நல்வரவு_()_


Sunday, 23 April 2017

கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும்:)

ப்போ சந்திரமண்டலம் போய் முடிஞ்சு செய்வாய்க்கிரகத்துக்கு ஆட்கள் போகத் தொடங்கியிருப்பதாக அரசல் புரசலாக அறிந்தேன்.. அப்பூடித்தான் புளொக் எழுதுவதிலிருந்து கொஞ்சம் மூவ் ஆகி... மின்னூல் வெளியீட்டில் நம்மவர்கள் சிலர் எழுத ஆரம்பித்திருப்பது.. ஆச்சரியமான, மகிழ்ச்சியான செய்தி.
னக்கு கொம்பியூட்டரில் இருந்து கதை படிப்பது, படம் பார்ப்பது எதுவும் பிடிக்காது, இருப்பினும் என் பக்கம் வருவோர் , மின்னூல் வெளியிடும்போது, அதில் ஒன்றாவது வாங்கிப் படிக்கோணும் என மனதில் எண்ணியிருந்தேன், ஆனா அதை முந்தி, கோபு அண்ணனிடமிருந்து இலவசமாக மின்ன்னூல்களை பரிசாகப் பெற்றோர் வரிசையில் என் பெயரும் இடம் பிடித்தமையால்... எனக்கும் இரண்டு மின்னூல்களை பரிசாக அனுப்பியிருந்தார். மிக்க நன்றி கோபு அண்ணன்.

னா அவர் அனுப்பியதை போய் ஓபின் பண்ணிப் பார்க்கவே ஓராண்டு ஓடி... பின்னர் முதல் கதை படிக்க ஈராண்டு ஓடி.. படிச்சு முடிக்க...  செவ்வாய்க் கிரகத்துக்குப் போகும் காலத்தைக் காட்டிலும் அதிக காலம் எடுத்து விட்டது.. ஏன் தான் அதிராவுக்கு அனுப்பினமோ எனத் திட்டிக்கூட இருப்பார்:) கர்:)... சரி சரி ஓவரா அலட்டாமல் விசயத்துக்கு வாறேன்ன்.. சோட் அண்ட் சுவீட்டா என் வர்ணனையை முடிச்சுக் கொள்கிறேன்.
துக்கு முதல், புஸ்தகா நிறுவனத்தினர்தான், இப்படி மின்னூல்களை வெளியிடுகின்றனர், அப்போ நாம் அங்கு போய் நமக்கான ஒரு மெயில் + பாஸ்வேர்ட் கொடுத்து உள் நுழைந்தால், இலவசமாக நமக்கு தந்திருக்கும் புத்தகங்கள் அங்கே நம் bookshelf இல்அடுக்கியிருக்கும்.. இப்படி..

சின்னச் சின்னக் கதைகள்
மின்னூல் எனும் பெயருக்கேற்ப மின்னல் வேகத்தில் எல்லாம் ஓபின் ஆகிறது. எனக்கு கோபு அண்ணன் அனுப்பிய முதலாவது புத்தகம்.. சின்னச் சின்னக் கதைகள். இதில் மொத்தம் 20 கதைகள் உள்ளன..
முதலாம் பக்கத்தைத் திறந்தால் .. பொருளடக்கம் இப்படி இருக்கிறது..

வ்வொன்றும் மிகவும் குட்டிக் குட்டிக் கதைகள் என்பதனால், போரிங் இல்லாமல் படிக்க முடிஞ்சுது..

ம் விருப்பத்துக்கேற்ப எழுத்தை பெரிசாக்கியோ சின்னனாக்கியோ படிக்கும் வசதியும் உள்ளது.. இதில் பொருளடக்கத்தைப் பெரிசாக்கிக் காட்டியிருக்கிறேன்...

இங்கு ஒரு சிறுகுறிப்பு:
///ஜும் வசதி ஒன்று ஒரேயடியாக வருகிறது.  இல்லாவிட்டால் பழைய நிலைக்குச் செல்கிறது.  தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கிக் கொள்ளும் வசதி இருந்தால் நலம்./// இது சகோ ஸ்ரீராம் தன் புத்தக விமர்சனத்தில் கொடுத்திருந்தார்.  அதனால எனக்கு ஃபிரீ புக் கிடைச்சதும் முதல் வேலையா அதையே செக் பண்ணினேன், இருக்கிறது..ஸ்ரீராம் அதைக் கவனிக்கவில்லைப் போலும்.

இங்கே மேலெ இருக்கும் படத்தில், ஸூம் பண்ணிய எழுத்துக்களின் மேல்(முதலில் ஸூம் பண்ண வேண்டும்), உற்றுப் பாருங்கோ... ஒரு பக்கம் மைனஸ் மற்றைய பக்கம் பிளஸ் அடையாளம் இருக்கிறது.. நடுவில் நீள் வட்டம் போல இருக்கு.. நீள் வட்டத்துள்ளே ஒரு குட்டி வட்டம் இருக்கு... அந்த வட்டத்தை, கேசர் மூலம் மூஃப் பண்ணி நமக்கு ஏற்ற சைஸில் எழுத்துக்களை வைத்துப் படிக்கலாம். 

இதில் கதையை விமர்சிக்க நான் விரும்பவில்லை, விரும்புவோர் போய்ப் படித்துப் பாருங்கோ, அத்தனை கதைகளும்... ஒவ்வொரு வித உற்சாகமும் நகைச்சுவையும் கலந்தவையாக இருக்கு.. அவற்றுள் என்னைக் கவர்ந்த சில கதைகள்...
4. பகற்கொள்ளை.. வித்தியாசமான சிந்தனை..
6. IQ Tablets  .. தலைப்பே வித்தியாசமாக இருக்கே என படித்தால், இட்லிக்குப் பெயர் வைத்திருக்கிறார் இப்படி.
10. புத்திசாலியான மனைவி.. சோகம் ததும்ப படிக்க வைத்து முடிவில் அட இவ்ளோ கெட்டிக்காரியா? அப்போ அழுததெல்லாம் நடிப்போ என எண்ண வைத்திட்டார்... தலைப்பை கொஞ்சம் நகைச்சுவையாக வைத்திருக்கலாமோ என எண்ண தோன்றியது.
18. கனி கிடைக்கும்வரை காத்திருப்போம்... இது ஒரு ஆப்பிளை வைத்து, பெரிய படிப்பினையையே உணர்த்தியிருக்கிறார்.. ஆனா ஒன்று அடிக்கடி “கியூ வரிசை” எனப் பாவித்திட்டார் கதையில்:).. கியூ என்றாலே வரிசைதானே?:) ஹா ஹா ஹா.
சுபம் _()_
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 குட்டியூண்டுக் கதைகள்..
இது அடுத்த புத்தகம், இதில் மொத்தம் பத்துக் கதைகள் உள்ளன
தில் பத்துக் கதைகளும், நகைச்சுவையும் கிண்டலும் கலந்தவையே.. தலைப்பை “குட்டியூண்டுக் கதைகள்” என வைத்தமைக்குப் பதில் “சிரிக்க சிரிக்கப் படிக்கலாம் வாங்கோ” என ஏதாவது தலைப்புக் கொடுத்திருக்கலாமோ என எண்ணுகிறேன்.. அதிலும்  4 வது கதை.. திருமண மலைகளும்... மாலைகளும்... வாய் விட்டுச் சிரித்திட்டேன்

5 வது கதை.. பெயர் சூட்டல்...    இண்டவியூ அழைப்பிதள் வரும் முன்பே, வேலை கிடைத்துவிட்டது போல எண்ணி, வேர்க் போக உடுப்பு வாங்குவோர் போல இருக்கிறது கதை.

னக்கு இப்படி இலவசமாகக் கிடைத்த புத்தகத்தை மட்டுமே படிக்காமல், ஒன்றாவது விலை கொடுத்து வாங்கிப் படிச்சு, இத்தோடு விமர்சனமும் செய்யோணும் என எண்ணியிருந்தேன், ஆனா முடியல்ல.. இதைப் படிச்சு விமர்சனம் எழுதவே இவ்ளோ நாட்கள் ஆச்சு.. அதனால இன்னொன்று வாங்கும் எண்ணத்தை இப்போதைக்கு விட்டு விட்டேன்... பின்னாளில் நேரம் கிடைக்கையில் முயற்சிக்கிறேன். மீண்டும் நன்றி கோபு அண்ணன்.
======================================_()_======================================
ந்த புஸ்தகா நிறுவனத்தினர், புத்தகத்தின் பெயரை மட்டும் போடுவதோடில்லாமல், உள்ளே என்ன என்ன இருக்கிறது எனும் பொருளடக்கத்தையும் வெளியே காட்டினால், வாங்கிப் படிப்போருக்கு இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன்.. இது உள்ளே என்ன இருக்கும் / எத்தனை கதைகள் இருக்கு... என்றே தெரியாமல் இருக்கு.

ஊசி இணைப்பு:-

135 comments :

  1. முதலில் மையை வச்சிட்டேன் :) இரண்டாம் வாக்கு எனது ..இதோ எப்பவும் போல ரிவர்ஸ் ஆர்டரில் வருகிறேன் :) பின்னூட்டமிட
    ஹாஹ்ஹா :) ஊசி இணைப்பு அழகு .புன்னகை எப்பவுமே அழகுதான் ..அதிலும் நம்மால் நாலு பேர் சந்தோஷப்படறாங்கன்னா நல்லாவே சிரிச்சி வைப்போம் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ...
      ///இரண்டாம் வாக்கு எனது//
      ஆஹா இது என்ன புதுவித வோட்டா இருக்குமோ?:).. ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு.

      முதலாவதா வந்தாலும் பின் கதவாலயே உள்ளே வருவேன் என அடம் புய்க்கிறீங்க... சரி சரி இந்தாங்கோ இதை தன் சார்பா உங்களுக்குக் கொடுக்கச் சொன்னார் கோபு அண்ணன், ஆனா இதற்கான பணத்தை இப்பவே என் எக்கவுண்டுக்கு அனுப்பி வைப்பேன் எனவும் உச்சிப் பிள்ளையார் கோயில் கோபுரக் கலசத்தில் அடிச்சு சத்தியம் பண்ணிட்டார் நேற்றே..:)..
      [im]https://flowerstodubai.com/media/catalog/product/cache/1/image/9df78eab33525d08d6e5fb8d27136e95/2/0/201539134328733_.jpg[/im]

      Delete
  2. //அதிலும் 4 வது கதை.. திருமண மலைகளும்... மாலைகளும்... வாய் விட்டுச் சிரித்திட்டேன்//

    ஹையோ ஸ்கொட்லான்ட் போலீஸ் உடனே போங்கோ போய் சிரிக்கிற மியாவை பிடிங்க :) இந்த மியாவ் சிரிச்ச சிரிப்பால் நாடு கடகடன்னு ஆடி நடுங்குது

    ReplyDelete
    Replies
    1. என்னாது நாடே ஆடுதா? இல்ல இல்ல அது என் சிரிப்பால இல்ல.. அது நடுச்சாமத்தில கோபு அண்ணன் திடுக்கிட்டு முழிச்சு ஓடிவந்தாரா அதனாலயாத்தான் இருக்கும்:) ஹா ஹா ஹா:)..

      Delete
  3. //இது உள்ளே என்ன இருக்கும் / எத்தனை கதைகள் இருக்கு... என்றே தெரியாமல் இருக்கு.//
    புஸ்தகா நிறுவனத்தினர் பார்வைக்கு யாரவது கொண்டு செல்வார்கள் உங்கள் மதிப்புரை பார்த்து ..மின்னூல் என்றால் கண்டிப்பாக பொருளடக்கம் மற்றும் கதையின் தலைப்புக்கள் இருந்தால் தான் படிக்க வசந்தி ..சேசே வசதி பூனை கூட சேந்து டங் ஸ்லிப்பாகுது :)

    ReplyDelete
    Replies
    1. என்னாது டங்கு ஸ்லிப் ஆகுதா? சமோசா சாப்பிடல்லியே?:) சரி சரி முறைக்காதீங்க ச்ச்சும்மா கேட்டென்ன்ன்ன்:).

      யேஸ், ஒரு கதை எனில் ஓகே, இது உள்ளே குட்டிக் குட்டிக்கதைகள், வேறுசில கவிதைகள் என இருப்பனவற்றுக்கு, உள்ளடக்கம் தெரிஞ்சால்தானே ஈசி. உடுப்பு வாங்கும்போது, விரிச்சுப் பார்த்துத்தானே வாங்குறோம்ம்.. ஏன் புத்தகத்தை மட்டும் பாராமல் வாங்கச் சொல்றாங்க கர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
    2. டங் ஸ்லிப்பானால் அந்த ’வசந்தி’ ஸ்வீட் பாஸந்தி போல நல்ல ருசியோ ருசியாக இனிப்பாக இருக்கிறாள்.

