நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Sunday, 7 March 2010

Ambulance!!!அம்பியூலன்ஸ்!!!

என்ன அப்படிப் பார்க்கிறீங்க? பயப்படாதீங்கோ... எல்லாம் என் அனுபவம்தான் பேசுது.
சின்ன வயதிலிருந்தே அம்பியூலன்ஸ், பயரெஞ்சின்... சயரின்(siren) கேட்டால், என்னையறியாமலேயே கை கால் நடுங்கும், இதயமெல்லாம் என்னவோ செய்யும், இதயத்துடிப்பு அதிகமாகிவிடும். இப்பகூட அப்படித்தான் அம்பியூலன்ஸ் சயரின் கேட்டால்... உள்ளுக்குள் யார் இருக்கிறார்களோ என்ன அவஸ்தைப்படுகிறார்களோ என எண்ணி, அச் சத்தம் தொலைதூரம் போகும்வரை எனக்கு நாடித்துடிப்பெல்லாம் அடங்கியதுபோல இருக்கும்.


இங்கு கார் றைவிங் பழகியபோது, எனக்கு பழக்கியவர் சொல்லித்தந்த விதிமுறை, கார் ஓடிக்கொண்டிருக்கும்போது இப்படி ஏதாவது சயரின் சத்தம் கேட்டால், உடனே சிக்னலைப் போட்டுவிட்டு, காரை எந்தக் கரையாயினும் சரி நிறுத்திவிட வேண்டும், நிறுத்தக்கூடாத இடமாயிருந்தாலும் பறவாயில்லை, எமது வாகனத்தை நிறுத்திவிட வேண்டும் அப்போதான் அவர்கள் வெட்டி எடுத்துக்கொண்டு போவார்கள், சயரின் சத்தம் கேட்டால் நாம் ஓடக்கூடாது.... அவர்கள் எம்மை முந்திப்போகக்கூடியளவுக்கு பக்கத்தில் ரோட்டு இருப்பின் நாம் ஓடலாம்.


இதேபோல், ரோட்டைக் கடப்பதற்காக நாம் நிற்கும்போது(Pedestrian Crossing), பட்டனை அமத்திவிட்டு பச்சை சிக்னலுக்காக காத்திருப்போம், பச்சை சிக்னல் வந்ததும், கடக்க தொடங்குவோம். அப்படி பச்சை சிக்னல் வரும்போது எங்காவது அம்பியூலன்ஸ் சயரின் கேட்டால், நாம் கடக்கக்கூடாது, வெயிட் பண்ணிப்பார்க்க வேண்டும் அல்லது, அது கடந்த பின்பே நாம் கடக்க வேண்டும். இப்படியிருக்கும்போது, கடந்த வாரத்தில் ஒருநாள் மோலுக்குப்(Mall) போயிருந்தேன். ஒரு கரையிலிருந்து அடுத்த பக்கத்திற்கு ரோட்டைக் கடக்க வேண்டியிருந்தது. பட்டனை அழுத்திவிட்டு, காத்திருந்தோம். அதாவது இரு பக்கத்திலும் நிறையப்பேர் ரோட்டைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தோம்.


இங்கு இன்னொரு கதையையும் சொல்லவேண்டும். இங்குள்ள ஆச்சிமார், அதாவது 70, 80 வயதுக்காரர்கள் பெரும்பாலும்(எல்லோரும் அல்ல) மகாராணியாரைப்போலவே உடையணிந்திருப்பார்கள். அதாவது அரைப்பாவாடை, அதற்கேற்ற மச்சிங் பிளவுஸ், பொருத்தமான சூஸ், தொப்பியும் போட்டிருப்பார்கள், லிப்ஸ்ரிக், கியூரெக்ஸ், முகப்பூச்சு, மச்சிங் கான்ட்பாக்... இப்படித்தான் வெளிக்கிட்டு மோலுக்கு வருவார்கள். பார்க்க ஆசையாக இருக்கும்.சரி, அன்று பட்டனைப் பிறெஸ் பண்ணிவிட்டுக் காத்திருந்தோம், பச்சைலைட் வந்தவேளை, திடீரென அம்பியூலன்ஸ் சயரின் கேட்டது, இதே ரோட் பக்கமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. உடனே ரோட்டைக் கடப்பதற்காக ரோட்டிலே காலை வைத்துவிட்டு எல்லோரும் உள்ளே எடுத்துவிட்டோம். அதைக்கவனிக்காதவர்கள் கடக்க ஆயத்தமானபோது, இருபக்கத்திலுமிருந்து, எதிர்பக்கமிருந்து கடக்க தொடங்கியவர்களை “Ambulance is coming, stand there, stand there” எனக் கத்தினார்கள்.


