நல்வரவு_()_


Friday 20 January 2017

து ப்போ?:)



மேடைப் பேச்சு முடித்து
மிகுந்த களைப்போடு
வீடு வந்தேன்..

மெத்தையில் பொத்தென விழுந்தேன்
ஒருத்தி ஓடிவந்து
கொஞ்சம்கூடக் கூச்சமே இல்லாமல் 
என்மீது புரண்டு தழுவினாள்..

நான் திரும்பத் 
தழுவ விரும்பவில்லை எனினும்
தள்ளிவிட விரும்பாமல், தழுவட்டும்
என விட்டிருந்தேன்

கொஞ்ச நேரத்தில்
இன்னொருத்தி வந்தாள்..
இதென்ன ஒரு கட்டிலில்
இருவரா என்பீர்கள்..

நான் சொன்னது...
முன்னே வந்தவள் தூக்கம்!
பின்னே வந்தவள் கனவு!!

ஹா ஹா ஹா நான் எப்பவும் பூஸ் ரேடியோ கேட்பது வழக்கம் என என் பக்கம் வரும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், அதனாலேயே இங்கு  “பூஸ் ரேடியோ” என லேபல் கொடுத்தே பல போஸ்ட்கள் போட்டிருக்கிறேன்.

இந்தக் கவிதை கலைஞர் அவர்கள் நேரடியாகச் சொன்னது, ஒரு தடவைதான் கேட்டேன்.. ரேடியோ எல்லோ.. திரும்ப  கேட்க முடியாது:), ஒரு தடவை கேட்டாலும் மனதில் பதித்துக் கொண்டேன்... கேட்டபொழுது விழுந்து விழுந்து சிரித்ததில் புரையேறிவிட்டதெனக்கு, என்ன ஒரு கற்பனை..

அதனால் என் மனதில் நினைவில் உள்ளதை அப்படியே என் பாஷையில் இங்கு பதித்திருக்கிறேன், வசனங்கள் தவறியுமிருக்கலாம் அஜீஸ் பண்ணுங்கோ.

இன்னொரு ஹைக்கூபோன்றது .. இது பர்வீன் சுல்தானா சொன்ன கவிதை..
இது நட்பு, காதல், தம்பதியினர் அனைவருக்குமே பொருந்தும்...

நீயும் நானும்
பிரிவதென்று
முடிவெடுத்தபின்
உனக்கும் எனக்கும்
பகைமை என்ற
புது உறவு எதற்கு..

இரண்டு கவியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால் இங்கே காவி வந்தேன்...  
“யான் பெற்ற இன்பம் பெற வேண்டும் நீங்களும்” எனும் நல்லெண்ணத்தில்:).

ஊசிக்குறிப்பு:
இங்கு வரும் நீங்கள் எல்லாம் தமிழ்மணம் வோட் பண்ணாமல் போயிடுறீங்க:( .. இனியும் பண்ணாமல் போனீங்க.. வச்சிடுவேன் :) ஹையோ எனக்குச் சொன்னேனாக்கும்..க்கும்..க்கும்..(இது எக்கோ)..
======================================================================

56 comments :

  1. தங்களின் ஊசிக்குறிப்பைப் படித்ததனால் மட்டுமே நான் கஷ்டப்பட்டு முதல் வோட் அளித்துள்ளேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆஆ வாங்கோ கோபு அண்ணன்.. இம்முறையும் நீங்கதான் 1ஸ்ட்டூ... நான் தான் பதில்போடத் தாமதமாகிட்டேன் மன்னிச்சுக்கோங்கோ.. சனி ஞாயிறு என்றாலே வேலை நாட்களை விட பிஸியான நாட்களாகிடுது இப்போ:)... தொடர்ந்து முதலாம் இடத்தைத் தக்க வைக்க வாழ்த்துக்கள்.. விட்டீங்களோ அஞ்சு பிடிச்சிடுவா:)..

      Delete
  2. முதல் வோட் போட்டதற்காக எனக்கு என்ன பரிசு தருவதாக இருக்கீங்களோ, அதனை நம் அஞ்சுவிடம் கொடுத்து விடவும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. சே சே... போட்டிகளை அறிவிப்பது மட்டுமே என் வேலை:) பரிசை எல்லாம் என் சிஷ்யை:) தான் கொடுப்பா:).. அவவுக்கு கொடுப்பதுதான் ரொம்பப் பிடிக்கும்... நாமெல்லாம்9பிரித்தானியாக்காரர்:)) வள்ளல் பாரி பற:)ம்பரை என ஏற்கனவே சொல்லியிருக்கிறேனெல்லோ...

