நல்வரவு_()_


Monday 1 December 2014

அதிரா வீட்டெலி:)

என்ன தலைப்பே ஒரு மாதிரி இருக்கே எனத்தானே ஓசிக்கிறீங்க?:) பின்ன இது புது விதமான இட்லியாச்சே... :) நீங்கள் இதுவரை எந்தக் கடையிலும், எந்த நாட்டிலும், எந்த வீட்டிலும்:) சாப்பிட்டிராத இட்லி:).. அதிரா மேக் பண்ணிய ஆரியபவான் இட்லி:)..

சரி இப்போ தலைப்புக்கு வருவோம்:).. வீட்டெலி என்பதை.. படு..ஸ்பீட்டாச்:) சொன்னால், என்ன கேட்குது சத்தம்.. :) அதுதான் இது:)

ஓடியாங்கோ.. ஓடியாங்கோ.. சுடச்சுட சட்னியோடு சாப்பிடுங்கோ:) அப்பூடியே காசை என் எக்கவுண்டில போட்டிட்டு:))..

இது நீங்க எல்லோரும் செய்யும் முறையில்தான் மா வைத்தேன்:)..

இலங்கையில், இட்லி - தோசை எனில் நாம் எப்பவும்  நிறைய வெங்காயம், செத்தல் மிளகாய், கறிவேப்பிலை + விரும்பினால் கொஞ்சம் ஷனா டால் சேர்த்து வதக்கி, மாவில் சேர்ப்பது வழக்கம்.

ஆவ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்ச்ச்ச்ச்சு:)... கப்கேக் மேக்கரில் இட்லி செய்வமே என ஓசிச்சேன்...

பிளக்கை ஓன் பண்ணிவிட்டு, மெதுவாக ஒரு Brush ஆல் எண்ணெய் கொஞ்சம் தடவி விட்டேன் குழிகளில்.. பின்பு இட்லி மாவை இப்படி ஊற்றினேன்...  மூடி வேக விட்டேன்..

என்னாச்சோ.. ஏதாச்சோ.. எனக் கை கால் எல்லாம் உதறலெடுக்க:).. வைரவரை வேண்டிக்கொண்டு:) ரிப்பன் கட் பண்ணாமல்:)  ஓபின் பண்ணினேன்:)... கப்கேக் மேக்கரை:).. என்ன ஆச்சரியம்.. சூப்பரா வந்திருந்துதே..  ஒரு தடவைதான் எண்ணெய் பூசி விட்டேன், பின்னர் தேவைப்படவில்லை, ஒவ்வொரு தடவை வேகவும் 5-8 நிமிடங்கள் மட்டுமே எடுத்ததாக நினைவு.

இதோ.. அதிராவின் கிச்சினில், ஐந்தே நிமிடத்தில், சுடச்சுட ரெடியாகி விட்டது.. “சத்துணவு இட்லி”..:) .. ஆனா ஒன்று ஆவியில் அவிக்கும் அதே சுவை வராததுபோல ஒரு ஃபீலிங்:(.. மற்றும்படி நல்ல புசுபுசுப்பாக:) இருந்துது.

நீங்க நம்ப மாட்டீங்க:), சொன்னாலும் சொல்லுவீங்க:) உள்ளே எப்படி வெந்ததோ என:), அதனால அதிராவோ கொக்கோ:).. ச்சும்மா பின்னிப் பெடலெடுத்திட்டேன்ன்.. ஹையோ பிச்சு உள்பக்கம் வெந்திருக்கா எனவும் காட்டியிருக்கிறேன் பாருங்கோ.. எவ்ளோ அழகா வெந்திருக்கு.

ஊசி இணைப்பு:)
இது சமீபத்தில் செய்த கப்கேக்...
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬
 “விழிகளைக் காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும்!!
அப்போதுதான், கண்ணீரைத் துடைக்கும் கைகள்,
 யாருடையதெனத் தெரியும்”
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬

43 comments :

 1. Replies
  1. ஆவ்வ் மகி வாங்க... ,நீங்கதான் பெஸ்ட்டூஊஊஊஊஊ.. ஹையோ அது 1ஸ்ட்டூஊஊஊஉ:) ஆனா அஞ்சு 1ஸ்ட்டு இல்ல:)..

   மியாவும் நன்றி மகி.. இதோ எடுத்துக்கோங்க:) முதலாவது வீட்டெலி:) உங்களுக்கே:).

