விவாகரத்து!!!
ஆனால் வெளி நாடுகளில் தனியாக இருக்கும் பெண்களை, அதிக அக்கறையாக அரசாங்கம் பார்த்து, அதிக சலுகைகளை வழ(ள:))ங்குகிறது, என்பதாலோ என்னவோ, கணவர் முறைத்துப் பார்த்தாலே, “அடிச்சுப்போட்டார்ர்ர்ர்ர்” எனப் போலீஸுக்குப் போன் பண்ணினால், போலீஸ் ஓடிவந்து, எக்கதையும் கேட்காதாம், முதலில் காப்புப் போட்டுக் கூட்டிப்போய், 3,4 நாட்கள் கம்பியினுள் வைத்துப்போட்டுத்தான், விளக்கம் கேட்பார்களாம். பெண்களுக்கே இங்கு முன்னுரிமை.
அதனால் வெளிநாடுகளில் ஆண்களுக்கு மனைவியோடு மோத சரியான பயம்.. என சமீபத்தில் கேள்விப்பட்டேன்:)). இது நகைச்சுவைபோல தோன்றினாலும், எவ்வளவு கொடுமையான விடயம். நம் நாட்டுப் பெண்களால், நம் கலாச்சாரங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களால், எப்படி இப்படி முடிகிறது, என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை.
கடசிவரை ஒத்துபோகாத, முடியாத விடயமான விவாகரத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சின்னச் சின்னக் காரணங்களுக்கெல்லாம், விவாகரத்து என ஓடினால் என்ன செய்வது?. திருமணம் முடித்து குழந்தைகள் கிடைத்தபின்பு, குழந்தைகளுக்காகவேனும் அஜஸ்ட் பண்ணி வாழப் பழகலாமே. பெற்றோர் பிரிந்தால் பாதிக்கப்படப்போவது, குழந்தைகள்தானே. எவ்வளவு வசதியாக வாழ்ந்தாலும் குழந்தைகளின் மனதில் ஒரு ஏக்கம் குடிகொண்டு விடுமல்லவா.
எனக்குத் தெரிந்து, இரு குடும்பங்கள்(கனடாவில்), கணவனை வீட்டுக்கு வரப்படாது என மனைவி சொல்லிப்போட்டார், அதனால் தனி அறைகளில் கணவன் தங்கியிருந்து, வீட்டுக்குப் பணம் கொடுத்து, குழந்தைகளையும் பார்த்து வருகிறார்கள். கணவன்மார் சொல்கிறார்கள், 45 வயதாகிவிட்டது, இனி என் குடும்பத்தைவிட்டு இன்னொருவரை நாட முடியுமோ? இப்படியே காலத்தை ஓட்ட வேண்டியதுதான் என உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பல கதைகள் அறிந்திருக்கிறேன்.
சமீபத்தில் பூஸ் ரேடியோவில்:) கேட்டேன், ஒருவர் சொல்கிறார், நானும் என் மனைவியும் விவாகரத்தாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் இன்றுகூட மனைவியோடு போனில் பேசி சுகம் கேட்டேன், நான் ஊருக்குப் போனபோதுகூட என் மனைவிதான் என்னை எயார்போர்ட் வரை வந்து வழியனுப்பி வைத்தார். எமக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றின, அதனால் பிரிந்தோம், இப்போ நான் என் பிள்ளைகளுக்கு கிட்டவே ஒரு வீட்டில் தனியாக இருக்கிறேன், மனைவி பக்கத்து நாட்டில் இன்னொரு பிள்ளையோடு இருக்கிறார் என. ஏனோ இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விவாகரத்துப் பெறாமலேயே இப்படி இருந்திருக்கலாமோ?.
இங்கிருக்கும் ஒரு மகசினில் படித்தேன், ஒரு white boy சொல்கிறார், தான் ஒரு பெண்ணோடு இருந்தாராம் ஒன்றாக. தமக்குள் எல்லாமே ஒத்துப்போனதாம், அப்பெண், நல்ல குணமாம், அழகாம், தனக்கு எல்லாமே பிடித்திருந்ததாம், ஆனால், ஒரே ஒரு பிரச்சனையாம், என்னவென்றால், அவவின் கால்கள் எப்பவுமே ஐஸ் கட்டிபோல குளிராம். நல்ல ஆழ்ந்த உறக்கத்தில், அவவின் கால் தன்னில் பட்டால், தான் அப்படியே துடித்துப்போய் விழிப்பாராம். இப்படி வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாதே என...
அதனால் தான் அவவை விட்டு மெதுவாக விலத்தி விட்டேன், அவவுக்குக் காரணம் சொல்லவில்லை, சொன்னால் கவலைப்படுவா என, கொஞ்சம் கொஞ்சமாக விலத்தி விட்டேன் எனச் சொல்லியிருந்தார்... சரி விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))).
இந்தக் கவிதை எழுதி.. 2 வருடத்துக்கு மேலாகப்போகிறது... இன்றுதான் அதுக்கு காலநேரம் அமைஞ்சிருக்கு:))
நாளைக்கு
முடிவு தெரிந்துவிடும்
நமது ஏழு வருட
திருமணபந்தத்தின்
இறுதி அத்தியாயம்
அரங்கேறப்போகிறது!
எனக்கு
நெஞ்செல்லாம்
வலிக்கிறது
ஏன் உன்னில் இந்தத்
திடீர் மாற்றம்?!
ஒற்றைக் காலில்
நின்றுதானே- என்னை
ஒருதலையாய்க்
காதலித்தாய்!
உன் பெற்றோரின்
எதிர்ப்பையும்
முறியடித்து
என்னைக்
கைப்பிடித்தாய்!
சிவனே என்று
என்பாட்டில் இருந்த
என்னை - உன்
கண் ஒளியைக்
காட்டி -உந்தன்
இதயத்தில்
சிக்க வைத்தாய்!
திடீரென
என்ன வந்தது
என்னை ஏன்
வெறுக்கிறாய்?
நான் நானாகத்தான்
இருக்கிறேன்
நீதான் நீயாக இல்லை!
பொழுது விடிந்ததும்
நம் விவாகரத்து
அறிவிக்கப்பட்டுவிடும்
சிந்திக்க இன்னும்
அவகாசம் இருக்கிறது!
உன் முடிவை
மாற்றுவாயா? இல்லை,
விவாகரத்துப் பெற்றபின்
நான் - எனக்கு
கொடுக்கப்போகும்
இறுதிமுடிவை
உனக்குச் சொல்லலாமா?!
====================__()__=====================
இது பூஸ் வானொலி நிலையம், வானிலை அறிக்கை.. வாசிப்பவர் மியாவ்வ்வ்வ்வ்:)))).
இன்று மேகம் சற்று தெளிவாகக் காணப்படும், வானத்தில் அங்காங்கு பூஸ் குட்டிகள் தென்படும்:)).. குளிர் தாக்கம் அதிகமாகும். பூஸ் குட்டிகளைப் பார்த்து வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகிட வாணாம் என, பூஸ் வானொலி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது:))).
இது இன்றுகாலை எடுத்த படம், நேரிலே சூப்பராக இருந்திச்சா... காரில் ஓடும்போதே “கிளிக்” பண்ணிட்டேன்.
கடவுளே என்ன இது வட்டம் வட்டமாக இருக்கு, பூஸ் குட்டியேதும் தெரியேல்லையே என அடிக்கக்கலைக்கப்போகினமே.... உஸ்ஸ்ஸ்ஸ் முருங்கை உச்சிக்குப் போயிட வேண்டியதுதான்.... ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).
======================================================
சொன்னால் புரியாது
சொல்லுக்குள் அடங்காது
நீங்கெல்லாம் என்மேல
வச்ச பாசம்....
.................. வேல் +வெப்பன்:)))))
====================================================
|
Tweet |
|
|||
ME MEE MEEE THA FIRSTUUUUU
ReplyDeleteமுழுசா படிக்காம வந்துட்டேன் .இருங்க படிச்சிட்டு வரேன்
ReplyDeleteஉண்மையிலேயே மனம் வருந்தத்தக்க விஷயத்த பற்றி எழுதி இருக்கீங்க அதிரா
ReplyDeleteபெரும்பாலான விவாகரத்துக்களுக்கு ஈகோ தான் காரணம்
ReplyDeleteசில இடங்களில் பாத்தா அஞ்சாறு வருஷம் லவ் செய்து கல்யாணம் பண்ணி ஒரு மாதத்தில் பிரிந்தவர்களும் இருக்காங்க .புரிதல் இல்லாத வாழ்க்கை
ReplyDeleteவேல் +வெப்பன்:)))))//
ReplyDeleteஒரு பிள்ளை அமைதியா பின்னூட்டம் கொடுக்க விடறீங்களா கர்ர்ர்ரர்ர்ர்ர்
ஆ... அஞ்சூஊஊஊஉ.. நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)).. ஏனையோரெல்லாம் திட்டப்போகினம், அதிரா டக்குடக்கெனத் தலைப்பைப் போடுறா என:)))).. அதனால எனக்குப் பக்குப் பக்கென இருக்கு:)))).
ReplyDeleteஉண்மைதான் நிறையக் கேள்விப்படுறேன்.. எம்மவர்களிடையே... பின்பு வாறேன்.. கொஞ்சம் வேலையாக இருக்கிறேன்.
மிக்க நன்றி அஞ்சு தலைப்பைப் பார்த்ததும் ஓடி வந்தமைக்கு.
இப்போ வெளிநாடுகளில், குறிப்பாக நம்மவரிடையே விவாகரத்து, ஒரு விளையாட்டுப்போல பெருகி வருவதைக் காண முடிகிறது//
ReplyDeleteநம்ம ஊர்ல கூட நடக்குது அதிரா
angelin said... 6
ReplyDeleteவேல் +வெப்பன்:)))))//
ஒரு பிள்ளை அமைதியா பின்னூட்டம் கொடுக்க விடறீங்களா கர்ர்ர்ரர்ர்ர்//
ஹா..ஹா...ஹா.. நீங்க போடுங்க போடுங்க.. அப்பூடியே இதை என்னவென்று கண்டு பிடிங்க பார்க்கலாம்....:))).
//வேல் +வெப்பன்:)))))//
மாயா எப்பூடியும் கண்டுபிடிப்பார்:)))).
ME MEE MEEE THA FIRSTUUUUU-------------noooooooooooooooo
ReplyDeletemeeeeeeeeeeeee the firstuuu..may be 10th..:)
இந்த புரிதல் இல்லா பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் தான் பாவம்
ReplyDeleteVELAAYUTHAM
ReplyDelete97vathu பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிதைக்கு...
நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன்
நூறாவது பதிவுக்கு
முன்பதிவு வாழ்த்துக்கள்
PHOTOS VERY NICE...