      அதுசரி கோபு அண்ணன், நீங்க வோட் போட்டிருக்கிறீங்க, அதே நேரம் நானும் போட்டேன், ஆனா உள்ளே போய்ச் செக் பண்ணினால், உங்கள் பெயர் காட்டுது பட் வெளியே 1 வோட் எனத்தான் இருந்துது... இப்போகூட உள்ளே 5 பேரின் பெயர் காட்டுது ஆனா இங்கு 4 வோட்ஸ் எனத்தான் காட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை:)..
      ///
      இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

      maheshswis antsundaram@gmail.com VaiGopalakrishnan athiramiya dindiguldhanabalan

      சன்னலை மூடு////

      Delete
    2. ஒருவேளை நீங்க மாறி “எதிர்வாக்கு” போட்டுவிட்டீங்கள் போல தோன்றுது எனக்கு கர்ர்ர்:) மீண்டும் ட்ரை பண்ணுங்கோ.. ஏனெனில் உங்கட பெயரிலதான் புரொப்ளம் இருந்துது..:)..

      Delete
    3. என் வோட் தான் முதல் வோட். நான் வோட் போடும் முன்பு அது 0/0 ஆக இருந்தது. நான் வோட் போட்டுவிட்டு F5 பித்தானை அழுத்தி Refresh செய்து பார்த்தேன். உடனே முதல் வோட் உன்னுடையது தான் என எனக்குச் சொல்லி விட்டது. இப்போது நீங்க சொன்னதால் மீண்டும் வோட் போட்டுப் பார்த்தேன். அது இப்போது சொல்லுவதை கீழே அப்படியே Copy & Paste போட்டுள்ளேன். பாருங்கோ:

      -=-=-=-=-


      thamizmanam

      இடுகைத்தலைப்பு:
      இது தப்போ?:)

      மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.

      சன்னலை மூடு

      -=-=-=-=-

      Delete
    4. athira said ....

      //ஒருவேளை நீங்க மாறி “எதிர்வாக்கு” போட்டுவிட்டீங்கள் போல தோன்றுது எனக்கு கர்ர்ர்:)//

      :( :( :( :( :(

      நான் உங்களைத்தவிர (அதுவும் உங்கள் படுத்தலுக்காக மட்டுமே) இந்த உலகில் வேறு யாருக்குமே இப்போதெல்லாம் வோட் போடுவதே இல்லை. என்னைப் போய் இப்படி அநியாயமாகச் சொல்லிட்டீங்களே .... அதிரா.

      நான் இப்போது ஒரே அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக .... டூஊஊஊஊஊஊ.

      Delete
    5. ஓ அப்போ என் வோட்டில் தான் ஏதோ தப்பு நடந்துவிட்டது, பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்கோங்கோ... நானும் வோட் போடமுன் 0/0 எனத்தான் இருந்துது ஆனா போட்டவுடன் கவனிக்காமல் விட்டு விட்டேன், பின்பு பார்த்தேன் நீங்க வோட் பண்ணிவிட்டதாக சொன்னீங்க.. அப்போ பார்க்கிறேன் 1/1 எனத்தான் காட்டியது, திரும்ப நான் போட்டேன் .. நீ ஏற்கனவே போட்டிட்டாய் போ என திட்டிச்சுது என்னை, ஆனா உள்ளே பெயர் மட்டும் இருக்கு... சரி போகட்டும் ஏதோ கணக்கெடுப்பதில் கூட்டலில் பிழை விடுறார் கூகிளார்:))

      Delete
    6. அச்சச்சோ இதென்ன இது என் நிலைமை இப்பூடி ஆச்சேஏஏ... என்னாச்சோ ஏதாச்சோ என பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவந்து மன்னிப்புக் கேட்டேன்ன்... கோபு அண்ணன் குறை நினைச்சிடாதையுங்கோ... தொடர்ந்து வோட் போடுங்கோ இல்லையெனில் உச்சிப்பிள்ளையார் கோயில் வாசலில் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்படும்.. அஞ்சுவைக் கையில் பிடிச்சபடிதான்:))..