      Delete
  4. //இதில் பத்துக் கதைகளும், நகைச்சுவையும் கிண்டலும் கலந்தவை//

    யெஸ் :) நான் ஆரம்ப நாட்களில் கோபு அண்ணாவின் வலையில் கதைகளை படிக்கும்போதே அங்கே பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன் ..அவர் கதைகளில் நகைச்சுவையும் பாசிட்டிவ் எண்டிங்கும் எப்பவும் இருக்கும் ..அது எனக்கும் மிகவும் பிடித்தது

    ReplyDelete
    Replies
    1. Angelin Sunday, April 23, 2017 10:13:00 pm

      //யெஸ் :) நான் ஆரம்ப நாட்களில் கோபு அண்ணாவின் வலையில் கதைகளை படிக்கும்போதே அங்கே பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன் ..அவர் கதைகளில் நகைச்சுவையும் பாசிட்டிவ் எண்டிங்கும் எப்பவும் இருக்கும் ..அது எனக்கும் மிகவும் பிடித்தது//

      மிக்க நன்றி. உண்மை. அதற்கோர் உதாரணம் இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_8942.html

      angelin November 11, 2011 at 11:16 PM
      உண்மையிலேயே non ஸ்டாப் சிரிப்பு சிரிச்சிட்டிருக்கேன்.

      :)))))

      Delete
    2. ///அவர் கதைகளில் நகைச்சுவையும் பாசிட்டிவ் எண்டிங்கும் எப்பவும் இருக்கும் ..அது எனக்கும் மிகவும் பிடித்தது///

      ஆங்ங்ங்ங்ங்ங் இது பொய்தானே?:) பிடிச்சிருந்தா உடனேயே ஓடிப்போய்ப் படிச்சிருப்பீங்களே புஸ்தகால:).. ஆவ்வ்வ்வ்வ் ஃபிஸ்ஸு சூப்பர் மாட்டி:).. அதிராவோ கொக்கோ:)...

      -------------------------------
      என்ன கோபு அண்ணன் 2011 ஆம் ஆண்டை எல்லாம் தோண்டி எடுத்து வாறீங்க.. ஹையோ முருகா எப்பூடி இப்பூடி?:).

      Delete
  5. இடைவேளையில், தொந்தியும் தொப்பையுமாக, வேஷ்டி கட்டிக்கொண்டு, கை கால் கழுத்தினில் நகை அணிந்து கஷ்கு முஷ்குன்னு, காரியமே கண்ணாயினாராக, இலையில்
    விருந்து சாப்பிடும், என்னைப்போன்ற குண்டுப் பையனை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. :)

    ReplyDelete
    Replies
    1. ///என்னைப்போன்ற குண்டுப் பையனை///

      ”அழகானவை எல்லாம் பிறர்க்குரியவை.. அழகில்லாதவை எல்லாம் நமக்குரியவை” எனத்தான் வாழப்பழகோணும்:) ஹா ஹா ஹா..

      ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) நீங்க ரவுண்டு கட்டி வாழையிலை கூட விடாம சாப்பிடறதுக்கு கோபு அண்ணா புக்ஸ் படிச்சி டயர்டானதா சாக்கு :)

    கோபு அண்ணா புக்ஸ் படிச்சா எனர்ஜி தானே கிடைக்கும் பசியே எடுக்காது குண்டு மியாவ் :)
    அப்புறம் ரசிச்சி ருசி சாப்பிடற குண்டு பாப்பா அழகு :)

    ReplyDelete
    Replies
    1. ///கோபு அண்ணா புக்ஸ் படிச்சா எனர்ஜி தானே கிடைக்கும் பசியே எடுக்காது///

      ஓ மை கடவுளே...!!! முடியல்ல சாமீஈஈஈஈஈ:) உச்சிப்பிள்ளையார் கேணியில தண்ணி இல்லாட்டிலும் பறவாயில்லை எனக் கோபு அண்ணன் குதிச்சிடப்போறார்ர்:)..

      Delete
  7. //மின்னூல் எனும் பெயருக்கேற்ப மின்னல் வேகத்தில் எல்லாம் ஓபின் ஆகிறது. எனக்கு கோபு அண்ணன் அனுப்பிய முதலாவது புத்தகம்.. சின்னச் சின்னக் கதைகள். இதில் மொத்தம் 20 கதைகள் உள்ளன..//
    ஒரு புத்தகத்தில் 20 கதைகளா !! வாவ் ..அனைத்தையும் படித்து அழகா ரசிக்கும்வண்ணம் எழுதியிருக்கீங்க ..உண்மைல முழு விவரமும் கொடுத்தா சுவாரஸ்யம் போயிடும் பட்டும் படாமலும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் இருக்க வேண்டும் விமரிசனங்கள் அதை கரீக்ட்டா செஞ்சுப்பிட்டீங்க ..
    தெய்வமே வாட் ஹாபண்ட் டு மை அழகிய தமிழ் ..நாரோடு சேர்ந்த பூவும் போலாகிடுச்சே ..மை மை நிலைமை :))

    ReplyDelete
    Replies
    1. ///தெய்வமே வாட் ஹாபண்ட் டு மை அழகிய தமிழ் ..நாரோடு சேர்ந்த பூவும் போலாகிடுச்சே ..மை மை நிலைமை :))///

      ஹா ஹா ஹா.. என் பக்கம் வருவோர்ர் சீக்கிரம் தம் தமிழை மறந்திடுவினம்:)..

      உண்மை அஞ்சு, ஓவரா சொன்னால் படிப்போருக்கும் போறிங் எல்லோ.. மிக்க நன்றி.

      Delete
  8. //அந்த வட்டத்தை, கேசர் மூலம் மூஃப் பண்ணி நமக்கு ஏற்ற சைஸில் எழுத்துக்களை வைத்துப் படிக்கலாம். //

    இதை வாசிக்கும்போது எனோ எனக்கு நீங்க செய்த cous cous பொங்கல் நினைவு வருது :) ரவுண்டா பொங்கலை வெட்டி டிஸ்ப்ளெ செயறதில உங்கள மிஞ்சிக்க யாருமில்லை :)

    ReplyDelete
    Replies
    1. அப்போ அந்த ரெசிப்பியை எங்கள்புளொக் க்கு அனுப்பட்டோ?:) அத்தோடு சகோ ஸ்ரீராம் புளொக்கை இழுத்து மூடிடுவார்ர்:) ஹா ஹாஅ ஹா:).. பாருங்கோ எல்லோரையும்போல மீ இருந்தா உங்களுக்கு நினைவு இருக்காது:) இது அதிரா கொஞ்சம் அப்பூடி இப்பூடி இருக்கிறதாலதான் உங்களால எதையும் மறக்க முடியுதில்ல:)[அதுக்காக மீ லூஸ் இல்லையாக்கும்:)கர்ர்ர்ர்]

      Delete
  9. கோபு அண்ணாவுக்கு வேண்டும் அந்த குட்டிப்பாப்பாகிட்ட இன்னொரு ரிக்வஸ்ட் ..கோபு அண்ணா மீண்டும் தனது வலையிலும் நிறைய கதைகள் எழுதணும் என்று சொல்லுங்க :)

    ReplyDelete
    Replies
    1. நான் என் ஒரு வயதில் அந்தக்குட்டிப் பாப்பா .... குண்டுப்பாப்பா போலத்தான் இருந்திருப்பேன் என எனக்குள் நினைத்து மகிழ்ந்தேன். :)

      அது நல்ல அய்ய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்ய்கா இருக்குது ! :)

      Delete
    2. ///கோபு அண்ணா மீண்டும் தனது வலையிலும் நிறைய கதைகள் எழுதணும் என்று சொல்லுங்க :) //
      அதேதான் அஞ்சு..

      Delete
  10. கியூ வரிசை ..ஹா ஹாங் :) இந்த மாதிரி நானும் எழுதியிருக்கேன் off ஆகுது அணையுது :)

    ReplyDelete
    Replies
    1. நான் தெரிந்தே எழுதுவேனே:).. கியூவரிசை.. நடுசெண்டர்.. ஹா ஹா ஹா

      Delete
  11. ஹ்ஹாஹுஹி ஹ்ஹா :)

    கண்டுபிடிச்சிட்டேன் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் :) அதென்ன செய் வாய் கிரகம் ..அது செவ்வாய் கிரகம் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா என்னா கண்டுபிடிப்பூஊ அதுக்கு என்னா ஒரு சிரிப்பூஊஊஊ:).. அது செவ்வாய்க் கிரகம் தேன்ன்ன்ன்:)

      Delete
  12. கீழேருந்து தவழ்ந்து முதல் மாடிக்கு வந்தாச்சு :)
    படம் அதான் செய்வாயை கண்டு ஆவென வாய் பிளக்கும் மியாவ் படமருமை ..
    அதைவிட கொஞ்ச நாளா சொல்லணும்னு நினைப்பேன் சொல்ல மறந்திருவேன் ..கோபு அண்ணா மின்னூலுக்கு கொடுத்த அவரது ப்ரொபைல் படம் சிரித்த முகமாக தெய்வீகமா இருக்கு அதாவது ஒருவரை பார்த்தவுடன் அவர் சந்தோஷம் நம்மை பற்றிக்கொள்ளும் அதுபோல .கோபு அண்ணா சிரிக்கும் படம் சூப்பர்ப்

    ReplyDelete
    Replies
    1. //கொஞ்ச நாளா சொல்லணும்னு நினைப்பேன் சொல்ல மறந்திருவேன் ..கோபு அண்ணா மின்னூலுக்கு கொடுத்த அவரது ப்ரொபைல் படம் சிரித்த முகமாக தெய்வீகமா இருக்கு அதாவது ஒருவரை பார்த்தவுடன் அவர் சந்தோஷம் நம்மை பற்றிக்கொள்ளும் அதுபோல. கோபு அண்ணா சிரிக்கும் படம் சூப்பர்ப்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அஞ்சு.

      அது ஏதோ அப்படி ஒன்று அமைந்துள்ளது. எனக்கும் அதில் மிகவும் மகிழ்ச்சியே.
      இதனைக் குறிப்பாக இங்கு எடுத்துச் சொல்லியுள்ள உங்களுக்கு என் கோடிக்கணக்கான நன்றிகள். [நன்றி*கோடி கோடி]

      Delete
    2. ///கோபு அண்ணா மின்னூலுக்கு கொடுத்த அவரது ப்ரொபைல் படம் சிரித்த முகமாக தெய்வீகமா இருக்கு அதாவது ஒருவரை பார்த்தவுடன் அவர் சந்தோஷம் நம்மை பற்றிக்கொள்ளும் அதுபோல .கோபு அண்ணா சிரிக்கும் படம் சூப்பர்ப்///

      எம்பெருமானேஏஏஏஏஏஏஏஏஏ... இனி யாரும் இருந்தபாடில்லயாக்கும்:).. ஹையோ சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகிடப்போகுதே முருகா:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

      Delete
  13. ஒரே ஒரு கிண்டல் பண்ணிக்கறேனே :)//இலவசமாக நமக்கு தந்திருக்கும் புத்தகங்கள் அங்கே நம் bookshelf இல்அடுக்கியிருக்கும்..//

    இதோ நானும் போய் பெரிய கூடை கொண்டுபோய் புக்ஸை அள்ளிட்டு வரேன் :) ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஆடு கத்தியைக் கொண்டு வந்து வெட்டு வெட்டு என்றதாமே:))


      சரி அள்ளிட்டு வந்து இங்கின போடுங்கோ.. இன்னொருநாள் கோபு அண்ணனின் நித்திரைக்கு உலை வச்சிடுவோம்ம்:)

      Delete
  14. அழகான இனிமையான கதைகளை மின்னூல் வடிவில் வெளிக்கொணர்ந்த கோபு அண்ணனுக்கும் மிக அருமையாக புத்தக விமர்சனம் செய்த அதிராமியாவுக்கும்வாழ்த்துக்கள் .தொடரட்டும் உங்கள் இப்பணி

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஓகே முடிவில....:)

      மிக்க நன்றி அஞ்சு... அப்பா ஸ்தானத்திலிருக்கும் கோபு அண்ணன் போன்ற பெரியவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் போது நமக்கும் மகிழ்ச்சி கிடைக்கின்றது... அதிலும் ஒரு போஸ்ட் போட்டதுக்கே கோபு அண்ணன் இப்பூடிச் சந்தோசப்படுவதைப் பார்க்க.. இன்னும் இப்படி பல விசயங்கள் செய்து மகிழ்வூட்டச் சொல்லுது மனம்.

      ///தொடரட்டும் உங்கள் இப்பணி///
      [im]http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg[/im]

      Delete
  15. சபாஷ்!

    நினைத்ததை.. நடத்தியே.. முடிப்பவள்.. எங்கட அதிரா.. அதிரா.. அதிரா !

    மூன்றாம் வோட் என்னோடது.

    பொறுமையாக ஒவ்வொரு வரியாகப் படிச்சுட்டு கடைசியாக வருகை தந்து ஏதேனும் சொன்னாலும் சொல்லுவேன்.