ReplyDeleteசில இடங்களில் மாமியார் ATROCITY
ReplyDeleteசில இடங்களில் மருமகள் அட்டகாசம்
ReplyDeleteகவிதை சூப்பர்
ReplyDeleteஎன் நண்பி ஒருவர் சொன்னார் கார்ல கணவர் பக்கத்தில் அவர் தாயார் தான் உட்காருவாரம் .
ReplyDeleteஇங்கே ஒரு பிரிட்டிஷ் ஆள் கணவருடன் வேலை செய்பவர் சொல்லிருக்கார் நேற்று .சுமார் இருபது வருடம் திருமண வாழ்க்கை பிடிக்கலன்னு அவர் மனைவி தன முதல் காதலனுடன் போய் விட்டாராம் .கூடவே தன ஐந்து பிள்ளைகளையும் கூட்டி கொண்டு
ReplyDeleteரொம்ப டயர்டா இருக்கு நாளைக்கு லண்டன் போகணும் அதனால் இத்துடன் நிறைவு செய்கிறேன்
ReplyDeleteangelin (163)
ReplyDeleteஜெய்லானி (51)//
நான் இத்துடன் திங்களன்று தான் வருவேன் ..நான் கூறியவை யாரையும் HURT செய்திருந்தா மன்னிச்சிருங்க .மனதுக்கு பட்டதை எழுதி விட்டேன் .
ReplyDelete.இன்னும் நிறைய இருக்கு எல்லார் கருத்தையும் படிச்சிட்டு பிறகு தொடர்வேன்
என்னகல்யாணமோ என்ன விவாகரத்தோ பிள்ளைகள் பாடுதான் கஷ்ட்டம் அதைப்பத்தி ஏன் யோசிக்கவே மாட்டேங்குராங்க தன் சுகம் தன் விருப்பம் பத்தி மட்டுமே யோசிக்கிராங்க.
ReplyDelete//angelin said... 18
ReplyDeleteஎன் நண்பி ஒருவர் சொன்னார் கார்ல கணவர் பக்கத்தில் அவர் தாயார் தான் உட்காருவார//
இது கொடுமைதான்...
//angelin said... 20
ரொம்ப டயர்டா இருக்கு நாளைக்கு லண்டன் போகணும் அதனால் இத்துடன் நிறைவு செய்கிறேன்//
மிக்க நன்றி அஞ்சு, நலமே போய்வாங்க. லண்டனில் நல்ல வெக்கையாமே கர்ர்ர்ர்ர்ர்ர்:)).
angelin said... 21
ReplyDeleteangelin (163)
ஜெய்லானி (51)////
கடவுளே.. அழுதாலும் அட்டமத்துச் சனி விடாதாமே... ஹா..ஹா..ஹா... அப்பூடியாச்சு ஜெய்யின் நிலைமை.
ஜெய், காலை மரத்திலிருந்து கீழ வைப்பதும்:)), அஞ்சுவின் பின்னூட்டம் பார்த்து விர்ரென உச்சிக் கொப்புக்குப் போவதுமாகவே 2 நாளாக இருக்கிறார்:))))...
அஞ்சு ..கீப் இட் அப்:)))))).
வாங்க சிவா...
ReplyDeleteநீங்கதான் கரீட்டாப் பத்து... ஆனா
//siva said... 13
97vathu பதிவுக்கு வாழ்த்துக்கள்
கவிதைக்கு...
நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கணக்கில பிழை விட்டிட்டீங்களே.... இப்போ 87 ஆவது பதிவுதான் போகுது அவ்வ்வ்வ்வ்வ்:))).
மியாவும் நன்றி சிவா.
வாங்க லக்ஸ்மி அக்கா.
ReplyDeleteநியாயமான ஒரு விஷயத்துக்காக விவாகரத்தெனில் ஓக்கே. அவரவர் பிரச்சனை அவர்களுக்கும் ஆண்டவனுக்கும் மட்டும்தான் தெரியும்.
ஆனா இப்போ காரணமேயில்லாமல் நடக்குதே... உலகில் என்னவென்னவெல்லாம் நடக்குது... எனக்கு சிலநேரம் சில செய்திகளைக் கேட்கும்போது, உலகம் அழியும் நிலைமை நெருங்கிவிட்டதென்றே தோன்றும்.
மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.
பசுமை நிறைந்த நினைவுகளே...
ReplyDeleteபாடித்திரிந்த பறவைகளே...
பறந்து செல்கின்றோம்...
எந்த நேரம்... எந்த புளொக்கில்...
இனி என்று காண்போமோ?:)))))))))
இது எப்போ.. தோ வாரேஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்
ReplyDeleteவழ(ள:))ங்குகிறது... டவுட்டா எதுக்கு வம்புன்னு ..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹா ஹா...
ReplyDeleteஆமாம் தோழி ,
ReplyDeleteசிறு விசயங்களுக்கு எல்லாம் விவாகம் ரத்து ஆகிறது .
உட்கார்ந்து சிந்தித்தால் ஒன்றுமே இல்லை என இருக்கும் விசயத்திற்கு விவாகரத்து.
ஆமாம் தோழி நீங்கள் சொல்வது உண்மை தான்
ஆனானாலும் பெண் ஆனாலும் தவரிழைப்பவர்கள்
தண்டனைக்குரியவர்கள் .
ஆனால் பெண் புகாரளித்தால் விசாரணை அப்புறம்
முதலில் உள்ளே வை என்று சொல்வது என்ன நியாயம் தெரிய வில்லை
அங்கு மட்டுமில்லை ,இப்பொழுது எல்லா இடத்திலும் இது போல் தான்
உள்ளே வைத்து பின் விசாரணையில் நிரபராதி என்று அறிந்தால் அவன் நிலை
ஆண்களுக்கு மானம் அவமானம் இல்லையா
என்னவோ போங்க மனசுல பட்டது சொன்னேன் .
திடீரென
ReplyDeleteஎன்ன வந்தது
என்னை ஏன்
வெறுக்கிறாய்?
நான் நானாகத்தான்
இருக்கிறேன்
நீதான் நீயாக இல்லை!//
உண்மையான வரிகள்
நீதான் நீயாக இல்லை
இன்னும் வரிகள் தோன்றுகிறது
அப்புறம் அதிரா சொல்ல மறந்துட்டேன்
ReplyDeleteவாகனம் ஒட்டும்பொழுது அலைபேசி மட்டுமில்லை
கவனம் சிதறும் எந்த செயலும் செய்ய கூடாது
இருந்தாலும் படம் அருமை
சூரியன் அஸ்தமனம் ஆகிறது ,அதனால் வீடெல்லாம் இருட்டாக இருக்கா அல்லது யாரும் விளக்கு போடவில்லையா ,காரின் ஹெட்லைட் வெளிச்சம் கூட இல்லையே
புகைப்பட கோணம் அருமை
ஆமா கேட்க மறந்துட்டேன் ,மேலே ஒருத்தர் ஏன் மிகவும் சோகமாக இருக்கார் ?
ReplyDeleteஅது கவிதையா உண்மை சம்பவமா மியாவ்....... ஏனோ அந்த கவிதை மனதை வலிக்க செய்தது...
ReplyDeleteஅவைகளுக்கு சோறு போடுங்க ,பாவம் .கண்ணுல தண்ணியே வராம அழுவுது பாருங்க !
ReplyDeleteநான் நானாகத்தான்
ReplyDeleteஇருக்கிறேன்
நீதான் நீயாக இல்லை!//
இடைவெளியில் சரி தான்... இடைவெளி குறைந்தால் நீ நீயாக இருந்தாலும் அது கஷ்டத்தைக் கொடுக்கும்.. இதில் புரிந்துணர்வு இருந்தால் கஷ்டம் இஷ்டமாகி வாழ்க்கை பெஷ்ட்டாகும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இறுதிமுடிவை
ReplyDeleteஉனக்குச் சொல்லலாமா?!//
சொல்லவேயில்ல தொடருமாஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்..
ஆணும் , பெண்ணும் சரிசமம்னு சொல்றாங்க... ஆனா விவாகரத்து ஆனா மட்டும் ஆண்கள் கிட்ட இருந்து பெண்கள் கிட்ட ஜீவானம்சம் கேக்குறாங்க என்ன கொடுமை சரவணன் இதூஊஊஊஊஊஊஊ
ReplyDeleteமாயா.. வாங்க மாயா...
ReplyDeleteஇன்னுமா மேல வருகுதில்லை அவ்வ்வ்வ்வ்வ்:)).
ழ, ள என்னை ஆட வைக்கிறதே கர்ர்ர்ர்ர்:)).
மியாவும் நன்றி.
வாங்க ரமேஸ்.
ReplyDelete//அங்கு மட்டுமில்லை ,இப்பொழுது எல்லா இடத்திலும் இது போல் தான்
//
இலங்கையில் அப்ப தொடக்கம் இப்பவரை எனக்குத் தெரிந்த ஊர்களில், விவாகரத்து என்பதை கேள்விப்படவேயில்லை. பிரச்சனை, சண்டை அடிபிடி எல்லாம் உண்டு, ஆனால் விவாகரத்து அறியவில்லை.
ஆனால் இப்போ வெளிநாட்டில் இலங்கைத்தமிழர்களில் விவாகரத்து, பிரிந்திருத்தல் அதிகமாகுது.
//உள்ளே வைத்து பின் விசாரணையில் நிரபராதி என்று அறிந்தால் அவன் நிலை
ஆண்களுக்கு மானம் அவமானம் இல்லையா
//
இதே கேஸ் ஒன்று நடந்தது. இளம் குடும்பம். இரு குழந்தைகள். அப்பெண்ணுக்கு என் வயதுதான் இருக்கும், எமக்கு சொந்தமோ பழக்கமோ இல்லை. ஆனா ஒருதடவை இன்னொருவரோடு போனபோது சந்தித்திருக்கிறேன்.
அவர்கள் வீட்டில் குழந்தைக்கு பேர்த்டே நடந்ததாம். அதுக்கு கணவன் உறவுகள், மனைவி உறவுகள் வந்து போயிருக்கிறார்கள். போனபின், கணவனுக்கு ஏதோ திருப்தியில்லை, தன் வீட்டுக்காரரை வரவேற்றதில் குறை என மனைவிக்குச் சொல்லியிருக்கிறார், மனைவி எதிர்த்துப் பேசியிருக்கிறா, உடனே கணவர் அடித்திருக்கிறார், அடி பலமாகப் பட்டுவிட்டதுபோலும், மனைவி மயங்கி விழுந்துவிட்டா.
