நல்வரவு_()_


Friday 21 April 2017

எவ்ளோ நாளைக்குத்தான் ரொம்ப நல்லவரா/வல்லவரா நடிக்கிறது சொல்லுங்கோ?:)

நானும் எவ்ளோ காலத்துக்குத்தான் ரொம்ப நல்ல பிள்ளையா +  வல்ல பிள்ளையா நடிச்சுக்கொண்டிருப்பதாம்? இருப்பினும் அதிராவோ கொக்கோ?:) உள்ளே நடுங்கினாலும் வெளியே காட்டிடாமலேயே காலத்தை.. இன்னும்.. ஓட்டிக்கொண்டிருக்கிறேன்:).

மீபத்தில் என் நண்பியின் கார் ஆக்ஸிடண்ட் ஆச்சு..  என் நண்பி லைசென்ஸ் எடுத்து 6 மாதங்கள்தான் ஆகுது... அது அவவின் தப்பில்லை, இவ ரெட் லைட்டில் நிறுத்தியிருக்க, பின்னாலே வந்த கார் இடித்து விட்டது. அதனால இடித்தவரின் இன்ஸ்சூரன்ஸ் கொம்பனி, இவவின் கார் திருத்திக் கொடுக்கும் வரை மாற்றுக் கார் கொடுப்பது வழக்கம்.

அப்போ ஒரு பெரீய SUV கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள்.. இவவுக்கு கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது, இவ வைத்திருந்தது குட்டிக் கார். உடனே ஃபோன் பண்ணி கேட்டிருக்கிறா, இல்ல இதை என்னால ஓட முடியாது, எனக்கு கொஞ்சம் சின்னதா கார் தாங்கோ என. சரி என, அடுத்த நாள் 2016 மொடல் -  BMW  காரைக் கொண்டு வந்து கொடுத்திட்டுப் போயிட்டினம்.

உடனே இவ எனக்கு கோல் பண்ணினா, அதிரா பிளீஸ் எனக்கு 2 நாளால் வேர்க் ஆரம்பமாகுது, அதனால இப்புதுக் கார் ஓடப் பழகிடோணும், நீங்கதான் பல வருட எக்ஸ்பீரியன்ஸ் ஆச்சே.. கொஞ்சம் வந்து காரை எடுத்து ஓடிக்காட்டுங்கோ பிளீஸ் என்றிட்டா பாருங்கோ:)....  உடனே, இப்பூடிச் சொல்லிட்டாவே.. என் இமேஜ் டமேஜ் ஆயிடாமல் பாதுகாக்கும் தருணம் ஆச்சே... என புறப்பட்டேன்.

அங்கு போனால், கீயையும் தந்து புக்கையும் தந்தா, காரில் பட்டின்ஸ் எல்லாமே வித்தியாசம், கீ எங்கின போடுவதென்றே தெரியல்ல, காண்ட் பிரேக்கைக் காணல்ல:).. நியூ மொடல் எல்லோ...

எனக்கு பெரிசா வெளிக்கார்கள் ஓடி அனுபவமில்லை, இருப்பினும் என்ன ஆகப்போகுது வாங்கோ எனச் சொல்லியபடி, உள்ளே நடுங்குது(உயிர் முக்கியமெல்லோ எனக்கு:)).. அவவையும் ஏத்தி, நான் ட்றைவர் சீட்டில் இருந்து இருவரும் பெல்ட் போட்டாச்சு.. Book கைப் பார்த்து பட்டின்கள் கண்டு பிடிச்சிட்டேன்ன்.. எல்லாமே ஸ்டியரிங் வீலுக்குள்ளயே ஒளிச்சிருக்கு:).. கை கால் ரைப் அடிக்குது காட்டிக் கொடுக்காமல்...

அதன் கீ கூட ஒருவித மக்னெட் போல இருந்துது,, சரி என ஆண்டவா நீதான் காப்பாத்து என எண்ணிக்கொண்டு, கீயை அதற்குரிய இடத்தில வச்சேன்.. ஏனோ தெரியல்ல கார் ஒரு ஆட்டம் ஆடிச்சுது பாருங்கோ.. பாய்ஞ்சு கீயைக் கழட்டிட்டேன்ன்:) எங்கிட்டயேவா:).. ஹா ஹா ஹா..

திரும்ப அவ கேட்டா, அதிரா நீங்க ஓகேயா என:).. இல்ல உள்ளே நடுங்குதுதான் இருப்பினும் என்ன ஆகப்போகுது, கும்பிடுங்கோ எனக் கூறிக்கொண்டு.. வைரவா.. முருகா என நான் வேண்ட:)... ,  ஜேசுவே... மாதாவே ஸ்தோத்திரம் என அவ வேண்ட:).. [சத்தமாகத்தான் பின்ன கடவுளுக்கு கேட்கோணுமெல்லோ}.. ஹா ஹா ஹா ஒரு மாதிரி கால் உதற உதற எடுத்திட்டேன்.. ஓடத்தொடங்கிட்டால் ஓகே, பின்பு ஒரு வெளியில் கொண்டு போய் அவவை ஓட விட்டேன். அவவும் பழகிட்டா. அன்றைய நடுக்கம் என்னை ஒரு போஸ்ட் எழுதுமளவுக்கு ஆளாக்கிட்டுது:)..

அவ சும்மா கூப்பிட்டிருந்தால்கூட, மாட்டேன் எனக்குப் பயம் என்றிருப்பேன், இது “நீங்க எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆள்”என்றிட்டா பாருங்கோ இமேஜ் ஐ காப்பாத்த வேணுமெல்லோ அதனால்தான் இப்படிக் களமிறங்கினேன்.

===============================இடைவேளை=============================
குட்டிக் குட்டிச் சம்பவங்கள் என்பதனால், ஒரே போஸ்ட்டுக்கே பொருந்துது:).. இப்படித்தான் ஊரில் இருந்த கொஞ்சக்காலம், ஸ்கூட்டர் ஓடித் திரிஞ்சேன். அப்போ ஸ்கூட்டர் ஓடத் தொடங்கிய ஆரம்ப நாட்கள், தெரியும்தானே.. ஸ்கூட்டர் எனில், ஸ்பீட் கையில்தானே இருக்கும்.. வெளியே திருப்பினால் ஸ்பீட்டாகும், உள்ளே திருப்பினால் ஸ்லோவாகும், அதிலும் சைக்கிள் ஓடித்திரிந்த எனக்கு, கையில் பிரேக் பிடிச்சே பழக்கமாகிட்டதால, ஸ்கூட்டர் பிரேக் காலில் என்பதனால் பழக காலம் எடுத்துது,  அதனால பிரேக் பிடிப்பதைக் காட்டிலும் கையை முறுக்கியே கொன்றோல் பண்ணினேன்..

