நல்வரவு_()_


Tuesday, 16 December 2014


அதிரா கிச்சின் (*_*) அகர் அகர்


நெடுநாள் கனவு ஒன்று... இன்று சனி மாற்றத்தில் நிறைவேறியது:)... இது பற்றிய என் சொந்தக் கதை:) சோகக் கதை:) படிக்க, கொஞ்சம் இங்கின ஒரு எட்டுப் போட்டு வாங்கோவன்:).. அப்போதான் உங்களுக்கு இதன் முக்கியத்துவம் புரியுமாக்கும்:).

எப்பவோ வாங்கிய அகர் அகர். இப்போ கொஞ்ச நாளாக எப்படியும் செஞ்சிடொணும் எனும் எண்ணத்தை மனதில் எழுப்பிச்சுது.

உடனே நெட்டில் தேடினேன்(ஒவ்வொரு புளொக்காக போய் தேடும் அலுப்பில்:)).. அங்கு முதலாவதாக இருப்பது ஜலீலாக்காவின் குறிப்பு:). இரண்டாவதாக தெரிஞ்சது மகியின் குறிப்பு.

இப்படி பலபல குறிப்புக்கள் பார்த்து மனதில் ஒரு ஐடியாவை வரவச்சுக் கொண்டு களமிறங்கினேன்.

என்னில் ஒரு பழக்கம்.. எச் சமையல் குறிப்பையும் அப்படியே ஈ அடிச்ச கொப்பிபோல பண்ண மாட்டேன். ஐடியாக்களை எடுத்துக் கொண்டு(அடிப்படையை மாற்ற முடியாதுதானே),  மிகுதி என் எண்ணத்துக்கு மாற்றம் செய்வது வழக்கம்.... அதனால சிலசமயம் கோவிந்தா:) ஆன கதையும் உண்டு:)

கஸ்டமாக இருக்குமோ? அகர் அகர் கரையுமோ? கரைய நேரமெடுக்குமோ? பின்பு பதம் சரியாக அமையா விட்டால் இறுகாமல் விட்டிடுமோ.. இப்படி பல பயத்தோடு ஆரம்பித்தேன்ன் ச்ச்சோஒ சிம்பிளாக முடிஞ்சுது.

மகி சொல்லியிருக்கிறா, அகர் அகரை 8 மணித்தியாலம் ஊறவைக்கச் சொல்லி. ஆனா நான் செய்தது நேரடியாக சுடுதண்ணி ஊத்தி அப்படியே அடுப்பில் வைத்து காய்ச்சினேன் கரைந்து விட்டார்:). அது ஒவ்வொரு வகையானதாக இருக்கலாமாக்கும்.

பாதியை டிஸ் இல் ஊற்றி ரெட் கலர் சேர்த்தேன், மிகுதியை அடுப்பில் விட்டபடியே மங்கோ பல்ப் 4 கரண்டி அளவில் சேர்த்துக் காய்ச்சிப் பின்பு இறக்கினேன்.
 இது என் கன்னி மியாவ்:) அவ்வ்வ் டங்கு ஸ்லிப்பாச்ச்ச்சு  “கன்னி அகர் அகர்”:)
 ஊசிக்குறிப்பு:
அடுத்து இளநியில்... பாலில் எல்லாம் செய்து அசத்த உள்ளோம்:). 
அகர் அகர் க்கென்றே facebook இல் ஒரு பேஜ் இருக்கு அதில் ஜலீலாக்காவினுடையதும் இருக்கு, இப்போ லிங் கிடைக்கவில்லை எனக்கு, முடிஞ்சால் ஒருக்கா லிங்கை பின்னூட்டத்தில் போட்டு விடுங்கோ ஜல் அக்கா.

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
அழகானவற்றை எல்லாம் நாம் விரும்புவதில்லை - நாம்
விரும்புபவை அழகாக இருக்கின்றன--
இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><> 

54 comments :

  1. Replies
    1. ஆவ்வ்வ்வ் வாங்கோ மகி வாங்கோ.. கலக்கித்தான் ஊத்தவேண்டியதாப்போச்ச்ச்ச்;)..

      Delete
  2. மியாஆஆஆஆஆவ்! மஞ்சள்- சேப்பு:) ந்னு கலர் கலராக் கலக்கிட்டேள்...அருமையா இருக்கு. ஆனா இந்தக் குளிரில் ஆனியன் பஜ்ஜியும் ஸ்பினாஜ்;) பஜ்ஜியுமல்லோ நாக்கு கேக்கும்..இது எப்பவாக்கும் செய்தீங்க???

