நல்வரவு_()_


Monday 6 February 2012

எம் கண்ணீர் அஞ்சலிகள் மாயா!!!

கடந்த 31 ஜனவரி அன்று எம்மை விட்டுப் பிரிந்திட்ட மாயாவுக்காக , கண்ணீர் அஞ்சலியும் அவரின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகளும்...

முற்றத்தில் நிற்கும் முருக்க மரம் சாயாமல், வேலியில் நின்ற வேப்பமரம் சாய்ந்ததென்ன மாயா??????.. இளவயதில்.. இப்படி ஒரு எழுத்தோ உங்களுக்கு? 

மறக்க முடியவில்லை மாயா, எதனையுமே மறக்க முடியவில்லை, நீங்க வலைப்பூ ஆரம்பித்து பல மாதங்கள் ஆனாலும் என்பக்கம் வந்து கதைக்கத் தொடங்கியது சில மாதங்களே.. ஆனா அந்த சில மாதங்களுக்குள் நீங்க கதைத்தது என்னவோ பலவருடம் பழகியவர்போலவே..

சொல்வார்களே..  “அணையப்போகிற விளக்கு சுடர்விட்டு எரியும்” என, அப்படித்தான் இப்போ நினைக்க வைக்கிறது மாயா... நாம் எல்லோரும் சேர்ந்து உங்களோடு போட்டிபோட்டுப் பின்னூட்டம் போட்டதை மறக்க முடியாமல் இருக்கு மாயா...

நகைச்சுவையாகவும், எதுக்கும் கோபிக்காமலும் பதில் போடும் திறமை எல்லோருக்குமே வராது, அது மாயாவிடம் நிறைய இருந்தது.

எங்கட மகனின் ஸ்கூலில் ஒரு சுட்டியான குட்டிப்பிள்ளை படிக்கிறா.. அவவுக்கு “மாயா” எனப் பெயர்.... அவவைப் பார்க்கும்போதெல்லாம் மாயாவின் நினைவே எப்பவும் வரும், இப்போ கூடவே கவலையும் வருகிறது..

======================================================
என்னதான் கவலைகளை மனதில் புதைத்தாலும், இன்னொருவரிடம் சொல்லி அழும்போதுதான், 
அதன் பாரம் குறைகிறது... இது உண்மை
=======================================================

மாயாவுக்காக நான், நகைச்சுவைக்காகப் போட்ட பாடலும் தலைப்பும்.. அதில் மாயாவின் பின்னூட்டங்களும்..

  “மாயாவும் லேடி முதலையும்”


மாயா, மூவரின் தூக்குத் தண்டனையைக் காப்பாற்ற கண்டிப்பாகப் படியுங்கள்.. எனும் தலைப்புப் போட்டு அனைவரையும் அழைத்தார், இன்று மாயாவை எம்மால் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே......

==============================================================

இவை மாயா என் பக்கத்தில் போட்ட, பல பின்னூட்டங்களில் சில(படங்களோடு), அப்போது சிரித்துச் சிரித்து ரசித்தோம், ஆனா இப்போ படிக்க அழுகைதான் வருகிறது...

     மாய உலகம் said...
    

என்பக்கம் விசித்திரம் நிறைந்த பல பல்புக்களை வாங்கியிருக்கிறது... புதுமையான பல நண்பர்களை கண்டிருக்கிறது... இந்த வலைத்தளம் ஒன்றும் விசித்திரமானவை அல்ல.. வழக்காட வந்திருக்கும் நானும் புதுமையானவன் அல்ல... பதிவுலகிலே சர்வ சாதாரணமாக நுழைந்த பதிவர்களில் நானும் ஒருவன்.. கமேண்டுகளை போட்டுக்குவித்தேன்..

