பழகலாம் வாங்கோ... புதிசு புதிசாய் தெரிஞ்சு கொள்வதற்கு வயதும் இல்லை கால நேரமும் இல்லை, அதனால பயப்பூடாமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)..
லீவு நாட்களில் அப்படி பண்ணோணும் இப்பூடிப் பண்ணோனும் என பல கற்பனைகளைக் கஸ்டப்பட்டுக் கட்டி எழுப்புவேன் வேலை நாட்களில்:). ஆனா லீவு நாட்களில் அமைதியாக இருந்து கதைத்துப் பேசி நல்லாச் சமைச்சுச் சாப்பிடுவதிலேயே காலம் போய் விடும்.. அதுதான் அதிக சந்தோசத்தையும் கொடுக்கிறது.
ஆனாலும் நான் நினைப்பதில் பாதி வேலையையாவது முடிச்சு விடுவேன்.. அதில் ஒன்றுதான் இந்த “புய்ப்ப வாஸ்”. எங்கள் வீட்டில் இந்த வாசனைப் போத்தல்கள் எப்பவும் இருக்கும்,[scented oil, reed diffuser], பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்தானே, இப்படி அழகான குட்டிக் குட்டிப் போத்தல்களில், வாசனை மிக்க ஒயில் போட்டு, இப்படி குட்டிக் குட்டிக் குச்சிகள் வரும், அதனை ஒயிலில் வைத்து விட்டால், அந்தக் குச்சி, ஒயிலை உறிஞ்சி அப்படியே வீடெல்லாம் வாசனை பரவிக்கொண்டிருக்கும். சாம்பிராணிக் குச்சிபோல இதிலும் அனைத்து வாசனை வகையும் கிடைக்குது.
அதில் பலதை எறிந்தும் விட்டேன், ஆனா சமீபத்தில் திடீரென ஒரு யோசனை தோன்றியது (எங்கட இமா றீச்சருக்கு தோன்றுவதைப்போல:)).. அதனால எறிந்திடாமல் இப்படிப் பண்ணிட்டேன்.இது போன்ற இன்னொரு கை வேலை பார்க்க விரும்பினால் இக்கரைச்சூடு:).. இல்ல அதை என்ன தலைப்பில், என்ன லேபலில் போட்டேன் எனத் தெரியவில்லை, அதனால என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எக்ஸ்ராவாகத் தேவைப்பட்டது, ரிஷூ பேப்பரும் குச்சிக்கு அடிக்க பச்சைக் கலரும்.
== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==
லீவு நாட்களில் அப்படி பண்ணோணும் இப்பூடிப் பண்ணோனும் என பல கற்பனைகளைக் கஸ்டப்பட்டுக் கட்டி எழுப்புவேன் வேலை நாட்களில்:). ஆனா லீவு நாட்களில் அமைதியாக இருந்து கதைத்துப் பேசி நல்லாச் சமைச்சுச் சாப்பிடுவதிலேயே காலம் போய் விடும்.. அதுதான் அதிக சந்தோசத்தையும் கொடுக்கிறது.
ஆனாலும் நான் நினைப்பதில் பாதி வேலையையாவது முடிச்சு விடுவேன்.. அதில் ஒன்றுதான் இந்த “புய்ப்ப வாஸ்”. எங்கள் வீட்டில் இந்த வாசனைப் போத்தல்கள் எப்பவும் இருக்கும்,[scented oil, reed diffuser], பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்தானே, இப்படி அழகான குட்டிக் குட்டிப் போத்தல்களில், வாசனை மிக்க ஒயில் போட்டு, இப்படி குட்டிக் குட்டிக் குச்சிகள் வரும், அதனை ஒயிலில் வைத்து விட்டால், அந்தக் குச்சி, ஒயிலை உறிஞ்சி அப்படியே வீடெல்லாம் வாசனை பரவிக்கொண்டிருக்கும். சாம்பிராணிக் குச்சிபோல இதிலும் அனைத்து வாசனை வகையும் கிடைக்குது.
