எங்கு சுத்தினாலும், எப்படி மாறினாலும், யாரால் மாற்றப்பட்டாலும், யாருக்காக மாறினாலும் எதுவுமே நிரந்தரமில்லை.. அத்தனையும் நடிப்பாகவே இருக்கும்... முடிவில் நாம் நாமாகத்தான் இருப்போம்.
எப்பவுமே இதில் எனக்கு குழப்பம் உண்டு, அதாவது சிலர் சொல்கிறார்கள் மற்றவருக்குப் பிடித்தமாதிரி நம்மை நாம் மாற்ற வேண்டும் என, ஆனா என்னைப் பொறுத்து அடுத்தவருக்காக நாம் அஜஸ்ட் பண்ணிப் போகவேண்டுமே தவிர மாற நினைக்கக் கூடாது.
ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும், இயற்கையான சுபாவம் இருக்கும் இவற்றை மாத்த முடியாது, அடுத்தவருக்காக இவற்றை மாற்ற நினைத்தால் அது ஒரு தற்காலிக நடிப்பாகவே இருக்கும் அதே நேரம் எமக்கும் அது மனதில் ஏதோ ஒரு அன்னீசியான:) தன்மையையே தரும், அவ் மாற்றம் நீடிக்காது, சில காலத்திலேயே எம் உண்மையான சுபாவம் தான் வெளியே வரும்.
எங்கட கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்
நான் நினைப்பதுண்டு இக்காலத்தில் அதிகமான காதல்கள்.. கல்யாணங்கள் விரைவில் முறிவுக்கு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என, அதாவது தான் விரும்பும் பெண்/ஆணுக்கு தன்னைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக சிறிது காலம், அவர்களுக்குப் பிடித்தமானபடி தம்மை மாற்றி அமைக்கிறார்கள் இதனால் காதல் சிலகாலம் நீடிக்குது, பின்பு நெடுகவும் நடிக்க முடியாதுதானே அப்போ உண்மை சுபாவம் வெளியே வந்ததும் ஒத்து வராமல் போய் விடுகிறது.
இதனால் என்னைப் பொறுத்து நாம் நாமாகவே எப்போதும் இருப்பதுதான் நல்லது, அடுத்தவருக்காக மாற நினைத்தால்... மாறலாம் ஆனா அது நீடிக்காது... அடுத்தவருக்காக மாற்றக்கூடியது, நம் உடை, அலங்காரம், பொழுதுபோக்கு இப்படியான இடையே வந்த விசயங்களை, ஆனா குணாதிசயம் என்பது அது நம் Genes இலயே இருப்பது... மாற்ற முடியாதது.
சரி இப்போ வண்டலூர் சிங்கம் பற்றிச் சொல்றேன் கேழுங்கோ...
வண்டலூர் ஸூவில் ஒரு சிங்கம், ராஜாவைப் போலவே நல்ல சொகுசான வாழ்க்கையில் இருந்ததாம், நல்ல இறைச்சி மீன் வகைகள் ரைம்முக்கு ரைம் கிடச்சுதாம்... இப்படி இருக்கையில் ஒருநாள் அச்சிங்கத்துக்கு அமெரிக்கா போகும் ஆசை வந்துதாம், சரி என அமெரிக்காவுக்குப் போய் அங்கே ஒரு ஸூவில் இருந்துதாம்.
அங்கு போன நாள் தொடக்கம், இச் சிங்கத்துக்கு எப்பவுமே பழங்கள் கீரை வகை மரக்கறிவகை தான் கொடுத்தார்களாம், சரி ஏதோ புதுசுக்கு தருகிறார்களாக்கும் என பொறுமை காத்ததாம் சிங்கம், ஒரு வாரமாகியும் அதே சைவ உணவுகளே கிடைத்தமையால், கோபமடைந்த சிங்கம், அவ் உணவு தருபவரைப் பார்த்துக் கத்தியதாம், இங்கே பார் நான் ஒரு ராஜா, வண்டலூரில் எனக்கு எப்படியான உணவுகள் கிடைத்தது தெரியுமோ? இங்கு எதற்கு “சைவ” உணவே தருகிறாய் என...
அதற்கு அவ் உணவு கொடுப்பவர் சொன்னாராம், நான் என்ன பண்ண, நீங்கள் அங்கிருந்து இங்கு வந்தது, ஒரு ஒட்டகத்தின் பாஸ்போர்ட்டில், அதனாலேயே ஒட்டகத்தின் மெனுவையே உங்களுக்குத் தருகிறோம் என:)..
....... தேவைக்காக மாற நினைத்தால் இப்படித்தான் ஆகிவிடும்...
ஊசிக் குறிப்பு:
இந்த ஊசிக்குறிப்பு ரொம்பப் பிடிச்சிருக்குது எனக்கு:), ஆனா அதுக்கு ஹிட்லரின் காலத்தில் பிறந்திருக்கோணும்.. :)

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
|
|
Tweet |
|
|||