நல்வரவு_()_


Wednesday 5 February 2020

 பூண்டு/உள்ளி சோஸ் கத்தரிக்காய்/ Aubergine with Garlic Sauce

இம்முறை அதிரா பக்கம் சமையல் வாரம் என அறிவிக்கப் படுகிறது:).. சிவாஜி வாரம், கமல் வாரம், ரஜனி வாரம் எண்டெல்லாம் படம் போட்டால் பேசாமல் மகிழ்ச்சியாக ரசிச்சுப் பார்க்கிறீங்க:), அப்போ அதிராவின் சமையல் வாரத்தையும் ரசியுங்கோ.. இவ்வாரம் பல பல குறிப்புக்கள் வெளி வர உள்ளன:)...
னக்குப் பாருங்கோ ஓவரா அலட்டுவது பிடிக்காது:), அதனால நேரத்தை வீணடிக்காமல் ஸ்ரெயிட்டா ரெசிப்பி சொல்லித்தரப் போறேன்ன்ன்.. யாம் இல்லை இல்லை யான்:) பெற்ற இன்பம் பெறுக நீங்கள்:))...

ஓ.. கேட்க மறந்திட்டனே எல்லோரும் நலம்தானே?.. மீயும் நலம்தேன்:). ஜனவரி முதலாம்திகதி அன்று முழிச்சிருந்து அடிச்சுப் பிடிச்சுப் போஸ்ட் போட்டேன் அத்தோடு ஜனவரி போயிந்தி:)) ஹா ஹா ஹா...

ழுத நிறைய இருக்குது, ஆனா இப்போதைக்கு இதையும் சொல்லோணும் நான், அப்போதானே அதிராவின் கை வண்ணமும் உங்களுக்குப் புரியும்:)..

ரி இப்போ நான் சொல்லப்போவது ஒரு சைனீஸ் ஸ்டைல் சேர்ந்த ரெசிப்பி... இது எங்கட அம்மம்மாவின் அம்மா நல்லாச் செய்வாவாம் பின்பு அதைப்பார்த்து அம்மம்மா நல்ல சுசியாக:) ஸ்டைல் ஸ்டைலாக செய்வா. அதைப் பார்த்துத்தான் அதிரா இப்போ செய்கிறேன்.. அப்பூடி எண்டெல்லாம் நான் எப்போ சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:)..

னக்கு சமையல் சனல்கள் பார்ப்பது பிடிக்கும், அப்படி எல்லா நாட்டுச் சமையலும் அப்பப்ப பார்ப்பேன், பார்க்கும்போது இப்படி பிடிச்சுக் கொண்டால், அதை அதிகமாக ஆராட்சி பண்ணி பின்பு என் சொந்த ஸ்டைலில் செய்வேன், நல்லதாக வருபவை மட்டும் இப்பூடிப் பப்ளிக்கில் வெளியாகும்:)).. அதில் ஒன்றுதான் இது, மிக நன்றாக இருந்தது....

கத்தரிக்காய் - பெரியதில் ஒன்று [350-400 கிராம்ஸ்]
உள்ளி - 4,5 பற்கள்.
சோயா சோஸ் - 1 மேசைக்கரண்டி
கோன் ஃபிளவர் - 3 மேசைக்கரண்டி
சில்லி ஃபிளேக்ஸ் - 2 மே.க[உங்கள் விருப்பம்]
கறிப்பவுடர் - 1 மே.கர
சீனி- ஒரு தே.க
வெஜிடபிள்/சன் ஃபிளவர் ஒயில்
வறுத்து உடைத்த கச்சான்[தூளாக்கினால் நல்லது] - 1 மே.க.

முதலில் கத்தரிக்காயைக் கழுவி த் துடைத்துப்போட்டு, இப்படி அல்லது வட்டமாக பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்து, அதனுள் ஒரு மேசைக்கரண்டி கோன் ஃபிளவரும் உப்பும், கறிப்பவுடரும் சேர்த்துப் பிரட்ட வேணும். 

அப்படிப் பிரட்டியதை,
1. ஸ்ரே ஃபிறையாக மெதுவாக வாட்டிப்பொரித்து எடுக்கலாம்
2. டீப் ஃபிறை பண்ணி எடுக்கலாம்
3. அவணில் அல்லது கிறிலில் வைத்து எடுக்கலாம்[உங்கள் சொயிஸ்:)]
நான் நன்கு பொரித்தே எடுத்தேன்... 

உள்ளியை இப்படி குட்டியாக ஷொப் பண்ணி எடுக்கவும், ஒரு கலருக்காக என்னிடம் இருந்தமையால் ஒரு சுவீட் பெப்பரும் சேர்க்கிறேன்.. இதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் பிளீஸ்ஸ்:).

எண்ணெய் விட்டு , வெட்டிய உள்ளியை வதக்கவும், 2ம் படம் சில்லி ஃபிளேக்ஸ் +கச்சான் [peanuts] சேர்த்து வதக்கவும், 3ம் படம் சோயா சோஸ் ஐ ஊத்தி, என் சுவீட் பெப்பரை சேர்த்திருக்கிறேன்.. கடசிப்படம், மிகுதிக் கோன் ஃபிளவரை 2,3 மேசைக்கரண்டி தண்ணி விட்டுக் கரைத்து இதனுள் சேர்க்கவும்.. நெருப்பைக் குறைச்சே வச்சிருக்கோணும்.

முக்கிய குறிப்பு:-
 சோயா சோஸ் இல் உப்பு உள்ளது அதனால, உப்பை முடிவில் செக் பண்ணி, தேவைப்பட்டால் போடவும்.
இப்பொழுது பொரித்த கத்தரிக்காய்களைக் கொட்டிப் பிரட்டி இறக்கவும்...

ஆவ்வ்வ் அதிராவின் கத்தரிக்காய் காளிக் சோஸ் ரெடி:)

இன்று ஒரு தகவல்:
இந்தக் காலத்தில் குறிப்பா 15 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும், அயன், ஹீமோகுளோபின் குறைபாடு என்பது பொதுவான ஒன்றாகி விட்டது. பெண் பிள்ளைகள் எப்பவும் சோர்வாக இருந்தால் ஒரு தடவை பிளட் ரெஸ்ட் செய்வது நல்லது. இதற்கு உணவு முறைகள், மருந்துகள் என பலவிதம் உண்டு என்பது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும், ஆனா இது தெரியுமோ தெரியாது.. இரும்புச் சட்டியில் சமைச்சுச் சாப்பிடுவோருக்கு அயன் குறைபாடு வராது.

அதிலும் காஸ்ட் அயன்[Cast Iron Wok] எனக் கிடைக்கிறது, இதில் சமைச்சுச் சாப்பிட்டால் அயன் லெவல் அதிகரிக்கும். ஆனா அயன் குறைவானவர்களுக்கு மட்டும் இதில் சமைச்சுக் குடுப்பது நல்லது, அல்லது எப்பவும் இதைப் பயன் படுத்தாமல் கிழமையில் 2 நாட்கள் அப்படிப் பயன்படுத்தலாம்.

அமேசனில் கிடைக்கிறது நான் வாங்கினேன்,  பாருங்கோ என் மண்சட்டியின் சைஸ்சிலேயே இருக்கு.. சமைக்க ஆசையாக இருக்கு ஆனா என்ன ஒரு பிரச்சனை, சரியான பாரமாக இருக்கிறது. 

ஊசி இணைப்பு

ஊசிக்குறிப்பு

 
💢💢💢💢💢💢

109 comments :

  1. //அப்படி எல்லா நாட்டுச் சமையலும் அப்பப்ப பார்ப்பேன், பார்க்கும்போது இப்படி பிடிச்சுக் கொண்டால், அதை அதிகமாக ஆராட்சி பண்ணி பின்பு என் சொந்த ஸ்டைலில் செய்வேன்,//
    ஓ மை கடவுளர்களே எங்க எல்லாரையும் காப்பாத்துங்க :) அந்த ஸ்கொட்லாந்து வீடு கார் நகைப்பெட்டி எல்லாத்தையும் உங்க எல்லாருக்கும் பிரிச்சு தரேன் 

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ... போஸ்ட் போட்டு நீண்ட நாளாகிட்டுதா... கொமெண்ட்ஸ் எப்பூடிப் போடுவது பதில் எப்பூடிப் போடுவதென்றே தெரியாமல் இருக்கே:))..

      //அந்த ஸ்கொட்லாந்து வீடு கார் நகைப்பெட்டி எல்லாத்தையும் உங்க எல்லாருக்கும் பிரிச்சு தரேன் ///

      ஆஆஆஆ தெரியாமல் போஸ்ட் போட்டிட்டமோ:)) இருந்தமாதிரியே ஜாலியா குல்ட்டுக்குள்ள இருந்து ஐபாட்டில யூ ரியூப் பார்த்திருக்கலாம்.. சூப்பமரியோ விளையாடியிருக்கலாம்... இதென்ன இது புயு வம்பில மாட்டிட்டேன்ன்ன்:)..

