நல்வரவு_()_


Wednesday 30 January 2013

1ம் ஆண்டு நினைவஞ்சலிகள் மாயா!!!

மாயா மறைந்து ஒருவருடம் பூர்த்தியாகின்றது 31.01.2012.  ... வலையுலகில் பழகிய யாருமே மறந்திருக்க மாட்டார்கள்.. 


மாயாவின் ஆத்மா சாந்தியடைய நாம் எல்லோரும் பிரார்த்திக்கிறோம்ம்.. பிரார்த்திப்போம்ம்...

விதி வரைந்த பாதை வழியே வாழ்கை ஓடுது.... 
நாம் எல்லோரும் பிரயாணிகளே... 
எமக்குரிய ஸ்டேஷன் வரும்போது இறங்க வேண்டியதுதான்!!
=================================================
====================================================

43 comments :

 1. மாயா... பெயரைப்போலவே மாயமாகிவிட்டாரே...:(

  அதுவும் 1 வருடமாகிறதென்பது நம்பமுடியவில்லை...

  மாயாவின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்...

  ReplyDelete
 2. :(..Someone as special as Rajesh will never be forgotten. He will remain in our hearts forever.

  ReplyDelete
 3. நானும் இன்று நினைத்தேன்,உங்கள் பக்கம் வந்தேன் இங்கே அவரைப் பற்றிய பகிர்வு.கொஞ்சம் காலம் பழகினாலும் நினைவில் நிற்கும் நபர்..
  :((((((...

  ReplyDelete
 4. வருந்தத்தக்க நிகழ்வு..பழகிய உறவுகள் மறைந்தாலும் நினைவுகள் நீங்காது...
  அவரை எனக்கு தெரியாது, இருந்தும் ஆழ்ந்த அனுதாபகங்கள்..

  ReplyDelete
 5. மாயாவின் ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள். கொஞ்சகாலம்
  என்றாலும் இங்கு வந்து கலகலப் பாக்கியவர். மறக்கமுடியாத ஒருவர்.

  ReplyDelete
 6. மாயாவின் ஆத்மா சாந்தியடைய நாம் எல்லோரும் பிரார்த்திக்கிறோம்ம்.. பிரார்த்திப்போம்ம்...

  ReplyDelete
 7. நேற்று மாயா எமது தளங்களில் கமண்ட் போட்டது போல இருக்கு ஆனால் அவர் மறைந்து ஒரு வருடம் ஒடி மறைந்துவிட்டது.நம் பதிவர்களின் மனதைவிட்டு என்றும் நீங்கமாட்டார் மாயா எம் மனங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

  ReplyDelete
 8. Rajesh brought us so much joy and he was a youngone with lots of dreams...

  We miss him dearly...RIP

  ReplyDelete
 9. பழகிய யாருக்குமே மாயாவையும் மாயாவின் நகைச்சுவையையும் மறக்க முடியாது...

  நன்றி.. இளமதி..
  நன்றி அஞ்சு..
  நன்றி ஆசியா...
  நன்றி ஆயிஷா.. முதன்முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு.. மிக்க நன்றி.
  நன்றி அம்முலு..
  நன்றி ராஜேஸ்வரி அக்கா...
  நன்றி ராஜ்..
  நன்றி ரெவெரி...

  ReplyDelete
 10. மாயாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்! அதற்குள் ஒரு வருஷம் ஓடிவிட்டதா?!

  ReplyDelete
 11. நிறைய பகிர்ந்திருக்கிறோம் நாங்கள்.நினைவுகள் நீங்காது.

  ReplyDelete
 12. சிலநாட்கள் முன்பு நினைத்தேன்.. ஒரு வருடம் ஆகி இருக்கும் என்று. ராஜேஷின் ஆன்ம இளைப்பாற்றிக்காக நானும் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 13. நல்ல பதிவர்...

  அவ்வப்போது என் நினைவுகளில் வரும் மாயா நம்மிடம் இல்லாதது வருத்தமான விஷயம்...

  ReplyDelete
 14. மிகவும் வருந்த வைக்கும் செய்தி தான்.

