நல்வரவு_()_


Wednesday 31 May 2017

இயற்கை பொல்லாததோ? மனிதர் பொல்லாதவரோ?:)

பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காக மாறும் கதை பல நேரங்களில் நடந்துவிடுகிறது. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்து விடுகிறது. மனிதர்களுக்கு நன்மை செய்கிறோம் பேர்வழி என வெளிக்கிட்டு.. ஒரு வாயில்லா அப்பாவி ஜீவனுக்கு பணிஸ்மண்ட் கொடுத்தாகி விட்டது...

அதாரது கல்லெடுக்கிறதூஊஊஊ?:) நோ நோ.., நோ சண்டை:), சமாதானமாகிப் போயிடலாம்:)..
ங்கள் வீட்டில் இந்த கோன் மரம் இருந்துது, படத்தில் பார்க்க உருவம் தெரியவில்லை, மிகப் பெரிதாக வளர்ந்து விட்டிருந்தது, பின் வீட்டினருக்கு, ஆற்றின் வியூவை இது மறைக்குமே, எனும் நல்லெண்ணத்தில், மேலால கட் பண்ணலாம் எனும் முடிவுக்கு வந்து, மரம் வெட்டும் ஒருவரை அழைத்துக் கேட்டபோது 350 பவுண்டுகள் என்றார்.  கேட்ட கையோடு குளிர் ஆரம்பமாகி விட்டது, விட்டு விட்டோம்.

அடுத்த வருடம் இன்னொருவரை அழைச்சுக் கேட்டபோது கரெக்ட்டா 400 பவுண்டுகள் என்றார்.. அப்போ கணக்குச் சரிதான், வருடா வருடம் ஏறுது விலை, அழகாக வட்டமா வெட்டி விட்டிடலாம் என வெட்டச் சொன்னோம்.

நமக்கு இந்த மரம் பற்றித் தெரியாது, வெட்டுபவருக்கு தெரிஞ்சிருக்க வேணுமே. சில மரங்கள் மொட்டை அடித்தாலும் வளரும், ஆனா இது பனை, தென்னை மாதிரிப் போலும். மிகுதி படம் பார்த்துத் தெரிஞ்சு கொள்ளுங்கோ


அப்படியே மரம் பட்டே விட்டது:(.

()()()()()()()()()()()()()()()()()())()()இடைவேளையில் ஒரு நியூஸ்:)()()()()()()())()()()()()()()()
ஸ்கூல் என்றதும் இந்த நினைப்பு வந்துது. ஒவ்வொரு இடத்துக் கல்ச்ஸர் ஒவ்வொரு விதம், சரி பிழை சொல்லத் தெரியவில்லை, ஆனா என்னைப்பொறுத்து, இங்குள்ளவர்கள் தமக்கு எது சரியோ, எது விருப்பமோ அதை அனுபவிக்க தவறுவதில்லை, பூரண சுகந்திரம் இவர்களுக்குண்டு. வாழ்க்கை என்பது ஒருதடவைதானே, அதனை சந்தோசமாக அனுபவிப்போம் என எண்ணுகின்றனர்.. பல நேரங்களில் இவர்களின் மன ஓட்டமும் சரி என்றே படுகிறது.

ங்கள் ஸ்கூலில் ஒரு ரீச்சர், நல்ல அழகானவ நல்ல உயரம், குளு குளு என இருப்பா, அரை அடியில் எப்பவும் கீல்ஸ் போட்டே நடப்பா. இங்கு சிலருக்கு கீல்ஸ் இல்லாத ஸூஸ் போட்டு நடக்க தெரியாது, சின்னனிலிருந்தே பழகி விட்டார்கள்.

வவுக்கு ஒரு 30, 32 வயதிருக்கும் என நான் நினைச்சிருந்தேன். திருமணமாகவில்லை, ஆனா இங்கு குழந்தைகள் பிறந்தாலும் திருமணம் முடிக்காமல் பார்ட்னராக இருப்போர்தான் அதிகம். ஆனா போன கிழமைதான் சொன்னா, அவவுக்கு பார்ட்னர் யாரும் சரிவரவில்லையாம், தனியேதான் இருக்கிறாவாம், இப்போ 39 வயதாம், இனியும் வெயிட் பண்ணி என்ன பண்ணுவது, ஆனா பிற்காலத்தில் தனக்கென ஒரு குடும்பம் வேண்டும் என எண்ணி, தான் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தாவாம்.

ன் தாய், சகோதரமும் சந்தோசப்பட்டார்களாம். அப்போ Sperm Bank பற்றிய விபரம் எடுத்து, அங்கு நமக்கு எப்படிப்பட்டவரின் குழந்தை வேண்டுமென்பதை நாம் தீர்மானிச்சு எடுக்கலாமாம். இவ ரீச்சராக இருப்பதனால், ஒரு ரீச்சரின் Sperm  தான் வேண்டுமெனத் தேடினாவாம் கிடைச்சதாம்.. அதில் அவரின் முழு விபரமும் இருக்குமாம்... அவருடையதை யார் பயன்படுத்துகிறார்கள் எனும் விபரமும் எல்லாம் கொம்பியூட்டரில் சேவ் பண்ணுவினம்போல.

ப்போ இவ அதன் மூலம் இப்போ 2 மாத பிறக்னண்ட் ஆக இருக்கிறா. பயங்கர ஹப்பியாக இருக்கிறா. இன்னொரு விசயம், இங்கு எங்கள் வகுப்பை எடுத்துக் கொண்டாலே.. 25 பிள்ளைகளில்... கிட்டத்தட்ட 18 பிள்ளைகளின் பெற்றோர் பிரிந்தேதான் வாழ்கின்றனர்.. இது இங்கு நோர்மலாக இருப்பதனால், அம்மாதான் இந்நாட்டில் பிள்ளைக்கு முக்கியம் என்ற நிலைமையில் இருக்கிறார்கள், அதனால இப்படி துணிந்து இறங்குகிறார்கள்.
()()()()())()()()()()()()()())()()()()()()()()()()()()()()()()()()())()()()()()()()()())()()()()()()()()())()()()()()()()

இது சந்தோசமான செய்தி, இப்படி மனிதருக்கும் வாழ்க்கை இருப்பின் எவ்வளவு நல்லது...:) இது கிட்டத்தட்ட என் ஆறு மாத உழைப்பு.. எங்கள் ஸ்கூல் கிரவுண்டில் நிற்கும் மரம்... தொடர்ந்து படமெடுத்து வந்தேன்..

இப்படம் இலைகள் பழுக்கத் தொடங்கும் இலையுதிர் காலம்...

இது பனிக்காலம், இலைகள் முற்றிலும் உதிர்ந்து விட்டன.. பட்டமரம்போல் இருக்கு.
இது இளவேனிட் கால ஆரம்பம்.. மெதுவாக குருத்துக்கள் வரத் தொடங்கிட்டுது..

இது இப்போதைய நிலை.. என்ன இளமையாக அழகாக இருக்குது.

இதைப்போன்ற என் இன்னொரு உழைப்பையும் நேரமிருப்பின் பார்த்து மகிழுங்கோ: இங்கே

இவ எங்க வீட்டு முற்றத்து முல்லைக்கொடி.. இப்போதைய நிலைமை:).

ஊசி இணைப்பு:
ஹா ஹா ஹா எனக்கு தங்கை இல்லை, நாந்தேன் தங்கை ஆக்கும்:).. எப்பூடியெல்லாம் யோசிக்கிறாங்க:) என்ன கொடுமை சாமீ:).
பிளீஸ்!!! இம்முறை “2” ஊசி இணைப்புப் போடுகிறேனே:) ஹா ஹா ஹா:)

இனி நான் சீரியசாகப் பேசப் போகிறேன்..
ஊசிக்குறிப்பு:
======================================================================
எனக்கு இம்முறை மகுடம் வேணாம்:).. ஆனா வோட் போடோணும் எல்லோரும், இல்லையெனில் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் இருப்பேன்:)
=======================================================================
ஆவ்வ்வ் எனக்கு மகுடம் கிடைச்சுவிட்டதூஊஊஉ:) சகோ ஸ்ரீராம் இணைத்ததும் எனக்கும் இங்கு படம் இணைக்கும் தெகிறியம்:) 



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

115 comments :

  1. முதல் வோட் என்னோடதாக்கும் !


    thamizmanam

    இடுகைத்தலைப்பு:
    இயற்கை பொல்லாததோ? மனிதர் பொல்லாதவரோ?:)

    உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

    சன்னலை மூடு

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ் வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... 2 வது வோட் என்னோடது:).. முதலாவதா வந்திருக்கிறீங்க, பார்ப்போம் இம்முறை ஆயாவைக் கூட்டிப்போக யார் வருகிறார்கள் என:) .. ஹா ஹா ஹா..

      Delete
  2. ஹைய்யோ .... ஹைய்யோ .... ஹைய்யோ .....

    அந்த முதலில் காட்டியுள்ள பூனை அந்த லாப்-டாப்பை என்னா அடி அடுக்குது !!!!! எவ்ளோ ஸ்பீடாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அடிக்குது !!!!!!! ஜோர் ஜோர் !!!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அவர் ரைப் பண்ணிப் பழகுறாராமாம்ம்ம்ம்:)..