அப்போ ஒருநாள், என் வயதையே ஒத்த, அதிலும் என் பிறந்த எண்ணிலேயே பிறந்த, மச்சாளைப் [மாமியின் மகள்] பின்னே ஏற்றிக்கொண்டு.. செத்தாலும் தனியே போகப் பயமெனக்கு:) அதனால அவவை ஏத்திட்டேன் ... என்னை நெம்ம்ம்ம்பி ஏறி இருந்திட்டா.. என்னோட வலு விருப்பம் அவவுக்கு.. இப்பவும்தான்..

முன்னாலே பெரீய கோயில் வீதி, அதில் வைரவர் கோயில் இருக்கு, அப்போ கோயில் பின் வீதியால் உள்ளே போய் கோயிலை சுற்றி, முன்  வாசலுக்கு நேரே வரும்போது...

இங்கே இன்னொரு விசயம் சொல்றேன், ஊரிலிருந்த காலத்தில் எப்பவும் சைக்கிள் சரி, ஸ்கூட்டர் சரி ஓட்டிப்போகும்போது, கோயில் வந்தால், ஸ்லோப் பண்ணி அல்லது இறங்கி மனதில் கும்பிட்டு விட்டே போவேன், அதேபோலே எதிரே மரண ஊர்வலம் வந்தால், இறங்கி நின்று, போய் முடியும்வரை, அதிலேயே நிற்பேன், பழகிட்டேன், இல்லாவிட்டால் ஏதோ மரியாதை கொடுக்காததுபோல கஸ்டமாயிருக்கும் எனக்கு.

அப்போ இங்கே வைரவரின் வாசலுக்கு வந்தாச்செல்லோ, ஸ்லோப் பண்ணினேன் கும்பிடலாம் என.. அது கை பழக்கமில்லாததால், குறைச்சு முறுக்குவதற்குப் பதில் கூட்டி முறுக்கி விட்டேன் பாருங்கோ.. ஸ்கூட்டர் அப்படியே ஒரு ஜம்ப் ஆச்சு, சேர்கஸ்சில வருவதைப்போல.... எனக்கு கண்ணே தெரியல்ல.. 2 செக்கண்ட்தான் ஆனா வைரவர் புண்ணியத்தில் கொன்றோலுக்கு கொண்டு வந்து ஏதும் நடக்காததுபோல வீட்டுக்கு வந்திட்டோம்.. மச்சாள் இருபக்கமும் கால் போட்டு என்னைக் குரங்குக்குட்டிபோல பிடிச்சுக்கொண்டிருந்தமையால் தப்பிட்டா, இல்லையெனில் தூக்கி வீசியிருக்கும்... இப்போ நினைக்கவும் நடுங்குது..

அன்று ஹார்ட் அடிச்ச அடி எனக்கெல்லோ தெரியும்:)...

வைரவரின் முன் மண்டபத்தில், வயதானோர் கொஞ்சப்பேர் கூடியிருந்து அரசியல் பேசிக்கொண்டிருந்தவர்கள் . நம்மைப் பார்த்து டக்கெனப் பாய்ஞ்சு எழும்பி நிண்டார்கள்... ஹா ஹா ஹா..
===========================இடைவேளை முடிஞ்ஞ்ஞ்:)===========================

தேபோலவே இன்னொரு சம்பவம்.. படிக்கும் காலத்தில் ஹொலிடேயில் ரியூசன் போக வேண்டி இருந்தமையால், அங்கு இருந்த ஒரு கேள்ஸ் School ஹொஸ்டல் மட்டுமே ஹொலிடே ரைம் திறப்பார்கள் எனவும், அதன் மேட்டன், எங்கள் அப்பாவோடு ஒரே ஒபிஸில் வேர்க் பண்ணும் அங்கிளின் உறவினர் எனத் தெரிந்து என்னையும் என் நண்பியையும் அங்கு கூட்டிப்போய்ச் சேர்த்து விட்டார் அப்பா.

ஸ்கூல் ஹொலிடே நேரம் என்பதால் அங்கும் ரியூசன் போவோர் மட்டுமே இருந்தார்கள் ஒரு 20 பேர் வரையில். அது சுத்த சைவ ஹொஸ்டல். காலையில் மாலையில் பஜனை நடக்கும்.

நான் எப்படிப்பட்ட பேர்வழி எனில், ஒன்று எனக்கு இருட்டைக் கண்டால் பயம், ரோட்டில் பிச்சைக்காரர், வெறிகாரர், கொஞ்சம் அழுக்கு உடையில் இருப்போர் இப்படி யாரைக் கண்டாலும் பயம், இரவில் காற்றுக்கு மரம் ஆடினாலே கை கால் உதறும்.. அடுத்து டக்கென யாரோடும் ஒட்ட மாட்டேன்.. ரொம்ப கூச்ச சுபாவம் , அமைதி.. ஆனால் ஒட்டிட்டால் நன்கு பேசுவேன். அத்தோடு ஏற்கனவேயும் சொல்லியிருக்கிறேன், குழந்தைகளோடும், வயதானோரோடும் எப்பவும் ஒட்டி இருப்பது பிடிக்குமெனக்கு. அப்போ ஆரம்பம் 2,3 நாட்கள் ரொம்ப அமைதியா/ ரொம்ப நல்ல பிள்ளையா இருந்தேன்[நம்போணும் சொல்லிட்டேன்].

பின்னர் மெதுவா பேசத்தொடங்கியதும் நகைச்சுவையா எல்லோரும் பழகத் தொடங்கிட்டேன். அங்கு ஒரு தாத்தா வோச்மன் ஆக இருந்தார். அவரைச் சுற்றி எல்லோரும் இருந்து, இரவில் கதை கேட்பது வழக்கம். அவருக்கு என்னை நன்கு பிடித்துக் கொண்டது. அந்த ஹொஸ்டலில் ஒரு பிரச்சனை, ரொயிலட்/பாத்ரூம் அட்டாச் ஆக இல்லை, பில்டிங் வாசலால் வந்து, பக்கத்துக்கு திரும்பினால்.. பெரீய மதில் போகும், மதில் வெளியே மெயின் ரோட், அந்த மதில் கரையிலேயே உள்ளது பாத்ரூம்.

அதனால அங்கு இருப்போருக்கு, நைட் படுக்கபோகுமுன், இந்த தாத்தா தலைமை தாங்கிப்போக, பின்னாலே எல்லோரும் ரொயிலட் போய் வருவது வழக்கமாக இருந்துது. அப்போ நாம் போய் 4,5 நாட்கள் இப்படி ஆச்சுது. என்னோடும் எல்லோரும் நன்கு பழகிட்டார்கள்.

