நல்வரவு_()_


Monday 10 November 2014

இது எங்கட கார்டின் இல்லை:)

ஸ்ஸ்ஸ் ஏன் முறைக்கிறீங்க எல்லோரும்.. நம்புங்கோ:) இது எங்கட வீட்டுக் கார்டின் இல்லை:).. நம்பமாட்டினமாம் கர்ர்:).. ஹா..ஹா..ஹா..:).

பிரித்தானியாவில் SURREY   எனுமிடத்தில் இருக்கும் கார்டின்.. பெரீஈஈஈஈய பரப்பளவில் அனைத்து மரக்கறிகள், பழங்கள் என எல்லாம் செய்து.. சனங்களை ஓபினாகப் போக விடுவினம். ரிக்கெட் எதுவுமில்லை. நாம் போய் அங்கு பாக் இருக்கும் எடுத்துப் போய் நம் விருப்பத்துக்கு பிடுங்கி பாக்கில் போட்டு எடுத்து வந்து கொடுத்தால் நிறுத்து விலை போடுவினம். நடந்தெல்லாம் போக முடியாது, காரில்தான் போய் ஒவ்வொரு இடமாக பார்க் பண்ணிப் பண்ணிப் பார்க்கோணும்.. அவ்ளோ பெரிசூஊஊஊஊ:)..

பெரிதாக எந்த செக்கியூரிட்டியும் கிடையாது. எம் இஸ்டத்துக்கு பழங்கள் பிடுங்கி முடிந்தவரை சாப்பிடலாம்..

எனக்கு புளொக்கில் போடும் பிளான் இருக்கவில்லை, அதனால அனைத்தையும் படமெடுக்கவில்லை. முன்பும் போயிருக்கிறோம். எத்தனை தடவை போனாலும் அலுக்காது.

பீற்றூட், கரட், ஸ்பினாஜ்(கீரை), பலவகை பீன்ஸ், உருளைக்கிழங்கு, கபேஜ், லீக்ஸ், மறோ, ஹொலிபிளவர்... சோளம்..

பழங்களில்.. ஸ்ரோபெரி, பிளாக்பெரி, கிரான்பெரி... கிட்டத்தட்ட  அனைத்து பெரிகளும்... சில பக்கம் நாம் போகவில்லை களைத்து விட்டோம்ம்..

சூரியகாந்தி கண்டோம்ம்.. அதில் அதிசயம் என்னவெனில் இம்முறைதான் முதன் முதலில் மரூண் கலரில் கண்டோம்...
சரி வாங்கோ கார்டின் பார்க்கலாம்...
----------------------------------------------------------------------------------------------------------------------

இது பீற்றுட்... பெரிய வயல் போல இருந்துது, நம் விருப்பத்துக்கு எதை வேணுமானாலும் பிடுங்கலாம்.. கொடுமை என்னவெனில் நம் மக்கள்ஸ்ஸ்.. ஆடு மாடு உளக்குவது போல அனைத்தையும் உளக்கி, ஓடியாடித்தான் பிடுங்குகிறார்கள்..

இதேபோலத்தான் ஸ்பினாஜ்.. கீரை வயலும்... தேடித் தேடிப் பார்த்து நல்ல குருத்து இலைகளாகப் பிடுங்கி வந்தோம்... கடையில் வாங்கும் ஸ்பினாஜ் சலாட்போல தண்ணி இலையாக இருக்கும்.. இது நல்ல தடிப்பு.. சரியாக பொன்னாங்கண்ணிக் கறிபோல இருந்துது சுவை.. ஒரு மாதமாக பிரிஜ்ஜில் வைத்துச் சமைத்தேன்.. பழுதாகவே இல்லை.


எனக்கு நீண்ட காலமாக ஆசை, பீற்றூட் இலைகள் பிடுங்கி வறை செய்யோணும் என.. அதனால் ஆசை தீர பார்த்துப் பார்த்து, பிடுங்கி வந்தேன். இந்த பீற்றூட் கிழங்குகள்.. நான் எப்பவுமே சாப்பிட்டிராத ருசியாக இருந்தன அவ்ளோ இனிமை. சனங்கள் பிடுங்கிறார்கள்.. பின்பு கிழங்கு கொஞ்சம் சின்னனெனில் எறிந்து போட்டு மற்றதைப் பிடுங்குகிறார்கள்... பார்க்கப் பார்க்க கவலையாக இருந்துது.

