நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Friday, 8 March 2019

 “பி-பப்பா புடிங் & மொறு மொறு வறுத்த கடலை”

ஹா ஹா ஹா தலைப்பே புதுசா இருக்கெல்லோ. நேற்று வெங்கட் நாகராஜ் பக்கத்திலே ஒரு ரெசிப்பி போட்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் எனக்கு உடனேயே செய்யோணும் எனும் ஆசை வந்துது, ஆனா அங்கு ஆதி, அளவு குறிப்பிடவில்லை, கேட்டிருந்தேன் இன்னும் பதில் இல்லை., எனக்குப் பொறுமை இல்லை:), சரி பறவாயில்லை , நான் என்ன அஞ்சுவோ அளவெடுத்துச் செய்வதற்கு:) ஹா ஹா ஹா.. நாமதான் சமையல் குயின் ஆச்சே:), எனக்கெதுக்கு அளவு என எண்ணிக்கொண்டு ஆரம்பிச்சேன்.

நான் எடுத்த அளவுகளைச் சொல்கிறேன், ஆனா என் அளவில் சில மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்.

Full cream milk - 500 ml
இதனை நன்கு காச்ச வேண்டும்..  காச்சியபின் இறக்கி கொஞ்சம் ஆவி அடங்கியதும், கொண்டென்ஸ்ட் மில்க் ஐ சேர்த்துக் கலக்க வேண்டும். நான் இதற்கு எடுத்த அளவு 6 மேசைக் கரண்டிகள்.[இது என் கணக்கின்படி போதாது, இன்னும் கொஞ்சம் 10-15 கரண்டிகள் போட்டால் நல்லது].

பின் அதனுள் நல்ல கட்டித்தயிர் 4 மேசைக்கரண்டிகள் சேர்த்தேன்.. இதையும் 3 கரண்டிகள் சேர்த்தால் போதும் என நினைக்கிறேன்.  அனைத்தையும் நன்கு கலந்து, ஆவியில் அவித்து எடுத்தேன். என்னிடம் மண் குட்டிப்பானை இல்லை, அதனால கிளாஸ் டிஸ் இலேயே அவித்தேன்..

அரை மணித்தியாலத்தில் இப்படி அவிந்து வந்திருந்தது.

பின்னர் ஃபிரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்ததும் இப்படி ஆச்சு...

இப்போ சாப்பிடலாம் வாங்கோ..

அதிராவில் ரா மறைக்கப்பட்டிருக்கு:)
முடிவில டிஸுக்கி:- அது என்னான்னா, பார்க்க அழகாகத்தான் இருக்கு, ஆனா நான் படம் பார்த்து ஆசைப்பட்டளவுக்கு சுவை வரவில்லை, யோகேர்ட் சுவையாகவே இருந்தது.. அதனால்தான் என் அளவை மாத்தச் சொன்னேன்_()_
=================இடைவேளை=================
இடைவேளை விட்டிருக்கு, போய் ஒரு பிளேன் ரீ யும் பருப்பு வடையும் சாப்பிட்டுத் தென்பாகி வாங்கோ, அடுத்த ரெசிப்பி செய்யலாம்:)..

======================================================
அடுத்து என் ஃபேவரிட் வறுத்த கடலை. ஊரில் கோயில்களில் மண் போட்டு சுடச்சுடக்  “கச்சான் ஆச்சி” வறுத்துத் தருவா, அது எப்படிச் செய்வதெனத் தெரியாமல் தேடித்திரிந்தேன். சில குறிப்புக்கள் கிடைத்தன, ஆனா அதிலும் தெளிவு இல்லை, அதனால விடா முயற்சி பண்ணி மூன்றாம் முறையாகவே சரியான செய்முறை கண்டு பிடிச்சேன்.

இந்த வறுவைக்கு தேவையானது, கடலை தவிர.. உப்பு மற்றும் இங்கு நான் பாவித்திருக்கும் கரண்டி.

1. முதலில் உப்பை நன்கு சூடாக்க வேண்டும், பின்னர் இந்தக் கொண்டைக்கடலையை கொஞ்சமாகப் போட்டு நன்கு பிரட்டிப் பிரட்டி எடுக்கோணும்.. 
இந்த முறை சரி வரவில்லை, ஹார்ட் ஆக இருந்துது. அதனால கொஞ்சம் கடலையை ஊறப்ப்போட்டுவிட்டேன்.

2. கடலை 5,6 மணித்தியாலங்கள் ஊறிட்டுது, அதனை வடித்து அப்படியே ஈரத்தோடு உப்பில் போட்டேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுவும் உப்புக்கடலைபோலவே ஆகிட்டுது:)... இதுவும் சரிவரவில்லை:).

3. விடா முயற்சியாக மூன்றாம் தடவையே கண்டு பிடிச்சேன். அதாவது கடலையை 20-30 நிமிடங்கள் மட்டுமே ஊறவிட்டு, டக்கென வடிச்சு எடுத்து பேப்பரில் அல்லது ஒரு துணியில் போட்டு நன்கு உலர விட வேண்டும்.. வெய்யிலில் அல்ல. ஈரத்தன்மை இல்லாமல் போகும்வரை விட்டு விட்டு பின்பு இப்படி, உப்பை நன்கு சூடாக்கி, கடலையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பிரட்டிப் பிரட்டி எடுக்கோணும், சூப்பராக வந்துது. கறுக்கும் வரை விட்டிடக்கூடாது.


இதே முறையிலேயே அனைத்து தானியங்களிலும் செய்யலாம் என்பதால் செய்தேன், ஆனா கடலை மட்டுமே நல்ல சுவை, ஏனையவை சுமார்தான்.
இதிலிருப்பவை, கெளபி, கிட்னி பீன்ஸ், கச்சான், பயறு, கொ.கடலை.

வழமையாக கச்சான், பயறு இரண்டையும் ஊறவிடாமல் அவனில் போட்டு எடுப்பேன், இது இந்த முறையில் செய்து பார்த்தேன்.  என்னில் ஒரு பழக்கம் இருக்கு, வீட்டில் நின்றால் எதையாவது கொறிக்கோணும்:), அதனால இப்படி வறுத்து வச்சால், உடம்புக்கு கேடில்லை, இல்லை எனில் தேவை இல்லாததெல்லாம் வாயில் நுழையும்:).

ஊசி இணைப்பு
ஹா ஹா ஹா:)

ஊசிக்குறிப்பு:

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

210 comments :

 1. [im]http://ofunnygames.com/images/stories/2013/march/tomandjerry-fly-with-clouds.jpg[/im]

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. நல்லவேளை நீங்க படம் தேடும் ஹப் இல் யாரும் உள்ளே நுழையவில்லை:))

   Delete
 2. //நாமதான் சமையல் குயின் ஆச்சே:), எனக்கெதுக்கு அளவு என எண்ணிக்கொண்டு ஆரம்பிச்சேன்.//

  சாமீ சேவ் மீ ..இதெல்லாம் பாக்க பாக்க ப்ரெஜர் எகிறுது எனக்கு

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது பொறாமை வந்தா பிறசர் எகிறும்தேன்ன்ன்:))

   Delete
 3. ஹையா அந்த சீஸ் கேக் நல்லாருக்கு :)
  இல்லல்ல அந்த அல்வா நல்லா இருக்கு
  இல்லல்ல அந்த ஐஸ் க்ரீம் நல்லாருக்கு
  ஹாங் ஹஆஹாஆ

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நானும் நினைச்சேன், நானாக ஏதும் தமிழ்ப்பெயர் சூட்டலாமோ என, பின்பு எதுக்கு, வேண்டாம் என விட்டு விட்டேன்...

   Delete
 4. ஊசிக்குறிப்பும் டான்ஸ் ஆடும் நீங்களும் நானும் சூப்பர் :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. அதில எனக்கொன்று எழுத வந்துது:) பின்பு எதுக்கு ஊர் வம்ஸ் என விட்டு விட்டேன்:)

   Delete
 5. பயறு வகைகள் எல்லாம் உப்பில் வறுத்ததா ??
  எப்படி இவ்ளோ நீட்டா கொஞ்சம் கூட தீய்க்காம வறுத்தீங்க ??

  ReplyDelete
  Replies
  1. வெறும் சட்டியில் வறுக்கும்போதுதான் அஞ்சு கருகுகிறது, இப்படி உப்புப் போட்டு வறுக்கும்போது சூப்பரா வருது, உப்பும் அளவு சரியா வருது.. ஊற விடும்போது உப்புப் போடவில்லை நான்.. அது கூடிவிடும்.

   ஆனா ஒன்று என்னவெனில், ஒரு கைப்பிடி அளவுதான் ஒரு தடவை போட முடியும், அதனால நீண்ட நேரம் எடுக்கும்.

   Delete
  2. /தீஞ்சு/ -இறைவா... எனக்கு ஏன் கறுத்த தீஞ்ச அச்சப்பம் நினைவுக்கு வருது?

   Delete
  3. கர்ர்ர்ர்ர் நெல்லைத்தமிழன் நேத்து நான் கொடுத்த மைசூர்பாகை திரும்ப கொடுங்க .

   Delete
  4. கம்மோன் அஞ்சூ (இது அதிரா எழுதறது). ஏஞ்சலின் - பாசிடிவ் திங்கிங் வேணும். நான் உங்க ஹஸ்பண்டை புகழ்ந்தது உங்களுக்குப் பிடிக்கும்னு நினைத்தேனே. எத்தனையோ வேலைகளுக்கிடையில் உங்களுக்கு உதவி, அட்டஹாசமான அச்சப்பம் செய்துகொடுத்தாரே.. உங்களுக்கும், படிக்கறவங்களுக்கும் அதுதான் ஞாபகம் வரும்னு நினைத்தேன்.

   ஆமாம்..எப்போ மைசூர்பாக் கொடுத்தீங்க?

   Delete
  5. //நெல்லைத் தமிழன்Saturday, March 09, 2019 5:24:00 am
   /தீஞ்சு/ -இறைவா... எனக்கு ஏன் கறுத்த தீஞ்ச அச்சப்பம் நினைவுக்கு வருது?///

   ஹா ஹா ஹா...

   Delete
  6. ///AngelSaturday, March 09, 2019 10:11:00 am
   கர்ர்ர்ர்ர் நெல்லைத்தமிழன் நேத்து நான் கொடுத்த மைசூர்பாகை திரும்ப கொடுங்க .///

   ஹா ஹா ஹா முடியல்ல முருகா:) தமிழ்நாட்டில ரிவி, பிளெண்டர் குடுத்து, வாக்குக் கேட்பதைப்போல இருக்கே இது... ஹா ஹா ஹா

   Delete
  7. @ நெ.தமிழன்
   ///ஏஞ்சலின் - பாசிடிவ் திங்கிங் வேணும். //

   ஹா ஹா ஹா இதைப் பார்த்ததும் இப்போ அஞ்சுப்பிள்ளை ரென்சனாகியிருப்பா:))

   //நான் உங்க ஹஸ்பண்டை புகழ்ந்தது உங்களுக்குப் பிடிக்கும்னு நினைத்தேனே. //

   அப்பூடி.. அஞ்சுவின் இடத்தில இருந்து நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்திடக்கூடா கர்ர்:)) ஹா ஹா ஹா:))..

   ///ஆமாம்..எப்போ மைசூர்பாக் கொடுத்தீங்க?//

   ஹையோ இதைவிடக் கொடுமை வேறென்ன இருக்கு?:).. நேற்று எங்கள் புளொக்கில நீங்க மகளிர் வாழ்த்துச் சொன்னதுக்கு அஞ்சு குடுத்தா.. மீ உடனேயே பாய்ஞ்சு அதைப் பறிச்சு எறிஞ்சுபோட்டு:) ஹா ஹா ஹா.. நான் ”பி-பப்பா” தருகிறேன் என்றேனே:)) படிக்கவில்லையோ?:)

   Delete
  8. அங்க இன்றுதான் பார்த்து, பதிலும் உங்கள் இரண்டுபேருக்கும் கொடுத்திருக்கிறேன். நன்றி

   Delete
  9. நெல்லைத்தமிழன், நான் சைன் பண்ணும் இடங்களில் பொதுவா நோட்டிபிகேசனைக் கிளிக் பண்ணிடுவேன், அதனால உடனேயே எனக்குத் தெரிஞ்சிடும்:)...
   அதிலயும் முக்கியமாக நான் ஏன் நோட்டிபிகேசன் வைக்கிறேன் தெரியுமோ.... அஞ்சுப்பிள்ளையை வோச் பண்ணத்தான் ஹா ஹா ஹா:)... இல்லாட்டில் ஓவரா துள்ள வெளிக்கிடுவா:)...

   என்ன் நீங்க வைப்பதில்லையோ கர்ர்ர்ர்:)... அதனாலதான் என் தண்ணிக்கொமெண்ட்டையும் நீங்க பார்க்கேல்லை கர்ர்ர்ர்ர்:)..
   மிக்க நன்றி நெதமிழன்.

   Delete
 6. //ஊரில் கோயில்களில் மண் போட்டு சுடச்சுடக் “கச்சான் ஆச்சி” வறுத்துத் தருவா, //

  மண்ணில் தானே சுடுவாங்க எப்படி உப்பு இவ்ளோ போட்டு சுட்டீங்க எனக்கு சொல்லுங்க

  ReplyDelete
  Replies
  1. வெளிநாட்டில், சுத்த மண் எடுப்பது கஸ்டமெல்லோ, ஆனா கடற்கரையில் எடுத்து வந்து கழுவி சுத்தப் படுத்திப்போட்டும் பாவிக்கலாம் என நினைக்கிறேன், இருந்தாலும் அதில் ஒருவித மணம் வரக்கூடும், இது சுத்தமாக இருக்குது, வாசமும் நல்லா வருது.

   Delete
  2. அதிரா இது உப்பு போட்டு சுட வேண்டாம்....உப்பு கலந்த நீரில் கொஞ்சம் ஊற வைத்துவிட்டுச் செய்வாங்க எங்க பாட்டி அப்படித்தான் நான் செய்வதும். வரகரசி என்று எங்கள் வீடுகளில் செய்வதுண்டு...பல தானியங்கள் கலந்து இப்படிச் செய்வது...

   கீதா

   Delete
  3. கீதா உப்பு நீரில் ஊறவிட்டால், மண் போட்டெல்லோ வறுக்கோணும், வெறும் சட்டியில் வறுத்தால் கறுத்து விடுகிறதே...