அப்போ அடுத்த நாள் இரவு, பிள்ளைகள் கூப்பிட்டார்கள் தாத்தா வாங்கோ  என.. உடனே அவர் சொன்னார் பாருங்கோ ஒரு வசனம்..

“அதிரா, துணிச்சலான பிள்ளை இருக்கும்போது எதுக்கு என்னைக் கூப்பிடுறீங்க? அதிராவை முன்னே விட்டு போய் வாங்கோ” என:)... கடவுளே எனக்கு கை கால் உதறுவது, என் ஹாட் அடிக்கும் சத்தம் என் காதுக்கே கேட்பது எல்லாத்தையும் எப்பூடிச் சொல்லுவேன் தாத்தாவுக்கு?:)...

உடனே கூப்பிட்டார்கள் அதிரா கமோன் என:).. அவ்வ்வ்வ்வ் அந்த தாத்தாவின் வாக்கைக் காப்பாற்ற அங்கிருந்த ஒரு மாதமும்.. எதையும் வெளியே காட்டிடாமல் நானே தலைமை தாங்கினேன்.. தாத்தா வரவே இல்லை... இமேஜ் டமேஜ் ஆகிடாமல் காப்பாத்திட்டேன்...

“நீ கெட்டனீ எனச் சொல்லிட்டால்கூட கவலையில்லை, ஆனா பாருங்கோ நீ ரொம்ப நல்லபிள்ளை எனச் சொல்லிட்டால்.. எவ்ளோ கஸ்டப்பட்டு அந்தச் சொல்லைக் காப்பாற்ற வேண்டி இருக்குது தெரியுமோ?:)”.

ஊசிக்குறிப்பு:
 “தற்பெருமை பேசிப்பேசிக் காலம் கழிப்பாஆஆர்.. இதில் தன் பெருமை குறையுமெண்டால் பிறரை மதியார்ர்..:)).. ஹையோ இந்நேரம் பார்த்து சிட்டுவேஷன் சோங் பிபிசில போடீனமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ரேடியோவை ஓஃப் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ச்:)]

ஊசி இணைப்பு:

70 comments :

  1. தமிழ்மணத்தில் இணைத்து முதல் வோட் நான் போட்டுட்டேன், அதிரா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... நான் போஸ்ட்டைப் பப்ளிஸ் பண்ணிப்போட்டு... பயங்கர பிசியாகிட்டேன்.. இப்போதான் நினைத்தேன், ஹையோ தமிழ்மணத்தில் இணைக்கவில்லையே என ஓடிவந்தால், இணைச்சு வோட்டும் விழுந்திருக்கு... பயத்தில ஆடிப்போயிட்டேன்ன்:).. பிறகுதான் பார்த்தால் கோபு அண்ணன் இணைத்திருக்கிறார்.. மிக்க நன்றி கோபு அண்ணன்..

      Delete
  2. //அவ சும்மா கூப்பிட்டிருந்தால்கூட, மாட்டேன் எனக்குப் பயம் என்றிருப்பேன், இது “நீங்க எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆள்”என்றிட்டா பாருங்கோ இமேஜ் ஐ காப்பாத்த வேணுமெல்லோ அதனால்தான் இப்படிக் களமிறங்கினேன்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    “குப்புற அடித்து விழுந்தாலும் என் மீசையில் மண் ஒட்டவில்லை பாரு” என்றானாம் குப்புற அடிச்சு விழுந்தவன். ஏனோ எனக்கு அந்த ஞாபகம் வந்து தொலைத்தது.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ச்ச்சும்மா தேவையில்லாமல் கண்ட நிண்ட ஞபகங்கள் எல்லாம் வருகுதுபோல.. போய் நல்ல வேப்பங்குழை அடிப்போரைப் பார்த்துக் குழை அடிச்சால் எல்லாம் சரியாகிடும்:)

      Delete
  3. மேலேயுள்ள கார் ஓட்டும் அனிமேஷன் படமும், அடியில் சைக்கிள் ஓட்டும் அனிமேஷன் படமும் வெகு ஜோராக உள்ளன.

    இவற்றை என் பதிவிலிருந்து அதிரா களவாடியுள்ளதாகத் தெரிகிறது.

    http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

    இருப்பினும் எங்கட அதிராதானே என்பதால் வேறு எதுவும் தீவிர நடவடிக்கை எடுப்பதாக இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். :))))

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவை இரண்டும் நான் ஏற்கனவே என் பக்கத்தில் முன்பும் போட்டிருக்கிறேனே:).. சரி விடுங்கோ.. நடவடிக்கை எல்லாம் வாணாம்..போனாப்போகுது, இல்லாட்டில் “ஒரு பூனை களவு போய் விட்டதென சட்டத்தை நாடினால்.. ஒரு பசுவை இழக்க வேண்டி வந்திடும்”.. கதையாகிடும்:). ஹா ஹா ஹா.

      Delete
  4. அதிரடி அதிராவுக்கு ஒரே பிரஸவத்தில் இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது என்ற அவசரச் செய்தியினை இதோ என் இந்தப்பதிவினில் அறிவித்து இருந்தேன் http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

    அவை இரண்டும் இப்போது வளர்ந்து மேலே கார் ஓட்டுகிறதோ, அல்லது அதன் பிறகு ஏற்பட்டதோர் இரட்டைப் பிரஸவக் குழந்தைகளாக இருக்குமோ .... சந்தேகமாக உள்ளது. விரிவாக விளக்கம் அளிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. கிடைக்கிற சைக்கிள் ஹப் ல:) ஒரு அப்பாவிப் பிள்ளையை ஊஸ் பண்ணி(என்னைச் சொன்னேன்:).. உங்களுக்கு பப்புளிக்குட்டி தேடுறீங்க:) கர்ர்:).. ஹா ஹா ஹா தமிழ் மணத்தில இணைச்சு என் வாயை அடைச்சிட்டீங்க:) அதனால கண்டபடி சண்டைப்பிடிக்கவும் முடியல்ல:).. எந்நிலை இப்போ கவலைக்கிடம்:)

      Delete
  5. // வைரவா.. முருகா என நான் வேண்ட:)... , ஜேசுவே... மாதாவே ஸ்தோத்திரம் என அவ வேண்ட:)..//

    அடடா, அப்போ அவங்களாக இருக்குமோ ?????

    இந்தப்பதிவினில் எனக்கு எல்லாமே ஒரே குயப்பமாக உள்ளதே, அதிரா !

