நல்வரவு_()_


Saturday, 16 February 2013

ஆவ்வ் பிறந்திட்டுதூஊஊஊஊஊ:)

சுகப் பிரசவம் தான்ன்ன்ன்:)..
பெயர் வச்சது, மீயும் என் கணவரும் சேர்ந்து, கலந்து, கதைச்சுத்தான்:).

பிறந்தது 16.02.2009. இன்று நான்காவது பிறந்ததினம்..
ல்லோரும் வாங்கோ வாழ்த்துங்கோ.. அதுக்கு முன்னம்.. மொய்ய்ய்ய்ய் ஐ வாசல்லயே எழுதிடுங்கோ:).. பரிசின்(மொய்யின்:)) தகுதிக்கேற்ப்ப.. பல்கனியா:), கலரியோ:), என சீட் நம்பர் கையில் கொடுக்கப்படும்:) அதற்குரிய இருக்கைகளில் அமர்ந்து, கேக் வெட்டும் காட்சியை கண்குளிரக் கண்டுகளியுங்கோ:).

கேக் வெட்டமுன் வானிலை அறிக்கை வாசிக்கப்படும்:), ஏனென்டால் வெளிநாடுகளில் காலநிலை அறிக்கைதான் முக்கியம்:).. இங்கு ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது... ஹலோ!!! ஹவ் ஆ  யூ?.. என்பதுக்கு அடுத்து வரும் வசனம், வெதர் பற்றியதாகத்தான் இருக்கும்..

முன்பின் அறிமுகமில்லாத ஒருவர்கூட எதிருக்கெதிர் சந்திக்க நேரின், நைஸ் வெதர், வொண்டபுல் வெதர், லவ்லி வெதர்.. இப்படி ஏதும் சொல்லிட்டுப் போவினம்.. அதுதான் இங்கத்தைய ஒரு நாகரீகமான உரையாடல்.

அதனாலதான் இப்பிறந்தநாளில்.. மீயும் வெதர்பற்றி வாசிக்கிறனாக்கும்:)).

வானிலை அறிக்கை...
வாசிப்பவர்: .. புலாலியூர் பூஸானந்தா..


மூன்று வாரமாக
மேகம் கர்ப்படைந்திருந்தது!
அக் கர்ப்பத்துக்கு காரணம்
சூரியன் தான், எனக் கூறி..
முகிலினங்கள் கர்த்தால் நடத்தின!
அதனானல் பூமிக்கு
சூரியன் தென்படவில்லை...

தைக் கேட்டு
மனமுடைந்த மேகம்..
தன் கர்ப்பத்துக்கு காரணம்
சூரியன் அல்ல எனவும்
இதனால் அப்பாவிப்
பூமியைத் தண்டிக்க வேண்டாம்
எனவும் அறிக்கைகள் விட்டது..!

தையும் ஏற்காமல் தொடர்ந்தும்
வழியடைப்புச் செய்தன முகில்கள்..
இதுக்கொரு தீர்வு காண வேண்டி..
மேகம் தன் கருவைக்
கலைக்க முடிவெடுத்தது..!

தனால் கடுமையாக
உடலைக் குலுக்கியது..
காற்றின் வெப்பநிலையைக்
குறைத்தது....!

ர்ப்பம் ஈடாட்டம் கண்டது..
அதன் வெற்றியாக
இன்று ஸ்நோத் தூறல்கள்
விழ ஆரம்பித்தன..
இது நீடித்து..

ரும் வெள்ளிக்கிழமை
அதிக ஸ்நோவோடு
மேகத்தின் கர்ப்பம்

முழுவதும் கலைக்கப்படுமென
எதிர்ப்பார்க்கப் படுகிறது :)..

இது போனமாதம் இங்கத்தைய வானிலை அறிக்கையை கேட்டவுடன், அதிரடியாக என் மனதில் உதித்த கவிதை, ஏற்கனவே சிலருக்கு இது தெரியும்.. இருப்பினும்..:))..

ஓ நாங்க படிச்சிட்டமே எனச் சொல்லிட்டு ஓடாமல்.. ஆஹா.. ஓஹோ சூப்பர்ர்.. வைரமுத்து அங்கிளையே மிஞ்சிட்டீங்க:)எண்டெல்லாம் புகழ்ந்து சொல்லோணும் சொல்லிட்டேன்ன்ன்... பாருங்கோ:))

இல்லாட்டில் பட்டினைத் தட்டிடுவேன்ன்ன்:)) எங்கிட்டயேவா?:).
==============================================