கணவன் பயந்துபோய் ஆம்பிலன்ஸ்சுக்குப் போன் பண்ணியிருக்கிறார். ஆம்பியூலன்ஸுக்குப் போன் பண்ணினால் பெரும்பாலும் போலீஸும் கூடவே வரும். அதுபோல் போலீஸும் வந்திருக்கிறது. விசாரித்த இடத்தில், அடித்தது தவறுதானே ... கொண்டுபோய் 3 நாட்கள் ஜெயிலில் போட்டாச்சு. பின்பு வெளியே வந்த கணவனுக்கு தன்னுள் அவமானமாகிவிட்டது. நல்ல மரியாதையான குடும்பம், ஏதோ வாக்குவாதத்தால் இப்படி ஆகிவிட்டது.
ஆனால் கணவன் மனைவி ஒற்றுமையாகி விட்டார்கள். இருப்பினும் கணவனால் தாங்க முடியவில்லை. தூக்குப் போட்டுத் தொங்கிவிட்டார்.... இதை விதி என்னென்பதா... என்னவென்பது?.
விவாகரத்து பதிவ படிக்கும்போதூஊஊ... ஆண்கள் அதோகதின்னு தான் தோணுது... ஆமா லிவிங் டுகதர் லைஃப் வாழ்ந்தா அவங்களுக்கெல்லாம் இந்த விவாகரத்து அப்படியெல்லாம் இருக்காதுல்ல..... ஒரு வகையில மனசார பிரியறது கூட நல்லது தான் பட் யார் மனதும் வருந்தாத வகையில் இருக்கனும்
ReplyDeleteஆனால் கணவன் மனைவி ஒற்றுமையாகி விட்டார்கள். இருப்பினும் கணவனால் தாங்க முடியவில்லை. தூக்குப் போட்டுத் தொங்கிவிட்டார்.... இதை விதி என்னென்பதா... என்னவென்பது?.//
ReplyDeleteஇது அந்த நாட்டு சட்டம் சரியில்லை என்று அர்த்தம்... விசாரிக்காமல் மனைவியின் புகார் இல்லாமல் ஜெயிலில் வைப்பது தவறு தானே... அது மட்டுமல்ல அவமானம் என்று இந்த சமூகத்தைப்பார்ப்பதே தவறு... அப்படி பார்க்கும் சமூகத்தை தூக்கி எறியவும் தயங்க கூடிய மனம் வேண்டும்...
ஆனால் மனைவிக்கு அடிப்பதென்பது எவ்வளவு இழிவான செயல், ஒரு நல்ல கணவனுக்கு அது அழகல்ல.... என்னால் அதை மட்டும் மன்னிக்கவே முடியாது. என்ன பிரச்சனையானாலும் பேசித் தீர்க்கலாமே.
ReplyDelete//வாகனம் ஒட்டும்பொழுது அலைபேசி மட்டுமில்லை
கவனம் சிதறும் எந்த செயலும் செய்ய கூடாது
//
முற்றிலும் உண்மையே ரமேஸ். என் கணவரும் சொல்வார் ரைவ் பண்ணும்போது விளையாட வேண்டாம் என.
நான் பின்னே வாகனம் வருவது குறைவாக இருப்பின் மட்டும் இப்படிச் செய்வதுண்டு:)), அது தப்புத்தான்.. ஒரு செக்கண்ட் போதுமே ஆக்ஸிடெண்ட் ஆவதற்கு.
//அதனால் வீடெல்லாம் இருட்டாக இருக்கா அல்லது யாரும் விளக்கு போடவில்லையா ,காரின் ஹெட்லைட் வெளிச்சம் கூட இல்லையே //
ReplyDeleteஅது சூரிய வெளிச்சம் ரோட்டில் படவில்லை, சூரியனை முகில் மறைத்தது, ஆனா ரோட் நல்ல வெளிச்சமாகவே இருந்தது, ஸ் ரீட் லைட் அணைந்திருக்கு பாருங்கோ. இங்கு ஸ் ரீட் லைட்டெல்லாம்... வெளிச்சத்துக்கு ஏற்ப கூடக் குறையப் பத்தும், பகலில் இருட்டினால் தானாக ஓனாகிவிடும். என் மொபைலால் எடுத்தமையால் அப்படி இருக்கு:)
//ஆமா கேட்க மறந்துட்டேன் ,மேலே ஒருத்தர் ஏன் மிகவும் சோகமாக இருக்கார் ?//
ஹா..ஹா..ஹா... அது ஆரும் பின்னூட்டம் போட வரமாட்டாங்க என நினைத்து:))).
//அவைகளுக்கு சோறு போடுங்க ,பாவம் .கண்ணுல தண்ணியே வராம அழுவுது பாருங்க !//
ஹா..ஹா..ஹா... சோறு வேண்டாமாம்.. கே எவ் சி வேணுமாம்..:))), இப்போ விரதம் எல்லோ எப்பூடிக் கொடுக்கலாம்:)))))
மியாவும் நன்றி ரமேஸ்.
வாவ் விடிகாலை எழும் பழக்கம் உள்ளதா... கடைசி படம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ... அதிகாலையில் எழுந்தவன் தோற்றதாக சரித்திரம் இல்லைஈஈஈஈஈ
ReplyDeleteathira said.
ReplyDelete//வேல் +வெப்பன்:)))))//
மாயா எப்பூடியும் கண்டுபிடிப்பார்:)))).//
ஆஹா கிட்னிக்கு வேலையாஆஆஆ.... வேலும் ஒரு வெப்பன் தான்.. ஆனால் வேல்+வெப்பன் என்றால்.... வேலோடு வரும் அப்பனோ.... கிட்னிக்கு என்னாச்சு...... இன்னைக்கு நித்திரை அம்பேல்ல்ல்ல்ல்ல்ல்ல்
டாப் கமேண்டட்டர்ஸ்ல சம்திங் புராசஸ் நடக்குதுன்னு நினைக்கிறேன்ன்ன்ன்... 222 இருந்த எண் 211 மாறிடுச்சு... அங்க மியாவுது 70வது இருந்தது 63 ஆகிடுச்சூஊஊஊஊஊ.. மேலிடத்து மாற்றங்கள் என நினைக்கிறேன்... இந்த எம்பட் கோடோட கன்ஃப்யூசன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
ReplyDeleteமாயா... எனக்கு நிறையக் கதைகள் கேட்பேன், அதை வைத்து திடீரென மனதில் இப்படியான கவிதை கதை தோன்றும், சில வேளைகளில் என் கவிதை படித்து நானே கண்கலங்குவதும் உண்டு:)))... அது கற்பனையில் உருவாக்கிய கவிதைதான்.
ReplyDeleteஇந்த லிங் பாருங்க மாயா, இது தமிழ் நாட்டில் யாரோ எழுதியதென நினைக்கிறேன், எனக்கு ஒரு நண்பி பல வருடங்களுக்கு முன் தந்தா, அதை படிக்கும்போதெல்லாம் கண்கலங்கிவிடும், 100 தடவைகளுக்கு மேல் படித்திருப்பேன்:)))). எனக்கு என்னவோ சோகமான கதை, கவிதை, படங்கள் தான் பிடிக்கும், இப்போ அதை மாற்றி விட்டேன், இப்போ சோகம் படிக்கப் பிடிப்பது குறைவு கிக்..கிக்..கீஈஈஈஈ:))).
http://gokisha.blogspot.com/2010/01/blog-post.html
//சொல்லவேயில்ல தொடருமாஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்..//
நோஓஓ.. முடிவு உங்கள் கைகளில்:))))).
//ஆண்கள் கிட்ட இருந்து பெண்கள் கிட்ட ஜீவானம்சம் கேக்குறாங்க என்ன கொடுமை சரவணன் இதூஊஊஊஊஊஊஊ//
உண்மைதான், அதனாலதான் துணிந்து விவாகரத்துக் கேட்கிறார்களோ?:)))).
//ஆமா லிவிங் டுகதர் லைஃப் வாழ்ந்தா அவங்களுக்கெல்லாம் இந்த விவாகரத்து அப்படியெல்லாம் இருக்காதுல்ல//
ReplyDeleteஇங்கே விவாகமாகாமலே குழந்தைகள் கூடப் பெற்றுக்கொள்கிறார்கள். நான் நினைக்கிறேன், இந்த டிவோஸ் பிரச்சனைக்குப் பயந்துதான், இங்குள்ள ஆண்கள் திருமணம் முடிக்கப் பயப்படுகிறார்கள், வாழ்க்கை முழுவதும் பணம் கொடுக்க வேண்டுமே என்ற பயம். இங்கு பெரும்பாலும் ஆண்கள்தானாம் கேட்க வேண்டும் “will u marry mee~ ena. அதுக்காகத்தானாக்கும் காதலர் தினம் வந்துது, அன்று நிறைய ஆண்கள்... இக்கேள்வி கேட்டு காதலியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவார்களாம் என்றெல்லாம் அறிந்தேன்.
சமீபத்தில் ஒரு ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணைக் கண்டேன், அவ சொன்னா, தான் தன் போய்ஃபிரெண்ட்டோடு 7 வருடமாக இருக்கிறாவாம், இனி எப்படியும் ஊருக்குப் போய் திருமணம் முடித்திட வேண்டும் என்றா. 2012 டிசம்பருக்குள் முடித்திடுங்க எனச் சொல்லிட்டேன், அதுக்குமுன் நான் முடித்திடுவேன் எனச் சொல்லிச் சிரித்தா.
//விசாரிக்காமல் மனைவியின் புகார் இல்லாமல் ஜெயிலில் வைப்பது தவறு தானே//
இல்லை மாயா, போலீஸிடம், தான் அடித்தேன் என உண்மையைக் கணவர் சொல்லிட்டார். இங்கு மனைவியை அடித்தால் மறுபேச்சில்லை, ஜெயில்தான்.
//அவமானம் என்று இந்த சமூகத்தைப்பார்ப்பதே தவறு... அப்படி பார்க்கும் சமூகத்தை தூக்கி எறியவும் தயங்க கூடிய மனம் வேண்டும்...//
ReplyDelete100 வீதம் உண்மைதான் மாயா, நானும் அப்படித்தான் சொல்வதுண்டு, நாம் மனச் சாட்சிக்கு விரோதமில்லாமல் நடக்க வேண்டும், அதை விடுத்து, சமூகத்து பயப்படக்கூடாது, எம்மைப் பார்த்துச் சிரிக்கும் சமூகம், எமக்கொரு பிரச்சனை வந்தால் தலை கொடுத்து ஆடுமோ? அதுக்கும் வேடிக்கைதான் பார்க்கும்.