      அஞ்சு ... ஓடிக் கம்.. கோபு அண்ணனுக்கு புதூஊஊ பொக்ஸ் உடைச்சு ஒரு ரிஸூ கொடுங்கோ:) புலூக் கலர்ல கொடுங்கோ:))... ஹா ஹா ஹா... தப்பெனில் மன்னிச்சுக்கொள்ளுங்கோ கோபு அண்ணன் மிக்க நன்றி.

      Delete
  3. //இந்தக் கவிதை கலைஞர் அவர்கள் நேரடியாகச் சொன்னது, ஒரு தடவைதான் கேட்டேன்.. ரேடியோ எல்லோ.. திரும்ப கேட்க முடியாது:), ஒரு தடவை கேட்டாலும் மனதில் பதித்துக் கொண்டேன்... கேட்டபொழுது விழுந்து விழுந்து சிரித்ததில் புரையேறிவிட்டதெனக்கு, என்ன ஒரு கற்பனை..

    அதனால் என் மனதில் நினைவில் உள்ளதை அப்படியே என் பாஷையில் இங்கு பதித்திருக்கிறேன், வசனங்கள் தவறியுமிருக்கலாம் அஜீஸ் பண்ணுங்கோ.//

    எனச் சொல்லிவிட்டு கீழே அந்தக்கவிதையைப் பற்றி எதுவுமே எழுதவில்லை. அதைக் கேட்காமலேயே நானும் விழுந்து விழுந்து சிரித்தேனாக்கும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மகி சொன்னதைப்போல, ரோட்டலி புரூட்டலி:) நீங்க என் கவிதை படிச்சுக் குளம்பிட்டீங்க..:) நான் குளப்பி விட்டிட்டேன்ன்ன் இப்போதான் நான் விழுந்து விழுந்து சிரிக்கிறேன்ன்ன்:))...

      மேலே சொன்ன கவிக்கு.. முடிவிலேதான் முகவுரை கொடுத்தேன்.. அதனால்தான் நீங்க குளம்பிட்டீங்க... இருந்தாலும் விழுந்து விழுந்து சிரித்தமையால் உங்கள் ஆயுள் இப்போ 10 மடங்கு கூடியிருக்கும்... அப்படியே ஆன்ரியையும் சிரிக்க வையுங்கோ இருவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்..

      Delete
  4. //நீயும் நானும் பிரிவதென்று முடிவெடுத்தபின் உனக்கும் எனக்கும் பகைமை என்ற புது உறவு எதற்கு..//

    இது நல்லா இருக்குது. இதை எழுதியவருக்குப் பாராட்டுகள். பகிர்ந்துகொண்டுள்ள உங்களுக்கு நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  5. அனைத்துப் படங்களும், அரைகுறைப் பிரஸவம் போன்ற இந்த அவசரப் பதிவும் வழக்கம் போல அருமை.

    குறிப்பாக அஞ்சுவைக் குறி வைத்து சுட்டுக்கொண்டே இருக்கும் அந்த கடைசி பூசார் படம் நல்லதொரு தேர்வாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா இது காலையில் வெளியிட இருந்தேன், பின்பு புளொக்கை கொஞ்சம் வடிவமைக்கலாமே என கை வச்சனா..... ரோட்டலி கொலப்ஸ்ட் ... அதனால் மெதுவா சரி செய்து... பின்னர் அவசரமா பப்ளிஸ் பண்ணினேன்...

      ///குறிப்பாக அஞ்சுவைக் குறி வைத்து சுட்டுக்கொண்டே இருக்கும் அந்த கடைசி பூசார் படம் நல்லதொரு தேர்வாக உள்ளது.////
      உஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ.. அவோக்கூஊஊஊ பா.....புக் காஆஆஆஆது கேட்டிடப் போகுது:) , கேட்டால் உங்களுக்குப் பிரச்சனை இல்லை உங்களை உச்சிப் பிள்ளையார் காப்பாத்துவார்ர்... என்னைத்தான் பின்னால வந்து தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவா... நான் இப்போதெல்லாம்.. உடல் முன்னாகவும் தலை பின்னாகவும் வைத்துத்தான் வோக்கிங் போறேனாக்கும்:))

      Delete
  6. //இது தப்போ?:) //

    தலைப்பினில் இதென்ன கேள்வி? தப்பு மட்டுமே தான்.