ஊசிக்குறிப்பு:
புளொக் எப்ப ஆரம்பித்தேன் என்பதே எனக்கு மறந்துபோயிருந்தது, ஒருதடவைகூட இதை நினைவு கூர்ந்ததில்லை இதுவரை. இம்முறை புளொக்கை அழகாக வடிவமைக்கும்போது, மணிதான் நினைவு படுத்தினார்.. 4ஆம் ஆண்டு நிறைவு வருகிறதே என, அதனால்தான் இந்த திடீர் கேக் கட்டிங்:).. நன்றி மணி.
===============================================
 “வாழ்க்கையில் பயம் இருக்கோணும் - ஆனால்
வாழ்க்கையே பயம் ஆகிடக்கூடாது”...
இப்படிக்கு புலாலியூர் பூஸானந்தா:)
===============================================

73 comments :

  1. ஆவ்....ப்ளொக்கிற்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. ஸ்ஸப்பாஆஆஆ... மெய்யாகிலும் நான்காவது வருடமோ.. நம்பவே முடியலை.

    வாழ்த்துக்கள் அதிரா.. வாழ்த்துக்கள்!

    இன்னும் இன்னும் மேலே மேலே ஏறி முன்னேறி உயரப் பறந்திட மனசார வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete
  3. அதிரா... இன்றைய தினத்தில ஹைஷ் நம்மகூட இருந்திருந்தா எபடி இருக்கும்....

    அவர்தானே ஒளிஞ்சிருந்த உங்களை வெளியாலை இழுத்துக்கொண்டு வந்தவர்..

    ம்..உங்களை அப்படி அவர் கொண்டு வந்துவிட்டு இப்ப எத்தகைய சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறீங்கள் பாருங்கோ...

    ReplyDelete
  4. அருமை.. கவிதையும் அருமை..

    கவிஞர் வைரமுத்து உங்களிடம் தான் வகுப்புக்கு வந்தவர் எண்டு முன்பு நீங்க சொன்னீங்களே..:)
    அவருக்கே வகுப்பெடுத்த உங்களுக்கு இக் கவிதை எழுதுவதெல்லாம் சொல்லவோ வேணும்...:)

    அருமை.. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! அட ப்ளொக் திறந்து 4 வருஷம் ஆகிட்டுதோ? அப்ப 12 வயசில தான் ப்ளொக் திறந்திருக்கிறீங்க! ( 16 - 4 = 12 )

    பாருங்கோ மக்கள்! துள்ளித்திரிகிற 12 வயசில, கணவரோட சேர்ந்து டிஸ்கஸ் பண்ணி ப்ளொக் திறந்தவையாம்! இதை நம்பச் சொல்லுறீங்களோ?

    இருந்தாலும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. மணி... நீங்க சரியான ஆள்தான்...:) கணக்கா கணக்குப்பார்த்து அடிக்கீறீங்க...:)

    ReplyDelete
  8. கடந்த 2009 ம் ஆண்டு மாசி மாதம் 16 ம் திகதி, இரவு 8 மணிக்கு, அருள்மிகு பூஸார் அவர்கள் முதல் முதலாக போட்ட பதிவைப் பாருங்கோ மக்கள்ஸ்!

    இறைவா எண்டு பக்தியோட ஆரம்பிச்சிருக்கிறா!

    லிங்கைக் கிளிக் பண்ணி படியுங்கோ மக்கள்!

    # பிரபலமான ஆக்களின்ர லிங்குகளை கொப்பி பண்ணிப் போட்டா, நாமும் பிரபலம் ஆகலாமாம்!

    ReplyDelete
  9. என் பக்கத்துக்கு இனிய நான்காவது பிறந்த நாள் வாழ்த்துகள் அதிஸ் :))
    கம்பன் ஏமாந்தான் பாடல் எப்பவும் எனது விருப்ப பாடல் ,நிழல் நிஜமாகிறது படத்தில் வருமே .

    ReplyDelete
  10. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! லிங் மிஸ் ஆகிட்டுது! இதோ லிங்!

    http://gokisha.blogspot.fr/2009/02/blog-post.html

    ReplyDelete
  11. யாரது :)) பனிரெண்டு வயசிலேயே மணம் புரிந்தது :))

    ReplyDelete
  12. மொய் தானே வேணும் ...மணி எனி ஐடியா ...ப்ளீஸ்

    ReplyDelete
  13. அதற்குரிய இருக்கைகளில் அமர்ந்து, கேக் வெட்டும் காட்சியை கண்குளிரக் கண்டுகளியுங்கோ:).///

    சீஃப் கெஸ்ட் யார் எண்டு சொல்லவே இல்ல?