பழைய பதிவர்களின் கமேண்ட்ஸ்களை மிந்தி... டாப் கமேண்டடேர்ஸில் முன்னிலையில் வந்தேன்.. உடான்ஸ் மியாவை மிரள வைத்தேன்.. குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்... ஆனால் நீங்கள் எதிர்பார்க்கபோகிறீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கபோகிறேன் என்று .. இல்லை .. நிச்சயமாக இல்லை... ஜிம்மி வேடம் போட்டேன்.. ஏன்? பதிவர்கள் கமேண்டே போட கூடாது என்பதற்காகவா.. இல்லை... 2009லிருந்தே பதிவு எழுதும் மியாவ்.. இன்னும் 100 பதிவுகள் எழுதி முடிக்கவில்லையே... அவர் சீக்கிரம் நிறைய பதிவுகளையும், பதிவுலகம் நண்பர்களையும் பெற வேண்டும் என்பதற்காக, காரசாரமாக எங்கும் பதிவுகள் நிறைந்த பதிவுலகில் எல்லாரும் இயல்பாக வீட்டிற்கு வந்து சந்தோசமாக பேசி ஜாலியாக ரிலாக்ஸ் செய்வதறகாக மியாவ் போடும் பூஸ்ஸ்ஸ்ஸ் பதிவுகளைப் பார்த்து சந்தோசப்படுவதற்காக..

 உனக்கேன் இவ்வளவு அக்கரை.. பதிவுலகில் யாருக்குமே இல்லாத அக்கரை என்று நீங்கள் கேட்பீர்கள்.. நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன்.. எனது சுயநலத்திலே பொது நலத்திலும் கலந்திருக்கிறது.. ஆம்... 60,80 கமேண்ட்ஸ்க்கு மேல் தாண்டாத எனது மாய உலகில் 100 க்கு மேல் தாண்ட வைத்த பூஸ்ஸார் என்பக்கத்திலும் கமேண்ட்ஸ்களை குவித்து.. அனைவரையும் ரிலாக்ஸ் பண்ண வேண்டும் என்ற காரணத்திற்காக.. நான் கூவம் நதியில் நீந்தி பார்த்ததில்லை.. ஆனால் தேம்ஸ் நதியில் குதித்து ரெஸ்ட் எடுத்திருக்கிறேன்....

கேளுங்கள் என் ஸ்டோரியை தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்...அவ்வ்வ்வ்.... என் பேரோ மாயா.. மாயா ஜால பெயர்... நான் மட்டும் நினைத்திருந்தால் இந்நேரம் பலபதிவுகளில் பல கமேண்ட்ஸ்களை போட்டு பலபேரிடம் டப்பா என்ற பெயரை வாங்கி குவித்திருக்கலாம்..செய்யவில்லை.. அதைத்தான் விரும்புகிறதா இந்த நீதிமன்றம்... மொக்கை பதிவர் என்ற பெயரால் ஓடினேன்.... ஆறுதலுக்காக சமூக விழிப்புணர்வு பதிவர் என்ற பெயரால் ஓடினேன்... காமெடி பதிவர் என்ற பெயரோடு ஓடினேன்.. லண்டனின் எல்லை வரை ஓடினேன்..அங்கு தேம்ஸ் நதி இருந்ததால் குதித்துவிட்டேன்ன்ன்ன்ன் தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

-----------------------------


  மாய உலகம் said...


என்றா கணக்குபுள்ள சொம்பு எங்கடா... ''அதான் காலையிலே முடிஞ்சுதே ஐயா'' அட.. வெத்தலை போட்ருக்கேன் புலிச்சுன்னு துப்பிட்டு.. தீர்ப்ப சொல்லவேணாமாக்கும்...
"நாட்டாமை தீர்ப்பா மாத்தி சொல்லு.." 

என்றாவன் இன்னும் தீர்ப்பே சொல்லுல.. அதுக்குள்ள முந்துறது... புடிச்சாலும் புளியங்கொம்பா புடிக்கனும்னு சொல்லுவாங்க... "யாருங்க?"... யார்றாவான் இடையிடையே கிராஸ் கொஷ்டின் கேட்டுக்கிட்டு.. அது சொன்னது அது அது...ம்ம்ம் பாரதியார்.. "என்னது?" இவன் வேற கொழப்பிக்கிட்டு... அது அது..பாரதியாரா... பாரதிராஜாவா... ம்ம்ம் சரி.. அதனால புளியமர நாயகன் ... டைரி எழுதுவதை சிறிது நேரம் நிறுத்திவைத்துவிட்டு.. தேள், பூரான், பாம்பு, நண்டு வாக்குலி எல்லாத்தையும் மொத்தமாக காண்ட்ராக்ட் கொடுத்துவிட்டு... என் பக்கத்தை நோக்கி வருமாறு அன்பு அண்ணன் அவர்களை அன்போடு அழைக்கிறோம்....