    குட் நைட், வித் ஸ்வீட் ட்ரீம்ஸ் அதிரா. :)

    அன்புடன் கோபு அண்ணன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன்... இந்த உங்கள் கொமெண்ட், ஏற்கனவே வந்துது போட்டேன் பப்ளிஸ் ஆச்சு, பின்னர் 2ம் தடவையாவும் அனுப்பினீங்க அதையும் போட்டேன், ஒரேமாதிரி 2 கொமெண்ட் வந்திட்டுது என ஒன்றை அழிச்சேன்ன்.. எல்லாம் போச்சு:).. பின்புதான் இது லேட்டா போஸ்ட் பண்ணப்பட்டுது.

      எனக்கு எப்பவும் வாக்கு கொடுக்க மாட்டேன், கொடுத்திட்டால் மீறாமல் செய்திடுவேன்.. மிக்க நன்றி.

      Delete
  16. //ஏன் தான் அதிராவுக்கு அனுப்பினமோ எனத் திட்டிக்கூட இருப்பார்:) //

    நோ நோ :) கோபு அண்ணாக்கு திட்டலாம் தெரியாது .ஆனா அவர் செய்யாததை நான் செய்வேன்கி என்ட்ட வாங்க ஸ்டூல் மேலேறி நில்லுங்க நங்குன்னு கொட்டறேன் :)

    ReplyDelete
    Replies
    1. ///என்ட்ட வாங்க ஸ்டூல் மேலேறி நில்லுங்க நங்குன்னு கொட்டறேன் :)//

      ஐயா சாமீஈஈ கொல வெறியோடதான் துரத்துறாபோல இருக்கே:).. நாம ஆரு? 1500 மீட்டர்ல 2 வதா வந்தேனாக்கும்:).

      [im]https://dncache-mauganscorp.netdna-ssl.com/thumbseg/9/9407-bigthumbnail.jpg[/im]

      Delete
  17. விமர்சனம் ஸூப்பர்.

    படங்கள் அழகு.

    தேவைக்கேற்ப ஜூம் செய்யும் வசதி இப்பத்து செய்திருக்கிறார்களோ! டவுட்டு. ஏனெனில் என்னுடைய அந்த புஸ்தகா கட்டுரையை அவர்கள் படித்து அவர்கள் பக்கத்தில் லிங்க் கொடுத்திருந்ததை ஜீவி ஸார் சுட்டிக் காட்டியிருந்தார். என் நேரமின்மையால் மீண்டும் சமீபத்தில் அந்தப் பக்கம் செலல்வில்லை.

    ஊசி இணைப்புக்கு முன் உள்ள குறிப்பு நல்ல யோசனை. சமயங்களில் அதுவே அட்வர்ஸ் ஆகவும் அமைந்து விடும் வாய்ப்பும் உண்டு!

    கடைசிப் படமும், செய்தியும் சூப்பரோ சூப்பர்.

    தம வாக்குப் போட்டாச்சுங்கோ.....கோ....கோ...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ,

      ///தேவைக்கேற்ப ஜூம் செய்யும் வசதி இப்பத்து செய்திருக்கிறார்களோ! டவுட்டு. //
      இருக்கலாம், நேரம் கிடைக்கும்போது போய் செக் பண்ணிப்பாருங்கோ.

      ////கோ.....கோ....கோ...///

      ஹா ஹா ஹா கோபு அண்ணன் உங்களோடு கோபமாக இருக்கிறார் என்றுதானே.. இப்பூடி 3 தடவை அவரைக் கூப்பிட்டிருக்கிறீங்க:)).. இந்த கோ கோ கோ.. உச்சிப்பிள்ளையார் கோபுர உச்சியில் அடிச்சு.. எக்கோ போய் கோபு அண்ணனுக்கு ஒலிச்சதும் நேசமாகிடுவார் அவர்:)..

      கோபு அண்ணன் நான் சொன்னது கரீட்டுத்தானே?:))

      அப்பாடா கோர்த்து விட்டிட்டேன்ன்ன்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  18. விமர்சனம் நன்று வாழ்த்துகள்

    ReplyDelete
  19. விமரிசனம் நல்லா எழுதியிருக்கீங்க அதிரா. கோபு சார் கதைகளின் தரத்தைப் பற்றிச் சொல்லவேண்டாம். அவர் ஒரு professional எழுத்தாளர்.

    "கொம்பியூட்டரில் இருந்து கதை படிப்பது, படம் பார்ப்பது எதுவும் பிடிக்காது" - ஆமாம். இப்படி கம்ப்யூட்டரிலோ அல்லது தொலைபேசியிலோ ஆழ்ந்திருப்பது, வீட்டில் உள்ள மற்றவர்களை ignore செய்வதுபோல், நம்மைத் தனித் தீவாக ஆக்கிவிடும். தொலைக்காட்சியில் பார்க்கும்போதுதான் மற்றவர்களோடு சேர்ந்து பார்க்கமுடியும். எல்லோரோடும் சேர்ந்திருக்கும் feeling இருக்கும்.

    புத்தகம் படித்ததற்கு screen shots எடுத்து proofஆகச் சேர்த்திருக்கிறீர்கள்.

    குழந்தை சாப்பிடும் படமும் அழகு. அதைப் பார்க்கும்போது, குழந்தைகள் தட்டில் சாப்பிடுவதைச் சிறுவயதில் பழகியது ஞாபகம் வருகிறது. (தட்டை, பெரிய நியூஸ் பேப்பரின் மேல் வைத்து அவங்களைத் தட்டிலேர்ந்து எடுத்து சாப்பிடப் பழகவிடுவாள் என் ஹஸ்பண்ட். இல்லைனா, தட்டைவிட, தரையில்தான் நிறைய உணவு இருக்கும்) ஊசிக்குறிப்பில் உள்ள படமும் செய்தியும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் Monday, April 24, 2017 6:29:00 am

      //விமரிசனம் நல்லா எழுதியிருக்கீங்க அதிரா. கோபு சார் கதைகளின் தரத்தைப் பற்றிச் சொல்லவேண்டாம். அவர் ஒரு professional எழுத்தாளர்.//

      அடாடா ! தன்யனானேன் ஸ்வாமீ .... மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      Delete
    2. வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ..

      //கோபு சார் கதைகளின் தரத்தைப் பற்றிச் சொல்லவேண்டாம். அவர் ஒரு professional எழுத்தாளர்.// உண்மைதான், அதுமட்டுமில்லை நம்மோடு போட்டி போட்டு பின்னூட்டங்களைப் பக்கம் பக்கமாக எழுதுவதிலும் வல்லவர்.

      ///இப்படி கம்ப்யூட்டரிலோ அல்லது தொலைபேசியிலோ ஆழ்ந்திருப்பது, வீட்டில் உள்ள மற்றவர்களை ignore செய்வதுபோல், நம்மைத் தனித் தீவாக ஆக்கிவிடும். //

      உண்மையேதான், அத்தோடு ஏதோ ஸ்கூலில் இருந்து பாடம் படிப்பதுபோலவும் ஃபீல் ஆகும்.

      Delete
    3. ///புத்தகம் படித்ததற்கு screen shots எடுத்து proofஆகச் சேர்த்திருக்கிறீர்கள்.//
      ஹா ஹா ஹா கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க:) என் சமையல் படங்களைச் சந்தேகப்படும் கோபு அண்ணன்...:), இதை சந்தேகப்பட மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையெல்லோ:) அதனால்தான் இம்முறை அவருக்கு சந்தேகமே வரவில்லை:)) ஐ மீன் வாயடைச்சுப் போயிட்டார்ர் ஹா ஹா ஹா:)..

      ///பேப்பரின் மேல் வைத்து அவங்களைத் தட்டிலேர்ந்து எடுத்து சாப்பிடப் பழகவிடுவாள் என் ஹஸ்பண்ட். இல்லைனா, தட்டைவிட, தரையில்தான் நிறைய உணவு இருக்கும்) ///

      ஓ உண்மைதான், இந்த விசயத்தில் நான் இங்கத்தைய வெள்ளைகளைப் பார்த்து சிலிர்த்துப் போவதுண்டு.. அதாவது பிள்ளைகளை தாராளமாக அளைஞ்சு சாப்பிட விட்டு.. அல்லது விளையாட்டாகட்டும் தாராளமாக கொட்டிச் சிந்த விட்டு விட்டு.. பின்பு ஒரு நொடியில் கிளீன் பண்ணிடுவார்கள்.. குழந்தைகளுக்கும் ஹப்பி.

      ஒரு மேடைப் பேச்சில் கேட்டேன், குழந்தைகள் உணவு உண்ணுவதைக் காட்டிலும் அதை பிசைந்து அளைஞ்சு சிந்தி மகிழும்போதுதான் அவர்களுக்கு அதிக புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கிறதாம்.. அதனால அவர்களை தடுக்கக்கூடாது கொட்டிச் சிந்த விட வேண்டுமாம்.

      மிக்க மிக்க நன்றிகள் உங்கள் வருகைக்க்கும் கருத்துக்கும்.. கோபு அண்ணனும் ஹப்பி ஆகிட்டார் பாருங்கோ.

      Delete
  20. நாங்களும் சில நகைச்சுவைக் கதைகளும், பிற கதைகளும் கோபு சார் அவர்களின் தளத்தில் வாசித்ததுண்டு. அதுவும் அவர் போட்டி வைத்திருந்த போது வாசித்து இடையில் முடியாமல் போனது.

    அதிரா வாழ்த்துகள் வைகோசார் தங்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. //Thulasidharan V Thillaiakathu வைகோ சார் தங்களுக்கும் வாழ்த்துகள்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      Delete
    2. வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ.. ஓ அப்படியா.. நான் அவர் போட்டி வைத்தபோதுதான் வலையுலகை விட்டுக் காணாமல் போனேன் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி.

      Delete
  21. படங்கள் அழகு அதிரா. பூசார் அழகு கேட்கணுமோ...

    குண்டு பாப்பா மனதைக் கொள்ளை கொள்ளுகிறது!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மிக்க நன்றி.. போஸ்ட்டுக்குப் பொருத்தமாக என்ன போடலாம் என மிட்நைட் வரை இருந்து தேடி.. கதையையும் படிச்சேன் ஒருநாள்:) ஹா ஹா ஹா.

      Delete
  22. மை வைச்சிட்டேன்..சாரி மொய் வைச்சிட்டேன்!!!
    ஹப்பா உண்டியல்ல விழுந்துருச்சு....
    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றி கீதா.. நானும் கொம்பியூட்டர் மூலம் கொமெண்ட் போடும்போது தவறாமல் மை வச்சிடுவேன் எல்லோருக்கும். மிக்க மிக்க நன்றிகள்.. கீதா, துளசி அண்ணன்.

      Delete
  23. #விரும்புவோர் போய்ப் படித்துப் பாருங்கோ#
    ஏன் புக் செல்புக்கு இலவசமா வரட்டும் ,படிக்கிறேன் !ஆறு மாசத்துக்குள் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ..

      ///ஏன் புக் செல்புக்கு இலவசமா வரட்டும் ,படிக்கிறேன் //
      ஹா ஹா ஹா இது நல்ல ஐடியாவா இருக்கே... உங்க பின்னால இதை நான் படுபயங்கரமா பின்பற்றுகிறேன்ன் ஹா ஹா ஹா..

      //ஆறு மாசத்துக்குள் :)// இந்த காலக்கேடுதான் எதுக்கெனப் புரியவே இல்ல:)..

      மிக்க நன்றி வரவுக்கும் வோட் க்கும்.

      Delete
  24. //கோபு அண்ணனிடமிருந்து இலவசமாக மின்னூல்களை பரிசாகப் பெற்றோர் வரிசையில் என் பெயரும் இடம் பிடித்தமையால்... எனக்கும் இரண்டு மின்னூல்களை பரிசாக அனுப்பியிருந்தார். மிக்க நன்றி கோபு அண்ணன்.//

    உலக அளவில், நான் குலுக்கல் நடத்தி, அந்தக் குலுக்கலில் விழுந்துள்ள அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டும் ஃப்ரீ கிப்ட் ஆக என் மின்னூல்களை அனுப்பி வைத்திருந்தேன். அதில் மிகவும் அதிர்ஷ்டசாலியான எங்கட அதிராவுக்கு இரு மின்னூல்கள் கிடைத்துள்ளன. :)

    இவ்வாறு இலவச மின்னூல்கள் கிஃப்ட் ஆகக் கிடைக்கப்பெற்றவர்கள் அவற்றை எப்படி ஓபன் செய்து படிப்பது என்பதே தெரியாமல் இன்னும் விழித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் எங்கட அதிரா மட்டும் புத்திசாலித்தனமா அதனை ஓபன் செய்துள்ளதும், படித்துள்ளதும், படித்ததைப் பகிர்ந்து கொண்டுள்ளதும், என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. :)

    இதன் மூலம் என் மின்னூல்களை, உலகளவில் முதன் முதலாக விமர்சனம் செய்துள்ள ஒரே பதிவர் எங்கட அதிரா மட்டுமே என்ற பேரும் புகழும் உங்களுக்குக் கிடைத்துள்ளன.