    சந்தேகமானால் நம் பஞ்சாயத்தார் அஞ்சுவிடம் கேட்டுக்கொள்ளுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. நோஓஒ தப்பை தப்பாப் பார்த்தால்
      தப்பாத்தான் தெரியும்..
      தப்பை நேராப் பார்த்தால் தப்பும் நேராத் தெரியும்..:) திரும்படியும் குளப்பிட்டேனோ?:)...

      Delete
  7. நீயும் நானும்
    பிரிவதென்று
    முடிவெடுத்தபின்
    உனக்கும் எனக்கும்
    பகைமை என்ற
    புது உறவு எதற்கு..///

    அருமையாண கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.

    அப்பரம் அந்த முதல் கவிதை ஆஹாஹா. சூப்பரு:)

    தமிழ்மணம் போட்டாச்சு போட்டாச்சு:)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி மகேஷ்.. மிக்க சந்தோசம்.. நல்லவேளை வோட் பண்ணியதால் தப்பிட்டீங்க:) அந்த திருப்பதி வெங்கடசலாபதி உங்களைக் காப்பாற்றிட்டார்ர்ர் என் பூஸாரிடமிருந்து ஹா ஹா ஹா மிக்க நன்றி மகேஷ்.

      Delete
  8. ஹா ஹா... அஜீஸ் பண்ணிக்கிறோம்...

    தமிழ்மணம் பாஸ்வேர்ட் மறந்து போச்சு..

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ் வாங்கோ சரவணன் வாங்கோ, நீங்க ஜப்பானுக்குப் போயிருப்பீங்க புளொக்கை எல்லாஅம் மறந்திருப்பீங்க என நினைச்சிருந்தேன், இங்கு பார்ப்பது மிகவும் சந்தோசமாக இருக்கு.

      ஆ நீங்களும் பாஸ்வேர்ட்டை மறந்திட்டீங்களோ? நானும் அப்படித்தான் பின்பு 2 நாட்களாக ட்ரை பண்ணி பழைய மெயில் எல்லாம் தேடிக் கண்டு பிடிச்சிட்டேன்...
      மிக்க நன்றி ... எனக்கொரு டவுட்டு.. இது உங்கள் முழுப்பெயரா? இல்ல அப்பாவின் பெயருமோ? அப்படி எனில் எது உங்கள் பெயர்.. ஏனெனில் நான் எழுதுவது யாருடைய பெயரெனத் தெரியவில்லை..

      Delete
    2. ஹா ஹா... என் பெயர் பற்றிய விளக்கம் இங்கே..

      http://www.schoolpaiyan.com/2014/12/blog-post.html

      Delete
    3. ஆஹா லிங்கைப் பிடிச்சுப் போய்ப் படித்தேன், கண்டுபிடிச்சிட்டேன்ன் சரவணன்..:)

      Delete
  9. ஆஹா, அதிரா .... முதலில் எழுதியுள்ள மேடை, பேச்சு, களைப்பு, மெத்தை, தழுவுதல், தூக்கம், ஏக்கம், கனவு என்பதெல்லாம் கலைஞர் சொன்னதாக இருக்குமோ என, ட்யூப் லைட் ஆன எனக்கு இன்று இப்போதுதான் என் மண்டையில் உதித்தது.

    அதிராவே எழுதியிருப்பாளோ என முதலில் நினைத்து நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப்போனேன்.

    எனக்கு அப்போதே ஒரு டவுட்டு .... இது எங்கோ யாரோ ஒரு பிரபலத்தின் பேச்சினைக் களவாடப்பட்டதாகத்தான் இருக்கும் என்று.

    அதனால் //இது தப்போ?:)// என்ற டவுட்டான தலைப்பில் தப்பே இல்லை.

    பிறருடையதை களவாடுதல் தப்பு தானே .... அதனால் தலைப்பு டவுட் இல்லாமல சரியேயானும் .... தப்பு தப்புத்தான் .... பஞ்சாயத்தார் அஞ்சு வந்ததும் தண்டிக்கட்டும். என்ன தீர்ப்பளித்து என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளவும்.