    ஆண்டவா எங்கட நட்புகள் இருவரையுமே காப்பாத்திக்கொடுப்பா !! ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களைக் குழப்புவதுதானே என் வேலையே:)..

      Delete
  6. //கும்பிடலாம் என.. அது கை பழக்கமில்லாததால், குறைச்சு முறுக்குவதற்குப் பதில் கூட்டி முறுக்கி விட்டேன் பாருங்கோ.. ஸ்கூட்டர் அப்படியே ஒரு ஜம்ப் ஆச்சு, சேர்கஸ்சில வருவதைப்போல.... எனக்கு கண்ணே தெரியல்ல.. 2 செக்கண்ட்தான் //

    அந்த ஸ்கூட்டர் மிகவும் பாவம். ஏற்கனவே தன் மீது ஓவர் வெயிட்டாக சுமார் 125*2=250 கிலோ இருந்துள்ளதால், அவர்களின் அந்த மாபெரும் அழுத்தத்தால், தன்னைத்தானே அதனால் கொன்றோலுக்கு கொண்டுவர முடிந்துள்ளது. இல்லாட்டி அவ்ளோ தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் ஸ்சுவாமி(கோபு அண்ணனின் முறையில் சொன்னேன்).. சொன்னதுபோல... அதிராவை ஓட்டவென்றே எல்லோரும் களம் குதிக்கிறாங்க:).. நாஅனும் ஓடுவதுபோலவே நடிச்சு ஓடி, மற்றப்பக்கத்தால உள்ளே வந்திடுவேன்ன்:) எங்கிட்டயேவா?:).. மிக்க நன்றி கோபு அண்ணன் அனைத்துக்கும்... முதல் வருகைக்கும்...

      Delete
    2. டூ வீலர் ok கார் ok அடுத்து ஹெலிகாப்டர் ? எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கோ அதிரா :)

      Delete
    3. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ... ஹா ஹா ஹா நோஓஓஓ அவ்ளோ தைரிய சாலியில்லை நான்... ஹெலிக்கொப்டரில் ஏறக்கூட மாட்டேன்ன்:) அது எங்காவது மலையில முட்டிட்டால்ல்ல்ல்?:)

      மிக்க நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.. மெயினா வோட்டுக்கும்:).

      Delete
  7. //“அதிரா, துணிச்சலான பிள்ளை இருக்கும்போது எதுக்கு என்னைக் கூப்பிடுறீங்க? அதிராவை முன்னே விட்டு போய் வாங்கோ”//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    // ஒரு மாதமும்.. எதையும் வெளியே காட்டிடாமல் நானே தலைமை தாங்கினேன்.. //

    என்னவோ சுதந்திரப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினாப்போல பேச்சைப்பாரு. கர்ர்ர்ர்ர். மூச்சா போகவும் டாய்லட் போகவும் வேண்டிய கும்பலுக்கு ஒரு தலைவி. சரியான வேலைக்கு சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால் இதுவும் முக்கியம் தான். இதெல்லாம் வெளியேறினால்தான் சுதந்திரமாக இருக்கவே முடியும். தலைமைப் பொறுப்பேற்ற எங்கட தங்கமான தலைவிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ///என்னவோ சுதந்திரப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினாப்போல பேச்சைப்பாரு. கர்ர்ர்ர்ர்///
      ஹா ஹா ஹா... சுதந்திரத்துக்கு தலைமை தாங்கினா மட்டும்தான் தைரியமோ?:).. இதுக்காவது தலைமை தாங்கியிருக்கிறேனே எனப் பெருமைப்படுங்கோ:).

      //தலைமைப் பொறுப்பேற்ற எங்கட தங்கமான தலைவிக்கு வாழ்த்துகள்./// அச்சச்சோஒ மெதுவா மெதுவாப் பேசுங்கோ கோபு அண்ணன்... கேட்டிடப்போகுது:) ஹா ஹா ஹா:)

      Delete
  8. ஊசிக்குறிப்பு ஜோர். ஊசி இணைப்பு அதைவிட ஜோர்.

    எம்மாம் பெரிய பதிவு. ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆகக் கொடுக்கக்கூடாதோ.

    முழுக்கப் படிச்சு கமெண்ட் கொடுத்து டயர்ட் ஆயிட்டேன், அதிரா.

    ஒரு கப் சூடா ரீ கொடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இதுக்கு மேல என்னால சோட் ஆக்க முடியல்லே:).. இன்னும் நிறைய எழுத வந்துது.. கட் பண்ணிட்டேன்.

      ///ஒரு கப் சூடா ரீ கொடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)///

      ஆயா.. ஆயா.. இருமியது போதும், எழும்பி வந்து கோபு அண்ணனுக்கு நிறைய சீனி போட்டு இனிக்க இனிக்க ஒரு கப் ஸ்ரோங் ரீ கொடுங்கோ:) அப்போதான் அடுத்தமுறை வந்து, உங்களை ஏசி போட்ட காரில ஏத்திப்போய்.. நல்ல நல்ல சத்துணவெல்லாம் வாங்கித் தருவார் கோபு அண்ணன்..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி கோபு அண்ணன்.

      Delete
  9. ஹாஹா :) penny farthing cycle ஓட்டின பூனையாச்சேன்னு பெரிய நம்பிக்கையோட உங்க நண்பி :) கேட்டிருப்பாங்க ..
    இப்படி உசுப்பேத்தியே நம்மளை அரசியலில் அதான் பிரித்தானிய அரசியலில் இறங்க வைக்கப்போறதா உளவு செய்து உலாவுது அதிராவ் :)

    ReplyDelete
    Replies
    1. ஆங்ங்ங்ங்ங் எங்கின விட்டேன் சாமீஈஈஈஈ:) நேற்று பாதி தூக்கத்தோட கோபு அண்ணனுக்கு போட்டு முடிச்சேனா... ஆஆ அஞ்சுலதேன் ஆரம்பம் இன்று.. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      ஹா ஹா ஹா உசுப்பேத்தி ஏத்தி பப்பா மர உச்சியில் கொண்டுபோய் விட்டிடுவாங்க:) நாமளும் உசாரா ஏறி பின்பு முறிஞ்சு விழுந்திடுவோம்ம்:)... எல்லோரும் நம்மை ஏத்துவதை விடுவதாயில்லை:) நாங்களும் முறிஞ்சு விழுந்தாலும் ஏறுவதை விடுவதாயில்லை:))... என்னாது பிரித்தானிய அரசியலா,,, ஹையோ மே....மே....மே... அடிக்கப்போறா:)..

