நல்வரவு_()_


Tuesday 3 October 2017

திருமணமான புதுமணத் தம்பதிகள் இதைப் பார்க்க வேண்டாம்:)

சரி சரி வாங்கோ வாங்கோ... பத்து வசனம் சொல்வதை, ஒரு படம் விளக்கிடும்:).. அதனால படம் படமாப் போடுவதில் ஒண்ணும் தப்பில்லையே:) [ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடி எல்லாம் ஜொள்ளிச் சமாளிச்சுப் படம் காட்ட வேண்டிக்கிடக்கு:)].. ஓகே கடலில் குதிக்கலாம் வாங்கோ:)..

டல் எண்டதும், ஏதோ அதிரா வீட்டுக்கு முன்னால ஓடுதே கடல்போல ஆறு.. அதில குதிச்சு வெளாடக் கூப்பிடுறேன் எனத்தானே ஓடி வாறீங்க.. அதெல்லாம் இல்ல, உங்க வீட்டிலயே குளிச்சிட்டு வாங்கோ.. இங்கே “பக்திக் கடலில்” குதிச்சு நீந்தலாம்:)).. ஸ்ஸ்ஸ் உப்பூடி முறைக்கக்கூடாது:)... புன்னகை எனும் பொன்னகையைத்தான் எப்பவும் பூண்டிருக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்:).

ஜூலை மாதத்திலதான் கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் இருக்கும் சிவன் கோயில் திருவிளா நடக்கும்.. அப்போ நாமும் இம்முறை தேர் தீர்த்தம் பார்க்கப் போயிருந்தோமே... 

இவர் அங்கிருக்கும் கற்பக விநாயகரும்.. மெயின் தெய்வமாக வீற்றிருக்கும் வைத்தீஸ்வரர் லிங்கம்(சொல்வது சரிதானே?)

தேரில் ஏறுவதற்காக அலங்கரிக்கப்பட்டு பூஜை நடக்கிறது.. சிவனுக்கும்{வைத்தீஸ்வரர்}, அம்பிகைக்கும். குருக்கள், ஐயர் எல்லோருமே ஒரே சிவப்பு வண்ணத்தில் ஜொலித்தனர். சுவாமி தூக்கி உள்வீதி சுற்றி வரும்போது.. கண்ணே கலங்கிவிட்டது எனக்கு.. நான் எப்பவும் உணர்ச்சி வசப்படுவது அதிகம்.. அதிலும் கோயிலில் இப்படியான தருணங்களில் எனக்கு கண் கலங்கி விடும்..

தேரிலே ஏறிவிட்டார்... பெரும்பாலான பெண்கள் கற்பூரச்சட்டி எடுத்தனர், தேர் இழுக்கத் தொடங்கு முன் தேங்காய் உடைப்பது வழக்கம்தானே, எனக்கும் ஒன்று கிடைச்சுதே.. சிதற அடித்து உடைத்திட்டேன்:).
இங்கு 4 வதாக இணைத்திருக்கும் படம், தேருக்கு முதன் நாள், சப்பறம்.. சைட்டிலே இருந்தது அழகாக, அதனால் படம் எடுத்தேன்.

மேளத்துக்கேற்ப குட்டீஸ் இன் காவடி மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்துது...

தேரின் ஒரு பக்க கயிறை பெண்கள்தான் அங்கு இழுப்பது... கோயிலுக்கு பெரீய வீதி இருக்கிறது, அதனால எவ்வளவு சனத்திரள் எனினும் தாராளமாக சுகந்திரமாக நிற்க, இருக்க முடிஞ்சது.

இது தேர், வீதி சுத்தி வந்து, அர்ச்சனை எல்லாம் முடித்து, நல்ல மதிய உணவு கிடைத்தது. பின்னேரம் மீண்டும் சுவாமிக்கும் பச்சை சாத்தி, குருக்கள் , ஐயர் எல்லோரும் பச்சையில் அழகாக நின்றனர்... தம்மை படமெடுத்தனர், நானும் அதில் நுழைந்து பெரிய நியூஸ்பேப்பர்காரர் போல படம் எடுத்தேன், அருகில் நின்ற ஒரு பெண் , என் ஃபோனை எட்டிப் பார்த்துச் சொன்னா, உங்கள் ஃபோனில் நல்ல தெளிவாகப் படங்கள் வருகிறதே, இங்கே நிற்கும் குருக்கள் ஐயாவின் மொபைல் நம்பர் தாறேன், இப்போ எடுக்கும் பச்சை உடுத்திய படங்களை அனுப்பி விடுறீங்களோ என கடகட என மொபைல் நம்பர் சொல்லிட்டு ஓடும்போது சாறியைக் கவனிச்சு வச்சு, அக்காவிடம் கேட்டேன் அவ யார் என, அக்கா சொன்னா அவதான் குருக்கள் அம்மா என ஹா ஹா ஹா:)... சின்ன வயசுதான் அவவுக்கும்.

பச்சை சாத்தியபடி, சுவாமி தேரால் இறங்கி கோயிலுக்குள் செல்லும் காட்சி.

இது மற்றைய நாள் தீர்த்தத் திருவிளா.... அங்கு கேணி கிடையாமையால், பெரீஈஈஈய பிளாஸ்ரிக் சுவிமிங் பூல் , வச்சு, தண்ணி நிரப்பி தீர்த்தம் நடக்கும்... எங்களுக்குத் தெரியாமையால், அக்கா ஆட்கள் ஏற்கனவே சொல்லித் தந்தினம், தீர்த்தம் முடிவுக்கு வரும்போது தூர ஓடி வந்திடுங்கோ என:).. எங்கிட்டயேவா.. ரெடியா நிண்டு எடுத்தேன் ஓட்டம் 40 மை வேகத்தில், ஏனெனில் நமக்குத் தெரியாமல் வாழி மறைத்து வச்சிருப்பார்கள், உடனேயே அருகில் நிற்கும் குட்டீஸ் ஐ எல்லாம், ஏன் பெரியவர்களைக்கூட முக்கித்தக்கித் தூக்கி உள்ளே வீசுவார்கள்.. வெளியே நிற்கும் பெண்களுக்கெல்லாம் தலையில் அப்படியே தண்ணி ஊத்துவார்கள். பிள்ளைகளுக்கு மாற்ற உடுப்புக் கொண்டு வந்து எல்லோரையும் தோயவிட்டு மாற்றினோம்.

தண்ணியோ குளிர் தண்ணி, அதிலும்  தேன் தயிர் பால் என ஊற்றியதில் ஐஸ் வோட்டர் போலாகி இருந்தது.
சரி சரி, ஓசியில படம் காட்டுவேன் என நினைச்சீங்களோ?:).. மை வைக்காது போனால் பூலில் தூக்கிப் போட்டிடுவேன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை:)... எண்டெல்லாம் நான் மிரட்டமாட்டேன்ன் பிக்கோஸ்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..

ஊசிக்குறிப்பு:
தலைப்பு ஏன் அப்படிப் போட்டேன் என சிலர் எண்ணக் கூடும், பொதுவாக ஒரு முறை இருக்கு, திருமணமாகி முதல் வருடம் முடியமுன், தேர் பார்க்கக்கூடாது தம்பதிகள் என. தேரின் மேல் இருக்கும் முடி, கலசம் போல இருக்கும் அதைப் பார்க்கக்கூடாது என்பார்கள், அதற்கான சரியான காரணம் தெரியவில்லை, யாரும் தெரிஞ்சால் சொல்லுங்கோ.

ஊசி இணைப்பு:

========================================================================

109 comments :

  1. மீதான் பெஸ்ட்டு ஊஊஊஊஊஊஊஊஊ
    தமன்னா முதல்வாக்கு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ.. இம்முறை என் வோட் 3 வது:).. முதலாவதாக வந்திருக்கும் உங்களுக்கு சிவன் அருள் முழுவதும் கிடைக்க வேண்டுகிறேன்.. விரைவில் நல்ல செய்தி வரட்டும்:)... நீங்க இந்து தானே?.. மிக்க நன்றி சீராளன்... இப்போவெல்லாம் உங்கட கடமை உணர்வு பார்த்து மீ வியக்கேன்ன்:)..

