நல்வரவு_()_


Sunday, 21 December 2014

மாம்பழத்து வண்டு :) (^_^)கேக்(^_^)


வாங்கோ வாங்கோ.. இந்த புதுவருடத்துக்கும்.. கிரிஸ்மஸ்க்கும், நீங்கள் ஏதும் புதுமையா செய்ய வேண்டாமோ?:) அதுதான் இம்முறை சைவப் பிரியர்களுக்காகவே இதைத் தேடி:) கஸ்டப்பட்டுக்:) கண்டுபிடிச்சு:) செய்து:) சாப்பிட்டுப் பார்த்து:) பிறகு இங்கின போட்டிருக்கிறேன்:).

பேஸ்புக்கில் கண்ணில அகர் அகர் தட்டுப் பட்டுதா.. அப்படியே அந்த லிங்கை கிளிக் பண்ணி தேடிப் போனால் இவர் கிடைச்சார்.. சுலபமாக இருக்கே என அகர் அகரோடு சேர்த்து அதே கையோடு இவரையும் செய்து முடித்தேன் சூப்பரா இருந்துது.

சாதாரணமாக கேக் அடிப்பதெனில் சீனியையும் மாஜரினையும் அதிக நேரம் அடிக்க வேணும் எல்லோ. இது அப்படியில்லை, மங்கோ பல்ப் இனுள் சீனியை சேர்த்து, கரையும் வரை அடித்தால் போதும்.. டக்கென கரைந்திடும்.

இந்த லிங்கில் பாருங்கோ.. இதைப் பார்த்துத்தான் செய்தேன்.

http://mystylerecipes.blogspot.co.uk/2012/08/eggless-mango-cake.html

Ingredients
  • All purpose flour - 21/2 cup
  • Fresh Mango puree - 2 cup ( cut mango into cubes and blend it into a smooth paste in a blender without adding water)
  • Salt – a pinch
  • Sugar - 11/2 cup
  • Baking powder - 2 tsp
  • Baking soda - 1 tsp
  • Oil (vegetable ) - 1/4 cup
  • Milk - 1/4 cup(use as required).
இவை அங்கிருக்கும் தேவையான பொருட்கள். ஆனா நான் இதில் உப்பு சேர்க்கவில்லை. இதில் எண்ணெய் போட்டிருக்கு, நான் அதற்குப் பதில் மாஜரினை உருக்கி சேர்த்தேன். பேக்கிங் சோடா மட்டும்தான் இருந்துது.. அதில் 2 தே.கரண்டி சேர்த்தேன்.

முடிவில் பால் சொல்லியிருக்கு. நானும் சேர்த்தேன், ஆனா என் மனதுக்கு படுது பால் சேர்க்காமல் விட்டிருக்கலாம் என. ஏனெனில் கேக்கின் நடுப்பக்கம் கொஞ்சம் கழித்தன்மையாக இருந்துது.

அடுத்து இதில் ஃபிரெஸ் சா செய்து போட்டிருக்கு மாம்பழத்தை, நான் மங்கோ பல்ப் தான் 2 கப் சேர்த்தேன்.


Method
Sift the flour, salt, baking powder & baking soda together. Sieve 2-3 times, keep aside.
Whisk the mango puree and sugar together until sugar is dissolved. Add oil and whisk.
Preheat oven to 350 degrees.
Mix the dry ingredients little by little to the wet ingredients and combine well. Add milk if the batter is very thick.
Transfer the batter into a cake pan greased with butter. Place it in the oven, bake for 35- 40 mins or until tooth pick inserted in the center comes out clean.
Let it cool completely before you make pieces.

செய்முறையில் மாற்றமில்லை.. இப்படியே செய்தேன்.  மிகச் சுலபம். எங்கள் முன்வீட்டு ஸ்கொட்டிஸ் ஆன்ரி அங்கிளுக்கும் கொடுத்தேன், நன்றாக இருக்கென சொன்னார்கள். வீட்டிலும் மளமளவென முடிந்துவிட்டது.