    ReplyDelete
    Replies
    1. அதுக்குத்தான் புதுப்பேர் சொல்லிட்டீங்களே... “பஜ்கோடா”.. ஹா..ஹா..ஹா... எனக்கு சில நேரம் சில எண்ணம் உதிக்கும்.. அப்போ உடனே செய்திடுவேன்.. இல்லையெனில் வாணாம் இத்துடன் நிறுத்திடறது நல்லது:)..

      சில நேரம் நல்ல உறைப்பு மட்டின் பிரட்டலும் புட்டும் சாப்பிடோணும் போல இருக்கும்... எப்பாடுபட்டாவது வாங்கி செய்து சாப்பிட்டாலே திருப்தி:)

      Delete
  3. //மகி சொல்லியிருக்கிறா, அகர் அகரை 8 மணித்தியாலம் ஊறவைக்கச் சொல்லி. // அவ்வ்வ்வ்வ்வ்...அது எனக்குச் சொல்லிய நாகர்கோயில் தோழி சொன்னது. நான் அப்படிதான் பண்ணினேன். (கவனிக்க...இறந்த காலம்!! இப்பல்லாம் நோ ரைம், யு சி!) ஆனா எல்லாரும் அப்புடியே போட்டு கரைக்கினம். மீ டூ சா தட் இன் மெனி ப்ளொக்ஸ்..எனி வே..எப்படி செய்தா என்ன..பதம் கரெக்ட்டா வந்தா சூப்பருதான்!
    போய்ட்டு வாரேன் அதிரா.. முதல் 3கமெண்ட்ஸ் போட்டிருக்கேன், உந்தப் பப்பி முழுக்க எமக்கே சொந்தம். டீல்? ;) :)

    ReplyDelete
    Replies
    1. /// இப்பல்லாம் நோ ரைம், யு சி!) /// யா..யா... ஐ சீ.. ஐ சீ.. ஹா..ஹா..ஹா... :)..

      ///உந்தப் பப்பி முழுக்க எமக்கே சொந்தம். டீல்? ;) :)//// நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் மியாவைப் பார்த்து பப்பி எண்டு சொன்ன மகியை உடனடியா பிரித்தானியாக் கை கோர்ட்டுக்கு வரும்படி ஆணையிடப்படுகிறதூஊஊஉ:)..

      ஆவ்வ்வ் ரொம்ப ரயேட் ஆகிட்டேன்ன்:) மியாவும் நன்றி மகி.

      Delete
  4. ஆ..வ்வ்.ஒருமாதிரி அகர்அகர் செய்திட்டீங்க அதிரா. சிவப்பு,மஞ்சள் காம்பினேஷன் சூப்பர். மாங்கோபல்ப் விட்டபடியால் யம்மி. நீங்க சொன்ன மாதிரி சிலது வித்தியாசம்தான். ஊறவைக்க தேவையில்லை.சுடுநீர்போதும். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ... முன்பு ஒரு காலத்தில இப்பூடித்தான் தலைக்கு ஹெனா வைக்க ஆசை ஆனா பயமாக இருந்தமையால் ஒவ்வொருவராக அறுசுவையில் கேட்டு கேட்டு அலசி ஆராய்ந்தபின் அடிக்கடி இப்போ வைப்பேன்.

      அதுபோலத்தான் இதுவும்.. இப்போ இரண்டாம் தரமும் செய்திட்டேன்ன்.. அதுவும் அளாவு பார்த்தெல்லாம் இல்லாமல் கையால ஒரு கணக்குக்கு தண்ணி விட்டு செய்தேன் 2ம் தடவை சூப்பரோ சூப்பர்ர்...

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
  5. அழகாய் அகர் அகர் செய்த அதிராவுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ராஜேஸ்வரி அக்கா.. மிக்க நன்றி.

      Delete
  6. அகர் செய்து பார்க்க ஆசைதான் ஆனால் அடுப்படிக்கு போகத்தான் ஜோசிக்கணும் [[[[[[[[[[[[[[[[

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அடுப்படிக்குப் போக ஏன் யோசிக்கணும்?:)

      Delete
  7. அகர் செய்ய பொறுமையில்லை.ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. நோஓஓஓஓஒ இதுக்கெல்லாம் பொறுமையே தேவையில்லை:) டக் டிக் டோஸ் தான்:) நாம் சாதாரணமாக பால் காய்ச்சுவதற்கு எடுக்கும் நேரமே இதுக்கு எடுக்கிறது. ஆரம்பத்தில் நானும் அப்படித்தான் பயந்தேன்.

      ஊறவைக்க கோட தேவையில்லை.. நேரடியா அடிப்பில் பான் வைத்து அகர் அகர் போட்டு கேற்றில் சுடுதண்ணி ஊற்றி அப்படியே காச்ச வேண்டியதுதான் ச்சோ சிம்பிள்...

