நல்வரவு_()_


Thursday, 5 August 2010

“பூவுலகில் பூ(னை/வை):))”

இப் பூவுலகப் பிரவேஷம் பற்றிய தொடரை, தொடரச் சொல்லி பகிரங்க அழைப்புவிட்ட பூவை “கவிசிவா” வுக்கு(என்னா தைரியம்.... பூஸையே மாட்டிவிட்டுவிட்டீங்களே..:)) மியாவும் நன்றி.

///வழக்கம் போல இதுவும் மொக்கையாத்தான் இருக்கும். எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும் :-).//// இது கவி சொன்னது,

/// இது மொக்கையே இல்லை, விலைமதிப்பற்றது:), வீக்கான(இது வேற வீக்:)) இதயவறை உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும்.....// இது, சொன்னது நான்..தேன்.:).



--------------------------------------------------------------------------------

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சே... சே... சே... எதுக்கெடுத்தாலும் சந்தேகமாகவே கேள்வி கேட்கினம்... வலையுலகில் ரொம்ப பிசியாகி, மிகவும் பிரபல்யமாகிவிட்ட:))), என்னைப் பார்த்து... “உங்கள் பெயரென்ன?” எனக் கேட்டால்.... கண்ணால ரத்தக் கண்ணீர் ஆறாஆஆஆ ஓடுது:), டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்... (பெயர் சொல்லிக் கேய்க்கப்பூடாதாம்:).... சொல்லிப்போட்டினம்..... ).


கொஞ்சம் இருங்கோ வடிவாத் துடைச்சிட்டு வாறேன்.


 



--------------------------------------------------------------------------------

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

என்ன கேள்வியெல்லாம் கேய்க்கிறாங்கப்பா.... பெயரில உண்மைப்பெயர் பொய்ப்பெயரோ? இப்பத்தான் பிறந்து நடக்கத்தொடங்கினதுக்கு:), முதன் முதலாக கேள்விப்படுறேன்...., ஆரையாவது பொய்க்காகக் கூப்பிடுவினமோ?? வேணுமெண்டால், பாஸ்போட் ஸ்கான் பண்ணி அட்டாச் பண்ணுறேன் விரைவில்:).


அங்க பாருங்கோ... மேலே வானத்தில கோடுமாதிரி என்னவோ தெரியுதே...... திரும்பாமல் பாருங்கோ... வடிவாப் பாருங்கோ....


பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... உஸ் அப்பா.. முடியேல்லை:), கூட்டத்தோடு வந்து கும்மி எடுக்கினம்:)... இப்பூடி ஓடினால்தான் தப்பலாம்
இவிங்களிடமிருந்து:).



--------------------------------------------------------------------------------

 
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

இது பெரீஈஈஈய கதைங்கோ..., முடிந்தவரை சோட் அண்ட் சுவீட்டாச் சொல்கிறேன், அதனால, பொறுமையுள்ளவர்கள் மட்டும்:), ஒருகப் ரீயோடு வந்திருந்து படியுங்கோ....


ஆரம்பகாலம் தொடங்கிச் சொல்கிறேனே.
சின்ன வயதிலிருந்தே என்னில் ஒரு பழக்கம், எனக்குப் பிடித்த பொன் மொழிகள், பழமொழிகள், கவிதைகள், காதில் கேட்கும் பாட்டுக்களில் வரும் பிடித்த வசனங்கள் இவற்றையெல்லாம், எழுதும் நோட் கொப்பியின் பின்னாலே எழுதி வைப்பேன், நேரம் கிடைக்கும்போது, அதுக்கென ஒரு கொப்பி வைத்து எழுதிவிடுவேன். இப்பகூட நிறையப் புத்தகங்கள் வாசிப்பேன், அதில் வரும் பிடித்த வசனங்களை அடையாளப்படுத்திவிட்டு, பின்பு கொப்பியில் எழுதி வைப்பேன், அவற்றை மீண்டும் மீண்டும் மீண்டும் பல தடவைகள் வாசிப்பேன்....

இப்படிச் சேகரித்தவற்றை, எதை மறந்தாலும், தவறாமல் என்னோடு எடுத்துச் செல்வேன். இலங்கை ராணுவப் பிரச்சனைகளின்போது, செக்கிங் பொயிண்ட்டுகளில், ஒரு பேப்பர் துண்டு bag இல் கிடைத்தாலும் அதை துருவித் துருவி செக் பண்ணுவார்கள். அப்படியான நேரம்கூட, “உதையெல்லாம் காவாதே” என அம்மாவின் ஏச்சுக்கு மத்தியிலும் கொண்டு சென்று பாதுகாத்து, இங்கும் கொண்டுவந்துவிட்டேன். நெற்றில் உலாவினாலும் அந்நேரம் புளொக் பற்றித் தெரியாது, அத்தோடு பப்ளிக்கில் மற்றவர்களோடு கதைக்கவும் பயம்.

