நல்வரவு_()_


Monday 11 June 2018

அவனுக்குத்தான் தெரியும்.. ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்!!

கிட்னியும்:),[புத்தி/மூளை] மனமும் ஒன்றா? ரெண்டா?
இவங்கதான் புத்தியும் மனசுமோ?:)
த்தனையோ விஷயங்கள் என் கிட்னியில்:) சேவ் ஆகியிருக்கு, ஆனா அதை எல்லாம் தாண்டி, சுடச்சுட என்னைச்சுற்றி நடப்பனவற்றையே மீயும் அப்பப்ப சுடச்சுடப் போட்டுக்கொண்டிருக்கிறேன்.

 இந்த புத்தி, மனம் பற்றி.. எனக்குத் தெரிஞ்சவற்றை எழுதோணும் என்பது என் நீண்ட நாள் ஆசை.

அதாவது சிலர்/பலர் நினைக்கிறார்கள் புத்தி என்பதும், நம் மனம் என்பதும் ஒன்றுதானே என. உண்மையில் அவை இரண்டும் ஒன்றல்ல. மனம் என்பது உணர்ச்சிகளுக்கு அடிமையான ஒன்று.. அதுக்கு சிந்திக்கத் தெரியாது. கண்டதையும் காதல் செய்யும்.. கண்டதையும் விரும்பும்... கண்டதையும் பேசும்.. இதனாலேயே அப்பாவியாக மாட்டிக் கொண்டு விளிக்கும்[ளி கரெக்ட்தானே?:)]

ஆனா புத்தி/மூளை என்பது அப்படியில்லை, அது நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்தே ஒரு முடிவெடுக்கும், உணர்ச்சிகளுக்கு இடமளிக்காது, நீதி நியாயப்படி நடக்கும்.

பெரும்பாலும் மனதால் முடிவெடுக்கும் விசயங்கள் தோல்வியிலேயே முடிவதற்கான வாய்ப்புக்களே அதிகம். புத்தியால் முடிவெடுக்கும் விசயங்களே வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

பல சந்தர்ப்பங்களில் புத்தி சொல்லும், இதைச் செய்யாதே.. இதை வாங்காதே.. இவரது கோரிக்கைக்கு ஒத்துப் போகாதே.. நடிக்கிறார் நம்பாதே:)... இப்படி எல்லாம் புத்தி அலேர்ட் பண்ணும், ஆனா நம் மனம் அதைக் கேட்காது.. நீ பேசாமல் இரு அதெல்லாம் எனக்குத் தெரியும் எனச் சொல்லி, புத்தியை அடக்கி விட்டு, மனம் முந்திவிடும், ஆனா அலுவல் முடிந்த பின்பே மனம் கிடந்து தவிக்கும்.. புத்தி சொல்லிச்சுதே.. ஆனா மனசுதான் கேட்க மாட்டேன் என்றிட்டுதே என. 

பெரும்பாலான காதல்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்.. மனதை முன்னிலைப்படுத்தி விரும்புவதே. உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, இரக்கம் பாவம் பட்டு மனம் விரும்பிவிடும்.. ஆனா வெற்றி பெறும் காதல்கள் புத்தியால் சிந்தித்து முடிவெடுத்த காதலாகவே இருக்கும்.

மனம் சொல்வதைக் கேட்டு அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விடுகிறோம்... அதாவது மனதை வைத்துப் பேசும் வார்த்தைகள்.. நினைத்து.. அலசி ஆராய்ந்தெல்லாம் சொல்வதாக இருக்காது.. வெறும் உதட்டு வார்த்தைகளாக இருக்கும், ஆனா எதிராளி அதனால் பாதிக்கப்பட்டு மனம் வருந்தினால்  நாம் என்ன சொல்கிறோம்? ஐ நெவெர் மீன்ற் 2 சே தட்... என சொல்கிறோம் தானே...

அதாவது யோசிச்சு சிந்திச்சு எல்லாம் சொல்லவில்லை, ஏதோ வாயில் வந்துது சொல்லிட்டேன்.. அது வேணுமெனச் சொல்லப்பட்ட வார்த்தை அல்ல.. மன்னிச்சுக்கொள்ளுங்கோ எனக் கஸ்டப்படுவோமே சில சமயங்களில்.. இதெல்லாம் மனசு பண்ணும் கூத்துக்கள்.

ஒரு குட்டிச் சம்பவம். ஒருநாள் எங்கட டெய்சிப் பிள்ளை ஒரு எலியைப் பிடிச்சுக் கொண்டு வந்தா கார்டினுக்குள், நான் பறிக்க ஓடினேன்.. அவ எலியாரைத்தூக்கிக் கொண்டு பக்கத்து வளவுக்குள் ஓடி ஒளிச்சிட்டா... எனக்குக் கொஞ்சம் கோபம்...:).

சரி இன்று நைட் வரை, அவவை உள்ளே எடுக்கக் கூடாது, எலி சாப்பிட்டால் அவவுக்கு பழக்கமில்லை, அதனால சத்தி எடுத்தாலும் எடுக்கலாம் என என் புத்தி சொல்லியது.. அப்படியே விட்டு விட்டு வந்து கதவை லொக் பண்ணி விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் அவ எலியைச் சாப்பிட்டு விட்டு வந்து, டோர் அருகில் நின்று ம்ம்ம்மாவ்வ்வ் .. ம்ம்மாவ் என, மருட்டுவதுபோல மெல்லிய குரலில், என்னைக் கூப்பிட்டா டோரைத் திறக்கச் சொல்லி:).

என் புத்தியோ தடுத்தது.. நோ நோ திறக்காதே.. கொஞ்சம் ரைம் ஆகட்டும்.. இப்போ சத்தி எடுத்திடுவா என, ஆனா புத்தியைப் பின்னே தள்ளிப்போட்டு மனம் முந்திச் சொல்லிச்சுது.. என்ன அதிரா? உன் பிள்ளை எனில் இப்படி வெளியே  நின்று கூப்பிட்டும் கதவைத்திறக்காமல் இருப்பாயோ? இது பூஸ் என்பதனால்தானே திறக்கக்கூடாது என நினைக்கிறாய்?.. அப்போ நீ டெய்சியை உன் பிள்ளைபோல நினைக்கவில்லையா? என...

உடனே மனசு சொல்வதுக்கே முக்கியத்துவம் கொடுத்து, டோரைத்திறந்து அவவை உள்ளே எடுத்தேன்... உள்ளே வந்து 5 நிமிடத்தில் காபெட்டிலேயே அப்படியே சத்தி எடுத்துப் போட்டா.. உடனே புத்தி மனதைப் பார்த்துக் கேட்டுது ..  “பார்த்தியா அப்பவே சொன்னேனே நீதான் கேட்கவில்லை” என:)..

அதனால எப்பவுமே மனதுக்கு முன்னுரிமை குடுத்திடாமல், புத்திக்கு முன்னுரிமை குடுக்கப் பழகிட்டால் நல்லதே.. என்னதான் இருப்பினும் சிலசமயம் இரண்டுமே தோற்று விடுவதும் உண்டு...:)

 அவனுக்குத்தான் தெரியும்... ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்!! 
அட யாருக்கம்மா புரியும் ... அவன் வேடிக்கையும் அதன் விளைவும்!!...”
==================_()_=================
என்ன இது ஆரைப் பார்த்தாலும் தலைகீழாகத் தெரிகினம்:) உலகம் மாறிச் சுத்துதோ? நான் கரெக்ட்டாத்தானே நிற்கிறேன்:)

====இம்முறை இடைவேளையைக் கடைவேளை:) ஆக்கிட்டேன்:))====
டும்..டும்..டும்... நான் மெடிரேசன் போனேனே:))... என் கணவர் எப்பவும் சொல்லுவார், நமக்குத் தெரியாதென எதுவும் இருக்கக்கூடாது.. ஒரு பொருளோ.. உணவோ.. எதுவாயினும் முடிஞ்சவரை தெரிஞ்சு வச்சிருக்கோணும் என:).. அதுபோலவே எலோரும் எங்கு பார்த்தாலும் மெடிரேசன்.. யோகா வகுப்புகள் போகிறோம் என்பதைக் கேட்டு, கொஞ்சக் காலமாக எனக்கும் ஒரு ஆசை.. அது என்ன எனப் போய்ப் பார்கோணும் என:).. நம்மிடத்தில் இந்த வகுப்புக்கள் நடப்பது தெரியாது, இப்போதான் தெரிய வந்து போனேன்..

ஒரு புத்தரைப்போலவே, அதே கலரில் ஒரு ஸ்கேட் போட்டு அதுக்கு ஒரு பிளவுஸ்.. ஜீன்ஸ் க்குப் போடும் பிளவுஸ் போல போட்டு, ஒரு அரைத்தாவணியும் போட்டிருந்தா அந்த ஸ்கொட்டிஸ் லேடி:).. அடிக்கடி தாவணியை எடுத்து எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தா.. விழுகிறதாம்:) புதுப் பழக்கமெல்லோ[இத்தனைக்கும் தன் ஜீன்ஸ் ரீ சேட்டுக்கு மேலயே போட்டிருந்தா, தலை ஃபுல்லா மொட்டை அடிச்சிருந்தா. நல்ல அன்பானவவாக, சிரித்தபடியே எப்பவும் இருந்தா.

இடையில் முக்கியமாகப் பேசப்பட்ட விசயம்..
What is anger?
அது மிருகத்தனமானது, நெகடிவ் எனர்ஜி,  ... இப்படிக் கொஞ்சம் சொல்லி... இப்போ உங்கள் மூச்சை வெளியே விடும்போது.. இந்த கோபத்தை  எல்லாம் வெளியே விட்டு, றிலாக்ஸ் ஆகிடுங்கோ என்றா... நான் அனைத்தையும் வெளியே விட்டேன் ஆனா அஞ்சுவோடு இருக்கும் கோபத்தை மட்டும் வெளியே விட்டிடக்கூடாது என மிகவும் உசாராக இருந்தேன்:))... அதுவும் இல்லை எனில் அஞ்சுவை எப்பூடிக் கொன்றோல் பண்ணுவேன்:).
==================================================================================
படம் படமாகப் போடுகிறேன் என, கவிஞர் சீராளன் திட்டிப்போட்டார் கர்:)) அதனால இம்முறை எழுதியே கொல்கிறேன் ஹா ஹா ஹா:).
==================================================================================

ஊசி இணைப்பு
$$$$$$$$$$நன்றி வணக்கம்_()_$$$$$$$$$$$

170 comments :

  1. Firsssssssssssssssssssssssssssssssssst

    ReplyDelete
    Replies
    1. அதிரா— எழுதினது என்னன்னே எதையும் படிக்காமல், Firsttttty என்று சொல்லிட்டு காணாமல் போறவங்களைப் பத்தி என்ன நினைக்கறீங்க?

      மறந்துபோய் எ.பிக்கு புதன் கேள்விக்கு அனுப்பிடாதீங்க. ஹாஹாஹா

      Delete
    2. வாங்கோ அஞ்சு வாங்கோ... ஆஆஆஆ கை சுகமா?

      Delete
    3. வாங்கோ நெல்லைத்தமிழன்...

      ///எழுதினது என்னன்னே எதையும் படிக்காமல், Firsttttty என்று சொல்லிட்டு/// ஹா ஹா ஹா இவிங்கதான் மனதால ஜிந்திப்போர்ர்:)) ஆனா சொல்வது என்னமோ நான் புத்தியாலதான் ஜிந்திக்கிறேன் என கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா... பொல்லுக்குடுத்து அடி வாங்குவதே அஞ்சுவுக்கு வேலையாப்போச்சு:))

      Delete
    4. கர்ர்ர் :)4 நெல்லைத்தமிழன் ..முதல் கமெண்ட் போட ஓடோடி வரது ஜாலி தெரியுமா :)
      எங்கலள் ப்ளாகில் அக்டொபர் வரைக்கும் முதலா வர கஷ்டம் அதான் இங்கே குதிச்சேன்

      Delete
    5. நான் காத்திருந்து எங்கள் புளொக்கில் ஜம்ப் பண்ணினேனே:))..

      அதுசரி என்ன வக்கோல் ஃபீவரொ? கண்ணுக்கு கூஊஊஊஊஊஊஊஊஉலிங் கிளாஸ் எல்லாம் போட்டு ஸ்டைலா வெளிக்கிட்டு வந்திருக்கிறீங்க?:)) ஒருவேளை மெடிரேஷன் கிளாஸ் போகவோ?:)) ஹா ஹா ஹா:).

      Delete
  2. [im]http://entervideo.net/thumbs/tom_and_jerry_mouse_trouble_2014_disc_1_dvdrip_xvid_ac3_acab___5726b4a26d41c.mp4.jpg[/im]

    ReplyDelete
  3. அஆவ் இருங்க லைன் பை லைன் வாசிக்கணும்


    /ஆனா புத்தி/மூளை என்பது அப்படியில்லை, அது நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்தே ஒரு முடிவெடுக்கும், உணர்ச்சிகளுக்கு இடமளிக்காது, நீதி நியாயப்படி நடக்கும்.//

    அதாவது சிம்பிளா சொல்லணும்ணா மூளை இஸ் அஞ்சு :) நான் நான்

    ReplyDelete
    Replies
    1. //அஆவ் இருங்க லைன் பை லைன் வாசிக்கணும் //

      ஹா ஹா ஹா நான் குடுத்த டோஸ்:) நல்லா வேர்க் பண்ணுது:).

      //அதாவது சிம்பிளா சொல்லணும்ணா மூளை இஸ் அஞ்சு :) நான் நான்//

      அது கரீட்டுத்தான்.. ஆனா உண்மையில நான் மனசுக்கே முக்கியத்துவம் குடுப்பேன் அதனாலதான் பலசமயம் கஸ்டப்படுவேன்.. அதாவது ஃபீலிங்ஸ்களுக்கு மயங்கிடுவேன்.. அப்படியே சரண்டராகிடுவேன்ன்.. ஆராவது கண் கலங்கினாலோ இல்லை மிக அன்பாக தயவாக ஒன்றைக் கேட்டாலோ உடனே இரங்கி.. ஓகே பண்ணிடுவேன்.. அது தப்பு எனத் தெரிந்தும் என்னைக் கல்லாக்க என்னால் முடிவதேயில்லை:(..

      Delete
    2. //ஆராவது கண் கலங்கினாலோ இல்லை மிக அன்பாக தயவாக ஒன்றைக் கேட்டாலோ உடனே இரங்கி.. ஓகே பண்ணிடுவேன்..//

      கர்ர்ர் :) உங்க மெடிடேஷனில் ஏமாறாமல் இருப்பதும் சொல்லிக்கொடுக்கணும் உங்களுக்கு

      Delete
    3. என்னை ஆராவது முறைச்சால்.. நான் ஸ்ரோங்கா இருப்பேன்ன் ஆனா அன்பா பாசமா பிளீஸ் சொல்லிப்பேசினால் அவ்ளோதேன்ன் ஹா ஹா ஹா:)).. மெடிரேசனில் இன்னும் இன்னும் சொஃப்ட்டாக நைஸ் ஆக எல்லோ சொல்லித் தாறாங்க.. ஹா ஹா ஹா.

      Delete
    4. ஹலோ மிஸ்டர் அதுக்காக என்னை ஆரும் ஏமாத்திட முடியாதாக்கும்:))

      Delete
  4. இந்த பதிவிற்க்காக உங்களுக்கு டாக்டர் பட்டம் தருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழன் - உங்களைப் பார்த்து ரொம்ப வாரங்களாயிட்டதே

      ஞானி அதிராவுக்கு டாக்டர் பட்டம் வேண்டாமாம். டாட்டர் (daughter) பட்டமே (என்றும் பதினாறு) போதுமாம். ஞானிக்கு இருக்கற அளவு கடந்த ஆசையைப் பாத்தீங்களா?