    எனினும் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. களவையும் கற்று மற:) எனத்தானே சொல்லியிருக்கினம் நம் முன்னோர்.. நான் இப்போதானே கற்றுக் கொண்டிருக்கிறேன்.. எப்பூடி:))

      ///என்ன தீர்ப்பளித்து என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளவும்.///
      நோஓஓஓஒ அஞ்சுவிடம் சொல்லி விடுங்கோ பிஸ் பாபகியூ, கிரில்ட் சுண்டெலி இப்பூடிக் கொடுக்கச் சொல்லி.. தண்டனையை ஹா ஹா ஹா:)

      Delete
  10. வோட் போட்டாச்சு ..மைனஸா ப்ளசான்னு தெரிலா :))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ... உங்களை தேம்ஸ் கரையின் அந்தாஆஆஆப்பக்கமா பார்த்ததாக காலைப் பேப்பரில் படிச்சனே.. நல்ல வேளை இன்று நான் வோக் போகவில்லை:)...

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வோட் போடச் சொன்னது டப்பாப்போச்சோ:)

      Delete
  11. கோபு அண்ணா ..இன்னிக்கு போஸ்ட்ல ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கும் தெரில அதுவே எனக்கு பெரிய கவலையா இருக்கு
    உங்க கண்ல பட்டா எனக்கு காபி பேஸ்ட் பண்ணி அனுப்பிடுங்க

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நேக்கு தமிழ்ல டி ஆக்கும்:) அப்போ எப்பூடி எழுத்துப் பிழை வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்?:) எங்கிட்டயேவா?:).. கோபு அண்ணன் ஏற்கனவே ஜாமத்தில என் கவிதை படிச்சு புரூட்டலி குழம்பியிருக்கிறார்ர்:) இதில நீங்க வேற குழப்பாதீங்கோ:) அவர் கொஞ்சம் தெளிவடையட்டும்.. தெளியவிட்டுக் குழப்பலாம் ஹா..ஹா..கிக்...கிக்...கீஈஈஈஈ:))

      Delete
  12. கண்டுபுடிச்சிட்டேன் இல்லை கண்டுபுடிக்க வைக்கப்பட்டேன் :))
    ஆமா இரண்டு கவி ??? யார் கண்ணதாசனும் வைரமுத்துவுமா ??????

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கோபு அண்ணனைவிடக் குழம்பிட்டா அஞ்சு:) அதுதான் தெளிவா சொல்லியிருக்கிறேனே யாருடையது என்பதை.. இதில கண்டுபிடிப்பு வேற கர்ர்ர்:))... எங்கடா அதிராவைத் தள்ளலாம் என எல்லோரும் தவியாத் தவிக்கினம்:) தூண்டிலில் மீன்குஞ்சு:) மாட்டும் ஆனா தண்ணி மாட்டாது:)(நான் என்னைச் சொன்னேனாக்கும்)... ஸ்ஸ்ஸ்ஸ் ரொம்பக் கதைச்சிட்டனா.. மீ றன்னிங்:) மியாவும் நன்றி அஞ்சு.

      Delete
    2. அஞ்சூஊஊ... மேலே கம்பனில் பெண்மை.. முழு வீடியோவும் பார்க்காட்டில்.. இரவைக்கு.. பாம்ம்பூ, பல்லி, பூரான்... மூட்டை கட்டி அனுப்புவேன்:)..

      Delete
  13. என்னமா .. நீங்க கவிதை, படம் னு போட்டு இப்படி கலாய்க்கிறீங்கோ.தமிழ்மணம் பயனர் பெயரே தப்பாம்.. மறந்து போச்சு..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா வாங்கோ ஆசியா வாங்கோ.. அதிரா காணாமல் போனதால எல்லோரும் தமிழ்மண ஐடி மறந்திட்டீங்க.. நானும்தேன்.. பின்பு 2 நாளா போராடிக் கண்டுபிடிச்சேன்ன்... எனக்காக தேடிக் கண்டுபிடிச்சு.. அடுத்த தடவையில் இருந்து வோட் போட வேண்டிக்கொள்கிறேன்:) மிக்க நன்றி ஆசியா.