 பதிவுலக நாயகன் நாற்று நிரூபன் அவர்களையும் மற்றும் நண்பர் சிவா அவர்கள், ... டீச்சர் அவர்கள்... சமையல் மற்றும் கிராஃப்ட் செய்துகொண்டிருக்கும் மதிப்புமிக்க ஏஞ்சலின் ,மகி , ஸாதிகா அவர்கள்..ஜலீலா அக்கா அவர்கள் அனைவரையும் என்பக்கம் அன்போடு அழைக்கிறது... அனைவரும் வாரீர் வாரீர் வாரீர்... பூஸாரின் கண்ணீரால் தேம்ஸ் நதி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதாலும்... முதலையை கொண்ணுபோட்டதாலும்.. மாயாவை சுவேத நதிக்கு ஒத்திவைக்கிறேன்... இது தாண்டா தீர்ப்பு .. "என்னது நாட்டாமை தெலுங்கு பட டைட்டிலா.." யார்ராவன் இடைஇடையே பல்ப குடுக்குறது.. சண்முகம் உடுரா போட்டும் வண்டிய... டேன் டேண்டேன் டேண்டேன்... ஆஆஆஆஆஆஆ நாட்டாமை பாதம் பட்டா தேம்ஸ் நதி குளிருமுங்...
------------------------------------------------------------

 மாய உலகம் said...


அப்பாடா ஜெய்யண்ணே... தவத்தை கலைக்க ரொம்ப பாடுபட்டுட்டேன்ன்ன்ன்ன்ன்.... யாராவது புளியமரத்துக்கு ஒரு ஏணிய சாத்துங்களேன்.... அண்ணேன் வந்து விட்டார்... தாரை தப்பட்டையள்ளாம் கிளியட்டும்... அடி தூள் கிளப்புங்கள்.... பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா.. மத்தாப்பு சேலைக்கட்டி ஆடட்டுமா....

ஜெய்யண்ணேன் அப்படி பாக்குறாரூஊஊஊஊ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

--------------------------------------------------------------

 மாய உலகம் said...


நண்பர்களுடைய அன்பை பார்க்கும்போது ஆனந்த கண்ணீர் வருது... அவ்வ்வ்வ்வ்வ் (இது அன்பு அவ்வ்வ்வ்).
-----------------------------------------------------------------------

இந்தப் பின்னூட்டம் படிக்கமுடியாமல் கண்ணீர் மறைக்கிறது கண்களை..
மாய உலகம் said...
athira said... 98
மாயாஆஆஆ.... 2012 டிஷம்பர் 23 எல்லோருக்கும் நல்லகாலம் பிறக்குதாம், இதை என் நண்பி ஒருவரிடம் சொன்னேன், அவ சொன்னா, இல்ல இல்ல 12.12.12 தானே உலகம் அழியப்போகுதெனக் கதைக்கிறாங்க என்று அவ்வ்வ்வ்வ்வ்:))))).//

என்ன....12.12.12 க்கு உலகம் அழிய போகுதா... நான் இன்னும்ம்ம்ம் உலகத்தையே சுத்தி பாக்கல.. முதலை ரெக்கைய கட்டு உலகம் அழியறதுக்கு முன்னால ஒரு ரவுண்டு பறந்துட்டு வந்துருவோம் ரெக்கை கட்டி பறக்கதடா.. தேம்ஸ்நதி முதலைஸ்ஸ்ஸ்... 12.12.12 உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்டும் நண்பர்களுக்காக காத்திருக்கும்.. அதிலெல்லாம் அல்லாரும் சுத்தி பாக்கலாம்.. அந்த உலகம் தான் மாய உலகம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

******************************************************************************
மாயாவின் ஆத்ம சாந்திக்காகவும் அவரின் அம்மா, சகோதரர் ரமேஸ் மற்றும் குடும்பத்தோரின் மன அமைதிக்காகவும் நாம் எல்லோரும் கடவுளைப் பிரார்த்திக்கிறோம்.