    உங்களின் இந்தச் செயலால், இன்று என் பெயரும் என் மின்னூல்களும், உலகளவில் பலருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

    அங்கே பாருங்கோ ..... ரேஷன் கடை, டாஸ்மாக் கடைபோல, ஒரே கூட்டம் கூட்டமாக க்யூவில் நின்று மக்கள் தங்கள் பணத்தைக் கட்டி என் மின்னூல்களை எப்படியும் இன்றே பெற்றுவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள் பாருங்கோ :)))))))

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... மிக்க நன்றி, அதிரா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ கோபு அண்ணன்... உலகிலேயே உண்மையான மகிழ்ச்சி எது தெரியுமோ? அடுத்தவர்களைச் சந்தோசப்படுத்திப் பார்ப்பதுதான்...

      அதிலும் நீங்கள் இப்படி மிகவும் மகிழ்ச்சியடைவது பார்த்து நமக்கும் மிக்க மகிழ்ச்சியே.

      போஸ்ட்டைப் பார்த்துவிட்டு, ஒரு சொல்ல்லில் நன்றி என சொல்லிட்டுப் போயிருந்தால் எனக்கும் பெரிசா மகிழ்ச்சி இருந்திருக்காது... இது ஏதோ பலகோடி லொட்டறி விழுந்துவிட்டதைப்போல நீங்கள் மகிழ்வதைப் பார்க்க, எனக்கு, மினக்கெட்டு இருந்து படித்து போஸ்ட் போட்டது வீண்போயிடவில்லை.. என எண்ணி மட்டட்ட மகிழ்ச்சி அடைகிறேன் நான்.

      மிக்க நன்றி கோபு அண்ணன்.

      Delete
  25. கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும்:)

    என்ற தலைப்பைப் படித்ததும் உடனே எனக்கு ’கரண்ட் ஷாக்’ அடித்து விட்டது. :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எல்லோரும் சொஃப்ட்டாவே ஷொக் குடுக்கிறாங்க உங்களுக்கு.. அதனாலதான் ஒரு சேஞ் க்காக கறண்ட் ஷொக் கொடுத்தேன்..:).

      Delete
  26. என் புகைப்படத்தை என் இரு மின்னூலுக்கும் இடையே, செண்டர் செய்து அழகாக ரெளண்டாகக் கொண்டு வந்து போட்டுள்ளது ஜோராக்கீது.

    இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் தெரியாத எனக்கு ஆச்சர்யமாகவும் உள்ளது.

    அதனை தனியாக எடுத்து எங்கட அதிரா ஞாபகமாக என்னிடம் பத்திரமாக சேமித்து வைத்துக்கொண்டு விட்டேன். :)

    ReplyDelete
    Replies
    1. நான் போடும்போதே நினைச்சேன்.. நீங்க இப்படிப் பண்ணுவீங்க என.. மிக்க நன்றி.

      Delete
  27. //ஏன் தான் அதிராவுக்கு அனுப்பினமோ எனத் திட்டிக்கூட இருப்பார்:) கர்:)... //

    நோ.. நோ.. அதிரா ..... எங்கட அதிராவைப் போய் நான் திட்டுவேனா? குட்டுவேனா?

    திட்டத்திட்ட திண்டுக்கல் .... வைய வைய வைரக்கல்

    என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

    உடனே, வைரக்கல் வைத்த, வைர மூக்குத்தி, வைரத் தோடுகள், வைர நெக்லஸ், வைர
    கை வளைகள், வைர ஒட்டியாணம் என கேட்டுப்புடாதீங்கோ. இந்த என் மின்னூல்களெல்லாம் விற்று எனக்கு ராயல்டி நிறைய கிடைத்ததும் நானே இந்த நகைகளை நீங்க கேட்காமலேயே வாங்கித் தருவதாக உள்ளேன்.

    எதற்கும் உங்கள் சைஸ் மட்டும் எனக்கு இப்போதே அனுப்பி வையுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. ///உடனே, வைரக்கல் வைத்த, வைர மூக்குத்தி, வைரத் தோடுகள், வைர நெக்லஸ், வைர
      கை வளைகள், வைர ஒட்டியாணம் என கேட்டுப்புடாதீங்கோ. இந்த என் மின்னூல்களெல்லாம் விற்று எனக்கு ராயல்டி நிறைய கிடைத்ததும் நானே இந்த நகைகளை நீங்க கேட்காமலேயே வாங்கித் தருவதாக உள்ளேன்.///

      வாங்கியதும் டெல்லுங்கோ:) என் கறுப்புப்பூனைப் படையை பாதுகாப்புக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்றேன்ன்:) ஹா ஹா ஹா.

      Delete
  28. கிஃப்ட் செய்யப்படும் மின்னூல் எவ்வாறு புஸ்தகா மின்னூல் நிறுவனம் மூலம் வந்து சேர்கிறது. அதை எப்படி லாகின் செய்து பாஸ்வேடு போட்டு ஓபன் செய்து சேமித்து வைத்து, அகட்டி அகட்டிப் பெரிதாக்கிப் படிக்கணும் என்பதை தகுந்த படவிளக்கங்களுடன் கூறியிருப்பது பலருக்கும் பயன்படகூடும்.

    இதற்காகவே தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், அதிரா.

    ReplyDelete
  29. //ஆனா ஒன்று அடிக்கடி “கியூ வரிசை” எனப் பாவித்திட்டார் கதையில்:).. கியூ என்றாலே வரிசைதானே?:) ஹா ஹா ஹா.//

    நறுக்குன்னு நடுமண்டையில் [ நடு-செண்டரில் :) ] ஓங்கி ஒரு குட்டு குட்டிவிட்டீர்கள். ஆஹ்ஹாஹ்ஹா. குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட்டுள்ளது மகிழ்ச்சியே. அந்த என் லிஸ்ட்டில் காட்டப்படாத வைர மோதிரம் ஜாக்கிரதை, அதிரா.

    விமர்சனம் என்றால் இப்படித்தான் குறை/நிறைகளைச் சொல்லி எழுதணும். வெரி குட்.

    ReplyDelete
    Replies
    1. டாங்ஸ்ஸ்ஸ்:). இன்னொரு பிழை பார்த்தேன், கதையில் தலைப்பிலேயே உள்ளது.. சொல்ல வேண்டாம் என விட்டேன்ன்..

      “கனி கிடைக்கும்வரைக் காத்திருப்போம்”... வரை.. எனத்தான் வரோணும்.. க் வந்திருக்கக்கூடாது.

      இதுக்குத்தான் நான் அன்றும் பின்னூட்டத்தில் சொன்னேன், அவசர அவசரமாக நிறைய செய்து முடிக்கோணும் என எண்ணிடாதீங்கோ.. மெதுவா பொறுமையா, புரூஃப் றீடிங் 2,3 முறை செய்தபின்பே மின்னூலாக்க அனுமதியுங்கோ.. ஏனெனில் மின்னூல் என்பது...
      நாம்கூட ஒருநாள் இல்லாமல் போகலாம்.. மின்னூல் இனி இல்லாமல் போகாது... அதனால செய்யும்போது நல்லபடி ரைம் எடுத்துச் செய்தால் நல்லதே..

      Delete
  30. ஆஹா...இங்கூட்டு இன்னா நடக்குது..எங்கட குருஜி எப்பக்கிம் அதிராம்பட்டினம் அதிரானு பொலம்பிகிட்டே( ஒறங்கயிலகோட)... இருந்துகிடுவாக. அதான் இங்கூட்டு வந்துபிட்டன்லா.அதிராம்பட்டினம் அவுகலா எங்கட குருஜி பத்தி இன்னா சொல்லினாகனு பாக்கதாவல. குருஜியோட கதைகளபத்திலா சொல்லிகினேனாக. ஏதோ மின்னூலு பின்னூலுனெல்லாம் சொல்லினாக. ஏதுமே வெளங்கிகிடலியே ஏலலே. பின்னணியும் படங்கல்லாம் சூப்பராகீது. எங்கட குருஜி அளகா சிரிப்பாணி பண்ணுறாக. குட்டி புள்ள எம்பூட்டு அளகா சோறு துன்னுது. கொள்ள அளகு.

    ( குருஜி.. ஓடிவாங்க. நானு இங்கூட்டு சொல்லிகினது ஆருக்குமே வெளங்கிகிடலியே கடி ஏலாது. ) நீங்க வந்து சொல்லிகினா அல்லா பேத்துக்கும் வெளங்கிகிடலியே கடி ஏலும்

    ReplyDelete
    Replies
    1. mru Monday, April 24, 2017 1:37:00 pm

      வாங்கோ முருகு, வணக்கம்மா. அங்கு என் பதிவுப்பக்கம் காணுமே எனத் தேடிக்கிட்டு இருந்தேன். இங்கன வந்துட்டீகளா ! :) வெரி குட்.

      தமிழின் தனிப்புலமை வாய்ந்த + எல்லோருக்குமே மிகச் சுலபமாகப் புரியும் பேச்சுத்தமிழில் பல டாக்டரேட் பட்டங்கள் வாங்கியுள்ள உன்னைப்பற்றியும், இந்த அதிரடி (அதிராம்பட்டினம் அல்ல) அதிரா பற்றியும் ஏற்கனவே நேற்றே என் பதிவு ஒன்றின் பின்னூட்டப்பகுதியில் எழுதி அல்லாப் பேருக்கும் விளங்கிட ஏலுமாறு செய்துள்ளேன். இதோ அதற்கான இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_21.html

      அதில் உள்ள மிக முக்கியமான மேட்டர்கள் இதோ:

      வை.கோபாலகிருஷ்ணன்April 23, 2017 at 10:27 PM

      கோபு >>>>> ஞா. கலையரசி (2)

      இங்கு வருகை தருவோரில் பலரும் என் மீது அதிக உரிமை எடுத்துக்கொண்டு, சொந்த உறவினர்கள் போல மிகவும் பாசமாகப் பழகி வருபவர்கள்.

      அவர்களின் பின்னூட்ட எழுத்துக்களும், அவர்களுக்கான என் பதில்களும் தங்களுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கக்கூடும்.

      இதில் (1) லண்டனில் உள்ள எங்கட அதிராவும் (2) மஸ்கட்டில் உள்ள மின்னல்-முருகு என்பவளும் தமிழ் மொழியில் (அதுவும் கொச்சையான பேச்சுத்தமிழில்) பல டாக்டரேட் பட்டம் வாங்கியுள்ளவர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரிய எனக்கே பல ஆண்டுகள் ஆனது. அதனால் நீங்களும் மிரண்டு விடக்கூடாது எனக்கேட்டுக்கொள்கிறேன். :))))))

      முருகு பற்றி அறிய இதோ என் பதிவு: https://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html

      அடுத்து என் மீது மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு, ப்ரேம பக்தியுடன் பாச மழை பொழிபவர்கள் (1) ’பூந்தளிர்’-ராஜாத்தி-ரோஜாப்பூ (2) ’ப்ராப்தம்’-சாரூஊஊஊ (3) ’ஹாப்பி’க்குட்டி காயத்ரி (4) ஷாமைன் பாஸ்கோ மேடம் (5) ’சிப்பிக்குள் முத்து’-முன்னா-மீனா-மெஹர் மாமி (6) ஜெயந்தி ஜெயா (7) ஜெயஸ்ரீ ஷங்கர் (8) ஆச்சி (9) அஞ்சூஊஊஊ (10) மஞ்சூஊஊ போன்றவர்கள். இதில் மேலும் பலர் பெயர்கள் அவசரத்தில் என்னால் இங்கு குறிப்பிட்டுச்சொல்ல விடுபட்டிருக்கலாம். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக !

      >>>>>

      Delete
    2. குருஜி கோபு >>>>> முருகு (2)

      //ஆஹா...இங்கூட்டு இன்னா நடக்குது..//

      நம் ‘முன்னா பார்க்’ போலவே, நம் வழக்கம்போலவே கும்மியும் கோலாட்டமும் மட்டுமே இங்கும் இன்று நடக்கிறது, முருகு. அங்கு வரும் நம் ஆட்கள் வேறு ஒரு செட். இங்கு வரும் ஆட்கள் வேறு ஒரு செட். அதுதான் வித்யாசம்.

      //எங்கட குருஜி எப்பக்கிம் அதிராம்பட்டினம் அதிரானு பொலம்பிகிட்டே (ஒறங்கயிலகோட)... இருந்துகிடுவாக. அதான் இங்கூட்டு வந்துபிட்டன்லா. அதிராம்பட்டினம் அவுகலா எங்கட குருஜி பத்தி இன்னா சொல்லினாகனு பாக்கதாவல.//

      அதிரடி அதிராவை அதிராம்பட்டினம் அதிராவாக ஆக்கிப்பூட்டிங்களா, முருகு. அதுவும் நல்லாத்தான் கீதூஊஊஊஊ. ஆனால் அதிராம்பட்டினம் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ளது. இவங்க இப்போ இருப்பது லண்டனில்.