//அதிகாலையில் எழுந்தவன் தோற்றதாக சரித்திரம் இல்லைஈஈஈஈஈ//
ஹா..ஹா..ஹா.. மாயா... அது அதிகாலை இல்லை, 8.30 மணி. இங்கு இனி காலை 9 மணிக்குத்தான் இருட்டு விலகும், 3.30 க்கு இருட்டிவிடும், லைட் போட்டுத்தான் வாகனம் ஓட்ட வேண்டும்.
//கிட்னிக்கு என்னாச்சு...... இன்னைக்கு நித்திரை அம்பேல்ல்ல்ல்ல்ல்ல்ல்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அது விஜயின் வேலாயுதம்...:)) அஞ்சு கண்டுபிடிச்சிட்டா அவ்வ்வ்வ்:)))
மியாவும் நன்றி மாயா.
//மாய உலகம் said... 48
ReplyDeleteடாப் கமேண்டட்டர்ஸ்ல சம்திங் புராசஸ் நடக்குதுன்னு நினைக்கிறேன்ன்ன்ன்.//
ஹா..ஹா..ஹாஅ... நானும் நெடுகவும் கவனிக்கிறேன், அது என்னவென்றால் ஒருநாள் கமெண்ட் போடாட்டில் அதிகம் கொமெண்ட் போட்டோரின் எண் குறையும் அவ்வ்வ்வ்வ்வ்:))). அதுக்காக எண்டாலும் தினமும் கொமெண்ட் போடோணும்.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அது விஜயின் வேலாயுதம்...:)) அஞ்சு கண்டுபிடிச்சிட்டா அவ்வ்வ்வ்:)))
ReplyDelete//
ஆஹா கவனிக்க மறந்துட்டமே... இல்லன்னா காப்பி அடிச்சிருக்கலாம்.. சரி விடுறா மீசையில மண் ஒட்டல் சூட ஒரு காப்பியாவது குடிப்போம்........... பட் ஃபில்டர் இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல
//அதிகாலையில் எழுந்தவன் தோற்றதாக சரித்திரம் இல்லைஈஈஈஈஈ//
ReplyDeleteஹா..ஹா..ஹா.. மாயா... அது அதிகாலை இல்லை, 8.30 மணி. இங்கு இனி காலை 9 மணிக்குத்தான் இருட்டு விலகும், 3.30 க்கு இருட்டிவிடும், லைட் போட்டுத்தான் வாகனம் ஓட்ட வேண்டும்.
//
அதானே பாத்தேன்...
அதுக்குமுன் நான் முடித்திடுவேன் எனச் சொல்லிச் சிரித்தா.
ReplyDelete//
ஆள காலி பண்ணிருவாய்ங்களோ?!!!!!!!
கணவன் மனைவியை அடித்தால் ஜெயில்... மனைவி கணவனை அடித்தால் அவார்டு ஏதும் கொடுப்பாங்களாஆஆஆஆஅ :-)
ReplyDeleteமௌன பூகம்பம் - விரக்தியின் தாகம் கானல் நீராய் நினைவலைகள்....
ReplyDeleteஇப்படி ஒரு கவிதையை உங்களிடத்திலே நான் எதிர்பார்க்கவில்லை... அந்த ஒரு நிமிடம் பார்க்கும் தருணங்கள்.. வெடித்த இதயங்கள்... எல்லாம் ஒன்றாய் ஒட்டபட்டது போல் தோன்றினாலும் விடை தெரியாத வலியாய் விடை பெற்றது பயணம்ம்ம்ம்ம்... என் வாழ்விலும் இந்த கவிதையில் கால் வாசி கடந்து விட்டேன்... அவளை குழந்தை குட்டிகளுடன் பார்க்கும் போது மீதி கவிதையும் என்னுள் அரங்கேறும் என நினைக்கிறேன்... கவிதையை வரிகளாய் படிக்கவில்லை அந்த தாடி வைத்த நபராகவே உருவெடுத்து உருகி நின்றேன்... மனம் கருகி விட்டது...... உங்கள் பதிவுகளிலே மிகவும் பிடித்த பதிவு........... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்
இது போன்ற கவிதை லிங்கை கொடுக்கவும்
ReplyDeleteமாயாவையும் அதிராவையும் கமெண்டு பொட்டில பார்த்ததும் எனக்கு சும்மாவே இருக்கா முடியல ok guys .எப்படியும் ஒரு வாரம் கழித்து வருவேன்
ReplyDeleteஎன்று நம்புகிறேன் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சினை ..எனக்காக இறைவனிடம் வேண்டிகொள்ளுங்கள்.bye goodnight.
angelin said... 59
ReplyDeleteமாயாவையும் அதிராவையும் கமெண்டு பொட்டில பார்த்ததும் எனக்கு சும்மாவே இருக்கா முடியல ok guys .எப்படியும் ஒரு வாரம் கழித்து வருவேன்
என்று நம்புகிறேன் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சினை ..எனக்காக இறைவனிடம் வேண்டிகொள்ளுங்கள்.bye goodnight.//
சென்று வாருங்கள்... உங்கள் பிரச்சனை காணாமல் போகட்டும்.. கண்டிப்பாக உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்....
ஆதங்கமான பகிர்வு.பதிவை வாசித்து விட்டு கருத்து எழுதலாம் என்றால் ஸ்க்ரோல் செய்து கை தான் வலிக்குது,அதற்குள் கருத்து பரிமாற்றம் குவிந்து விட்டதே!
ReplyDelete//சரி விடுறா மீசையில மண் ஒட்டல் சூட ஒரு காப்பியாவது குடிப்போம்..//
ReplyDeleteஹா..ஹா...ஹா.. மாயா சினிமாத்துறை, இதெல்லாம் தூசிபோல கண்டுபிடிச்சிடுவார் என்றல்லோ நினைத்தேன், சுருட்டின மீசையில் மண் ஒட்டிடிச்சே அவ்வ்வ்வ்வ்:)))
//அதானே பாத்தேன்...//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), அதிகாலையில் எழுந்து எங்க போகச் சொல்றீங்க?:))) இங்கு எல்லாமே 9 க்குத்தான் தொடங்கும்.
//ஆள காலி பண்ணிருவாய்ங்களோ?!!!!!!!//
ஹா..ஹா..ஹா... நல்ல எண்ணமே வராதோ?:))), அவங்க இன்னும் லைவ் ல செட்டில் ஆகவில்லையாம், அதுதான் வெயிட்டிங்காம், எனக்கேதும் புரியல்லே.. உங்களுக்கு???.
/கணவன் மனைவியை அடித்தால் ஜெயில்... //////மனைவி கணவனை அடித்தால்////// அவார்டு ஏதும் கொடுப்பாங்களாஆஆஆஆஅ :-)///
ReplyDeleteஹா..ஹா..ஹா..... அது அன்பின் உச்சக்கட்டமாக்கும்:)))).
//இப்படி ஒரு கவிதையை உங்களிடத்திலே நான் எதிர்பார்க்கவில்லை//
அது என் கவிதை இல்லை மாயா. நான் இலங்கை இடம்பெயர்வுகளுக்கெல்லாம், ஆமி செக்கிங்களுக்கெல்லாம், பத்திரப்படுத்தி, இங்கு கொண்டு வந்து சேர்த்தேன், புளொக்கில் போட்ட பின்னரே நிம்மதி, இனி காவும் வேலை இல்லை, எங்கிருந்தாலும் படிச்சுக்கொள்ளலாம்.
//என் வாழ்விலும் இந்த கவிதையில் கால் வாசி கடந்து விட்டேன்... //
ReplyDeleteகாதலித்ததில் பலபேரின் நிலைமை இப்படித்தானே இருக்கு... அதுதான் காதலிக்கக்கூடாது. ஆனாலும் விதியில் எழுதியிருந்தால் அது நடந்துதானே தீரும், யாராலும் தடுக்க முடியாது. சிலதை அனுபவித்தே ஆகவேண்டும், அது விதி. “இதுவும் கடந்து போகும்”.
//இது போன்ற கவிதை லிங்கை கொடுக்கவும்//
இன்னொரு கவிதை ஒரு கொப்பியில் பார்த்து எழுதி வைத்திருந்தேன். தேடிப் பார்க்கிறேன், கிடைத்தால் போடுகிறேன்..
மியாவும் நன்றி மாயா. சனி, ஞாயிறில் இங்கு நானும் பிசியாகிடுவேன்... பின்னூட்டம் தாமதமானால் குறை நினைத்திடாதீங்க.
//angelin said... 59
ReplyDeleteமாயாவையும் அதிராவையும் கமெண்டு பொட்டில பார்த்ததும் எனக்கு சும்மாவே இருக்கா முடியல//
வாங்க அஞ்சு... ஹா..ஹா.ஹா.. எனக்கும் அப்படித்தான், தானாடா விட்டாலும் தசை ஆடும்.
//ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சினை ..எனக்காக இறைவனிடம் வேண்டிகொள்ளுங்கள்.bye goodnight.//
நலமே போய் வாங்க.... அதுதான் பாட்டுப் போட்டேனே... வீட்டுக்கு வீடு வாசல்படி. எல்லோரும் நினைப்பது எமக்குத்தான் பிரச்சனை என, ஆனா உலகில் மனிதராகப் பிறந்தாலே பிரச்சனைதான்:))). நல்லிரவு அஞ்சு. எல்லாமே நல்லதுதான் நடக்கும், அதேபோல நடக்கும் அனைத்தும் நன்மைக்கே.
வாங்க ஆசியா...
ReplyDelete//பதிவை வாசித்து விட்டு கருத்து எழுதலாம் என்றால் ஸ்க்ரோல் செய்து கை தான் வலிக்குது,///
ஹா..ஹா..ஹா... எனக்கும்தான்.
மிக்க நன்றி ஆசியா.