  அவரின் ஆன்மா சாந்தியடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 15. [co="red"]நன்றி மகி, நேற்று நடந்ததுபோல இருக்கு இல்லையா?.
  உண்மைதான் கோகுல் நன்றி.
  நன்றி இமா.
  நன்றி பிரகாஷ்... மாயா வித்தைத்த விதை நல்ல விதையாக இருப்பதால்.. இப்பவும் எம்மோடு வாழ்கிறார் மனங்களில்.
  நன்றி கோபு அண்ணன், உங்களுக்கு மாயாவைத் தெரியாதென நினைக்கிறேன்.
  [/co]

  ReplyDelete
 16. //கோபு அண்ணன், உங்களுக்கு மாயாவைத் தெரியாதென நினைக்கிறேன்.//

  அப்படி இல்லை அதிரா.

  நான் அவரின் பதிவுகள் பக்கம் போனதே இல்லை தான்.

  ஆனாலும் என் பதிவுகளுக்கு பலமுறை அவர் வருகை தந்து கருத்தளித்துள்ளார்.

  மேலும் அவர் ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டு செயல் பட்ட போது என்னை மிகவும் பாராட்டிப்பேசியும் உள்ளார்.

  இதோ அதன் இணைப்பு:

  http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

  “ஊரைச்சொல்லவா!பேரைச்சொல்லவா!!”

  என்ற தலைப்பில் நம் அன்புச்சகோதரி ஏஞ்சலின் நிர்மலா [உங்களின் அஞ்சு] அவர்களுக்காக நான் எழுதிய தொடர்பதிவு இது.

  மாய உலகம் திரு. ராஜேஷ் அவர்கள் மேற்படி வலைச்சரத்தில் கூறியுள்ளது:

  *****
  திருச்சிராப்பள்ளியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?

  மரியாதைக்குரிய நமது அன்பர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது VAI. GOPALAKRISHNAN என்ற வலைப்பூவில்

  ஊரைச்சொல்லவா..பேரைசொல்லவா என்ற பதிவில் திருச்சிராப்பள்ளியைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்..

  வாருங்கள் திருச்சியை சுற்றி வருவோம்.
  *****

  அதிரா, இது உங்கள் தகவலுக்காக மட்டும்.

  ReplyDelete
 17. ஓ இவ்வளவும் நடந்திருக்கோ கோபு அண்ணன்.
  மாயா என்னோடு பழக்கமாகி ஒரு 5 மாதங்கள் மட்டுமே பழகியிருப்பார், ஆனால் மிக அன்பாக நிறைய ஜோக்காக என் பக்கம் ஒருகாலத்தில் மாயாவால் களைகட்டிக்கொண்டிருந்தது... போட்டிபோட்டுப் பின்னூட்டங்கள் போடுவார் அஞ்சுவோடு....

  எல்லாம் திடீரென வந்து மறைந்ததுபோலாகிவிட்டது. மேலே வலது பக்கத்தில் இருக்கும் கறுப்புப் பூஸார் மாயா எனக்காக தந்ததுதான்.. அவரின் பக்கம் பின்னூட்டங்களில் நான் முதலிடத்தில் இருந்தேன் என்பதற்காக பரிசது.

  அப்போ என்னைவிட உங்களுக்குத்தான் மாயாவைத் தெரியும் முன்னமே. தகவலுக்கு நன்றி கோபு அண்ணன்.

  ReplyDelete
 18. எனது தளத்திலும் தவறாமல் பின்னூட்டமிடுவார் ..

  அவரது ஆன்மீகத்தளத்திற்கு அழைப்பும் கொடுத்தார் ..

  தங்கள் தளத்தில் உற்சாகப்பின்னூட்டம் கொடுத்து கலகலப்பூட்டியவர் ..

  இந்த சின்ன வயதில் எதிர்பாராத மரணம் துயரமளிக்கிறது ...

  ReplyDelete
 19. பிரியமுள்ள நண்பர்க்காய் பிறந்திடுவீர்
  பிறிதொரு பிறப்பெடுத்து
  உங்கள் ஆன்மா சாந்திபெறட்டும் ......!