      Delete
    2. வாங்கோ ட்றுத் வாங்கோ.. இப்போ கிட்டத்தட்ட அரசியலில் கரைந்து காணாமலே போயிட்டீங்க... திரும்ப புளொக்ஸ் க்குள் வாங்கோ.. அரசியலைத்தூக்கி நயகராவுக்குள் வீசிவிட்டு உங்கள் உள்ளே இருக்கும் நகைச்சுவையை வெளியே கொண்டு வந்து சமையல் குறிப்புக்கள் போடுங்கோ:)..

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
    3. ///ஞானி அதிராவுக்கு டாக்டர் பட்டம் வேண்டாமாம். டாட்டர் (daughter) பட்டமே (என்றும் பதினாறு) போதுமாம். ஞானிக்கு இருக்கற அளவு கடந்த ஆசையைப் பாத்தீங்களா?//

      ஹா ஹா ஹா நெ.தமிழன் என் பழைய நினைவொன்றைக் கிளறி விட்டிட்டீங்க:)..

      நான் ஸ்கொட்லாந்துக்கு வந்திறங்கிய அடுத்த நாள் வீட்டுப் ஃபோன் க்கு ஒரு கோல் வந்துது... எனக்கு ஏதோ ஸ்கொட்டிஷ் ஸ்லாங் தெரிஞ்ச ஆள் போல எடுத்து அல்லோ என்றேன் ஸ்டைலாக:)).. உடனே எதிர் பக்கத்தில் ஒரு வயதானவர்[இங்கு வயதானவர்களின் ஆங்கிலம் புரிவது மிக மிக கஸ்டம்]..

      அவர் கேட்டார்ர்... இஸ் டட்/க்டர் தெயார்...? என... உடனே என் கிட்னி பலமா வேர்க் பண்ணிச்சுது.. நம்மிடம் பெண்குழந்தை இல்லையே... இது ஏதோ றோங் கோல் போல என நினைச்சுப்போட்டும்.. எதுக்கும் கணவரிடம் கொடுப்பமே எனக் கொடுத்தேன்.. அது பின்பு பார்த்தால்.. கணவரின் பேஷண்ட்:))... டொக்டர் இருக்கிறாரா எனக் கேட்டிருக்கிறார் ஹையோ ஹையோ:)) என்னால அச்சம்பவத்தை மறக்கவே முடியாது:))..

      எனக்கு 16 வருசத்து முன் நான் சிரிச்சுக்கொண்டே பிறந்தபோது:)) [பிளீஸ்ஸ்ஸ்...அமைதி அமைதி:)] இந்தாங்கோ உங்களுக்கு டோட்டர் பிறந்திருக்கிறா என பட்டம் சூடியாச்செல்லோ நெ.த:)) ஹா ஹா ஹா.

      Delete
  5. ஹாஹா :) ஊசி இணைப்பு அனைவருக்குமே பொருந்தும் :)
    எந்த மாற்றத்தையும் நம்மில் இருந்து ஆரம்பிக்கலாமே :)
    இந்த உலகத்தில் யாருமே பெர்பெக்ட் இல்லை அதனால் கோபம் வந்தாலும் நைட் தூங்கபோகுமுன்னே அந்த கோபத்தை மறந்து எதிராளியுடன் சுமூகமாகிடணும்னு சொல்றார் மை க்ரேட் க்ராண்ட் dad :)

    ReplyDelete
    Replies
    1. //எந்த மாற்றத்தையும் நம்மில் இருந்து ஆரம்பிக்கலாமே :)//
      இதிலயும் ஒரு டப்பு:) இருக்கு:) சிலசமயம் நம்மை மாத்தொணும் என நினைச்சு மாற வெளிக்கிட்டு.. மன்னிக்க வெளிக்கிட்டு.. உதவி பண்ண வெளிக்கிட்டால்ல்.... வாழ்கை முழுக்க நாமே தான் அப்படி இருக்கோணும் என எதிர்பார்ப்பவர்களும் இருக்கினம்.. தம்மை மாற்றாமல் ஹையோ ஹையோ.. அதனாலதான் ஓவரா லூஸ் ஆகப்போகாமல் ஒரு எல்லை வச்சே நடப்பேன் பல சமயம்:))

      //அதனால் கோபம் வந்தாலும் நைட் தூங்கபோகுமுன்னே அந்த கோபத்தை மறந்து எதிராளியுடன் சுமூகமாகிடணும்னு சொல்றார் மை க்ரேட் க்ராண்ட் dad :)///

      ஹலோ மிஸ்டர்... ஹா ஹா ஹா.. சந்தடி சாக்கில ஏதோ அதிராவோடு சுமுகமாகிப் போகிற ஐடியாப் போல:)) நோஓஓஓஒ இந்த இடத்தில மட்டும் என் மனசுக்கு இடம் குடுக்காமல் புத்தியையே முன்னிறுத்துவேன்:))

      Delete
    2. ஆமா மெடிடேஷன் போறேன்னு சொல்லிட்டு கோபத்தை அடக்காட்டி பின் நேர் பக்க விளைவுகள் விபரீதமாகும் சொல்ல்ட்டேன்

      Delete
    3. சரி சரி சின்னி விரலைத்தாங்கோ கோத்துப் பிடிக்கிறேன்:))... சின்ன வயதில் கோபம் போட்ட பின்.. நேசம் ஆகுறோம் என்றால்.. இருவரதும் ஒரு கையின் சின்ன விரலைக் கோர்ப்போம்ம் அப்பூடி எனில் நேசமாம்:))

      Delete
  6. What is anger?
    அது மிருகத்தனமானது, நெகடிவ் எனர்ஜி, ... இப்படிக் கொஞ்சம் சொல்லி... இப்போ உங்கள் மூச்சை வெளியே விடும்போது.. //

    எனக்கு ஆச்சர்யமா இருக்கு !! எதுக்குன்னா உங்களுக்கு நெகட்டிவ் எனர்ஜியா ??
    எனக்காவது இந்த triggers என்று சொல்லப்படும் பல காரணிகள் இருக்கு அதனாலேயே பல நேரம் முழுமையா கூட கருத்துக்களை சொல்றதில்லை .இவ்ளோ எதுக்கு நான் போட்ட நம்பிக்கை போஸ்ட் இப்போ எண்ட்ரன்ஸ் பற்றி சொல்ல வந்து அப்டியே மழுப்பிட்டேன் .

    ReplyDelete
    Replies
    1. //எனக்கு ஆச்சர்யமா இருக்கு !! எதுக்குன்னா உங்களுக்கு நெகட்டிவ் எனர்ஜியா ??//

      அப்படி இல்ல அஞ்சு... கோபத்துக்கு இன்னொரு பெயர் நெகடிவ் எனர்ஜி.. அதனால அது நமக்கு வேண்டாம், அப்படி ஏதும் உங்களுக்குள் இருபின் மூச்சை வெளியே விடும்போது அதையும் வெளியேற்றுங்கோ எனப் பொதுவாகச் சொன்னா.

      எனக்குத்தான் கோபம் வருவதில்லையே உங்களுக்கும் தெரியுமே.. ஆனா வந்தாலோ, மனதில் வைத்து சாதிக்கும் பழக்கமெல்லாம் இல்லை.. நேரே வந்து முடியைப்பிடிச்சு இழுத்து:).. ஹா ஹா ஹா நேரே கேட்டுத்தெளிவாகிட்டு அப்படியே விட்டு விடுவேன்:))

      Delete
    2. கோபம் நியாயமானதா இருந்தா பரவால்லை .எதிராளி வெள்ளந்தி பிள்ளையா இருந்தா ஐ மீன் என்னை மாதிரி குழந்தை கிட்டலாம் கோபப்பட்டா எதுக்கு கோபப்படறாங்கன்னே புரியாதே

      Delete
    3. ஹையோ இப்பூடி வெள்ளெலியா இருக்கே வெரி சோரி வெள்ளாந்தியா இருக்கே எனத்தான் கோபப்படுறாங்க போலும்:)).. அதுக்காகத்தான் ஞானி ஆகிடச் சொல்றேன்ன்:)) ஞானிகளோடு ஆரும் கோபிப்பதில்லை:))

      Delete
  7. இருங்க இருங்க :) இது ஏதும் உள்குத்து பதிவா :) ஆருக்கு மியாவ் :)))))
    ஹாஹா வசமா மாட்டிவிட்டுடேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இதில எங்கிருக்கு உள்குத்து?:) நாந்தான் மேலே சொல்லிட்டனே பிடிக்காவிட்டால் நேரே கேட்டு சண்டைப்பிடிப்பேன் மற்ரும்படி மனதில் வைத்து ஏதுமில்லை..

      ஆனா இந்த கிட்னி.. மனசு பதிவைப் போடுவதற்கு தூண்டுதலாக இருந்தவர்... வேறு ஆருமில்லை:) ச் றீராம்:)) தான் ஹா ஹா ஹா.. கீழே அவரின் பதிலில் விளக்கம் சொல்கிறேன்.. இப்போ அவர் அதை மறந்திட்டார்ர்:))

      Delete
  8. மெடிடேஷன் போனதால் இனிமேல் தாங்கள் :) மெடிட்டேஷன் பூஸார் என்றழைக்கப்படுவீர்களாக :)

    ஆமா :) புத்தர் ஸ்கர்ட் போட்டாரா ?? எப்போ ஆவ்
    அது kasaya robes னு நினைக்கிறேன் .சரி போனதுதான் போனீங்க அந்த புத்தக்காவுக்கு ப்ளீட்ஸ் வச்சி ஹெல்ப் பண்ணியிருக்கலாமில்லை :)

    ReplyDelete
    Replies
    1. //மெடிடேஷன் போனதால் இனிமேல் தாங்கள் :) மெடிட்டேஷன் பூஸார் என்றழைக்கப்படுவீர்களாக :)//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்தப் பெருமை கோமதி அக்காவுக்கும் நெல்லைத்தமிழனுக்குமே பொருந்தும்... அவர்கள் இருவரும்தான் இதில் அதிக காலம் போய்க்கொண்டிருக்கினம் என நினைக்கிறேன்.

      //ஆமா :) புத்தர் ஸ்கர்ட் போட்டாரா ?? எப்போ ஆவ்
      அது kasaya robes னு நினைக்கிறேன் //
      ஹா ஹா ஹா புத்தர் ஒரு சாறிபோல மட்டுமே உடுத்திருப்பார்... இவ அதே கலரில் ஒரு பெரீய ஃபுல் ஸ்கேட் போட்டு மேலே ஹஃப் சாறிபோல தாவணி போட்டிருந்தா... நமக்கு முன்னால் வந்துதான் தாவணியை எடுத்துப் போட்டா ஹா ஹா ஹா...

      //சரி போனதுதான் போனீங்க அந்த புத்தக்காவுக்கு ப்ளீட்ஸ் வச்சி ஹெல்ப் பண்ணியிருக்கலாமில்லை :)//

      அடுத்த தடவை அஞ்சுவைக் கூட்டி வருவேன் என ஜத்தியம் பண்ணிட்டுத்தான் வந்தேன்:).. டை அடிச்சு:)) முகமெல்லாம் மேக்கப் பண்ணி ரெடியா இருங்கோ ஹா ஹா ஹா:))

      Delete
    2. இங்கே கேட்டுக்கோங்க .அவங்க ரெண்டு பேருமே சாந்த குணமானவங்க ..நீங்களும் அப்டியே மாறணும்

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீ ஓல்ரெடி ஜாந்தம்ம்ம்ம்ம் சே..சே.. காந்தம்... சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே சாந்தம் என்பதனாலதான் ஞானியாகிட்டேன்ன்ன்:))

      Delete
  9. ஆமா ? இப்போ எதுக்கு என்னை கண்ட்ரோல் பண்ணனும் :) நானே இப்போதான் கைப்பிரச்சினை ஓய்ஞ்சி ஹே பீவரில் இருக்கேன் :)
    கிட்ட வந்து அச்சும் போடுவேன் சொல்லிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கை சுகமானா என் வாலுக்கு ஆபத்தெல்லோ:)).. நல்லவேளை கடவுள் என்னைக் கைவிடேல்லை.. ஒன்று முடிய ஒன்றென இப்போ ஆச்சூமாஆ?:)) ஹா ஹா ஹா:))

      Delete
  10. //மனம் சொல்வதைக் கேட்டு அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விடுகிறோம்..//

    எச்சூஸ்மீ :) இனிமே கௌதமன் சாரை கேட்க முடியாத வில்லங்கமான கேள்வியெல்லாம் உங்களை கேட்கப்போறேன் :)
    பொறுமையா எருமையா கருமையா பதில் சொல்லணும் :) அப்போதான் மெடிடேஷன் சக்ஸஸ்னு அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. //பொறுமையா எருமையா கருமையா பதில் சொல்லணும் :) அப்போதான் மெடிடேஷன் சக்ஸஸ்னு அர்த்தம்//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மெடிரேசன் போனதை தெரியாமல் உளறிட்டமோ:)) பலபேர் ஒளிச்சுப் போயிட்டு வந்து ஜொள்ளாமலும் இருக்கலாம்:))..

      கேளுங்கோ கேளுங்கோ கெள அண்ணனுக்கு மெயில் அனுப்பி விடை எடுத்து:) அதை உங்களுக்குப் பப்ளிக்கா ஜொள்ளுவனே:)) ஹா ஹா ஹா.

      Delete
  11. மியாவ் உங்க குட்டி பொண்ணு விஷயத்தில் மட்டுமில்லை நிறைய இதுபோல அனுபவங்கள் இருக்கு எனக்கும்.
    மிச்சம் மீதியை நாளைக்கு சொல்றேன் இப்போதைக்கு குட் நைட் :)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு அதை நாம் கவனிப்பதில்லை.. ஒரு சம்பவம் நடந்து முடிந்தபின் சிந்தித்தால் நிறைய விசயங்களில் நாம் புத்திக்கு மதிப்புக் குடுப்பதில்லை:)) ஏனெனில் நமக்கும் மனதைத்தான் அதிகம் பிடிக்குது ஹா ஹா ஹா:))..

      வாங்கோ வாங்கோ மீ நல்ல ஒரு ஸ்ரோங் ரீ குடிச்சு தென்ன்ன்ன்பா இருக்கிறேன்:)).

      Delete
  12. இந்தப் பாடல் எனக்கும் பிடிக்கும் என்றாலும் இதன் எதிர்மறையான வரிகள் சோர்வை உண்டாக்கும் என்பதால் அடிக்கடி கேட்கமாட்டேன். (நீ கேட்டது உடனே கிடைக்காது.. மண்ணில் போட்டதும் உடனே முளைக்காது.. கிழங்குகள் வெளுக்கும் காலை வந்தால் நீ நினைத்தது நடக்கும் நேரம் வந்தால்)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ஹா ஹா ஹா எதிர்மறை வரிகள் எனினும் உண்மை அதுதானே. அதுக்கேற்ப நம் மனதை நாம் தயாராக்குவது நல்லதுதானே?:)) .. கிடைக்காது... நடக்காது .. எனச் சொல்லவில்லைத்தானே.. உடனே கிடைக்காது.. உடனே நடக்காது எனத்தானே சொல்லப்பட்டிருக்கு:)).. அப்போ நடக்கும் வாய்ப்பு இருக்குதுதானே?:))

      ஹா ஹா ஹா இப்பூடி பொஸிடிவ்வா திங் பண்ணோனும்.. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்:)) ஹா ஹா ஹா ஹையோ ஞானி ஆனதில் இருந்து ஒரே டத்துவமா வருதே:))

      Delete
    2. //எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்:)) ஹா ஹா ஹா ஹையோ ஞானி ஆனதில் இருந்து ஒரே டத்துவமா வருதே:))//

      எண்ணங்கள் அழகாகட்டும். கிடைக்காத பாட்டை தேடி எடுத்துக் போட்டிருக்கிறீர்கள். எனக்கு ஒரு பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை. படம் பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை.

