நல்வரவு_()_


Saturday 8 January 2011

கொசிப்பூ (1)

பிறகு காலையும் கொம்பையும் எடுத்துப்போட்டு ஆரும் வாசிச்சிடப்பூடாதூஊ:)).


சிரிக்க முடியாமல் போச்சு, அதேன் இப்பூடி

இது என் புதுத் தலைப்பல்ல. முந்தினது பெரிதாகி விட்டதால்தான் இதைப் போடுகிறேன். ஆருக்கும் பொழுது போகவில்லையாயின் இங்கு வந்து “விடுப்ஸ்” சொல்லிப் போங்கோ. என்னோடு மட்டுமில்லை ஆரோடு வேணுமெண்டாலும் கதையுங்கோ. இன்று இருக்கிறோம், நாளை நம் கையில் இல்லைத்தானே, எனவே சோகங்கள் நெஞ்சோடு இருந்தாலும் வெளியே கதைச்சுச் சிரிப்போம் வாங்கோ.

விடுப்ஸ் = புதினம்(புறுணம்) = கொசிப்ஸ் = அரட்டை... இது சரிதானே?
...................................................................................................................................

ம்ம்ம் எவ்ளோ நேரம்தான் காத்திருக்கிறது?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆரும் சொல்லிக் குடுத்திடாதையுங்கோ:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உஸ்... அப்பாடா, இதில நித்திரைகொண்டால்தான் காத்து வடிவாப்புடிக்குது:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


பின் இணைப்பு:
பார்த்தேன், படித்தேன் பிடித்திருந்தது... நட்புக்கும் பொருந்துது.


==========================================================
ஒரு வெளவால் வீட்டுக்கு
இன்னொரு வெளவால் வந்தால்,
அதுவும் தொங்கிக்கொண்டுதானிருக்கும்
==========================================================

42 comments :

  1. ஹை பூஸார் பின்க் ஃப்ராக்கில் ஜம்முன்னு வந்துட்டாரே

    ReplyDelete
  2. ஐ... ஜலீலாக்கா வட உங்களுக்கேதான்... இதைக்கொஞ்சம் படியுங்க ஜலீலாக்கா என்னால ரைப் பண்ண முடியேல்லை... சிரிச்சதால..

    ஜெய்லானி said... 108
    //இந்த ரேஞ்சில போனால் நாங்க மேலால வளராமல், சைட்டாலதான் வளருவம். இப்போ வட பிச்சுப்பிச்சுத் தாறதும் நிண்டுபோச்சு.//

    நினைத்து நினைத்து பார்த்தேன்.....
    வயிறு வலிக்க சிரித்தேன் .......
    உருண்டு பிறண்டு சிரித்தேன் ....
    கால் வழிக்கி விழுந்தேன்....
    உன்னால் தானே இப்படி ஆனதே...ஏ.....
    கண் ரெண்டும், இருட்டி போனதே....

    ReplyDelete
  3. கலக்குங்குங்க கலக்குங்க;
    கவிதையும் கலக்கல்

    ReplyDelete
  4. பதிவு போட்டு இரண்டு வருடத்தில் இண்டைக்கு தான் வடை கிடைத்தது அதுவும் அதிரா பக்கத்தில்
    ரொம்ப ஜந்தோசம்

    ReplyDelete
  5. ஏன் பூஸார் நித்திரை கொள்ளவில்லையா?

    ReplyDelete
  6. மிக்க நன்றி ஜலீலாக்கா, இப்பத்தான் முட்டை அவியுது, இனி வாறவைக்கெல்லாம் அ.கோ.முட்டைதேன்... தொட்டு தொட்டுச் சாப்பிட பிலாக் பிப்பரு:)

    ஏன் பூஸார் நித்திரை கொள்ளவில்லையா? // அதுக்குத்தான் ஜெய் இன் லப்ரொப் இருக்கே:)))

    ReplyDelete
  7. அதிரா நலம் தானே?வருகைக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கோ.

    ReplyDelete
  8. அதீஸ், நான் ஒரு இரண்டு மணி நேரம் காணாமல் போக போறேன். யாரும் தேட வேண்டாம். அப்பாடா! இப்ப தான் நிம்மதியா இருக்கு.

    ReplyDelete
  9. ஹ ஹ ஹா! நம்மட சந்தூ நீங்க சொன்ன மாதிரியே.. பின்னுட்டமெல்லாம் போட்டுராதீங்க பிளீஸ்ன்னு சொன்ன மாதிரி இருக்கு!!!

    //.இந்த ரேஞ்சில போனால் நாங்க மேலால வளராமல், சைட்டாலதான் வளருவம். இப்போ வட பிச்சுப்பிச்சுத் தாறதும் நிண்டுபோச்சு.//
    கிக்...கிக்..கிக்... பேசாம பரணில ஏறிடலாமா... தொங்கி தொங்கி எக்சர்சைஸ் செய்துக்கலாம் :))

    புர்ரியாணி ஆர்டர் அடுத்த வியாழனுக்கு ஆபிஸ் எலிகளுக்கு வேணுமாம்....இன்றைக்கு இல்லை :)) ஆனந்தபவன் பியூர் வெஜிடெரியன் ஹோட்டல் அதீஸ்... அதுவும் நாம சாப்பிடற வடை எல்லாம் கொடுக்கறது தேனாம்பேட்டைல மவுண்ட் ரோட்ல இருக்கு :))

    ஜெய்யி! எல்லாம் நேரம் பாருங்க.. ஒரு ஆர்வக்கோளாறில டைப் செய்தது ஆ.கா வரை வந்துவிட்டது.. இனி மூஞ்சை புத்தகத்தில நேரம் செலவழிக்காதேன்னு ஓர்டர் வேற... முட்டைபொரிப்பது பார்த்தேன்.. அங்க எண்ணைக்கு பதிலா பெனாயில் அப்படி இப்படின்னு படிச்சதுமே எனிமா குடிச்சமாதிரி ஆயிட்டுது.. இனி உங்க ரெசிபி நான் டிரை செய்வேன்கிறீங்க...