    ReplyDelete
  14. யாரது :)) பனிரெண்டு வயசிலேயே மணம் புரிந்தது :))//

    அப்படிக் கேளுங்கோ அக்கா! பாவம்! வீட்டில சரியான குழப்படி போல! அதான் 12 வயசிலேயே கலியாணம் செய்து வைச்சிட்டினம்! ஹையோ ஹையோ :)

    ReplyDelete
  15. @இளமதி

    மணி... நீங்க சரியான ஆள்தான்...:) கணக்கா கணக்குப்பார்த்து அடிக்கீறீங்க...:) ////

    ஹா ஹா ஹா பூஸார் இண்டைக்குச் சரியான மாட்டி இளமதி! இண்டைக்கு வரட்டும் ஆள்!

    ReplyDelete
  16. @angelin

    மொய் தானே வேணும் ...மணி எனி ஐடியா ...ப்ளீஸ் ///

    ஒரு ஐடியா இருக்கு அக்கா! ஒரு வித்தியாசமான பரிசு ரெடியா இருக்கு! அதைக் கொடுத்திடுவோம்!

    ReplyDelete
  17. அதிரா... இன்றைய தினத்தில ஹைஷ் நம்மகூட இருந்திருந்தா எபடி இருக்கும்....

    அவர்தானே ஒளிஞ்சிருந்த உங்களை வெளியாலை இழுத்துக்கொண்டு வந்தவர்..///

    ஓம் நானும் கேள்விப்பட்டன் ஹைஷ் அண்ணன் பற்றி! பாருங்கோ அவரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லேல! நன்றி மறந்த சனமப்பா! :) :)

    ReplyDelete
  18. ஷேக்ஸ்பியர் /கீட்ஸ்/ யேட்ஸ்/wordsworth /கலீல் ஜிப்ரான்
    அகஸ்தியர் ,கம்பர் ,திருவள்ளுவர் ,இளங்கோ அடிகள் ,அவ்வையார் ,சீத்தலை சாத்தனார் ,பாரதியார் பாரதிதாசன் இவர்களும் புதுமைபித்தன் தாமரை மு மேதா ,சல்மா, இன்னும் நிறைய பேர் சேர்ந்து கலந்து செய்த கலவையமா நீஈ ..

    Athiraaaaav :))ஓகே... நீங்க சொன்ன மாதிரி அதாவதுஎழுத சொன்ன மாதிரியே வாழ்த்திட்டேன்
    அக்கவுண்ட் எல்லாம் வேணாம் மணி கிராமில் பணத்தை அனுப்பிடுங்க

    ReplyDelete
  19. நான்பிரபல கவிதை எழுதுபவர்கள் என்று கூகிள் இமேஜசில் போட்டா அதில் குஷ்பூ த்ரிஷா பாவனா படம்லாம் வருது ..

    ReplyDelete
  20. “வாழ்க்கையில் பயம் இருக்கோணும் - ஆனால்
    வாழ்க்கையே பயம் ஆகிடக்கூடாது”...//

    எனக்கு மிகவும் பிடித்த தத்துவம் ..பூசானந்தி வாழ்க :))
    ...

    ReplyDelete
  21. ஒரு ஐடியா இருக்கு அக்கா! ஒரு வித்தியாசமான பரிசு ரெடியா இருக்கு! அதைக் கொடுத்திடுவோம்!//thanks thambi

    ReplyDelete
  22. //]ஓம் நானும் கேள்விப்பட்டன் ஹைஷ் அண்ணன் பற்றி! பாருங்கோ அவரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லேல! நன்றி மறந்த சனமப்பா! :)//

    சாச்சா அப்பூடி சொல்லப்படாது மணி.. அதிரா அப்புடி மறக்கிற ஆளில்லை.
    சிலநேரம் ஹைஷ் அண்ணனை இங்கை கூட்டி வரப்போட்டாவோ தெரியலை.. பொறுங்கோ பாப்பம்..:)

    ReplyDelete
  23. அஞ்சூ.. எதுக்கு மணீயை உசுப்பேத்தி விடறீங்க...:)
    சும்மாவே அவர் கழுத்தில அதைதான் மாலையா போட்டுத்திரியரவர் போல கிடக்கூஊஊ...:)

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் மேமேலும் சிறப்புற்று விளங்கட்டும் உங்கள் தளம் !

    ReplyDelete
  25. 4 வருஷம் ப்ளாக்கராக இருந்து நம்மையெல்லாம் சிரிக்க / சிந்திக்க வைக்கும் பூஸார் அவர்களுக்கு, நானும் அஞ்சு அக்காவும் இணைந்து இந்த அரிய வகை பூசணிக்காய்களை பரிசாக வழங்குகிறோம்!

    ReplyDelete
  26. Happy Birthday to "GOKISHA"! Many more happy returns to the blog Athira!