      Delete
    2. க்கும் எனக்கும் கைவிரலெல்லாம் நடுங்கிங் :) என்ன பண்றது எதோ ஒரு புள்ளியில் ஆரம்பிப்போம் 

      Delete
  2. கர்ர்ர்ர் சூப்பர் பாட்டை போட்டு என்னை டைவர்ட் பண்ண பார்க்கறீங்க . கேட்டுட்டு வந்து கத்திரியை வாட்டரேன் :)
    சித்துவும் தாசேட்டனும் என்னமா உருகும் குழையும் குரல்கள்                !!!!!!!!!!!!!!!!!!!!!1

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆ அஞ்சுவுக்கும் பிடிச்சதோ அவ்வ்வ்வ்வ்வ் நல்லா இருக்குது... நன்றி நன்றி... ஸ்ரீராம் இப்பூடிப் பாட்டெல்லாம் போட மாட்டார்ர்:)).. ஹையோ விடியமுந்திக் கிழிச்சு குப்பை லொறியில போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))..

      Delete
  3. ஆஅ !! கத்திரிக்காயை பார்த்தா நேத்து பெங்களூர்காரம்மா செஞ்ச அடைச்ச பைங்கன் கண்ணுமுன்னாடி வருது அவ்வ்வ்வ் .அதை சாப்பிட்டு நேத்து நான் அமெரிக்காகாரி மாதிரி ஆகிட்டேன் :) என்ன சொன்னாலும் எங்க தென்னிந்திய சமையலுக்கு ஈடில்லை 

    ReplyDelete
    Replies
    1. என்னாது பைத்தன் பாஆஆஆஆஆஆ...பு எனப் படிச்சுப் பதறிட்டேன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. புதுசு புதுசா இப்பூடி அப்டேட் பண்ணோனும் அஞ்சு.. செய்து பாருங்கோ.. மகளுக்குப் பிடிக்கும்.

      Delete
  4. ஸ்ரே ஃபிறையாக /// stir fry

    ஷொப் // chop

    அயன் ??????????? surya movie haa haa


    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆ இன்னும் தொழிலை மறக்கவேயில்லை:)) நீண்ட நாளானதால மறந்திருப்பா என நினைச்சேன்.. சே..சே.. அப்போ இம்மாதச் சம்பளத்தைக் கட் பண்ண முடியாது:))...

      கர்ர்ர்ர்ர்ர் :) அயன் உங்களுக்கு சூரியா தெரியுறார்ர்.. இப்போ ட்றுத் படிச்சிட்டார்ர் போஸ்ட்:) அவரின் கண்ணுக்கு நயன் எனத் தெரிஞ்சிருக்கும் ஹா ஹா ஹா:))

      Delete
  5. இந்த சைனீஸ் சமையலை செய்ததால் நீங்கள் இனிமேல் சீனப்புகழ் அதிரா என்றழைக்கப்படுவீர்கள் :)
    பாருங்க உங்க பதிவை பார்த்துட்டு சீனாவில் இருந்து அழைப்பு வென்றபோது ரெடியா ஏறுங்க பிளைட் ஏற :) நிச்சயம் நாங்க  எல்லாரும் உங்களை  send off செய்ய வருவோம் :)))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. ///சீனப்புகழ் அதிரா என்றழைக்கப்படுவீர்கள் :)//
      எல்லோரும் மாஸ்க்குடன் திரியும் இந்த நேரத்தில போயோ இப்பட்டம் தருவது கர்:)).. என்னை ஹவுஸ் அரஸ்ட் ஆக்கிடப்போகினம்:))..

      //நிச்சயம் நாங்க எல்லாரும் உங்களை send off செய்ய வருவோம்///
      யூ மீன் பரலோகம்?:)) ஹா ஹா ஹா கர்ர்ர்:))

      Delete
  6. உண்மையில் இந்த சோயா ஸாஸ் வருத்து பொரித்தல் இதெல்லாம் பார்த்தா கலவரமாகுது :))) அந்த மென்மையான கத்திரிக்காயை வெட்டி பொரிச்சு அதுமேல சாஸை கொட்டி பாவம் :) எப்படி கறுப்பாகியிருக்கு கத்திரிக்கா :) சரி சரி சீனத்து ரெசிபியை தந்தமைக்கு நன்றீஸ் :) இதை நெல்லைத்தமிழனும் ஸ்ரீராமும் செய்யலைன்னா சீனாவுக்கு உங்களுடன் பிளைட் ஏற்றி அனுப்பப்படுவார்கள் :))

    ReplyDelete
    Replies
    1. கத்தரிக்காய் எவ்ளோ வைரமா தளதளவென மின்னுது பாருங்கோ.. அடுத்து வர இருப்பது வியட்னாம் ரெஜிப்பீஈஈஈஈஈ:))..

      //இதை நெல்லைத்தமிழனும் ஸ்ரீராமும் செய்யலைன்னா சீனாவுக்கு உங்களுடன் பிளைட் ஏற்றி அனுப்பப்படுவார்கள் :))//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மூவர் சேர்ந்து போகக்கூடாதாம்:) அதனால அவர்கள் ரெண்டுபேரையும் அனுப்புங்கோ உங்கட செலவில:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. சீனாவா? வேணவே வேணாம்!

      Delete
    3. பயப்பூடக் கூடா ஸ்ரீராம்:).. இப்போ இந்தியாவுகும் வந்திட்டார்ராமே கொரொனா அங்கிள்:)) ஹா ஹா ஹா..

      Delete
    4. ஏஞ்சலின் இதனைச் செய்து பார்க்கப்போகிறேன். ஆனா கொஞ்சம் மாறுதல்களோட. உள்ளி, சோயா சாஸ், கறிப்பவுடர், கார்ன் ஃப்ளவர் மற்றும் சீனி உபயோகிக்காம.

      ஆனா அதுக்கு நாங்க கத்தரி கரேமது என்றல்லவா சொல்லுவோம். அதுதான் வாரம் ஒரு தடவை செய்யறோமே.

      Delete
    5. ஹாஅ ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு இதை இப்போ ஏஞ்சலினுக்குச் சொல்றார்:)... அஞ்சுவுக்கு அதிராவைக் கண்டாலே பயமாக்கும்:)...

      உங்கள் எல்லோருக்கும் இனி ஒருக்கால் ஸ்ஸ்ஸ்ஸ்னேஏஏஏஏஏக்க்க் யூப் செய்து போட்டால்தான் சரிவரும்:)...
      வெளியே போகிறோம் மிகுதிக்கு பின்பு வாறேன் :)

      Delete
  7. அந்த இரும்பு சட்டியில் வேறென்னா சமைக்கப்போறீங்க :))))))))))) இல்லை ஊருக்கு ட்ரிப் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போலாம்னுதான் :)))))))) 

    ReplyDelete
    Replies
    1. //அந்த இரும்பு சட்டியில் வேறென்னா சமைக்கப்போறீங்க//

      ஆரம்பமே இப்பத்தானே:)) அதுதான் சமையல் வாரம் என அறிவிச்சாச்செல்லோ:)) ஹா ஹா ஹா ஓடாதிங்கோ.. ஏதோ எப்பூடியாவது போஸ்ட் போடோணும் எனப் போட்டு விட்டேனே:)).. நீங்க எப்போ தூசு தட்டுறீங்க அஞ்சு?:)) எங்களுக்கு ஹொலிடே விட்டுவிட்டது தெரியுமோ ஓ லலலா:))

      Delete
    2. //எங்களுக்கு ஹொலிடே விட்டுவிட்டது தெரியுமோ ஓ லலலா:))// - நாங்க வெளிநாட்டு பயணத்துக்குத் தயாராகிட்டோம். ஆஹா... தப்பிச்சோம்டா சாமீ

      Delete
    3. //நாங்க வெளிநாட்டு பயணத்துக்குத் தயாராகிட்டோம். ஆஹா... தப்பிச்சோம்டா சாமீ///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ச்சும்மா ச்சும்மா கற்பனை பண்ணி ஜந்தோசப்படக்கூடாது:)).. நான் இப்போதைக்குக் ஹொலிடே எடுக்க மாட்டனாக்கும்:)) ஹொலிடேயில் சமைச்சதை எல்லாம் இங்கு போட்டு உங்கள் எல்லோரையும் மருந்தடிச்ச பூச்சி மாதிரி:) மயங்கி விழப் பண்ணாமல் ஓயமாட்டேனாக்கும்:))..

      நேயர் விருப்பச் சமையலும் இடம் பெற உள்ளது என்றால் நம்பவோ போறீங்க ஹா ஹா ஹா.. விரைவில் வரும்:))

      Delete
  8. ஊசி குறிப்பு இணைப்பு எல்லாம் அருமை :)
    ஆஅஆவ் !!!  ///aubergine-with-garlic-sauce// ஆனா பூண்டு சாஸை காணோம் ????????????????

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் அதிராவிடம் கிளாஸ் எடுக்கோணும் என்பது:)) கேட்டால்தானே சொல்றதை:))..

