நல்வரவு_()_


Friday 1 March 2019

என்றாவது ஒரு நாள்😍

ந்த “என்றாவது ஒரு நாள்” என ஆரம்பித்து நினைத்தாலே.. வசனத்தை என்ன வேணுமெண்டாலும் போட்டு முடிக்கலாம்.. 
என்றாவது ஒருநாள் என் ஹெயா ஸ்டைல் இப்படி மாறும்..
என்றாவது ஒருநாள் மீயும் காசிக்குப் போவேன் அஞ்சுவைக் கூட்டிக் கொண்டு நொட் அம்முலு:)..
இப்படி எதுவும், நம் ஆசைக்குச் சொல்லி, வசனத்தை முடிக்கலாமெல்லோ.. ஆனா இப்போஸ்ட் அதுவல்ல:)...
இந்தப் பூஸாரை, வேர்க்க விறுவிறுக்க, லெக்கூ காண்ட்டூ எல்லாம் ரைப் அடிக்க, நான் எங்கிருந்தும் சுட்டு:) வரவில்லை என்பதனை, இந்தப் பூஸாரின் பின்னல் மேல் அடித்து ஜத்தியம் பண்ணுறேன்:).

ரி இப்போ தலைப்புக்குப் போவோமா?:) இம்முறையும் எங்கள்புளொக்கின் எபெக்ட்டுத்தான் இங்கே போஸ்ட் ஆகியிருக்கு:).. ஹையோ எதுக்கு இப்போ ஸ்ரீராம் ஓடுறார்?:) அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கல்லியே இங்கு ஹா ஹா ஹா:).

வியாழக்கிழமைப் போஸ்ட்டில், எழுத்தாளர் சுஜாதாவின் சில நாவல்கள் பற்றிச் ஸ்ரீராம் சொல்லியிருந்தார். எனக்கு ஓன்லைனில் படிக்கும் ஆர்வம் இல்லாததால், கடையில் புத்தகம் வாங்க வேணும் எனப் பேசிய இடத்தில், ஏன் ஓன்லைனில் ஃபிறீயாகக் கிடைக்கிறதே என ஸ்ரீராம் சொல்ல, கீதா தான் “14 நாட்கள்” படிக்கத் தொடங்கிட்டேன் என்றா.

அப்போ எனக்கும் கொஞ்சம் ஆர்வம் வந்துது, அதுக்குக் காரணம், எனக்கு கொம்பியூட்டர் முன்னால் இருந்து படிப்பது பிடிக்காது, கட்டிலில் ஹெட் போர்ட்டில் சாய்ந்திருந்து படிப்பதே பிடிக்கும், அதனால புத்தகத்தையே எப்பவும் விரும்புவேன், மொபைலில் கதைகள் படிக்க முடியாதெல்லோ.. பிறகு இந்த சுவீட்16:) லயே என் கண்ணைக் கொண்டு போயிடும்.

ஆனா இந்தப் புதுவருடம் எனக்கு இரண்டு அப்பிள் கிடைத்தது.. ஒன்று ஐ பாட்.. மற்றது.. பின்பு சொல்கிறேன்:). உண்மையில் இந்தக் கவரை உங்களுக்குக் காட்டவே இப்படம்:), அழகாக இருக்கெல்லோ.. கிச்சின் அழகாக இருந்தால் தான் சமைக்கவே மனம் வரும், அதுபோல நம்மிடம் இருக்கும் பொருள்களையும் அழகாக கவர்ச்சியாக வைத்திருக்கும்போது பாவிக்க ஆசை வருது:). இதில், ஐபாட் ஐ, இரு பக்கமாக ஸ்ராண்ட் போல நிறுத்தி வைக்கலாம். இது உங்களிடமும் இருக்கலாம், இருப்பினும் என்னுடையதைக் காட்டினேன்:) ஒரு ஆசையில்:).

அப்போ அதில் தேடிப் படிச்சுப் பார்க்கலாமே என முன முன்னம் நேற்றுத்தான், நேற்று மிகச் சிறந்த நாளும்கூட:).. தேடினால்.. தமிழ் தேசியம் டொட் கொம் இல், நிறையப் புத்தகங்கள் ஃபிறீயாக் கிடைக்குது. அதை எடுத்துத் திறந்தால், ஆவ்வ்வ் ஸ்ரீராம் சொன்னவைகள் அங்கிருப்பது பார்த்து...

எனக்கு எப்பவும், படமோ, கதையோ.. தலைப்பைப் பார்த்தே உள் நுழைவேன், அந்த வகையில்.. “என்றாவது ஒருநாள்”, தலைப்புப் பார்த்ததுமே பிடித்து விட்டது, திறந்து பார்த்தேன், ஐ பாட்டில் சூப்பராக இருக்கு படிக்க.. 
அப்படியே புத்தகத்தைப் படமெடுத்துப் போட்டிருப்பதால், கையில் புத்தகம் பிடித்துப் படிக்கும் ஃபீலிங் வருது.

சரி கதைக்கு வருவோம், மொத்தம் 67 பக்கங்கள் என இருந்துதா, சரி பாதியாவது படிக்கலாமே என நேற்று ஆரம்பித்தேன், நம்ப மாட்டீங்க, என்னால, கண்ணைப் புத்தகத்திலிருந்து எடுக்கவே முடியவில்லை, அவ்ளோ சூப்பராக போச்சுது கதை, அவ்ளோ விறுவிறுப்பு.. அடுத்து என்ன.. அடுத்து என்ன என மனதை அலைக்கழிக்க வைத்து விட்டார் ஹா ஹா ஹா..
அதனால, ஒரு மூச்சில் முழுக் கதையையுமே படிச்சு முடிச்சு விட்டேன். குட்டிப் புத்தகம்தான்.

சின்ன வயதில் தாயை இழந்து, குழந்தையாக இருக்கும்போதே ஒரு பஸ் ஸ்ராண்டில் இருத்தி விட்டு, இரு வருகிறேன் எனச் சொல்லி விட்டுத் தந்தையும் விட்டிட்டுப் போனதும், தந்தையைக் காணாமல் தேடி, அப்படியே வளர்ந்து... ஒரு குடும்பத்தில் வேலைக்கு சேர்ந்து, சின்ன வயதிலேயே அக்குடும்பத் தலைவியால் சீரழிக்கப்பட்டு, அதுவே பழக்கமாகி, பின்னர் வளர்ந்து.. பல கொள்ளைகள் செய்து, ஜெயில் போய் தப்பி வந்து.. திருந்தி வாழ நினைத்து, 5 வருடமாக மிக அருமையான ஒரு ஆணாக திருந்தி வாழும்போது, ஒரு பெண்ணின் நட்புக் கிடைத்து, தன் பாலைவன வாழ்க்கையே மாறப்போகுது என எண்ணி... சந்தோச ஊஞ்சலில் ஆடுவது, அப்பெண்ணை தன் மனைவிபோலவே நினைத்துப் பாதுகாப்பது...

இப்படி மிக அழகாக, விறுவிறுப்பாகப் போகும் கதையில், முடிவில் அப்பெண்ணுடன் சேர்கிறாரா இல்லையா என்பதே... முடிவை படிச்சுப் பாருங்கோ. முடிவை மட்டும் படிக்க வேண்டாம், முழுக்கதையையும் ஒழுங்காக படியுங்கோ சூப்பராக இருக்கு.  விதியின் விளையாட்டு இதுவோ என்பது போல முடிகிறது.
👈👈👈👈👈👈👈👈👈இடைவேளை👉👉👉👉👉👉👉👉👉
இது இன்று எடுத்த படம், கிச்சின் மற்றப் பக்கத்து ஜன்னல், நீங்க அடிக்கடி பார்த்திருப்பது எங்கள் கார்டின் ஜன்னல், இது பக்கத்து வீட்டுச் செரி மரம் பூத்துவிட்டது... இளவேனில்காலம்.. ஆரம்பமாகி விட்டதன் அடையாளம்:). எங்கள் கிச்சினின் இப்பகுதி முதலாவது மாடிபோல உயரமாக இருக்கும், அதனால்தான் பக்கத்து வளவு ஆழமாக தெரிகிறது.. 
👈👈👈👈👈👈👈இடைவேளை முஞ்சு போச்ச்ச்ச்:)👉👉👉👉👉👉👉