      ’ஒறங்கயிலகோட’ ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! உங்கள் இருவரையும் நினைத்து நினைத்து எனக்கு நித்திரையே போச்சு .... பிறகு எப்படி ’ஒறங்கயிலேகோட’ என்று சொல்லலாம்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். :)

      >>>>>

      Delete
    3. குருஜி கோபு >>>>> முருகு (3)

      //குருஜியோட கதைகளபத்திலா சொல்லிகினேனாக. ஏதோ மின்னூலு பின்னூலுனெல்லாம் சொல்லினாக. ஏதுமே வெளங்கிகிடலியே ஏலலே.//

      எனக்கும் ஒன்னுமே வெளங்கிக்கிட ஏலலை முருகு.

      //பின்னணியும் படங்கல்லாம் சூப்பராகீது.//

      ’அதிலே ஒன்னும் கொறச்சலில்லை. ஆட்டுடா பூசாரி’ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்கோ. அதுபோல பின்னணியும் படங்களும் சூப்பராவே போடும் இந்த அதிராப்பொண்ணு.

      (தன்னை மிகவும் அடக்கத்துடன் ஸ்வீட் சிக்ஸ்டீன் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுவாங்கோ - அதனால் மட்டுமே அதிராப்பொண்ணுன்னு சொல்லி குஷிப்படுத்தியிருக்கேன். நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காதே, முருகு)

      >>>>>

      Delete
    4. குருஜி கோபு >>>>> முருகு (4)

      //எங்கட குருஜி அளகா சிரிப்பாணி பண்ணுறாக.//

      அதைப்பார்த்ததும் உனக்கும் சிரிப்பாணி பொத்துக்கிச்சா?

      [’சிரிப்பாணி பொத்துக்கிச்சு’ என்பது எங்கட முருகுவின் கொப்பி வலது (Copy right) வார்த்தை அதிரா. நீங்க மிரண்டு போய் விடாதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்.]

      //குட்டி புள்ள எம்பூட்டு அளகா சோறு துன்னுது. கொள்ள அளகு.//

      ’அழகு’ போய் ’அய்ய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்கும்’ போய் ’அளகு’ என ஆகிவிட்டதா? சபாஷ் டா முருகு. டமில் வால்க ! :)

      >>>>>

      Delete
    5. குருஜி கோபு >>>>> முருகு (5)

      //(குருஜி.. ஓடிவாங்க. நானு இங்கூட்டு சொல்லிகினது ஆருக்குமே வெளங்கிகிடலியே கடி ஏலாது.) நீங்க வந்து சொல்லிகினா அல்லா பேத்துக்கும் வெளங்கிகிடலியே கடி ஏலும்.//

      வந்துட்டேன். ஏற்கனவே இங்கு வருவோருக்கு அதிரா சொல்வது எதுவும் சுலபத்தில் வெளங்கிக்கிடவே ஏலாது. கஷ்டப்பட்டு அட்ஜஸ்ட் செய்துகொண்டு போவார்கள். இப்போ நீ வேறு இங்கு வந்துட்டாயா? சு-த்-த-ம் !

      >>>>>

      Delete
    6. குருஜி கோபு >>>>> முருகு (6)

      எங்கட முருகு பற்றி சில வரிகள் (இங்கு வருகை தந்துள்ளோருக்கு ஓர் தகவலுக்காக மட்டுமே)

      இந்தப்பெண்ணின் ஒரிஜினல் பெயர்: மெஹ்ருன்னிஸா. என்னைப்போல மிகச் சாதாரண ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண். இவளுக்கு நான் வைத்துள்ள செல்லமான பெயர்: முருகு. இவள் என்னை எப்போதும் அழைப்பது: குருஜி என்று மட்டுமே.

      என்னுடன் இவளுக்கு நட்பான பிறகு, இவளுக்கான என் பிரத்யேக பிரார்த்தனைகளால், இவள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

      யாருமே சற்றும் எதிர்பாராத நிகழ்வாக 03.07.2016 அன்று இவளுக்கு மிகப்பெரியதோர் இடத்தில் திருமணம் நடந்தது. கோடீஸ்வரரான மாப்பிள்ளை இவளைக்கொத்திக்கொண்டு, மஸ்கட் போய் விட்டார். அன்று முதல் இவளும் மஸ்கட்டில் ஹாப்பியாக செட்டில் ஆகி விட்டாள்.

      அதற்கு முன்பு இருந்த முருகுவின் ஏழ்மை நிலையை அவளே சொல்லி நான் வெளியிட்டுள்ள, மிக உருக்கமான ‘நேயர் கடிதம்’ என்ற பதிவினில் படித்துப் பாருங்கோ. இதோ அதன் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html

      அதில் அவள் தன் கைப்பட எழுதியுள்ள கடிதாசிப் பகுதியும், அதனை பிறருக்குப் புரியும் வண்ணம் மெருகூட்டி நான் வெளியிட்டுள்ள பகுதியும் சேர்ந்தே இருக்கும்.

      2015-ம் ஆண்டு என் வலைத்தளத்தினில் நான் நடத்திய 100% பின்னூட்டமிடும் போட்டியில் கலந்து கொண்டு ரூ. 1000 பரிசுக்குத் தேர்வானவள் இந்த முருகு. அதுபற்றிய வெற்றி அறிவிப்பு இதோ இந்தப் பதிவுகளில் என்னால் மிகச் சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன:

      http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

      http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_21.html


      இந்தப்பதிவினில் அதிரா காட்டியுள்ள அழகான இரு குழந்தைகள் போல நம் முருகுவுக்கும் கூடிய சீக்கரம் பிறக்க மனதார வாழ்த்துகிறோம். :) :)

      அன்புடன் குருஜி கோபு

      Delete
    7. அதிரா வந்தா பிளாக் அதிரும் மெஹ்ருன்னிஸா வந்தா கலகலன்னு இருக்கும் :) தெரியும் கோபு அண்ணா முருகு விமர்சனப்போட்டியில் வெற்றி பெற்றப்ப்போ உங்க ப்லாகில் பார்த்தேன் ..குழந்தை போல என்ன ஒரு சந்தோஷம் கடக்கடான்னு சிரிக்கிற மாதிரியே இருக்கும் மெஹருன்னிசாவின் பின்னூட்டங்கள்

      Delete
    8. @Angelin

      //குழந்தை போல என்ன ஒரு சந்தோஷம் கடக்கடான்னு சிரிக்கிற மாதிரியே இருக்கும் மெஹருன்னிசாவின் பின்னூட்டங்கள்//

      குழந்தையேதான். மிகவும் நல்ல பொண்ணு. தன் மெயில்கள் மூலம் என்னையே
      மிகவும் வருந்திக் கண் கலங்க வைத்தவள். நான் அவளுக்கு எவ்வளவோ ஆறுதல்கள் சொல்லி, நம்பிக்கை அளித்து, அவளுக்காக சின்ஸியராக நான் பிரார்த்தனைகளும் செய்துள்ளேன்.

      இவள் விஷயத்தில் என் பிரார்த்தனைகள் வீண்போகாமல் அப்படியே மிகவும் சீக்கரமாகப் பலித்துள்ளதில் எனக்கும், அவளுக்கும், அவளின் அம்மாவுக்கும் மிகவும் மகிழ்ச்சியே.

      இப்போது அவள் மிகவும் அதிர்ஷ்டக்காரி. பலகோடிகளுக்கு அதிபதி. மிகப்பெரிய தொழிலதிபரின் மனைவி.

      31.12.2015 முதல் என்னிடத்திலேயே தேங்கியுள்ள அவளுக்கான பரிசுத்தொகையும், அவள் தன் மேற்படிப்புக்காக என்னிடம் பிரத்யேகமாக விரும்பிக்கேட்டுள்ள பார்க்கர் பேனாவும் வரும் 05.05.2017 அன்று, ஒருவழியாக மஸ்கட்டில் உள்ள அவள் கைகளுக்குப் போய்ச்சேர உள்ளன என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. :)))))

      Delete
    9. ஆஹா வாங்கோ முருக்கு வாங்கோ.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சே:).. முருகு வாங்கோ.. நீங்க இப்படி முறுக்கி முறுக்கி எழுதியிருப்பதைப் பார்த்ததும் கோபு அண்ணன் உங்களுக்கு கரீட்டாத்தான் பெயர் வச்சிருக்கிறார் என எண்ணுறேன்:)..

      அதிராப்பட்டினம் வந்தமைக்கு:) மிக்க நன்றி...

      Delete
  31. //அதிலும் 4 வது கதை.. திருமண மலைகளும்... மாலைகளும்... வாய் விட்டுச் சிரித்திட்டேன்//

    லண்டனில் புறப்பட்ட தங்களின் சிரிப்பொலி இந்தியாவில் தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள
    எங்கட உச்சிப்பிள்ளையார் மலையில் மோதி எதிரொலித்து என் வீட்டு ஜன்னல் கம்பிகள் வழியாக என் காதிலும் விழுந்து மகிழ்வித்தது. மிக்க மகிழ்ச்சி. :)

    http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி கோபு அண்ணன், இப்போ முடியவில்லை, நைட் வந்து அனைவருக்கும் பதில் போடுறேன்.

      அதுவரை நீங்க கீப் இட் மேலே:).

      Delete
  32. //இந்த புஸ்தகா நிறுவனத்தினர், புத்தகத்தின் பெயரை மட்டும் போடுவதோடில்லாமல், உள்ளே என்ன என்ன இருக்கிறது எனும் பொருளடக்கத்தையும் வெளியே காட்டினால், வாங்கிப் படிப்போருக்கு இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன்.. இது உள்ளே என்ன இருக்கும் / எத்தனை கதைகள் இருக்கு... என்றே தெரியாமல் இருக்கு.//

    அருமையான ஆலோசனைதான். புத்தக முன் அட்டைக்கு அருகிலேயே, பின் அட்டைபோல பாவித்து இதனையும் தனியாகக் கொடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஏதும் வழி அமைத்துக் கொடுத்தால் வாங்கிப் படிப்போருக்கு சுலபம். கடசி உள்ளே எத்தனை கதைகள் உள்ளன என்றாவது தெரிந்தால் நல்லதே.

      Delete
  33. ஊசி இணைப்பு படத்தில் எங்கட அதிரா முகஜாடையுள்ள அந்தக் குழந்தைப்படமும், அதிலுள்ள வரிகளும் சூப்பர். இந்த மின்னூல் அறிமுகத்திற்கு ஏற்ற படத் தேர்வாகவும் அது அமைந்துள்ளது. உச்சி முதல் பாதம் வரை அனைத்துக்கும் நன்றியோ நன்றிகள், அதிரா.

    ReplyDelete
    Replies
    1. ஒரு கொஞ்சம் தான் இதுக்கு நான் நேரம் செலவு செய்தேன், ஆனா அது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பது பார்த்து எனக்கும் மகிழ்ச்சியே. மிக்க நன்றி.

      Delete
  34. தங்கை அதிராவுக்கு வணக்கம்.
    கோபு சார் மின்னூல்களின் முதல் விமர்சனம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது உங்கள் பதிவு! அதற்குப் பாராட்டுகள்!
    கோபு சார் போலவே நீங்களும் நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து இணைத்துள்ளீர்கள். சாப்பிடும் குண்டுப்பையன் கொள்ளை அழகு!
    மின்னூல் எப்படியிருக்கும், அதைத் திறந்து படிப்பது எப்படி என்பது பற்றிய விபரங்களைத் தெளிவாகப் படங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள். இதுவரை மின்னூல் பற்றி அறியாதவர்களுக்கு, இது கண்டிப்பாக உதவும்.
    கோபு சாரின் குட்டியூண்டு கதைகளைக் குட்டியூண்டாகவே விமர்சனம் செய்திருப்பதற்குப் பாராட்டு அதிரா!
    அத்தனை பின்னூட்டங்களையும் படித்து ரசித்துச் சிரித்தேன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஞா. கலையரசி Monday, April 24, 2017 6:28:00 pm

      //அத்தனை பின்னூட்டங்களையும் படித்து ரசித்துச் சிரித்தேன். நன்றி!//

      இங்குள்ள பதிவும், பின்னூட்டப்பகுதியும் எப்போதுமே ஒரே கும்மியும் கோலாட்டமுமாக மட்டுமே இருக்கும் மேடம்.

      நீங்கள் ஏதோ முதன்முதலாக இங்கு வருகை தந்துள்ளதால் பயந்துடாதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)

      நன்றியுடன் கோபு

      Delete
    2. வாங்கோ கலையரசி அக்கா வாங்கோ.. வணக்கம்.

      //கோபு சார் மின்னூல்களின் முதல் விமர்சனம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது உங்கள் பதிவு! அதற்குப் பாராட்டுகள்!//

      ஹா ஹா ஹா மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      தேடி வந்து பின்னூட்டம் தந்தமை மகிழ்ச்சி அளிக்கின்றது மிக்க நன்றி கலையரசி அக்கா.

      Delete
    3. //நீங்கள் ஏதோ முதன்முதலாக இங்கு வருகை தந்துள்ளதால் பயந்துடாதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :) //
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கோபு அண்ணன்.

      Delete
  35. வணக்கம் மியாவ் !

    ஊசிக் குறிப்பழகி உசுப்பேத்தும் பேரழகி
    வாசித்துப் பார்த்தே வனப்பூட்டும் சீரழகி
    நேசிக்கும் வலைப்பூக்கள் நிறைவாக்கும் அறிவழகி
    பேசிப் பழகிட்டால் பிரியமுள்ள நட்பழகி !