   Delete
 2. மினி கப் கேக்கில் இட்லியா ஓ சூப்பராக சுட்டு எடுத்துட்டீங்களே
  இதில் குழிபணியாரம் கூட செய்யலாமே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜல் அக்கா வாங்கோ... வாவ்வ்வ் சூப்பர் ஐடியா சொல்லியிருக்கிறீங்களே... நான் குழி பணியாரம் சட்டி தேடி திரிஞ்சு களைச்சிட்டேன், கனடாவில் பார்த்தேன்.. அது 2,3 கிலோ வெயிட் இருக்கும் அதை எப்படி கொண்டு வருவதென விட்டிட்டேன்.

   எனக்கு குழி பணியாரம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. ஆனா இதுக்குள் எப்படி எண்ணெய் ஊற்றுவது?????

   Delete
 3. என்ன து ஷனா டால். லா? சென்னாவா?

  ReplyDelete
  Replies
  1. yes yes jalee :) poos stylaa solluraanga shana dhaal :)))))))))))))

   Delete
  2. அது சனா டால் எனத்தானே வரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... பாதிப் பட்டாணிப் பருப்பூஊஊஊஊஊஊஊஊஊஉ:)

   Delete
 4. அப்ப பூஸார் , நீங்க சொல்வது இந்த ஷனா டாலான்னு பாருங்கள்.
  http://samaiyalattakaasam.blogspot.com/2014/12/palak-chana-masala-with-pomegranate.html

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன், இதில பாதிப் பருப்பா வருமே.. அதுதான் ஜல் அக்கா.. வடைக்கு அரைப்பமே அது.. கர்ர்ர்ர்ர்ர்ர்:) புரிய வைக்க மீக்கு மயக்கம் வரும்போல இருக்கே:) ஹா..ஹா..ஹா...
   மியாவும் நன்றி.

   Delete
 5. God saved me :)))))))) from cup kidlis :))))))) மஹி ஒரு மணி நேரத்துக்கு ஒருதரம் வந்து ப்ரெசண்ட் சொல்லணும் எனக்கு :) ஒண்ணுமில்லை பத்திரமா இருக்கீங்களான்னு எனக்கு தெரியனும்

  ReplyDelete
 6. நீங்க கேக் செய்தீங்களா இல்லை இட்லி செய்தீங்களா !! இட்லி என்றால் இட்டு அவித்தல் இது இட்டு பேக்தல் :))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. நோஓஓஓஓஓஓஓ அப்போ தோசை என்றால் “தொட்டு அவித்தலா”:) எனக்கு இதுக்கொரு முடிவு தெரிஞ்சாகோணும் இண்டைக்கு:) இல்லாட்டில் தேம்ஸ் கரையில் தீக்குளிப்பேன்ன்ன்ன்ன்ன்..:)

   Delete
 7. //அதனால அதிராவோ கொக்கோ:).. //

  :) ))))))))))))))அப்போ நீங்க கொக்கா!! பூனையில்லையா ?????/

  ReplyDelete
  Replies
  1. சிட்டுவேஷனுக்கு ஒரு படம் போடலாம் என்றால்:) அதுக்கும் வழியில்லாமல் இருக்கே:)

   Delete
 8. Replies
  1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... கடல் கடந்து பிளேனில போயும் அதிராக்குப் பின்னூட்டம் போட்டமைக்கு மியாவும் நன்றி...

   ஹையோ .. தேம்ஸ் கரைப் பக்கமா.. :) + கிழக்கில தெற்கில இருந்தெல்லாம் ஒரே புகைப் புகையா வருதே.. :).

   Delete
 9. ஆஹா விரத காலத்தில் இப்படி அதிராவின் வீட்டில் இட்லி சாபிடுவது மிகவும் சந்தோஸமாக இருக்கு))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ.. பிள்ளையார் கதையும் விரதமோ?? மிக்க நன்றி.

   Delete
 10. “விழிகளைக் காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும்!!
  அப்போதுதான், கண்ணீரைத் துடைக்கும் கைகள்,
  யாருடையதெனத் தெரியும்”
  Super o Super

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ராஜேஸ்வரி அக்கா... மியாவும் நன்றி.

   Delete
 11. ச்சும்மா பின்னிப் பெடலெடுத்திட்டீங்க...!

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..ஹாஅ... வாங்கோ தனபாலன் அண்ணன்.. மியாவும் நன்றி.

   Delete
 12. Back செய்த இட்லி சூப்பரா வந்திருக்கு. ///ஆனா ஒன்று ஆவியில் அவிக்கும் அதே சுவை வராததுபோல ஒரு ஃபீலிங்:(./// நானும் ஒரு முறை செய்தபோது,எனக்கும் இந்த எண்ணம்தான் வந்தது. கடைசியில தத்துவம் சூப்ப்ப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு... அப்போ இட்லி வாணாமோ? மியாவும் நன்றி.

