நல்வரவு_()_


Sunday 6 June 2010

“தீபுக்குட்டி”

வாணி, குழந்தைப்பருவமாக பரண் ஐ ஆரம்பித்தா, ஒரு வயதுப் பையனான அரண் ஆக மாற்றி அதை இமா தொடர்ந்தா... பின்னர் சந்தனா சாந்தி யை இணைத்து ஒரு கதை எழுதினா... அனைவரையும் ஒன்றிணைத்து நான் “தீபுக்குட்டியை” எழுதுகிறேன்..... இன்னும் விரும்புபவர்கள் தொடருங்கோ.




அன்பான உங்களுக்கு.....
என்னைத் தெரிகிறதா? நான்தான் தீபுக்குட்டி. என் பெயர் தீபனா, என்னை எல்லோரும் செல்லமாக தீபுக்குட்டி என்றே அழைப்பார்கள், இப்போ எனக்கு தீபனா என்ற பெயர் மறந்தேவிட்டது. எனக்கு வயது 11. எனக்கு ஒரு தம்பி, பெயர் தீபக்.

நான் இப்பொழுது ஆறாம் வகுப்பில் படிக்கிறேன். கொஞ்ச நேரம் மட்டுமே, இக்கணனியோடு இருக்க எனக்கு அப்பா அம்மாவிடமிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது. அதுக்குள் சோட் அண்ட் ஸ்வீட் ஆக என் முந்தைய அனுபவங்களைச் சொல்லிவிடலாம் என வலைப்பூவுக்கு வந்தேன். நான் வலைப்பூ வைத்திருப்பது அப்பா அம்மாவுக்கு விருப்பமில்லை, அவர்கள் விரும்பாத எதையும் செய்ய எனக்கும் விருப்பமில்லை. காரணம் படிப்பைக் குழப்பிவிடுமாம். அது உண்மைதான், ஆனாலும் நான் நன்கு படிப்பேன். இருப்பினும் இடையிடையாவது வந்து ஹலோ சொல்லிப்போவேன்.

இப்பொழுது நான், பெண்கள் உயர்தரப் பள்ளியில் படிக்கிறேன். இதற்கு முன் கலவன்(ஆண்கள், பெண்கள்) பிறைமறி ஸ்கூலில் படித்தேன். அங்கு 1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரையுமே உண்டு. நான் முதலாம் வகுப்பிலே சேர்ந்தபோது, என் குரூப்பிலே நாங்கள் ஐந்துபேர் இருந்தோம். என்னோடு
1.
டொமார் 2.பரண்
3. அரண்
4.
சாந்தி.

முதல்நாள் வகுப்பிலே, நான் அழுதுகொண்டிருந்தபோது, தனது பொக்கட்டிலிருந்த சொக்காவை எனக்குத் தந்து, என் அழுகையை நிறுத்தச் சொன்னது டொமார்தான். அன்று தொடங்கி, நாங்கள் ஐவரும் நல்ல பெஸ்ட் ஃபிரெண்ட் ஆகிவிட்டோம்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னை எல்லோரும் தீபுக்குட்டி என்றே அழைத்தார்கள். எனக்கது பிடிப்பதில்லை. இது என்ன இது “மசுக்குட்டி” மாதிரி இருக்கே எனப் பலதடவை நினைத்ததுண்டு. ஆனால் முதலாம் வகுப்பிலே சேர்ந்த அன்று, எங்கட ரீச்சர் என்னிடம் வந்து “தீபுக்குட்டி!! பூனைக்குட்டி மாதிரி இருக்கிறாயம்மா, இரட்டைக்குடும்பி யார் கட்டிவிட்டது” எனக் கேட்டபோது, கோபத்திலே எனக்கு முகம் சிவந்தே விட்டது. அப்பொழுதுதான் அவவின் பெயர் “ஐசுக்குட்டி” என்பது தெரிந்தது. அன்றிலிருந்து தீபுக்குட்டி என்ற பெயரும் எனக்கு நன்கு பிடித்துவிட்டது.