      பூண்டை வதக்கி அதனுள் சில்லி ஃபிளேக்ஸ், சோயா சோஸ், கோன் பிளவர் கரைச்சு சேர்த்தால் அதுதான் கார்லிக் சோஸ்...

      நன்றி அஞ்சு.

      Delete
  9. படமே ஆசையை தூண்டுகிறது பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆ கில்லர்ஜி நித்திரை கொள்ளாமல் தமனாக்கா மூவியை நெட்பிளிக்ஸ் ல பார்த்துக் கொண்டிருந்தமையால:) என் போஸ்ட்டுக்கு உடனே வந்திட்டார்ர்.. எனக்குப் புரியுது அஞ்சுவுக்குப் புரியாதெல்லோ:) அதுதான் விளக்கம் ஜொன்னேனாக்கும்:))

      வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. நன்றி.

      Delete
    2. //படமே ஆசையை தூண்டுகிறது பார்க்கலாம்.//பார்க்கலாம்னு மட்டுமே சொல்லிருக்கார் :) செய்து பார்க்கிறேன்னு சொல்லலியே ஏ ஏஏஏஏ 

      Delete
    3. ///பார்க்கலாம்னு மட்டுமே சொல்லிருக்கார் :) செய்து பார்க்கிறேன்னு சொல்லலியே ஏ ஏஏஏஏ//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தமிழ் தெரியாதோரை எல்லாம் வச்சுக்கொண்டு மீ படும் பாடிருக்கே:)) அது வயப்புயர.. என்பதைப்போல ஜொன்னாரு ஆக்கும் க்கும் க்கும்:))

      Delete
  10. //எல்லா மனிதர்களையும் திருப்திப்படுத்த /// 
    மிகவும் உண்மை .
    做得好 :))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் அச்சச்சோ என்ன பிள்ள சைனீஸ்ல பேசத் தொடங்கிட்டா:)) ஹையோ கொரொனாஆஆஆஆஆஆஆஆஆஆ:)) ஹா ஹா ஹா...

      Delete
  11. ஆஹா ஒரு மாதம் சமையல் குறிப்பா பார்த்து பழகி ஒரு ரிசிப்பி போட்டுடுட்டீங்க குட்

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ ஒளிச்சிருந்து படிச்ச ட்றுத்தை வெளியே வரப்பண்ணிட்டேன்ன் ஹா ஹா ஹா வாங்கோ ட்றுத் வாங்கோ.. என்னாது ஒரு மாதமாகப் பழகினதோ கர்ர்ர்ர்:)).. இது அதுக்கும் மேல எனச் சொல்ல வந்தேன்:). நன்றி ட்றுத்.

      Delete
  12. கடவுளே, நல்ல கத்திரிக்காயை பைங்கன் பர்த்தா, இல்லைனா துவையல் இல்லைனா கொத்சு எனப் பண்ணிச் சாப்பிடாமல் இப்படிக் கறுப்பாக்கிட்டீங்களே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த மாதிரி சாஸ் எல்லாம் சேர்த்து சைனீஸ் ப்ரைட் ரைஸ் தானே பண்ணுவோம். இப்படிக் காயுமா? அது சரி, இதை எதோடு சேர்த்துச் சாப்பிடணும்? அப்படியேவா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ...

      //நல்ல கத்திரிக்காயை பைங்கன் பர்த்தா, இல்லைனா துவையல் இல்லைனா கொத்சு எனப் பண்ணிச் சாப்பிடாமல்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வட்டத்தை விட்டு வெளியே வரவே மாட்டேன் என்கிறீங்களே அஞ்சுவைப்போல ஹா ஹா ஹா...
      அது பேப்பிள் கத்தரிக்காய்தானே கீசாக்கா கறுப்பாகத்தன் வரும் சும்மாவே பொரிச்சால்.

      //இந்த மாதிரி சாஸ் எல்லாம் சேர்த்து சைனீஸ் ப்ரைட் ரைஸ் தானே பண்ணுவோம். //

      உலகத்தில என்னமோ எல்லாம் இருக்குது கீசாக்கா.. நாங்கள் எங்களுக்குத் தெரிஞ்சதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம்ம். அதிராவை இனிக் கொண்டினியூ பண்ணுங்கோ:)).. மீ அடுத்து வியட்னாம் பயணம்:))

      Delete
    2. //இதை எதோடு சேர்த்துச் சாப்பிடணும்?//
      சோறு, இடியப்பம், புட்டு, ரொட்டி...

      Delete
    3. அஆவ் !!! கீதாக்கா ..இந்த நலல வெளேர்னு இருக்கிறதை தீச்சு போடறதில் இந்த சமையல் நர்த்தகி :) கிரேட்டோ க்ரேட் :) இருங்க உங்க பார்வைக்கு ஒரு சமையல் ரெசிபியை கொண்டுவரேன்ன்ன்ன்ன்ன் 

      Delete
    4. [im]https://1.bp.blogspot.com/-kpwmHCEtB6s/WOQY-PSFpvI/AAAAAAAANPQ/FCGBo9tJgosVEmhfSPIt7oSlJ6m9XNu6gCEw/s400/IM1.jpg[/im]

      http://gokisha.blogspot.com/2017/04/blog-post_5.html

      Delete
    5. //சமையல் தாரகை அதிரா:)Wednesday, February 05, 2020 7:34:00 pm
      //இதை எதோடு சேர்த்துச் சாப்பிடணும்?//
      சோறு, இடியப்பம், புட்டு, ரொட்டி...//

      oh God save meeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
      என்னா ஒரு காம்பொ :)))

      Delete
    6. எனக்கொரு டவுட் இந்த சமையல் வித்தாகி :) டைரக்டர் பாலாவின் அஜிஸ்டாண்டா இருப்பாய்ங்களோ :)))

      Delete
    7. அதை ஏன் கேட்கறீங்க அஞ்சு! அந்தக் கண்ணராவியை நானும் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))

      Delete
    8. //AngelWednesday, February 05, 2020 8:44:00 pm
      அஆவ் !!! கீதாக்கா ..இந்த நலல வெளேர்னு இருக்கிறதை தீச்சு போடறதில் இந்த சமையல் நர்த்தகி :)///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பூடி ஓடி ஓடித்தேடி லிங் எல்லாம் போட்டு அதிராவை அடிச்சுச் சிரிப்பதில் காட்டும் ஆர்வத்தைப் போஸ்ட் எழுதுவதில் காட்டியிருந்தால் இப்போ டேவடைக் கிச்சினைத்தூசு தட்டியிருக்கலாமெல்லோ:))..

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது எங்களுக்கு வாழைத்தண்டு கைக்கு கிடைக்கும்போதே கறுப்பாகி எல்லோ கிடைக்குது:))..

      அல்லோ மிஸ்டர் உங்களுக்கு எங்கே இந்தக் கத்தரி கார்ளிக் சோஸ் இன் அருமை புரியப்போகுது.. வெள்ளைச்சோறு புட்டு இடியப்பம்.. அனைத்துக்கும் சூப்பராக இருக்கும் தெரியுமோ.

      Delete
    9. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீசாக்கா.. வானத்தில் உயர்ந்திருக்கும் ஒரு “சமையல்தாரகையை”[அது நாந்தேன்:)].. தரை இறக்க அஞ்சு துடியாய்த் துடிக்கிறா அது புரியாமல் நீங்களும் கோரஸ் பாடலாமோ... கர்ர் மாமாவிடம் போட்டுக் குடுப்பேன் எந்ந்நேரமும் கீசாக்கா நெட் லயே இருக்கிறா என்று ஹா ஹா ஹா:))...

      Delete
    10. //டைரக்டர் பாலாவின் அஜிஸ்டாண்டா இருப்பாய்ங்களோ :)))// - இதுக்கு அர்த்தம்லாம் எங்க அதிராவுக்குப் புரியப்போகுது... ஹா ஹா.

      நீங்க அதிராவின் செய்முறையைக் குறை சொன்னதுல அவங்களுக்கு ப்ரஷர் எகிறிப்போயிடுச்சு. அதுனால மிஸ்டர் யாரு..மிஸஸ் யாருன்னு தெரியாம 'அல்லோ மிஸ்டர்' என்று கோபத்துல சொல்றாங்க. ஹா ஹா

      Delete
    11. //இதுக்கு அர்த்தம்லாம் எங்க அதிராவுக்குப் புரியப்போகுது... ஹா ஹா.//

      ஹா ஹா ஹா நெ.தமிழன்.. சத்தியமாகப் புரியவில்லை:)) தேடிப்பார்க்கவும் இல்லை விட்டுப்புட்டேன் போனாபோகுதென:)).. ஆனா பாலுமகேந்திராவின் மகன் தானே அவர்.. அது தெரியுமாக்கும்:))..

      //'அல்லோ மிஸ்டர்' என்று கோபத்துல சொல்றாங்க. ஹா ஹா/// சே..சே.. கோபம் வந்தால் தேம்ஸ்ல எல்லோ தள்ளியிருப்பேனெல்லோ:)) ஹா ஹா ஹா..