இப்படியிருந்தபோது ஒரு தளத்தில் இணைந்து கதைத்து வந்தேன், பின்பு அறுசுவை தொடர்பு கிடைத்தது. அறுசுவைக்குள் சங்கமமானேன். கொஞ்சம் தைரியம் வந்தது. ஜலீலாக்கா புளொக் வைத்திருக்கிறேன் வந்து பாருங்கோ என்றா, போய்ப் பார்த்தேன், தெரியாதோரெல்லாம் இருந்தார்கள், அதனால் கதைக்கப் பயமாக இருந்தது, போய்க் கதைக்கவில்லை. அப்போதுதான் நினைத்தேன், என்னிடம் இருக்கும் பொக்கிசங்களை ஒரு புளொக்கில் போட்டு, யாருக்கும் தெரியாமல் ஒரு புத்தகமாக வைத்திருப்போம், அப்படியாயின் இனிமேல் காலங்களில் எனக்கு கொப்பிகள் காவும் வேலை இருக்காதே என. அப்படியே இந்த புளொக் உருவாக்கினேன். ஆனால் எனக்கு ஒரு நிமிட நேரம் கிடைத்தாலும் அதை அப்படியே அறுசுவைக்கே அர்ப்பணித்தேன், அதனால் என் புளொக்கை தூசுகூடத் தட்டாமல் விட்டிருந்தேன்.. பல மாதங்களாக..

(இதன் தொடரை வினா இலக்கம் (9) இல் தொடரவும்).


--------------------------------------------------------------------------------

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

என் புளொக் பிரபல்யமாக வரவேண்டுமென்பது என் நோக்கமல்ல. மேலே சொன்ன காரணங்களோடு, பொழுதுபோக்குக்காகவும் சந்தோசத்துக்காகவுமே உருவாக்கியிருக்கிறேன். அதனால் எதுவும் செய்யவில்லை. என்னிடம் வருவோரிடம் நானும் போய்க் கதைத்து வருகிறேன். பத்துப்பேர் வந்தாலும், சிரித்து கதைத்து சண்டையிட்டு, மகிழ்ந்து போவதையே விரும்புகிறேன்.

--------------------------------------------------------------------------------


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


சொந்தவிஷயம் பற்றி சொல்ல பெரிதாக ஏதுமில்லை(எல்லாமே அங்கு சொல்லிவிட்டேன்:)). ஆனால் பழைய மறக்கமுடியாத நினைவுகளை அப்பப்ப பகிர்ந்துகொள்கிறேன். துக்கமோ, சந்தோசமோ எதுவாயினும் பகிர்ந்துகொள்ள, இங்கே எனக்கு நல்ல உடன்பிறந்தோர்போல.... உறவுகள் கிடைத்திருக்கிறார்கள், அதனால் பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.

--------------------------------------------------------------------------------

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


இதன் பதிலும் 3வது பதிலிலேயே சொல்லிவிட்டேன். முக்கியமாக என்னிடம் இருக்கும் சேகரிப்புக்களை போட்டுவைக்கவே இந்த புளொக். ஆனால் பலர் வந்து கதைத்துப்போகும்போது, சந்தோசத்தால், புதுசு புதுசாக பதிவிடுகிறேன். பொக்கிசங்கள் இப்பவும் அதே கொப்பிகளிலேயே பொக்கிசமாகவே இருக்கு:))).


எனக்கு மனதைத்தொடும் கவிதைகள் நிறையவே பிடிக்கும். அதனால் முன்பு நெற்றிலே தேடி, கை வலிக்க வலிக்க கொப்பியில் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அந்நேரம் புளொக் இல்லாமையாலும் புளொக் பற்றித் தெரியாமையாலும், ஆருடைய கவிதை, எந்த புளொக்கிலிருந்து எடுத்தேன் என்னும் விபரமெல்லாம் எடுத்து வைக்கவில்லை, அதனால் அவற்றை இங்கே இன்னும் எழுதாமல், கொப்பியிலேயே வைத்திருக்கிறேன்
:)).