    Kavithai joopper! Read angel Akka's comment abt the Kavithai n consider it as mine! Hahaha! :)

    ReplyDelete
  27. @திண்டுக்கல் தனபாலன்

    வாங்கோ வாங்கோ.. முதலாவதா வந்த உங்களுக்கே.. முதல் பீஸ் ஒஃப் கேக்:)..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  28. னிய நான்காவது பிறந்த நாள் வாழ்த்துகள் 

    ReplyDelete
  29. உங்க ப்ளாக்கிற்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்னும் தொடர்ந்து
    நல்ல பல தகவல்களை தரவேண்டும். இளமதி கூறியபடி ஹைஷ் அண்ணா
    இல்லாவிட்டால் உங்க திறமைகள் வந்திருக்காது.நன்றிகள் அவருக்கு.
    நல்லதொரு பாட்டு முதலில போட்டிருக்கிறீங்க அதிரா. வானிலை பற்றிய
    கவிதையும் நன்றாக எழுதியிருக்கிறீங்க. இங்கு நீங்க கூறியபடிதான் நலனை கேட்டபிறகு வெதர்பற்றித்தான் கதைப்பினம்.ஏன் நியூஸ் பார்க்காட்டியும் வெதர் பார்ப்பினம்.
    உங்க முதல் போஸ்ட்டில் எனக்கு பிடித்தது"
    //இறைவா இனிமேலாவது தொட்டுக்கெடுக்கும் உறவுகளைத் தராதே, விட்டுக்கொடுக்கும் உறவுகளையே உலகத்துக்குக் கொடு.//
    சின்னபதிவுதான்.மிக நன்றாக எழுதியிருக்கிறீங்க.இளமதியை தவிர‌
    ஏனையோரைக்காணவில்லை.

    ReplyDelete
  30. ம்ம்.. கம்பனும் தோற்றான்... உங்க கவிதையால கண்ணதாசனும் தோற்றார்..
    வாழ்த்துக்கள் அதிரா....
    5வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் உங்கள் வலைப்பூ இன்னும் பிரகாசிக்க என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  31. நான்காவது பிறந்ததினம் கொண்டாடும் பிளாக்குக்கு இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete

  32. இளமதி said...
    ஆவ்....ப்ளொக்கிற்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!...இன்னும் இன்னும் மேலே மேலே ஏறி முன்னேறி உயரப் பறந்திட மனசார வாழ்த்துகிறேன்!!!///

    வாங்கோ இளமதி வாங்கோ.. ரெண்டாவதா வந்த உங்களுக்கு ரோஸாப்பூ ஐஸிங்கோட இருக்கும் கேக் பீஸ் எடுங்கோ...

    என்னாது உயரப் பறக்கிறதோ? நோஓஓஒ பிளேன் ஹெலி மோதிடும் பிறகு:) மீ கட்டிலுக்குக் கீழதான் இருப்பனாக்கும்:).

    மியாவும் நன்றி.

    ReplyDelete

  33. இளமதி said... 4
    அதிரா... இன்றைய தினத்தில ஹைஷ் நம்மகூட இருந்திருந்தா எபடி இருக்கும்....

    அவர்தானே ஒளிஞ்சிருந்த உங்களை வெளியாலை இழுத்துக்கொண்டு வந்தவர்..

    ம்..உங்களை அப்படி அவர் கொண்டு வந்துவிட்டு இப்ப எத்தகைய சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறீங்கள் பாருங்கோ...

    அது உண்மைதான், பெப்ரவரி புளொக் ஓபின் பண்ணி நொவெம்பர்வரை ஆரும் பார்த்திடப்பூடாது என எவ்ளோ பத்திரமா ஒளிச்சு வச்சிருந்தேன், அதை ஹைஸ் அண்ணந்தான் வெளியே தெரியப் பண்ணி தொடர்ந்து எழுதும்படி என்னை உற்சாகமூட்டியவர்... அதுக்கெல்லாம் நன்றி என ஒரு வார்த்தையில் சொல்லி முடிச்சிடமுடியாது...

    என்ர திருச்செந்தூர் முருகாஆஆஆஆஆ.. நான் எங்க சாதனை படைக்கிறேன்ன்ன்.. தேம்ஸ் கரையில் காத்து வாங்கிக்கொண்டெல்லோ இருக்கிறேன்ன்ன்:))

    ReplyDelete
  34. இளமதி said... 5
    அருமை.. கவிதையும் அருமை..

    கவிஞர் வைரமுத்து உங்களிடம் தான் வகுப்புக்கு வந்தவர் எண்டு முன்பு நீங்க சொன்னீங்களே..:)
    அவருக்கே வகுப்பெடுத்த உங்களுக்கு இக் கவிதை எழுதுவதெல்லாம் சொல்லவோ வேணும்...:)

    உஸ்ஸ்ஸ் எங்காவது டங்கு ஸ்லிப்பாகி அப்பூடிச் சொல்லியிருப்பன்:) அதுக்காக பப்ளிக்கில இப்பூடிக் காட்டிக் கொடுத்து என்னை இருட்டடி வாங்க வைக்கப்போறீங்க:))...