அப்பாடசாலையின் அதிபர், எங்கள் அப்பாவின் நண்பர். வெள்ளிக்கிழமைகளில் எல்லோரும் பிரேயர் ஹோலிலே ஒன்றுகூடித் தேவாரம் படிப்பதுண்டு. அதன் பின்னரே வகுப்புக்கள் ஆரம்பமாகும். தேவாரம் சொல்லிக்கொடுக்க, அதிபர்தான் யாராவது ஒரு பிள்ளையை மேடைக்கு அழைப்பது வழக்கம். பெரும்பாலும் தீபுக்குட்டி என என்னையே அழைப்பார், நான் டொமாரையும் சாந்தியையும் அழைத்துச் செல்வேன், மூவரும் தேவாரம் சொல்லிக்கொடுப்போம். அரண் கிரிஸ்தவர், பரண் இஸ்லாமியர் என்பதால் அவர்களுக்கு வேறு ஹோலிலே பிரேயர் நடக்கும்.

எமக்குள் சண்டையே வந்ததில்லை. ஒருநாள் தமிழ் ரீச்சர் படிப்பிச்சா “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”, “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என. அதைக் கேட்ட டொமார், இன்ரவலில் எமக்கு , தன் அண்ணாவின் நண்பன் சொன்னாராம் “அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்”, “ஆலயம் தொழுவது வேலை மினக்கேடு” எனச் சொல்லி, விழுந்து விழுந்து சிரிக்க, இதைக்கேட்ட எனக்கு பொல்லாதகோபம் வந்துவிட்டது, உடனே யோசித்தேன் இது நகைச்சுவைதானே இதுக்கெல்லாம் கோபப்படலாமா என, நானும் விழுந்து விழுந்து சிரிக்க, எல்லோருமே அன்று சிரித்து உருண்டதை மறக்கவே முடியாது. டொமார் நல்ல நகைச்சுவையாளன், எப்போதும் ஏதாவது சொல்லி சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான்.

முதல்நாள் பாடமாக, ரீச்சர் வந்து, வெள்ளைப்பலகையிலே ஒரு அழகான தாராவை வரைந்து, பார்த்துக்கீறி, பெயிண்ட் பண்ணுங்கோ எனச் சொல்லிப்போட்டு, அடுத்த வகுப்பு ரீச்சரோடு அரட்டை பண்ணப்போய்விட்டா. நானும் கீறியே கீறிப்பார்த்தேன், வரமாட்டேன் என்றுவிட்டது. உடனே பயத்திலே அழத்தொடங்கிவிட்டேன். அப்போ அரண்தான், எனக்கு தாராவை அழகாகக் கீறித் தந்தான், நானும் நல்ல வடிவாக பெயிண்ட் பண்ணினேன், ரீச்சர் பார்த்துப்போட்டு மிகநன்றாக இருக்கெனச் சொன்னா. நான் இப்பவும் அப்படத்தை என் அறையிலே ஒட்டி வைத்திருக்கிறேன்.

பாருங்கோ இவர்தான் அந்தத் தாராப்பிள்ளை:


ஐந்தாம் வகுப்பிலே “புலமைப் பரீட்சை” நடக்கும். அதிலே நான் “அதிதிறமைச் சித்தி” பெற்று “நாம் விரும்பும் பாடசாலையை” தெரிவு செய்து வந்துவிட்டேன். சாந்தி இன்னொரு பாடசாலைக்குப் போய்விட்டா. அரண், டொமார் ஒரு ஆண்கள் பாடசாலையிலும், பரண் இன்னொரு ஆண்கள் பாடசாலைக்குமாக, எல்லோரும் பிரிந்து போய்விட்டார்கள். நாம் பிரிந்தபின், ஒருவரையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சாந்தி மெயில் அனுப்பியிருந்தா, அதில், தான் டொமாரைக் கண்டதாகவும், அவர்கள் ஸ்கூல் யூனிபோம் இப்போ சோட்ஸ் இல்லையாம், ட்றவுஷர் தான் போடவேண்டுமாம், தன்னால் டொமாரோடு கதைக்க முடியவில்லை, தூரத்தில்தான் கண்டேன், சிரித்துவிட்டுப் போனான் பார்க்கவே வெட்கமாக இருந்தது என.

