நல்வரவு_()_


Thursday 27 February 2020

ப்பவும் தே அதிராதான்:)💓

ஃபீலிங்ஸூஊ வாரம் எனச் சொல்லிப்போட்டு இன்னொரு போஸ்ட் போடாட்டில் முறைப்பீங்களெல்லோ:)) அதனாலதான் இன்னொன்று...:))


எங்கள் குடும்பத்தில் மூத்த பிள்ளை அண்ணன், அடுத்து அக்கா, அதன் பின்னரே எதிர்பாராவிதமாக வந்துதித்தேன் நான்:). அதனாலும் கடசி என்பதாலும் நான் வீட்டில் மிகவும் செல்லப்பிள்ளை. அண்ணன் என்னோடு எப்பவும் சண்டைப்பிடிச்சதில்லை, இருவரும் என்னுடன் செல்லமாகவே இருப்பார்கள். அதேபோல அப்பா எனக்கு ஒருநாள்கூட அடிச்சதில்லை[அம்மாவிடம் சடார் சடார் என வாங்கியிருக்கிறேன் கையால ஹா ஹா ஹா].. சரி இந்தப் புராணம் இருக்கட்டும்:), நான் இன்று பாடப்போவது அக்கா புராணம்:).

ன் அக்கா, எனக்கு எதிர்மாறானவ நிறைய விசயங்களில், அதாவது நல்ல மனத் தைரியசாலி, இலகுவில் பயப்பிட்டு கலங்கி அழ மாட்டா.. பல நேரங்களில் எனக்கு  தைரியம் தருபவர்களில் அக்காவும் ஒருவர்.

சின்னனில், அம்மாவுக்கு அடுத்து என்னை அம்மாவைப்போல கவனிப்பா,  என் உடுப்பை அயன் பண்ணித்தருவது, ரீ ஊத்தித் தருவது இப்படிப் பல...நான் வீட்டில் எந்த வேலையும் செய்யமாட்டேன்:), அக்காதான் செய்வா, ஆனா அக்காவோடு நான் சண்டைப்பிடிப்பேன், பின்னர் நானே பலமாக அழுவேன், அதாவது அப்பா, அம்மா எவ்வளவு தூரத்தில் நின்றாலும் அவர்கள் காதுக்குக் கேட்கும்வரை பலமாக அழுவேன்:), உடனே அக்காவுக்குத்தான் ஏச்சு விழும்:)).. பாவம் அக்கா:)).. அப்போ அது புரியவில்லை எனக்கு ஹா ஹா ஹா. இப்படிப் போன நம் வாழ்க்கையில் ஒருநாள்...

அக்காவுக்கு சின்ன வயசிலிருந்தே, அத்தானைத்தான் மணம் முடிப்பது என சொல்லியிருந்தார்கள், அதனால இருவரும் பேசுவதில்லை[கூச்சம்:)]. நான் நன்கு பேசுவேன்.  அத்தான் கொழும்பில் படிச்சு கொழும்பில் வேலை பார்த்தவர், பின்னர் வெளிநாடு வந்துவிட்டார், அப்போ யாரிடமும் சொல்லாமல் திருமணம் முடிக்கவென ஊருக்கு வந்திறங்கிட்டார்ர்.. ஒருவராலும் ஒண்ணும் பண்ண முடியவில்லை, டக்குப் பக்கென நாள் குறித்தாயிற்று.

நாமும் ஊருக்குப் போய் விட்டோம், அப்போதான் எனக்கு நெஞ்சுக்குள் என்னமோ செய்யத் தொடங்கி விட்டது, திருமணம் முடிஞ்சால் அக்கா வெளிநாடு போய்விடுவாவே என:(.. மனம் வேதனைப்படத் தொடங்கிவிட்டது.. கூடவே இருக்கும்போது அருமை எப்பவும் தெரியாதுதானே...

அக்காவைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அழுகை அழுகையாக வந்தது, முடிந்தவரை அக்காவை நேராகப் பார்ப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன்., தனியே போயிருந்து யாருக்கும் தெரியாமல் அழத் தொடங்கினேன், திருமண வேலைகள் மும்முரமாக நடந்தன, பலகாரம் சுடுவதிலிருந்து.. வீட்டில் ஒரே உறவினர்கள் படு அமர்க்களமாக இருந்தது.

ஒருநாள் அக்கா என்னைக் கூப்பிட்டுக் கேட்டா “என் கால் நகங்களுக்கு, நெயில் பொலிஸ் போட்டுவிடுறியோ?” என, அக்கா கதிரையில் இருந்தா, நான் கீழே இருந்து, குனிஞ்சபடி அடிச்சு விட்டேன், என் கண்ணால கண்ணீர் வழிஞ்சோடியது, காட்டிக் கொடுக்காமல் அடிச்சு முடிய, எழுந்து போய் விட்டேன்.

அத்தான், பிளான் போட்டுக் கொடுத்துக், கட்டிய ஹோலிலேயே திருமணம் வைக்க வேண்டும், பணம் தரக்கூடாது என ஹோல்காரர் கேட்டுக்கொண்டபடி அக் ஹோலிலேயே திருமணம் நிகழ்ந்தது, வீட்டிலும் பெரிய பந்தல்கள், மணவறை என பெரிய அமர்க்களமாக இருந்தது வீடு, எனக்கு எதிலும் மனம் படியவில்லை, ஒரு நடைப்பிணம்போல மாறியிருந்தேன்.

இப்பவும் நினைவிருக்கு, ஒரு ஓரத்திலே ஈசிசெயார் இருந்தது, அதில் ஏறிப் படுத்திருந்தேன், மடியில் அந்நேரப் பூஸாரையும் வைத்துக்கொண்டு, நித்திரைபோல கண்ணை மூடிப் படுத்திருந்தேன், ஆனால் என் கண்ணால கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.. எதுவும் ஆரும் பார்த்திராதபடி கவனமாக நடந்து கொண்டேன். சின்ன வயசிலிருந்தே எனக்கொரு பழக்கம் என் கவலைகளை முடிஞ்சவரை என்னோடு வச்சிருப்பேன்.. வெளியே காட்டிக் கொடுக்க மாட்டேன்.

திருமணநாள் வந்தது, எங்கள் முறையில், தாலி கட்டியபின்பு தம்பதிகளாக பெண் வீட்டுக்கு வந்து, உடனேயே மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் அங்கு 3 நாட்கள் தங்கி, றிஷப்சன் எல்லாம் அங்கு முடிய, 4ம் நாள் பெண் வீட்டுக்கு வந்து, மீண்டும் இங்கொரு றிஷப்ஷன் நடக்கும், அதன் பின் பெண் வீட்டிலேயே தங்கி விடுவது வழக்கம்... அல்லது பெண்ணுக்கு கொடுக்கும் வீட்டில் போய் இருப்பர்.

அப்போ எங்கள் வீட்டிலிருந்து, மாப்பிள்ளை வீட்டுக்குப் போக வெளிக்கிட்டு எல்லோரும் வழியனுப்பும்போது, நான் அக்காவைக் கட்டிப்பிடிச்சு அப்போதுதான் ஓவென அழுதேன்... என்னைப் பார்த்து அங்கு நின்ற எல்லோரும் அழுதனர்...  என்னையும் வரச் சொன்னார்கள்.. கூட்டிப்போய் விட்டுவிட்டு வர, நான் மறுத்து விட்டேன்.. [பக்கத்து ஊர்தான் நான் அடிக்கடி போய்த் தங்கும் மாமி வீடுதான் அது]... 

அவர்கள் போனதும் நீண்ட நேரம் வாசலில் இருந்து அழுதேன், புது இடத்துக்கோ போகிறா, பக்கத்து ஊருக்குத்தானே.. அழாதே என ஆறுதல் சொன்னார்கள்.

அதிராவுக்கு அக்காதான் எல்லாம் செய்து கொடுப்பா, நன்கு கவனிப்பா என, அங்கிந்தோருக்கு ஒவ்வொரு கதையாக அப்பா சொல்லிச் சொல்லி தன் கவலையை மறைக்க முயன்றார், நான் அனைத்தையும் கேட்டு இன்னும் அழுதேன்.

அது முடிஞ்சது, அத்தான் வெளிநாடு திரும்பும் நேரம் வந்தது, ஆனா அவர் எங்கள் அப்பா அம்மாவிடம் கேட்டுக் கொண்டார், வெளிநாடு வரும்வரை, அக்காவை தங்கள் வீட்டில் இருக்க அனுமதிக்கும்படி, மறுக்க முடியாதுதானே அப்பா அம்மாவும் ஒத்துக் கொண்டனர், அதன்படி அக்காவை அங்கு விட்டுப்போட்டு நாம், ஊரை விட்டு நம்மிடத்துக்கு திரும்பி விட்டோம். வீட்டில் வந்து வாசலில் ஏறியதும், அக்கா இல்லாமல் ஒரே வெறுமையாக இருந்தது வீடு.

ஓவெனக் கதறி அழவேண்டும் போல இருந்தது எனக்கு. திடீரெனப் புறப்பட்டுப் போனமையால அக்காவின், உடுப்புக்கள் பொருட்கள் எல்லாம் அங்கங்கு இருந்தன... அதைப் பார்த்துப் பார்த்து, அப்பா அம்மாவுக்குத் தெரியாமல்,  தனியே போயிருந்து அழுதேன், சாப்பிடவே பிடிக்கவில்லை, பசிக்கவில்லை எனக்கு.. எல்லோருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும், ஆனா ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கவில்லை.

இரவில் அக்காவும் நானும் ஒரு அறையில் ஒரே கட்டிலில்தான் படுப்போம், இது அக்கா இல்லாமல் தனியே படுக்க முடியவில்லை என்னால், இரவு படுக்கப் போகுமுன், சுவாமிப்படத்துக்கு முன்னால் போய் நின்று “கடவுளே என் கனவில் அக்கா வந்திடக்கூடாது, வந்தால் என்னால் தாங்க முடியாது” எனச் சொல்லிக் கும்பிட்டுத் திருநீறு பூசிய பின்னரே படுப்பேன்.

காலம் ஓடியது, அக்காவை இடைக்கிடை நம் வீட்டுக்குக் கூட்டி வந்து, கூட்டிப்போய் விட்டார் அப்பா...  அக்கா வெளிநாடு போகும் நாள் வந்தது.. திரும்பவும் என் நிலைமை “கண்ணீரும் கம்பலையும்” தான்:)).. அழுதழுதே எயார்போர்ட் போனோம் வழியனுப்ப.. உள்ளே அனுப்பிப்போட்டு, வெளியே இன்னொரு இடத்துக்குப் போய் பிளேனைப் பார்த்தோம்.. பெரிய KLM flight,  அதற்குள் அக்கா இருக்கிறா என நினைச்சு பிளேனைப் பார்க்க முடியாமல் கண்ணீர் மறைச்சது...

பிளேன் மெதுவாக நகர்ந்து ரன்..வேயில் ஓடி... ஓடிய வேகத்திலேயே ... மேலெழும்பியதும்.. நான் ஓவெனப் பெரிசாக அழுதேன்.. அன்று மழை நாள் என்றமையால, உடனேயே முகிலுக்குள் மறைந்து விட்டது.., ஆனாலும் கொஞ்ச நேரம் பிளேனின் சிவப்பு லைட்டுகள் மட்டும்.. முகிலிடையே தெரிஞ்சன.. இப்பவும் அது கண்ணுக்குள் இருக்குது... அழுதழுதே வீடு வந்து சேர்ந்தோம். வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போவோருக்கு பெரிதாக கவலை தெரியாது, ஆனா வழியனுப்பிப்போட்டு வீட்டிலிருப்போருக்கே கவலையாக இருக்கும்... இக்கதையைக் கணவருக்குச் சொல்லி இருக்கிறேன், அவர் அடிக்கடி கேட்டுச் சிரிப்பார் “பிளேன் எழும்பும்போது.. ஓ வென அழுதீங்களோ” என:)..