ஆனால் ஒரு, வயதான ஆச்சிக்கு மட்டும் எதுவும் கேட்கவில்லை. 80 வயதுக்கு மேல் இருக்கலாம் அவவுக்கு, குயினைப்போலவே அழகாக, நான் மேலே கூறியபடி, மேக்கப் பண்ணிக்கொண்டு வந்திருந்தா. அவ ரோட்டைக் கடக்கத் தொடங்கிவிட்டா, அவவின் பக்கமிருந்தவர்களாவது அதைத் தடுத்திருக்கலாம், தடுக்கவில்லை,(வேண்டுமென்றல்ல, எல்லோரும் திகைத்த நிலை) நான் எதிர்ப்பக்கத்தில் இருந்தமையால் ஓடிப்போய்த் தடுக்கவும் முடியவில்லை. எனக்குத்தான், சயரின் சத்தம் காதில் கேட்டதும், எல்லாத் துடிப்பும் ஸ்தம்பித்துவிடுமே, பிறகெப்படி அடுத்தவருக்கு உதவமுடியும். அம்பியூலன்ஸ் கிட்ட வந்தே விட்டது, ஆச்சி அப்போது நடுரோட்டில் கடந்தவண்ணமிருந்தா, அவ பயந்திடுவார் என நினைத்தோ என்னவோ, அம்பியூலன்ஸ் றைவர், வெட்டி எடுத்துக்கொண்டு போகாமல் மிக அருகில்வந்து நிறுத்தினார்.


அப்போதுதான் ஆச்சி திடுக்கிட்டதுபோல பார்த்துக் கண்டுகொண்டா, அவவுக்கு சரியான அந்தரமாகப் போய்விட்டது. முகமெல்லாம் மாறிவிட்டது, ஓடுவதுபோல காலை எடுத்து வைத்து இக்கரைக்கு வந்தா, வரும்போது சொல்லிக்கொண்டே வந்தா.. "sorry.. sorry... I didn’t notice that... I didn’t notice that" என. அதன்பின்பு அம்பியூலன்ஸ் போய்விட்டது. ஆனால் எனக்கு அந்த ஆச்சியை நினைக்க சரியான கவலையாகிவிட்டது, நானும் சேர்ந்து அவவைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றேனே என மனதில் ஒரு உறுத்தலாக இருந்தது. ஆனால் அத்தனையும் நடந்தது... ஒரு 2 நிமிடத்திலும் குறைந்த இடைவெளியில்தான்.... வயதாகிவிட்டால் எமது நிலைமையும் இப்படித்தானே. நாம் தான் எம்மால் முடிந்தவரை வயதானோருக்கு உதவ வேண்டும்.

' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' '

இது Catnip Rose இல்லை....:) soap ஆல் செய்யப்பட்ட ரோசாப்பூவின் வாசத்தோடு உறங்குகிறார் பூஸார்..... இது அன்பு இளமதியின்.. வாசனைமிக்க பரிசு....


~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

பின் இணைப்பு:


"எது அழகு?"----------------------------------------------------------------------
"முல்லைக்கு முட்டுக்கொடுக்க தேரைத் தேடாதீர்கள்
உடைந்த கால்களுக்கு உங்கள் தோளைக் கொடுங்கள்"
----------------------------------------------------------------------

23 comments :

 1. உண்மைதான் அதிரா.சாலையில் சென்று கொண்டு இருக்கும் பொழுது ஆம்புலன்ஸ் சப்தம் வந்தால் ச்தம்பித்துப்போய்விடுவேன்.மனதில் சின்னதாக பதட்டம்.உய்ங்..உயிங்..இந்த சப்தமே அலர்ஜியாக இருக்கும்.அது கடந்து போன பிறகுதான் நிம்மதியாக இருக்கும்.உள்ளே அவஸ்த்தையில் இருக்கும் அந்த முகம் தெரியாத ஜீவனுக்குக்காக மனசு சில விநாடிகள் பிரார்த்தனை செய்ய்யும்.ஸ்காட்லாந்த ரோடை கிராஸ் செய்த கதை திக்..திக் தான்.நல்ல வேளை ஆச்சிக்கு ஒன்றுமாகவில்லை என்ற வரிகளைப்பார்த்தும்தான் கொஞ்சம் நிம்மதி.உண்மைதான் அதிரா ///வயதாகிவிட்டால் எமது நிலைமையும் இப்படித்தானே. நாம் தான் எம்மால் முடிந்தவரை வயதானோருக்கு உதவ வேண்டும்.///உண்மையான வரிகள்.