      "மேகங்களே... பா(ரு)டுங்களே... அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகறையாம் எங்கள் வானிலே எங்கள் வானிலே..

      நெஞ்சம் ஒன்றே உள்ளது நினைவுகள் அங்கே ஆயிரம்..
      -------------------------------------------------------
      --------------------------------------------------------
      கையில் ஊசி கண்ணில் காயம் செய்தது யாரை நோவது?

      எஸ் பி பி - பி சுசீலா குரலில் வைரமுத்து பாடல். கிடைக்குமா? எதையாவது தேடினால் எப்போதுமே ஏஞ்சல் வேகமாய்த் தேடிக் கொடுத்து விடுவார்.... காத்திருக்கிறேன்.

      Delete
    3. ///கிடைக்காத பாட்டை தேடி எடுத்துக் போட்டிருக்கிறீர்கள்.///
      என் ரேடியோவில் இப்படியானவை போகும்போது லபக்கெனப் பிடிச்சு தேடுவேன்..

      இன்னொன்று நீங்க இதுவரை கேட்டிராத ஒரு பாடலை அடுத்த முறை அல்லது அதுக்கும் அடுத்த போஸ்டில் போட இருக்கிறேன்:))..

      ///எதையாவது தேடினால் எப்போதுமே ஏஞ்சல் வேகமாய்த் தேடிக் கொடுத்து விடுவார்.... காத்திருக்கிறேன்.///
      அவ கூகிளில்தான் ஆராட்சி அம்புஜம்:) யூ ரியூப்பில் தெரியல்ல:) யூ ரியூப் போகாமல் அடம்பிடிச்சவவை மீ தான் போய்ப் பார்க்கப் பண்ணினேன்ன்:))...

      பார்ப்போம் தேடுவா.. மீயும் எனக்குத் தெரிஞ்ச சிலருக்கு அனுப்பியிருக்கிறேன் கிடைத்ததும் சொல்கிறேன்... சிலது கிடைக்கவே கிடைக்காமல் போகவும் வாய்ப்பிருக்கு.. எதுக்கும் fingers குரொஸ்ட்:)) ஹா ஹா ஹா...

      Delete
    4. ஹலோ ஸ்ரீராம் ஒவ்வொரு வரியும் தேடினேன் எங்கெங்கோ கொண்டுபோகுது ஜெமோ புக்கை கூட காட்டுது ஆனா பாட்டு என்னனு தெரிலையே

      Delete
    5. அதுதானே எனக்கும் கிடைக்கவில்லை... இந்தப் பாட்டு நீங்கள் யாராவது கேட்டிருக்கிறீர்களா?

      "கையில் ஊசி கண்ணில் காயம் செய்தது" வரிகளில் ஒரு சிறு திருத்தம். "பொன்னில் ஊசி கண்ணில் காயம் செய்தது..."

      Delete
    6. நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைக்கவில்லை ஸ்ரீராம்.. சில பாடல்கள் சிடியில் மட்டுமே வந்திருக்கும்.. அவை ரேடியோவிலும் ஒலிபரப்பாகும் ஆனா வேறு எங்கும் பப்ளிக்கில் கிடைக்காது.. அப்படித்தான் என்னிடமும் சில சிடி க்கள் .. ஆனா அதில முக்கியமான சிடி ஒன்றை மிஸ் பண்ணிட்டேன்ன்.. தேடிக்கொண்டிருக்கிறேன்:)..

      Delete
  13. மனம் - புத்தி விளக்கம் அபாரம். அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். என்னதான் புத்தி வேலை செய்தாலும் பெரும்பாலும் உணர்வுகளுக்கே மதிப்பு கொடுப்போம். டெய்சிப்பிள்ளை வாந்தி எடுத்தாலும் உங்களுக்கு கோபம் வருவதற்கு பதில் பாவமாகத்தான் இருந்திருக்கும், பாவம் அதற்கு என்ன தெரியும் என, இல்லையா? புத்தியாலேயே நடந்து கொண்டிருந்தோம் என்றால் நட்புகள் இருக்காது!

    :)))

    ReplyDelete
    Replies
    1. ///மனம் - புத்தி விளக்கம் அபாரம். அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.//

      ஸ்ரீராம் நீங்கதான் ஒருதடவை நான் ஏதோ சொன்னபோது கேட்டீங்க என்னது புத்தியும் மனதும் வெவ்வேறா என்று.. அப்ப தொடங்கி இதை எழுத நினைச்சேன்... இந்த வசனத்தை போஸ்ட்டில் போட எழுதினேன்.. பின்பு புத்தி சொல்லிச்சுது வாணாம் என நீக்கிட்டேன்:)).. ஹா ஹா ஹா இப்படித்தான் நெ.த பற்றியும் எழுதி நீக்கினேன் இப்போஸ்ட்டில்:)).

      //என்னதான் புத்தி வேலை செய்தாலும் பெரும்பாலும் உணர்வுகளுக்கே மதிப்பு கொடுப்போம். //
      அதேதான் நாம் எங்கே புத்தியை மதிக்கிறோம்?:) உணர்வுகளுக்கு இடமளிக்கும் மனசுக்குத்தான் மதிப்பு.. முன்னுரிமை குடுக்கிறோம் ஹா ஹா ஹா..

      Delete
    2. //ஸ்ரீராம் நீங்கதான் ஒருதடவை நான் ஏதோ சொன்னபோது கேட்டீங்க என்னது புத்தியும் மனதும் வெவ்வேறா என்று.//

      ஆ... நான்தான் பாவியா! !! இந்தியன் படத்தில் மனிஷா சொல்லும் வசனம் நினைவுக்கு வருகிறது. "புத்திக்குத் தெரியுது... மனசுக்குத் தெரியலையே..."

      Delete
    3. ///டெய்சிப்பிள்ளை வாந்தி எடுத்தாலும் உங்களுக்கு கோபம் வருவதற்கு பதில் பாவமாகத்தான் இருந்திருக்கும், பாவம் அதற்கு என்ன தெரியும் என, இல்லையா? ///

      அதேதான், இப்படியான விசயங்களுக்கு நான் எப்பவுமே கோபப்பட்டதே இல்லை ஸ்ரீராம்.. வீட்டில் பிள்ளைகள் எதையாவது உடைத்திட்டாலோ இல்லை கை தவறி ஊத்தி விட்டாலோ எதுக்குமே கோபித்ததோ திட்டியதோ இல்லை... என்னை விட என் கணவரிடம் இருந்துதான் இப்பழக்கத்தை அதிகம் கற்றுக் கொண்டேன்.. பொருள் உடைந்தால் வாங்கிடலாம் பிள்ளைகளைப் பயமுறுத்தி வெருட்டிடக்கூடாது என்பார்.... ஏன் உடைந்தது எப்படி உடைந்தது என்றுகூடக் கேட்க மாட்டர்ர்.. நான் வாங்கித்தருகிறேன் புதுசு எனத்தான் சொல்லுவார். வேணுமென்று ஆரும் செய்வதில்லைத்தானே...

      அப்படியேதான் டெய்ஷிப்பிள்ளையும்:))... ஆகவும் ஏதும் குழப்படி எனில்.. டெய்ஸி ஈஈஈஈ என ஒரு சவுண்ட் விடுவேன் அவ்வளவுதான்:)... ஆனா என் கோபம் அவவுக்கு இன்னும் முசுப்பாத்தியா இருக்கும்...

      நான் சும்மா .. குழப்படி எனச் சொல்லி அடித்தால்.. ஜம்ப் பண்ணி என்னைக் கடிப்பா:)).. சொல்லிக்கொண்டே போகலாம்:))...

      Delete
    4. //புத்தியாலேயே நடந்து கொண்டிருந்தோம் என்றால் நட்புகள் இருக்காது!//

      இதுவும் 100 வீதம் உண்மையே... நட்புக்களுக்கு மனசோடு பழகலாம் புத்தியை எல்லாம் ஊஸ் பண்ணத் தேவையில்லை.. ஆனா ஏதும் முக்கிய விசயங்கள்.. முடிவுகளுக்கு.. மட்டுமே புத்தி சொல்வதைக் கேட்டால் நல்லது:)))

      Delete
  14. கோபத்தை வெளியே விட்டேன் நானும். ஆனால் மறுபடி மூச்சை இழுக்கும்போது அதில் கொஞ்சம் மறுபடி உள்ளே வந்து விடுகிறது. என்ன செய்யலாம்!

    ReplyDelete
    Replies
    1. ச்ச்சோஓ ஈசி:)) எப்பவும் மூச்சை வெளியேயே விட்டுக்கொண்டிருங்கோ:)) ஹா ஹா ஹா:))

      Delete
  15. நானும் தினமும் கண்களை மூடி மெடிடேஷன் செய்கிறேன் - இரவு ஒன்பதரை மணி முதல் காலை நாலு மணிவரை!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இது நல்ல மெடிரேஷனா இருக்கே:)).. கண்ணை மூடியிருக்கும்போது ஒளிவட்டம் தெரியுதோ?:)

      Delete
  16. ஊசி இணைப்பு : இதில் நியாயமே இல்லை. அறிவுரை என்பது எப்பவுமே அடுத்தவர்களுக்குதானே? அதானே உலக வழக்கம்!

    ReplyDelete
    Replies
    1. அறிவுரை அடுத்தவர்களுக்குத்தான்:), ஆனா அதைச் சொல்லும் தகுதி நம்மிடம் இருந்தால் மட்டும்தானே அது அறிவுரை ஆகும்:)).. இப்பூடி எல்லாம் ஜிந்திக்கிறேன் நான்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம்..

      இன்னொன்று கேட்க மறந்திட்டேன்... அவனுக்குத்தான் தெரியும் பாடலின்.. இந்த படம் பார்த்திருக்கிறீங்களோ? யு ரியூப்பில் கிடைக்குதில்லை தேடினேன்..

      Delete
  17. த.ம. 1
    பிறகு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னாதூஊஊஉ தமிழ் மணமோ? அப்பூடி எனில்?:)).. ஹையோ கொஞ்ச இடைவெளியில் தமிழ் மணத்தை மறக்கலாமோ எனக் கேய்க்கக்கூடா.. அது இனி வராதோ??..

      Delete
    2. 'தமிழ் மண வாக்கு' என்பது இல்லாமல் இருந்தால் நல்லது. அதுனால எத்தனை சச்சரவுகள், எதிர்பார்ப்புகள், வருத்தங்கள்.

      நான் 'தமிழ்மணம்' போய் இடுகைகளைப் பார்ப்பதை விட்டாச்சு.

      Delete
    3. நானும்தான் நெல்லைத்தமிழன் இப்போ பார்ப்பதே இல்லை. ஆனா இதுவும் ஒரு விதத்தில் தப்புத்தானே?:) நமக்கு ஆதாயம் கிடைத்தபோது:)) ஓடி ஓடிபோய்ப் பார்த்தோம்ம்.. இப்போ அப்படியே கையை விட்டுவிட்டோமே:) இது தப்பு இல்லையா?:)

      Delete
  18. இந்த இடுகையைப் படிக்கும் யாருக்கும் சந்தேகம் வராது, நீங்க 65+ வயது என்பதில். எப்போ ஆசிரம்ம் அமைக்கப் போறீங்க? சிஷ்யகோடிகள் ரெடியா இருக்கோம் ஆஸ்ரமத்தில் சேர

    ReplyDelete
    Replies
    1. [im]https://i.ytimg.com/vi/2AyYCqwNbpQ/hqdefault.jpg[/im]

      Delete
    2. ஆஹா, நான் எங்கே வந்தேன்? இது என்னோட ஃபோட்டோ இல்லையோ! :)))))

      Delete
    3. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ:))..

      //இந்த இடுகையைப் படிக்கும் யாருக்கும் சந்தேகம் வராது, நீங்க 65+ வயது என்பதில். ///

      ஹையோ புத்தி சொல்லிச்சுதே:) மனசு கேய்க்கல்லியே:)) கடவுள் சத்தியமா.. அங்கு வந்திருந்தோர் எல்லோரும் நெல்லைத்தமிழன் அண்ணாவின் வயசுக்காரர் என எழுதினேன்.. பின்பு எதுக்கு வம்பு என அழிச்சுப்போட்டேன்ன்ன்ன்:))..

      அழிச்சது டப்பாப்போச்சே:)) கர்ர்ர்ர்:).

      //எப்போ ஆசிரம்ம் அமைக்கப் போறீங்க? சிஷ்யகோடிகள் ரெடியா இருக்கோம் ஆஸ்ரமத்தில் சேர//

      ஹா ஹா ஹா ஆச்சிரமம் ரெடி:)) ஆனா இன்னும் கொஞ்சம் நன்கொடைகள் தேவைப்படுது:)) உந்தப் பக்த கோடிகளிடமிருந்து கனக்க வாணாம் ஒரு கோடு பவுண்ட்ஸ் வாங்கித்தந்தால் போதும்.. உங்களை சிரேஷ்ட சிஷ்டராக நியமிச்சிடலாம்:))

      Delete
    4. @ அஞ்சு
      என்னா சிரிப்பூஊஊஊஊஊஊ கர்:))

      [im]https://thumbs.gfycat.com/CornySecondGibbon-max-1mb.gif[/im]

      Delete
    5. ///Geetha SambasivamTuesday, June 12, 2018 12:47:00 pm
      ஆஹா, நான் எங்கே வந்தேன்? இது என்னோட ஃபோட்டோ இல்லையோ! :)))))///

      ஹையோ கீசாக்கா உந்தக் கழ்ட்டின கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பாருங்கோ:) அது உங்கட ஃபோட்டோ இல்ல:)) உங்கட வலது கைப்பெருவிரலாக்கும் ஹையோ கீசாக்கா கலைக்கிறா:))) ஹா ஹா ஹா:))

      Delete
  19. மனசும் புத்தியும் வேறதான். நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

    தியானத்தின் அடிப்படையும் இதுதான். தியானம் பண்ணுவதின் purpose மனமும் புத்தியும் ஒரு புள்ளியில் சந்தித்து இணையணும் என்றுதான். இது கடினம். மனதின் இயல்பு சஞ்சரிப்பது. அதைக் கட்டுப்படுத்த ‘நான் யார்’ என்ற ஒரு கேள்வியை எழுப்பி அதற்கான விடையை நோக்கி மனதைத் திருப்பணும். மனம் புத்தி ஒரு புள்ளியில் சந்திக்க பல காலம் ஆகலாம். சிலருக்கு உடனே, பலருக்கு பல வருடங்கள் ஜென்மங்கள்

    ReplyDelete
    Replies
    1. //மனசும் புத்தியும் வேறதான். நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.//

      ஆவ்வ்வ் மிக்க நன்றி... அஞ்சூஊஊஊஊ ஓடி வாங்கோ நெ.தமிழன் இப்பொ அதிராட கட்சி:)).

      ///தியானம் பண்ணுவதின் purpose மனமும் புத்தியும் ஒரு புள்ளியில் சந்தித்து இணையணும் என்றுதான். இது கடினம்//

      தியானத்தில பலவகைகள் இருக்காமெல்லோ.. எத்தனையோ விதங்கள் அதில கூட, பி ஏச் டி முடித்தவர்களும் உண்டாமே....