அடுத்து “ஜன்னல் மலர்” உம் ஆரம்பித்து விட்டேன்...இதில் 164 பக்கங்கள். கொஞ்சம்தான் படிச்சேன்.. அதுவும் சூப்பராகப் போகுது, ஆனா ஆரம்பம் கதை படிக்கும்போது புரியவில்லை, சுஜாதா அவர்களின் எழுத்துக்கென ஒரு ஸ்டைல் இருக்கு என்பதனை, ரெண்டாவது கதை படிக்கத் தொடங்கியதும்தான் கண்டு பிடிச்சேன்ன்.. அதாவது, நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் மாத்தி மாத்திச் சொல்கிறார், ஆரம்பம் குழம்பினேன், இப்போ கண்டு பிடிச்சிட்டேன் அவரின் எழுத்தின் ஸ்டைலை, அதுக்காக .. ஓடாதீங்கோ.. அடுத்த கதைக்கும் றிவியூ எழுத மாட்டேன்ன்:)) ஹா ஹா ஹா.
👈👈👈👈👈👈👈👈👈()()()()()()()👉👉👉👉👉👉👉👉👉

ஊசி இணைப்பு:)

ஊசிக் குறிப்பு

எல்லோரும் நலம்தானே? என் மெகந்தி எப்படி இருக்கு நெல்லைத்தமிழன் புரோ?:) 
*********************()()()()()()_()_()()()()()()*********************
என் புளொக்கின் வலதுபக்க மேல் மூலையில் பாருங்கோ.. 
அநாமிகா வைக் காவலுக்குப் போட்டிருக்கிறேன்”
**********************()()()()()()_()_()()()()()()*********************

134 comments :

  1. ஹலோவ் மியாவ் :) ஹஹ்ஹா அனாமிக்காவது சுனாமிக்காவாது :) அனாமிகாவையே மீ அபேஸ் பண்ணிடுவேனாக்கும் :)
    ஆமா இங்கே என் அக்கா வந்துட்டு போனாரா ?? இல்லை சும்மா கேட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      ஹா ஹா ஹா இதுக்குத்தான் சொல்றது ஒழுங்கா மேலிருந்து போஸ்ட் படிக்கோணும் என கர்:).. வந்த வேகத்திலேயே அநாமிகாவைத் திட்டினா.. அவ இன்னும் உரமா குரைக்கிறா:)).. என்னால ரைப் பண்ண முடியல்ல:)).

      //ஆமா இங்கே என் அக்கா வந்துட்டு போனாரா ?? இல்லை சும்மா கேட்டேன்//

      உங்க மகோதரம் சே..சே... சகோதரம் வந்தாதான்:) ஆனா அநாமிகா அவவி உள்ளே விடல்ல:)) ஹா ஹா ஹா.. உங்களையே ஜமாளிக்க முடியாமல் அநாமிகாவை ஒரு கோடி .... ஆம்... ப்பூ ஒரு கோடி:).. பவுண்ட் குடுத்து வாங்கி வந்து கட்டியிருக்கிறேன்ன்:).. இதில அக்கா வேறையா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  2. //இந்த “என்றாவது ஒரு நாள்” என ஆரம்பித்து நினைத்தாலே.. வசனத்தை என்ன வேணுமெண்டாலும் போட்டு முடிக்கலாம்.. //

    ஓ செய்யலாமே என்றாவது ஒரு நாள் அந்த பச்சைக்கல் நெக்லஸ் என் வசமாகும் ,என்றாவது ஒரு நாள் தேம்ஸில் உங்களை முக்கி எடுப்பேன் என்றாவது ஒரு நாள் உங்கள் சிமியோன் டீச்சர் எங்களிடம் வசமாக மாட்டுப்படுவார் .என்றாவது ஒரு நாள் :) உங்கள் குழை சாதத்தை அமெரிக்காவின் தேசிய உணவாக அறிவிப்பார்கள் :) என்றாவது ஒரு நாள் ...................இப்படி எவ்ளோ இருக்கே

    ReplyDelete
    Replies
    1. haa haa haa karr:)

      [im]https://media.giphy.com/media/9qMz9bTEwtaLu/giphy.gif[/im]

      Delete
    2. அஞ்சு சூப்ப்ப்பர்.

      நொட் அம்முலு// அஞ்சு கூட்டுக்கொண்டு வருவா.

      Delete
    3. ஆஆஆஆஆ அம்முலு.. ஹையோ என் பக்கம் இருந்த அம்முலுவுக்கு சூனியக் கிளவியைக்:) கொண்டு சூனியம் வச்சு இப்போ, தன் பக்கம் சேர்த்து காசிக்கு ரெடி பண்ணுறா பாருங்கோ அஞ்சுவை:)).. இவ்ளோ நாளும் ஒழுங்கா இருந்த அம்முலு.. இப்போ இப்பூடி மருந்தடிச்ச பூச்சி மாதிரி ஆகிட்டாவே:) ஹையோ கீழ்மருவத்தூர் வேலா வள்ளிக்கு இம்முறை பிளாட்டினத்தில சின்னிவிரல் போதிரம் போடுவேன் என்னைக் காப்பாத்துங்கோ:)..
      ஹா ஹா ஹா ஹா புவஹா புவஹா:)

      Delete
  3. ஹை ஜன்னல் மலருக்கு பொருத்தமா பிளாசம்ஸ் அழகு .இங்கே வரலை .
    என்னது ரிவ்யூவா !! தெரியாம நடுவில் கீழிருந்து வந்துட்டேனே

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ் நீங்க சொன்னபின்பு கவனிக்கிறேன்ன்.. ஜன்னல் மலர் .. பிங்கி.. பொருத்தமும் அழகெல்லோ..

      //தெரியாம நடுவில் கீழிருந்து வந்துட்டேனே//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏதோ இண்டைக்குத்தான் இப்படி என்பதுபோலவே ஒரு பேச்சு:)

      Delete
  4. /இந்தப் பூஸாரின் பின்னல் மேல் அடித்து ஜத்தியம் பண்ணுறேன்:)..//

    ஹாஹாஹா அப்படியே நீங்கதான் உங்களை எப்படி படமெடுத்தாங்கனு தோணுது சூஊ ஸ்வீட்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ச்ச்சோ சுவீட் எல்லோ.. அதுசரி இது உணவுச்சங்கிலி மாதிரி:).. அதை நீங்க எங்கிருந்து ஜுட்டீங்கோ?:)

      Delete
    2. விதவிதமான பூனை கூந்தல் அலங்காரம் என்பதை இங்கிலீஷிலா கேட்டேன் கூகிள் ஆன்டி கொடுத்தாங்க இதை :)

      Delete
    3. ஹா ஹா ஹா சூப்பர்ர்.. சிலது முகத்துக்குப் பொருந்தாது, இது அப்படியே பொருந்துது.

      Delete
  5. ஹை ipad அழகா இருக்கு .என்கிட்டே ரெண்டு இருக்கு சாம்சங் அனா தமிழ் மட்டும் டவுன்லோட் கஷ்டம் அதோட ஒரு பிளாகும் திறக்காது .ஒரு துண்டு போட்டு வைக்கிறேன் ஆ.காரகிட்ட இது வாங்கித்தர சொல்லி :)
    அதோட கவர்தான் செம அழகு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பழைய ஐபாட் பழசாப்போச்சு, அதனால ஃபோனிலேயே படம் பார்த்து வந்தேன்...:) இப்போ எவ்ளோ ஈசியா இருக்குது. வாங்குங்கோ வாங்குங்கோ.

      Delete
  6. ஆஆவ் அதுக்குள்ள ஒரு கதை படிச்சாச்சா !! நான் திங்கள்கிழமைலருந்து ஸ்டார்டிங் :)
    நானும் படிப்பேன் என்று அந்த ஐ பேட் மீது யானை நோ :) பூனை இடுகிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஏன்னிலும் அப்பழக்கம் இருக்குது அஞ்சு, சில படங்கள் சில புத்தகம், பிடிச்சால் அப்படியே முடிச்சிட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பேன்ன்ன்.. இதே விறுவிறுப்பாகப் பார்த்ததில் நினைவில் உள்ள ஒரு படம் “பூம்புகார்”.. என்னால இடைவெளி எடுக்கவே முடியல்ல.. வழமையா ரீ பிரேக் எடுத்து ஒரு ரீ குடிச்சிட்டுத் தொடர்வோம் படம் எனில்.. இது அப்படி முடியல்ல:)).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் பூஸாரை விடுங்கோ.. நீங்க கீசாக்காவின் கூச்சத்தின் மேல் ஆனையை:) இடுங்கோ:)) ஹா ஹா ஹா:)

      Delete
  7. ஊசிகுறிப்பு சூப்பர் :) இப்போ குட்டுநைட்டு நாளைக்கு வரேன் :)

    ReplyDelete
    Replies
    1. போடுவோமா பின்பு போடுவோமா என யோசிச்சு, டக்குப் பக்கெனப் போட்டு விட்டேன், சிலது சூட்டொடு சூடாகப் போட்டால்தான் மகிழ்ச்சி..