எப்படிக் கூச்சல் போட்டாலும், போன மாயாவை திரும்ப அழைத்துவர முடியாது, ஆனா தனிப் பிரார்த்தனையைவிட, கூட்டுப் பிரார்த்தனைக்குப் பவர் அதிகம் என்பார்கள், எனவே எம் எல்லோரினதும் பிரார்த்தனையின்மூலம், அவரின் குடும்பத்துக்கு, மன அமைதியையும், எதையும் தாங்கும் மனப் பக்குவத்தையும் ஆண்டவன் கொடுத்து அருள் புரியட்டும்.
******************************************************************************

இறப்பின் பின்பு நடப்பதை, ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொரு விதமாகச் சொல்கின்றன, ஆனா எது எப்படியாயினும்...
கவிஞர் கண்ணதாசனின் வரிகளே நினைவுக்கு வருகின்றன...
“இறப்பின் பின் வருவது யாதெனக் கேட்டேன், இறந்து பாரென இறைவன் பணித்தான்”
******************************************************************************

 “மனித வாழ்வில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவெனில், அன்பு நிறைந்தவர்களை, எங்கே, எப்போ, எதுக்காகச் சந்திக்கப்போகிறோம் என்பதும், எங்கே, எப்போ, எதுக்காகப் பிரியப்போகிறோம் என்பதும், முன்கூட்டியே தெரியாமல் இருப்பதுதான்” .....கண்ண..தாசன்.

******************************************************************************
பெப்ரவரி மாதம் 7ம் திகதி(நாளை), மாயாவுக்காக பதிவுலக உறவுகள் அனைவரும் துக்கம் அனுஸ்டிப்போம்... விரும்பினால், எமக்குள்ளிருக்கும் மாயாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு, அஞ்சலி செலுத்துவோம்..
மேலதிக விபரங்களுக்கு... 
நிரூபனின் தளம்-----> வாருங்கள்
******************************************************************************

26 comments :

 1. அதிரா
  மாயாவுடன் எனக்கு பழக்கமில்லாவிட்டாலும் உங்கள் வலைப்பூவின் மூலம் அறிந்து கொண்ட எனக்கும் அவரின் மறைவு மிகுந்த துயரத்தை தருகிறது. போட்டோவில் பார்க்கும் போது இவ்வளவு இளமையானவரா? கடவுளே! வாழ்க்கையில் அனுபவிக்க சாதிக்க இன்னும் எவ்வளவு இருக்கே அதற்குள் கொடுங்காலனுக்கு அப்படி என்ன அவசரமோ என வலிஅதிகமாகிறது.

  மாயாவின் ஆத்மசாந்திக்காகவும், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைத்திடவும் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனையில் நானும் உங்கள் அனைவருடனும் சேர்ந்துகொள்கிறேன்.

  ReplyDelete
 2. “இறப்பின் பின் வருவது யாதெனக் கேட்டேன், இறந்து பாரென இறைவன் பணித்தான்”

  ஆமா அதிரா எனக்கும் இந்த வரிகள்தான் நினைவில் வந்தது. 7-02-2012- எல்லாருமே கூட்டுப்பிரார்த்தனைசெய்வோம்.

  ReplyDelete
 3. இளமதி,

  http://gokisha.blogspot.com/2011/11/blog-post_15.html

  மேலுள்ள தலைப்பிலேதான், நான் நீல ரீஷேட்டும், சன் கிளாஸசும் போட்டு போனார் என ஒரு கதை எழுதினேன்...