டொக்.. டொக்... டொக்.... , கொஞ்சம் பொறுங்கோ என் அறைக்கதவை யாரோ தட்டீனம், என்னவெண்டு கேட்டுக்கொண்டு வாறேன். அது அம்மாதான் கூப்பிட்டவ, “ஏன் இன்னும் லைட் எரியுது? இன்னும் நித்திரைகொள்ளவில்லையோ?” எனக் கேட்டுவிட்டுப் போறா. எனக்குக் கொம்பியூட்டர் இருக்கு, ஆனால் விடுமுறை காலங்களில் மட்டுமே, இன்ரநெற் பார்க்கும் அனுமதி உண்டு. நேற்றுத்தான் என் பரீட்சை எல்லாம் முடிந்தது. அதனாலேயே, இன்று இன்ரநெற்றில் கேம் விளையாட அனுமதிக்கப்பட்டேன்.

இக் குறுகிய நேரத்துள் என் கதையின் சுருக்கத்தைக் கூறிவிட்டேன். முடிந்தால் மீண்டும் சந்திக்கிறேன். இனியும் விழித்திருந்தால் அடிதான் விழும், எனவே படுக்கப்போகிறேன். அனைவருக்கும் குட்நைட்.....




---------------------------------------------------------------------------------------------------
பின் இணைப்பு:
இவர் எங்கள் கிட்டடிச் சொந்தக்காரர்.... பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்.. அப்படியெண்டால் அதிராவுக்கு என்ன முறை என்பதைக் கண்டுபிடியுங்கோ... என்மீது கொஞ்சம் பொறாண்மை:), என்னை பார்த்து ஒரு லுக் விடுகிறார் பாருங்கோ..
She is proud of her BEAUTY:).


-------------------------------
“நிழல்கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்,
ஆனால் உண்மையான நட்பு,

உயிர் உள்ளவரை துணைக்கு வரும்”
-------------------------------

39 comments :

  1. ஹை வடை எனக்குதான்...

    ReplyDelete
  2. ஹை...சட்னியும் எனக்குதான்..

    ReplyDelete
  3. ஹை...கோப்பியும் எனக்குதான்...

    ReplyDelete
  4. ஜெய்..லானி..... என் பதிவு போடுமுன் உங்கள் பதிவுகள் பார்த்துச் சிரித்ததில் எனக்கு வயிறு வலிக்கிறதே....:). கதையைப் படித்திட்டு சொன்னால்தான் சாப்பாடெல்லாம் கிடைக்கும்... மிக்க நன்றி ஜெய்..லானி, உடன் பதிவு பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு.

    ReplyDelete
  5. ’’ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
    கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
    என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்’’

    பாட்டுதான் நினைவுக்கு வருது..கதை அருமையா இருக்கு.......>>>>

    ReplyDelete
  6. ஐ யம் சோரி பாட்டி..> ஏதோ ஒரு சிந்தனை அதுதான் சீரியஸை மறக்க அப்படி ஒரு டிவிஸ்ட்..

    ReplyDelete
  7. அதிரா எப்படி இப்படி வடிவா தொகுக்கிறீர்கள்

    இன்றாவது வடை சட்னி கிடைக்கும் என்றூ நினைத்தேன்.

    ஜெய்லானி முந்தி கொண்டார்

    திபுக்குட்டிஅதிரா சூப்பர், போட்ட்டோஸும் அருமை

    ReplyDelete
  8. //நிழல்கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்,
    ஆனால் உண்மையான நட்பு,

    உயிர் உள்ளவரை துணைக்கு வரும்”//

    ஐயம் அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர். பாட்டில் பொருள் குற்றம் உள்ளது அதில் ’’உடல் அடக்கம் வரை துனைக்கு வரும்’’என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
  9. அருமை அதிரா.தீபுக்குட்டியை இந்த ஆசிக்குட்டிக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,என்னோட படித்த மார்டினும் ஜாயியும் கல்லூரியில் என்ன ஆசிக்குட்டி என்று தான் கூப்பிடுவாங்க,அந்த நினைவும்,அவங்க நினைவும் வந்துவிட்டது,இருவருக்கும் நாகர்கோவில்.இப்ப எங்கு இருக்கிறார்களோ!