   Delete
 7. ஹாஹா :) வாழ்க்கை தத்துவம் நான் தொடர்வதுதான் :) இல்லேனா நம்மை நாம தான் தேத்திக்கணும்

  ReplyDelete
  Replies
  1. அதே அதே ஏஞ்சல் அண்ட் அதிரா!!!! இல்லைனா....ஆரூஊஊஊஊஊஉ...

   கீதா

   Delete
 8. [im]https://sep.yimg.com/ca/I/heavenlytreasuresjewelry_2559_1323214657[/im]

  சரி சரி இப்போ பாராட்டிடறேன் :) உண்மையில் புடிங் சூப்பரா இருக்கு பார்க்க ..அதனால் இந்தாங்க உங்களுக்கு

  ReplyDelete
  Replies
  1. வாவ்வ்வ்வ் வாழ்க்கையில் முதல் தடவையாக எனக்கு கிஃப்ட் தந்திருக்கிறீங்க:).. என் பி.நாளுக்குச் சேர்ந்த காசில் இதை வாங்கித் தந்து போட்டு மிகுதியை உங்கட எக்கவுண்டில போட்டு விட்டீங்களோ எனவும் ஜந்தேகம் வருதே:)).. ஹா ஹா ஹா எதுவாயினும் மியாவும் நன்னி:).

   புடிங் சூப்பர்தான், கொஞ்சம் இனிப்பு குறைவாகிட்டுது, இனி கொண்டென்ஸ்ட் மில்க் இன் அளவைக் கூட்டினால் சரியாகும்.

   Delete
  2. ஏஞ்சல் என்னாச்சு இப்படி அவசரப்பட்டு பரிசெல்லாம் கொடுத்துட்டீங்க....படத்தைப் பார்த்துக் கொடுக்கலாமோ? சாப்பிட்டுப் பார்த்துட்டுத்தானே கொடுக்கணும்...ஹா ஹா ஹா சாப்பிட்டுப் பார்த்துட்டு அப்புறம் வாபஸ் வாங்க முடியாதே?!! முடியுமா என்னா?!!!! ஹா ஹா

   கீதா

   Delete
  3. கீதா ரங்கன் - என்ன இப்படி சின்ன விஷயம்கூட உங்களுக்குப் புரியலை... ஏஞ்சலின் அதிராவுக்கு 'பாராட்டி பரிசு' கொடுக்கறாங்கன்னா அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் உண்டு. அடுத்து தேவைதை கிச்சனில் ஏஞ்சலினோட செய்முறை வரப்போகுதுன்னு நினைக்கறேன். நீங்க வேணா பாருங்க... அதிரா தான் 1ஸ்டூ என்று சொல்லிக்கொண்டே அங்க போய், இடுகையைப் படிக்காமலேயே 'ஆஹா ஓஹோ' என்று புகழ்ந்து எழுதப்போறாங்க (ன்னு ஏஞ்சலின் நம்பி இப்போ பரிசு கொடுத்திருக்காங்க)

   Delete
  4. ஹாஹாஆ :) அதே அதே அஃதே

   Delete
  5. ஏஞ்சலின்... உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம். நான் பத்து நாட்கள் ஊரில் இல்லை. ஊரில் இருந்தாலும் என் கண்ணாடி தொலைந்துபோயிருக்கும். இல்லைனா, இணைய கனெக்‌ஷன் இருக்காது....... (எப்படீல்லாம் சொல்லித் தப்பிக்கவேண்டியிருக்கு)

   Delete
  6. ///ஏஞ்சல் என்னாச்சு இப்படி அவசரப்பட்டு பரிசெல்லாம் கொடுத்துட்டீங்க..//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா:).. அஞ்சு ஏதோ மனம் வந்து முன்ன முன்னம் ஒரு பரிசு தாறா:) அதை விடமாட்டீங்க போலிருக்கே:)).. ஆனாலும் காதைக் கிட்டக் கொண்டு வாங்கோ கீதா:)).. பரிசை வாங்கிட்டால், மீ தன்னை அடிக்க மாட்டேன் என நம்பிட்டா போலும்:)) ஹா ஹா ஹா பூஸோ கொக்கோ?:).. டேவடை கிச்சினை ஓபின் பண்ணினாலே ஒரே பொயிங்கல்தேன் பொயிங்குவேன்:)) நாம ஆரு?:)) ஹா ஹா ஹா..

   Delete
  7. @நெ.தமிழன்
   ///நீங்க வேணா பாருங்க... அதிரா தான் 1ஸ்டூ என்று சொல்லிக்கொண்டே அங்க போய், இடுகையைப் படிக்காமலேயே 'ஆஹா ஓஹோ' என்று புகழ்ந்து எழுதப்போறாங்க (ன்னு ஏஞ்சலின் நம்பி இப்போ பரிசு கொடுத்திருக்காங்க)///

   ஹா ஹா ஹா சூரியன் வடக்கில உதிச்சாலும் உதிக்குமே தவிர உது நடக்காதூஊஊஊஊஊஊ:))... ரொம்ப நல்லா இருக்கே என மனதில நினைச்சாலும்.. கொஞ்ச நேரம் ஓட ஓட விரட்டிப்போட்டுத்தான் உண்மையைச் சொல்லுவேனாக்கும்:))

   Delete
  8. ///ஊரில் இருந்தாலும் என் கண்ணாடி தொலைந்துபோயிருக்கும். இல்லைனா, இணைய கனெக்‌ஷன் இருக்காது....... (எப்படீல்லாம் சொல்லித் தப்பிக்கவேண்டியிருக்கு)///

   ஹா ஹா ஹா “இருட்டில கண்ணு தெரியாது” எனவும் சேர்த்துச் சொல்லுங்கோ நெ.தமிழன்:))... எதுக்கும் உங்களை நீங்களே தயாராக்கி, பூஸ்ட் குடிச்சுத் தென்பா இருங்கொ.. விரைவில் டேவடையில் சமையல் குறிப்பு வரலாம்போல தெரியுதூஊஊஊஉ:))..

   Delete
 9. ம்ம் பாட்டு எனக்கும் பிடிக்கும் அடிக்கடி முந்தி கேட்ட பாட்டு இன்னிக்கும் கேட்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அருமையான பாடல். நான் இங்கும் முன்பு போட்டிருக்கிறென், இப்போ ஆசையில் திரும்பவும் போட்டேன். இதைத்தான் நேற்று ஸ்ரீராமுக்குச் சொன்னேன்.. அவர் போட்ட பாடலும் செவ்வந்திப்பூப் பாடல் எல்லோ.

   மிக்க நன்றி அஞ்சு, இன்று போஸ்ட் போடும் உற்சாகம் இருக்கவில்லை, இருப்பினும் போட்டு கன நாளாகிவிட்டது எனப் போட்டேன், அதனால இம்முறை என் போஸ்ட் எனக்கே பெரிதாகப் பிடிக்கவில்லை:(..

   “போனால் போகட்டும்......” ஹா ஹா ஹா..

   Delete
  2. அப்படியா விஷயம்! நான் என்னமோன்னு நெனச்சேன்!

   Delete
  3. //அப்படியா விஷயம்! நான் என்னமோன்னு நெனச்சேன்!//

   ஹா ஹா ஹா ஈசியானதால கண்டுபிடிச்சிடுவீங்களோ என பயந்திட்டேன்:), ஏனெனில் கண்டு பிடிச்சிருந்தால், இன்று போட்டிருக்க மாட்டேன் இன்று:)..

   Delete
 10. மூளைக்கு வலியுட்ட வல்லாரை நிச்சயம் இது அதிராவீற்கு தேவைப்படாது... இருந்தால்தானே வலியுட்ட முடியும்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ...
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கும் ஜி எம் பி ஐயாவுக்கும் ஏதோ போன ஜென்ம தொடர்பிருக்குமென நினைக்கிறேன்:)).. ஏனெனில் இன்று மகளிர் தினமெல்லோ.. அப்பூடி எனில் மகளிரை வாழ்த்தோணுமோ?:).. இல்ல கவிழ்க்கோணுமோ?:) எனக்கு டவுட்டு டவுட்டா வருதே:).. ஹா ஹா ஹா முடியல்ல:)

   ஜி எம் பி ஐயா போஸ்ட் பார்க்காட்டில், போய்ப் பாருங்கோ:) ஹா ஹா ஹா.

   ட்றுத்.. அது எனக்கெல்லாம் உங்களைப்போல செப்பரேட்டாக கிட்னி இல்லையாக்கும்:)) ஐ மீன்ன்ன்ன்ன்ன் உடம்பெல்லாம் மூளைதேன்ன்ன்ன்ன்:))

   Delete
 11. இந்த ஊசிகுறிப்பில் போட்டது படி சாப்பிட்டா நோய் எல்லாம் குணமாகும் டாக்டரிடம் போக வேண்டாம் அப்படி குணமாக வில்லை என்றால் அதிரா மீது கேஸ்போட வேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. //அப்படி குணமாக வில்லை என்றால் அதிரா மீது கேஸ்போட வேண்டியதுதான்//

   ஹையோ இதென்ன இது புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊ:).. இந்தக் காலத்தில நன்மைக்கே காலமில்லாமல் போச்சே..லூட்ஸ் மேரி மாதாவே:)..

   நான் என் புளொக்குக்கு இன்னும் இன்சூரன்ஸ் வேறு எடுக்கலியே:))..

   அது ட்றுத் அஞ்சுதான் எனக்கு அனுப்பினவ:)) ஆங்ங்ங்ங் எங்கிட்டயேவா?:))..அதனால எய்தவர் இருக்க அம்பை நோகக்கூடா ஜொள்ளிட்டேன்:).ஹா ஹா ஹா.

   மிக்க நன்றிகள்.

   Delete
 12. வணக்கம் அதிரா சகோதரி

  பி-பப்பா புடிங் படங்கள்,செய்முறை விளக்கங்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. பெயரும் கேள்விபடாத பெயராக இருந்தாலும்,நன்றாக அழகாகவே உள்ளது. இது மாதிரியெல்லாம் நான் செய்து சாப்பிட்டதில்லை.. தங்கள் செய்முறையை பார்த்ததும், செய்ய வேண்டும் என நினைக்கிறேன். பால் கோவா கிளறி அதற்கு "திரட்டுப்பால்" என்ற நாமகரணம் சூட்டித்தான் சாப்பிட்டுள்ளோம். மிக மிக அருமையாக பொறுமையாக செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்..

  ஆதி செய்ததை பார்த்ததும், அதே மாதிரி செய்ததால், அதி என்ற இரண்டெழுத்துடன் காட்ட விரும்பி "ரா"வை கழற்றி விட்டு விட்டீர்களோ என நினைத்தேன். ஹா.ஹா. ஹா.ஹா.

  வழக்கம் போல் ஊசி இணைப்பும். ஊசிக் குறிப்பும் அருமை. ரசித்தேன்.

  இடைவேளையில் பருப்பு வடையையும், பிளைன் டீயையும் அதையும் பதிவிலேயே பார்த்து ருசிக்கலாம் போலிருக்கிறது என எங்கிருக்கிறது என்று தேடித் தவித்தேன். தென்படவில்லை. சரி.! வாழ்க்கை குறித்து நீங்களே பாடம் நடத்தி விட்டீர்களே.! என சமாதானமாகி, நிறுத்தி தண்ணீர் அருந்தி விட்டு தெம்பாக்கிக் கொண்டு வருகிறேன். ஹா ஹா. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ...

   //பெயரும் கேள்விபடாத பெயராக இருந்தாலும்//
   அது ஹிந்திப்பெயர்போல, வெங்கட் பக்கத்தில் அப்பெயர் போட்டதால், நான் புதுப்பெயர் குடுக்க விரும்பவில்லை, நானாக தேடிச் செய்திருந்தால் புதுப்பெயர் குடுத்திருப்பேன்:).

   பால்கோவா நான் இதுவரை செய்ததில்லை, எனக்குப் புடிங் வகைகள் அதிகம் பிடிக்கும் என்பதால் இது திடீர் முயற்சி.

   //அதி என்ற இரண்டெழுத்துடன் காட்ட விரும்பி "ரா"வை கழற்றி விட்டு விட்டீர்களோ என நினைத்தேன்.//
   ஹா ஹா ஹா படமெடுக்கும்போது ஆதியை யோசிக்கவில்லை, பின்பு போஸ்ட் எழுதும்போதே நினைத்தேன்.. அதிரா என்றே போட்டிருக்கலாமோ என:)).

   //இடைவேளையில் பருப்பு வடையையும், பிளைன் டீயையும் அதையும் பதிவிலேயே பார்த்து ருசிக்கலாம் போலிருக்கிறது என எங்கிருக்கிறது என்று தேடித் தவித்தேன்//

   ஹா ஹா ஹா கர்ர்:) எந்தத் தியேட்டரில உங்களுக்கு படமும் காட்டி, இடைவேளைக்கு வடை, பிளேன் ரீ குடுப்பினம்?:) ஹா ஹா ஹா அதை உங்கட காசிலதான் வாங்கோணும்.. நான் தர மாட்டேனாக்கும்:)).

   //நிறுத்தி தண்ணீர் அருந்தி விட்டு தெம்பாக்கிக் கொண்டு வருகிறேன்//

   ஹா ஹா ஹா இல்ல நீங்க கொஞ்சம் புடிங் சாப்பிட்டுத் தென்பாகுங்கோ.. இது சைவம் தானே.

   மிக்க நன்றிகள் கமலாக்கா.

   Delete
  2. //ஆதி செய்ததை பார்த்ததும், அதே மாதிரி செய்ததால், அதி என்ற இரண்டெழுத்துடன் காட்ட விரும்பி "ரா"வை கழற்றி விட்டு விட்டீர்களோ என நினைத்தேன். //

   அடடே கமலாக்கா...

   இனி நீங்கள் கலக்கல் கமலாக்கா என்று அழைக்கப்படுவீர்களாக!!!

   Delete
  3. ஆவ்வ்வ்வ் “கலக்கல் கமலா சிஸ்டர்”:) இது நல்லா இருக்கே:)) ஹா ஹா ஹா...

   Delete
  4. வணக்கம் சகோதரரே

   /இனி நீங்கள் கலக்கல் கமலாக்கா என்று அழைக்கப்படுவீர்களாக!!!/

   ஆஹா.. பட்டமா? தாங்கள் தந்த இனிய சாபம்.. சே..சே.. ! சொல்லாடல்
   (Ba)பாவம் மிக்க இந்தப் பட்டமளிப்பை, அனேக பட்டங்களுக்குரிய "பட்ட"மகிஷி அதிரா சகோதரி பார்வைக்கு முன் பெறுவதை பெறும் பாக்கியமாக கருதுகிறேன். நன்றி, நன்றி, மிக்க நன்றி...