      Delete
    12. டைரக்டர் பாலாவுக்கு ஒரு படத்துல ஆதிவாசி கேரக்டர்ல கதாநாயகி நடிக்கணும்னா, நல்ல வடிவா செக்கச் செவேல்னு பம்பாய் நடிகையைக் கூட்டிட்டுவந்து கன்னங்கரேன்னு மேக்கப் போட்டு படம் எடுப்பார். மாநிறமான அல்லது கருப்பான நடிகைகளை திறமை இருந்தாலும் கூட்டிவந்து நடிக்க வைக்க மாட்டார்.

      இது டைரக்டர் பாலாவுக்கே உரித்தான கெக்கே பிக்கேத் தனம்.

      அவர் டைரக்டர் பாலுமகேந்திராவின் மகன் மாதிரி என்று அவரே சொல்லிக்கொள்வார்

      Delete
  13. ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு எல்லாமும் நல்லா இருக்கு வழக்கம் போல. இந்த இரும்புப் பாத்திரங்களெல்லாம் நாங்க வருஷக் கணக்காப் பயன்படுத்திட்டு வரோம். நீங்க என்னமோ புதுசா இப்போத் தான் வந்திருக்காப்போல பில்ட் அப் எல்லாம் கொடுக்கறீங்க! நம்மோட பாரம்பரியத்தையே அமேசானுக்குக் கடத்திட்டாங்க. காசு பார்க்கிறாங்க.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஊரில் இரும்புப்பாத்திரம் பாவிப்போம், நாங்கள் ஊரில் தொதல் கிண்டியதும் இரும்புச் சட்டியிலதான் ஆனா கீசாக்கா இது இரும்பிலும் ஒரு ஸ்பெஷல் வகை காஸ்ட் அயன் எனச் சொல்லப்படுது.. இதில் சமைச்சுச் சாப்பிட்டால் உடலில் அயன் அளவு ஏறிக்கொண்டு வரும், ஆனா அயன் நோர்மலாக இருப்போர் அடிக்கடி இதில் சமைச்சுச் சாப்பிட்டால் அயன் லெவல் கூடி விடுமாம்.

      இப்போ அமேசனில மண்சட்டியில இருந்து கோல்ட் பிரெஸ் நல்லெண்ணெய்கூடக் கிடைகுதே. ஆனா ஒரு நன்மை, அதனால எந்த நாட்டில் இருந்தும் எல்லாம் வாங்க முடியுது, இல்லை எனில் எங்கே போவது.. விலை அதிகம் தான் அமேசன் பொருட்கள்.

      நலம்தானே கீசாக்கா... ஏதோ பார்த்துப் பேசிக் கனகாலமானதைப்போல இருக்கு.

      மிக்க நன்றி.

      Delete
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்தக் காஸ்ட் அயர்ன் இரும்புப் பாத்திரங்களைத் தான் நாங்க சீனாச்சட்டி என்னும் பெயரில் புழங்கறோம். என்னிடம் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னதிலே இருந்து பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇசு வரை இருக்கு. :)))))) இப்போக் கூடப்பெண் வீட்டில் காஸ்ட் அயன் தோசைக்கல்லில் தான் தோசை வார்த்துத் தக்காளி+கொத்துமல்லிச் சட்னியோடு சாப்பிட்டுட்டு வந்திருக்கேன்

      Delete
    3. அன்பு அதிரா, கத்திரிக்காய் என்றதும் ஓடி வந்துவிட்டேன். உள்ளி என்றால்
      வெங்காயம் இல்லையோ.
      நான் கத்திரிக்காய் வெங்காயம்,பூண்டு சேர்த்து,
      ஊறுகாய் செய்து விடுவேன்.
      நல்லெண்ணேய் நிறைய சேத்தால் நிறைய நாள்
      இருக்கும்.
      உங்க ரெசிப்பி நன்றாக இருக்கிறது.
      இங்கே இருக்கும் தோசைக்கல்லும் இரும்பில் செய்தது தான்,
      மருமகளுக்கு அயர்ன் டெஃபிஷியன்சி.
      எல்லாம் அமேஸானார் கருணையில் கிடைக்கிறது

      Delete
    4. ஓ கீசாக்கா அப்படி எனில் நல்லதுதானே.. உங்கள் குடும்பத்தில் அயன் குறைபாடு ஆருக்கும் வராது, ஆனா கூடிடாமலும் பார்த்துக் கொள்ளோணும்.

      Delete
    5. ஆவ்வ்வ்வ்வ்வ் வல்லிம்மா வாங்கோ வாங்கோ வலது காலை எடுத்து வச்சு வாங்கோ... முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு மிக்க மகிழ்ச்சி...

      அதேதோ உள்ளுணர்வு போலும், இப்போ கொஞ்ச நாட்களாக/கிழமையாக யோசிச்சுக் கொண்டிருக்கிறேன்.. வல்லிம்மாவுக்கும் புளொக் இருக்குது என அஞ்சு சொல்லியிருக்கிறா முன்பு, ஆனா ஒருதடவைகூட வந்து பார்த்ததில்லை, பெயர்கூட நினைவில்லை, அதனால வரோணும் கொமெண்ட்ஸ் போடோணும் என.. அதுக்குள் நீங்கள் முந்தி விட்டீங்கள் நன்றி நன்றி.

      //நான் கத்திரிக்காய் வெங்காயம்,பூண்டு சேர்த்து,
      ஊறுகாய் செய்து விடுவேன்.
      நல்லெண்ணேய் நிறைய சேத்தால் நிறைய நாள்
      இருக்கும்.//

      ஓ உங்கட பக்கம் ரெசிப்பி இருந்தால் பார்க்கிறேன். முன்பு அம்மா ஒரு அச்சாறுபோல கத்தரிக்காய் கறி செய்வா வினிகர் சேர்த்து.. அதை இப்போ மறந்து போனோம், அம்மாவிடம் கேட்டேன் அவவும் சரியாக நினைவுக்கு வருகுதில்லை என்றா.. அதுவும் ஒரு மிக சுவையான ரெசிப்பி....

      ஓ பொதுவாக பெண்கள் இரும்புச் சட்டியில் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இந்த காஸ்ட் அயன் வாங்கியதிலிருந்து எனக்கும் பலன் தெரிகிறது:).

      மிக்க நன்றி வல்லிமா.

      Delete
  14. எவ்வளவு இளமையான யேசுதாஸ் (யூடியூப் படத்தில்)  பாடல் இனிமையான குரல்களில் இனிமையான பாடல்.  இளையராஜாவின் இன்னிசை.  

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. மிக்க நன்றி.

      என்னை நானே உந்தி தள்ளிப் போஸ்ட் போட்டேன், ஆனா பின்பு கொமெண்ட்ஸ் க்குப் பதில் போட அலுப்பாக இருந்துவிட்டேன் என்றால் பாருங்கோவன்..

      Delete
  15. ஏனோ ஜனவரியில் ஒரே போஸ்ட்!  அலுப்பைத் துறக்கவும்.  ப்லாக்கைத் திறக்கவும்! எழுத்து வானில் சிறகடித்துப் பறக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான் நன்றி.... நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.. பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது, ஏனெனில் ஜன.., 1ம் திகதி போஸ்ட் போடும்போது நினைச்சேன்.. இவ்வருடம் வாரம் 2 போஸ்ட்டுகளாவது போடோணும் என்று:))

      Delete
  16. அதிகாலை எழுந்திருப்பது ஒரு சுகம்.   அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.  நான் சுமார் நான்கு மணிக்கு எழுந்து விடுவேன்.   அதிகாலையை ரசிப்பது எப்போதுமே ஆனந்தம் எனக்கு.  அந்நேரத்தில் வெளியில் செல்லவோ, பயணமோ வாய்த்தால் ஆனந்தம் ஆனந்தமே...

    ReplyDelete
    Replies
    1. ஓ இது வடிவேல் அங்கிளின் மீம்ஸ் க்கான பதிலோ.. அதிகாலையில் எழுவது சுகம்தான் ஆனா வீட்டில உள்ள எல்லோரும் எழுந்தால்தானே அது சுகம்.. நாம் மட்டும் எழும்பினால்.... எப்படி?:)).. இங்கு குளிரும் என்பதால், விடுமுறை எனில் எழும்ப மனம் வராது...

      அதில் இன்னொன்று, இந்நாடுகளில் பொதுவாக இரவிரவாக முழிச்சிருப்பதில்தான் சுகம் எல்லா வீட்டிலும் வெள்ளி சனி எனில் 12,1 மணிவரை லைட் எரியும்.. ஆனால் காலை 10 மணிக்கு மேல்தான் எழும்புவார்கள்...

      Delete
  17. அப்பாடி...    கச்சான் என்ன என்று கேட்பதற்குள் கீழே அதற்கு ஆங்கில விளக்கம் கொடுத்து விட்டீர்கள். என்னிடம் எப்போதுமே சோயா சாஸ், கான்ப்ளவர் சில்லி பிளேக்ஸ் போன்றவை இருக்காதே... 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இந்தக் கச்சானை வறுத்தெடுத்துக்கொண்டு புதினம் பார்க்க வாறேன் எனப் பலதடவை பல இடங்களில் சொல்லியிருப்பேனே ஸ்ரீராம்:)..