      மிக்க நன்றி நேசன்.

      Delete
  8. வெறி :) போரிங் பின் என்ன ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட இல்லையே :) கஷ்டப்பட்டு on ஸ்க்ரீன் கீபோர்ட்ல கமென்ட்ரென் .அகர் அகர் பார்சல் ப்லீஈஈச் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு... ஹா..ஹா..ஹா.. நாங்க ஆரு?:) தமிழ்ல டி எடுத்த ஆட்களாக்கும்:) எங்கிட்டபோய் ஸ்பெல்லிங் மிசுரேக்கு தேடுறாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பிறந்து வளர்ந்து இப்போ சுவீட் 16 வயசில இருக்கிறேன்:) இதுவரையில ஆராவது ஒரு மிசுரேக்கு பிடிச்சிருக்கினமோ சொல்லுங்கோ?:) பொய் எண்டால் அம்முலுவைக் கேளுங்கோ?:))

      Delete
  9. https://www.facebook.com/3DAgarAgar.StephanieChow/info?tab=page_info

    ReplyDelete
  10. https://www.facebook.com/pages/The-Agar-Agar-Cake-Shop/150981065096923?__fns&hash=Ac3icu1fAkpikQ46

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஞ்சு ஆனா இது இல்லை.. அது தனிய ஒரு பேஜ் அகர் அகருக்கென்று மட்டும் வைத்திருக்கினம்.. ஜல் அக்கா வந்தால் சொல்லுவா.
      மியாவும் நன்றி அஞ்சு.

      Delete
  11. அருமையாய் ஒன்று அகர்அகரில் செய்தீர்!
    தருவீரோ எங்களுக்குந் தான்! ..:)

    பார்க்கவே அத்தனை அழகாக இருக்குதே அதிரா!
    அசத்திட்டீங்க!
    இதுதான் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்கிறது!..:))

    அதிலும் பூஸ்குட்டி அமைப்பு அபாரம்!..:)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளமதி வாங்கோ.. ஆஹா இப்போ கவிதையிலயே பதில் சொல்லி அகரகர்போல குள்ரவைக்கிறீங்க...

      நான் முதன்முதல் அகர் அகர் பார்த்தபோதே என் மனதில் போட்டு வைத்தேன் அதில் பூஸ் செய்யோணும் என:)..

      மியாவும் நன்றி இளமதி.

      Delete
  12. Replies
    1. வாங்கோ தனபாலன் அண்ணன் .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்:) எது ஜூப்பர்? மியாவா? :) அகரகரா?:).. ஹா..ஹா..ஹா மிக்க நன்றி.

      Delete
  13. அழகழகாய் அகர் அகர் செய்த அதிரடி அதிராவுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன்... பயணக் களைப்பு எல்லாம் போயிட்டுதோ? மிக்க நன்றி.

      Delete
  14. வணக்கம்
    மிக அழகாக உள்ளது பாராட்டுகள்...
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரூபன்... மிக்க நன்றி.. கவிதையாக வர முடியாது:) அதுக்கு இன்னும் தமிழ் படிக்கோணும் நான்:)).. ஹா..ஹா.. வருகிறேன்.

      Delete
  15. மாங்கோ கலர் அகர் சூப்பர். அதிராவுக்கு மட்டுமே புத்துப்புது ஐடியாக்கள் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதானே.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ விச்சு... புதுப்புது ஐடியாவோ?:) நேக்கு ஷை ஷையா வருதே... ஹா..ஹா.. மிக்க நன்றி விச்சு.

      Delete
    2. ஷை...ஷையா... வருதா... முகத்தைக் கொஞ்சம் திருப்புங்கோ.. அட..ஆமா!!!!!
      திருஷ்டி சுத்திப்போடுங்க.

      Delete
    3. ஹா...ஹா...ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

      Delete
  16. அப்புறம் அந்த பிங்க் கலர் ஸ்டாருக்குள் அதிராமியா... என்ன கொடுமை சரவணா!!! ம்ம் சூப்பரா இருக்கூ...

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா... பின்ன மியாவை ஆரும் களவெடுத்திட்டாலும் என்றுதான்..:) இப்பூடி வருமுன் காக்கிறேனாக்கும்:).