    ReplyDelete
  10. அப்பாடா..அதிரா வந்தாச்சு.இப்பதான் சந்தோஷமாக இருக்கின்றது.இனி தொடர்ந்து அடிக்கடி எழுதுங்க.பிங்க் வர்ண ஃப்ராக்கில் பூசாரை பார்க்கும் பொழுது மனசெலாம் பரவசமாகிவிட்டது.

    ReplyDelete
  11. ஆஹா சூப்பர் பதிவுதான் போங்க.

    ReplyDelete
  12. ஆசியா மிக்க நன்றி. உங்கள் எல்லோரினதும் மகிழ்வால் என் சுமை கொஞ்சம் குறையுது.

    vanathy said... 8
    அதீஸ், நான் ஒரு இரண்டு மணி நேரம் காணாமல் போக போறேன்
    /// அப்போ எனக்கு ஹை ஃபை க்கு ஆள் இல்லையா? எவ்ளோ நேரம்தான் கையைத் தூக்கியபடியே இருப்பது... நாங்க கட்டிலுக்குக் கீழ இருந்தாலும் பிளேன் அனுப்பிக் கண்டுபிடித்திடுவோமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    இல்ஸ்ஸ் //தொங்கி தொங்கி எக்சர்சைஸ் செய்துக்கலாம் :))// அப்பூடியெண்டால் வெளவால்:))).

    //ஆனந்தபவன் பியூர் வெஜிடெரியன் ஹோட்டல் அதீஸ்... // கிக் கிக் கிக் நான் நினைத்தேன் எல்லாமே கிடைக்குமென்று....

    //நாம சாப்பிடற வடை எல்லாம் கொடுக்கறது தேனாம்பேட்டைல மவுண்ட் ரோட்ல இருக்கு :))// அட அட்ரஸ் எல்லாம் கரெக்ட்டாச் சொல்றீங்க இலா.. அங்க இருந்தா அவ்ளோ ஸ்பீட்டா டெலிவரி நடக்குது எங்களுக்கு:).

    ///மூஞ்சை புத்தகத்தில /// முதல்ல இந்தப் பெயரை மாத்தோணும்... அயகான தமிழ்ல “பேஸ்”(இது வேற பேஸ்:))எண்டு சொல்லுங்கோவன்... இது எலிமூஞ்சைமாதிரிக் கிடக்கு:(.

    //அங்க எண்ணைக்கு பதிலா பெனாயில் அப்படி இப்படின்னு படிச்சதுமே எனிமா குடிச்சமாதிரி ஆயிட்டுது../// அதேதான் இலா, அங்கிருப்பவர்களின்(படத்தில) சிரிப்பைப் பார்த்ததுமே புரிந்திட்டது... ஜெய் இன் முட்டைப்பொரியலாலேயே இந்தச் சிரிப்பு என.

    //இனி உங்க ரெசிபி நான் டிரை செய்வேன்கிறீங்க... // சே..சே..சே... நான் செய்யத்தான் போறேன், ஆனால் ஒரு கண்டிஷன் ... விருந்தாளி ஜெய் மட்டும்தேன்.

    ReplyDelete
  13. மிக்க நன்றி ஸாதிகா அக்கா. எல்லோருமே வலைப்பூவுக்குப் போகச் சொல்லிக் கலைத்தமையாலும்.... உங்கள் எல்லோரது அன்பு அழைப்பாலுமே மீண்டும் வந்தேன்.

    // Lakshmi said... 11
    ஆஹா சூப்பர் பதிவுதான் போங்க.
    // என்ன லக்‌ஷ்மி, இப்பத்தான் வந்தேன், அதுக்குள் போகச் சொல்றீங்கள்.... நான் சும்மா சொன்னேன், மிக்க நன்றி. நீங்க தேடித் தேடிவருவது மிக்க மகிழ்ச்சியே, நானும் வருகிறேன்.

    ReplyDelete
  14. அதீஸ்!!! எப்படி எல்லாம் எக்சர்சைஸ் செய்ய வேண்டி இருக்கு பாருங்கோ...
    அந்த ஆனந்தபவனில் தான் பாசப்பறவைகள் எல்லாம் ஒரு வருடத்துக்கும் மேலே பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு இருக்கு... நம்மள பாத்தாலே ரெண்டு இட்டிலி ஒரு வடை .. ஒரு பரோட்டா (ஒன் பை 2) ஒரு காப்பி :)) ஆர்டர் சொல்லிடுவாங்கல்ல... நானும் தம்பி மற்றும் அண்ணா எல்லாம் அங்க ரெகுலர்ஸ்...

