நல்வரவு_()_


Friday 29 August 2014

குயின் அம்மம்மாவும் அதிராவும்:)


த்தனை தடவைதான் நான் ஆர் என்பதையும், என்னை நினைவிருக்கோ என்பதனையும் கேட்பது :).. அதனால ஸ்ரெயிட்டா விஷயத்துக்குப் போய்விடுவது நல்லதென முடிவெடுத்திட்டன்:) இது நல்ல முடிவுதானே?:).

ந்த முறை எங்கட குயின் அம்மம்மா என்னை விடவேயில்லை, அவட பூட்டனின்[(இப்பூடி விபரமா எழுதாட்டில் பிறகு அதிராவின் பூட்டனோ என சனம் கதை கட்டிடும்:) நாங்க இதில எல்லாம் வலு உஷார் ஆக்கும்:))]பிறந்தநாள் வந்ததெல்லோ யூலையில அதுக்கு வா வா என ஒற்றைக் கால்ல நிண்டா..:) அதனாலதான் ஒருக்கால் பக்கிங்காம் பலஸ் பக்கம் போய் ... குட்டியின் கையைப் பிடிச்சு நான் தான் கேக் கட் பண்ணி தீத்தியும் விட்டனான்:.. தொட்டிலில் போட்டதும் நான் தானே:).. அப்போ எப்பூடி இதுக்குப் போகாமல் விடுவது?? :).

பக்கிங்காம் பலஸ் முன் பக்கம்...


இதில பாருங்கோ, 1ம் மாடியில இருக்கிற 4 வது கண்ணாடி தெரியுதெல்லோ? அந்த அறைதான் குயின் அம்மம்மான்ர அறை:)

இது பலஸ் க்கு எதிர்ப்பக்கமா இருக்கும் பூந்தோட்டம்:) இதில இருந்துதான் நானும் குயின் அம்மம்மாவும் கேக்கும் சாப்பிட்டு இங்கிலீஸு ரீயும் குடிச்சம்:)

இதில எனக்கு பிடிக்காத விஷயம் ஒண்டிருக்கு.. என்னண்டால்ல்.. சிவப்பு கோட்டும் கறுப்பு ஜீன்ஸ்ஸும்.. கண்ணை மறைக்கும் தொப்பியும் போட்டு ஒருவர் நிற்பது தெரியுதெல்லோ? ஒவ்வொரு வாசலுக்கும் ஒருவராக நிற்கினம்.. கார்ட்.. கொடுமை என்னண்டால்ல்ல் சிலைபோல, கையில் துவக்கை ஏந்தியபடி நிற்கவேண்டும்... கைவலித்தால், ஆமிக்காரர் , போலீஸ் ச்லூட் போடுவதுபோல , காலை தூக்கி அடித்து கையில் இருக்கும் துவக்கை மாற்ற வேண்டும்... 24 மணி நேரமும் இதுதான்... இது மட்டும் எனக்கு பிடிக்கவேயில்லை, அவர்களுக்கு காவல் காக்க இப்படி மனிதர் கஸ்டப்பட வேண்டுமோ???



ஆவ்வ்வ்வ் கிட்ட வந்தாச்சூஊஊஊ... இதுதான் லண்டன் ஐ:).. எதுக்கு கிட்டவோ? வெயிட் சொல்லுவன்தானே? :)

இது ஒரு கண்:).. கிட்ட வந்தாச்சூஉ.. அதாவது தேம்ஸ்ஸ் தெரியுதெல்லோ.. இதுதான் தேம்ஸ்ஸ்ஸ் :)

இது லண்டன் ஐ இலிருந்து தேம்ஸ் நதி.. Big Ben - UK Parliament தெரியுது





இது தேம்ஸ் நதியில், குரூஸில் போனபோது, மேல் தட்டில் இருந்து எடுத்த London Bridge...