பின்னர் இப்போ அடிக்கடி சந்திக்கிறோம்.. பிரிகிறோம்.. அழுவதில்லை ஹா ஹா ஹா.  இப்படி நான் ரகசியமாக அழுத அழுகை அக்காவுக்கோ அப்பா அம்மாவுக்கோ இன்றுவரை தெரியாது..:). ஆனா இப்பவும் அக்காவும் சரி அத்தானும் சரி, பாசத்தில் குறைவில்லை.. நம்மை நன்கு கவனிச்சு, நாம் வருகிறோம் என்றாலே நமக்குப் பிடிச்சதெலலம் வாங்கி வைத்து சமைச்சுத் தருவார்கள்.

இக்கதையை எழுதி முடிப்பதற்குள் மூக்கைச் சிந்திச் சிந்தி நிறைய அழுதுவிட்டேன், நல்லவேளை நானும் டெய்சியும் மட்டுமே இருக்கிறோம் இப்போ:)) ஹா ஹா ஹா.

ஊசி இணைப்பு:)
மாவீரன் நெப்போலியன் ஒருநாள் போர் முடிஞ்சு திரும்பும்போது, ஒரு குழந்தை மலைப்பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்தது, ஆச்சரியத்தில் வாளைக் கீழே போட்டு விட்டு, அக்குழந்தையைத் தூக்கினாராம், இப்போ அக் குழந்தை வளர்ந்து விட்டது.. இன்று போஸ்ட் எழுதி உங்களுக்காகப் போட்டிருக்கும் நானேதான் அக்குழந்தை:)) ஹா ஹா ஹா:).
என் பிறந்தநாளுக்காக எனக்காக நேரமொதுக்கி வாழ்த்துப் போஸ்ட் போட்ட 
அஞ்சுவுக்காகவும்...

அம்முலுவுக்காகவும்...

வாழ்த்திய அனைவருக்காகவும் இந்த ரொட்டீஈஈஈஈ:)).. ரெபிப்பி பின்னால் வரும்:)) நன்றி நன்றி..🙏🙏🙏🙏🙏🙏

ஊசிக்குறிப்பு
🙏🙏🙏🙏🙏🙏

152 comments :

  1. ஆஆஆஅ !!! நானே first 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. நீங்கதான் 1ஸ்ட்டூ:)).. அந்த ரொட்டியில் முதலாவது ரொட்டி உங்களுக்கே:)..

      Delete
    2. என்னாது? பிஞ்சு எழுத்தாளரா?   இது ஏன், எப்போதிலிருந்து?

      Delete
    3. ஹா ஹா ஹா ஸ்ரீராம் ஷொக்ட் ஆகிட்டார்ர்:)).. இப்போதான் பிஞ்சாகி எழுத ஆரம்பிக்கிறேனாக்கும்:)).. இனி முத்தி.. பழுத்து... கண்ணதாசன் அங்கிள் ரேஞ்சுக்கு வர இன்னும் எவ்ளோ காலம் பிடிக்கப்போகுதோ:)) ஹா ஹா ஹா..

      Delete
  2. எனக்கு மிகவும் பிடிச்ச புல்லாங்குழல் பாட்டு ..இதை கேட்டுத்தான் மார்கழி மாதம் எழும்புவேன் ஸ்கூல் டேஸில்.இதுவும் ஆயர்பாடி மாளிகையில் பாட்டும் இன்னும் என்னை சென்னை நாட்களுக்கு கொண்டு செல்லும்  

    ReplyDelete
    Replies
    1. உண்மை அஞ்சு.. இவ்விரண்டு பாடல்களையும் கேட்கும்போது நெஞ்சுக்குள் என்னமோ பண்ணும்.. ஏதோ கவலையாக வரும்...

      Delete
    2. //ஆயர்பாடி மாளிகையில்// - இதனையும், கண்ணன் பிறந்த ஜென்மஸ்தான் என்றழைக்கப்படும் சிறையையும் இந்தத் தடவை தரிசனம் செய்தேன். ஜென்மஸ்தானில் அரை மணி நேரம் (அங்கு யாரையும் அரை நிமிடங்களுக்குமேல் அனுமதிப்பதில்லை) இருந்தது மிகுந்த சந்தோஷம் தந்தது.

      Delete
    3. ஓ கண்ணன் சிறையினுள்ளா பிறந்தார்ர்... சிறையைப் பார்த்துக் கும்பிட்ட முதல் ஆள் நெல்லைத்தமிழனாகத்தான் இருப்பார் ஹா ஹா ஹா..

      //ஜென்மஸ்தானில் அரை மணி நேரம் (அங்கு யாரையும் அரை நிமிடங்களுக்குமேல் அனுமதிப்பதில்லை) இருந்தது மிகுந்த சந்தோஷம் தந்தது.//

      ஓ சில சமயங்களில் இப்படி நடக்கும்போது, நம்மை அறியாமல் ஏதோ ஒரு மகிழ்ச்சி மனதில் நிறந்துவிடும்.

      Delete
    4. ஏஞ்சலின்....

      //ஓ கண்ணன் சிறையினுள்ளா பிறந்தார்ர்..//

      இதற்கு, கம்ப பாரதி அதிராவுக்கு பதில் சொல்லுமாறு அழைக்கிறேன். அதிரா மஹாபாரதம் மற்றும் இராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர் என்பதை மனதில் வைத்து பதில் சொல்லுங்க.

      நீங்க சொன்னப்பறம், அது சரி.... நீங்க சொன்ன கண்ணன், ராமாயணத்தில் எங்கு வருகிறார் என்ற கேள்வி அவரிடமிருந்து வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே அதிராவுக்கு பதில் சொல்லுங்க.

      Delete
    5. @ நெல்லை தமிழன் ஒரு பாவ பரிதாபப்பட்டு என்னை பிழைச்சு போக விடக்கூடாதா :))))))எனக்கு இருக்கிற  கொஞ்சூண்டு அறிவும் காணாமப்போயிடும் :)
       கண்ணன் பிறந்த இடம் மதுரா என்ற இடத்தில ஒரு சிறையில் .கம்சன் கிட்டருந்து காப்பாற்ற நிறைய தலையோட இருக்கிற பாம்பு குடை பிடிக்க வெள்ளத்தை கடந்து கண்ணனோட அப்பா பேபியை தூக்கிட்டு யசோதா கிட்டருந்து பெண் குழந்தையை மாற்றி கொண்டாரார் .சிறையில் தானே வசுதேவரும் தேவகியும் இருந்தாங்க .அப்போ அவர் சிறையில் தான் பிறந்தார் .
      ஹப்பா எங்க மங்கை மிஸ் வாழ்க எங்கிருந்தாலும் :) நான் படித்தது கத்தோலிக்க பள்ளியில் அனால் எங்களுக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுத்தாங்க எங்க மிஸ் மிக அழகா .இன்னும் அசுவத்தாமன் பற்றி  அவங்க விளக்கினது  கண் முன் நிக்குது ..

      Delete
    6. அஸ்வத்தாமன் யார் போன்ற ஈஸியான கேள்வியை தான் பிஞ்சு எழுத்தாளர்கிட்ட கேட்டிருக்கணும் அதை விட்டுட்டு கண்ணன் பிறந்தது சிறையிலானுலாம் இவ்ளோ ஈஸியா கேக்கப்டாது :) அது அவங்க அறிவை ஆழ்ந்த அறிவை ஜோதிக்கிறமாதிரில்லா :)

      Delete
    7. //கொஞ்சம் ஜாக்கிரதையாகவே அதிராவுக்கு பதில் சொல்லுங்க.//

      ஹா ஹா ஹா இப்பூடித்தான் இருக்கோணும்:))

      அடுத்த அடி தனக்குத்தான் எனும் பயத்தில அஞ்சு ஓடிவந்து, தான் படிச்சதை எல்லாம் சொல்லிட்டா ஹா ஹா ஹா:))..

      எனக்கு அப்ப அப்ப கடவுள் காட்சி தந்து:) என்னை எப்படியும் ஸ்ரெடியாக நிற்கப் பண்ணிடுவார்ர்:))..

      2,3 நாட்களுக்கு முன்னர்தான் யூ ரியூப்பில “நிலவே நீ சாட்சி” படம் வந்து என்னைப் பார் பார் என்றது.. பார்த்தால்ல்ல்ல்ல்ல்ல்ல்.. அதில முத்துராமன் மாமாவுக்கு அம்மாவா வருபவ, எப்ப பார்த்தாலும் ராமாயணத்தையும் பாரதத்தையும் மிக்ஸ் பண்ணியே பேசி கணவரிடம் ஏச்சு வாங்குவா ஹா ஹா ஹா... நீங்களும் ஒருதடவை அதில் வரும் கொமெடியை மட்டும் பாருங்கோ பிளீஸ்ஸ்.. கொமெடி மட்டும் கிடைச்சால் பின்பு லிங் போடுறேன்ன்..

      அதைப் பார்த்தபின்பு, அதிரா எவ்ளோ பெட்டர் எனும் முடிவுக்கு வந்திட்டேன்ன் ஹா ஹா ஹா:))

      Delete
  3. ஆ..ஸ்வீட் 16 அதிரா..இன்னும் பிறந்தநள் கொண்டாட்டம் முடியேல்லையோ

    ReplyDelete
    Replies
    1. இங்கேதான் இருக்கீங்களா :)))))))))))))))))

      Delete
    2. எனக்கும் இந்த பாட்டு மிகவும் பிடிக்கும் அஞ்சு. எங்க ஊர் கோவில் திருவிழா நேர்த்தில் பாட்டு போடுபவரிடம் இதையே திரும்ப திரும்ப போடுங்கோ என சொல்வேன்.அவர் எனக்கு அடிக்காத குறைதான்.ஹா..ஹா..

      Delete
    3. ஆவ்வ்வ்வ் எனக்கு ஆயாவா.

      Delete
    4. வாங்கோ அம்முலு வாங்கோ.. நீங்க இம்முறை 2ண்ட்டா வந்திட்டீங்க:)).. இருப்பினும் ஸ்பீட்டா ஓடி வந்தமையால ஆயாவை இம்முறை அனுப்பவில்லை நான்:)).. ஆயா இன்னும் ரொட்டி சுட்டு முடிக்கவில்லை, முடிச்சதும்தான் அனுப்புவேனாக்கும்...

      இம்முறை ஒரே நேரம் மூவரும் கம்பி மேலே:)) நின்றிருக்கிறோம்.. மகிழ்ச்சி...

      உண்மை அம்முலு.. இப்பாடலை விரும்பாதோர்ர்.. ஃபீல் பண்ணாதோர் இருக்க வாய்ப்பில்லை...