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  5. ஹா ஹா ஹா கமலாக்கா.. ஒரு பக்கம் பட்டம் பட்டமா அள்ளி வீசுகிறார்கள் நமக்கு.. ஆனா அதைப் போட்டுக் கொண்டு திரிஞ்சால் இன்னொரு பக்கம் அடிக்க வ்ருகினம் உனக்கு ஆர் பட்டம் தந்தது என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா.. வெரி பாட் வேல்ட்:))

   Delete
 13. வணக்கம் அதிரா சகோதரி

  வண்ண வண்ண கலர்களில் வறு கடலைகள் அருமையாக செய்திருக்கிறீர்கள். உப்பு என்றால், கல் உப்பா? பொடி உப்பா? படங்களில் பார்த்தால் பொடி உப்பு மாதிரிதான் தெரிகிறது. விடாமல் முயற்சித்து செய்த வறுகடலை செய்ததற்கு பாராட்டுக்கள். கெளபி, கச்சான் என்றால் என்ன தானியம்? முறையே தட்டாம் பயிறு, வேர்கடலையை அப்படி சொல்லியுள்ளீர்களா ? உண்மைதான்.! கொறிப்பதற்கு எண்ணெய் இல்லாத தின்பண்டமாக இந்த மாதிரி சாப்பிட்டால் நல்லதுதான்.

  படங்கள் அருமையாக உள்ளது.
  பொதுவாக தங்கள் பதிவில் அனைவரும் "இந்தப் பாடல் கேட்டேன் நன்றாக உள்ளது" எனச் சொல்லும் போது நான் பாடல் எங்குள்ளது எனத்தெரியாமல், இருந்திருக்கிறேன். இன்று அந்த "நான் தேடிய" பாடலையும் கேட்டு ரசித்தேன். இந்தப்பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமானது.
  தங்களுக்கு தாமதமான மகளிர் தின வாழ்த்துக்கள். அனைத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. //படங்களில் பார்த்தால் பொடி உப்பு மாதிரிதான் தெரிகிறது.// அதேதான், மிகவும் குட்டியாக பவுடர் போல இங்கு கிடைக்கிறது. கல் உப்பு எனில், கடலையோடு கரண்டியில் வந்திடுமெல்லோ...

   // கெளபி, கச்சான் என்றால் என்ன தானியம்?//
   கெளபி- black eyed beans - உங்கள் பாசையில் ஏதோ சொல்லுவிங்க இப்போ நினைவு வருகுதில்லை...
   கச்சான்.. வேர்க்கடலை.

   //நான் பாடல் எங்குள்ளது எனத்தெரியாமல், இருந்திருக்கிறேன்//
   கேட்டிருக்கலாமெல்லோ.. இதிலென்ன தயக்கம், பாடல் மொபைலில் தெரியாது என நினைக்கிறேன் அல்லது, புளொக்கின் கீழே போய் “வலையில் காட்டு” என்பதைக் கிளிக் பண்ணிப் பார்க்க வேண்டும்.

   வாழ்த்துக்கும் மீள் வருகைக்கும் மிக்க நன்றிகள் கமலாக்கா.

   Delete
  2. வணக்கம் சகோதரி

   அந்த பீன்ஸின் பெயர் "ராஜ்மா" என நினைக்கிறேன். இதுவே கருப்பு கலரிலும் கிடைக்கிறது. இதையே மதுரையில் இருக்கும் போது வாங்கினோம்,. அதற்கு பெயர் மிட்டா பருப்பு.. தாங்கள் தந்த தகவலுக்கும் நன்றி. தாங்கள் சொல்லியபடிதான் நேற்றைய பாட்டை சென்று பார்த்து தெரிந்து கொண்டேன். இனித் தொடர்கிறேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. இல்லை கமலாக்கா.. ராஜ்மா என்பதை.. கிட்னி பீன்ஸ் என்கிறோம்... நான் சொல்லி இருப்பது கீழே இந்த லிங்கை கொப்பி பண்ணிப்போய் கூகிளில் பேஸ்ட் பண்ணிப் பாருங்கோ இதுதான்..கெளபி என்போம் இலங்கையில்

   https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d0/BlackEyedPeas.JPG

   Delete
 14. முயற்சி திருவினையாக்கும்.
  நீங்களும் ஒரு விஞ்ஞானி போலத்தான் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி கிச்சனே ஒரு லேப் தானே!!! எக்ஸ்பெரிமென்ட்ஸ் செய்ய...அதுக்கு கினிபிக்ஸ் வீட்டில் இருக்கும் வரை பிரச்சனையே இல்லை!!! அதுக்குத்தான் வீட்டுல நிறைய இருக்காங்களே !!!!!!என்ன சொல்லறீங்க பூஸாரே!!!!!!!!

   ஏஞ்சலுக்கு, பூனையாருக்கு, மீக்கு இந்த சோதனை எல்லாம் சர்வ சகஜமப்பா!!! ஹா ஹா ஹா ஹா (நாங்க சாப்பிட்டுப் பார்ப்பதில்லையே!!!!!! அங்கிட்டுருந்து நல்லாருக்குனு வந்தாத்தானே நாங்க வாயிலையே வைப்போம்!!!!!!!)

   கீதா

   Delete
  2. வாழ்க்கை குறித்த மொழி சூப்பர் அதிரா

   கீதா

   Delete
  3. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

   ///நீங்களும் ஒரு விஞ்ஞானி போலத்தான் தெரிகிறது.//
   ஹா ஹா ஹா இதுவரை இப்பெயர்தான் ஆரும் குடுக்கவில்லை என நினைக்கிறேன்.. இப்போ புரியுதோ.. பல பல மேடைகளில் நான் வாங்கிய பட்டங்களைத்தான்:).. அவயடக்கத்துக்காக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பட்டமாக இணைக்கிறேன் என் பெயருடன்:)).. நான் ச்ச்ச்சும்மா எல்லாம் போடுவனோ?:)) ஹையோ ஜி எம் பி ஐயா இதைப் பார்க்க மாட்டார் எனும் தைரியத்தில் எழுதுகிறேன் ஹா ஹா ஹா:)).. இருந்தாலும் கில்லர்ஜி நேக்குத் தற்பெருமை புய்க்காது:))..

   ஹா ஹா ஹா... மிக்க நன்றிகள்

   Delete
  4. வாங்கோ கீதா வாங்கோ.. சுவை இருக்கோ இல்லையோ.. மேக்கப்பிலேயே மயங்க வச்சிடுவோமெல்லோ:)) ஹா ஹா ஹா:)..

   மிக்க நன்றி.

   Delete
 15. தர்மபத்தினியில் ஒரு விசுக்காட்சி யு டியூபில் பார்த்து படத்தைப் பார்க்கலாமா என்று தோன்றியது!

  இந்தப் பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடல். ஹிந்தோளம் என்று நினைக்கிறேன். கீதா சரியாகச் சொல்வார்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   நானும் நேற்றுத்தான் பார்த்தேன் படப்பெயர்.. அது பிரபு நடிச்ச படமென நினைச்சிருந்தேன், ஆனா முத்துராமன் மாமாவின் மகனெல்லோ நடிக்கிறார்ர்.. எனக்கும் பார்க்கோணும் எனும் ஆசை வருது படம்..

   //இந்தப் பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடல்//

   உண்மை.

   ///ஹிந்தோளம் என்று நினைக்கிறேன். கீதா சரியாகச் சொல்வார்.//
   ம்ஹூம்ம்.. இப்பூடி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான் மகளிர் தினமும் ஜி எம் பி ஐயாவுமா ஒரே அமளியாப்போச்சு ஹா ஹா ஹா:).. இப்போ கீதா சொல்லிட்டா இனி தான் யாருக்கும் ராகம் தாளம் சொல்ல மாட்டேன் என ஹா ஹா ஹா:)).

   அது வந்தேகி ராகம்போல தெரியுது ஸ்ரீராம்:))

   Delete
  2. //இப்பூடி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான் மகளிர் தினமும் ஜி எம் பி ஐயாவுமா ஒரே அமளியாப்போச்சு ஹா ஹா ஹா:).. //

   படுத்திட்டாரோ...!!!

   Delete
  3. ///படுத்திட்டாரோ...!!!//

   சே.சே.. அப்படி இல்லை, நெடுகவும் அமைதியாகப் போகாமல், கொஞ்சம் நம் கருத்தையும் சொன்னால்தானே அவருக்கும் புரியும், நாம், நல்லெண்ணம் கருதி அமைதியாகப் போவதாலதான், அவரும் திரும்பத் திரும்ப ஒரே பல்லவி பாடிக்கொண்டிருக்கிறார் ஹா ஹா ஹா..

   Delete
  4. அங்கு உங்கள் பதில்களை வெகுவாக ரசித்தேன். தேம்ஸில் தூக்கிப்போடச் சொல்லும் உங்கள் வேண்டுகோள் என்னை வெகுநேரம் சிரிக்க வைத்தது.

   Delete
  5. ஹா ஹா ஹா ஓ இப்போ நீங்க சொன்னதைப் பார்த்து மீயும் சிரிக்கிறேன்.

   உங்கட ஒரு கொமெண்ட்.. கம்பி மேலே என போட்டிருந்திங்க.. அதை இங்கு பத்து நிமிடமாத் தேடுறேன் எங்கிருக்குதென தெரியவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   Delete
 16. //சரி பறவாயில்லை//

  அசைவமோ!!!! இல்லை கோபமோ... வல்லினம்!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அது பல தடவைகள் சொல்லிட்டேன் ஸ்ரீராம்.. அதாவது ர தான் வருமெனத் தெரியும், ஆனா எனக்கு கருப்பு.. பரவாயில்லை.. இவை இரண்டும் இப்படி உச்சரிப்பது பிடிக்கல்லே:)).. ஹா ஹா ஹா அதனால கறுப்பு.. பறவாயில்லை என அழுத்திச் சொல்வதே பிடிக்குது:)) என் வசதிக்கு டமிழை மாத்தினது டப்போ?:) ஹா ஹா ஹா ஆராவது பார்த்தால் கல்லெறிவினம் எனக்கு:))

   Delete
 17. அடடே.... சுலபச் செய்முறை. எங்கள் வீட்டில் அவிக்க அவன் (எவன்?!!) இல்லை. பாலை நீங்கள் சுண்டக்காய்ச்சவில்லையோ? சுண்டக்காய்ச்சி வெல்லம் சேர்த்தாலே திரட்டுப்பால்! அங்கேயே நிறுத்தி சாப்பிட்டு விடலாம்!!!

  ReplyDelete
  Replies
  1. ஓம் அவணுக்குப் பத்இல்.. ஆவியில் அவித்தல்... நீங்க சொன்னது கரீட்டூஊ.. நான் கதைச்சுக் கொண்டே இதைச் செய்தேன் அதனால.. கதை “சுசி”யில:)).. ரீ க்குக் காச்சுவதுபோல காச்சி இறக்கிட்டேன்.. ஆனாலும் கட்டியாகிவிட்டதுதானே.. பிரச்சனை என்னவெனில் சுவீட் போதாது.. ஃபிளேவர் யோகேர்ட் போல இருந்தது ரேஸ்ட்.. கொண்டென்ஸ்ட் மில்க் அதிகமாக சேர்த்திருக்கோணும்போல.

   திரட்டுப்பால்... அதுதானே பால்கோவா? நான் இதுவரை செய்ததில்லை.. செய்யோணும்.

   Delete
  2. திரட்டுப்பால் வேற... பால்கோவா வேற... லேசான வித்தியாசம் உண்டு!

   Delete
  3. ஓ.. அப்படியா.. எனக்கு இதுவும் தெரியாதே:))

   Delete
 18. படங்கள் அழகாய் இருக்கிறதே என்று நினைத்தேன். சுவை சரியாய் வரவில்லையா? இதற்குதான் அளவு ஸ்பெஷலிஸ்ட் அஞ்சு வேண்டும் என்பது!

  ReplyDelete
  Replies
  1. ///இதற்குதான் அளவு ஸ்பெஷலிஸ்ட் அஞ்சு வேண்டும் என்பது!//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவ இதைப் படிச்சிருப்பா ஆளைக் காணல்ல:)).

   சமையலுக்கு செய்முறை போதும் ஸ்ரீராம், அளவுகள் தேவையில்லை, சமைக்கத் தெரிந்தோருக்கு. ஆனா இப்படி சுவீட், கேக், புடிங் வகைகளுக்கு அளவு நிட்சயம் தேவை, இல்லை எனில் பிழைச்சிடும்..

   Delete
  2. /சமையலுக்கு செய்முறை போதும் ஸ்ரீராம், அளவுகள் தேவையில்லை, சமைக்கத் தெரிந்தோருக்கு. ஆனா இப்படி சுவீட், கேக், புடிங் வகைகளுக்கு அளவு நிட்சயம் தேவை, இல்லை எனில் பிழைச்சிடும்.. /

   அடடே... சீரியஸா பதில் சொல்றீங்க!

   Delete
  3. ///அடடே... சீரியஸா பதில் சொல்றீங்க!//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) அப்பூடியா தெரியுதூஊஊஊஊ?:)..

   Delete
 19. ரா உளவு அமைப்பல்லவோ... அதுதான் அது மறைந்திருக்கிறது!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நல்ல கண்டுபிடிப்பூ:)).. இது வேற கண்டு பிடிக்கிறது.. :).

   Delete
 20. இடைவேளை படம் எனக்கு பழைய நாகேஷ் ஜோசியம் ஜோக்கை நினைவு படுத்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஓ அது நினைவில்லை, அதைத்தான் போட்டு வடிவேல் அங்கிள் படத்தை இணைத்தார்களோ என்னமோ..

   Delete
  2. நாகேஷ் ஒரு படத்தில் ஜோசியம் சொல்வார்..

   'அடுத்த இரண்டு வருஷங்களுக்கு உங்களுக்கு ஓரே கஷ்டகாலம்தான்..."

   "இரண்டு வருஷங்களுக்கு அப்புறம்?"

   "அதுவே பழகிடும்"

   Delete
  3. ஓ ஹா ஹா ஹா இது பார்த்திருக்கிறேன்...