    ReplyDelete
  10. ஜெய்..லானி... என்ன பீலிங்ஸ் சோங்கோ? அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்திட்டுதோ?:).

    ஐ யம் சோரி பாட்டி/// ஆ... மீண்டும் பாட்டியோ? பாவம் பாட்டி என்ன பாவம் செய்தாவோ.... சொர்க்கத்திலும் அவவை நிம்மதியாக இருக்கவிடுறாரில்லை ஜெய்..லானி..:).

    ReplyDelete
  11. ஜலீலாக்கா..., கவலைப்படாதீங்கோ... உங்களுக்காக ஸ்பெஷலா எடுத்து ஒளிச்சு வைத்திருக்கிறேன்.. ஜெய்..லானி நித்திரையானபின் தருகிறேன்:). மிக்க நன்றி ஜலீலாக்கா. 2012இல் உலகம் அழியப்போகுதாமே... கேட்ட நேரம் தொடக்கம் எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. முடிந்தால் நட்பில் எழுதுகிறேன் பாருங்கோ.

    ReplyDelete
  12. ஐயம் அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர். பாட்டில் பொருள் குற்றம் உள்ளது அதில் ’’உடல் அடக்கம் வரை துனைக்கு வரும்’’என்று இருக்க வேண்டும்./// தப்பு வக்கீல் ஜெய்..லானி அவர்களே தப்பு.... இங்குதான் உங்கள் சிந்தனைக்குதிரை சற்று இடறுகிறது:).... அதாவது, அதிராவின் கிட்னி இப்படித்தான் யோசிக்கிறது..... உண்மை நட்பு என்றால் நண்பனின் உயிர் பிரிந்த கணமே தன் உயிரும் பிரிந்திட வேண்டும் பிறகெப்பூடி.... அடக்கம் செய்ய வர முடியும்???? கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  13. வாங்கோ ஆசிக்குட்டி ஆசியா மிக்க நன்றி.... நட்பென்றாலே மனம் அந்த நாட்களை நோக்கிப் பறக்கத்தொடங்கிவிடும்.

    இருவருக்கும் நாகர்கோவில்.இப்ப எங்கு இருக்கிறார்களோ/// ஆ...... இருவரும் நாகர்கோயிலோ? அப்பூடியெண்டால் உங்களை நிட்சயம் மறந்திருப்பார்கள்:).

    நானும் அடிக்கடி நினைப்பதுண்டு என்னோடு பிறைமறி ஸ்கூலில் படித்தோரை சந்திக்க வேண்டுமென, ஆனால் சில ஆண்பிள்ளைகளைச் சந்தித்திருக்கிறேன், நண்பிகளை ஒரு தடவையேனும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

    ReplyDelete
  14. ஹாய் அதிரா.நலமா.சூப்ப்ப்பர் கதை.ரெம்ப நல்லா எழுதியிருக்கீங்க.படங்களும் அருமை.
    பி.இணைப்பு:‍வேலை செய்யத்தொடங்கிவிட்டதால் நேரத்தை எடுத்துக்கொள்வது கஷ்டமாகிறது. மன்னிக்கவும் அதிரா.

    ReplyDelete
  15. ஆ... அம்முலு வாங்கோ... எங்கே காணவில்லையே என யோசித்தேன்... வேலை செய்கிறீங்களோ வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

    |நட்புபகுதி| பாருங்கோ.... உலகம் அழியப்போகுதாமே....

    ReplyDelete
  16. அதீஸ், தீபுக்குட்டி நல்லா இருக்கு. அடடா! தீபுக்கு டொமார் நண்பனா? அவனுக்கு மூக்கு எப்போதும் ஒழுகுமே.