    வண்ணக் கதைபலவும் வாசித்து விட்டாளாம்
    எண்ணத்தில் இனித்தவற்றை எடுத்துக் கொடுத்தாளாம்
    உண்ணக் கனிகொடுக்கும் உளத்தாரைப் போலிவளாம்
    கண்ணுக் கினியபல கருத்துக்கள் சொல்கிறது !

    நன்னூல் அறிந்துவிட்டு நறுங்கவி ஈன்றதுபோல்
    மின்னூல் படித்துவிட்டு மிகுவிளக்கம் தந்துள்ளாய்
    பொன்நூல் தானுன்றன் பூவலையும் பதிவுகளும்
    தன்நூல் போலதனை தகைகொண்டாய் வாழ்த்துகின்றேன் !

    எல்லோர் வலைப்பூவும் எழிலாக்கும் கோபுஐயா
    நல்லதோர் கதைதந்தார் நறும்பூவாய் இருக்கிறதாம்
    கல்லாரும் அதைக்கற்றுக் களிப்பு மிகப்பெறட்டும்
    வல்ல கணபதியும் வரங்கள்பல கொடுக்கட்டும் !

    இன்றுதான் இந்த பூசார் உருப்படியான ஒரு காரியம் செய்திருக்கு போல
    காலம் கடந்தாலும் கச்சிதமா இருக்கு அலட்டல் இல்லாத அறிமுகம்
    மேலும் இதுபோல நல்ல திறமைகளை எதிர்பார்க்கிறேன்
    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    தமன்னா வோட்டு +1


    வில்லங்கம் வினா ஒன்று :- தேம்ஸ் நதியில் தேங்கிக் கிடக்காமே குப்பைகள்
    இனி ஓய்வுக்கு உட்க்கார எங்கே போக உத்தேசம்





    ReplyDelete
    Replies
    1. @சீராளன்.வீ

      //எல்லோர் வலைப்பூவும் எழிலாக்கும் கோபுஐயா
      நல்லதோர் கதைதந்தார் நறும்பூவாய் இருக்கிறதாம்
      கல்லாரும் அதைக்கற்றுக் களிப்பு மிகப்பெறட்டும்
      வல்ல கணபதியும் வரங்கள்பல கொடுக்கட்டும் !//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //இன்றுதான் இந்த பூசார் உருப்படியான ஒரு காரியம் செய்திருக்கு போல
      காலம் கடந்தாலும் கச்சிதமா இருக்கு அலட்டல் இல்லாத அறிமுகம்//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

      திருஷ்டிப்பூசணிக்காய் உடைத்தாற்போல ஒரே போடாகப் போட்டுவிட்டீர்களே, இப்படி .... அதுவும் நம் பூசாரிடம்போய். என்ன நடக்கப்போகுதோ?

      Delete
    2. வாங்கோ கவிஞர்.. மேஜர்.. சீராளன் வாங்கோ...

      ஆஆஆவ்வ்வ்வ் மிக அழகிய, புரியும் தமிழில் கவிதை வடித்து அசத்திட்டீங்க, மிக ரசிச்சேன் இம்முறை. ஏனெனில் வழமையாக உங்கள் இலக்கணம் கலந்த கவிதை புரிவதில்லை எனக்கு:)..

      ///இன்றுதான் இந்த பூசார் உருப்படியான ஒரு காரியம் செய்திருக்கு போல ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      ///தமன்னா வோட்டு +1///
      என்னாதூஊஊஊஊஊஊஉ தமன்னா வோட்டாஆஆஆ? கர்ர்ர்:)ஹா ஹா ஹா யாரை நினைச்சென்றாலும், மறவாமல் வோட் பண்ணியதுக்கு மிக்க நன்றி.

      Delete
    3. //வில்லங்கம் வினா ஒன்று :- தேம்ஸ் நதியில் தேங்கிக் கிடக்காமே குப்பைகள்
      இனி ஓய்வுக்கு உட்க்கார எங்கே போக உத்தேசம் //

      என்னாது வினா ஒன்றா? அப்போ இனி வினாக்கள் டொடருமோ?:) ஹையோ மீயை யாராவது காப்பாத்த்துங்ங்ங்:)..

      நோ தேம்ஸ்ல குப்பையா? ஆரு சொன்னா?:) இருக்கவே இருக்காதே.. அஞ்சுவை முன்னால நடக்கவிட்டுத் தானே நான் பின்னால நடக்கிறேன்.. ஏன் தெரியுமோ? தேம்ஸ்கரை எல்லாம் ஒதுங்கியிருக்கும் சருகு எல்லாம் அவட ஹீல்ஸ் ல அகப்பட்டு, துப்புரவாகிடும் நிலம்:).. அந்த துப்பரவாக்கப்பட்ட நிலத்தில மீ நடந்து போவேனாக்கும்:)..

      அவவுக்கு விஷயம் தெரியாது:) அவவை முன்னால போகச் சொன்னதால, தான் தானைத் தலைவியாக்கும் எனும் நினைப்ப்போடு நடப்பா முன்னால ஹா ஹா ஹா:) இந்த ரகசியம் நமக்குள் இருக்கட்டும்...

      மேலே கோபு அண்ணனும் பலமாக சிரிக்கிறார்:).

      மிக்க நன்றி சீராளன். இடையில ஒரு ரெயினை மிஸ் பண்ணிட்டீங்க.. ரொம்ப பிஸியானதால்..:).

      Delete
  36. மிக சிறப்பான பதிவு... கிஷ்ணாஜிதான் எப்பவுமே மத்தவங்க எழுத்துகளையும் புகழ்..பெருமைகளையும் . சிறப்பாக பாராட்டி பதிவு போடுவாங்க. நம்ம அதிரா மேடம்....கிஷ்ணாஜியோட மின்னூல்கள் பற்றி அழகா பதிவு போட்டிருக்காங்க.. கிஷ்ணாஜி....அதிரா மேடம்...வாழ்த்துகள்...பாராட்டுகள்.. இணைத்திருக்கும் படங்கள் எல்லாமே அழகோ அழகு..

    ReplyDelete
    Replies
    1. shamaine boscoTuesday, April 25, 2017 6:09:00 am

      அன்புள்ள ஷாமைன்ஜி மேடம்,

      ’என் பக்கம்’ என் சமீபத்திய பதிவுகளுக்குத் தாங்கள் வருகை தராததால் .... ஒருவேளை .... போளி-வடை சாப்பிட்டபின் :) .... தாங்கள் ஊரில் இல்லையோ என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இங்கு நம் அதிராவின் ‘என் பக்கம்’ என்ற வலைத்தளத்திற்கே நேரிடையாக வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வாங்கோ, வணக்கம்.

      //மிக சிறப்பான பதிவு... கிஷ்ணாஜிதான் எப்பவுமே மத்தவங்க எழுத்துகளையும் புகழ்.. பெருமைகளையும் சிறப்பாக பாராட்டி பதிவு போடுவாங்க. நம்ம அதிரா மேடம்.... கிஷ்ணாஜியோட மின்னூல்கள் பற்றி அழகா பதிவு போட்டிருக்காங்க.. கிஷ்ணாஜி.... அதிரா மேடம்... வாழ்த்துகள்...பாராட்டுகள்.. இணைத்திருக்கும் படங்கள் எல்லாமே அழகோ அழகு..//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான அசத்தலான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஷாமைன்ஜி மேடம்.

      நம் ’முன்னா பார்க்’ நண்பர்களில் பலரையும் இங்கு இன்று நான் சந்தித்துள்ளது
      எனக்குள் ஏதோவொரு பரவஸத்தை ஏற்படுத்துகிறது.

      இருப்பினும் மிக முக்கியமான ’நம்மாளு’ இருவரை இன்னும் ‘என் பக்கம்’ ஆகிய இங்கும், ‘என் பக்கம்’ ஆகிய அங்கும் காணாததில் என் கண்களெல்லாம் குளமாக .... :(

      பிரியத்துடன் கிஷ்ணா(ஜா)ஜி :)

      Delete
    2. வாங்கோ பொஸ்கோ வாங்கோ.. வரவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... கோபு அண்ணன் அனைத்துக்கும் பதில் சொல்லுவார், அதனால நான் மனதார உங்கள் வருகைக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

      Delete
  37. ஆஹா எங்கட கோபு பெரிப்பாவ பாராட்டி பதிவு போட்டிருக்காங்களே.... அதிரா.....(உங்கள.. அக்கானு சொல்லவா)..... பதிவு படங்கள் ரொம்ப ரொ....ம்....ப ஜோ...ரா... இருக்கு...உங்க பின்னாட்டங்கள்...பெரிப்பா..பின்னூட்டங்கள் செம ரகள..... இதுபோல..பதிவு....பின்னூட்டங்கள் படிக்கும்போதே... மனசெல்லாம்(மத்தாப்பு) ரிலாக்ஸ் ஆகுது.....பெரிப்பா இந்த நாயி...மாடு...ஆடு...இதெல்லாம் மறக்கவே மாட்டேளா....

    ReplyDelete
    Replies
    1. happy Tuesday, April 25, 2017 6:22:00 am

      வாடா என் செல்லக்குழந்தாய் ஹாப்பி, வணக்கம். இங்கு உன் வருகை எனக்கு மிகவும் ஹாப்பியாக உள்ளது.....டா.

      //ஆஹா எங்கட கோபு பெரிப்பாவ பாராட்டி பதிவு போட்டிருக்காங்களே.... அதிரா.....(உங்கள.. அக்கானு சொல்லவா).....//

      குட்டிக்குழந்தையான நீ அவங்களை நியாயமாக ’அக்கா கொக்கா’ என்றுதான் சொல்லி அழைக்கணும். இருப்பினும் அவர்கள் கடந்த 46 ஆண்டுகளாகவே தன் வயதினை ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ மட்டுமே என்று வற்புருத்தி வலியுறுத்தி சொல்லிக்கொண்டு வருவதால், அதிரா என்றேகூட அழைக்கலாம். அதையே அவர்களும் விரும்பக்கூடும்.

      //பதிவு படங்கள் ரொம்ப ரொ....ம்....ப ஜோ...ரா... இருக்கு... உங்க பின்னாட்டங்கள்... பெரிப்பா..பின்னூட்டங்கள் செம ரகள.....//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி....டா ஹாப்பி. :)

      //இதுபோல.. பதிவு....பின்னூட்டங்கள் படிக்கும்போதே... மனசெல்லாம் (மத்தாப்பு) ரிலாக்ஸ் ஆகுது.....//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ’மனசுக்குள் மத்தாப்பூ’ என்ற அதையும் https://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html நான் வரைந்துள்ள படத்துடன் படிச்சுட்டாயா? :) வெரி குட் கே(ர்)ள். என் தங்கம் நீ. :)))))

      //பெரிப்பா இந்த நாயி...மாடு...ஆடு...இதெல்லாம் மறக்கவே மாட்டேளா....//

      நம் நட்புக்கான மூல காரணமான அவற்றை மறக்க மனம் கூடுதில்லையே https://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html . நன்றி மறப்பது நன்றன்று அல்லவா ! மிக்க நன்றி.....டா ஹாப்பி. பீ ஹாப்பி ஆல்வேய்ஸ்!

      பிரியத்துடன் கோபு பெரிப்பா

      Delete
    2. வாங்கோ அப்பி வாங்கோ... நீங்க என்னை எப்பூடி வேணுமெண்டாலும் கூப்பிட்டுக்கொள்ளுங்கோ:) ஆனா பெரியப்பா சொன்னதைப்போல நேக்கு சுவீட் 16 தான் இப்போ நடந்திட்டிருக்கு:)[நான் வயசை சொன்னேன்]: ஹா ஹா ஹா மிக்க நன்றி அப்பி.

      Delete
  38. //அதிரடி அதிராவை அதிராம்பட்டினம் அதிராவாக ஆக்கிப்பூட்டிங்களா, முருகு. அதுவும் நல்லாத்தான் கீதூஊஊஊஊ.//

    😧😧😧.....அதொன்னுமில்லா குருஜி மொபைலுல டைப்பினா இப்பூடித்தான சொதப்புது...... மாப்பு. ...மாப்பு
    ..நாம டைப்பாததெல்லாம் வந்து வுளுகுது

    ReplyDelete
    Replies
    1. mru Tuesday, April 25, 2017 7:03:00 am

      **அதிரடி அதிராவை அதிராம்பட்டினம் அதிராவாக ஆக்கிப்பூட்டிங்களா, முருகு. அதுவும் நல்லாத்தான் கீதூஊஊஊஊ.**

      //😧😧😧.....அதொன்னுமில்லா குருஜி மொபைலுல டைப்பினா இப்பூடித்தான சொதப்புது...... மாப்பு. ...மாப்பு.. நாம டைப்பாததெல்லாம் வந்து வுளுகுது//

      கரெக்ட்டூஊஊஊஊ. எனக்கும் புரிகிறதூஊஊஊஊஊ. சொதப்பலிலும் ஓர் அழகு உள்ளது. அதனால் நோ மாப்பூஊஊஊஊ. மிக்க நன்றி....டா முருகு.