அதில் பலதை எறிந்தும் விட்டேன், ஆனா சமீபத்தில் திடீரென ஒரு யோசனை தோன்றியது (எங்கட இமா றீச்சருக்கு தோன்றுவதைப்போல:)).. அதனால எறிந்திடாமல் இப்படிப் பண்ணிட்டேன்.இது போன்ற இன்னொரு கை வேலை பார்க்க விரும்பினால் இக்கரைச்சூடு:).. இல்ல அதை என்ன தலைப்பில், என்ன லேபலில் போட்டேன் எனத் தெரியவில்லை, அதனால என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எக்ஸ்ராவாகத் தேவைப்பட்டது, ரிஷூ பேப்பரும் குச்சிக்கு அடிக்க பச்சைக் கலரும்.
போத்தலினுள், என்னிடம் இருந்த கலர் மாபிள் கற்களைப் போட்டிருக்கிறேன்.. அயகா இருக்கோ?:).
== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==
இது இரண்டாவது கைவேலை, முன்பு கழுத்து மாட்டிகளுக்கு ஐடியா கண்டு பிடிச்சேன்.. இந்த லிங்கில் பாருங்கோ எப்படி செய்தேன் என்பதனை..
இப்போ தோடுகளை மாட்டவும் ஒரு ஐடியாக் கண்டு பிடிச்சிட்டேன், இப்படிக் கொழுவி வைப்பதனால் நினைத்தவுடன் விரும்பியதைப் போட முடிகிறது, இல்லையெனில்.. எங்கின வச்சேன் சாமீஈஈஈ கதைதேன்ன்:)..
நைலோன் Regiform துண்டுகளை எடுத்து சுப்பர்குளூ போட்டு ஒட்டி இப்படிச் சுவரில் ஒட்டினேன், இதில் தோடுகளைக் குற்றி விடுவது இலகுவாக இருக்கு. ஜிப்ஸிகளையும், கிளிப் தோடுகளையும் இதில் மாட்ட முடியாமல் இருக்கு:(.
அடுத்து, காப்பு, கை மாட்டிகளுக்கான ஐடியா கைவசம் இருக்கு.. இனித்தான் செய்து முடிக்க வேணும்.
ஊசிக்குறிப்பு:
அனைவரதும் கவனத்துக்கு.. இம்முறை நான் அஞ்சுவை வம்புக்கு இழுக்கவில்லையாக்கும்.. ஏனெனில் மீ இஸ் எ குட் கேள்:)
ஊசி இணைப்பு:
சைவ முட்டை சாப்பிடுவோருக்காக.. நானே செய்தது:) சே சே டங்கு ஸ்லிப் ஆச்ச்சு.. நானே வாங்கியது:)
========================================================================
|
Tweet |
|
|||
இந்தா வந்துட்டேன் :) எப்பிடி எப்பிடி ..பேச்சு பெரிது மவுனம் அதைவிட பெரிதாம் :) இல்லியே ரெண்டுமே மூன்றெழுத்து தானே :)
ReplyDeleteவாங்க வசமா மாட்டிக்கிச்சு பூனை ..அப்போ எதுக்கு வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்கிறாங்க ??? உடனே ஆன்சர் ப்ளீச்
வாங்கோ அஞ்சு வாங்கோ... முதலாவதாய் வந்திருக்கும் உங்களுக்கு..... இம்முறை .... ஆங்ங்ங் ஒண்ணுமில்லே எனச் சொல்ல வந்தேன் ஹா ஹா ஹா சரி சரி ஒரு எக் எடுத்துக்கோங்க....
Deleteநான் இம்முறை பேசப்போவதில்லை:) ஏனெனில் மெளனம்தான் சிறந்தது என்பதை பிறக்டிக்கலா நிரூபிக்கப் போறேன்... நல்லிரவு அஞ்சு... எக் ட்றீம்ஸ்ஸ்... நாளைக்கு வாறேன் மிகுதிக்கு.
மவுனம் சிறந்தது ஆனா அது நமக்கில்லை மியாவ் :) அது மவுனமா இருக்கிறவங்களுக்கு ..எப்படி நிரூபிக்கப்போறீங்கன்னு எனக்கு demo காட்டணும் வீடியோ ரெக்கார்ட் செஞ்சி
Delete//AngelinWednesday, April 19, 2017 5:53:00 pm
Deleteமவுனம் சிறந்தது ஆனா அது நமக்கில்லை மியாவ் :) அது மவுனமா இருக்கிறவங்களுக்கு//
ஹா ஹா ஹா எப்பூடி இப்பூடிக் கரெக்ட்டாக் கண்டு பிடிக்கிறீங்க?:) கோபத்தைக்கூட ஒரு நாளைக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் சிரிச்சிடுவேன் நான்:)..