      Delete
    2. :) நீங்களும் ரைப் பண்ண ரெடியாக இருங்கோ :)

      Delete
    3. ஹா ஹா ஹா கர்ர்:) அடுத்த ரிவியூ பார்ட் -2 கம்மிங் ஆக்கும்:) ஹையோஓ... me escapeeeeeeeeeeeeeeeeeeeee:)

      [im]http://www.vetfoodcoach.de/assets/images/b/shutterstock_149320823_klein-d12aa16b.jpg[/im]

      Delete
  3. குழந்தை பெற்றுக்கொள்வது எல்லாம் இப்போது எத்தனை ஈஸியாகி விட்டது அதிரா! விஞ்ஞானம் வளர வளர தனி மனித அடையாளங்களும் ஒழுக்கமும் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறது!!

    அந்த முதலாவது ஊசி இணைப்பு! எங்கேயிருந்து இதத் தேடிப்பிடித்தீர்கள்? சிரிப்பை வரவழைத்தது!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. நீண்ட இடைவேளையின் பின்னரும் மறக்காமல் வந்திருக்கிறீங்க, நலம்தானே?..

      //விஞ்ஞானம் வளர வளர தனி மனித அடையாளங்களும் ஒழுக்கமும் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறது!!//

      உண்மையேதான், ஆனா இந்த ரீச்சரின் குழந்தை விசயத்தில் ஒழுக்கக்கேடாக எனக்குத் தோணவில்லை, அவ நினைத்தால், இங்கு கண்டபடி சுற்றித்திரிந்தே குழந்தைக்க்கு தாயாகி இருக்கலாம், ஆனா அவ ஒழுக்கமாக இருந்து, வெளியே சொல்லக்கூடிய ஒரு விசயமாகவே குழந்தையை எடுத்திருக்கிறா என்றே தெரிகிறது. சரிபிழை சொல்லத் தெரியவில்லை.

      ஊசிக்குறிப்பு ஹா ஹா ஹா கூகிளாரிடமிருந்துதான்.

      மிக்க நன்றி மனோ அக்கா.

      Delete
  4. //எங்கள் ஸ்கூலில் ஒரு ரீச்சர், நல்ல அழகானவ நல்ல உயரம், குளு குளு என இருப்பா//

    39 வயதான ... தாயாகப்போகும் ... அந்த ஜில் ஜில் டீச்சருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மரங்களின் புகைப்படங்கள் அழகு
    மரத்தை வெட்டுவதானால் முனிசிபாலிட்டியில் அனுமதி பெறவேண்டாமா ?

    எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள ஊரணியை ரசிக்க இடையூறாக கட்டிய வீட்டை இடிக்கச் சொன்னேன் சண்டைக்கு வந்து விட்டார்கள்....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜீ வாங்கோ..

      //மரத்தை வெட்டுவதானால் முனிசிபாலிட்டியில் அனுமதி பெறவேண்டாமா ?//
      இல்லை இது எங்கள் கார்டின் மரம்தானே, கட்டிடம் கட்டுவதாயிந்தான் இங்கு அனுமதி பெற வேண்டும்.

      ////எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள ஊரணியை ரசிக்க இடையூறாக கட்டிய வீட்டை இடிக்கச் சொன்னேன் சண்டைக்கு வந்து விட்டார்கள்.... ///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மின்னாமல் முழங்காமல், ஆரவாரமில்லாமல் சிரிப்பூட்டி விடுறீங்க அப்பப்ப...

      மிக்க நன்றி கில்லர்ஜீ..

      மிகுதிப் பதில்களுக்கு பின்பு வருகிறேன்ன்ன்.

      Delete
  6. ஊசி இணைப்புகள் இரண்டும் படா ஜோராக்கீதூஊஊஊஊ.

    ஊசிக் குறிப்பு ஒன்றும் நல்லாத்தான் இருக்குது.

    ReplyDelete
  7. ஆங்காங்கே சுட்டுப் போட்டுள்ள படங்களான மொட்டை மரங்கள் + முடியுள்ள மரங்கள் + முல்லைக்கொடிகள் எல்லாமே அழகோ அழகாக இருக்குது. பகிர்வுக்கு நன்றிகள்.

    நள்ளிரவு நான் போட வேண்டியுள்ளது ....................... ஒரு புதுப் பதிவு. அதனால்
    வேலைகள் அதிகம். இத்துடன் நான் ஜூட் :)

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன். உங்கள் போஸ்ட் வெளிவந்த பின்னரே இங்கு கொமெண்ட்ஸ் க்குப் பதில் போட எனக்கு நேரம் கிடைத்திருக்கிறது.

      Delete
  8. இன்னொரு வீட்டுக்காரருக்கு நதி பார்ப்பது மறைக்கும் என்று மரத்தை வெட்ட நினைத்தீர்களே. உங்கள் நல்ல எண்ணத்துக்குப் பாராட்டு.

    "குளு குளு என இருப்பா" - இதுக்கு அர்த்தம் விளங்கவில்லை

    த.ம. 4 ன்னு நினைக்கிறேன்.

    ஊசிக்குறிப்பு - கடவுள் உங்களுக்குக் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது - உண்மை. கடவுள் கொடுக்க நினைக்காததை, யாரும் உங்களுக்குத் தந்துவிட முடியாது. இதுவும் உண்மை.

    இனிமேல், லேப்டாப்பில் உங்கள் படத்தை போட்டுவிட்டுப் போகாதீர்கள். பூசாருக்கு எவ்வளவு ஆத்திரம் உங்கள் படத்தைப் பார்த்து. அவருக்கு மட்டும் தெரிந்திருந்தால், எஸ்கேப் பட்டனை அமுக்கியிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. என்பக்கம் வரும் எல்லோருக்கும் ஓவர குசும்பு வந்து விடுதேஏஏஏஏ ஹா ஹா ஹா வாறேன் வாறேன்ன்ன்:).

      Delete
    2. இதுல தவறு என்ன? நீங்க கட்டிலுக்குக் கீழ ஒளிஞ்சுக்குவீங்கன்னு சொல்லியிருக்கீங்க. பூசார் இடத்தை அடிக்கடி பிடிச்சுக்கறதுனால உங்கமேல அதுக்கு ஆத்திரமாயிருக்கும்னு நினைச்சேன்.

      Delete
    3. வாங்கோ சகோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      //இன்னொரு வீட்டுக்காரருக்கு நதி பார்ப்பது மறைக்கும் என்று மரத்தை வெட்ட நினைத்தீர்களே. உங்கள் நல்ல எண்ணத்துக்குப் பாராட்டு.///

      இந்த ஏரியாவில் வீடு வாங்கி இருப்போர் எல்லோருமே, வியூ வுக்காகத்தான் பெரும்பாலும் வாங்கியிருக்கிறார்கள்.. அதனால யாரும் பெரிதாக மரங்கள் வளர்ப்பதில்லை.. சிலர் வளர்த்திருக்கிறார்கள்தான், இருப்பினும் மனச் சாட்சிக்கு அது தப்பு. இப்படியானவற்றிற்று இங்குள்ளவர்கள் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள், அமைதியாகவே இருப்பார்கள்..

      ///"குளு குளு என இருப்பா" - இதுக்கு அர்த்தம் விளங்கவில்லை//
      ஹா ஹா ஹா இதுக்குத்தான் குசும்பு எனச் சொன்னேன்.. இதை எப்படிப் புரிய வைப்பது.. டயட் பண்ணி, தோல் சுருங்கி வாடிப்போய் இல்லாமலும், ஓவரா சாப்பிட்டு அதிக எடையோடு இல்லாமலும், நல்ல அழகான.. குளிர்மையான உடல்வாகில் இருப்போரை அப்படிச் சொல்லுவோம்... முந்தைய குஸ்பூ, இப்போதைய ஹன்ஷிகா.. இப்படி:) ஹையோ முடியல்ல முருகா:).

      Delete
    4. //த.ம. 4 ன்னு நினைக்கிறேன்.//

      haa haa haa போனதடவை அஞ்சு எனச் சொன்னதாக நினைவு.. இம்முறை அஞ்சுவையே முந்தி வந்திட்டீங்க மிக்க நன்றி.

      ///இனிமேல், லேப்டாப்பில் உங்கள் படத்தை போட்டுவிட்டுப் போகாதீர்கள். பூசாருக்கு எவ்வளவு ஆத்திரம் உங்கள் படத்தைப் பார்த்து. ///
      ஹா ஹா ஹா.. படம் பார்க்க இப்பூடியும் ஒரு யோசனை வருதோ? என்னமாதிரி எல்லாம் கண்டுபிடிக்கிறீங்க.

      //இதுல தவறு என்ன? நீங்க கட்டிலுக்குக் கீழ ஒளிஞ்சுக்குவீங்கன்னு சொல்லியிருக்கீங்க. பூசார் இடத்தை அடிக்கடி பிடிச்சுக்கறதுனால உங்கமேல அதுக்கு ஆத்திரமாயிருக்கும்னு நினைச்சேன்.//

      ஹா ஹா ஹா போகிற போக்கைப் பார்த்தால் இனி அந்தர ஆபத்துக்குக் கூட நான் கட்டிலுக்குக் கீழ ஒளிக்க முடியாதுபோல இருக்கே:)

      Delete
    5. எனக்கும் முடீல்ல சிவனே!! தமன்னா, பழைய சிம்ரன், மிகப்பழைய ரம்பால்லாம் விட்டுப்போட்டு, மைதாமாக்களான குஷ்புவும் ஹன்சிகாவுமா உங்கள் நினைவுக்கு வரவேண்டும். பொற்ற்றாஆஆஆமை

      Delete
    6. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ராதாவையும் ஸ்ரீதேவியையும் அம்போ என விட்டுப்போட்டீங்களே:) ஹா ஹா ஹா.. எப்போ தொடக்கம் தமனாவுக்கு மாறினீங்க?:)..

