ஸ்ரீ வைத்தீஸ்வரர் சுவாமி!!!
என்னாது தலைப்பைப் பார்க்க ஒரு மாதிரித் தெரியுதோ? சே..சே.. அப்பூடி இருக்காது. கனடாவின் தலைநகரத்தின் பெயர் என்ன தெரியுமோ? ஒட்டாவா(OTTAWA)...
அங்கு தமிழர்கள் குறைவு. அதனால் இருக்கும் தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து ஒரு காணி வாங்கி ஒரே ஒரு கோயிலை ஆரம்பித்திருக்கினம். அதுதான் சிவன் கோவில். வைத்தீஸ்வரர் எனப் பெயர். இவர் இந்தியாவில் இருந்து வரவைக்கப்பட்டிருக்கிறார்....
ஆரம்பத்தில் ஒரு காணியோடு இவ்வீட்டை வாங்கி, பின் அதைக் கட்டிக்கொண்டு வருகிறார்கள். காணி வாங்கி விட்டபோதே, அவ் வீட்டைப் போய்ப் பார்த்தோம், இப்போ சுவாமி எல்லாம் வைத்து அழகாக இருக்கு. இனித்தான் கோபுரம் எல்லாம் கட்டப்போகினம்..
இவர் அங்கிருக்கும் “கற்பக விநாயகர்”
துர்க்கை அம்மன், காளி அம்மன்.....
இதிலிருப்பது “என் வைரவரும், சூரிய பகவானும்”... பின் பக்கத்தில் இருக்கிறார்கள்...
உள்ளுக்குள்ளேயே வேப்பமரம் வளருது, பார்க்க ஆசையாகவும் அழகாகவும் இருந்துது....
வெளியிலே ஒரு தேரும் இருந்தது, இப்பத்தான் யோசிக்கிறேன், அதைப் படமெடுக்கத் தவறிவிட்டேன், நல்லவேளை எல்லாத்தையும் படமெடுக்காமல் விட்டது.. அது உங்கள் நல்ல காலம்:), நீங்கள் எல்லோரும் தப்பி விட்டீங்கள் என் கடியிலிருந்து ஹா..ஹா..ஹா...:)).
பின் இணைப்பு:
அக்கா வீட்டு முற்றத்தில் இருக்கும் மேபிள் மரம், அப்போதான் துளிர் வரத் தொடங்கியிருந்தது.
நம்மை அறியாமல் வரும் துன்பம், நாம் அறியாமலேயே தீர்க்கப் படுகின்றது. நாம் அறிந்து வருவதை நாமே தீர்க்க வேண்டும்.
இந்த இருவகைத் துன்பங்களில் முதல் வகையானது, கடவுள் நம்பிக்கையால் தீர்க்கப்படுகின்றது. இரண்டாவது, நம் கூரிய புத்தியினால் தீர்க்கப்படுகிறது.
பக்தியும் இல்லாமல், புத்தியும் இல்லாமல், “ஐயோ அம்மா” என அலறுவதில் எந்தப் பலனும் இல்லை.
------- Kanna...dasan.......
ஊசி இணைப்பு
இந்த வேண்டுதலில், உங்களுக்கு ஏதும் பிரியுதோ?:)))
===============================================
என்னாது தலைப்பைப் பார்க்க ஒரு மாதிரித் தெரியுதோ? சே..சே.. அப்பூடி இருக்காது. கனடாவின் தலைநகரத்தின் பெயர் என்ன தெரியுமோ? ஒட்டாவா(OTTAWA)...
அங்கு தமிழர்கள் குறைவு. அதனால் இருக்கும் தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து ஒரு காணி வாங்கி ஒரே ஒரு கோயிலை ஆரம்பித்திருக்கினம். அதுதான் சிவன் கோவில். வைத்தீஸ்வரர் எனப் பெயர். இவர் இந்தியாவில் இருந்து வரவைக்கப்பட்டிருக்கிறார்....
ஆரம்பத்தில் ஒரு காணியோடு இவ்வீட்டை வாங்கி, பின் அதைக் கட்டிக்கொண்டு வருகிறார்கள். காணி வாங்கி விட்டபோதே, அவ் வீட்டைப் போய்ப் பார்த்தோம், இப்போ சுவாமி எல்லாம் வைத்து அழகாக இருக்கு. இனித்தான் கோபுரம் எல்லாம் கட்டப்போகினம்..
இவர் அங்கிருக்கும் “கற்பக விநாயகர்”
இவர்தான் மூலஸ்தானத்திலிருக்கும் “ஸ்ரீ வைத்தீஸ்வரர்”...
துர்க்கை அம்மன், காளி அம்மன்.....
இதிலிருப்பது “என் வைரவரும், சூரிய பகவானும்”... பின் பக்கத்தில் இருக்கிறார்கள்...
வெளியிலே ஒரு தேரும் இருந்தது, இப்பத்தான் யோசிக்கிறேன், அதைப் படமெடுக்கத் தவறிவிட்டேன், நல்லவேளை எல்லாத்தையும் படமெடுக்காமல் விட்டது.. அது உங்கள் நல்ல காலம்:), நீங்கள் எல்லோரும் தப்பி விட்டீங்கள் என் கடியிலிருந்து ஹா..ஹா..ஹா...:)).
பின் இணைப்பு:
அக்கா வீட்டு முற்றத்தில் இருக்கும் மேபிள் மரம், அப்போதான் துளிர் வரத் தொடங்கியிருந்தது.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
குட்டி இணைப்பு:
எம் ஜன்னலின் அளவைப் பொறுத்தே காற்று உள்ளே வருகின்றது. ஜன்னல்களே இல்லாத வீடெனில் சுகாதாரம் கெட்டுப்போகிறது. அதேபோல சூழ்நிலைகளைப் பொறுத்தே துன்பமும் வருகின்றது, அந்தச் சூழ் நிலைகளைப் போக்கிக் கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத்தான் இருக்கிறது.நம்மை அறியாமல் வரும் துன்பம், நாம் அறியாமலேயே தீர்க்கப் படுகின்றது. நாம் அறிந்து வருவதை நாமே தீர்க்க வேண்டும்.

|
|
Tweet |
|
|||