நல்வரவு_()_


Wednesday 1 January 2020

வருக வருக 2020 அங்கிள் அவர்களே🙏


புது வருஷம் பிறக்கிறதென்றாலே ஒரு பயமும் கூடவே பக்தியும் வந்து ஒட்டிக் கொள்கிறது.. அனைவருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களையும், சந்தோசத்தையும் அள்ளி வழங்க வேண்டுமென, மனம் பிரார்த்திக்கின்றது.. அதனாலதான் மரியாதையாக வரவேற்கிறேன் வருஷத்தை:).

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
 இவர் எங்கள் வீட்டு ஊஞ்சல் பிள்ளையார், நினைவிருக்கும்தானே.. 

ஹா ஹா ஹா:)

வாவ்வ்வ்வ் அதிரா செய்த பால்க்கோவாவாக்கும் இது

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊஊ 
பிகோஸ் இது அதிராவின் கன்னிப் பால்க்கோவா:))
நான் நினைச்சேன், ரசமலாய்போல இருக்குமென, ஆனா இது மில்க் ரொஃபி ரேஸ்ட்டாக இருக்குது, ஓகே ஆனா பெரிதாக எனக்குப் பிடிக்கவில்லை.

😇😇😇😇😇😇இடைவேளை😇😇😇😇😇😇
ஆஆஆ இடைவேளையில் ச்சும்மா 
எங்கட கிறிஸ்மஸ் லஞ் ஐக் காட்டிடுறேனே:)) சிம்பிள் மெனுத்தான்..
😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇


எனக்கு ஒரு ஈர் கிடைச்சால் போதும், அதை வச்சுப் பெருமாள் ஆக்கிடுவேனாக்கும்:)) ஹா ஹா ஹா வம்பு தும்புகளில் அல்ல, கை வேலைகளில் மட்டும்:), அதனால இம்முறை ஜேகே ஐயா சொன்னார் கோதுமை மாவில்[பிளேன் ஃபிளவரில்] முறுக்குச் செய்யச் சொல்லி.

முறுக்குச் செய்யும்போதுதான், சின்ன வயசு நினைவு வந்துது, இப்படி கோதுமை மாவிலும், ஏதேதோ வடிவங்கள் அம்மா செய்வா, சிலதுக்கு சீனிப்பாணி காச்சி ஊத்துவா என.

அதனால அதை நினைச்சு, சில பல வடிவங்களும் செய்தேன். கூடவே இந்த பூவையும் செய்தேன், 

 செய்து பொரிச்சதும், இப்படி ஒரு சாடியில் வைப்பதைப்போல செய்யலாமே என ஐடியா உதித்தது.. வச்சிட்டனே சாடியில்:)..


இது நான் செய்த பேஸ்ட்ரி... ஸ்ஸ்ஸ்ஸ் அவசரப்பட்டுக் கை வைக்காதீங்கோ:) உள்ளே இருப்பது என்ன ஸ்ரஃப் எனக் கேட்டுவிட்டுத் தொடுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்:))

ஹா ஹா ஹா... இது 2ம் தரம்:) மேலே ஒருதடவை சிரிச்சிட்டேனாக்கும்:))
அது மனைவியாக்கும் ஹையோ ஹையோ:))

ஆஆஆ இதோ வந்துவிட்டது ஜேகே ஐயாவின் அட்வைஸ் உடன், அதிராவின் கை வண்ணத்தில் மை..தா:) முறுக்கு வகைகள்:))

இது மூன்றாவது ஹா ஹா ஹா:).. 
மேலே ரெண்டுதரம் சிரிச்சுப்போட்டனே:))




ஊசி இணைப்பு

ஊசிக் குறிப்பு

இந்தப் புது வருடத்தில் அடுத்தவரைக் குறை சொல்லாமல், 
மகிழ்ச்சியாக இருப்போம்...

 ஆன்ரீஸ், அங்கிள்ஸ்ஸ்  மற்றும் அஞ்சுக் கிரான்மா:), அம்முலுப் பாட்டி அனைவருக்கும் டெய்சியின் ஆப்பி நூ யர்ர்ர்ர்ர்ர்:)))
😄😄😄😄😄😄😄😄😄
🙏🙏🙏🙏🙏🙏

85 comments :

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      முதலாவதாக இம்முறை வந்திருக்கும் உங்களுக்கு, என் முறுக்கு வாஸ் ஐ, அப்படியே தூக்கித்தந்து கெளரவிக்கிறேன்:).

      Delete
  2. பாடல் காணொளி பாட மாட்டேன் என்கிறது!   அதற்கு யு டியூப் செல்லவேண்டும்!   ஆமாம், பன்னீரிலா, தண்ணீரிலா?  எதில் நனைந்த பூக்கள்?!!