  ReplyDelete
 20. உண்மைதான் ராஜேஸ்வரி அக்கா, ஆன்மீகத் தளம் ஆரம்பித்தார், ஆனா கொஞ்ச நாட்களிலேயே இப்படி ஆச்சு.. அணையப்பொகிற விளக்கு சுடர்விட்டு எரியும் என்பார்கள்... அதுதானோ என்னவோ.. கொஞ்ச காலத்திலேயே வலையுலகில் பலரின் மனங்களிலும் இடம்பிடித்தவர்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 21. மிக்க நன்றி செளமியதேசம்... முதன்முதலாய் வந்திருக்கிறீங்க.. நல்வரவு.

  ReplyDelete
 22. இரவு வணக்கம்,அதிரா!///காலம் பறந்து விடும்.நமக்காகக் காத்திருப்பதில்லை.யுகங்கள் சென்றாலும்,அன்புக்குரியவர்கள் நெஞ்சை விட்டு மறைவதில்லை.சாந்தி,சாந்தி,சாந்தி!!!

  ReplyDelete
 23. மிக்க நன்றி யோகா அண்ணன்.. உண்மைதான்.

  ReplyDelete
 24. அன்னாரின் ஆதமா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. ஏற்கெனவே இதே பின்னூட்டம் போட்டு அதில் நிறைய எழுத்துப் பிழை இருந்ததால் அகற்றிவிட்டு மீண்டும் போடுகிறேன்...

  ஒரு வருடம் கடந்த பின்பும் அவரை நினைவில் வைத்து நீங்கள் போட்ட நினைவுப் பதிவும், அத்தனை பேருடைய பின்னூட்டங்களுமே மாயா அவர்கள் வலையுலகில் பதிந்துவிட்டுச் சென்ற அன்புத் தடங்களைக் காட்டுகின்றன...
  பதிவுப் பகிர்வுக்கு நன்றி அதிரா...

  ReplyDelete
 27. அதிரா, உங்கள் பதிவையும் மற்றவர்களின் பின்னூட்டங்களையும் கண்ட நான் இந்த மாயாவை அறியும் ஆவலில் மாய உலகம் புகுந்தேன். அவர் வலையுலகில் கடைசியாக விட்டுச் சென்ற ”எனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே”:
  இசையும் கதையும்- பதிவைப் படித்த நான், இறுதியில் இப்பதிவுலகை விட்டு செல்வதாக கொடுத்திருந்த அறிவிப்பைப் பார்த்ததும் மனது திகீலென்றது. அதனால் திரும்பவும் அந்தப் பதிவை முதலில் இருந்து படித்த போது என் கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு முந்திய பதிவான ’உங்கள மாதிரி நல்லவங்க யாருமே இல்லைங்க- இசையும் கதையும்’ என்ற பதிவையும் அதே உணர்வுடன் கடந்து சென்றேன். அந்தப் பதிவின் இறுதியில் கூட அவரின் மனநிலையின் சோகத்தை வெளிப்படுத்தியது...
  எல்லாவற்றையும் கடந்து இடையிலே அவர் பதிவு செய்திருந்த “எனக்குள் நான்” Monday- 5 December 2011 என்ற பதிவைக் கிளிக் பண்ணி அவரைப்பற்றிப் படித்துக் கொண்டிருந்த போது இந்த வரிகள் என்னைத் தூக்கி வாரிப் போட்டது..

  ஒரு நிமிசம்:
  ”என் நண்பன் என்னிடம் வாழ்க்கையில சாதனைன்னா என்னான்னு கேட்டார்.... அதற்கு நான் அது, இது என இலட்சியங்களாஇ அடுக்கிக் கொண்டே போனேன்... அதற்கு அவர் சிரித்தவாறு... இறக்கும் பொழுது இரத்த சம்பந்தமே இல்லாத ஒரு 100 பேராவது நமது சாவிற்காக கண்ணீர் விட்டு அழ வேண்டும் அது தான் சாதனை என்று சொன்னார்... மண்டையில் சுரீர் என்றது... அவரது கையை இறுகப் பற்றி கை கொடுத்தேன்.”