      Delete
  8. இரவு வணக்கம் தீர்க்க தரிசி :))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நன்றி அஞ்சு.. தீர்க்கதரிசி ஆகிட்டேன் இனி எல்லோரும் ஜாக்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்தை:))

      Delete
  9. ஜேசுதாஸ் - ஷைலஜா குரலில் மிக இனிமையான பாடல்... மனதை ஏதோ செய்து உள்ளே நுழைந்து அமர்ந்த பாடல். அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... உண்மை.. மனதை என்னமோ பண்ணும் பாடல்களில் இதுவும் ஒன்று, இதை எல்லாம் எனக்குப் பழக்கி விட்டதே இலங்கை வானொலிதான்.. எங்கள் வீட்டில் ஓஃப் எனினும் பக்கத்து வீட்டு ரேடியோவிலிருந்து தவழ்ந்து வந்து காதில் விழும், அதனாலயே பழைய பாடல்கள் மனதில் நிக்குது,ஆனா இப்போ அப்படி இல்லையே... நாமா விரும்பி தேடித்தானே பாட்டுக் கேட்கும் நிலைமை, ரேடியோ எனினும் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்பதால், எல்லாமே பிரைவசியாகி விட்டது.

      Delete
  10. // நான் எங்கிருந்தும் சுட்டு:) வரவில்லை என்பதனை//

    ச்சேச்சே... நான் அப்படி நினைக்கவில்லை. உங்களிடம் துப்பாக்கியும் இருந்திருக்காது... பூஸாரும் உயிருடன் இருக்கிறாரே...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹையோ இப்போதான் எனக்கு கழுத்தில:) தண்ணி வந்ததுபோல இருக்கு:)).. எங்காவது சுட்டு வந்திட்டேன் என ஜந்தேகப்பட்டிடுவீங்களோ என ஒசிச்சேன் ஹா ஹா ஹா:).

      Delete
  11. என்றாவது ஒருநாள் பல சிந்தனைகளைத் தூண்டும் தலைப்பு. இந்தத்தலைப்பில்... அடடே... அதே... அதே... சுஜாதா கதை.. படித்து விட்டீர்களா? என்னிடம் புத்தகமாகவே பல சுஜாதா புத்தகங்கள் இருக்கின்றன. முடிந்தால் ஒருநாள் லிஸ்ட் தருகிறேன் அல்லது 'படம் காட்டு'கிறேன்!!!!

    ReplyDelete
    Replies
    1. இப்படியான நல்ல கதைகள் புத்தகப் பெயர் லிஸ்ட் சொல்லுங்கோ.. தேடிப் படிக்கிறேன்ன்.. கிறோம்ம்.. அஞ்சுவும் சேரப்போறாவாம் பார்ப்போம்:).. உண்மையில் இப்போ ரெண்டு நாளா நான் யூ ரியூப் பார்ப்பதில்லை கதைப்புத்தகமே படிக்கிறேன்ன்.. ஜன்னல் மலரும் முடிச்சிட்டேன் சூப்பர்.. ஆனா இன்னும் கொஞ்சம் தொடர்ந்திருக்கலாம் என இருக்கு.

      அது 167 பக்கம் எனப் போட்டு விட்டு, பாதியில் முடிச்சுப்போட்டு அப்புத்தகத்திலேயே இன்ன்னொரு கதை தொடருது.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
  12. அடடே... என்னால் விளைந்த பதிவா... நன்றி! எனக்கும் மொபைலில் படிக்கப் பிடிக்காது. ஆனால் கிடைக்காத, தவிர்க்க முடியாத சில புத்தகங்களை கணினியில் படித்திருக்கிறேன்... ரொம்ப இருக்காது... மிகச் சிலபுத்தகங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நான் கணனியில் புளொக்கில் வெளிவருபவை/புளொக் சம்பந்தமானவை தவிர எதுவும் படித்ததில்லை.

      அன்ரொயிட் ஃபோனில் நிறைய இலவசப் புத்தகம் கிடைச்சுது முன்பு, டவுன்லோட் பண்ணியிருந்தேன் படிச்சதில்லை.. பார்த்தீபன் கனவை:)).

      ஆனா அப்பிள் அப் இல்.. இலவசமா எதுவுமில்லைப்போல தெரியுது, சரி காசு குடுத்து வாங்கிப் படிக்கலாம் எனில், பொன்னியின் செல்வனும், பார்த்தீபன் கனவும்தான் கிடைக்குது, அதனால விட்டு விட்டேன்.

      Delete
  13. //இடைவேளை முடிஞ்சு போச்சு...//

    நன்றி! ஹா... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. https://st2.depositphotos.com/1719789/10023/i/950/depositphotos_100231906-stock-photo-funny-cat-climbing-tree.jpg

      Delete
  14. ஜன்னல் மலர், யாருக்கு யார் காவல் என்ற பெயரில் திரைப்படமானதாக நினைவு (இதில் எஸ் பி பியின் சிப்பியின் உள்ளே முத்தாடும் நேரம்....' என்கிற பாடல் இருப்பதாகவும் பாடல் நினைவு நரம்பு சொல்கிறது!)

    ReplyDelete
    Replies
    1. ஒ... சினிமா விசயத்தில் மட்டும் உங்களுக்கு மறதி வருவதில்லை என்பது எங்களுக்குத் தெரியுமே:)

      Delete
    2. அதுவும் ஜெயசித்ரா ,மஞ்சுளா சுமலதா கேயார் விஜயா sripriya sujatha படம்லாம் மறக்கக்க மாட்டார் ஸ்ரீராம் :)

      Delete
    3. ஹேமமாலினியை விட்டுவிட்டிட்டீங்க அஞ்சு:)

      Delete
    4. ஹஹ்ஹஹ்ஹா அது ஹேமா ஆன்ட்டி தமிழ் படத்தில் நடிச்சிருந்தா வெள்ளிக்கிழமை பாட்டில் வருவாரே :) அதனால் நான் வெள்ளிக்கிழமை நாயகிகளை மட்டுமே சொன்னேன் இங்கே

      Delete
    5. ஓ அவ தமிழில் இல்லையோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)..

      Delete
    6. // ஹேமமாலினியை விட்டுவிட்டிட்டீங்க அஞ்சு:)//

      அப்படிப் பார்த்தால் மும்தாஜ், மாதுரி தீக்ஷித்

      Delete
    7. இதென்ன இது.. ஒரு அளவு கணக்கில்லாமல் நீளுதே:))

      Delete
  15. ஊசி இணைப்பு சிரித்துவிட்டேன். ஊசிக்குறிப்பில், அதாவது அது சொல்லும் தகவலில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, எனக்கும் நிறைய நம்பிக்கை உண்டு, சிலது பார்த்தும் இருக்கிறேன்.. சிலரைப் பார்த்து... முற்பிறப்பில் செய்த புண்ணியம் எனவும் எண்ண வைக்குது:).

      Delete
  16. என்னது நெல்லைத்தமிழன் புரோவா? ஏனிந்த கொலைவெறி அதிரா! பாவம் அவர்...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:) அதைப் பார்த்ததினாலதான்.. உடனே வந்திடக்கூடாதென:) நெ.தமிழன், பக்கத்துவீட்டு வேலியால எட்டிப் படிச்சிட்டு கூச்சப்பட்டு ஒளிச்சிருக்கிறார்:)) ஹா ஹா ஹா...

      அப்போ “புரோ” இலையாஆஆஆஆஆஆ?:)) ஹா ஹா ஹா

      Delete
  17. சுஜாதாவின் கதைகளில் கொஞ்சம் சுமாரான கதைகளில் தொடங்கி இருக்கிறீர்கள் (என் அபிப்ராயத்தில்). அவரின் துப்பறியும் நாவல்கள் மிகுந்த சுவாரஸ்யம் உடையவை. குறிப்பாக கணேஷ் - வசந்த் வரும் கதைகள் மிக மிக சுவாரஸ்யம் உடையவை. பிரிவோம் சிந்திப்போம் இரண்டு பாகங்கள். முதல் பாகம் காதலில் உருகும் கதை. இரண்டாவது பாகம் நேரெதிர். பின்னாட்களில் அவரது கதைகளை விட அவரது விஞ்ஞானக் கேள்வி பதில்கள், கற்றதும் பெற்றதும் கட்டுரைகள், பொதுவான கேள்வி பதில்கள், எண்ணங்கள் ஆகியவை சுவாரஸ்யமாயின.