      அரசியல் எனில் இறங்கப்பூடா அஞ்சு:) குதிக்கோணும் எனச் சொல்ல வந்தேன்ன்:)...

      ஹையோ மேலே கோபு அண்ணனுக்குப் பதில் கொடுக்கல்லே:)..

      Delete
  10. /கீயை அதற்குரிய இடத்தில வச்சேன்.. ஏனோ தெரியல்ல கார் ஒரு ஆட்டம் ஆடிச்சுது பாருங்கோ//

    அது ஒண்ணுமில்ல மியாவ் நீங்க ஹெவி வெயிட் உங்க நண்பி உங்களில் பாதி வெயிட் ..அது bmw தானே அதோட 2016 மாடல் வேற .வெயிட் தாங்காம ஆடியிருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. என்னா ஒரு கண்டுபிடிப்பூஊஊஊஊ:)... உங்களையும் பக்கத்தில இருக்க விட்டிட்டு நான் கீயைப் போட்டிருக்கோணும்:).. அதுதான் நான் விட்ட டப்பூ:).. யான் பெற்ற இன்பம் அஞ்சுவும் பெற வேண்டாமோ?:)

      Delete
  11. னும் கடமையை செஞ்சிட்டேன் :) மை வோட் 3ர்ட் வோட்

    ஹை இன்னிக்கு சுத்தவேயில்லை தமிழ் மணம் உடனே அக்சப்ட் செஞ்சிருச்சே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அஞ்சு, இப்போ தமிழ்மணத்தில ஏதோ முன்னேற்றம் தெரியுது, வோட் உடனேயே விழுந்திடுது..

      Delete
  12. //மச்சாள் இருபக்கமும் கால் போட்டு என்னைக் குரங்குக்குட்டிபோல பிடிச்சுக்கொண்டி//

    கிகிக்கி ஹஹாஹா ஓஓஒ நீங்க பெரிய குரங்கு என்பதை கண்டுபுடிச்சிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அது என் கிரேட் குரு பறம்பறை:) ஆக்கும்:).

      Delete
  13. ஊசிகுறிப்பு நல்லாருக்கு ஆனா நான் இப்போல்லாம் திரும்பி பார்க்கறதை குறைச்சிட்டேன் :)
    நல்லதும் கெட்டதும் மூட்டைகணக்கில் நினைவு வருது

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதான் அஞ்சு... முன்னேயே பார்த்தபடி போய்க்கொண்டிருப்பதுதான் நல்லது. இது எங்கள் அண்ணி ஊருக்குப் போயிருந்தா, அப்போ ஊரில் இருந்து என் ஒரு படம், யூனிஃபோம் போட்டு சைக்கிளோடு நிற்கிறேன்.. இதே ஹொஸ்டல் லைஃப் காலத்தில் எடுத்த படம், இருந்து கொண்டு வந்து தந்தா, அதைப் பார்த்ததும் நினைவுகள் கிளறப்பட்டு போஸ்ட் ஆச்சு:)..

      Delete
  14. நோ நோ அது ஊசி இணைப்பா ..அதைத்தான் நல்லாருக்குன்னு சொன்னேன் :)
    ஆமா யார் இப்போ பெருமை பேசினது படம் வரைந்து எக்ஸ்பிளேயின் ப்ளீச்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நீங்க ஓடிவந்து.. தற்பெருமை பேசுறேன் எனச் சொல்லிடப்போறீங்க என அவதிப்பட்டே அந்த ஊசிக்குறிப்பைப் போட்டு வச்சேன்ன் ஹா ஹா ஹா மீ ரொம்ப உஷாராக்கும் இந்த விசயத்தில்:)..

      Delete
  15. /குழந்தைகளோடும், வயதானோரோடும் எப்பவும் ஒட்டி இருப்பது பிடிக்குமெனக்கு. //

    ஆமா எனக்கு தெரியுமே :) குழந்தை நானு அப்போ வயதானோர் யாரு மியாவ் :)

    ReplyDelete
    Replies
    1. ஓ மை கடவுளேஏஏஏஏஏ... நீங்க இங்கு குழந்தை எனில்:).. வயதானோர் யாருமே இங்கின இல்லைலைலைலைலைலைலை...:)

      Delete
    2. வயசானா குழந்தை மாதிரி இருப்பாங்கனு சொல்லுவாங்கல்ல ஏஞ்சல் அதைத்தான் அதிரா சொல்லிருக்காங்க...எல்லாம் அவங்க எக்ஸ்பீரியன்ஸ்...80 நா சும்மாவா...ஹஹஹ்

      கீதா

      Delete
    3. ஆவ்வ்வ்வ் அப்பூடியா கீதா?:) இது என் கிட்னியில் உதிக்கல்லியே:).. ஹா ஹா ஹா:).

      Delete
  16. முக்கியமா ஒரு விஷயம் சொல்லனும் எனக்கு motor bike பார்தாலெ பயம் .எஙாதுக்கார் கிட்ட கல்யாணதுக்கு முன்னாடியெ க்லியர் பண்ணி கொண்டேன். பைக் அவர் கிட்ட இல்லனது எனக்கு பெரிய ஹாப்பி.. நீங்க ரெயில் கூட ஒட்டினிங இல்லை மியாவ். ;)

    ReplyDelete
    Replies
    1. அது நிஜம்தான் அஞ்சு, மோட்டார்பைக் எனில் பயம்தான்.. இங்கும் summer ஆரம்பிச்சாலே கூட்டம் கூட்டமாக விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனப் பறப்பினம்.. அவர்களைப் பார்த்தவுடன் என் மனதில் தோன்றும் நினைப்பு... கடவுளே எங்கின போய்ச் சாகப்போகிறார்களோ என்பதுதான்...

      ஆனா ஸ்கூட்டர் அப்படியில்லை அஞ்சு, பெரிதா பயமில்லை. ஊரில் என் கணவரிடம் Vespa ஸ்கூட்டர் இருந்தது.. அதை சும்மா நிறுத்திக்கூட என்னால் பிடிக்க முடியாது அவ்ளோ பாரமும் பெரிசும்.. ஒரு மாருதி காரின் வெயிட் வருமென நினைக்கிறேன்.. அப்படியானது பயமில்லை. அடிபட்டாலும் நிண்டுபிடிக்கும்... ஸ்பீட்டும் அதிகம் எடுக்காது.

      ///நீங்க ரெயில் கூட ஒட்டினிங இல்லை மியாவ். ;)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எத்தனை பேர் இப்பூடிக் கிளம்பியிருக்கிறீங்க?:).. ரெயின் எஞ்சின் பெட்டியில் இருந்து பயணம் செய்திருக்கிறேன்ன், ஹார்ட் பெட்டியிலும் இருந்து பயணம் செய்திருக்கிறேன்.. அவ்ளோதான்..

