அன்புள்ள அம்மாவுக்கு!!
அம்மா.. நலமாக இருக்கிறீங்களோ? அப்பா எப்படியம்மா இருக்கிறார்? எனக்கு தெரியும், என்னையும் தம்பியையும் விட உங்கள் மனதில் வேறு எந்த சிந்தனையுமே இருக்காது.
தம்பி இப்போ நன்கு வளர்ந்து விட்டானம்மா.பார்க்க அப்பா மாதிரியே இருக்கிறான்.அவனின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தும், அப்பாவை என் கண் முன்னே கொண்டு வருகிறதம்மா!. என்னப் பார்ப்போரெல்லாம், “மேரி அக்கா” போலவே இருக்கிறாய் என உன்னைத்தானம்மா சொல்கிறார்கள்.
நாங்கள் என்ன பாவம் செய்தோமம்மா? ஏன் எம்மை ஆண்டவன் படைத்தார்? ஆரைக் கேட்டாலும் சொல்கிறார்கள், “உங்கள் அப்பா, அம்மா போல தங்கமான மனிஷரைக் காணவே முடியாது” என. அப்போ, அப்படிப் பெற்றோருக்குப் பிறந்த நமக்கு, ஏனம்மா இப்படி நிலைமை வந்தது? எதுக்காக அம்மா சுனாமி வரவேண்டும்? சரி வந்ததுதான் வந்துது.. எதுக்காக அம்மா என்னையும் தம்பியையும் விட்டு விட்டு, உன்னையும் அப்பாவையும் கொண்டு போக வேண்டும்?.
அன்று நீங்கள் இருவரும் இறந்தே போய்விட்டீர்கள் என்ற செய்தி கேட்டதும், செய்வதறியாது, நானும் சாகிறேன் என கடல் நோக்கி ஓடினேன் அம்மா, ஆனால் என்ன காலமோ பின்னாலே தம்பி, அக்கா!! அக்கா!! என எழுப்பிய ஓலம் காதில் கேட்டதும்,என்னால் கடலில் குதிக்க முடியவில்லையம்மா!!.
அப்போ அவனுக்கு ஐந்து வயதுதானே அம்மா? அவனுக்கு என்ன தெரியும் குழந்தை!!. எனக்காவது அப்போ பத்து வயதாகியிருந்தது. அதன் பின்பு இன்றுவரை எவ்வளவோ நடந்து விட்டதம்மா...அனைத்தையும் உன்னிடம் சொல்ல வேணும் என மனம் துடிக்கிறதம்மா. அதன் பின்னர் எங்கள் மாமா எங்களை வெளிநாட்டுக்குக் கூப்பிட்டார். நாங்கள் வந்து சில வருடங்களில், அவரும் மாரப்பால் போய் விட்டார். இப்போ பொறுப்புக்கள் அனைத்தையும் சுமந்தபடி, நானும் தம்பியும் வாழ்கிறோமம்மா.
எனக்கு உங்களிருவரின் முகமும் நினைவிருக்கிறது, ஆனால் தம்பி, கண்ணை மூடிப் பார்த்துவிட்டுச் சொல்கிறான், நினவு வருகுதில்லையாம். அவனுக்குக் காட்ட, ஒரு படம் கூட இல்லையே அம்மா.. அத்தனையும் சுனாமியோடு போய் விட்டதே..
இப்போ நான் ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்து விட்டேனம்மா. நன்றாகக் கார் ஓடுகிறேன். அப்பாவின் மடியில் இருந்து, வீட்டுக் கேட்வரை, கோன் அடித்து அடித்துக் கார் ஓடியது, என் கண் முன்னே எப்பவும் வருகிறது. எங்கள் காரின் கலர்கூட, தம்பிக்கு நினைவில்லையாம் அம்மா.
அப்பவெல்லாம் அப்பாவோடு, கோன் அடித்தபடி காரால் நாம் வந்து இறங்க, நீ ஓடிவந்து கதவு திறந்து ரீ ஊத்தித் தருவாய் அம்மா. இப்போ திறப்பைப் போட்டு நானே வீட்டைத் திறந்து வந்து, ரீ ஊத்திக் குடிக்கிறேன் அம்மா.
தம்பி நன்றாகப் படிக்கிறானம்மா, அப்பா அடிக்கடி சொல்வதுபோல, அவனை ஒரு டாக்டர் ஆக்கவே நானும் பாடுபடுகிறேனம்மா. நீ எனக்குச் சொன்ன அறிவுரைகளையெல்லாம், நான் அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறேனம்மா. அவனை எப்படியெல்லாம் உயர்த்தி, ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவர முடியுமோ, அப்படியெல்லாம் பாதுகாக்கிறேன் அம்மா.