  இந்தப் பகுதியைப் படிக்கும் போது மனதின் மூலையில் எங்கோ அதே சுரீர் வலி எனக்கும் ஏற்பட்ட்து.... இந்த சாதனையை உண்மையாக்கி சென்றிருக்கிறாரே இந்தப் பதிவர்... இதற்காகவே தன் வாழ்நாளின் இறுதிப் பகுதியை வாழ்ந்தாரா என்று மனம் அங்கலாய்க்கிறது.... இத்தகைய ஒரு அற்புத பதிவரை நான் இணையத்தில் சந்திக்க முடியாமல் போனது துரதிர்ஸ்டமாகத் தெரிகிறது... நொந்து போன உள்ளங்களை நாம் அவர்களின் படைப்புகளினூடாக அவதானிக்க முடியாமல் போகிறோமா? அவருக்கு என்னாச்சு... எப்படி இது நடந்த்து என பல கேள்விகள் மனதை வாட்டுது....நீங்கள் கடந்த வருடம் அவருக்காக வருந்தி போட்ட பின்னூட்டங்களைப் படித்து நான் இப்போது துக்கம் அனுஸ்டித்தேன்...
  எனினும் அவர் இல்லாத போதும் மாயாவைக் தேடச்செய்த அன்புத் தோழி அதிராவுக்கு மீண்டும் என் நன்றிகள்...

  ReplyDelete
 28. மாயா அண்ணாவின் ஆத்மா எப்பவும் நம்மோளோடு தான் அக்கா இருக்கும் ..

  ReplyDelete
 29. [co="green"]மாயா! என்றுமே பதிவர்களாகிய எம் நெஞ்சை விட்டு அகலாதவர்! அவரின் இழப்பு எதிர்பாராததும், அதிர்ச்சியானதுமாகும்! அன்னாரி ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்!

  கடந்த வருடம் அந்தச் சம்பவம் நடந்த போது, பதிவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஒருநாள் பதிவுகள் போடாமல் அவருக்கு அஞ்சலி செலுத்தியதை நினைத்துப் பார்க்கிறேன்! அன்றைய நாளில் எமது ஃபேஸ்புக் குழுமமான “நாற்றில்” பல அஞ்சலிக் கவிதைகளையும், அஞ்சலிக் குறிப்புக்களையும் இட்டிருந்தோம்! அன்று மாயாவின் இழப்பு எமக்கு பெரும் கவலையாக இருந்தது - இன்றும் அது தொடர்கிறது!

  அவரை நினைவூட்டிப் பதிவிட்டமைக்கு நன்றி அதிரா[/co]

  ReplyDelete
 30. மறக்கவே முடியாதவர்.உப்புமடச்சந்தியில் மாயாவின் நினைவுகள் நிறைய.ஆத்ம சாந்திக்காய் என் பிரார்த்தனையும்.நன்றி அதிரா !

  ReplyDelete
 31. மாயாவின் ஆன்ம அமைதி அடையட்டும்
  முன்பே வந்தேன்
  வார்த்தைகள்
  வர வில்லை
  வருத்ததுடன்
  சென்று விட்டேன்

  ReplyDelete
 32. நன்றி பேபி அதிரா
  நினைவுகளுடன் பகிர்ந்து கொண்டமைக்கு
  மறக்காமல்

  ReplyDelete
 33. மிக்க நன்றி விமலன், முதன் முதல் வருகைபோல இருக்கு, ஏற்கனவே வந்தவர்போலவும் இருக்கு.. எனிவே நல்வரவு.. மிக்க நன்றி.

  ReplyDelete
 34. நன்றி பூங்கோதை, வாங்கோ முதன்முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு.

  2011 வருடத்து என்பக்க, ஜூலை ஓகஸ்ட், செப்டெம்பர்.. ஒக்டோபர் பதிவுகள் படித்தால் தெரியவரும் மாயா கலக்கியிருக்கும் பின்னூட்டங்கள்.. இரவுபகலில்லாமல் போட்டி போட்டுக் கதைப்பதுதான் அப்போ எமக்கு வேலை...