அது என் கவிதை இல்லை மாயா. நான் இலங்கை இடம்பெயர்வுகளுக்கெல்லாம், ஆமி செக்கிங்களுக்கெல்லாம், பத்திரப்படுத்தி, இங்கு கொண்டு வந்து சேர்த்தேன், புளொக்கில் போட்ட பின்னரே நிம்மதி, இனி காவும் வேலை இல்லை, எங்கிருந்தாலும் படிச்சுக்கொள்ளலாம்.//
ReplyDeleteஇனி காவும் இல்லை.... ஆரூஊஊ சொன்னதூஊ காவும் உண்டு களவும் உண்டு.. தேம்ஸ் நதியில் மாயா எதுக்கு ரெஸ்ட் எடுக்கிறாருன்னு தெரியும்மாஆஆஆஆ ஹா ஹா புறப்புடுறா ராஜேஷேஏஏ பூவுக்குள் பூகம்பம்.. ஆவ்வ்வ்வ்வ் மௌன பூகம்பம்பத்த களவாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட
ஹா..ஹா..ஹா... நல்ல எண்ணமே வராதோ?:))), அவங்க இன்னும் லைவ் ல செட்டில் ஆகவில்லையாம், அதுதான் வெயிட்டிங்காம், எனக்கேதும் புரியல்லே.. உங்களுக்கு???.//
ReplyDeleteசம்பாதிக்க ஆரம்பிக்கலையா... இல்ல களட்டி விட எண்ணமாஆஆஆஆஆ ... லைவ்ல செட்டில் ஆக வில்லை என்கிற அர்த்தம் என்பதெ தவறு தானே... செட்டில் என்று அர்த்தம் என்றால் பணம் சம்பாதிப்பது என்று அர்த்தம் கொள்கின்றனர்ர்ர்ர்ர்.... கர்ர்ர்ர்ர் லைவ்ல செட்டில் யாருமே அவப்படா... அப்ப தான் லட்சியம் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்... இன்னும் மேலே போய்க்கொண்டெ இருப்போம்.. என்னடா மாயா உளர்றான்னு பாக்குறீங்களா.. அதுக்கு அந்த லேடி சொன்னதே பரவால்லங்குறீங்களா.. புரியாமலே இருந்துருக்கலாங்குறீங்களா ஹா ஹா ஹா
//ஆனால், ஒரே ஒரு பிரச்சனையாம், என்னவென்றால், அவவின் கால்கள் எப்பவுமே ஐஸ் கட்டிபோல குளிராம். நல்ல ஆழ்ந்த உறக்கத்தில், அவவின் கால் தன்னில் பட்டால், தான் அப்படியே துடித்துப்போய் விழிப்பாராம். இப்படி வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாதே என...// ஹா!!!!!!! இதை ஒழிச்சு வைங்கோ பூஸ். ;)
ReplyDeleteஅக்கா கலக்கி புட்டிங்க ..
ReplyDeleteஇன்றைய மனிதங்கள் சிறு பிரச்சினைக்கும் சோர்ந்து போய்
விவாகரத்து தான் தீர்வு அதையே நாடு கிறார்கள் ..
பின்னர் பிடிக்காத ஒரு வாழ்வினை தேடி தேடி அழிந்தும் போகின்றனர் ..
உங்க கவிதை கலக்கல் ..
ரொம்பவே டச்சிங் ..
வாழ்த்துக்கள் .. படம் அழகோ அழகு ..
mmm
ReplyDeleteஹ்ம்ம்ம்ம்....என்னத்தை சொல்ல..?
ReplyDeleteரொம்ப லேட்டா வந்துட்டேனில்லே..வேறொன்றுமில்லை.அக்கா செம பிஸி.
ReplyDelete//அதனால் வெளிநாடுகளில் ஆண்களுக்கு மனைவியோடு மோத சரியான பயம்//இங்கே மட்டும் என்ன வாழுதாம்.எங்கள் வீட்டில் வேலைப்பார்க்கும் மாதம் ஒரு முறையாவது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்து கணவனை போலீஸ் அழைத்து சென்று ரத்தம் வர நாலு சாத்து சாத்தி அனுப்புவதே வாடிக்கை.எண்ணி நாலு நாள் இல்லை ரெண்டே நாளில் கணவனும் மனைவியும் ஒற்றுமையாகை மறு சண்டைக்கு அடித்தளம் அமைப்பார்கள்.சம்பளம் கொடுக்கும் எங்களுக்குத்தான் கஷ்டம்.ஏன்னா பிரச்சினை வரும் சமயம் செமத்தியா லீவு போட்டுவிடுவாளே!
ReplyDeleteஹலோ அதிரா ,எப்பிடி இருக்கீங்க ,ஓடிவாங்க
ReplyDeleteபூசார் உங்களை அன்பு உலகத்திற்கு அழைக்கிறார்
அவர் தரும் நாடகத்தை கண்டு களியுங்கள் .
பூசாரும் எலியாரும்
நான் வந்துட்டேன். ஆனா நாளக்கி வாரேன். க்ர்ர்ர்ர்ர்... சொல்லப்பிடாது.
ReplyDeleteHi Athira,first time here in ur interesting blog.I appreciate ur concern on divorcing.Husband and Wife Iruvarum 'Nam kududumbam' enbathukku mukiathuvam thanthal promblems will get solved.Luv to follow this blog dear.Visit my foodblog when U get time.Following U.
ReplyDelete'விவாகரத்து' பற்றிய கருத்துக்கள், அந்த ஒற்றைப்புகைப்படம், கவிதை எல்லாமே அருமையாக, அழகாக இருக்கு அதிரா!
ReplyDeleteமாயா என்ன சொல்றீங்க?:))) எனக்கு இருந்ததையும் இழந்தாய் போற்றி ஆகிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
ReplyDeleteஇல்ல மாயா.... அவர்களுக்கும் என்ன என்ன சொல்ல முடியாத பிரச்சனைகளோ? எமக்கு எல்லாம் சொல்ல மாட்டார்கள்தானே. அவரவர் பிரச்சனை அவரவருக்குத்தான் தெரியும், அதனால எல்லோரும் சந்தோசமாக இருக்க, 2012 வழி செய்யட்டும் ஓக்கே?:))))))).
வாங்க இமா...
ReplyDeleteஇமா said... 69
//..// ஹா!!!!!!! இதை ஒழிச்சு வைங்கோ பூஸ். ;)///
ஹா.... ஹா..ஹா... பாவம் கிரிஸ் அங்கிள்....:))),இவ்வளவு நாளும் விட்டுவச்சிருக்கிறாரே:))))... உஸ் இமா படிச்சதும் கிழிச்சிடுங்க:))))).
றீச்சர் அது “ஒளிச்சு”:))))).
சுப்பிறியா இமா:))).
வாங்க அரசன்,நீண்ட நாட்களுக்குப் பின்னர், மறவாமல் வந்திருக்கிறீங்க.
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி.
ஆஆஆஆ ஜலீலாக்கா வாங்க.... எப்பூடி மால்வயர்:)) உங்களை உள்ளே விட்டார்:)))).
ReplyDeleteஅப்போ இனி ஓக்கேதானே? மிக்க நன்றி ஜலீலாக்கா.
வாங்க ஸாதிகா அக்கா..
ReplyDelete//ரொம்ப லேட்டா வந்துட்டேனில்லே..வேறொன்றுமில்லை.அக்கா செம பிஸி.///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
மியாவ்வ்வ் !!! ஸாதிகா அக்கா வந்திட்டா, அந்த லிஸ்ட்டில இருந்து பெயரை ரிமூவ் பண்ணிடுங்க:)), ஆனா மறக்காமல் பிரக்கட்டில() போட்டு வையுங்க, ஒருநாள் லேட் என :)))) ஓக்கை:))).
எங்க இருந்தாலும், என்ன கலர் தோல் எண்டாலும், மனிஷர் எண்டால் எல்லோருக்கும் ஒரே குணம்தான் இல்லையா ஸாதிகா அக்கா?:)).
விவாகரத்து எடுப்போரைப் பற்றி எதுவும் சரிபிழை சொல்லத்தெரியவில்லை , அவரவர் பிரச்சனை அவர்களுக்கே வெளிச்சம்.
ஆனால் சில விஷயங்கள், தற்கொலைமுயற்சி மாதிரி, அந்த நிமிடத்து மனநிலை அப்படியான முடிவை எடுக்கத் தூண்டும். நல்ல உறவுகள் நல்ல நண்பர்கள் இருப்பின், தவிர்க்கலாமோ நிறையப் பிரச்சனைகளை என எண்ணத் தூண்டுது.
ஒரு தடவைக்கு 10 தடவை நிதானமாக யோசித்து, அடுத்த மனிதரின் பிரச்சனைகளோடு, தம் பிரச்சனையை ஒப்பிட்டுப் பார்த்தால், இதெல்லாம் பெரிய விஷயமா என எண்ணத் தோன்றும்.
நீங்க புத்திமதி சொல்லுங்க ஸாதிகா அக்கா, உங்கவீட்டு வேலைக்காரம்மாவுக்கு:)).
மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.
வாங்க ரமேஸ், நீங்க நேற்று அழைத்திருக்கிறீங்க, நான் எட்டிக்கூடப் பார்க்கவில்லை நெட்டை..
ReplyDeleteஇன்றுதான் பார்க்க முடிந்தது, அதுக்குள் புதுத்தலைப்பு போட்டுவிட்டீங்க அவ்வ்வ்வ்வ்:)).
உடனே வரமுடியாமல் போனமைக்கு மன்னிச்சுக்கொள்ளுங்க ரமேஸ், சனி ஞாயிறெனில் அப்படித்தான் ஆகிவிடுகிறது நிலைமை:))).
மிக்க நன்றி.
வாங்க அப்துல் காதர்,
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னதெல்லாம் ஒருகாலம்:)), இப்போ ஆரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்குப் பயப்புடீனம் இல்லை:)), அதனால மியாவ்.... கொப்பியில் எழுதுறார், பின்னூடம் போடாதாக்களின் பெயரை எல்லாம்:))).
லிஸ்ட்டில முதலாவதாக இருப்பதே ஜெய் ட பெயர்தான்:)))).
சொல்ல மறந்திட்டேன், நல்ல ஒரு ஏணி வாங்கி புளியமரத்தில சாத்தி விடுவீங்களோ?:))), மளமளவென ஏறிட்டார், ஆனா இறங்க முடியேல்லையாம்:)))).
மியாவும் நன்றி அப்துல் காதர்... சாரி சாரி பாட்ஷா:)).
வாங்க MyKitchen Flavors-BonAppetit!.. நல்வரவு மிக்க நன்றி.
ReplyDeleteஇங்க தமிழில் “என் சமையல்” என ஒராள் எம்மிடம் இருக்கிறா, கூப்பிடுவது எப்படி என பெயர் கேட்டு கிரிஜா என வைத்திருக்கிறோம்.
அதுபோல உங்களை எப்படி அழைப்பது? உங்கள் கிச்சின் எட்டிப் பார்த்தேன் மட்டின் வாசம்... தூள் கிளப்புது... வருகிறேன்.
அதுசரி எப்பூடி என்னைக் கண்டு பிடிச்சீங்க? நீங்க தமிழ்தானே? Nhm writer download பண்ணினால், இங்கு எம்மோடு தமிழிலும் கதைக்கலாமே.
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க மனோ அக்கா...
ReplyDeleteஅனைத்துக்கும் மிக்க நன்றி.
அதிரா,மறக்கவெல்லாம் இல்லை,நீங்க போஸ்ட் பண்ணி 8 மணி நேரம் கழிச்சுத்தான் பாத்தேன். ஆல்ரெடி லேட்டாகிடுச்சு, அதனால் வீகென்ட் கழிச்சு வந்து கமென்ட் போடலாம்னு இருந்தேன். டோன்ட் மைன்ட் யா!