    எப்படி சொல்லறது.. முகநூல் என்று அழகா ஜெய்யி சொன்னாலும் எனக்கும் வான்ஸுக்கும் "மூஞ்சை" புக் தான் பிடித்திருக்கு....

    எனக்கு ஒரு டவுட்டு.. ஜெய்யி ரூம்மேட்ஸ் எல்லாம் எப்படி சமாளிக்கறாங்களோ இப்படி சமையலால.. ஒரு வேளை பாத்திரம் கிளீனிங் ... காய் வெட்டிங் மட்டும் இவராயிருக்குமோ ??!!!

    //விருந்தாளி ஜெய் மட்டும்தேன்// அப்படி போடு போடு போடு... திருப்பி போடு தன்னால...

    அதீஸ்! இந்த பெல்லரீனா பூஸ் சுட்டுக்கறேன்.. மருமகனுக்கும் பூஸ் ரொம்ப இஷ்டம்...அதுல பின்க் பிராக் ரொம்ப கியூட்... இந்த வாரமும் ஐபோனுக்கு வாட்டர் சர்வீஸ் தான்... மருமகன் உம்மா கொடுக்க ரொம்ப யோசிப்பார்... பூஸ் படத்துக்கு பக்கத்தில நம்ம முகத்தை காமிச்சா ஒரு வேளை உம்மா கிடைக்கும் :))

    இன்னும் ஹோம்வெர்க் முடிக்க‌லை. ஒரே டென்ஷ‌னா இருக்கு :( சீயா மியா....

    ReplyDelete
  15. நல்வரவு.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  16. நம்மள பாத்தாலே ரெண்டு இட்டிலி ஒரு வடை .. ஒரு பரோட்டா (ஒன் பை 2) ஒரு காப்பி :)) ஆர்டர் சொல்லிடுவாங்கல்ல/// ஆ.... இல்ஸ்ஸ்ஸ் திஸ் இஸ் திறீ:) மச்:)).

    இங்கும் எங்கள் வீட்டுக்கருகில் ஒரு பிட்ஷா, வாசலில் கால் வைத்ததும் சொல்வார்கள், ஃப்பமிலி சைஸ்.. கிரில்ட் சிக்கின் வித் எக்ஸ்ரா ஜெலபினோஸ் பிளீஸ்ஸ்...

    வதன புத்தகம்... இது எப்பூடி?

    ஜெய் தலை மறைவு.. தண்ணிக்குள்ளேயே ஆளை.. சுறா, திமிங்கிலம் ஏதும் விழுங்கிட்டுதோ என எனக்கு பக்..பக்... இதயம்தான் அப்பூடி அடிக்குது.

    மருமகனுக்கும் பூஸ் ரொம்ப இஷ்டம்/// ஆ.... முதன்முதலா ஒரு எதிர்ப்பாலுக்கு பூஸை ரொம்பப் பிடிச்சிருக்கே... சந்தோசத்தில வால் கடுமையா ஆடுது( கோபம் எண்டால் வாலை ஆட்டாமல்தான் போகும்..பூஸ்).

    //பூஸ் படத்துக்கு பக்கத்தில நம்ம முகத்தை காமிச்சா ஒரு வேளை உம்மா கிடைக்கும் :))// ஒருவேளை சடாரென அடியும் விழலாம், எதுக்கும் சாக்க்க்ரதை:).

    ///இன்னும் ஹோம்வெர்க் முடிக்க‌லை. ஒரே டென்ஷ‌னா இருக்கு :( சீயா மியா.... /// மதன சே..சே... வதன.. சே..சே.. உங்க பாஷையிலயே மூஞ்சி புத்தகத்துக்குப் போகவேண்டாமென ஆத்துக்காரர் ஓடர் போட்டமாதிரி,

    இனிமேல் ஹோம் வேர்க் முடிக்காமல் எந்த புளொக்கிலயும் மயிலைக் காணக்கூடாதென.. மேன்மைதங்கிய, மாண்புமிகு... சே அதெல்லாம் எதுக்கு... அதிரா ஓடர் போட்டுள்ளேன்.... கர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  17. மிக்க நன்றி ஹைஷ் அண்ணன். உங்கள் தினசிந்தனை வார சிந்தனையாகி இப்போ மாத சிந்தனையாகிறது. உங்கட சிந்தனை படிக்காமல் இப்போ சிந்திக்கும் தன்மையும் குறைவதுபோல இருக்கெனக்கு. இலாவைப்பாருங்க, தின சிந்தனை இருந்தபோது ஒழுங்கா இருந்தவ, இப்போ ஹோம் வேர்க் கூட சிந்திக்க முடியாமல்... வாணாம்... அதெல்லாம் எதுக்கு.

    தொடருங்க ஹைஷ் அண்ணன், தினம் ஒரு சிந்தனை = தின சிந்தனை.