--------------------------------------------------------------------------------


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


நான் எப்பவுமே பலதோணியில் கால் வைக்க விரும்புவதில்லை. ஒன்றென்றாலும் ஒழுங்காகச் செய்யவேண்டும் என்றே நினைக்கிறேன்... இதை வைத்திருப்பதே குருவித் தலையில் பனங்காய்போல இருக்கே:)))(நேரத்தைச் சொல்கிறேன்:)).

--------------------------------------------------------------------------------


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.


ஆ.... மை வந்திருக்கிறது வீட்டுக்கு:), ஆனால் பொறா......மை எல்லாம் எப்பவும் வந்ததாக நினைவில்லை. எல்லோரையும் ஊக்குவிக்க வேண்டும் என நினைத்தே, முடிந்தவரை பெரிய பின்னூட்டங்கள்:) போடுவேன்.

ஆனால் கோபம் நிறையவே இருக்கு..., கெட்டகோபமல்ல அன்பானகோபம்:), முதலாவதாக ஹைஷ் அண்ணனில், எவ்வளவு பிரயோசனமான புளொக்குகளை உருவாக்கிவிட்டு, இடையில் அப்படியே விட்டுவிட்டு ஓடப்பார்க்கிறார்.. அடுத்து இலா.... எவ்வளவு சொன்னாலும் ஊகூம் அசையமாட்டேன் என்கிறார்.... அந்த வரிசையில் இப்போ ஜீனோ வந்துகொண்டிருக்கிறார்...... இவற்றையெல்லாம் பார்க்க எனக்கு எந்தளவு கோபம் வரும்....


இந்தளவு கோபம் வருது:))))


 



--------------------------------------------------------------------------------

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

மேலே வினா (3)இன் விடையிலிருந்து தொடர்கிறது.

பல மாதங்களாக அப்படியே விட்டிருந்தேன். பின்பு நான், என் ஜொப்பில் அதிகம் பிசியாகினேன்... அப்பொழுது................
....................... ............................... ................................. ............................ ............................... ................................. .............................. ............................ ............................. ........................ ................. ஆ... பாருங்கோ மக்கள்ஸ்ஸ்... பொறுத்த நேரத்தில பேனாவுக்கு மை இல்லாமல் போச்சே.... இட்ஸ் ஓக்கை... விடுபட்டதுபோக மிகுதியைத் தொடர்கிறேன்:). அப்போ நேரமின்மையால் “அங்கே”யும் போகமுடியவில்லை, அப்பொழுதுதான் ஹைஷ் அண்ணன், மபொர புளொக் உருவாக்கி எனக்குச் சொன்னார். அரட்டைப் பகுதி தேவை எனக் கேட்ட இடத்திலே “நட்புப் பகுதியை” உருவாக்கிவிட்டார்.

கொஞ்சம் தைரியம் வரவே, என்னிடம் புளொக் இருக்கு, வெளியே காட்டிட வேண்டாம் என சொல்லி, என் புளொக் நேம் கொடுத்தேன். பின்னொரு நாள் திடீரெனப் பார்க்கிறேன், முதல் முதல் பின்னூட்டமும் போட்டு ஃபலோவராகவும் தான் இணைந்து, என் புளொக்கை, நட்பிலே பப்ளிக்கிலே தூக்கிப் போட்டுவிட்டார், எனக்கும் சொன்னார்... ஏன் தொடராமல் இருக்கிறீங்கள் புளொக்கில் எழுதுங்கோ என. முதன் முதலில் கிடைத்த முதல் பின்னூட்டம், என் சந்தோசத்துக்கு எல்லையே இருக்கவில்லை, நான் பின்னூட்டங்களை எதிர்பார்த்திருக்கவில்லை, என்னைத் தேடி பலர் வருவார்கள் எனவும் எண்ணியிருக்கவில்லை. அப்போ எனக்கு அந்த ஒரு பின்னூட்டமே, ஆயிரம் பின்னூட்டம் கிடைத்ததுபோல மகிழ்ச்சியாக இருந்தது, என் கணவருக்கும் சொன்னேன், அவரும் சொன்னார்... புளொக்கில் எழுதத் தொடங்குங்கோ என்று.

அப்பவும் நான் பேசாமல் நட்பிலேயே கதைத்துக்கொண்டிருந்தேன், 2வது பின்னூட்டம் ஹூசைனம்மா போட்டார்.... அப்போ எனக்குத் தெரியாது அவர்தான் திருமதி ஹூசைன் என்று. 3வது பின்னூட்டம் சுவையானசுவையிடமிருந்து கிடைத்தது(சுஸ்ரீ), அடுத்து இளமதி....

