இல்ல!! இல்ல! பெரிகள்!(berries:))!!!
என்ன இது நம்மட “கொப்பி வலது” க் கலரில பழுத்திருக்கே:).. ஆப்புடலாமா வாண்டாமா?:)) |
இவை கிரான்பெரீஸ்... எங்கள் வீட்டு வேலியில் நிற்கிறது. ஆனால் ஒரு பழம்கூடச் சாப்பிடுவதில்லை, காரணம் ஒழுங்காக மருந்து வாங்கி அடிக்க வேண்டும், அடிக்காவிட்டால் புழுப்பிள்ளைகள்:).. குடி வந்திடுவார்கள்:). படமெடுப்பதற்காக ஆய்ந்தேன்,
பின்பு கொட்டி விட்டேன்..
மரம் தெரியாமல் கொத்துக் கொத்தாக காய்த்துப் பழுத்து, பின் காய்ந்து போகும், குருவிகள்கூட கொஞ்சம்தான் உண்பினம்.
இந்தக் கிரான்பெரி, இங்கு பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தேடுவாரில்லாமல் காய்த்திருக்கும், ஆனால் எல்லோரும் சூப்ப மார்கட்டில்தான் பணம் கொடுத்து வாங்குவினம்.
=======================================
இது பிளாக்பெரீஸ்ஸ்... இவையும் இங்கு எல்லா இடங்களிலும் காய்த்துக் குலுங்கும், ஆரும் தொடமாட்டினம். இவை ஸ்கூலுக்குப் பக்கத்தில் ஒரு காணியில் காய்த்திருந்துது. நான் ஒரு வயதானவரைக் கேட்டேன், வயதானோர்தான் இங்கு அயகா விளக்கம் சொலுவினம்:)..).. இவை சாப்பிடும் பெரீஸ் தானே என. அதுக்கு அவர் நின்று நிதானமாகச் சொன்னார், பயப்பிடாமல் சாப்பிடலாம் ஜாம் செய்யலாம், எனக் கூறிக்கொண்டே ஒன்றைப் பிடுங்கித் தந்து சாப்பிட்டுப் பாருங்கோ என்றார்... சூப்பர்.
இப்போ புரிஞ்சிருக்குமே எங்கட இடம் எவ்ளோ இயற்கை அயகு:) நிறைஞ்சதென.. நான் அதிராவைச் சொல்லல்ல:).. ஹையோ முறைக்காதீங்கோ.. பிறகு அந்த முருகனே பொறுக்க மாட்டார்:).
நோ தங்கூ.. கண்ட நிண்ட பழங்களை எல்லாம் புடுங்கி லபக்கென வாயில போட்டிடக்கூடாதென:) வீட்டில:) கடுமையான உத்தரவு போடப்பட்டிருக்கு:)).. அவிங்க ஜொன்னா, நான் மீற மாட்டனாக்கும்:).
====================================================
ஊசி இணைப்பு:
எப்பவுமே வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும், சோர்ந்து போயிடக்கூடாதாம், மாத்தி ஓசிக்கோணும் எனப்
பெரியவங்க ஜொள்ளியிருக்கினம்:)...
கூரை வேயக் கிடுகு இல்லையே
கிடுகு வாங்கப் பணமில்லையே
என வருந்தாதே...
ஆஹா.. இரவிலே வீட்டுக்குள்
இருந்தபடியே நட்சத்திரங்களைப்
பார்க்க முடிகிறதே..
ஆருக்குக் கிடைக்கும்
இந்தப் பாக்கியம்:)
என மாத்தி ஓசிக்கோணும்:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குட்டி இணைப்பு 4 அவர் கிரே8:) கிட்னீஸ்:)
“ஆடம்பரம் இல்லாத, சாந்தமான சூழலில்தான், உண்மையானதும், நிரந்தரமானதுமான அமைதி பிறக்கிறது”
“மனித(பூஸ்:) உள்ளமும் ஒரு புத்தகத்தைப் போலத்தான், அதனைப் புரட்டினால் பல பாடங்களைப் படிக்கலாம்”
------------ தயாரித்து வழங்கியவர்:- புலாலியூர் பூஸானந்தா:))-----------
|
Tweet |
|
|||