    //தனது பொக்கட்டிலிருந்த சொக்காவை எனக்குத் தந்து, என் ..//
    அது சொக்கா இல்லை தீபுக்குட்டி.. என்னுடைய அல்வா.

    //டொமார் நல்ல நகைச்சுவையாளன்//
    அது உண்மைதான்.

    //நாங்கள் ஐவரும் நல்ல பெஸ்ட் ஃபிரெண்ட் ஆகிவிட்டோம்.//
    கர்ர்ர்ர்.... என் அல்வாவை திருடினவன் கூட என்ன ப்ரென்ட்ஷிப் வேண்டிக் கிடக்கு.

    தீபுக்குட்டி படம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  17. //உண்மை நட்பு என்றால் நண்பனின் உயிர் பிரிந்த கணமே தன் உயிரும் பிரிந்திட வேண்டும் பிறகெப்பூடி.... அடக்கம் செய்ய வர முடியும்???? கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈ //

    நல்ல வேளை முதல்லயே விஷம் வச்சி குடுத்திடுவேன்னு சொல்லலையே!!! யப்பா..ஆள விடு..சாமீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  18. தீபு குட்டிகதை சூப்பர்.// பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்..//அப்படியென்றால்?

    ReplyDelete
  19. ha ha haசூப்பர் அதிரா... மொத்ததில் டிபுகுட்டி எங்கடவீட்டிலும் இருக்காள்...

    ReplyDelete
  20. Hi Theepukutti. ;)

    Enjoyed reading it Athees.
    Keep it up. ;)

    ReplyDelete
  21. வாணி //அவனுக்கு மூக்கு எப்போதும் ஒழுகுமே. // இதை இன்னும் நீங்க மறக்கவில்லையோ?:) அது இப்போ நின்னுடிச்சாம்...... அதுதான் மூக்காலொழுகுறது:).

    அது சொக்கா இல்லை தீபுக்குட்டி.. என்னுடைய அல்வா// ஆஆ.. அதையும் கரெக்ட்டாக் கண்டுபிடிச்சிட்டீங்களே....

    இப்ப கிருஸ்ணாவும் ஃபிரெண்ட்டாகிட்டார் வாணீஈஈஈ மிக்க நன்றி.

    ReplyDelete
  22. ஜெய்..லானி..//நல்ல வேளை முதல்லயே விஷம் வச்சி குடுத்திடுவேன்னு சொல்லலையே!!! யப்பா..ஆள விடு..சாமீஈஈஈஈஈஈஈ // ஓடாதீங்க.... ஃபிரெண்ட்சிப் வாணாமோ? விஷம் என்றதும் உயிர் நண்பனைக்கூட கைவிட்டுவிடுவீங்க போல இருக்கே....... ஆ.... என்னா ஃபிரெண்ட்..

    ReplyDelete
  23. தீபு குட்டிகதை சூப்பர்./// ஸாதிகா அக்கா மிக்க நன்றி.
    // பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்..//அப்படியென்றால்?/// நான் கேள்விகேட்டால் பதிலை நீங்கதான் சொல்லோணும் அதைவிட்டிட்டு திருப்பி என்னைக் கேள்விகேட்கக்கூடாது..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  24. இலா.. மிக்க நன்றி. உங்கள் வீட்டில் டிபுக்குட்டியோ? அப்போ சின்னக்கருப்பு????

    ReplyDelete
  25. அதிரா எப்படி இருக்கிங்க? குட்டிஸ் எல்லாம் எப்படி இருக்காங்க? வெக்கேச்ஷன் விட்டச்சா?
    சரி மேட்டருக்கு வருகிறேன். நீண்ட நாட்கள் கழித்து வந்தேனா, ஒரே ஆச்சரியம். நல்ல கார்விங் கலை கைவசம் இருக்கு.ம்.. அடுத்து நல்ல கதாசிரியர் திறமை, கவி திறமையும் காட்டுங்கோ. ம்.. இன்னும் என்ன் கைவசம் கை வேலைகள் இருக்கும் அப்படியே எடுத்து விடுங்கோ. தீபுக்கூட்டி +படமும் சூப்பர்.மீண்டும் வருகிறேன். ஒவ்வொருத்தர் ஊர்க்கா போய் கொண்டிருக்கேன். வருகிறேன். அதி....ரா...