========================================================================

ஊசிக் குறிப்பு:
இனிமேல் தினமும் காலை ஆறு மணிக்கு, பிரித்தானிய நேரப்படி:) அதிராவின் புளொக்கில் புதுப் பதிவு வெளிவரும் என்பதனையும்:) அதனை படிக்காமல் மிஸ் பண்ணி, உங்கள் வாழ்க்கையின்.. அதாவது நீங்க பிறந்ததன் பயனை அடையாமல் விட்டிடாதையுங்கோ என்பதனையும், அதுக்கு முன் “சிக்னல்” பல்பசை கொண்டு பல் துலக்கி, குளிர் நீரில் முகம் கழுவி, உங்கள் உங்கள் தெய்வங்களையும் வணங்கிக் கொண்டு.. ஓடிவந்து படிக்கும்படியும் சொல்லிக் கொள்கிறேன்....
இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:).

=========================================================================
உங்களிடம் இருக்கும் உண்மைகள் எல்லாவற்றையும் நீங்கள் சொல்லவேண்டும் என்றில்லை - ஆனால் நீங்கள் சொல்பவை எல்லாம் உண்மையாக இருக்கட்டும்..
=========================================================================

40 comments :

  1. ஐ நான்தான் first :)


    //இனிமேல் தினமும் காலை ஆறு மணிக்கு, பிரித்தானிய நேரப்படி:) அதிராவின் புளொக்கில் புதுப் பதிவு வெளிவரும் .///

    நிசமாவா !!!!

    ReplyDelete
  2. அருமையான அற்புதமான காணக்கிடைக்காத படங்கள் + அதற்கான விளக்கங்கள் வழக்கம்போல தங்கள் பாணியில். :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. //இது ஒரு கண்:).. கிட்ட வந்தாச்சூஉ.. அதாவது தேம்ஸ்ஸ் தெரியுதெல்லோ.. இதுதான் தேம்ஸ்ஸ்ஸ் :)//


    ஸோ !! இதுதான் நீங்க அடிக்கடி குதிக்கபோறேன் குதிக்கபோறேன்னு பில்டப் தருவீங்களே அந்த தேம்சா :)

    ReplyDelete
  4. //லண்டன் ஐ இலிருந்து தேம்ஸ் நதி.. Big Ben - UK Parliament தெரியுது
    //
    கர்ர்ர்ர்ர்ர்ர் என்னது !!!!!!! அது சங்கர் படம் ஐ ..அதுக்குள்ளே அது தெரியுதா இருங்க திருட்டு டிவிடி கேசில் கம்பி எண்ண வைக்கிறேன் உங்களை :))))))))

    ReplyDelete
  5. Angelin said...
    ஐ நான்தான் first :)///

    [co="dark green"]ஆவ்வ்வ்வ் அஞ்சு வாங்கோ நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊ >. நெசமாத்தான்ன்ன் பதிவு வரும்... ஆனா சிக்னல் போட்டுப் பல்லுத் தீட்டோனூம்;)[co/]

    ReplyDelete
  6. [co="dark green"]வாங்கோ கோபு அண்ணன்... மிக்க நன்றி.[co/]

    ReplyDelete
  7. ஓ!... வாங்கோ அதிரா!..:)

    இப்பதானே விளங்குது ரகசியம்..:)
    இவ்வளவு நாளா பதிவு ஒன்றுமே போடாம நல்லா ஊர் சுத்தியிருக்கீங்கன்னு!..:))

    ஸோ!... இப்ப எங்களுக்கு ஊரைச் சுத்திக் காட்டப் போறீங்க..:)
    மிக்க மகிழ்ச்சி! ஆனா.. கொஞ்சம் இருங்கோ.
    நான் இன்னொருக்கா பிள்ளையாரைக் கும்பிட்டிட்டு
    நல்ல கோப்பியோட மீண்டும் வாறேன்!..:)

    த ம.3

    ReplyDelete
  8. அப்பனே பிள்ளையாரே!!! ஒருமாதிரி அதிரா பதிவு போட்டுட்டா. //இனிமேல் தினமும் காலை ஆறு மணிக்கு, பிரித்தானிய நேரப்படி:) அதிராவின் புளொக்கில் புதுப் பதிவு வெளிவரும் என்பதனையும்:) ஒவ்வொரு நாளும் 7மணி மட்டும் படுக்கேலாது.அலாரம் வைச்சு எழும்போனும்.நல்ல காலம் சிக்னல் இருக்கு.