      Delete
    2. ஹை அதிரா ரயில் ஓட்டினாங்களா?!!!!! ஆமாம் பொம்மை ரயில் தானே ஏஞ்சல்!!!?? நான் கூட ம்யூசியத்தில் ஓட்டிருக்கேன்...ஹிஹிஹிஹி

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா அதேதான் கீதா, ரெயின் தூரத்தில் வருவது தெரியும்போதே ஸ்டேசனில் அம்மாவை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணையும் மூடிக்கொண்டு நிற்பேன், ரெயின் வந்து நிற்கும்வரை:) அவ்ளோ பயம் சின்ன வயதில்.. எனக்கு:).

      Delete
  17. பூனையின் அனிமேஷன் படங்கள் ரசிக்க வைத்தன.

    வண்டி ஒட்டி அசடு வழிந்த அனுபவங்கள் எனக்கும் உண்டு என்றாலும் அவை யாவும், கியர் இல்லாமல் இருக்கும் இரு சக்கர வண்டிகள் மட்டுமே. மற்றவை யாவும் எனக்கு ஒட்டத் தெரியாது!

    தம வாக்களித்து விட்டுத்தான் பதிவையே படிக்க சுற்றிக்கொண்டே இருக்கிறது. எப்படியும் விழுந்து விடும். விழுந்ததும் சொல்லுங்கள்.

    :)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ..

      //பூனையின் அனிமேஷன் படங்கள் ரசிக்க வைத்தன. //
      அது தன் கொப்பி வலதென வழக்காடுறார் கோபு அண்ணன்:)..

      சைக்கிள் நன்கு ஓட்டியவருக்கு.. ஸ்கூட்டர் ஓடுவது பெரிய கஸ்டமில்லை, ஸ்கூட்டர் ஓடுபவருக்கு கார் கஸ்டமில்லை... சைக்கிளே ஓடத் தெரியாதோர்க்குத்தான் கஸ்டம்:).

      உங்கள் வோட் வுழ்ந்துவிட்டது.. அதெல்லாம் ஓகே ஆனா ஏனோ கொஞ்ச நாளா நீங்க கொஞ்சம் ஓய்ந்திருப்பதுபோல இருக்கே உங்களைப் பார்க்க:).. எதுக்கும் பகவான் ஜீ பக்கம் போனீங்களெண்டால்ல் கிச்சுகிச்சு மூட்டியாவது சிரிக்கப் பண்ணுவார்ர்... ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  18. ஊசிக்குறிப்பு இரசித்தேன்
    அனைத்தையும் நம்பி"க்கையோடு படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜீ வாங்கோ... நம்போணும்:) நம்பாட்டில் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்ன்:) ஹா ஹா ஹா மிக்க நன்றி அனைத்துக்கும்.

      Delete
  19. Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி. GOD BLESS YOU.

      Delete
  20. பில்டிங்க் ஸ்ட்ராங்க். பேஸ்மெண்ட் வீக்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாங்கோ ராஜி வாங்கோ... பப்பியாரோடு உங்களை அடிக்கடி பல இடங்களில் பார்த்திருக்கிறேன் ஆனா பேசியதில்லை.. முதன்முதலா வந்திருக்கிறீங்க.. வலது காலை எடுத்து வச்சு வாங்கோ.. நல்வரவு, மிக்க மகிழ்ச்சி.

      ///பில்டிங்க் ஸ்ட்ராங்க். பேஸ்மெண்ட் வீக்//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. பாம்பின் கால் பாம்பறியும்:) பப்புளிக்கில இப்பூடிப் போட்டுடைக்கப்பூடா:).

      மிக்க நன்றி ராஜி.

      Delete
  21. லண்டனை விட ஸ்காட்லாண்டுக்கு தைரியம் ஜாஸ்தின்னு யாரையோ வம்புக்கு இழுத்திருக்கீங்க. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

    சந்தடி சாக்குல பி.எம.டபிள்யூ வண்டியை டிரைவ் பண்ணிட்டீங்கன்னு மத்தவங்க காதுல புகை வரவழைக்கறீங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ..

      //லண்டனை விட ஸ்காட்லாண்டுக்கு தைரியம் ஜாஸ்தின்னு யாரையோ வம்புக்கு இழுத்திருக்கீங்க. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.///
      ஹா ஹா ஹா கோர்த்து விடுவதிலேயே குறியா இருக்கிறீங்களே...[இது அரசியல் இல்லை:)]

      ஸ்கொட்லாந்து எம்மைத் தனியா விடு, பிரியப்போறோம் என ஒரே அட்டகாசம்.. ஆனா இங்கிலாந்தோ.. இல்ல பிரிஞ்சிடாதே.. விடமாட்டோம்ம் என ஒரே அழுகை:).. திரும்ப எலக்‌ஷன் நடக்கப்போகுது[இது அரசியலைச் சொன்னேன்:)].

      ஹா ஹா ஹா எனக்கு இந்த பிராண்டில் எல்லாம் பெரிசா அக்கறை இல்லை.. கண்ணுக்கு கவர்ச்சியா அழகா இருக்கோணும் அவ்வளவுதான்.. ஆனா சிலருக்கு இப்படி பிராண்ட் கார் வாங்குவதிலேயே ஒரு பைத்தியம்.. அதிலும் இங்கு, இலங்கையர்களை விட, இந்தியர்களுக்கு இதில்[BMW, Benz]அதிக ஆர்வம் உண்டு..

      Delete
    2. தம்மாத்தூண்டு அளவு இருந்திட்டு இந்த ஸ்கொட்ஸ் பண்ற அட்டூழியம் தாங்க முடில :) இங்கே இருக்கற பாதி ஸ்கொட்ஸை அங்கே தூக்கி அனுப்பறோம் வாங்க :) தனியா போறாங்களாம் தனியா :) போங்க போனாத்தான் எங்க அருமை பெருமை எல்லாம் தெரியும்

      Delete
    3. ஹா ஹா ஹா... நிலப்பரப்பில் கிட்டத்தட்ட சமனாக இருக்கிறோம் ஆனா சனத்தொகையில்... நாங்க கிட்டத்தட்ட 6 மில்லியன், இங்கிலாந்து 60 மில்லியன்.. அப்போ என்னா சன நெரிசல் பாருங்கோ.. தண்ணி கூட பைப்ல நாங்கதான் கொடுக்கிறோம், மீன் பிடிச்சுக் கொடுக்கிறோம், பெற்றோல் எடுத்துக் கொடுக்கிறோம்... அனைத்தையும் விட பிரித்தானியாவின் நியூகிளியர் பொம் ஹைடிங் பிளேஸ் உம் எங்களிடம்தான் இருக்காக்கும்:) இதனாலயே பிரிஞ்சிடாதீங்கோஓஓஓஓ எனக் காலைப்பிடிக்கினம் ஹையோ ஹையோ:)..