    ReplyDelete
  26. கர்ர்..ர்ர்ர்ர்! ஆருக்கும் இந்த ஜீனோக்குட்டியப் பத்தி எழுதனம் எண்டு தோணவே இல்ல...உங்கள்க்கும் தோணலியா அதிராக்கா? வவ்வ்..வவ்வவ்..வ்வ்!

    தீபுக்குட்டி கியூற்!ஆனா பாருங்கோ அதிராக்கா, லாஜிக் கொஞ்சம் இடிக்கறது. /சாந்தி அவனுக்கு தூரத்துச் சொந்தம்.. உறவு முறையில், அத்தை மகள்.. பி எஸ் சி கணிதம் முடித்திருக்கிறாள்../எண்டு சந்து எழுதிருக்காங்கோ..உங்கட தீபு இன்னும் ஆறாம் வகுப்பையே தாண்டல்லையோ?;)
    சரி..கண்ணிலை லேம்ப் ஆயில் எல்லாம் ஊற்றிக்கொண்டு Logic பார்க்க ஜீனோக்கு விருப்பமில்லை..காக்கா போயிடுவம்.அடுத்த தபா கட்டாயம் நீங்கோ ஜீன்ஸ்(நாட் தி பேன்ட்,மீ தி ஜீனோ தி கிரேட்) பத்தி விளக்கமா அயகா எயுதுங்கோ,ஓக்கை..Deal or no Deal?

    //She is proud of her BEAUTY:).// ஓ ரியல்லி? அந்தக் கருப்பு அக்காவை லாங் ஷோட்-லை பாக்கேக்கவே,பயத்துல ஜீனோக்கு கைகாலெல்லாம் ஒதறுது அதிராக்கா! அவகிட்ட பாத்து பத்திரமா இருங்கோ..க்ராஸ் பண்ணேக்க, கோடாலி வைத்த பூஸாரை காவலுக்கு கூட்டிப் போங்கோ.Careful!!!!!

    ReplyDelete
  27. அதீஸ்.. நாஞ்சொன்னது - சரண்.. பரண், அரண் வரிசையில் பேர் வச்சன்.. சாந்தி பெரிய பொண்ணு :))

    தீபு நல்ல பொண்ணாயிருக்காளே? குறும்பெல்லாம் கிடையாதோ? குறும்புக்கார புள்ளைகளத் தான் சந்துவுக்குப் பிடிக்கும்.. சொல்லி வையுங்கோ :))

    ReplyDelete
  28. //ஓடாதீங்க.... ஃபிரெண்ட்சிப் வாணாமோ? விஷம் என்றதும் உயிர் நண்பனைக்கூட கைவிட்டுவிடுவீங்க போல இருக்கே....... ஆ.... என்னா ஃபிரெண்ட்..//

    பூஸாரே முதல்ல சுவர் அப்புறம்தான் சித்திரம்

    ReplyDelete
  29. விஜி வாங்கோ. இடையிடையாவது மறக்காமல் வந்து சுகம் விசாரித்துக்கொண்டு போகிறீங்களே... சந்தோசம் மிக்க நன்றி.

    அதிகம் புகழாதீங்கோ விஜி வெக்கமா இருக்கு.

    ஒவ்வொரு ஊருக்கும் பிளேனில போனால்தான் சரி.... நடந்துபோக நினைத்தால் முடியவே முடியாது.

    ReplyDelete
  30. கர்ர்..ர்ர்ர்ர்! ஆருக்கும் இந்த ஜீனோக்குட்டியப் பத்தி எழுதனம் எண்டு தோணவே இல்ல/// haa..haa...haa.... geno.... ஜீனோக்குட்டி பற்றி எழுதுவதொன்றும் கஸ்டமில்லை, ஆனால் படங்கள் போடவேணுமெல்லோ மக்களுக்கு அங்கதான் இடிக்குது... கண்ட நிண்ட படங்கள்தானே ஆல்பத்தில இருக்கு.... பறவாயில்லையோ? போடட்டுமோ?:).