  ReplyDelete
 2. ஸாதிகா அக்கா எவ்வளவு ஸ்பீட்டான பின்னோட்டம் மிக்க நன்றி. பொதுவாக எல்லோருக்குமே இப்பதட்டம் வரத்தான் செய்யும். அம்பியூலன்ஸ்காரர்கள் ஒருபோதும் இடிக்க மாட்டார்கள் ஸாதிகா அக்கா, எவ்வளவு இக்கட்டான சூழலாயினும் கவனமாகத்தான் ஓடுவார்கள்... இதுவரை அம்பியூலன்ஸ் எதிலாவது மோதியதாக கேள்விப்பட்டதாக ஞாபகம் இல்லைத்தானே.

  ReplyDelete
 3. அதிரா ! நல்ல பதிவு! இங்கும் ஆம்புலன்ஸ் வந்தால் வலது பக்கம் ஒதுங்க வேண்டும்.. முடிந்தவரை.இந்த ஆம்புலன்ஸ் ஓட்டிகளை பாராட்டியே ஆக வேண்டும்.. அவ்வளவு வேகத்திலும் ஒரு குலுங்கல் இல்லாமல் ஓட்டுவார்கள்... உள்ளே இருக்கும் எமெர்ஜென்சி மெடிக்கல் ஸ்டாஃபும் அப்படித்தான். 70 மைல் வேகத்தில் சென்றாலும் இன்ட்ராவீனஸ் இஞ்ஜெக்ஷன்(IV) போட்டு விடுவார்கள்... எல்லாம் எக்ச்பீரியன்ஸ் பேசுது... சைரனோடு வரும் ஆம்புலன்ஸைக் கண்டா.. கடவுளே உள்ளே இருப்பவர் நலமாக இருக்கவேண்டுமே என்று வேண்டிக்கொள்வேன்...

  ReplyDelete
 4. அந்தப் பாட்டிக்கு ரொம்ப தர்மசங்கடமாகி இருக்கும், பாவம். சில சமயம் ட்ராஃபிக் ஜாமில் ஆம்புலன்ஸுக்கு வழி கிடைக்காமல் நிற்கும்போது மனம் பதறும். இறைவன் காக்கவேண்டும் எல்லாரையும்.

  ReplyDelete
 5. இதில நிறைய சொந்த அனுபவங்கள் இருந்தாலும் பலவற்றை பொது இடங்களில் பகிர்ந்து கொள்ள முடியாததால் :

  நள்ளிரவு நேரம் என் பொறுப்பில் இருந்த ஒரு கல்லூரி மாணவருக்கு தாங்க முடியாத வயிற்று வலி. சோதனையில் போது “அப்பெண்டிக்ஸ்” இருக்கலாம் என முடிவு செய்து சென்னையில் புறநகர் பகுதியில் இருந்து ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். என்னிடமோ ஆம்புலன்ஸ் இல்லை. என்னுடைய வண்டியில் டிரைவரை அழைத்து நான் உனக்கு அனுமதி கொடுக்கிறேன், சிவப்பு சிக்னல் இருந்தாலும் தாண்டி சென்று 1/2 மணி நேரத்தில் இந்த மாணவனை அங்கு அட்மிட் செய்ய வேண்டும் நான் இங்கு இருந்து மருத்துவரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

  அந்த ட்ரைவர் சரியாக 22 நிமிடத்தில் (கற்பனை பண்ண முடியாத வேகத்தில் Its just beyond Physics (out side time and space for the distance involved) அந்த மாணவரை OT யில் எடுத்து செல்லவும், மருத்துவர் அவன் வயிற்றை திறக்கவும் அந்த அபெண்டிக்ஸ் வெடிக்கவும் சரியாக இருந்தது மருத்துவர்கள் அந்த மாணவரை காப்பாற்றி விட்டனர். (மூல காரணம் என் ட்ரைவர்) நானும் சந்தோஷப்பட்டு ரூ 5000 அவருக்கு ஊக்க தொகை அலுவலக நிதியில் இருந்து கொடுத்தேன்.