      நான் கலருக்குச் சொல்லல்ல.. குளுகுளு என இருப்போரைச் சொன்னேனாக்கும்:).. ஹையோ இதுக்கு மேலயும் என் வாயைக் கிண்டினால்:) .. மீ அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் சொல்லிப்போடப்போறனே:).. பழனியாண்டவா என்னைக் காப்பாத்த்துங்ங்ங்ங்ங்:).

      Delete
  9. "இது கிட்டத்தட்ட என் ஆறு மாத உழைப்பு" - எது... 4 போட்டோ எடுத்ததா? அல்லது நாலையும் வரைந்தீர்களா (கிறுக்கினீர்களா என்று சொல்வது கிண்டல் செய்வதுபோன்றது தமிழ்நாட்டில்). பில்டப் ரொம்பத்தான்.

    ஆனாலும் மரங்களின் வாழ்க்கை Cycle காண (ஒவ்வொரு வருடமும்) பரவசமாயிருக்கும். இங்கயும், இப்போ பேரீட்சை காய்கள், ஆலிவ் சைசுக்கு வந்துடுச்சு ( நான் நடக்கும் பூங்காவில்). இன்னும் 2-3 மாதத்துல நல்லா பழுத்துடும். அப்புறம் தேவையில்லாத இலைகளை வெட்டிவிடுவாங்க. அடுத்த வருடம் பூ மலர்வதற்கு (இலைனா, தென்னை ஓலைமாதிரி. பூவும் தென்னம்பாளையில் வரும் பூ மாதிரித்தான் வரும்)

    ReplyDelete
    Replies
    1. ///"இது கிட்டத்தட்ட என் ஆறு மாத உழைப்பு" - எது... 4 போட்டோ எடுத்ததா?//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) என் பக்கம் வந்தாலே எல்லோருக்கும் பிராண்டி விளையாடோணும் எனும் ஆசை வந்திடுது:).

      //நாலையும் வரைந்தீர்களா (கிறுக்கினீர்களா என்று சொல்வது கிண்டல் செய்வதுபோன்றது தமிழ்நாட்டில்). பில்டப் ரொம்பத்தான்.///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஒரே மரத்தை 6 மாதமா வோச் பண்ணிப் படமெடுத்து, அப்படங்களைப் பத்திரமாப் பாதுகாத்து.. இங்கின போட்டிருப்பதைப் பார்த்து.. டிஸ்கவரி சனல் பார்த்த பீலிங்ஸ்ஸ்ஸ் வருது எனச் சொல்லுவீங்களென எதிர்பார்த்தனே.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மிஸ்ஸ்ஸ் ஆகிட்டுதே:)..

      ///இங்கயும், இப்போ பேரீட்சை காய்கள், ஆலிவ் சைசுக்கு வந்துடுச்சு ( நான் நடக்கும் பூங்காவில்). இன்னும் 2-3 மாதத்துல நல்லா பழுத்துடும். அப்புறம் தேவையில்லாத இலைகளை வெட்டிவிடுவாங்க. அடுத்த வருடம் பூ மலர்வதற்கு (இலைனா, தென்னை ஓலைமாதிரி. பூவும் தென்னம்பாளையில் வரும் பூ மாதிரித்தான் வரும்)///

      ஆவ்வ்வ்வ் நேரில் பார்க்கவில்லை வீடியோவில் படத்தில் பார்த்திருக்கிறேன், நோன்புக் காலத்தில் இங்கும் குலை குலையா முத்தலாக மஞ்சள் நிறத்தில் பேரீச்சைக் குலைகள் கொண்டு வந்து இஸ்லாமியக் கடைகளில் விற்பார்கள்.. எனக்கது[எனக்கு மட்டும்] ரொம்பப் பிடிக்கும்.. ஒருவித மாங்காய் சுவைபோல இருக்கும்.. தவறாமல் வாங்குவேன்[ இதில் ஒரு சந்தோசம் என்னவெனில்.. இப்படியான பல பொருட்கள் வீட்டில் எனக்கு மட்டுமே பிடிக்கும்.. அதனால யாரும் திரும்பியும் பார்க்க மாட்டினம்.. மொத்தமும் எனக்கே எனக்கா.. வச்சு வச்சு சுசிச்சு சுசிச்சூஊஉச் சாப்பிடுவேன்ன்]..

      இலங்கையில் ஈச்சமரம், பார்த்திருக்கிறேன், ஈச்சம் குலை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்ன்... நல்ல சிவப்பாக இருக்கும் நன்கு பழுத்தால் கறுப்பாக இருக்கும்.. கனிந்தது. அதன் revolution தானே பேரீச்சை:).

      நீங்களும் என்னைப்போல வெயிட் பண்ணிப் படங்கள் எடுத்து டார்லிங்குப் பகுதிக்கு அனுப்பலாமே(எங்கள்புளொக்). பார்க்க ஆவலாக இருக்கிறோம்.

      அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள் நெல்லைத் தமிழன்.

      Delete
    2. ஞாயிறு படங்களை, "டார்ஜிலிங் படங்கள்" என்று நினைக்கும் வண்ணம் டார்ஜிலிங்கை வைத்து வெள்ளிவிழா எடுத்துவிட்டாரா ஶ்ரீராம்? அதனால ஞாயிறு படங்கள்னா டார்ஜிலிங் உங்க ஞாபகத்துக்கு வருதா

      Delete
    3. ஹா ஹா ஹா வரவர நெ.தமிழனுக்கு குசும்பு கூடிட்டே வருதூஊஊஊ:).. இப்போ ஞாயிறு எண்டாலே டார்லிங்:) எண்டாகிப்போச்ச்ச்ச்ச்ச்:)

      Delete
  10. வாக்களித்து விட்டேன் ..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வரேன் இன்னிக்கு மதியம் தான் நான் ப்ரீ ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..
      /// வரேன் இன்னிக்கு மதியம் தான் நான் ப்ரீ .//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிறீயா இருக்கும்போது வருவோர் எல்லாம் நண்பன் இல்லையாம்ம்:) பிசியான நேரத்திலும் எட்டிப் பார்ப்போர்தான் நண்பர்களாம்”.. ஹா ஹா ஹா பிஸ்ஸு சூப்பர் மாட்டி:)

      Delete
  11. ஆ....எங்க ட்வின் டவரையும் வெட்டவேண்டியதாபோச்சு. ம்..அதிலும் ஜீவன் இருந்ததை கவனிக்காமல் விட்டிட்டார் கணவர்..கர்ர்ர்ர்ர்... நல்லகாலம் ஒரு சேதமில்லாமல் காப்பாத்தி கரைசேர்த்தாச்சு.
    இந்த மரம் வெட்ட கவுன்சிலில் ப்ர்மிஷன் வேண்டாமோ. இங்கெனில் வெட்டமுடியாது. தகுந்தகாரணம் சொல்லோனும். அவங்க வந்துபார்ப்பாங்க. வெட்டலாம் என்றா மட்டுமே சாத்தியம். பக்கத்து வீட்டுக்காரர் டிஸ்டேர்ப் என்று கேஸ் கொடுத்தாலும், சில ரூல்ஸ் இருக்கு இங்கு. பிராணிகள்,இயற்கை இரண்டிலும் இங்கு கவனம். வீடுகட்ட‌காணியில் நின்ற மரம் வெட்ட ஏற்பட்ட அனுபவபட்டதால்தான் தெரியும் இவ்வளவு பிரச்சனை. மரம் வளர்க்கலாம்,ஆனா வெட்டமுடியாது நினைச்சமாத்திரத்தில்..
    எப்படியிருந்த மரம் இப்படியாகிபோச்சே....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. ஓ ஜேர்மனியிலும் ருவின் டவர் வச்சிருந்தீங்களோ?:) பின்லாடனைக் கொண்டு வெட்டியிருக்கலாமெல்லோ:)..

      இங்கு அப்படி சட்டம் இன்னும் இல்லை, கார்டின் மரங்களை வெட்ட. ஆனா ஃபொரெஸ்ட் டிபார்ட்மெண்ட்டுக்குச் சொன்னால் ஃபிரீயாக வெட்டி விடுவார்களாம், ஆனா அது வெயிட்டிங் லிஸ்ட்டில் வருமாம் என்பதால் அநியாயமாக 400 பவுண்டுகள் கொடுத்து ஒரு உயிரைக் கொலை பண்ணியதாகிவிட்டது.

      ஃபொரெஸ்ட் டிபார்ட்மெண்ட் ஆட்கள் எனில் அவர்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. இப்படியான மரத்தை எப்படி வெட்டினால் பாதுகாக்கலாம் என.

      Delete
  12. இங்கு ..அதுவும் பெண்களின் சுதந்திரத்துக்கு கேட்கவும்வேணுமா. உண்மைதான் அதிரா. இவர்களின் வாழ்க்கைமுறையில் நல்லனவும் இருக்கு. அதிக பாசம்,அன்பில்,சென்டிமென்ட் ல் விழுந்துவிடாயினம். எதிலும் டேக் இட் ஈசி தான். (கூடுதலானவர்கள். ) சிலவேளை சரிதானோ என நானும் நினைப்பேன். அவாவுக்கு இப்பதான் வாழவேணும் என பிடிப்பு வந்திருக்கோனும். சிலபேர் இப்படிதான் நல்லா என் ஜாய் பன்னுவினம். பின் வாழ தொடங்குவினம்.
    என் மகனின் கூடப்படிப்பவர்களில் அரைவாசிப்பேரில் ஒரிஜினல் அம்மா மட்டுமே. மகனை அதிர்ஷ்டசாலி என்பார்களாம். பெற்றாருடன் இருக்கிறார் என்பதால்..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அம்முலு... இங்கத்தைய சில முறைகளைப் பார்க்கும்போது இதுவும் சரி எனவே தோணும். ஒழுக்கத்தோடுதான் பல வெள்ளையர்கள் இருக்கிறார்கள்.