      பிரியமுள்ள குருஜி கோபு

      Delete
  39. ம்..ம்.. கோபூஜி....உங்க கிரீடத்தில்(வழுக்கை மண்டையில் உள்ள)....)))))புது மயிலிறகு சூட்டி அழகு பாத்திருக்காங்க... அதிராமேடம்...ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க. படங்கள் எல்லாமே தூள் கெளப்புது.

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. Tuesday, April 25, 2017 7:12:00 am

      வாம்மா .... கொழுப்பு எடுத்தக் குந்தாணியான என் ’லங்கிணி மீனா’, வணக்கம்.

      எங்கட ‘முன்னா பார்க்’ ஓனரே இங்கு வந்து தன் வலதுகாலை எடுத்து வைத்துள்ளதால் ஒரேயடியா ஆடுது இந்த அதிராவின் ப்ளாக்கு.

      அடி அம்மாடியோவ் ...... என்னா செம வெயிட்டூஊஊஊஊஊ. :)))))

      //ம்..ம்.. கோபூஜி....உங்க கிரீடத்தில் (வழுக்கை மண்டையில் உள்ள)....))))) புது மயிலிறகு சூட்டி அழகு பாத்திருக்காங்க... அதிராமேடம்...//

      இதை அந்த ’எங்காளு’ மட்டும் கேட்கணும். ஆத்திரம் பொங்கி வந்து கொதித்துப்போய், உன்னை தன் கூரிய இரண்டு கொம்புகளால் கொந்தியே எறிந்து விடுவாளாக்கும். ஜாக்கிரதை.

      அந்த ராஜாத்தி தினமும் சீவி முடித்து சிங்காரித்துக்கொள்வதே, மிர்ரர் போலப் பளபளப்பாக உள்ள என் உச்சி மண்டையைப் பார்த்துத்தானாக்கும். அப்படியே என் தலையையும் தடவி விடுவாள் .... பாரு. அது அப்படியே என்னா சுகமாக இருக்கும் தெரியுமா? :) அந்த பலகீனமான தருணங்களில் நான் அவளுடன் அப்படியே சொர்க்கத்தில் மிதப்பதுண்டு.

      //ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க. படங்கள் எல்லாமே தூள் கெளப்புது.//

      ’கொழுப்பெடுத்த குந்தாணியே + விலை மோரில் வெண்ணெய் எடுப்பவளே ! உன் அன்பான வருகைக்கும், கிண்டலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      உன் பிரியமுள்ள கோபூஜி

      Delete
    2. அன்புள்ள மீனா,

      என் வழுக்கை மண்டையின் அனுபவ ஆராய்ச்சிகளின் இறுதிக் கண்டு பிடிப்புகளாக உன் ஒருத்திக்கு மட்டுமே நான் ஒருசில விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன்

      மனித வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாக உணவு, உடை, இருப்பிடம் எனச் சொல்வதைப்போல உண்மையான காதலுக்கு உடல், உணர்வு, ஆன்மா இவைகளின் ஒத்திசைவு அவசியத் தேவை

      ஒரு உடல் வெறி கொள்ள.. ஒரு உடல் மறுப்பது எனில்.. அது 'காமக் காதல்'

      இருவரின் உடல் மட்டும் ஒத்துச் செல்கிறது எனில் அது 'மிருகக்காதல்'

      இருவரின் உடலும் உணர்வும் ஒத்துச் செல்லுகிறதெனில் அது 'சராசரிக் காதல்'

      ஆன்மா மட்டுமே ஒத்துச் செல்லுகிறதெனில் அது 'தெய்வீகக் காதல்'

      எனச் சொல்லலாம்.

      இன்னும் சுருக்கமாகச் சொன்னால், உடலில் துவங்கி உணர்வில் வளர்ந்து, ஆன்மாவில் நிலை கொள்கிற காதலை விட,

      ஆன்மாவில் துவங்கி உணர்வில் வளர்ந்து உடலில் முடிவில் சங்கமிக்கிற (அல்லது சங்கமிக்காமலே போகிற ) காதலே நிச்சயமாக 'தெய்வீகக் காதல்'

      இப்படியான தெய்வீகக் காதலுக்கு தலைமுடி ஒன்றும் தலையாய பிரச்சனையே அல்ல.

      உனக்குப் ’போகப்போகப் புரியும் ...... இந்தப் பூவின் வாஸம் புரியும்’

      - அன்பு வாழ்த்துக்களுடன் கோபூஜி.

      Delete
    3. மேலேயுள்ள என்பதிலில்

      உனக்குப் ’போகப்போகப் புரியும் ...... இந்தப் பூவின் வாஸம் புரியும்’ என்பதைப்

      உனக்குப் ’போகப்போகத் தெரியும் ...... இந்தப் பூவின் வாஸம் புரியும்’ என்று

      மாற்றிப்படிக்கவும்.

      Delete
    4. வாங்கோ சிப்பிக்குள் முத்து வாங்கோ..///வழுக்கை மண்டையில்//

      ஹா ஹா ஹா தெரியாம இப்படி ஒரு சொல்லைச் சொல்லிட்டீங்க.. பாருங்கோ உங்கட ஜீ யின் தூக்கமே போச்சு:) ஹா ஹா ஹா மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
  40. நானும் பறந்து வந்துட்டேனே...... கோபால்ஸார் பற்றியும் அவர்களின் மின்னூல்கள் பற்றியும் ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க அதிரா...பொதுவா ஒரு விசேஷம் நடக்கும் வீடுகளில் போட்டோகிராபர் ஓடி ஓடி எல்லாரையும் போட்டோ எடுத்து போடுவாங்க. ஆனா அவரை யாருமே கண்டுக்க மாட்டாங்க...

    அதுபோல நம்ம கோபால்ஸார் திறமையானவர்களை தாராளமாக பாராட்டி உற்சாக படுத்துவாங்க.... அவங்களை பாராட்டி பதிவு போட்டிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... Tuesday, April 25, 2017 7:26:00 am

      ஆஹா, வாங்கோ .... வணக்கம்.

      //நானும் பறந்து வந்துட்டேனே......//

      கருட பகவான் போன்ற கழுகாரின் வருகை இங்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அங்கு தான் இன்னும் வரக்காணும். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      //கோபால்ஸார் பற்றியும் அவர்களின் மின்னூல்கள் பற்றியும் ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க அதிரா...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. அதுதான் எங்கட அதிராவின் ஸ்பெஷாலிடியாக்கும். :)

      //பொதுவா ஒரு விசேஷம் நடக்கும் வீடுகளில் போட்டோகிராபர் ஓடி ஓடி எல்லாரையும் போட்டோ எடுத்து போடுவாங்க. ஆனா அவரை யாருமே கண்டுக்க மாட்டாங்க...//

      இந்த உதாரணம் மிகவும் கரெக்டூஊஊஊஊஊ. என் ஸ்பெஷல் நன்றிகள்.

      //அதுபோல நம்ம கோபால்ஸார் திறமையானவர்களை தாராளமாக பாராட்டி உற்சாக படுத்துவாங்க.... அவங்களை பாராட்டி பதிவு போட்டிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு...//

      இதை இங்கு அருமையாகவும், பக்குவமாகவும், அழகாகவும் எடுத்துச்சொல்லியுள்ளது எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்குது.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ’ஆல் இஸ் வெல்’ ஆன ஸ்வாமீ.

      Delete
    2. வாங்கோ ஆல் இஸ் வெல் வாங்கோ.. ஆரம்பம் நீங்க ஒருதடவை என்பக்கம் வந்தீங்க, பின்னர் வருவதில்லை.. இப்பொழுது கோபு அண்ணனால் வருகை தந்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

      நீங்க சொன்னது உண்மையேதான், மிக்க நன்றி.

      Delete
  41. ஸ்ஸ்ஸ்ஸ் கலியாண வீட்டின் கடசிப் பந்தியும்,பாயாசம், கேசரி, ரசகுல்லா, பாசந்தி:), திருப்பதி லட்டு என பல சுவீட்களோடு இனிதே நடந்து முடிந்து விட்டது என நினைக்கிறேன், மிக்க மகிழ்ச்சியாக இருக்கு, மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளமை.

    வருகை தந்தோர் எல்லோருக்கும் ஒரு செட் வெள்ளிப் பாத்திரங்கள் அன்பளிப்பாக வள/ழங்கப்படுது எடுத்துக்கோங்க:)...
    [im]https://s-media-cache-ak0.pinimg.com/736x/4a/1c/c1/4a1cc137948b7704e111f5538744dad1.jpg[/im]

    ReplyDelete
  42. அதிரா
    கலக்கறடீயம்மா.
    ஜே மாமி ரொம்ப பிசி. 2 குட்டி டிக்கெட்டுகளை சமாளிக்க வேண்டாமா?
    உங்க பூசார விட ரொம்ப வாலு.

    இந்த மாதிரி பதிவு போடணும்ன்னு நானும் நெனச்சேன். வழக்கம் போல செயல் படுத்த முடியல. இதோ சின்ன குட்டி வாலு பேத்தி (1 வயசு ஆகறது) என் செருப்பை ரெண்டு கையிலும் எடுத்துண்டு வந்து இருக்கு. அவளட சத்தம் கேக்குதா?
    சரி மறுபடியும் வாரேன்.

    இப்படி பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்கும் போது படம் போடறது எப்படீன்னு எனக்கும் சொல்லிக் குடேண்டியம்மா.

    வாழ்த்துக்களுடன்
    உங்கட ஜே மாமி
    (மாமி ஆடிக்கொரு நாள், அமாவாசைக் கொரு நாள் தான் வருவா. கோச்சுக்காதேடீயம்மா).

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya Tuesday, April 25, 2017 5:54:00 pm

      //இப்படி பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்கும் போது படம் போடறது எப்படீன்னு எனக்கும் சொல்லிக் குடேண்டியம்மா.//

      இதனைச் சொல்லிக்கொடுக்க, அவங்க பேங்க் எக்கவுண்டில் டாலரில் பணம் கட்டணும் என்பார்கள். அதனால் மட்டுமே இந்த ஏழை எளிய அந்தணனாகிய நான்
      அதுபற்றி இதுவரை கேட்கவே இல்லை.

      அதிராவிடம் நீங்க கத்துக்கிட்டதும் எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்கோ ஜெயா, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ். :)

      Delete
    2. ஆஆஆஆவ் ஜே மாமி வாங்கோ வாங்கோ.. நீங்க ஆடிக்கொருக்கால் என்றாலும் இங்கு வந்தது சந்தோசமே.. பழைய பறவைகளில் நீங்க மட்டும்தான் இப்போ நினைச்சு வந்திருக்கிறீங்க ரொம்ப சந்தோசம்...

      பேரக் குட்டீஸ் ரொம்ப நோஈஸ் ஆ.. ஹா ஹா ஹா அப்போதானே உங்களுக்கு நல்ல எக்ஸசைஸ் ஆகும்.

      அமாவாசைக்கு வரும்போது உங்களுக்கு மட்டும் பீஸ் இல்லாமலே படம் போடுவதை சொல்லித்தாறேன் மாமி:)..

      Delete
    3. //அமாவாசைக்கு வரும்போது உங்களுக்கு மட்டும் பீஸ் இல்லாமலே படம் போடுவதை சொல்லித்தாறேன் மாமி:)..//

      இன்றைக்கே நிறைந்த அமாவாசை நாள் தானாக்கும். பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது. அதுவும் இன்று சேர்ந்துள்ளதாக்கும்.

      Delete
  43. அதிரா
    அந்த வெள்ளிப் பாத்திரம் 2 செட் எடுத்துண்டுட்டேன். எனக்கு ரெண்டு பேத்திகளோன்னோ அதான்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya Tuesday, April 25, 2017 5:55:00 pm

      //அதிரா, அந்த வெள்ளிப் பாத்திரம் 2 செட் எடுத்துண்டுட்டேன். எனக்கு ரெண்டு பேத்திகளோன்னோ அதான்.//

      அந்த அட்டைப்பெட்டிகளின் உள்ளே நிஜமாலுமே வெள்ளிப் பாத்திரங்கள் வைத்திருக்கிறாளோ என்னவோ?????? எனக்கு ஒரே ட்வுட்டாக்கீதூஊஊஊ. நானும்
      விடிய விடிய அவற்றை ஓபன் பண்ண முயற்சித்தேன். என் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் பூராவும் ஸ்க்ராட்ச் ஆனதுதான் மிச்சம். :)))))

      முடிந்தால் அந்த அஞ்சு பெட்டிகளையும் எடுத்துக்கொள்ளுங்கோ ஜெயா. அஞ்சுவுக்கோ எனக்கோ கூட வேண்டாம்.

      Delete
    2. ஹா ஹா ஹா வந்த வேகத்தில ரெண்டு எடுத்திட்டீங்களே:) சரி சரி இப்பவே பாத்திரம் சேர்க்கத் தொடங்கிட்டீங்களோ பேத்திக்கு.. அவர்களின் காலத்தில் இவை எல்லாம் தேவைப்படாது மாமி:)..