எங்கள் ஆற்றில் தோன்றிய வானவில்.. எப்பூடி அழகு??:)


எங்கள் மலை பனிமலையாகி விட்டது டும் டும் டும்:).
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சொந்த நாற்காலியில் மட்டுமே- ஒருவர் சுகந்திரமாக உட்கார முடியும்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

37 comments :

  1. Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ் மகியாஆஆஆஆஆஅ.. வாங்கோ வாங்கோ முதேல்ல்ல்ல் பீஸ் உங்களுக்கே:)

      Delete
  2. Cake looks yum! Quick fix if we have mango pulp in hand.
    Rainbow and snow mountains are beautiful! Enjoy the nature ms.myaav!! 😇

    ReplyDelete
    Replies
    1. ரேஸ்ட்டும் யம்மிதான் மகி:).. நான் கஸ்டமான மெதேட்டுகள் ட்ரை பண்ண வெளிக்கிடுவதில்லை:) இது ஈசியா இருந்திச்சா.. டக் டிக் டோஸ்:).

      மியாவும் நன்றி மகி.

      Delete
    2. இதாரிதூஊஊஊஊ புதுமுகம் அறிமுகம்ம்ம்ம்:) வாங்க வாங்க வலது லைக்கை எடுத்து வச்சு வாங்க:)

      Delete
  3. அதுதான் இம்முறை சைவப் பிரியர்களுக்காகவே இதைத் தேடி:) கஸ்டப்பட்டுக்:) கண்டுபிடிச்சு:) செய்து:) சாப்பிட்டுப் பார்த்து:) பிறகு இங்கின போட்டிருக்கிறேன்:).// thanks

    ReplyDelete
  4. சொந்த நாற்காலியில் மட்டுமே- ஒருவர் சுகந்திரமாக உட்கார முடியும்/// okay take your own chair wherever you go:)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நாற்காலி என்பது ஒரு உதாரணம் மட்டும்தேன்:)... இது அனைத்துக்கும் பொருந்தும்.

      Delete
  5. Replies
    1. நன்றி அஞ்சு... மீ வோட் பண்ணாமல்.. எண்ணிக்கொண்டிருந்தேன்ன் பத்தலியே என:)

      Delete
  6. வணக்கம்
    காலம் அறிந்துபகிர்ந்த பதிவு அனைவருக்கும் பயன் பெறும்... சொல்லிய முறை சிறப்பாக உள்ளது... ஏனைய படங்களை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. மாம்பழத்துக்குள்ள ஒரு கருவண்டு இருக்கும் . அதைவைத்து எப்புடீ கேக் செய்வது எனப்பல சிந்தனைகளோடு வாசித்தேன். ஆனால் அழகான கேக் செய்து வைத்திருக்கிறீர்கள். அதனுள் பால் சேர்க்கலாமா.. வேண்டாமா எனத் தனி ஆராய்ச்சி வேறு. ஆமா..! முன்வீட்டு அங்கிள் நலமா இருக்கிறாரா..!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ விச்சு... ஹா...ஹா..ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர் நலமாவே இன்று குட் மோனிங் சொன்னார்:) அவர் வேற--- போலிஸ் ஆபிசராக இருந்தவர்.. உடனேயே உள்ளே போட்டிடுவார் பிறகு:).

      Delete
  8. ஆற்றில் தோன்றியிருக்கும் வானவில்லும்.. அழகான பனிமலையும் பார்க்க கண்கொள்ளா காட்சி. கொடுத்துவைத்த அதிரா..

    ReplyDelete
  9. சொந்த நாற்காலியில் மட்டுமே ஒருவர் சுதந்திரமாக உட்காரமுடியும். இதை வாசித்தவுடந்தான் நாற்காலியைவிட்டு எழுந்து விட்டேன். என்ற சிந்தனையை நோண்டிவிட்டுட்டீங்க... அய்ய்ய்ய்ய்யோஓஓ... யாராவது இந்த அதிரா பொண்ணுக்கிட்ட இருந்து காப்பாத்துங்கோ...