    ReplyDelete
    Replies
    1. ///சுஜாதாவின் கதைகளில் கொஞ்சம் சுமாரான கதைகளில் தொடங்கி இருக்கிறீர்கள் (என் அபிப்ராயத்தில்). ///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நீங்கள் சொன்னதிலிருந்துதானே ஆரம்பிச்சேன், இப்ப போய் சுமாரானது என்றால்:)).. இல்ல ஸ்ரீராம் எனக்கு நான் படிச்ச இரண்டுமே நன்கு பிடிச்சுப் போச்சு... துப்பறியும் கதைகள் பெரிதாகப் பிடிப்பதில்லை:(.

      ஓ பிரிவோம் சந்திப்போம் படம் பார்த்திட்டேன்.. ஸ்ரீகாந்தின்:).. கதை படிக்கிறேன் இனிமேல்.

      //பின்னாட்களில் அவரது கதைகளை விட அவரது விஞ்ஞானக் கேள்வி பதில்கள், கற்றதும் பெற்றதும் கட்டுரைகள், பொதுவான கேள்வி பதில்கள், எண்ணங்கள் ஆகியவை சுவாரஸ்யமாயின.//
      ஓ இது புதுத்தகவல்.. பார்ப்போம், என்னில ஒரு பழக்கம் இருக்கு, ஆரம்பம் பிடிக்காது.. போகப்போக நன்கு பிடிக்கும்.. முயற்சிக்கிறேன்..

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.. நெல்லைத்தமிழன் இன்னும் கூச்சப் பட்டுக்கொண்டிருக்கிறார்ர்:).

      Delete
    2. நான் அங்கு குறிப்பிட்டிருப்பது கவித்துவமான தலைப்புகளுக்காக. விழுந்த நட்சத்திரம் என்று கூட கதை ஒன்று எழுதினர். அதன் கதாநாயகன் பெயர் புள்ளி!

      Delete
  18. வணக்கம் அதிரா சகோதரி

    தலைப்பு மிக அழகாக இருக்கிறது. தங்கள் எண்ணங்களும், அவற்றின் வெளிப்பாடுகளுமாய் பதிவு வழக்கம் போல் அருமை. வழக்கம் போல் நானும் மிகவும் ரசித்தேன்.

    "இந்த என்றாவது ஒருநாள்" என்பது பொதுவாக எல்லோர் மனதிலும், இருப்பதுதானே.! (நாளைய எதிர்பார்ப்பு, ஆசை, கனவு, வாழ்க்கை, லட்சியம், இன்னும், இன்னும்.)

    அந்த பூஸார் மிகவும் அழகாக இருக்கிறார். தலை வாரி ஜடைபோட்டுக் கொண்டு மிகவும் அப்பாவியாக பார்க்கவே மிக அழகு. எங்கிருந்து (சுட்டு) கொண்டு வந்தீர்கள்?

    சுஜாதா கதைகள் என்றுமே அருமை. முன்பெல்லாம் நூலகத்திலிருந்து சிலவற்றை எடுத்துப் படித்துள்ளேன். இப்போது சிலது வழக்கம் போல் மறந்து விட்டது. மீண்டும் படிக்கத் துவங்கினால் நினைவுக்கு வரலாம். இந்தக்கதை படித்ததால் நினைவில்லை. சமயம் வரும் போது படிக்கிறேன்.

    தங்களது ஐபாட் மிகவும் அழகாக உள்ளது. அதில் அவரின் கதைகளை படிக்க துவங்கியதை விவரித்தது அழகாக இருந்தது. ஐபாட் வாங்கியதுக்கு வாழ்த்துகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //வழக்கம் போல் நானும் மிகவும் ரசித்தேன். //
      மிக்க நன்றி மிக்க நன்றி...

      //"இந்த என்றாவது ஒருநாள்" என்பது பொதுவாக எல்லோர் மனதிலும், இருப்பதுதானே.! (நாளைய எதிர்பார்ப்பு, ஆசை, கனவு, வாழ்க்கை, லட்சியம், இன்னும், இன்னும்.)
      //

      அதேதான், கதையில் வரும் கதாநாயகனுக்கும் அதே எதிர்பார்ப்புத்தான்:)..

      // எங்கிருந்து (சுட்டு) கொண்டு வந்தீர்கள்?//

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹையோ பபுளிக்கில வச்சு இப்பூடிக் கேட்டுப்புட்டீங்களே.. மீ கம்பி எண்ணிக் கொண்டு கம்புக்கஞ்சி குடிக்கிறதில உங்களுக்கு அவ்ளோ ஆசையோ?:)) ஹா ஹா ஹா.

      இருந்தாலும் கமலாக்கா காதைக் கிட்டக் கொண்டு வாங்கோ ரகசியம் சொல்றேன்ன்ன்ன்:).. ஹையோ இன்னும் கிட்ட வாங்கோ.. நான் ஒண்டும் உங்கட வைரத்தோட்டைத் தொட்டிட மாட்டன்:)[வள்ளிக்கு நேர்த்தி இருந்தாலும்:)].. கிட்ட வாங்கோ.. அது... சமீபத்தில அஞ்சு நித்திரை கொள்ளும்போது ஓடிப்போய்,
      வாங்கோ எண்டேன், பிள்ள பின்னால ஓடி வந்திட்டுது:)).. நான் பூஸாரைச் சொன்னேன்:) ஹா ஹா ஹா..

      Delete
    2. //சுஜாதா கதைகள் என்றுமே அருமை//

      எல்லோரும் சொல்வார்கள், நானும் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன் தான் ஆனா பெரிசா மனதில் நிற்கவில்லை.. கண்ணதாசன் அங்கிள் தவிர, ஆரும் இதுவரை என் மனதில் இடம்பிடிச்சதில்லை:)..

      //இந்தக்கதை படித்ததால் நினைவில்லை. சமயம் வரும் போது படிக்கிறேன். //
      நீங்களும் அதிகமாக எல்லாமுமே மொபைலில் பண்ணுவதால் கஸ்டம், கொம்பியூட்டரில் முடியும்போது படியுங்கோ.. குட்டிப் புத்தகம்தான்.. அவ்வளவு பெரிசில்லை.

      பழைய ஐபாட்டும் இருக்கு.... ஸ்பீட் குறைஞ்சுபோச்சு ... ஆனா இதுவரை எதிலுமே கதை படிக்க முயற்சித்ததுமிலை, படிச்சதுமில்லை.
      மிக்க நன்றிகள். கமலாக்கா.

      Delete
  19. என்றாவது ஒரு நாள் புத்தகம் படித்திருக்கிறேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ.. ஓ நீங்களும் படிச்சிட்டீங்க மிக்க நன்றிகள்.

      Delete
  20. வணக்கம் அதிரா சகோதரி

    இடைவேளையும், இடைவெளியில் எடுத்த இளவேனிற்காலமுமாய் ஜன்னல் படம் மிக அருமை. அதற்கேற்ற மாதிரி "ஜன்னல் மலரும்" துவங்கி விட்டீர்கள். ஹா.ஹா ஹா சகோதரர் ஸ்ரீராம் சுட்டிக் காட்டிய புத்தகங்களையெல்லாம், படித்து முடித்து விட வேண்டுமென்று இருக்கிறீர்கள் போலும். சுஜாதா ரசிகைக்கு வாழ்த்துக்கள.

    ஊசி இணைப்பும் ஊசிக்குறிப்பும் அருமை. ஊசிக்குறிப்பு மனதில் தைத்து உள் சென்றது..

    தமன்னா படம் அழகு. யாருக்கு கை விரித்து தன் மெகந்தி வரைகலையை காட்டுகிறார்?

    தங்கள் வீரம் மிகும் அநாமிகா இருக்கும் போது தங்களுக்கு என்ன பயம்? அழகான அநாமிகாவாக வேறு இருக்கிறது. படங்கள் அனைத்தும் மனதை கவர்ந்தது. பதிவனைத்தையும் மிக மிக ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. //ஜன்னல் படம் மிக அருமை. அதற்கேற்ற மாதிரி "ஜன்னல் மலரும்" துவங்கி விட்டீர்கள்//

      இதுதான் சொல்வார்களே சிலது தானாக அமியும் என்று:).. அப்படித்தான், நான் நினைச்சுப் போடவில்லை, கவனிக்கவுமில்லை, இங்கு ஆரம்பம் அஞ்சு சொன்னதைப்பார்த்தே நினைத்தேன்:)..