    ReplyDelete
  9. //பிறந்தநாள் வந்ததெல்லோ யூலையில அதுக்கு வா வா என ஒற்றைக் கால்ல நிண்டா..:) அதனாலதான் ஒருக்கால் பக்கிங்காம் பலஸ் பக்கம் போய்// அப்ப நீங்களும் ஒற்றைக்காலிலே போனனீங்கள் அதிரா. ரோல்ஸ்ரோய் அனுப்பேல்லையோ.

    ReplyDelete
  10. நம்பர் 4 லக்கி வோட் என்னோடது.
    நல்ல வடிவா படங்களும் எடுத்து, எங்களுக்கு சுற்றிக்காட்டி யிருக்கிறீங்க லண்டனை(ஐ).
    ////இது ஒரு கண்:).. கிட்ட வந்தாச்சூஉ.. அதாவது தேம்ஸ்ஸ் தெரியுதெல்லோ.. இதுதான் தேம்ஸ்ஸ்ஸ் :)// அஞ்சு சொன்னமாதிரி அப்ப பில்டப் தானோ.
    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறீங்க.
    சதுர்த்திநாளில சொல்லியிருக்கி றீங்க. ஒவ்வொரு நாளும் புதுப்பதிவு வருமென்று.சொன்னமாதிரி செய்யுங்கோ.பிறகு அங்கு அஞ்சு சொன்ன பெருச்....... வரும்.

    ReplyDelete
  11. காளியாத்தா ,மாரியாத்தா ,எங்காத்தா ,உங்க ஆத்தா எலோரும் சேர்ந்து
    நானும் தான் வாழ்த்துகிறோம் வாங்க வாங்க உங்க வலது காலை எடுத்து
    வைத்து வக்கனையா ஆக்கங்களை வடிச்சுக் கொட்ட :)))மீஈஈஈ....இனியும்
    இப்படியே ஊர் சுத்தித் திரியக்கூடாது !எங்களை எல்லாம் விட்டுப் புட்டு :))
    விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் ஆக்கங்கள் அமர்க்களமாய்த் தொடரட்டும்
    தங்காய் :))))படங்கள் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  12. நான் வந்து கருத்துப் போடுறதுக்குள்ள வேற பதிவு போட்டாலும் போட்டுடுவீங்க...! போற வேகத்தைப் பார்த்தா..:)

    படங்கள் எல்லாம் மிக மிக அருமை அதிரா! என்ன தினமும் இப்படியே புதுப் புதுப் படங்களாய் உங்கு லண்டன் படங்கள் போட்டிட்டீங்க என்றால் எமக்கு விமான ரிக்கற் காசு, அலைச்சல் மிச்சம்..:)

    ஓசியில இப்பிடி ஊர் சுத்திப் பார்த்திடலாம்...:)

    ச்சும்மா சொல்லேலை.. உண்மையாக படங்களோடு உங்க விளக்கங்கள் அருமை! நேரில் இவற்றையெல்லாம் பார்க்க மாட்டோமா என ஏங்க வைச்சிட்டீங்க..:0

    நல்ல பதிவு + பகிர்வு!
    வாழ்த்துக்கள் அதிரா!