      Delete
  2. அஆவ்வ் soooo ச்வீட் :)

    நம்மள மாதிரி ஒரு சக அனிமல் லவ்வரை பார்க்கும்போது சந்தோஷமாயிருக்கு
    நாங்க பல்லிக்கே ஓணானுக்கே ஜென்டமைசின் போட்டவங்க :)

    கியூட் வீடியோ

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ 2 வதா வந்திருக்கும் உங்களுக்கே இம்முறை ஆயா:)... பத்திரமா கூட்டிப் போங்கஞ்சு:) பாவம் அவ விரதம் வேற.. வல்லாரை ஊஸ் குடுத்து விரைவா மேலுக்கு அனுப்பிடாமல்:) ஹா ஹா ஹா நல்ல சத்துணவாக் குடுங்கோ:).. தேம்ஸ் பக்கம் வரும்போது எட்டிப் பார்ப்பேன் ஆயா எப்பூடி இருக்கிறா என.

      ஓம் அஞ்சு பார்த்ததுமே எனக்கது பிடிச்சுப் போச்சு.. அதிலயும் அந்தக் காகத்தைப் பாருங்கோ.. எட்டிப் பறிக்காமல்.. கேட்டு வாங்குது... என்னா மனஸ்:)...

      ///ஜென்டமைசின்/// என்னாது மயக்க ஊசி போட்டு வாழைப்பழம் கொடுத்தீங்களோ?:) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா:)

      Delete
    2. nebasulf powder கூட போட்டிருக்கேன் :)

      4/5 வயசில் அடிபட்டா இதான் போடணும்னு எவ்ளோ விவரமா இருந்தேன் பாருங்க

      Delete
    3. //nebasulf powder கூட போட்டிருக்கேன் :)//
      ஹா ஹா ஹா யாருக்கு?:)..

      //4/5 வயசில் அடிபட்டா இதான் போடணும்னு எவ்ளோ விவரமா இருந்தேன் பாருங்க//
      இதில எல்லாம் நீங்க ரொம்பவே விபரம் என எனக்கு எப்பவோ தெரியுமே:) அப்போ எதில விபரம் இல்ல எனக் கேட்டிடாதீங்க:) வாய் மாறி சொல்லி விட்டிடுவேன்:).

      Delete
    4. ஆமா எங்காத்துக்கார் கூட சொல்றார் 2011 வரைக்கும் நான் விவரமாத்தான் இருந்தேனாம் அப்புறம் தான் அந்த விபத்து உங்களை சந்திச்சதில் என் விவரமெல்லாம் போச்சு :)))))))))))))

      Delete
    5. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர் அந்த அசம்பாவிதம் நடந்தது:) ஐ மீன்:) சந்திச்சது 2010 ல எல்லோ?:)

      Delete
    6. ஹையோ மியாவ் அதை ஏன் கேக்கறீங்க இன்னிக்கு நான் கமெண்டிய இடத்தில எல்லாம் குளறுபடி :)எக்கசக்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் எல்லாம் அர்த்தத்தை மாத்தி வரும் பின்னூட்டமே :)
      ட்ரூத் பக்கத்தில் நடிகர்கள் என்று எழுதறதுக்கு நடுக்கர்கள் னு எழுதி அவர் பப்லிஷ் பண்ணபிறகே பார்த்தேன் இமா பக்கமும் மிஸ்டேக்ஸ் போட்டேன் இங்கே வருஷத்தை மாத்தி தட்டிருக்கேன் :)

      Delete
    7. "4/5 வயசில் அடிபட்டா இதான் போடணும்னு" - அப்போ 5 வயசுக்கு மேல உள்ளவங்க அடிபட்டா nebasulf powder கிடையாதா? நல்லாத்தான் கண்டுபிடிக்கறாங்க மருந்துகளை.

      Delete
    8. கர்ர்ர்ர்ர் :) இல்லைங்க அது எனக்கு நாலு /5 வயசு இருக்கும்போதே நான் எவ்ளோ அறிவாளியா இருந்திருக்கேன்னு சொன்னேன் :)
      ஏன்னா இன்னொரு பொண்ணு எங்க குடும்பத்தில் சேவலை புடிச்சி கூடையில் போட்டு மூடிட்டு முட்டை இருக்கானு மெதுவா தூக்கி பார்த்திச்சி இதே நாலஞ்சி வயசில் :) அப்போ நான் க்ளெவர் தானே

      அப்புறம் உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒரு பிரபலம் 6 ஆம் க்ளாஸிலே ஸ்கூல் அட்மிஷனுக்கு இன்னோர் பொண்ணை ரெகமண்ட் செஞ்சிருக்காங்க :)
      இதெல்லாம் பார்க்கும்போது வாலறுந்த பல்லிக்கு ஆன்டி செப்டிக் போட்ட என்னை நீங்க பாராட்டியே ஆகணும் :)

      Delete
    9. ///AngelinTuesday, October 03, 2017 10:31:00 pm
      ஹையோ மியாவ் அதை ஏன் கேக்கறீங்க இன்னிக்கு நான் கமெண்டிய இடத்தில எல்லாம் குளறுபடி ://

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இன்று மட்டுமோ?:) இப்போ கொஞ்சக் காலமாகவே நீங்க குழம்பியிருக்கிறீங்க:) தேம்ஸ் கரையில என்னமோ நடக்குது இருங்கோ கண்டு:) புடிக்கிறேன்:).. இது வேற கண்டு புய்ப்பது:).

      Delete
    10. ///நெல்லைத் தமிழன்Wednesday, October 04, 2017 11:01:00 am
      "4/5 வயசில் அடிபட்டா இதான் போடணும்னு" - அப்போ 5 வயசுக்கு மேல உள்ளவங்க அடிபட்டா nebasulf powder கிடையாதா?//

      ஆங்ங்ங் வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ... இது கிளவி:) ஹையோ கேள்வி:)... என்னை, கண்ணுக்குள் விளக்கெண்ணெய் விட்டு மிசுரேக்குக் கண்டுபுடிக்கிறாவாம்ம்.. ம்ஹூம்ம் நேக்கு டமில்ல டி ஆக்கும்:).. இப்போ என்ன சொல்லப்போறாவாம்ம்:))

      Delete
    11. //ஏன்னா இன்னொரு பொண்ணு எங்க குடும்பத்தில் சேவலை புடிச்சி கூடையில் போட்டு மூடிட்டு முட்டை இருக்கானு மெதுவா தூக்கி பார்த்திச்சி இதே நாலஞ்சி வயசில் :) அப்போ நான் க்ளெவர் தானே//

      ஆங்ங்ங் அஞ்சுதான் இப்பூடி எண்டால்ல்.. அஞ்சுவோட சேர்ந்ததும் அப்பூடி இருக்குதே:)).. இதுக்குத்தான் சொல்லுவாங்க:)..” வந்ததும் அது, சிவன் தந்ததும் அது” என:) ஹா ஹா ஹா:)..