      //தமன்னா படம் அழகு. யாருக்கு கை விரித்து தன் மெகந்தி வரைகலையை காட்டுகிறார்?
      //

      வேறு ஆருக்கு?:) எங்கட நெல்லைத்தமிழனுக்குத்தான்:)).. நீங்க இப்பூடி ஒரு கேள்வி கேட்டதால இப்போ மனமுடைஞ்சு நெல்லைத்தமிழன், காவேரியை நோக்கி ஓடுறார்ர்:)).

      //தங்கள் வீரம் மிகும் அநாமிகா இருக்கும் போது தங்களுக்கு என்ன பயம்?//
      ஹா ஹா ஹா இனிப் பயப்புட மாட்டேன்:).. பாருங்கோ என்ன அழகாக குரைக்கிறா:) எனக்கே பயம்மாக்கிடக்கு அதைப் பார்க்க:)

      மிக்க நன்றிகள்.

      Delete
  21. அப்பாடா சுஜாதா ரசிகை ஆகி விட்டீர்கள்.அப்படியே amuttu.net சென்று அய்யா முத்துலிங்கம் தொகுப்புகளையும் படித்துப் பாருங்கள். குறிப்பாக ஒரு சாதம் கொம்பியூட்டர் போன்ற கதைகளை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ..

      //amuttu.net சென்று //
      ஓ பார்க்கிறேன். இவருடைய லிங் தானே முன்பும் நீங்கள் தந்து ஒரு கதை படிச்சேன், நன்றாக எழுதுகிறார்.

      மிக்க நன்றிகள்.

      Delete
  22. ஊசிக் குறிப்புகளும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ.. மிக்க நன்றிகள்.

      Delete
  23. ஹையோ, அதுக்குள்ளே 22 கருத்துகளா? சுஜாதாவின் புத்தகக் கலெக்‌ஷன் என்னிடம் இருக்கு! ஆனால் அவற்றில் கொலையுதிர் காலம் மட்டும் இல்லை. டவுன்லோட் பண்ணினால் டவுன்லோடும் ஆகலை! மற்றப் புத்தகங்கள் அநேகமாய்ப் படித்தவையாக இருக்கும். என்றாவது ஒரு நாள் படிச்சுட்டேனா இல்லையா எனப் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கொலையுதிர் காலம், ஜெயராஜ்ஓவியங்களோட 79-80கள்ள கிளுகிளுப்பா படிச்சோம். இப்ப கொஞ்சம் சப்பைனுதான் இருக்கும்

      Delete
    2. வாங்கோ கீசாக்கா வாங்கோ... ஓ கொலையுதிர்காலம் இதில் இருக்கோ என நான் இன்னும் தேடிப் பார்க்கவில்லை.

      இப்போ அந்த இரு கதைகளையும் முடித்துவிட்டு, டக்கென கண்ணதாசன் அங்கிளின் “30 நாளும் பெளர்ணமி” க்கு தாவி விட்டேன்.. அதுவும் சூப்பராகப் போகுது.

      Delete
  24. ஜன்னல் மலரும் என்னிடம் இருப்பதால் அதுவும் படிச்சிருப்பேன். நீங்க இம்புட்டு ஃபாஸ்டாப் படிப்பீங்களா என்ன? பொன்னியின் செல்வனை சுமார் ஐம்பது வருடங்களாகப் படிச்சுட்டு வரீங்களே, அதான் கேட்டேன். :)))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கீசாக்கா, பிடிச்ச கதை, மற்றும் அடுத்து என்ன நடக்கப்போகுதோ எனும் ஆவலைத்தூண்டினால், ஒரே மூச்சில் படிச்சு முடிப்பேன்.
      //நீங்க இம்புட்டு ஃபாஸ்டாப் படிப்பீங்களா என்ன?//
      இதில் என் கணவரைத்தான் ஸ்பீட் ரீடர் என்பார்கள்:))..

      பொன்னியின் செல்வன்.. ஹா ஹா ஹா அது 5 புத்தகங்களையும் அடுக்கி வச்சு அழகு பார்க்கிறேன், எனக்கு என்னமோ அரச கதைகள் மனதிலும் நிக்குதில்லை, பிடிக்குதுமில்லை, ஆனா குட்டிப்பிள்ளையாக இருந்து, அம்மா படிச்சதைப் பார்த்ததிலிருந்தே எனக்குள் ஒரு பூகம்பம்.. நானும்.. பொன்னியின் செல்வன், பார்த்தீபன் கனவு, இன்னுமொன்று அதுவும் கல்கியின் கதைதான்.. அவை மூன்றும் படிச்சேன் எனும் பெயரெடுக்கோணும் என, ஆனா முடியுதில்லை, புத்தகத்தை எடுத்து, கால்வாசி படிச்சிட்டு, சில நாள் இடைவெளி விட்டாலே கதை மனதில நிக்குதிலை, திரும்ப முதலில் இருந்து படிக்கச் சொல்லுது.. அதாவது சாண் ஏற முழம் சறுக்குது ஹா ஹா ஹா.

      எனக்கு ஒரு அண்ணன் சொன்னார் தன்னிடம் பொ.செல்வன் ஓடியோ வாக இருக்கு , விரும்பினால் தாறேன்.. கேளுங்கோ என.. அதுவும் விருப்பமில்லை, படிச்சு முடிக்கோணும் எனத்தான் விருப்பம்.. பார்க்கலாம்.

      //பொன்னியின் செல்வனை சுமார் ஐம்பது வருடங்களாகப் படிச்சுட்டு வரீங்களே, அதான் கேட்டேன். :)))))///

      [im] http://th15.st.depositphotos.com/1004199/1378/i/450/depositphotos_13788765-stock-photo-angry-british-short-hair-cat.jpg [/im]

      Delete
  25. உங்கள் அநாமிகாவை ஏமாத்த எம்புட்டு நேரம் ஆகும்? அதெல்லாம் ஏமாத்துவோமுல்ல!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஆளைப் பார்த்து எடை போட்டிடாதீங்கோ:).. அவவுக்கு நிறைய ட்ரெயினிங் குடுத்து வச்சிருக்கிறேன்ன்:).. ஜம்ப் பண்ணிக் கழுத்தில இருக்கிற வைர அட்டியலைக்கூட கடிச்சுக் கொண்டு வந்து தந்திடுவா என்னிடம்:))

      Delete
  26. ஐ பாடில் நானும் ஒரு சில புத்தகங்கள் வாசித்து இருக்கிறேன். ஆனால் கையில் பிடிப்பது கஷ்டமாக இருக்கு என்பதால் அதிகம் விரும்புவது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஐ பாட் க்கு, என்னிடம் இருப்பதுபோல நல்ல கவர் வாங்குங்கோ கீசாக்கா.. கையில் வச்சிருக்கும் தேவை இல்லை, அப்படியே ஸ்டாண்டில் நிற்பதுபோல நிக்கும்...

      Delete
  27. ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு இரண்டும் அருமையாத் தேர்ந்தெடுக்கறீங்க. பானுமதி சொல்வது போல் கொஞ்சம் இல்லை நிறையப் பொறாமையுடனே உங்கள் பதிவைப் படிச்சேன். :)))) பக்கத்து வீட்டுச் செரி மரம் பூத்திருப்பது அழகாக இருக்கிறது. நிறம் சிவனை நினைவு படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. ///பானுமதி சொல்வது போல் கொஞ்சம் இல்லை நிறையப் பொறாமையுடனே உங்கள் பதிவைப் படிச்சேன். :)))) ///

      ஹா ஹா ஹா மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி.

      Delete
  28. நெல்லைத் தமிழருக்காகத் தமன்னா படமா? வெளுத்துக்கட்டுங்க!

    ReplyDelete
    Replies
    1. அப்படி இல்லை. நல்ல படங்கள் கொட்டிக் கிடக்க, வயதான படமாப் போட்டிருக்காங்க அதிரா. இதுக்குத்தான் பெண்கள் படத்தை ஆண்கள்தான் செலெக்ட் பண்ணணும். பெண்களுக்கு பொறாமை

      Delete
    2. //Geetha SambasivamSaturday, March 02, 2019 8:48:00 am
      நெல்லைத் தமிழருக்காகத் தமன்னா படமா? வெளுத்துக்கட்டுங்க!//

      ஹா ஹா ஹா அதுதான் தமனாக்காவின்:) லேட்டஸ் படம், ஆனா அது அவருக்குப் பிடிக்கவில்லையாம்:)). எல்லாரும் ஒரு 18 வயசில தான் வேணும் என எதிர்பார்க்கினம் போல ஹையோ ஹையோ:) ஹா ஹா ஹா:).. மிக்க நன்றிகள் கீசாக்கா.