  அதுக்காகத்தான், உடனே மேலே போட்டிருக்கும் படத்தை எடுத்துவந்து, மாயா, அதில் பின்னூட்டத்தினூடாகப் போட்டவர். அநேகமாக இங்கு வந்த எல்லொரும் இப்படத்தை ஏற்கனவே பார்த்திருப்பார்கள், நான் ஏதோ என் நண்பர்கள் எனும் அல்பத்தில் அப்படத்தைக் கொப்பி பண்ணி வச்சிருந்தேன்...

  இப்போ பார்க்கிறேன், அதனை மாயா அழித்துவிட்டார் போலும்.

  ஆனா கொப்பி பண்ணி வைத்தது, இப்படித்தான் பயன்படப்போகுதென அப்போ யாருக்குத் தெரியும்.

  மாயா பிறந்தது 80 ஆம் ஆண்டாம் இளமதி.. பெப்ரவரி 27.

  ReplyDelete
 4. லக்ஸ்மி அக்கா, நான் மனதில் நினைத்தேன்... வலைப்பூவில் நாமெல்லாம் வருந்துவது, மாயாவுக்குத் தெரியுமோ என... உடனே மனதில் அந்த வாக்கியம்தான் எனக்கு நினைவு வந்துது.

  ReplyDelete
 5. //உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்டும் நண்பர்களுக்காக காத்திருக்கும்.. அதிலெல்லாம் அல்லாரும் சுத்தி பாக்கலாம்.. அந்த உலகம் தான் மாய உலகம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

  :((((((((((((( .....

  அதிரா.பதிவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மாயாவின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 6. மாயாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்

  ReplyDelete
 7. செய்தி கேள்விபட்டு மிக வருந்தினேன் தோழி...பின்னூட்டத்தின் மூலம் பலருக்கும் தெரிந்தவர் அதிலும் அவரது பதிவுகள் ஒரு தனித்தன்மையாக இருக்கும்.

  சிறுவயதில் அவரது இழப்பு அவரது குடும்பத்தை எத்தனை துயரத்தில் ஆழ்த்தி இருக்கும் நினைக்கவே வேதனையாக இருக்கிறது.

  அனைவரும் பிரார்த்தனையில் கலந்து கொள்வோம். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 8. ஆசியா, ராஜ்... நாம் மாயாவுக்காகப் பிரார்த்திப்போம், அதைவிட வேறு என்னதான் செய்ய முடியும் எம்மால்.

  கெளசல்யா...
  மாயா வலையுலகில் வந்த கொஞ்சக் காலத்திலேயே.. பலருக்கும் தெரிந்தவராகிட்டார்.... ஓடி ஓடி எல்லோருக்கும் பின்னூட்டங்கள் போட்டவர்.. ஏதோ அதிக பின்னூட்டவரிசையில் முதலாவதாகவும் வந்திருந்தார்... மேலே அவரின் பின்னூட்டத்திலும் அதைச் சொல்லியுள்ளார்....

  எல்லாம் கண் மூடித்திறப்பதுக்குள் முடிந்துவிட்டது.

  ReplyDelete
 9. அதிரா மாயா உங்க பக்கத்தில் போட்ட நெறைய கம்மெண்ட இப்போதான் படிச்சேன். எல்லாரையும் சிரிக்க வைத்த மாயா இனிமே வந்திட்டேன்ன்ன் அப்படின்னு வர மாட்டாருன்னு நெனச்சா துக்கமா இருக்கு.


  நானும் உங்களை போல என் சமையலில் அவர் வந்து போட்ட பின்னூட்டங்கள் சிலவற்றை தொகுத்து போட்டுள்ளேன். நாளை எல்லோரும் மாயாவின் ஆத்மா சாந்திக்கு பிரார்த்தனை பண்ணுவோம்

  ReplyDelete
 10. //12.12.12 இல் உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்டும் நண்பர்களுக்காக காத்திருக்கும்.. அதிலெல்லாம் அல்லாரும் சுத்தி பாக்கலாம்.. அந்த உலகம் தான் மாய உலகம்.. //

  தீர்க்கமான வரிகள், நிறையவே யோசிக்க வைத்தாலும் மனதின் ஓரமாய் கலங்கடிக்கிறது. என் பிரார்த்தனைகளும் கூடவே!!