   Delete
 21. //என்னில் ஒரு பழக்கம் இருக்கு, வீட்டில் நின்றால் எதையாவது கொறிக்கோணும்:), //

  ஹிஹிஹி... எனக்கும்... இப்பகூட நண்பர் கொடுத்த கோவில்பட்டி கடலைமிட்டாயைக் கொரித்துக்கொண்டேதான் படிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம்....

   இப்போ சென்னைல எங்க பார்த்தாலும் 'கோவில்பட்டி' பிராண்ட் போட்ட கடலை மிட்டாய்தான். ஆனால் 'ராஜா கடலைமிட்டாய்' சென்னைல அண்ணா நகர்ல தயார் ஆகுது, ரொம்ப நல்லா இருக்கு. டிரை பண்ணிப்பாருங்க..

   Delete
  2. நெல்லை... இது நிஜமாகவே கோவில்பட்டியிலிருந்து வாங்கி வரப்பட்டது!

   Delete
  3. //ஹிஹிஹி... எனக்கும்... இப்பகூட நண்பர் கொடுத்த கோவில்பட்டி கடலைமிட்டாயைக் கொரித்துக்கொண்டேதான் படிக்கிறேன்!//

   ஹா ஹா ஹா இதனால்தான் வீட்டில் எதுவும் வாங்கி வச்சிருக்கப்படாது என நினைப்பேன்:)).. எதுவும் இல்லாட்ட்டில் ஒரு ரீ யும் ஒரு பிரெட் ரோஸ்ட்டுடனும் கழிக்கோணும் பொழுதை:)

   Delete
  4. ///ஆனால் 'ராஜா கடலைமிட்டாய்' சென்னைல அண்ணா நகர்ல தயார் ஆகுது, ரொம்ப நல்லா இருக்கு. டிரை பண்ணிப்பாருங்க..//

   ஹா ஹா ஹா ஹையோ நெலைத்தமிழனின் வாய்க்கு வைரப்பல்லுக் கட்டோணும்:) .. அவ்ளோ சுவையோடு உலா வருகிறார் உணவு விசயத்தில்:) அதுவும் குறிப்பா இனிப்பில:))

   Delete
  5. //நெலைத்தமிழனின் வாய்க்கு வைரப்பல்லுக் கட்டோணும்:) .//

   இப்பதான் நான் செராமிக் கட்டிக்கொண்டேன்!

   Delete
  6. //இப்பதான் நான் செராமிக் கட்டிக்கொண்டேன்!//

   ஹா ஹா ஹா அப்போ செக்கிருட்டிக் ஹார்ட்டோடுதான் உலாவுறீங்களோ வெளியே:))

   Delete
  7. நெல்லைத்தமிழன்.. கம்பியை விட்டு இறங்கிட்டாரோ:))

   Delete
 22. சிங்கத்தின் பின்னால் செல்லும் பொடிசுகள் யார்? எவ்வளவு புலஸ்க்ரீனில் பார்த்தாலும் எதனுடைய குட்டிகள் என்று என் மடக்கண்களுக்குத் தெரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்... அவை சிங்கக் குட்டிகள்தாம். பொதுவா அம்மாவோடுதான் காணப்படும். இதுல, சொந்த அப்பா என்பதால் அப்பாவோட தைரியமா உலாவுகிறதோ என்னவோ...

   சிங்க குரூப்பில் முதல் முதலா ஒரு ஆண் சிங்கம் தலைவரா ஜாயின் பண்ணினால், இருக்கும் பெண் சிங்கத்தின் சிறிய குட்டிகளைக் கொன்றுவிடும். அப்போதான் பெண் சிங்கம் ஆணின் உறவுக்கும், அவனின் குழந்தைகளுக்கும் தயாராகும். அதனால் அந்தச் சமயத்தில் குட்டியைக் காப்பாற்ற பெண் சிங்கம் பாடுபடும்.

   Delete
  2. சுவாரஸ்யமான தகவலுக்கு நன்றி நெல்லை.

   Delete
  3. ஸ்ரீராம் உத்துப் பார்க்க.. தெரியுதுதானே சிங்கக் குட்டிகள் என, புலிக்குட்டிகள் கொஞ்சம் மயிர் அடர்த்தி குறைவாக இருக்குமென நினைக்கிறேன், அத்தோடு சிங்கக் குட்டிகளுக்கு காது பூ மடல் போல வட்டமாக விரிந்து குட்டியாக இருக்கும்.

   நெலைத்தமிழன் இந்த டிஸ்கவரி எனக்கும் கேட்க.. கேட்க மட்டுமே பிடிக்கும்:)).. பார்க்கப் பயம் எனக்கு. ஏனெனில் எப்போ எதைப் பாய்ந்து கடிக்கும் எனத் தெரியாது... எங்கள் வீட்டிலும் நெட்பிளக்ஸ் இல் பார்ப்பார்கள்.. நான் போனால் மாத்திப் போடுவினம்.. தெரியும் எனக்கு கஸ்டமாக இருக்கும் என.. அத்தோடு கனவெல்லாம் வந்து துலைக்கும்.

   என் கணவரும் சிங்கம் பற்றிய நிறையக் கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன் சிங்க வரலாறு... கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கும்.

   பெண் சிங்கத்திலும் ஒன்றுதானாம் அரசியாக இருக்கும், ஏனைய பெண் சிங்கங்கள், வேலையாட்களாக உணவு கொண்டு வந்து கொடுக்கும் வேலையில் இருப்பார்களாம். எல்லாச்சிங்கமும் சாப்பிட்ட மீதி இருந்தால்தான் அந்த அடிமைச் சிங்கங்கள் சாப்பிடுமாம்..

   Delete
  4. டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ராபிக் பார்ப்பதை எல்லாம் நிறுத்தி விட்டேன் நானும்! ஒரே ரத்தம். யானை பற்றி போட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் பார்ப்பேன்.

   Delete
  5. //ஒரே ரத்தம். //

   அதேதான் ஸ்ரீராம், யானை பற்றியதும் சிலது கொடுமை எல்லோ.. முன்பு பேஸ்புக்கில் ஒரு வீடியோப் போட்டார்கள், கோயில் யானை தன் பாகனையே.. அப்படியே சீலைட்த்ஹுணிபோல தூக்கித் தூக்கி அடித்தது.. ஆள் முடிந்த பின்பும் தூக்கி அடித்துக் கொண்டிருந்தது.. ஒரு ஆர்வக் கோளாறில் முழுவதும் பார்த்திட்டேன்.. ஆனா கொஞ்ச நாட்களாக நான் பட்ட பாடு சொல்ல முடியாது... அதுக்கும் ஒரு மனத் தைரியம் வேண்டும்..

   இதனாலதான் பாருங்கோ நான் டொக்டராக வரவில்லையாக்கும்:)) ரத்தம் பார்க்கப் பயம் ஊசி போடப் பயம்.. இல்லாட்டில் எனக்கென்ன அது ஒரு பெரிய விசயமோ?:)) ஹா ஹா ஹா:)

   Delete
  6. ஆம்... அந்த (கேரள) விடீயோக்களை நானும் தவிர்த்து விடுவேன். சாதுவான அந்த மிருகத்தை இப்படி ஆக்குவதே மனிதன்தானே...

   Delete
  7. உண்மைதான்.. இப்போ எந்த மிருகத்துக்கும் அருகில் போகப் பயமாகவே இருக்கு.

   Delete
  8. அதற்கு காரணமே சுயநல மனிதன்தானே?

   Delete
  9. //யானை பற்றிப் போட்டால் பார்ப்பேன்// - ஸ்ரீராம் - நான் நிறைய அனிமல் பிளானட், நெட் ஜியோ, டிஸ்கவரிலாம் பார்ப்பேன். ரொம்ப சுவாரசியமா இருக்கும். சில சமயம் காட்டெருமை சிங்கங்களை விரட்டுவது, கொல்வதுலாம் நல்லா இருக்கும். சிங்கங்கள் யானையை வேட்டையாடுவது, ஒட்டகச்சிவிங்கியைக் கொல்வதுலாம் ரொம்ப தெக்கினிக்கா இருக்கும் (இந்த இரண்டு வேட்டைகளுக்கும் ஆண் சிங்கம் வேணும்). பொதுவா வேட்டைக்கு ஆண் சிங்கம் வரவே வராது. ஆனால் அது வந்துவிட்டால், பெரும்பாலும் வேட்டை வெற்றியடையும்.

   மிருகங்களிலும் குலத்துக்கேற்ற குணம் இருக்கும். சிங்கம், சிறுத்தை, புலி இவைகளெல்லாம் மேல் ஜாதி (ஹா ஹா). அதாவது மற்றவற்றைக் கொல்லும்போது கருணையோட நடந்துக்கும். கழுத்தை அழுத்திப் பிடித்து மூச்சுத் திணறி சாகடித்தபிறகு சாப்பிடும். ஆனால் கழுதைப்புலி, நாய் போன்றவை கீழ் ஜாதி (ஹா ஹா). விலங்கை வேட்டையாடும்போது உயிரோடு இருக்கும்போதே கண்ட கண்ட இடத்தில் கடித்துச் சாப்பிடும். அந்த வேதனையிலேயே அந்த மிருகங்கள் உயிரை விடும்.

   என் தனிப்பட்ட கருத்து... யானை காட்டு விலங்கு. அதனை நாம் வளர்க்கக்கூடாது. அது அதுக்கு சீசன் வரும்போது இயற்கை அதனை நோக்கி அவைகளைத் திருப்பும். ஆனால் நாம் வளர்க்கும்போது, அதனைக் கருத்தில் கொள்வதில்லை. கண்ட கண்ட உணவு, தொடர்ந்து வேலை வாங்குவது, அவைகளின் உடம்பில் சூடு ஜாஸ்தியாகச் செய்வது என்று அவைகளைக் கொடுமைப்படுத்துறோம்.

   Delete
  10. //ஸ்ரீராம்.Saturday, March 09, 2019 2:09:00 pm
   அதற்கு காரணமே சுயநல மனிதன்தானே?//

   பண ஆசையிலதானே மிருகங்களைப் பழக்கி அப்படிச் செய்கிறார்கள்.. எல்லாம் உழைப்புத்தானே..

   Delete
  11. //நெல்லைத் தமிழன்Saturday, March 09, 2019 2:40:00 pm
   // அனிமல் பிளானட், நெட் ஜியோ, டிஸ்கவரிலாம் பார்ப்பேன். ரொம்ப சுவாரசியமா இருக்கும். சில சமயம் காட்டெருமை சிங்கங்களை விரட்டுவது, கொல்வதுலாம் நல்லா இருக்கும்.//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஆனா உண்மை நெல்லைத்தமிழன், உண்மையில் விலங்குகளின் வாழ்வியல்தானாமே இப்போ மனிதன் வாழ்வதும்...

   //சிங்கம், சிறுத்தை, புலி இவைகளெல்லாம் மேல் ஜாதி (ஹா ஹா). //

   யூ மீன்ன்ன்ன்ன்ன்ன் male?:) ஹா ஹா ஹா:)..

   //விலங்கை வேட்டையாடும்போது உயிரோடு இருக்கும்போதே கண்ட கண்ட இடத்தில் கடித்துச் சாப்பிடும். அந்த வேதனையிலேயே அந்த மிருகங்கள் உயிரை விடும்.//

   ஆண்டவா என் ஜொந்தக் கதை ஜோகக்கதையைக் கொஞ்சம் கேளுங்கோ:).. எங்கள் ரிவியில் யூ ரியூப் இருக்கு. ஒருநாள் என்னமோ பார்த்துக் கொண்டிருந்தேன்[தனியே].. அது ஓட்டோபிளேயில், டக்கென அடுத்த வீடியோ.. வந்ததும் இல்லாமல்.. ஒரு முப்பது செக்கனில், ஒரு பெரீய காட்டெருமை கம்பீரமாக நின்றுது, அதை குட்டி ஓநாய்கள் மூன்று கடிக்க ட்றை பண்ணிச்சுது... இது என்ன பண்ணும் என அந்த காட்டெருமையும் நானும் அசட்டையாக இருந்தபோது, ஜம்பண்ணி அந்தக் குட்டி ஓநாய் ஒரு கடி கடிச்சுது.. படக்கூடாத இடத்தில பட்டு.. அந்தப் பென்னாம் பெரிய காட்டெருமை வாயை ஆ...அ....ஆஆ எனப் பிளந்துகொண்டு மலை சரிவதுபோல சரிஞ்சுது.. நான் கத்திக்கொண்டு எழுந்து ஓடி.. பட்ட பாடு சொல்ல முடியாது.. நெஞ்செல்லாம் அடைப்பதைப்போல எனக்கு வந்துவிட்டது கர்ர்ர்:)).. இதைப் பார்க்கவும் ஒரு தைரியம் வேணும், ஆனா எனக்கு பார்க்கப் பயம், இதுபற்றி அறிவதில் பயங்கர ஆவல்.

   Delete
  12. நானும் அந்தக் கண்ராவி எல்லாம் கொஞ்சநாள் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அப்புறம்தான் அலுத்து விட்டது.

   Delete
  13. ஹா ஹா ஹா ஸ்ரீராம்...:)

   [im]http://3.bp.blogspot.com/-VuM4lPdu0dk/Tk1V8pOZTPI/AAAAAAAAAI8/IM6P4QxgIVE/s1600/cat_laughing-11948.jpg [/im]

   Delete
  14. அடைப்புக்குறிக்குள் ஆதாரம் காட்டாமல் சிரித்து பூனைப்படம் பகிர்ந்து விட்டீர்களா. எதற்கு இது என்று தேடுவதற்குள்....

   Delete
  15. மேலும் உங்கள் தளம் திறந்து, கமெண்ட்கள் பகுதி திறப்பதற்குள் வெகுநேரம் ஆகிவிடுகிறது!

   Delete
  16. @ஸ்ரீரா//எதற்கு இது என்று தேடுவதற்குள்....//

   ஹா ஹா ஹா நோகாமல் நொங்கெடுக்கப் பார்க்கிறீங்க மெயிலுக்குள்ளாலயே:))..

   உண்மைதான், கீழே கீழே கொமெண்ட்ஸ் குடுக்கும்போது கண்டு பிடிப்பது ஈசி.. இது இப்போ அந்தந்த இடத்திலேயே பதில் குடுக்கும்போது, தேடிப் பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.. இருப்பினும் களைக்காமல் தேடிக் கொமெண்ட் போட்டிட்டீங்க நன்றி.._()_

   Delete
 23. ஊசிக்குறிப்பு சுவாரஸ்யம்.