    இருப்பினும் என் கையில் கவிஞர் வைரமுத்துவின் பென்னாம் பெரிய கவிதைப் புத்தகம் இப்பவும் இருக்கு... என் கணவர் என் ரசனை அறிந்து, முன்னமுன்னம் எனக்கு வாங்கி அனுப்பியது...

    ReplyDelete

  35. மாத்தியோசி மணி மணி said...
    வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! அட ப்ளொக் திறந்து 4 வருஷம் ஆகிட்டுதோ? அப்ப 12 வயசில தான் ப்ளொக் திறந்திருக்கிறீங்க! ( 16 - 4 = 12 )

    பாருங்கோ மக்கள்! துள்ளித்திரிகிற 12 வயசில, கணவரோட சேர்ந்து டிஸ்கஸ் பண்ணி ப்ளொக் திறந்தவையாம்! இதை நம்பச் சொல்லுறீங்களோ?

    ஆஆஆஆ திடீரென ஒரு சத்தம்.. ஸ்ஸ்ஸ்ஸ்:)) என.. மெல்லிய ஒரு நடுக்கம்... என் புளொக்கிலதான்ன்.:))... அமைதியான ஒரு நறுமணம்.... அது ராணி சந்தன சோப்ப் வாசம்... ஓஓ... மணி வந்திருக்கிறார்ர்.. வாங்கோ வாங்கோ...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதாரது பென்னாம்பெரிய புரளியைக் கிளப்பிவிட்டது.. மீ 12 வயசில திருமணம் முடிச்சனான் என:)).. போலீஸு வரப்போகுது என் கைக்கு சங்கிலி போட:))...

    ஹையோ அதுக்கு முன்.. சப்டரை மாத்திட வேண்டியதுதான்ன்:).. ஒரு ”மிக மிகப் பிரபல்யமான பப்ளிக் பிளேஷில“.. அதுதான் என் புளொக்:))(ஹையோ ஏன் எல்லோரும் முறைக்கினம்:)).. உப்பூடிச் சொன்னமைக்காக மானநஸ்ட வழக்குப் போடப்போறேன்ன்ன்ன்ன்:))).. எண்டெல்லாம் சொல்ல மாட்டேன்ன் ஏணெண்டால் மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:).

    ReplyDelete
  36. வாங்கோ கோபு அண்ணன்.. வாழ்த்துக்கு மியாவும் நன்றி.

    ReplyDelete
  37. மாத்தியோசி மணி மணி said... 9
    கடந்த 2009 ம் ஆண்டு மாசி மாதம் 16 ம் திகதி, இரவு 8 மணிக்கு, அருள்மிகு பூஸார் அவர்கள் முதல் முதலாக போட்ட பதிவைப் பாருங்கோ மக்கள்ஸ்!

    இறைவா எண்டு பக்தியோட ஆரம்பிச்சிருக்கிறா!

    லிங்கைக் கிளிக் பண்ணி படியுங்கோ மக்கள்!

    ஆவ்வ்வ்வ் அதையெல்லாம் தேடிப் படிச்சனீங்களோ மணி... மெர்ஷி புக்கு...

    ReplyDelete
  38. # பிரபலமான ஆக்களின்ர லிங்குகளை கொப்பி பண்ணிப் போட்டா, நாமும் பிரபலம் ஆகலாமாம்!

    என்னாது ஒபாமா அங்கிளையோ சொல்லுறீங்கள்?:) ஹா..ஹா..ஹா... :)

    ReplyDelete
  39. யாஹாஹாஆஆ :))))))))))))) நான் இங்கிருக்கேன் ..யாரது பால்ய விவாக் செய்தது ??

    ReplyDelete
  40. அதீஸ் இன்னிக்கா பன் செய்தீங்க ??
    நேற்று சப்பாத்தி ரோல் உங்களுக்காகத்தான் போட்டேன் பாருங்க

    ReplyDelete
  41. angelin said... 10
    என் பக்கத்துக்கு இனிய நான்காவது பிறந்த நாள் வாழ்த்துகள் அதிஸ் :))
    கம்பன் ஏமாந்தான் பாடல் எப்பவும் எனது விருப்ப பாடல் ,நிழல் நிஜமாகிறது படத்தில் வருமே .

    ஆவ்வ்வ்வ் மாலுபன் வாசம் வருதே... ஓ அஞ்சு.. வாங்கோ அஞ்சு வாங்கோ...

    ஓ நான் இன்னும் படம் பார்க்கவில்லை, பாடல்தான் பலமுறை கேட்டிருக்கிறேன்ன் இனி தேடிப் பார்ப்பேஎன் படம்.. மியாவும் நன்றி.

