எல்லோரும் முறைப்பீங்க என் கவித:) பார்த்து என எனக்கு நல்லாவே தெரியும்... அதுக்காக நானே என் கைப்பட, என் ஒரே ஒரு கிட்னியைப் பாவித்து எழுதிய “அருமந்த கவிதையை” , என் பக்கத்தில நானே போடத் தயங்கினால்...
அதைவாங்கி ஸாதிகா அக்கா போடுவாவா?, இல்ல ஜலீலாக்கா போடுவாவா?, இல்ல இமா போடுவாவா? இல்ல ஆசியாதான் போட்டிடுவாவா தன் பக்கத்தில, அதுவுமில்லாட்டில் இடிச்சு இடிச்சு பக்கத்திலயே ஒட்டிக்கொண்டிருந்தாலும் இலா தான் போட்டிடுவாவா?.. போனாப்போகுதென வான்ஸ்ஸ் கொண்டுபோய் போட்டிடுவாவோ? இல்ல இன்னும் எல் போர்ட்டாகவே இருக்கிறமே இக்கவிதையைப் போட்டாவது பாஷாகிடுவமே என சந்துதான் தூக்கிப்போய் போட்டிடுவாவோ?:))).
யாருமே போடமாட்டாங்க:((, சோ... நான் போட்டேதான் ஆகவேணும்... ஏன் எண்டால் இது முளுக்க முளுக்க என் உழைப்பாச்சே....
உஸ் முறைக்காதீங்க... இப்ப என்ன காலம்? காலத்துக்கேற்றபடி சிந்திக்கத் தெரியோணும் என்னைப்போல.... அதைவிட்டுப்போட்டு முறைக்கப்பிடா.... எனக்குத் தெரியும் பின்னூட்டம் போடமாட்டீங்க ஆரும் என.. சரி சரி படிச்சிட்டாவது போங்க மக்காள்ஸ்ஸ்ஸ்..

=====================================================
இளவேனிற்காலம்
![]() |
| இவை சுடச்சுட எடுத்த படங்களே... |
புற்றாலே புறப்பட்ட
ஈசல்களாக
பார்க்குமிடமெல்லாம்
மக்கள் கூட்டம்!!
ஆடையின்றி இருந்த
பசுமரங்களெல்லாம்
பச்சை இலைகளையும்
பலவர்ணப் பூக்களையும்
கொண்டு - தம்
மானத்தை மறைக்க
முயல்கின்றன!!
வெறிச்சோடியிருந்த
"பார்க்"குகளெல்லாம்
குழந்தைகளின்
குதூகலத்தைக் கண்டு
புத்துயிர் பெறுகின்றன!!
அரையும் குறையுமாக
இருந்த குப்பைத்
தொட்டிகளெல்லாம்
நிரம்பி வழிகின்றன - வீடுகள்
சுத்தப்படுத்தப்படுவதால்!!
இறந்து விடுவோமா
என பனிக்கட்டிக்குள்ளே
ஏங்கிக்கிடந்த - புல்
வேர்களெல்லாம்
விட்டோமா பாரென
விட்டத்தைப் பார்த்துப்
பசும்தரையாகின்றன!!
இருட்டையும் குளிரையுமே
கண்டு விறைத்திருந்த
கண்களெல்லாம்
வெளிச்சத்தைக்
கண்ட நாணத்தில்
கறுப்புக்கண்ணாடியைத்
தேடுகின்றன -தம்மை
மறைத்துக்கொள்ள!!
நீயின்றி நானில்லை -என
ஒட்டி உறவாடிய
குளிர்கால அங்கிகளெல்லாம்
சிறிது ஓய்வெடுக்கவென்று
அடிப்பெட்டியிலே
அடைக்கலமாகின்றன!!
காணாத தூரத்திலிருந்த
பறவைகளும் அவற்றின்
அழகிய கூக்குரல்களும்
கண்ணுக்கும் காதுக்கும்
கவிமழையாகின்றன!!
நானும் இதுவரை
போட்டிருந்த என்
முக்காடை நீக்கி,
மெதுவாகப் பார்க்கிறேன்
ஆம் - இளவேனில் காலம்
ஆரம்பித்துவிட்டதை!!
====================================================
ஊசி இணைப்பு:
======================================================
ஆயிரம் தான் சொல்லுங்கள்
கல்லாய் நடக்கும் மனிதர்களை விட
கல்லாய் கிடக்கும் கல்
மேன்மையானதே
======================================================
======================================================
|
|
Tweet |
|
|||