  அடுத்த படம் செல்லாது.

  நான் சனிக்கிழமைதான் இதைப் பார்க்கிறேன்.

  ஸோ,

  ஹேப்பி சாட்டர்டே என்று மாற்றுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. //நான் சனிக்கிழமைதான் இதைப் பார்க்கிறேன்.

   ஸோ,

   ஹேப்பி சாட்டர்டே என்று மாற்றுங்கள்!//

   ஹா ஹா ஹா... ஆங்கிலட்த்ஹில் ஃபிரைடே எண்டால் டமிலில்:) சனிக்கிழமை என அர்த்தம்:)) ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா. எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக் கிடக்கூஊஊ:))

   Delete
 24. மிக அருமையான பாடல் பகிர்வு.
  பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   பாட்டுக் கேட்டமைக்கு மிக்க நன்றி.. இளையராஜா அங்கிளின் ஏதோ ஒரு ஆண்டு விழாவில், அவர் இப்பாட்டைப் பாட, வன்ஸ்மோர் என மக்கள் கூவ, அவரும் திரும்பவும் பாடினார்ர்.. எனக்கும் ரிப்பீட்டில் போட்டுக் கேட்டாலும் அலுக்காது, அப்படி சிடி பிளேயரில் ரிப்பீட்டில் போட்டு விட்டுப் பலதடவை கேட்டிருக்கிறேன்.

   Delete
 25. . நாமதான் சமையல் குயின் ஆச்சே:), எனக்கெதுக்கு அளவு என எண்ணிக்கொண்டு ஆரம்பிச்சேன்.//

  உங்கள் தைரியம் பாராட்டபட வேண்டிய விஷயம்.
  என் அம்மா கை அளவு கண் அளவு என்பார்கள், என் மாமியார் அளந்து சொல்வார்கள். அவர்களிடம் சமையல் கற்றுக் கொண்டதால் அளவு முறைதான் எனக்கு சரியாக வரும்.
  உங்கள் செய்முறை அளவுகளுடன் சூப்பர். பார்த்தவுடன் செய்து பார்த்தீர்கள் வீட்டில் குழந்தைகள், கணவர் என்ன சொன்னார்கள்? விரும்பி சாப்பிட்டார்களா?

  ReplyDelete
  Replies
  1. நான் சமையல் கறி, பிரியாணி வகைகள் எதுவும் அளந்து செய்வதில்லை கோமதி அக்கா.. கண் பார்த்தால் கை செய்யும்.. ஹா ஹா ஹா ..

   வீட்டில.. அழகுபடுத்தி நிறைய நட்ஸ் போட்டு பாதியை சாப்பிட பண்ணிட்டேன், இன்னும் கொஞ்சம் ஃபிரிஜ்ஜில் இருக்கு:)) ஹா ஹா ஹா.. நல்லவேளை எடுத்த எடுப்பில் நிறையச் செய்யவில்லை... சூப்பராகத்தான் இருக்கு கோமதி அக்கா, ஆனா இன்னும் நன்கு பாலைக் காச்சியிருக்கோணும், மற்றும் இன்னும் கொஞ்சம் கொண்ட்..மில்க் சேர்த்திருக்கோணும்..

   Delete
 26. வாழ்க்கை தத்துவம் அருமை.

  ReplyDelete
 27. முயற்சி திருவினையாக்கும் சூப்பர் சூப்பர்!


  //என்னில் ஒரு பழக்கம் இருக்கு, வீட்டில் நின்றால் எதையாவது கொறிக்கோணும்:), அதனால இப்படி வறுத்து வச்சால், உடம்புக்கு கேடில்லை, இல்லை எனில் தேவை இல்லாததெல்லாம் வாயில் நுழையும்:).//

  நீங்கள் சொல்வதும் சரிதான்.
  மழை காலத்தில் சூடான நிலக்கடலை கொறிக்க பிடிக்கும் எனக்கு. வீட்டில் இருக்கும் போது பொழுது போகவில்லை என்றால் தேன்குழல், தட்டை , முறுக்கு, சீடை சாப்பிடுவோம் முன்பு .
  உடம்பு கேடு இல்லை. ஆனால் இப்போது குழந்தைகளுக்கு நிறைய சிப்ஸ்கள் வந்து விட்டது சாப்பிட அவை உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது.


  ReplyDelete
  Replies
  1. அது உண்மைதான் கோமதி அக்கா, இப்போ பிள்ளைகளுக்கு சிப்ஸ், பொப்கோன் இப்படித்தான் வாங்கி வைக்க வேண்டி இருக்கு, எனக்கும் சோல்ட் அண்ட் வினிகர் சிப்ஸ் என்றால் ரொம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும் ஆனா முடிஞ்சவரை அவொயிட் பண்ணிடுவேன்.

   வீட்டில் சுடும் முறுக்கு நல்லதே...

   Delete
 28. ஆனா ஒன்று என்னவெனில், ஒரு கைப்பிடி அளவுதான் ஒரு தடவை போட முடியும், அதனால நீண்ட நேரம் எடுக்கும்.//

  பொரி அரிசி வறுப்போம், கொஞ்சம் கொஞ்சமாய் போட்டுதான் வறுக்க வேண்டும் அப்போதுதான் நன்றாக பொரியும்.

  ReplyDelete
 29. ஊசி , இணைப்பு வரவில்லை வந்த பின் பார்க்கிறேன்.
  ஊசிக்குறிப்பு அருமை.
  வார இறுதி நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாள் மகிழ்ந்து இருங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் கோமதி அக்கா, ஊசி இணைப்புப் பாருங்கோ ரசிப்பீங்க. நான் போஸ்ட் போடும் எண்ணத்தில் இருக்கவில்லை ஆனால் புடிங் செய்ததும் ஒரு ஆவலில் போட்டு விட்டேன்.

   Delete
 30. அந்த புட்டிங் பார்க்கவே அழகா இருக்கு ...இதுவரை இந்த புட்டிங் செய்யும் வாய்ப்புகள் வரல...ஹி ஹி நான் செஞ்சது இல்ல ன்னு சொல்ல வரேன்

  ஆதி அவர்களின் கை வண்ணத்தில் காணும் போது எனக்கும் ஆசை வந்தது ...பார்ப்போம் இந்த முறையாவது கை கூடுமா என்று

  அந்த வறுகடலைகள் எல்லாமே அட்டகாசம் ...சூப்பரா இருக்கு

  பல சோதனைகளுக்கு பின் வறுகடலை சாதனை

  இது வறுக்கவும் அந்த உப்பை என்ன செய்வீங்க ...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ..

   உண்மைதான் சில படம் பார்த்ததும் உடனே செய்யோணும் போல வரும், என்னிடம் வீட்டில் கேக்குக்காக பொருட்கள் வாங்கி இருந்தேன் அதனால ஈசியாக டக்கெனச் செய்திட்டேன்.

   இந்த உப்பை, 2,3 தடவைகள் இப்படி வறுக்கப் பாவிக்கலாம் பின்பு கொட்ட வேண்டியதுதான், ஆனா எங்களுக்கு இனி கார்டினுக்கு உப்பு தேவைப்படும் நத்தை ஸ்லக்குகளிடமிருந்து நம் தாவரங்களைப் பாதுகாக்க, ஓரமாக உப்புக் கொட்டி விட்டால், அவை உள்ளே வராமல் திசையை மாற்றிக்கொண்டு போய்விடுவினம்.

   மிக்க நன்றிகள் அனு.

   Delete
 31. அழகான பாடல் அதிரா…மிகவும் பிடித்த பாடல்…நான் தேடும் செவ்வந்தி பூவிது….
  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ.. மிக்க நன்றி, இப்பாடல் பிடிக்காதோர் இருக்க மாட்டினம் என்றே நினைக்கிறேன்.

   Delete
 32. அதிரா இதுக்கு அளவு எங்கிட்ட கேட்டுருக்கலாமே….நான் முன்ன அடிக்கடி செய்வதுண்டு….
  இதுல நீங்க பாலை இன்னும் நன்றாகக் காய்ச்ச வேண்ட்ம் 500 ஐ 250 ஆகும் அளவுக்கும் மேலே கொஞ்சம் குறுக்கிக் காய்ச்ச வேண்டும்…

  மற்றொரு ஈசி மெத்தட் சொல்லறேன்…ஒரு கப் கண்டென்ஸ்ட் மில்க் எடுத்தால் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக பீட் செய்யனும்…அதில் ஜஸ்ட் 3 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து மீண்டும் நன்றாக பீட் செய்து ஒரு க்ளோஸ்ட் டப்பாவில் போட்டு ஸ்டீம் செய்யனும்…….அதற்கு முன் அந்த க்லோஸ்ட் டப்பாவில் கொஞ்சம் பட்டர் கொண்டு க்ரீஸ் செய்துட்டு நட்ஸ் எல்லாம் ஸ்ப்ரெட் செய்து அப்புறம் இந்த பீட் செஞ்சதை விட்டுட்டு மேலேயும் நட்ஸ் எல்லாம் ஸ்ப்ரெட் செய்து (பீட் செய்த கலவையில் பிடித்தால் ஏலக்காய் பொடி சேர்க்கலாம். நான் சேர்ப்பது மிக மிகக் குறைவு…இல்லைனா சேர்க்காமலும் செய்வேன்…) ஸ்டீம் செய்யலாம். ..
  நீங்க ஃபேள்வர் சேர்த்திருக்கலாம்..அது போல நட்ஸும் ஸ்டீம் செய்யும் போதே கூடச் சேர்த்தாலும் நல்லாருக்கும் அதிரா…

  உங்கள் படம் நல்லாத்தானே காட்டுது…சரி இதே போலத்தான் சீஸ் கேக் அதிரா..நான் எக்லெஸ் சீஸ் கேக் வீட்டில் செய்வதுண்டு. செய்தேன் என்றால் எபியில் போடறேன்…..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //இதுக்கு அளவு எங்கிட்ட கேட்டுருக்கலாமே….நான் முன்ன அடிக்கடி செய்வதுண்டு….//

   அவ்வ்வ்வ் சத்தியமா? எனக்கு தெரியாதே..

   //இதுல நீங்க பாலை இன்னும் நன்றாகக் காய்ச்ச வேண்ட்ம் 500 ஐ 250 ஆகும் அளவுக்கும் மேலே கொஞ்சம் குறுக்கிக் காய்ச்ச வேண்டும்…//

   ஹா ஹா ஹா என் பால் ஒரு 50 மில்லிக்கூட வத்தியிருக்குமோ தெரியாது:).

   நன்றாக இருந்தது கீதா ஆனா தயிர் ரேஸ்ட்தான் அதிகமாக இருந்துது.. இதில் முட்டை போட்டிருந்தால் சூப்பராக வந்திருக்குமோ என்னமோ.

   போடுங்கோ கீதா சீஸ் கேக்.. நான் இதுவரை செய்ததில்லை, ஆனா அடிக்கடி.. அடிக்கடி வாங்குவோம்..

   Delete
 33. கடலையில் செம எக்ஸ்பெரிமென்ட் எல்லாம் செஞ்சுருக்கீங்க…ஹா ஹா ஆனால் நானும் இப்படித்தான் கற்றது அதிரா…..எல்லாம் ட்ரையல் அண்ட் எரர் ப்ராஸஸ்லேதான்…….சூப்பர் கடைசில வறுகடலை நன்றாக வந்துருச்சே!!!!! சூப்பர்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கடசியில் முறையைக் கண்டு பிடிச்சிட்டேன் கீதா, இனி கறுப்புக் கொண்டைக்கடலையில் செய்யோணும்.

   Delete
 34. ஊசி இணைப்பு ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்….

  ஊசிக் குறிப்பு சூப்பர்….

  கீதா

  ReplyDelete
 35. பூசார் அழகு!!

  புலியூர் பூஸாந்தாவுக்குப் போட்டியா தேவகோட்டை திடுக்கிடானந்தா ஒரு ஆஸ்ரமம் தொடங்கியிருக்காராம்…..நான் கேட்டிருக்கேன் அதாரூஊஊ எங்கட பு பூஸாந்தாவுக்கு போட்டியாக?!!! ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் உண்டோ என்று…..….

  .பஞ்சாய்த்தைக் கூட்டுங்க!!! என்னானு கேளுங்க பூஸாந்தா!!! நானும் ஏஞ்சலும் உங்க பின்னாடி வாரோம்!!!!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //புலியூர் பூஸாந்தாவுக்குப் போட்டியா தேவகோட்டை திடுக்கிடானந்தா///

   ஆஆஆஆஆஆ பெயரைக் கேட்டதுமே திடுக்கிட்டே என் டவம்:) கலைஞ்சு போச்சே,... சே..சே.. இருப்பினும் நிதானத்துக்கு வந்திட்டேன்..:)..

   இதென்ன இது புலாலியூர்ப் பூஸானந்தாவுக்கு இவ்ளோ போட்டி ஜதி:) நடக்குதோ?:).. பஞ்சாயத்து இல்லை, என் ஆச்சிரமத்தில வட்டமேசை மாநாடு ஏற்படுத்திடப் போறேன்ன்ன்:).

   //நானும் ஏஞ்சலும் உங்க பின்னாடி வாரோம்!!!!! ஹா ஹா ஹா ஹா//
   கடசி நேரட்த்ஹில கட்சி மாறிக், காலை வாரிட மாட்டீங்களே?:)) நெம்ம்ம்ம்பி ஆரம்பிக்கிறேன்ன்ன்.. எதுவானாலும் இப்போதைக்கு இது ஸ்ரீராம், நெ.தமிழனுக்குத் தெரிய வாணாம்ம்:))

   ஹா ஹா ஹா அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கீதா, இம்முறை உடனேயே வந்திட்டீங்க.. இப்பூடி எப்பவும் வரோணும், இல்லை எனில் ஜி எம் பி ஐயாவிடம் போட்டுக் குடுப்பேனாக்கும் ஹா ஹா ஹா:).

   Delete
 36. ஆஹா... கடலையை வறுப்பது... சூப்பர் ரெசிப்பி. இணையத்துல தேடிக்கிட்டே இருந்தேன். அருமை. இதே முறையில் செய்து பார்க்கிறேன்.