    ReplyDelete
  42. ஆவ்வ்வ்வ் அஞ்சு இங்கயா இருக்கிறீங்க.. தண்ணிச் சத்தம் கேட்கும்போதே நினைச்சேன்ன்.. ஃபிஸ் ஓடுறமாதிரி இருக்கே என:))..

    என்னாது சப்பாத்தி ரோல் போஸ்ட் போட்டீங்களோ? ஆ... காசி மலைக் கந்தா நான் பார்க்காமல் விட்டுவிட்டேனேன்ன்... இல்ல அஞ்சு அது கொஞ்ச நாட்கள் முன்பு செய்து எங்கட “எண்ணம் அழகானால்ல்.....” குரூப்பில் படம் போட்டனான்ன்.. அப்ப நீங்க அங்கில்லை:(..

    ReplyDelete
  43. சரி இத்தோடு அதிராவுக்கு கண்ணிரட்டும் முட்டி, தூக்கம் வரும் காரணத்தினால்ல்.. இன்றைய பின்னூட்ட நிகழ்ச்சி நிறைவடைகிறது.... மீண்டும் வழமைபோல் விரைவில்:) சந்திக்கும்வரை:),..

    பின்னூட்டமிடாதோரிடம் மன்னிப்பு கேட்டு, அனைவருக்கும் நல்லிரவு + பொன் நுய்.. சொல்லி.. இனிய பாவக்காய்க் கனவுகள் அண்ட் சிக்கின் பன் கனவுகள் எனவும் சொல்லி உங்களிடமிருந்து விடைபெறுபவர்.. புலாலியூர் பூஸானந்தா:) ச்ச்சே அது பழக்க தோஷத்தில அப்பூடிச் சொல்லிட்டேன்ன் அஜீஸ் பண்ணுங்கோ:)..

    ReplyDelete
  44. angelin said... 44
    pls .read comment number 19:))//

    Haa...haa..haa.. I already read it.. but naalaikkuththaan VEDI:)

    ReplyDelete
  45. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா
    அன்புடன்
    தமிழ்த்தோட்டம் யூஜின்
    www.tamilthottam.in

    ReplyDelete
  46. அதிராவின் வலைப்பூவுக்கு அன்பான வாழ்த்துகக்ள்.மேலே போடப்பட்டு இருக்கும் பாடலைக்கேட்பதற்காகவே பல முறை அதீஸின் பிளாகை பல முறை ஓப்பன் செய்து பார்த்துவிட்டேன்.பூஸின் புண்ணீயத்தைல் பல முறை பாடலை கேட்டு ரசித்தேன்.

    ReplyDelete
  47. atheeees உங்க ப்ளாகும் என் ப்ளாகும் ஒரே மாசம் பேர்த்டே :))) இன்னிக்குதான் நினைவு வந்திச்சு

    ஆனா நான் தங்கச்சி அதாவது என் ப்ளாக் உங்க ப்ளாகுக்கு தங்கச்சி :))

    meee 50 th comment

    ReplyDelete
  48. வாழ்த்துக்கள் அதிரா, நான் இப்ப தானே பார்க்கிறேன் இந்த கவிதையும் நான்கு வருட நிறைவு கொண்டாட்டமும் சூப்பர்..மிக்க மகிழ்ச்சி.கவிஞர் அதிரா வைரமுத்துவையே மிஞ்சி விட்டார் என்பதில் தான் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  49. ஆவ்வ்வ்வ் மீ நித்திரையால எழும்பிட்டேன்ன்ன்... கடவுளே எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈஈ.. ஆவ்வ்வ்வ் பிடிச்சுட்டேன்ன் அஞ்சுவோட விட்டேன்ன்ன்.. எங்கிட்டயேவா?:)

    ReplyDelete
  50. angelin said... 13
    மொய் தானே வேணும் ...மணி எனி ஐடியா ...ப்ளீஸ்

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவரிட்ட எதுக்கு ஐடியாக் கேட்கிறீங்க?:) மேசையில கொப்பி இருக்கு எழுதிட்டுப் போறதை விட்டுப்போட்டு..:) எனி ஐடியாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  51. மாத்தியோசி மணி மணி said... 14
    அதற்குரிய இருக்கைகளில் அமர்ந்து, கேக் வெட்டும் காட்சியை கண்குளிரக் கண்டுகளியுங்கோ:).///

    சீஃப் கெஸ்ட் யார் எண்டு சொல்லவே இல்ல?

    ஆஆஆ குட் குவெஷன் மணி:).. அது பொறுத்திருங்கோ.. கேக் வெட்டப் போறவர்தான் சீஃப் கெஸ்ட்...:))

    ReplyDelete

  52. மாத்தியோசி மணி மணி said... 18
    அதிரா... இன்றைய தினத்தில ஹைஷ் நம்மகூட இருந்திருந்தா எபடி இருக்கும்....