    ReplyDelete
    Replies
    1. இப்போ வீடியோவை மாத்திவிட்டேன் ஸ்ரீராம்..

      இந்த டவுட் எனக்கும் வந்தது.. பன்னீரில் எனத்தான் நேற்றுவரை நானும் நினைச்சேன், ஆனா அதில் எழுதியிருந்ததைப்பார்த்ததும், தண்ணீர்தானே பொருந்தும், பன்னீர் எப்படிப் பொருந்தும் என்று குழம்பிவிட்டேன், ஆனா பாட்டைக் கேட்கும்போது பன்னீரில் எனத்தான் காதில விழுகுது...

      Delete
  3. இன்றைய இணைப்புகள் எல்லாமே சிரிக்க வைத்தன.   வழக்கத்தை விட அதிகமாகவே இணைத்திருக்கிறீர்கள்.  ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. புதுவருடமெல்லோ அதனாலயே அதிகம் சிரிப்புக்கள் மலரட்டும் எண்டு பொட்டு விட்டேன்:).

      Delete
  4. வித விதமான வடிவங்களில் முறுக்கு, பால்கோவா எல்லாம் சூப்பர்.   திரட்டுப்பால் செய்திருக்கிறீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம், திரட்டுப்பால் என எதைச் சொல்றீங்களெனத் தெரியவில்லையே... அபடி ஏதும் இதுவரை செய்ததில்லை, தேடிக் கண்டுபிடிக்கிறேன், நன்றிகள்.

      Delete
    2. திரட்டுப்பால், பால்கோவா இரண்டும் ஒன்றுதான்..ஹா ஹா.

      பாவம் நீங்க... புதிது புதிதாகச் செய்துபார்க்கிறீங்க. ஆனா வீட்டில் சாப்பிடத்தான் ஆள் இல்லை. (உங்க முயற்சிக்கு ஆதரவு இல்லை ஹா ஹா). எல்லாம் நீங்களே சாப்பிடவேண்டியிருக்கு. பொதுவா சீனி அதிகமாகப் போடணும். நீங்க குறைவாகப் போட்டிருக்கீங்க.

      Delete
    3. தா... தா... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் நெல்லைத்தமிழன்....
      பாருங்கோ உங்கள் கொமெண்ட் வந்த பின்னர்தான் எனக்குத் தெரியும் அவை இரண்டும் ஒன்றென.... உங்களைப் போன்றோர் வலையுலகுக்கு மிகவும் தேவை....

      கீசாக்காவும் சொல்லவில்லை ஶ்ரீராமும் சொல்லவில்லை திரட்டுப்பால்பற்றி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

      என்னாது சீனி இன்னும் போடோணுமோ... நான் போட்டதே அதிகம் என நினைச்சேன்... ஒரு லீட்டருக்கு சிலர் 200 கிராம் சிலர் 250 கிராம் சேர்த்தார்கள் பார்த்தேன்...
      ஆனால் இதன் இன்னொரு பெயர் திரட்டுப்பால்... எனத் தெரிஞ்சிருந்தால் சத்தியமாக செய்திருக்க மாட்டேன் ஹா ஹா ஹா...

      எங்கள் வீட்டில் சொக்கலேட் பிரியர்கள் , ஆனா இப்படி இனிப்புக்கள் யாரும் விரும்ப மாட்டினம்:)

      Delete
  5. படைப்புகள் அனைத்தும் ரசனை...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ.. மிக்க நன்றிகள்.

      Delete
  6. வணக்கம் அதிரா சகோதரி

    புது வருடத்திற்கான பதிவு அமர்க்களம்.. மிகவும் நன்றாக உள்ளது. புது விதமான அழகான தின்பண்டங்கள், ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு, பொன் மொழிகள், என அனைத்தையும் விடாமல் நன்றாக தந்திருக்கிறீர்கள். பிறகு ஒருதடவை கண்டிப்பாக நிதானமாக எல்லாவற்றையும் சுவைக்க வருவேன்.( நீங்கள் மீண்டும் கோகிலாவை உதாரணமாக காட்டினாலும்)

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    வளம் கொடுக்கும் புது வருடமாக இவ்வாண்டு திகழ மனதாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //பிறகு ஒருதடவை கண்டிப்பாக நிதானமாக எல்லாவற்றையும் சுவைக்க வருவேன்.//
      எப்போ எனச் சொல்லவே இல்லையே:)).. ஹா ஹா ஹா மீண்டும் கோகிலா பார்த்து முடிச்சிட்டேன் நல்ல படம், அடுத்து அதனோடு சேர்த்து ஒரு ஊதாப்பூக் கண் சிமிட்டுகிறது, நிழல் நிஜமாகிறது இவற்றைப் பார்தேன் அருமையாக இருந்தன. ஆனா நான் பார்க்க வெளிக்கிட்டது, ஸ்ரீராம் போட்ட பாடலின் படம்.. அவள் அப்படித்தான்.. ஆனா அது குவாட்டரிலேயே நிக்குது மூவாகுதில்லை[பெரிதாகப் பிடிக்கவில்லை].. இது வேற குவாட்டர்:)).. ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள்..கமலாக்கா.