      நம் நாட்டில்தான் பேருக்கு ஊருக்கு, கெளரவத்துக்கு என மனைவியை வைத்துக்கொண்டு, கள்ளத்தொடர்பில் இருப்போர் பலருண்டு. ஆனா இந்நாட்டில், கணவனையோ மனைவியையோ பிடிக்கவில்லை எனில், நேர்மையாக டிவோஸ் எடுத்துக்கொண்டு இன்னொரு வாழ்க்கையில் நுழைகின்றனர்... என்னைப் பொறுத்து இப்படியான முறை நேர்மையானதுதானே. இப்படி நிறையவே சொல்லலாம்.

      ஆனா சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்காகவெல்லாம் பிரிந்து விடுகிறார்கள்.. அதுதான் கொடுமை, பாதிக்கப்படுவது குழந்தைகளே.

      ஸ்கூலில் வெள்ளிக்கிழமைகளில் சில பிள்ளைகள் மிக ஹப்பியாக இருப்பார்கள், சிலர் மிக சோகமாக இருப்பார்கள்.. ஏனெனில் சனி ஞாயிறு அவர்கள் தந்தையிடம் போயிட வேண்டும். தாய்க்கு ஓய்வு நாள்[பிரிந்திருக்கும் பெற்றோர்]. boyfriend உடன் ஊர்சுற்றி குழந்தை பெற்று, அப்பா யாரெனத் தெரியாது வளரும் குழந்தைகளும் உண்டு.. தாயின் பெயர் எப்பவும் மிஸ் என்றே இருக்கும்.

      இன்னொன்று டிவோஸ் எடுத்தாலும் அப்பெண் “மிஸ்” என மாறிவிடுகிறார் பெயரில் மிஸிஸ் வராது.....

      Delete
  13. இது சந்தோசமான செய்தி, இப்படி மனிதருக்கும் வாழ்க்கை இருப்பின் எவ்வளவு நல்லது...:)
    //இப்படி வாழ்க்கை இருந்தால் என்னாவது........நல்ல ஆசைதான் உங்களுக்கு...
    பட்டமரம் துளிர்விடுவதென்னவோ இங்குதான்..நம்நாட்டில் பட்டதுபட்டதுதான்.
    அப்பப்பா... ஏன் பூஸார் அந்த அடி அடிக்கிறார்..!!! படங்கள் எல்லாமே அழகு.
    ஆஹா......2வத ஊசிணைப்பு சூப்ப்ப்பர்.......ஹா..ஹா..
    ஊசிக்குறிப்பு அருமை. உண்மைதான்.
    நீங்க இங்கு எழுதும் பதிவுக்கு மகுடம் கிடைக்கோனும் அதிரா.. அதில்தான் மகிழ்ச்சி,சந்தோஷம் இருக்கு. கிடைக்கும்..பாருங்கோ.

    ReplyDelete
    Replies
    1. ///இப்படி வாழ்க்கை இருந்தால் என்னாவது........நல்ல ஆசைதான் உங்களுக்கு.../// ஹா ஹா பல்லு விழுந்தாலும் திரும்ப பால் பலு முளைக்கும் எல்லோ.. கழுகு இனத்தைப்போல:).

      //பட்டமரம் துளிர்விடுவதென்னவோ இங்குதான்..நம்நாட்டில் பட்டதுபட்டதுதான்.//

      யேஸ்ஸ் ட்ரூஊ:)..

      //நீங்க இங்கு எழுதும் பதிவுக்கு மகுடம் கிடைக்கோனும் அதிரா.. அதில்தான் மகிழ்ச்சி,சந்தோஷம் இருக்கு. கிடைக்கும்..பாருங்கோ.///
      ஹா ஹா ஹா எனக்கு ஓவர் ஆசை இல்லை.. என் கூழ் க்கு கிடைச்சதே போதும் பல யுகத்துக்கு..

      //கிடைக்கும்..பாருங்கோ.//
      ஹா ஹா ஹா பகவான் ஜீக்கு கத்தி காட்டிப் பறிச்சால்தான் உண்டு ஹா ஹா ஹா:)..
      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
    2. இப்படி நீங்க கீபோர்ட் ல பிரக்டீஸ் பன்னினால் கிழமைக்கு ஒன்று இல்லை, 5, 6 போஸ்ட் போடுவீங்க போல..... ஹா..ஹா...

      Delete
    3. அம்முலூஊஊஊஊ நேக்கு மகுடம் கிடைச்சுவிட்டதூஊஊஊஊ நீங்க சொன்னதைப்போலவே.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:) மேலே படம் இணைக்கிறேன்ன்:).

      Delete
    4. #பகவான் ஜீக்கு கத்தி காட்டிப் பறிச்சால்தான் உண்டு ஹா ஹா ஹா:)..#
      உங்கள் தளத்தில் உங்கள் ஒருவர் உழைப்பில் நீங்கள் பெறும் மதிப்புக்கு நானே மகுடம் சூட்டி விடுவேன் ,கத்தியே காட்ட வேண்டாம் :)

      Delete
    5. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள் அதிராஆஆஆ..

      Delete
    6. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ... மகுடத்தின் தலைவரிடமிருந்தே இப்பூடிக் கொமெண்ட் கிடைச்சதும் நேக்கு கை எங்க வைக்கிறேன் கால் எங்க வைக்கிறேன் என்றே புரியல்ல.. ஹா ஹா ஹா மிக்க நன்றி ப.ஜீ.

      Delete
  14. 400 பவுண்ட்ஸ் கொடுத்து அந்த அருமந்த மரத்தை...... சரி விடுவம். போனது போகட்டும் :)

    ஆறுமாதமா ஒரு மரத்தை விடாமல் படம் எடுத்திருக்கிறீர்கள். உண்மையிலேயே பெரிய உழைப்புத்தான். படங்களும் அழகாகவே உள்ளன.

    அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு அட்டகாசம் :) :)

    - முக்கிய செய்தி : நான் ஓட்டு போட்டுவிட்டேன். தமிழ்மணத்தில் சேர்ந்து ஒரு மாசம் ஆச்சு. ஆனா என்னுடைய கணக்கு activate ஆகவில்லை. என்னவென்று யோசித்தால், அவர்கள் spam ஐ செக் பண்ணவும் எண்டு போடுவதற்குப் பதிலாக 'எரித கோப்பையை' பார்க்கவும் என்று போட்டிருக்கிறார்கள். எரித கோப்பை தெரியாம ஒரு மாதமா ஓட்டு போடவில்லை :) :)

    - நீங்கள் இலங்கையோ என்று போன பதிவில் கேட்டிருந்தீர்கள் - 'ஓம்'

    வழக்கம்போல கலகலப்பான பதிவு + அழகான தமிழ்.

    பயிற்சி எடுத்துவிட்டு அடிக்கடி எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ வெண்ணிறப்புரவி வாங்கோ..
      //400 பவுண்ட்ஸ் கொடுத்து அந்த அருமந்த மரத்தை...... சரி விடுவம். போனது போகட்டும் :) ///
      உண்மைதான் வேறு வழி தெரியவில்லை.

      //ஆறுமாதமா ஒரு மரத்தை விடாமல் படம் எடுத்திருக்கிறீர்கள். உண்மையிலேயே பெரிய உழைப்புத்தான். படங்களும் அழகாகவே உள்ளன. //
      நிஜமாவோ மிக்க நன்றி.

      //ஆறுமாதமா ஒரு மரத்தை விடாமல் படம் எடுத்திருக்கிறீர்கள். உண்மையிலேயே பெரிய உழைப்புத்தான். படங்களும் அழகாகவே உள்ளன. //
      ஹா ஹா ஹா கர்:).. இதுபற்றி யாரிடமும் எந்த விபரமும் கேட்க முடியாது இங்கின:) அதனால உங்களிடமும் கேட்காமல் விட்டு விடுகிறேன்:).

      Delete
    2. /////முக்கிய செய்தி : நான் ஓட்டு போட்டுவிட்டேன். தமிழ்மணத்தில் சேர்ந்து ஒரு மாசம் ஆச்சு. ஆனா என்னுடைய கணக்கு activate ஆகவில்லை. என்னவென்று யோசித்தால், அவர்கள் spam ஐ செக் பண்ணவும் எண்டு போடுவதற்குப் பதிலாக 'எரித கோப்பையை' பார்க்கவும் என்று போட்டிருக்கிறார்கள். எரித கோப்பை தெரியாம ஒரு மாதமா ஓட்டு போடவில்லை :) :) ///

      ஆவ்வ்வ்வ் செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே:).. இத்தனை நாள் போட்ட உங்கள் கொமெண்ட்ஸில் இதுதான் டாப்பூஉ:) எனச் சொல்லவே மாட்டேன்ன்ன்ன் எனச் சொல்ல வந்தேனாக்கும்:)..

      ஹையோஒ இனி மகுடம் நேக்குத்தான்..:) பகவான் ஜீக்கு அல்ல:).

      //'ஓம்'// ஓம் சரவணபவ:)ஹா ஹா ஹா எழுத்துச் சொல்லி விடுகிறதே நாட்டை.. ஊரை.