  //இறக்கும் பொழுது இரத்த சம்பந்தமே இல்லாத ஒரு 100 பேராவது நமது சாவிற்காக கண்ணீர் விட்டு அழ வேண்டும் அது தான் சாதனை///

  உண்மைதான் கரெக்ட்டா கண்டு பிடிச்சிருக்கிறீங்க, இந்த வசனத்தைத்தான் நாம் எல்லோரும் பரவலாகப் பேசினோம், மாயாவின் மறைவின்போது:(.

  நன்றி கோதை.

  ReplyDelete
 35. நன்றி கலை.. முடியும்போது வந்து போறீங்க.. அதுக்கும் நன்றி.

  ReplyDelete
 36. நன்றி மணி. நீண்ட இடைவெளிக்கும் பின், மாயாவின் நினைவு நாள் உங்களை இங்கு அழைத்துவர உதவியிருக்கு. உண்மைதான் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கு.. காலம்தான் ஓடிக்கொண்டிருக்கு.

  நன்றி.

  ReplyDelete
 37. நன்றி ஹேமா. காலங்கள் உருண்டோடிக்கொண்டிருக்கு.. நினைவுகள் மட்டும் தேங்கி நிக்குது.

  ReplyDelete
 38. நன்றி சிவா... விரைவில் பில்லா 3 ஐ எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 39. அய்ய்ய்ய்... புதூ டெம்லெட்....
  அட அட அட... கண்ணைப்பறிக்குதே....:)

  சூப்பர்... அழகாக இருக்குது அதிரா...
  கலர், வடிவமைப்பு எல்லாமே அசத்தல்...
  ம். நல்லாயிருக்கு. இதுக்கும் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 40. மிக மிக அழகா இருக்கு உங்க பக்கம். backroundகலர் நல்லாயிருக்கு அதிரா.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 41. [co="dark green"] ஆவ்வ்வ் மியாவும் நன்றி இளமதி.. அம்முலு.. அது ஒபாமா அங்கிள்தான் சொன்னவர்.. தன்னோட பேஷனர் செக்கரடறி ஆக இருக்கிறேனாம்ம்.. அதனால புளொக்கையும் அழகாக்கி ஸ்மாட்டா வச்சிருக்கோணுமாம்ம்.. அதுதான் அவர் சொன்னதும் மாத்திட்டேன்ன்ன்.. இன்னும் கொஞ்ச மாற்றம் இருக்கு... மெது மெதுவா செய்திடலாம்ம்...

  நான் தமிழ் மணத்தில் இணைஞ்சிருக்கிறேன் ஒரு புது ஆசையில:) நீங்களும் இணையுங்கோவன்... என் பக்க ஆட்கள் எல்லோரையும் இணைக்கோணும் அங்கு என ஆசையா இருக்கு:). [/co]

  ReplyDelete
 42. ஆ.ஆ. வந்திட்டு ஓடீட்டீங்களே அதிரா..
  எனக்கு என் வலைக்கும் உங்க உதவி வேணும் இப்பவே சொல்லீட்டன்... நேரமில்லை அது இதுன்னா ...கர்ர்ர்...:)))

  தமிழ்மணம் பற்றிச் சொல்லுறீங்க. அங்கை போய்ப் பார்த்தன். என்னவோ கை கட்டைவிரல எல்லாரும் காட்டீனம் பக்கதில நம்பர்களும் இருக்கு.. ஙே.ஙே..

  எனக்கு ஒண்டுமா புரியேலை.. என்ன செயோணும் என்ன மாதிரி.. எடுத்துச்சொன்னா எல்லாருக்கும் விளங்ங்லீடுமெல்லோ...:) சொல்லுங்கோ... ஃபீஸ் தருவமோ எண்டு யோஓசிக்காதேங்கோ.. தருவம்...:)))

  ReplyDelete
 43. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் இளமதி... இதுக்குரிய பதிலை புதுப்பதிவில் போடுறேன்ன்ன் இதோ.. வருது:))....

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.