      Delete
    3. @நெல்லைத் தமிழன்
      ///அப்படி இல்லை. நல்ல படங்கள் கொட்டிக் கிடக்க, வயதான படமாப் போட்டிருக்காங்க அதிரா.//

      ஹா ஹா ஹா உண்மையைச் சொன்னால் உடம்பெல்லாம் குத்துமாமே:)) ஹையோ ஹையோ அவவுக்கு இப்போ முகத்தில சுருக்கம் வர ஆரம்பிச்சுட்டுதூஊஊஊஊஊ ஹா ஹா ஹா:)

      //இதுக்குத்தான் பெண்கள் படத்தை ஆண்கள்தான் செலெக்ட் பண்ணணும். பெண்களுக்கு பொறாமை///

      ஹா ஹா ஹா நீங்க மேக்கப்பைப் பார்த்து மயங்கிடுறீங்க:))

      Delete
  29. அனாமிகாவை காவல் போட விசேஷ காரணம் உண்டா? ஏதாவது சமீபத்தில் களவு போனதா?

    ReplyDelete
    Replies
    1. ஹையோ அதை ஏன் கேய்க்கிறீங்க ஸ்ரீராம், உங்களுக்கு மட்டும் என் ஜொந்தக் கதை:) யோகக்கதை ஜொள்றேன்ன் கூச்சப்படாமல் கேளுங்கோ:))..

      எனக்கு எதிரியும் சரி, கள்ளரும் சரி வெளியில இல்ல:)) வீட்டுக்குள்ளயேதான்:)).. ஆர் எவரெனப் பப்புளிக்குல பெயர் சொல்லவும் பயமாக்கிடக்குப் பிறகு என்ர அநாமிகாவையும் கடத்திப் போடுவா:))..

      இருந்தாலும் ஒரு ரகசியம் சொல்றன்:) அநாமிகாவை உத்துப் பாருங்கோ. “அஞ்சு.. அஞ்சு” எண்டெல்லோ குரைக்கச் சொல்லி ரெயின் பண்ணி விட்டிருக்கிறன்:)) ஹா ஹா ஹா:)).

      Delete
    2. [im]https://2.bp.blogspot.com/-phqPGqnyYzI/XHpiLiYoZWI/AAAAAAAARmQ/X0c9-EuiAFQlNLq2iuFjsgqlQB5FbVhQQCLcBGAs/s400/1OFO.gif[/im]

      Delete
    3. ஹலோ ஆனா அனாமிகா என்ன சொல்லுது பாருங்க :)

      Delete
    4. @ அஞ்சு
      https://2.bp.blogspot.com/-phqPGqnyYzI/XHpiLiYoZWI/AAAAAAAARmQ/X0c9-EuiAFQlNLq2iuFjsgqlQB5FbVhQQCLcBGAs/s400/1OFO.gif

      ஹா ஹா ஹா என்னாது அஞ்சு சித்தியாமோ?:) அது நீங்க கழுத்தில வைடூரியம் போட்டிருக்கிறீங்கபோல:) அதுதான், உங்கள் கழுத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறா:)) எப்படியும் கழட்டிடுவா:)) ஆருடைய ட்ரெயினிங்?:) எல்லாம் அதிராவோடதெல்லோ:))

      Delete
  30. எனக்கு இந்த செல்பி பூஸார் ரெம்ப பிடித்துப்போய் சுட்டுட்டேன். ஆ யாரோ வீட்டிலிருக்கும் அநாமிகாவை இவா கூட்டிக்கொண்டு வந்து தன்வீட்டில் கட்டியிருக்கா. கம்ப்ளைண்ட் செய்யனும்.

    அப்பிள் கவர் சூப்பரா இருக்கு. நான் கனகாலமா ஐபாட் ல தான் வாசிக்கிறேன் என்பதை பதிவு செய்கிறேன் பூசார். (online book உட்பட.) ஆனா இம்முறை கொஞ்சபுத்தகம் வாங்கி வந்தேன். அவையும் வாசிக்கனும். சில புக் நேரடியா வாசிக்குமாப்போல வராது. சில book ஒன்லைனல இல்லை. நீங்க சொல்லியிருக்கும் கதைப்புத்தகத்தினையும் வாசிக்கிறேன்.
    பக்கத்துவீடு ப்ளம்ஸ் ஜன்னல் படம் அழகு. கீழே பொருத்தமா ஜன்னல் மலர் கதையை போட்டிருக்கிறீங்க.

    ஊசி இணைப்பு அருமை. ஊசிக்குறிப்பு மிகமிக உண்மை.
    தமன்னா மெஹந்தி அழகா இருக்கு.

    தீர்க்கதரிசி அதிரா..... 😲 😲 😲

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //எனக்கு இந்த செல்பி பூஸார் ரெம்ப பிடித்துப்போய் சுட்டுட்டேன்///

      ஆஆஅ இது எப்ப தொடக்கமாக்கும் இந்தப் பழக்கம்?:) சுட்டதைச் சொன்னேன் ஹா ஹா ஹா:).

      //ஆ யாரோ வீட்டிலிருக்கும் அநாமிகாவை இவா கூட்டிக்கொண்டு வந்து தன்வீட்டில் கட்டியிருக்கா. கம்ப்ளைண்ட் செய்யனும்.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒரு கோஓஓஒடி . ஆம்ம்ம்ம்.ப்பூ ஒரு கோடி குடுத்து வாங்கி வந்தேன் தெரியுமோ?:)..

      //நான் கனகாலமா ஐபாட் ல தான் வாசிக்கிறேன் என்பதை பதிவு செய்கிறேன் பூசார். (online book உட்பட.)//

      ஓ என்ன என்ன வெப்சைட்டில் நல்ல புக்ஸ் கிடைக்குது- இப்படிப் பிரபல்யமானோரின், எனவும் சொன்னால் நல்லதெல்லோ... ஏனெனில் இந்த தமிழ்த்தேசியத்தில் நிறைய இல்லை..

      //தமன்னா மெஹந்தி அழகா இருக்கு//
      அது நெல்லைத்தமிழனுக்காகவே போட்டிருக்கிறா போல:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).

      //தீர்க்கதரிசி அதிரா..... 😲 😲 😲//
      யா..யா.. அது மீ தான்:))... காசிக்குப் போக ரெடியாகிறேனெல்லோ.. அஞ்சுவைக் கையில பிடிச்சுக்கொண்டு:)..

      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
  31. எனக்கும் கணினியில் படிப்பதைவிட, நூலைப்படிப்பதே விருப்பமானது.

    ஊசி(ப்போன)குறிப்பு அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //எனக்கும் கணினியில் படிப்பதைவிட, நூலைப்படிப்பதே விருப்பமானது//

      எனக்கும்தான், ஆனா கணனியைவிட ஐபாட்டில் ஈசியாக இருக்கு.. கையில் புக் வைத்துப் படிப்பதுபோல ஃபீலாகுது:).

      //ஊசி(ப்போன)குறிப்பு ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கில்லர்ஜி கல்யாணமானதிலிருந்து .. ஹையோ டங்கு ஸ்லிப்பாச்சு:).. மகனுக்குக் கல்யாணமானதிலிருந்து பேச்சே மாறிப்போச்ச்ச்ச்ச்:) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  32. அடுத்த கதைக்கும் ரிவியூ எழுத மாட்டேன் - இந்த வரிதான் இடுகையின் மிகுதியையும் படிக்க வைத்தது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. தமனாக்காவைப்பார்த்து:) கூச்சப்பட்டு வராமல் விட்டிடுவீங்களோ என நினைச்சேன்:)..ஹா ஹா ஹா.

      //அடுத்த கதைக்கும் ரிவியூ எழுத மாட்டேன்//
      ஹா ஹா ஹா ஆனா இன்னொரு கதைக்கு எழுதுவேன், அது இப்போ 2,3 மாதமா முயற்சிக்கிறேன், ரைம் கிடைக்குதில்லை:)

      Delete
  33. ஐபேட்ல உங்க தளம் வரலை. மொபைல்ல படிக்கப் பிடிக்காது. இன்னும் லேப்டாப்ல படிக்க போகலை

    ReplyDelete
    Replies
    1. என்னுடையதில் பிரச்சனை இல்லாமல் வருதே என்பக்கம்.. தெரியவில்லை.

      Delete
  34. நெல்லைத்தமிழன் புரோ - ஒத்துக்கறேன். என்னைவிட வயசானமாதிரியான தமன்னா படம் போட்டு வெறுப்பேத்தறீங்களா? பரவாயில்லை. அதுக்கு முந்தின ஸ்லைடு படிச்சீங்க இல்லையா?