  ReplyDelete
 11. உண்மைதான் கிரிஜா...மாயாவைக் காணவில்லையே எனத் தேடினால்...

  தோ... வந்திட்டேன் எனப் பின்னூட்டம் வரும்..:(.

  மாயாபற்றி அஞ்சுவுக்குத் தெரியுமோ தெரியாது, அறிந்தால் அவவும் மிகவும் மனம் வருந்துவா.

  ReplyDelete
 12. அப்துல் காதர்...

  என் பக்கத்திலே மாயாவின் பின்னூட்டங்கள் பல நகைச்சுவையோடு இருக்கு.. எதைப் போடுவதெனத் தெரியாமல்.. சிலதை எடுத்துப் போட்டிருக்கிறேன்..

  உண்மையிலேயே அனைவரையும் கலங்கடித்துவிட்டு மாயமாகிவிட்டார் மாயா... அனைவரும் பிரார்த்திப்போம்...

  ReplyDelete
 13. ஜெய்... எனக்கிந்த பச்சைப்பூவைப் பார்த்தாலே, எதுவும் எழுத வருகுதில்லை கண் எல்லாம் முட்டி விடுகிறது.. நாமெல்லாம் ஒன்றாக மாயாவோடு கும்மியடித்ததுதான் கண்முன்னே தெரியுது...:(..

  அது ஏனோ தெரியவில்லை, நேரில் கதைக்கவில்லை, சந்திக்கவில்லை, ஆனாலும் மாயாவின் இழப்பை மனம் ஏற்குதேயில்லை...

  இப்படியான இழப்புக்களின்போது, நான் மனதைத்தேற்றுவது... நாமெல்லாம் என்ன இருக்கவா போகிறோம்.. நாமும் ஒருநாள் போகத்தானே போகிறோம் என நினைத்தே...

  ReplyDelete
 14. மனம் கனக்கிறது
  என்னால் எழுத கூட முடியவில்லை
  அவரின் குடும்பத்தினர் மனம் அமைதியாக
  அவரின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டுகிறேன்

  ReplyDelete
 15. மாயவின் மறைவுக்கும் அவரது குடும்பத்திற்கும் என் வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இன்று (7-2-12)நடக்கும் பௌர்ணமி தியானத்தை மாயவுக்காக சமர்ப்பிக்கிறேன்.

  ReplyDelete
 16. வணக்கம் அதிரா அக்கா,
  மின்னஞ்சலுக்கு மாயா நினைவாக ஓர் ஒலிக் கவிதை அனுப்புகிறேன்.

  ReplyDelete
 17. சிவா... எம்மோடு கூட இருந்த மாயாவுக்காகப் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 18. ஹைஸ் அண்ணன்...

  உங்களை இங்கு பார்த்ததும் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது...

  உங்களின் அனுவசரிக்காக வாழ்த்துப் போட்டபோது, மாயாவுக்கு உங்களை யாரெனவே தெரியாது, அப்படியிருந்தும் ஏதோ நீண்டகாலம் பழகிய ஒருவரைப்போல வாழ்த்தியிருந்தார் உங்களை.

  நீங்களும் தேடி வந்து அஞ்சலி செலுத்துறீங்க.... இப்படி எல்லோரும் மாயாவுக்காக அஞ்சலி செலுத்தும்போது, என் மனம் எண்ணுகிறது.... கடவுளே இதை எல்லாம் பார்க்க மாயா இல்லையே என.

  ReplyDelete
 19. நிரூபன், உங்களின் குரலில் மாயாவுக்காக அஞ்சலிக்கவிதை கேட்டேன், மனம் நிறையவே கனக்க வைக்கிறது கவிதை.

  ஏன் நிரூபன், அதை உங்களின் வலைப்பூவில் இன்று வெளியிடலாமே..

  ReplyDelete
 20. மாயா செய்து தந்த பூஸார்..