      ///மனம் புத்தி ஒரு புள்ளியில் சந்திக்க பல காலம் ஆகலாம்.//
      ஆவ்வ்வ் கரெக்டாச் சொன்னீங்க.. மனமும் புத்தியும் வெவ்வேறு என்பதே இப்போதானே நம்மில் பலர் கண்டு பிடிச்சிருக்கிறோம்:))

      //சிலருக்கு உடனே,// இது அதிரா:)

      /// பலருக்கு பல வருடங்கள் ஜென்மங்கள்/// இது அஞ்சுவேதான் ஜந்தேகமே இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா..:))

      Delete
  20. புத்தியை மன சாட்சி என்று சொல்லலாம். மனம் வேறு, மனசாட்சி வேறு. மனசாட்சி எப்போதும் நியாயத்தைத்தான் சொல்லும். அதை நம்மில் உறைந்திருக்கும் கடவுள் எனச் சொன்னால் அது மிகையல்ல.

    விளக்கத்தைப் பார்த்து என்னை ‘குரு’ என்று நினைக்காமல் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஹாஹாஹா

    ReplyDelete
    Replies
    1. //புத்தியை மன சாட்சி என்று சொல்லலாம்.//

      நானும் எழுதணும்னு நினைச்சு மறந்துட்டேன் காலையில்.

      Delete
    2. //புத்தியை மன சாட்சி என்று சொல்லலாம். மனம் வேறு, மனசாட்சி வேறு. மனசாட்சி எப்போதும் நியாயத்தைத்தான் சொல்லும். அதை நம்மில் உறைந்திருக்கும் கடவுள் எனச் சொன்னால் அது மிகையல்ல.///

      ஆவ்வ்வ் இந்தப் பொயிண்ட் தெரிஞ்சிருந்தால் மேலே இணைச்சிருப்பேன்...

      //விளக்கத்தைப் பார்த்து என்னை ‘குரு’ என்று நினைக்காமல் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஹாஹாஹா///

      நன்றி அண்ணாஆஆஆ:)) ஹா ஹா ஹா ஹையோ ஹையோ புளொக்குகளும் நாமும் வயசும் படும் பாடிருக்கே:) ஒரு புத்தகமே எழுதலாம்போல:)) ஹா ஹா ஹா:)

      Delete
    3. @ஸ்ரீராம்
      //
      நானும் எழுதணும்னு நினைச்சு மறந்துட்டேன் காலையில்.//
      ஹா ஹா ஹா இதைத்தான் “னிச” பகவானின் வேலை என்பினம்:)) நல்ல விசயம் சொல்ல வரும்போது குறுக்கே நிண்டு தடுத்துப் போடுவார்:)).. எதுக்கும் வரும் சற்றடே:)) குரோவுக்கு லஞ் குடுங்கோ:))) ஹா ஹா ஹா:))

      Delete
  21. “எழுதியே கொல்கிறேன்”— பாத்தீங்களா.. மெடிடேஷன் பழக ஆரம்பிச்ச உடனேயே எழுதறதுலயும் உங்களுக்கு உண்மையே வர ஆரம்பிச்சுடுச்சு. இன்னம் நல்லா தியானம் பழகுனீங்கன்னா எல்லா உண்மையும் வெளிவந்துடும் (1500 மிமீட்டர், டமில்ல டி ஆக்க்க்கும்)

    ReplyDelete
    Replies
    1. ///
      “எழுதியே கொல்கிறேன்”— பாத்தீங்களா.. மெடிடேஷன் பழக ஆரம்பிச்ச உடனேயே எழுதறதுலயும் உங்களுக்கு உண்மையே வர ஆரம்பிச்சுடுச்சு.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      //(1500 மிமீட்டர், டமில்ல டி ஆக்க்க்கும்)//
      ஹா ஹா ஹா... எனக்குக் கிடைச்ச பட்டங்களை மறந்திட்டீங்களே:))...

      தியானத்துக்குப் போனா.. அதுபற்றி வெளியே சொல்லப்பிடாதாமே.. எங்கட அண்ணன் சொன்னார்... இனி நான் ஒண்ணுமே ஜொள்ளமாட்டேன் ஜாமீஈஈஈஈ:))

      Delete
  22. லியோ டால்ஸ்டாய் சொன்னது தவறு. தாங்கள் பிறருக்கு புத்தி சொல்ற மாதிரி, தன்னை மாற்றிக்கொள்ள பிறர் புத்தி சொல்வாங்கன்னு எல்லோரும் எதிர்பார்க்கலாம் இல்லயா?

    ReplyDelete
    Replies
    1. லொஜிக் எங்கயோ இடிக்குதே:)) ஹையோ மீ கொயம்பிட்டேன்ன் கர்ர்ர்:)).

      பிறர் வந்து புத்தி சொல்லும்வரை நம்மை மாற்றாமல் வெயிட் பண்ணோனுமோ?:)).. அப்போ நாட்டில ஞானிகளும் சாமிகளும் பெருகுவதில் தப்பில்லைப்போல:)) ஹா ஹா ஹா .. மிக்க நன்றி நெ.தமிழன் அனைத்துக்கும்.

      ஆஆஆஆஆ இன்னொன்று.. தேடினீங்க ஆனா படிக்கத் தவறிட்டீங்க.. போன பதிவில் சீராளனின் கவிதை...

      Delete
  23. ஆகா. ஞானியாகிவிட்டீர்களா
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ.. இது ரெண்டாம் தடவையாக ஞானியாகி இருக்கிறேன் ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  24. உண்மைதான் புத்தி ஆலோசித்து பேசும், மனம் வயிற்றில் உள்ளதை சட்டென வாய் வழியாக கொட்டி விடும்.

    நல்லதொரு சிந்தனைக்குறிய பதிவு

    ஜேம்ஸ் ஊரணியோரம் 'பேதி' மரம் உள்ளதோ ?

    ReplyDelete
    Replies
    1. அதேதான்... ஆலோசிப்பதற்குப் புத்திக்கு ரைம் குடுக்க விடுவதில்லை மனம்:))

      //ஜேம்ஸ் ஊரணியோரம் 'பேதி' மரம் உள்ளதோ ?//

      சே...சே.. வரவர கில்லர்ஜிக்கு ஓவரா டங்கு ஸ்லிப் ஆகுதே:) கர்ர்ர்:)) அது “தேம்ஸ் நதிக்கரை ஓரம்ம்..... பேதி மரமில்லை போதிமரமாக்கும்ம்ம்ம்ம்ம் அதுக்குக் கீழதான் ஆச்சிரமம் இருக்கு.. பிளேனில அம்பேரிக்கா போனால் ஆச்சிரமத்தின் மேல் உச்சியிலே, பூஸ் சின்னம் தெரியும்[கோல்ட் ஆல செஞ்சதாக்கும்:)] அதனைப் பார்த்து ஜன்னலால குதிச்சு வந்திடலாம்:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  25. //மனம் என்பது உணர்ச்சிகளுக்கு அடிமையான ஒன்று.. அதுக்கு சிந்திக்கத் தெரியாது.//
    உண்மை.

    //ஆனா புத்தி/மூளை என்பது அப்படியில்லை, அது நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்தே ஒரு முடிவெடுக்கும், உணர்ச்சிகளுக்கு இடமளிக்காது, நீதி நியாயப்படி நடக்கும்.//

    மிக உண்மை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      மிக்க நன்றி என் கருத்தை உண்மை என ஒத்துக் கொள்றீங்க..

      Delete
  26. நினைத்தது நடக்கும் - இரண்டும் (உள்மனமும் வெளிமனமும்) சமமாகி விட்டால்...!

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீர்கள் தனபாலன்

      Delete
    2. வாங்கோ டிடி வாங்கோ..

      //நினைத்தது நடக்கும் - இரண்டும் (உள்மனமும் வெளிமனமும்) சமமாகி விட்டால்...!///
      ஓ.. சமமானால்தானே.. அப்படி சமமாக பயிற்சி செய்து முடிய, ஆள் குளோஸ் ஆகும் வயசு வந்திடுமோ என்னமோ ஹா ஹா ஹா மிக்க நன்றி...

      Delete
    3. கோமதி அக்காவும் மெடிரேஷன் பண்ணுவதால் தெரிஞ்சிருக்கும்...

      ///ஸ்ரீராம்.Tuesday, June 12, 2018 3:19:00 pm
      சமமாகுமா?///

      ஹா ஹா ஹா இதென்ன கிளவி? ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே கேள்வி?... நீங்கதானே தினமும் 9.30 இல் இருந்து 4 மணிவரை தியானம் பண்றீங்க:)) அப்போ நிட்சயம் சமமாகும்:)).. நீங்க நினைச்சதும் நடக்கும்:)).. ஆனா என்ன நினைச்சீங்க எனச் சொல்லிடுங்கோ:))) ஹா ஹா ஹா:))..

      எனக்கும் இதே டவுட்தான் வந்துது... சமமாவதென்பது ஒரு ஒப்பந்தம் மாதிரி புத்தியும் மனமும் நீண்ட நேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்தால்தானே?.. அதுக்கு நிறையப் பயிற்சி வேணும் போல...

      Delete
    4. அது உங்களை போன்ற ஞானிகளுக்கு நிச்சயம் கைகூடும்.குறைந்த கால பயிற்சியே போதும்.
      புத்தியும் மனசும் ஒப்பந்தம்! நன்றாக சிந்திக்கிறீர்கள்.

      Delete
    5. ///அது உங்களை போன்ற ஞானிகளுக்கு நிச்சயம் கைகூடும்//

      இது ஆருக்கு சொல்றீங்க கோமதி அக்கா? டிடி க்கோ? இல்ல ஞானி அதிராவுக்கோ?:))

      Delete
  27. //மனம் என்பது உணர்ச்சிகளுக்கு அடிமையான ஒன்று.. அதுக்கு சிந்திக்கத் தெரியாது.//
    உண்மை.

    //ஆனா புத்தி/மூளை என்பது அப்படியில்லை, அது நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்தே ஒரு முடிவெடுக்கும், உணர்ச்சிகளுக்கு இடமளிக்காது, நீதி நியாயப்படி நடக்கும்.//

    மிக உண்மை.

    ReplyDelete
  28. //அதனால எப்பவுமே மனதுக்கு முன்னுரிமை குடுத்திடாமல், புத்திக்கு முன்னுரிமை குடுக்கப் பழகிட்டால் நல்லதே.. என்னதான் இருப்பினும் சிலசமயம் இரண்டுமே தோற்று விடுவதும் உண்டு...:)//

    டெய்சிப் பிள்ளை கற்றுக் ஒடுத்த பாடமோ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா டெய்சிப்பிள்ளை மூலம் எனக்கு புத்திக்கும் மனதுக்குமான வித்தியாசம் தெளிவா புரிஞ்சுது கோமதி அக்கா. ஆனா சிலர் இருக்கிறார்கள்.. எப்பவும் அவதிப்படாமல் நிதானமா சிந்தித்து நீண்ட நாள் எடுத்து ஒரு விசயத்தை முடிவு செய்வினம்.. அப்படி இருந்தும் அது தோத்து விடுகிறதே.. அங்குதான் விதி விளையாடுகிறது.. அதனால்தான் முடிவில் அப்பாடல் வரிகளை இணைச்சேன்... “அவனுக்குத்தான் தெரியும்”..

      Delete
    2. //அப்படி இருந்தும் அது தோத்து விடுகிறதே.. அங்குதான் விதி விளையாடுகிறது.. அதனால்தான் முடிவில் அப்பாடல் வரிகளை இணைச்சேன்... “அவனுக்குத்தான் தெரியும்”..//

      சில நேரங்களில் ஏன் இப்படி ஆச்சு என்று சிந்திப்பேன், விதி விளையாடுகிறது, முன் வினை, அவன் நினைத்தால் மாற்றலாம். சிலவற்றை அனுபவத்திதான் கழிக்க வேண்டும்.
      கோபப் படக்கூடாது என்று காலை சங்கற்பம் செய்து கொள்வேன் அன்று தான் நிறைய கோபப்படுவது போல் இருக்கும்.

      தினம் வாழ்க்கையில் பாடம் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம், கற்றுகொடுப்பவர்கள் அனைத்து உயிரினங்க்களும் தான்.

      ஆனாலும் விதிபடிதான் நடக்கும்.அவனிற்று ஓர் அணுவும் அசையாது.

      Delete
    3. ஹா ஹா ஹா அது என்னமோ உண்மைதான் கோமதி அக்கா.. எதை நினைக்கக்கூடாது என நினைக்கிறோமோ அதைத்தான் அடிக்கடி நினைப்போம்.. அதுபோல எதைச் செய்யக்கூடாது என நினைக்கிறோமோ.. அதையே செய்யும்படி இறைவன் சோதிப்பார் நம்மை:))

      Delete
  29. ஊசி இணைப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மிக்க நன்றிகள் அனைத்துக்கும் கோமதி அக்கா.. இம்முறை உங்களுக்குப் பிடிச்ச மெடிரேஷன் என்பதானால் அடிக்கடி ஓடி வந்திருக்கிறீங்க நன்றி..

      Delete

  30. மனம் - புத்தி விளக்கம் ...அருமை...அதிரா..



    என்ன பல நேரம் எது புத்தி...எது மனசு ன்னு தான் கண்பூசன்...மீ what to டூ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      //எது மனசு ன்னு தான் கண்பூசன்//

      எப்பவும் முன்னாலே குதிச்சு ஆலோசனை சொல்வது மனது.. உள்ளுக்குள்ளே இருந்து மெதுவா சொல்வது புத்தி.. கிட்டத்தட்ட புத்தியும் உள்ளுணர்வும் கூட ஒன்றனச் சொல்லலாமோ எனவும் இருக்கெனக்கு:)..

      மிக்க நன்றி அனு.

      Delete
  31. தேவையற்ற எண்ணங்களை நீக்கி, மனதை தேவையான் எண்ணத்தில் வைத்திருப்பற்கான முயறைக்குப் பெயர் தியானம்.
    நாம் அனைவரும் முயற்சி தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

    நீங்களும் கோபத்தை விடாமல் வியத்து இருக்க தியானம் செய்கிறீர்கள்.கோபம் தேவையான ஒன்று என்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தேவையான் எண்ணத்தில் வைத்திருப்பற்கான முறைக்குப் பெயர் தியானம்.

      Delete
    2. நீங்களும் கோபத்தை விடாமல் இருக்க தியானம் செய்கிறீர்கள்

      Delete
    3. //தேவையான் எண்ணத்தில் வைத்திருப்பற்கான முறைக்குப் பெயர் தியானம்.//

      ஹா ஹா ஹா திருத்தத்திலும் ..ன் தான் போட்டிருக்கிறீங்க..

      சரியாக சொல்லியிருக்கிறீங்க கோமதி அக்கா..

      //நீங்களும் கோபத்தை விடாமல் இருக்க தியானம் செய்கிறீர்கள்//

      ஹா ஹா ஹா அது அஞ்சுவோடு மட்டும்:) ஹா ஹா ஹா.. மற்றும்படி எனக்குக் கோபம் வருவதில்லை...

      Delete
  32. இறைவனிடம் விட்டு விட வேண்டும். ஆட்டி வைக்கிறான் ஆடுகிறோம். என்பதை பாடல் சொல்கிறது.
    நம் கடமையை செய்வோம். முடிவு அவன் கையில்.

    ReplyDelete
    Replies
    1. அதேதான்.. எதுவாயினும் முடிவை எடுக்கப் போறவர் அவர்தானே...