      Delete
  7. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அதிரா..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. நீங்க சென்னைக்கு மாற்றலானதும் சுவாமியார் ஆகிட்டீங்க:)) கோயில் கோயிலாக சுற்றுலா நடத்துறீங்கள்:).. ஆனா அவ்ளோ பிரயாணத்திலும் வந்து கொமெண்ட்ஸ் போட்டமைக்கு நன்றியோ நன்றி.. இம்முறை சார்ஜர் எடுத்துப் போனனீங்கதானே?:)..

      Delete
  8. குதிரையும் பெண்ணும் போகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. போகிறார்கள் போலத்தான் தெரியும் டக்கெனப் பார்க்கையில், ஆனால் கொஞ்ச நேரம் உற்றுப்பாருங்கோ குதிரையின் வால் பின்னுக்கு அசைவதைப்போலவும், வருவது போலவும் தெரியுதே ஹா ஹா ஹா.

      Delete
    2. அட என்னடா இது..எனக்கு வந்த சோதனை... நேற்றுப் போய்க்கொண்டிருந்த பெண்ணும் குதிரையும் இன்றைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்?

      Delete
    3. அதேதான் நெ தமிழன், நாம் நினைப்பதுபோல தெரியுது படம், வருகிறார்கள் என நினைச்சால் வருகிறார்கள் ஹா ஹா ஹா...

      Delete
  9. முதல் படம் மயில் மிக அருமை.

    திரட்டுப்பாலும் முருக்கும் நல்லா வந்திருக்கு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மயில் அழகு என்னாலும் அந்த மயிலிலிருந்து கண்ணை எடுக்க முடியாமல் தான் இங்கு போட்டேன்.

      அது திரட்டுப்பாலோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது பால்க் கோவா ஆக்கும் ஹையோ ஹையோ எல்லோரும் என்னைக் குழப்பீனமே:)... அது சரி என் முறுக்குப் பூச்சாடி பற்றி ஏதும் சொல்லாமல் விட்டிட்டீங்களே.. சரி சரி மொபைலில் எல்லாம் கஸ்டம்தான்.

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன், பயணத்தை இனிதே நிறைவேற்றி வாங்கோ.

      Delete
    2. முறுக்குப் பூச்சாடி மிக அழகு. பாராட்ட விட்டுப்போய்விட்டது.

      ஆமாம் டப்பா நிறைய வித வித முறுக்குகள் இருக்கிறதே..உங்களை விட்டால் யார் சாப்பிடப்போகிறார்கள் உங்கள் வீட்டில்?

      Delete
    3. ///

      நெல்லைத்தமிழன்Saturday, January 04, 2020 8:16:00 am
      முறுக்குப் பூச்சாடி மிக அழகு. பாராட்ட விட்டுப்போய்விட்டது.///
      கர்ர்ர்ர்ர்ர்:).. நீங்கள் அதிகம் ரசிப்பீங்கள் என எதிர்பார்த்தேன்:)...

      ஆஆஆ தப்பு தப்பு... உறைப்பு ஐட்டங்கள் சுடச்சுட முடிஞ்சிடும் வீட்டில்.. முறுக்கு வடை பற்றிஸ் கட்லட் ரோல்ஸ் இவை அனைத்துமே:)

      Delete
  10. என்னைப்போன்ற அந்த ’ஆண் மயில் மாமா’ சும்மா அழகோ அழகு !

    டாப்பாக டாப்பில் இருக்கிறார்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... ஓ மயிலில் ஆண் மயிலுக்குத்தான் தோகை இருக்குது என்ன?:).. இது தெரிஞ்சிருந்தால் இங்கு போட்டிருக்க மாட்டேனே:)) ஹா ஹா ஹா.. அதுசரி மயிலைச் சுட்டிட்டீங்களோ?:) , நானும் உங்கட பக்கம் ஒன்றை இல்லை இல்லை ஒன்றில் இருந்த ரெண்டைச் சுட்டு எடுத்து வந்தேன், ஆனா அவை உயிருடனேயே துள்ளுகின்றன:), ஒரு நாளைக்கு இங்கின போடுவேன்- ஆனா உங்களிடம் சுட்டதைச் சொல்லாமல்:)).. பின்ன எனக்கு கோர்ட்ஸ் படி ஏற கஸ்டம்:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. //நானும் உங்கட பக்கம் ஒன்றை இல்லை இல்லை ஒன்றில் இருந்த ரெண்டைச் சுட்டு எடுத்து வந்தேன், ஆனா அவை உயிருடனேயே துள்ளுகின்றன:), ஒரு நாளைக்கு இங்கின போடுவேன்- //