      Delete
    12. ///அப்புறம் உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒரு பிரபலம் 6 ஆம் க்ளாஸிலே ஸ்கூல் அட்மிஷனுக்கு இன்னோர் பொண்ணை ரெகமண்ட் செஞ்சிருக்காங்க :)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதெல்லாம் நெல்லைத்தமிழன் தேடிப் படிக்க மாட்டார்:))

      Delete
  3. //சிவன் கோயில் திருவிளா நடக்கும்//


    ஸ்பெல்லிங் மிஸ்டேக் நம்பர் 1 :)
    வாக்களித்துவிட்டு தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. //ஸ்பெல்லிங் மிஸ்டேக் நம்பர் 1 :)//
      கர்ர்ர்ர்ர்ர்:) கண்ணில ஏதோ கோளாறு என பிபிசில சொல்லிச்சினமே:)
      அதை நெம்ம்ம்பி எல்லோ போஸ்ட் போட்டேன், அதுக்குள் சுகமாயிட்டுதோ?:) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்

      [im]https://lh3.googleusercontent.com/R96sjvTkv4gS7uwVF8McoZRch0qRDP6gCacF3X4FwXaWaoq6AMijEM1wUEhZ14QWaHHT8g=s135[/im]

      Delete
    2. ஓஏஞ்சல் சொல்லிட்டீங்களா? கீழருந்து போறதுனால பிரச்சனை பாருங்க....கீழ போய் நீங்க பாக்கலையானு கொடுத்துருக்கேன் ஹாஹாஹா

      கீதா

      Delete
    3. வாங்கோ கீதா வாங்கோ.. அதிராவை ஏறி உளக்குறதெனில்.. எவ்ளோ ஸ்பீட்டா ஒண்ணு சேருறாங்க பாருங்கோ:).. ஹா ஹா ஹா.. எடுத்து எடுத்துக் குடுக்கிறாங்களாம்:))

      Delete
    4. நன்றி அஞ்சு ;-)
      (அப்பாடா! அஞ்சு சொல்லித் தந்த மாதிரியே சொல்லீட்டன்.)

      Delete
  4. /எனக்கும் ஒன்று கிடைச்சுதே.. சிதற அடித்து உடைத்திட்டேன்:).//

    அப்போ நீங்கதானா அது :) எங்க ஆன்டியின் டாட்டரும் சனின்லாவும் ஒட்டாவாவில் வாக் போகும்போது அவங்க தலைல தேங்கா சில்லு பட்டு ரத்தம் கொட்டிச்சாம் ..சிசி டிவில பிங்க் புடவை கட்டின ஒரு யுவதின்னு சொல்லி போலீஸ் தேடறாங்க :) இந்த க்ளூவை குடுத்து போலீஸ் கிட்ட வெகுமானதா வாங்கிக்கறேன்
    போலீஈஸ் :) இங்கே வாங்க

    ReplyDelete
    Replies
    1. ///சிசி டிவில பிங்க் புடவை கட்டின ஒரு யுவதின்னு சொல்லி போலீஸ் தேடறாங்க :)///

      அப்பாஆஆஆஆ இப்போதான் நெஞ்சில தண்ணி வந்தமாதிரி இருக்கு:) சுவீட் 16 எனச் சொல்லியிருந்தாத்தான் மீ பயப்புடுவேனாக்கும்:)..

      ///போலீஈஸ் :) இங்கே வாங்க/// ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனை உப்பூடிக் கூப்பிடக்கூடா அஞ்சு:).. பொலீஸ் ஐ விட்டுப்போட்டு ஓடிப்போய் கதை எழுதுங்கோ கெதியா:).. மீயும் பிள்ளையார் சுழி ........ ........:).

      Delete
    2. ஏஞ்சல் அப்ப மியாவ் ஷாட்புட் எல்லாம் விளையாடிருக்கார் போல!! எப்படி இப்படி சிதற உடைச்சார்னு யோசித்தேன்...ஷாட்புட் கூட சிதறிடுச்சாமே அந்தக் கதை தெரியாதா ஏஞ்சல்?!! ஹாஹாஹாஹாஹா

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா அங்கு மதிய லஞ் ஐத்தானே சிதறிட்டுது பூட் என்கிறீங்க கீதா?:).. இல்லயே நான் கியூ வரிசையில்:) 4 வதா நிண்டு வாங்கினேனே:) ஹா ஹா ஹா:).

      Delete
  5. குட்டீஸ் காவடியும் பெண்களின் பட்டு புடைவையும் தாண்டி அந்த வெயில் பார்க்க பொறாமையா இருக்கு

    இங்கே இந்தமுறை வெயிலே இல்லை :(

    இந்த காட்சிலாம் ஒருவேளை லண்டனில் பார்க்கலாம் நம்ம ஏரியா லிட்டில் பஞ்சாப் வைசாகி தீவாளி தான் பேமஸ்

    ReplyDelete
    Replies
    1. ஓம் வழமையா சமரில் அங்கு கொழுத்தும் வெயில்ஆனா இம்முறை ரொலரேட் பண்ணக்கூடியதா இருந்துது... இடையிடை மழையும் பெய்தமையால் நல்லாவே இருந்துது...

      Delete
  6. நோவ் :) நீங்க ஒரு போட்டோவை போட மறந்திங்க அந்த ஸ்விம்மிங் பூலில் உங்களை முக்கி எடுத்த அந்த கண்கொள்ளா காட்சியை எல்லாரும் பாக்கணும் போடுங்க :)

    ஆமா தீர்த்த தண்ணில பால் தேன் ஓகே அதில் எதுக்கு தயிர் ????????

    ReplyDelete
    Replies
    1. சிலபேரை, கோயிலைச் சுத்திக் கலைத்து, 4,5 பேராகத் தூக்கிச் சென்று பொத்தென எறிந்தார்கள்.... ஹா ஹா ஹா... பெண்களுக்கு வாழியில் அள்ளி வந்து தலையில் ஊத்தினார்கள்... மீ வலு உஷாராக்கும்.. ஒரு தடவை ஊத்த வந்தபோது, கோயிலுக்குள் ஓடிட்டேன்ன்ன்:) எங்கிட்டயேவா?:)..

      தயிரும் அபிசேகப் பொருள்தான் அஞ்சு... அதுதானே என் தயிர்க் கதை அங்கங்கு அடிக்கடி சொல்வேனே.. சைவப் பிளேட்ட்:)..

      Delete
    2. ஆமால்ல :) ரீசண்டா கூட சொன்னீங்க :) ப்ரண்ட்ஸ் வீட்டு டின்னரிலில் தயிர் டிஸ்ஸர்ட் :) சாப்பிட்டதை

      எங்க ஜெஸ்ஸிக்கு கிரீக் யோகர்ட் ரொம்ப பிடிக்கும் :)

      Delete
    3. ஏஞ்சல் நான் கேட்க நினைச்சத கேட்டுட்டீங்க!! தேம்ஸ் நு கீழ கொடுத்துருக்கேன்...இதுலயும் குதிக்கலையானு...
      ஹாஹாஹா

      கீதா

      Delete
    4. //எங்க ஜெஸ்ஸிக்கு கிரீக் யோகர்ட் ரொம்ப பிடிக்கும் :)//

      ஹா ஹா ஹா:) எங்கட டெய்சிக்கு கே எஃப் சி தேன் ரொம்பப் புய்க்கும்:) அவட மம்மியைப் போலவேதேன்ன்ன்:)..

      கீதா தேம்ஸ் கதைக்கு கீழ வாறேன் ரிப்ளை பண்ண:)

      Delete
  7. ஊசி குறிப்பு வாழ்க்கை ரசிப்பு நல்லாத்தான் இருக்கு ஆனா ஏதாவதொன்னு குறுக்க வந்து சந்தோஷத்தை கெடுக்குது :(
    இனி ஐடியா டு கெட் ரிட் of எமோஷனல் சென்டிமென்டல் பீலிங்ஸ் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது என்னமோ உண்மைதான் அஞ்சு.. எப்பவும் ரசிச்சுக் கொண்டிருப்பதென்பது கஸ்டமே ஆனாலும்.. நெடுகவும் அழுது வடியாமல் ஏதோ நம்மால் முடிந்தவரை சிரிக்கப் பழகுவோம்....

      உந்த பீலிங்ஸ் எல்லாம் நம்கூடவே பிறந்திட்டுதே:) அதை எப்படி விட முடியும்?:) அதுதானே நம் பிரச்சனையே.. அது இல்லையெனில் இன்னும் ஹப்பியாக வாழ்க்கையை நகர்த்தலாம்:)..

      ஹா ஹா ஹா மியாவும் நன்றி அஞ்சு...