      Delete
  4. ஹை காந்தகண்ணழகி குண்டுபூஸ் :))) சூப்பரா இருக்கு அக்காவும் தங்கையும் படம் கண்ணெல்லாம் சிரிக்கிறீங்க :) போஸ்ட் படிக்க முழுதும் முடிச்சிட்டு வரேன் கொஞ்சம் நேரத்தில் 

    ReplyDelete
    Replies
    1. //குண்டுபூஸ் :)//

      அல்லோ ஒரு ஜின்ன:))) டிருத்தம்:)) அப்போ மீ குண்டல்ல:)).. அண்ணன் எனக்கு வைத்த பெயர் “பயற்றங்காய்”:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    2. அது :) அண்ணன் கண்ணாடி போடாம பேர் வச்சிட்டார் :))))))))))

      Delete
    3. @அஞ்சு

      [im] http://cf.ltkcdn.net/cats/images/std/189337-425x283-Kittens-Fighting.jpg [/im]

      Delete
  5. குட்டி அதிரா சின்னசிரிப்போடு செம அழகு. கண்ணழகியே...
    ஆவ்வ்.. அடுத்த பட்டத்தை நாங்களே சொல்லீட்டமோ அஞ்சு..🤭

    ReplyDelete
    Replies
    1. //அடுத்த பட்டத்தை நாங்களே சொல்லீட்டமோ அஞ்சு//

      சே..சே.. உப்பூடிப் பட்டமெல்லாம் சூட்டமாட்டேனாக்கும்:)) மீக்கு ஷை எல்லோ:))

      Delete
  6. வணக்கம் அதிரா சகோதரி

    உங்களது அக்கா பாசத்தைப் படித்துக் கொண்டே வரும் போது என் கண்களும் நனைந்தன. உங்களுக்குதான் உங்கள் அக்கா மேல் எவ்வளவு அன்பு. ஒரை வீட்டில் பிறந்து வளர்ந்து, சேர்ந்து உண்டு மகிழ்ந்து என இருக்கும் போது இந்த பிரிவு வந்தால் கஸ்டமாகத்தான் இருக்கும்.எப்படித்தான் இதிலிருந்து மீண்டீர்களோ?

    /வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போவோருக்கு பெரிதாக கவலை தெரியாது, ஆனா வழியனுப்பிப்போட்டு வீட்டிலிருப்போருக்கே கவலையாக இருக்கும்.../

    உண்மை.. பிரிவின் வலிகள் அவர்களுக்கு கம்மிதான்..நாம் வீட்டை அடைந்ததும் மறுபடி பழைய நினைவுகளுடன் போராடி களைப்போம்.

    எனக்கு திருமணமான புதிதில் பிறந்த வீட்டிலிருந்து கிளம்பும் போதெல்லாம் ஒரே அழுகைமயந்தான். அதுவும் எங்கள் அம்மா வந்து (நான் புகுந்த வீட்டிலிருக்கும் போது) என்னுடன் ஒரு மாதம் தங்கி விட்டு, மறுபடி அவர்கள் ஊருக்கு திரும்பி செல்லும் போது, இரண்டொரு நாட்கள் அழுகை தொடர் கதையாய் ஆகிவிடும்.

    ஊசி இணைப்பு உண்மையாய் இருந்திருந்தால், உலகில் உள்ள பாம்பெல்லாம் இப்போது உங்களுக்கு ஒரு சிறு நூலுக்கு சமம். ஹா. ஹா. ஹா. ரசித்தேன்.

    வடிவேலு வருத்தப்படுவது நியாந்தான்..

    ரொட்டி வேறு எதுவும் சேர்க்காத பட்சத்தில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

    ஊசிக் குறிப்பு வாசகம் அருமை. அத்தனையும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. அக்காவோடு மட்டுமில்லை, இப்படி அண்ணன் கதைகளும் பல உண்டு கமலாக்கா...

      அது கூடவே இருக்கும்போது புரியாது, பிரிவு என்பது எவ்வளவு கொடுமை தெரியுமோ.. அதுவும் வெளிநாடு போகப்போகிறார் எனில் மனம் ஏற்காது.. ஆனாலும் நான் நினைப்பதுண்டு, அனைத்து சகோதரங்களும் என்னைப்போல இருப்பினமோ என.. நான் கொஞ்சம் ஓவர் ஃபீலிங்ஸ்ஸான பேர் வழி... இலகுவில் ஒட்டமாட்டேன், ஒட்டி விட்டால் பின்பு மிகவும் கஸ்டப்படுவேன்..

      உண்மைதான் இந்தியாவில் திருமணத்தின் பின்பு பெண், மாப்பிள்ளை வீட்டோடு போய்விடுவதனால் அதுவும் எவ்வளவு கவலை... நல்லவேளை நம்மிடங்களில் அப்படி வழக்கமில்லை....

      என்னாதூஊஊஊஊஊ பாஆஆஆஆஆ...ம்போ?:) ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:))..

      ரொட்டி சுத்த சைவம், மேத்தி இலை போட்டிருக்கிறேன்ன்.. ரெசிப்பி விரைவில் வரும்.

      மிக்க நன்றிகள் கமலாக்கா.. நீங்களும் இம்முறை வலு ஸ்பீட்டாக ஓடி வந்து மூன்றாவது ரொட்டியை எடுத்திட்டீங்க:)). இனி வருவோருக்கு ஒட்டி இல்லை:)) ஹா ஹா ஹா..

      Delete
  7. என்னாது..... பிஞ்சு எழுத்தாளராஆஆ😳. அஞ்சு இதை பார்க்கேல போல..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அம்முலு அடிக்கடி ஷொக்ட் ஆகிடுறீங்க:)) இது உங்க உடம்புக்கும் உங்கட நாட்டு ஸ்னோவுக்கும் நல்லதல்ல ஹா ஹா ஹா:)). சுவீட் 16 எனில் பிஞ்சு தானே?:)) இது டப்பா?:))

      Delete
    2. ஹயோ :) நான் குக்கிங் இல் பிசியா இருந்தேன் ஆனால் மழலை எழுத்தாளர் பொருத்தமா இருக்கும்னு தோணுது :)

      Delete
    3. இது வந்து அஞ்சு.. பிஞ்சு எழுத்தாளர் எனில், ஆரம்ப எழுத்தாளர் என அர்த்தம்:))..
      அஞ்சு-பிஞ்சு:)) ஆஆஆஆஆஆ இது யூப்பராப் பொருந்துதே:)

      Delete
  8. ஹாஹா இந்த ஒற்றைக்குடுமி எங்க அத்தைங்க போட்டிருப்பாங்க :)) போட்டோவில் பார்த்திருக்கேன் .அதுவும் ரிப்பன் வச்சி கட்டி அதை bow ஆக்கி :) எத்தனை அழகு 

    ReplyDelete
    Replies
    1. எனக்கு எப்பவுமே ஹெயார் சோட் ஆகத்தான் இருந்தது அஞ்சு, பின்பு ஒரு 10 வயசிலிருந்தே ஆரம்பித்தேன் வளர்க்க, அதுவும் அம்மாவுக்காக:))

      Delete
  9. //எதிர்பாராவிதமாக வந்துதித்தேன் நான்// ???

    அக்கா புராணம் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி..

      அது நாமிருவர் நமக்கிருவர் போதும் என இருந்தார்களாம்.. ஆனா, நான் வந்திட்டேனே மம்மி.. என நான் வந்துவிட்டேனாம் எதிர்பாரா அதிர்ச்சி...:)..ஹா ஹா ஹா.

      நன்றி கில்லர்ஜி.

      Delete
    2. பின்ன... உங்க இடுகைகள், குழைசாதம்..போன்றதெல்லாம் நாங்க படிக்கணும்னு எங்களுக்கு விதி இருக்கும்போது நீங்க பிறந்துதானே ஆகணும்.

      Delete
    3. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் இதுக்காகவே நான் இப்போ ரொட்டி போஸ்ட்டை உடனே போட்டிடோணும் என மனம் துடிக்குதே:))

      Delete
  10. /எந்த வேலையும் செய்யமாட்டேன்:), அக்காதான் செய்வா, ஆனா அக்காவோடு நான் சண்டைப்பிடிப்பேன், பின்னர் நானே பலமாக அழுவேன், அதாவது அப்பா, அம்மா எவ்வளவு தூரத்தில் நின்றாலும் அவர்கள் காதுக்குக் கேட்கும்வரை பலமாக அழுவேன்:), உடனே அக்காவுக்குத்தான் ஏச்சு விழும்:))..//
    என்னா ஒரு வில்லத்தனம் :))))))  நீங்க சொல்லாமலே இப்டித்தான்னு  மனசில் நினைச்சி வச்சிருந்தேன் :) இப்போ கன்பர்ம்ட் :)))))))

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னில ஒரு பழக்கம் இருந்தது, சண்டை எனில் அடிக்க மாட்டேன் நுள்ளுவேன் ஹா ஹா ஹா....

      Delete
  11. கியூடெக்ஸ் அடிச்ச காட்சியும் ஈஸி சேரில் அமர்ந்தழுத காட்சியும் அப்படியே கண்முன் நடப்பது போலிருக்கி .//சின்ன வயசிலிருந்தே எனக்கொரு பழக்கம் என் கவலைகளை முடிஞ்சவரை என்னோடு வச்சிருப்பேன்.. வெளியே காட்டிக் கொடுக்க மாட்டேன்//
    உண்மையில் அப்படி இருக்க ஒரு தைரியம் மனதிடம் வேண்டும் உங்களுக்கு 6 வயசில் இருந்த உரம் இன்னமும் தொடருதே 

    ReplyDelete
    Replies
    1. சின்னனில் சில விசயங்கள் அம்மாவுடன் பகிருவேன், பின்பு எல்லாமே கணவரோடு, வெளியில் யாரோடும் நோப்:)).. இதில மட்டும் மீ ஸ்ரோங்கூஊஊஊஊ மற்றதிலெல்லாம் வீஈக்கூஉ:))

      Delete
  12. முழுதும் படிச்சி முடிச்சேன் செம பீலிங்ஸ் தான் .ஆனா ஒரு மனக்கவலை இவ்ளோ உருகி அழுதது அக்காவுக்கு தெரியாம போகக்கூடாது .இன்னொன்றும் தோணுது இப்போ நீங்க எழுதின மாதிரி அக்காவுக்கும் இதே FEELINGS இருந்திருக்கும் அதை சொல்லல அவர். இனிமே KLM பிளைட் பார்த்தா நீங்கதான் நினைவுக்கு வருவீங்க ஹாஹா :) 

    ReplyDelete
    Replies
    1. சொல்லோணும்:))..
      அக்காவுக்கும் இருந்திருக்கலாம் ஆனா அவ லேசில அழ மாட்டா என்னைப்போல,..

      //இனிமே KLM பிளைட் பார்த்தா நீங்கதான் நினைவுக்கு வருவீங்க ஹாஹா :) //
      ஹா ஹா ஹா... பூஸ் போய் கே எல் எம் வந்திருக்குது டும் டும் டும்:))

      Delete
    2. நானும் இதைச் சொல்லியிருக்கிறேன்.  நீங்கள் பீல் செய்ததை அக்காவுக்கும் சொல்லவேண்டும் என்றும் சொல்ல நினைத்தேன்.

      Delete
    3. அதை எப்படிச் சொல்வது ஸ்ரீராம்? ஹா ஹா ஹா ஷையாக இருக்குமெல்லோ.. அல்லது, எதுக்கு இப்போ திடீரென ஐஸ் வைக்கிறாய் எனவும் கேட்க வாய்ப்பிருக்கு ஹா ஹா ஹா.. காலம் போகட்டும் பார்க்கலாம்:))..

      Delete
  13. நான் ஒரு உண்மையை சொல்லணும் .உங்க அன்பு பாசம் எல்லாம் என்ன்னை வியக்க வைக்குது ..எதுக்குன்னா நான் இப்படி ஒரு மனுஷருக்காக வருத்தப்பட்டு அழுதிருப்பேனா என்றால் என் விடை ...இல்லை . 
    நான் எல்லார்கிட்டயும் ஒரேபோலதான் அன்பு காட்டிஇருக்கேன் ஒருவேளை அக்கா அண்ணா இருந்திருந்தா நானும் உங்களை போல் மழலை எழுத்தாளர் ஆகியிருப்பேனோ என்னவோ 

    ReplyDelete
    Replies
    1. //எதுக்குன்னா நான் இப்படி ஒரு மனுஷருக்காக வருத்தப்பட்டு அழுதிருப்பேனா என்றால் என் விடை ...இல்லை .//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா .. நீங்க, பறப்பன ஊர்வன கட்சி:))..