      Delete
  14. பூஸக்கா, கமெண்ட் போடவே திக்கி திணற வேண்டி இருக்கு, இதில நான் தமிழ்மணத்துக்கு எங்க போவன்? அதெல்லாம் என்னன்னு கூட மீக்கு தெரியாது..எனக்கு எக்ஸப்ஷன் குடுக்கோணும் நீங்க!

    அப்புறம் 2 கவிதையுமே நைஸ்..முதல் இருப்பது கேள்விப்பட்டது போல நினைவிருக்கு. :) 2வது 100% ரைட்...சும்மா அவரவர் வழியப் பாத்துக்கொண்டு போகவேண்டியதுதான்..!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மகி வாங்கோ... இப்போ புரியுதா? நீங்க ஜாலியா இருக்கும்போது நாங்கல்லாம் எவ்ளோ கஸ்டப்பட்டோம் என:) இப்போ எங்கள் குட்டீஸ் வளர்ந்திட்டாங்க.. ச்ச்சோ நாங்க ஜாலியாகிட்டோம்ம் நீங்க கொஞ்சக்காலம் திக்கித் திணறுங்கோ.. எல்லாம் இன்பமே ஹா ஹா ஹா... அதுசரி அப்போ நீங்க வோட் போட மாட்டீங்க????

      எல்லோரும் இப்பூடிச் சொன்னா அதிரா எப்போதான் தமிழ் மணத்தில மகுடம் சூட்டுறதாம்ம்ம்ம்ம்?:).. மிக்க நன்றி யெல்லோ ஃபிளவர்:).

      Delete
  15. பூஸ் ரேடியோவிலிருந்து இன்னும் நிறையக் காவி வந்து இங்கு பகிர வேண்டுகிறேன். :-)

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ்வ் வாங்கோ றீச்சர் வாங்கோ.. அப்படி என்னதான் இத்தனை வருசமா உந்த பைனாக்குலேர்ஸ் ஐ வச்சுப் பார்க்கிறீங்க?:)...

      சொல்லிட்டீங்களெல்லோ பாருங்கோ எல்லோருக்கும் ரேடியோவே வெறுக்கிறமாதிரிப் பண்ணிடுவேன்ன்ன்:))
      மிக்க நன்றி இமா... திரும்படியும் வாங்கோ.

      Delete
  16. நீங்கள் ரசித்து எழுதிய கவிதைகளை நானும் ரசித்தேன் அதிரா! அந்த துப்பாக்கி சுடும் பூனை! எங்கேயிருந்து இப்படி கிடைக்கிறது உங்களுக்கு?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. மிக்க நன்றி. ஹா ஹா ஹா அது கூகிள் அங்கிளிடமிருந்துதான்..:)

      Delete
  17. முதல் கவிதை கலைஞரா எழுதினார்? எனக்கென்னமோ அவர் ரொம்ப தெளிவா அனுபவிச்சுதான் எழுதிருக்கார். ;-) கடைசி மூணு வரி மட்டும் உலகம் தப்பா நினைக்க கூடாதுனு எக்ஸ்ட்ரா அட் பண்ணிருக்காரு என்று நினைக்கிறேன். :-)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா வாங்கோ கவிக்கா, எதுக்கும் கொஞ்ச நாளைக்கு தலைமறைவாவே இருங்கோ:) மிக்க நன்றி..

      Delete
  18. ஐயோ அதிரா கவிதைகள் வாவ்!! ரொம்பவே ரசித்தோம்....அது சரி இனி ஊசிக் குத்து வாங்காம ஓட்டு போட்டுடரொம்....இப்ப கொஞ்சம் அஜீஸ் பண்ணிகணும் ஓகேயா...