      Delete
    2. awww i've typed இனி ஐடியா//instead of any idea :)

      Delete
    3. யெஸ் ஊசிக்குறிப்பு அருமை அதிரா!! வாழ்க்கையை நானும் ஒவ்வொரு துளியையும் ரசிப்பவள்தான்....பட் சம்டைம்ஸ் வெரி ரேர்லி ஒரு சுணக்கம் வருது...ஆஃப் லேட்......என்றாலும் அதிலிருந்தும் மீண்டுடனும்னு ஏதாவது செஞ்சு நம்மள உயிரோட்டத்தோட வைச்சுட்டுருக்கணும்னு முயற்சி செஞ்சுட்டே இருக்கணும்தான்....நமக்கு ரொம்பப் பிடிச்சத செஞ்சு...என்று...

      கீதா

      Delete
    4. ///AngelinTuesday, October 03, 2017 10:36:00 pm
      awww i've typed இனி ஐடியா//instead of any idea :)//

      அது நேக்குப் புரிஞ்சுது:).. சரி பிழைச்சுப் போகட்டும் என விட்டுட்டேன் பெரீஈஈஈஈய மனசு பண்ணி:)..

      Delete
    5. ///Thulasidharan V ThillaiakathuWednesday, October 04, 2017 5:53:00 am
      யெஸ் ஊசிக்குறிப்பு அருமை அதிரா!!///

      நீங்க சொல்வதுதான் கரெக்ட் கீதா.

      அது உண்மைதான் கீதா, படம் பார்க்கும்போது கவலையாகவும் இருக்குதெல்லோ?:).. எதையும்ம் நம் கைக்குள் கொண்டுவர முடியும்... ஆனா இந்த பருவ மாற்றம்.. முதுமையை மட்டும் தவிர்க்கவே முடியாதே... சோ சந்தோசமாக ஏற்றுக் கொள்ள வேணும்.

      என்னதான் இருப்பினும் எல்லோரும் மனிதர்கள்தானே, இன்பதுன்பம் கலந்ததுதானே வாழ்க்கை, ஆனா துன்பம் வரும்போது அதிகம் அதில் மூழ்கிடாமல்.. இன்பம் வரும்போது ஓவராக் குதிக்காமலும் இருக்கப் பழகோணும்.. ஏனெனில்.. இன்பமோ துன்பமோ எதுவும் நிலையில்லை.. “இதுவும் கடந்து போகும்” என எப்பவும் எண்ண வேணும்.

      Delete
  8. தலைப்பு வைக்க படிச்சுக்கிட்டீங்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... நீங்க ரொம்ப அமைதியாப் பதில் சொல்லிட்டு ஓடிட்டீங்க இம்முறை:).. தலைப்பு அது தானா வருது ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  9. முதல் படத்தில் கறுப்புப் பூனைக்கு மேட்சாக அந்தப்பெண் கருப்புக்கண்ணாடி!

    சுவாமி உள்வீதி சுற்றி வரும்போது எதற்காக கண் கலங்க வேண்டும்? தேர் வருவதில் எழும் தூசியா??!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஹா ஹா ஹா அந்தப் படம் பார்த்ததும் பிடிச்சுப் போயிட்டுது எனக்கு அதுதான் போட்டேன், கொஞ்சம் வித்தியாசமாக, மனதைக் கவர்வதுபோல இருக்குதெல்லோ:).

      ///சுவாமி உள்வீதி சுற்றி வரும்போது எதற்காக கண் கலங்க வேண்டும்? தேர் வருவதில் எழும் தூசியா??!!///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வரவர நீங்க நாஸ்திகவாதியா மாறிட்டு வருறீங்க ஹா ஹா ஹா:)) அது பக்திப் பரவசம் ஸ்ரீராம் பக்திப் பரவசம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா:).

      Delete
  10. விநாயகர், லிங்கேஸ்வரர் படங்கள் அருமை.

    ஆறாவது படத்தைப் பார்க்கும்போது ரன் படப்பாடல் நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. 6 ம் படமோ.. மேலே போய் எண்ணிப் பார்த்திட்டு திரும்பக் கீழே வந்தேன்ன்.. வெளிவீதியும் தேர் இழுப்பதும்தானே?.. இதில் ரன்.. மாதவன்.. எதுக்கு நினைவு வருது.. படத்தின் பல காட்சிகளை மீ மறந்திட்டேன் அதனால்கூட இருக்கலாம் எனக்கு தெரியல்லே:)..

      Delete
  11. தலைப்புக்கான காரணம் யோசிக்கும்போதே, நீங்களே சொல்லி விட்டீர்கள்.

    புது வழக்கமாயிருக்கிறது.. வலுக்கட்டாயமாக தண்ணீரில் நனைப்பது!!

    ReplyDelete
    Replies
    1. அப்போ இந்த தேர் பார்க்கக்கூடாது எனும் காரணம் இந்தியாவில் இலையோ?.. அந்த முடியில் இருக்கும் கலசம் போன்றதை பார்த்தால்.. துன்பம்... புதுத்தம்பதியினர் துன்பத்தை எதுக்கு பார்க்கோணும் என்பதுபோல ஒரு சாத்திர விதிமுறை இருக்கு சரியாக தெரியவில்லையே...

      //புது வழக்கமாயிருக்கிறது.. வலுக்கட்டாயமாக தண்ணீரில் நனைப்பது!!//

      இது இலங்கையில் கேணி இருக்கும் கோயில்களிலெல்லாம் நடக்கும் ஒன்று. குறிப்பா, நல்லூர்க் கந்தசாமி கோயிலில் பெரிய கேணி இருக்கு... சுவாமி தீர்த்தமாடி, சுவாமியை அங்கிருந்து நகர்த்டுவதுதான் தெரியும்... கலைத்துக் கலைத்து ஊத்துவார்கள்.. கேணிக்குள் தள்ளி விடுவார்கள்... பெண்கள் யாரும் அப்பக்கம் போவதில்லை.. ஓடி விடுவோம்.. அகப்பட்டால் அவ்ளோதான் தோயவார்த்து அனுப்புவார்கள்.

      ஆனா ரைம் இருக்கு.. ஒரு 2 மணி நேரம் குடுப்பார்கள் பின்னர், கேணியில் யாரும் இறங்க முடியாது.

      அதைத்தான் வெளிநாட்டிலும் சில காணி வசதியோடுகூடிய கோயில்களில் செய்கிறார்கள்... மிகவும் சந்தோசமாக இருக்கும். அதிலும் கோயிலுக்கு வரமாட்டேன் எனச் சொல்லும் பிள்ளைகள்கூட, அன்று கட்டாயம் வருவார்கள்:)

      Delete
  12. நீங்க சொன்னீர்களே என்று தமன்னாவை மறுபடி மறுபடி 'ரச்சப்' பண்ணினா "ஏற்கெனவே தொட்டுபுட்டீகளே" என்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நீங்களும் கூச்சப்படாமல் தொட்டமையால்.. தமனாவில் இணைஞ்சிட்டீங்க :)

      Delete
  13. ஊசிக்குறிப்பு சூப்பர்.

    ஆமாம், குருக்களோட அம்மாவுக்கு படங்கள் அனுப்பினீர்களா இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. அது குருக்களோட நம்பர்தானாம். அத்தானும் கோயில் நிர்வாகிகளில் ஒருவர் என்பதால், குருக்களை நன்கு தெரியும், ஆனா குருக்களுக்கு நான் யாரெனத் தெரியாது.. அக்காவிடம் கேட்டு சரி என அனுப்பிட்டேன்:).. பார்த்திட்டார் எனக் காட்டுது, ஆனா ஒரு பதில் நன்றி சொல்லவில்லை:) ஹா ஹா ஹா..

      அக்காவிடம் சொன்னேன் , அடுத்தநாள் தீர்த்தத்தின்போது அக்கா கேட்டா, ஐயா.. தங்கச்சி போட்டோ அனுப்பினவவாம் பார்த்திட்டீங்களோ ஏன் ஐயா தங்கூ சொல்லேல்லை என...:) ஹா ஹா ஹா..