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா.. அப்போ நீங்க இருப்பது சொந்த நாற்காலியில் இல்லயோ?:) அப்படியெனில் பார்த்து, கவனமாத்தான் இருக்கோணும்..

      Delete
  10. Replies
    1. வாங்கோ தனபாலன் அண்ணன் மிக்க நன்றி.

      Delete
  11. ஆஹா சைவ கேக் விரைவில் செய்து பார்க்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன்... ஓமோம் செய்யுங்கோ மகனுக்கும் பிடிக்கும்:)

      Delete
  12. வானவில் சூப்பர் அந்த கமராவை கடன் கொடுத்தால் பிரெஞ்சில் நானும் படம் பிடிப்பேன் சினேஹாவின் வானவில் அழகை!))))))))))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. அட கடவுளே!!!! இன்னுமா ஸ்நேகாவை விடேல்லை:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இதைப் படிச்சால்ல்ல்ல் பிரசன்னாவுக்கு டிவோஸ் நோட்டீஸ் போனாலும் போகும்:) ஹா..ஹா..ஹா..:).

      Delete
  13. நாற்காலிக்கு சண்டை போடு என்று பாட்டுக்கேட்ட காலத்தில் இருந்தே திருந்திவிட்டேன் பானைமேல்தான் இருப்பு!

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா... ஃபிரான்ஸ்க்கு வந்து நேசனின் நிலைமை இப்படியாச்சே:).. ஆனாலும் பெரிய போலில் இருப்பது நல்ல எக்ஸசைஸ்தானாமே... அதை இப்போ கண்டு பிடிச்சிருக்கினம்.. பழைய காலம் பானை:).

      மியாவும் நன்றி நேசன்.

      Delete
  14. தலைப்பே அருமை ! பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    http://gopu1949.blogspot.in/2014/12/3.html இந்தப்பதிவின் பின்னூட்டப்பெட்டியில் நிறைய பேர் அதிராவை வலைவீசித் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    அன்புடன் கோபு அண்ணன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன்... ஹா..ஹா..ஹா... சொக்கலேட் குடுத்து கூப்பிடுறீங்க வலைக்கு:) வந்திடுறேன்...

      மியாவும் நன்றி.

      Delete
  15. கேக் செய்முறை நல்லா இருக்கே. செய்து பார்க்கலாம்.

    வானவில்லும் பனிமலையும் அழகோ அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஆதி வெங்கட்... உண்மையில் நல்லாயிருக்கு செய்வதும் சுலபம்.

      மிக்க நன்றி.

      Delete
  16. கேக் செய்முறை ஈசியா இருக்கு அதிரா. அழகான வானவில். எங்களுக்கும் ஸ்னோ வந்துவிட்டு போய்விட்டது. அழகா இருக்கு பனிமலை.நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு மிக்க நன்றி. கிரிஸ்மஸ் க்கு வீட்டில நிற்பீங்க தானே? கேக் செய்யோணும் சொல்லிட்டேன்ன்ன் ஆமாஅ:).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி.

      Delete
  17. Rainbow looks so beautiful . Recipe for making veg. Cake is sooper

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ, ஒரே ஒரு பீஸ் எடுங்கோ:) ..மியாவும் நன்றி.

      Delete
  18. மாம்பழக் கூழ்க்கேக் செய்து
       மட்டிலா மகிழ்வே கொண்டீர்!
    ஆம்!..அதன் சுவையைச் சொல்லும்
       அற்புதப் படமே சாட்சி!
    சோம்பலை நீக்கி உள்ளம்
       சொக்கிட மலையின் காட்சி!
    கூம்பிய வானின் வில்லும்
       கூவியே அழைக்கு தன்றோ! ..:)

    அருமை! அத்தனையும் அழகு!
    நல்ல பகிர்வு அதிரா!..:)
    நன்றியுடன் இனிய வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளமதி வாங்கோ.. ஆஹா ஆஹா அழகாக கவிதை எழுதி என் மாம்பழக் கேக்கின் இனிமையை ஒரு படி கூட்டிட்டீங்க...

      மியாவும் நன்றி...

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.