      //என்னிடம் எப்போதுமே சோயா சாஸ், கான்ப்ளவர் சில்லி பிளேக்ஸ் போன்றவை இருக்காதே... //

      கொஞ்சமாக வாங்கலாம் ஸ்ரீராம், சூப் செய்யவும் பயன்படும்.

      Delete
  18. பூண்டை அழகாக நறுக்கியிருக்கிறீர்கள்.இறுதி ரிசல்ட்டும்படாம் பார்க்க நன்றாய் வந்திருக்கிறது.  தகவல் நன்றுதான்.  என் பாஸ் எப்பவுமே இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்.  மருந்துகொடுத்தாலும் இரண்டு நாட்களுக்குமேல் எந்த மருந்தும் எடுக்க மாட்டார்...   இந்தப் பொருள் வாங்கினாலும் உள்ளேதான் தூங்கும்!  என்னதான் செய்ய!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் தாளிப்பு  இனிமேல் இரும்பு கரண்டியில் என்று வைத்தாலே போதும். இரும்பு சத்து கிடைக்கும். அல்லது சீரியலில் வருவது போன்று அயர்ன் டேப்லெட்டை குழம்பில் போட்டு விடுங்கள். 

      Delete
    2. தாளிப்பு எப்பவுமே இரும்புக் கரண்டிதான் ஜேகே ஸார்... சமயங்களில் குழம்பு, பொரியல் எல்லாம் இரும்பு வாணலியில்தான் செய்வோம்!

      Delete
    3. ஸ்ரீராம் அயனுக்கு குளிசை சாப்பிடுவது என்பது மிக அலுப்பான விஷயமாக இருக்கும் அதனாலதான் நானும் இந்த காஸ்ட் அயனில் களம் இறங்கினேன்.. இப்போ வெற்றி கண்டு வருகிறேன்.. புதிதாக ஒரு காஸ்ட் அயன் அமேசனில் வாங்குங்கோ.. வாங்கும்போது உங்களிடம் இருக்கும் பழைய சட்டியில் ஒன்றை கண்ணை மூடிக்கொண்டு காபேஜ் ல போட்டுவிடுங்கோ.. எறியட்டோ எனக் கேட்டால் வேண்டாம் என்றுதான் பதில் கிடைக்கும்:)).. அப்போதுதான் புதுச்சட்டி பாவனைக்கு வரும்.

      பழையதில் அதன் இரும்பின் தன்மை குறைஞ்சு போக வாய்ப்பிருக்குது ஸ்ரீராம்[நான் நினைகிறேன்], அதனால புது வாங்குவது நல்ல பலன் கிடைக்கும்.

      நான் அறிஞ்சு, ஒரு தம்பதிகளில், மனைவிக்கு அயன் குறைபாடு என வந்ததால், இந்த காஸ்ட் அயன் சட்டி வாங்கி கணவன் மனைவி இருவருமாக சமைச்சுச் சாப்பிட்டிருக்கிறார்கள்... அது கொஞ்சக்காலத்தில் கணவருக்கு நெஞ்சுவலிபோல வந்து செக் பண்ணினால், அவருக்கு அயன் லெவல் அதிகமாகி விட்டதாம், மனைவிக்கு நோர்மலாகி இருந்திருக்கிறது ஹா ஹா ஹா..

      அயன் கூடினாலும் ஆபத்து கார்ட் அட்டாக்கூட வரலாம்... அதனால தேவைப்படுவோர் மட்டும் புதுச் சட்டியில் பாவித்தல், அல்லது எல்லோரும் எனில் வாரம் ஒரு தடவை அப்படிப் பாவிக்கலாம்..

      Delete
    4. ஹா ஹா ஹா ஜே கே ஐயா சொல்வதுபோல[அது தெரியாது:)], ஆனால் நல்ல ஒரு இரும்புத்துண்டை கறி சமைக்கும்போது போட்டுச் சமைச்சாலும் நல்லது என அறிஞ்சேன்..

      Delete
    5. அதிரா வீட்டில் சாப்பிட வந்தால், நல்லா சோதனை செஞ்சுட்டுத்தான் சாப்பிடணும் போலிருக்கு. வரும் விருந்தினர்களுக்கு இரும்புச் சத்து வேணும்னு எல்லாத்திலேயும் ஆணி போட்டிருந்தாங்கன்னா சாப்பிடறவங்க என்ன ஆவாங்க.

      Delete
    6. @நெ.த
      //வரும் விருந்தினர்களுக்கு இரும்புச் சத்து வேணும்னு எல்லாத்திலேயும் ஆணி போட்டிருந்தாங்கன்னா சாப்பிடறவங்க என்ன ஆவாங்க.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்கு இனிப்பு ஐட்டங்கள்தான்:) .. கேசரி, தொதல் இப்பூடி:)) கேசரியில் இரும்பெல்லாம் போட முடியாது கலர் மாறிடும் எல்லோ:)) வேணுமெண்டால்.. தொதல்ல போடலாம்தான்:)).. ஐடியா ஐடியாவா எடுத்து எடுத்துத் தாறீங்கள் நெ.தமிழன் டங்கூ:)) ஹா ஹா ஹா.

      Delete
  19. வேலைக்குப் போகாதவங்களுக்குதான் வேலை ஜாஸ்தி.  ஒத்துக்கொள்கிறேன்.  ஏனென்றால் என் பாஸ் அப்படிதான் சொல்வார்.  சொல்லாவிட்டால் கொல்வார்!!

    ReplyDelete
  20. ஊசிக்குறிப்பில் இரண்டாவது ஜோக்கை அதிகம் ரசித்தேன்.  அடிச்சும் கேட்பாங்க அப்பாவும் சொல்லாதே ரகம்!

    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  21. யம்மாடி, அந்த சிகப்பு மிளகாய் கத்தியை விட நீளமாக இருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..

      என் பாவக்காய் ரெசிப்பியில், நீங்கள் ஒரு சுவீட்டானவர்.. எனச் சொன்னீங்கள்:).. அதுபோல இதுவும் சுவீட் மிளகாய்தான் ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

      Delete
  22. 1ம் நம்பர் காரங்களுக்கு இன்று அதிர்ச்சி செய்தி வரும்னு ஜோசியர் சொன்னார்.

    அது அதிராவின் புதிய இடுகையா இல்லை காகிதப் பூக்களான்னு தெரியலையே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      ஹா ஹா ஹா இந்த வருடம் அதிர்ச்சிகள் தொடரும்:))

      Delete
  23. //சொந்த ஸ்டைலில் செய்வேன். நல்லா வருவது மட்டும் இந்த பிளாக்கில் வெளியாகும்.//

    அதிரா மாதிரி உண்மை பேசும் பழக்கம் ஏஞ்சலினுக்கோ மத்தவங்களுக்கோ கிடையாது. ஒரு வருஷத்துல 8 சமையல்தான் ஒழுங்கா வரும் என்று அதிரா ஒத்துக்கிட்டிருக்காங்க. பிடிங்க புதுப் பட்டம்

    அரிமதி அதிரா (மதி-சந்திரன்.)

    ReplyDelete
    Replies
    1. //ஒரு வருஷத்துல 8 சமையல்தான் ஒழுங்கா வரும் என்று அதிரா ஒத்துக்கிட்டிருக்காங்க.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் லீவு நாட்கள் வந்தால், வெளியே எங்கும் போகவில்லை எனில், கிச்சினில்தான் பல பல ரெசிப்பிகள் செய்வேன்ன்.. எனக்கு அது ஒரு பொழுதுபோக்கு... ஆனா புளொக் எழுதவில்லை, நெட் பக்கமே வரவில்லை எனில், கபேர்ட் கிளீனிங், தையல் கைவேலை இப்படி செய்ய வெளிக்கிடுவேன்:))..

      //
      அரிமதி அதிரா (மதி-சந்திரன்.)/// மூணாம்பிறையை மற்ந்திட்டீங்கபோல:))

      Delete
  24. படங்கள் நல்லா வந்திருக்கு. பாராட்டுகள்.

    இதே படங்களை, பூசனி ஃப்ரை, தக்காளி பூட்டான் தொக்கு, மாவிளக்கு, அரிசி பாயாசம் என்று எந்தச் செய்முறைக்கும் உபயோகித்து இடுகை போட்டால் எங்களுக்கென்ன வித்தியாசமா தெரியப் போகுது?

    ReplyDelete
    Replies
    1. படத்தின் அழகைப் பார்த்தாலே சுவையைக் கணிக்க முடியுதெல்லோ:)).. சும்மாவே சாப்பிடலாம்.. அவ்ளோ ரேஸ்ட்....

      நில்லுங்கோ நில்லுங்கோ.. இனி இப்பூடி வித்தியாசமான சமையல் ரெசிப்பிகள்தான் வெளிவரப்போகுது:)... அரைச்ச மாவையே அரைச்சு ஆருக்கு என்ன பலன்?:))

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.