      எனது மான் குட்டிகள் இரண்டும் துள்ளியபடி அங்கு அதிராவிடம் போய்ச்சேர்ந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே. என்று வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், என்னுடைய அவற்றை உங்கள் விருப்பப்படி போட்டுக் கொள்ளுங்கோ. நோ அப்ஜக்‌ஷன்ஸ், யுவர் ஹானர், மை லார்ட். :))

      Delete
    3. ஹா ஹா ஹா அவை மான் குட்டிகள் அல்ல கோபு அண்ணன்... இது வேறு இரண்டு துள்ளுகிறதே:)... இங்கு வரும்போது பார்த்துக் கண்டுபிடிப்க்கோ:) ஆனா நான் ஜொள்ள மாட்டேன்:)...

      Delete
  11. அன்பு நெல், வம்பு புல். சிறு திருத்தம் அன்பு அஞ்சு, வம்பு அதிரா. சரிதானே. பத்த  வச்சிட்டேன் இனி வெடிக்கப் போவுது. ஹா ஹா.புத்தாண்டில் brexit நடக்கும். நன்மை பெருகும் என்று நம்புவோமாக.
     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ.. ஆஹா புதுவருடம் பெயரும் மாத்தி, படத்தோடு வந்திருக்கிறீங்க:), ஆனா படத்தில பார்க்க கொஞ்சம் பயமாகவே இருக்குது எனக்கு ஹா ஹா ஹா.

      //சிறு திருத்தம் அன்பு அஞ்சு, வம்பு அதிரா//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      //இனி வெடிக்கப் போவுது. ஹா ஹா.புத்தாண்டில் brexit நடக்கும்.//
      அதுதான் ஏற்கனவே நடந்திட்டுதே:)) அஞ்சுவும் நானும் டிவோஸ் எடுத்திட்டோம்:)) இனி வம்பை விதைச்சென்ன அன்பை விதைச்சென்ன ஹா ஹா ஹா..

      Delete
  12. மைதா முறுக்கு மாதிரி இல்லை. இது கோதுமை முறுக்கு போல பிரவுன் கலரில் இருக்கிறது. 

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படித்தான் நினைத்தேன், இங்கு வெள்ளைகளின் சுப்பமார்கட்டில் ஓல் பேர்பஸ் ஃபிளவர்[பிளேன் ஃபிளவர்] இப்படி ஒருவித மஞ்சளாகிடுது, ஆனா பார்க்கும்போது நல்ல வெள்ளை.

      இன்னொன்று, முறுக்காக இருப்பதுக்கு மட்டும் வெறும் நெய்யும் உப்பும் சேர்த்தேன், ஏனையவற்றுக்கு சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்தேன்.

      மிக்க நன்றிகள்.

      Delete
  13. //வாவ்வ்வ்வ் அதிரா செய்த பால்க்கோவாவாக்கும் இது//

    தெரியாமல் அவசரப்பட்டு அந்த பால்கோவா, மல்கோவா & மர்ம கோவா மூன்றையும்
    ஆசையுடன் தடவி டச் பண்ணிப்போட்டேன்.

    //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊஊ
    பிகோஸ் இது அதிராவின் கன்னிப் பால்க்கோவா:))//

    நன்கு டச் பண்ணிப் பார்த்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்

    கன்னியோ கனியோ ஸ்வீட் சிக்ஸ்டீனோ அல்ல, 61 தான் என்று :)))))
    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      [im]http://geekologie.com/2016/02/17/angry-cat-7.jpg [/im]

      Delete
  14. பாஸ்ட்ரியின் உள்ளே இருப்பது தான் தெரியுமே! மே மே. 

    ReplyDelete
    Replies
    1. [im] http://1.bp.blogspot.com/-bc8ACtSjG20/UEr_sPfh2TI/AAAAAAAAAPA/gznQh-0FDeU/s1600/Cute+Cat+Laugh.jpg [/im]

      Delete
  15. வழக்கம்போல அனைத்துப் படங்களும் கருத்துக்களும் அழகோ அழகு !

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    என்றும் பதினாறாக அடுத்த அறுபத்து ஒரு ஆண்டுகளுக்கு இதுபோல பதிவிட்டு, சந்தோஷமாக வாழ என் வாழ்த்துகளும் ஆசிகளும் எங்கட அதிராவுக்கு மட்டுமே அல்ல ..... என் பக்கம் சமீபத்தில் காணாமல் போய் உள்ள அந்த அதிராவின் நெருங்கிய நட்பான அஞ்சுவுக்கும்கூட. :)))))

    ReplyDelete
    Replies
    1. //அடுத்த அறுபத்து ஒரு ஆண்டுகளுக்கு//

      ஆஆவ்வ்வ் அப்போ அதிராவுக்கு 77 வயசாக இருக்கும் தெரியுமோ ஹா ஹா ஹா:)..