   Delete
 13. இட்டலி என்பதை இட்டு அவிக்காமற்
  சுட்டெலி ஆக்கிய சுந்தரி! - பட்டுப்போல்
  உள்ளதே! தொட்டிட ஒன்றும் வேண்டாமே!
  அள்ளிவிட்டீர் எம்மை அறிந்து!

  அதிரா செயல்கள் அனைத்தும் புதுமை!
  எதிராக ஒன்றுமில்லை இங்கு!

  மிக மிக அருமை!
  வாழ்த்துக்கள் அதிரா!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா வாங்கோ கவிதாயினி இளமதி... கவிதையில் பதில் தந்து களங்கமற வாழ்த்தியமைக்கு மியாவும் நன்றி... ஆஹா அதிராவுக்கும் வருது... கவிதைதான்ன்ன்ன்...

   Delete
 14. கப் கேக் இட்லி சூப்பரா இருக்கே...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஆதி வெங்கட்.. முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.

   Delete
 15. விதவிதமாக இட்லி செய்து சாப்பிடும் அதிரா.. அதை கண்ணெதிரே காண்பித்துவிட்டு கொடுக்காமல் போனால் என்ன அர்த்தம். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. கப் இட்லியும் காரச்சட்னியும் என்று தலைப்பு வைத்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ விச்சு வாங்கோ.. தட்டில் அழகா அடுக்கி வச்சிருக்கிறேன்ன் எடுத்துங்கோங்க... இட்லி எனத் தலைப்பிட்டால்ல்ல் ஒரு எலி கூட எட்டிப் பார்க்காது தெரியுமோ?:) ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி விச்சு.

   Delete
  2. ஆங்.. எடுத்துக்கிட்டேன். இப்போ இந்த விச்சு எலி எட்டி பார்த்திருச்சு. போதுமா...!!

   Delete
  3. ஆஹா விச்சு எப்போ ரட்(rat) ஆனார்ர்ர்ர்ர்?:)

   Delete
 16. பூஸாரே அது என்னா கப் கேக்கா? இட்லியா ? குழி பணியாரமா? எனக்கு அந்த பிரை பேன் ரொம்ப பிடிச்சி இருக்கு அதுவும் பிங்க் கலர் கண்ணை பறிக்குது எனக்கு பார்சல் அனுப்புங்கஓ

  ReplyDelete
 17. இதில் செய்யலாம் குழிபணியார்ம்
  சூப்பராக வருமே. கொஞ்சமாக எண்ணை விட்டு இதே போல் தான் , இனிப்பு பான்கேக் க்கு மிக்ஸ் பண்ணுவது போல் மிக்ஸ் செய்து வையுங்கோ, காரத்துகு வெஜ் கறி வகைகளை மாவில் சேர்த்து வையுங்கள், மீன், சிக்கன் போட்டும் ஜாமாயுங்கோ. அப்படியே ஜலீல்லாக்கா சமையல் கட்ட மறந்துடாம ஒரு எட்டு வந்து போங்கஓ

  ReplyDelete
  Replies
  1. வாவ்வ்வ்வ் உண்மையாவோ? குழிப்பணியாரத்துக்கு அசைவமும் சேர்ப்பதா? மீ கேள்விப்பட்டதில்லை.

   அதென்னமோ ஜல் அக்கா உங்கள் பக்கம் மேல் ஏறிக் காட்டுதில்லை... உடனுக்குடன் காட்டினால் முதல் ஆளா வந்திட மாட்டேன்ன்...

   Delete
 18. மேலே பூஸார் டெகரேஷன் பார்த்ததும் நான் அறுசுவையில் ஸாதிகா அக்கா வுடைய பட்டர் பிஸ்கேட்டை இட்லி போல் உள்ளது என்று எல்லாரும் கதைத்தோம், இப்ப இங்க இது பட்டர் பிஸ்கேட் போலவே உள்ளது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. ஓஒ அப்போ நானும் இருந்த காலத்தில் நடந்த சம்பவம் என்ன???

   மியாவும் நன்றி ஜல் அக்கா.

   Delete
 19. அதிரா இப்பத்தான் இந்தப் பக்கம் என் கண்ணில் பட்டது.மிக அழகு.

  ReplyDelete
 20. வாவ்.எலி இட்லி சூப்பர், இது மியாவ் இட்லி போலல இருக்கு.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.