      விடுங்கோ விடுங்கோ எங்களைத் தனியா விடுங்கோ:) ஹா ஹா ஹா:).

      Delete
  22. பெண்ணைக் கண்டால் பேயும் பயப்படும்னு படிச்ச ஞாபகம். பேயைக்கண்டாலும் பேய் பயப்படுமா? உங்க தைரியத்துக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ///பேயைக்கண்டாலும் பேய் பயப்படுமா? //
      என்னாது .. எப்படா இப்படிச் சொல்ல ஒரு சான்ஸ் கிடைக்கும் எனக் காத்திருந்த மாதிரி எல்லோ கிடக்கூஊஊஊஊஉ:)... முந்தி ஒரு காலத்தில வலையுலகில் எம்பாலாரின் ஆதிக்கம் அதிகம்:).. இப்போ குறைந்துவிட்டது, பொயிங்கி எழ:) ஆட்கள் இல்லை எனும் தெகிரியத்தில:) தானே இப்பூடிச் சொல்லிட்டீங்க:))..

      ஹையோ கங்கை, ஜமுனை, காவேரி எல்லாம் எங்கின போயிட்டீங்க வாங்கோ பொயிங்கி எழுந்து.. மதுரை ஆட்சியை ஸ்ரோங் ஆக்குவோம்ம்..:))

      சே..சே..சே.. இந்த நேரம் பார்த்து ராஜி வேற.. பேஸ்மண்ட் வீக்கு எனச் சொல்லிட்டுப் போயிட்டாவே..:) இப்போ நான் என்ன பண்ணுவேன்ன்:)..

      ஹா ஹா ஹா.. மிக்க நன்றி நெ.த.

      Delete
  23. அருமையான அனுபவம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட்.. தவறாமல் வருகை தாறீங்க மிக்க நன்றி.

      Delete
  24. ஹலோ அதிரா என் கார் ஆக்ஸிடண்டில் மாட்டி உள்ளது அதனால் என் இன்சூர்ன்ஸ் கம்பெணி எனக்கு ஒரு சிறிய விமானத்தை தந்து இருக்கிறார்கள் ஆனால் அதை எனக்கு எப்படி இயக்குவது என்பது தெரியவில்லை நீங்கள் மிக வல்லவர் நல்லவர் எனப்தாஅல் உங்களிடம் கேட்கிறேன் நீங்கள் இங்கே வந்து எப்படி இயக்குவது என்று சொல்லி தந்தால் நலமாக இருக்க்கும் ( அப்பாடா அதிரா விமானத்தை இயக்கினால் அதன் பின் அவர் தேம்ஸ் நதியில் குதிக்க வேண்டிய அவசியம் இருக்காது )

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ ட்றுத் வாங்கோ...

      ஹா ஹா ஹா.. உங்களை மாதிரி.. எழுதுவதை வச்சே திரும்ப இப்பூடி mimicry:) பண்ணுபவரை, இந்த உலகத்தில வேறு எங்கயும் நான் காணல்ல சாமீஈஈஈஈ:)..

      ஆகாய விமான ஓட்டுதலில் என் பேர்சனல்:) செகரட்டறிதான் மிகத் திறமைசாலி:).. ஏனெனில் பிளேனில விண்டோ சீட்டை சும்மா கொடுத்தாலும் அதில் இருக்க மாட்டேன் எனச் சொல்லி அடம்பிடிக்கும் ஒரே ஆள் அவதேன்ன்:).. ஹா ஹா ஹா அவவை அனுப்பி வைக்கிறேன்ன்:))..

      மீ உந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாத புலிக்காட்டுப் பூஸ் ஆக்கும்:)).. ஹையோ பயமொயி கரீட்டுத்தானே:)..

      தேம்ஸ்ல தள்ளுவதிலேயே குறியாயிருக்கினம் சாமி:).. ரொம்ப ஜாக்ர்ர்ர்தையாத்தான் இருக்கோணும்:)..

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
    2. ஹையோ :) என் வாய் தான் எனக்கெதிரி ..எவ்ளோதான் தைரியமா நடிச்சாலும் கண்டுபிடிச்சிடறாங்களே :)

      Delete
    3. ///AngelinSaturday, April 22, 2017 4:41:00 pm
      ஹையோ :) என் வாய் தான் எனக்கெதிரி ..எவ்ளோதான் தைரியமா நடிச்சாலும் கண்டுபிடிச்சிடறாங்களே :)//

      ஹா ஹா ஹா அதுதான் ராஜி சொல்லிட்டாவே பேஸ்மண்ட் வீக்கூஊஊஊ:)..

      Delete
  25. உசு0பேத்தியே நம்மள பல்பு வாங்க வைக்க ஒரு கூட்டமே இருக்குது நம்மள சுத்தி. :) உங்கள் அனுபவங்கள ரசித்தேன்.

    அலைபேசியிலிருந்து படிப்பதால் வாக்கு அளிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. ஓ பறவாயில்லை மொபைல் எனில் போட முடியாதே.. மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
  26. அதிரா !!! உடனே வாங்க எங்க ஏரியாவுக்கு ..இங்கே டவுன் சென்டர்ல ஜையன்ட் கிரேன் OPERATE செய்ய யாருமில்லையாம் பேப்பர்ல நியூஸ் போட்டாங்க ..நானா போன் அடிச்சி சொல்லிட்டேன் டோன்ட் வொரி மை பெஸ்ட் ப்ரண்ட் ஸ்கொட்லாண்ட்ல இருக்கார் வந்து ஒட்டி தருவார்னு ..ப்ளீஸ் என் வாக்கை காப்பாத்திடுங்க :

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோஒ நான் ஓட்டத் தெரியும் எனச் சொன்னது கிரேன் அல்ல அஞ்சு:) கிரேன் போலவே கொஞ்சம் சின்னதா இருக்குமே.. அது என்ன.. அது என்ன.... ஆங்ங்ங்ங்ங் ஞாபகம் வந்திடிச்சீஈஈ:) அதுதான் “தூண்டில்”:) .. ஃபிஸ்..ஃபிஸ்... பிடிக்கிற தூண்டில்.. :)

      எங்காவது ஃபிஸ் இருந்தா அதுவும் கோல்ட் ஃபிஸ் எனில் ரொம்ப நல்லது:) உடனேயே வாக்குக் குடுங்க.. நான் ஃபிளைட் பிடிச்சே வந்திடுறேன்ன்:)) ஃபிஸ் பிடிக்கத்தான். ஹா ஹா ஹா..