      //வழக்கம்போல கலகலப்பான பதிவு + அழகான தமிழ். //
      ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ.. ஏற்கனவே அடிக்கத் திரிகினம்:) இதைப் படிச்சால்ல் புகைவிட்டபடி கலைப்பினம்:)..

      ///பயிற்சி எடுத்துவிட்டு அடிக்கடி எழுதுங்கள்./// என்னாதூ பயிற்சியோ?:) எதுக்கு?.. சரி சரி இதற்கான பதிலை என் அடுத்த பதிவுக்கு வந்துதான் சொல்லுவீங்க அப்படித்தானே?:)

      ஹா ஹா ஹா மிக்க நன்றி வெண்ணிறப் புரவி.

      Delete
  15. ஆஆஆஆவ்வ் மின்னல் வேகத்தில் 7 வோட்ஸ் விழுந்து விட்டதூஊஊஊஉ தங்கூஊ தங்கூஊஉ தங்கூஊஊஉ சந்தோசம் பொயிங்குதேஏஏ சந்தோசம் பொயிங்குதேஏஎ:)

    ReplyDelete
  16. மரங்கள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரி அழகாய் நம் கண்களுக்கு விருந்து அளிக்கிறது.
    பூக்கள் அழகு.
    அங்குள்ளவர்களின் வாழ்க்கை முறை விவரங்க்கள் தெரிந்து கொண்டேன்.
    ஊசிக்குறிப்பு, ஊசிசெய்தி எல்லாம் அருமை.
    ஓட்டு அளித்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ... இங்குள்ளவர்களின் வாழ்க்கை முறை சொல்லிக்கொண்டே போகலாம்.. தொடராக.. நல்லதும் கெட்டதுமாக நிறையவே இருக்கிறது.

      மிக்க மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  17. தம 9 போட்டாச்சு போட்டாச்சு அம்மா வோட்டு போட்டாச்சு அய்யா வோட்டு போட்டாச்சுஅக்கா வோட்டு போட்டாச்சு அண்ணா வோட்டு போட்டாச்சு அதிரா பாட்டி வோட்டு போட்டாச்சு

    ReplyDelete
    Replies
    1. vஆங்கோ ட்றுத் வாங்கோ.. எதுக்கும் கொஞ்சம் தூரமாகவே நிண்டு பேசுறேன்ன்:).. பிரஸ் பண்ணுவதில்லை நீங்க என பிபிசில சொன்னாங்கோ:)..

      ஹா ஹா ஹா... வோட்ட் போடாவிட்டால்ல் சத்தமின்றிப் போய் விடுகிறார்.. இல்லையேல் கூக்குரல் போட்டு ஊரையே திரும்பிப் பார்க்க வைக்கிறார் கர்ர்:).

      //அதிரா பாட்டி வோட்டு போட்டாச்சு///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சகோ ஸ்ரீராம் சொல்லித்தந்தவரோ பாட்டி என அழைக்கச்சொல்லி:).

      Delete
  18. ஹலோ அந்த டீச்சர் பார்ட்னர் சரியா அமையலை என்று உங்ககிட்ட சொன்னதற்கு அப்புறமாவது என்னைப் பற்றி அவருக்கு எடுத்து சொல்லி இருக்கலாம் அல்லவா.....பாவம் அவர் சந்தோஷமாக வாழ்வதை கெடுத்துவிட்டீர்களே பெண்ணிற்கு பெண்தான் எதிரி போல அடுத்த பெண் சந்தோஷமாக வாழ உங்களுக்கு பிடிக்கவில்லை போல இதுக்கு மேல என்ன சொல்லுறது.... இப்ப ஒன்றும் தலைமூழ்கிவிடவில்லை என்னைப் பற்றி எடுத்து சொல்லி நான் available என்று எடுத்து சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. //ஹலோ அந்த டீச்சர் பார்ட்னர் சரியா அமையலை என்று உங்ககிட்ட சொன்னதற்கு அப்புறமாவது என்னைப் பற்றி அவருக்கு எடுத்து சொல்லி இருக்கலாம் அல்லவா//

      ஹா ஹா ஹா நிட்சயம் சொல்லியிருப்பேன்ன்.. நீங்கள் ஒயுங்கா பிரஸ்போட்டுப் பல் விளக்குபவராக இருந்திருந்தால்:)...

      ///பாவம் அவர் சந்தோஷமாக வாழ்வதை கெடுத்துவிட்டீர்களே பெண்ணிற்கு பெண்தான் எதிரி போல அடுத்த பெண் சந்தோஷமாக வாழ உங்களுக்கு பிடிக்கவில்லை போல இதுக்கு மேல என்ன சொல்லுறது..///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சூஊஊஊஊஉ என்னால முடியல்ல கொஞ்சம் தேம்ஸ் கரைக் கல்லெல்லாம் பொறுக்குங்கோ:)..

      ///இப்ப ஒன்றும் தலைமூழ்கிவிடவில்லை என்னைப் பற்றி எடுத்து சொல்லி நான் available என்று எடுத்து சொல்லுங்கள்///
      ஹா ஹா ஹா மண் உண்ணிப் பாம்பைப்போல்.. எவ்ளோதான் மாமியிடம் பூரிக் கட்டையால் அடிவாங்கினாலும்.. திருந்துறாரா பாருங்கோ:)...

      எங்கள் பிள்ளைகளின் ஸ்கூல் பேரன்ஸ் மீட்டிங்கின் போது, ஹெட் ரீச்சர் ஒரு மான்.. அவரின் செக்கரட்டறி பேசும்போது சொன்னா... உங்களுக்கு என்ன தேவை எனினும் வந்து மிஸ்டர் ..... உடன் பேசுங்கள்... அவர் எப்பவுமே அவைலபிள் தான் என்றா சிரித்தபடி... எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

      Delete
  19. ///எங்கள் ஸ்கூல் கிரவுண்டில் நிற்கும் மரம்... தொடர்ந்து படமெடுத்து வந்தேன்..///

    முதியோர் பள்ளிக்கு சென்று வருகிறீர்களா? நல்லது நல்லது இந்த வயதிலும் "இல்லாத அறிவை" வளர்த்து கொள்ள உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      [im]http://f1.pepst.com/c/CC8774/42938/ssc3/home/037/vandouzan/shooting_cat.gif_480_480_0_64000_0_1_0.gif[/im]

      Delete
  20. இந்த தடவை நீங்கள் போட்ட ஊசி குறிப்பு என்னை மனதில் வைத்து போட்ட மாதிரி இருக்கே

    ReplyDelete
    Replies
    1. இங்கின பூரிக்கட்டை எனில் அது உங்களைத்தவிர.. அதன் அடி வாங்கும் தைரியமும்.. அடிக்க அடிக்க வலிக்காதமாதிரியே நடிக்க்கும் தைரியமும் வேறு யாருக்கு வரும்?:)...

      ஊசிக்குறிப்பில் முதலாவது நீங்க மாமிக்கு சொல்வது:).. ரெண்டாவது.. அதைக் கேட்டதும் மாமியின் ரியக்‌ஷன்:) ஹா ஹா ஹா:)..

      மிக்க நன்றி ட்றுத் அனைத்துக்கும்.

      Delete
  21. /பின் வீட்டினருக்கு, ஆற்றின் வியூவை இது மறைக்குமே, எனும் நல்லெண்ணத்தில்//

    அவங்க சொன்னார்களா மறைக்குதுன்னு ???

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. சொல்லாமலே உணர்ந்துகொள்வதுதான் தெய்வீகக்காதலாம்:).. ஹா ஹா ஹா பிஸ்ஸு என்ன கேய்க்குது நான் என்ன பதில் சொல்றேன்ன்:).. நேக்கு ஒரே கொயப்பமா இருக்கே சாமீ:)..

      Delete
  22. ஏனென்று தெரியாது மரம் வெட்டுறவங்களை அதாவது அந்த வீட்டு உரிமையாளர்களை கரண்ட் கட் பண்ணிட்டு அடிக்கணும்னு தோணும் ,,திருப்பி அடிக்காதுன்னு தெரிஞ்சு அதுக்கு கஷ்டத்தை கொடுத்திட்டீங்க கர்ர்ர்ர் :) ஆனா நான் மரத்துக்கு பதில் உங்களை ஓடஓட விரட்டுவேன் :) ஆனா சொல்றது ஈஸி அதிரா இங்கே நிறைய வீடுகளில் முன்னாடி வியூ மறைக்குது சாட்டிலைட் ரிஸீவ் ஆகலை எக்ஸ்டென்சன் காரணங்களுக்கு வெட்டறாங்க ..சில வீடுகளில் அஸ்திபாரம் வரை வேர் போதும்னு காரணமாம்
    எங்க வீட்ல கார்டனில் ஒரு சைப்ரஸ் வளருது என்னாகுமோ தெரிலா :(

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு... இது மனதுக்கு வேதனையான விசயம்தான்.. நான் மரம் வெட்டுவதை எதிர்க்கும் போராளி அல்ல.. ஆனா அதுக்கும் உணர்விருக்கு.. உயிரிருக்கு.. என நினைச்சு வருந்துவேன்...

      இது படுவதற்காக வெட்டவில்லையே.. கொஞ்சம் மேலால கட் பண்ணினால், உயராமல் படர்ந்து வளரட்டும் எனும் நல்லெண்ணத்தில் வெட்டினோம்... அது வெட்டியவருக்கு தெரிஞ்சிருக்கோணும்.. அந்த மனிசன் ஒரு காசுப் பைத்தியம்.. ரேட் பேசிட்டார்ர்.. இனி வெட்டுவதைக் குறைச்சால்ல் தன் பணத்துக்கு ஆபத்தாகிடும் எனவும் நினைச்சிருக்கலாம்ம்:)..