      //என் பக்கம் சமீபத்தில் காணாமல் போய் உள்ள அந்த அதிராவின் நெருங்கிய நட்பான அஞ்சுவுக்கும்கூட//

      சந்தடி சாக்கில உங்கட ஜொந்தக் கதை ஜோகக்கதையையும்:) உள்ளே இழுத்து விட்டிட்டீங்க ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.

      Delete
  16. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2020

    பட்டங்கள் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... முடியல...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      முறுக்கைப் பார்க்காமல் பட்டத்தைப் பார்த்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா நன்றி.

      Delete
  17. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அதிரா!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. மிக்க நன்றிகள்.

      Delete
  18. ஸ்வீட், கோதுமை பூப்பலகாரம், அதன் வடிவம், கோதுமைப்பூக்களில் செடி எல்லாமே அசத்தல்!
    வரவேற்கும் மயில் அற்புதம்!! அத்தனை அழகு!!ஊசிக்குறிப்பு அருமை!
    /அன்பும் நெல் போல, போட்டால் தான் முளைக்கும்!/ மிக அர்த்தமுள்ள மிக அழகான வாசகம்!

    ReplyDelete
    Replies
    1. அழகாக ரசிச்சு எழுதியிருக்கிறீங்க மிக்க நன்றிகள் மனோ அக்கா.

      Delete
  19. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் மியாவ்வ் அண்ட் அனைத்து //என் பக்கம் ,எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் //வலைப்பூ பங்குதாரர்கள் /ஷேர் ஹோல்டேர்ஸ் அனைவருக்கும் :))))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. சே..சே.. உங்களை இப்போதெல்லாம் பிடிக்கவே முடியாமல் இருகே:).. நான் இனி புது செக்:) வைக்கலாமோ என யோசிச்சுக்கொண்டிருக்கிறேன்:).

      ////வலைப்பூ பங்குதாரர்கள் /ஷேர் ஹோல்டேர்ஸ்//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது எப்போ தொடக்கம் எனக்குத் தெரியாமல்.. இப்பூடி எல்லாம் இணைஞ்சிருக்கினம்:))... இன்சூரன்ஸ் கூட எடுக்காமல் இருக்கிறேனே என் புளொக்குக்கு:)).. புதுவருடமும் அதுவுமா பயத்தை உருவாக்கி விட்டிட்டு ஓடிட்டா கர்:))

      Delete
  20. ஒரு உண்மையை சொல்லிட்டு சொல்றேன் :) நிஜம்மா அந்த மலர் முறுக்கு காய் டெக்கரேஷனை எங்கிருந்தோ வழக்கம்போல் சுட்டு போட்டீன்கன்னே நெனச்சேன் மியாவ் !!!!! அவ்ளோ அழகோ அழகு .என் கண்ணை என்னால் நம்பவே முடில .இதே போல் உங்க க்ரியேட்டிவிட்டியை தொடருங்க .ஹாஸ்பிடல் வேலைக்கு லீவில்லை மாலை வந்து மிச்ச பின்னூட்டங்கள் தரேன் 

    ReplyDelete
    Replies
    1. //எங்கிருந்தோ வழக்கம்போல் சுட்டு போட்டீன்கன்னே//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிராவை எப்போ தொடக்கம் இப்பூடி சூட்டிங்:)) செய்பவர் என நினைச்சீங்க:)).. இது வேற சூட்:).

      ///அவ்ளோ அழகோ அழகு .என் கண்ணை என்னால் நம்பவே முடில //
      ஹா ஹா ஹா நன்றி நன்றி உண்மைதான் அஞ்சு எனக்கே பார்த்து முடியாமல், ஒரு நாள் முழுக்க அப்படியே வச்சிருந்தேன், நித்திரையில இருந்தோரை எல்லாம் எழுப்பி வந்து, பார்க்கச் சொல்லிக் காட்டிப் பெருமை சேர்த்துக் கொண்டேன் வீட்டில:)) ஹா ஹா ஹா..

      //ஹாஸ்பிடல் வேலைக்கு லீவில்லை//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பார்த்தீங்களோ.. போன வருடம் ஜாமம் ஜாமமாக என்னா கும்மி போட்டோம் அது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை ஹா ஹா ஹா.. பறவாயில்லை மக்கள் சேவை மகேசன் செவை என்பினம், புதுவருடத்தில் மக்களோடு உதவியாக இருப்பது நல்ல செயல்தான்.