இது பீன்ஸ்ஸ், இவ்வளவுதான் இந்த மரத்தின் உயரம்.. சூப்பர் சுவை.

இது பிளாக் பெரி.. இப்போதான் கறுப்புக் கறுப்புக் கொத்து கொத்துப் பழங்கள் சாப்பிட முடியவில்லை ஒரே புளிப்பு(முத்தவில்லை).. அதனால மக்கள் பிடுங்கி பிடுங்கி எறிந்திருக்கிறார்கள்..

இது ராஸ்பெரி... இனிமையோ இனிமை.. கடையில் எனில் ஒரு 15 பழங்களுக்கு மட்டும் 2 பவுண்டுகள் கொடுக்க வேண்டும்.. இது போதுமானவரை சாப்பிட்டோம். அங்கிருந்த ஸ்ரோபெரியின் இனிப்போ சொல்லி வேலையில்லை அப்படி ஒரு இனிப்பு.
 இது மரோ.. பச்சையாக இருக்கும்... கியூகம்பர் போல.. நாம் இதுக்குள் போகவில்லை.. எல்லாமே பெரிய பெரிய வயல்போலத்தான்.
 இவைதான் சூரிய காந்தி.. பெரிதாக்கிப் பாருங்கோ மரூண் கலரிலும் இருக்கிறது.
ஏனைய படங்கள் எடுக்கவில்லை. கபேஜ்/கோவா/முட்டைக்கோஸ்.. எல்லாம்  அப்படியே பிடுங்கி விரிந்திருக்கும் இலைகளை.. அது நல்ல பிஞ்சு இலைகள்தான்.. ஆனா ஓசியில கிடைக்கும்போது அப்படித்தானே...:) உள்ளே இருக்கும் முட்டைபோன்றதை மட்டுமே எடுக்கினம்...

உருளைக்கிழங்கு ஏரியா, ஒரு மெஷின் நிக்குது, அது கொஞ்ச இடத்தைக் கிளறி விடும்... அதில் விருப்பமான கிழங்கை மக்கள் பார்த்து பொறுக்கியபின்.. இன்னும் கொஞ்ச ஏறியாவைக் கிளறி விடும்...

இப்படித்தான் சோளக்காடும்:).. பொத்தியை முறித்து உரிச்சுப் பார்க்கினம் சின்னனெனில் வீசிவிட்டு மற்றதை முறிக்கினம்...

அதைப்பற்றிக் கேட்பார் பார்ப்பாரே இல்லாமல் விட்டிருக்கு... ஆனா இப்படிக் கார்டின் நடத்தி ஆசைக்கு எம்மை எல்லாம் அனுபவிக்க வைக்கும் அவர்கள் வாழ்க...

ஊசிக்குறிப்பு:
புறுணம் என்னவெனில்... நண்பி குடும்பமும் வந்திருந்தார்கள்.. அதுதாங்க நான் ஏற்கனவே இங்கு சொல்லியிருக்கும், என் ஸ்கூல் நண்பி. அப்போ அங்கு இடையிடையே “மணத்தக்காழி” பார்த்தனே.. ச்சும்மா ச்சும்மா ஆங்காங்கு முழைத்திருந்தது.. குட்டிக் குட்டிப் பழங்களோடு... சந்தோசம் தாங்க முடியவில்லை.. உடனே நண்பியைக் கேட்டேன்.. இதுதானே “மணத்தக்காழி” என... உடனே என்னைப் பார்த்துக் கேட்டா... அப்படீன்னா?????????... இதுக்கு மேல என் நிலைமை எப்பூடி இருந்திருக்கும்:) என் வாய்க்கு சட்டர் போட்டிட்டேன்ன்ன்ன்ன்:).. படங்கள் எடுக்காமல் விட்டிட்டேன்ன், இப்போதான் ஃபீல் பண்ணுறேன்.
======================================================================
 “நம்மை மீறி நடக்கும் விஷயங்களை நினைத்துப் ஃபீல் பண்ணி, நம் கொன்றோலில் இருக்கும் விஷயங்களைக் கோட்டை விட்டிடக் கூடாது”
இந்த அளப்பெரிய தத்துவத்தைக் கண்டு பிடித்துக் காவி வந்தவர்: பெருமதிப்புக்குரிய:) புலாலியூர்ப் பூஸானந்தா:)
======================================================================

41 comments :