      குருக்கள் ஐயா புலம்பத் தொடங்கிட்டார்:) இக்கோயிலில் நெட் ஒழுங்கா வேலை செய்யவில்லை.. அதனால ஒழுங்கா படம் பார்க்க முடியவில்லை நான் வீட்டுக்குப் போய்த்தான் வடிவா பார்ப்பேன் என..

      இலங்கையில் ஒரு வழக்கம் இருக்கு... இது இந்தியாவிலும் இருக்கோ தெரியவில்லை.. ஒரு கோயிலில் திருவிழா எனில்.. கொடியேற்றமோ அலங்காரத் திருவிழாவோ.. முதல்நாள்.. குருக்கள் தன் கையில் காப்புக் கட்டித்தானே அதை பொறுப்பெடுப்பார்.. பின்பு தீர்த்தம் முடிந்ததும், அந்தக் காப்பைக் கழட்டி தட்டிலே போடுவார்.. அப்போ எல்லோரும் குருக்கள் காலில் விழுந்து ஆசி வாங்குவோம்...அதன் பின்புதான் குருக்கள் கோயில் வளவை விட்டு வெளியே போவார்.[ஊரிலே குருக்களை, 4,5 பேராக தோளில் தூக்கிச் சென்று வீட்டில் விடுவார்கள்] அதுவரை கோயிலிலேயே.. தங்க வேண்டும். இதனாலேயே பெரும்பாலும் கோயில் வீதியுடனேயே பரம்பரையாக குருக்கள் வீடுகள் இருக்கும்.. அவர்களே கொடியேற்றத் திருவிளா செய்வினம்.

      ஊரில் எங்கள் அம்மப்பாவுக்கு நிறையக் காணி இருந்தது கோயில் வீதியில்... அதை கோயில் குருக்களுக்கே எழுதிக் கொடுத்தார் குவாட்டேர்ஸ் போல கட்டுவதற்கு.

      இதேபோல இந்த சிவன் கோயிலிலும் ஐயருக்கு வீடு இருக்கு... ஆனா திருவிழாவுக்கென இக்குருக்கள்.. மொன்றியல்(கியூபெக்) இலிருந்து கூட்டி வரப்பட்டார்.. மனைவி பிள்ளைகள் மொன்றியலில்.. இவர் திருவிழா முழுக்க இங்கே இருந்தமையால் இவருக்கு நெட் சரியாயில்லையே என கோயில் நிர்வாகிகள்மேல கொஞ்சம் கோபம் போல ஹா ஹா ஹா:). அதனாலேயே அப் புலம்பல்...:)

      மிக்க நன்றி அனைத்துக்கும்.

      Delete
    2. அஞ்சூ.... அஞ்சாமல் ஓடி வாங்கோ!!!! இங்கயும் ஒரு விளாம்பழம் தெரியுது. ;)

      Delete
    3. // விளாம்பழம்//
      ஹா ஹா ஹா கர்ர்:) அதை நான் நேற்றே கண்டுபிடிச்சு கீழே கீதாவின் கொமெண்ட்டில் சொல்லிடனே:).. மீ இப்போ திருந்திட்டனெல்லோ:)

      Delete
    4. //மீ இப்போ திருந்திட்டனெல்லோ:)// ;)) இன்னும் முன்னேற இடமுண்டு.
      ~~~~~~~
      athiraWednesday, October 04, 2017 8:25:00 pm
      //கோயில் வீதியுடனேயே பரம்பரையாக குருக்கள் வீடுகள் இருக்கும்.. அவர்களே கொடியேற்றத் திருவிளா செய்வினம்.// :-)

      Delete
    5. ///இன்னும் முன்னேற இடமுண்டு.//
      ஹா ஹா ஹா கர்:)) பழக்கதோசம் விடுகுதில்லை இமா:)..

      Delete
    6. @இமா :) எனக்கும் அன்னிக்கே தெரிஞ்சது :) இந்த பூஸ் தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்களேன்னு விட்டேன் :)

      Delete
  14. படங்களும் விழாவும் அருமை

    ReplyDelete
  15. விழாவை நேரில் பார்த்த நிறைவு. படங்கள் அழகு.
    ஊசி இணைப்பு மிக அருமை.
    முதல் காணொளி அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. மிக்க நன்றி.. நீங்கள் பழைய போஸ்ட்களுக்கும் கொமெண்ட்ஸ் போட்டிருக்கிறீங்க மிக்க நன்றி.. பதில் மெதுவா அவற்றுக்கு தருகிறேன்.

      Delete
  16. ஏஞ்சல் ஏஞ்சல் பிழை உங்கள் கண்ணில் படலையா?!!!! திருவிளா வாமே!!! ஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:).. கீதா.. இப்போ கூட ஸ்ரீராமுக்கு கொடுத்த பதிலில் ளா.. போட்டிட்டேன் ஹா ஹா ஹா பழக்கதோசம்:)

      Delete
  17. துளசி: படங்கள் எல்லாம் அருமை அதிரா. தலைப்பின் காரணம் கீழே கொடுத்திருக்கீங்க. ஆனால் காரணம் ஏன் அப்படிச் சொல்லுறாங்கனு புரியலையே. இங்கெல்லாம் அப்படி இருப்பதாகத் தெரியலையே...புதிதாகக் கல்யாணம் ஆன தம்பதிகள் தேர் பார்க்கக் கூடாது என்று...

    கீதா: படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. அதிரா எனக்கும் காரணம் புரியலை.

    ஒரு பக்கம் பெண்கள் இழுதார்கள்// பூஸார் மட்டுமே போதுமே இழுத்திட ஹிஹிஹிஹிஹி...

    நீங்கதான் ஓட்டப் பந்தயத்தில் கில்லாடி ஆச்சே...பூஸார் அதுவும்...கேட்கனூமா ஓடியிருப்பார் பூஸார். அது சரி பூஸாருக்குத் தேம்ஸில் குதித்து குதித்துப் பழக்கமாச்சே...இந்தப் பூலில் குதிக்கலையோ?!!! ஹாஅஹாஹாஹா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன்.. நான் நினைத்தேன் அது இந்துக்களுக்குள் பொதுவான ஒரு விசயம் என.. இப்போதான் தெரியுது இலங்கையில் மட்டும்தான் இப்படி என. மிக்க நன்றி.

      // பூஸார் மட்டுமே போதுமே இழுத்திட ஹிஹிஹிஹிஹி...//

      ஹா ஹா ஹா கீதா, நான் இழுத்துத்தான் தேர் அசைந்ததாக்கும்:)..

      ///அது சரி பூஸாருக்குத் தேம்ஸில் குதித்து குதித்துப் பழக்கமாச்சே...இந்தப் பூலில் குதிக்கலையோ?//

      ஹா ஹா ஹா பரந்து விரிந்த தேம்ஸ்ல குதிக்கிறதால.. இப் பூலில் குதிக்க மனம் வரேல்லை:) கீதா:).. என்னா ஓட்டம் எடுத்தேன் தெரியுமோ?:).

      Delete
  18. குருக்களோட அம்மாவுக்கு மறக்காம பூஸார் படம் அனுப்பினாரோ??!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னா ஒரு அக்கறை உங்களுக்கும் ஸ்ரீராமுக்கும்:) மேலே அவருக்கு விரிவாப் பதில் கொடுத்திருக்கிறேன் கீதா.. படிக்கவும் பிளீஸ்:)

      அனைத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  19. குழந்தை, காக்காய் - 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்பதை ஞாபகப்படுத்தியது. அதனிடத்தில் அன்பு செலுத்தும்போது அதுவும் அன்பையே செலுத்த நினைக்கிறது என்பதைக் காண்பிக்கிறது ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ... எவ்ளோ அழகா இருக்குது அந்தக் காட்சி என்ன?... ஆனா காகத்துக்கும் தெரியுதே.. குழந்தையிடம் பறிக்கக்கூடாது கேட்டால் கிடைக்கும் என்பது.. குழந்தையின் இடத்தில் ஒரு பெரிய ஆள் இருந்திருந்தால்.. கொத்திப் பறிச்சுக்கொண்டு ஓடியிருக்கும்:).