      Delete
  25. ஊசிக்குறிப்பும் ஊசி இணைப்பும் ரசிக்கும்படியாக இருந்தன. முதல் படத்தில் உள்ள காலித்தட்டு பளபளன்னு ஜோராக்கீது. மற்றபடி உங்கள் சமையல் எதுவுமே எனக்குப் பிடிக்கலை. நீங்களே மூக்கைப்பிடிக்க சாப்பிடுங்கோ. எனக்கு வேண்டாம். :)))))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.... ஆஆஆஆஆஆ முதல் தடவையாக என் சைனீஸ் ரெசிப்பி உங்களை இங்கே அழைச்சு வந்திருக்குது:)) இல்லை எனில் சமையலுக்கு எட்டிப் பார்க்க மாட்டீங்களே:)).. ஆனா எதுவும் பிடிக்கவில்லை எனப் பொய் சொல்றீங்கள்:).. உங்களுக்காக குரக்கன் பக்கோடா செய்து தாறேன்ன்ன்:)).

      //எனக்கு வேண்டாம். :)))))//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி கோபு அண்ணன்.

      Delete
  26. ஸ்ஸ்ஸ்.... முடியல, கத்திரிக்காயை கருக்கி ஒரு சமையல் செய்து, ""சமையல் தாரகை"" என பட்டம் வேற.. அஞ்சு இதையெல்லாம் கேட்க மாட்டீங்களோஓஓஒ... அப்படியே அந்த உள்ளிக்கு பக்கத்தில இருக்கிற கத்திரிக்காயை பாருங்க. அழகா இருக்கு. அதை எப்படி ஆக்கீட்டீங்க. இந்த சோயாசாஸ்தான் பார்க்க பயமா இருக்கு.
    வா..வ் சூப்பர் பாட்டு. இருவரின் இளமைகால போட்டோ.குரலும் இனிமையாக அருமையான பாடல்.
    ஹா..ஹா..ஹா.... உண்மைதான். விடிகாலையில்தான் அடிச்சு போட்ட மாதிரி நித்திரையா வரும். இங்கு 4 மணிக்கு எழும்பனுமே.. வெளியில் மைனஸ் குளிர் வேற.
    அயன் இரும்பு சட்டி அமோசனை விட இங்கு உள்ள கடையில மலிவா கிடைத்தது. நல்ல பாரம். நான் வாங்கியிருக்கேன். சமைத்தாச்சு. ஈசி அண்ட் டேஸ்ட் குக். சமையுங்கோ, என்ஜாய்
    ஊசிக்குறிப்பு சூப்பர்.
    ""இவ்வாரம் பல பல குறிப்புக்கள் வெளி வர உள்ளன"".. 😳 😳 😮 😮

    ReplyDelete
    Replies
    1. இந்த ரெசிபியை சைனீஸ் டிவிக்கு அனுப்பிட்டேன் லிங்கோடு அதனால் நாம் இனி பயப்படவேணாம் ப்ரியா :) அவங்க பொன்னாடை போர்த்தி விழா எடுக்க கூட்டி போறாங்க ஹாஆஆஆ :)

      Delete
    2. வாங்கோ அம்முலு வாங்கோ.. சுற்றுலாக் களைப்பு எல்லாம் தீர்ந்து போச்சா...

      //கத்திரிக்காயை கருக்கி ஒரு சமையல் செய்து///
      கீசாக்கா, அஞ்சு, நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இதுவரை ஆரும் சோயா சோஸ் பாவித்ததிலைப்போல தெரியுது.. சோயா சோஸ் சேர்த்தாலே கலர் மாறிவிடும், நான் அதிலும் டார்க் சோயா சோஸ் தான் சேர்த்தேன்.. அதில் இனிமை அதிகம்.

      எங்கட வீட்டில அம்முலு நம் நாட்டு உணவுகளுக்கு எதிர்ப்பு:)).. அதனால அதிகம் இப்படி வகைகள், ஸ்கொட்டிஸ் ஃபூட் தான் இப்போ செய்கிறேன்...

      ஆஆஆ பாட்டு உங்களுக்கும் பிடிச்ச்ச்ச்ச்.... நன்றி.

      //இங்கு 4 மணிக்கு எழும்பனுமே..//
      ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்??

      //இங்கு உள்ள கடையில மலிவா கிடைத்தது. //
      கனடாவிலும் கிடைக்குது, நமக்கு இங்கு கிடைக்கவில்லை, அதனால அமேசனே கண்கண்ட தெய்வம்:)) ஹா ஹா ஹா..

      அடுத்து வியட்னாம், தாய்லாண்ட் எல்லாம் வர இருக்குது அம்முலு.. என்ன ஒரு பிரச்சனை சைவத்தில் வித்தியாசமாக செய்வது குறைவு:))..

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
    3. //AngelThursday, February 06, 2020 10:54:00 am
      இந்த ரெசிபியை சைனீஸ் டிவிக்கு அனுப்பிட்டேன் லிங்கோடு//

      அல்லோ மிஸ்டர் என்னைக் கேட்காமல் எப்பூடி அனுப்பலாம்?:)).. ட்றம் அங்கிள் போஸ்ட் போட்டதிலிருந்தே.. ஓகே சொல்லு ஓகே சொல்லு என ஒரே ஆக்கினை நான் அவருக்கே இன்னும் யேஸ் சொல்லவில்லை... அமேரிக்காவின் தேசிய டிஸ் ஆக அறிவிக்க ஆலோசனை நடத்துகிறாராமாம்ம்ம்ம்:))... எனக்குப் பாருங்கோ எருமை சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே பெருமை எல்லாம் புய்க்காது:))

      Delete
  27. இரண்டு நாளாக உறவினர் வருகை, (கொழுந்தனார், ஓர்ப்படி) நேற்று உற்வினர் வீட்டு கிரஹபிரவேசம்.நாளை ஒரு திடுமணம் மெதுவாய் வந்து படித்து கருத்துக்கள் போட வருகிறேன் அதிரா. அக்கா ரொம்ப பிசி.

    டாக்டர் வீடுசென்று வந்ததும் இதில் சேரும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      தெரியும் தெரியும் நீஇங்களும் எங்களைப்போல நேரம் இல்லை எனில் புளொக்குகளுக்கு வந்தாலும் வருவீங்க ஆனா போஸ்ட் போட மாட்டீங்க என்பது. அதனால யோசிச்சேன்ன் கோமதி அக்கா ஏதோ பிஸியாக இருக்கிறா என்று.. அதனாலென்ன.. வந்து எட்டிப் பார்த்ததே சந்தோசம் மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
    2. ஓ திருமணமுமோ.. நல்லபடி கொண்டாடுங்கோ...

      Delete
  28. வணக்கம் அதிரா சகோதரி

    கத்திரிக்காய் ரெசிபி நன்றாக உள்ளது. அதனுடன் என்னவெல்லோமோ சேர்த்து உருட்டி பிரட்டி அதனை ஒரு வழியாக செய்தும் அது கடைசியில் கண் கலங்காமல், கண்ணுக்கு அழகாக காட்சி தருகிறது. ஹா. ஹா. ஹா. சும்மா தமாசுக்காகச் சொன்னேன். உண்மையிலேயே ரெசிபி படங்களின் விபரங்களுடன் பதிவு நன்றாக உள்ளது. இது போல் நானும் செய்து பார்க்கிறேன். ஆனால் இவ்வளவு பூண்டு சேர்த்தால் உடம்புக்கு ஆகுமா என யோசிக்கிறேன். பிற சாஸ் அயிட்டங்களும் உடனே எப்போதும் என்னுடனேயே இருப்பதில்லை. (நானும் இது போல் ஒரு கத்திரி ரெசிபி செய்து படமெடுத்தும் பதிவாக எழுதாமல் இருக்கிறேன். அதற்குள் கத்திரி வெய்யிலே வந்தாலும் வந்து விடும் போலிருக்கிறது.)

    அயன் சக்தி குறைபாடுதான் எனக்கும். இரும்பு கடாய் தோசைக்கல் இரண்டுமே உடம்புக்கு நல்லது.அயன் சக்தியை இயற்கையாகவே தருபவை. அதனால் நம் அம்மாக்கள் வளர்த்த காலத்தில் அவர்களை நம்பி நன்றாக இருந்தோம். இப்போது காலங்கள் மாறியதால்,விளம்பரங்களை நம்புகிறோம்.

    ஊசிக்குறிப்பு, இணைப்பு இரண்டுமே ஜோர். படித்து ரசித்தேன்.