      இல்ல அஞ்சு அக்கா அண்ணா என்றில்லை, எனக்கு தம்பி தங்கச்சியிலும் சரியான விருப்பம்.. எனக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ இல்லையே இருந்திருந்தால் குழந்தைபோல பார்த்திருப்பனே என எப்பவும் முன்பு நினைச்சிருக்கிறேன் எனக்கு குழந்தைகள் கிடைக்கும்வரை...

      Delete
    2. //எனக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ இல்லையே இருந்திருந்தால் குழந்தைபோல பார்த்திருப்பனே என எப்பவும் முன்பு நினைச்சிருக்கிறேன்// - இவங்களே எக்ஸ்டிரா. இதுல இவங்களைத்தாண்டி எக்ஸ்டிரா கேட்குதோ? அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சால் ? ஹா ஹா

      Delete
    3. //இதுல இவங்களைத்தாண்டி எக்ஸ்டிரா கேட்குதோ? அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சால் ? ஹா ஹா//

      ஹா ஹா ஹா..

      [im]http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg[/im]

      Delete
  14. நெப்போலியன் 1800 களில் உங்களை தூக்கி எடுத்திருப்பார் அப்போ இப்போ உங்க வயசென்ன :)))))))))

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு..ஹா..ஹா..ஹா

      Delete
    2. அல்லோ மிஸ்டர்:)) நான் சொன்ன நெப்போலியன் பிறந்தது 1990 இல்:)) ஹா ஹா ஹா

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 அம்முலு:))) என்னா சத்தம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா..

      Delete
    3. நானும் நினைத்தேன் ஏஞ்சல்

      Delete
    4. கோமதி அக்கா நீங்களுமோ?:) ஹா ஹா ஹா..

      Delete
    5. அதானே....🤔😅😅😅

      Delete
  15. ரொட்டீ ஆஆ நொவ்வ் :) அம்முலுக்கே கொடுங்க :) அது கோதுமை ஓட்டீ :) ஆசையப்பட்டாலும் எனக்கு ஏற்காது ஆனாலும் தேங்க்ஸ் :)

    ReplyDelete
    Replies
    1. ம்கும் எனக்கும் வேணாம். அது பார்க்க., அஞ்சு உங்களுக்கு தெரியுமா இங்கு non-veg ல frikadellen என்று விற்பாங்க.
      (கூகுளை இதையே எழுதி சேர்ஜ் செய்ய்ங்க) அது மாதிரி இருக்கு பார்க்க. வேணாம்

      Delete
    2. பீலிங்ஸா எனக்கும் வந்துவிட்டது. எனக்கு அக்காமார் என்றதனால் இப்படி இல்லை. ஆனால் என் மூத்த அக்காதான் என்னை வளர்த்தா. அவா திருமணமாகி போனபோது நான் அழுது அடம்பிடித்து அவர்களுடன் போனேன். அவாவுக்கும் விட்டுட்டுபோக மனசில்லை. அப்ப நடந்த சம்பவங்கள் எல்லாம் வந்துவிட்டது.
      உங்க அக்கா மீது எவ்வளவு பாசம் என்பது தெரியுது. ஏன் அப்ப உங்களுக்கு அக்காவோட தைரியம் கொஞ்சமாச்சும் வந்திருக்கோனுமெல்லோ. இப்பவும் பிஞ்சுஅதிராவுக்கு தைரியம் சொல்லுறவாவோ..
      ஊசி இணைப்பு ஜோக் சிரித்துமுடியல. ஊசிகுறிப்பு அருமை.

      Delete
    3. //அது கோதுமை ஓட்டீ :)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சு அவசரப்பட்டு உப்பூடி ஒரு முடிவுக்கு வரக்கூடா:)) அது குளூட்டன் ஃபிறீ அண்ட் நொத்:) கோதுமை:)).. எங்கட ஸ்கூலில் ஒரு ரஷ்யன் ரீச்சர் இருக்கிறா அவ இப்படித்தான் பேசுவா..:)).

      டோந்த் தோக்:)) - don't talk
      லிசிண் து மீ - listen to me
      சித் கியர் - sit here
      haa haa haa:)) குழந்தைகளுக்கு தலை சுத்தும்:))..

      அதனால ரெசிப்பி வெளியாகும் வரை பொறுமை டேவை:)) டேவடையே:))..

      மிக்க நன்றிகள் அஞ்சு.. மீண்டும் இனி அடுத்தகிழமை ஜந்திச்சு ஜிந்திப்போம்ம்:))

      Delete
    4. @ அம்முலு..

      //frikadellen//
      இது பேகர்:) நெல்லைத்தமிழன் வந்தால் பர்கர்:)) என்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      இதில வெஜ் உம் இருக்கே அம்முலு.. இப்போ அனைத்து இடங்களிலும் வீகன் பேகர் வந்துவிட்டதே... மக்டொனால்ட், கே எஃப் சி, உள்பட.

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது டயட் ரொட்டீஈஈஈஈ:)) அண்ட் சத்துணவு ரொட்டீஈஈஈ:).. ரெசிப்பி பார்த்தால் மயங்கி விழுவீங்கள்...:) ஹா ஹா ஹா.

      Delete
    5. இப்போஸ்ட் படிச்சதும் பலருக்கு பழைய நினைவுகள் தூண்டப்படும், பீலிங்ஸ் ஆக்கி கவலைப்படுத்திட வேண்டாமே என்றுதான் ஊசிகுறிப்பில் கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறேன்:))..ஹா ஹா ஹா.

      அது வந்து அம்முலு, நான் தொட்டதுக்கெல்லாம் பயப்படுவேன், தவறு செய்யாமலேயே.. ஹையோ என்னைத் தப்பா நினைச்சிடுவினமோ என்றெல்லாம் பயப்படுவேன்... அப்படி விசயங்களுக்கெல்லாம் அக்கா ஏசுவா.. எதுக்கு சும்மா சும்மா பயப்படுகிறாய், உன்னில தப்பில்லைத்தானே அப்போ பேசாமல் இரு என்பா.. இப்படியான விசயங்களுக்குச் சொன்னேன்...

      மிக்க நன்றிகள் அம்முலு..

      Delete
  16. 'சிறிய வயதில்' என்பதை 'சின்னனில்' என்பீர்களா?  'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' அருமையான பாடல்.  யாருக்குதான்பிடிக்காது?  ரணக்கும் ரொம்பவே பிடிக்கும்.  இந்த லிஸ்ட்டில் இருக்கும் அனைத்துப் பாடல்களுமே பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம்,

      //சிறிய வயதில்' என்பதை 'சின்னனில்' என்பீர்களா?//

      அதேதான் ஸ்ரீராம், இதுபற்றி ஒரு விளக்கமான போஸ்ட் போடோணும் நான்:)..
      சின்னன் எனில் சிறிது .. என வரும், கடசிப்பிள்ளையையும் எங்க வீட்டுச் சின்னன் என்போம்.. மற்றும் சிறிய பொருளையும் சின்னனாக இருக்கே என்போம்ம்.

      உண்மைதான் ஸ்ரீராம் திரும்பத்திரும்பக் கேட்கலாம் அலுக்காது.. நன்றி.

      Delete
    2. இந்தப் பாடல் எனக்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தும். கல்லூரி ஹாஸ்டலில் முதல் வருடம் ஹாஸ்டலில் பாட்டுப் போட்டி நடந்தது. மரத்தின் கீழ் மேடை. அதில் மைக்கில் பாடணும். எதிரே ஆங்காங்கே கும்பலாக மற்ற மாணவர்கள் உட்கார்ந்து ரசிப்பார்கள் (விசிலடிப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. அது வரை அந்த ஊரில் மற்ற ஹாஸ்டலில் இருந்து, கொஞ்சம் பயத்துடனேயே இருக்கும் மாணவர்களாகத்தான் நாங்கள் இருந்தோம். ஃபாதர் வர்றார், பிரதர் வர்றார், வார்டன் வர்றார் என்று கொஞ்சம் அலர்ட் ஆகி நல்ல பிள்ளைகளாகவே இருப்போம்)

      போட்டியில் சீனியர்கள் பயங்கர டேலண்ட். ஆனா எனக்கு எப்போதும் மேடைப் பயம், கூச்சம் கிடையாது (நடுக்கம் உண்டு). புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற பாட்டைத்தான் பாடினேன். பாதியில் விசில், கூக்குரல்கள். சட்னு பாடுவதை நினைத்து, 'ஆம்பிளைகளா இருந்தால் மேடையில் ஏறிப் பாடணும். அதை விடுத்து இருட்டுக்குள் உட்கார்ந்து விசிலடித்தால்? என்று கேட்டுவிட்டு பாடலைத் தொடர்ந்தேன் (இளமைத் திமிரோ?)

      மனசுக்குள் சில சீனியர்கள் கோபத்துடன் இருப்பதாகத் தோன்றியது. மறுநாள் மாலை ஒரு சீனியர் வந்து பேட்மிண்டன் கோர்ட்டில் என்னிடம், அப்படிப் பேசக்கூடாது, எதையும் எஞ்சாய் பண்ணணும், இனிமே அப்படிப் பேசிடாதீங்க என்று சொன்னார். (மற்றவர்கள் சீனியர்களிடம், இந்தப் புள்ள நல்ல புள்ளை பாவம் விட்டுடுங்க என்று சொல்லியிருக்கணும் ஹா ஹா)

      Delete
    3. ஆவ்வ்வ் நெல்லைத்தமிழன் பாட்டும் பாடுவீங்களோ.. அப்போ எதுக்குச் சொன்னீங்க “என் குரல் மட்டும் நல்லாயில்லை” என முன்பு இங்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  17. உங்களுக்கும் உங்கள் அக்காவுக்கும் இடையேயான அன்பு நெகிழ வைத்தது.  உங்கள் அக்கா திருமணமாகிச் சென்று அந்த வீட்டில் உங்களைப்பற்றியெல்லாம் நினைத்து தலையணையை நனைத்திருந்திருப்பார்.  அவரும் அதை எல்லாம் உங்களிடம் சொல்லாமல் மறைத்திருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. //அந்த வீட்டில் உங்களைப்பற்றியெல்லாம் நினைத்து தலையணையை நனைத்திருந்திருப்பார்.//
      இல்லை, கவலைப்படுவா ஆனா அழ வாய்ப்பில்லை, இன்னொன்று சொந்த மாமி வீடுதானே.. அதனால அங்கு போனால் வீட்டு நினைப்பு வர சான்ஸ் இல்லை, நாம் எல்லோரும் ஒன்றாகவே பழகுவோம்..

      //அவரும் அதை எல்லாம் உங்களிடம் சொல்லாமல் மறைத்திருப்பார்.//
      இது உண்மைதான்.. இருக்கலாம்.. அண்ணனின் திருமணத்தின்போதும் நான் அழுதேன் ஆனா அதுவும் அவருக்குத் தெரியாது:)..

      Delete
    2. //அந்த வீட்டில் உங்களைப்பற்றியெல்லாம் நினைத்து தலையணையை நனைத்திருந்திருப்பார்// - ஸ்ரீராம் எந்தக் கனவில் இருக்கிறார்? யாருமே அப்படி நினைக்க மாட்டாங்க. எப்பவாச்சும் திரும்பப் பார்க்கும்போதுதான் பழைய நினைவுகள் வந்து கண்ணை மறைக்கும். புது வீட்டுக்குப் போயாச்சுன்னா கணவன், அப்புறம் அவங்க ரிலேடிவ்னு ரொம்ப பிஸியா இருந்துடுவாங்க இந்தப் பெண்கள். (ஆனா பாசம் பற்றி ரொம்ப வசனம் பேசுவாங்க..ஹா ஹா ஹா)

      Delete
    3. ///அப்புறம் அவங்க ரிலேடிவ்னு ரொம்ப பிஸியா இருந்துடுவாங்க இந்தப் பெண்கள். (ஆனா பாசம் பற்றி ரொம்ப வசனம் பேசுவாங்க..ஹா ஹா ஹா)//

      அது எப்பவும் உடனே கவலை வராது, புது இடம் புது ஆட்கள், நல்ல வரவேற்பு என இருக்கும்போது மகிழ்ச்சியாகவே இருப்பார்கள், நாள் போன பின்னர்தான் ஊர், வீடெல்லாம் நினைவு வந்து கவலை வரும்....