      Delete
  27. முதலில் சாரி!! தலைமையகத்தில் நெட் சரியாக வேலை செய்ய மறுக்கிறது. அதனால வர முடியவில்லை...

    நல்ல காமெடியாகச் சொல்லியிருக்கீங்க சகோ! ரசித்து படித்தோம்....தொடருங்கள்..

    கீதா: ஹஹஹஹ்ஹ் வாங்க அதிரா....//நானும் எவ்ளோ காலத்துக்குத்தான் ரொம்ப நல்ல பிள்ளையா + வல்ல பிள்ளையா நடிச்சுக்கொண்டிருப்பதாம்? இருப்பினும் அதிராவோ கொக்கோ?:) உள்ளே நடுங்கினாலும் வெளியே காட்டிடாமலேயே காலத்தை.. இன்னும்.. ஓட்டிக்கொண்டிருக்கிறேன்:).// பில்டிங்க் ஸ்ட்ராங்க் பேஸ்மென்ட் வீக்...ஹஹஹ் வடிவேலு நினைவுக்கு வரார்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ... ஏன் உங்களிருவருக்கு மட்ட்டும் இப்பூடி அடிக்கடி கறண்டு கட்டாகுதூஊ.. நெற்வேர்க் கொம்பனியை மாத்துங்கோ சொல்லிட்டேன்ன்ன்ன்:).. ஹா ஹா ஹா இல்ல தாமதமானாலும் வருகை தந்தது மிக்க மகிழ்ச்சியே.

      வாங்கோ கீதா வாங்கோ... சிரிச்சுக்கொண்டே வாறீங்க.. எதுக்கு என தெரியாட்டிலும் நானும் சிரிச்சு வைப்போமே ஹா ஹா ஹா.....:)

      ஹையோ முருகாஆஆஆஆஆ பேஸ்மெண்ட் வீக்கு என்பது இப்போ உலகத்துக்கே தெரிஞ்சு போச்சாஆஆஆஆஆஆஆ:)

      Delete
  28. ஆ!!!! பிஎம்டபிள்யூவா...!!! ம்ம்ம் ஒரு நாள் நாமளும் ஓட்டிடுவோம்...நமக்குத் தெரிஞ்சு ஒர்க்ஷாப் பையன் இருக்காப்ல...அவர்கிட்ட சொல்லிட்ட ஒரு 1/2 மணி நேரம் ஓட்டத் தந்துருவார்ல....ஆனா என்ன எனக்கு சீட்ல பின்னாடி சாஞ்சுக்க ஒரு தலகானி, உக்கார ரெய்ஸ்டா ஒரு தலைகானி வேணுமே!! இல்லைனா கால் எட்டாதே ஹிஹிஹிஹி....ஆனா பிஎம்டபுள்யுவுல சீட் ரெய்ஸ் பண்ணவும் முடியுமே இல்லையா....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கீதா நீங்களுமா?:).. பி எம் டபிள்யூ மட்டுமில்ல கீதா, இப்போது இங்கு வரும் கார்கள் அனைத்துக்குமே சீட் உயர்த்தலாம் எல்லாம் செய்யலாம், ஆனாலும் உண்மைதான், என் நண்பி கொஞ்சம் உயரம் குறைவு... எனக்கு சரியாக இருந்துது, அவவுக்கு சொன்னேன் எதுக்கும் பில்லோ போட்டு ட்றைவ் பண்ணுங்கோ என.

      Delete
  29. நானும் சைக்கிள்கத்துக் கொண்ட காலத்திலே....வீரத் தழும்புகள், வீரம் காணிப்பது....நம்ம கௌரவம் குறையாம இருக்கறது....பின்ன ஆண் பிள்ளைகள் முன்னாடியல்லோ ஓட்டுறது...ஹ்ஹஹ் விழுந்தாக் கூட மீசைல மண் ஒட்டவே ஒட்டாதாக்கும்...உங்களுக்கும் அப்படித்தானு தோனுது....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இந்த விசயத்தில் மட்டும் கீதா, ஒரு தடவை கூட எனக்கு காயம் ஏதும் ஏற்பட்டதில்லை, விழுந்ததாகவும் நினைவில்லை.. நான் குட்டியாக இருந்தபோதே, அப்பாவின் சைக்கிளை பார் க்கு கீழால கால் போட்டு, வீட்டு உள் ரோட்டில் ஓடிப் பழகிட்டேன்.

      கொஞ்சம் வளர்ந்ததும், அண்ணனின் சின்ன பைக்கில் ஓடினேன்.. அது எப்படித் தெரியுமோ? பார் க்கு கீழால நன்கு ஓடிப்போய் டக்கென காலை மாற்றி சீட்டில் ஏறி இருந்து, பின் திரும்பவும் பார் க்கு கீழே காலைப்போட்டு ஓடி நிறுத்துவேன்.. ஹா ஹா ஹா..

      பின்பு வளர்ந்ததும் லேடீஸ் பைக் வாங்கிட்டேன், நான் கொஞ்சம் உயரம் என்பதால் எப்பவும் டக்கென காலை கீழே ஊன்றிடுவேன்ன் அதனால எப்பவும், விழுந்ததா நினைவில்லை எனக்கு.. அத்தோடு நான் கொஞ்சம் வலு பத்திரம் இப்படியான விஷயங்களில்.

      இப்போகூட நான் ட்றைவ் பண்ணும்போது பிள்ளைகள் சொல்வார்கள்.. ஸ்பீட்டாப் போங்கோ.. அந்தக் காரை முந்துங்கோ என்றெல்லாம், செய்வேன் ஆனா மிகவும் கொன்றோலாக.. அதே நேரம் கிடைக்கும் அந்த ஹப் ல அவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பேன், நீங்க வளர்ந்து கார் ஓடும்போது, இப்படி ஃபிரெண்ட்ஸ் சொல்வார்கள்.. ஸ்பீட்டாப் போ.. முந்து என்றெல்லாம், ஆனா அதுக்கு நீங்க அசைந்திடக் கூடாது, ஸ்பீட் லிமிட்டில் மிகவும் கவனமா இருக்கோணும் ட்றைவிங்கில் விளையாடக்கூடாது என:).

      Delete
  30. பூசார் அழ்காக ஓட்டுகிறார்....மிகவும் ரசித்தோம் இருவரும்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் துளசி அண்ணன், கீதா.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.