      இந்த மரம் மட்டுமில்லை அஞ்சு.. இதே வேலியில், நேரே கிச்சின் வாசலில் இதேபோல இன்னொருமரம், ஆனா இதன் பாதி அளவிருக்கும் நின்றது, இதை வெட்டியதும், அது தானாகப் பட்டே விட்டது... சிலது “நாணம்” எனச் சொல்வார்கள்.. எனக்கு விளக்கம் சொல்லத் தெரியவில்லை அப்படி என்னமோ ஆச்சு:(.

      சிலது ஒன்றும் பண்ணமுடியாது அஞ்சு, ஒரு தேவைக்காக இன்னொன்றை இழக்க வேண்டி வருவது இயல்புதானே.

      Delete
  23. ஆமாம் அதிரா வெள்ளைக்காரர்களின் வாழ்க்கைமுறையை வித்யாசமானது நாலுபேர் போன்ற கவலைலாம் அவர்களுக்கில்லை .அவரது விருப்பம் அதில் யாரும் குறுக்கிட மாட்டார்கள் ..நம்மூரராயிருந்தா இந்த மேட்டரை வைச்சு ஒரு சினிமா யில்லனா ஒரு மெகா சீரியல் எடுத்து தந்தை யார் என தேடல்னு நிஜங்கள் சொல்வதெல்லாம் உண்மைன்னு டாக் ஷோ வரைக்கும் ஓட்டுவாங்க ..இவர்கள் எதற்கும் பயப்படாதவங்க நேர்மையா நடப்பாங்க ..அவரது வாழ்க்கை அவர் டிசிஷன் ..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கரீட்டாச் சொன்னீங்க.. என்னைப் பொறுத்து இதுவும் ஒரு சரியான முடிவுதான், திருமணமாகவில்லை.. எனில் இப்படியே தனியேக் கிடந்து சாகாமல்.. அதேநேரம், கண்டவர்களோடு ஊர் சுற்றிக் காலத்தைக் கழிக்காமல், தனக்கென ஒரு வருங்காலத்தை ஆயத்தம் செய்கிறா.. இதில் என்ன தவறிருக்க முடியும்..

      இப்போ தரவுகள் எல்லாம் கொம்பியூட்டரில் சேஃப் ஆகி இருப்பதால், ஒரு காலத்தில் அக்குழந்தை நினைத்தாலோ அல்லது, அக் குழந்தை உருவாகக் காரணமாக இருக்கும் தந்தைகூட தேடி வந்து குழந்தையுடன் பேசக்கூடும்... இந்நாட்டில் இதெல்லாம் சகஜம்தானே.. எதுக்கும் துணிந்தவர்கள் தான் இப்படி ஸ்பேம் கொடுப்பார்கள் பாங்..க்கு... துணிவில்லை எனில் இப்படி கொடுக்க முடியாதுதானே.

      ஆனா என்ன, வழக்குப் போட்டு சொத்துக் கேட்க முடியாது தந்தையிடம் ஹா ஹா ஹா:).

      அந்த ரீச்சர் நினைச்சால்ல்.. இதே நபரிடமிருந்தே இனொரு குழந்தையையும் பெற்றுக்கொள்ள முடியும்.. எதுவும் சொல்ல முடியாது.

      Delete
    2. ஏஞ்சல்/அதிரா உண்மைதான்....நான் இதை பேஸாக வைத்து ஒரு பெண்ணின் கதையை சில வருடங்களுக்கு முன்னால் பாதி எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அப்போது இந்த ஸ்பேர்ம் பேங்க் அத்தனை ஃபேமஸ் ஆகவில்லை. ஆனால் அக்காலக்கட்டத்திற்கு ஏற்பத் தொடங்கி ஓர் இந்தியப் பெண், தமிழ்ப் பெண்ணின் சிந்தனைகளை, கலாச்சார உணர்வுகளைச் சொல்லுவதாக...இங்குள்ள எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக...இப்போது இங்கும் சென்னையிலும் ஸ்பேர்ம் டோனோர்ஸ் வந்தாயிற்று. எனவே அதை சற்று மாற்றி முடிக்க எண்ணியுள்ளேன். பார்ப்போம்...பல கதைகள் சற்று பெரிய கதைகள் மனதில் இருக்கின்றன குறிப்புகளுடன். அதை முடிக்க அதிலேயே லயித்து உட்கார வேண்டும். அது பல நடைமுறைப் பிரச்சனைகளால் முடிக்க முடியாமல் கிடப்பில் இருக்கின்றன... எனது கதாநாயகியின் பிரச்சனை வேறு. நான் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கதையை எழுதியிருப்பேன். அப்போது அதை முடித்து ஏதேனும் பத்திரிகைக்கு அனுப்பியிருந்தால் கண்டிப்பாக அதனை ஏற்கும் பக்குவம் அவர்களின் மனதில் இருந்திருக்குமா தெரியவில்லை. இருந்திருக்காது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். எனவே, தைரியமாக எழுதி முடிக்கலாம் என்று நினைத்துள்ளேன்...பார்ப்போம்...

      கீதா

      Delete
  24. ஹாஹாஆ :) கஷ்டம் ரசித்தேன் சிரித்தேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. எப்பூடி எல்லாம் கற்பனை பண்றாங்க:)

      Delete
  25. ஹாஹா அந்த ஐ மிஸ் யூ காட்சி எங்கேயோ அடிக்கடிகேள்விப்பட்டது மாதிரி இருக்கே :)

    ReplyDelete
    Replies

    1. ஆமாம்ல்ல எனக்கும் அது கேள்வி பட்ட மாதிரி இருக்குது ஹீஹீ

      Delete
    2. ஆமா அஞ்சு.. ஆமா:) அடிக்க அடிக்க:) கேள்விப்படுறோமே:)..

      //Avargal UnmaigalWednesday, May 31, 2017 9:48:00 pm

      ஆமாம்ல்ல எனக்கும் அது கேள்வி பட்ட மாதிரி இருக்குது ஹீ//

      இருக்கும் இருக்கும் ஹா ஹா ஹா:)

      Delete
  26. கோன் மரம்? அப்படி என்றால்?

    திருமணம் ஆகாமல் குழந்தை. விஞ்ஞானம் உதவிக்கு வருகிறது.

    மரத்தின் வெவ்வேறு நிலைகளின் படங்கள் அழகு.

    இரண்டு ஊசி இணைப்புகளையும் மிக ரசித்தேன்.

    சீரியஸான ஊசிக்குறிப்பை ரஜினி கூடச் சொல்லியிருக்கிறார்!!!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ..

      //கோன் மரம்? அப்படி என்றால்?//
      அது கோன் காய்கள் காய்க்கும் அதனால செல்லமா அப்பூடிச் சொன்னேன்.. பைன் மரம்:).. படம் போடுறேன் காய்களின் பாருங்கோ..

      [im]http://matsukasamochi.la.coocan.jp/img/lgf01a201409211800_convert_20141021213717.jpg[/im]

      Delete
    2. //திருமணம் ஆகாமல் குழந்தை.//

      இது பற்றி நிறைய சொல்லலாம் ஸ்ரீராம். இங்கே யார் திருமணம் முடிச்சுக் குழந்தை பெறுகிறார்கள்???.. எல்லோரும் பார்ட்னராகத்தான் இருந்து குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதில் பாதிப்பேர்- பின்னர் குழந்தைகள் வளரும்போதுதான், இனி மரி பண்ணலாமே என திருமணம் பெரிதாக செய்து.. குழந்தைகளைப் பேரன்ஸ் இடம் விட்டுப்போட்டு ஹனிமூன் போகிறார்கள்...

      மீதிப்பேர் பிரிந்து விடுகிறார்கள்.

      இதுக்கு முக்கிய காரணம் இருக்கிறது, என்னவெனில் முக்கியமாக இங்குள்ள பெண்கள் பணம் உள்ளவர்களையே தேடித்தேடி விரும்புவார்கள்... இவர்களுக்கு பணம்தான் முக்கியம்.. உல்லாசமாக ஊர் சுற்ருவதுதான் முக்கியம்.. ஹொலிடே எடுத்து எங்காவது ஊர் சுற்றாவிட்டால்ல் பைத்தியம் பிடிச்சுவிடும் இவர்களுக்கு.

      அதனால நம்பி திருமணம் முடிக்க ஆண்களுக்குப் பயம். திருமணம் முடிச்சு பின் டிவோஸ் எனில் பணம் கொடுக்க வேண்டுமே வாழ்க்கை முழுக்க. அதனாலேயே திருமணம் எனும் பேச்சை ஆண்கள் எடுப்பதில்லையாம்.

      வெள்ளையர்கள் எனினும், இங்கு ஒரு முறை இருக்கு, திருமணம் எனும் பேச்சை ஆண் தான் முதலில் சொல்வாராம், திருமணம் முடிப்போமா என பெண்கள் கேட்பதில்லையாம்..

      ஆனா பெப்ரவரியில் வரும் காதலர் தினத்தில் அன்று மட்டும், பெண்கள் கேட்பார்களாம்.. திருமணம் முடிப்போமா என.

      முந்தைய ஜெனரேசனோடு, ஒருகணவன் ஒரு மனைவி எனும் காலம் இங்கு முடிந்து விட்டது. இப்போ.. யாரும் ஒரு தாரமாக இல்லை.. 3 குழந்தைகள் இருக்கும்.. மூவருக்கும் 3 தந்தை இருக்கும்... 50 வயதிலும் டிவோஸ் எடுப்பார்கள்..