  அப்புறம் அதிரா.. இந்த வெந்நீர் போடறதுக்கு ரெசிப்பி தெரியலை. கொஞ்சம் அந்த ரெசிப்பியும் போடணும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

   //ஆஹா... கடலையை வறுப்பது... சூப்பர் ரெசிப்பி. இணையத்துல தேடிக்கிட்டே இருந்தேன். அருமை. இதே முறையில் செய்து பார்க்கிறேன்//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)).. இதை நானெவ்ளோ காலமாகத் தேடிச் சிரிஞ்சேன் தெரியுமோ?:).. கச்சான் வறுப்பது ஈசி, இந்தக் கடலை வறுப்பது எவ்ளோ கஸ்டம்:)..

   ///அப்புறம் அதிரா.. இந்த வெந்நீர் போடறதுக்கு ரெசிப்பி தெரியலை///

   [im] https://media.giphy.com/media/rho9L4MsYXaec/giphy.gif[/im]

   Delete
  2. நெல்லைத்தமிழன் இது உங்களுக்குப் பிடிக்குமே என...

   http://soumiyathesam.blogspot.com/2019/03/blog-post_8.html

   Delete
  3. நன்றி அதிரா. சென்றேன். என் பின்னூட்டம் சீராளன் ரசிப்பாரான்னு தெரியலை. ஹாஹா. ஒருவேளை, இதனை நீங்கள் கொடுத்ததற்காக உங்களைத் திட்டி கவிதை எழுதுவாரோ?

   Delete
  4. //இதனை நீங்கள் கொடுத்ததற்காக உங்களைத் திட்டி கவிதை எழுதுவாரோ?//

   ஆர் திட்டியும்[குத்தியும்] அரிசியானால் சரிதான்:).. நமக்குத்தேவை கவிதை:) ஹா ஹா ஹா..

   பலசமயம் என்னை ஆரும் திட்டினாலும் எனக்கது புரிவதில்லை ஹா ஹா ஹா:)..

   Delete
 37. உங்க ஊசிக்குறிப்பு வைத்தியம் எவ்வளவு தூரம் சரின்னு தெரியலை.

  கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழமொழி

  நீங்க தேர்ந்தெடுத்ததும் எழுத்துப் பிழையோடவே தேர்ந்தெடுத்திருக்கீங்க. ஒருவேளை அவங்களும் டமில்ல டி யோ?

  பாப்பாளிப்பழம், கரட் ஐயோ ஐயோ

  ReplyDelete
  Replies
  1. //உங்க ஊசிக்குறிப்பு வைத்தியம் எவ்வளவு தூரம் சரின்னு தெரியலை//
   எல்லாம் இஅயற்கை உணவுவகைதானே அதனால உடலுக்குக் கேடில்லை என நினைக்கிறேன்.

   //நீங்க தேர்ந்தெடுத்ததும் எழுத்துப் பிழையோடவே தேர்ந்தெடுத்திருக்கீங்க. ஒருவேளை அவங்களும் டமில்ல டி யோ?//

   ஹா ஹா ஹா “வந்ததும் அது, சிவன் தந்ததும் அது” என்பினம்.. அப்பூடி இருக்கும்போல:).

   //பாப்பாளிப்பழம், கரட் ஐயோ ஐயோ//

   பப்பாழி என வருமோ?.. கரட் கரீட்டுத்தானே?:) என்னைக் கொயப்புறார் நெல்லைத்தமிழன்?:). கறட் என வராது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

   Delete
 38. உங்க ஊசி இணைப்பு நான் எப்போதும் பார்க்கும் அனிமல் பிளானட்டை நினைவுபடுத்தியது

  கொஞ்ச தூரத்துல ப்ரிடேடர்ஸ் இருக்கும் (சிங்கம், சிறுத்தை போல). குட்டிக் குழந்தைகள் நிலைமையைப் புரிஞ்சிக்காம (குட்டி யானை, ஹிப்போபொடாமஸ், மான் குட்டி, எருதுக் கன்று போன்றவை)) அவங்களுக்குள்ள விளையாடி வம்பு பண்ணிக்கிட்டிருக்கும். பார்க்கிற நமக்கு டென்ஷனா இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. ///உங்க ஊசி இணைப்பு நான் எப்போதும் பார்க்கும் அனிமல் பிளானட்டை நினைவுபடுத்தியது
   //
   அதிலிருந்து எடுத்துத்தானே இப்படி செய்திருக்கினம், ஆண் சிங்கத்துக்குத்தானே இப்படி தலையில் அதிகம் மயிர் இருக்கும்.. பெண் சிங்கத்துக்கு இருக்காதெல்லோ..

   அனிமல் பிளநெட் என்றாலே எனக்கு டென்ஷன் தான்:)) ஹா ஹா ஹா.

   Delete
 39. புட்டிங்ல நிறைய இனிப்பு சேர்க்கணும். இல்லைனா நல்லா இருக்காது. தயிரோட சேர்ந்து அசட்டு இனிப்பாகிடும். நல்லா வரலைனா சாத்த்துலகூட பிழிய முடியாது.

  நீங்க மேலாப்புல சீனி தூவிச் சாப்பிட்டால் நல்லா இருந்திருக்கும்

  ReplyDelete
  Replies
  1. அதில் ஏற்பட்ட குறை.. இனிப்புப் போதாததுதான், கேசரி, கேக் போன்றவை இனிப்புக் குறைஞ்சாலும் விளங்காது, இது தயிர்போல ரேஸ்ட் குடுத்துது.. நீங்க சொன்னதுபோல சீனி போட்டிருக்கலாம்தான்...

   மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன் அனைத்துக்கும்.

   Delete
 40. சமையல் குயின் அதிரா வாழ்க...

  ReplyDelete
  Replies
  1. D D இப்போ எலெக்சன் மூடில போல. அதிரா கூட்டணியில் சேர்ந்து வாழ்க கோசம் எல்லாம் போட ஆரம்பிச்சிட்டீங்க.
   Jayakumar​

   Delete
  2. வாங்கோ டிடி வாங்கோ..

   //சமையல் குயின் அதிரா வாழ்க...//
   ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ.. ஊரெல்லாம் புகைப்புகையா வரப்போகுதே:).

   மிக்க நன்றிகள்.

   Delete
  3. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ.. ஹா ஹா ஹா எலக்‌ஷனில கோசம் போட்டால் ஒரு மிக்ஸி ஆவது கிடைக்கும்:).. அதிரா பக்கத்தில எதையும் தொடக்குட முடியாமல் அநாமிகா காவல் காக்கிறா ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

   Delete
 41. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். இந்தக் குறிப்புகள் காணொளியாக இணையத்தில் உண்டு.

  எங்கள் பதிவையும் இங்கே குறிப்பதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. ஓ நான் தேட யோசிக்கவில்லை. தேடியிருக்கலாம்.
   மிக்க நன்றி.

   Delete
 42. தஞ்சையம்பதி பக்கம் உங்களை ரொம்ப நாட்களாய்க் காணோம் என்று துரை செல்வராஜூ சார் சொல்லியிருக்கிறார்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஸ்ரீராம், துரை அண்ணனில் எனக்குக் கோபம் என்னவெனில்.. போகாட்டில் தேடுகிறார்ர்:).. ஆனா அவர் மட்டும் செலக்ட் பண்ணி சில பக்கம் மட்டுமே போகிறார்ர்:)).. எங்கும் போகவில்லை எனில் ஓகே:))... சரி சரி.. அவர் பாவம்.. என்னையும் ஒருவர் தேடுகிறார் எனில் பெரிய விசயம் தானே.. இனித் தொடர்ந்து போகிறேன்.. தகவலுக்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 43. இந்த மாதிரி ஊசிக்குறிப்பு வைத்தியம்லாம் வெளியிடாதீங்க. நீங்களும் முயற்சி பண்ணிப் பார்க்காதீங்க. பொதுவாச் சொல்றதுலாம் சரியா வராது. அதுவும் காதுல எலுமிச்சை சாறு விடறது (அப்படியே கொஞ்சம் ஜீனியும் போட்டா மூளைக்கே நேரடியா எலுமிச்சை ஜூஸ் போகும்னும் எழுதுவாங்க),

  வாழைத்தண்டு சிறுநீரகக் கல்லுக்கு நல்லது-இதுல பிரச்சனையும் உண்டு. நிறைய சாப்பிட்டா உடலில் உள்ள நல்ல உப்புக்களையும் மினரல்களையுமே கரைத்துவிடும் வாழைத்தண்டு.

  மூளைக்கு வலியூட்ட வல்லாரையாம்-நாம் எதுக்கு மூளைக்கு வலியை உண்டாக்கணும்?

  எந்த மருந்தும் டாக்டர்களோ, அனுபவமிக்க சித்த வைத்தியர்களோ நேரடியா நம்மைச் சோதித்துத் தந்தால்தான்/அல்லது பரிந்துரைத்தால்தான் எடுத்துக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. ///இந்த மாதிரி ஊசிக்குறிப்பு வைத்தியம்லாம் வெளியிடாதீங்க. நீங்களும் முயற்சி பண்ணிப் பார்க்காதீங்க. ///

   உண்மை நெல்லைத்தமிழன், யூ ரியூப்பில் குய்யோ முறையோ என கண்டவர் நிண்டவர் எல்லாம் மருந்து சொல்கின்றனர்.. அதை எல்லாம் கவனிப்பதுமில்லை, முயற்சிப்பதுமில்லை நான், ஆனா இதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை எல்லோ.. பொருத்தமாகத்தான் சொல்லப்பட்டிருக்குது, அதிலயும், இயற்கையாக சாப்பிடச் சொல்லியிருப்பதால் ஓகே போல பட்டுது.. அரைச்சு விழுங்கு, கரைச்சுக் குடி எனப்போட்டிருந்தால் பயம் தான்.

   //பொதுவாச் சொல்றதுலாம் சரியா வராது. அதுவும் காதுல எலுமிச்சை சாறு விடறது//


   ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் “விட்டுக் கெட்டது காது, விடாமல் கெட்டது கண்” என.. பொதுவா காதில் எதுவும் விட்டிடக்கூடாது.

   ஆனா இப்போ இயர்ஃபோன் பாவிப்பதால் பெரும்பாலும் காது கடிக்கும்.. அதுக்கு மெல்லிய துணியில், பேபி கொலோன், அல்லது ஆஃப்டர் சேஃப் ஐ நனைத்து உள்ளே விட்டு குடைந்துவிட்டால், டக்கென நிவாரணம் கிடைக்குது, இதனால் காதுக்கு சேதமில்லை.. ஈரக் காதில் இயர்பட்ஸ் கூடப் போட்டிடக்கூடாது என்கிறார்கள்.. அதன் பஞ்சு காதினுள் ஒட்டிக் கொள்ளுமாம்.

   காது வலிச்சால், ஒரு உள்ளிப்பல்லை உரித்து காதில் வைத்து விட்டால், வலி குணமாகும் என்பினம்.

   //நிறைய சாப்பிட்டா உடலில் உள்ள நல்ல உப்புக்களையும் மினரல்களையுமே கரைத்துவிடும் வாழைத்தண்டு. //

   ஆஆஆஆஆஅ இதேதான், இதுபோல் கொள்ளும் அதிகம் சாப்பிட்டால் அப்படியே சுகர் பிரசரைக் குறைச்ச்சிடுது:))...

   நானும் ஏதாவது இப்படி வைத்தியம் சொன்னால், என் கணவர் சொல்லுவார்ர்.. இப்போ சாப்பிடலாம் ஆனா கொஞ்சக்காலம் போனால்தான் தெரியும்.. கிட்னி, லிவர் எல்லாம் இருக்குதோ இல்லையோ என என்பார் ஹா ஹா ஹா.

   Delete
  2. ///மூளைக்கு வலியூட்ட வல்லாரையாம்-நாம் எதுக்கு மூளைக்கு வலியை உண்டாக்கணும்?//

   ஹா ஹா ஹா சொல்ல வந்த விசயம் சரி, ஆனா சொன்னவிதம் தப்பு:).. சுகிசிவம் அங்கிள் என்ன சொல்லியிருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்?:).. சொன்னதைக் கவனிக்கப்படாது:) சொல்ல வந்ததையே கவனியுங்கோ என:) ஏனெனில் சிலருக்குப் பேசத் தெரியாது:)) ஹா ஹா ஹா..

   //எந்த மருந்தும் டாக்டர்களோ, அனுபவமிக்க சித்த வைத்தியர்களோ நேரடியா நம்மைச் சோதித்துத் தந்தால்தான்/அல்லது பரிந்துரைத்தால்தான் எடுத்துக்கணும்.?///

   இது 100 வீதம் உண்மைதான்.. டொக்டர் சிவராமன்.. ஆயுள்வேதிக் வைத்தியர்.. அவரின் சிலதை நான் கவனிப்பேன்.. அது பிடிக்கும் எனக்கு..

   மிக்க நன்றிகள் நெ.தமிழன்.

   Delete
 44. கம்பி ஆடுதேன்னு திரும்பித்திரும்பிப் பார்த்தார் அதிரா... நானும் கம்பியில் இருக்கிறேன்னு சொன்னதும் கம்பியை விட்டு இறங்கி பரீட்சை பேப்பர் திருத்தப் போயிட்டாரோ!

  ReplyDelete
  Replies
  1. கடைசியில் பாருங்க... இருக்கும்!

   Delete
  2. ஹா ஹா ஹா இங்கேயோ இருக்குது இக்கொமெண்ட் நான் மேலே எல்லாம் தேடிக் கொண்டிருந்தேன்...

   //நானும் கம்பியில் இருக்கிறேன்னு சொன்னதும் கம்பியை விட்டு இறங்கி பரீட்சை பேப்பர் திருத்தப் போயிட்டாரோ!//

   இது என்னையோ சொன்னீங்க?:).. என்னைட்த்ஹான் எனில்.. பார்த்தீங்களோ நான் ரொம்பாஆஆஆஆ மெல்லீசு:) கம்பியில இருப்பதுகூடத் தெரியாதூஊஊஊ ஹா ஹா ஹா இதைச் சத்தமாகப் படியுங்கோ ஸ்ரீராம்.... என் செக்குக்குக் கேட்கட்டும்:))

   Delete
 45. கம்பியை விட்டு இறங்கிப்போறேன்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஓகே ஓகே மீண்டும் சந்திக்கலாம்..

   Delete
  2. ஹா ஹா ஹா கம்பியை விட்டுக் கவனமாக இறங்கிய ஸ்ரீராமுக்கு நன்றிகள்..