    விளைவு என்றாவது ஒரு நாள் வரும். ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ///என்னைவிட வயசானமாதிரியான தமன்னா படம் போட்டு வெறுப்பேத்தறீங்களா? //

      ஹா ஹா ஹா உங்களைப்பார்த்தால் எல்லோ, உங்களைவிட வயசாப் போடலாம்:)).. இது என்ன இது புயு:) வம்பாக்கிடக்கூ:)).

      ///அதுக்கு முந்தின ஸ்லைடு படிச்சீங்க இல்லையா?

      விளைவு என்றாவது ஒரு நாள் வரும். ஹா ஹா///
      ஹா ஹா ஹா ஹையோ அந்த வளைவை சே சே டங்கு ஸ்லிப்பாகுதே விளைவை அஞ்சுவுக்குக் குடுங்கோ:).. “தென்னை மரத்தில தேள் கொட்ட, பனை மரத்தில சுளுக்கு விழுந்ததாமே”.. அந்தப் பழமொழிக்கு ஒத்துப் போகட்டுமே:))

      Delete
  35. தமிழ் தேசியத்தில் கீரை உணவு பற்றித்தான் நிறைய புத்தகங்கள் இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. ஓம் ஹா ஹா ஹா புதுசா இணைச்சிருக்கினம் கீரை பற்றி, ஆனா ஹோம் போய்ப் பாருங்கோ.. நிறையப்பேரின் புத்தகங்கள் இருக்குது, பலர் தெரியாதவர்கள்.. ஆனா எனக்கொரு சந்தோசம், கண்ணதாசன் அங்கிளின் எந்தப் புத்தகமும் எங்கும் கிடைக்கவில்லை, இதில் இருக்கு.. அர்த்தமுள்ள இந்துமதமும் இருக்கே.. அதில்தான் “30 நாளும் பெளர்ணமி” படிக்கத் தொடங்கிட்டேன்.

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.

      Delete
  36. உங்களின் பதிவைப்படித்த பிறகு, தமிழ் தேசீயம் சென்று பார்த்தேன். உண்மையிலேயே நிறைய நல்ல நல்ல புத்தகங்கள் அங்கிருக்கின்றன! அன்பு நன்றி அதிரா!

    ஊசிக்குறிப்பு அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ, நலம்தானே..

      மிக்க நன்றிகள், நீங்களும் நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்கோ.

      Delete
  37. கோமதி அக்காவை எங்கேயும் காணமே...

    ReplyDelete
    Replies
    1. கோமதி அக்கா கோயில் trip with relatives னு சொன்னாங்க

      Delete
    2. ஓ அப்படியோ நான் கவனிக்கவில்லை, டாங்ஸ்:)

      Delete
    3. ஏஞ்சல், அதிராவுக்கு தகவல் சொன்னதற்கு நன்றி.
      இன்று காலைதான் உறவினர் ஊருக்கு போனார்கள்.

      Delete
    4. அதிரா, அக்காவைதேடியதற்கு நன்றி.உறவினர்களுடன் பழமுதிர்ச்சோலை, அழகர் கோவில், மதுரை மீனாட்சி கோவில் மற்றும் வீட்டுப்பக்கத்தில் கோவில் மற்றும் அவர்களுடன் உறவினர்களை பார்த்து வந்தோம்.

      Delete
    5. ஊகிக்குறிப்பு, ஊசி இணைப்பு மிக அருமை.
      செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவார் என்பது உண்மை.
      ஊசிக்குறிப்புக்கு பொருத்தமான கண்ணன் படம், யாதவக் குல அழிவுக்கு காரணம் யாதவர்கள் விளையாட்டாக செய்த செயல். அந்தக் காலத்தில் இதை எல்லாம் சொல்லி மக்களை நல் வழி படுத்தினார்கள்.

      Delete
    6. செரி மரம் பூத்துவிட்டது... //
      அழகான காட்சி.

      மகன் நியூஜெர்சியில் இருக்கும் போது அவன் வீட்டுக்கு அருகில் இலை தெரியாமல் பூத்து குலுங்கியதைப் பார்த்து இருக்கிறேன்.

      Delete
    7. //ஐபாட் ஐ, இரு பக்கமாக ஸ்ராண்ட் போல நிறுத்தி வைக்கலாம். இது உங்களிடமும் இருக்கலாம், இருப்பினும் என்னுடையதைக் காட்டினேன்:) ஒரு ஆசையில்:).//

      என் பேரனிடம் இருக்கிறது.
      உங்களுடையதும் அழகு.

      Delete
    8. சுஜாதாவின் நாவல்கள் நிறைய படித்து இருக்கிறேன்.
      நீங்கள் கொடுத்த கதைகள் படித்த நினைவு இருக்கிறது மீண்டும் படித்துப் பார்க்கிறேன்,
      நேரம் ஒதுக்க வேண்டும்.

      Delete
    9. புத்தக விமர்சனம் அருமை.
      படிக்க ஆவலை ஏற்படுத்தும் விமர்சனம்.

      Delete
    10. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      எப்படியும் போஸ்ட் போட்டு சில மணி நேரத்துள் வந்திடுவீங்க, இது வராததால், கல்யாணவீடுதான் முடிஞ்சுபோச்சே.. எங்கே போயிட்டா கோமதி அக்கா என யோசிச்சேன்.
      //பழமுதிர்ச்சோலை, அழகர் கோவில், மதுரை மீனாட்சி கோவில் //

      ஆவ்வ்வ்வ்வ் நல்ல நல்ல இடங்களுக்குப் போய் வந்திருக்கிறீங்க... மகிழ்ச்சி.

      Delete
    11. அனைத்தையும் அழகாய் ரசித்தமைக்கு நன்றி. நீங்களும் மாமாவும்தான் புத்தகப் பிரியர்களாச்சே, ஆனா இப்போ அதிகம் கோயில் சுற்றுலா போய் வருவதால், ப்படிப்பதைக் குறைச்சிட்டீங்க என நினைக்கிறேன்.

      மிக்க நன்றி.

      Delete
  38. பிடித்த் பாடல், கேட்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, பெரும்பாலும் எல்லோர் மனதையும் கவரும் பாடல்.

      Delete
  39. Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. மகிழ்ச்சி..

      Delete
  40. செல்ஃபோனில் பார்ப்பதால் பாடலை டவுன்லோட் செய்வது கஷ்டமாக இருக்கிறது. மற்றபடி பதிவு வழக்கம் போல் ஸ்வாரஸ்யம். அதிலும் ஊசிக்குறிப்பு அட்டகாசம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ.. ஓ செல்போனில் கஸ்டம்தான்..

      ஏதோ கனவுகள் நினைவுகள் மனதிலே மலருதே...
      காவேரி ஊற்றாகவே.. எனும் பாடல்...

      மியாவும் நன்றி..

      Delete
  41. இப்போதுதான் சுஜாதா படிக்க ஆரம்பித்திருக்கிறீர்களா? இதில் ஶ்ரீராமின் கருத்துதான் எனக்கும்.
    பொன்னியின் செல்வன் படிக்க ஒரு ஐடியா சொல்கிறேன், அதில் ஆழ்வார்க்கடியான் வரும் பகுதிகளை மட்டும் படியுங்கள். பின்னர் நந்தினி வரும் பகுதிகளை படியுங்கள். உங்களால் தொடர்ந்து படிக்காமல் இருக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. முன்பும் படிச்சிருக்கிறேன் பானுமதி அக்கா, ஆனா பெரிதாக இன்னாருடையதைப் படிக்கிறேன் என நினைச்சுப் படிச்சதில்லை.

      பொன்னியின் செல்வன்.. ஹா ஹா ஹா.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், எனக்கு கொஞ்சம் நீண்ட ஹொலிடே கிடைக்கையில் ஆரம்பிக்கிறேன், இடைவேளை விட்டிட்டால் தொடர முடியாமல் போய் விடுகிறது அதில்.. அதுதான் என் பிரச்சனை..

      குதிரையில் வஞ்சியத் தெவன் வந்தார் என்றாலே.. ஹையோ இதென்ன இது என்றாகி விடுகிறது ஹா ஹா ஹா..
      இருந்தாலும் விட மாட்டேன்ன்ன்... பூஸோ கொக்கோ:).. படிச்சே தீருவேன்.

      மிக்க நன்றிகள், உங்கள் ஐடியாவை மனதில் எடுத்துக் கொண்டேன்.. பானுமதி அக்கா.

      Delete
  42. வெரி சாரி அதிரா உங்கள் பதிவு ஏன் மிஸ் ஆகிப் போகுது, கணினிக்கும் வருவதில்லை....