    ReplyDelete
  13. வணக்கம்
    கண்னைக்கவரும் படங்கள் விளக்கம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. ஊர்சுத்தியாச்சா..எங்களை உங்களுக்கு நினைவிருக்கா..!!! நானெல்லாம் சுற்ற முடியாத இடத்தையெல்லாம் சுத்தி காமிச்சதுக்கு நன்றீங்கோ..!

    ReplyDelete
  15. தேம்ஸ் சுத்திக்காமிக்கும்போது மட்டும் முகத்தில் அம்புட்டு பிரகாசம்.. சூப்பர்

    ReplyDelete
  16. தினமும் காலை ஆறு மணிக்கு பதிவா..! கடவுளே ஊர்சுத்தி எடுத்த போட்டோவையெல்லாம் போடாமல் விடமாட்டீங்களோ! இதுக்குத்தான் தேம்ஸ் படம் போட்டிருக்கீங்களா.. இப்பவே குதிக்கப்போறேன்.

    ReplyDelete
  17. அழகான படங்களும்
    அலட்டல்லான பகிர்வுகளும் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  18. Angelin said...
    //லண்டன் ஐ இலிருந்து தேம்ஸ் நதி.. Big Ben - UK Parliament தெரியுது
    //
    கர்ர்ர்ர்ர்ர்ர் என்னது !!!!!!! அது சங்கர் படம் ஐ ..அதுக்குள்ளே அது தெரியுதா இருங்க திருட்டு டிவிடி கேசில் கம்பி எண்ண வைக்கிறேன் உங்களை :))))))))///////

    [im]http://allabouthomerenovation.com/wp-content/uploads/2013/05/small_356400109.jpg[/im]

    ReplyDelete
  19. இளமதி said...
    ஓ!... வாங்கோ அதிரா!..:)

    இப்பதானே விளங்குது ரகசியம்..:)
    இவ்வளவு நாளா பதிவு ஒன்றுமே போடாம நல்லா ஊர் சுத்தியிருக்கீங்கன்னு!..:))//

    [co="dark green"]வாங்கோ இளமதி வாங்கோ. நோஓஓஓஓ மீ ஊரெல்லாம் சுத்தேல்லை;) எங்கட குயின் அம்மம்மாவோட கார்டினில இருந்து ரீ குடிக்கப் போனேனாக்கும்..க்கும்..க்கும்..;) பிபிசி நியூசிலயும் சொன்னாங்கோ;) நீங்க கேட்கல்லப்போல;)[co/]

    ReplyDelete
  20. Blogger இளமதி said...
    நான் வந்து கருத்துப் போடுறதுக்குள்ள வேற பதிவு போட்டாலும் போட்டுடுவீங்க...! போற வேகத்தைப் பார்த்தா..:)///

    [co="dark green"]ஹா...ஹா..ஹா.. இப்பூடி எதையாவது போட்டு மிரட்டினால்தானே.. வருவீங்க;) ஹையோ உளறீட்டனோ/:). இல்ல சதுர்த்தியில் ஒரு போஸ்ட் போட்டிடோனும் என கங்கனாம் கட்டி பில்லையாருக்கு மோதகம் கொடுக்காமல் சக்கரைப் புட்டும் கடலையும் செய்து கொடுத்திட்டு ஓடிவந்து போஸ்ட் போட்டேன் தெரியுமோ;)

    அப்போ மீ குட் கேள் தானே;) . மியாவும் நன்றி.[co/]

    ஊசிக் குரிப்பு;
    கீ போர்ட்டில் ஏதோ கோலாரூ, எழுத்தெல்லாம் பிழை பிழையா வருதே.....