    ஜீனோ.... இதுக்குத்தான் சொல்றது பூஸ் கிட்னி வேணுமென்று. சாந்தியும் தீபுக்குட்டியும் கிளாஸ்மேட்தான். தீபுக்குட்டியின் கதை பாஸ்ட் டென்ஸ்..... சாந்தியின் கதை பிரசெண்ட் ரென்ஸ்ட்..... இது எப்பூடி? பொறுத்திருங்கோ தீபுக்குட்டியின் பிரசண்ட் ஸ்டோரியும் விரைவில்.... ஆ.. ஓடாதீங்கோஓஓஓ.

    அடுத்த தபா கட்டாயம் நீங்கோ ஜீன்ஸ்(நாட் தி பேன்ட்,மீ தி ஜீனோ தி கிரேட்)/// உந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்ம்ம்ம்ம்ம்

    //பத்தி விளக்கமா அயகா எயுதுங்கோ,ஓக்கை..Deal or no Deal?//// ஓக்கை ஜீன்ஸ்... டீல் அண்ட் நொட் டீல் ஓக்கை????:)


    //கோடாலி வைத்த பூஸாரை காவலுக்கு கூட்டிப் போங்கோ.Careful!!!!!/// ஆ... இன்னும் ஒருவரும் கோடாரிப் பூசாரை மறக்கேல்லை... நான் பூசாரைக் களவெடுத்து வைத்திருக்கிறேன்:).

    மிக்க நன்றி ஜீனோ வரவுக்கு...

    ReplyDelete
  31. சந்து, எனக்குத் தெரியும் சரணை, ஆனால் தீபுக்குட்டிக்கு ஒரு கேர்ள் ஃபிரெண்ட் வேணுமெல்லோ அதுதான் சாந்தியைத் தூக்கினேன்.

    தீபு நல்ல பொண்ணாயிருக்காளே? குறும்பெல்லாம் கிடையாதோ?// ரொம்ப அமைதி.... ஆனால் குறும்பான அமைதி.... நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்... அப்படிக்குறும்பு.... இப்ப ஓக்கைதானே?

    மிக்க நன்றி சந்து.

    ReplyDelete
  32. ஜெய்..லானி/// பூஸாரே முதல்ல சுவர் அப்புறம்தான் சித்திரம் ///

    எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. இது உண்மைச் சம்பவம், நகைச்சுவையாக்கி எழுதவில்லை... ஆனால் ஜெய்..லானியின் பதில் பார்த்துச் சிரித்ததில், நினைவு வந்துவிட்டது.

    இலங்கையில் பயங்கர யுத்தம் வடமாகாணத்தில் நடந்துகொண்டிருந்த வேளை, திடீர்த்திடீரென பொம்பர் வந்து குண்டு போடும், ஷெல் வந்து விழும்..... ஊருக்குள் ஆமி இல்லை, எல்லாம் வானத்தால் தான்.

    அப்போது ஒரு மிகவயதான தம்பதியினர், கணவர் இறந்துவிட்டார். அடக்கம் செய்யும் அன்று, அதற்கான வேலைகள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்தனவாம். மக்கள் நிரம்பியிருந்த வேளை, மனைவி ஓயாமல் அழுது புலம்பியபடியே இருந்தாவாம்.

