ்நோக் கொட்டினாலும் நான் விடாது பின்னூட்டங்களுக்குப் பதில் போட்டே தீருவேன்ன்ன்:)) மீ கவரிமான் பரம்பரையாக்கும்....:)



    ReplyDelete
  81. வாங்கோ ஸாதிகா அக்கா.. மியாவும் நன்றி.

    ReplyDelete
  82. வாங்கோ ஜல் அக்கா..


    யாராவது உன்னை கிண்டல் பண்ணாலோ ஒழுங்கு காண்பித்தாலோ. வேற என்ன உன்னை பேசினாலும்.//

    அவர்கள் அவர்களை பார்த்தே அப்படி பேசி கொள்கிறார்கள் என்று நினைத்து கொள் என்பேன்.

    நல்ல அட்வைஸ்தான் சொல்லிக்கொடுத்திருக்கிறீங்க... அது உண்மையேதான்...

    மியாவும் நன்றி ஜலீலாக்கா.


    ReplyDelete
  83. குட்டன் said...
    கன சுவாரஸ்யம்!

    வாங்கோ குட்டன்.. மியாவும் நன்றி.

    ReplyDelete
  84. வாங்கோ மகி வாங்கோ.. என் பதில் மிகவும் தாமதமாகிட்டோ?:) இனி ஆரும் திரும்ப வந்து படிக்க மாட்டீங்க நான் போடும் பதிலை எனும் நம்பிக்கையில் சோட் அண்ட் சுவீட்ட் ஆக்கிட்டேன் என் பதிலை. .. மியாவும் நன்றி மகி..

    நான் சின்னனாக இருந்த போது அண்ணனின் ரேசிங் பைக்கில்தான் பழகினேன், அதுக்கு பார் இருக்கும்.. பாருக்கு கீழாலதான் ஓடிப் பழகினேன்... பின்புதான்... நோமலாக ஓடப்பழகினேன்:).

    ReplyDelete
  85. வாங்கோ அம்முலு .. ஓம் கம்பன் விழா அதிலும் ஜெயராஜ் அவர்களின் பேச்சை நான் மிஸ் பண்ண விரும்புவதே இல்லை.. அந்த நிலவில் கச்சானும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு நிகழ்ச்சி பார்க்க எவ்வளவு மகிச்சியாக இருக்கும்.

    திருவிழாவுக்கு வருவோரை விட ஜெயராஜ் அவர்களின், பட்டிமன்றம் பிரசங்கம் போன்றவற்றுக்கு வரும் சனத்திரள் சொல்லி முடியாது....

    மியாவும் நன்றி அம்முலு காலாவதியாகிவிட்டமையால்:) என் பதில்களைச் சுருகி விட்டேன்ன் மன்னிக்கவும்....

    ReplyDelete
  86. வாங்கோ ரெவெரி...

    கொப்பிரைட் தரலாம் ஆனா முதல்ல பீஸை என் எக்கவுண்டில் சேர்த்திடுங்கோ:))...மியாவும் நன்றி.

    ReplyDelete
  87. வாங்கோ கோபு அண்ணன்..மியாவும் நன்றி.

    ReplyDelete
  88. இமா said...
    கொஞ்சநாள் வராமல் இருந்து, இப்ப வந்து பார்த்தால்... நிறைய மாற்றங்கள் தெரியுதே! வடிவா இருக்கு. ///

    வாங்கோ இமா... இனி அடுத்தமுறை வரும்போது இன்னும் பல மாற்றங்கள் இருக்கலாம்:)... ஐ மீன் புளொக்கில்:),, இதுக்காகத்தான் அடிக்கடி வாங்கோ என்பது:))... மியாவும் நன்றி.

    ReplyDelete
  89. Mahi said...
    Athira is missing....Athira-vai kaanavillai...

    Athira is missing....Athira-vai kaanavillai...

    Athira is missing....Athira-vai kaanavillai...

    Athira is missing....Athira-vai kaanavillai...///

    அதுதானே அதிராவைக் காணல்ல அதிராவைக் காணேல்லை.... கண்டுபிடித்துக் கொடுப்போருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்:)))


    ReplyDelete
  90. வாங்கோ ராஜேஸ்வரி அக்கா மியாவும் நன்றி.

    ReplyDelete
  91. இளமதி said...
    உஸ்ஸ்ஸ்..ஸ் அதிரா... பாவம் பிள்ளை பயந்து கொஞ்சத்தில கத்தப்போகுது. மெதுவா பாடுங்கோ...:))).

    எங்கை போயிட்டீங்க... கனநாளா காணேலை...கர்ர்ர்ர்ர்....:)..

    ReplyDelete
  92. எங்கை போயிட்டீங்க... கனநாளா காணேலை...கர்ர்ர்ர்ர்....:)..

    ReplyDelete
  93. exchooooooooseeeeeee meeeeeeee....


    athiraa akkaa ////


    ahiraa akkaa ......


    aarani akkkaaaaaaaaaaaa///


    avvvvvvvvvvvvv ....


    vali maari vantha maari ikktheeeeeeeeeeeeeeeeeeee

    ReplyDelete
  94. yaarida blog maariyo irukku ...

    nerak kodumai ..............

    ReplyDelete
  95. 101

    வணக்கம்...

    அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  96. இந்தப் பகிர்வை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.நன்றி அதிரா.
    http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_21.html

    ReplyDelete
  97. வாங்கோ என் சிஷ்யையே.. இப்போதான் பார்க்கிறேன் இதை... வரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  98. திண்டுக்கல் தனபாலன் said...

    வாங்கோ வாங்கோ.. ஊக்கமுடன் செய்தி சொல்லி தெரியப்படுத்தியமைக்கும் வாத்துக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.