      Delete
  33. நல்ல ஆராய்ச்சி செய்து இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அக்கா.. உற்சாகம் குடுத்திட்டீங்க.. ச்ச்ச்சோ. ஆராட்சிகள் டொடரும்:))

      Delete
  34. When there is a conflict between the head and the heart always the heart wina and the head loses

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..

      இதயத்தில இருப்பது மனசு... தலையில் இருப்பதுதானே புத்தி.. அப்போ இதயம் என்பது செண்டிமெண்ட்ஸ் க்கு அடிமையாவது...

      ஆனா இரண்டும் மோதி இதயம்தான் வெல்லும் எனில்.. அது தப்பாகும் வாய்ப்பு அதிகம் எல்லோ.. மனசு மூளைக்கு விட்டுக்குடுக்காது போலும்:))

      மிக்க நன்றி.

      Delete
    2. அதிரா - பையனுக்கு சுகமில்லை. குளிர் பானம் சாப்பிடக்கூடாது. அவன் கேட்கிறான். கூடாது என்று தாய் சொல்றா. 'ப்ளீஸ்.. நல்ல அம்மா... கொஞ்சம் தாங்கோ.. ' என்று பையன் கொஞ்சிக் கெஞ்சும்போது, அம்மாவின் இதயம்/மனசு என்ன சொல்லும், புத்தி என்ன சொல்லும், எது கடைசியில் ஜெயிக்கும் என்று யோசிச்சுப் பாருங்க. 'சரி சரி... பிள்ளை ஆசையாக் கேட்குது. என்ன மேக்சிமம் ஆயிடும்.. காய்ச்சல் வரலாம். பாத்துக்குவோம்' என்று தோணும்.

      மனசால ஒரு முடிவு எடுக்கும்போது, அதுல செண்டிமெண்ட், பாசம், அன்பு, ஆசை, காதல் என்று பல மனித உணர்ச்சிகளின் கலவையாக அல்லது அதன் விளைவாக இருக்கும். புத்தி, 'பிஸினெஸ்' லைக்காக, சட்டப்படியான நியாயமான முடிவுகளையே ரெக்கமெண்ட் செய்யும். மனிதருக்கு பெர்சனல் (நீங்க பேசனல் என்று எழுதுவீங்க) திருப்தி, மனசு சொன்னபடி செய்யும் காரியத்துக்குத்தான் உண்டு. 'மனசு சொல்லி' அதன் பயனைப் பெறுபவர்கள், அந்த அன்பைத்தான் காலம் பூராவும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

      Delete
    3. ///மனிதருக்கு பெர்சனல் (நீங்க பேசனல் என்று எழுதுவீங்க) திருப்தி, மனசு சொன்னபடி செய்யும் காரியத்துக்குத்தான் உண்டு. 'மனசு சொல்லி' அதன் பயனைப் பெறுபவர்கள், அந்த அன்பைத்தான் காலம் பூராவும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்///

      நல்ல உதாரணத்தோடு விளக்கியிருக்கிறீங்க. அது உண்மைதான்.. அப்பாமாரோடு அதிகமாக பிள்ளைகளுக்கு கோபம் எரிச்சல் வருவதற்குக் காரணம்.. அவர்கள் அதிகமாக புத்தியால சிந்திச்சு சொல்லுவதால்..

      அம்மாக்கள் பாசம் அதிகமாகத் தெரிவதற்குக் காரணம்.. உணர்ச்சிகளுக்கு அதிகம் இடம் கொடுத்து மனசால சிந்திபதால்.. கரெக்ட்டுத்தானே.. அவ்வ்வ்வ்வ்வ்வ் புரிஞ்சுபொச்சு இப்போ ஜி எம் பி ஐயா வின் ஃபுரூட் லங்குவேஜ்:)) ஹா ஹா ஹா.

      Delete
    4. //அப்பாமாரோடு அதிகமாக பிள்ளைகளுக்கு கோபம் எரிச்சல் வருவதற்குக் காரணம்.. அவர்கள் அதிகமாக புத்தியால சிந்திச்சு சொல்லுவதால்.// - இதைப் படிக்கும்போது மனசு என்ன என்னவோ சிந்திக்கிறது. பொதுவா பதின்ம வயதிலேர்ந்து பையன் அப்பாவுக்கு நண்பனா இருக்கும் வாய்ப்பு குறைவு. பெண்ணுக்கு அப்பாவிடம் இன்னும் நெருக்கம் இருக்கும் (அதைப் புரிஞ்சிக்கிறது ராக்கெட் சயன்ஸ் இல்லை. பையன் அடுத்த தலைவனா ஆகறதுக்கான பாதைல இருப்பான். பெண், நம்மை விட்டுப் பிரியப்போகும் பாதையில் பயணப்படுவாள்)

      நீங்க சரியான பாயிண்டை எழுதியிருக்கீங்க. பசங்களுக்கு 'புத்தியால சிந்திக்கறவங்களை விட' பதின்ம வயதுகளில் 'இதயத்துனால சிந்திக்கறவங்களைத்தான்' ரொம்பப் பிடிக்கும். ஆனா, பையன் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும்போது, ஆலோசனை தேவைப்பட்டால் பொதுவா, அப்பாவைத்தான் நாடுவான் (அம்மாவை அல்ல ஹா ஹா ஹா)

      Delete
  35. புத்தியும், மனசும் சேர்ந்து வேலை செய்தால் என்ன செய்யறதாம்? எனக்கெல்லாம் தியானம் செய்ய உட்கார்ந்தால், இன்னிக்கு அடுத்து என்ன வேலைனு புத்தி போகும். மனம் அதைத் தடுக்க முயலும். சோர்ந்து போயிடும். அதன் போக்கிலே விட்டுடுவேன். பார்த்தால் ஒரே சூன்யமா ஆயிருக்கும். :))))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ...

      //புத்தியும், மனசும் சேர்ந்து வேலை செய்தால் என்ன செய்யறதாம்?//
      இரண்டும் சேர்ந்தால் நல்ல முடிவு கிடைக்கும் என்கிறார்கள்..

      //எனக்கெல்லாம் தியானம் செய்ய உட்கார்ந்தால், இன்னிக்கு அடுத்து என்ன வேலைனு புத்தி போகும்//

      ஹா ஹா ஹா அது ஆரம்பநிலை அப்படித்தான் இருக்குமாம்:))

      Delete
  36. தேவையான சமயத்தில் கோபம் வந்தால் தான் நல்லது! சும்மா இருந்தால் அது சரியாப் புரிஞ்சுக்கலைனா என்ன செய்யறது?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்ல கீசாக்கா கோபம் வரும்போது அமைதியாகிவிடுவதே நல்லது.. அப்போதான் கோபம் தன்னால போயிடும்.. இல்லை எனில் கோபத்தில் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் வார்த்தைகளை விட்டிடுவோம் பின்புதான் கவலைப்படுவோம்.. இதுவும் புத்தி-மனசு பண்ணும் வேலைதான் போலும்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  37. வணக்கம் சகோதரி

    அருமையான அலசல் மனமா, புத்தியாவென்ற விளக்கமான அலசல்.

    /மனம் என்பது உணர்ச்சிகளுக்கு அடிமையான ஒன்று.. அதுக்கு சிந்திக்கத் தெரியாது. கண்டதையும் காதல் செய்யும்.. கண்டதையும் விரும்பும்... கண்டதையும் பேசும்.. இதனாலேயே அப்பாவியாக மாட்டிக் கொண்டு விளிக்கும்[ளி கரெக்ட்தானே?:)]

    ஆனா புத்தி/மூளை என்பது அப்படியில்லை, அது நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்தே ஒரு முடிவெடுக்கும், உணர்ச்சிகளுக்கு இடமளிக்காது, நீதி நியாயப்படி நடக்கும்./

    மனம் எதையும் நினைத்தவுடன் தயங்காமல் பேசி விடுகிறது. புத்தி எதையும் நிதானித்து தெளிவுடன் பேசுகிறது. ஒரு செய்கையின் மீது வெறுப்பு வரும் போது மனசுக்குத்தான் முதலில் கோபம் என்ற உணர்ச்சி வருகிறது. அதனால் அது கடுமையான வார்த்தைகளைக் கொண்டு வாதம் செய்யுமளவிற்கு பேசி விடுகிறது. அந்தக் கோப உணர்ச்சியை மனசு கொட்டித்தீர்த்ததும், புத்தி ஆலோசித்து "இப்படி பேசி விட்டாயே" என்று அமைதியாக கூறுவதை ஏற்கவும் முடியாமல், தான் பேசியது சரிதான்.. என வாதாடவும் முடியாமல் சுருங்கி களைத்துப் போகும்.

    இதனால்தான் கோபம் வரும் போது எதுவும் பேசாமல் அமைதி காக்க வேண்டுமென கோபத்தை வென்ற ஆன்றோர்கள் கூறினார்கள். (எங்கே.. இந்த அறிவுரை சொல்லி கேட்கும் போதே நமக்குள் கோபம் வருவதை தவிர்க்க இயலவில்லையே..)

    அருமையான சிந்திக்கும் பதிவொன்றை எடுத்து எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகளுடன், பாராட்டுக்கள்.

    ஊசிக்குறிப்பின் வாசகங்கள் அருமை..
    அழகான அந்த வரிகளை படிக்கும் போது,

    மனிதன் ஒரு பிரச்சனை தனக்கு வரும் போது வக்கிலாக இருந்து வாதாடுகிறான்

    அதே பிரச்சனை அடுத்தவனுக்கு வரும் போது அங்கு நீதிபதியாய் இருந்து செயலாற்றுகிறான்.

    என்று எங்கோ படித்த வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன. தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலா சிஸ்டர் வாங்கோ..

      //மனம் எதையும் நினைத்தவுடன் தயங்காமல் பேசி விடுகிறது. புத்தி எதையும் நிதானித்து தெளிவுடன் பேசுகிறது. ஒரு செய்கையின் மீது வெறுப்பு வரும் போது மனசுக்குத்தான் முதலில் கோபம் என்ற உணர்ச்சி வருகிறது. அதனால் அது கடுமையான வார்த்தைகளைக் கொண்டு வாதம் செய்யுமளவிற்கு பேசி விடுகிறது. அந்தக் கோப உணர்ச்சியை மனசு கொட்டித்தீர்த்ததும், புத்தி ஆலோசித்து "இப்படி பேசி விட்டாயே" என்று அமைதியாக கூறுவதை ஏற்கவும் முடியாமல், தான் பேசியது சரிதான்.. என வாதாடவும் முடியாமல் சுருங்கி களைத்துப் போகும்.///

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ் மிக அருமையாக மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீங்க.

      //இதனால்தான் கோபம் வரும் போது எதுவும் பேசாமல் அமைதி காக்க வேண்டுமென கோபத்தை வென்ற ஆன்றோர்கள் கூறினார்கள். (எங்கே.. இந்த அறிவுரை சொல்லி கேட்கும் போதே நமக்குள் கோபம் வருவதை தவிர்க்க இயலவில்லையே..)//

      ஹா ஹா ஹா இதுவும் உண்மையே.. கோபத்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலும் சிலர் விடமாட்டினம்:) நாமும் கோபத்தை வெளியே காட்டும்வரை எதையாவது சொல்லி சீண்டிச் சிண்டி.. நம்மைக் கோபப்பட வச்சிடுவினம்:))) ஹா ஹா ஹா

      Delete
    2. ///மனிதன் ஒரு பிரச்சனை தனக்கு வரும் போது வக்கிலாக இருந்து வாதாடுகிறான்

      அதே பிரச்சனை அடுத்தவனுக்கு வரும் போது அங்கு நீதிபதியாய் இருந்து செயலாற்றுகிறான்.

      என்று எங்கோ படித்த வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன.///

      ஆவ்வ்வ் மிக அருமை.. இதுவும் உண்மைதானே.. அடுத்தவர்களுக்கு தீர்ப்புச் சொல்வது ஈசி:).. நமக்கு தீர்ப்பென்பது.. நம் மனம் விரும்பும்படியேதான் கிடைக்கோணும் என எதிர்பார்ப்போம்:))..

      மிக்க நன்றி அனைத்துக்கும்.

      Delete
  38. அடுத்தவருக்கு அட்வைஸ் எனில் எல்லாரும் முன்னுக்கு நிற்பார்கள்.ஏனென்றா அது ஈசியெல்லோ. ஊருக்கு உபதேசம் உனக்கல்ல. என்பதுபோல.
    இப்போ ஞானியாகி(ஞானி அதிரா) தியானம்,மனம்,புத்தி என ஏதோ சொல்லி ஒரு பதிவு எழுதுகிறீங்க. ஞானியானால் உபதேசம் செய்ய தானா வந்திடுமோ.....இருக்கும். சரி நல்ல விடயமாக சொல்லியிருக்கிறீங்க. புத்தி சொல்வதை கேட்டு நட்ந்தால் பிரச்சனை இருக்காதே. மனம்தான் மெஜாரிட்டியாக இருக்கும். ''அது ஏனோ மனம் கேட்குதில்லை என்றுதானே சொல்லுகிறோம்.'' இனியாவது புத்தி சொல்வதை கேட்க முயல்வோம்.

    //எனக்குத்தான் கோபம் வருவதில்லையே உங்களுக்கும் தெரியுமே.. ஆனா வந்தாலோ, மனதில் வைத்து சாதிக்கும் பழக்கமெல்லாம் இல்லை// ஒத்துக்கொள்கிறேன் ஞானி அதிரா.
    பார்த்து கவனம் மெடிட்டேஷன் இன்னும் சொப்ட் ஆக ஆக்கிபோடும் ஆக்களை.
    நீங்க படம் படமா போட்டாலும் நாங்க பார்ப்போம். அதை போடாமல் விடாதேங்கோ.
    பழைய பாடல். கனகாலத்துக்கு பின். உண்மையில் நீங்கள் போடும் பாடல் அனேகமாக நான் சமீபமாக கேட்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //ஊருக்கு உபதேசம் உனக்கல்ல. என்பதுபோல. //
      ஹா ஹா ஹா அதேதான்.. இப்படியான பலரை கண்டிருக்கிறேன்ன்:)).

      //இப்போ ஞானியாகி(ஞானி அதிரா) தியானம்,மனம்,புத்தி என ஏதோ சொல்லி ஒரு பதிவு எழுதுகிறீங்க. ஞானியானால் உபதேசம் செய்ய தானா வந்திடுமோ.....இருக்கும்.///

      அப்போதானே பக்த கோடிகள்:) வந்து என் ஆச்சிரமத்தில் குமிவார்கள்:)) ஹா ஹா ஹா:)).. இக்காலத்தில் மக்களுக்கு அதிகம் தேவைப்படுவது.. ஆறுதலான பேச்சு... அன்பான அணைப்பு மட்டுமே.. அதன் பின்புதான் எல்லாமும்:)..

      //ஒத்துக்கொள்கிறேன் ஞானி அதிரா//

      ஆவ்வ்வ்வ் நீங்களாவது ஒத்துக் கொண்டீங்களே அதுக்காகவே ஒரு வைர மோதிரம் தருவேன்ன் ஆனா இப்போ அல்ல..:)) ஆனீஈஈஈ போய் ஆடி வரட்டும்:) தள்ளுபடியில் வாங்கித்தாறேன்ன்:)).

      ///நீங்க படம் படமா போட்டாலும் நாங்க பார்ப்போம். அதை போடாமல் விடாதேங்கோ.///

      ஆவ்வ்வ் சீராளன் கவிஞர் திட்டுறாரே எனப் போடமல் விட்டேன்:)) இப்போ நீங்க ஜொள்ளிட்டீங்க இல்ல:)) அடுத்து படங்களேதான்:))..