இருந்தாலும் நான்.. “செய் அல்லது செத்துப்போ” என்னும் கொள்கையோடு வாழும் பேர்வழியாக்கும்:).. இதுபற்றி பதிவா சொல்கிறேன்ன் ரைம் கிடைக்கட்டும்:).
இல்லியே இப்படி என் பேரை போட்டதே வம்புக்கு இழுக்கத்தான் மக்களே :)
ReplyDeleteநீங்க இழுத்தாலும் இழுக்கலைனாலும் நான் துரத்தி துரத்தி அடிப்பேன் டாம் அன்ட் ஜெரில வர எலி மீ தான் :)
///AngelinMonday, April 17, 2017 9:57:00 pm
Deleteஇல்லியே இப்படி என் பேரை போட்டதே வம்புக்கு இழுக்கத்தான் மக்களே :) //
அவ்வ்வ்வ் அபச்சாரம் அபச்சாரம்ம்ம்:) நான் எவ்ளோ நல்ல பிள்ளையா.. யாரையும் வம்பிழுக்க மாட்டேன் எனச் சொன்னால்கூட.. சுழட்டிச் சுழட்டி அடிப்பேன் என ஒரு அப்பாவிப் பிள்ளையைப் பார்த்துச் சொல்வது எந்த வகையில் நியாயம் சொல்லுங்கோ:).. மீ மெளனமாய் இருக்கிறேனாக்கும்:)..
பூனை தூங்கிட்டால் எலிக்குக் கொண்டாட்டம்தான்:).. ஹா ஹா ஹா ஜெரிக்குச் சொன்னேன்:).
ஐ ரியலி எஞ்சாய் திஸ் டாம் அண்ட் ஜெர்ரி ஹிஹிஹீ
Deleteகீதா
ஐயோ அதிராவை டாம்னு சொல்லிப்புட்டேனோ....ஆ!!!! ஏஞ்சல்!!
Deleteகீதா
வாங்கோ கீதா வாங்கோ.. என்னாது அதிராவை டாம் என்று சொல்லிட்டீங்களா?:) ஹா ஹா ஹா.. எவ்ளோ அடிச்சாலும் டாம் தாங்குதெல்லோ:)
Deletehaaa :) haa tom cat
Delete///AngelinWednesday, April 19, 2017 5:51:00 pm
Deletehaaa :) haa tom cat//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னா ஒரு சிரிப்பூ.. ஒத்துக்கொண்டிட்டேனாம்ம்:).. ஃபிரீஸ் ஆக்கி விட்டிடுவேன்:) மில்க் ல ஜெரியை ஃபிரீஸ் ஆக்கியதைப்போல:)
[img]http://egyptianstreets.com/wp-content/uploads/2016/05/pablo-81.png[/img]
Delete//http://egyptianstreets.com/wp-content/uploads/2016/05/pablo-81.png//
Deleteஹா ஹா ஹா:)
கழுத்து மாட்டி ,காப்பு தோடு எல்லாம் வண்ண மயமா இருக்கு ஆனா எனக்கு தங்கம் மட்டுமே ஒத்துக்கும் இதெல்லாம் என் பொண்ணு விதவிதமா வச்சிருக்கா அவளுக்கு கபேர்ட்ல அடிச்சி விடறேன் இது மாதிரி
ReplyDeleteஎனக்கு டெய்லி உடுப்புக்கேற்ப மாத்துவதுதான் பிடிக்கும், அதுவும் நித்திரையில் நகைகள் போட்டிருப்பது பிடிக்காதெனக்கு.. அதனால கோல்ட் எனில் கழட்டி கழட்டிப் போடமுடியாதென்பதால், அவை எல்லாம் பத்திரமாக இருக்கு:)..
Deleteயேஸ் செய்து குடுங்கோ, நிறைய இருப்பின் இப்பூடி ஏதும் செய்தால்தான் ஈசி.
நானும் நிறைய பாட்டில்ஸ் வைச்சிருக்கேன் elderberry juice அழகான ஷேப் ..நான் எல்லா பாட்டிலில் வெளில சணல் /ஜூட் சுத்தி அதுமேல பூக்களை ஓட்டுவேன் அது போல செய்யுங்க பாட்டில் விழுந்தாலும் உடையாது ..