    ReplyDelete
  18. அதிரா,மீண்டும் உங்க பதிவைப் பார்ப்பதில் மகிழ்ச்சி! நிதானம கமெண்ட்டெல்லாம் மறுபடியும் ஒண்ணொண்ணா படிக்கோணும்! :)

    பிங்க் ட்ரெஸ்ல பூஸார் கலக்கலா இருக்கார்.ஹை-ஃபை-க்குகு காத்திருப்பவரைப் பார்க்க பாவமா இருக்கு! நான் ஹை-ஃபை குடுத்திடறேன். :)

    ReplyDelete
  19. welcome back athira.
    உங்களை மீண்டும் இங்கு பார்ப்பதில் பார்த்ததில் பார்த்து கொண்டே இருப்பதில் எண்ணற்ற மகிழ்ச்சி.
    நல்ல நட்பு, நல்ல சிந்தனை நல்ல மனிதர்கள், நல்ல பதிவு இதெல்லாம் பார்த்தாலே மனது ஒரு வித புத்துணர்ச்சி பெற்றது போல் இருக்கும். என்ன அதிரா சரிதானே. தொடருட்டும் உங்கள் பதிவுலக ப்ரவேசம் இந்த இனிய புத்தாண்டில் எல்லாம் இனிதே நடக்கட்டும்.

    ReplyDelete
  20. அதீஸ்!
    எனக்கென்னவோ ஜெய்யி பம்மற மாதிரி இருக்கு :)) கிக்...கிக்..கிக்..

    ஹைஷ் அங்கிள்! வெறுமே நல்வரவு தானா.. சே.. ரூ பேட்...
    அதீஸ் ஸ்டார்ட் மிசிக்...

    சிந்த‌னை வேண்டாம்.. அப்ப‌ற‌ம் பூஸ் கேள்வி கேட்டு அதுக்கு ப‌தில் தேடி த‌லைய‌ சொரிஞ்சி...வேண்டாம் அது ... ஒரு ஜோக் சொல்லுங்க‌.. இல்லை ஸ்லைட்ஷோ போடுங்க‌.. இல்லைன்னா "இன்று ஒரு த‌க‌வ‌ல்"ஆவ‌து சொல்லுங்க‌..

    இந்த‌ வார‌ம் ம‌ட்டும் தான் ஸ்லாக்கிங்.. அடுத்த‌ வார‌த்தில‌ இருந்து பாருங்க‌.. கிண்ணு கிண்ணுன்னு ப‌தில் சொல்லுவோமில்ல‌...

    அதீஸ் ஒரு விச‌ய‌ம் தெரியுமோ.. நான் லேட்நைட் வீட்டுக்கு போனேன்.. காலையில் ம‌ரும‌க‌ன் என்னை க‌ண்ட‌துமே.. அத்தேஏஏ என்றார் ஒரே இன்ப‌ அதிர்ச்சிதான் போங்க‌.. ந‌ம்ம‌ பேல‌ரின்னா பூஸுக்கு ச‌ளிபிடித்துவிட்ட‌து... ஒரே ச‌ளிவாஷ் செய்திட்டார் குட்டீஸ்...

    ReplyDelete
  21. வாங்க மஹி, வரவுக்கு மிக்க நன்றி.

    ///பிங்க் ட்ரெஸ்ல பூஸார் கலக்கலா இருக்கார்///
    கண்படுத்திடாதீங்கோ, தனக்கு கலர்தான் பிடிச்சிருக்காம் ட்ரெஸ் பிடிக்கேல்லையாம்.... அதுதான் முகத்தில சிரிப்பில்லை:).


    .ஹை-ஃபை-க்குகு காத்திருப்பவரைப் பார்க்க பாவமா இருக்கு! நான் ஹை-ஃபை குடுத்திடறேன். :) /// பார்த்தீங்களா மஹி, நீங்களாவது கொடுத்தீங்களே மிக்க நன்றி. ஆனாலும் பூஸார் தான் கண்ணகி மாதிரியாம், தம்பி வந்து ஹை ஃபை சொல்லும்வரைக்கும் கையைக் கீழ விடமாட்டாராம்:)... சகோதரபாசம்:).

    ReplyDelete
  22. விஜி வாங்க விஜி, மிக்க நன்றி.

    உங்களையும் காண்பது கார்த்திகைப் பிறையைக் காட்டிலும் கஸ்டமாக இருக்கே விஜி. மறக்காமல் அப்பப்ப வந்து உசுப்பேத்திவிட்டுட்டுப் போயிடுறீங்க. மிக்க நன்றி.

    ReplyDelete
  23. அதீஸ்!
    எனக்கென்னவோ ஜெய்யி பம்மற மாதிரி இருக்கு :)) கிக்...கிக்..கிக்..
    /// இல்ல இலா, நான் ஜெய்யைக் கண்டு பிடிச்சிட்டேன், இங்கு தூக்கிவர ட்ரை பண்ணினேன் என்னால முடியல்ல... ரெம்ம்ம்ம்ப வெயிட்டூஉ... நாங்கதான் ஊசிபோல இளச்சிட்டமே அதால முடியேல்லை, தானா வந்தால்தான் உண்டு.

    //ஹைஷ் அங்கிள்! வெறுமே நல்வரவு தானா.. சே.. ரூ பேட்...
    அதீஸ் ஸ்டார்ட் மிசிக்...
    /// ஏ... டண்டணக்கா... டணக்கணக்கா... இல்ஸ்ஸ் இது போதுமோ? இல்லாட்டில் வேஏஏஏஏற ஸ்டைல்ல வேணுமோ?:).