      கவிஞர் எனில் படங்களை ரசிக்கோணும் திட்டக்கூடாது என அவரிடம் கொஞ்சம் சொல்லி விடுங்கோ அம்முலு:))

      இப்பாடல் கிட்டத்தட்ட மறந்திருந்த பாடல்தான்.. ரேடியோவில் கேட்டதும் விக்கித்துப்போய் இங்கு போட்டு விட்டேன்.

      மிக்க நன்றி அம்முலு...

      Delete
  39. வணக்கம் ! பூசாரே !

    நல்லாத்தான் எழுதி இருக்கீங்க கடைசியில நம்ம பேரைப்போட்டுக் கவுத்துட்டீங்களே மியாவ் ! இதை நான் டெல்லில பேசிக்கிறேன் இப்போ கவிதை எழுதிப் பார்க்கிறேன் .....

    புத்தியும் மனமும் ஒன்றா ?
    ...புலம்பிடும் அதிரா கேளாய் !
    அத்தியும் பூவும் ஒன்றாய்
    ...அடிமரத் திருத்தல் போல
    புத்தியும் மனமும் நாளும்
    ...புதைந்துளம் வாட்டும்! ஆங்கோர்
    பத்தியும் பணிவும் கொண்டால்
    ...பகையிலா இன்பம் சூழும் !

    கத்தியில் கூர்மை கொண்டால்
    ...கடினமும் அறுத்தல் போலப்
    புத்தியில் கூர்மை கொண்டால்
    ...பொய்மனம் அறுக்கும்! வாழ்வின்
    முத்தியில் தடுமாற் றங்கள்
    ...முளைவிடா திருக்கும்! நல்லோர்
    மத்தியில் அதிரா வைப்போல்
    ...மன்பதை சிறக்க வைக்கும் !

    காதலால் மனத்தில் காயம்
    ...கண்டவர் கோடி !இங்கே
    சாதலால் ஒன்றும் இல்லை
    ...சலனமே வாழ்வின் தொல்லை!
    ஈதலால் கல்வி மட்டும்
    ...இருமடங் காகும் என்பார்
    ஆதலால் அறிவே மேன்மை
    ...அறிந்திலார்க் கில்லை கேண்மை !

    பனைமரக் கருக்குப் போலே
    ...பண்பிலார் கற்றுத் தேர்ந்தால்
    தனைமறந் திருக்கும் வேளை
    ...தன்றலை செருக்கும் ! ஆனால்
    மனையறம் காக்கும் மாந்தர்
    ...மகிழ்வுறு மனத்தில் என்றும்
    வினைதரும் எண்ணம் எந்த
    ...விதத்திலும் சேர்வ தில்லை !

    கடைசியில் தேங்காய் ஒன்றைக்
    ...கத்தியால் வெட்டிப் பொங்கல்
    மடையினில் வைப்ப தைப்போல்
    ...மகிழ்தரும் பதிவின் ஈற்றில் !
    விடையிலாக் கேள்விக் குள்ளே
    ...விம்மிடும் என்றன் பேரை
    அடைப்பினுள் இட்டீர் !முன்னம்
    ...அளித்த'அக் கவிதைக் காயோ ?

    அருமையா இருக்கு இப்படித்தான் நல்லனவற்றை எழுதச் சொன்னோம் எழுதிட்டீங்க நன்றி நன்றி ஆமா அந்தப் பூனைக்கு தலையில கண்டமா தலை கீழா நிற்குது அவ்வ்வ்வ்

    பாடலும் படமும் ஊசிக் குறிப்பும் உள்ளம் தொட்டது நன்றி பூஸ்

    ஹா ஹா ஹா .......................................................அஞ்சு அக்கோய் அடியேனைக் காத்திட வாராயோ ! அதிரா கத்தியுடன் இருக்கிறா
    அவங்களைக் கலாய்க்கப் பதிவு கேட்டீங்க இல்ல இப்போ வாங்கோ கலாய்ப்போம் .....!






    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ..

      //நல்லாத்தான் எழுதி இருக்கீங்க கடைசியில நம்ம பேரைப்போட்டுக் கவுத்துட்டீங்களே மியாவ் ! இதை நான் டெல்லில பேசிக்கிறேன் இப்போ கவிதை எழுதிப் பார்க்கிறேன் ///

      ஹா ஹா ஹா அப்படி சொன்னால்தானே அடுத்த என் “படப்” போஸ்ட்டுக்கு எதுவும் சொல்லாமல் கவிதை எழுதுவீங்க ஹா ஹா ஹா ..

      //கத்தியில் கூர்மை கொண்டால்
      ...கடினமும் அறுத்தல் போலப்
      புத்தியில் கூர்மை கொண்டால்
      ...பொய்மனம் அறுக்கும்! வாழ்வின்
      முத்தியில் தடுமாற் றங்கள்
      ...முளைவிடா திருக்கும்//

      ஆவ்வ்வ்வ்வ் என்ன ஒரு உவமையான வரிகள்.. அழகு அழகு.. மிக ரசிக்க வைக்குது.

      //மன்பதை சிறக்க வைக்கும் !//
      மன்பு என்றால் என்ன??

      Delete
    2. ///கடைசியில் தேங்காய் ஒன்றைக்
      ...கத்தியால் வெட்டிப் பொங்கல்
      மடையினில் வைப்ப தைப்போல்
      ...மகிழ்தரும் பதிவின் ஈற்றில் !
      விடையிலாக் கேள்விக் குள்ளே
      ...விம்மிடும் என்றன் பேரை
      அடைப்பினுள் இட்டீர் !முன்னம்
      ...அளித்த'அக் கவிதைக் காயோ ?///

      ஹா ஹா ஹா கவிதைக்காக அல்ல:)) படம் படமாகப் போட்டுவிட்டேன் என என்னைத் திட்டியமைக்காக:)).. பிக்கோஸ் இன்னும் நிறையப் படங்கள் என்னிடம் இருக்கெல்லோ போட:))..

      //நன்றி நன்றி ஆமா அந்தப் பூனைக்கு தலையில கண்டமா தலை கீழா நிற்குது அவ்வ்வ்வ் ///

      கர்ர்ர்ர்:)) அது யோகா செய்கிறதாம்ம்ம்:))

      //அஞ்சு அக்கோய் அடியேனைக் காத்திட வாராயோ ! அதிரா கத்தியுடன் இருக்கிறா
      அவங்களைக் கலாய்க்கப் பதிவு கேட்டீங்க இல்ல இப்போ வாங்கோ கலாய்ப்போம் ///

      நோஓஓஓஓஓ அவ இப்போ வரமாட்டா..பிக்கோஸ்ஸ்ஸ்:)) ஒரு ஞானியோடு[என்னைச் சொன்னேன்:))]மோதப்பயம் அவவுக்கு.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் சீராளன்...

      கவிதை மிக அருமை .. சளைக்காமல் போஸ்ட்டுக்கு கவிதை தருவதுக்கு ஸ்பெசல் நன்றி... உங்களுக்கும் ஒரு டயமண்ட் வோச் தரப்போகிறேன்ன்ன்:)) எதுக்கும் ஆடித்தள்ளுபடி வரட்டும்:)).

      Delete
    3. சீராளன் -

      "மனையறம் காக்கும் மாந்தர் ...மகிழ்வுறு மனத்தில் என்றும்
      வினைதரும் எண்ணம் எந்த ...விதத்திலும் சேர்வ தில்லை !"

      அதிராவுக்கு ஐஸ் வைப்பதற்காக இப்படி எழுதிவிட்டீர்களா? உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதோ? ஆனபிறகு, 3-4 வருடங்கள் சென்று இந்தக் கவிதையை மீண்டும் ஒரு முறை படித்துப்பார்த்து 'எழுதியது உண்மைதான்' என்று சொல்லுங்கள்.


      "பனைமரக் கருக்குப் போலே ...பண்பிலார் கற்றுத் தேர்ந்தால்
      தனைமறந் திருக்கும் வேளை ...தன்றலை செருக்கும் "

      மிகவும் ரசித்தேன். அருமையா எழுதியிருக்கீங்க.


      இங்கே
      சாதலால் ஒன்றும் இல்லை
      ...சலனமே வாழ்வின் தொல்லை! - இதுல என்ன சொல்ல வர்றீங்க? காதலால் மனசில் காயம் எப்படி வரும்? நிறைவேறாத அல்லது ஒருதலைக் காதல்னாலதானே வரும்? இதில் சலனம் எங்கு வந்தது?

      புத்தியில் கூர்மை கொண்டால்
      ...பொய்மனம் அறுக்கும்! - இது அருமையான வரிகள். தெரிந்து எழுதினீங்களா? மனம் எப்போதும் மாயை வசப்படும். புத்தி பொதுவா தீர்க்கமாகச் சிந்திக்கும். அதை உபயோகப்படுத்தும்போது மாயையால் சூழப்பட்ட மனதை அறுக்க வல்லது. மிக அருமை.

      அத்தியும் பூவும் ஒன்றாய் ...அடிமரத் திருத்தல் போல
      புத்தியும் மனமும் நாளும் ...புதைந்துளம் வாட்டும் - இதுல வார்த்தைப் பிரயோகம் சரியா வந்திருக்கா? அத்திப் பூ/காய்? அடிமரத்திலா இருக்கும்? பலாவுக்கு இது சரியாப் பொருந்தும். புத்தியும் மனமும் எங்கு புதைகிறது? இரண்டும் வெவ்வேறு வழியைக் காட்டும் என்பது சரியா இருக்கும்.


      தேங்காய் ஒன்றைக் ...கத்தியால் வெட்டிப் பொங்கல்
      மடையினில் வைப்ப தைப்போல் - இதுல இலையில் பொங்கலை வைத்து, அத்துடன் உடைத்த தேங்காயை வைப்பதைச் சொல்லியிருக்கீங்க. அருமையா காட்சியகப்படுத்தியிருக்கீங்க.

      கவிதைத் திறனுக்குப் பாராட்டுகள். இளமதி அவர்களைத்தான் காணோம்.

      Delete
    4. டமில்ல டி ஆக்க்க்க்க்கும் அதிரா - மன்பதை - உலகம். இதனை, 'மன்பு அதை' என்று பிரித்துப்படிக்கக்கூடாது.

      Delete
    5. ///அதிராவுக்கு ஐஸ் வைப்பதற்காக இப்படி எழுதிவிட்டீர்களா? //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிராவைபற்றி ஆரும் ரெண்டு நல்ல வசனம் சொல்லிடப்படாதே:)) ஹா ஹா ஹா..

      //உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதோ? //
      அவருக்கு இன்னும் ஆகவில்லை என்றுதான் நினைக்கிறேன்ன் சின்னத்தம்பிதான். ஆனா காதலில் ஏதோ கோளாறாகி... அதனால கஸ்டப்பட்டு தெளிஞ்சு வருகிறார் எனவும் நினைக்க்கிறேன்ன்[ஏனெனில் எப்பவும் காதல் பற்றி கவலையான கவிதைகளே எழுதுவார்.. இப்போ என் பக்கத்தில்தான் மாறுபட்டு எழுதுகிறார் .. என்பது பார்க்க மகிழ்ச்சி]]... தப்பெனில் மன்னிக்கோணும் சீராளன்..

      //இளமதி அவர்களைத்தான் காணோம்.///
      மெயிலுக்கும் அவ பதில் போடவில்லை கர்ர்ர்:))

      //டமில்ல டி ஆக்க்க்க்க்கும் அதிரா - மன்பதை - உலகம். இதனை, 'மன்பு அதை' என்று பிரித்துப்படிக்கக்கூடாது.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அன்று பார்த்து எனக்கு காய்ச்சல்.. ஸ்கூலுக்கு லீவு:)).. ஓ மன்பதை என்பது உலகமோ? அறியவே இல்லையே நான் இதுவரை... மிக்க நன்றி.

      Delete
    6. மன்பதை - மக்கள் கூட்டம், மனித குலம் - அதனால் உலகம் என்று பொருள் பெறும்.

      //அன்று பார்த்து எனக்கு காய்ச்சல்.. // - அன்றைக்குத்தான் சர்டிஃபிகேட் (தமிழ் எக்ஸாமுக்கு) தருவதாக இருந்தார்களா?

      எனக்கு சீராளன் திறமை ரொம்பப் பிடிக்கும். அவருக்கு ஒரு நல்ல புரவலர் வந்து அவரைக் கைதூக்கிவிடவேண்டும். அதற்கான திறமை தகுதி சீராளனுக்கு இருக்கு. (ஆனா பாருங்க... பொதுவா தமிழ்ப் புலமை அதிகமா இருந்தா அங்கு லட்சுமி வாசம் செய்ய மாட்டா. அதில் விதிவிலக்காக இருப்பவர்கள்போல் சீராளன் வாழ்க்கை அமையவேண்டும்)

      Delete
    7. ////அன்று பார்த்து எனக்கு காய்ச்சல்.. // - அன்றைக்குத்தான் சர்டிஃபிகேட் (தமிழ் எக்ஸாமுக்கு) தருவதாக இருந்தார்களா?
      //

      சே..சே.. அதுக்கெல்லாம் எனக்கு காய்ய்ய்ய்ய்ச்சல் வராதாக்கும்:))

      //(ஆனா பாருங்க... பொதுவா தமிழ்ப் புலமை அதிகமா இருந்தா அங்கு லட்சுமி வாசம் செய்ய மாட்டா.//
      ஹா ஹா ஹா நேக்குப் புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:))

      //அதில் விதிவிலக்காக இருப்பவர்கள்போல் சீராளன் வாழ்க்கை அமையவேண்டும்)//

      உண்மைதான்... ஆனா சீராளனும் அதில் உறுதியாக இருந்தால் மட்டும்தானே சாத்தியமாகும்.

      இன்னொன்று, இங்கு உங்களைப்போல ரசிச்சு ஊக்குவிப்பதனாலதான் தொடர்ந்து எழுதுகிறார் இல்லை எனில்.. எழுதி என்ன பயன்.. விழலுக்கு இறைச்ச நீராகிடுமே:) என நினைச்சு எழுதாமல் விட்டிருப்பார்:))..

      பேஸ்புக்கில் முன்பு நிறைய கவிதைகள் இப்படி எழுதுவார்.. அப்போ எனக்கு ஒன்றுமே புரிவதில்லை:)...

      இப்போ எனக்குப் புரியும்படி எழுதுகிறாரா இல்ல, நான் ஞானி ஆகிட்டமையால எனக்குப் புரிகிறதோ என டவுட்டாகவே இருக்கெனக்கு:)) ஹா ஹா ஹா.

      மிக்க நன்றிகள் நெ.தமிழன்

      Delete
  40. வீட்டில் பிள்ளைகள் எதையாவது உடைத்திட்டாலோ இல்லை கை தவறி ஊத்தி விட்டாலோ எதுக்குமே கோபித்ததோ திட்டியதோ இல்லை... என்னை விட என் கணவரிடம் இருந்துதான் இப்பழக்கத்தை அதிகம் கற்றுக் கொண்டேன்.. பொருள் உடைந்தால் வாங்கிடலாம் பிள்ளைகளைப் பயமுறுத்தி வெருட்டிடக்கூடாது என்பார்.... ஏன் உடைந்தது எப்படி உடைந்தது என்றுகூடக் கேட்க மாட்டர்ர்.. நான் வாங்கித்தருகிறேன் புதுசு எனத்தான் சொல்லுவார். வேணுமென்று ஆரும் செய்வதில்லைத்தானே..//

    அருமை இப்படி எல்லோரும் வீட்டில் கடைபிடித்தல் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அக்கா. இன்னொன்று சின்ன வயதில் ஊரில் சில வீடுகளில் பார்த்து ஏற்பட்ட அனுபவங்கள்..