   Delete
 46. ஹலோவ் நெல்லைத்தமிழன் ஸ்ரீராம் மியாவ் எல்லார்க்கும் கர்ர்ர் ..
  நான் இன்னிக்கு செம பிசி என்னை விட்டுட்டு எல்லாரும் கும்மிருக்கிங்க

  ReplyDelete
  Replies
  1. பாருங்கோ அஞ்சு.. நீங்க பிஸியானால் மட்டுமே எனக்கு நேரம் கிடைக்குது:) ஹ ஹா ஹா. இன்று எனக்கு கடவுளின் பலனால் தாராளமாக ரைம் கிடைச்சுது.. ஓவராக் கும்மி அடிச்சிட்டேன்ன்ன்:))... நீண்ட காலத்தின் பின்பு, இன்று கம்பிமேல ஒரே நேரத்தில நாம் நின்று பேசியது மகிழ்ச்சி.

   Delete
 47. வணக்கம் !

  விரும்பிய உணவை எல்லாம்
  ...விதவித மாகச் செய்யும்
  பெருமனத் தாளின் பக்கம்
  ...பிந்தியே நானும் வந்தேன் !
  அருஞ்சுவை தானோ ? இஃதும்
  ...அறிகிலேன் இருந்து மோர்நாள்
  ஒருமுறை உண்டா லன்றி
  ...உண்மையைச் சொல்ல மாட்டேன் !

  படித்தவர் தன்மை எல்லாம்
  ...பனுவலின் அகத்தைப் போல !
  குடித்தவர் குணங்கள் எல்லாம்
  ...குரங்கதன் மனதைப் போல !
  அடிக்கடி மாறா ! மாறும்
  ...அரையடி மேற்பா டல்போல் !
  இடைக்கிடை வருவ தாலே
  ...எதுவுமே சொல்ல மாட்டேன் !

  கடலலைக் கருமை கண்டு
  ...கயலென வலைஞன் துள்ளிப்
  படகினை இழுத்தார்ப் போலே
  ...படித்ததும் உங்கள் பக்கம் !
  உடனடி யாகச் செய்ய
  ...உளமது சொன்ன போதும்
  இடமிது ஒவ்வா தஃதால்
  ...ஒன்றுமே சொல்ல மாட்டேன் !

  இளநிலாக் கலாம் வெட்டி
  ...எடுத்தநல் மரத்தில் வண்டு
  துளையிடும் என்று சொல்லித்
  ...தூரமாய் வாய்ப்பார் அஃதாய் !
  உளந்தனில் ஒவ்வா மைகள்
  ...உறுதியைத் தவிர்த்த போதும்
  களத்திடை அம்பு போலே
  ...கடிதுநான் செய்து பார்ப்பேன் !

  எத்தனை செய்மு றைகள்
  ...இலகுவாய்த் தந்தீர் எல்லாம்
  மொத்தமாய் உள்ளி ருக்கும்
  ...மூச்சிலும் கலந்தி ருக்கும்
  அத்தனை உணவும் செய்வேன்
  ...அடுத்துநான் பதிலைச் சொல்லக்
  கொத்துடன் வருவேன் ! வண்மை
  ...கொடுத்தவள் அதிரா அன்றோ !

  என்னடா இந்தக் கிறுக்கன் எதையுமே முழுமையாகச் சொல்லாமல் என்னவெல்லாமோ சொல்லி இருக்கிறான் என்று எண்ணாதீங்கோ !
  எதையும் உண்டுபார்க்காமல் ஹையோ மெய்யோ என்று புகழ மாட்டேன் இருந்தும் வழமைபோல் பதிவுகள் அருமையா இருக்கிறது குறிப்பாக ஊசிக்குறிப்பு ஊசி இணைப்பு இப்போதைக்கு திட்டிடாதீங்கோ
  பாவம் பிழைத்துப் போகட்டும் விடுங்கோ சரியா !

  அடுத்து இந்தத் தீர்க்க தரிசிப் பட்டம் யார் தந்தது எதுக்காகத் தந்தது எப்போ தந்தது ! அப்படி இல்லை எனில் நீங்களாகவே வைத்திருந்தால் அதற்கான காரணம் என்ன அவசியம் என்ன ! விளக்கம் தரவும் உதவிக்கு ஆள் தேவை எனில் அறிவுச்சுடர் அஞ்சு அக்காவிடம் கேளுங்கள் சரியே !
  சரியான பதில் இல்லையேல் குக்கிங் குயின் கோபிக்காதீங்கோ சரியா

  வாழ்க நலம் பூஸாரே ! கொஞ்சம் நேரம் இருந்ததால் என்னவெல்லாமோ எழுதிடுதேன் குறை நினைக்காதீங்கோஓஓஓஓஓஓ


  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கவிஞரே வாங்கோ இம்முறை தொடர்ந்து வாறீங்க மகிழ்ச்சி. அதுவும் அழகிய கவியோடு வந்திருக்கிறீங்க அதுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

   // இருந்து மோர்நாள்
   ஒருமுறை உண்டா லன்றி
   ...உண்மையைச் சொல்ல மாட்டேன் !//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:))

   //கடலலைக் கருமை கண்டு
   ...கயலென வலைஞன் துள்ளிப்
   படகினை இழுத்தார்ப் போலே//

   ஆவ்வ்வ் என்னா ஒரு அழகிய உவமை...

   அழகிய கவி, மிக அருமை நன்றிகள் சீராளன்..

   கீழிருக்கும் சில சொற்கள் புரியவில்லை..
   1.பனுவலின் அகத்தைப் போல
   2.இளநிலாக் கலாம் வெட்டி ..

   Delete
  2. ////அடுத்து இந்தத் தீர்க்க தரிசிப் பட்டம் யார் தந்தது எதுக்காகத் தந்தது எப்போ தந்தது ////
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வந்தோமா, கவிதை வடித்தோமா, புகழ்ந்தோமா என இருக்கோணும்:) நோ குறொஸ் கொஸ்ஸ்ஸ்ஸான்ஸ் பிளீஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா:)).

   //அப்படி இல்லை எனில் நீங்களாகவே வைத்திருந்தால் அதற்கான காரணம் என்ன அவசியம் என்ன //

   ஹா ஹா ஹா நான் சொல்வதெல்லாம் பலிக்குதாம் என என்னோடு நேரடியாகப் பழகும் பலர் சொல்லிப் போட்டினம், என் கணவரே சொல்லியிருக்கிறார்ர்.. “அதிரா நீங்க சொல்வதெல்லாம் பலிக்குது அதனால பிளீஸ்ஸ் நல்லதாகவே சொல்லுங்கொ எதையும் என” ஹா ஹா ஹா இதனால பலபேர் என்னைக் கண்டு பயப்புடீனம் ஹா ஹா ஹா ..:)..

   /// உதவிக்கு ஆள் தேவை எனில் அறிவுச்சுடர் அஞ்சு அக்காவிடம் கேளுங்கள் சரியே !///
   ம்ஹூம்ம்ம்.. அதைவிட மீ காசிக்குப் போயிடுறேன்ன்ன்:)) ஆனா அஞ்சுவையும் கூட்டிக் கொண்டுதேன்ன் :)).

   //சரியான பதில் இல்லையேல் குக்கிங் குயின்///
   ஹா ஹா ஹா இந்தக் குக்கிங் ஆல மீ இப்போ விஞ்ஞானி ஆகிட்டேன்ன்ன்ன்:)).

   ஹா ஹா ஹா கடசியா ஓடிவந்து கார்ட் பெட்டியில ஏறினாலும்.. கவிதையோடு வந்து கலக்கிட்டீங்க சீராளன்.. மிக்க மகிழ்ச்சி.. நன்றிகள்.

   Delete
  3. இள நிலாக் காலம் என்று இருக்கணும். இருந்தாலும் இது நான் கேள்விப்படாத செய்தி. திரும்ப வருகிறேன் விமர்சிக்க.

   பனுவலின் அகம் - படிக்கும் நூலின் தன்மை, உள்ளடக்கத்துக்கு ஏற்பத்தான் அதனைப் படிப்பவர்கள் தன்மை இருக்கும்.

   எனக்கு அதிராவுக்கு “கடலின் கருமை” உவமை புரிந்ததான்னு சந்தேகம். இந்தமாதிரி எழுதணும்னா கடல் அருகில் குடியிருப்பவர்களால்தான், கடலின் தன்மை தெரிந்தவர்களால்தான் முடியும். சீராளன் நற்றமிழ் நூலாளன்தாம்

   Delete
  4. ஓ முன்பும் கவிதையில் எழுதியிருக்கிறார் பனுவல் என.. இப்போதான் நினைவு வருது...

   கலாம் எண்டதாலதான் எனக்குப் புரியேல்லை.. இல்லாட்டில் புரிஞ்சிருக்கும்.. மீக்கு டமில்ல டி எல்லோ நெ தமிழன்:).

   அது கடலைப் பொதுவாக நீலக்கடல் எனத்தானே வர்ணிப்பினம்.. அந்த நீலம் டார்க் ஆகி.... கருமைபோல தெரியுது எனச் சொல்கிறார் என்றே புரிந்திருக்கிறேன் நான்.

   Delete
  5. மீனைக் கரும்பு என்றும் சொல்வார்களாம் என அறிஞ்சிருக்கிறேன்... அதனைக் கருமை என்றாரோ:)..

   Delete
  6. வணக்கம் அதிரா & நெ.த

   கடல் அலைக் கருமை கண்டு
   கயலென ......

   இள நிலாக்காலம் வெட்டி
   எடுத்த நலமரங்கள்.....

   இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகள்வுகள்

   நாளை விளக்கம் தருகிறேன் நன்றி !

   Delete
  7. அதிரா.. அளவுக்கு அதிகமா கடல் கறுப்பானால் அது புயலுக்கு முன்னோட்டம். அலை மிக அதிகமாகி படகை சேதப்படுத்தும் இல்லை இழுத்துவிடும் என்பதால் துள்ளி எழுந்து (விரைவா.. எப்படி? மீன் துள்ளுவது போல. கயல்-மீன், கயல்விழி - இது உங்களைப் பற்றியல்ல ஹாஹா).

   இந்த உவமை சட்டுனு நாருக்கும் தோணாது. சீராளன் very talented person

   Delete
  8. மீன் கொடி தேரில் மன்னவன் ராஜன் ஊர்வலம் போகின்றான் பாடல் கேட்டிருக்கீங்களோ?

   Delete
  9. மன்னிக்கவும்... மிகுதிக்கு பின்பு வருகிறேன் இப்போ மீன் கொடிக்கு மட்டும் பதில் :)....

   என்ன இப்பூடிக் கேட்டிட்டீங்க நெ தமிழன்:) உலகத்துக்கே தெரியுமே இது என் பேஏஏஏஏஏஏவரிட்டில் ஒன்று என....(ஹையோ ஆராவது ஓடிவந்து எனக்குத் தெரியாதே எனச் சொல்லி என் இமேஜ்ஜை டமேஜ் பண்ணிடக்கூடாது கர்ர்ர்ர்:))))

   இதுவும் நான் தேடும் செவ்வந்திப்பூ... போல ஆயிரம் தவைகளாவது ரிப்பீட்டில் கேட்டிருப்பேன்... இதுக்கும் ஒரு கதை இருக்கே:) ஹா ஹா ஹா...

   Delete
  10. அது மன்மத ராஜன் என வரும்... வீடியோ இல்லாத பாடலாக கிடைக்காமையால் இங்கு போடாமல் இருக்கிறேன்...

   Delete
  11. வணக்கம் தீர்க்கதரிசி & நெல்லைத்தமிழன் !

   தங்கள் தேடல்களுக்கும் திருத்தங்களுக்கும் அத்தோடு என்னுடைய தவறுகளுக்கும் திருத்தமும் விளக்கமும் இதோ சொல்கிறேன்

   கடலலைக் கருமை கண்டு
   ...கயலென வலைஞன் துள்ளிப்
   படகினை இழுத்தார்ப் போலே
   ...படித்ததும் உங்கள் பக்கம் !


   வழமையாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நாங்கள் கடற்கரைக்குப் போவது வழக்கம் காலையிலும் போவோம் மாலையிலும் போவோம் அப்படி ஒரு நாள் காலையில் சென்றிருந்தபோது ஒரு பத்துமணி அளவில் கடற்கரையில் நின்றுகொண்டிருந்த வலைஞர்கள் எல்லாம் கூவி அழைத்தார்கள் சக மீன்பிடித் தொழிலாளிகளை அவர்கள் எல்லாம் அவசரமாக வந்து வலைகளை எடுத்துக் கொண்டு கடலினுள் சென்று விட்டார்கள் ஒரு மூன்றுமணி நேரம் கழித்து எல்லோரும் சேர்ந்து வலைகளை இழுத்தார்கள் நிறைய மீன்கள் பட்டு இருந்தன ! அவர்கள் வலைகளை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனதும் அங்கிருந்த வயதான மீனவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் மீன் வருவதை அலைகளின் நிறத்தை வைத்துக் கண்டு கொள்வார்களாம் வழமைக்கு மாறாக அலைகளின் நிறம் கருமையாக இருந்தால் அது மீன் கூடடம் வந்ததற்கான அடையாளம் என்று சொன்னார் ...இப்போ புரிந்துவிட்டதுதானே ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வுகள் ஹா ஹா ஹா !

   அடுத்து

   இளநிலாக் காலம் வெட்டி
   ...எடுத்தநல் மரத்தில் வண்டு
   துளையிடும் என்று சொல்லித்
   ...தூரமாய் வைப்பார் அஃதாய் !

   எனது பள்ளிப் பராயத்தில் விடுமுறை நாட்களில் வயலுக்குச் செல்வது வழக்கம் கொஞ்சம் தூரப்பயணம் தான் அங்கே தங்குவதற்கு வீடும் இருந்தது எங்களுக்கு அதனால் மாதம் ஒருமுறை சென்று வருவேன் அப்படிச் சென்று இருந்த போது அண்ணா சொன்னான் மாட்டுக் கொட்டிலுக்கு மரம் வெட்டி வா என்று ம்ம் நானும் காட்டிற்கு சென்று சில மரக்கம்புகள் வெட்டி வந்தேன் அப்போது வெளியில் சென்றிருந்த அப்பா வந்ததும் கேட்டார் இவை எதற்கு யார் வெட்டி வந்தது என்று ! அதற்கு நான் சொன்னேன் நான்தான் வெட்டினேன் அண்ணா மாட்டுக் கொட்டிலுக்கு மரம் வெட்டி வா என்று சொன்னான் அதுதான் வெட்டி வந்தேன் என்று அதற்கு அப்பா சொன்னார் இப்போ இளம்பிறை இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து வெட்டி இருக்கலாம் முதலாம் இரண்டாம் மூன்றாம் பிறைக்காலங்களில் முற்றிய மரங்களை வீட்டுக்கு வெட்டி எடுத்தாலும் அதில் வண்டுகள் தாக்கம் இருக்கும் பிறை முற்றிய காலங்கள்தான் வீட்டுக்கு மரம் வெட்டப் பொருத்தமான காலங்கள் என்று சொன்னார் ..அந்த நிகழ்வைத்தான் கவிதையில் சேர்த்தேன் ( நான் எழுதும் போது வந்துவிட்டது அந்த நிகழ்வு )


   இப்படி நீண்ட விளக்கம் வேண்டாம் என்றுதான் நான் பதில் சொல்லாம இருந்தேன் விட்டீங்களா இல்லையே அதனால் வாசியுங்கள் பெருந்தகையீர்

   நன்றி

   வணக்கம் !