பின்னரும் எனக்கு புளொக்கினுள் போகும் எண்ணமில்லை. மீண்டும் ஹைஷ் அண்ணனே ஏசினார்,  பின்னூட்டங்களும் வரத்தொடங்கிவிட்டதே, அவற்றுக்குப் பதிலாவது போடுங்கோ என்று. அதன் பின்புதான் ஓடுப்பட்டேன்.  “புறுணம்” என்னவென்றால் புளொக் ஈமெயில் ஐடியையும் மறந்துபோனேன், பிறகெப்படி? பாஸ்வேட்டும் தெரியாதே.... ஓடுப்பட்டுக் கலைபட்டு, பழைய மெயில் எல்லாம் செக் பண்ணி ஒருமாதிரிக் கண்டுபிடித்து... ஆரம்பித்தேன்(நோட் புக்கில் எழுதி வையுங்கோ மக்கள்ஸ்ஸ், நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்:)).... மிகுதியை அடுத்த வினாவில் விடையாக்குகிறேன்.


--------------------------------------------------------------------------------



10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

“இந்த பேபி பூஸை யாரும் நம்பிட வாணாம், பெரியவர்களை அனுபவசாலிகளை நம்புங்கோ”


பின்பு புளொக்கில் எழுத ஆரம்பித்ததும்.... பழைய பறவைகள்.... பெயர்கள் எழுதப் பயமாக இருக்கு, இடையில் ஆரையாவது தவறவிட்டுவிட்டாலும் என.... அறுசுவை உறவுகள் ஒவ்வொருவராகத் தேடித் தேடி வந்து “அதிரா இங்கயோ இருக்கிறீங்க” எனக் கேட்டபோது..... என் மரத்தைத் தேடி பழைய பறவைகள் வருகின்றனவே என சந்தோசம் தாங்கமுடியவில்லை. உண்மை அன்பு வைத்து அங்கு எல்லோரோடும் பழகியது வீண்போகவில்லை என நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

சில நேரங்களில், சிலரோடு இனிப் பேசுவதே இல்லை எனக் “கங்கணம்”:) கட்டியிருக்கிறேன்... மனதில்தான்:), ஆனால் பூஸின் கோபமெல்லாம் ஒரு நொடியிலேயே, புஸ் என்றாகிவிடும்(இதையும் யாரோ சொன்னார்கள்:)).... மீண்டும் பழையபடி கலகலப்பாகிவிடுவேன். அடிமனதில் அனைவரோடும் அன்பு ஆழமாகப் பதிந்துவிட்டமையால், எவ்வளவு பிரச்சனை வந்தாலும், அவையெல்லாம் தூசாகி, அன்புதான் எப்பவும் பலமடைந்துவிடுகிறது எனக்கு.

டொட்ட டொயிங்.... டொட்ட டொயிங்..... டொட்ட டொயிங்.... நன்றி ... வயக்கம் _()_.


அடுத்து இதனைத் தொடரும்படி, மிகவும் தாழ்மையாக கேட்டு, மேடைக்கு வரும்படி அழைப்பது----


1. தம்பி ஜீனோ
( நோ ஷொயிஸ்ஸ்ஸ்.. எழுதியே ஆகவேண்டும்...).

2. இம்மா இமா....(நான் சொன்னா, இமா எழுதுவா என எனக்குத் தெரியுமே:)), or ஏற்கனவே இதுபற்றி எழுதிவிட்டீங்களோ??)

3. இலா... (இலா.... ஐடி, பாஸ்வேர்ட் எல்லாம் மறந்திடப்போறீங்கள், இதையாவது எழுதுங்கோ பிளீஸ்ஸ்ஸ்) ( பி.கு: ஜெய்லானி!! மயில், ஆறாவது குஞ்சுபொரிக்கப்போகுது:), பின்னூட்டத்துக்கு ரெடிஆஆஆஆஆஆஆஆஆ இருங்கோ:)).

==========================================================

பின் இணைப்பு:
(இது படித்ததில் ரசித்தது).

என் அம்மா ஊருக்கே சொல்கிறா
என் மகனுக்கு கணனியில்
எல்லாம் தெரியும் என்று,
அவவுக்கு எப்படித் தெரியும்
எனக்கு உன் கூட சாட் பண்ண
மட்டும்தான் தெரியும் என்று



(உஸ் அப்பா... முடியல்ல..... கவிஸ்ஸ்ஸ்.... கூலாஆஆஆஆ ஒரு கப் கோப்பி பிளீஸ்ஸ்ஸ்)