ReplyDeleteஎன்பேர நோட்ல எல்லாம் எழுதவாணாம் மிஸ்.பூஷ்,காத்துலயே எழ்ஹுதிவைங்கோ என்ன? அடுத்த போஸ்ட்டுக்கு கெதியா:) வந்துருவன்,ஓக்கை?
நல்ல பதிவு,நல்ல கவிதை அன்ட் லாஸ்ட் போட்டோ இஸ் நைஸ்! :))))))))
அதனால எல்லோரும் சந்தோசமாக இருக்க, 2012 வழி செய்யட்டும் ஓக்கே?:))))))).//
ReplyDeleteநல்லாருப்போம்.. நல்லாருப்போம்... எல்லாரும் நல்லாருப்போம் ;-))))))))))))))))))
றீச்சர் அது “ஒளிச்சு”:))))).
ReplyDeleteசுப்பிறியா இமா:))).//
ஆஹா மியாவுக்கு கிட்னி பயங்கரமா வேலை செய்யுதூஊஊ... அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் :-)))))))))))))))))))))))
அடுத்தபதிவுக்காவது 10 க்குள்ளார வந்திடவேணுமே எனப்பார்த்தால், ம் பெருமூச்சுதான் விடவேணும். கொம்பியூட்டரும் பிஸி, நானும் பிஸி.
ReplyDelete//ஏனையோரெல்லாம் திட்டப்போகினம், அதிரா டக்குடக்கெனத் தலைப்பைப் போடுறா என:)))).. அதனால எனக்குப் பக்குப் பக்கென இருக்கு:// இந்த பயமெல்லாம் இருக்கா.
முதல் பூஸார் படம் ரெம்ப அழகு.கவிதை மிக அருமையா எழுதியிருக்கீங்க அதிரா.
""திருமணம் முடித்து குழந்தைகள் கிடைத்தபின்பு, குழந்தைகளுக்காகவேனும் அஜஸ்ட் பண்ணி வாழப் பழகலாமே. பெற்றோர் பிரிந்தால் பாதிக்கப்படப்போவது, குழந்தைகள்தானே. எவ்வளவு வசதியாக வாழ்ந்தாலும் குழந்தைகளின் மனதில் ஒரு ஏக்கம் குடிகொண்டு விடுமல்லவா.""
ReplyDeleteசரியா சொன்னிங்க... பல பேர்க்கு இரு புரியறது இல்ல...
இனிய காலை வணக்கம் அக்கா,
ReplyDeleteவீக்கெண்ட் கொஞ்சம் பிசி, அதான் வர முடியலை.
அதனால் வெளிநாடுகளில் ஆண்களுக்கு மனைவியோடு மோத சரியான பயம்.. என சமீபத்தில் கேள்விப்பட்டேன்:)). //
ReplyDeleteஅக்காச்சி என்ன சொல்ல வாறாங்க என்றால்...
ஐயோ...வேணாமுங்க, அவங்களோட வரும் தனக்குப் பயமாம்.....
அவ்வ்வ்வ்
அக்கா காமெடிக்குச் சொன்னேன், பின்னூட்டம் புடிக்கலைன்னா அழிச்சிடுங்க. நிரூபன் வம்பிற்குப் போகாத பையன்.
சண்டைன்னா மீ எஸ்கேப்
நல்லதோர் பதிவு, உண்மையில் ஊரில் இன்றும் எவ்வளவு அடிபட்டாலும் சந்தோசமாக மனம் ஒத்து வாழும் பல தம்பதிகளைக் காண்கிறேன். ஆனால் திருமணம் என்ற கனவினைச் சுமந்து கடல் கடந்து சென்ற பலர் தம் இல் வாழ்க்கையினை ஓரிரு வருடங்களிற்குள் முடித்து விட்டு அவர் தம் நாட்டு வசதிகளைப் பெற்று ஏதோ சந்தோசமாக வாழ்வது போன்று பாசாங்கு செய்து வாழ்கிறார்கள்/
ReplyDeleteபுரிஞ்சுக்கவே முடியலை.
கவிதையில் யதார்த்த பூர்வமான காலத்தின் கோலங்களைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறீங்க/
ReplyDeleteஏமாற்றங்களும், எதிர்பார்ப்புக்கள் உடைந்த பின்னால் எஞ்சியிருக்கும் மன விரக்தியினையும் கவிதை சொல்லி நிற்கிறது.
பெற்றோர் வெளிநாட்டு மோகத்திலும், சீதனச் சந்தையிலும் தம் பிள்ளைகளை விலை கொடுப்பதை விடுத்து, தம் பிள்ளைகளின் மன விருப்பங்களிற்கு மதிப்பளித்து மணஞ் செய்து வைத்தால் இத்தகைய நிலமைகள் ஓரளவிற்கு குறையும் என நினைக்கிறேன்.
ReplyDelete(அதற்காக உள் நாட்டில் இருக்கும் பொடியங்களைப் பற்றியும் சிந்தியுங்கள் பெற்றோரே என்று சொன்னதாக அர்த்தம் ஆகாது;-))))
மாயாஆஆஆ.... 2012 டிஷம்பர் 23 எல்லோருக்கும் நல்லகாலம் பிறக்குதாம், இதை என் நண்பி ஒருவரிடம் சொன்னேன், அவ சொன்னா, இல்ல இல்ல 12.12.12 தானே உலகம் அழியப்போகுதெனக் கதைக்கிறாங்க என்று அவ்வ்வ்வ்வ்வ்:))))).
ReplyDeleteவாங்க அம்முலு, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ரொம்ப லேட்:))), நான் அப்பவும் மியாவுக்குச் சொன்னேன், அம்முலு எப்படியும் வந்திடுவா பெயரை எழுதிடாதீங்க என:))), சொல்லச் சொல்லக் கேட்காமல் எழுதிட்டார்ர் அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).
ReplyDeleteபயம் மட்டுமா... அத்தோடு ரொம்ப ஷை ஆக்க்கும்.. க்கும்...க்கும்...:)).
மியாவும் நன்றி அம்முலு.
ஆஹா.. வாங்க வாங்க மெளனமலர்... புதிதாக வந்திருக்கிறீங்க, நல்வரவு மிக்க நன்றி.
ReplyDeleteஎனக்கொரு சந்தேகம், என்னிடம் புதிதாக வருவோரெல்லாம், என்னோடு பலகாலம் பழகியவர்கள்போலவே வந்தன்றே கதைக்கிறார்கள்:))), அதனால எனக்கும் பலகாலம் பழகிய பீலிங்ஸ்ஸ் ஏற்பட்டுப் போகுது... இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:))).
மியாவும் நன்றி மலர்.
மெளனமான நேரம்... இப்பாட்டு மனதில வந்துகொண்டே இருக்கு... உங்கள் பெயர் பார்த்த நேரம் தொடக்கம்.
ஊசிக்குறிப்பு:
மாயாவுக்கு “மெள” வன்னா எப்பூடி எழுதுவதென்று தெரியாது:))) ஹா..ஹா..ஹா..., அதனால அங்கின மெளனத்தை விட்டுட்டார்... நான் பார்த்தேனே:))). ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க மலர், அவர் இப்போ தேம்ஸ்க்குள்ள:)).
வாங்கோ தம்பி நிரூபன்...
ReplyDeleteஎப்பவுமே ஏதோ ஒரு சாட்டுச் சொல்லித் தப்பிடுவீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
மியாவ்வ்வ்வ் நிரூபனின் பெயரை டிலீட் பண்ணிடுங்க, அதேபோல பிரக்கட்டில,:))) 2 நாள் லேட் எனப் போட்டு வைங்க ஓக்கை:))).
//ஐயோ...வேணாமுங்க, அவங்களோட வரும் தனக்குப் பயமாம்.....
ReplyDeleteஅவ்வ்வ்வ்
அக்கா காமெடிக்குச் சொன்னேன், பின்னூட்டம் புடிக்கலைன்னா அழிச்சிடுங்க. நிரூபன் வம்பிற்குப் போகாத பையன்.
சண்டைன்னா மீ எஸ்கேப்//
எஸ்கேப்பாக விட்டிடுவமா?:))), பிராண்டிடமாட்டோம்???? :)))).
சின்ன வயதிலிருந்தே போலீஸ் ஆமியென்றால், கை, கால் எல்லாம் ரைப் அடிச்சே பழகிப்போச்சு, என் கன்றோலை அது மீறி நடுங்கும். அதனால எங்கேயும் போலீசைக் கண்டால் கணவருக்குப் பின்னால ஒளிச்சிடுவேன்:))) பழக்க தோசம்:))... அப்பூடிப் பட்ட நன் போய் போலீசுக்குப் போன் பண்ணுவனோ?:)))) அவ்வ்வ்வ்வ்:)).
உண்மையிலயே நிரூபன், சொல்வார்களெல்லோ சின்ன வயதில் பயந்தால் அது போகாதென, அது 100 வீதம் உண்மை, எம் நாட்டில் பார்த்துப் பயந்து பயந்து, இப்போ எனக்கு, அவர்களைக் கண்டால் பயம்ம்ம்ம்.
இங்கு ஆமியைக் காண்பது அரிது, எப்பவாவது எங்காவது மோல்களில் யூனிபோமோடு ஷொப்பிங் செய்வார்கள், மற்றும்படி போலீஸ்தான்.
ஆனால் இந் நாட்டில் போலீஸ் யூனிஃபோமோடு நின்றாலும், ஒரு ஷொப்புக்குப் போனால் எம் பின்னே அவர்களும் கியூவில்தான் நிற்க வேண்டும்.
ஆனா லண்டன் போயிருந்தோம் ஒரு தமிழ் இலங்கைக் கடைக்கு. நிறையப் பேர் கியூவில் நின்றோம், எம் பின்னாலே ஒரு அந்த ஏரீயா போலீஸ் ஒபிஷர்போல, அவரும் கியூவில் நின்றார், உடனே முதலாளி வந்து, சேர்..சேர். கம்..கம்... என முன்னே அழைத்து அவருக்கு முதலாவதாக பில் போட்டு அனுப்பினார்.....
நம்மவர் எங்கு போனாலும் வால்பிடிப்பதை(ஹையோ பூஸ் வால் அல்ல:))) விடவே மாட்டார்கள், இது ஒரு வெள்ளையரின் கடையெனில், இப்படியெல்லாம் நடந்தே இருக்காது.
அதிகம் எழுத்துப் பிழையாக இருந்திச்சா, அதுதான் திருத்தினேன்.
நேரமாகுது, மிகுதிக்குப் பின்பு வாறேன் சீயா மீயாஆஆஆஆ.