ReplyDeleteநானும் நிறைய பாட்டில்ஸ் வைச்சிருக்கேன் ஹீஹீ
Delete//வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)///
Deleteஉங்க வீட்டுக்கு வருவடென்றால் ஒத்த காலில்தான் வர வேண்டுமா என்ன
//AngelinMonday, April 17, 2017 10:12:00 pm
Deleteநானும் நிறைய பாட்டில்ஸ் வைச்சிருக்கேன் elderberry juice அழகான ஷேப் ..நான் எல்லா பாட்டிலில் வெளில சணல் /ஜூட் சுத்தி அதுமேல பூக்களை ஓட்டுவேன்//
ஓம் அஞ்சு, உங்க கிரிஸ்ப்ஸ் ரின் கைவேலை பார்த்திருக்கிறேன், சணல் சுத்தியது, செய்ய நினைச்சேன் ஆனா இன்னும் அப்படி செய்யவில்லை:(
///Avargal UnmaigalTuesday, April 18, 2017 6:12:00 am
Deleteநானும் நிறைய பாட்டில்ஸ் வைச்சிருக்கேன் ஹீஹீ///
வாங்கோ ட்றுத் வாங்கோ.. நிறைய பாட்டில்களோ? அப்போ இப்பவே ஆரம்பிச்சிடுங்கோ.. அஞ்சு சொன்ன சணல் சுத்தும் வேலையை ஹா ஹா ஹா... அந்த ஃபிரிஜ் இருக்கும் கராஜ் ஐ இதனால அலங்கரிச்சு மாமியை அசத்துங்கோ:)
//Avargal UnmaigalTuesday, April 18, 2017 6:15:00 am
Delete//வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)///
உங்க வீட்டுக்கு வருவடென்றால் ஒத்த காலில்தான் வர வேண்டுமா என்ன//
ஹா ஹா ஹா நிறைய பாட்டில்கள் இருக்குது என்றீங்களே.. அதுதான் நிதானமாக இருக்கிறீங்களோ எனச் செக் பண்ணவே வலது கால்:) இடதுகாலை வச்சால்ல்.. சரி வாணாம் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).. மிக்க நன்றி ட்றுத்.
ரைட்டு நமக்கு அவசியமில்லாத ஐயிட்டமாவுல இருக்கூ......
ReplyDeleteவாங்கோ கில்லர் ஜி வாங்கோ... என்ன பொசுக்கென இப்பூடிச் சொல்லிட்டீங்க.. இப்பூடி சுயநலமாக இருக்கப்பூடா சொல்லிட்டேன்ன்:).. இந்த ஐடியாப் பார்த்துக்கொண்டு போய், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லலாமெல்லோ:) ஹா ஹா ஹா சும்மா சொன்னேன்.. மிக்க நன்றி கில்லர் ஜீ.
Delete"இது வீடா ? இல்லை கடையா ?" என்று ஒருகணம் திகைத்து விட்டேன்... உங்களின் திறமைக்கும் (பொறுமைக்கும்) பாராட்டுகள் சகோதரி...
ReplyDeleteவாங்கோ சகோ டிடி வாங்கோ... ஹா ஹா ஹா எனக்கு இப்படியான நகைகள் கலெக்ட் பண்ணுவது ஒரு பொழுதுபோக்கு.. விருப்பம்.
Deleteமிக்க நன்றி டிடி.
உங்க திறமையை செயல் மூலமாய் வெளிபடுத்தி இருக்கீங்க ,டைரிக் குறிப்புக்கு உதாரணமே நீங்கதான் :)
ReplyDeleteவாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:) புகை வரப்போகுது:) மிக்க நன்றி.
Deleteஉதாரண புருஷி என்ற பட்டத்தை வழங்குகிறேன் ,எப்படி புகை வருதுன்னு பார்ப்போம் :)
Deleteஹா ஹா ஹா மீண்டும் பகவான் ஜீ... பார்த்தீங்களோ புகை மூட்டம் அதிகமானதால இன்று முழுவதும் எங்கும் வர முடியல்ல.. யாருக்கும் வோட் போடவும் முடியல்ல:)
Deleteஹா ஹா ஹா மிக்க நன்றி.