  ஆனால் இரண்டு மாதம் கழித்து அந்த ட்ரைவருக்கும் அவர் மகனுக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகன் இவர் கன்னத்தில் அறைய “தன்மானம்” அதிகம் உள்ள என் ட்ரைவர் தற்கொலை செய்துக் கொண்டார். அவர் இழப்பை இன்னும் மறக்கமுடியவில்லை. என் மனதில்தான் வாழ்து வருகிறார்.

  நேரம் வரும் போது Air Ambulance பற்றி எழுதுகிறேன்.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 6. //எல்லாம் என் அனுபவம்தான் பேசுது. சின்ன வயதிலிருந்தே அம்பியூலன்ஸ், பயரெஞ்சின்... சயரின்(siren) கேட்டால், என்னையறியாமலேயே கை கால் நடுங்கும், இதயமெல்லாம் என்னவோ செய்யும், இதயத்துடிப்பு அதிகமாகிவிடும். இப்பகூட அப்படித்தான் அம்பியூலன்ஸ் சயரின் கேட்டால்... உள்ளுக்குள் யார் இருக்கிறார்களோ என்ன அவஸ்தைப்படுகிறார்களோ என எண்ணி, அச் சத்தம் தொலைதூரம் போகும்வரை எனக்கு நாடித்துடிப்பெல்லாம் அடங்கியதுபோல இருக்கும். //


  நானும் இப்படி தான் , இப்ப கூட ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டவுடன் அல்லாவே யாருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே , ஒன்னும் இல்லாமா காப்பாத்து என்று வேண்டிக்கொள்வேன்.

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 7. சில வருடங்களுக்கு முன் பூந்தமல்லி ஹை ரோடில் ஒரு பீக் அவரில் நாற்சந்தியில் நின்றுகொண்டிருந்தேன்.வேகமாக வாகனங்கள் விஷ்க்..விஷ்க்..என்று பறந்த படி இருக்க சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாகியும் என்னால் ரோடை கிராஸ் பண்ண முடியவில்லை.வாகனங்கள் ஒரு பக்கம் நிறுத்தப்பட்டதும் மறுபக்கம் வந்து கொண்டுள்ளது என்பதைக்கவனிக்காமல் கிராஸ் செய்ய ஒரு ஆம்னி பஸ் காரன் கிறீச் என்ற சப்ததுடன் பிரேக் நிறுத்தி ..ஜன்னல் வழியாக தலையை நீட்டி திட்ட ஆரம்பிப்பதற்குள் நான் சாலையை கிறாஸ் செய்து ஒடியே விட்டேன்.கிராஸ் செய்து முடித்த பிற்பாடுதான் விபரீதம் புரிந்து கைகால் எல்லாம் நடுங்கி விட்டது.

  ReplyDelete
 8. அதிரா..இந்த பதிவைப்பார்த்து விட்டு அப்ப ஸாதிகாக்காவுக்கு ஆச்சி வயசா?என்று கேள்வி எல்லாம் கேட்கப்படாது..இப்பவே சொல்லிட்டேன்.

  ReplyDelete
 9. //அதிரா..இந்த பதிவைப்பார்த்து விட்டு அப்ப ஸாதிகாக்காவுக்கு ஆச்சி வயசா?என்று கேள்வி எல்லாம் கேட்கப்படாது..இப்பவே சொல்லிட்டேன்.//

  சே சே அப்படி எல்லாம் கேள்வி கேட்க மாட்டோம். ஆமிர்க்கு பாட்டின்னா எங்களுக்கு ஆச்சின்னு நாங்கதான் முடிவே செய்தாச்சுல்ல :-)

  அதிரா ஆம்ப்யூலன்ஸ் ஃபயர் எஞ்சின் பயம் நிறைய பேருக்கு உண்டு. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஃப்யர் ஸ்டேஷன் ஒன்னு இருக்கு. இந்த வீட்டுக்கு வந்த புதிதில் அடிக்கடி சைரன் சத்தம் கெட்கும். கேட்கும் போதெல்லாம் எங்கே தீ பிடித்துக் கொண்டதோ என கலங்குவேன். பின்னர்தான் தெரிந்தது அது அவர்களின் ஒத்திகை சைரன் என்று :-)

  அதிரா பாட்டியும் ராணி போலத்தான் ட்ரெஸ் செய்வாரா?!