      Delete
  20. கனடா-ஒட்டாவா சிவன் கோவில் திருவிழா படங்கள்மூலம், தரிசனம் செய்துகொண்டேன். படங்களும் ரொம்ப அழகாக வந்திருக்கின்றன. தீர்த்தவாரி, ஒரு டேங்க் மூலம்... பார்க்கவே அருமையா இருக்கு.

    நாடுவிட்டு நாடு சென்றிருந்தாலும், கலாச்சாரம் பரவ அவர்கள் எடுக்கும் முயற்சி வியக்கத்தக்கது. முதல்முறை கனடாவில் சிவன் கோவில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். அருமை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நமக்கும் வியப்பாக்கவே இருக்கு... அதிலும் நம் பிள்ளைகள் அங்கு எவ்வளவு அழகாக தேவாரம், டான்ஸ், வீணை, வயலின் என அனைத்திலும் நல்ல முன்னேற்றம்.. தமிழிலும் நல்ல முன்னேற்றம்... எங்கள் ஆன்ரியின் மகள், கனடாவிலயே பிறந்து வளர்ந்தவ.. அவவுக்கு எத்தனையோ திருக்குறள் பாடம்.. எனக்கே அப்படித்தெரியாது:)..

      அங்கு நிறையத் தமிழ்க் கோயில்கள் இருக்கின்றன...

      Delete
  21. மதிய உணவு என்ன, அதற்காக இருந்த பந்தி போன்றவற்றைப் படமெடுத்துப் போட்டால் குறைந்துபோய்விடுவீர்களா, அல்லது சாப்பிடும் அவசரத்தில் அதை மறந்துவிட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கோயில் சாப்பாடு எனில் சொல்லவா வேணும்.. ஊரில் போடுவதுபோல தண்ணீர்ப்பந்தல் எனப்போட்டு எல்லோருக்கும் மோர்... யூஸ் கொடுத்தார்கள் ... மதியம்.. பல கறிகள் பொரியல்களோடு சோறு, வடை, பாயாசம்.. என சூப்பர் சாப்பாடு... தாராளமாக சமைச்சு எல்லோருக்கும் போதுமானளவு கொடுப்பார்கள்... படம் ஏனோ அதை எடுக்க மறந்திட்டேன்.. எடுத்திருக்கலாம்தான்..

      தீர்த்தத்தில் அன்று இன்னும் விசேசம்.. பலகாரங்கள் சக்கரைப்புக்கை.. என பல விதச் சாப்பாடு...

      //அல்லது சாப்பிடும் அவசரத்தில் அதை மறந்துவிட்டீர்களா?//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    2. சொல்ல மறந்திட்டேன்ன்.. பந்தி இல்லை.. பேப்பர் பிளேட் + கரண்டி எடுத்து.. கதிரைகள் இருக்கும்.. விரும்பிய இடத்தில் இருந்து சாப்பிட வேண்டியதுதான்...:)

      Delete
  22. திருவிழாவை நானும் பார்த்தாச்சி ஹா ஹா குருக்கள் அம்மா.... அப்ப குருக்கள் அவ்வளவு பிள்ளையோ .... கடைசி ஊசி குறிப்பு நான் கேள்வி பட்டதில்லை கேட்டு சொல்றேன் ஊசி இணைப்பு அர்த்தம் வாய்ந்தது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி வாங்கோ... குருக்கள் அம்மா.. குருக்கள் ஐயா:) அப்பூடித்தான் வரும்..

      முடிந்தால் கேட்டுச் சொல்லுங்கோ.. நீங்க இலங்கையோ??..

      மிக்க நன்றி பூவிழி.

      Delete
  23. திருமணமாகி முதல் வருடமென்றால், கணவன் மனைவியைப் பார்த்துக்கொண்டிருப்பானா, தேரைப் பார்ப்பானா? மற்ற பக்தர்களுக்கும் distraction இருக்காதா? அதனால் இருக்கும் என நினைக்கிறேன். மற்றபடி வேறு லாஜிக்கல் காரணம் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நல்லாத்தான் ஜிந்திக்கிறீங்க:).. மிக்க நன்றி நெ.தமிழன் அனைத்துக்கும்.

      Delete
  24. நீங்கள் வெகேஷன் போனேன் என்று சொல்லி மூன்று நாலு இடுகை போட்டுட்டீங்க. சிலரும் வெகேஷன் போனார்கள்... ஒரு இடுகையும் காணோம். ஒருவேளை எங்கேயும் போகாமல் வெறும் ரெஸ்டு, தூக்கம் தானா? ரெஸ்டு எடுக்கும்போதும், ரேடியோவில் கேட்டதை வைத்து மூன்று இடுகை போட்ட சிலர்போல், அவர்களுக்கு இடுகை போடும் சாமர்த்தியம் இல்லையா? சும்ம்ம்ம்ம்ம்மா கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அஆவ்வ்வ் :) கொஞ்சம் நாளைக்கு பின்னூட்ட ஜோதியில் கும்மலாம்னு இருந்தேன் :)சொல்லிட்டிங்க இல்ல வரேன் விரைவில்

      Delete
    2. ///ஒருவேளை எங்கேயும் போகாமல் வெறும் ரெஸ்டு, தூக்கம் தானா? ///

      ஹா ஹா ஹா நல்லாக் கேளுங்கோ:)).. என்னை ஓட ஓட விரட்டியவர் இப்போ சூப்பர் மாட்டி:)...

      ///சிலரும் வெகேஷன் போனார்கள்... ஒரு இடுகையும் காணோம்.///
      ஹையோ ச்ச்சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துப்புட்டீங்களே:) இனி போஸ்ட் போஸ்ட்டா வரப்போகுதே:)).. கொமெண்ட்ஸ் போடத் தயாராகுங்கோ:)..

      ///ரேடியோவில் கேட்டதை வைத்து மூன்று இடுகை போட்ட சிலர்போல்,///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

      Delete
    3. ///AngelinWednesday, October 04, 2017 8:59:00 am
      அஆவ்வ்வ் :) கொஞ்சம் நாளைக்கு பின்னூட்ட ஜோதியில் கும்மலாம்னு இருந்தேன் :)சொல்லிட்டிங்க இல்ல வரேன் விரைவில்//

      ஹையோ இது நாட்டுக்கு நல்லதில்லையே:).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:).. ட்றம்ப் அங்கிளைப் பார்க்கப் போறேன்:).

      Delete
  25. கள்ளங்கபடு எல்லாம் குழந்தைகளிடம் கிடையாது என்று காக்காகூட தெரிந்துவைத்திருக்கிறதே :)

    ஊசி இணைப்பில் ...'வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்' படித்தேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. உண்மைதான் காக்கையரின் அறிவு பார்த்து நான் வியக்கேன்:).

      உண்மை அழகான பாடலை நினைவுபடுத்தி விட்டிங்கள்.

      மிக்க நன்றி பகவான் ஜீ.

      Delete
  26. இரசித்தேன்! த ம 9

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ புலவர் ஐயா.. மறக்காமல் வந்து வோட் போடுவதற்கு மிக்க நன்றி.

      Delete
  27. தலைப்பு வாசித்து விட்டு உள்ளே வந்தேன்
    ஏன்டா எனக்கு இன்னும் திருமணம் ஆகல்லெ

    த+ம=10

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ தம்பி மொகமெட்... வர வர உள்ளே ஒளிச்சிருக்கும் கொமெடி உணர்வு எட்டிப் பார்க்குதே வெளியே:)..

      வந்திட்டீங்க இல்ல:).. இனி சீக்கிரமே திருமணமாகும்:).. அனுபவிக்கப் போவது நீங்கதான் ஹா ஹா ஹா:)..

      மிக்க நன்றி.