ஹையோ ஹையோ வயசானாலும் கண்ணு தெரியாது :) cat
Delete///AngelinWednesday, April 19, 2017 5:48:00 pm
Deleteஹையோ ஹையோ வயசானாலும் கண்ணு தெரியாது :) cat///
ஹா ஹா ஹா பார்த்தீங்களோ பகவான் ஜீ..:) இன்னும் தேம்ஸ் பக்கம் புகை குறையேல்லை:).
தோடுகளுக்கு நல்ல ஐடியா. என் மகளுக்கு (ஹஸ்பண்டுக்கும்தான்) இதுபோல் ஒன்று செய்துகொடுக்கணும்.
ReplyDeleteநீங்கள் எழுதியிருக்கும் பழமொழியும் நல்லா இருக்கு.
வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ.. ஊர் போகிறபோது இம்முறை இப்பூடிச் செய்துகொடுத்து உங்கள் ஹஸ்பண்ட்டிடம் நல்ல பெயர் வாங்குங்கோ ஹா ஹா ஹா:).. தோடுகள் வைக்க, செயின் கொழுவ என நிறைய டிசைன் டிசைனான ரெடிமேட் கபேர்ட்ஸ்(குட்டிக் குட்டியா) விக்குது... விலையும் அதிகம், ஆனா அவற்றில் 4,5 சோடிகள் மட்டுமே அடுக்க முடியும்..
Deleteமிக்க மிக்க நன்றிகள்.
இன்று என்னோட வோட் அஞ்சு* :)
ReplyDelete(*அதாவது ஐந்தூஊஊஊஊ)
வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ..நல்லவேளை.. பிரக்கட்ட்ட்ட் போட்டுக்காட்டியதால் தப்பித்துக்கொண்டீங்கள்:).
Deleteகடைசியில் சொல்லியுள்ள இரு பழமொழிகளும் அருமை.
ReplyDeleteமிக்க நன்றி..
Delete//பழகலாம் வாங்கோ... புதிசு புதிசாய் தெரிஞ்சு கொள்வதற்கு வயதும் இல்லை கால நேரமும் இல்லை, அதனால பயப்பூடாமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)..//
ReplyDeleteஆஹா, அருமையான அழகான செண்டிமெண்டான அழைப்பூஊஊஊஊஊ.
அப்போ இடதுகாலைத் தூக்கிக்கொண்டு நொண்டி அடித்துக்கொண்டே வரணுமா?
///அப்போ இடதுகாலைத் தூக்கிக்கொண்டு நொண்டி அடித்துக்கொண்டே வரணுமா?//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு இந்த விபரீத ஆசை எல்லாம் இப்போ இந்த வயதில்... மாமர நிழலில் நொண்டி அடித்து விளையாடியதெல்லாம் ஒரு காலம்..
ஊசிக்குறிப்பு-1:
ReplyDeleteஅனைவரதும் கவனத்துக்கு.. இம்முறை நான் அஞ்சுவை வம்புக்கு இழுக்கவில்லையாக்கும்.. //
அஞ்சு சார்பில் அதிராவுக்கு நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
//ஏனெனில் மீ இஸ் எ குட் கேள்:) //
இதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டோம். எங்கட அஞ்சு வந்து அவங்க வாயால் இதனைச் சொல்லணுமாக்கும்.
///அஞ்சு சார்பில் அதிராவுக்கு நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்./பார்த்தீங்களோ உங்களுக்குப் புரியுது அஞ்சுவுக்குப் புரிய மாட்டுதாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சரியான சந்தேகப்பேர்வழி:) ஹையோ சொல்லிடாதையுங்கோ:).
Deleteகைவேலை, கால்வேலை அனைத்தும் அய்ய்ய்கோ அய்ய்ய்ய்கு.
ReplyDeleteஇவையெல்லாம் கஷ்டப்பட்டு நீங்களே செய்ததா? நம்பவே முடியவில்லை, அதிரா.