  ReplyDelete
 10. இலா மிக்க நன்றி. எமக்கு நேசறியிலேயே இதையெல்லாம் சொல்லித்தந்திருந்தால் ஒருவேளை இப்படி பதட்டம் இருக்காதோ என்னவோ. இங்கே நேசறியில் பயர் எஞ்சின், அம்பியூலன்ஸ், போலீஸ் கார் எல்லாம் அழைத்து, பிள்ளைகளை உள்ளே ஏத்தி, சயரின், லைட் எல்லாம் போட வச்சுக்காட்டி, பேஷண்டை எங்கே படுக்க வைப்பது, பயர் வந்தால் எப்படி தண்ணீர் அடிப்பது என்பதெல்லாம் சொல்லிக்கொடுத்துவிடுகிறார்கள். நான் அம்பியூலன்ஸ்க்கு கிட்ட போனதே திருமணத்தின்பின்புதான்.

  இன்னொரு கதை, சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு கிட்ட இருக்கும் ரெயில்வே ஸ்டேஷனுக்கு ரிக்கெட் புக்கிங்குக்காகப் போயிருந்தோம். கணவர் ரிக்கெட் ஒபீஷில் கதைத்துக்கொண்டிருக்க, நானும் பிள்ளைகளும் சும்மா நிறுத்தியிருந்த ரெயினின் அருகில் சென்று பார்த்தோம். அதைக்கண்ட டேஷன் அதிகாரி, எம்மிடம் வந்து கேட்டார் எஞ்சினைப் பார்க்கப்போறீங்களோ என. பிள்ளைகள் ஓம் என்றார்கள், உடனே அவர் உள்ளே சென்று கீ எடுத்துவந்து, கதவைத்திறந்து உள்ளே ஏறச் சொன்னார், றைவர் சீட்டில் இருக்கச் சொல்லி, எல்லா பட்டனையும் காட்டி விளங்கப்படுத்தினார், கோன் அடிக்கச் சொன்னார், லைட் போடச்சொன்னார்... இப்படி எல்லாம் விளங்கப்படுத்திக்காட்டியபின் நாங்கள் இறங்கி வந்தோம்...

  அவரை எமக்கு ஒருபோதும் அறிமுகமில்லை. ஆனால் இங்குள்ளவர்கள் இப்படியெல்லாம் விளங்கப்படுத்துகிறார்கள். மு.கு: பிரித்தானியா முழுவதும் இப்படிச் சனமில்லை(நல்ல) அதிராவின் ஏரியாதான் இப்படியாக்கும்:):)

  ReplyDelete
 11. மிக்க நன்றி திருமதி ஹூசைன். போனமாதம் என் பின்னே ஒரு அம்பியூலன்ஸ் வந்துகொண்டிருந்திருக்கு, லைட் மட்டுமே போட்டிருந்திருக்கிறார்கள்போலும், நான் உள்ளே பாட்டைப்போட்டுக்கொண்டு ஓடியமையால் கண்ணாடியில் பின்னே பார்க்கவில்லை, ஆனால் எதிரே வந்த கார் சைட் பண்ணியது, சிறிய ரோட், நான் யோசித்தேன்.... லூஸ் கார் ரைவர் எதுக்கு திடீரென நிறுத்துகிறார் என(அவர் அம்பியூலன்சைக் கண்டுதான் நிறுத்தியிருக்கிறார்), நான் நிறுத்தாமல் ஓடிக்கொண்டிருந்தேன், கவனிக்கவில்லை, அம்பியூலன்ஸ் றைவர் பார்த்தார் இதுசரிவராது என, டக்கென சயறினைப் போட்டுவிட்டார்... எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு, சிக்னலும் போடவில்லை, என் ஜீப்பை சடாரென சைட்டிலே செருகி நிறுத்திவிட்டேன்.... கொஞ்சநேரம் கைகால் எல்லாம் படபடக்கத்தொடங்கிவிட்டது...

  ReplyDelete
 12. ஹைஷ் அண்ணன் மிக்க நன்றி. உங்கள் கதை கேட்க நம்பமுடியவில்லை.... இதெல்லாம் கடவுளின் செயல்தான்... அல்லது அப்படிக் குறுகிய நேரத்தில் எல்லாம் நடக்குமோ. ஆனால் தலைமைப் பதவியில் இருந்த நீங்களும் பொறுப்பாக நடந்தமையாலேயே மாணவர் காப்பாற்றப்பட்டார்... றைவரை நினைக்க கவலையாக இருக்கு.