    //அது ... ஒரு ஜோக் சொல்லுங்க‌.. இல்லை ஸ்லைட்ஷோ போடுங்க‌.. இல்லைன்னா "இன்று ஒரு த‌க‌வ‌ல்"ஆவ‌து சொல்லுங்க‌../// இல்ஸ்... உங்களுக்கு ஒரு பயமொழி தெரியுமோன்னோ? எறும்பூரக் கல் குழியுமாமே? இது யானைக்குட்டிகள் எல்லோ(எங்களிருவரையும்தான் கொஞ்சம் பெருமையாக இருக்கட்டுமே என)) கல் குழியாமல் இருக்குமா.... கொஞ்சம் பொறுங்க பிளேன் லாண்ட் பண்ணினவுடன் வந்திடுவார்:).

    ///கிண்ணு கிண்ணுன்னு ப‌தில் சொல்லுவோமில்ல‌.../// கிண்ணு கிண்ணு என மணிதான் அடிக்கும்:), எனக்கே கொஞ்சம் பயமாக்கிடக்கு இலா:).

    உங்கள் நைட் கதை சொல்லி என் பேபி நினைவைக் கிளறிவிட்டீங்க.

    அப்போ எனக்கொரு 5 வயதிருக்கும். எங்கள் மாமா(எமக்கு ஒரேயொரு மாமாதான்) பக்கத்து ஸ்கூலில் ஆங்கில மாஸ்டர். எங்களோடு இருந்துதான் ஸ்கூல் போவார். வெள்ளி இரவு ஊருக்குப் போய் திங்கள் அதிகாலை மீண்டும் வந்திடுவார். எங்கள் வீட்டில் 4 அறைகள். முன் அறை மாமாவுக்கு கொடுத்திருந்தோம். மாமா ஊரால் திரும்பி வரும்போது நிறைய ஊர்ச் சாமான் கொண்டுவருவார். அதனால் ஞாயிறு இரவே நித்திரை வராது, மாமா வந்திட்டாரோ என்றுதான் தேடுவது வழக்கம். அவருக்கும் எங்களில் நல்ல பாசம்(இப்பவும்தான்), என்ன வாங்கி வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுதான் போவார். இப்பகூட போனில் பேசும்போது, உனக்கு என்ன அனுப்பவேண்டும் சொல்லு எனத்தான் கேட்பார்... மாமியும் அப்படித்தான், கேட்ட சாமான் உடனே பார்ஷலில் வரும். திங்கள் அதிகாலை கண்முழித்ததும் ஓடிச்சென்று மாமாவோடு பக்கத்திலே படுத்திருந்து கதை கேட்பேன்.

    அன்றும் அப்படித்தான், கண் முழித்தேன், நன்கு விடியவில்லை அதிகாலை மெல்லிய வெளிச்சம் ஓடிப்போய் மாமாவின் கட்டிலைப் பார்த்தேன் மாமா படுத்திருக்கிறார், பக்கத்திலே ஏறிப்படுத்து காலையும் தூக்கி மாமாவுக்கு மேலே போட்டுக்கொண்டு, வந்திட்டீங்களோ மாமா என்றேன்... ம்ம்ம் எனப் பதில் வந்தது கதைக்கவில்லை மாமா. ஆனால் என் கண்ணுக்கு அவரின் சாரம் புதுசாகத் தெரிந்தது, என்ன மாமா புதுச்சாரம் வாங்கினனீங்களோ என்றேன், அதுக்கும் ம்ம் என பதில், எனக்குக் குரல் புரிந்துவிட்டது... அதே பாச்சலில் கீழே குதித்துவிட்டேன்.

    நடந்தது என்னவென்றால், அன்று பார்த்து மாமா வரவில்லை, ஆனால் ஒன்றுவிட்டமாமா அவரும் எங்களோடு வந்து தங்கிப்போவார், ஆனால் அவரோடு மடியில் எல்லாம் இருக்கமாட்டேன், பக்கத்தில் படுத்திருந்து கதைக்கமாட்டேன், அவர்தான் அன்று எதிர்பாராமல் வந்திருக்கிறார், அவரை, அவரின் பெயரைச் சொல்லித்தான் மாமா என்போம், அதனால் நான் மாமா எனக் கதை கேட்டதும், இவருக்குப் புரிந்துவிட்டது நான் மாறி நினைக்கிறேன் என, குரல் கொடுத்தால் ஓடிவிடுவேன் என நினைத்து ம்ம்ம்ம் சொல்லியிருக்கிறார்.

    பின்பு அவரும் சிரித்து உருண்டபடி அம்மாவிடம் வந்து சொல்லிச் சிரித்து... ஒரு கிழமையாக வீட்டில் இச்சிரிப்பு உலாவியது.

    //ந‌ம்ம‌ பேல‌ரின்னா பூஸுக்கு ச‌ளிபிடித்துவிட்ட‌து... ஒரே ச‌ளிவாஷ் செய்திட்டார் குட்டீஸ்... /// பறவாயில்லை இலா விடுங்க, குட்டிதானே..:))).

    ReplyDelete
  24. அதீஸ்! பாவம் அவரை விட்டிடலாம்.. ஏற்கனவே தலைகீழா நிக்கறார் இல்லை :))))))
    கிக்..கிக்..கிக்...

    //தானா வந்தால்தான் உண்டு.