      ஆனா என்னதான் இருப்பினும் ஆண்களை விட, பெண்களுக்குப் பாசம் அதிகம்தானாக்கும்ம்ம்ம்:))

      Delete
  18. என் அக்காவுக்கு திருமணமாகிப் போகும்போதும் சரி, என் தங்கைக்குத் திருமணமாகிப் போகும்போதும் சரி, ஏனோ நான் இந்த அளவு ஃபீல் செய்ததில்லை.  

    ReplyDelete
    Replies
    1. //ஏனோ நான் இந்த அளவு ஃபீல் செய்ததில்லை. //

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)), ஆனா ஸ்ரீராம் , உடனே அழுகை வராவிட்டாலும், நாள் ஆக ஆக அவர்கள் இருந்த வீடெல்லோ.. அப்போ சாப்பிடும் நேரம், ரீ குடிக்கும் நேரம், எல்லோரும் ஒன்றாக இருந்து கதைக்கும் நேரம் என வரும்போது.., பயங்கர மிஸ்சிங்காக இருந்திருக்கும்தானே..

      Delete
  19. நெப்போலியன் காலத்திலிருந்து வாழ்பவரா நீங்கள்....    அப்போ சித்தர் வகையறா!   சித்தி!  ஹா...ஹா....  ஹா...  ப்ரியசகிக்கும், அஞ்சுவுக்கும் செய்து வைத்திருந்த ரொட்டியில் ஒன்றைக் களவாடி விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. //சித்தி! //
      ஹையோ நீங்க சித்தி பார்ட் 2 வைச் சொல்லலியே:)) ராதிகா அக்கா அடிக்கப்போறா எனக்கு:))..

      ///அஞ்சுவுக்கும் செய்து வைத்திருந்த ரொட்டியில் ஒன்றைக் களவாடி விட்டேன்!//
      ஆஆஆஆஆஆஆ அவர்கள் இருவருக்கும் ஆசையாகக் கொடுத்தேன், எனக்கு வேணாம் என நடப்புக் காட்டிப்போட்டினம் கர்ர்:)).. ஆனா உங்களுக்கு தராமலேயே எடுத்திட்டீங்க மகிழ்ச்சி.. விரைவில் ரெசிப்பியை எதிர்பாருங்கோ இங்கு... ஹா ஹா ஹா..

      Delete
  20. வடிவேலு வெடிவேலு! சிரித்துச் சிந்திக்க வைக்கிறார்.  ஊசிக்குறிப்பு அபாரம்.  ஆமாம்...
    ஒருவேளை இன்று உங்கள் அக்காவுக்குப் பிறந்த நாளோ...    அநியாயத்துக்கு ஆரம்பத்திலிருந்து கடைசி வரை  அன்பை ஃபீல் செய்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. சே..சே.. பிறந்த நாள் எல்லாம் இல்லை, அது ஃபீலிங்ஸு வாரம் எனச் சொல்லிட்டேன், அப்போ சொன்ன வாக்கை காப்பாத்த ரெண்டாவது எழுதோணும் என நினைச்சு இதை எழுதிட்டேன்ன்... இதை அக்காவிடம் சொல்லவில்லை எனினும் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்ததில் ஒரு மகிழ்ச்சி எனக்கு..

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  21. அழுவாச்சி அதிரா புராணம் சீரியல் பார்த்தது போல் உள்ளது. அழுகை அழுகை இறுதிவரை.
    //அத்தான், பிளான் போட்டுக் கொடுத்துக், கட்டிய ஹோலிலேயே திருமணம் வைக்க வேண்டும், பணம் தரக்கூடாது என ஹோல்காரர் கேட்டுக்கொண்டபடி அக் ஹோலிலேயே திருமணம் நிகழ்ந்தது// 
    இங்கே ஹாலில் தான் திருமணம் நடக்கும்.  ஹோலில் நடக்காது.  

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ.. நீங்கள் ஓவராத்தான் சீரியல் பார்க்கிறீங்க:).. இதையும் ராதிகா அக்காவிடம் கொடுத்து ஒரு “அக்கா” சீரியல் ரெடி பண்ணச் சொல்லலாம் ஹா ஹா ஹா..

      //இங்கே ஹாலில் தான் திருமணம் நடக்கும். ஹோலில் நடக்காது.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) பூவைப் பூ எண்டும் சொல்லலாம்:) புய்ப்பம் எண்டும் சொல்லலாம் மொமெண்ட்:))..

      மண்டபம் என எழுதியிருக்கோணும்.. எழுதும்போது மண்டபம் எனும் நினைப்பு வரவில்லை:)).. கை போன வேகத்தில் எழுதித் தள்ளிட்டேன்.

      மிக்க நன்றி.

      Delete
  22. பாடல் பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.
    அக்கா, தங்கை பூனைக்குட்டிகள் அழகு.
    அக்கா, தங்கை படம் மிக அழகு.

    என் சிறு வயதில் , நானும் அக்கா திருமணம் ஆகி போகும் போது அழுதது நினைவுக்கு வந்து விட்டது உங்கள் பதிவால். எனக்கு திருமணம் ஆகி வரும் போது வீட்டில் உள்ள தம்பி, தங்கைகளை பிரிய முடியாமல் அழுது இருக்கிறேன்.

    அக்கா, அப்பா, அம்மா , அண்ணன் வந்து பார்த்து விட்டு போனால் போகும் போது அழுகை வரும்.

    இப்போது பிள்ளைகள், பேரபிள்ளைகள் வந்து விட்டு ஊருக்கு போனால் அழுகை வருகிறது.


    அக்கா புராணம்:) காவியம்.

    சொல்லிய விதம் இளமை நாட்களை கண்ணுக்கு காட்சியாக விரிய வைத்து விட்டது.


    //பிளேன் மெதுவாக நகர்ந்து ரன்..வேயில் ஓடி... ஓடிய வேகத்திலேயே ... மேலெழும்பியதும்.. நான் ஓவெனப் பெரிசாக அழுதேன்.. அன்று மழை நாள் என்றமையால, உடனேயே முகிலுக்குள் மறைந்து விட்டது.., ஆனாலும் கொஞ்ச நேரம் பிளேனின் சிவப்பு லைட்டுகள் மட்டும்.. முகிலிடையே தெரிஞ்சன..//

    இந்த வாக்கியங்களை படிக்கும் போது பிஞ்சு எழுத்தாளர் தெரிந்தார்.






    ReplyDelete
    Replies
    1. பாடலை விரும்பிக் கேட்டிட்டீங்க நன்றி.

      மிக்க நன்றி.

      எனக்கு என்னமோ தெரியாது கோமதி அக்கா, மணவறையில் பெண்ணின் கையைப் பிடிச்சு, தாரை வார்த்துக் கொடுக்கும்போது, என் கண்கள் எப்பவுமே குளமாகிவிடும், அது எந்தப் பெண் என்றில்லை:))...

      ஒரு பாட்டு இருக்கே... சிவாஜி அங்கிள் பாடும் பாட்டு, அதை எப்போ கேட்டாலும் எனக்கு கண்ணால் தண்ணி வந்திடும்....
      பங்குனித் திங்கள் முதலாம் நாள்... திருநிறைச் செல்வன் சிவராமனுக்கும்... இங்ஙனம் தங்கள் நல்வரவை விரும்பும்... இப்படி ஒரு பாட்டு, ஆரம்பம் வருகுதில்லை.. அதைக் கேட்டாலே நெஞ்செல்லாம் அடைப்பதுபோல கவலை வரும்..

      //அக்கா, அப்பா, அம்மா , அண்ணன் வந்து பார்த்து விட்டு போனால் போகும் போது அழுகை வரும்.//
      இந்தியாவில் பெண்கள் வீட்டை விட்டுப் போவது கவலைதான். என்னைப் பொறுத்து, ஆண்கள் மாமனார் மாமியார் வீட்டில் போயிருக்கலாம், ஆனா பெண் தாய் வீட்டோடு இருந்தால் நல்லதே.

      இப்போ பாருங்கோ, ஆண்பிள்ளைகள் பெரிதாக வீட்டில் நிற்பதில்லை, நண்பர்களோடு சுத்துவார்கள், வீட்டை பெரிசாக கவனிப்பதில்லை, அப்போ அவர்கள் திருமணமாகிப் போயிட்டால் பெரிதாக வீட்டில் தெரியாது.

      ஆனா பொம்பிளைப்பிள்ளைகள் எப்பவும் அப்பா அம்மாவோடு பேசிக்கொண்டு இருப்போம், கிச்சினில் கெல்ப் பண்ணுவோம், கார்டினில் பூமரங்கள் வளர்ப்போம்.. இப்படி வீட்டுடன் ஒட்டியிருந்துவிட்டு, அனைத்தையும் விட்டுவிட்டுப் போவதென்பது நமக்கும் கஸ்டம், வீட்டில் உள்ளோருக்கும் கஸ்டம்தானே...

      Delete
    2. //இப்போது பிள்ளைகள், பேரபிள்ளைகள் வந்து விட்டு ஊருக்கு போனால் அழுகை வருகிறது.///

      இது எப்பவுமே வரும்தான் கோமதி அக்கா, சரி போயிட்டு வாறோம் எனச் சொல்லிவிட்டு புறப்படும்போது கண்கள் முட்டி விடும், திரும்பிப் பார்க்காமல் வந்திடுவேன்,,, ஆனா முன்பு அழுததைப்போல அழுவதில்லை ஹா ஹா ஹா.

      //இந்த வாக்கியங்களை படிக்கும் போது பிஞ்சு எழுத்தாளர் தெரிந்தார்.//
      ஹா ஹா ஹா மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
    3. https://www.youtube.com/watch?v=kL1xCiop0AM

      பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி.. எந்தக் காலத்திலோ கேட்ட பாடலை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டீர்கள்.

      Delete
    4. ஆஆஆஆஆஆஆஆ நன்றி நெல்லைத்தமிழன் நன்றி... சத்தியமாக கோமதி அக்காவுக்குச் சொல்லிவிட்டு, தேடிப்பார்க்கவில்லை, ஆனா அப்பப்ப மனதில தேடினேன் இதன் ஆரம்பம் என்ன என்று, உங்கள் கொமெண்ட் பார்த்ததும் ஓடிப்போய் வீடியோப் பார்த்திட்டேன், எனக்கு மிக மிகப்பிடிக்கும்.. சின்னனிலிருந்தே இப்பாட்டுக் கேட்டால் மனதில் என்னமோ செய்யும்.

      Delete
  23. //இக்கதையை எழுதி முடிப்பதற்குள் மூக்கைச் சிந்திச் சிந்தி நிறைய அழுதுவிட்டேன், நல்லவேளை நானும் டெய்சியும் மட்டுமே இருக்கிறோம் இப்போ:)) ஹா ஹா ஹா.//

    இப்படி அழும் போது கண்ணீரை துடைக்க பக்கத்தில் டெய்சிபிள்ளை இருக்கா !
    வீட்டில் இருந்தால் அழுவதை பார்த்தால் கேலி செய்து சிரிப்பார்கள். அவர்கள் ஆண்மகன்கள். (மகன்கள், கணவர்)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான் ஆனா எங்கள் வீட்டில், கண்கலங்கினால் யாரும் பொறுக்க மாட்டினம் கோமதி அக்கா.. எதுக்கு இப்போ அதை எல்லாம் நினைச்சுப் ஃபீல் பண்ணுறீங்க எனத்தான் கேட்பார்கள்..பார்த்திட்டால்..