  ......(\_/)
  ......( '_')
  ..../""""""""""""\======░ ▒▓▓█D
  /"""""""""""""""""""\
  \_@_@_@_@_@_/


  நகைச்சுவையாக எழுதியது, இன்று மாயா நிஜமாக முந்திக்கொண்டார்:(...

  http://gokisha.blogspot.com/2011/08/24-20.html#

  ReplyDelete
 21. இரவல் தந்தவன் கேட்கின்றான் -அதை
  இல்லை என்றால் அவன் விடுவானா ..!!
  http://www.youtube.com/watch?v=Pkywv_mRuTI

  ReplyDelete
 22. என்ன சொல்வதென்று தெரியவில்லை அதிரா..ராஜேஷின் ஆத்மா சாந்தியடையவும் அவரது குடும்பத்தினரின் மனதிற்கு இழப்பைத்தாங்கும் வலிமையைத் தரவும் ஆண்டவனைப் ப்ரார்த்திப்போம்.

  சில நிஜங்கள்/நிகழ்வுகள் ஜீரணிக்க முடியாதவைதான். :-|

  ReplyDelete
 23. ஜெய், மகி..

  ஜெய்.. இந்தப் பாடல் எப்போ என் காதுகளில் கேட்டாலும், நகராமல் அதை முழுவதும் கேட்பேன், ஒவ்வொன்றும் உண்மையான தத்துவ வரிகள்.. ஆனால் பாடல் கேட்கும்போதெல்லாம் நெஞ்சில் என்னவோ செய்யும்.

  என் கணவர் சில விஷயங்களுக்கு எப்பவும் சொல்வார், முடிந்த காலத்தையோ அல்லது முடிந்துபோன பிரச்சனையான விஷயத்தையோ மீண்டும் பேசக்கூடாது, இனிமேல் நடக்கப்போவதை நினைக்க வேண்டும் என...
  அதனால நானும் அப்படியே பழகிட்டேன்.. முடிந்த பிரச்சனையை மீண்டும் கிளற மாட்டேன்.. அதாவது சிலர், 5 வருடத்துக்கு முன், ஒருவர் விட்டசிறுதவறைக்கூட.. அடிக்கடி குத்திக் காட்டிக்கொண்டிருப்பார்கள் குடும்பத்துள்..

  அப்படியானவற்றை மீண்டும் நினைக்கக்கூடாதுதான், ஆனா இப்படி இழப்புக்களை சட்டென மறக்க முடியாமலிருக்கு... நாளாக ஆக எல்லாம் பழைய நிலைக்கு மாறிவிடும்... மாறத்தானே வேண்டும்..

  மனிதராகப் பிறந்தாலே.. அழுகிறோம், துடிக்கிறோம்.. பின்பு நாளடைவில், அதனை ஒரு பக்கம் வைத்துவிட்டு சகஜநிலைக்குத் திரும்பிவிடுகிறோம்... இதுதான் மனிதனிடம் மட்டுமுள்ள சாபக்கேடு.

  ஒரு குருவானவரின் சொற்பொழிவில் எங்கோ படித்தேன்... அதில் சொல்லப்பட்டிருந்துது...

  ஒரு பிரச்சனை என வரும்போது, அழுகிறோம், துடிக்கிறோம், சோர்ந்து போகிறோம்... பின்பு சில காலம் போனபின்... அதை எல்லாம் மறந்து சிரித்துப் பேசி மகிழ்கிறோம்... அப்போ எதுக்காக அன்று அழுதோம்? இன்று இருப்பதுபோல அன்றும் இருந்திருக்கக்கூடாதா? எனக் கேள்வி இருந்தது...

  நினைக்கையில் சரிதான்... ஆனால் அந்தளவுக்கு நாம் ஒன்றும் இன்னும் முழுமையான ஞானிகளாகிவிடவில்லையே மனதைக் கல்லாக்க....

  ReplyDelete
 24. அதிரா உங்களுக்கு விருது கொடுத்திருக்கேன் என்பக்கம் வந்து பாருங்க.

  ReplyDelete
 25. அவரது ஆத்மா சாந்தியடையவும் அவரது குடும்பத்தினரின் மனதிற்கு இழப்பைத்தாங்கும் வலிமையைத் தரவும் ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.