    ஆமாம்.. அங்க‌ பேஸ்புக்கில‌ ரொம்ப‌ நேர‌ம் இருப்பார் போல.. எல்லா ப‌ட‌த்திலும் அவ‌ரை ஒட்டி வ‌ச்சிருக்காங்க‌ :)

    இமாவைக் கண்டேன்... வதன புத்தகத்தில் :)))))

    // ஏ... டண்டணக்கா... டணக்கணக்கா
    இது நிக்கில் பாட்டு :))) ந‌ல்லா விஜ‌ய் பாட்டு போடுங்க‌ :)

    மீ அன்ட் யூ ஒன்லி எறும்பு.. சுறு சுர்றுப்பூஊஊஊஉ!!! வரட்டும் பிளேனை தண்ணிக்குள்ள லேண்ட் ஆக்காம இருந்தா செரி...

    //மணிதான் அடிக்கும்:)
    கொய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.... காது போச்சு இப்ப‌டி ம‌ணி அடிச்சு

    உங்க மாமா க‌தை ந‌ல்ல‌ சிரி..கியூட் :)

    விஜி அப்ப‌ப்ப‌ வ‌ந்து என்ன‌ இலா காண‌லைன்னு சொல்ல‌றாங்க‌.. உண்மையில் அவ‌ர் தான் ஹைப‌ர்னேட் ஸ்டேட‌ஸ்ல‌ இருக்காங்க‌ :))

    ReplyDelete
  25. //ஆமாம்.. அங்க‌ பேஸ்புக்கில‌ ரொம்ப‌ நேர‌ம் இருப்பார் போல.. எல்லா ப‌ட‌த்திலும் அவ‌ரை ஒட்டி வ‌ச்சிருக்காங்க‌ //

    ஆமாப்பா! திரும்பின பக்கமெல்லாம் ஜெய் ஜெய்ன்னு ரசிகைகள் கூச்சல் போடுறாங்க.

    ReplyDelete
  26. welcome back Adhira!
    பூனைக்கு கவுன் மாட்டி விட்டது வேடிக்கையாகவும் அழகாகவும் இருக்கு! கவிதையும் அருமை!

    ReplyDelete
  27. ஆகா அதிரா வந்திட்டாங்க.ப்ளாக்கில் பழைய உற்சாகத்தை பார்க்க முடிகிறது. தொடர்ந்து இப்படி பதிவுகள் போடுங்கள்.நான் தான் பிந்திவந்துவிட்டேன் போல.வேலை ஆரம்பம் அதிரா.மன்னிக்க.
    கவிதை நல்லா இருக்கு.பிங்க் ப்ராக்கில் பூஸார் அழகு.

    ReplyDelete
  28. இல்ஸ்
    //ஆமாம்.. அங்க‌ பேஸ்புக்கில‌ ரொம்ப‌ நேர‌ம் இருப்பார் போல.. எல்லா ப‌ட‌த்திலும் அவ‌ரை ஒட்டி வ‌ச்சிருக்காங்க‌ :)
    // வித்தியாசமா சாகசம் செய்தா... எல்லா இடத்திலும் ஒட்டுவாங்க இலா, படத்தை:).

    //இமாவைக் கண்டேன்... வதன புத்தகத்தில் :)))))
    // ஐ.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு, பிடிக்காம விட்டிட்டீங்களே இல்ஸ்ஸ்ஸ்.

    ஹோம் வேர்க் எல்லாம் முடிச்சாச்சா? இல்ல இன்னும் 2 நாளிருக்கே என ஓய்வெடுக்கிறீங்களா என்னைப்போல?:).

    ReplyDelete
  29. vanathy said... 25
    //ஆமாம்.. அங்க‌ பேஸ்புக்கில‌ ரொம்ப‌ நேர‌ம் இருப்பார் போல.. எல்லா ப‌ட‌த்திலும் அவ‌ரை ஒட்டி வ‌ச்சிருக்காங்க‌ //

    ஆமாப்பா! திரும்பின பக்கமெல்லாம் ஜெய் ஜெய்ன்னு ரசிகைகள் கூச்சல் போடுறாங்க.

    //// ஆஆஆஅ ரசிகைகளா? நான் பெயிண்ட் பண்ணிடுவன்போல இருக்கே... வான்ஸ் இது கிசுகிசு இல்லையே?:).

    ReplyDelete
  30. மிக்க நன்றி மனோஅக்கா.

    ReplyDelete
  31. அம்முலு மிக்க நன்றி. வேலை கிடைத்திருக்கா வாழ்த்துக்கள். நான் தான் இங்கு தாமதமாகிட்டேன்.

    ReplyDelete
  32. //நான் பெயிண்ட் பண்ணிடுவன்போல இருக்கே.//
    அதீஸ், முகத்திற்கு பெயின்டோ வேண்டாம். எங்கட இம்ஸ் மாதிரி அனுபவப்பட்ட ஆட்களிடம் முகத்தை குடுங்கோ.

    ReplyDelete
  33. வான்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ///இம்ஸ் மாதிரி அனுபவப்பட்ட ஆட்களிடம் /// :))).

    வான்ஸ்ஸ்ஸ் எங்கட ஜெய்யையும் இல்ஸ் ஐயும் அங்க கண்டால் சொல்லிடுங்க நான் இங்க தேடுறேனாம் என, என் மயில் பார்த்து ஆரும் சிரிக்கப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))), எல்லாம் ஜெய்யால வந்த குழப்பம்தேன்:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  34. அடடா தெரியாமப்போச்சே...!! சிரசாசனம் அதிகமா போச்சே...அவ்வ்வ்வ்..!!