      Delete
  21. //இந்த வருடம் நல்ல பலன்களையும், சந்தோசத்தையும் அள்ளி வழங்க வேண்டுமென, மனம் பிரார்த்திக்கின்றது.//

    நானும் உங்களுடன் பிரார்த்திக்கிறேன் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா.. பிரார்த்தனைக்கு மிக்க நன்றி..எங்கேயோ இருந்துகொண்டு, என்னையும் நினைத்துப் பிரார்த்திக்கிறீங்கள் எனும்போது மகிழ்ச்சியாக இருக்குது.

      Delete
  22. தண்ணீரில் ந்னைந்த பூக்கள் பாட்டை இங்கு கேட்கவில்லை. யூ-டியூப்பில் போய் கேட்டேன்.
    நதியாவின் உறசாகம் உங்களையும் தொற்றிக் கொண்டது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்போ சரிப்பண்ணி விட்டேன் கோமதி அகக பாட்டை.

      உண்மைதான் அது என்னமோ புதுவருடம் பிறப்பது இம்முறை மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது, நிறைய பலகாரம் சமையல் என பிஸியாக இருந்தேன், மனதுக்கும் இதமாக இருந்தது.

      Delete
  23. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    இவர் எங்கள் வீட்டு ஊஞ்சல் பிள்ளையார், நினைவிருக்கும்தானே.. //

    நினைவு இருக்கு.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. ஆஆ நீங்கள் ஊஞ்சல் பிள்ளையாரை மறக்கவில்லை, நான் டெய்லி கும்பிடும்போது அவரை ஆட்டி விடுவேன், இல்லை எனில் நித்திரையாகிடுவாரெல்லோ:)).

      நன்றி நன்றி.

      Delete
  24. பால்கோவா மிக அருமை.மைதா முறுக்கு பூ மாதிரி செய்தது அழகு.

    ஜாடியில் வைத்து அலங்கரித்தது அழகோ அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அக்கா நன்றி.. எனக்கும் அந்தச் சாடி நன்கு பிடித்திருந்தது.

      நான் முன்பும் இப்படி ஒரு ரோஜாப்பூச் சாடி செய்தேன், ஆனா பேஸ்புக்கில் போட்டேனா தெரியவில்லை, இங்கு தேடினேன் கிடைக்கவில்லை.

      Delete
  25. அதிராவின் கைவண்ணத்தில் முறுக்கு அருமை.
    ஆவின் பால் சிரிப்பு அருமை.
    அன்பு, வம்பு எல்லாம் நல்லா இருக்கிறது.வடிவேல் சொல்லுவது செல்லோடேப் நுனியை தேடுவது கடினம் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மையில் சின்ன விசயம்தான் ஆனா நாம் அதனை நகைச்சுவையாக நினைப்பதில்லை, இப்படி செலோடேப்பின் நுனியைத்தேடுவதுதான் கஸ்டம் எனும்போது குபீரெனச் சிரிப்பு வருகிறது.. இந்தத் தேடல்:).. எல்லோரும் அனுபவிக்கும் சோகம்தானே:)) ஹா ஹா ஹா..

      Delete
  26. புது காலண்டர் பார்ப்பது சிறு வயதில் விடுமுறை நாளைதான்.

    ReplyDelete
  27. //இந்தப் புது வருடத்தில் அடுத்தவரைக் குறை சொல்லாமல்,
    மகிழ்ச்சியாக இருப்போம்...//

    ஆமாம் , அதை கடைபிடித்தால் வாழ்வில் எல்லோருக்கும் நலம் தான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், நம் ஒவ்வொருவருக்குள்ளும் குறை இருக்கும், ஆனா அதை விட்டுப்போட்டு அடுத்தவரைக் குறை சொல்லிக்கொண்டிருப்பதே நமக்குப் பழகிப்போச்சு:).

      Delete
  28. //டெய்சியின் ஆப்பி நூ யர்ர்ர்ர்ர்ர்:)))//

    டெய்சியின் வாழ்த்து மிக மகிழ்ச்சி. அதன் முகபாவம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நான் என்ன வேலை செய்தாலும் பொறுமையாக உற்றுப் பார்த்தபடி இருப்பா மேசைமீது. கையில என்ன எடுத்தாலும் எட்டிப் பார்ப்பா, அவவுக்கு மணக்க குடுப்பேன் .. அந்த மேசையில் மட்டும்தான் அவ இருக்க பெர்மிஷன் குடுத்திருக்கு, ஏனைய இடங்களில் ஏற மாட்டா.. ஏறக்கூடாதெனத் தெரியும்.

      Delete
  29. மயிலும் தோகையும் அழகு

    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் ரசித்தமைக்கும் நன்றி கோமதி அக்கா.