    கடைசி ஜோக் அருமை. அதனால்தான் மாலையே உங்கள் பதிவை படித்தும், உடனே பதிலளிக்க இயலாவிட்டாலும், வேலைகளை முடித்து இரவு படுக்கைக்கு சென்ற பின் தூங்காமல் ஆவியுடன் (கொட்டாவி) சேர்ந்து பதில் சொல்கிறேன். பதிவின் சாராம்சங்கள் எல்லாமே நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. //தூங்காமல் ஆவியுடன் (கொட்டாவி) சேர்ந்து பதில் சொல்கிறேன்.//

      மிகவும் ரஸித்தேன், மேடம். :)

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தாங்கள் என் பதிலை ரசித்து தங்களின் அன்பான கருத்தைச் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். இன்றைய தினம் பதிவுலக பிதாமகரிடமிருந்து பாராட்டுகளை பெற்ற நான் பெரும் பாக்கியசாலி. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. அது கடைசியில் கண் கலங்காமல், கண்ணுக்கு அழகாக காட்சி தருகிறது. ஹா. ஹா. ஹா...


      கமலா அக்கா🤣😃😄😃😃🤣😃😄😄

      Delete
    4. பூண்டு/உள்ளி சோஸ் கத்தரிக்காய்/...


      நல்லா இருக்கு அதிரா😁😁 (நாமளும் சொல்லி வைப்போம்)..

      ஆனா எங்க வீட்டில் இப்படி பண்ணா காலி ஆகாதே..

      இரும்பு தோசை கல், kadai தான் எப்பவும் எங்க வீட்டில்..


      அந்த ஊசி இணைப்பு...உண்மை😎😎😎..

      எல்லாருக்கும் பதில் சொல்லணும்😣😣

      Delete
    5. வாங்கோ கமலாக்கா வாங்கோ

      //அது கடைசியில் கண் கலங்காமல், கண்ணுக்கு அழகாக காட்சி தருகிறது. //

      ஆர் குத்தியும் அரிசி கிடைச்சால் சரிதானே ஹா ஹா ஹா..

      //ஆனால் இவ்வளவு பூண்டு சேர்த்தால் உடம்புக்கு ஆகுமா என யோசிக்கிறேன்.//

      ஏன் அப்படிச் சொல்றீங்க.. ஒருவர் ஒரு முழுப்பூண்டுவரை சாப்பிடலாமே.. இது 4,5 பற்கள்தான் அதுவும் ஒருவருக்கல்லவே எல்லோரும்தானே சாப்பிடப்போகிறோம்.. ஆனா பூண்டு சேர்த்தால்தான் இந்த சோஸ் வரும்... நீங்க விரும்பாதுவிட்டால், குறைக்கலாம், விரும்பினால் சின்னதா ஒரு பீஸ் இஞ்சி சேர்க்கலாம்.. இஞ்சி அதிகமானால் கசப்பு தன்மையாகிடும் இக்கறி.

      கத்தரி ரெசிப்பியோ.. போடுங்கோ போடுங்கோ..

      எனக்கும் இப்போ இரும்பு, மண் பாத்திரங்கள்தான் அதிகம் பிடிக்குது[இங்கு வாங்குவதுதான் கஸ்டமாக இருக்குது.. ஊரில இருந்து அனுப்பச் சொல்லி சிரட்டைக் கரண்டி எடுத்து வசிருக்கிறேன்:)).

      ஹா ஹா ஹா ஆவிக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.. பாருங்கோ கோபு அண்ணனும் உங்களைப்போலத்தான் ஜாமக்கோழி:)) .. அவருக்கும் இரவில முழிச்சிருப்பதால் ஆவியோடு உறவுண்டு ஹா ஹா ஹா.

      Delete
    6. வாங்கோ அனு வாங்கோ.. கத்தரிக்காய் பிடிக்காதோருக்கு இக்கறியும் பிடிக்காது...

      ஓ இங்கு என்னிடமும் ஒரு இரும்புத் தோசைக்கல் உண்டு ஆனா அது சரியான பாரமென்பதால் நொன் ஸ்ரிக்கில்தான் சுடுவேன்ன்[தோசை சுடுவதே ஆண்டுக்கொருக்கால் அமாவாசைக்கொருக்கால்தான் எங்கட வீட்டில்:))]..

      மிக்க நன்றி அனு.

      Delete
    7. ஆனாலும் கமலா ஹரிஹரன் மேடத்திற்கு குறும்பு.

      கோபு சாரை பீஷ்மர் என்று சொல்லி அவர் வயது 90க்கும் மேல் இருக்கும் என எண்ண வைத்து விட்டாரே.. ஹா ஹா

      எதை ரசித்தாலும் உடனே பாராட்டும், தெரியப்படுத்தும் ஆர்வம் உள்ளவர் கோபு சார். ஆனா பாருங்க.. அவர் இணையத்துக்கு வருவதே அபூர்வமாக ஆகிவிட்டது

      Delete
    8. நெல்லைத்தமிழன்  Saturday, February 08, 2020 2:00:00 am

      //ஆனாலும் கமலா ஹரிஹரன் மேடத்திற்கு குறும்பு.//

      உம்மைவிடக் குறும்பான ஆசாமியா ஸ்வாமீ? 

      பதிவர் கமலா ஹரிஹரன் மேடம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. நிச்சயமாக மிகவும் நல்லவங்களாகத்தான் இருப்பாங்க. அதில் எனக்கொன்றும் மாற்றுக்கருத்தே கிடையாது. உம்முடன் நான் பழகி, நேரிலும் சந்தித்துள்ளதால் [ http://gopu1949.blogspot.com/2018/11/blog-post.html ] உம் குறும்பு பற்றி எனக்கு நன்கு தெரியும். இதுவரை நக்கீரராக இருந்த நீர் இப்போ நாரதராகவும் மாறியுள்ளீர்கள். சந்தோஷம். :)

      //கோபு சாரை பீஷ்மர் என்று சொல்லி அவர் வயது 90க்கும் மேல் இருக்கும் என எண்ண வைத்து விட்டாரே.. ஹா ஹா//

      ’பீஷ்மர்’ என்ற சொல்லையே அவர்கள் பயன்படுத்தவே இல்லை. நீராகவே சந்தடிசாக்கில் சேர்த்துக்கொண்டுள்ளீர்கள். பரவாயில்லை. பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை ஆகிய மூன்றையும் உதறித்தள்ளிய (என்னைப் போன்ற) மஹா உத்தமரான பீஷ்மருடன் என்னை ஒப்பிட்டுச்சொல்லியதில் பெருமை அடைகிறேன். பீஷ்மர் என்றால் 90 வயதுக்கு மேற்பட்டவர் மட்டுமல்ல. அவர் 900 வயதோ 9000 வயதோ 90000 வயதோ ஜீவித்திருக்கலாம் என்பதே அவர் பெற்றிருந்த அபூர்வமான வரனாகும். அவர் விரும்பும்வரை அவரை மரணம் நெருங்கவே நெருங்காது என்பதுதான் அதில் உள்ள மிகச்சிறப்பான அம்சமாகும். 

      //எதை ரசித்தாலும் உடனே பாராட்டும், தெரியப்படுத்தும் ஆர்வம் உள்ளவர் கோபு சார்.//

      ஆம். இங்குதான் என்னைப் புரிந்துகொண்டு, அரிச்சந்திரன் போல உண்மையை மட்டும் பேசியுள்ளீர்கள். மிக்க நன்றி, ஸ்வாமீ.

      //ஆனா பாருங்க.. அவர் இணையத்துக்கு வருவதே அபூர்வமாக ஆகிவிட்டது.//

      பீஷ்மர் போலத்தான் நானும் இந்தப் பதிவுலகில் இன்றுவரை இருந்து, சாதனைகள் பல செய்து வருகிறேன். நான் நினைத்தால் மட்டுமே பதிவோ பின்னூட்டங்களோ தருவேன். நினைக்காவிட்டால் படுத்து உறங்கியும் விடுவேன். எழுத்தினில் என்னை யாராலும் வெல்லவே முடியாது, ஸ்வாமீ.  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!    :))))))

      Delete
    9. Kamala Hariharan Friday, February 07, 2020 2:29:00 am

      //வணக்கம் சகோதரரே

      தாங்கள் என் பதிலை ரசித்து தங்களின் அன்பான கருத்தைச் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். இன்றைய தினம் பதிவுலக பிதாமகரிடமிருந்து பாராட்டுகளை பெற்ற நான் பெரும் பாக்கியசாலி. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.//

      மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      You may like to go through the following Links:

      http://gopu1949.blogspot.com/2020/01/blog-post_28.html

      சமீபத்தில் என்னைப் பேட்டி எடுத்தார்கள் ... Just 15 minutes only

      https://www.facebook.com/2308489056106322/videos/515924042463509/  


      அன்புடன் VGK

      Delete
    10. //ஆனா பாருங்க.. அவர் இணையத்துக்கு வருவதே அபூர்வமாக ஆகிவிட்டது//

      அது வந்து நெ.தமிழன்.., அவரின் கையிலிருப்பதைப் பிடுங்கினால் உடனே புளொக்குக்கு ஓடி வருவார்ர்:)).. வட்சப் ஐச் சொன்னேன்:)).. இப்போ அவர் அதில ஹீரோவாமே:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணூ:))

      Delete
    11. @ கோபு அண்ணன்..
      //இதுவரை நக்கீரராக இருந்த நீர் இப்போ நாரதராகவும் மாறியுள்ளீர்கள். சந்தோஷம். :)//

      ஏன் கோபு அண்ணன், நெல்லைத்தமிழன் கொண்டை போடத்தொடங்கிட்டாரோ?:)).