    //ஒரு வெளவால் வீட்டுக்கு
    இன்னொரு வெளவால் வந்தால்,
    அதுவும் தொங்கிக்கொண்டுதானிருக்கும் //

    அப்போ உங்க வீட்டுக்கு வந்தா சாப்பிட பாலை தவிர வேறு எதுவும் கிடைக்காதுன்னு சொல்லுங்க ..ஹா..ஹா..அப்போ பார்ஸல் நாமளேதான் கொண்டு வரனும் போல .. விருந்தாளி கதி அதோகதிதான்

    ReplyDelete
  35. //ஏன் பூஸார் நித்திரை கொள்ளவில்லையா? // அதுக்குத்தான் ஜெய் இன் லப்ரொப் இருக்கே:))) //

    ஹா..ஹா..ஹா..ஹா...அதுவும் ஸ்டைலாக கால் மேல் கால் போட்ட படி தூங்க ..ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
  36. //அங்க எண்ணைக்கு பதிலா பெனாயில் அப்படி இப்படின்னு படிச்சதுமே எனிமா குடிச்சமாதிரி ஆயிட்டுது.. இனி உங்க ரெசிபி நான் டிரை செய்வேன்கிறீங்க... //

    வேனுமின்னா இன்னொரு ரெஸிபி சொல்லவா..?

    நாலாவது படம் சூப்பரோ சூப்பர்....கலக்கிட்டிட்ட்ங்க ...நல்ல வேளாஇ தண்ணிக்குள்ள தூங்கல போலிருக்கு ஹி..ஹி..

    // சே..சே..சே... நான் செய்யத்தான் போறேன், ஆனால் ஒரு கண்டிஷன் ... விருந்தாளி ஜெய் மட்டும்தேன்.//

    சரி...ஆனா நாலு டஜன் ((அப்பவும் பத்தாதே என்ன செய்ய )) வாழைப்பழம் கூடவே தரனும் ஓக்கேயா...


    //எனக்கு ஒரு டவுட்டு.. ஜெய்யி ரூம்மேட்ஸ் எல்லாம் எப்படி சமாளிக்கறாங்களோ இப்படி சமையலால.. ஒரு வேளை பாத்திரம் கிளீனிங் ... காய் வெட்டிங் மட்டும் இவராயிருக்குமோ ??!!! //

    இதச் பத்தி தனி பதிவா போடுரேன் ...படிச்சிட்டு சொல்லுங்க :-))

    ReplyDelete
  37. //ஜெய் தலை மறைவு.. தண்ணிக்குள்ளேயே ஆளை.. சுறா, திமிங்கிலம் ஏதும் விழுங்கிட்டுதோ என எனக்கு பக்..பக்... இதயம்தான் அப்பூடி அடிக்குது.///

    வந்ததே தெரியலையே ம(மெ)யிலும் ஒன்னும் சொல்லலையே...ஓக்கை...போனது வரை போகட்டும் ..

    // அதீஸ்!
    எனக்கென்னவோ ஜெய்யி பம்மற மாதிரி இருக்கு :)) கிக்...கிக்..கிக்..
    /// இல்ல இலா, நான் ஜெய்யைக் கண்டு பிடிச்சிட்டேன், இங்கு தூக்கிவர ட்ரை பண்ணினேன் என்னால முடியல்ல... ரெம்ம்ம்ம்ப வெயிட்டூஉ... நாங்கதான் ஊசிபோல இளச்சிட்டமே அதால முடியேல்லை, தானா வந்தால்தான் உண்டு. //

    ஏதோ உள்ளுனர்வு சொன்னதால் திடிர்ன்னு வந்தா இங்கே இவ்வளவு காமெடி ஓடுதா என்னைய வச்சி ..நடக்கட்டும் ..சந்தோஷமா இருந்தா சரிதான் :-))

    ///ஆமாம்.. அங்க‌ பேஸ்புக்கில‌ ரொம்ப‌ நேர‌ம் இருப்பார் போல.. எல்லா ப‌ட‌த்திலும் அவ‌ரை ஒட்டி வ‌ச்சிருக்காங்க‌ //


    ஆமாமா மோஸ்ட் வாண்டட் கிரிமினல் லிஸ்டில நாந்தான் முதல் பேர் ஹா..ஹா..

    //ஆமாப்பா! திரும்பின பக்கமெல்லாம் ஜெய் ஜெய்ன்னு ரசிகைகள் கூச்சல் போடுறாங்க. //

    வான்ஸ் நீங்கதான் அந்த ஏரியா பக்கமே வரமாட்டேங்கிறீங்க ..வாங்க அப்போ சொல்றேன் :-))

    //வான்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ///இம்ஸ் மாதிரி அனுபவப்பட்ட ஆட்களிடம் /// :))).