      Delete
  30. வாங்கோ வாங்கோ வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி... விரைவில் வருகிறேன் அதுவரை மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. என் முறுக்குப் பூவில எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருங்கோ:).

    ReplyDelete
  31. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மஞ்சள்,சிவப்பு,பச்சை பசும்பொன் அதிரா.
    அழகான மயில் படம். ஊசி இணைப்பு,செலோடேப்,ஆண்பால் ஜோக்குகள் வாசித்து சிரித்து முடியல.சூப்ப்பர்.அதுவும் செலோடேப்.
    ஆ..முறுக்குபூ அழகாக இருக்கு. அதைவிட அழகோ அழகு உங்க க்ரியெட்டிவிட்டிதான் செம......அழகா செய்திருக்கிறீங்க.
    டெய்சி சரியான குழப்படி. தாங்க்ஸ் டெய்சி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. நாடு திரும்பிவிட்டீங்கள் மகிழ்ச்சி.

      //மஞ்சள்,சிவப்பு,பச்சை பசும்பொன் அதிரா.//
      கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      பயணக் களைப்பிலும் வந்து கொமெண்ட்ஸ் போட்டு ரசிச்சிருக்கிறீங்க நன்றி நன்றி.

      Delete
  32. எல்லாம் நல்லா இருக்கு. ஆனால் மைதா முறுக்கு வெள்ளையாக வரவேண்டாமோ? ஏன் இப்படிக் கறுப்பாக்கி விட்டீர்கள்? அந்தப் பூஜாடியில் வைச்சிருக்கும் பூக்கள் நீங்கள் செய்ததுனு யாருமே சொல்ல மாட்டாங்க! எல்லாம் வைச்சு அமர்க்களப் படுத்திட்டீங்க. ஆனால் உங்க லஞ்ச் எனக்கு வேண்டாம். முட்டை எல்லாம் வைச்சிருக்கீங்களே! அந்தத் திரட்டுப் பால் பார்க்கவே வெள்ளை வெளேரென அழகோ அழகு. நிறையத் தித்திப்புப் போட்டிருக்கீங்க தானே! அதை மட்டும் அப்படியே எடுத்துக்கறேன். ஊசிக்குறிப்பு, இணைப்பு எல்லாம் தேடித்தேடிப் போட்டிருப்பது நல்லா இருக்கு. நல்ல ரசனை உங்களுக்கு. (போனால் போகுதுனு சொன்னேன்) இஃகி,இஃகி,இஃகி,இஃகி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      //ஆனால் மைதா முறுக்கு வெள்ளையாக வரவேண்டாமோ? ஏன் இப்படிக் கறுப்பாக்கி விட்டீர்கள்?//
      அதுதான் எனக்கும் புரியவில்லை கீசாக்கா, முறுக்காக இருப்பதற்கு எந்த மிளகாயும் சேர்க்கவில்லை நான், ஏனையவற்றுக்கு சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்தேன், ஆனா எல்லாமே பிறவுணாகத்தான் இருக்கு.

      இத்தனைக்கும் நான் எப்பவும், புது எண்ணெய்தான் பாவிப்பேன், ஒரு தடவை பொரித்த எண்ணெயை திரும்ப பாவிப்பதில்லை எதுக்கும், ஊத்திவிடுவேன் வெளியே, நெருப்பும் ஸ்லோ ஃபயரில தான் வச்சேன், அது இங்கத்தைய மாவிலதான் ஏதோ கோளாறு.

      வெள்ளைப்பச்சை அரிசிகூட, நல்ல வெள்ளையாக இருக்கும் பார்க்க, ஆனா சமைச்சால் மங்கலாகிடும்.

      //அந்தப் பூஜாடியில் வைச்சிருக்கும் பூக்கள் நீங்கள் செய்ததுனு யாருமே சொல்ல மாட்டாங்க!//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)), மீ இப்படி முன்பும் சிலது செய்திருக்கிறேன், இப்போ கனகாலமாக என் கை வண்ணம் எதையும் காட்டாமல், படம் எடுத்துப் போடுவதும் எழுதுவதிலுமே காலம் ஓடுவதால் உங்களுக்கு தெரியவில்லை, பின்னர் கொஞ்சம் பழைய போஸ்ட் தேடித் தருகிறேன்.

      //ஆனால் உங்க லஞ்ச் எனக்கு வேண்டாம்//
      ஹா ஹா ஹா அது கிரிஸ்மஸ்லயே முடிஞ்சு போச்சு:)).. அதனாலதான் பல அதிவிசேட:) அசைவக் குறிப்புக்கள் இருந்தும் போட்டுக் காட்டுவதில்லை என கை வண்ணத்தை இங்கின:))..