உண்மையிலேயே திறமை இருந்தால், ஒரு கடை வைத்தால் நன்கு வியாபாரம் ஆகி பலகோடிகள் சம்பாதிக்கலாமே அதிரா ! அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
நான் செய்தது அவற்றை அயகா ஒழுங்கு படுத்தி, தேவையான நேரம் டக்குப் பக்கென எடுப்பது எப்படி என்பது மட்டுமே.. மற்றும்படி இப்படி கழுத்துக்கு காதுக்குச் செய்யவென.. அனைத்துப் பொருட்களும் வாங்கி வருசக்கணக்கா இருக்குது... 2,3 செய்தேன்.. இனியும் செய்யோணும்.
Deleteயேஸ்ஸ் பலகோடிதான் சம்பாதிக்கோணும்.. இப்போ என்ன வயசா போயிட்டுது:) சுவீட் 16 தானே?:) காலமிருக்கே இன்னும்.. சம்பாதிச்சிடலாம்ம்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.
//அடுத்து, காப்பு, கை மாட்டிகளுக்கான ஐடியா கைவசம் இருக்கு.. இனித்தான் செய்து முடிக்க வேணும்.//
ReplyDeleteஅதன்பிறகு ஒட்டியாணமும் செய்யும் உத்தேசம் ஏதும் உண்டோ ? :)
ஒட்டியாணம் செய்யும் ஆசை இருக்கு, ஆனா அஞ்சுவுக்கு செய்ய மாட்டேன்ன்ன்:).. ஒட்டியாணம் போட, இடுப்பு குட்டியாக இருக்கோணும் தெரியுமோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).
Deleteமிக்க மிக்க நன்றிகள் கோபு அண்ணன் அனைத்துக்கும்..
கர்ர்ர்ர்ர் :) ஒட்டியாணம் வேணாம் கொலுசு போதும் ..ரொம்ப ஹெவி போட்டா இடுப்பு உடையும் .ஏற்கனவே வெயிட் குறைஞ்சேனத்துக்கே பூஸ் மயங்கி இன்னும் .நான் size zero ஆகினா இந்த பூனை என்னாகுமோ தெரில :)
Deleteசே..சே..சே.. என்னாதூ ஸீறோ சைஇசா?:) நோ ஒ நோஓ நான் இதுக்கு மேல மெலியமாட்டேன்ன்.. எனக்கு ஹெல்த்துடன் அயகும் முக்கியம்:)... ஹா ஹா ஹா... அதனால நீங்க ஸீரோ சைஸ்க்கு வாங்கோ.. மீ கச்சான் வறுத்திட்டு வாறேன் புறுணம் பார்க்க:).
Deleteகைவேலைகள் பிரமாதம். ஆனால் இப்படி செய்து வைத்துக்கொண்டே இருந்தால் இவற்றை எல்லாம் சேர்த்து வைக்கவே தனி ரூம் வேண்டுமே!
ReplyDeleteவாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ... இல்ல இல்ல இதில் இருக்கும் நகைகள் நான் செய்ததல்ல.. அவை நான் தேடித்தேடி வங்குபவை:) + பிரசண்ட் கிடைப்பவை:)..
Deleteஅவற்றை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதைத்தான் நான் காட்டியிருக்கிறேன், மேலே ஒரு லிங் கொடுத்திருக்கிறேன்.. அதில் [///. இந்த லிங்கில் பாருங்கோ எப்படி செய்தேன் என்பதனை..///] இப்படி இருப்பதை கிளிக் பண்ணிப் போய்ப் பார்த்தால் புரியும்.
நான் செய்தால் இப்படி எனக்கே சேர்த்து வைக்கமாட்டேன், எல்லோருக்கும் கொடுத்திடுவேன். நிறைய பெயிண்ட் பண்ணி, கையால் பூப்போட்டு பில்லோ கவர்ஸ்.. தைத்து .. இப்போ என்னிடம் ஒன்று கூட இல்லை.. தைத்து முடித்ததும் யாருக்காவது கொடுத்து விடுவேன்... இப்பவும் பெயிண்ட் பண்ணிக்கொண்டிருக்கிறேன், முடிச்சதும் இங்கின வெளிவரும்:).
தம வாக்குப் போட்டாச்.
ReplyDeleteமிக்க நன்றி, உங்களைப்போல எப்பவும் போடுவோர்தான் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.. ஏனையோர் போட மாட்டினமாம்ம்:) அப்போ நான் எப்போ மகுடம் சூட்டுவதாம்?:)... ஹா ஹா ஹா.
Deleteடைரிக் குறிப்பு சொல்வது சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்று!