  சொல்றீங்களே தவிர எல்லாம் எழுதுறீங்களில்லை... விரைவில் எழுதுங்கோ... படிக்க ஆவலோடு இருக்கிறோம்.

  ReplyDelete
 13. ஜலீலாக்கா மிக்க நன்றி. உண்மைதான் கடவுளைத்தான் கேட்பது யாராயினும் காப்பாற்றிவிடப்பா என.

  ஸாதிகா அக்கா... என்ன இது? அப்படி நெருக்கடியான ரோட்டை, இப்படிக் கடந்திருக்கிறீங்கள்? என்ன கின்னஸ் புக்கில் இடம் பிடிக்கும் ஐடியாவோ?.

  இருப்பினும் சில வருடங்களுக்கு முன்பு என அதிராவுக்கு க்குளூ தந்திட்டீங்கள்... அப்பவே இப்படியெண்டால், இப்போ கையைப் பிடித்துத்தான் கடக்கப்பண்ணவேண்டும் ஸாதிகா அக்காவை(வயசாகியிருக்குமெல்லோ:)) என அடுத்தவைக்கு அதிரா க்குளூ கொடுக்கமாட்டேன்:):)

  ReplyDelete
 14. மிக்க நன்றி கவிசிவா... அப்படிச்சொல்லுங்கோ ஸாதிகா அக்காவுக்கு கிக்...கிக்..கிக்...

  அதிரா பாட்டியும் ராணி போலத்தான் ட்ரெஸ் செய்வாரா?!///கவிசிவா, இங்கு சமரெனில் அப்படித்தான். நான் இலங்கையிலேயே, half skirt and blouse or frock or jeans தான் போடுவது வழக்கம், சுரிதார் எல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்கள் மட்டுமே அங்கு போட்டதுண்டு. அதிரா ....பாட்டியானால் என்ன போடலாம்... என இப்பத்தான் திங்.... பண்ணுறேன்..கிக்...கிக்....கீஈஈஈஈஈஈஈஈ

  ReplyDelete
 15. அம்பூலன்ஸ்! உண்மைச்சம்பவம்.

  நீங்கள் எழுதியமையால் பலருடைய வாழ்விலும் சந்தித்திருந்த இது தொடர்பான பல உண்மைச் சம்பவங்களை பகிர்ந்து கொள்ள எல்லோருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

  முதலில் இதனை ஏற்படுத்தித்தந்த உங்களுக்கு நாம் எல்லோரும் நன்றி சொல்லவேண்டும்.

  அதிரா! உங்களுடையது உட்பட அனைவரது அனுபவப் பகிர்வையும் வாசித்தபோது என் மனம் வேகமாக அடித்து, பாரமாகி இறுதியில் கடவுளே! காப்பாற்றிவிட்டாயப்பா!! என ஆறுதல் அடைந்தேன். நிகழ்வுகள் ஒவ்வொன்றும் எதிரே காண்பதுபோல இருந்தது எனக்கு.

  அம்பூலன்ஸ் சைரன் ஒலி கேட்டால் எனக்கும் கிலிதான்.

  அனுபவம் என்னும்போது எனக்கும் இருக்கிறது.
  வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அனுபவம்:!(....

  ReplyDelete
 16. etkanave serious mood-la irukkiran. neengka vera. ;)

  70's 80's ellaam ungkalukku aachchiyaa!!! seba paarththu vaikkap poraanka, paththiram. ;)

  ReplyDelete
 17. Athirakkaa,geno will come n give its comments latter. Take care.bye for now.

  ReplyDelete
 18. பெருசா இருக்கு அதீஸ்.. கொஞ்சம் நேரந்தாங்கோ படிச்சு முடிக்க..

  ReplyDelete
 19. இளமதி மிக்க நன்றி. நான் எழுதும்போது எதிர்பார்க்கவில்லை ஒவ்வொருவருக்குள்ளும் இப்படிக் கதைகள் இருக்குமென...

  இமா இதென்ன இது.. ஆரைப்பார்த்தாலும் மனம் சரியில்லை, சீரியஸ் மூட் என்கிறீங்களே... இதுக்குத்தான்சொல்றது என்றும் சுவீட் 16 ஆக இருக்கவேணும் என அதிராபோல:)..