      ///அந்தத் திரட்டுப் பால் பார்க்கவே வெள்ளை வெளேரென அழகோ அழகு.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நோஓஓஓஓஓ கீசாக்கா அது திரட்டுப்பால் அல்ல பால்கோவாவாக்கும்... இப்போ நல்ல கட்டியாகி இருக்கு, கட் பண்ணி எடுத்து ரீக்கு எடுக்கிறேன்:), ரீக்கு சீனி போடாமல்:).. முக்கால் லீட்டர் பாலுக்கு 150 கிராம் சீனி சேர்த்தேன் கீசாக்கா.

      //நல்ல ரசனை உங்களுக்கு. (போனால் போகுதுனு சொன்னேன்) //
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))

      நன்றி கீசாக்கா நன்றி.

      Delete
  33. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். மெதுவா வந்து பதில் சொல்லுங்க!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் கீசாக்கா, கும்மி, கோலாட்டம், இரவா பகலா எனத் தெரியாமல் நித்திரை, சாப்பாடு, படம் பார்ப்பு என விடுமுறை ஓடி விட்டது, வரும் திங்கள் எல்லாம் ஆரம்பம் கர்ர்ர்ர்ர்ர்:)).

      ஆனா விடுமுறையில் நிறையத் தையல் வேலைகள், கபேர்ட் அடுக்கோணும், கிச்சினில் சிலது கழிச்சு அடுக்கோணும் இப்படி பெரிய லிஸ்ட் போட்டு வச்சேன், கால்வாசிதான் அதில் செய்தேன், ரெஸ்ட் எடுக்கோணும் எனத்தான் மனம் சொல்லியது.. அதனால போனால்போகுதென நல்ல ரெஸ்ட் எடுத்தாச்சு:).

      Delete
  34. புத்தாண்டு தினத்தில் அட்டகாசமாக ஒரு பதிவை அள்ளித் தெளித்து விட்டீர்கள். அருமை! அருமை! கோதுமைப்பூக்கள் அசத்துகின்றன. செராமிக்கில் பூ செய்யத் தெரியுமா உங்களுக்கு? உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ..
      //அட்டகாசமாக ஒரு பதிவை அள்ளித் தெளித்து விட்டீர்கள். அருமை! அருமை!//
      நன்றி நன்றி.

      //செராமிக்கில் பூ செய்யத் தெரியுமா உங்களுக்கு?//
      இதுவரை செய்ததில்லை, எங்காவது பார்த்தால் செய்திடுவேனாக்கும்:))

      மிக்க நன்றிகள் பானுமதி அக்கா.

      Delete
  35. அந்த குதிரையும் பெண்ணும் போராங்க :) பெண்ணின் ஷூ எதிர்புறம் நோக்கியிருக்கு ஊக்கு :) அதான் ஊசி குறிப்பெல்லாம் சூப்பர் முருகனுக்கு கூட காரத்தை சேர்த்து கருக்கி வச்சிருக்கீங்க .மை தா முறுக்குன்னா அது வெளேர்னு இருக்கணும் .
    அனைத்தும் அருமை .அந்த கோதுமை பூ செம கிரியேட்டிவிட்டி 

    ReplyDelete
    Replies
    1. சொல்ல முடியல்ல அஞ்சு, கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கோ.. வருவதைப் போலவும் இருக்கும்.

      //மை தா முறுக்குன்னா அது வெளேர்னு இருக்கணும் //

      நீங்க ஒருதடவை ரெஸ்கோவில் பிளேன் ஃபிளவர் வாங்கி செய்து பாருங்கோ அஞ்சு, கலர் எப்படி வருகிறதென..

      மிக்க நன்றிகள் அஞ்சு. நீங்க கொஞ்ச நாட்கள் நல்லா ரெஸ்ட் பண்ணுங்கோ.. நீங்க ரெஸ்ட் பண்ண ஆரம்பிக்கும்போது நான் வேர்க் பண்ண ஆரம்பிப்பேன் ஹா ஹா ஹா..

      Delete
  36. புத்தாண்டில் நல்லதொரு ஆரம்பம்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பகிர்ந்து இருக்கும் படங்கள் நன்று. உங்கள் கைவண்ணத்தில் இனிப்புகளும் தின்பண்டங்களும் மிக நன்று. பார்த்து ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ மிக்க நன்றிகள்.

      Delete
  37. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்...அதிரா

    பால்கோவா..வாவ்

    அதிராவின் கை வண்ணத்தில் மை..தா:) முறுக்கு வகைகள்:))...ஆஹா

    கோதுமை மாவில் பூ வடிவங்கள் எல்லாம் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ மிக்க நன்றிகள்.

      Delete
  38. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் & பொங்கல் வாழ்த்துக்கள் அதீஸ்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இமா வாங்கோ .. மிக்க நன்றி, மகிழ்ச்சி..

      Delete
  39. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    கைவண்ணங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மாதேவி வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.