உனக்குக் காதல் பிடிக்காதென்பது எனக்குத் தெரியுமம்மா. ஆனாலும் அது தெரிந்திருந்தும்,நானும் ஒரு சின்னப் பெந்தானே அம்மா, அப்பாவைப்போல, உன்னைப்போல எம்மில் ஒருவர் அதிக பாசம், அக்கறை காட்டும்போது, மனம் அப்படியே துவண்டு விடுகிறதம்மா.... அதனால் நானும் ஒருவரைக் காதலித்தேனம்மா.. நல்லவர், அன்பானவர், இங்கு பெரிய பதவியில் இருப்பவர், எம் கவலைகளை மறக்கடித்து, எமக்கு வெளிச்சம் காட்டுவார் என, விரும்பினேன் அம்மா..
“கங்கையிலே என் படகு மிதந்து கொண்டிருக்கிறது..
அதில் ஒருவர் ஏறினார்..
கரைசேர்க்கப் போகிறார் என நம்பினேன்ன்..ஆனால்
நடுக்கடலிலேயே விட்டுவிட்டு இறங்கி விட்டாரம்மா..”
காதலித்தது தப்பா அம்மா? எனக்கு வாழ்க்கையில் எல்லாமே வெறுத்துவிட்டதம்மா, ஒரு 20 வயதுப் பெண் பேசக்கூடாத பேச்சுத்தானம்மா, ஆனால் “பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்” என நீ முன்பு சொல்லும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறதம்மா.
என் வாழ்க்கையின் வசந்த காலங்கள் எல்லாம் முடிந்து விட்டனவம்மா. இனிமேல் என் வாழ்வுக்கு வசந்தம் கிடைக்குமென, நான் ஆரையும் நம்ப மாட்டேனம்மா. இப்போ நான் வாழ்வது தம்பிக்காகவே. அவன் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்வரை, நான் ஒரு நடைப்பிணமாகவெனினும், வாழ்ந்தே ஆகவேணுமம்மா.
சூரன்போர் வருகிறது, ஊரிலே அப்பா என்னைத் தோளிலே தூக்கி, சூரன் ஒளிந்துவரும் மாங்கொப்பில் மாங்காய் பிடுங்க, மக்களோடு மக்களாக இடிபடுவது, மனக் கண்ணிலே வந்து போகுதம்மா.நான் எந்த நினைவையும் தம்பியோடு பகிர்ந்து கொள்வதில்லையம்மா, ஏனெனில் அவன் சந்தோசமாக இருக்கிறான், நன்கு படிக்கிறான். அதனால் நான், என் எண்ணங்கள், கனவுகள், கவலைகள் அனைத்தையும் என்னுள்ளே புதைத்து விடுவேனம்மா.
என் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள எனக்கு ஆருமே இல்லையம்மா. அதனால்தான் கண்ணீர் வழிந்து ஓட ஓட இக்கடிதத்தை எழுதுகிறேன். இதன் மூலம் எனக்கு கொஞ்சமாவது ஆறுதலும், உன்னோடு பேசிவிட்ட திருப்தியும் கிடைக்கிறதம்மா.
இப்படிக்கு,
என்றும் உன் அன்பு மகள்,
பிலோமினா!.
குட்டிச் சிந்தனை:
சமீபத்திலே, என் காதுக்கு எட்டிய ஒரு உண்மைத் தகவலை வைத்து, என் கற்பனையில் ஒரு கடிதம் வரைந்திருக்கிறேன். இதன் கரு மட்டுமே உண்மை, மற்றவை யாவும், என் கற்பனை கொடுத்து எழுதப்பட்ட கடிதமே.
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும், என அனைத்தையும் நகைச்சுவையாக்கி, சிரித்தபடி வாழப் பழகி வந்தாலும், இப்படியான சம்பவங்களைக் கேட்கும்போது, மனம் ஒரு கணம் கலங்கத்தான் செய்கிறது. சுனாமியால் பாதிக்கப் பட்டோர்..இப்படி எத்தனை எத்தனை ...

===============================================================================
குட்டிச் சிந்தனை:
சமீபத்திலே, என் காதுக்கு எட்டிய ஒரு உண்மைத் தகவலை வைத்து, என் கற்பனையில் ஒரு கடிதம் வரைந்திருக்கிறேன். இதன் கரு மட்டுமே உண்மை, மற்றவை யாவும், என் கற்பனை கொடுத்து எழுதப்பட்ட கடிதமே.
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும், என அனைத்தையும் நகைச்சுவையாக்கி, சிரித்தபடி வாழப் பழகி வந்தாலும், இப்படியான சம்பவங்களைக் கேட்கும்போது, மனம் ஒரு கணம் கலங்கத்தான் செய்கிறது. சுனாமியால் பாதிக்கப் பட்டோர்..இப்படி எத்தனை எத்தனை ...
==============================================================
புலாலியூர்ப் பூஸானந்தாவின், களவெடுத்த கைவண்ணம்:)
|
Tweet |
|
|||