      கோபு அண்ணன் அதை டச் பண்ணச் சொல்லி உங்களுக்குச் சொல்லல்லியே:) அது உங்களுக்கு இல்ல:).. வந்து வாழ்த்தியவர்களுக்காக்கும்:).. ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி ஜே மாமி.. மீண்டும் வாங்கோ.

      Delete
  44. மின்நூல்கள் இப்போது பல தளங்களில் வருவது தமிழின் வளர்ச்சி என்பேன்! கோபு ஐயாவின் நூல் பற்றிய உங்களின் பார்வை மின்நூல் வாசிக்கும் ஆவலைத்தருகின்றதது!

    ReplyDelete
    Replies
    1. தனிமரம் Tuesday, April 25, 2017 9:15:00 pm

      //கோபு ஐயாவின் நூல் பற்றிய உங்களின் பார்வை மின்நூல் வாசிக்கும் ஆவலைத்தருகின்றது!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.:)

      Delete
  45. விமர்சனம் நன்று வாழ்த்துகள்.

    ReplyDelete
  46. ஆஹா.. அழகான விமர்சனம்.. அத்துடன் புஸ்தகாவில் எப்படி நுழைவது, மின்னூலை எங்கு பார்ப்பது.. எப்படி எழுத்துகளைப் பெரிதாக்குவது என்று எடுத்துச்சொல்லி புதிதாய் உள்நுழைபவர்களுக்கு பெரும் உதவி புரிந்திருக்கிறீர்கள்.. உள்ளடக்கம் குறித்த ஆலோசனையும் நன்று. கோபு சாரின் எழுத்து பற்றி நன்கறிந்திருந்தாலும் இங்கே உங்களுடைய அழகுத்தமிழில் விமர்சனம் வாசிக்கையில் இன்னும் ரசிக்கிறது. கோபு சாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். அழகான விமர்சனப்பதிவுக்குப் பாராட்டுகள் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. ரெயின் புறப்பட்டபின் ஓடிவந்து கார்ட் பெட்டியில் ஏறிட்டீங்க:) அதுக்கு முதலில் என் நன்றி. அனைத்தையும் மிக அழகாகக் கவனிச்சிருக்கிறீங்க..

      மிக்க மிக்க நன்றி கீதா.

      Delete
    2. கீத மஞ்சரி Wednesday, April 26, 2017 11:49:00 am

      வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

      //கோபு சாரின் எழுத்து பற்றி நன்கறிந்திருந்தாலும் இங்கே உங்களுடைய அழகுத்தமிழில் விமர்சனம் வாசிக்கையில் இன்னும் ரசிக்கிறது. கோபு சாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      எங்கட அதிரடி அதிரா என் மின்னூலுக்குப் பெருமை சேர்த்துள்ள இந்தப் பதிவினைத் தங்களின் வருகையால் மேலும் சிறப்பித்துக் கொடுத்து விட்டீர்கள்.
      அதிராவுக்கான இந்தத் தங்களின் தனிப்பாராட்டுகள் யாவும் விலை மதிக்க முடியாதவைகள் ஆகும்.:))))) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete
  47. நானும் கூட கார்டு பெட்டில் தொத்திகிட்டேனே... சூப்பர் பதிவு அதிரா மேடம்....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ப்ராத்தா வாங்கோ... நல்லவேளை ரெயின் இன்னும் ஸ்பீட் எடுக்கல்ல:) பத்திரமா கம்பியைப் பிடிச்சிட்டு நில்லுங்கோ, ரெயினுக்கு இன்சூரன்ஸ் எடுக்கல்ல நான்:).

      மிக்க நன்றி.

      Delete
    2. ப்ராப்தம் Wednesday, April 26, 2017 1:27:00 pm

      வாம்மா சாரூஊஊஊஊஊஊஊஊஊஊ, வணக்கம்மா.

      //நானும் கூட கார்டு பெட்டில் தொத்திகிட்டேனே... சூப்பர் பதிவு அதிரா மேடம்....//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சாரூ. உன் ஒருத்தியின் வருகையால் இந்தப்பதிவே பூர்ணத்துவம் பெற்றுவிட்டது போலத் தோன்றுகிறது. எனக்கும் ஏனோ இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. :) :)

      Delete
  48. ரொம்பவே லேடடோ..??? அதனால என்ன... பதிவு படிச்சதும் அதிரா அவங்க பதிவுதான்னு புரிய முடிஞ்சிடிச்சி ஆனா பின்னூட்டம்லாம் படிக்கயிலே இது கோபால்ஸார் பதிவு பக்கமோன்னு டவுட்டூஊஊஊஊ.. அவங்கதான் நிறையா பேருக்கு ரிப்ளை கமெண்ட் போட்டிருக்காங்க. எப்படியோ.. கோபால்ஸாரின் மின்னூல் பற்றி ஸ்கிரின் ஷாட் எடுத்து விளக்கமாக சொல்லியிருப்பது நல்லாருக்குமில்லனாக.. கோபால்ஸார்...அதிரா அவங்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

    கார்டு பெட்டில் ஏறினவங்கள தள்ளிவுட்டுட மாட்டிங்கதானே....

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... Wednesday, April 26, 2017 1:40:00 pm

      வாங்கோ, வணக்கம்.

      //ரொம்பவே லேட்டோ..???//

      நாட் அட் ஆல். இன்னும்கூட வரவேண்டியவங்க இருப்பாங்கோ.

      //அதனால என்ன... பதிவு படிச்சதும் அதிரா அவங்க பதிவுதான்னு புரிய முடிஞ்சிடிச்சி//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! அதுபோதுமே !!

      //ஆனா பின்னூட்டம்லாம் படிக்கயிலே இது கோபால்ஸார் பதிவு பக்கமோன்னு டவுட்டூஊஊஊஊ.. அவங்கதான் நிறையா பேருக்கு ரிப்ளை கமெண்ட் போட்டிருக்காங்க.//

      உங்க டவுட்டூஊஊஊஊ நியாயம்தான். மொத்தத்தில் எல்லோருமா சேர்ந்து கடந்த
      2-3 நாட்களாக என்னை நன்னாவே சுளுக்கு எடுத்துட்டாங்கோ.

      //எப்படியோ.. கோபால்ஸாரின் மின்னூல் பற்றி ஸ்கிரின் ஷாட் எடுத்து விளக்கமாக சொல்லியிருப்பது நல்லாருக்குமில்லனாக..//

      அது என்ன ’நல்லாருக்குமில்லனாக..’?????

      நல்லா இருக்கும் வில்லனா?

      இங்கு வந்தாலே எல்லோருக்கும் ஏதோ ஒரு கிக் ஏற்பட்டு, தள்ளாடிப்போய் வார்த்தைகளில் / எழுத்துக்களில் புதுசுபுதுசா ஏதேதோ எழுதத்தோன்றுகிறது. :)

      //கோபால்ஸார்...அதிரா அவங்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்..//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகள் + பாராட்டுகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      //கார்டு பெட்டில் ஏறினவங்கள தள்ளிவுட்டுட மாட்டிங்கதானே....//

      மிகவும் நியாயமான கேள்வி. எதுக்கும் கெட்டியாப் பிடிச்சுக்குங்கோ.

      Delete
    2. வாங்கோ ஸ்ரத்தா, ஸபுரி..... உங்க பெயரை கொப்பி பேஸ்ட் தான் செய்தேன்:) வாயில நுழையும் பெயரா வைக்கக்கூடாதோ?:) அதிரா எவ்ளோ கஸ்டப்படுறேன் உச்சரிக்க:)..

      // பதிவு படிச்சதும் அதிரா அவங்க பதிவுதான்னு புரிய முடிஞ்சிடிச்சி//

      என்னை உங்களுக்கு ஓல்ரெடி தெரியுமா???? மிக்க மகிழ்ச்சி.

      //ஆனா பின்னூட்டம்லாம் படிக்கயிலே இது கோபால்ஸார் பதிவு பக்கமோன்னு டவுட்டூஊஊஊஊ.////
      ஹா ஹா ஹா இம்முறை பின்னூட்ட முதலிடம் அவருக்குத்தானே...

      ///கார்டு பெட்டில் ஏறினவங்கள தள்ளிவுட்டுட மாட்டிங்கதானே....//
      ஹா ஹா ஹா தள்ளி விட மாட்டோம்ம் ஆனா இடையில இறங்க முடியாது:) ஹா ஹா ஹா மிக்க நன்றி ரத்தா.. வருகைக்கு.

      Delete
  49. //கருட பகவான் போன்ற கழுகாரின் வருகை இங்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.//

    அச்சச்சோ..... வெள்ளைப் புறா ஒன்று... கண்ணில் படாமலே ...கழுகாரா எப்ப மாறினாங்க..

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... Wednesday, April 26, 2017 1:46:00 pm

      **கருட பகவான் போன்ற கழுகாரின் வருகை இங்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.**

      //அச்சச்சோ..... வெள்ளைப் புறா ஒன்று... கண்ணில் படாமலே ...கழுகாரா எப்ப மாறினாங்க..//

      அப்போ நள்ளிரவில் தூக்கக்கலக்கத்தில் பார்த்ததால் கருட பகவானோ கழுகாரோ என டவுட்டு வந்திருச்சு. இப்போ வெளிச்சத்தில் பார்த்ததும்தான் வெள்ளைப்புறா போலவே தெரியுது. இது விஷயத்தில் எங்கட வெள்ளைப்புறா கோபப்படாமல் அமைதிப்புறாவாக இருக்க வேண்டுகிறேன்.:)

      Delete
  50. //வாங்கோ ப்ராத்தா//.....

    அதிரா..... நீங்க பரோட்டா சாப்டுகிட்டே என் கமெண்ட் படிச்சிங்களா....என்னை "பராத்தா"..னு சொல்லிட்டிங்களா....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் Thursday, April 27, 2017 1:30:00 pm

      //வாங்கோ ப்ராத்தா//.....

      அதிரா..... நீங்க பரோட்டா சாப்டுகிட்டே என் கமெண்ட் படிச்சிங்களா....என்னை
      "பராத்தா"..னு சொல்லிட்டிங்களா....//

      நானும் இதையேதான் நேற்று நினைத்தேன் சாரூ. ஆனால் இதனை நான் குறிப்பிட்டு இங்கு சொல்லவில்லை. நம் இருவர் எண்ணங்களும் அப்படியே ஒத்துப்போய் உள்ளன என்பதை நினைக்க எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது, சாரூஊஊஊஊ. :)

      Delete
    2. ///அதிரா..... நீங்க பரோட்டா சாப்டுகிட்டே என் கமெண்ட் படிச்சிங்களா....என்னை "பராத்தா"..னு சொல்லிட்டிங்களா...///

      ஹா ஹா ஹா அப்படியில்லை.. அது செல்லமாக அப்படிக் கூப்பிட்டேன், பிடிக்கவில்லை எனில் வேண்டாம்.. இனிமேல் ப்ராப்தம் என்றே அழைக்கிறேன்.. ஓகேதானே?:). மிக்க நன்றி.

      Delete
  51. ஹா..ஹா.. அப்படிலாம் எதுமில்ல பேருல என்னா இருக்குது...என்பேரே எனக்கே மறந்துபோச்சே..

    ReplyDelete
  52. //வாங்கோ ஸ்ரத்தா, ஸபுரி..... உங்க பெயரை கொப்பி பேஸ்ட் தான் செய்தேன்:) வாயில நுழையும் பெயரா வைக்கக்கூடாதோ?:) அதிரா எவ்ளோ கஸ்டப்படுறேன் உச்சரிக்க:)..//

    அப்படினா.... வாழைப்பழம்னு வச்சிகிடலாமா....ஈசியா வாயில நுழையும்லா...நோ...நோ..... கட்டையதூக்கிட்டெல்லாம் வரக்கூடாது...

    //என்னை உங்களுக்கு ஓல்ரெடி தெரியுமா???? மிக்க மகிழ்ச்சி//

    என்ன அப்பூடி கேட்டுபோட்டிக.. புகழ் பெற்ற பிரித்தானியா இளவரசி அவர்கள் என்றைக்குமே ஸ்வீட்16--- வயதிலேயே இருப்பவர்களான அதிரா மேடத்தை வலைப்பதிஉலகில் தெரியாதவர்களும் இருக்க முடியுமா......

    ReplyDelete
    Replies
    1. //அப்படினா.... வாழைப்பழம்னு வச்சிகிடலாமா//
      ஹா ஹா ஹா மீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி.. இல்ல எனக்கு உங்கள் பெயரைப் பார்த்ததும் ஸ்ரோபெரி தான் மனதில் வந்தது, ஆனா முதல்முதலா வந்தோரிடம் எதையாவது சொல்லி வம்பில மாட்டிடக்கூடாது என அடக்கிட்டேன்ன்:).

      என்னைப்பற்றி இவ்ளோ விசயம் தெரியுமா?:) கோபு அண்ணனிடன் ரியூசன் எடுத்திருப்பீங்களோ?:).

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.