எங்கட வீட்டில் ஆருமே ஆருக்கும் பயப்புடுறேல்லை:))) நிரூபன், ஏன் தெரியுமோ, இருவருமே ஒரே ராசி, ஒரே நம்பர், அதால எண்ணங்கள் விருப்பங்கள், ஆசைகள் எல்லாமே ஒரே மாதிரியே இருக்கும், சோ.. சண்டைக்கு, எதிர்ப்புக்கு சான்ஸ்சே இல்லை, அதிலயும் நாமதான் எப்பவுமே உஸ்ஸ் என முருங்கில ஏறிடுவமே.. பிறகெப்பூடி?:)))).
ReplyDelete///தம் பிள்ளைகளின் மன விருப்பங்களிற்கு மதிப்பளித்து மணஞ் செய்து வைத்தால் இத்தகைய நிலமைகள் ஓரளவிற்கு குறையும் என நினைக்கிறேன்.//
அப்படியும் சொல்ல முடியாது நிரூபன், லவ் பண்ணி ஒற்றைக்காலில நின்று மணம் முடித்த தம்பதிகள் எத்தனையோ பேர், வீட்டில கதைப்பதே இல்லையாம், வெளி உலகுக்கு மட்டும் தம்பதிகளாக வாழ்கிறார்கள், அதையெல்லாம் கேள்விப்பட்டேதான் எனக்கு, இக்கவிதை எழுதும் எண்ணம் வந்துது.
////(அதற்காக உள் நாட்டில் இருக்கும் பொடியங்களைப் பற்றியும் சிந்தியுங்கள் பெற்றோரே என்று சொன்னதாக அர்த்தம் ஆகாது;-))))////
ஸ்ஸ்ஸ்ஸ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊஊ:)), நீங்க சொல்லாட்டில் எனக்கு உந்த எண்ணம் வந்திருக்காது:)), ஆனா பொல்லுக்கொடுத்தெல்லோ அடிவாங்குறீங்கள்:)))).
இல்ல நிரூபன் என்னைப் பொறுத்து எல்லாமே விதிதான், நம் கையில் எதுவும் இல்லை.
ஒரு பிள்ளை, சாதாரண குடும்பம், மிகவும் வசதி குறைந்தவர்கள், அவ பக்கத்துவீட்டில் வாடகைக்கு இருந்த டொக்ரரை(எமக்குத் தெரிந்தவர்) விரும்பி, மணம் முடித்து நன்றாக இருக்கிறா.
ஆனா... லட்சம் லட்சமா பணம் வைத்துக்கொண்டு, டொக்டர் அல்லது எஞ்சினியர் தான் வேணும் என பெற்றோர் பார்க்காத வரன் இல்லை, ஆனா கடேசில பார்த்தால், ஒரு சாதாரண ஜொப் கூட, இல்லாத ஒருவரை கேர்ள் விரும்பியிருந்திருக்கிறா, வீட்டில் சொல்லாமல், வந்த வரனை எல்லாம் சாட்டுச் சொல்லி மறுத்திருக்கிறா, பின்பு அவருக்கே மணம் முடித்துக் கொடுத்தாச்சு, இப்போ கஸ்டப்படுவதாக கேள்வி.
இவையெல்லாம் தலை எழுத்தின்படிதானே நடக்குது, நம் கையில் இல்லையல்லவா. எதுவாயினும் எல்லோருக்கும் நல்லது நடந்தால் சரிதான்.
மிக்க நன்றி நிரூபன்.
அக்கா காமெடிக்குச் சொன்னேன், பின்னூட்டம் புடிக்கலைன்னா அழிச்சிடுங்க. நிரூபன் வம்பிற்குப் போகாத பையன்.
ReplyDeleteசண்டைன்னா மீ எஸ்கேப்//
ஆமா ஆமா... சன் டீவி சிறப்பு செய்தியில சொன்னாங்க வம்புக்கு போகாத பையன்னு ஹி ஹி ஹி
ஊசிக்குறிப்பு:
ReplyDeleteமாயாவுக்கு “மெள” வன்னா எப்பூடி எழுதுவதென்று தெரியாது:))) ஹா..ஹா..ஹா..., அதனால அங்கின மெளனத்தை விட்டுட்டார்... நான் பார்த்தேனே:))). ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க மலர், அவர் இப்போ தேம்ஸ்க்குள்ள:)).//
என்ன மாயாவுக்கு வந்த சாதனை.... எனக்கு மௌ வராதா... கௌரிய அழகா படிப்போம்.. கெ..... ள..... ரி.... எப்பூடி.... நாங்கள்லாம்ம்ம்ம் புஸ்ஸ்ஸ்க்கே தமிழ் சொல்லிக்கொடுத்தரவங்க.. நான் ஜார்ஜ் புஸ்ஸ்ஸ்ஸ சொன்னேன் அவ்வ்வ்வ்வ்வ்
எஸ்கேப்பாக விட்டிடுவமா?:))), பிராண்டிடமாட்டோம்???? :)))).//
ReplyDeleteபாஸ்ஸூ தப்பிச்சுருங்கோ... எனக்கு ஏற்பட்ட காயம் தன்னால ஆறிடும்.. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல...அவ்வ்வ் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்...முதலை கொல்லிமலை மருத்துவம் பாத்து காயத்துக்கு மருந்து போட்டு முதலை வயித்துல ரெஸ்ட் எடுத்துட்டுருக்கென்... ஹி ஹிஹி
athira said... 98
ReplyDeleteமாயாஆஆஆ.... 2012 டிஷம்பர் 23 எல்லோருக்கும் நல்லகாலம் பிறக்குதாம், இதை என் நண்பி ஒருவரிடம் சொன்னேன், அவ சொன்னா, இல்ல இல்ல 12.12.12 தானே உலகம் அழியப்போகுதெனக் கதைக்கிறாங்க என்று அவ்வ்வ்வ்வ்வ்:))))).//
என்ன....12.12.12 க்கு உலகம் அழிய போகுதா... நான் இன்னும்ம்ம்ம் உலகத்தையே சுத்தி பாக்கல.. முதலை ரெக்கைய கட்டு உலகம் அழியறதுக்கு முன்னால ஒரு ரவுண்டு பறந்துட்டு வந்துருவோம் ரெக்கை கட்டி பறக்கதடா.. தேம்ஸ்நதி முதலைஸ்ஸ்ஸ்... 12.12.12 உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்டும் நண்பர்களுக்காக காத்திருக்கும்.. அதிலெல்லாம் அல்லாரும் சுத்தி பாக்கலாம்.. அந்த உலகம் தான் மாய உலகம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மாய உலகம் said... 105
ReplyDeleteநான் ஜார்ஜ் புஸ்ஸ்ஸ்ஸ சொன்னேன் அவ்வ்வ்வ்வ்வ்//
ஹா...ஹா..ஹா... அது..அது..அது...:))).
//முதலை கொல்லிமலை மருத்துவம் பாத்து காயத்துக்கு மருந்து போட்டு முதலை வயித்துல ரெஸ்ட் எடுத்துட்டுருக்கென்... ஹி ஹி//
உள்ளே இடமிருந்தா நிரூபனையும் கூப்பிட்டு வைத்திருங்கோவன் மாயா... :)))).
//என்ன....12.12.12 க்கு உலகம் அழிய போகுதா... நான் இன்னும்ம்ம்ம் உலகத்தையே சுத்தி பாக்கல//
நான் எதுக்கு விடிய விடிய 2012 பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறேன் அவ்வ்வ்வ்வ்:)).
சுத்தினாப் போச்சூஊஊஊ... முதலை வாலை இறுக்கிப் பிடிங்க மாயா.... ஒரே சுத்தில உலகத்தைக் காட்டும்:))))).
//உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்டும் நண்பர்களுக்காக காத்திருக்கும்.. அதிலெல்லாம் அல்லாரும் சுத்தி பாக்கலாம்.. அந்த உலகம் தான் மாய உலகம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அப்படி ஒரு எண்ணத்திலதான் மாயாவை தேம்ஸ்லயே வச்சு முதலையையும் பொடிகார்ட் ஆகப் போட்டு வைத்திருக்கு... தப்பிப் போக விடமாட்டமில்ல:)))...
ஐ..... இம்முறை 100 ஆவது நானேதான்... இப்பத்தானே பார்த்தேன் அவ்வ்வ்வ்வ்வ்:))).
ReplyDeleteஹையோஓஓஓஓ... தப்பாகிடுச்சே.... ஸாதிகா அக்காவின் தலைப்பில் மகியைப் பார்த்ததும்தான், கிட்னியில் பொறி தட்டியதுபோல இருந்துது, அடக் கடவுளே... மகியின் பின்னூட்டம் பார்த்தனே, பதில் போட்டதாக நினைவில்லையே என ஓடி வந்து வேர்க்க விறுவிறுக்க எழுதுகிறேன்...
ReplyDeleteமகி..மகி... பொய் சொல்ல மாட்டேன், கடவுள் மீது ஆணை.... கடவுளே... தப்பு நடந்துபோச்ச்ச்ச்ச்... மன்னிச்சிடுங்க, நீங்க வந்து பார்த்திட்டு, அதிரா கோபத்தில பதில் போடவில்லை என நினைத்திருப்பீங்க.... நான் அப்படிப்பட்ட ஆளில்லை, நேரில் சொல்லுவனே தவிர பேசாமல் எல்லாம் போகமாட்டேன்..
இதுதான் சொல்வார்கள் என்னமோ பட்ட காலிலேயே படுமென அப்பூடி ஆகிப்போச்சு நிலைமை...:)).
சரி சரி இதுக்கு மேல வாணாம்:))).
மியாவும் நன்றி மகி.
வேணுமெண்டால் இன்னொன்றும் செய்கிறேன்....
இமா மீது ஆணை, மாயாமீது ஆணை, ஜெய் மீது ஆணை... ஹா..ஹா..ஹா.. இது போதும்தானே...:)))
kik kik ;)
ReplyDeleteஆஆஆ...இம்ஸ் ஆமோதிச்சிட்டா:))))
ReplyDeleteமுதலைய கொண்ணுபுட்டாங்கிய... போலிஸ் வந்திருக்கார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDelete[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSRJhXQiQg0kt6W2KJYoTylJxTI7bfMDyK-XkOjH4Oa8XoNxs0o[/im]
அப்பாடா முதலை போட்டு தள்ளுன... மியாவ புடிச்சு சட்டிக்குள்ள வச்சாச்சு....
ReplyDelete[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRoncaJHe52M5vgxS-faSQCjhPFmfr_Zes4gs9WHepXdidSnYYv[/im]
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSpyFVmXkEViVYA1xw1a7bMCd2p080BmzkxaxQm_5Fid9ap97ituw[/im]
ReplyDeleteஹைய்யயோ... அரெஷ்ட் பண்ணா... கடிச்சு பிராண்டுதே... ஒரு வேளை ஜாக்கிசான்கிட்ட ஃபைட்ட கத்துருக்குமோ ......