    அவர்தானே ஒளிஞ்சிருந்த உங்களை வெளியாலை இழுத்துக்கொண்டு வந்தவர்..///

    ஓம் நானும் கேள்விப்பட்டன் ஹைஷ் அண்ணன் பற்றி! பாருங்கோ அவரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லேல! நன்றி மறந்த சனமப்பா! :) :)

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ச்ச்சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்கப் பார்க்கிறார்ர்:)).. மீ ரொம்ப அடக்கொடுக்கமாக்கும்:) அதுதான் ப்ப்ளிக்கில சொல்லேல்லை:).. ஹையோ எப்பூடி எல்லாம் சொல்லித் தப்ப வேண்டியிருக்கு...

    ReplyDelete

  53. angelin said... 19
    ஷேக்ஸ்பியர் /கீட்ஸ்/ யேட்ஸ்/wordsworth /கலீல் ஜிப்ரான்
    அகஸ்தியர் ,கம்பர் ,திருவள்ளுவர் ,இளங்கோ அடிகள் ,அவ்வையார் ,சீத்தலை சாத்தனார் ,பாரதியார் பாரதிதாசன் இவர்களும் புதுமைபித்தன் தாமரை மு மேதா ,சல்மா, இன்னும் நிறைய பேர் சேர்ந்து கலந்து செய்த கலவையமா நீஈ ..

    க்க்க்க்க்க்க்க்க்கெக்க்க்கெக்க்க்.. ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு சேசே... நேக்கு ஷை ஷையா வருதூஊஊஊஊஊ... :)).. கண்ணதாசன் அங்கிள், வைரமுத்து அங்கிளை எல்லாம் விட்டிடீங்களே:))).. அடுத்தமுறை இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால் மறக்காமல் சேர்த்திடுங்கோ என்ன?:)

    Athiraaaaav :))ஓகே... நீங்க சொன்ன மாதிரி அதாவதுஎழுத சொன்ன மாதிரியே வாழ்த்திட்டேன்
    அக்கவுண்ட் எல்லாம் வேணாம் மணி கிராமில் பணத்தை அனுப்பிடுங்க

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ..... விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறென்ன்ன் குளிரெண்டாலும் பறவாயில்லை.. குல்டையும் எடுத்துக்கொண்டு போறேன்ன்ன் இப்பவே...:)

    ReplyDelete
  54. இளமதி said... 23
    //]/
    சாச்சா அப்பூடி சொல்லப்படாது மணி.. அதிரா அப்புடி மறக்கிற ஆளில்லை.
    சிலநேரம் ஹைஷ் அண்ணனை இங்கை கூட்டி வரப்போட்டாவோ தெரியலை.. பொறுங்கோ பாப்பம்..:)

    அது அது அது... இந்தாங்கோ இளமதிக்கு ஒரு ஒரேஞ் ரோஜா:)..

    ReplyDelete
  55. அம்பாளடியாள் said... 25
    வாழ்த்துக்கள் மேமேலும் சிறப்புற்று விளங்கட்டும் உங்கள் தளம் !
    வாங்கோ அம்பாளடியாள்.. மியாவும் நன்றி.

    ReplyDelete
  56. மாத்தியோசி மணி மணி said... 26
    4 வருஷம் ப்ளாக்கராக இருந்து நம்மையெல்லாம் சிரிக்க / சிந்திக்க வைக்கும் பூஸார் அவர்களுக்கு, நானும் அஞ்சு அக்காவும் இணைந்து இந்த அரிய வகை பூசணிக்காய்களை பரிசாக வழங்குகிறோம்!

    ஹையோ முருகா.. திருத்தணி வேலா.. இத்தனை நாளும் காதிலதான் ஏதோ பிரச்சனை என எண்ணியிருந்தேன்ன்..:) இப்போ கண்ணிலயுமோ?:).. பூஊஊஊஊஊஊஊஊசணி என்ன கலர் என்ன நிறம்?:)... பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ வக்காய் என்ன கலர்? என்ன நிறம்?:))... முடியல்ல வைரவா:).. ஆனாலும் பக்கத்தில தேசிக்காய் இருக்கிறதால நல்லதாப் போச்ச்ச்ச்:)) ஏன் எதுக்கெனக் கேட்கப்பூடா ஆரும்:)

    ReplyDelete
  57. வாங்கோ அம்முலு வாங்கோ.. மியாவும் நன்றி.