      இங்கு உண்மையில் அப்படி நினைக்கக்கூடாது, ஆனா எந்தச் ஜோடியைப் பார்த்தாலும் என் மனதில் உதிக்கும் முதல் எண்ணம்.. ஹையோ எப்போ பிரியப்போகிறார்களோ என்பதுதான்.. ஆனாலும் உடனே அழுது குழறி டிப்பிரெஸ்ட் ஆகி, சைக்கைட்டிஸ்ட் ஐப் பார்த்து மருந்தெடுத்து, நோர்மலாகி.. பின்னர் இன்னொரு வாழ்க்கைதேடி.. மகிழ்வாகவே இருப்பார்கள் எத்தனை வயதிலும்..

      எதுவும் சொல்லத்தெரியவில்லை.. அவரவர் வேதனை அவரவருக்கே தெரியும். நிறையக் கதைகள் இருக்கு.. சோகக்கதைகள்.. எழுத நினைப்பேன்.. விட்டு விடுவேன்.

      Delete
    3. //மரத்தின் வெவ்வேறு நிலைகளின் படங்கள் அழகு.//
      மரம் வெட்டியது பார்த்துப் பொயிங்கப்போறீங்க என எதிர்பார்த்தேன்ன்.. எந்த ரியக்‌ஷனும் இல்லாமல் போயிட்டீங்க:) ஹா ஹா ஹா:).

      //இரண்டு ஊசி இணைப்புகளையும் மிக ரசித்தேன்.//

      ஹா ஹா ஹா இதுபற்றி எந்தக் குவெஷனும் இங்கின கேட்ட மாட்டேன்ன்:)

      Delete
    4. //சீரியஸான ஊசிக்குறிப்பை ரஜினி கூடச் சொல்லியிருக்கிறார்!!!!!//

      ஓ அப்படியா? ஆனா நான் போனதடவை போட்ட ஆங்கில ஊசிக்குறிப்பை ரஜனி அவர்கள் சொன்னதா நினைவு.

      மிக்க மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
    5. ஓ நான் பைன் மரமில்லையோ என்று கீழே கேட்டதற்கு நீங்கள் இங்கு சொல்லி விட்டீர்கள்...நல்ல உயரமாக இருக்கும் இல்லையா...ஊட்டியில் நிறைய இருக்கும். நான் வீட்டில் பைன் கோன்கள் வைத்து இருக்கிறேன் ஃப்ளவர் வேஸில். ஆனால் தூசி அடைந்தால் கழுவினால் இதழ்கள் உதிருந்து விடுகின்றன. இதழ் விரியாத பைன் கோன்களும் வைத்திருக்கிறேன். இரண்டும்
      எ மிக அழகாக இருக்கும்....

      கீதா

      Delete
  27. மிகவும் ரசித்தேன் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ டிடி வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  28. //இங்கு சிலருக்கு கீல்ஸ் இல்லாத ஸூஸ் போட்டு நடக்க தெரியாது, சின்னனிலிருந்தே பழகி விட்டார்கள்//

    நீங்கதானே அது உண்மையை சொன்னதுக்கு ஒரு பிளேட் பாவ் பாஜி மசாலா மிக்ஸ்ட் ரைஸ் அனுப்பி வைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீ குட்டிக் குட்டிக் கீல்ஸ் போடுவேன்ன்... பிக்கோஸ் மீ கீல்ஸ் ல ஏறி நிண்டால்ல்ல்ல் அஞ்சு என்னை அண்ணாந்தெல்லோ பார்க்கோணும்:).. என்ன ட்றுத்தின் ரெசிப்பியா?:) நோ தங்கூ:).. எனக்கு உங்கட வாழைப்பூ றசம்:) போதும்:).

      Delete
  29. மரம் போன்ற வாழ்க்கை நமக்கு கிடைக்க நினைப்பது பேராசை :) அப்புறம் இன்னொன்னு நீங்க வெட்டி போட்ட மாதிரி யாராச்சும் வெட்டிருவாங்க :)

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான்... எப்படிப் போனாலும் முட்டுது:)... இருப்பதை விட்டிட்டுப் பறப்பதுக்கு ஆசைப்படக்கூடா:)..

      மிக்க நன்றி அஞ்சு..

      Delete
    2. அதிரா மரத்தை வெட்டாமல் இருந்திருக்கலாமோ??!!! பட்டுப் போய்டுச்சே...சரி அதற்குப் பரிகாரமாய் இரண்டு மரம் நட்டு விடுங்கள்! சரிதானே??!!

      கீதா

      Delete
  30. வணக்கம் !

    பதிவு என்னமோ கலகலப்பா இருந்தாலும் ஊசிக்குறிப்புப் போல அர்த்தமுள்ளதாய் அமையவில்லை மியாவ் ......

    எனக்கு அந்த மொழிபெயர்ப்பாளர் விலாசம் மட்டும் அனுப்புங்கள் !

    தமன்னா வோட்டு மேலும் ஒன்று !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜர் வாங்கோ...

      ///ஊசிக்குறிப்புப் போல அர்த்தமுள்ளதாய் அமையவில்லை மியாவ் ......///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) இனி எல்லோருக்கும் வீட்டில் பூரிக்கட்டைதான் பறக்கப்போகிறது:).

      ///எனக்கு அந்த மொழிபெயர்ப்பாளர் விலாசம் மட்டும் அனுப்புங்கள் !//
      ஹா ஹா ஹா கர்ர்ர்:) என் போஸ்ட்டைப் பார்க்காமல்.. அந்த ஊசிக்குறிப்பிலயே நிற்பமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:))... உங்களுக்கு பொம்பிளை தேடும்போது... ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் இருக்கும் குடும்பமாகப் பார்த்து, தேடச்சொல்லப்போறேன்ன்:) எங்கிட்டயேவா.. விடமாட்டேன்ன்:)..

      மிக்க நன்றி சீராளன், தமனா வோட்டுக்கும் வந்து கொமெண்ட் போட்டமைக்கும்.

      Delete
  31. அப்போ Sperm Bank பற்றிய விபரம் எடுத்து, அங்கு நமக்கு எப்படிப்பட்டவரின் குழந்தை வேண்டுமென்பதை நாம் தீர்மானிச்சு எடுக்கலாமாம்.

    தாயின் தந்தையின் அருங்குணங்களுடன் உருவாக வேண்டிய குழந்தையை, தொழிற்சாலையில் உருவாக்குவது போல் அல்லவா இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ... உண்மைதான் விஞ்ஞானம் எப்படி எல்லாமோ மாறிக்கொண்டு போகிறது...

      ஒரு விதத்தில், இக்காலத்தில் குழந்தை இல்லையே என நினைக்காமல் பலருக்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் குழந்தை கிடைக்கிறது என்பதும் பெருமைதான்.

      மிக்க நன்றி.

      Delete
  32. எனக்கு டமில்மண மகுடம் கிடைச்சிட்டுதூஊஊஊஊஊஊ
    [im]http://tome-kbk.sakura.ne.jp/sblo_files/tomecity/image/_20_.JPG[/im]

    ReplyDelete
    Replies
    1. ம்...

      வாழ்த்துகள் சகோதரி...

      Delete
    2. இதை விட நீங்கள் ஆரம்பித்து வைத்த (செத்துப் போன) தமிழ்மண லிங்க் புரட்சி அனைவரும் தொடர்வது குறித்து மிகவும் சந்தோசம் சகோதரி...

      Delete
    3. மாங்கு மாங்கு என்று கேட்டு
      மகுடம் வாங்கினாய் -அதைத்
      பாங்கு கொண்டு பாட்டுப் பாட
      பண்ணும் கூட்டினாய் !

      ஊசிக் குறிப்பும் உள்ளத் துளியும்
      உயர்வைத் தந்ததோ - பலர்
      ஆசி கூறி அளித்த வாழ்த்தில்
      அமிழ்தம் பொழிந்ததோ !

      வாழ்க வாழ்க பூசார் வாழ்க
      என்றே வாழ்த்துறேன் - மனம்
      சூழ்க சூழ்க புகழும் சூழ்க
      சொல்லி வாழ்த்துறேன் !

      Delete
    4. வா..வ் வாழ்த்துக்கள் அதிராஆஆஆஆ.

      Delete
    5. //திண்டுக்கல் தனபாலன்Thursday, June 01, 2017 3:22:00 pm
      இதை விட நீங்கள் ஆரம்பித்து வைத்த (செத்துப் போன) தமிழ்மண லிங்க் புரட்சி அனைவரும் தொடர்வது குறித்து மிகவும் சந்தோசம் சகோதரி...//

      ஹா ஹா ஹா மிக்க நன்றி டிடி... ஆனா இப்போ, லிங்கை அப்படி இணைப்பதால் முந்தியதை விட எல்லோருக்கும் அதிகமாக வோட்ஸ் கிடைப்பது தெரியுது..

      எதிர்பார்க்கவே இல்லை இம்முறை மகுடத்தை..

      Delete
    6. வாங்கோ அனோனி “மவுஸ்” வாங்கோ:)... இது எங்கட யூ ஏ ஈ மேஜர்தானே?:) எதுக்கு இப்பூடி மவுஸ் வேடம்:)..