    மாமீ இப்போ .... சுற்றிகிட்டு இருப்பாங்க., இந்தாங்க டிஸ்யூ....
    ////இமாவைக் கண்டேன்... வதன புத்தகத்தில் :)))))
    // ஐ.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு, பிடிக்காம விட்டிட்டீங்களே இல்ஸ்ஸ்ஸ்.//

    எங்கே பிடிக்கிரது அவங்களே ஒரு ஆட்டை பின் தொடர்ந்துகிட்டு இருக்காங்க (படத்துல ) :-) ஆனா புல் இது வேர ஃபுல் , சேஃப்டியா லாக் பண்ணி வச்சி இருக்காங்க அவங்க வால் (wall)ல (பூஸுக்குதான் வாலிருக்கும் இவங்களுக்குமான்னு கேக்கப்பிடாது ) நாம ஒன்னுமே போட முடியாது :-(

    ReplyDelete
  38. இனி பிளாகுகளுக்கு தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன் :-))))))))))))0

    ReplyDelete
  39. /// பார்த்தீங்களா மஹி, நீங்களாவது கொடுத்தீங்களே மிக்க நன்றி. ஆனாலும் பூஸார் தான் கண்ணகி மாதிரியாம், தம்பி வந்து ஹை ஃபை சொல்லும்வரைக்கும் கையைக் கீழ விடமாட்டாராம்:)... சகோதரபாசம்:)//
    ம். தம்பி இன்னும் வரேல்லையா? ;(((

    //இமாவைக் கண்டேன்... வதன புத்தகத்தில்// என்னது!!!! :))))) நான் இல்லாத நேரம் எல்லாரும் என்னை வச்சு ஓட்டி இருக்கிறீங்கள் போல. சரி, சரி, நல்லா இருங்கோ. ஆனால்... நேரில பார்த்த ஆட்கள் சத்தமில்லாமல் இங்க இருக்கினம் தெரியுமா! ;) நாங்கள் சந்திக்கேக்க 'ரீ' பற்றியும் டிஸ்கஸ் பண்ணினனாங்கள். ;))

    // ஐ.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு, பிடிக்காம விட்டிட்டீங்களே இல்ஸ்ஸ்ஸ்.// ;))

    //முகத்திற்கு பெயின்டோ// சனிக்கிழமை பின்னேரம் 3 மணிக்கு வந்தீங்கள் எண்டால் போட்டு விடுவன், ஒரு பாட்டி (இது வேற) இருக்குது. ;)

    ///இம்ஸ் மாதிரி அனுபவப்பட்ட ஆட்களிடம் /// !!!!!!!!!!!!! :(((( கர்ர்ர்ர்

    //மாமீ இப்போ .... சுற்றிகிட்டு இருப்பாங்க., // ம். அப்டேட்டா? ;)

    //அவங்களே ஒரு ஆட்டை... // ;)))))

    //சேஃப்டியா லாக் பண்ணி வச்சி இருக்காங்க அவங்க வால்ல நாம ஒண்ணுமே போட முடியாது :-( //
    மன்னிக்க வேணும் எல்லாரும். எல்லாம் ஒரு சேஃப்டி காரணமாகத்தான். பொறுங்க, கொஞ்ச நாள்ல வேற வீடு வாங்கித் திறந்தே வைக்கிறன்.

    ReplyDelete
  40. ஜெய்லானி said... 38
    இனி பிளாகுகளுக்கு தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன் :-))))))))))))0

    /// மிக நல்ல முடிவு ஜெய்... அடாது மழை பெய்தாலும் விடாது தொடரட்டும் உங்கள் பாட்டு.. சே..சே... புளொக் பயணம்.... தொடர்ந்து வாங்க, ஆனா நான் தான் கொஞ்ச நாட்கள் பிசியாகிடுவேன்:(.

    ReplyDelete
  41. ஆ.... இமா வந்திட்டாஆஆஆஆ? என்ன இமா இப்பூடி குண்டாயிட்டீங்க... இதுக்குத்தான் சொன்னேன் நானா கடையில கொத்துரொட்டி சாப்பிடாதீங்க ஆனா எனக்கு மட்டும் ஒரு பார்ஷல் என:)(நான் ரொம்பாஆஆ இழைச்சிட்டேன்:)).

    இமா said... 40
    ///
    ம். தம்பி இன்னும் வரேல்லையா? ;((( /// நித்திரைக் கண்ணில படிச்சிட்டு தம்பியைத் தப்பா நினைக்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அக்கா கூப்பிட்டு எப்பத்தான் தம்பி வராமல் இருந்திருக்கிறார்.... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்... இல்ல, சொறி, வாணாம்.. இது ஆ.க தானா காய்ஞ்சிடும்.

    //ஆனால்... நேரில பார்த்த ஆட்கள் சத்தமில்லாமல் இங்க இருக்கினம் தெரியுமா! ;) நாங்கள் சந்திக்கேக்க 'ரீ' பற்றியும் டிஸ்கஸ் பண்ணினனாங்கள். ;)) ///

    எனக்குப் புகையேல்லை, அது குளிர் அதிகமெண்டதால ஐஸ் ஆவியாகுது அதுதான் புகைக்குது:).

    நாங்களும் டிஷ்கஸ் பண்ணினனாங்கள், ஆரைச் சந்தித்தீங்கள் ஆரைச் சந்தித்திருக்க மாட்டீங்கள் எண்டெல்லாம்...:))).

    ஏன் பூஸ் பற்றி டிஷ்கஸ் பண்ணேல்லையோ?:))).

    ஆ... திரும்பவும் “பாட்டி” ஆ? வடை சுடவோ? மீ எஸ்ஸ்ஸ்ஸ். எனக்குத்தான் ஆனந்தபவான் இருக்கே...:).

    வரவுக்கு நன்றி இமா. நீங்க வந்தவேளை நான் கொஞ்சம் பிசியாகிறேன்... ஒரு 2 கிழமைக்கு:((((. முடியும்போது வருவேன்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.