    உண்மைதான், ஆரம்பம் நான் நினைத்தது, என்னிடமிருக்கும் பொக்கிஷங்களை ஒரு புளொக்கில் எழுதி, சேமிப்பாக வைப்பின், கொப்பி புத்தகம் காவும் வேலை இல்லையெல்லோ.. எந்த நாட்டில், எங்கிருப்பினும் பார்த்திட வசதி என்றுதான்.

    அதனால்தான் ஒளிச்சு வச்சிருந்தேன்ன்... பின்பு வெளியே விட்டபின், சிலர் பழைய பதிவைத் தேடி கொமெண்ட் போட்டவை.. அப்போ அதில் இளமதி மட்டும் இருக்கிறா என நினைக்கிறேன்ன்..

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  58. வாங்கோ பூங்கோதை.. என்னாது கம்பர், கண்ணதாசன் எல்லாம் தோத்திட்டினமோ?:).. உஸ்ஸ்ஸ் மெதுவாச் சொல்லுங்கோ:)) புகைப்புகையா வரப்போகுது:)..

    மியாவும் நன்றி கோதை.

    ReplyDelete
  59. இராஜராஜேஸ்வரி said... 32
    நான்காவது பிறந்ததினம் கொண்டாடும் பிளாக்குக்கு இனிய வாழ்த்துகள்..

    வாங்கோ.. வாங்கோ மியாவும் நன்றி.

    ReplyDelete
  60. *Chennai Plaza - சென்னை ப்ளாசா* said... 47
    present

    piraku varukiRen

    வாங்கோ..ஜலீலாக்கா வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உப்பூடி எஸ்கேப் ஆகப்பூடா.. என் கவிதை ஒருவரியும் விடாமல் படிக்கோணும் சொல்லிட்டேன்ன்ன்:) மியாவும் நன்றி.

    ReplyDelete
  61. தமிழ்தோட்டம் said... 48
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா
    அன்புடன்
    தமிழ்த்தோட்டம் யூஜின்
    www.tamilthottam.in

    ஆஆஆஆ வாங்கோ.. புதுமாப்பிள்ளை யூஜின்.. நலம்தானே? மியாவும் நன்றி .

    ReplyDelete
  62. வாங்கோ ஸாதிகா அக்கா வாங்கோ.. பாட்டு நல்லாப் பிடிச்சிருக்கோ?.. முன்பும் ஒரு தடவை நான் போட்ட.. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா.. பாடல் என நினைக்கிறேன்ன் நீங்க அதிகம் ரசிச்சனீங்க... எனக்கும் மேலே இருக்கும் பாடல் மிகவும் பிடிக்கும்.

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  63. angelin said... 50
    atheeees உங்க ப்ளாகும் என் ப்ளாகும் ஒரே மாசம் பேர்த்டே :))) இன்னிக்குதான் நினைவு வந்திச்சு

    ஆனா நான் தங்கச்சி அதாவது என் ப்ளாக் உங்க ப்ளாகுக்கு தங்கச்சி :))

    ஆவ்வ்வ் அப்போ குயில்கார்ட் செய்து அசத்திடுங்க அஞ்சு..

    என்னாது் உங்க புளொக் என் புளொக்குக்கு தங்கச்சியா?:) ஹையோ மம்மி டடி ஆரூ?:)).. ஹையோ முருகா காலையிலயே என்னைக் கொயப்பிட்டா அஞ்சு:))...

    அப்போ எனக்கு.. ஐமீன்... புளொக்குக்கு:)... எல்ட பிரதர்:).. சிஸ்டர்.. இருப்பினமே?:)).. எப்பூடி மீ கண்டுபிடிப்பேன்ன்ன்:) ஹா..ஹா..ஹா... அனைத்துக்கும் மியாவும் நன்றி அஞ்சு.

    ReplyDelete
  64. கவிஞர் அதிரா வைரமுத்துவையே மிஞ்சி விட்டார் என்பதில் தான் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    வாங்கோ ஆசியா வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. சென்னைக்கு போகும் நோக்கமில்லைப்போல உங்களுக்கு:).. ஹையோ எயார்போர்ட்டில வச்சே.. கடத்தப்போகினம்:) வை.அங்கிளின் ஆட்கள்:))...

    மியாவும் நன்றி.
    மியாவும் நன்றி.


    ReplyDelete
  65. ப்ளாக் ஓனர் அவர்களே, புது பதிவு போடலையா?

    ReplyDelete
  66. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்....

    BELATED WISHES...

    and Wishing you many more...

    ReplyDelete
  67. வாழ்த்து ஒன்று போட்டுட்டு போகிறோம் :)

    ReplyDelete
  68. ஆஹா.. ஓஹோ சூப்பர்ர்.. வைரமுத்து அங்கிளையே மிஞ்சிட்டீங்க:)

    ;))))))

    என் அன்பு வாழ்த்துக்கள் அதிரா.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.