      இன்னொன்று நான் எப்பவுமே கலகலவெனச் சிரிச்சு, பாடிக்கொண்டு ஒரு லூசு மாதிரியே இருப்பேன் வீட்டில்:)), அதனால நான் கண் கலங்கினால் பொறுக்காது:)).

      மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  24. //கூடவே இருக்கும்போது அருமை எப்பவும் தெரியாதுதானே...//

    நறுக்குனு கடித்துத்தின்னும் ருசியான குட்டியூண்டு வெள்ளரிப்பிஞ்சு போன்ற வரிகள்.

    ’அஞ்சு’ வின் நட்பான
    ’பிஞ்சு’ எழுத்தாளர் அதிராவுக்கு
    ’குஞ்சு’ கோபுவின் பாராட்டுகள்.

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. ஆவ்வ்வ்வ் பிஞ்சு எழுத்தாளர் பார்த்து நீங்க சிரிப்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்குது.. என்னா ஒரு சிரிப்பு ஹா ஹா ஹா..

      Delete
    2. /என்னா ஒரு சிரிப்பு// - அதில் ஏதோ வில்லத்தனம் தெரிவதுபோல இருக்கோ? ஹா ஹா.

      அப்போ அப்போ பாராட்டுவதற்காகவே தன் தூக்கத்திலிருந்து எழுந்து வருகிறாரோ கோபு சார்?

      Delete
    3. //அப்போ அப்போ பாராட்டுவதற்காகவே தன் தூக்கத்திலிருந்து எழுந்து வருகிறாரோ கோபு சார்?//

      ஆமாம். இதனால் என் தொடர் நித்திரையும், இன்பக் கனாக்களும் கெட்டுப்போகுது, ஸ்வாமீ.

      Delete
    4. //அப்போ அப்போ பாராட்டுவதற்காகவே தன் தூக்கத்திலிருந்து எழுந்து வருகிறாரோ கோபு சார்?//

      அதே அதே நெல்லைத்தமிழன், ஆனா இது வேற பாராட்டூ:))

      வை.கோபாலகிருஷ்ணன்..
      //ஆமாம். இதனால் என் தொடர் நித்திரையும், இன்பக் கனாக்களும் கெட்டுப்போகுது, ஸ்வாமீ.//

      ஆமா ஆமா கோபு அண்ணனுக்கு மட்டும் 90 வயசிலயும் இன்பக் கனவுகளாகவே வருது:), ஆனா அதிராவுக்கு இந்த சுவீட் 16 லயும்.. யானை துரத்துவதும் .. பாம்பு கலைப்பதுமாவே கனவு வருதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

      Delete
  25. இப்பவும் அதே அதிராதான்:)

    என்பதை அந்த திருத்திரு (திருட்டு) முழிகளே காட்டிக்கொடுத்து விடுகின்றன. :)))))

    ReplyDelete
    Replies
    1. //(திருட்டு) முழிகளே//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.

      Delete
  26. //இரவு படுக்கப் போகுமுன், சுவாமிப்படத்துக்கு முன்னால் போய் நின்று “கடவுளே என் கனவில் அக்கா வந்திடக்கூடாது, வந்தால் என்னால் தாங்க முடியாது” எனச் சொல்லிக் கும்பிட்டுத் திருநீறு பூசிய பின்னரே படுப்பேன்.//

    கடவுள் கோரிக்கையை நிறைவேற்றினாரா?

    ReplyDelete
    Replies
    1. நிறைவேற்றினார் எனத்தான் நினைக்கிறேன் கோமதி அக்கா[சரியாக நினைவில்லை].. எனக்கு ஒரு பிரச்சனை, எப்பவுமே கனவுத்தொல்லை அதிகம், பகலில் பார்ப்பது நினைப்பது பேசுவது எல்லாமே கனவில் வந்து துலைக்கும் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. எனக்கும் அபபடித்தான்.நானும் நிறைய பேசுவேன்.
      கனவு தொல்லை எனக்கும் அதிகம் விழித்து கொண்டால் மீண்டும் அந்த கனவை நினைப்பேன் அது தொடரும்.

      Delete
    3. ஆஆஆஆஆஅ கோமதி அக்கா.. இந்த பாதியில் விட்ட கனவு.., பின்னர் தொடர்வது எனக்கும் உண்டு ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:))

      Delete
  27. வாழ்த்திய அனைவருக்காகவும் இந்த ரொட்டீஈஈஈஈ:))..

    எடுத்துக் கொண்டேன் ருசி அருமை. பார்க்கவே அழகு.

    ரெபிப்பி பின்னால் வரும்:)) நன்றி நன்றி..🙏🙏🙏🙏🙏🙏

    வரட்டும் வரட்டும் பார்க்கிறேன்.



    ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் அருமை.
    ஊசிக்குறிப்பு சொல்வது உணமை.
    அருமை அருமையோ அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் கோமதி அக்கா, ரொட்டி உங்களுக்குப் பிடிக்கும், உடம்புக்கும் நல்லது.. விரைவில் ரெசிப்பி வரும் ஹா ஹா ஹா..எல்லோரும் இப்பவே வெளிநாட்டுக்கு ரிக்கெட் போட்டுவிட்டதைப்போல தெரியுது:)) ரெசிப்பியிலிருந்து தப்ப:)).

      Delete
  28. தங்களின் அக்கா பாசம் போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ, நானும் நினைப்பதுண்டு என்னைப்போல எல்லாத் தங்கைகளும் அழுவார்களோ என.

      மிக்க நன்றிகள்..

      Delete
  29. நல்ல பகிர்வு.

    சகோதரி மீது கொண்ட பாசம் நெகிழ வைத்தது.

    ஊசி இணைப்பு - :)

    ReplyDelete
  30. கடைசியில் வந்திருக்கேன் போல. வந்திருக்கிறதாவது தெரியுமோ இல்லையோ? அக்கா புராணம் அருமை. மனசை நெகிழ்த்தியது. எப்போவுமே அக்காவுக்குத் தங்கைகள் அருமையான தோழிகளாக அமைந்து விடுகின்றனர். உங்களுக்கும் அருமையான அக்கா/அம்மாவைப் போல்! எனக்கு ஒரு உடன் பிறந்த சகோதரி இல்லை என்பதைப் பல முறை உணர்ந்திருக்கேன். உங்க அக்கா பாசத்தைப் பார்த்துக் கொஞ்சம் பொறாமையாக் கூட வருது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா... நீங்க அம்பேரிக்கா போய் 4 கிலோ கூடிட்டீங்களாம்:) அப்போ தெரியாம இருக்குமோ?:) ஹா ஹா ஹா... இல்ல கீசாக்கா... நானும் கொஞ்சம் பிஸியாகிட்டேன்...
      உங்களை நினைச்சுக்கொண்டே இருந்தேன்... கீசாக்கா இப்போ எயார்போர்ட் போயிருப்பா.. இப்போ சென்னையில் இறங்கியிருப்பா... சம்பந்தி வீட்டுக்குப் போயிருப்பா... இப்போ வீட்டுக்கு வந்திருப்பா... என்றெல்லாம்...
      அம்மா மண்டபம் காவேரி எல்லாம் அப்பூடியேதான் இருக்குமென நினைக்கிறேன்.
      பயணக் களைப்பையும் மறந்து வந்திருக்கிறீங்க மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
  31. நெப்போலியன் பாராட்டிய குழந்தை நீங்க தானா? அப்போ இத்தனை நூற்றாண்டுகளாகவா இருக்கீங்க? ஹையோ எத்தனை வயசு ஆச்சு உங்களுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!! உங்களை உடனே நேரில் பார்க்கணுமே! குழந்தை மாதிரியே இருப்பீங்களா? பாட்டி மாதிரியா? அந்த ஊசி இணைப்பைப் படிச்சதும் அப்படியே மயங்கி விழுந்துட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இதிலிருந்து.... இனிமேலாவது நம்புங்கோ அதிரா ஒரு ஞானி என்பதை:)...
      ஊசிக்குறிப்பு:)-
      ஞானிக்கு என்றும் வயஸு 16 ஏஏஏதேன்:)... பழங்களும் பச்சை இலை குழைகளையுமே சாப்பிடுவதால்:).. ஸ்கின் எல்லாம் பேபி ஸ்கின் போல இருக்கும்:)... இது போதும் என நினைக்கிறேன் ஹா ஹா ஹா
      நன்றி கீசாக்கா.

      Delete
    2. //பழங்களும் பச்சை இலை குழைகளையுமே சாப்பிடுவதால்:)..// - எனக்குத் தெரிந்து பசு மாடு எதுவும் பேபி ஸ்கின்னோட பார்த்ததில்லை. அப்படிப்பட்ட ஆடுகளையும் பார்த்ததில்லை. யாராவது பார்த்திருந்தால் சொல்லுங்க.

      Delete
    3. அது அது செகண்ட் infancy :)))))))))))))

      Delete
    4. [im] https://millieschmidt.files.wordpress.com/2016/08/cat-hiding.gif?w=379&h=284[/im]

      Delete
  32. என்றும் பதினாறுப் பதினாறு வயது பிஞ்சு அதிராவுக்குப் பாசமலர்ப் பட்டம் கொடுக்கும் பதிவு இது.
    அக்காவும் நீங்களும் வெகு அழகு.

    இப்படி ஒரே ஃபீலிங்க்ஸ் ஆ போச்சே,. எங்க வீட்டில நான் தான் அக்கா. மத்தவங்கதான் அழுதாங்க.
    பாசமலர் அஞ்சுன்னு பெயர் வைத்துக் கொள்ளுங்கள்.

    அருமையாக விவரமா எழுதியதைப் படித்து நானும். கலங்கி போனேன்.

    அக்கா வீட்டுக்கு வரும்போது இங்கயும் வந்துட்டுப் போங்க.
    ஊசிக்குறிப்பு அருமை.

    நெப்போலியன் உங்களைத் தூக்கி கொஞ்சினாரா.
    நெப்போலியன் கண்ட அஞ்சு ஆஹா ஞானிதான். சந்தேகமில்லை.
    புது உலகச் சித்தர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வல்லிம்மா வாங்கோ..

      //பாசமலர் அஞ்சுன்னு பெயர் வைத்துக் கொள்ளுங்கள்.//

      ஹா ஹா ஹா என் “பிஞ்சு” பார்த்து வல்லிம்மா குழம்பிட்டா:))..

      //அக்கா வீட்டுக்கு வரும்போது இங்கயும் வந்துட்டுப் போங்க.//
      அது கனடா வல்லிம்மா நீங்கள் இருப்பது அம்பேரிக்காவில எல்லோ...

      //நெப்போலியன் கண்ட அஞ்சு ஆஹா ஞானிதான். சந்தேகமில்லை.
      புது உலகச் சித்தர்.///

      ஹா ஹா ஹா அதனாலதான் நான் ஞானி எனச் சொல்கிறேன் ஆனா ஆரும் நம்புவதாக இல்லை:))..

      மிக்க நன்றி வல்லிம்மா.

      Delete
  33. அதிரா வின் ...சிறிய வயது படம்...so cute...

    உங்க பாசம் கண்டு ரொம்ப வியப்பா இருக்கு...😍😍😍.....

    எனக்கு இரு அண்ணன்கள் கல்யாணத்தின் போது அழுதேன்...
    அப்புறம் ஒவ்வொரு முறை வரும் போது எல்லாம் அழ மாட்டேன்...

    ஆனா எங்க சித்தி அவங்க பொண்ணு க்கு 10 வயதாகும் போதும் அம்மா வீட்டிலிருந்து போகும்போது அழுவாங்க்...