ReplyDeleteநல்ல உவமை சொல்லிட்டீங்க.. மெளைனத்தைப்போல் சிறந்த ஆயுதம் வேறேதும் இல்லை.. மிக்க நன்றி வரவுக்கும்.. பின்னூட்டங்களுக்கும்.
Deleteஅழகு!
ReplyDeleteநிறைய இருக்கும்போது இப்படி தனித்தனியாக வைத்துக்கொள்வது வசதி! இல்லைன்னா தேடவே இரண்டு மணி நேரம் ஆகும்! - ஒவ்வொரு முறையும்!
வாங்கோ வெங்கட் வாங்கோ.. அதேதான், இப்படி ஒழுங்கு பண்ணாத காலத்தில், திரும்ப திரும்ப ஒன்றிரண்டையே போட முடிஞ்சுது.. இப்போ தேடும் வேலை மிச்சம், பார்வைக்கும் அழகும் நீட்டாவும் இருக்கும்... குப்பையாக வைத்திருப்பது பிடிப்பதிலை எனக்கு.
Deleteமிக்க நன்றி.
ரொம்ப அழகாக இருக்கு அதிரா....ரொம்ப கலைநயம் மிக்கதாக இருக்கு உங்கள் வேலைப்பாடுகள்...இப்படிச் செய்து வைப்பது அழகு மட்டுமல்ல ஈசியா எடுத்துக்கலாம் இல்ல?!!! சூப்பர் ஐடியா....எக்சிபிஷன் போல இருக்கு அதிரா!!!
ReplyDeleteகீதா
வாங்கோ கீதா மிக்க நன்றி, ஆரம்பத்தில் லாச்சியில் போட்டு வைத்துவிட்டு, திரும்ப எடுக்க மிகவும் கஸ்டப்பட்டேன், அதனால நானாக யோசிச்சு கண்டு பிடிச்சு, இப்போ ஹப்பியா இருக்கும் போடும்போது, கழட்டிய உடனும் இதில் கொழுவி விட்டிடுவேன்..
Deleteபூஸ் ரொம்ப ரொம்ப அழகு...உங்க எக்சிபிஷனை விட பூஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு!!
ReplyDeleteதுளசி: சகோ உங்கள் கைவண்ணம் அழகு!! என் பெண்ணிற்கும் நிறைய இது போன்றவை உண்டு. அதை எல்லாம் வீட்டில் இப்படி மாட்ட இடம் இல்லை எல்லாம் பெட்டிக்குள் வைத்து உள்ளே...கீதா வந்தால் ஆர்கனைஸ் செய்வார்...பார்ப்போம்...மிக அழகு உங்கள் கைவேலை...
//பூஸ் ரொம்ப ரொம்ப அழகு...உங்க எக்சிபிஷனை விட பூஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு!!//
Deleteபூஸ் என்றாலே அழகுதானே கீதா:) நான் பூஸ் ஐச் சொன்னேன்:).. ஹா ஹா ஹா.. அஞ்சுட கண்ணில இது தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கோ:).
வாங்கோ துளசி அண்ணன்.. ஓ அப்படியா இதைக் காட்டினாலே மகளுக்கு, செய்திடுவா. என்னிடம் இருப்பதைப்போல வோல் கபேட் இருந்தால் ஓகே அல்லது அவவின் ரூமில் ஒரு பக்க சுவரில்கூட செய்யலாம்.. ரெஜிபோமை மட்டும் பாவித்து, தேவை இல்லை எனில் கழட்டி விட்டிடலாம்..
Deleteமிக்க மிக்க நன்றி துளசி அண்ணன்.
ஊசிக்குறிப்பு:
கீதா அழகா செய்து குடுங்கோ துளசி அண்ணனின் மகளுக்கு, ஆனா பீஸ் ஐ மட்டும் என் எக்கவுண்ட்டுக்கு அனுப்பிடுங்கோ:)... ஹா ஹா ஹா.
ReplyDeleteபுய்ப்ப வாஸ்..ம்ம் ..நல்லா இருக்கு
நானும் செஞ்சு பார்க்கிறேன் ...ஆன ஜாம் பாட்டில் தான் இருக்கு ..