  1. பசுமை மிக்க அழகான பதிவுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா முதலாவதா வந்திருக்கிறீங்க கோபு அண்ணன் வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  2. //கடையில் வாங்கும் ஸ்பினாஜ் சலாட்போல தண்ணி இலையாக இருக்கும்.. இது நல்ல தடிப்பு/
    /உண்மைதான் அதிஸ் இந்த டேஸ்ட்லஸ் ..ஸ்பினாச் மட்டுமில்ல எந்த காயும் இப்படி இயற்கை முறையிலோ இல்லை வீட்டிலோ வளர்த்து பாருங்க அந்த ருசிதனிதான் ..பீட்ரூட் காரட் ரெண்டும் செம ருசி எங்க வீட்டு அறுவடை ..
    இதில் பூச்சி மருந்து போட்டிருக்க மாட்டாங்கா அதான் ருசி அதிகம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஃபிஸ்ஸு.. வாங்கோ.. உண்மைதான் நல்ல தடிப்பான பெரிய இல்லைகள்.. சுவையோ சுவை...

      மியாவும் நன்றி

      Delete
  3. மெரூன் சூர்யா நானும் பார்தேன் cotswold இல் !

    ReplyDelete
    Replies
    1. ஓ.. நான் முன்பு எங்கேயும் பார்த்ததுமில்லை, அறிந்ததுமில்லை..

      Delete
  4. உங்க உயரம் தெரியுதே :)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதெப்பூடி நன் எனச் சொல்றீங்க?:) ஏதும் தெரியுதோ?:)

      Delete
  5. உண்மையில் இந்த தோட்டக்காரங்க பாராட்டுக்குரியவங்க !! வீணாவதை பற்றி கவலைபடாம மக்களை சந்தோஷபடுதணும் என்ற நல்ல மனம் வாழ்க !!

    ReplyDelete
  6. சூப்பரப்பூ!! :) பார்க்கவே ஆசை ஆசையா இருக்கு அதிரா..நீங்க போய் வந்ததே எமக்கு மகிழ்ச்சி! [ஸ்ஸூ...ஸ்ஸூ...காதில புகையெல்லாம் போகவே இல்ல...வீட்டில சாம்பிராணி(!) கொழு;)த்தியிருக்கிறன்!]

    மெரூன் சூரியகாந்தி இருப்பதை இப்பவே அறிந்தேன். ஆங்காங்கே பச்சை சதுரங்கள் கண்ணை மறிக்குது..அதில்லாமல் சதுரத்துக்குள் இருப்போருடன் படங்களை வெளியிட்டிருந்தால் இன்னும் ரசித்திருப்போம்..ஹூம்!!! :)

    ReplyDelete
    Replies
    1. ஆஆ வாங்க மகி வாங்கோ..

      //கொழு;)த்தியிருக்கிறன்!// அஞ்சு ஸ்பெல்லிங் கரீட்டா இருக்கா???:))/

      ////ஆங்காங்கே பச்சை சதுரங்கள் கண்ணை மறிக்குது.////கர்ர்ர்ர்ர்ர் எவ்ளோ படங்கள் போட்டிருக்கிறன்.. அதை விட்டுப்போட்டு. சதுரத்தைப் பார்க்கிறா:).. அது நானில்ல.. நானில்ல:).. அது போர்ட்:)..

      ஹா..ஹா... மியாவும் நன்றி மகி... செரிப் பழம் கடையில எனில் எவ்ளோ விலை.. அங்கு விரும்பியளவுக்கு சாப்பிடலாம்ம்.. கோஸ்பெர் அனைத்துமே....

      Delete
  7. மெரூன் சூரியகாந்தி ,பசுமை சதுரங்கள் வாழ்க !!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ராஜேஸ்வரி அக்கா.. உங்கள் படம் நான் பார்த்திட்டனே...

      //பசுமை சதுரங்கள் வாழ்க !!/// ஹா..ஹ..ஹா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
      மியாவும் நன்றி.

      Delete
  8. ஆ..வெஜிடெபிள்ஸ்.பச்சைபசேல். இங்கினயும் இருக்கு.ஆனா எங்கட இடத்திலிருந்து தூரம். வீணாவதையும் பொருட்படுத்தாமல், தோட்டம் செய்யிறவங்களை பாராட்ட வேணும்.மெரூன் சூரியகாந்தி பார்த்தாச்சு. இப்படி தோட்டத்தில் பறிப்பவை நல்ல ருசியாக இருக்கும்.
    //சதுரத்துக்குள் இருப்போருடன் படங்களை வெளியிட்டிருந்தால் இன்னும் ரசித்திருப்போம்..ஹூம்!!! :) // அதானே.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. நீங்களுமோ?:).. வாங்கோ அம்முலு வாங்கோ.. உண்மைதான் ருசியோ ருசி.. அதிலும் விலையும் குறைவு... எனக்கு கீரை இன்னும் அதிகம் பிடுங்கியிருக்கலாமே என கவலையா இருந்துது.. சரியா பொன்னாங்கண்ணிக் கீரைபோலவே ருசி...