    என்னடா இது ன்னு அப்போ நினைச்சாலும் இப்போ யோசிக்கும் போது அம்மா வீடு அளவுக்கு அங்கு அவங்களுக்கு சுதந்திரம் இல்ல அதான்னு புரியது...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      //எனக்கு இரு அண்ணன்கள் கல்யாணத்தின் போது அழுதேன்...
      அப்புறம் ஒவ்வொரு முறை வரும் போது எல்லாம் அழ மாட்டேன்...//
      அது நமக்கும் திருமணம் குடும்பம் என ஆனபின் அழுகை பெரிதாக வராது பானுமதி அக்கா.... சின்ன வயதில், திடிரென திருமணம் நடந்ததால், சரியான கஸ்டமாகிவிட்டது எனக்கு...

      மிக்க நன்றி அனு..

      Delete
  34. அதிராவின் பாசம் அமர்க்களம்!(ஆஹா! உங்களுக்கு அடுத்த டைட்டில் கொடுத்து விட்டேன்). அந்த புகைப்படத்தில் குண்டு விழிகளில் குறும்பு வழிய நின்று கொண்டிருக்கும் அதிராவுக்கு ஒரு உம்மா!

    ReplyDelete
    Replies
    1. ”அமர்க்கள அதிரா” ஹா ஹா ஹா... வல்லிம்மாவும் இம்முறை பட்டம் தந்திருக்கிறா மேலே...

      //அதிராவுக்கு ஒரு உம்மா!//

      ஹா ஹா ஹா நான் உடனேயே பெற்றுக்கொண்டேன், பதில் சொல்லத்தான் இவ்ளோ தாமதமாகிட்டேன்.... அதுசரி மாஸ்க் போட்டுக்கொண்டோ உம்மா தாறீங்கள்?:)).. ஹா ஹா ஹா இன்று என் ஸ்கொட்டிஸ் நண்பி ஃபோன் பண்ணிச் சொன்னா, சனிக்கிழமை உன்னை மீட் பண்ணப்போறேன், ஆனா நீயும் ஹக் பண்ணக்கூடா நானும் பண்ண மாட்டேன் நீயும் கிஸ் பண்ணக்கூடா நானும் பண்ண மாட்டேன் எனச் சொல்லிச் சிரிக்கிறா.. கொரோனாவாம்ம்:)), ஏனெனில் அவ எப்ப கண்டாலும் கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணி விட்டே கதைப்பா, அதேபோல் பாய் சொல்லும்போதும் ஹக் பண்ணுவா...

      Delete
  35. அதிராவின் பாசம் அமர்க்களம்!(ஆஹா! உங்களுக்கு அடுத்த டைட்டில் கொடுத்து விட்டேன்). அந்த புகைப்படத்தில் குண்டு விழிகளில் குறும்பு வழிய நின்று கொண்டிருக்கும் அதிராவுக்கு ஒரு உம்மா!

    ReplyDelete
  36. Replies
    1. //file:///C:/Users/Compaq/Pictures/sister.gif//
      இது சரியான லிங் இல்லையே பானுமதி அக்கா.. உங்கள் கொம்பியூட்டரில் இருக்கும் படத்தின் லிங் போட்டிங்களோ? அப்படி எனில் இங்கு தெரியாது.... எதுவும் வேலை செய்யவில்லை..

      மிக்க நன்றி பானு அக்கா.

      Delete
  37. பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ... ஓ சந்தோசம்.. நன்றி.

      Delete
  38. அக்கா பாசம் அருமை. அக்காவும் லண்டனில் போல ? பாவம் அந்த நெற்போலியன்![[[[[

    ReplyDelete
    Replies
    1. இல்ல கனடாவில நேசன்.. நெப்போலியன் ஏன் பாவம் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  39. ரொட்டி வேண்டாம் ஆட்டுக்கால் பிஸ்கட் மட்டும் போதும்!

    ReplyDelete
    Replies
    1. ஆட்டுக்கால் முடிஞ்சு போச்ச்ச்ச்ச்:)) இனி ஊரிலிருந்துதான் எடுப்பிக்கோணும் ஹா ஹா ஹா.. மிக்க நன்றி நேசன்.

      Delete
    2. 'எதிர்பாராமல் வந்து குதித்து ' அடடா ! அதிரா அல்லவா என்றி அப்படித்தான் இருக்கும் :)))
      அக்கா பாசம் .....பிரிவு நன்கு தெரிந்திருக்கும்.
      எனக்கும் ஒரு அக்கா கூடவே இருந்ததில் பிரிவு தெரியவில்லை .எங்கள் இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். அன்பானவர் எல்லாவற்றையும் விட்டுகொடுப்பார்.நானும் உணர்ந்து கொண்டேன்.எங்களுக்குள் ஒரு நாளும் சண்டை வந்ததில்லை.

      Delete
    3. வாங்கோ மாதேவி வாங்கோ..

      //அதிரா அல்லவா என்றி அப்படித்தான் இருக்கும் :)))//

      ஹா ஹா ஹா.. இது சூப்பர்ர்:))...

      பெருமாப்லும் அக்கா தங்கை எனில் பாசமாகத்தான் இருக்கிறார்கள்.. நன்றி மாதேவி.

      Delete
  40. இருவாரப் பயணம் முடிந்து இன்றுதான் கணிணி பக்கம் வந்தேன்.

    இந்த இடுகையை இப்போதுதான் படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      தெரியும் நீங்கள் குருஷேத்திரம் எல்லாம் போனமையால பாண்டவர் நினைப்பில இருப்பீங்க புளொக்ஸ் ஐ எல்லாம் மறந்திருப்பீங்களென:))

      //இந்த இடுகையை இப்போதுதான் படிக்கிறேன்.//

      ஆஆஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க மொபைலில் படிச்சிருப்பீங்கள், ஆனா கொமெண்ட்ஸ் போட முடியாமல் இருப்பீங்கள் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்..

      நன்றி நன்றி பயணம் முடிஞ்சதும் வந்து படிச்சுக் கொமெண்ட்ஸ் போட்டமைக்கு.

      Delete
  41. //அப்பா எனக்கு ஒருநாள்கூட அடிச்சதில்லை// - இந்த சிமியோன் டீச்சர் எங்க போனாங்க. அவங்க வாட்சப் நம்பர் கிடைச்சாத் தேவலை... என்னை ஒருநாள் கூட அடிச்சதில்லை. இப்படித் தமிழ் சொல்லிக்கொடுத்து நான் ஓஞ்சு போயிடுவேன் போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. //இந்த சிமியோன் டீச்சர் எங்க போனாங்க. //

      ஹா ஹா ஹா கர்ர்:)) எதுக்கு இப்போ சிமியோன் ரீச்சரைத் தேடுறீங்க:))..

      //அவங்க வாட்சப் நம்பர் கிடைச்சாத் தேவலை.//
      கோபு அண்ணனின் வட்சப் லிஸ்ட்டில் ஒருவேளை இருக்கலாம்:)) எதுக்கும் ஒருக்கால் செக் பண்ணுங்கோ நெ.தமிழன் ஹா ஹா ஹா:))..

      //இப்படித் தமிழ் சொல்லிக்கொடுத்து நான் ஓஞ்சு போயிடுவேன் போலிருக்கு.//
      ஆஆஆஆஆஆ எனக்கு அடிச்சதில்லை எண்டால் தப்போ?:)) ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. பொருட்பிழை வருதோ?

      *என்னை அடிச்சதில்லை,
      *எனக்கு அடிச்சதில்லை,...
      ///
      இரண்டும் ஒரே மாதிரியே இருக்கே எனக்கு:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. //*என்னை அடிச்சதில்லை,
      *எனக்கு அடிச்சதில்லை,...//

      எனக்கு கண்ணெல்லாம் சுத்துதே ..இதை பாக்காம விட்டுறேந்தே ..இப்போ எனக்கு ப்ரெஷர் ஏறினா அதுக்கு இந்த நெல்லைத்தமிழன்தான் காரணம் 

      Delete
    3. எனக்கு அடி  கொடுத்தாங்க என்னை அடிச்சாங்க //இது ரெண்டையும் சேர்த்தடிச்சு விட்டுருக்கு பஞ்சு 

      Delete
    4. ஹையோ ஆண்டவா... நாங்கள்.. இப்பூடித்தான் வீட்டில பேசுவோமாக்கும்... எனக்கு ஆரும் அடிச்சதில்லை, ரீச்சர்கூட அடிச்சதில்லை.. இப்படித்தான் பேசுவோம்ம்..

      அடிப்பது என்பதுதான் சரியான தமிழ், ஆனா இது பேச்சுவழக்கு... இதுக்காகத்தான் போஸ்ட் இல் சொல்ல நினைச்சு இன்னும் எழுதாமல் இருக்கிறேன்ன்:)) ஹையோ வைரவா இன்னும் எங்கின இருக்கிறாயப்பா:)) ஹா ஹா ஹா..

      Delete
  42. //நானேதான் அக்குழந்தை:)) // - முன் ஜென்ம நினைவுகளெல்லாம் வருது போலிருக்கே..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இந்த ஐடியா எனக்கு ஏற்கனவே வராமல் போச்சே நெ தமிழன்:), வந்திருந்தால், மேலே கேள்வி கேட்டோருக்குச் சொல்லி இருப்பேனே :))

      Delete
    2. //முன் ஜென்ம நினைவுகளெல்லாம் வருது போலிருக்கே..//

      அது 80  வயசு ஆனாலே பழசெல்லாம் நினைவுக்கு வருமாம் :) ஹெல்த் கேர் ட்ரெயினிங்கில் சொன்னாங்க 

      Delete
    3. சாரி ஏஞ்சலின்... என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க. ஜாலியா எடுத்துக்குங்க.

      //80 வயசு ஆனாலே பழசெல்லாம் நினைவுக்கு வருமாம்// - சமீபத்தில் அந்தக்காலத்தில் தான் இருந்த வீடுகள், இடங்கள் பற்றில்லாம் யாருக்கு நினைவுக்கு வந்து, உடனே இடுகை போட்டாங்க? யாருன்னு தெரியலையே... கொஞ்சம் யோசிச்சும் கண்டுபிடிக்க முடியலை. அதிரா உதவினால்தான் உண்டு.

      Delete
    4. ///நெல்லைத் தமிழன்Monday, March 09, 2020 3:55:00 pm
      சாரி ஏஞ்சலின்... என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க. ஜாலியா எடுத்துக்குங்க.//

      ஹா ஹா ஹா என்னா ஒரு முன் எச்சரிக்கை:)) சிரிச்சு முடியுதில்லை எனக்கு:)).. இந்த வசனம் பார்த்ததுமே.. ஏதோ அதிராவுக்கான நல்ல செய்திதான் அடுத்து வரப்போகுது என நினைச்சபடியே படிச்சனா:)).. தேன் வந்து பாயுது காதினிலே:)) ஹா ஹா ஹா..

      //சமீபத்தில் அந்தக்காலத்தில் தான் இருந்த வீடுகள், இடங்கள் பற்றில்லாம் யாருக்கு நினைவுக்கு வந்து, உடனே இடுகை போட்டாங்க? யாருன்னு தெரியலையே... கொஞ்சம் யோசிச்சும் கண்டுபிடிக்க முடியலை. அதிரா உதவினால்தான் உண்டு.///

      மீ 100 வீதமும் உதவ ரெடீஈஈஈஈஈஈஈஈ:)) அதுவும் 11 வயசுக்கு முன்பிருந்த வீட்டுக்கதையெல்லாம் பந்தி பந்தியாக அடிச்சு விட்டாவே.. வேறு ஆரூஊஊஊஊ?:)) டேவடைக் கிச்சின் ஒனர்தேன்ன்ன்ன் ஹா ஹா ஹா:))..