    நான் இன்று இப்ப சும்மா என்னாச்சு அதிரா பதிவு காணலையேனு பார்த்தா,,ஆஆஆஆஆஆஆ

    படிச்சுட்டு வரேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒவ்வொரு தடவையும் இதையேதான் சொல்றீங்க.. இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேனாக்கும்:))

      Delete
  43. தமன்னா கண்ணில் பட்டுவிட்டார்,,,ஆஆஆஆஆஆ நெல்லையை ப்ரோ என்று சொல்லி நல்லாருங்கனு சொல்ற மாதிரி படம் போட்டுருக்கீங்க!! ஓ மெகந்தி தெரியவோ!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தான் மெஹந்தி போட்டதைக் கூப்பிட்டுக் காட்டுறாவாம்ம் நெ.தமிழனுக்கு:)

      Delete
  44. பாட்டு மிகவும் பிடித்த பாடல்…..நல்ல பாட்டு ரசித்தேன் அதிரா…

    கீதா

    ReplyDelete
  45. அதிரா எனக்கும் கம்ப்யூட்டர்ல் வாசிக்கப் பிடிக்காதுதான் ஆனால் புத்தகம் வாங்குவது நடப்பதில்லை எனவே கம்ப்யூட்டரில்தான் வாசிக்கிறேன் வேறு என்ன செய்ய….அதற்காக நல்ல புத்தகங்களை விட முடியாதே…

    இப்படிப் புத்தகங்களை பதிவேற்றியவர்களுக்கும் நன்றி சொல்லனும், புத்தகம் எழுதியவர்களூகக்கும் தான்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மை கீதா, நாம் எப்பவும் கோடு போட்டு வாழக்கூடாது, சரி செய்துதான் பார்ப்போமே காசா பணமா எனக் களம் இறங்கினேன்.. இப்போ நேரமே இல்லாமல் புத்தக வாசிப்புத்தான் நடக்குது ஹா ஹா ஹா:).

      Delete
  46. ஆமாம் ஸ்ரீராம் அன்று போட்டதும், அன்று 14 நாட்கள் படித்துவிட்டேன் செம கதை அதிரா…..அதையும் வாசித்துப் பாருங்கள்……இக்கதை வாசித்ததில்லை…நானும் ஆன்லைனில் பார்க்கிறேன்…

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓ 14 நாட்கள் படிக்க முன் கண்ணதாசன் அங்கிளுக்குத் தாவிட்டேன், படிப்பேன் அதையும் கீதா.

      Delete
  47. ஜன்னல் மலர்களும் வாசிக்கனும் அதிரா…,,,சுஜாதா ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்க் ரைட்ட்டர்….எனக்கு மிகவும் பிடித்தவர் ஆனால் அதிகம் வாசித்ததில்லை கொஞ்சம் அங்குமிங்கும் முழுவதும் இல்லாமல் வாசித்ததே என்னை மிகவும் ஈர்த்தது….அதனால் இப்பத்தான் ஆன்லைனில் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்…

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஜன்னல் மலர் படிச்சிட்டேன் கீதா.. சூப்பர். குட்டிப் புத்தகம்தான் படியுங்கோ.

      Delete
  48. படங்கள் ரொம்ப அழகா இருக்கு…..

    ஹா ஹா ஹா ஹா ஊசி இணைப்பு ஆனா உண்மையான மக்கள் சைக்காலஜி!!!!

    கிச்சா படமும் தத்துவமும் அருமை…

    முதல் பூசார் படம் செம க்யூட்!!!! ஆஆஆஆஆ பூஸாரைச் சுட்டுப் போட்டீங்களோ!! நல்ல காலம் பொம்மைத் துப்பாகி!! அழகாக உயிரோடு இருக்கிறாரே!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அனைத்தையும் ரசித்தமைக்கு மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  49. ஓ உங்க பளாகிலிருந்தும் களவு எடுக்கினமோ?!!! ஆஆஆ..!!!!அனாமிக்கா க்யூட்!!!அழகு!

    ச்சே அதிரா எங்கள் கண்ணழகியைப் போட்டிருக்கலாமே! செம காவல் காப்பா!!! சரி சரி அவளைப் பற்றி பதிவு போடறேன் படங்களோடு…..அப்ப ஒரு வேளை நீங்க உங்க செக்யூரிட்டியை மாற்றும் ஐடியா இருந்தா நம் கண்ணழகியை சுடாம எடுத்துக்கோங்கோ!!!!!ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதிராவே பாடலை களவு எடுத்ததினால் இப்போ அது இண்டெர்னல் சர்வர் எரர் காண்பிக்குது. இதுல அதிராவோட படங்களை களவு எடுக்கிறார்களா? நம்பிட்டேன்

      Delete
    2. //ஓ உங்க பளாகிலிருந்தும் களவு எடுக்கினமோ?!!! ஆஆஆ..!!!!அனாமிக்கா க்யூட்!!!அழகு!//

      பின்ன என்ன கீதா.. அதுவும் அடிக்கடி களவு போகுதே.. ஆனா கள்ளர் வெளியே இருந்து வரெல்லை:) வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்:)...

      ஹா ஹா ஹா கண்ணழிகியை அநாமிக்காவுக்குப் ஃபிரெண்ட் ஆக்கிட்டால் போச்ச்ச்ச்:))

      மிக்க நன்றிகள் கீதா.

      Delete
    3. //நெல்லைத் தமிழன்Tuesday, March 05, 2019 2:56:00 am
      அதிராவே பாடலை களவு எடுத்ததினால்//

      என்னாது பாடலை?.. மீஈ? களவு?.. ஹையோ இதை எங்கின போய்ச் சொல்லுவேன்ன்:) எனக்கு களாவுக்கு ஸ்பெல்லிங்கூடத் தெரியாதே:)) ஹா ஹா ஹா..

      நெல்லைத்தமிழன் உங்களுக்காக கெள அண்ணன் பக்கம் தண்ணி குடிப்பதற்குப் பதில் போட்டனே.. பார்த்தீங்களோ இல்ல பார்த்திட்டுப் பார்க்காமல் போயிட்டீங்களோ தெரியல்லியே:))..

      மிக்க நன்றி நெ.தமிழன்.

      Delete
  50. சூப்பர் சூப்பர் அதிரா ...ஐ பாட் க்கு வாழ்த்துக்கள்

    சுஜாதாவின் சில நாவல்கள் படித்து இருக்கேன் சிலது பெண்டிங் ல் இருக்கு ரொம்ப வருசமா..

    நான் 5 வருஷ மாவே tab ல தான் படிக்கறது ...rending library ல rent அதிகம் பண்ணவும் இப்படி படிக்க ஆரம்பித்த பழக்கம் ...ஒவ்வொரு மாசமும் கொஞ்சமா நாவல் டவுன்லோட் பண்ணுவேன்.. படிச்சா தான் புத்துணர்வு எனக்கு ..


    பக்கத்து வீட்டுச் செரி மரம் ...வெகு அழகு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      ஓ நீங்களும் ஓன்லைன் ரீடரோ... நல்ல விசயம்.. எனக்கு பிரபல்யமானவர்கள்.. நல்ல புத்தகங்கள் படிப்பதே அதிகம் பிடிக்கும்.. கதை என அனைத்துப் புத்தகங்களையும் வாசிக்க மாட்டேன், செலக்ட் பண்ணியே படிப்பேன்.

      மிக்க நன்றிகள் அனு.

      Delete
  51. வணக்கம் !

    தீர்க்கதரிசி அதிராவுக்கும் என்னினிய சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    பதிவுக்குப் பிறகு வருகிறேன் பூசாரே நன்றி

    தீர்க்க தரிசி இடம் பல கேள்விகள் கேட்க வேண்டி இருக்கிறது அவ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ.. உங்களிடம் நான் அதிகம் கடன் பட்டுக் கொண்டிருக்கிறேன், நீங்கள் போஸ்ட் போட்டால்தானே நாங்கள் கொமெண்ட்ஸ் போட முடியும், இடைக்கிடையாவது மறக்காமல் எட்டிப் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி.

      //தீர்க்க தரிசி இடம் பல கேள்விகள் கேட்க வேண்டி இருக்கிறது அவ்வ்வ்//
      என்ர திருச்செந்தூர்ச் சிவனே:) டக்குப் பக்கென பெயரை மாத்திட வேண்டியதுதேன்:)..

      Delete
    2. மிக்க மிக்க நன்றிகள் சீராளன்.. முடியும்போதெல்லாம் மறக்காமல் வாங்கோ.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.