    ReplyDelete
  21. priyasaki said...
    அப்பனே பிள்ளையாரே!!! ஒருமாதிரி அதிரா பதிவு போட்டுட்டா. //

    [co="dark green"]வாங்கோ அம்முலு.. உங்களூக்கு புரியுது;) இது பில்லையாரின் விளையாடல் தான் என ;)[co/]

    ஒவ்வொரு நாளும் 7மணி மட்டும் படுக்கேலாது.அலாரம் வைச்சு எழும்போனும்
    ///

    [co="dark green"]ஹா...ஹாஅ..ஹா ஆனா நான் எழும்ப மாட்டனே.. ஓடமெட்டிக் போஸ்ட்ல போடுவேன் ;)[co/]

    நல்ல காலம் சிக்னல் இருக்கு.///
    [co="dark green"]ஹா...ஹாஅ..ஹா
    மியாவும் நன்ரீ அம்முலு... அஞ்சுகு இன்டைக்கு 5 கட்டு கொத்தமல்லி அனுப்பயிருக்கிரேஎன்;)

    ஏதோ கோலாரூ எழுத்துப் பிழையாகுது மன்னிச்சிடுங்கோ... அதைக் கன்உ பிடிக்க ரைம் இல்லை சமையல் நேரமாகுது... இன்ரூ எங்கயும் போகவில்லை வெலியே ச்சோஒ ரிலாக்ச் அண்ட் நல்ல ஒரு சமையல்;)
    [co/]

    ReplyDelete
  22. அம்பாளடியாள் வலைத்தளம் said...
    காளியாத்தா ,மாரியாத்தா ,எங்காத்தா ,உங்க ஆத்தா எலோரும் சேர்ந்து
    நானும் தான் வாழ்த்துகிறோம் வாங்க வாங்க உங்க வலது காலை எடுத்து
    வைத்து வக்கனையா ஆக்கங்களை வடிச்சுக் கொட்ட :)///

    [co="dark green"]வாங்கோ வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ... ஹா...ஹா.. ஹா ..என்ன பக்தி பலமா இருக்கே.. இனி டெய்லி காலையில் அதிராவின் பதிவு வரும்.. ஒழுங்கா வந்திடுங்கோ இல்லாட்டில் அம்பாள் குற்றாமாகிடும்ம்ம்ம்:).

    அவ்வ்வ்வ்வ் எப்பூடியெல்லாம் மிரட்டி வரவைக்க வேண்இயிருக்கே பிள்ளையாரப்பா....

    மியாவும் நன்றி....[co/]

    ReplyDelete

  23. [co="dark green"]வாங்கோ ரூபன்... நீங்களும் தினமும் காலையில் வந்து செக் பண்ணீடுங்கோ.

    மியாவும் நன்றி....[co/]

    ReplyDelete
  24. விச்சு said...
    ஊர்சுத்தியாச்சா..எங்களை உங்களுக்கு நினைவிருக்கா..!!! நானெல்லாம் சுற்ற முடியாத இடத்தையெல்லாம் சுத்தி காமிச்சதுக்கு நன்றீங்கோ..!///

    [co="dark green"]அடடா விச்சுவோ வாங்கோ... விச்சு மாஸ்டரைக் காணல்ல என ’காணாமல் போனோரைத் தேடுவோர் சங்கம்~ த்துக்கு காசு கட்டித் தேடினோம்... நீங்க என்னடான்னா இங்க இருக்கிறீங்க :)
    ...[co/]

    ReplyDelete
  25. Blogger விச்சு said...
    தேம்ஸ் சுத்திக்காமிக்கும்போது மட்டும் முகத்தில் அம்புட்டு பிரகாசம்.. சூப்பர்///

    [co="dark green"]ஹா...ஹா..ஹா... பின்ன நம்மட தேம்ஸ் ஆச்சே :)
    ...[co/]

    ///தினமும் காலை ஆறு மணிக்கு பதிவா..! கடவுளே ஊர்சுத்தி எடுத்த போட்டோவையெல்லாம் போடாமல் விடமாட்டீங்களோ///

    [co="dark green"]சே..சே... நோஓஓ நீங்க தப்பா எடை போட்டிட்டீங்க... காலையில் அப்புடிப் படங்கள் போடுவனோ? இது அத்தனையும் புலாலியூர்ப் பூஸானந்தாவின் தத்துவ முத்துக்களா வரும் ;)
    மியாவும் நன்றீ...[co/]

    ReplyDelete
  26. [co="dark green"]வாங்கோ ராஜேஸ்வரி அக்கா..