      Delete
  28. ஏஞ்சலின் --

    'குழந்தை பன்னும்' - குழந்தை பண்ணும்
    திருவிளா - திருவிழா
    சப்பறம் - சப்பரம்
    சாறி - சாரி (Saree)

    இதெல்லாம்கூட கண்ணில் படவில்லையா? என்னதான் படிக்கிறீங்களோ?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஆ :) திருவிழா சொல்லிட்டேன் மூணாவது கமெண்ட் பாருங்க
      இது தான் இதேதான் :) இப்போதான் நினைச்சிட்டிருந்தேன் அந்த வீடியோக்கு தலைப்பு குடுத்தது பூனை இல்ல :)
      பன்னும் //வேற யாரோ போட்டது அதனால் விட்டுட்டேன்

      Delete
    2. ர /ற வந்து இலங்கை தமிழரில் ர போடற இடத்தில ற போட எதோ ஒரு காரணம் இருக்காம் சமீபத்தில் எங்கியோ வாசிச்சேன் அதான் அதையும் விட்டுட்டேன் :)

      Delete
    3. ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா... ஆரம்பிச்சுட்டாய்ங்க:)... இது இலங்கை ஆமியை விட மோசமான அட்டாக்காக இருக்கும்போல இருக்கே:)..

      Delete
    4. //நெல்லைத் தமிழன்Wednesday, October 04, 2017 8:45:00 am
      ஏஞ்சலின் --//

      ஹா ஹா ஹா விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே எங்கே இன்னும் அசம்பாவிதமேதும் நடக்கலியே... எல்லாம் அந்த எம்பெருமான் அருள் என நினைச்சனே:) நடந்திட்டுது:).. அதில அஞ்சு ஓடிவந்து விளக்கம் வேற:).. ஏதும் ஏடாகூடமாகச் சொன்னால் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவன் எண்டு அவவுக்குப் பயம்:).. ஹா ஹா ஹா:)

      Delete
    5. இங்கு உள்ள இந்தியரல்லாதோர் சா'றி' என்று தான் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

      சாறி - எந்த இந்திய மொழிச் சொல் என்று தெரிந்துகொள்ள ஆசை. ஜரிகை / சரிகை குறுகி 'சரி' என்று ஆகி இருக்குமோ! :-) யாராவது சொன்னால் தெரிந்துகொள்வேன்.

      தமிழில்... சாறி / சாரி இரண்டாகவும் இருக்க முடியாது. சேலை தான்... சரி. :-) (கடைசியில் தட்டியிருப்பது... பிழையில்லாத 'சரி')

      தமிழ்மொழி அறிவைப் பெருக்கும் இந்தக் குறுக்கு வழியை இத்தனை நாள் மறந்திருந்தேனே! ;-)

      காக்கைக்குத் தீன் கொடுக்கும் குழந்தை - அழகு. வழக்கம் போல, அதிராவின் கட்டுரை சுவாரசியம். இந்த முறை இமா முழுக் கட்டுரையையும் வாசித்து முடித்ததற்கு ஆதாரமாக... அதிராவின் தலையில் ஒரு வா'ளி' யோகட் தண்ணீரைக் கொட்டிவிட்டுப் போகிறேன். வாழி நீடூழி! ;D

      நன்றி அஞ்சு. :-)

      Delete
    6. வாங்கோ றீச்சர் வாங்கோ.. ஆங்ங்ங்ங் எனக்கு சப்போர்ட்டுக்கு றீச்சர் வந்திட்டாக:).. கட்டிலுக்கு அடியில ஒளிச்சிருந்த நான் இப்போ மெத்தைக்கு மேலே ஏறிட்டனே:).. ஆங்ங்ங்ங் மீக்கு டலில்ல டி ஆக்கும்:)..

      அஞ்சூஊஊஊஊ வெளில வாங்கோ:))... ஆவ்வ்வ்வ்வ்வ் இமா போயிட்டீங்களோ?:) ஹையோ எனக்கு லெக்கு காண்ட்ஸ்சு எல்லாம் இப்போ எதுக்கு ரைப் அடிக்குது:))..

      ஆங்ங் அதுதானே சேலையையும் சாரி என்கிறீங்க.. சொறியையும் சாரி என்கிறீங்க அப்போ அதிரா கொன்பியூஸ் ஆகமாட்டேன்ன்??????:)).. வாளி.. வாழி.. ஹா ஹா ஹா இமா இது யார் கண்ணிலும் படேல்லை நல்லவேளை மீ சேஃப்ட்:)..

      //நன்றி அஞ்சு. :-)///
      கர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      ஹா ஹா ஹா மியாவும் நன்றி இமா.

      Delete
  29. கொஞ்சும் மழலைத் தமிழில் காட்சிகளைக் கண்முன் நிறுத்துவதில் அதிராவுக்கு நிகர் அதிராதான்!

    'பளிச்’ படங்கள் கண்களைக் கவர்ந்தன. குட்டீஸ்களின் காவடி ஆட்டம் மனதைக் கவர்ந்தது.

    மகிழ்ச்சி...மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசி ஜி... விடியப் போகும்போது உங்களை நினைச்சேன்.. வெளியூர் போறேன் எனப் போட்டிருந்தீங்களே.. இன்னும் திரும்பவில்லைப்போலும் என.. நினைச்சுக் கொஞ்ச நேரத்தில் உங்கள் கொமெண்ட் வந்திருந்தது... ஹா ஹா ஹா மகிழ்ச்சி.

      மிக்க நன்றி.

      Delete
  30. அதிரா ஊசிக் குறிப்பு ரொம்ப அருமை

    ReplyDelete
  31. எதுக்க்கு புதுசா கல்யாணவங்க வரக்கூடாது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ராஜி வாங்கோ... சரியான காரணம் எனக்குத்தெரியவில்லை ராஜி.. அந்த தேரின் மேலே இருக்கும் முடியைப்போன்ற கலசம் பார்க்கக்குடது என்பினம்.. ஏதோ ராவணனின்.. தேர்.. முடியோடு சம்பந்தப்படுத்தி இருக்குமோ தெரியவில்லையே... இதில் முடி என்றால் தலைமயிர் அல்ல... முடிவில் இருப்பது முடி:) ஹா ஹா ஹா:).

      Delete
  32. புதுசா கல்யாணம் ஆனவங்க தேரோட்டமும், மலைக்கோவிலுக்கு போகக்கூடாதுன்னு எங்க ஊர் பக்கமும் சொல்வாங்க ஆதிரா. ஒருவேளை கூட்டமா இருக்குறதால அப்பிடி இருக்குமோ. எனக்குள்ளும் இந்த கேள்வி உண்டு. இதுக்கு முதல்ல விடையை கண்டுப்பிடிக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. இல்ல ராஜி கூட்டத்துக்காக அல்ல. தேர் பார்க்கக்கூடாது என்பினம். மறுநாள் தீர்த்தத்துக்கு அழைச்சுப் போவினம், ஆனா சொல்லுவினம் தேர் சைட்டிலே இருக்கும் பார்த்திடக்கூடாது என:).. யேஸ் நானும் கண்டு பிடிக்கோணும்.. பார்ப்போம், அம்மாவைக் கேட்டுப் பார்க்கிறேன்.

      மிக்க நன்றி ராஜி.

      Delete
  33. நாங்கள் என்றுமே புது மண தம்பதிகள் என்பதால் இந்த பதிவை படிக்கவில்ல எங்கள் மாதிரி யூத்துக்கு ஒரு பதிவு போடுங்க உங்கள் மாதிரி ஓல்டுக்கு பதிவு போட்டு எனக்கப்போது

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழனுக்குப் பதில், அவர்வீட்டு நாய்க்குட்டி பின்னூட்டம் இட்டிருக்கு. அவர் ஒரு நாய் வளர்ப்பதாகத்தானே சொன்னார். ஒருவேளை அதுக்கு ஜோடியும் வளர்க்கிறாரா? என்ன தைரியம், அந்த நாலுகாலுக்கு. எஜமான்னையே ஓல்டு என்கிறது.