    கீதா: நானும் இலங்கையில் வளர்ந்தவளாக்கும். 3 ஆம் வகுப்பு வரை தலைநகர் கொழும்புவில் இருந்தேன். அப்புறம்தாம் இந்தியாவில் பிறப்பிடம் இந்தியா என்பதால்...எல்லோரும் இங்கு வந்துவிட்டார்கள் ஆனால் எனக்கு அங்கு ரொம்பப் பிடித்தது...உண்மை. அதனாலேயே யாரேனும் இலங்கை பற்றி எழுதினால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கு இருந்தபோது ராஜேஸ்வரி ஷண்முகம் நல்ல பழக்கம் உண்டு. நாங்கள் இருந்த வீட்டிற்கு எதிரிலெதான் இருந்தாங்க...அவங்களுக்கு நான் செல்லம்...இப்போது அவங்களெ இல்லை...அவங்க வானொலியில இருந்தப்போ நான் பாடிருக்கேன் கதை சொல்லிருக்கென்...நினைவுகள்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ துளசி அண்ணன் , கீதா .... ஐயோ அதிரா பார்த்து என்னாச்சோ ஏதாச்சோ என பதறிப் போயிட்டேன்ன் நல்லவெளை எனக்கொண்ணும் ஆகல்ல:).
      ஓ கீதா நீங்க கொழும்பில் இருந்தீங்களோ? அதுவும் அவங்க வீட்டுக்குப் பக்கத்தில??? முன்பு ரேடியோவில் அவவும் அப்துல் ஹமீத்தும் தானே பேமஸ்... மிக்க நன்றி கீதா.

      Delete
  19. இந்த போஸ்ட்டுக்குப் பிறகுதான் நீங்கள் எங்கள் பக்கம் வந்தீர்களோ? சரியாய் நினைவில்லை. அதனால்தான் நான் இங்கு வரவில்லை போலும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      நான் உங்கள் பகம் வந்தது அஞ்சுவின் கதைக்கு.. நொவெம்பர் 21 ம் திகதி... ஆனா ஜனவரியில் தான் மீண்டும் போஸ்ட் எழுத ஆரம்பிச்சேன் அதனால நீங்க கவனிக்கவில்லை அப்போ.. நோட்டிபிகேசன் எதுவும் உங்களுக்கு இல்லை அப்போ.. எனவே என் போஸ்ட் தெரிய நியாயம் இல்லை:)..

      Delete
    2. வரலாறு முக்கியம் மியாவ் :)
      மல்ட்டி கதை வெளிவந்த தேதி ..Tuesday, December 20, 2016
      ஆனா அதுக்கு முன்னாடியே உங்களை ஒரு மாசமா மிரட்டியபடி இருந்தேன் வலைப்பக்கம் வரச்சொல்லி :)

      Delete
    3. ஓ நான் உங்கள் பேர்த்டேக்கு முன்பு என நினைச்சிருந்தேன்:)..

      Delete
  20. கலைஞர் எழுத்துகள் ஒருமாதிரிதான் இருக்கும்! பர்வீன் சுல்தானா கவிதை படிக்கும்போது இன்னொன்று நினைவுக்கு வருகிறது.

    உறவுகள் கனவுகளைத் தருகின்றன. பிரிவுகள் நினைவுகளை!

    ReplyDelete
    Replies
    1. //உறவுகள் கனவுகளைத் தருகின்றன. பிரிவுகள் நினைவுகளை//

      ஆஹா சூப்பர்ர்.. நச்சென ஒரு வரியில்ல்...

      Delete
  21. காதல் - பிரிவு பற்றி நான் முன்பு பகிர்ந்த ஒன்று :

    காதலித்து மனம் புரிந்த அவர்கள் மணமுறிவில் பிரிந்தபோது நண்பன் கேட்டான் "என்ன குறை?"

    "காதல்தான்" சோகத்துடன் சொன்னான் பிரிந்த காதலன்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் குட்டிக் கவிதை நன்றாக இருக்கு.

      Delete
  22. பிரிந்த காதல் பற்றி முன்பு ஃபேஸ்புக்கில் ஒரு கவிதை பகிர்ந்த்திருந்தேன். அது சரியாய் நினைவில்லை. அதனால் இப்போது அந்த வரிகளை மாற்றிப்போட்டு புதிதாய் ஒன்று.

    நீயும் நானும்
    பிரிந்ததை அறியாமல்
    இன்னும்
    நமக்காகக் காத்திருக்கின்றன
    நாம்
    சந்தித்த இடங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆ என்ன சூப்பர் ஹைகூ.. உண்மையில் இப்படியான 2,3 வரிக் கவிதைகள்தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.. அப்படியே நச் என இருக்கு..

      மிக அருமை... நீங்கள் கவிஞர் தான்ன்.. இல்லை எனச் சொல்லாலும் விடமாட்டோம்ம்:)) ஹா ஹா ஹா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.