அணிகலன் மாட்டிகள் ...சூப்பர்
வாங்கோ அனு வாங்கோ.. இது குச்சியும் பூத்திலோடயே சேர்ந்து வந்தமையால் அதுக்கு பூச் செய்வது ஈசியாக இருந்தது..
Deleteமிக்க நன்றி அனு.
வணக்கம் பூசாரே !
ReplyDeleteஎல்லா ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு ஒன்னுமட்டும் புரியல்ல அது என்னெண்ணா கூத்து கரகத்துக்கு போட்டு ஆடுவாங்களே அதுமாதிரித்தான் மாலைகளும் தோடுகளும் வச்சிருக்கீங்க தங்கத்தை மருந்துக்கும் காட்டலியே வாட் இஸ் த றீசன் ,,,,!
மேலும்
ஊசிஇணைப்புக் கவிதை அழகு
அஞ்சுவை வம்புக்கு இழுக்காதது நல்ல மாற்றம்
புய்ப்ப வாஸ் நல்ல செயல்
எல்லாத்தையும் விட எவ்வளவோ வேலைக்கு மத்தியிலும் இரண்டுநாள் கழித்தாவது ஓடிவந்து கருத்தும் வாக்கும் இட்டேனே அதை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏன்னா
என்னைப்பற்றி நானே பெருமைப்படுவதில் இருக்கும் கிளுகிளுப்பு போல ஆயா சுட்ட வடையிலும் இருக்காது ஐயர் போட்ட நாமத்திலும் இருக்காது ஆங் ......
தம+1
வாங்கோ சீராளன் வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னாது கரகத்துக்கு போடுவதா?:).. அப்பூடியும் கொஞ்சம் வாங்க ஆசைதான் இங்கு கிடைக்குதில்ல:).
Delete///தங்கத்தை மருந்துக்கும் காட்டலியே வாட் இஸ் த றீசன் ,,,,! // ஹா ஹா ஹா தற்பெருமை பிடிக்காதெனக்கு:).. அம்மாட்ட எப்பவும் பேச்சு வாங்குவேன்ன்.. எவ்வளவு தங்க நகையை வச்சுக்கொண்டு, இப்படி இமிட்டேசனைப் போட்டுக்கொண்டு திரிகிறாயே என:).
//அஞ்சுவை வம்புக்கு இழுக்காதது நல்ல மாற்றம் //
ரொம்ப நன்றி, பார்த்தீங்களோ மீ ரொம்ப நல்ல பிள்ளை:) இனிவரும் காலங்களில் நான் அஞ்சுவை வம்புக்கு இழுத்தாலும்.. இந்த முறை இழுக்காததை மறந்திடக்கூடா சொல்லிட்டேன்ன்:).
ஹா ஹா ஹா உங்கட வேலைக்கு மத்தியிலும் ஓடிவந்து மறக்காமல் கொமெண்ட் போட்டதுக்காக.. உங்கள் கிளுகிளுப்பு எப்பவும் உங்களுக்கு நிலைச்சிருக்கோணும் என.. கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரருக்கு அடுத்த லீவில போகும்போது மேஜர் பொங்குவார் என நேர்ந்து விட்டிடுக்கிறேன்:).. ஹா ஹா ஹா
மிக்க நன்றி சீராளன்..
போத்தலில் கலர் மாபிள் கல் போட்டீங்க. தோடுகளை தொங்க வச்சீங்க. இதெல்லாம் ஓகேய். ஆனா தத்துவத்துக்கு பொட்டு வச்சீங்க பாருங்க. அங்க நிக்குறீங்க. :-)
ReplyDeleteவாங்கோ கவிக்கா வாங்கோ..
Deleteஹா ஹா ஹா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக் கண்டுபிடிச்சிருக்கிறீங்க பாருங்க.. இதுக்காகவே ஆயவை உங்களிடம் ஒப்படைக்கலாம்ம்:) சொறி டங்கு ஸ்லிப் ஆச்சூ.. பரிசு தரலாம் எனச் சொல்ல வந்தேன்.
மிக்க நன்றி கவிக்கா.
மிக நன்று ஆதிரா அவர்களே
ReplyDeleteவாங்கோ மாணவர் உலகம் வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு, மிக்கமகிழ்ச்சி. உங்கள் புளொக் ஐடி தந்தால் நல்லாயிருக்குமே...
Deleteமிக்க நன்றி.