      மதுரைத் தமிழன் தன் நாலுகால் நண்பனின் கமென்டைப் பார்த்து வருத்தப்படப்போகிறாரே.

      Delete
    2. வாங்கோ ட்றுத் வாங்கோ...
      ///நாங்கள் என்றுமே புது மண தம்பதிகள் என்பதால் இந்த பதிவை படிக்கவில்ல///
      நான் பிண்ட் ஆகிறேன்ன்ன்ன்ன்ன்ன் எனக்கு சுட்டாறிய தண்ணி அடிச்சு எழுப்பி விடுங்கோ.. பிளீஸ் அவசரத்துக்குக் கோல்ட் வோட்டர் அடிச்சிடாதீங்கோ:))..

      உங்களுக்கு வரவர ஞாபகமறதி அதிகமாகுது ட்றுத்.. பாருங்கோ மை வைக்க மறந்திட்டீங்க:)... மிகுதிப் பதிலுக்கு கீழே வருகிறேன்ன்:)) மிக்க நன்றி ட்றுத்.

      Delete
    3. ///அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழனுக்குப் பதில், அவர்வீட்டு நாய்க்குட்டி பின்னூட்டம் இட்டிருக்கு.///
      ஹா ஹா ஹா இது கரீட்டு:) நான் இதைப்பற்றி ஓசிக்கவே இல்லை:).

      /// என்ன தைரியம், அந்த நாலுகாலுக்கு. எஜமான்னையே ஓல்டு என்கிறது.///
      ஹா ஹா ஹா நமக்குத் தெரியாதெல்லோ:) நேரில் பார்க்கும் அதுக்கு நிட்சயம் தெரிஞ்சிருக்கும்:) பெட்ஸ் க்குப் பொய் சொல்லத் தெரியாது:)..

      ஹையோ இதுக்கு ட்றுத் பொயிங்கி எழுந்தால் மீ பொறுப்பில்லை:) மீ ஒரு அப்பாஆஆஆஆவீஈஈஈஈ:).. ஹா ஹா ஹா:).

      Delete
  34. குழந்தைகள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை, கனடாவில் நம் பாரம்பரிய உடையில் பார்க்கும்போது மனது மகிழ்கிறது. அந்த மக்களின் முயற்சியும் சின்சியாரிட்டியும் கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் முனைப்பும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      உண்மைதான் நம்மவர்கள் நிறையவே பாடுபடுகிறார்கள்..எங்கள் அக்காவின் மகளுக்கு இந்தியாவில் இருக்கும் வீணை வித்தவான்.. பெயர் மறந்திட்டேன், சீரியலில்கூட நடித்திருக்கிறார்.. அவர் ஸ்கைப்பில் வகுப்பெடுப்பார், பின்னர் வருடத்துக்கொருக்கா நாட்டுக்கு வந்து நேரில் சந்தித்துப் போவார்... அவருடைய வழியில் வந்த இன்னொருவர்.. அங்கு நேரில் வகுப்பெடுக்கிறார்.. இப்படி எல்லாம் பாடுபடுகிறார்கள்.. தமிழுக்காகவும் கலாச்சாரத்துக்காகவும்.

      ஆனா எங்கட அண்ணன் சொன்னார்... இதுக்கெல்லாம் வெள்ளைக்காரன் ஏன் பேசாமல் இருக்கிறான் எனில்.. அவர்களுக்குத் தேவை மக்களும் உழைப்பும். இந்த கலாச்சாரம் பண்பாடு மொழி எல்லாம் இன்னும் 2,3 தலைமுறைக்கு மேல் தாக்குப் பிடிக்கப் போவதில்லை என அவர்களுக்கு நிட்சயம் தெரியும், பின்பு அவர்களின் ஆங்கிலக் கலாச்சாரத்துக்குள்ளேயே நம் வருங்கால சந்ததி மூழ்கிவிடும் என்பதால் என்றார்.

      யோசிக்கும்போது அதுவும் உண்மையாகத்தான் இருக்கு. நமக்கு தமிழ் நன்கு தெரிந்தும் நம் பிள்ளைகளுக்கு நன்கு எழுத வாசிக்கப் பழக்க முடியவில்லை.. அப்போ அவர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பினமோ?:)

      எங்கள் சின்னவர் கேட்டார்.. 18 வயசானதும் நான் வீட்டை விட்டு வெளியே போய் ஃபிரெண்ட்ஸ் உடந்தானே இருக்கோணும்... உங்களோடு இருக்க முடியாதுதானே என?:)... அது இங்கத்தைய கலாச்சாரம் அப்படி.. அதுதான் பிள்ளைகளுக்குத் தெரிகிறது...

      நமக்குத் தமிழ்நாட்டுப் பிள்ளை வேணுமெனில்.. தமிழ் இடத்திலேயே இருந்திருக்க வேண்டும்.. ஸ்கொட்லாந்தில் இருந்துகொண்டு தமிழ்நாட்டுப் பிள்ளையை எதிர்பார்ப்பது நம் தப்புத்தானே எனத்தான் நான் சொல்ல்வேன்... பிள்ளைகளில் தப்பில்லையே.

      இதில் நிறையவே சொல்ல முடியும்... இத்தோடு என் உரையை முடிக்கிறேன்:).

      Delete
  35. கனடாவில் நடந்த தேர் ஓட்டத்தைப் பார்க்க அந்த ஊரில் யாருமே வரவில்லையா வேடிக்கை பார்க்கக் கூட என்னவெல்லாமோ பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களதில் ஒன்றுதானோ புது மணதம்பதிகள் தேர் பார்க்கக் கூடாது என்பது

    ReplyDelete
  36. இங்கு நடக்கும் திருவிழாவை பார்க்கும்போதோ,கேட்கும்போதோ ஊர் ஞாபகம் வருவதை தடுக்கமுடியாது.ஆனா ஊரில் நடக்கும் திருவிழாவில் இருக்கும் உணர்வு இங்கு வருவது இல்லை எனக்கு.ஏதோ செயற்கைதனமா..
    அங்கு நல்லூரில் நடக்கும் திருவிழாவையும் இயந்திரகதியில நடத்தீனம் என்பார்கள்.ஆனா உணர்வுபூர்வமா இருக்கும். பக்தி இருக்கும்.
    படங்கள் எல்லாம் அழகா இருக்கு. வெள்ளைகாரர்களை காணவில்லை. இங்கு இப்ப அவர்கள்தான் முன்னுக்கு நிற்கிறார்கள். நல்லா பழகீட்டுது அவர்களுக்கு.
    அஞ்சு சொன்னமாதிரிதான்.. வெயில்...... காலநிலைக்கு என்னவோ ஆகீட்டுது. எல்லாம் தாறுமாறா இருக்கு.
    ஊரில இப்படி சொல்றவைதான். எனக்கும் காரணம் தெரியல. கேட்கவேணும்.
    /இன்னும் 2,3 தலைமுறைக்கு மேல் தாக்குப் பிடிக்கப் போவதில்லை// 2,3 என்ன இப்பவே மாறிக்கொண்டு வருகிறது. அனேகமா இதுதான் கடைசியா இருக்கலாம். என் கருத்து. இங்கு எல்லாம் பழகுறார்கள். ஆனா தொடர்வார்களா தெரியாது.
    /நமக்குத் தமிழ்நாட்டுப் பிள்ளை வேணுமெனில்.. தமிழ் இடத்திலேயே இருந்திருக்க வேண்டும்.. ஸ்கொட்லாந்தில் இருந்துகொண்டு தமிழ்நாட்டுப் பிள்ளையை எதிர்பார்ப்பது நம் தப்புத்தானே எனத்தான் நான் சொல்ல்வேன்... பிள்ளைகளில் தப்பில்லையே// very true.
    பாடலும்,வாழ்க்கைத்தத்துவமும் சூப்பர்ர்ர்ர்.....

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.