      உங்களுக்கு விரைவில ரவா லட்டு செய்து ரெசிப்பி போடுறேன் நெ.தமிழன்:)) ஹா ஹா ஹா..

      Delete
    5. ///உங்களுக்கு விரைவில ரவா லட்டு செய்து ரெசிப்பி போடுறேன் நெ.தமிழன்:)) ஹா ஹா ஹா..//
      இப்போ இது தேவையா உங்களுக்கு :) குழைசாதத்தை பார்த்ததில் இருந்து அப்பப்போ மயங்கி விழுறீங்க இப்போ இதுவும் சேர்ந்து என்னாகப்போதோ :)))))))))

      Delete
  43. //ரெபிப்பி பின்னால் வரும்:))// - துன்பம் வரும் பின்னே... அறிவிப்பு வரும் முன்னே என்கிற கதையால்ல இருக்கு..

    ஏதோ ஏஞ்சலினிடம் ரிக்வெஸ்ட் பண்ணியதால, அவர் ரொட்டியை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து எழுதுவார் பாருங்க...

    ReplyDelete
    Replies
    1. //துன்பம் வரும் பின்னே... அறிவிப்பு வரும் முன்னே என்கிற கதையால்ல இருக்கு..//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னால ஆருக்கும் ஹார்ட் அட்டாக் வந்திடக்கூடாதென்ணும் நல்லெண்ணத்தாலயே இந்த முன்னறிவிப்பு:)) ஹா ஹா ஹா இப்போ தெரியுதோ அதிரா ரொம்ப நல்ல பொண்ணு என்பது:))..

      //அவர் ரொட்டியை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து எழுதுவார் பாருங்க...//

      அப்பூடியா சொல்றீங்க:))... நீங்க இப்பூடிச் சொல்லியே அஞ்சு புகழ்வதை நிறுட்த்ஹிடப்போறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதுக்குப் பயந்தே புகழாமல் விட்டிடப்போறாவே:)).. சே..சே... நமக்குக் காலம் சரியில்லை:)) இந்த ஜனவரி பிறந்ததிலிருந்தே ஆட்டிப் படைக்குதே:)).. இருப்பினும் பூஸோ கொக்கோ ஹா ஹா ஹா..

      Delete
    2. @நெல்லைத்தமிழன் :) நான் புகழலை :) எனக்கு அது கோதுமை மைதான்னு சந்தேகம் வந்தா கண்ணை மூடிட்டு ஓடிடுவேன் 

      Delete
    3. நானும் அனேகமா மைதாவை (மாவாக வாங்குவதை) விட்டுவிட்டேன். கோதுமை மாவும், இந்த 'சப்பாத்தி ஆட்டா' பிராண்டுகளை வாங்காமல், தூய கோதுமை மாவு வாங்க ஆரம்பித்திருக்கிறேன்.

      எனக்கு ஏதோ ஒரு மசாலாப் பொருள் ஒத்துக்கொள்வதில்லை (அலர்ஜி வரும்). அது என்ன என்று கண்டுபிடிக்க முடியலை. பொதுவா 3 மாசத்துக்கு ஒரு தடவை வரும். கடந்த இரு வருடங்களில் இரு தடவைதான் லைட்டாக தலை காட்டியது. (வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதால்). அந்த இரு தடவையில் ஒரு தடவை ஒரு கடையில் ஆன்லைனில் ஆர்டர் செய்து பேல் பூரி சாப்பிட்டேன். இன்னொரு தடவை கைலாஷ் பர்வத்தில் மகள் ரெகெமெண்ட் செய்து சென்னா பட்டூரா சாப்பிட்டேன். அதில் உபயோகப்படுத்திய மசாலா ஒத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் தீவிரமாகவே அலர்ஜி வந்துவிடும் என்று தோன்றியது... நல்லவேளை.. அரை மணி நேரத்தில் அதுவாகவே அடங்கிவிட்டது.

      Delete
    4. அஞ்சு அது கோதுமையும் இல்லை மைதாவும் இல்லை. குளூட்டர் ஃபிறீ ...........:)) இடைவெளி பின்பு நிரப்பப்படும்:))

      Delete
    5. அலர்ஜிக் குளிசை கிடைக்கிறது நெ.தமிழன், கை காவலுக்கு வாங்கி வச்சிருங்கோ, அது தாக்கம் இல்லாதது, ஏதும் அலர்ஜிக் குணமாக இருப்பின் ஒரு குளிசை எடுங்கோ.. உடனே நோர்மலாயிடும்.

      Delete
  44. உங்கள் இடுகையைப் படித்தேன். வாழ்க்கையில் நம்மிடம் இருப்பவைகளின் அருமை தெரியாது. அவைகள் நம்மை விட்டுப் பிரியும்போதுதா அவைகளின் அருமை தெரியும் போலிருக்கு.

    மிகவும் நெகிழ்ச்சியான, சோகமான பதிவாத்தான் இது தோணுது...

    உங்க அக்கா, உங்களைவிட படத்தில் வடிவாத் தெரியறாங்கன்னு சொல்லி, உங்க கிட்ட வம்பு வளர்க்க விரும்பலை.

    உங்க அண்ணன் நல்லா இருக்காரா? வெளிநாட்டில் இருந்தபோதும் நீங்க அவ்வப்போது உங்க அக்கா வீட்டுக்குப் போய்வருவதும் (அந்தப் பிரயாணத்தைத் தம்பட்டம் அடிப்பதும்) மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

    நீங்கள் நலமுடம் இருக்கப் ப்ரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //வாழ்க்கையில் நம்மிடம் இருப்பவைகளின் அருமை தெரியாது. அவைகள் நம்மை விட்டுப் பிரியும்போதுதா அவைகளின் அருமை தெரியும் போலிருக்கு.//

      அதுக்காக, எல்லாமுமே அப்படி ஆகிடாது என நினைக்கிறேன்...

      //உங்க அக்கா, உங்களைவிட படத்தில் வடிவாத் தெரியறாங்கன்னு சொல்லி, உங்க கிட்ட வம்பு வளர்க்க விரும்பலை.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அக்கா என்னை விட ரொம்ப அமைதியான சுபாவம்.. ஆனா இப்போ நான் அக்காவை விட உயர்ந்திட்டேன்:))..

      //உங்க அண்ணன் நல்லா இருக்காரா?//
      ஓம் அவர்கள் எல்லோரும் நலமே இருக்கினம் நெ.தமிழன், அங்கு எங்களை எயார்போர்ட்டில் வரவேற்பது அண்ணன் தான்:)).. அவர்களும் ஒரு ஆம்பிளைப்பிள்ளை வளர்க்கினம்[பூஸார்].. அது ஒரு பப்பியைப்போல ஓடிப்போய் பந்தைக் கடித்து எடுத்து வந்து கொடுக்கிறது, திரும்ப எறிஞ்சால்ல்.. மீண்டும் ஓடித்தேடி எடுத்து வந்து குடுக்கிறார்ர் கர்ர்ர்:))..

      எங்கள் டெய்ஷி ஓடிப் பிடிப்பா ஆனா எடுத்து வந்து தரமாட்டா[அதிராவின் பிள்ளை எல்லோ:)) அதிராவைப்போல ரொம்ப அடக்க ஒடுக்கமாக்கும் ஹா ஹா ஹா:))..

      //வெளிநாட்டில் இருந்தபோதும் நீங்க அவ்வப்போது உங்க அக்கா வீட்டுக்குப் போய்வருவதும்//

      எல்லோருமே ஒரு நாட்டில் இருக்கினம், நாங்கள் மட்டும்தான் தூர வந்திட்டோம்ம்..

      //(அந்தப் பிரயாணத்தைத் தம்பட்டம் அடிப்பதும்//

      ஹா ஹா ஹா பின்ன நம்மள நாமளேதானே புகழோணும்:))

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
    2. உங்கள் அண்ணனும் கேனடாவில் இருப்பது என் நினைவில் இல்லை. எல்லோரும் நலமாக இருக்கட்டும்.

      நல்ல நெல்லைப் போல, பிறந்தது ஒரு இடம், வளர்வது இன்னொரு இடம் என்பது போல உங்கள் எல்லோருக்கும் ஆகிவிட்டது. உங்களைவிட உங்கள் அடுத்த தலைமுறை இன்னும் வாழ்க்கையில் உயரத்தைத் தொடட்டும்.

      என்னுடன் வேலை பார்த்த இலங்கைத் தமிழர் (அவரைப் பற்றி முன்னமேயே குறிப்பிட்டிருக்கிறேன்) டாக்டர் படிப்பிற்கான இடம் கிடைக்காமல் போய்விட்டது (இலங்கையில்) என்று வருத்தப்பட்டார். பிறகு கணிணி படித்து முன்னேறிக்கொண்டிருக்கிறார். அவரே வெளிநாட்டில் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் இலக்கை அடைந்திருப்பார். நம் சகோதரர்கள் நல்ல நிலையை அடைவது மகிழ்ச்சிதானே.

      Delete
    3. இலங்கையில் உள்ள ஒரு பிரச்சனை நெ.தமிழன், யூனிவசிட்டிக்கு நல்ல மார்க்ஸ் எடுத்தோர் மட்டுமே போக முடியும், கட் அவுட் மார்க்ஸ்சில இருந்து ஒன்று குறைந்தோர் கூட வேறு எங்கும் படிக்கும் வசதி இருக்கவில்லை, சிங்களப்பகுதியில் கொஞ்சம் கொலிச் இருந்தது ஆனா அங்கு நம்மவர்கள் போய்ப் படிக்கப் பயமெல்லோ முன்பு.. அதனால எத்தனையோ கெட்டித்தனமான பிள்ளைகள் எல்லாம், நாட்டுப் பிரச்சனையால படிக்க முடியாமல் போயிருக்கினம் என்பது மிக மிக வருத்தத்துக்குரிய செயல்.. அங்கு யூனிவசிட்டியை விட்டால் எக்ஸ்றாவாக பணம் கட்டிப் படிக்கும் இடங்கள்[college] இல்லை இந்தியாவைப்போல..

      பக்கத்து வீட்டு அண்ணா ஒருவர் ஒரு மார்க்ஸ் ஆல எஞ்சினியரிங் கிடைக்காமல் போய், பிஸிகல் சயன்ஸ் செய்தார், ஆனா பின்பு யூகே வந்து பி எச் டி யும் முடித்தார், இருப்பினும் அவருக்கு அந்த ஒரு மார்க்ஸ் ஆல எஞ்சினியரிங் தட்டுப்பட்டது கவலையோ கவலை, வேறு வழியில்லை அங்கு அதே படிப்பைத்தொடர.. ஆனா கள்ளமான செயல்பாடுகள் இதுவரை நிகழவில்லை .. கேள்விப்படவில்லை..

      இனி நிலைமை மாறும்.. மாறி வருகிறது..

      மிக்க நன்றி...

      Delete
  45. இந்த சீராளன் சீராளன் என்று ஒரு கவிஞர் இருந்தாரே... அவர் எங்கே காணோம்? ஒவ்வொரு இடுகைக்கும் கவிதை எழுதுவார். ரசிக்கும்படி இருக்கும். இப்போ எப்படி இருக்கிறார்?

    ReplyDelete
    Replies
    1. ஓம் நெல்லைத்தமிழன், நானும் இடைக்கிடை நினைக்கிறேன், வேலை பிசி என்பார் அடிக்கடி காணாமல் போயிடுவார்ர்.. எனக்கு அவருடன் புளொக் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லாததால், எதுவும் தெரியாது...

      சீராளன் மேஜரே.. இதனைப் படிச்சால் வந்திடுங்கோ என் ரொட்டிக்கு கவிதை கொண்டு ஹா ஹா ஹா..

      அனைத்துக்கும் மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.. பயணக் களைப்பையும் பார்க்காமல் வந்திருக்கிறீங்க.. மிக்க மகிழ்ச்சி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.