      //பரவாயில்லை. பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை ஆகிய மூன்றையும் உதறித்தள்ளிய (என்னைப் போன்ற)///

      ஹையோ ஆண்டவா இதுக்கு மேலயும் இந்த உசிர் என் உடம்பில இருக்குமென்றோ நினைக்கிறீங்க:) என் கால்ல கல்லைக் கட்டிப்போட்டுக் கொண்டுபோய்த் தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)) என்னால முடியல்ல:))...

      பிளீஸ்ஸ்ஸ் நெல்லைட்த்ஹமிழன்.. வேணுமெண்டால் என் சுவிஸ் பாங் கார்ட்டை உங்களுக்குத் தாறேன்:) அதை எடுத்து, கொஞ்சம் குண்டா சுவீட்ஸ் பக்கட்டுக்கள் வாங்கிக்கொண்டு கோபு அண்ணனிடம் போய்க் குடுங்கோ:) அவர் குண்டாவில் மயங்கி இருக்கும் வேளை பார்த்து .. அந்த மொபைலை ஆட்டையைப் போட்டிடுங்கோ:)).. உடனேயே எனக்கு டி ஏச் எல் ல அனுப்பி வையுங்கோ.. வட்சப்பில எத்தனை வீதம் நம்பாலர் என நான் கணக்கெடுக்கோணும்:)).. ஹையோ எனக்கு இப்போ ஒரு ஸ்ரோங் ரீ வேணும்.. அஞ்சூஊஊஊஊஊஊ:)).

      //பீஷ்மர் போலத்தான் நானும்//
      பீஷ்மர் கதையைத்தானே இங்கு மகாபாரதத்தில் நான் சொல்லியிருக்கிறேன்ன்:) கோபு அண்ணன் அதைப் படிச்சாரோ தெரியவில்லை.. சரி சரி எப்படியாவது நீங்கள் மகிழ்ச்சியாக நலமாக இருந்தால் எங்களுக்கும் சந்தோசம் கோபு அண்ணன்.

      Delete
    12. ///You may like to go through the following Links://

      ஹா ஹா ஹா நினைச்சேன்ன் கமலாக்கா பொல்லுக்குடுத்து அடிவாங்கப்போறா என.. அது நடந்திடிச்சூஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா சரி சரி காசா பணமா.. லிங்கில் போய்ப் படிச்சுக் கொமெண்ட்ஸ் போடுங்கோ கமலாக்கா...

      நாம், தனக்குப் போடும் கொமெண்ட்ஸ் பார்த்து, இந்த வலை உலகில் அதிகமாக மகிழ்ச்சியுறுபவர் கோபு அண்ணன் தான்...

      மீள் வருகைகளுக்கு அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
    13. வணக்கம் அதிரா சகோதரி

      நான் சாதாரணமாகத்தான் சகோதரர்
      கோபால கிருஷ்ணன் அவர்களை அறிவை சார்ந்த வகையாக பிதாமகர் என குறிப்பிட்டேன். (ஆனால் சகோதரர் நெ. தமிழர் அதற்குள் இரு புராண பாத்திரங்களாகவும் மாறி விட்டார் என்ற செய்தியும் எனக்கு புதிது. ஹா. ஹா. ஹா.அவருக்கும் வாழ்த்துக்கள். ) நாரதர் கலகம் என்றும் நன்மையைதான் கொடுக்கும் என்பது நான் அறியாததா? சகோதரர் திரு.வை.கோ அவர்களின் பதிவுக்கும் சென்று அவரை மகிழ்வித்த செய்திகளை படித்து கருத்துக்கள் இட்டு விட்டேன்.(தாங்கள் கூறுவது போல் இதனால் காசா? பணமா? கொஞ்சம் நேரம் ஒதுக்கியதில் வலையுலக நட்பு வட்டத்தின் மகிழ்வலைகள் நம் உள்ளங்களில் பெருகி சந்தோஷத்தை கொடுக்கும். அவ்வளவுதான்..!) சகோதரர் நெ. தமிழர் அவர்களுக்கும் என் அன்பான நன்றி. அனைவருக்கும் என் அன்பான மகிழ்வையும் தெரிவித்து கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  29. கார்லிக் சிக்கன் ரெசிபி எடுத்து சிக்கனுக்கு பதிலா கத்தரிக்காயை போட்டு அதுக்கு aubergene in garlic sauce என்று பேர்கொடுத்து எங்கள் காதில் பூ சுற்றிவிட்டீர்கள். ஆமாம் இதில் கொஞ்சம் தக்காளி சாஸ் ஏன் சேர்க்கவில்லை. எப்படியோ சாப்பிட்டால் தான் தெரியும். டெய்ஸி பிள்ளை இதுக்கு பக்கத்தில் போலும் வந்திருக்க மாட்டா. அடுத்தது என்ன வெண்டைக்காய் குருமாவா? 

    ஊசி அருமை, அதுவும் அந்த மூன்று விஷயங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ...

      ஹா ஹா ஹா இல்ல இல்ல இது, கார்ளிக் சோஸ் இப்படித்தான் செய்வது.. நீங்கள் சொல்வது சில்லி சிக்கின்:)).. அது விரைவில் இங்கு வரப்போகுது:))..

      டெய்சிப்பிள்ளை மணப்ப்பதோடு சரி:)) அனைத்தையும் ஒழுங்கா மூக்கை நீட்டி மணப்பா:)) கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      //அடுத்தது என்ன வெண்டைக்காய் குருமாவா? //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வெயிட் அண்டி சீ:)) தோஓஓஓஓஓஓஓஓஓஒ வந்து கொண்டிருக்கிறது....:))

      ஹா ஹா ஹா மிக்க நன்றி ஜே கே ஐயா.

      Delete
    2. https://www.thebigsweettooth.com/bhindi-ladysfinger-kurma/

      Delete
    3. நன்றி ஜேகே ஐயா.. ஆனா ஒரு வெண்டிக்காய்க்கு இவ்ளோ கஸ்டப்பட்டுச் சமைக்கோணுமோ என இருக்குதே.. இதைவிட சும்மா சாப்பிட்டு விடலாம் போலிருக்கு:))

      Delete
  30. பாடல் இனிமை, கேட்டு ரசித்தேன்.
    சமையல் குறிப்பு அருமை. செய்து பார்க்க வேண்டும். இப்போது எல்லாம் யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம் என்ற நினைப்பு.

    ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் அருமை.
    இரும்பு தோசைக்கல் என்னிடம் இருக்கிறது சரியான கனம்.
    இரண்டு நாள் முன் சாத்தூர் பக்கம் ஒரு உணவு விடுதி முன் மண் சட்டிகள் அழகு அழகாய் இருந்தது. வாங்க ஆசை, ஆனால் விசேஷ வீட்டுக்கு போக நேரமாகிவிடும் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள் வரும் போது இருட்டுவதற்குள் வீட்டுக்கு வர வேண்டும் அப்புறம் பார்க்கலாம் என்றார்கள். போட்டோ எடுத்ததை ஆசை தீர பார்த்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ கோமதி அக்கா மீண்டும் வந்திருக்கிறா.. வாங்கோ.

      //இப்போது எல்லாம் யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம் என்ற நினைப்பு.//
      ஹா ஹா ஹா சிலசமயம் எங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்... ஒரு தமிழ்க்கடை இருந்தால் நல்லதாக இருக்குமே என யோசிப்போம்.

      என் மண் சட்டியும் விளிம்பில் சிறு வெடிப்பு வந்திருக்குது, இக்கிழமை கடைக்குப் போய்ப் பார்க்கப்போறோம் ஏதும் புதுசு வந்திருக்குதோ என.

      இந்தியாவில் ரோட்டோரம் மண்சட்டி பானைக் கடையைப் பார்க்கவே ஆசையாக இருக்கு யூ ரியூப்பில்.

      ஹா ஹா ஹா அங்கு நீங்கள் எல்லா இடங்களுலும் வாங்கலாம் தானே கோமதி அக்கா.. மிக்க நன்றி.

      Delete
  31. கத்தரிக்காய் சைனீஸ் ஸ்டைல் கிரேவி குறிப்பு நன்றாக இருக்கிறது அதிரா! ஃபிரைட் ரைஸ் இதற்கு பொருத்தமானது என்று நினைக்கிறேன்.
    ஊசிக்குறிப்பு அருமை !!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ...

      ஆஆஆ கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க.. லம்ப் றைஸ்... இலங்கையில் பேமஸ். அதுக்கு இப்படி ஒருவித கத்தரி சட்னி போல தருவினம் சூப்பராக இருக்கும்.. இந்த லம்ப் ரைஸ் இப்போ வெளிநாட்டு இலங்கைக் கடைகளிலும் கிடைக்குது. ஊரில் சிக்கினில் மட்டுமே இருந்தது.. இப்போ அனைத்திலும் செய்கிறார்கள்.

      மிக்க நன்றி மனோ அக்கா.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.