      மியாவும் நன்றி அம்முலு.

      Delete
  9. பார்க்கும்போதே மனதிற்கு எத்தனை மகிழ்வாயிருக்கு அதிரா!
    அங்கே போய் அனுபவித்த உங்கள் சந்தோஷம்
    பொங்கிப் பிரவகிச்சது உண்மையே!..:)
    கண்கொள்ளாப் பூசணிக்காயுடன் அத்தனை காட்சிகளும் சூப்பர்!

    சூரிய காந்திப் பூவிலும் நிறத்தை மாத்தீட்டாங்களோ..:)
    கல(ர்)ப்படம் அருமை! அசத்துறீங்க அதிரா!
    நாங்களும் பார்க்கப் பதிவிட்டமைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ் வாங்கோ இளமதி வாங்கோ.. எங்கேயும் உங்களைக் காண முடியவில்லையே கொஞ்ச நாளாக...

      உண்மைதான் அங்கு போவோம் என நினைத்தாலே .. பிள்ளைகளுக்கு எங்காவது தீம் பார்க் போவோம் எனச் சொன்னாலே வரும் சந்தோசம் எனக்கும் வந்திடுது...

      மணத்தக்காளி:)யைத்தான் மிஸ் பண்ணிட்டேன்ன்.. மிளகுபோல குட்டிப் பழங்களோடு நிண்டுது... சரியாக தெரியாமையால் கை வைக்கவில்லை..

      மியாவும் நன்றி.

      Delete
  10. உங்க புண்ணியத்தில் ஒருக்கால் தோட்டப்பக்கம் போய் வந்தாச்சு பச்சைப்பசேல் காட்சி மிக அருமை. பகிர்வு நன்றி. பூசாரின் உயரம் இவ்வளவுதானா!ஹீ

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ...
      //பூசாரின் உயரம் இவ்வளவுதானா!ஹீ/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      மியாவும் நன்றி.

      Delete
  11. வாசலிலே பூசனி பாடல் பாட நல்ல இடம் போல !ஹீ

    ReplyDelete
    Replies
    1. மேலே ...... குன்றத்திலே குமரன் கேட்கேல்லையோ?:)

      Delete
  12. தாங்களே ஃபீல் பண்ணுவினம். பிறகு தாங்களே அதுக்கு ஒரு தத்துவமும் சொல்லுவினம். வாழ்க பூசானந்தா! :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க இமா வாங்கோ.. என்ன வரும்போதே புலம்பிக் கேட்குதேஏஏஏஏஏ:))

      //வாழ்க பூசானந்தா! :-)/// இது இது இது....:) மியாவும் நன்றி றீச்சர்ர்ர்ர்ர்ர்.... ட்ரிக்‌ஷியைக் கேட்டதாச் சொல்லிடுங்கோ...

      Delete
  13. மேலே ...... குன்றத்திலே குமரன் கேட்கேல்லையோ?:)// அப்ப கேட்ட காலத்தில் சினேஹா யூத்!ஹீ அதுதான் இப்ப ஓல்ட் என்பதால் சொல்லவில்லை!ஹீ

    ReplyDelete
    Replies
    1. //அதுதான் இப்ப ஓல்ட் என்பதால் ///ஹா..ஹா..ஹா.. அச்சச்சோ ஓஓ இப்போ ஸ்நேகா ஓல்ட் ஆகிட்டாவோ அதுக்குள்:)

      Delete
  14. இருந்தாலும் பூசாரைவிட சினேஹா உயரம் தான்!லொல்லு!

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஸ்நேகாவும் மீயும் சேம் ஹைட் ஆக்கும்..க்கும்..க்கும்...:)

      Delete
  15. பார்க்கும்போதே மனதிற்கு எத்தனை மகிழ்வாயிருக்கு
    பசுமை மிக்க அழகான பதிவுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வையாபதி வாங்கோ.. நீண்ட நாட்களாக காணாமல் போயிட்டீங்க என யோசிச்சேன்.

      மியாவும் நன்றி.