      சிலபேர் கணவன் மனைவிக்குள் இருக்கும் கோபத்தை.. பிள்ளைகள்மேல் அல்லது செல்லப் பிராணிகளின் மேல் காட்டுவர்.

      இன்னுமொன்று பூஸ் ஐ அல்லது பப்பியைக் கலைப்பினம் அப்படிக் கலைக்கும்போது ஏதாவது தடக்கி தாம் கீழே விழுந்திட்டாலோ இல்ல அடிபட்டாலோ.. ஏதோ தம்மில் பிழையில்லை.. அந்த பூஸாலதான் பப்பியாலதான் தமக்கு அடிபட்டு விட்டதென்பினம் அதெல்லாம் எவ்ளோ தப்பு... இப்படி எல்லாம் நான் வருங்காலத்தில் நடக்கவேகூடாது என .. இப்படிச் சம்பவங்களைப் பார்த்து மனதில அனுபவத்தை வளர்ப்பேன்ன் சின்ன வயதிலேயே.

      “கண்ணை எங்கோ மேயவிட்டுக்
      கல்லைக் காலால் மோதி விட்டு
      என்ன சொல்வார் சந்தர்ப்பவாதி..
      கல்லடித்து விட்டது”..

      மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  41. சீராளன் - உங்க கவிதையையும் அதன் நடை அழகையும், பொருட்செரிவையும் என்னைப்போல் நிறையபேர் படித்து அனுபவிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    எப்போதும்போல் மிக அருமை. வார்த்தைகள், சந்தம் மிகச் சரளமாக வருது. என் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ///வார்த்தைகள், சந்தம் மிகச் சரளமாக வருது///

      எதுக்கு இவ்ளோ பெரிய வசனம் எழுதிக் கஸ்டப்படுறீங்க?:) சோட் அண்ட் சுவீட்டா:) அதிராவைப்போல எனச் சொல்லியிருக்கலாமே:)) ஹா ஹா ஹா ...

      Delete
    2. 'அதிராவைப்போல்' என்று சொல்லியிருப்பேன். ஆனா பாருங்க, நீங்க இப்போ 'ஞானி'. எப்போ 'கவிப் பேய் அரசு' என்று டைட்டில் போட்டுக்கிறீங்களோ அப்போ உங்களை கொஞ்சம் அதிகமாவே பாராட்டிடறேன்.

      Delete
    3. //'கவிப் பேய் அரசு//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது இப்போதானே என் கண்ணில பட்டுது:)) நல்லவேளை லேட்டாகப் பட்டமையால் தப்பிட்டீங்க:)).

      Delete
  42. புத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்பது நியாயமானதே. ஆனால் சில சமயத்தில் அந்த புத்தியும் தடுமாறிவிடுகிறதே. என்ன செய்வது?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ... உண்மைதான் புத்தி தடுமாறும்போது பிரச்சனைகள் வந்துவிடுகிறது.... மிக்க நன்றி.

      Delete
  43. வாழ்துக்கள் அக்கா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி வாங்கோ.. எதுக்கு வாழ்த்து? ஓ ஞானி ஆனமைக்கோ ஹா ஹா ஹா எனக்குத்தம்பி தற்புகழ்ச்சி புய்க்காதூஊஊ :))

      மிக்க நன்றி..

      Delete
  44. 'புத்தி, சிந்தித்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும். மனம் உணர்ச்சிகளுக்கு இடம் தருவது' -இதுதான் இந்த ஆராய்ச்சியின் முடிவு என்று நினைக்கிறேன்

    புத்தியின் இருப்பிடம்[மூளை], அதன் கட்டமைப்பு, இயக்கம் பற்றியெல்லாம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிந்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால், மனம் குறித்த எந்தவொரு கண்டுபிடிப்பும் இதுவரை நிகழ்த்தப்படவில்லை.

    உடம்புக்குள் உணர்ச்சிகள்[அன்பு, ஆசை, பாசம், கோபம், தாபம் போன்றவை] இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை[மூளையைப் படம் எடுத்தோ, ஸ்கேன் செய்தோ புலப்படுத்துவது போல] என்று நம்புகிறேன். என்றாலும் அவை இருப்பது உண்மை.

    அந்த உணர்ச்சிகளைத் தூண்டுவது மூளையல்ல; மனம் என்பது இப்பதிவின் மையக் கருத்து.

    மனம் இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அப்படி ஒன்று இல்லை என்றும் சொல்லிவிட இயலாது. சிந்திப்பதற்கு[புத்தி] மூளை இருப்பிடமாக இருப்பது போல, உணர்ச்சிகளின் உற்பத்தி ஸ்தானமாக மனம் என்று ஒன்று இருக்கக்கூடும்.

    மனம் மட்டுமல்ல, ஆன்மா என்று ஒன்று இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதன் இருப்பிடம், இயக்கம், நிலைபேறு[என்றும் அழியாமலிருப்பது] போன்றவை குறித்தும் அறிவியல் ரீதியாக ஏதும் கண்டறியப்படவில்லை.

    ஒவ்வோர் அணுவிலும் கடவுள் இருப்பதாக ஆன்மிகவாதிகள் சொல்கிறார்கள். அவ்வாறாயின் நம் உடம்பிலுள்ள கோடானுகோடி அணுக்களிலும் அவர் இடம்கொண்டிருக்கிறார் என்றாகிறது. உண்மையில் இருக்கிறாரா, அவர் இருப்பதால் நேரிடும் விளைவுகள் எவை என்பது குறித்தும் ஆய்வுகள் நிகழ்த்தப்படுதல் வேண்டும்.

    ஆக, புத்தி, மனம் ஆகியவை குறித்த இந்த ஆய்வு நம் நல்வாழ்வுக்கு மிகவும் தேவையானதே என்று உறுதியாகச் சொல்லலாம்.

    இம்மாதிரி ஆய்வுகளின் மீதான அதிராவின் ஆர்வம் மேலும் மேலும் வளர்தல் வேண்டும் என்பது என் விருப்பம்.

    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ... உங்களிடமிருந்து இவ்ளோ பெரிய கொமெண்ட் நான் எதிர்பார்க்கவே இல்லை... இதுபற்றி நீங்களும் நிறைய ஆராய்ந்துதான் வைத்திருக்கிறீங்கபோல...

      //அந்த உணர்ச்சிகளைத் தூண்டுவது மூளையல்ல; மனம் என்பது இப்பதிவின் மையக் கருத்து.//
      அதேதான்..

      //மனம் இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அப்படி ஒன்று இல்லை என்றும் சொல்லிவிட இயலாது. சிந்திப்பதற்கு[புத்தி] மூளை இருப்பிடமாக இருப்பது போல, உணர்ச்சிகளின் உற்பத்தி ஸ்தானமாக மனம் என்று ஒன்று இருக்கக்கூடும்.//
      இதேதான் 100 வீதம் உண்மை...

      //மனம் மட்டுமல்ல, ஆன்மா என்று ஒன்று இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதன் இருப்பிடம், இயக்கம், நிலைபேறு[என்றும் அழியாமலிருப்பது] போன்றவை குறித்தும் அறிவியல் ரீதியாக ஏதும் கண்டறியப்படவில்லை.///

      ஆவ்வ்வ்வ்வ் இந்த ஆன்மா பற்றியும் நிறையத்தகவல்கள் உலா வருகிறது.... ஆன்மா இருப்பது இதயவறையில்தான் என்கிறார்கள்.. அதாவது ஆன்மா என்பது உயிர்தானே.. அது இதயத்திலதான் இருக்கிறது... அதனால்தான் இதயம் தன் துடிப்பை நிறுத்தும்வரை ஒருவருக்கு மரணம் வருவதில்லை..

      மற்றும்படி உடலின் எந்தப் பாகம் செயல் இழந்தாலும் ... உயிர் போகாதெல்லோ.. சரியாச் சொல்லத் தெரியவில்லை.

      Delete
    2. ///ஒவ்வோர் அணுவிலும் கடவுள் இருப்பதாக ஆன்மிகவாதிகள் சொல்கிறார்கள். அவ்வாறாயின் நம் உடம்பிலுள்ள கோடானுகோடி அணுக்களிலும் அவர் இடம்கொண்டிருக்கிறார் என்றாகிறது. உண்மையில் இருக்கிறாரா, அவர் இருப்பதால் நேரிடும் விளைவுகள் எவை என்பது குறித்தும் ஆய்வுகள் நிகழ்த்தப்படுதல் வேண்டும்.///

      இதுவும் உண்மைதான்.. ஒவ்வொரு மனிதரும்கூட கடவுள் எனத்தானே சொல்கிறார்கள்... ஆனால் ஆராட்சி நடக்கிறதுதான் .. முடிவுதான் சரியாக கிடைப்பதில்லை என நினைக்கிறேன்...

      கடவுள் என்பதும் ஒவ்வொருவரின் நம்பிக்கை தானே... கல் என்றால் அது கல்தான்.. வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்பதுபோல... நம் நம்பிக்கைதானே நமக்கு கடவுளாகத் தெரிகிறது.... சிலசமயம்.. சிலரைப் பார்த்துச் சொல்லுவோமே.. கடவுள் போலே வந்து என்னைக் காப்பாற்றிப் போட்டீங்க என.

      //ஆக, புத்தி, மனம் ஆகியவை குறித்த இந்த ஆய்வு நம் நல்வாழ்வுக்கு மிகவும் தேவையானதே என்று உறுதியாகச் சொல்லலாம்.//

      மியாவும் நன்றி...

      //இம்மாதிரி ஆய்வுகளின் மீதான அதிராவின் ஆர்வம் மேலும் மேலும் வளர்தல் வேண்டும் என்பது என் விருப்பம்.//

      ஹா ஹா ஹா மிக்க நன்றி அறிவுப்பசிஜி... நான் ஆராய்வதெல்லாம் இல்லை எனக்கு ஆராய்வது பிடிக்காது.. ஆனா அப்பப்ப காதில் கேட்பது படிப்பது பார்ப்பது எல்லாத்தையும் மூளையில் ஒரு பக்கம் சேர்த்து வைப்பேன்ன்.. பின்னர் அது தொகுப்பாகிடும்:).. நன்றி.

      Delete
  45. ..ஆனா புத்தி/மூளை என்பது அப்படியில்லை, அது நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்தே ..//

    சரியான சமயத்தில் தவறாக முடிவெடுக்கும்! மனிதபுத்தியைப்போலுண்டோ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஏகாந்தன் அண்ணன் வாங்கோ...

      //சரியான சமயத்தில் தவறாக முடிவெடுக்கும்! மனிதபுத்தியைப்போலுண்டோ..///
      ஹா ஹா ஹா இதுவும் சரிதான்... சிலசமயம் இதுதான் 100 வீதம் கர்க்ட் எனப் புட்த்ஹி சொல்லும் ஆனால் தப்பாகிடும்.. அதைத்தானே விதி என விட்டு விடுகிறோம்:))

      Delete
  46. ,,ஒரு அரைத்தாவணியும் போட்டிருந்தா அந்த ஸ்கொட்டிஸ் லேடி:).. அடிக்கடி தாவணியை எடுத்து எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தா.. விழுகிறதாம்:)//

    புத்தரின் பேரில் அலட்டலா? இதுதான் மெடிட்டேஷன் டெக்னிக்கா?

    இங்கே வேலை செய்வது மூளையா, மனமா?
    அடடா, அவர்கள் பெட்டியில் விழுதே பணமா !

    ReplyDelete
    Replies
    1. ///புத்தரின் பேரில் அலட்டலா? இதுதான் மெடிட்டேஷன் டெக்னிக்கா? //

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ கேட்டிடப்போகுது:)) ஹா ஹா ஹா.. நீங்க மெடிரேஷன் ஏதும் பண்ணியதுண்டோ ஏகாந்தன் அண்ணன்??

      ///இங்கே வேலை செய்வது மூளையா, மனமா?
      அடடா, அவர்கள் பெட்டியில் விழுதே பணமா !///

      ஹா ஹா ஹா ஏதோ கடும் எதிரிபோலவே பேசுறீங்க:)) இரண்டும்தான்:))

      Delete
  47. ..உங்கள் மூச்சை வெளியே விடும்போது.. இந்த கோபத்தை எல்லாம் வெளியே விட்டு, றிலாக்ஸ் ஆகிடுங்கோ என்றா...//

    கோபம் மூக்குக்கு மேலே அல்லவா இருக்கும்? அதை எப்படி மூச்சோடு விடச்சொன்னா அந்தப் பாட்டி ?


    ... ஆனா அஞ்சுவோடு இருக்கும் கோபத்தை மட்டும் வெளியே விட்டிடக்கூடாது என மிகவும் உசாராக இருந்தேன்:))... அதுவும் இல்லை எனில் அஞ்சுவை எப்பூடிக் கொன்றோல் பண்ணுவேன்:)

    இங்கேதான் இருக்கு பாய்ண்ட்! கோபம் இல்லை என்றால் எப்படி மனிதர்களைக் கண்ட்ரோல் பண்ணுவது, கமாண்ட் பண்ணுவது? உலகாள வேண்டாமா?

    ஆகவே கோபமே பாஸிட்டிவ் எனர்ஜி.. இருக்கவேண்டிய நல்ல குணம்..!

    ReplyDelete
    Replies
    1. ///கோபம் மூக்குக்கு மேலே அல்லவா இருக்கும்? அதை எப்படி மூச்சோடு விடச்சொன்னா அந்தப் பாட்டி ?///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மூக்குக்கு மேலே இருப்பது பொய்க்கோபம்:)) உண்மையான கோபம் சுவாசத்திலதான் இருக்குமாக்கும்:)) அதனாலதான் கோபமான நேரம் மூச்சுக் காற்று சூஊஊஊஊஊஊஊடாக வெளியேறும் என்பார்கள்:))... ஹா ஹா ஹா அவ பாட்டியாஆஆஆஆஆ கர்ர்ர்ர்:)) ஒரு 50-55 வயசு இருக்கலாம்:)).

      //இங்கேதான் இருக்கு பாய்ண்ட்! கோபம் இல்லை என்றால் எப்படி மனிதர்களைக் கண்ட்ரோல் பண்ணுவது, கமாண்ட் பண்ணுவது? உலகாள வேண்டாமா?

      ஆகவே கோபமே பாஸிட்டிவ் எனர்ஜி.. இருக்கவேண்டிய நல்ல குணம்..!//

      ஆவ்வ்வ்வ் ஒரு நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன்.. அப்பொ கோபம் என்பது பொஸிடிவ் எனஜியோ உண்மையில்?.... ஆனா அதைக் கொன்றோல் பண்ணத் தெரிஞ்சிருக்கோணுமெல்லோ ஹா ஹா ஹா...

      Delete
  48. //..தன்னை மாற்றிகொள்ள யாருமே நினைப்பதில்லை
    -டால்ஸ்டாய் //

    ஐயா, டால்ஸ்டாய்..அல்லது டோய்! நீங்கள் தப்பாகச் சொல்லிவிட்டீர்கள்.
    தன்னை மாற்றிக்கொள்ள பலர் நினைக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் செய்வதில்லை! ரொம்பக்கஷ்டம்..