    திடீரென இரைச்சல் சத்தம் கேட்டதும், பொம்பர் வருகுது எனக் கத்தியபடி, மக்கள் கலைந்து சிதறி ஓட, அழுதுகொண்டிருந்த மனைவியும் ஓடிச்சென்று, அவர்கள்வீட்டு பங்கரினுள்(பதுங்குகுழி), புகுந்துகொண்டாவாம். அவவுக்கு பொம்பர் எண்டால் சரியான பயமாம். பின்னர் ஒரு இடைவேளை வரவே, குண்டுச்சத்தம் குறையவே, அதுக்குள் உடலை அடக்கம் செய்து முடித்திடவேணும் என உறவினர்கள் ஆயத்தமாகி, மனைவியை வரும்படி அழைத்தனராம், அவ சொல்லிப்போட்டாவாம் நான் வெளியே வரமாட்டேன் நீங்கள் தூக்கிச் சென்று அடக்கம் பண்ணுங்கோ என பங்கருக்குள்ளேயே இருந்திட்டாவாம்.(அவ்வளவு பயம் குண்டுக்கு). பின்னர் இக்கதை பரவலாகப் பேசப்பட்டது.... அப்படி அழுதவ, பின்னர் இப்படி ஆகிட்டா பயத்தில் என்று.

    ReplyDelete
  33. //அப்படி அழுதவ, பின்னர் இப்படி ஆகிட்டா பயத்தில் என்று. //

    பாத்தீங்களா ? !! இத்தனை காலம் இனை , துனை , ஓருயிர் , பாசமாக வாழ்ந்த மனைவி செய்ததை... அந்த நேரம் அவருக்கு பத்து வார்த்தை மட்டும் பேச இறைவன் உயிர் கொடுத்தால் அவர் என்ன சொல்லி இருப்பார் இல்லை என்ன செய்திருப்பார்.....சொல்லுங்க பார்க்கலாம்...!!

    ReplyDelete
  34. ’’இதை பார்த்துட்டு இன்னும் பொணமா இங்கேயே கிடக்கிறேனே கடவுளே எல்லாம் எந்தலை விதி ’’

    இதான் அந்த பத்து வார்த்தை நானே சொல்லிட்டேன் உங்களுக்கு ஏன் கஷ்டம்....ஹி...ஹி...

    ReplyDelete
  35. இல்லை ஜெய்..லானி, அன்பு பாசம் எல்லாம் இருக்கும் ஆனால் பயம் அதை ஜெயித்துவிட்டதாக்கும்....

    ஆணிகளுக்கெல்லாம் இன்று நிம்மதியாக்கும்:), ஜெய்..லானிக்கு ஓஓஓஓஓஓஓஓவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

    ReplyDelete
  36. //ஆணிகளுக்கெல்லாம் இன்று நிம்மதியாக்கும்:), ஜெய்..லானிக்கு //

    ஆமா இன்னைக்கும் நாளைக்கும் , ஹை...!!

    ReplyDelete
  37. எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
    //சாந்தி பெரிய பொண்ணு :))

    தீபு நல்ல (குட்டி) பொண்ணாயிருக்காளே? குறும்பெல்லாம் கிடையாதோ? குறும்புக்கார புள்ளைகளத் தான் சந்துவுக்குப் பிடிக்கும்.. சொல்லி வையுங்கோ :))//

    எனக்கும் தான் ;) இரண்டாவது தடவை சொல்லிவைங்கோ....

    பி.கு: உலகம் அழியபோகுதோ எப்போ??? அதுக்குள்ள வீக் எண் என்சோய் பண்ணிட்டு வரேன்.

    ReplyDelete
  38. ஹைஷ் அண்ணன் வாங்கோ மிக்க நன்றி.
    மேல படிக்காமல் கீழமட்டும் படிச்சிருக்கிறீங்கள்.....

    ///எனக்கும் தான் ;) இரண்டாவது தடவை சொல்லிவைங்கோ..../// ஆமாம் குறும்புள்ள எதிரி:).

    பி.கு: உலகம் அழியபோகுதோ எப்போ??? அதுக்குள்ள வீக் எண் என்சோய் பண்ணிட்டு வரேன்/// உப்பூடி நழுவாமல் எங்களுக்கு விளக்கமாக நட்பில ஏதாவது சொல்லுங்கோ... நாங்க ரொம்பத் தைரியமானவர்கள்:).

    ஜெய்..லானி.......... என்சோய் நட்சத்திரச் சனி:)விடுமுறை.(வெள்ளி = நட்சத்திரம்??:))

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.