நல்வரவு_()_


Monday, 16 February 2009

இறைவா!!




வெறுப்பு இருக்கின்ற இடத்திலெல்லாம் அன்பை விதைக்க வேண்டும். நான் ஆறுதலோடு இருக்கின்றேனா என்பதல்ல முக்கியம், அடுத்தவர்களுக்கு நான் ஆறுதல் தருகிறேனா என்பதே முக்கியமாகும். என்னை அடுத்தவர்கள் நேசிக்கிறார்களா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை, அடுத்தவரை நான் நேசிக்க வேண்டும். இவை நான் அறிந்த தத்துவங்களாக இருப்பதால், என்னுடைய கோரிக்கைகளை நீ ஏற்றுக்கொள்வாயாக.

இறைவா இனிமேலாவது தொட்டுக்கெடுக்கும் உறவுகளைத் தராதே, விட்டுக்கொடுக்கும் உறவுகளையே உலகத்துக்குக் கொடு.

--------------------------------------------------------------------------------------------------------



“நான் உயிருடன் இருக்கின்றபொழுது என்னை நேசிப்பவர்களே!!!
என் மரணத்திலும் என்னை மறவாதீர்கள்!!!”


--------------------------------------------------------------------------------------------------------

13 comments :

  1. Wow.. Superp!!! I just saw this page. When you can spill it.

    ReplyDelete
  2. அன்புநிறைந்த அதிரா!

    அருமையான நல்லதொரு முயற்சி! முத்துக்களை தேடி எடுத்து ஓரிடத்தில் குவித்து மாலையாக்குகின்றீர்கள். உங்களின் முயற்சி மேலும் வளர உளம் நிறைந்த வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி!

    ”உண்மையான அன்பு, எல்லாத் தடைகளையும் குறைபாடுகளையும் தகர்த்தெறிந்து வெற்றி கொள்ளும்.”

    என்றென்றும்அன்புடன்
    இளமதி.

    ReplyDelete
  3. மிக்க நன்றி இளமதி, நீங்களும் நல்ல தத்துவங்கள் பேசுகிறீங்கள்.

    ReplyDelete
  4. அடைத்து வைத்து இருக்கிறதை எல்லாம் எடுத்து விடுங்கோ பிளீஸ்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. மிக்க நன்றி ஹைஷ் அண்ணன். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து நான் விடுறேன்.

    ReplyDelete
  6. அதிரா ஓவ்வொரு வரியும் அருமை.

    ReplyDelete
  7. வாவ் அதிரா நிச்சயம் இந்த வரிகளை விமர்சிக்க வார்த்தைகள் இல்லை.எத்தனை அழகான வரிகள்

    வெரி நைஸ் அதிரா.

    ReplyDelete
  8. உண்மைதான் ரேணுகா... இதயம் தொட்ட வரிகள். படிக்கும்போதே கொப்பியில் எழுதி வைத்திருந்தேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  9. //“நான் உயிருடன் இருக்கின்றபொழுது என்னை நேசிப்பவர்களே!!!
    என் மரணத்திலும் என்னை மறவாதீர்கள்!!!” //


    முதல் போஸ்டே தத்துவமா...!!! ஒரு வேளை கண்ண தாசன் காப்பியோ ஹி..ஹி... ஆனாலும் உண்மையான வரிகள் :-))

    ReplyDelete
  10. ஆ..... போஸ்ட் போட்டு கிட்ட தட்ட பத்து மாசம் வரை நல்ல ஸ்டிராங் பூட்டு போட்டு பூச்சி வச்சிருக்கீங்கப் போலிருக்கே ...அவ்வ்வ்வ் :-))))

    ReplyDelete
  11. உண்மையிலேயே மனதை தொட்ட பதிவு அதீஸ் ..அருமையான தத்துவம் .

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.