      ஹா ஹா ஹா அனோனி மவுஸா வந்தாலும் அதிராவைப் புழுகோ புழுகெனப் புகழ்ந்து கவிபாடி எழுதியமையால்தான் நன்றியுடன் வெளியிட்டேனாக்கும்:).. திட்டி எழுதியிருந்தால் வெளியிட்டிருப்பேனோ?:) ஹா ஹா ஹா கடவுள் புண்ணியத்தில் இதுவரை அப்படி யாரும் திட்டவில்லை... ஸ்ஸ்ஸ்ஸ்:). மியாவும் நன்றி கவிதைக்கு:-.. ஒரு கவிதாயினியே நன்றி சொல்றா(கர்ர்ர்ர்ர்ர்ர் எங்க தேடுறீங்க.. இது என்னைச் சொன்னேன்).. நெல்லைத்தமிழன் பட்டம் சூட்டினவர் தெரியுமோ?:). ஹா ஹா ஹா என்னிடம் ஆருமே தப்ப முடியாது:) அப்பப்ப மாட்டி விட்டிடுவேன்ன்:).

      ஆனா இதைப் பார்த்திட்டு ஆராவது அனோனி “மவுஸ்”:) ஆ வெளிக்கிட்டினமோ:).. வச்சிடுவேன்ன்ன்:) எங்கிட்டயேவா?:) ஜாக்க்க்க்க்ர்ர்தை--:)..

      [im]https://s-media-cache-ak0.pinimg.com/736x/b9/fb/e4/b9fbe48dc91dfb10ae026e5571404459.jpg[/im]

      Delete
    7. ஆஆஆவ்வ் அம்முலு எல்லோரும் வாழ்த்துச் சொல்வதைப் பார்க்க மீக்கு ஷை ஷையா வருதூஊஊஊஊஊ:).. இப்போ திரும்ப மேலே இணைச்ச படம் பாருங்கோ டமில்மணம்:).. 15 வோட்ஸ்ஸ்ஸ்:).. மிக்க நன்றி அம்முலு.

      Delete
    8. வைரம் பதித்த மகுடமா அதிரா??!! உங்கள் வைர நெக்லஸ் படும் பாடு இருக்கே....பாதுகாப்பாக இருக்கிறதோ??!! ஹிஹிஹீ...

      கீதா

      Delete
    9. வாழ்த்துகள் அதிரா சகோ/ அதிரா

      Delete
    10. எங்களுக்கு எல்லாம் ஓட்டு விழுவதே கிடையாது...பார்வையாளர்களும் குறைவு...எங்கள் பதிவுகள் அப்படியாக இருக்கு போலும். நாங்களும் கண்டு கொள்வதில்லை....

      கீதா

      Delete
    11. கமென்ட்ஸ் போடுவோரும் குறைவுதான். ஏனென்றால் நாங்கள் பல வலைத்தளங்களுக்குச் செல்ல முடிவதில்லை. நாம் சென்றால் தான் நமக்கு மொய் வைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்படியில்லை யார் வருகிறார்கள்? வருபவர்கள் தளத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லாமல்,செல்ல முடிந்த வலைத்தளங்களுக்குச் சென்று கருத்திடுகிறோம். சில சமயம் கருத்திட முடியாமல் போகிறது. நல்ல பதிவுகளுக்குக் கூடியவரை கருத்திடுகிறோம்...

      கீதா

      Delete
  33. ரசித்தேன் சகோதரி...
    த.ம வோட்டு மேலும் ஒன்று 15

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ மொகமட் வாங்கோ... ஆவ்வ்வ்வ்வ்வ் மிக்க மிக்க நன்றி.. உங்கள் சேவை எங்களுக்கு எப்பவும் தேவை:).. அது ஒண்டுமில்லை பிபிசி யில் சிட்டுவேஷன் அட் போகுதூஊஊஊஊ:).

      Delete
  34. தமிழ் மண மகுடிக்கு வாழ்த்துக்கள் :)


    [im]https://s-media-cache-ak0.pinimg.com/736x/8f/05/2a/8f052af712d26ed738a07277ac83460d.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. இப்பூடியே கூக்குரல் போட்டே அடுத்த தடவையும் பகவான் ஜீ யிடமிருந்து பறிக்கப்போறேன் மகுடத்தை:)..

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதென்ன மகுடி?:).. குயின் அம்மம்மாவின் பேத்தியும் குயின் தானே?:) அப்பூடிச் சொல்லோணும் என மீ ஜொல்ல மாட்டேன் ஏனெனில் மீக்கு டப்பெருமை புய்க்காது:)..

      அழகாக மகுடத்தோடிருக்கும் பூஜார்:) அயகூஊஊஉ:).. மியாவும் நன்றி அஞ்சு.. மேலே மகுடப் படம் இணைச்சிட்டனே:).

      Delete
  35. பூக்கள் அழகாய் இருக்கு !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. நீங்களும் மொபைலில் தட்டித்தடவி என்பக்கம் கண்டு பிடிச்சு வந்துவிடுறீங்க:).. மிக்க சந்தோசம் நேசம்.. பூக்கள் வேணுமோ ஸ்நேகாவுக்குக் கொடுக்க?:)

      Delete
  36. யாரும் குறை நினைச்சிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்.... என்பக்கத்தை கவனிக்கவே முடியல்ல... விரைவில் பதில் தருகிறேன் எல்லோருக்கும்.... அதுவரை மன்னிச்சுக்கோங்ங்ங்:).

    ReplyDelete
  37. திரட்டியில் ஓட்டு போட்டாச்சு)) திருந்தவேணும் இன்னும் மரம் வெட்டி))

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ்வ் பெயர் பார்த்தேன் அங்கு மிக்க நன்றி.

      ///திருந்தவேணும் இன்னும் மரம் வெட்டி))///
      கரெக்ட்டாச் சொன்னீங்க..

      Delete
  38. தனிமரம் எப்படி அழகாய் இருக்கு எக்காலத்திலும் )) சினேகாவுக்கு இதை மெயிலில் அனுப்ப ஆசை ஆணால் நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதால் அதைவிட்டாச்சு)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தனிமரம் நாலுகாலத்திலும் அழகுதான்:) அதனாலதானே நேசன் கைவிட்டாலும்.. திருமணமானபின்பும் நேசனையே சுத்திச் சுத்தி வாறாவாம் ஸ்நேகா:).. இருப்பினும் அந்த இருமுடி தரிச்சுப்போகும்போது மட்டும் ஸ்நேகா கண்ணில படாமல் போய் வாங்கோ நேசன்.. ஹா ஹா ஹா..:).

      Delete
  39. கடவுள் கருணையுள்ளவர் கற்ற பாடம்))

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.. திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பதைப்போல.. மிக்க நன்றி நேசன்.

      Delete
  40. உங்கள் முல்லைக் கொடி பிங்க் நிறத்திலும் ஊதா நிறத்திலும் இருக்கிறதே காத்திருந்து காத்திருந்து புகைப்படம் எடுத்துப் போடும் உங்கள் பொறுமை பாராட்டுக்குரியது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஐயா ஜி எம் பி வாங்கோ... இப்படி பொறுமையா தொடர்ந்து படமெடுப்பது ரொம்பப் பிடிக்கும்.. நிறைய இப்படி முன்பும் எடுத்திருக்கிறேன்... ஒரு செவ்வந்திப்பூ மெல்ல மெல்ல விரிவதை கனடாவில் நின்றபோது கொஞ்சம் கொஞ்சமா படமெடுத்தேன்ன்.. அவை எங்கிருக்கோ தெரியவில்லை.

      மிக்க நன்றி.

      Delete
  41. நானும் இங்கு வந்துதான் அவர்களது
    கலாச்சாரம் குறித்து புரிந்து கொள்கிறேன்
    முதலில் அது அதிர்ச்சி தருவதுபோல்
    இருந்தாலும் இப்போது அவர்களைப்
    புரிந்து கொள்ளமுடிகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரமணி அண்ணன் வாங்கோ.. உண்மைதான், வெளிநாட்டுக்கு வந்து அவர்களோடு பழகும்போதுதான் இப்படியும் மகிழ்ச்சியாக இருக்கும் முறைகள் இருக்கின்றன எனத் தெரிய வருகிறது.

      மிக்க நன்றி.

      Delete
  42. இரண்டூஉசிக்குறிப்பும் செம மிகவும் ரசித்தோம்....நாங்கள். பூசார் பாடங்கள் அனைத்தும் செம அழகு!!! மேலை நாட்டுக் கலாச்சாரம்...நமக்கு வேண்டுமானால் அதிர்ச்சி...ஆனால் சிந்தித்துப் பார்க்கும் போது அறிவியல் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது....

    கீதா: ஓட்டு போட்டாச்சு அதிரா...இதோ மீண்டும் வருகிறேன்...

    ReplyDelete
  43. ஊசிக் குறிப்பில் முதல் மொழி யாரோ சொல்லுவது போல கேக்குது எங்களுக்கு! உங்களுக்கு அதிரா??!! சரிதானே?

    இரண்டாவது படக் அப்படிச் சொன்னதற்காகப் பூரிக்கட்டை பறக்குது...அது படாமல் பறக்குது ஸோ....ஐ மிஸ் யு

    மூன்றாவது படம் அவர் சொல்லுவதோ??!!!!!

    கீதா

    ReplyDelete
  44. மரம் படங்கள் அனைத்தும் அழகு!! அந்த பட்ட மரம் என்ன மரம்? கோன் மரம் என்பது இன்னும் உயரமாக இருக்குமே பைன் ட்ரீ. ...

    இது கோன் ஷேப்பில் இருந்ததாலோ???

    சே பாவம் பட்டு விட்டதே!

    கீதா

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.