    மிக்க நன்றீ.
    ...[co/]

    ReplyDelete
  27. புலாலியூர் பூசானந்தா நாட்டில இருண்டது விடிஞ்சது தெரியாம இருக்கக் கூடாதுலே உங்களின் அம்பாளடியாள் கவிதைப் போட்டிக்கு இரண்டு கவிதைகள் எழுதிவிட்டுக் காத்துக் இடக்கிறாள் அதுகள நாலு நல்ல வாத்த சொல்லி ஆசீர்வத்திக்க வேண்டிய
    நீங்க இன்னும் மகாராணி நினைப்பிலேயே இருக்கலாமா ?..கோ ..கோ ..:)))))))))))))மீயவ்வ்வ்

    ReplyDelete
  28. ஊசிக் குறிப்பு note pannikitten akka.

    ReplyDelete
  29. [co="dark green"]ஹா..ஹா.... இதோ வருகிறேஎன்ன்ன் ....வாழ்த்தத்தான்ன்ன்.
    வெற்றீ அம்பாளுக்கேஏஏஏஏஏஏஏஏஏ .[co/]

    ReplyDelete
  30. [co="dark green"]ஆாஹா மகேஷ் வாங்கோ ஊசிக் குறீப்பை நோட் பண்ணீட்டீங்களோ? ஹா..ஹா..ஹா.. குட்... மிக்க நன்றி.[co/]

    ReplyDelete
  31. ஊசிக்குறிப்பு வரைக்கும் வாசிச்சாச்சுது. நாளைக் காலை வந்து பார்ப்பன். புதுப் பதிவு இல்லையோ, பிறகு இருக்கு பூஸானந்தாவுக்கு. :-)

    ReplyDelete
  32. வணக்கம் அதிரா!

    எனது வலைப்பூவில் விருது ஒன்றை உங்களுக்குப் பகிர்ந்துள்ளேன்!

    இணைப்பு http://ilayanila16.blogspot.de/2014/09/blog-post_16.html

    வந்து பெற்றுக் கொள்ளுங்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  33. வாங்கோ றீஇச்சர்.. நான் சொன்னா சொன்னதுதான்ன்ன் நாளைக்கு வந்து பாருங்கோ ;) பதிவு வந்திடும் ;)>.. மியாவும் நன்ரீ..

    ReplyDelete
  34. நன்றீ இள்மதி பெர்றூக் கொண்டேன்ன்

    ReplyDelete
  35. மிக மிக தாமதமாக வந்ததை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்
    //இனிமேல் தினமும் காலை ஆறு மணிக்கு, பிரித்தானிய நேரப்படி:) அதிராவின் புளொக்கில் புதுப் பதிவு வெளிவரும் ./// மிகுந்த ஆவலோடு எதிர்பார்கிகறேன்.(எப்போதிருந்து என்று சொல்லவில்லையே! )

    ReplyDelete
  36. Viya Pathy said...//

    வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.. அதுவா அது நாளையிலிருந்து :)

    ReplyDelete
  37. வாங்கோ சிவா... இன்னும் இருக்கு வெயிட் பண்ணுங்கோ.. நாளைக்கு:) வெளியாகும்:).. மிக்க நன்றி.

    ReplyDelete
  38. ஹல்லோ அதிராஜி, இன்னகுதா முதல் விஜயம்.ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும். கை பிடித்து கூடவே வருகிரோம்.

    ReplyDelete
  39. //sreevadsan said...//இதாரிது புதுவரவு:) வாங்கோ வாங்கோ வெல்கம்... miyaavum thanks.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.