    ReplyDelete
    Replies
    1. //ஐயா, டால்ஸ்டாய்..அல்லது டோய்! //

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இண்டைக்கு ஏகாந்தன் அண்ணனுக்கு என்னமோ ஆச்சூஊஊஉ:)).. கிரிக்கெட் மச் பார்த்த எபெக்ட்டாக இருக்குமோ?:)

      //தன்னை மாற்றிக்கொள்ள பலர் நினைக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் செய்வதில்லை! ரொம்பக்கஷ்டம்..///
      இது 200 வீதம் உண்மையேதான்..... சரியாகச் சொல்லிட்டீங்க. பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. என்னில உள்ள இந்த கெட்ட பழக்கத்தை விடத்தான் நினைக்கிறேன்.. ஆனா முடியல்லியே என.

      மிக்க நன்றிகள் ஏகாந்தன் அண்ணன்.. பூகம்பமாய்ப் பொயிங்கிக்கொண்டே நிறைய நல்ல விசயங்கள் சொல்லிட்டீங்க...

      Delete
  49. சகோதரர் சீராளனின் கவிதை மிக அருமை. படிப்பதற்கே எத்தனை அழகாக இருக்கிறது. எப்படி பாராட்டுவதற்கு தெரியவில்லை. எப்பொழுமே அழகாக பாக்கள் இயற்றும் அவர் தமிழ் புலமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊக்குவிப்பு அவரை இன்னும் எழுதத் தூண்டும்.. ஆளைக் காணல்லியே.. படிப்பார் என நினைக்கிறேன்.

      Delete
  50. அனைவரும் மன்னிச்சுக் கொள்ளுங்கோ இன்று எல்லோருக்கும் பதில் தர முடியவில்லை.. விரைவில் தந்திடுவேன்ன்..

    [im] https://tse2.mm.bing.net/th?id=OIP.BQV5U_GkZ4pqE73rb3cmdAHaFi&pid=15.1&P=0&w=231&h=174 [/im]

    ReplyDelete
  51. மனம் தான் எல்லாத்துக்கும் காரணி!பாவம் அந்த சினேஹா மனதால் முடிவு எடுத்து இன்னும் தனிமரம் போல இருப்பதையும் விரைவில் எழுதனும்!)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ... எங்கே அடிக்கடி காணாமல் போய் விடுறீங்க? இப்போ ஸ்நேகாவிடமும் போக முடியாதே:)..

      //பாவம் அந்த சினேஹா மனதால் முடிவு எடுத்து ///
      ஹா ஹா ஹா மனதால் முடிவெடுத்துத்தான் பிரசன்னாவா?:) அப்போ புத்தியால் எடுத்திருந்தால் நேசனோ?:) ஹா ஹா ஹா...

      Delete
  52. ஊசிக்குறிப்பு மிகவும் சிறப்பு!

    ReplyDelete
  53. சீராளன் கவிதை அழகு கவிஞர் இப்ப அதிகம் பிசி போல தொடர்கதைக்கு எல்லாம் ஒரு ஹாய் சொல்ல மாட்டார்!)))

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ் என்பக்கமாவது வருகிறாரே என ஜந்தோசப்படுங்கோ:)) ஹா ஹா ஹா.

      Delete
  54. ஆமா ஏன் பூசார் தலைகீழ் யோகா செய்கின்றார் உடல் இளைக்கவோ?))

    ReplyDelete
    Replies
    1. அது ஞானி ஆனாலே ஓட்டமெட்டிக்கா தலை கீழே போய் விடும்:)) அதாவது தலையில் கனமிருக்காதாம்ம்ம்ம்ம்:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊஊஊ ஒரு படம் போட்டு விட்டு:)) ஹையோ ஹையோ.. மிக்க நன்றிகள் நேசன்.

      Delete
  55. எல்லாம் சரி அதிரா, முதலில் போட்டிருக்கும் பாடல் வழியாக நீங்கள் உணர்த்த விரும்புவது என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ..

      //முதலில் போட்டிருக்கும் பாடல் வழியாக நீங்கள் உணர்த்த விரும்புவது என்னவோ?//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க போஸ்ட் படிக்காமல் பாட்டை மட்டும் கேட்டிட்டுப் போயிருக்கிறீங்க:))

      பாட்டு எப்பவும் சும்மா எனக்குப் பிடிச்சதை மேலே போடுவேன்.. ஆனா இம்முறை போஸ்ட்டுக்கு பொருந்தவே போட்டேன்ன்ன்.. போஸ்ட்டின் முடிவிலே பாட்டு வருகிறதே...

      மிக்க நன்றி.

      Delete
  56. அதிரா! ஊசியும், பதிவுமே அருமை. மனம் போன போக்குப்படி நாம் நடந்தால் நிச்சயமாகப் பல சமயங்களில் தவறான பாதையிலேயே தான் பயணிக்க நேரிடும். புத்தியை கூர்த் தீட்டிக் கொள்ள வேண்டும் அதுதான் நம்மை வழிநடத்தும். நல்ல பதிவு அதிரா.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. உண்மைதான் அடிக்கடி புத்தியைத்தீட்டினால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பலாம், ஆனா புத்தியைத் தீட்ட மனம் விடாது சில சமயங்களில் ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  57. நல்ல பதிவு அதிரா. இதைப் பற்றி நான் அடிக்கடிச் சொல்வதுண்டு. நம் க்ரேஸ் கூட இது பற்றி அறிவியல் ரீதியாக மூளை பற்றி ஒரு பதிவு எழுதத் தொடங்கினார்கள். அது பாதியில் என்று நினைக்கிறேன். நான் சொல்லுவது போலத்தான் அவர்களும் அப்பதிவில் சொல்லியிருந்தார்கள். அவர்கள் அதைப் படங்களும் போட்டு அதாவது மனம் என்பது மூளையின் எந்தப் பகுதியில் நடக்கிறது என்பதையும் சொல்லியிருந்தார்கள். எனக்கு அந்த அளவிற்குப் புத்தி இல்லையே ஹா ஹா ஹா ஹா..
    புத்தி மற்றும் மனம் இரண்டுமே மூளையின் பகுதிகள் தான். அறிவியல் ரீதியில். ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் உணர்வுகள் மேலோங்கும் போது மனம் வென்று விடுகிறது புத்தியையும். நான் புத்தியை மட்டுமே சப்போர்ட் செய்ய மாட்டேன். மனதிற்கும் எனது வோட்ட்டு உண்டு. அது நல்ல ரீதியில் இருக்க வேண்டும் அவ்வளவே. அதாவது மனம் விபரீதமாக, தாறுமாறாகச் சிந்திக்கக் கூடாது.

    ஏன் நான் மனதையும் சப்போர்ட் செய்வேன் என்றால்....மனதில் கொஞ்சமேனும் இரக்கம் வேண்டும். இரக்கம் இல்லையேல் கருணை இல்லையேல் நம்மால் மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது இல்லையா...மன்னித்தல் என்பது மிகப் பெரிய விஷயம்.

    மனதை அடக்கு அடக்கு என்று சொல்லுவார்கள்தான் தியான வகுப்பில். இதுவும் ஆழமான சப்ஜெக்ட். நிறைய பேசலாம். எனக்குத் தெரிந்து ஒரு பெண் மனம் சோர்ந்த நிலையில் தியானம், யோகா என்று சென்றார். பலரும் அவருக்குக் கவுன்சலிங்க் செய்தார்கள் தான். தான் ஹேப்பியாக இருக்கிறேன் என்றும் சொன்னாள் தான். ஆனால் ஒரு நொடிப் பொழுதில் மனம் நெகட்டிவ் முடிவை வலியுறுத்திவிட்டதே. தற்கொலை.!!!

    இது சைக்காலஜியில் மற்றும் ஆன்மீகத்தில் நிறையப் பேசப்படும் ஒன்று. இவை இரண்டுமே மூளைதான் ஆனால் நாம் எப்பகுதியயை அதிகம் யூஸ் பண்ணுகிறோம் என்பதில்தான் இருக்கு விஷயமே.

    புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை நு ஒரு பாடல் இருக்கே. அது உண்மைதான் ஏனென்றால் இந்த புத்தி கொஞ்சம் கூடுதல் ஆகிவிட்டாலும் மனம் தாறுமாறாக நடந்து கொள்வதால் அந்நியன் ஆகும் நிலையும் ஏற்படுகிறதே!!! மனம் சிதைந்து போகும் நிலை. அதே போல் புத்தி அதிகம் இருந்தாலும் சிலருக்கு அதனால் விளையும் ஈகோ மனதில் டாமினேட் செய்தால் மனச் சிதைவு ஏற்படுகிறது. ஹைலி ஈகோயிஸ்டிக்காக இருப்பது அவர்களின் மனதைச் சிதைத்து குணாதிசயங்களையே மாற்றியும் விடும் அபாயம் உண்டு.

    இது ஆழமான சப்ஜெக்ட். உங்கள் கருத்தே எனதும்.....உங்கள் எக்சாம்பிள் அருமைடெய்சிப் பிள்ளை...

    இந்த இடத்தில் நீங்கள் சொல்லுவது போலத்தான் என் செல்லமும் வாமிட் செய்யும் நேரம் தெரிந்துவிடும். அப்போது அவளை நான் வெளியில் அழைத்துச் சென்று விடுவேன். அப்படி இல்லை என்றால் வீட்டில்தான் சத்தி பண்ணுவாள். (இது மலையாளத்திலும் உண்டு இந்த வார்த்தை. நாகர்கோவிலில் இருந்தவரை இந்த வார்த்தைதான் நான் பயன்படுத்தியது. மலையாளத்தில் (ச்சர்த்தி))

    நல்ல உதாரணம் தான் நீங்கள் சொல்லியது...இந்த இடத்தில் இரக்கம் வேண்டும் ஆனால் அதனை புத்தியுடன் ஹேண்டில் செய்தால் நல்லது....நாமும் வெளியில் சென்று அவர்களுடன் இருந்தாலோ....??? ஜஸ்ட் ஒரு சஜஷன். பூஸைப் பற்றித் தெரியலை பெர்சனல் அனுபவம் இல்லாததால்...

    அனுபவம் என்று சொன்னதும் நினைவுக்கு வருது. நமது அனுபவங்களே நிறைய பாடங்கள் கற்றுத் தரும் உங்களைப் போஅல்த்தான் நானு சிறு வயதிலிருந்தே சுற்றி நடப்பதையும் எனக்கு நேர்வதையும் பார்த்து பல பாடங்கள் கற்றுக் கொண்டேன். அனுபவம் நேரும் போது நாம் நம் புத்தியைச் செலுத்தி அது கற்றுத் தரும் பாடத்தைக் கற்க வேண்டும் இல்லையேல் மனம் பக்குவப்படாது...சரிதானே!!?? அதிரா..அனுபவங்களும் நம் புத்தியைத் தீட்டும் தான் இல்லையா!! நாம் மனதிற்கு அடிமையானால்?!!! சரிதானே!!

    இன்னும் நிறைய சொல்லலாம் அதிரா...எனக்கு மிகவும் பிடித்த அவ்வப்போது சிந்திக்கும் சப்ஜெக்ட். ..அருமையான பதிவு. இரண்டையும் பேலன்ஸ்டாடக் கொண்டு செல்லும் தக்னிக்கு தெரிந்தால்.....ஞானி அதிரா சரிதான்!!!!! ஹா ஹா ஹா ஹா...

    இன்னும் உங்கள் அடுத்த போஸ்ட், பல பதிவுகள் வாசிக்கணுமே....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. நீங்கள் மகனோடு பிசியாக இருந்தபோது வெளிவந்த போஸ்ட் இது.

      இன்னொன்று புட்த்ஹி என்பது நம்மால் பார்க்க, தொட்டு உணரக்கூடிய ஒன்று, ஆனால் மனம் என்பது அப்படி இல்லை.. அதுக்கு உருவம் இல்லையே..

      //ஏன் நான் மனதையும் சப்போர்ட் செய்வேன் என்றால்....மனதில் கொஞ்சமேனும் இரக்கம் வேண்டும். இரக்கம் இல்லையேல் கருணை இல்லையேல் நம்மால் மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது இல்லையா...மன்னித்தல் என்பது மிகப் பெரிய விஷயம். ///

      இது மிக்க உண்மையான அழகிய ஸ்டேற்மெண்ட்..

      ///தான் ஹேப்பியாக இருக்கிறேன் என்றும் சொன்னாள் தான். ஆனால் ஒரு நொடிப் பொழுதில் மனம் நெகட்டிவ் முடிவை வலியுறுத்திவிட்டதே. தற்கொலை.!!! ///

      ஓ அவசரப்பட்டு விட்டாவோ.. :(

      Delete
    2. //அப்படி இல்லை என்றால் வீட்டில்தான் சத்தி பண்ணுவாள். (இது மலையாளத்திலும் உண்டு இந்த வார்த்தை. நாகர்கோவிலில் இருந்தவரை இந்த வார்த்தைதான் நான் பயன்படுத்தியது. மலையாளத்தில் (ச்சர்த்தி))//

      ஓ ஆ மலையாளம் கிட்டத்தட்ட தமிழ் போலத்தானே..

      ///அனுபவம் நேரும் போது நாம் நம் புத்தியைச் செலுத்தி அது கற்றுத் தரும் பாடத்தைக் கற்க வேண்டும் இல்லையேல் மனம் பக்குவப்படாது...சரிதானே!!?? அதிரா..அனுபவங்களும் நம் புத்தியைத் தீட்டும் தான் இல்லையா!! நாம் மனதிற்கு அடிமையானால்?!!! சரிதானே!!///

      உண்மையேதான் கீதா, அனுபவங்கள்தான் மனசை புறம் தள்ளி விட்டு புட்த்ஹிக்கு முன்னுரிமை குடுத்து சிந்தித்து நல்ல முடிவை எடுக்கப்பண்ணும்.

      ///ஞானி அதிரா சரிதான்!!!!! ஹா ஹா ஹா ஹா...//

      ஹா ஹா ஹா நன்றி நன்றி..

      ///இன்னும் உங்கள் அடுத்த போஸ்ட், பல பதிவுகள் வாசிக்கணுமே....//

      எனக்குத்தெரியும் உங்கள் நிலைமை, கஸ்டப்படாதீங்கோ கீதா, படிச்சாலே மகிழ்ச்சி..

      மிக்க நன்றி அனைத்துக்கும் கீதா.

      Delete
  58. 'அவனுக்குத் தான் தெரியும்' அருமையான கருத்துச் செறிந்த பாடல். நான் மறந்து போன பாடல்; நினைவுபடுத்தியதற்கு நன்றி. :-)

    போஸ்ட் வாசிக்கேல்ல அதீஸ். வந்து அந்தத் திகதியைப் பார்க்க... 'செபாவின் ஆரம்பம்' & முடிவு நினைவுக்கு வந்துது. ஒரு ப்ரேக் எடுத்துட்டு திரும்ப வந்து வாசிக்கிறன்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் நீண்ட நாட்களுக்குப் பிறகு இமாவின் ஹெட்.. வாங்கோ இமா வாங்கோ.. நீங்கதான் பில்லா சிவாவையும் அழைச்சு வந்திருக்கிறீங்க போல..:)..

      //வந்து அந்தத் திகதியைப் பார்க்க... 'செபாவின் ஆரம்பம்' & முடிவு நினைவுக்கு வந்துது. ஒரு ப்ரேக் எடுத்துட்டு திரும்ப வந்து வாசிக்கிறன்.//

      ஓ ஜெபா அன்ரியின் பிறந்ததினம்???.... என்ன பண்ணுவது.. எதையாவது பார்க்கும்போது அப்பப்ப ஒவ்வொருவரின் நினைவு வந்து நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும் என்பது உண்மையே.. எனக்கும் இப்படிப் பல நிகழ்வுகள் மூட் ஓஃப் ஆக்கிவிடும்..

      மெதுவா வாங்கோ இமா மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.