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSBK4_BFWyyhRl9r9B-REleC3UMZ3i5ReBH0mnwDl9wpGhh0epI[/im]
ReplyDeleteகண்டம் நம்ம பக்கம் திரும்ம்பிடுச்சே.... நிக்கமா ஓடுறாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSiAFtBx0jz_O9WsKUgFHfTCsvMmubzfTPX2f-G3MWAKzdrRgLq[/im]
ReplyDeleteஹா ஹா ஒண்ணு கூடிட்டோம்ல... மாட்டிக்கிச்சு மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
[im]http://1.bp.blogspot.com/-JRq_Z5oL_Sw/To64oAtJ0PI/AAAAAAAABTk/Bt0hDmY3Wxg/s400/1212323.jpg[/im]
ReplyDeleteமியாவ்வ்வ்வ்வ்வ் ...மாட்டிக்கிட்டதனால சோகமாயிடுத்தூஊஊஊஊ.... சரி ஓகே தெரியாம சுட்ட மியாவை மாயா நீதி மன்றம் மன்னித்து விடுகிறது...
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRWUIXjCeACCmsIULkptwyppDJDeJPSs8Gb1SSnf6aZ5sjgbkl2LA[/im]
ReplyDeleteஇனி நாங்க... சண்டை போட மாட்டோம்...
ஹா ஹா.... முஸ்தப்பா முஸ்தப்பா டோண்டொரி முஸ்தப்பாஆஆஆஆஆஆஆ.....
Don't waste time Rajesh. படம் ஒண்டும் வரேல்ல. எரராம். ;(
ReplyDeleteமாயாஆஆஆஆஆஆஆஆஆஅ இது எப்பூடி????!!!!!!
ReplyDeleteஎன்னால நம்ப முடியல்ல, என்பக்கத்தில படமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))..
இமா இப்போ படம் எல்லாமேஏஏஏஏஏஏஏ தெரியுதூஊஊஊஊஊஊஉ:)))))
விவாகரத்து செய்ய முடியாதபடி ரத்து செய்ய சட்டம் கொண்டு வரணும் அப்பயாவது குறையுதா பார்க்கலாம்!!?
ReplyDeleteகவிதை அருமை சகோ ..
அதீஸ், ஊர் போல இல்லை இங்கே என்பது தான் முதல் காரணம். மனைவிக்கு வேலை இருந்தா எல்லாமே கிடைச்சது போல தான். விவாகரத்து இங்கே சர்வசாதரணம். சில வீடுகளில் இருவரும் பிரிந்து ( விவாகரத்து இல்லாமல் ) இருப்பார்கள். பிள்ளைகளுக்கு கூடாதாம் விவாகரத்து செய்வது. பிரிந்து இருப்பது மட்டும் என்னவாம்?
ReplyDeleteஎன் கணவரின் நண்பர், மனைவி இருவரும் காதலித்து மணம் புரிந்தவர்கள். அந்த ஐயா ( என்னைப் போல) அப்பாவி. ஆனால் அந்த அம்மாவோ திமிர் பிடித்தவர். மற்றவர்களின் முன்பு கணவரை மதிக்க மாட்டார். ஏதோ இன்டர்நானஷல் லெவலுக்கு சட்டம் தெரிந்தவர் போல ஒரு அகம்பாவம். சில வருடங்களின் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டார்கள். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. என்னைக் கேட்டால் இருவரும் பிரிந்தது தான் நல்ல முடிவு. அவரை பின்னர் ஒரு பார்ட்டியில் மீட் பண்ணினேன் வேறு திருமணம் முடித்து இருந்தார். என்னை அவாய்ட் பண்ணுவதிலேயே குறியா இருந்தார். நானும் ஹாய் சொன்னதோடு ஒதுங்கிக் கொண்டேன். சிலருக்கு விவாகரத்து தான் தீர்வு. சிலருக்கு வேறு தீர்வுகள் இருந்தாலும் விவாகரத்து தான் வழி என்று முடிவு செய்து விடுவார்கள்.
வாங்க ரமேஷ் பாபு.
ReplyDeleteமுதன்முதலா வந்திருக்கிறீங்க, மிக்க நன்றி நல்வரவு.
//விவாகரத்து செய்ய முடியாதபடி ரத்து செய்ய சட்டம் கொண்டு வரணும் அப்பயாவது குறையுதா பார்க்கலாம்!!?//
ஹா..ஹா..ஹா.. உண்மைதான் ஆனா, பிறகு லிவ்விங் டுஹெதர்... முறை அதிகமாகிடும்...:)))).
மிக்க நன்றி.
வாங்க வான்ஸ்ஸ்...
ReplyDeleteகரெக்ட்டாச் சொன்னீங்க, இங்கு பெண்கள் காரும் ஓடி, வேலையும் தேடிக்கொண்டால், தம்மால் எதுவும் செய்ய முடியும் எனும் தைரியம் வந்துவிடுகிறது, அதனால் சிறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் அஜஸ்ட் பண்ண மறுக்கிறார்கள்.
எம்மால் எதுவும் சொல்ல முடியாது.. அவரவரும் உணர்ந்து நடந்தால்தான் உண்டு.
மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.
மாயாவின் படங்கள் பார்த்துச் சிரிச்சு முடியேல்லை:)), போலீசாக வந்தவர், அடுத்ததில எப்பூடி ஓடுறார் பாருங்கோ:))))... எங்கிட்டயேவா?:)))).
ReplyDelete[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSeCNxKcdsX6xzD8OuTpsanCzTWqK_I-OS-PY2JNPyU0i7oW07h[/im]
ReplyDeleteமியாவ மாய உலகத்துக்கு கூட்டிட்டு போவாம்....
நோஓஒ:)))) இது ஏதோ முதலையிடம் கூட்டிப்போய் விட சதி நடக்குதுபோல:)))) அப்பாவிபோல பப்பி நிக்கிற நிலையைப் பார்த்தாலே பயம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்:)) நம்பமாட்டோம் எங்கிட்டயேவா:)))))))
ReplyDeleteஉணர்வு மிக்க தகவலும், கவிதையும் அருமை சகோ .உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது காரணம் உங்கள் கள்ளமில்லா எழுத்துநடையும்
ReplyDeleteபூனைக்குட்டிகள்மீது உங்களுக்கு உள்ள பாசமும் .எனக்கும் செல்லப் பிராணி பூனைக்குட்டியே .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .
[co="red"]எப்ப இருந்து இதெல்லாம் கொண்டுவந்திருக்கீங்க அதிரா?[/co]
ReplyDeleteஹிஹி..கலர் எழுத்தைக் கேட்டேன்! வொர்க் ஆகுதான்னு டெஸ்டிங்! :)
[co="blue"]நீலக்கலர் வருதான்னு பார்ப்போம்!:)[/co]
ReplyDelete[co="green"]மியாவின் வலைப்பூ கலர்புல் ஆகிடுச்சு! நல்லா இருக்கு!:) :)[/co]
ReplyDelete[im]படமுகவரி[/im]
ReplyDeletehmm...படம் வரலையே அதிரா? ;) ;)
[co="red"]ஓக்கை,ஓக்கை,முறைக்க வாணாம்..லேப்டாப்பிலே இருந்து அட்டாச் பண்ண முடியாதா? படம் இணைப்பது இன்னும் எனக்கு புரில![/co]
[co="pink"] ஹேப்பி வீகெண்ட்!![/co]
[im]http://o5.com/is-your-cat-too-fat/fatcat/[/im]
ReplyDelete??!!!!!
:)
attaching photos is not working for me!! Byeeeeeeeee!
ReplyDeleteவாங்கோ அம்பாளடியாள்...
ReplyDeleteசெல்லப் பிராணிகள் அனைத்திலுமே எனக்கு இரக்கம்தான்... அவைக்கு ஏதும் என்றால் எனக்கு கண் கலங்கிடும் என்னையும் மீறி. அதிலும் பூஸ்...ஸ்ஸ்ஸ் ரொம்ப பிடிக்கும்.
மிக்க நன்றி.
வாங்க மகி, புதுத்தலைப்பிருக்க பழசுக்கு வந்திருக்கிறீங்க...
ReplyDeleteபச்சைகலரு சிங்குசா...
சிகப்பு கலரு சிங்குசா... எல்லாம் வருதா... அவ்வ்வ்வ்:)).
படத்தின்url கோட் எடுத்து வந்து, இங்கு சொல்லியபடி இணைக்க வேண்டும்...
[im] இதில் url கோட் இணக்க வேண்டும் பின் [/im].
இவ்வளவும்தான்.
அந்த url கோட் இப்படித்தான் இருக்கும்...http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ7nALqtsngwXtokx3x2H2pb4Fyz5NFt-19enu-1A9zXHRmXr_ipw
இப்போ பாருங்கோ பூஸாரின் நித்திரையை:))
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ7nALqtsngwXtokx3x2H2pb4Fyz5NFt-19enu-1A9zXHRmXr_ipw[/im]
ப்ளாக் பக்கம் நான் வரது கொஞ்சம் கம்மியானதும் எல்லாரும் எங்கெங்கியோ போயிட்டீங்க! ஹிஹி!:)
ReplyDeleteகுட்நைட் அதிரா!
[im]https://mail.google.com/mail/?ui=2&ik=61872f7edd&view=att&th=1330415871a9ccae&attid=0.1&disp=inline&realattid=f_gtrmc9ql0&zw[/im]
ReplyDeleteGood morning Mrs.Poosh! :)
ReplyDelete[im]http://lovemeow.com/wp-content/uploads/2011/08/44600845201108051106233075120946622_000_6401-150x150.jpg[/im]
ReplyDeleteபதிவு அருமையா இருக்கு......
ReplyDeleteஆமினாவின் வலைச்சரம் மூலம் இன்றுதான் வந்தேன்...
இனித் தொடருவோம்....
அடடா மகி, மாயா.... இது எப்போ நடந்தது நான் பார்க்கத் தவறிட்டேன்.
ReplyDeleteஆமினா மிக்க நன்றி... வந்திட்டேன்... டாண்...டாண்ண்ண்ண்ண்ண்:)).
ReplyDeleteவாங்க நிகாஸா வாங்க....
ReplyDeleteஆமினா மூலம் நிகாஸா கிடைத்திருக்கிறார் நிலைப்பாரா பார்ப்போம்...
நல்வரவு , மியாவும் நன்றி நிகாஸா.
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSH1bo-itb0ceZsaZ-0RkemPi4-XNBWMqAhA1tCsM_xmCeStmIthw[/im]