   விரும்பிய உணவை எல்லாம்
   ...விதவித மாகச் செய்யும்
   பெருமனத் தாளின் பக்கம்
   ...பிந்தியே நானும் வந்தேன் !
   அருஞ்சுவை தானோ ? இஃதும்
   ...அறிகிலேன் இருந்து மோர்நாள்
   ஒருமுறை உண்டா லன்றி
   ...உண்மையைச் சொல்ல மாட்டேன் !

   படித்தவர் தன்மை எல்லாம்
   ...பனுவலின் அகத்தைப் போல !
   குடித்தவர் குணங்கள் எல்லாம்
   ...குரங்கதன் மனதைப் போல !
   அடிக்கடி மாறா ! மாறும்
   ...அரையடி மேற்பா டல்போல் !
   இடைக்கிடை வருவ தாலே
   ...எதுவுமே சொல்ல மாட்டேன் !

   கடலலைக் கருமை கண்டு
   ...கயலென வலைஞன் துள்ளிப்
   படகினை இழுத்தார்ப் போலே
   ...படித்ததும் உங்கள் பக்கம் !
   உடனடி யாகச் செய்ய
   ...உளமது சொன்ன போதும்
   இடமிது ஒவ்வா தஃதால்
   ...ஒன்றுமே சொல்ல மாட்டேன் !

   இளநிலாக் காலம் வெட்டி
   ...எடுத்தநல் மரத்தில் வண்டு
   துளையிடும் என்று சொல்லித்
   ...தூரமாய் வைப்பார் அஃதாய் !
   உளந்தனில் ஒவ்வா மைகள்
   ...உறுதியைத் தவிர்த்த போதும்
   களத்திடை அம்பு போலே
   ...கடிதுநான் செய்து பார்ப்பேன் !

   எத்தனை செய்மு றைகள்
   ...இலகுவாய்த் தந்தீர் எல்லாம்
   மொத்தமாய் உள்ளி ருக்கும்
   ...மூச்சிலும் கலந்தி ருக்கும்
   அத்தனை உணவும் செய்வேன்
   ...அடுத்துநான் நன்றி சொல்லக்
   கொத்துடன் வருவேன் ! வண்மை
   ...கொடுத்தவள் அதிரா அன்றோ !

   மாற்றங்கள் செய்திட்டேன் இதில் தவறுகள் இல்லை என்று நினைக்கிறேன் நன்றி !

   Delete
  12. ஆவ்வ்வ்வ்வ் எந்தாப் பெரிய பதில்.. புறிச்சுப் புறிச்சுப் போட்டிருக்கலாமே.. சரி பறவாயில்லை.. பதிலுக்கு மிக்க மகிழ்ச்சி .. மிக்க நன்றி சீராளன்.

   ஆனா பாருங்கோ என் பக்கம் வந்து கவிதை எழுத வெளிக்கிட்டதால உங்கள் சின்ன வயசு நினைவெல்லாம் வந்து விட்டதே.. அது எது “டச்பார்” கடற்கரையாக இருக்குமோ?:)..

   Delete
  13. /// டச்பார் கடற்கரையாக இருக்குமோ?

   அதேதான்

   Delete
 48. புதுசா ரெசிப்பி முயற்சித்து போட்டிருக்கிறீங்க. புடிங் சூப்பரா இருக்கு. வறுத்த கச்சான்,கடலை நல்லாயிருக்கு பார்க்க.உப்பில் வறுத்தனீங்களா.. ஆவ்வ்வ் அதில அப்ப நானும் வறுத்து பார்ப்ப்போம். பச்சைகச்சான் கிடைக்குதா உங்களுக்கு.இங்கன தேடிபார்க்கனும். இங்கு வீட்டில ட்ரை நட்ஸ் வாங்குவாங்க.. வித் அவுட் சால்ட் தான் வாங்குவது. ஹஸ் விருப்பமா சாப்பிடுவது. இல்லையெனில் பயறு அவித்து கொடுப்பது, கொ.கடலை அவிப்பது. ஆனாலும் கறுக்,முறுக் ஸ்நாக்ஸ்தான் பிடிக்குது.
  எனக்கும் இந்தபாட்டு ரெம்ப பிடிக்கும். வாழ்க்கை தத்துவம் செம. ஊசிகுறிப்பு,ஊசி இணைப்பும் அருமை. நானும் டிஸ்கவரியா, அல்லது உள்ளூர் சானலிலாவது இந்த மிருகங்கள் பற்றி வந்தால் பார்க்க பயம்.அதுவும் பாம்....என்றா பார்க்கவே மாட்டேன். கனவிலும் அது வரும்.. ஆனா இங்கு ஒரு சானல் zoo வில் என்ன செய்வார்கள் எப்படி பராமரிக்கிறார்கள் என்பதை தொடரா போடுவார்கள்.அது விரும்பி பார்ப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ...
   இங்கு பச்சையாக கோதுடனும் கோதில்லாமலும் கிடைக்குதே... இல்லாட்டில் ஓன்லைனிலும் வாங்கலாம்.

   அவித்துச் சாப்பிடுவது நல்லதுதான் ஆனா ஹாஸ்ரிக் பிரச்சனை இருப்போருக்கு அது வயிற்றை வீங்க வைக்குது:)...
   முந்தி ஒஸ்ரேலியா சூ என ஒரு புரோகிராம் வரும் அதைத் தொடர்ந்து பார்ப்பேன் பின்பு திடீரென அந்த மெயின் ஹீரோவை முதலை அடிச்ச இடத்தில் இறந்திட்டாரெல்லோ அதிலிருந்து எதுவும் பார்ப்பதில்லை நான்.

   மிக்க நன்றிகள் அம்முலு:)...

   Delete
 49. உதவிக்கு ஆள் தேவை எனில் அறிவுச்சுடர் அஞ்சு அக்காவிடம்
  =================================

  கேளுங்கள் சரியே !


  thanks seeralan :)))))

  ReplyDelete
  Replies
  1. அல்லோஓஓஒ ஒரு சொல்லைப்பார்த்து ஓவரா டுள்ளக்குடா:)... அது சீராளன் ச்ச்சும்மா சொல்லியிருக்கிறார் அறிவுச்சுடர் என கர்ர்ர்ர்ர்:)..

   Delete
  2. வணக்கம் தீர்க்க தரிசி அவர்களே !

   நான் கவிதையில் பொய்சொல்வேன் ஆனால்
   நடைமுறையில் பொய்சொல்ல மாட்டேன். ஹாஹாஹா

   Delete
  3. ஏஞ்சலின்... உங்க அக்கா எங்க இருக்காங்க? அவங்க அறிவுச்சுடர்னு சீராளன் சொல்றார். ஏன் உங்களைப் பாராட்டலை? உங்களைவிட உங்க அக்கா ரொம்ப புத்திசாலியா?

   Delete
  4. ஹா ஹா ஹா எதுக்கு இந்தக் கொலைவெறி நான் அஞ்சுவின் அக்கா அறிவுச் சுடர் என்று சொல்லலையே அஞ்சுவைத்தானே அக்கா என்று சொன்னேன் இது ஏதோ 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' மாதிரி எம்ஜிஆரின் அம்மா தான் தீபா என்று எடுத்துக் கொண்டீரோ தெரியலையே எதற்கும் தீர்க்கதரிசி இடம் கேட்டுக் கொள்வோம்
   பூஜுஊஊ..... அபி தும் ஹிதரே ?

   Delete
  5. @ சீராளன்..
   //நான் கவிதையில் பொய்சொல்வேன் ஆனால்
   நடைமுறையில் பொய்சொல்ல மாட்டேன். ஹாஹாஹா//

   இது கவிதையின் முடிவில வந்த பின்னூட்டமெல்லோ:))

   //பூஜுஊஊ..... அபி தும் ஹிதரே ?//

   ஆவ்வ்வ்வ்வ்வ்வ் பகூத் அச்சா... தபியக் கி துவாகே:))

   எங்கிட்டயேவா?:) ம்ஹூம்ம்:)) ஹா ஹா ஹா..

   நன்றிகள் சீராளன் அனைத்துக்கும்...

   Delete
  6. //ஏன் உங்களைப் பாராட்டலை? உங்களைவிட உங்க அக்கா ரொம்ப புத்திசாலியா?//

   நான் ஜொன்னனே நெ.தமிழன்.. இப்பூடியான நேரம் அஞ்சுவுக்குக் காது கேய்க்காது:)) ஹா ஹா ஹா..

   Delete
 50. ///ஹீரோவை முதலை அடிச்ச இடத்தில் /// nooooo.its sting ray .

  ReplyDelete
 51. இது எப்போப் போட்டீங்கனு தெரியலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். வெள்ளிக்கிழமையே வந்திருக்கு. ஆனால் எனக்குத் தெரியலை. இந்தப் பயறு வறுப்பதை என் கிட்டேக் கேட்டிருக்கக் கூடாதோ? எல்லாப் பயறையும் ஊற வைச்சு முளைக்கட்டி நிழலில் உலர்த்தி அதோடு உப்புக்காரம், பெருங்காயம் சேர்த்து வெயிலில் காய வைத்துப் பின்னர் மண் சட்டியில் போட்டு வறுத்தால் நல்லா வரும்! போகட்டும். இனிமேல் போஸ்ட் போட்டால் சொல்லுங்க!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. ஓ கறுப்பு முழு உளுந்துக்குச் சொன்ன ரெசிப்பிதான் இதுக்குமோ.. செய்கிறேன்.. நான் வழமையாக பயறை மைக்குரோவேவ் இல் அல்லது அவணில் தான் போட்டு எடுப்பேன்ன்.. சூப்பராக வரும்.

   //இனிமேல் போஸ்ட் போட்டால் சொல்லுங்க!//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)).. இல்ல நான் அன்று சொல்லியிருப்பேன், ஆனா நினைச்சேன், சிலர் பார்த்தாலும் பல வேலை சோலிகளாலகூட கொஞ்சம் லேட்டாப் போவோம் என நினைப்பினமெல்லோ.. அதனால அவசரப்படாமல் பொறுமையாக இருப்போம் தொந்தரவு செய்யக்கூடாது என நினைச்சேன்.

   Delete
 52. ஊசிக்குறிப்பு நல்லா இருக்கு. ஊசி இணைப்பும் ஹாஹாஹா சிங்க ராஜா நல்லாவே நடிச்சிருக்கார்.

  ReplyDelete
 53. கானாமல் போன அதிராவ ரொமப நாலா தேடினேன் யாருன்னு கேட்கபடாது நானே ஜல் ஜல் அக்கா தேடி வந்துல்லேன் பூசாரே, என் மகனும் ஒரு பூசார் வள்ர்த்தார் அப்ப அதிர ஞாபகமாவே இருந்தது

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ்வ்வ் ஜல் அக்கா வாங்கோ வாங்கோ.. நீங்க இப்பவும் புளொக்கில் இருக்கிறீங்களோ.. எப்பவாவது மறக்காமல் வந்து தேடிப்போட்டுப் பின்பு காணாமல் போயிடுறீங்க... பார்த்தது மிக்க மகிழ்ச்சி. மறவாமல் எட்டி வந்து கொமெண்ட் போட்டமைக்கு மிக்க நன்றிகள்.

   ஓ உங்கள் மகனும் பூஸ் வளர்த்தரோ? இப்போ இல்லையோ?.. .. ஹா ஹா ஹா..

   Delete
 54. புட்டிங்..கோ.... கட்டிங்...கோ
  நான் செஞ்சு பார்க்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. ஒரு வழியாக பாதை திறக்கப்பட்டு விட்டது போலும்.. ஹா ஹா ஹா நீங்களாவது செய்கிறதாவது:)).... நெல்லைத்தமிழன்கூட குழைஜா:)தம்:) செய்தாலும் செய்வார்ர்:).. ஆனா நீங்க? ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

   Delete
 55. https://www.quora.com/Can-you-suggest-me-some-dishes-which-I-can-prepare-using-Black-Gram-urad-dal

  ReplyDelete
 56. bhappa doi..!! :)) I made it few times in cooker athira..
  Ingredients
  1 can sweetened condensed milk, same amount of thick yogurt (put the regular yogurt in a muslin cloth, tie it and keep it on a strainer, then keep the strainer on a bowl..keep the entire setup inside the refrigerator over night), few strands of saffron / elaichi powder
  Method
  Whisk the condensed milk, thick yogurt, saffron strands/elaichi powder well. Heat water in the steamer. Pour the whisked mixture in a greased bowl, close it with lid/ aluminum foil and steam it. A knife inserted should come out clean, thats the indication of bhappa doi is done.

  ReplyDelete
 57. black eyed peas - தமிழ்ல காராமணி என்பாங்க..வெள்ளை காராமணி, சிவப்பு காராமணி என 2 வகை உண்டு..சிவப்பு காராமணிய கோவைப்பக்கம் தட்டப்பயிறு என்று சொல்லுவோம். :)))

  வேர்க்கடலைக்கு உப்புத் தண்ணீர் தெளித்து வறுக்கலாம்..வெறும் கடாயில் கடலையப் போட்டுக்கொண்டு, கிண்ணத்தில கொஞ்சம் உப்பைத் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து வறுக்கணும்..பொறுமையா வறுத்தா கருகாமல் வரும்..உப்புலயே இவ்வளவு வகை பொறுமையா வறுத்திருக்கீங்க..டிரை இட். யு கேன் டூ இட். :)

  ReplyDelete
 58. i miss all your( you, angel akka, geetha akka, nellai thamizhan and everybody) posts and comments...awwwww!! Hope i get more time in a few years and come back here regularly.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.