      Delete
  16. எல்லாவற்றையும் விட... பச்சைப் பெட்டிகள் தான் என்னைக் கவர்ந்தது. ;))
    ம்... அ.கோ.மு பூஸை விடப் பெருசா இருக்கே அதீஸ்!! இன்ஸ்டோல்மண்ட்ல சாப்பிடுறதோ!!

    ReplyDelete
  17. வாங்கோ புனிதா வாங்கோ..

    கொஞ்சம் இருங்கோ.. ஹா...ஹா....ஹா..ஹா... கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈ.. உருண்டு பிரண்டு சிரிக்கிறேன்:).. சரி சரி ஏன் சிரிச்சீங்களென ஆரும் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

    விஷயத்துக்கு வருவம்.. பச்சைப் பெட்டி:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லோரும் என்னைப் பெட்டிக்குள் வச்சுப் பார்க்கினமே:).. அவிச்சகோழிமுட்டைக்கு எந்த டோல்மெண்ட்டும்:) தேவையில்லை நேக்கு:).. ஒளிச்சு வச்சே சாப்பிட்டு முடிச்சிடுவேன்:) ஆரும் பங்கு கேட்டிட்டாலும் எனும் பயத்தில:)..

    மியாவும் நன்றி கிவியாகக் கூவும் புனிதாக்கு.

    ReplyDelete
    Replies
    1. நான் கேக்கேல்ல. நல்லாச் சிரியுங்கோ நீங்கள். ;))))))

      Delete
    2. [im]http://cache.desktopnexus.com/thumbnails/373249-bigthumbnail.jpg[/im]

      Delete
  18. சூப்பர்,அடாடா மணத்தக்காளியை படம் எடுக்காமல் விட்டுட்டீங்களே !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஆசியா... அது ஒன்றிரண்டு அங்காங்கு ச்சும்மா ச்சும்மா:) முளைச்சிருந்துது...

      மிக்க நன்றி.

      Delete
  19. சகோதரிக்கு வணக்கம்
    நலம் தானே. தங்களை ஒரு ஆட்டத்தில் இறக்கியுள்ளேன். கலந்து கலக்குங்கள்.
    கனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள்
    http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.html

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பாண்டியன்.. ஓ என்னையும் அழைத்திருக்கிறீங்களோ? ஆவ்வ்வ்வ்வ்வ்:) நான் புனிதாவின் பக்கத்தில் பார்த்தேன்..

      அழைத்தமைக்கு மிக்க நன்றி, பதில்கள் எழுத முடிந்தால் கண்டிப்பா தொடர்வேன்.

      Delete
  20. இந்த மாதிரி கார்டன் எங்கட ஊர்ல இருந்தால் மறுநாளே கதவை மூடி பெரிய பூட்டு போட்ருவாங்க. பிரிச்சு மேஞ்சிருவோம்ல.. ம்ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம் பொறாமையா இருக்கு...

    ReplyDelete
  21. தோட்டம் குளு குளு என்று பசுமையாய் இருக்கிறது. பார்க்கவே ஆனந்தமாயிருக்கிறது. வலைச்சரம் கோபு சார் அறிமுகம் செய்திருப்பதைக் கண்டு இங்கு வந்தேன். படங்களும் சூப்பர்! பாராட்டுக்கள் அதிரா!

    ReplyDelete
  22. இதை ஏற்கனவே படித்திருக்கிறேன். உங்க படங்களை (அல்லது உறவின் படங்களை) அழித்திருக்கிறீர்கள்.

    எனக்கு இந்த மாதிரி கார்டனுக்குப் போகணும் என்று ரொம்ப ஆசை (கனடாவில் ஸ்டிராபெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சுத் தோட்டங்களிலும் இதுபோல் வாசலில் பை வாங்கிவிட்டு, பறித்து எடுத்துக்கொண்டு வரலாம், உள்ளே எவ்வளவுனாலும் இலவசமா சாப்பிடலாம் என்பது போல் படித்திருக்கிறேன், சென்றவர்கள் அவர்கள் அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்கள்).

    நம்ம ஊரில் (இந்தியாவில்) இதனைச் செய்தால், மக்கள், '100 ரூபாய் கொடுத்திருக்கிறோமே' என்று 1000 ரூபாய்க்கு தோட்டத்திலேயே வீணாக்கிவிடுவார்கள்.

    வாழ்க்கைல இந்த மாதிரி தோட்டங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வருமா என்று பார்ப்போம்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.