      Delete
  17. //படிக்க, கொஞ்சம் இங்கின ஒரு எட்டுப் போட்டு வாங்கோவன்:).. அப்போதான் உங்களுக்கு இதன் முக்கியத்துவம் புரியுமாக்கும்:)./////
    kikkkkkeeekikkkeeeeee
    எட்டு போட்டா எனக்கு பைலட் லைசென்ஸ் கிடைக்குமாஆஆ

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பிஸ்ஸூ இப்போ பைலட் ஆகி என்ன பண்ணப் போறீங்க?:) முதல்ல பிளேனில் கோனர் சீட்டில்:) பயப்பூடாமல் இருந்து காட்டுங்கோ:) பிறகு பைலட் ஆகலாம்ம்ம்:)) ஹா..ஹா..ஹா... இதுக்குத்தான் நுணலும் தன் ....:) வாணாம் மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்:).

      Delete
    2. Agaraivida Adhai new gal padaiththavidham (ezhuthil vadiththa vid ham miga arumai. Snooper.

      Delete
    3. வாங்கோ வாங்கோ.. மியாவும் நன்றி...

      Delete
  18. சகோ,
    இளமதி அவர்களின் பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லி இருந்த அகர் என்பதன் பொருள் தேடி அலைந்தலைந்து , சீச்சீ இந்த அகர் புளிக்கும் என்று விட்டு விட்டேன்.
    தமிழ்மணத்தில் அகர் என்று பார்த்து இந்த அகருக்காகவே உங்கள் தளத்திற்கு வந்தேன்.
    படத்திலேயே காட்டிவிட்டீரகள் அகரை!
    அதற்காகவே தம 7
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாங்கோ ஊமைக் கனவுகள் வாங்கோ.. ஆரம்பத்தில் ஜலீலாக்காதான் அறிமுகப்படுத்தினா என நினைக்கிறேன்ன்ன்.. அப்போதான் எனக்கும் இது புதுப் பெயராக இருந்துது... இப்போ 2ம் தடவையும் செய்தேன் சூப்பரா வருது.. இந்திய, பாகிஸ்தான் கடைகளில் கிடைக்குது வாங்கி செய்து பாருங்கோ.

      மியாவும் நன்றி.

      Delete
    2. சொல்லத் தவறிட்டேன்ன்... புதிதாக வந்தாலும் நினைத்து தமிழ்மண வொட் பண்ணியமைக்கு மியாவும் நன்றி.

      Delete
    3. சகோ
      ஒரு சந்தேகத்தை தீர்த்து மறு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டீர்களே?
      அது சரி இது கேண்மியாவா? சென்மியா வா?
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர வேண்டாம்.
      அப்புறம் காணாமற் போயிடுவன்
      நன்றி

      Delete
    4. ஹா..ஹா....ஹா..... நோஓஓஓஓஓஓஓஒ:) மியாவைப் பார்த்து கேணா? சென்னா??:) எனக் கேட்ட ஊமைக்கனவுகளை:) உடனடியாக பிரித்தானிய நீதிமன்றம் வரும்படி...:) பெருமதிப்பிற்குரிய:) மேன்மை தங்கிய:) அன்பும் பண்பும் நிறைந்த:) அதிக அறிவுபூர்வமான:):), நீதிபதி அவர்கள்(அது நாந்தேன்ன்ன்ன்:)) ஆணையிடுகிறார்ர்ர்ர்:)

      Delete
  19. Agarai neengal. Seidhu kattiyadhaivida Adhai padaiththavidham (ezhuthiya vid ham ) miga arumai.

    ReplyDelete
  20. பூஸார் இப்ப தான் ஊசி குறிப்பை பார்த்தேன்
    அந்த லிங்க் தருகிறேன்
    அதை விட இந்த அகர் அகரை நம்ம இரட்டையர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் என்ன? இருங்க லின்க் தரேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜல் அக்கா.. நான் இரண்டாம் தரமாக மில்க்க்கும் மங்கோவும் சேர்த்தும் செய்தேன். இன்று இளநி வாங்கி வந்தேன் நாளை அதில் செய்து கலக்கப்போறேன்.

      Delete
  21. http://cookbookjaleela.blogspot.com/2014/09/duplicate-bulls-eye.html
    Duplicate bulls eye

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் போய்ப் பார்த்து பின்னூட்டமும் போட்டிட்டேன் சூப்பர் ஐடியா.

      Delete
  22. https://www.facebook.com/marinechemicals?fref=ts
    இந்த அகர் அக்ர் கொண்டு பல டிஷ் கள் செய்யலாம்
    சீஸ் கேக்குக்கு சூப்பராக செட் ஆகும்

    டேட்ஸ் பனானா அகர் அகர் செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொன்றா எல்லாம் செய்யப்போறேன், இவ்ளோ ஈசியானது அகர் அகர் செய்வது என முன்பு தெரியாமல் போச்சே.. மியாவும் நன்றி ஜல் அக்கா.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.