  அதிராவை ஒண்ணுமே பண்ண முடியல்லே என்றுதான், இப்போ செபா அன்ரியோட மாட்டப்பார்க்கிறீங்களோ? அதுதான் நடக்காது...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் ஆச்சி எனச் செல்லமாகச் சொன்னேனாக்கும்...:) என்னையும் எங்கட அப்பா செல்லமாக வா ஆச்சி, எப்படி இருக்கிறாய் ஆச்சி என்பார்.... கிக்..கிக்...கிக்.. இமா NHM writer இல்லையோ? ஏன் ரைப்பண்ணக் கஸ்டப்படுறீங்கள்?

  ReplyDelete
 20. நான் சொன்னதைத் தப்பா விளங்கி இருக்கிறியள் ஆச்சி. அதுவும் 'மேட்' எண்டு சொன்னனானோ!! எங்க! ;)

  'சீரியஸா' இருக்கிறவையள் தான் 'ஆம்பியூலன்ஸ்' பார்ப்பினம். ;)

  நான் கலாதியா ஊர் எல்லாம் சுத்திக் கொண்டு திரியிறன். இப்பவும் 'அரடாகி' ட்ரிப்புக்குத் தான் வெளிக்கிடுறன். நீங்களும் வாறீங்களே!

  (பின்னேரம் வந்து (நேரம் கிடைச்சால்) கதை ஏதாவது இருந்தால் சொல்லுறன்.)

  ReplyDelete
 21. Geno!!! Thank you for the information. When you are free, please come this side.

  சீரியசாக இருக்கிற சந்து... தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கோ... நான் நேரத்தைச் சொன்னேனாக்கும்...

  இமா!! நான் ட்ரிப்புக்கெல்லாம் வரேலாது:(. ஹைஷ் அண்ணனும் ஜீனோவும் பிளேனில வந்துகொண்டிருக்கினம், அதைவிட்டுவிட்டு எப்பூடி நான் வாறது?. நீங்க பின்னேரம் வந்து நல்ல நல்ல கதையாச் சொல்லுங்கோ. ஓக்கை?.

  ReplyDelete
 22. அட,அட,அட!! என்ன ஒரு பாசம்,பரிவு,அக்கறை? சகோஸ் ப்ளேன்ல வரம் எண்டு சொன்னா ஐ யாம் நாட் இன் இன்சைட் த ஹவுஸ் எண்டு சொன்னனீங்கள்..இப்போ வீடு வந்து சேர்ந்துட்டீங்களா அதிராக்கா?
  ஆச்சியிடம் சொல்லி கொஞ்சம் சீனிச் சம்பல் செஞ்சு வைக்கச் சொல்லுங்கோவன். அவவ கைப்பக்குவம் நல்லா இரிக்குமென ஜீனோ கேள்விப்பட்டவர்.

  ஆம்பியூலன்ஸ் சவுண்டு கேட்டால் உங்கட அளவுக்கு இல்லையெண்டாலும் ஜீனோவால் ஏலும் அளவுக்கு ஜீனோ பயம் படுவர்..உள்ளிருக்கும் ஜீவன் நலமே வாழ ஓரிரு நிமிடம் பிரேயர் செய்வர்..வேற என்ன செய்யமுடியும் அதிராக்கா? வாழ்வே மாயம்,இந்த வாழ்வே மாயம்!!

  சுவையான பகிர்வு..மேலதிக சுவையான பின்னூட்டங்கள்..படிக்கப் படிக்க இனிமை..உடல் ஆரோக்கியமும் கூடும்..ஏனெண்டால், சிரித்தாலே ஒருவரின் ஆயுள் அதிகமாமாம். உங்கட பக்கத்தில்தான் சிரிப்புக்குத்தான் நூற்றொரு சதவீத உத்தரவாதமாச்சே?:Dx101

  ReplyDelete
 23. மிக்க நன்றி ஜீனோ.

  ஆம்பியூலன்ஸ் சவுண்டு கேட்டால் உங்கட அளவுக்கு இல்லையெண்டாலும் ஜீனோவால் ஏலும் அளவுக்கு ஜீனோ பயம் படுவர்..//// எந்த அளவு எனச் சொல்லேலுமோ ஜீனோ?:).. ஓஓஒ அந்த அளவாக இருக்குமோ?.. இப்படிச் சிரிக்க வைக்கிறீங்க..:):):).

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.